எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனல் பொழியும் மேகம் 3

Mr D devil

Moderatorஅத்தியாயம் 3

இளம் பிறையின் கண்கள் கலங்கியதை கண்டதும் தேவியும், தேவம்மாளும் அவரை நெருங்குவதற்குள் இளம் பிறையின் பிள்ளைகளான நிலவனும், நிலாழினியும் இளம் பிறையை அணைத்தப்படி எதிரில் நின்ற முகிலை கோபமாக பார்த்தனர்..

உங்க பார்வையெல்லாம் எனக்கு பொருட்டே இல்லை என்பதைப் போல் மூவரையும் இதழ் சுளிப்போடு பார்த்தவள் அவர்களுக்கு அருகில் தன்னையே முறைத்துக் கொண்டிருந்த தேவியை அழுத்தமாக பார்த்துவிட்டு வீட்டினுள் நுழைந்து கொள்ள அவளின் பின்னாலயே ஆகாஷும் சென்றான்...

அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலையில் ஆகாஷ் அவளின் பின் சென்றதை கூட எவரும் கவனிக்கவில்லை...

"என் மாமாவை விட்டு தள்ளி நில்லுங்க டா இரண்டு பேரும். என்னால எழுந்து வர முடியாதுன்னு ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்காதீங்க..." என உதட்டை பிதுக்கி கொண்டு கோபமாக கூறிய அகிலனின் குரலில் அவ்வளவு நேரம் நிலவிய கனமான சூழ்நிலை சற்றே இளகியது.

அனைவரின் முகத்திலிருந்த இறுக்கம் குறைந்து மெல்லிய புன்னகை மலர அதை சரியாக பயன்படுத்தி கொண்டார் தேவம்மாள்.

"சரி சரி எல்லாரும் தேம்பி நிக்காம வீட்டுக்குள்ள போங்க..." எனக் கூறி மருமகளை பார்த்தார்.

"நிலவா அகியை கூட்டிட்டு உள்ளே போ..." என மிருதுவான குரலில் கூறியவர் தன்னவனை பார்க்க அவரோ கண்களை மூடி திறந்து "நவ் ஒகே..." என கூறவும் பிள்ளைகளின் பின்னாலயே சென்றார் தேவி.

கண்களை அழுத்தி துடைத்து கொண்டவரின் அருகில் வந்த தேவராஜோ "என்னங்க மச்சான்... பெரியவ தான் ( முகில்) விவரம் இல்லாம நடந்துக்கறான்னா நீங்களும் இப்படி சின்ன புள்ளை மாதிரி கண்ணீர் விட்டுட்டு இருக்கீங்க..." என்றவர் பிறையின் தோளில் கைப்போட்டப்படி வீட்டினுள் நுழைந்தார்.

வீட்டின் முற்றத்தில் நீளா வாக்கில் போடப்பட்டிருந்த சோபாவில் பெரியவர்கள் மூவரும் அமர்ந்து கொள்ள சிறியவர்கள் மூவரும் அவர்களுக்கு நேர் எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்தனர்...(அகி அமர நிலவன் உதவி செய்திருந்தான்.) பெரியவர்கள் மூவரின் எண்ணமும் கடந்த காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்தது என்றால் சிறுவர்கள் மூவரும் தங்களின் அலைபேசியினுள் மிதந்தனர்... செல்வியிடம் தான் செய்த பாயாசத்தை எடுத்து வர கூறிய தேவம்மாளோ அகிலனின் பக்கத்தில் அமர்ந்தார்.

தொலைபேசியில் தீவிரமாக கேம் விளையாடிக் கொண்டிருந்தவனிடம்
"ஆகாஷ் எங்க டா அகிலா.." என மெல்லிய குரலில் கேட்டார்.

அவர் அப்படி கேட்டதும் பேண்ட் பாக்கட்டில் கை விட்டு பார்த்தவன் "காணோமே.." என்றான் உதட்டை பிதுக்கி...

"இது எப்பவோ எக்ஸ்பீரியான ஜோக் டா...நியூவா ட்ரை பண்ணு..." என கூறியது மட்டுமல்லாமல் அவன் முதுகிலும் இரண்டு போடு போட்டார்...

