எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - [email protected]

கண்ணும் கண்ணும் பேச!

Status
Not open for further replies.
குடும்பத்தினரை தேடி வரும் பாருணி தன் மாமாவின் ஏக்கத்தை தீர்க்க தவிதவிக்கும் ரித்விக். பெண்களை வைத்து தொழில் நடத்தி வரும் மஹாசினி. இவர்களின் வாழ்க்கை பயணத்தை இக்கதையில் காண்போம்😉
 
பேச்சு 1


கடவுள் அவர் படைத்த இந்த பறந்து விரிந்த உலகம் பூமாதேவி அவரின் பெருமைக்கு ஈடு இணை கிடையாது. அந்த தேவியின் பொறுமையால் தான்! நம் நாடு இன்று வரை திகழ்ந்து,வளர்ந்து மிக நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறது. ஆண்,பெண் இருவரும் சமம் என. நாம் வாழ்ந்து வரும் இந்த இருபத்தி ஓறாம் நூற்றாண்டிலும் கூட இப்படியெல்லாம் நடக்குமா? என கேள்வி எழும். ஆம்! எந்த அளவுக்கு உலகம் நண்மை அடைந்து வளர்ந்து வருகிறதோ. அதே அளவுக்கு தீமைகளும் தீயாய் பரவி வருகிறது. பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அன்றைய நாட்களில். சுதந்திரம் நாட்டில் வேண்டும் என்று போராட்டம் செய்து ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஏழாம் ஆண்டு நம் நாட்டிற்கு விடுதலை பெற்றது. ஆனால் பெண்களுக்கு சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லை. அடுப்பங்கரை தான் 'நாட்டில்' தங்களின் குடும்ப நபர்களுக்காக கட்டுப்பட்டும் கிடந்தார்கள். அதே போலும்! இன்னொரு வழியில்,இன்னொரு உலகம். அதுதான்! அந்த உலகம். ஆண்களை பொறுத்தவரை அது சொர்க்கம். ஆனால், அங்கு வசிக்கும் பெண்களுக்கு வருமானம். இது இந்த வேலை! இந்த உலகம் அரச காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அரசர்களுக்கு 'அந்தப்புரம்' ஆம் அந்தப்புரம் ஒரு விதமான மோகம் கலந்து காமம் சேர்ந்து ரசித்து ருசிக்கும் அந்தப்புரம் அது. அவர்களை தோழிகள் என அழைக்கப்பட்டு வந்தார்கள். மூவேந்தர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் அத்துடன் நின்றதா? இல்லை. வெள்ளையர்கள் வந்தாலும், அவர்கள் நன்மை,தீமையில் வீழ்த்தி செய்தாலும். இந்தப் பக்கம் இந்த உலகம்,அழகு கலந்த ஒரு சிறை உலகம். நடந்து கொண்டே தான் வந்தது. ராஜனர்த்தகி என்ற பெயரில் கோயில் அவர்களை பூட்டி வைத்தார்கள். அழுத்தமாக சொல்லப்போனால் சிறு வயதில் அந்த இருண்டு போன உலகில் சிக்கித் தவித்து வந்தார்கள். பின் வேறு பெயரில் மாற்றம் செய்து 'தாசி' என அழைக்கப்பட்டு இரவு நேரத்தில் தங்களது தேவைக்காகவோ? மற்றவர்களின் தூண்டுதலின் காரணத்திற்காகவோ? பெண்கள் இப்படிப்பட்ட நிலையில் தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். கல்வி கற்றுத் தரவும்,அதனை பெறவும், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று, இந்த இனம் இருக்கிறது. இந்தியா முழுவதும் இருந்துதான் வருகிறது. அதில், மிகவும் பிரபலமான ஒரு குழு தான் மஹாசினியின் குழு. மஹாசினியிடம் ஒரு பெண் வந்து சேர்கிறாள் என்றால்? அவள் உலக அழகியின் பட்டியலில் ஒருத்தியாக இருக்க வேண்டும். மஹாசினியிடம் எத்தனையோ பெண்கள்! அவர் அனுப்பும் இடத்திற்கு சென்று. தங்களது வேலைகளை முடித்து வருவார்கள். அதிலும், அந்தப் பெண்களில் ஒருத்தி மிகவும் அழகான பெண். அழகிகளுக்கெல்லாம் அழகி அவள் தான்! அவளே சங்கவை. சங்கவை ஒரு விதியின் விளையாட்டாக மஹாசினியிடம் வந்து சேர்ந்து இதோ இரண்டு வருடங்கள் ஆனது. இந்த இரண்டு வருடங்களில் தான் மஹாசினியின் தொழில் எங்கோ பறந்து சென்றது. "சங்கவை இதோ பார். இன்னைக்கி ஒரு தொழிலதிபர் உன்ன அவர் வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கிறார். போ போய் நல்ல பொண்ணா நான் சொன்ன மாதிரி சிறப்பா வேலைய பாத்துட்டு வரணும்." என அவர் பேசிய தோரணையும், அவரின் தொடுதல். அவளுக்கு எப்போதும் ஒரு வித மாற்றம் தரும். அவளும் புன்னகை முகமாக " நான் கண்டிப்பா போயிட்டு வரேன். இந்த சங்கவையுடைய அழகில் யாரு தான் மயங்காம போவாங்க?" என அவள் கூறும்போது "கொஞ்சம் அழகு! என் விலை மதிப்புடைய தங்கமே. போய்ட்டு வா!" என மஹாசினி அவளை அனுப்பி வைக்க. "அக்கா! புதுசா ஒரு பீஸ் வந்து இருக்கு." என அவரின் தம்பி கூப்பிட. அவர் சென்று பார்த்தார். "ம்ப்ச்! என்னடா இவ இப்படி இருக்கா? இவ சரிப்பட்டு வர மாட்டா. நீ இவள நம்ம சமையல்காரியா போட்டு வேலை வாங்கு. இவ சங்கவை அளவுக்கு அழகு இல்லை." என அவர் தன் முந்தானையை பிடித்தபடி கம்பீரமான குரலில் கூறினார். " அக்கா இவளுக்கு என்ன கா குறைச்சல்? எப்போ என்ன கண்ணு! என்ன மூக்கு! ப்பா!! இவளை போய்.." என அவன் முடிக்கும் முன்பே குறுக்கே புகுந்தவனது கன்னத்தில் தடம் பதித்து அடித்த அவரின் கைதடம் பதிந்தது. "என்கிட்ட வர ஒவ்வொரு பொண்ணும் அழகுல கோடியில் ஒருத்தியா இருக்கணும். எனக்கு இந்த தொழில் சங்கவையால தான் வளர்ந்தது. அவள மாதிரி ஒரு அளவில்லாத அளவுக்கு ஒரு அழகியை கூட்டிட்டு வருவீங்கனு பார்த்தா? இவளை போயி.. இந்த பொண்ண நான் தொழிலுக்குள்ள கொண்டு வந்தேனா? இவ மஹாசினியுடைய கோட்டையை சுக்குநூற உடைச்சு ஒடிச்சு போட்டுட்டு வா. இவளை எல்லாம் சமையலறையில் தான் தூக்கி போடணும்." என பெண் சிங்கம் போல் கர்ஜித்துவிட்டு சென்றார்.அவர்களை திட்டி விட்டு அவர் செல்ல அவளை தூக்கி கிச்சனில் போட்டார்கள். மற்ற பெண்களும் 'யார்?' என்ற கேள்வியுடன் பார்க்க அப்போது தான் அவளுக்கு மயக்கம் தெரிய ஆரம்பித்தது.
"நான் எங்க இருக்கேன்? நீங்க எல்லாம் யாரு?" என அவள் கேள்வி எழுப்பினால் அவளிடம்
"இனிமே நீ இங்க தான் இருக்கணும். இது மஹாசினியோட இடம். இங்கு இருந்து யாரும் வெளியே போக முடியாது. நீ எப்படி இங்கு வந்து மாட்டின?" என அந்த பெண் கேட்க அவளும் வழிந்து கொண்டே "பிரண்டுகாக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். என்னை யாரோ மயக்க மருந்து வச்சு தூக்கிட்டு வந்துட்டாங்க." என அவள் கூறவும் கண்களில் கண்ணீரோடு கண்மையும் சேர்ந்து வலிய தொடங்கியது. சரி சரி அழாத உன் பெயர் என்ன என அவள் அவளிடம் கேட்க "என்னுடைய பெயர் பாருணி" எனவும் அவர் "என்னுடைய பெயர் ஷீலா. நீ என் கூடவே நைட்டு படுத்துக்கோ. உனக்கு டிரஸ் வேணும்னா என் டிரஸ் இருக்கு. அதுக்கு யூஸ் பண்ணிக்கோ. முக்கியமான விஷயம் அழகா ஒப்பனை செஞ்சிட்டு வரணும். ஏன்னா இது மஹாசினியுடைய கோட்டை. எவ்வளவு டைம்னாலும் எடுத்துக்கோ." அவளும் எதுவும் கூறாமல் சென்றால். பின்னர் அங்கு மாலைப்பொழுது கடந்தது அவர்களை காண்பதற்கு ஒரு பட்டாளமே திரண்டு வந்தது. அந்தக் கூட்டத்தில் ஒருவர் "மஹாசினி மேடம். நீங்க எப்பவுமே எனக்கும் என் தம்பிகளுக்கும் கட்டுப்பட்டு இருக்கீங்க. அதை மனசுல வச்சு நடந்துக்கோங்க. சரி, இன்னைக்கு சங்கவை ஆட்டம்,பாட்டம்னு எங்களை நல்லா கவனிச்சுட்டு இருந்தா.." என அவர் முழுமையாக முடிக்கும் முன்னர் "இந்த மஹாசினியுடைய விலைமதிக்க முடியாத தங்கம் வைரம் தான் சங்கவை. எப்படியோ நீங்க சந்தோசமா ஆர்ப்பாட்டமா இருந்தீங்க தானே? எங்க சங்கவை வந்தது நீங்க எனக்கு முப்பது லட்சம் தரணும்."என மஹாசினி கூறியதை கேட்டதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் இருந்தன. "என்ன அக்கா எப்பவும் சங்கவை போனால். இருபது லட்சம், இல்ல பதினைந்து தானே வாங்குறதுண்டு. இப்போ புதுசா முப்பது லட்சம்.?" என அவரது தம்பி பேசி முடித்ததும். "ஆமா! எனக்கு நீ சொன்னது புரியுது. இவங்க முதலாளியோட அவ இன்னும் இருக்கா போல. அவரோட இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கனும். அதுக்காக தான் இவ்வளவு கூட்டம். சங்கவை என் பொக்கிஷம். அவளுக்கு எப்பவுமே விலை அதிகம்." என அவர் சரியாக புரிந்து கொண்டார். அவர் கேட்க பணத்தை கொடுத்துவிட்ட பின் கூட்டம் கலைந்தது. நேரங்கள் சென்ற பின்னர் "எங்கடா அவ? அந்த சமையல் அறையில் தூக்கிபோட்டவ? அவளை வந்து பார்க்க சொல்லு." என்றதோடு அவர் தன்னுடைய அறைக்கு சென்றார்.
ஷீலாவின் உடைகளை அணிந்து கொண்டு. சின்ன சின்ன நகைகளுடன்,மெல்லிய ஒப்பனை செய்து வந்து நின்ற பாருணியை அவளின் தோழி "பாருணி! செம அழகா இருக்க! சங்கவைக்கு நிகரான அழகு நீ. உன்னை போய் எப்படி சமையல் அறைக்கு தள்ளிவிட்டாங்க? உண்மையை சொல்றேன் சங்கவை ரொம்ப நல்ல பொண்ணு.நா இதை எல்லாம் சொல்ல கூடாது. ஆனா, மஹாசினி எல்லோரையும் கவனிச்சுட்டு வருவா. அதான்,சொல்றேன்." என அந்தத் தோழி பாராட்டலுடன் ஆரம்பித்து சோகம் கலந்த குரலில் முடிக்க. அவ்வேளை தான் மஹாசினியின் சகோதரன் வந்தான். அவன் பாருணியை பார்த்ததும் சிலை போல் நின்றான். பின் தன்னை சுயநினைவிற்கு வர செய்துவிட்டு. "ஷீலா. இவள் அக்கா கூப்பிட்டாங்க." என தன்னை எதற்காக அனுப்பி வைத்தாரோ. அந்த செய்தியை மட்டும் அவர்களிடம் தெரிவித்து விட்டு. அவ்விடம் விட்டு அன்றான். "பாருணி. வா போகலாம். அவங்க உன்னை எதுக்காக கூப்பிட்டாங்கன்னு தெரியல. வா வா." என அவளை அவசர அவசரமாக அழைத்துக் கொண்டு சென்றாள் அவளின் தோழி ஷீலா. அறையின் கதவை தட்டியவுடன் "வா புது பொண்ணு." என அவர் கூற அவளும் பயத்தில் எச்சிலை விழுங்கியபடியாக நடந்து சென்றாள். அவளை பார்த்தவுடன் தன்மையனைப் போல் அவரும் அப்படியே பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தவர். மின்சாரம் பாய்ந்து போல் விடுக்கென்று எழுந்தவர். அவளது கன்னத்தை தடவி, அவளது கைகளை தடவினார், பின்னர் " தப்பு பண்ணிட்டேன். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். இந்த விஷயத்தை நான் செஞ்சிருக்க கூடாது சரி உன் பேர் என்ன" என அவர் கேள்வி எழுப்ப அவர் என்ன சொல்கிறார்? என்பதை அவள் முதலில் புரிந்து கொள்ளவில்லை. புரிந்தாலும், எதை குறிப்பிடுகிறார் என பாருணிக்கு தெரியவில்லை? ஆனால், இறுதியாக அவர் கேட்ட கேள்வி. அவளுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்தது. "பாருணி" என தன் பெயரை கூறினாள். "பாருணி. வித்தியாசமா இருக்கு. இந்த பெயர் அர்த்தம் என்ன?" என அவர் கேட்டார். " பாருணி. இந்தப் பெயர் காளிதேவி உடைய ஒரு பெயர். தப்பு தட்டி கேட்கும், தப்பு செய்தவர்களை சாகடிக்கும். மகாகாளியுடைய பெயர்." என அவள் வழக்கமான குரலில் தான் கூறினால். ஆனால், அந்த அர்த்தம் மகாசினியை கோபத்திற்கு தள்ளியது அவளை தள்ளி விட்டவர். " தப்பு பண்றவங்கள சாகடிப்பாங்க. அப்போ, நீ என் சாம்ராஜ்யத்த சாகடித்து தீர்வேன்னு. உன் பேரோட அர்த்தமா சொல்ற! அப்படித்தானே?" என அவர் கூறவும் கீழே வீழ்ந்திருந்தவள். "நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்னேன் அவ்வளவுதான்." என் அவள் பேசியது அவருக்கு மேலும் கோபத்தை கூட்டியது. "நீ வந்து ஒரு நாள் கூட முழுசா முடியல. அதுக்குள்ள எதிர்த்து பேசுற? இதோ பார்!" என அவர் கூறவும் அவளது கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது. மேலும் அவர் " இது என்னுடைய கோட்டை, இந்தத் தொழில் என்னுடைய கௌரவம், இங்க நடக்கிறது தப்புதான்!! படத்துல ஹீரோவும் ஹீரோயினும் நடிக்கல? அதோட படத்தை விடு, அதுல இருக்குற பாட்டு அதுல காதல் அப்படிங்கற பேர்ல அவங்க நேசம் வச்சுக்கல? அது மாதிரி தான் இதுவும்!! அவங்க வெளிப்படையா நடிச்சிட்டு வர்றத நான் மறைமுகமா பிசினஸ் பண்ணிட்டு வரேன். இன்னைக்கு புதுசா ஒரு ஆர்டர் வந்திருக்கு. நீ தான் போற. போகணும்! உன் துணைக்கு ஷீலா வருவா. நமக்கு வர கிளைன்ட நம்ம சந்தோஷப்படுத்தினால் தானே? ஆர்டர் எல்லாம் வரும். முதல்ல கூச்சமா தான் இருக்கும். போகப் போக பழகிடும். இனி, நீ சங்கவை கூட தான் தங்கனும். உனக்கு வேண்டிய பொருள் எல்லாம் என் தம்பி கொண்டு வருவான். இதே போல் ஒப்பனை செஞ்சு போற. நாளைக்கு சரியா?" என அவர் கூறியதை கேட்டதும் பாருணி தன் தலையை ஆட்டினால்.