முதுகை தடவிக் கொண்டே
அவரை மேலிருந்து கீழாக பார்த்தப்படி "உன் மூஞ்சுக்கு இதுவே அதிகம்.. இதுல நியூ வேறயா..." என்றவன் அருகில் அமர்ந்திருந்த நிலவனிடம் திரும்பி

"மச்சான் உன் ஆளை அடக்கி வை, இல்லன்னா உன் தொங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..." என கூறியது மட்டுமல்லாமல் நிலவனின் அருகில் அமர்ந்திருந்த நிலாழினியை எட்டிப் பார்த்து கண் சிமிட்டவும் செய்தான்..

ஒரே நேரத்தில் மூவரிடமும் வம்பிழுத்துக் கொண்டிருந்த அகிலனை ஒரே பார்வையில் அடக்கும் ஆகாசோ முகியின் அறையை நோக்கி சென்றிருந்தான்.

தட் தட்டென அவனின் பூட்ஸ் சத்தம் நன்றாகவே கேட்க அவளின் அறைக்குள் நுழைந்தான் ஆகாஷ் வானவராயன்

சுற்றிலும் கும்மிருட்டு. தன்னை தவிர வேறு ஒரு ஜீவன் இருப்பது கூட தெரியாத அளவுக்கு கடுமையான இருட்டு அது... இருட்டின் நிசப்தம் சற்றே பயத்தை கொடுக்கும் அல்லவா...அவளின் அறையும் அப்படி ஒரு தோற்றத்தில் தான் இருந்தது... முதலில் உள்ளே செல்ல தயங்கினாலும் இன்றே இதற்கு ஒரு முடிவைக் கட்டிட வேண்டும் என நினைத்தவன் உள்ளே நுழைந்ததும் அறையினுள் செயற்கை மின்விளக்கை ஒளிர செய்தான்...

அவளே எதிர்ப்பாராத சமயம் பாடரென அறை கதவு திறக்கப்பட தரையில் அமர்ந்திருந்தவாரே மருண்ட மான் விழிகளுடன் தன் எதிரில் நின்ற ஆறடி ஆண்மகனை அண்ணார்ந்து பார்த்தாள்.

சிவந்த கண்ணிமைகளும், கண்ணில் தேங்கியிருக்கும் நீரும் அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பதை பறை சாற்றியது. சிவந்த ஈரமான இதழ்கள் அழுகையில் துடித்து கொண்டிருந்தது...

படிப்படியாக கீழிறங்கி கொண்டிருந்த இவன் பார்வையோ அவள் அணிந்திருந்த பாடிகான் உடையில் படிந்தது. அந்த கருப்பு நிற உடையோ அவளின் அங்கங்களை அழகாய் எடுத்து காட்டியது...

சட்டென பார்வையை திருப்பி கொண்டவன் தன் உணர்ச்சிகளை அடக்க கை முஷ்டியை மடக்கி ஒவ்வொரு விரலாக சொடக்கெடுத்தான். பின் என்ன நினைத்தானோ அவளிடம் பேச வந்ததையும் பேசாது அங்கிருந்து நடக்க

"கேன் யு கிவ் மீ எ டைட் ஹக்..." என்ற குரலில் நின்றான்.

தன் மேக பெண்ணின் கலங்கிய குரல் அவனை ஏகாத்திற்கும் பாதிக்க.. ஒரே எட்டில் அவளை நெருங்கியவன் எதை பற்றியும் யோசிக்காது அவளை இழுத்து அணைத்து கொண்டான்.

சில நிமிடங்கள் அவனின் அணைப்பில் கட்டுண்டு நின்றவள் அடுத்த கணம் அவனை விட்டு விலகி "இதுக்கான பணத்தை உனக்கு ஜீ பே பண்ணிடறேன்..." எனக் கூறியவள் டேபிள் மேல் இருந்த அலைபேசியை நோக்கி நடந்தாள்...

அவளின் தீடிர் விலகளிலும், பேச்சிலும் சில நொடிகள் புரியாது விழித்தவன் அது புரிந்ததும் இதுவரையிருந்த இதமான மனநிலை மொத்தமும் மாறி பழைய கோபம் தலைத் தூக்கிட

"என்னதான் என் அத்தை வயித்துலிருந்து பிறந்து இருந்தாலும் உன் அப்பன் புத்தி தானே உனக்கும் வரும். கங்கையில சாக்கடை கலந்தாலும் சாக்கடையில கங்கை கலந்தாலும் சாக்கடை எப்பவும் சாக்கடை தான்..." அவளின் மனம் காயப்படுமென தெரிந்தே வார்த்தைகளை அமில மழை போல் கொட்டிவிட்டு அறையிலிருந்து வெளியேறி இருந்தான்...

அவனின் சீற்றமும், அமில வார்த்தையும் கடுகளவு கூட தன்னை பாதிக்கவில்லை என்பதை போல் டேபிள் மேல் நிற்க வைக்கப்பட்டிருந்த அலைபேசியை எடுத்தவள் அவனின் எண்ணிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பி வைத்தாள்.

அந்த நிமிடம் அவளும் எதிர்பாராத விதமாக புயலாக உள்ளே நுழைந்தவன் வேறு எதுவும் யோசிக்காது அவளின் சிற்றடையில் கையிட்டு தன்னை நோக்கி இழுத்தான்...

அவன் இழுப்பில் மொத்தமாக அவன் மேல் மோதி நின்றது ஆகாசத்தின் மேகம்... தன் மொத்த கோபத்தையும் அவளின் சிற்றிடையை இறுக்கி பிடிப்பதில் காட்டிய வண்ணம் சுவற்றில் அவளை சாய்த்தவன் அவளை மேலும் நெருங்கி நின்றான்..

சீற்றத்தின் உச்சத்தில் நின்றவனோ அவளை உஷ்ண பார்வை பார்த்தபடி
"வெறும் பேச்சோட விட்டுட்டு போனது என் தப்பு தான் டி..." என்றவன் அடுத்த கணம் அவளின் இதழ்களை தன் இதழ்களுக்குள் அதக்கி கொண்டான்... இருவருக்கும் முதல் இதழணைப்பு என்றாலும் அதை ஆழ்ந்து ரசிக்கவில்லை(?) இருவரும்...

அவனின் செய்கையில் விடு விடு என்பதை போல் திணறி திமிறியதெல்லாம் அவனை துளியும் அசைக்கவில்லை... இடையை இறுக்கி பிடித்திருந்த கைகள் சற்றே மேலேறிட துடிக்க... அவனது நாவும் அவளின் இதழ்களுக்குள் தன் எல்லையை தாண்டிட துடித்தது...

கோபமாக செய்த செயல் தற்போது அவனுக்கே பாதகமாக அமைய இறுக்கம் குறைந்து கிறக்கம் கூடிக் கொண்டது அவனுள்... மெல்ல இதழ் பிரித்தால் தான் என்ன என் மேக பெண்ணே?? என நினைத்த நொடி அவளிடமிருந்து மெல்லிய முனகல் சப்தம் வெளிவர அதனை சரியாக பயன்படுத்தி கொண்டது அவனின் நாவும்...

ச்சீற்றத்தின் உச்சத்தில் நின்றவன் தற்போது முத்தத்தின் உச்சம் அடைந்தான்... தன்னிடமிருந்து விலக போராடிக் கொண்டிருக்கும் அவளின் அதரங்களை மெல்ல விடுவித்தவன் அவளை பார்த்தான்... திக் பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்தாள் பெண்ணவள்.

இதழோடு இதழ் உரசினாலே மின்சாரம் பாய்ந்தது போல் தூக்கி வாரிப் போடும்.. தற்போது கேட்கவா வேண்டும் ஆயிரம் மின்னலைகள் ஒன்றாக தாக்கியது போல் இருந்தது அவளுக்கு.. முழுதாக என்ன நடந்தது அவன் இதழ்கள் செய்த மாயம் தான் என்ன என உணரக் கூட முடியவில்லை அவளால்...