*******
"சார் டேக் நல்லாவே வர மாட்டேங்குது இன்னும் கொஞ்சம் சோகம் வேணும் சார்" என டைரக்டர் கூறினார். "சோகம் வந்துடும் நீங்க வேணும்னா பாருங்க. இந்த சீரியல் செம ஹிட் ஆகப்போகுது. நிறைய அவாட் தரப்போகுது." என அவர் மேலும் தொடர்ந்தார். "சரி நம்ம ஹீரோ எங்க?" என டைரக்டர் கேள்வி எழுப்பியதும் தான். அவர்கள் அவனை தேட ஆரம்பித்தார்கள். ஆம்! பறந்து விரிந்த மார்பு, அதில் கோடுகள், அவனின் அனுதினம் செய்த உடற்பயிற்சியின் காரணமாக வந்த அந்த ஆறு வளைவுகள். கைகளில் பலத்தை கூட்டிய விதமாக நரம்புகள் வேடைக்க. அவனது தோற்றமும் இருக்கும். தன் உடற்பயிற்சி அறையில் இருந்த ஒரு இரும்பு கம்பியில், அவன் தன் கால்களால் தாங்கி தொங்கிக் கொண்டு பாட்டு கேட்ட இருக்க. அவனது அறைக்கு வந்த டைரக்டர் அவனைப் பார்த்து. " ரித்விக் இன்னைக்கு ஷாட். பரபரப்பான எபிசோட். இந்து சமயத்தில் போய் நீ இப்படி பயிற்சி பண்ணிட்டு இருக்க?" என அவர் கேள்வி கேட்க. சொன்னது போல் வேலையை முடித்தே ஆக வேண்டும். அப்போது தான் ப்ரோமோ போடுவதற்கு சரியாக இருக்கும். என்கிற கோபம், வேலையின் பயன் அது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து தான். அவனிடம் அப்படி பேச வைத்தது. " சரி சார். கூல்டவுன் டைரக்டர் சார். நீங்க போங்க. நான் அஞ்சு நிமிஷத்துல வந்துருவேன்." என அவன் கூறவும் தான் அவரது கோபம் சற்று இறங்கத் தொடங்கியது. சொன்னது போல் வந்தவன்."ஹூம். இப்ப நான் என்ன செய்ய?" என அவன் கேட்க அவர் "சாரி ரித்விக். இன்னைக்கி உனக்கு சூட் கிடையாது. இப்போ தான் நான் சீன் பார்த்தேன். படிச்ச பிறகுதான் ஐ நோட் தட். உன்ன தெரியாம டிஸ்டர்ப் பண்ணிட்டேன். நாளைக்கு நைட் தான் உனக்கு சூட்." என அவர் கூறவும் தன்னிடம் கோபம் கொண்டவரை கோபமாக பார்க்காமல். "ஓகே! நாளைக்கு நான் வாரேன். இன்னைக்கு பிரண்டோட வீட்டுக்கு போறேன் சார். சத்ரியன் வா வான்னு சொல்றான் சார். அவன் கூட போய் இருந்துட்டு வரேன் சார். சத்ரியன்! ரித்விக் வரேண்டா!! ஐயம் ஆன் தி வே!!" என்றதோடு உற்சாகமாக சென்றான்.

*******

என் பேரு மீனா குமாரி, என் ஊரு கன்னியாகுமரி, போலாமா குதிர சவாரி, செய்வோமா செம கச்சேரி. நான் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சுந்தரி, என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீ புல்லரி, என் பேர் என் பேர். என் பேர்!!

ரித்விக் அந்த வீட்டினுள் சென்றதும் அவனது செவிகளில் இந்த பாடல் வரிகள் விழுந்தது. அவன் தன் மனதில் 'மச்சான் பிசினஸ் விஷயமா ஏதோ பண்ணிட்டு இருக்கான்னு பார்த்தா? உள்ள வேறு ஏதோ கூத்து நடக்குது போல?' என்ற கேள்வியோடு சென்று பார்த்தவன். அப்படியே அந்த ஆட்டத்தில் கலந்து கொண்டான். அப்போது தான் சத்ரியன் "ரித்விக்! நைஸ் டு மீ யூ டா. அஞ்சு மாசம் கழிச்சு இப்போ தான் உன்னை பார்க்கிறேன்." என சத்ரியன் ஆடிக்கொண்டே பேசியதில் மூச்சு பலமாக வாங்க. பிறகு அவன் அமர்ந்து. " ரித்விக் இவதான் சங்கவை" என அவளை அவன் அறிமுகம் செய்து வைத்தான். "ஹாய்!" என அவள் கூறினால். "நாளைக்கு இவங்க குரூப்ல இருந்து ஒரு பொண்ணு உன் கூட ஷாட் நடிக்க வர போறாங்கன்னு. இப்போ நாங்க ஆடுறதுக்கு முன்னாடி தான் தகவல் வந்தது." " நீங்க அந்த பொண்ண பாக்கலையா?" என அவன் சங்கவியிடம் கேள்வி எழுப்பினான்.
"இந்தாங்க. இதுதான் அட்ரஸ். அங்க போயி மஹாசினின்னு எங்க தலைவி இருப்பாங்க. அவங்க கிட்ட கேட்டா தெரியும். முக்கியமான அட்ரஸ்னு சொல்லுங்கள். ஆர்டர் மறந்துடாதீங்க." என அவள் தெளிவாக கூறினாள். அவனும் "எனிவேஸ்! உன்ன மாதிரி அழகான பொண்ணா இருந்தா தான். நான் ஓகே பண்ணுவேன்." என அவன் கூறவும் "நான்.." என் அவள் முடிக்காமல் விழித்துக் கொண்டு இருந்தாள். "சத்ரியன் உன்ன பத்தி கொஞ்சம் சொல்லி இருக்கான். சரி மச்சான். ஜாலி மூட்டுல இருந்த, நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல? சாரி. யு கைஸ் கண்டினியூ. பை சங்கவை,சத்ரியன்."

அவர்கள் வசிக்கும் இடத்திற்கு வந்தான் அந்த நடிக ஆண்மகன். அவனைப் பார்த்த மஹாசினி "என்ன புதுசா ஒரு பீஸ் வந்து இருக்கு? உனக்கு என்ன வேணும்? ஷீலா!" என அவர் ரித்விக்கிடம் தொடங்கி ஷீலாவை கூப்பிட்டார். அவளும் கையில் டீட்ரேயோடு வந்தால். இதுதான் மஹாசினி. அவர் ஒரு பெண்ணை பெயர் சொல்லி கூப்பிடுகிறார் என்றார். அது யாரோ ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு அன்னம் தந்து கவனித்து வர வேண்டும் என்பது அர்த்தம். " தம்பி நீங்க?" என அவர் கூறவும் " ஷார்ட்டுக்கு என் கூட ஆடுற அந்த பொண்ண பார்க்க வந்தேன். இந்தாங்க அட்வான்ஸ் ஒரு லட்சம்." என அவன் நீட்டவும் "ஷீலா போய் கூட்டிட்டு வா." என அவளிடம் உத்தரவு விட அவளும் பாருணியை அழைத்து வந்தாள். பாருணியை பார்த்தவனுக்கு வார்த்தைகள் வராமல் போனது. அவளது அழகில் அவன் மெழுகாக உருகினான்.

பேசுவாளா(னா)❤
 

Attachments

  • Snapchat-155843377.jpg
    Snapchat-155843377.jpg
    334.7 KB · Views: 1
Last edited:
பேச்சு-2


அவளைப் பார்த்தவன் தன்னிலைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டு இருக்க. அவனிடம் "இவள் தான் நாளைக்கு உங்க கூட ஷாட்டுக்கு வருவா. இவ ஓகே தானே?" அவன் தன்னிலை பெற்றால் தானே? கனவுலகில் மிதக்கிறான். சங்கீதத்தின் வரிசைகளோடு.

( கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி எழுத்தாய் இழுத்தாய்)