தன் இதழ்கள் செய்த மாயாஜாலத்தில் அவளின் இதழ்கள் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்ததை கண்களால் மட்டுமல்லாமல் தன் பெருவிரலால் வருடிக் கொடுத்தவன் "இது.. இந்த அமைதி நல்ல பிள்ளைக்கு அழகு... இனி எனக்கு அமௌண்ட் செண்ட் பண்ணும் போது ஃபீயூ செகண்ட்ஸ் திங்க் பண்ணிட்டு அனுப்பு... இனிமே அமௌண்ட் பத்தி நீ பேசும் போதும் சரி, எனக்கு அதை அனுப்பும் போது சரி... இந்த கிஸ் ஞாபகம் இருக்கட்டும்..." என்று எச்சரிக்கை விடுத்தவன் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

********

இந்தியாவின் சிறந்த பெண் தொழில் முனைவோரில் ஒருவராக திகழ்பவர், தேவின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தேவி நாச்சியாரின் மருமகன் ஆகாஷ் வானவராயனுக்கும், பிரபல விளம்பர மாடல் நறுமுகிலுக்கும் இடையில் நிலவும் தொடர்பு என்ன? என்ற செய்தி காட்டு தீயாக சமூக ஊடகங்களில் பரவியது...

நேற்று பப்பில் ஆகாஸும், நறுமுகிலும் நெருங்கி நின்றிருந்த காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பி இருந்தது...

பிரபல ஏ.வி ஜுவல்லரின் தலைமை நிர்வாகியும் பில்லினர் தேவி நாச்சியாரின் மருமகனான ஆகாசிற்கும் பிரபல விளம்பர மாடல் நறுமுகில் செல்வதிற்கும் இடையே காதலா...??? என ஆரம்பித்த செய்தி
படிப்படியாக யார் இந்த ஆகாஷ் வானவராயன்? யார் இந்த தேவி நாச்சியார்...? யார் இந்த நறுமுகில்?? என்ற கேள்விகளில் வந்து நின்றது...

இவர்களின் குடும்ப பின்புலத்தை ஜூம் செய்து பார்க்காத குறையாக அலசிக் கொண்டிருந்தது பல பிரபல யூடூப் சேனல்கள்... சிறு பொறி தான் ஆனால் சமூக வலைத்தளங்கள் பற்றிக் கொண்டு எரிந்தது...

"என்ன ஆகாஷ் இதெல்லாம்... இப்ப உன் பேர் மட்டுமில்ல உன் அத்தை நேம் கூட ஸ்பாயிலாகிடுச்சு..." என தந்தையின் கோப குரலில் முகம் இறுக நின்றிருந்தான் ஆகாஷ்.

"அண்ணா... விடுங்க பாத்துக்கலாம்..." என்ற தேவியிடம்

"கவனமா இருக்க வேண்டியவனே இப்படி இருந்தா என்ன பண்றது தேவி ... இப்ப அவனோட சேர்ந்து உன் பேரும் ஸ்பாயில் ஆயிடுச்சு..." என ஏகத்திற்கும் கத்தினார் தேவராஜ்...

"ப்ச், ண்ணா... இனி இந்த நியூஸ் வெளிய தெரியாது... மேக்சிமம் டெலிகாஸ்ட்டானா விடியோ புட்டேஜ்... எல்லாத்தையும் டெலீட் பண்ணியாச்சு அண்ட் வீடியோவை ரீலீஸ் பண்ண ஆளையும் பிடிச்சு லாக்கப்ல போட்டாச்சு... இனி எந்த பிராப்ளம் இல்லை..." எனக் கூற கூறவே மேல் அறையிலிருந்து கீழ் இறங்கி வந்தாள் முகில்...

நேராக தேவியின் முன் நின்றவள் சிறு கேலி புன்னகையுடன்
"வாவ்... பக்கா பிஸ்னஸ் மைண்ட் மிசஸ் பிறை...ஆனா பாருங்க நீங்க பதினாறடி பாய ரெடியா இருந்தா... நான் நாற்பதடி பாய ரெடியா இருப்பேன்...நீங்க இப்படியெல்லாம் பண்ணுவீங்கன்னு கூட நான் யோசிக்க மாட்டேனா..." என்றவள் அலைபேசியிலிருந்த காணொளியை ஓட விட்டாள்...