என அவன் மெய்மறந்து வேறு உலகில் இருந்தவனை சமநிலைக்கு கொண்டு வந்தது மஹாசினியின் குரல். "அழகா இருக்கா உன் பெயர் என்ன?" என அவளது பெயரைக் கேட்க துடித்தான் "அது.. என் பேரு.." என சொல்ல வந்தவளை அவர் 'சொல்லாதே' எனும் விதமாக ஜாடை காட்டினார். இவளை நாங்க "தேவிகாணு" தான் கூப்பிடுவோம். என அவர் அவளுக்கு வேறு ஒரு பெயரை வைக்க அது அவளுக்கு அதிர்ச்சியை தந்தது. அப்போது அவனது மனம் 'தேவகி' என பதிவு செய்து வைத்தது. அவளுக்குத் தந்த அந்த புது பெயரில் "தேவிகா போய் நிம்மதியா உறங்குமா. நாளைக்கு உனக்கு ஷார்ட். அதோட, இதோ இவர கவனிச்சுட்டு போயி தூங்கு போ தேவிகா." என அவர் ஆழ அழுத்தமாக கூறினார். அந்த இடத்திலிருந்து தன்னுடைய அறைக்கு சென்றவள். கதவை அடைக்க திரும்பிய போது. அவன் மார்புக்கு குறுக்கமாக தன் இரு கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருக்க அதைப் பார்த்தவள் "நீங்க போகாம ஏன் இங்கு நின்னுகிட்டு இருக்கீங்க?"என தன் குழப்பக் கேள்விகளை கேட்டாள் "நான் கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு. பேசிட்டு நான் என்னுடைய வேலையை பார்க்க போறேன்." என அவன் கூறவும் "ஹூம்!பேசுங்க." என அவள் அவனை பாராமல் சுற்றித்தன் பார்வையை வீசினாள். அதைப் புரிந்து கொண்டு "யாரும் இல்ல தேவகி." என அவன் கூறவும் "தேவகி யாரு?" என அடுத்த கேள்வியை எழுப்ப. அவள் அவனிடம் கேட்க "தேவிக்காவ கொஞ்சம் டிஃபரென்ட்டா தேவகினு கூப்பிட்டேன்." என அவன் சர்வ சாதாரணமாக கூறினார். "நீங்க நினைக்கிற மாதிரியே என் பேரு தேவிகா இல்ல." என அவள் கூறவும் "என்னம்மா! தம்பியை கூட்டிட்டு போய் கவனி." என அவர் கூறவும் 'சரி' என தலையை ஆட்டி விட்டு அவனோடு அறையினுள் சென்றாள். அவனுக்கு அதிர்ச்சி 'இவளது பெயரை ஏன் அவர் தவறாக கூறினாலும், அவள் ஏன் அமைதி காத்து வந்தால்?' என்ற கேள்வியும் உதிக்கவில்லை? பெயரை மட்டும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். "ஐயோ! உன் பேர் என்ன? அந்த அக்கா ஏன் உன்னுடைய பெயரை மாத்தி சொன்னாங்க? இப்போ உண்மையான பெயரை சொல்லு?" என அவன் தன் கேள்வியை எழுப்பிய போது அவளுக்கு தயக்கம் 'என் பெயரை இவர்கிட்ட சொன்னால்.. இவர் கிளம்பி போகும்போது மஹாசினிகிட்ட உங்களுக்கு அவ பேரு தெரியாதுன்னு கேட்டா? அவங்க சும்மா இருக்க மாட்டாங்க.' என அவள் தன் மனதிலேயே பல கேள்விகளோடு, தன்னை தானே திட்டவும் செய்தால். அவன் "ஹலோ! உன் பேர் என்ன?" அவன் மீண்டும் கேட்டான். "இல்ல நான் என் பெயரை சொன்ன பிறகு நீங்க பாட்டுக்கு மஹாசினி கிட்ட சொல்லிட்டீங்கன்னா? அவங்க என்ன சும்மா விட மாட்டாங்க. திட்டி தீத்துடுவாங்க.." என அவள் பேசிக்கொண்டே போனாளே தவிர அவளது பெயரை அவனிடம் கூறவில்லை. "என்ன ரொம்ப ஏங்க வைக்காதே? உன் பேர் என்ன? அப்பத்தான் நான் நிம்மதியா தூங்க முடியும்." என தன்னை அறியாமல் அவனும் கூற ஆரம்பித்தான். அவள் "என்னோட பேர் தெரியாம போனா நீங்க ஏன் நிம்மதியா தூங்க முடியாதுன்னு சொல்றீங்க?" என அவள் கேள்வி எழுப்ப. 'அட லூசு.' என தன்னை திட்டிக்கொண்டவன் அவளிடம் "என்னதான் இருந்தாலும் நாளைக்கு நைட்டு ஷாட் வருவ. அப்போ பேர் தெரிஞ்சுக்கிட்டு அது படி கூப்பிடனும். சி, மை நேம் இஸ் ரித்விக். நீ மஹாசினியை நெனச்சு பயப்பட காரணம் என்னன்னு எனக்கு கனிச்சு சொல்ல முடியல? ஆனா! ஒன்னு. அவங்க முன்னாடி தேவின்னு கூப்பிடுறேன். சொல்லு உன் பேரு தான் என்ன?" என அவன் மீண்டும் கேட்டான். "என் பேரு.. அது எப்படி உங்கள நம்பி சொல்ல முடியும்? சத்தியம் பண்ணுங்க?" என அவள் தன் வலது கரம் நீட்ட அவன் "ஐ ப்ராமிஸ்! ஹூம் சொல்லு?" என திரும்ப அவன் கூறவும் அவளும் சிரித்தபடியே. தன் பெயரைக் கூற வரும் முன் அறைக்கதவை திறந்து கொண்டு "இந்தாங்க காபி ரித்விக் சார்! நீங்க இப்போ புதுசா நடிச்சிட்டு வரி சீரியல் வேற லெவல்! கேன் ஐ டேக் எ செல்ஃபி வித் யூ?" என ஷீலா அவன் பக்கம் திரும்பி புகைப்படம் எடுத்துக் கொண்டவளிடம் "அக்கா நாங்க காபி குடிக்கிறோம். கொஞ்சம் என் கூடவே இருக்கீங்களா?" என அவளை தன்னுடன் இருக்க சொல்ல. ரித்விக் மீண்டும் கடுப்பானாக. அந்த ஃகாபியின் சூட்டை விட அவனது மண்டையில் இப்போது சூடு ஏறிக்கொண்டே இருந்தது. "இல்ல. இப்போ ஒருத்தர் வரப்போறார். அவருக்கு ஒருத்தி வேணுமாம். என்னமோ தெரியல என்னையும் கூப்பிடுறாங்க. நான் போறேன். இல்ல என்ன அடிச்சு கொன்னுடுவா. வரேன்." என அவர் சென்றார் பின் அவன் மீண்டும் அவளிடம் கீழே விழுந்த ரெக்கார்டு போல் "உன் பேரு என்ன?" என அவன் அவளிடம் கேட்பதை பார்க்கவும் அவளது மனதில் ஒரு அலாதி மகிழ்ச்சி! இருப்பினும், 'இனியும் கூறாமல் இருந்தால்? இவன் தன்னை விடமாட்டான்.' என சரியாக யூகித்த பெண்ணவள் "பாருணி " நீங்க கேட்கணும்னு நினைச்ச என்னுடைய பெயர் இதுதான்." புன்னகை விரிந்த இதழோடு, மற்றும் கண்களில் மகிழ்ச்சி பொங்க. "நாளைக்கு நைட்டு எட்டு மணிக்கு ஷாட். மறக்காம வந்திடு பாரு." என அவன் கூறிய தகவல்களை விட அவன் அவளை 'பாரு' என அழைத்தது சற்று மின்சாரம் தாக்கிய உணர்வை தந்தது.


*******

"சத்ரியன்! சத்ரியன்" என சங்கவை அவனை அழைக்க அவனும் ஓடோடி வந்தான். அவனைப் பார்த்து "அழகி! என்ன விஷயம்?" என அவன் கேள்வி கேட்க மறுப்பக்கம் அலைபேசியில் அவனது பிஎ "சார் நமக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு ப்ளீஸ் சீக்கிரமாக வாங்க சார்." என அவனது பிஎ கூப்பிட அவளிடம் "சொல்லு என்ன விஷயம்?" என கேட்க "நான் போயிட்டு வரேன். பைய் சத்ரியன்!" என அவள் சிரித்தபடியே சென்றால். மறுமுனையில் இருந்த அவனது பிஏ அவனிடம் "சார் முக்கியமான மீட்டிங் இருக்கு ப்ளீஸ் சீக்கிரம் ஆபீஸ்க்கு வாங்க சார்." என கூறவும் அவன் "ஸ்!! மீட்டிங் இருக்கா? அப்போ முன்னாடியே சொல்றதில்ல? உங்கள வச்சுக்கிட்டு என்ன செய்ய?" என அவன் திட்டி தீர்த்தவனுக்கு என்ன செய்வது என யோசிக்காமல் தன்னுடைய ஆஃபீஸிற்கு சென்றான்.


********


ரித்விக் தன்னுடைய வீட்டிற்கு சென்றேன். சென்றவனுக்கு தூக்கமும் வரவில்லை, சாப்பாடு சாப்பிடவும் பிடிக்காமல் போனது. அவனுடைய தாயார் "என்ன ரித்தி? என்ன ஆச்சு?ஏதோ, சிந்தனையில் இருக்க போல? நாளைக்கு ஷார்ட் போகணும் தானே? மார்னிங் ஷார்ட்னா அதுக்கு ஏத்த மாதிரி நேரத்துக்கு சமைக்க சொன்னா சமையல் செஞ்சுடுவாங்க. ஏய்!!" என அவர் பேசப் பேச அதை செவியில் வாங்காதவன். இன்னும் தன்னவளின் நிலையை அவளை மெய்மறந்து சிரித்துக்கொண்டே ரசிக்கும் தன் மகனைப் பார்த்த அவர் அவனை செல்லமாக அடித்து "ஸ்!!!அம்மா" என்றான் குறும்பாக "சொல்லு நாளைக்கு ஷார்ட் காலையில் இருக்கா? இல்ல நைட்டா?" என அவர் கேட்க "அட! என்ன பெத்த தாயே!! எனக்கு நாளைக்கு நைட் ஷார்ட் தான். போதுமா!" என கூறவும் அவன் எதார்த்தமாக "இந்த நேரம் நம்ம அத்தை கூட இருந்தா எப்படி இருக்கும்?" என அவன் கேட்கவும் அவரது கண்கள் கலங்கியது "ஆமா. அத்தை உன் அத்தையும் இருந்திருந்தால். ரித்விக் மாமாவ நான் தான் கல்யாணம் கட்டிப்பேன்னு!! மதுஷிகாவும் யாஷிகாவும் சண்டை போட்டுட்டு. உன்கூட, என் கூட,நம்ம கூட சேர்ந்து இந்த நேரம் வீட்டில் இருந்து இருப்பாங்க. இப்ப எதுக்கு அத பத்தி பேசிட்டு வா சாப்பிடு." என அவனுக்கு சாப்பாடு பரிமாறினார். "மச்சான் ஆன்ட்டி தைலம் இருக்கா?" என சத்ரியன் தன் மச்சானிடம் ஆரம்பித்து அவரது தாயாரிடம் முடிக்க "வாடா மாம்ஸ்! என்ன இவ்வளவு நேரமா ஆளையே காணோம்?" என அவன் வம்புக்கு இழுக்க "அடேய் பிசினஸ் விஷயமா மீட்டிங் முடிக்கு முன்ன எப்பா!!! எவ்வளவு தலைவலி! பசி தெரியுமா? ப்ளீஸ் அண்ட்டி எனக்கும் சாப்பாடு வைங்க." என அவன் கேட்க தோழர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டு பேசினார்கள். நேரங்கள் கடந்தன வானில் நிலவு ஜொலித்துக் கொண்டு இருந்தது 'நாளைக்கு நான் இந்த நேரம் என் பாருவோட ஷாட்ல இருப்பேன்.' என அவன் காதலாக நினைத்துக் கொண்டு இருந்தான். நிலவைப் பார்த்து ரசித்தபடியே. அப்போது அவனுடைய மாமா அங்கு வந்தார். அவரைப் பார்த்தவன் "மாமா வந்து உட்காருங்க." என அவரிடம் அமரும்படி கூற அவர் "யாஷிகாவை தேடிக்கிட்டே இருக்கோம். என் பிரெண்ட்ஸ் தேடினாங்க. அப்புறம் சரி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துடலாம்னு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்து இருக்கேன்." என அவர் சோகமாக கூறினார். "வருத்தப்படாத அண்ணா. மூணு வருஷமா தேடிட்டு இருக்கோம். எத்தனை தடவை சொல்லி இருக்கேன் கம்ப்ளைன்ட் தந்து இருந்தா சீக்கிரம் கண்டுபிடித்து தந்திடுவாங்கன்னு. இந்த நேரம் அண்ணியும் மதுஷிகாவும் இருந்திருந்தால். கொஞ்சம் ரிலாக்ஸ இருந்திருக்கும். யாஷிகா, மதுஷிகா மாமனங்களுக்காக சண்டை போட்டுட்டு இருந்து இருப்பாங்க. நீ ஒன்னும் கவலைப்படாத தங்கச்சி நான் இருக்கேன் ரித்வி இருக்கான். கவலையே வேண்டாம் உன் பொண்ணு கெடச்சிடுவா." என அவருக்கு நம்பிக்கை தந்தார்.

******

சங்கவை வந்ததை பார்த்தவர் அவளிடம் "சங்கவை!! நீ என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?" என அவர் கேள்வி எழுப்ப "அந்த ஆளுக்கு பிஸ்னஸ் மீட்டிங். அதான், வந்துட்டேன் இப்போ என்ன அதுக்கு?" என அவள் பேச

அப்போது தான் பாருணி அங்கு எதிர்ச்சியாக நடந்து வந்தாள். வந்தவள் அவர் சங்கவியிடம் என்ன பேசி வருகிறார் என்பதை கவனிக்க தொடங்கினாள் அங்கிருந்த திரையில் மறைந்து பார்த்த வண்ணமாக.

"அதுக்கு என்ன சங்கவை எனக்கே தெரியாத ஒன்று சொல்லட்டா?" என அவர் கூறும் போது அவளது கண்களில் அதிர்ச்சியை தத்தெடுத்தபடியாக காட்சி தந்தது. "நீ என் கௌரவம்! உனக்காக நான் முப்பது லட்சம் விலை கொடுத்து ஒரு நாள் வாங்கி இருக்கேன். இப்படி.. நீ சீக்கிரம் வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல?" என அவர் சற்று கொஞ்சலாக பேசி தன் முந்தியில் தொங்கி இருந்த அந்த மென்மையான கற்களை கொண்டு அவளது கன்னத்தில் வீசினார்.


இந்த சம்பவத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை? "அடிச்சுக்கோ!! நல்லா அடிச்சுக்கோ!! உன்னால ஒன்னும் பண்ண முடியாது? உன் குடும்பி நான். இப்போ என்னால இங்கிருந்து போக முடியும். ஏன் தெரியுமா? உனக்கு தான் புதுசா ஒரு பொண்ணு வந்துட்டா. அப்படித்தானே?" என அவளிடம் குரலை உயர்த்திப் பேசினான்.


அவளது கழுத்தைப் பிடித்துக் கொண்டு "சங்கவை!!! உன்னை நான் சும்மா சுதந்திரமா விட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு. நீ என்கிட்ட பொய் சொல்லி இருக்க? இது எனக்கு ரெண்டு வருஷமா தெரியாம போயிடுச்சு. ஏன் நீ அடிக்கடி சத்ரியன் வீட்டுக்கு போய்ட்டு வர? அவனுக்கு உனக்கும் என்ன சம்பந்தம்?" என கேட்கவும் "ஓ!! அதுவா மஹாசினி. அந்த பிசினஸ்மேன் வீட்டுக்கு போகாம இருந்திருந்தா? உனக்கு சீரியல்ல சாட் நடிக்கும் அளவுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்குமா? கிடைச்சும் இருக்காது. நாலாயிரம் பேருக்கு தெரிந்த நீ, இனி நாலு கோடி பேருக்கு மேல உன்னை தேடி வருவாங்க. நீ வேண்டாம்னு ஒரு வார்த்தை சொன்னால். நான் அங்க போக மாட்டேன்." என அவருக்கு ஏற்றார் போல் பேசி மடக்கி போட்டால்.