(டிஸ்கோ: நான் நாலு நாளைக்கு உங்க எல்லார் கிட்டயும் டூ...)தென் போன அத்தியாயம் படிக்காதவாங்க படிச்சிட்டு வாங்க
 

S. Sivagnanalakshmi

Well-known member
அப்பா வேறயடா.?. ஆகாஷ் தண்டனை சூப்பர். அகில் சூப்பர். கொஞ்சம் குழப்பம்டா. அவள் வேற ஓருவருவனுடன் போனதாக இருந்தது. பின்னர் கூட்டிட்டு வந்து விட்டானா? தேவம்மாள் சூப்பர்
 

Mr D devil

Moderator
அப்பா வேறயடா.?. ஆகாஷ் தண்டனை சூப்பர். அகில் சூப்பர். கொஞ்சம் குழப்பம்டா. அவள் வேற ஓருவருவனுடன் போனதாக இருந்தது. பின்னர் கூட்டிட்டு வந்து விட்டானா? தேவம்மாள் சூப்பர்
அடுத்த அத்தியாயத்தில அவள் யாருடன் சென்றாள் என தெரிய வரும் ... ஆகாஷ் செல்லும் போது அவன் எங்கே சென்றான் என்றதும் தெரிய வரும் தங்கமே... காத்திருங்கள்... அப்பா வேற தனோ
 

Advi

Well-known member
முகில் செல்வம் அப்படினா, செல்வம் தேவி ஓட ஃபர்ஸ்ட் கணவனா🤔🤔

இப்ப தேவி செகண்ட் மேரேஜ் பண்ணினது தான் முகில் ஓட கோவத்துக்கு காரணமா?????

பிறை நல்லவரா தானே தெரியரார், இப்ப வரை, அவரை ஏன் பிடிக்கல இவளுக்கு????

ஆகாஷ்🙈🙈🙈

முகில் தேவி பொண்ணுனு யாருக்குமே தெரியல ஏன்?????

தேவராஜ், ஏன் இப்படி தங்கைக்காக ஓவர் சப்போட் பண்றார், லைட்டா டவுட் வருதே இவர் மேல🙄🙄🙄🙄

சீக்கிரம் அடுத்த எபிசோட் தாங்க டா😍😍😍😍
 

Mr D devil

Moderator
முகில் செல்வம் அப்படினா, செல்வம் தேவி ஓட ஃபர்ஸ்ட் கணவனா🤔🤔

இப்ப தேவி செகண்ட் மேரேஜ் பண்ணினது தான் முகில் ஓட கோவத்துக்கு காரணமா?????

பிறை நல்லவரா தானே தெரியரார், இப்ப வரை, அவரை ஏன் பிடிக்கல இவளுக்கு????

ஆகாஷ்🙈🙈🙈

முகில் தேவி பொண்ணுனு யாருக்குமே தெரியல ஏன்?????

தேவராஜ், ஏன் இப்படி தங்கைக்காக ஓவர் சப்போட் பண்றார், லைட்டா டவுட் வருதே இவர் மேல🙄🙄🙄🙄

சீக்கிரம் அடுத்த எபிசோட் தாங்க டா😍😍😍😍
Wow எத்தனை ques... பிறை நல்லவர் தான் அவரோட பாசம் இவளுக்கு தான் புரியல🤧🤧🤧 எஸ் அவ narumukai செல்வம் தான் sis... தேவிக்கு ஒரு கல்யாணம் தானே ஆச்சு😝😝😝
 

Advi

Well-known member
Wow எத்தனை ques... பிறை நல்லவர் தான் அவரோட பாசம் இவளுக்கு தான் புரியல🤧🤧🤧 எஸ் அவ narumukai செல்வம் தான் sis... தேவிக்கு ஒரு கல்யாணம் தானே ஆச்சு😝😝😝
Ethe, என்னயா சொல்றிங்க, அப்ப முகில் செல்வம்ல தட் செல்வம் யாரு😳😳😳🤔🤔🤔
 

S. Sivagnanalakshmi

Well-known member
அடுத்த அத்தியாயத்தில அவள் யாருடன் சென்றாள் என தெரிய வரும் ... ஆகாஷ் செல்லும் போது அவன் எங்கே சென்றான் என்றதும் தெரிய வரும் தங்கமே... காத்திருங்கள்... அப்பா வேற தனோ
சரிடா. காத்திருக்கிறேன்
 

Mr D devil

Moderator
Next ud pottachu

 
Top