"அச்சோ!! வேண்டாம் நீ எனக்கு பெருமை சேர்த்து தர. அதை நான் தான் சின்னதா சந்தேகப்பட்டுட்டேன். நீ போ சங்கவை என்னதான் முதல் அடிச்சுக்கணும்னு உன்னை சந்தேகப்பட்டதுக்கு. இன்னைக்கு உன் கூட ஒரு பொண்ணு ரூம் ஷேர் பண்ண போறா. அவ தான் நாளைக்கு ஷார்ட் போற பொண்ணு. நீ போய் தூங்கு. சாப்பாடு ஷீலா கொண்டு வருவா." என அவர் செல்லமாக அவளது நலனை கருதி அவர் தன் அறைக்கு திரும்பி சென்றார்.


சங்கவை நடந்து தன் அறைக்குச் செல்ல 'ஆஹா! இவங்க தான் தான் மஹாசினியுடைய கோபத்தை அப்படியே குறைச்சு போட்டு கொஞ்ச வச்சுட்டாங்களே?' என அவள் நினைக்கும் போது


"ஆமா நீ யாரு?" என்று பாருணியை பார்த்து கேட்க "அ..அது உங்க கூட ரூம் ஷேர் பண்ண போறது நான் தான். ஐ அம் பாருணி. நைஸ் டு மீட் யு." என அவள் தன் கரம் கொடுக்க மெழுகு போல் உருகத் தொடங்கியவள். அவளது கரம் கோர்த்து."நைஸ் டு மீட் யு. ஐ அம் சங்கவை." என இருவரும் ஒன்றாக தங்களுடைய அறைக்கு சென்றார்கள்.


இரவு உணவு சாப்பிட்டு முடித்தவுடன் அவர்கள் இருவரும் நித்திரை கேட்க நித்திரா தேவியும் அவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டார்.


சாமம் கடந்திருக்க இரவு இரண்டு மணி அளவில் சங்கவை எழுந்தாள். எழுந்தவள் தன் அருகே இருந்த மேஜையில் இருக்கிற குடிநீரை பருகிவிட்டு, அதனை விழுங்கி கொண்டு இருக்கையில்.. அவளது கண்களும் கலங்கின.


கண்களில் சிந்திய கண்ணீரை தீர்த்தமாக சிந்திக்கொண்டு இருக்க. இரவில் அறை வெளிச்சமாக வர இருப்பதை கண்டவள். அவளது பக்கம் திரும்பி "என்னாச்சு? ஏன் இந்த நாடு சாமத்துல அழுதுட்டு இருக்க?" எனக் கேள்வி கேட்டபோது தான் தன்னுடன் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டால்.


"அது நான் ஒன்னும் இல்ல. ஏதோ கெட்ட.. கனவு." என பதில் சொன்னாலும் அவளது மனதில் ஆயிரக்கணக்கான கவலைகள் வாழ்ந்து வருகிறது மஹாசினியின் இடத்திற்கு வந்ததிலிருந்தே.


ஆதவனின் கீற்று உலகெங்கும் சூழத் தொடங்கியது. இன்று இரவு தான் பாருணி ரித்விக் இருவரும் ஒன்றாக திரையில் நடிக்கப் போகிறார்கள்.


அதனால் மஹாசினி ஷீலாவின் மூலமாக அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டார்.


******


என்னதான் விடிந்தாலும் எப்போது நான் அவளுடன் சேர்ந்து நடிப்பேன்? அவளது விழிகளை பார்ப்பேன்? என அவன் பகலில் இருந்து தவமாக காத்து வந்தான்.

நேரமும் சென்றது தன் நண்பன் அங்கு வருகை தர, அது வரை தன் இல்லத்தில் தனது மாமாவுடன் நாளை கடத்தியவன்

தன் அருமை தோழன் சத்ரியனுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தாலும், அவனது பிசினஸ் விஷயங்களையும் தெரிந்து கொண்டே தான் வந்தான். அவனால் முடிந்த அளவுக்கு உதவி செய்தும் கொடுப்பான்.


ரித்விக் யாருக்கும் அத்தனை எளிதாக உதவி செய்ய மாட்டான்! ஆனால், சத்ரியன் அவனது உயிர் தோழன் அதற்கும் மேல் என்றே சொல்லலாம்.


மதிய உணவை முடித்தவன் உறக்கத்தை தழுவினான். சத்ரியனும் வீட்டிற்கு சென்றான். வித்விக் எழுந்து பார்க்க கடிகாரம் ஏழு மணியை கடந்து இருக்க.


"ஐயோ!!!!" என அவன் பதறிய குரலை கேட்டு ஓடோடி வந்தவ அவனது தாயார் "ரித்தி கண்ணு?" என கையில் தோசை கரண்டியுடன் வந்தார்.


அவரிடம் "என்னமா நீ? இப்படி பண்ணி வச்சுட்ட மணி இப்போ ஆச்சு. எட்டு மணிக்கு ஷாட். டைமிங் கீப்பர் பண்ண வேண்டாமா?" என அவரிடம் திட்டி தீர்க்க "ஒன்னும் கெட்டுப் போகாது. குளிச்சிட்டு கிளம்பு." என அவர் அத்தோடு முடித்து கொண்டு அவ்விடம் விட்டு சென்றார்.

******


சூட்டிங் ஸ்பாட் வந்தவன் தனக்கு கொடுக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு வருகை தர.


அவனை சுற்றி தலை முடியை அழகாக வாரி விட ஒருவர், முகத்திற்கு வேண்டிய ஒப்பனை பொருட்களைக் கொண்டு ஒருவர், அவனது கண்கள் அவளைத் தேடியது. அங்கு வந்த டரைக்டர் "ரித்விக் சீன் வந்து. நாங்க பாட்டு ஒன்னு பிளே பண்ணுவோம். ஆர்டிஸ்ட் ஸ்டெப்ஸ் எல்லாம் சொல்லி தருவாங்க. அதுக்கு ஏற்றார் போல நீங்க அந்த பொண்ணு கூட ஆடனும், அப்போ நம்ம ஹீரோயின் வந்து பாப்பாங்க. நீங்க பேச வேண்டிய வசனம் எல்லாம் இதுல இருக்கு." என அவர் அதை கொடுத்து அவ்விடம் விட்டு செல்ல.


அவனும் ஸ்பாட் வந்து சேர்ந்தான். அத்தனையையும் படித்துக்கொண்டு அவன் வர அங்கு அவள் பச்சை நிற புடவையில், பார்டர் அதில் வெள்ளை நிற ரோஜாக்கள், சற்று மென்மையாக இருந்தாலும் அவளுக்கு, அவளின் தோள் நிறத்திற்கு அது எடுப்பாக இருந்தது.


கண்களில் காஜலும் ஐலைனரும், நெற்றியில் இரு புருவங்களுக்கு இடையே கருப்பு வண்ணப் பொட்டும். காதுகளில் வெள்ளை நிறத்தில் குடை ஜிமிக்கி பெரியதாக. கழுத்து வெறுமையாக இருந்தது பார்த்தவன் அவளது அலையில் மயங்கியே போனான்.


அவர்களுக்கு ஆர்ட்டிஸ்ட் பயிற்சி தர டரைக்டர் தரும் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர, அவருக்கு பக்கத்திலேயே கம்பீரமாக கால் மேல் கால் போட்டுக் கொண்ட அமர்ந்திருந்தார் மஹாசினி "ரோல்,கேமரா, ஆக்சன்." பாட்டு ஒலிக்கத் தொடங்கியது நடனமும் ஆடினார்கள்.


என் தாரா என் தாரா நீயே என் தாரா என் வானம் பூத்ததே தாரா கண்பூரா கண் போறா நீயே தான் தாரா கண்ணால காண்கிறேன் புறா தண்ணீரை பூசிக் கொண்டே மெல்லச் சொட்டும் பிம்பங்கள் ஆகிறாய் எதிரே என்னோடு காதல் வந்து என்ன செய்வேன் வெட்கங்கள் பேசுதே


எனப் பாடலும் சேர்ந்து அதற்கு ஏற்றார் போல் அவளும் நடனம் ஆடினால். ஷாட் அற்புதமாக வந்தது. "தேவிகா! வெரி நைஸ். சங்கவைக்கு நீ நிகரானவ தான்." என அவர் அவளிடம் பேச. அவள் சற்று தூரம் சென்றாள்.

சென்றபோது பாருணியை தனக்கு எதிரே இருக்கும் நாற்காலியில் அமரும்படி சைகை காட்ட. அவளும் தானாக அமர்ந்தால்.

"அழகா இருக்க பாரு! எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு! ஐ லவ் யூ! அண்ட் ஐ வாண்ட் டு மேரி யூ!" என அவன் படபடவென பட்டாசு போல் அவளது இமைக்குள் அதற்கு ஏற்றார் போல் விரிய "என்னது??" அவன் "என்னது னா? உன் மனசுல இருந்தத சொல்லு?" என அவன் கூறவும் "ஒருத்தர.. ஒருத்தரப்.. பற்றி தெரிஞ்சுக்காம? எப்படி நான்..?" என அவள் அந்த வார்த்தைகளை கூறி முடிக்க திக்கித் தடுமாறித்தான் போனாள்.


சிறிது நேரம் யோசித்தவன் டரைக்டரிடம் சென்று அவன் கூறியதைக் கேட்டு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவருக்கும் அத்தனை அதிர்ச்சியாகவும், பூதாகரமாகவும் இருந்தது.


பேசுவாளா(னா)...💞

 

Attachments

  • 91259279.jpg
    91259279.jpg
    71 KB · Views: 0
பேச்சு 3

"டரைக்கடர் சார் இந்த சரீயல் மக்கள்கிட்ட, ஐ மின் டிஆர்பி ரேட் எவ்வளவு இருக்கு?" என அவன் கேட்கஇந்த சீரியல் "இப்போ தான் ஷாட் எல்லாம் ஆரம்பிச்சு நாற்பது எப்படி வர போயிருக்கு இனி தான் இப்போ பண்ணின விறு விறுப்ப விட கொஞ்சம் நீளமா கொண்டு போகணும். ஏன்?" என கேட்கவும் ரித்விக் தன் பதிலை சபையில் உடைத்தான்.


"இந்த சீரியல்ல நா பாருணியோட தான் நடிப்பேன். பாருணி பண்ண வேண்டிய. அந்த கெஸ்ட் ரோல். சங்கவை அல்லது ஷீலா பண்ணுவாங்க. எனக்கு ஜோடி பாரு தான்." என அவன் கர்ஜித்து கூறவும் அந்த ஷெட்டில் இருந்த அனைவரும் திகப்பிரம்மை பிடித்தது போல இருக்க. மஹாசினி 'ஹா!! சங்கவை என் பிஸ்நஸ்யை இந்த ஊர் முழுக்க கொண்டு போனால். இந்த பாருணி என்னடானா என் பிஸ்நஸ்யை உலகம் முழுக்க கொண்டு போக போறாளே!!! இனி இந்த மஹாசினிக்கோட்டையில பணமழை தான். அப்போ ரித்விக் இதுக்காக தான் ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருக்கான்.' என அவர் அவரது தொழிலை மையமாக வைத்து கனவு கண்டார்.


"இத்தனை எபி நான்!தான் ஹீரோயினா ரோல் பண்ணி இருக்கேன். திடீர்னு என்னால இந்த சீரியல்ல இருந்து விலக முடியாது!!" என அந்த கதாநாயகியாக நடிக்கும் பெண் கோபம் கொள்ள.
சீரியல் டரைக்டர் 'நான் சீரியலுக்கு போட்ட ப்ரோமோவை விட இது சூப்பரா இருக்கு. இது எப்படி எனக்கு தோணாமல் போச்சு?'


என அவர் தனக்குள் உரையாடல் நடத்திக் கொண்டு இருந்தார். பிறகு அதிலிருந்து மீண்டு வந்து அவர் "சீரியலை ஹீரோயின் இப்படி சடனா எப்படி மாத்த முடியும்? இந்த பொண்ணும் உன்னை மாதிரி தான். இது இவளுக்கு ஃபர்ஸ்ட் சீரியல். ஏற்கனவே நீ ஒரு சில விளம்பரங்கள் நடிச்சு, இவ்வளவு ஏன் ஷார்ட் பிலிம் கூட நடிச்சிருக்க. அதிலிருந்து, தான் உன்னை நான் ஹீரோவா செலக்ட் பண்ணி இருக்கேன். நீ எப்படி எபொட் போட்டியோ?அதே மாதிரி தானே? இவளும் நிறைய எபொட் போட்டிருப்பா கொஞ்சம் யோசி?" என அவர் கூறவும்


"ஆமா! ஒன்னு எனக்கு வேற சீரியல்ல லீட் ரோல் நடிக்க ஏற்பாடு பண்ணுங்க. அப்படி இல்ல? நான் இந்த சீரியல்ல தொடர்ந்து நடிச்சிக்கிட்டே தான் இருப்பேன்." என அந்த நடிகை அழுத்தமாக கூறினால்.

"காம் டவுன் ரெண்டு பேரும் பேசாம இருங்க!! ரித்விக் உன் கூட தனியா பேசணும்." என அவனை அழைத்துச் சென்றவர் "நீ என்ன பண்றேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா? இந்த சீரியலுக்கு நீயும் புதுசு அவளும் புதுசு. திடீர்னு ஹீரோயின் மாத்த சொன்னா? அதுவும்.. அந்தப் பொண்ணு ஒரு பிராஸ்டிடியூட். அந்த பொண்ண வச்சு சீரியல் எடுத்தா? அது ஒழுங்கா ஓடுமா? ஏற்கனவே நான் இந்த நாடகத்தை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்க,பிரபலமாக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். நமக்கு மேலும் மேலும் வாய்ப்பு கிடைக்கணும்னு ஆசைப்பட்டு இருக்கேன். இதுல, புதுசா சீரியல் நிறுத்துங்க. இவ கூட தான் நடிப்பேன்னு சொன்னா? என்ன செய்ய?" என டரைக்டர் கூறவும்


"அவளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? தெரியாம தான் கேட்கிறேன். அவ பிறந்ததிலிருந்து இப்படி தாசியாகவா வாழ்ந்துகிட்டு இருக்கா? சூழ்நிலை, அவள் அப்படி ஒரு இடத்துக்கு கொண்டு போய் விட்டுடுச்சு. இப்போ இந்த சீரியல்ல இதோட முடிச்சுக்கலாம்." என்றதும் அவர் "நாற்பது முடிச்சுட்டு சும்மா ஒக்காந்து இருக்க அப்படித்தானே?" என அவருக்கு கோபம் வர தொடங்கியது "சீரியல் முடிஞ்சதும் பேட்டி தருவோம். அது மூலமா நம்ம இந்த ஹீரோயினுக்கு வாய்ப்பு கிடைக்கும். புதுசா நம்ம சீரியல் ல ஒரு ப்ரோமோ தருவோம். இனி, அந்த சீரியலை விட இந்த சீரியல் ஹிட் ஆகும்." என பேச

"லூசு மாதிரி பேசாத? அந்த மஹாசினிக்கு காசு தான் எல்லாம். இந்த ஒரு எபிக் மட்டுமே நான் பத்து லட்சம் செலவு பண்ணி இருக்கேன். அதுவும், கெஸ்ட் ரோல். அப்படி இருக்க ஹீரோயினா பாருணி நடிச்சா அவ என் சொத்தையே எழுதி வாங்கிடுவா?" என வருத்தி எடுத்தார்.


"இவ்வளவு தானா? இருங்க நான் போய் பேசுறேன்." என அவர் பக்கம் சென்று "கொஞ்சம் பேசணும். தனியா வர முடியுமா?" என அவருடன் தனியா சென்றவன். "இந்த சீரியல் முடிஞ்சுடும். இன்னும் ஒரு சூட் தான்." என அவன் கூற "இதை ஏன் என்கிட்ட சொல்ற?$ என் மஹாசினி தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக கேட்டார்.

"அதாவது புதுசா சீரியல் பண்ண போறோம். அந்த சீரியலுக்கு பாருணிக்கு ஹீரோயின் ரோல் கொடுக்க முடிவு பண்ணி இருக்கோம்." என அவன் கூறவும் அவர் ஏதோ கூற வர.

மேலும் அவன் தொடர்ந்தான் "இது படம் கிடையாது ஒரேடியா முப்பது லட்சம் நாற்பது லட்சம்னு முன்னக்கூட்டி வாங்க முடியாது. இதுக்கு தினமும் வரணும், தினமும் சம்பளம் தருவாங்க, லீட் ரோல் பண்ற எங்களுக்கு ஐ மின் ஹீரோ,ஹீரோயின், வில்லிக்கு ஒரு லட்சம் அப்படி இல்லைனா ஐம்பதாயிரம் குறையாமல் கிடைக்கும். யோசிச்சு பாருங்க. ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம். அப்படி பாத்தா!! ஒரே மாதத்தில் லட்சக்கணக்குல போகும். அதோட, உங்களோட இருக்கும் பொண்ணுங்க எல்லாரும் ஹீரோயின் நடிக்கும் அளவுக்கு அழகு கொட்டி கிடக்குது. இது நீங்க இதனால் வர எப்படி வளர்த்துட்டு வர்றீங்கன்னு எனக்கு தெரியல? அதைவிட நூறு மடங்கு நல்லா போகும். அதோட பணக்காரங்க உங்களோட டீல் வச்சுக்க ரெக்க கட்டி பறந்து வருவாங்க. அப்புறம் என்ன?? நீங்களும் மாடலிங் பிசினஸ் இன்னும் கௌரவமா சொல்லிக்க முடியும். சினிமா விட சீரியல் கொறஞ்சது அஞ்சு வருஷம் வரை ஓடும். ஆறு மாசம் நடிச்சு, ரெண்டு அரை மணி நேரத்துல முடிச்சு, அடுத்த ஆஃபர் வர நேரம் எடுக்கும். இதுல தொடர்ந்து நடிக்கலாம், கூடவே நிறைய மீட்டிங் அதிலும் காசு தருவாங்க. இதுக்கெல்லாம் ஓகேனா பாருணியை வச்சு புது சீரியல் பண்ணுவோம். இல்லைன்னா.." என அவன் முடித்து முடிக்காமல் இருந்தான் அவரின் பதிலுக்காக. 'இவர் சொல்றதும் நல்லா தானே இருக்கு? சங்கவை மூலமா நம்ம பிசினஸ் சூப்பரா ஃபேமஸ் ஆச்சு. இந்த பாருணி மூலமா இன்னும் பெருமையா, பெருசா நான் என் கோட்டையை வடிவமைச்சுக்க போறேன். மஹாசினி இனி உன் கோட்டையில் பணமழை, பணக்காரங்களோட சொர்க்கம் மழை.' என அவர் எங்கோ சென்றுவிட்டார்.


"சரி நீங்க சொல்றது சரி தான். எனக்கு இது பிடிச்சிருக்கு. அதுவும் இவ அழகு அதுக்கான விலை இதுதான். அந்த ஐம்பதாயிரம். தினமும் ஷாட்ல இவ அடிக்க வரும்போது நீங்க தரணும்." என அவர் கூறவும் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி



இதுதானே அவன் எதிர்பார்த்தது ஒன்று! மனதளவில் அவன் அத்தனை மகிழ்ச்சி கொண்டான்.

அவளிடம் சென்று தகவல் கூறவும் பேதையவள் சிலை போல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளது அந்த ஆசையான பார்வையை தன் வசம் செய்தான். அவளும் நோக்க. அவனும் நோக்க.


அட!! யாரோடு யார்னு எழுதிவிட்டா உன்ன? உன்னோடு நான் தானே சொல்லி வச்சேனே!! உன் அளவான அழகால பசித்தூக்கும் போச்சு! மறுக்காமல் வெறுக்காமல் என்னை ஏத்துக்கோயேன்டி ஓ!!! எங்கிருந்தோ வந்த அழகே!!! உனை எண்ணி எண்ணி நானும் தவிச்சேன்!


என்பது போல் அவனது பார்வை அவள் மீது இருக்க அவளிடம் "பாரு. உன் ஃபேமிலி பற்றி ஏதாவது சொல்லு?" என அவன் கேட்டதும் "மை பேரன்ட்ஸ் ஆர் டிவோஸ்ட். எனக்குன்னு ஒரு சொந்தம்.." என அவள் கூற வருகையில் 'ஆஹா! இவர்கிட்ட எதுவும் இப்ப சொல்லவே கூடாது!! படக்குனு ப்ரொபோஸ் பண்ணி, கல்யாணம் செஞ்சுக்கோன்னு கேட்டவரு! மாம்ஸுக்கு போன் பண்ணினாதான் வழி கிடைக்கும். இவர்ட்ட ஃபோன் கேட்டா தருவாரா?' என அவளது கருவிழிகளை அங்கும் இங்குமாக சுற்றியது யோசனையுடன் பார்வையில் உதவியை கேள்வியாக "ஏதாவது உதவி வேண்டுமா?" அவளது கண்களின் உரையாடல்களை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டவனாக. கண் பாஷை புரிந்து கெட்டிகாரன் தானே! "ஐ வாண்ட் டு டாக் வித் மை பிரண்ட். உங்க போன் கிடைக்குமா?" என கேட்கவும் "ஓ! கண்டிப்பா எடுத்துக்கோ. கூடிய சீக்கிரம் என்னையே தர போறேன். என் ஃபோன் தரதுல ஒரு பிரச்சனையும் இல்ல." என அவன் தனது அலைபேசியை நீட்ட 'அய்யோ! பைத்தியமா இவேன்? என்ன இப்படி லூசு தனமா பேசிட்டு இருக்கான். இதுல மாம்ஸ் ரித்விக் அப்படி,இப்படினு புகழ்ந்து தள்ளுவா. இவனுக்கெல்லாம் ஃபேன். இவனை போலவே' என தனக்குள் அவனை வறுத்தெடுத்த படி சிரித்து கொண்டு அதை வெளிக்காட்டாமல் இருக்க. எதார்த்தமாக கவனித்த மகாசினி 'என்ன இவ அவேன் கிட்ட போன் வாங்கி? எங்கேயாவது எஸ்கேப்பாக முயற்சி பண்றாளோ?' என்கிற கேள்வி எல்லாம் தோன்ற. அவளைப் பார்த்த பாருணி அவனிடம் "நான்.. கொஞ்சம்.. ஐ மின் நீங்க கொஞ்சம் தனியா வர முடியுமா?" என கூறவும் அவனும் சென்றான். அவனின் வலது கரம் கோர்த்தபடி.



அவள் சென்றது அவனுக்கு புரிந்து விட்டது மஹாசினி தங்களை கவனித்து வருகிறாள் என்று. "சொல்லு. ஐ அம் சாரி. போன்." என அவன் தர அதை வாங்கிக்கொண்டு அவள் தன்னுடைய தோழிக்கு அழைத்தால்.


"ஹலோ மாம்ஸ்! நான் தான் பாருணி." என தோழி அழைப்பை ஏற்றதும் கூற "மச்சி நீ உன்.." அவள் ஏதோ கூற வரும்போது "என்னுடைய லக்கேஜ் எல்லாம் உன்கிட்ட தான இருக்கு? அதை பத்திரமா வச்சுக்கோ. இன்னும் கொஞ்ச நாள்ல வந்துருவேன். அதுவரை நீ வச்சுரு. அதை விட உனக்கு தான் விஷயம் தெரியுமே. நான் என் அப்பாவும்,தங்கையும் தேடி வந்து இருக்கேன். பத்திரமா வச்சிடுடி. இது இந்த நம்பரை சேவ் பண்ணி வச்சுக்கோ." என அவள் அவளிடம் கூறி முடித்துவிட்டு அவனிடம் தந்தவள் "நீ ரொம்ப அழகா இருக்க. அதோட, உன் மனசுல ஏதோ தேடல் இருக்கு. அதான், கொஞ்சம் வருத்தமா இருக்க. என் வீட்டுக்கு வா உன்ன நான் வந்து கூட்டிட்டு போறேன். பைய் பாருங்க."


என அவன் சென்ற போது "நாளைக்கு நான் உங்க வீட்டுக்கு எப்படி வரப்போறேன்?" என தனது கேள்வியை கேட்டால். "நான் வரேன். அதோட, நம்ம நடிக்க போகும் சிரீயலுக்கு பேட்டி தர வேண்டாமா? வந்து கூட்டிட்டு போகிறேன்." என்றதோடு இல்லாமல்.


அவளது நெற்றியில் முன் ஆடிக்கொண்டு இருந்த முடியை, காதோரத்தில் தள்ளி வைக்க அவளது உடல் சிலிர்த்தது.

*****



அந்த நாளில் அவள் சங்கவையோடு பேச ஆசைப்பட்டால். சொல்லி வைத்தார் போல அவளை ஆரம்பித்தால் "ஆமா நீங்க ஏன் நைட்டு உக்காந்து அழுதுகிட்டு இருந்தீங்க?" என கேள்வி கேட்க "எப்போ நான் உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கேன்?" என அவள் சிந்திக்கத் தள்ளப்பட்டு யோசிக்க "ஏன் நேத்து நடுசாமம் அப்போ நீங்க அழுதுட்டு இருந்ததை நா கவனிச்சேன்." என அவள் கூறினால். "நீங்க வாங்க போங்க எல்லாம் கூப்பிட வேண்டாம்? நான் உங்களை விட சின்ன பிள்ளை தான்." அவள் சற்று மெல்லிய குரலில் கூப்பிட.


"பாருணி உன் வயசு என்ன?" என அவள் ஆர்வம் நிறைந்த குரலில் கேட்க "இருபத்தாறு ஏன்?" எனவும் சங்கவை தன் வாயில் பிளந்து "என்னை விட அஞ்சு வருஷம் மூத்தவங்களா நீங்க?" என ஆச்சரியமாக கேட்க அவளும் விழிகளை பிளந்து "உனக்கு இருப்பத்தொரு வயசா?" என அவளும் ஆர்வமாக கேட்டார் மிகவும் தீர்மான புன்னகையுடன் முகம் நிறைந்த குரலுடன் "ஏன்?" என ஆவல் கேள்வி எழுப்பினாள்.


ஒருவர்க்கு ஒருவர் மேலும் மேலும் தங்களுக்குள் கேள்வி எழுப்பும்போது பாருணிக்குள் ஒரு சிறிய குழப்பம் விதைந்தது.


இறுதியில் அது மெய்யாகப் போகும் என அவள் அறிந்திருக்காது போனால்.


காலம்! கடவுள் அவர்களது வாழ்வில் வேறுவகையாக கணக்குப் போட ஆரம்பித்தார். என அவள் அன்று சிந்தித்து இருந்தால்? இப்போது தன் குழப்பம் முழுமையாக அறிந்திருப்பாள். சேர வேண்டிய இடத்திற்கும் சேர்ந்திருப்பாள்.


"என் தங்கச்சிக்கும் உன் வயசு தான் இருக்கும்." என கூறவும் "அக்கா இனி நானும் நீங்களும் சகோதரிகள் கிடையாது. தோழிகள்." என்ற போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தால் ஷீலா.


"இந்தாங்ங சாப்பாடு." என வர பாருணி அவரிடம் "அக்கா வாங்க உள்ள." என அவள் கூறவும் "நீங்க போய் தூங்குங்க! தோழிங்க நாங்க சாப்பிட்டுப்போம் எங்களுக்கும் கை இருக்கு." என்றால் சங்கவை ஆக்ரோஷமாக.



"சின்ன பிள்ளை அப்படி பேசிட்டா? நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க அக்கா?" என அவரிடம் மிருதுவான குரலில் பேசினால் பாருணி.



இருவரும் உணவு சாப்பிட்டு முடித்ததும் சங்கவை தன் வாயை துடைத்தபடி. "ஹூம் அக்கா. நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?" என அவளும் பேசிக்கொண்டு தான் இருந்தால்.


இருவரும் ஒருவர்க்கு ஒருவர் நேரம் தெரியாமல் போனது கூட தெரியாத அளவு பேசினார்கள். இருவரும் நித்திரை தழுவிய நேரம் சங்கவை பாருணியின் இடது கரத்தை கோர்த்து அவள் புறம் திரும்பி படுத்து இருக்க.


பாருணியின் கைவிரல் அவளது தலைமுடியை கோதிவிட பாருணி தான் கடந்து வந்த பாதையை நினைத்து வந்தால்.


"ஷி குட்டி இந்த வாழ்க்கை உனக்கு புதுசு. வேல விஷயமா பெரிய பொண்ணா வளர்ந்த பிறகு நீ உன் கூட பிறக்கும் இதோ என் கருவிலிருந்தும் உன் ரத்த சொந்தத்தை நீ தான் நல்லா பாத்துக்கணும். நீ இந்த அம்மாவை கைவிடாம இருக்கக்கூடாது. உன்னோட அந்த ரத்த சொந்தம் உன் அப்பா கூட போயிடுச்சு. இனிமே நீயும் நானும் மட்டும்தான்."
என தன் மகளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது

"அப்போ, அப்பாவும் தங்கச்சியும் வராம மாட்டாங்களா? நம்ம மட்டும் தான் இனிமேல் இங்க இருக்க போறோமா? சுட்டி வரமாட்டாளா?" என கேட்கும் போது மகளின் முகத்தை பார்த்தவர்.


"ஷீயும்,சுட்டியும் ஒன்னா இருக்கணும்னு தான் அம்மா நான் நினைக்கிறேன்." 'என் விதியை பார்ள்தியா? இனி உன்ன இங்க பாட்டியோட ஊர்ல விட்டுட்டு. அம்மா தனியா போறேண்டா. நான் உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா தான் பாப்பேன். இனி உங்க அம்மா உன் கூட இருக்க மாட்டேன். ஷி குட்டி.' என அவர் எழுதி சென்ற கடிதம்.


அது அந்த கடிதத்தை அவள் வேலைக்கு செல்லும்போது அவரது பாட்டி கொடுத்தார். "உன்னுடைய தங்கச்சியும், அம்மாவும், அப்பாவும் தூரமா இருக்காங்க. இதுல, உன் அம்மா எல்லா விஷயத்தையும் வெவரமா சொல்லி இருக்கா ஆத்தா. போயிட்டு குடும்பத்தோட வா. அதுவரை பாட்டி உனக்காக காத்துக்கிட்டு இருப்பேன்." என தன் சிறுவயதில் அன்னையிடம் பேசியதிலிருந்து, பாட்டியின் உரை வரை தன் செவியில் விழுந்தவளுக்கு. தன் மனம் 'நான் எப்போ என் பெத்தவங்களையும், தங்கச்சியையும், சொந்தத்தையும் பார்ப்பேன்? கடவுளே! இங்கே நான் ஒரு அரக்கி கிட்ட அதுவும் அழகுக்காக விலை பேசும் ஒரு பேய். அவ கிட்ட அவளுடைய இடத்துல இருக்கேன். இந்த இடம்..' என மனதில் அழுது கொண்டு இருந்த பாருணிக்கு கண்கள் தூக்கத்தை யாசிக்க நித்திரம் சென்றால்.

*****


வீட்டிற்கு வந்தவன் நேராக உணவு உண்ண தொடங்கினான். "ரித்தி கை கழுவிட்டு சாப்பிடு." என அவனது தாயார் சொல்ல "அம்மா பசி வந்துச்சுன்னா பத்தும் பறந்துவிடும். எனக்கு ரொம்ப பசிக்குது. அதான், சாப்பிடறேன் மாமா எங்க?" என கேட்கவும் அவரது அறையில் இருந்து "ரித்விக்!!!!" என சத்தம் அவரின் அலறிய குரல் கேட்க சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலே கை கழுவி விட்டு விறுவிறுவென தன் மாமாவினுடைய அறைக்கு புறப்பட்டான்.

அங்கு அவர் தூக்கில் துடித்துக் கொண்டு இருக்க மெத்தையில் ஏறி புடவையை அவிழ்த்து விட்டான். "மாமா ஏன் நீங்க இப்படி முடிவுக்கு வந்தீங்க? எதுவும் பிரச்சனையா?" என அவன் கேட்க. அவனது தாயார் இந்தாங்க நான் தண்ணி எழுந்து உட்கார வை ரித்திமா." என அவர் கூறவும் அவரை மெல்ல மெல்ல தன் படுக்கையறைக்கு கூட்டிச் சென்றவன் ஒரு பெட்டியில் இருந்த போட்டோ ஒன்று எடுத்து அவரிடம் நீட்டினான்.


அந்த போட்டோவில் ரித்விக்,மதுஷிகா, யாஷிகா என மூவரும் இருந்தார்கள். அப்போது யாஷிகாவிற்கு ஆறு வயது, மதுஷிகாவிற்கு பதினொரு வயது, ரித்விக்கு பதின்மூன்று வயது. ஆதலால் யாஷிகா அவர்களைப் பார்த்து முறைத்த வண்ணமாகவும், ரித்விக்கும்,மதுஷிகாவும் ஒருவர்கொருவர் தோள்களில் கைகளை போட்டு நின்றபடி இருந்தது அந்த புகைப்படத்தில்.



அதை பார்த்தவர் "யாஷிகா,மனுஷிகா என் பொண்ணுங்க. என்னுடைய இரண்டு கண்ணுங்க மாதிரி. நானும் நிகிதாவும் சண்டை போடாமல் இருந்திருந்தால்? இந்த நேரம் என் இரண்டு பொண்ணுங்களோட நானும்,நீயும் இருந்திருப்போம். சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்திருப்போம்." என அவர் பேச "யாஷிகாவை கூடிய சீக்கிரம் கண்டுபிடித்து தருவேன் மாமா." என்றதோடு கெஸ்ட் ரூமிற்கு சென்று தூங்கி விட்டான்.


"அண்ணா" என அவரது தங்கை வரவும் "மலர்! அவேன் மட்டும் ஏன் இப்படி நம்மள கொடுமை படுத்திட்டு வரான்? இப்படி அவனோட ஏன் நா ஒரு வருஷம் தொடர்பில் இருந்தேன்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு மலர்." என அவர் கூற


"உனக்கு என்ன அண்ணா நீ தெரிஞ்சா பண்ணின? அந்த ஆளு ஏதோ சொல்லி இருக்கான். நீயும் இப்படி வழக்கமா எங்கள விட்டுட்டு போக நினைச்சுட்ட தானே?" என அவர் சரியாக யூகித்து கேட்டார். "அவேன் என்.. என்னுடைய நிகிதாவை என்ன செஞ்சான்? எங்க வச்சிருக்கான்? எதுவும் தெரியல? என் குடும்பம்? என் பிள்ளைகள்? இப்படி திசை தூரமா இருக்கோம். எப்போ நான் என் பொண்ணுங்களையும், நிகிதாவையும் பார்ப்பேன்?" என அழுது கரைந்து கொண்டு இருந்தவரை தேற்றிக்கொண்டு இருந்தார் அவரது தங்கை.


*****


"நான் பாருணியை கூட்டிட்டு வரேன் மா." என தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு சென்றவரிடம் "பாருணி யார் அவ?" என அவனை ஒரு மார்க்கமாக பார்க்க அவன் "நான் பாருணியை வீட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்." என கூறவும் அவனது தாயார் "ரித்திமா! சொல்லவே இல்ல?" என்றார் அவன் பேசிய பேச்சு மொழியை கண்டுபிடித்தவர் ஆக.



"இன்னும் ஓகே சொல்லவே இல்லம்மா? இன்னைக்கு பேட்டி இருக்கு. அவளோட நான் பேட்டி போயிட்டு வீட்டுக்கு வரேன். தனியா இருந்து எதையாவது யோசிச்சிட்டு இருக்காதீங்க. மாமாவை பார்த்துக்கோங்க." என்றான் புன்னகை விரிந்த முகத்துடன்.


'என் கண்ணு,புஜ்ஜிமா இந்த நேரம் உன் மதுஷிகாவோ,இல்ல யாஷிகாகவோ இருந்திருந்தால். உனக்கு நல்ல வாழ்க்கை நம்ம வீட்டிலேயே அமைந்திருக்கும். இந்த பாருணி யாருன்னே தெரியல? ஆனா அவளுடைய நல்ல குணமும்,மனசும் தான் இவனை ஈர்த்து இருக்கு.'


என மனதோடு உரையாடி வந்தவர் தன் அன்றாட வேலையை கவனிக்க சென்ற போது. அவரது அலைபேசி அலறியது. அதை எடுத்து காதில் வைத்தவர்.

வீட்டிற்கு வந்தவன் நேராக உணவு உண்ண தொடங்கினான். "ரித்தி கை கழுவிட்டு சாப்பிடு." என அவனது தாயார் சொல்ல "அம்மா பசி வந்துச்சுன்னா பத்தும் பறந்துவிடும். எனக்கு ரொம்ப பசிக்குது. அதான், சாப்பிடறேன் மாமா எங்க?" என கேட்கவும் அவரது அறையில் இருந்து "ரித்விக்!!!!" என சத்தம் அவரின் அலறிய குரல் கேட்க சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலே கை கழுவி விட்டு விறுவிறுவென தன் மாமாவினுடைய அறைக்கு புறப்பட்டான்.

அங்கு அவர் தூக்கில் துடித்துக் கொண்டு இருக்க மெத்தையில் ஏறி புடவையை அவிழ்த்து விட்டான். "மாமா ஏன் நீங்க இப்படி முடிவுக்கு வந்தீங்க? எதுவும் பிரச்சனையா?" என அவன் கேட்க. அவனது தாயார் இந்தாங்க நான் தண்ணி எழுந்து உட்கார வை ரித்திமா." என அவர் கூறவும் அவரை மெல்ல மெல்ல தன் படுக்கையறைக்கு கூட்டிச் சென்றவன் ஒரு பெட்டியில் இருந்த போட்டோ ஒன்று எடுத்து அவரிடம் நீட்டினான்.


அந்த போட்டோவில் ரித்விக்,மதுஷிகா, யாஷிகா என மூவரும் இருந்தார்கள். அப்போது யாஷிகாவிற்கு ஆறு வயது, மதுஷிகாவிற்கு பதினொரு வயது, ரித்விக்கு பதின்மூன்று வயது. ஆதலால் யாஷிகா அவர்களைப் பார்த்து முறைத்த வண்ணமாகவும், ரித்விக்கும்,மதுஷிகாவும் ஒருவர்கொருவர் தோள்களில் கைகளை போட்டு நின்றபடி இருந்தது அந்த புகைப்படத்தில்.



அதை பார்த்தவர் "யாஷிகா,மனுஷிகா என் பொண்ணுங்க. என்னுடைய இரண்டு கண்ணுங்க மாதிரி. நானும் நிகிதாவும் சண்டை போடாமல் இருந்திருந்தால்? இந்த நேரம் என் இரண்டு பொண்ணுங்களோட நானும்,நீயும் இருந்திருப்போம். சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்திருப்போம்." என அவர் பேச "யாஷிகாவை கூடிய சீக்கிரம் கண்டுபிடித்து தருவேன் மாமா." என்றதோடு கெஸ்ட் ரூமிற்கு சென்று தூங்கி விட்டான்.


"அண்ணா" என அவரது தங்கை வரவும் "மலர்! அவேன் மட்டும் ஏன் இப்படி நம்மள கொடுமை படுத்திட்டு வரான்? இப்படி அவனோட ஏன் நா ஒரு வருஷம் தொடர்பில் இருந்தேன்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு மலர்." என அவர் கூற


"உனக்கு என்ன அண்ணா நீ தெரிஞ்சா பண்ணின? அந்த ஆளு ஏதோ சொல்லி இருக்கான். நீயும் இப்படி வழக்கமா எங்கள விட்டுட்டு போக நினைச்சுட்ட தானே?" என அவர் சரியாக யூகித்து கேட்டார். "அவேன் என்.. என்னுடைய நிகிதாவை என்ன செஞ்சான்? எங்க வச்சிருக்கான்? எதுவும் தெரியல? என் குடும்பம்? என் பிள்ளைகள்? இப்படி திசை தூரமா இருக்கோம். எப்போ நான் என் பொண்ணுங்களையும், நிகிதாவையும் பார்ப்பேன்?" என அழுது கரைந்து கொண்டு இருந்தவரை தேற்றிக்கொண்டு இருந்தார் அவரது தங்கை.


*****


"நான் பாருணியை கூட்டிட்டு வரேன் மா." என தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு சென்றவரிடம் "பாருணி யார் அவ?" என அவனை ஒரு மார்க்கமாக பார்க்க அவன் "நான் பாருணியை வீட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்." என கூறவும் அவனது தாயார் "ரித்திமா! சொல்லவே இல்ல?" என்றார் அவன் பேசிய பேச்சு மொழியை கண்டுபிடித்தவர் ஆக.



"இன்னும் ஓகே சொல்லவே இல்லம்மா? இன்னைக்கு பேட்டி இருக்கு. அவளோட நான் பேட்டி போயிட்டு வீட்டுக்கு வரேன். தனியா இருந்து எதையாவது யோசிச்சிட்டு இருக்காதீங்க. மாமாவை பார்த்துக்கோங்க." என்றான் புன்னகை விரிந்த முகத்துடன்.


'என் கண்ணு,புஜ்ஜிமா இந்த நேரம் உன் மதுஷிகாவோ,இல்ல யாஷிகாகவோ இருந்திருந்தால். உனக்கு நல்ல வாழ்க்கை நம்ம வீட்டிலேயே அமைந்திருக்கும். இந்த பாருணி யாருன்னே தெரியல? ஆனா அவளுடைய நல்ல குணமும்,மனசும் தான் இவனை ஈர்த்து இருக்கு.'


என மனதோடு உரையாடி வந்தவர் தன் அன்றாட வேலையை கவனிக்க சென்ற போது. அவரது அலைபேசி அலறியது. அதை எடுத்து காதில் வைத்தவர்.

"மலரே மௌனமா..மௌனமே வேதமா..??" என அந்த பக்கமாக ஒருவர் பாடினார். "ஹேய்!! நீ யாருடா? ஹூம் என்ன வேணும்?" என அவர் தன் குரலை உயர்த்தி பேசினார். "சரியா நா தான் உன் அண்ணனை தூண்டிவிட்டேன்னு எப்படிமா கண்டு பிடிச்ச? இதோ பார்!!! எனக்கு அவனுடைய பொண்ணுங்க வேணும். அதோட, உன் பையன் அவனுடைய உயிர் அதுவும் வேணும். அவனை அப்படியே!!! துண்டா இல்லாமல் துண்டுதுண்டு வெட்டி..அதை ஒரு அட்டைபெட்டியில் போட்டு உன் பிறந்த நாள்க்கு பரிசா தர நினைக்கிறேன். உன் அண்ணன் அவேன் பொண்ணுங்களை கண்ணுல காட்ட மாட்டாம இருக்கான். கடைசியா ஒன்னு மட்டும் யாஷிகா எங்க இருக்கானு எனக்கு தெரியும்." என்றதோடு அழைப்பை துண்டித்து விட்டான்.
"ஹலோ! ஹலோ!" என கத்தினால் கண்ணீருடன்.

*****

மஹாசினியின் இடம் வந்தவன் அவரிடம் "பாருணி" எனக் கூற அங்கு அவளோ மஞ்சள் நிற லேகங்காவில், வெள்ளை கற்கள் ஜொலிக்கும் உடையில் நகைகள் பெரிதாக அணிந்தபடி இல்லை. காதுகளில் பெரிய குடை ஜிமிக்கியும் கைகளில் வளையல் மட்டுமே அணிந்திருந்த படி தன் காதலியை கனவில் பார்த்தவன் தன்னை சமன்படுத்தி கொண்டு மஹாசினியிடம் "ஷார்ட் விஷயமா பாருணி கிட்ட கொஞ்சம் பேசணும்னு சொல்லி டரைக்டர் தான் அனுப்பி வச்சாரு." என கூறவும் "அப்படியா இது என்ன கேள்வி போய் பாருணியை பாருங்க ஷீலா!!!" என அவரை அழைக்க.


அவள் மூச்சு வாங்கும்படி ஓடி வந்து ரித்விக் பக்கம் பார்த்து அவர் கண் ஜாடை காட்ட. அவள் "வாங்க நான் கூட்டிட்டு போறேன்." என அவரது கண் ஜாடை வைத்து கண்டு கொண்டால் பெண்.

அறைக்குள் சென்றவன் அவளை பார்க்க அப்போது தான் ஒப்பனை ஏதுமின்றி சிறிய குடை ஜிமிக்கி மட்டுமே காதுகளில் தொங்கி இருக்க,முட்டி வரை மூடும் அளவிற்கு சிறிய ஸ்லீப் கொண்ட டிரஸ் அணிந்து இருக்கும் அவளைப் பார்க்கவும். மீண்டும் மூன்றாவது முறை மயங்கிப் போனான். "பா..பாரு!" என அவன் திக்கித் தெனரி கூப்பிடவும் பாருணியும் சங்கவையும் அவனைப் பார்க்க "ஹாய் மிஸ்டர் ரித்விக்! சத்ரியன் வீட்டுக்கு போகாம இங்க என்ன விஷயமா வந்து இருக்கீங்க?" என அவள் கேட்க 'நம்ம இவர்கிட்ட ஹெல்ப் கேட்கலாமா?' என யோசித்தாலும் மறுமனம் 'இல்ல வேணாம்! வேண்டவே வேண்டாம்!! இவர் பாட்டுக்கா நீ ஓகேன்னு சொன்னா தான் நான் உனக்கு உதவி பண்ணுவேன்னு சொன்னா?? அவ்வளவுதான் மஹாசினிடம் வேற சொல்லவா வேணும்!' என திகைத்துப் போனால் தன் மனதிற்குள்ளேயே

பேசுவாளா(னா)?

 
பேச்சு 4

"என்ன சங்கவை கேள்வி இது. இன்னைக்கு பேட்டி தர போகணும். புது சீரியல் ஒன்னு பண்ண போறேன். அதான், பாருணியை கூட்டிட்டு போக வந்திருக்கேன்." என அவன் கூறவும் "பாருணி மட்டும்னா? அவள் தான் ஹீரோயினா?" என அதிர்ந்த விழிகளுடன் கேட்டால். "ரித்விக் அப்படியே எனக்கும் ஒரு வாய்ப்பு தர முடியுமா?.." என அவள் முடிக்கும் முன்னர் "என்னது வாய்ப்பா? நான் தான் அவருக்கு ஜோடி. ரித்விக் கூடிய ஜோடியா நான் தான் சங்கவை நடிப்பேன். நீ வேணும்னா சத்ரியன் கூட சேர்ந்து டூயட் பாடிக்கோ."

எனவும் "என்ன சொன்ன? நான் தான் ரித்விக்கோட ஜோடியா நடிப்பேன். அப்போ சரி, பாரு இன்னைக்கு பேட்டி இருக்கு. இவள மட்டும் தனியா அனுப்ப மாட்டாங்க. சத்ரியனும் ஷூட்டிங், ஐ மின் பேட்டிக்கு வரான். நீ இவள் துணைக்கு வந்துடு சங்கவை. அப்படியே என் வீட்டுக்கு இவளையும், உன்னையும் கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்." என அவன் கூற "அய்யோ!! உங்க வீட்டுக்கு வந்து நான் என்ன பண்ண? பேட்டி கொடுத்துட்டு இருக்கும் போது நான் சத்ரியனோட போறேன். நீங்க இவள கூட்டிட்டு போங்க. கிளம்பும்போது ஃபோன் பண்ணுங்க. நான் சத்ரியனோட வந்து நின்னு கொண்டு இருக்கேன். இப்போ கூட்டிட்டு போன மாதிரி நீங்களே கொண்டு வந்து விட்டுடுங்க." பாருணி அவளிடம் "வேணாம் சங்கவை நீ பாதியிலேயே போகாத. இவன் என்ன கடத்தி கல்யாணம் பண்ணாலும் பண்ணிடுவான்." என அவள் கூட ரித்விக்கின் மனது 'உன்ன கல்யாணம் பண்ணதாண்டி இந்த சீரியல்ல உன்ன லீட் ரோல் போட்டேன்.' என தனக்குள் பேசி சேர்த்துக் கொண்டான்.

"ஆல்ரெடி நம்மை அவங்க அவங்க வீட்டுக்கு போகாமல் இங்க மாட்டிக்கிட்டு இருக்கோம். இதுல நீ வேற? இதுக்கு அது எவ்வளவோ பெட்டர்." என சங்கவை கூறியதை கேட்டவளுக்கு கோபம் வந்தது. "இது தான் இதத்தான் உன் பிரண்டு கிட்ட சொன்னேன். அவதான் ஒன்னும் பெருசா சொல்லவே இல்ல? ஆனா?? கிட்டத்தட்ட பாசிட்டிவ் மெசேஜ் சீக்கிரம் வந்துடும்." என்றதோடு அவளை பார்த்து கண்ணடித்தான்.

******

மூவரும் பேட்டிக்குச் சென்றார்கள் பத்திரிக்கையாளர் "இந்த நல்ல சீரியல்ல ஏன் சார் சீக்கிரம் நிறுத்தி முடிச்சிட்டீங்க?" என கேட்க "ஆமா புதுசா ஒரு சீரியல் பண்ண போறோம். நாற்பது எபியோட இந்த சீரியல்ல முடிச்சிட்டோம். அதுக்கு இவ்வளவு சப்போர்ட் மக்கள் கிட்ட இருந்து நாங்க எதிர்பார்க்கவே இல்லை. இந்த சீரியல்ல என்னோட லீட் ரோல் பண்ணி அந்த ஹீரோயினுக்கு நன்றி சொல்லணும். ஏன்னா அவங்க நடிப்பு அவ்வளவு அம்சமா இருக்கும். அந்த அளவுக்கு அவங்க ஏஃபோட் போட்டு நடிச்சாங்க. இந்த சீரியல் அவங்க மூலமா தான் ஹிட் தந்தது." என அவன் பேட்டி கொடுத்தான்.


"உங்க சீரியல் ஹீரோயின் யார் சார்?" என அவர் கேட்கவும் பாருணி,சங்கவை இருவரும் ஒரே உடையில் வந்தார்கள். அவர்களைப் பார்த்தவனின் உதட்டில் இருந்து வார்த்தைகள் வராமல் போனது. அவர்களை இருவரும் ஒன்றாக ரித்விக்கை நடுவில் விட்டு.பாருணி வலது புறமும், அவள் இடது புறமும் அமர்ந்துகொள்ள. "சார் இவங்க ரெண்டு பேர்ல யார் ஹீரோயின்?" என அந்த பத்திரிக்கையாளர் கேள்வி கேட்க.

"எஸ் இந்த கண்ணும் கண்ணும் பேச சீரியலுடைய ஹீரோயின் பாருணி. இவங்க சங்கவை மை பெஸ்ட் பிரண்ட்." என அவன் கூற "சங்கவை எனக்கும் தான் ஃப்ரெண்ட். ஆனா பெஸ்ட் பிரண்ட் இல்லை?" என கூறவும் அவளுக்கு அதிர்ச்சி பின் அவள் என்ன கூற வருகிறாள் என்பதை கவனிக்க தொடங்கினால். "ஷி இஸ் மை ப்ரிசியஸ் ப்ரண்ட்"


அவனிடம் "சொல்லுங்க சார் இந்த சீரியல் நேம்ஸ் செம! ஹீரோ,ஹீரோயின் ரோல் நேம் என்ன சார்?" என அவர் அடுத்த கேள்வியை முன்வைக்க.


"ஹீரோ நேம் ரித்விசேஷன், ஹீரோயின் நேம் மலரினி மதுஷிகா." என கூறவும் "சூப்பர் நேம்ஸ் சார். இவங்க என்ன?" சங்கவையை பார்த்து கேட்கவும் "எங்க போனாலும் தனியாக போகக்கூடாதுனு நம்ம ஹீரோயின் பாருணி சொல்லி இருக்காங்க. அதான் துணைக்கு இவங்க பிரெண்ட், அருமை தோழியை சேர்ந்து கூட்டிட்டு வந்திருக்காங்க." என கூறவும் சத்ரியன் அழைக்கவும் சரியாக இருந்தது."சரி, அப்போ வரேன்." என கூறிவிட்டு சத்ரியன் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு சென்றால்.


"ஹீரோயின் மேடம் ஏதும் பேசாம இருக்காங்க? நேரடி ஒளிபரப்பு இடைவேளை இல்லாமல். சொல்லுங்கள்." என அந்த பேட்டி எடுக்கும் நபர் ஆசையாக கேட்டார். "எனக்கு இந்த சினிமா பார்க்க பிடிக்கும். சின்ன வயசுல இருந்து என் பாட்டி சீரியல் பார்ப்பாங்க. சில சமயம் நான் படம்,பாட்டு கேட்க ரிமோட் கேட்டா? ரெண்டு மணிக்கு சீரியல் இருக்குனு என்னையும் சீரியல் பார்க்க வைச்சுடுவாங்க. அதைவிட என் உயிர் தோழி மாம்ஸ். அவ சரியான ரித்விக் பைத்தியம். சீரியல் ஸ்டார்ட் ல இருந்து ஒரு எபி விடாம திருப்பி, திருப்பி பார்ப்பா ரித்விக்கு இப்படி, ரித்விக் அப்படின்னு புகழ்ந்து தள்ளிட்டு வா! அவ பேசுறதெல்லாம் கேட்க கேட்க என் காதில் இரத்தம் வராத குறை தான். ஆனா, இப்போ அவ பொறாமை பட வாய்ப்பு இருக்கு? பெருமைப்பட வாய்ப்பு இருக்கு?" என கூற


அவனுக்கு 'என் மேல் இப்படி பைத்தியமாக இருக்கும் தோழியா?' என பெருமை பட்ட படியாக "பொறாமை? அதோட பெருமை? என்னவாயிருக்கும்?" என ரித்திக்கோடு பத்திரிக்கையாளரும் இணைந்து கேள்வி எழுப்ப.


"என்ன அவ்வளவு பெருசா யோசிக்காதீங்க? அவ இவருடைய ரசிகை. அதோட அவளுக்கு இவரை நேரில் பார்க்க ஆசை. எனக்கு சொல்லாம நீ அவரை பார்த்துட்டேன்னு பொறாமையில வயிறு எரியும். ஆனா, அவ மனசுல என் தோழி நடிகையாகிட்டானு ரொம்ப சந்தோஷத்தோட பெருமை படுவாள்."


என அவள் கூற "இப்படி ஒரு நைஸ் பிரண்ட். சண்டை எல்லாம்.." என அவர் இழுக்க "சண்டைதானே? ஐயோ! தாறுமாறு தக்காளி சோறு. எல்லாத்தையும் சண்டை. சோப்புல இருந்து ஷாம்பு வரைக்கும், சோறுல இருந்து சாம்பார் வரைக்கு, ஹீரோல இருந்து ஹீரோயின் வரைக்கும். ஆனா, நைட்டு தூங்க போகும் முன்ன ரெண்டு பேரும் ஒரு சாரி,ஒரு அடி, லாஸ்ட்டா ஒரு ஹக்னு ஹாப்பியா தூங்குவோம்." என பாரு கூட "இப்படிப்பட்ட உங்க பிரண்ட் நேம் என்ன? சொன்னா நல்லா இருக்கும்." என ஆசையாக கேட்க



அவளின் மனம் 'மாம்ஸ் உன் பெயர் சொல்லவா?' என கேட்க அவளோ இந்த நிகழ்ச்சியை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்க.


தொலைக்காட்சியில் இருக்கும் அவளைப் பார்த்துக் கொண்டு 'மாம்ஸ் சொல்லுடி? என் பேர லூசு, பைத்தியம், வெண்டக்காய், வெடக்கோழி, அப்படி பார்த்துகிட்டே இருக்க சொல்லுடி என் பேர? என்ன கூட்டிட்டு தான் போகல என் பேராவது சொல்லேன். எல்லாரும் கேட்பாங்கல. தெரிஞ்சுட்டு வாங்கல்ல." என அவளை வறுத்தெடுத்து கொண்டு இருந்தாள்.

'சொல்லிடுறேன் மச்சி.' என அவளும் மனதின் வழியாக ஒரு முடிவெடுத்து. அவள் "யாஷிகா" எனவும் ரித்விக்கின் கண்கள் கலங்க "யாஷிகாவா? அவள்.. ஐ மின்.. உன் தோழிப்பேர் யாஷிகாவா?" என கேட்க "ஹலோ அவளுடைய முழு பெயர் கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க" என அவனுக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி கொடுத்தபடி அவனுக்கு தலையே சுற்றியது மயங்கி விழுகாத குறை மட்டுமே.


"யாஷிக ரூபினி. சுருக்கமா யாஷிகானு ஸ்டார்ட்ல கூப்பிட்டு வந்தேன். அப்புறம், அது மாம்ஸ்னு மாறிடுச்சு. நாங்க ரெண்டு பேரும் ஒரே செட்." என அவள் கூறவும் அவனது மனம் சற்று ஏமாற்றத்தை பெற 'இவர்கள் எதுக்காக வந்து இருக்காங்க? இங்க நம்ம என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?' என பத்திரிக்கையாளர் சிந்தைக்கு செல்ல.



அவன் அவளது உருண்ட கருவிழியை பார்க்க அவனும் 'இந்த சிலை எனக்கே எனக்கு தான்!' என்கிற ஒரு காதல் பார்வையில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைக்க. அவளும் தன் பார்வையில் 'என்ன நீ? இப்படி?' என்ன ஓரளவு அவனது பார்வையை யூகித்து அவனுக்கு ஏற்றார் போல் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைக்க நேரலை பேட்டி நடந்து கொண்டு இருக்க பத்திரிக்கையாளர் இன்னும் ரசித்து வந்தார் ஒரு கேள்வி பார்வையில் அவர்கள் 'என்ன செய்து வருகிறார்கள்?' என்பதை பார்த்தபடி.

அவன் அவளிடம்
'செதுக்கவா? உன்னை என் காதல் எனும் பேனாவை கையில் ஏந்தியபடி? வெண்ணிற தாமரைக்கு மஞ்சள் பட்டு உடுத்திருக்கும் உன் தேகத்தை! என் சிவப்பு நிற ஆடையின் பதுக்கி, உன் இதழ் வழியே என் தண்ணீர் தாகத்தை தீர்த்துக் கொண்டு! காதலுடன், கண்ணும் கண்ணும் பேச வந்திருக்கிறேன் நான்!' எனும் கவி ஒன்றை அனுப்பினான்.

அவளது முகத்தில் அவன் கை வைக்க அவளின் தாடையை வளைக்கும் நேரம் அந்த பத்திரிக்கையாளர் சுதாரித்துக் கொண்டு "ஓகே! ரித்விக் சாருடைய அடுத்த சீரியல் ஹீரோயினையும் பேட்டி எடுத்தாச்சு ஆடியன்ஸும் நாங்களும் ப்ரோமோக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம். தேங்க்யூ ரித்விக் அன்ட் பாருணி."

*****


மலர் வேலை செய்து கொண்டு இருந்தார். அவருடைய சகோதரர் நல்ல தூக்கத்தில் இருக்க, அவரது தூக்கத்தை கலைத்து விடாமல், அவரது அறைக்குச் செல்லாமல் இருந்தார். அப்போது அவளுக்கு சற்று நேரம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால், தன் மகனின் பேட்டியை பார்க்க ஆர்வமாக சென்றார்.

அந்தக் கணம் அவருக்கு வேறு ஏதோ எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதை எடுக்க அவள் நினைக்க தானாக அவளது விரல் அழைப்பை ஏற்றது.

"ஹூம்! என் மச்சான் வந்தாரே! திலகம் இட்டாரே! மாலைய மாத்த தான். தேதி வச்சாரே? உனக்கு உன் பிள்ளைக்கு உன் அண்ணாவுக்குன்னு எல்லாரையும் நான் ரொம்ப கஷ்டப்படுத்திடேனா மலர்?" இந்த முறை ஆத்திரம் கொண்டு பேசாமல் சற்று அன்பு கலந்த குரலில் பேசினார். அவளது முகம் சற்று வியர்வை துளிகளில் நனைந்து வந்தது. அதை அந்தப் பக்கம் இருந்தவர் "என்னடி வேர்த்து கொட்டுதா? இதோ பார்!! என்ன பார்த்தா லூசுன்னு நினைப்பா? தெரியாம தான் கேட்கிறேன் கையில நீ வெண்ணைய வச்சுக்கிட்டு சுத்தி சுத்தி தேடிக்கிட்டு இருக்க? மலர்!!!" என அவனது அனைத்து வார்த்தைகளும் ஒரு கொடூரத்தனத்தை ஏற்படுத்தியது.

அவனும் மீண்டும் "என் செல்லம், புஜ்ஜி, அம்மு, குட்டி,நான் என்ன கேட்டேன்?" என அவர் பேச மலர் ஏதும் பேசாமல் மௌனம் காத்துக் கொண்டே வந்தார். "அ..அது வந்து நான் சொல்றதை கேளுங்க. ஏன்? இப்படி என் குடும்பத்தை மேல உங்களுக்கு வெறி? ஏன் சைக்கோ மாதிரி பேசி என்னையும் என் அண்ணனையும் கொடுமை படுத்திட்டு வர்ற?? உனக்குன்னு எதுவும் சொந்தம், குடும்பம்,ஆசை எல்லாம் இல்லை? உனக்கு எங்களுடைய நிம்மதியா கெடுக்கிறது மூலம் என்ன பலன்?" என அவள் கதறிய கதறலின் மூலமாக கேள்வியை எழுப்பினார்.

அந்த நபர் "டேமிட்!! என்ன நீ இப்படி பேசுற? அழுதுட்டு இருக்கியா? ஆமா, நான் முட்டாளா? தேடிக்கிட்டே இருக்கோம் போலீஸ் கம்ப்ளைன்ட் இவங்க கொடுப்பாங்களா? அதை சொல்லி நா நம்புனேன். இப்போ, என்னை பார்த்தா ஏமாளின்னு தெரியுதா? இல்ல நீங்க அப்படித்தான் நினைச்சுகிட்டு வர்றீங்களா? இப்போ உன் வீட்டுக்கு ஒரு பார்சல் வரும். அதை வாங்கி நீ மட்டும். நோட் தி வேர்ட்ஸ். நீ மட்டும் பாக்கணும். உடனே!" என அந்த நபர் கூற அழைப்பு மணியின் சத்தம் கேட்க. தனது அலைபேசி அங்கேயே வைத்து விட்டு கதவை திறந்தார்.

" மேடம் கொரியர் வந்திருக்கு ஒரு சைன் மட்டும் போடுங்க மேம்." என அவன் கூறி முடித்த மறுகணம் அவர் காட்டிய இடத்தில் கையெழுத்து போட்டார். பின் ஏதும் சிந்தை செய்யாமல் அந்த நபர் தந்த பெட்டியோடும், தன் அலைபேசியோடும் தன்னுடைய அறைக்குச் சென்று கதவை பூட்டியவர். அந்த நபரிடம் "என்ன இது? இந்த பெட்டி இவ்வளவு அகலமா இருக்கு?" என அவர் கேள்வி எழுப்ப "ஐயோ? உனக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா மலர்? என்னுடைய இந்த பரிசை தொறந்து பார்." என அவர் கொஞ்சவது போல் பேசினார்.

அவரது பிடிவாத குரல் அவரை அந்த பெட்டியை திறக்க வைத்தது. அந்த அகலமான பெட்டியை திறக்கவும் அவர் பயம் கொண்டார். கண்கள் கலங்கியது, ஏன்? என தெரியவில்லை? "அடேய்! என்ன.. இது? ஏன் நீ என்ன?.." என அவர் கேட்க "அது ரத்தமும் சதையும் சேர்ந்த உன் குடும்பத்து நபருடைய கால். புரியல? உன் புருஷன் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போனானே அவனுடைய கால் தான் அது. நீ தினமும் அவனுடைய கால் இருந்து ஆசிர்வாதம் வாங்குவனு எனக்கு இப்போ தான் தெரியும் மலர். அதான், உன்னை ஏங்க வைக்க வேணாம்னு அனுப்பிட்டேன். உன்ன சந்தோஷமா வச்சுக்க வேற வழி எனக்கு தெரியல மலர்." என்றதோடு அழைப்பை துண்டித்து விட்டான்.


அவர் "ஹலோ?" என கத்தியவள் தன் கைகளால் அந்த பெட்டியை தொடர் கைகள் நடுங்கியது. உள்ளே அவரது கரம் சென்றாலும், அவள் அவளால் கைகளை அந்த பெட்டிக்குள் வைக்க முடியவில்லை. "ஐயோ!!!! என் புருஷன்!!! அத்தான் உங்கள் அவன் இப்படி பண்ணிட்டானே!!! அத்தான்.. நான் என்ன செய்வேன்?? அத்தான் ஒரு மிருகத்துக்கிட்ட மாட்டி நீங்க தவிச்சுக்கிட்டு இருக்கீங்களே!! அத்தான் இதனால தான்.. உங்ககிட்ட பேச முடியாம போச்சாத்தான்!!!!! நான் நீங்க பிசினஸ் விஷயமா வெளிநாட்டுக்கு போனதா சொன்னிங்களே? அந்த சமயம் என்னால இப்படி ஒரு சிக்கல்ல நீங்க தவிச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியாம போச்சே இந்த லூசுக்கு. அத்தான்!!! என்ன.. என்கிட்ட சீக்கிரம் வந்துடுவீங்கத்தான். உங்க மலர் தவிக்க விடமாட்டேன்னு சொன்னீங்களே??? அத்தான், ரித்தி குட்டி கிட்ட நான் எப்படி இந்த விஷயத்தை சொல்லப் போறேன்? அத்தான்!" என அவர் பதறிய சத்தத்தை கேட்டவுடன் "மலர் என்னாச்சு?" என் அவரது தமையன் கேள்வி எழுப்ப. அவரிடம் ஓடோடி சென்ற அணைத்து கொண்டு "அண்ணா!!!! என் புருஷன் அவருடைய கால் இந்த படுபாவி பார்சல் பண்ணி நமக்கு அனுப்பிட்டான். இது எப்படி நான் ரித்திக் கிட்ட சொல்லுவேன்? இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.." என அவர் தேம்பித் தேம்பி அழுது கொண்டு இருக்கும்போது ரித்விக் வாகனம் வீட்டிற்கு வந்தடைந்தது.

அந்த சத்தத்தை கேட்டவர் "அண்ணா ரித்தி குட்டி வந்துட்டான். நீங்க அறைய பூட்டி உள்ளேயே இருங்க நான் சமாளிக்கிறேன்." எனவும் அவர் "நீ சமாளிச்சுடுவீயா மலர்?" என அவர் கேட்கவும் அவரும் 'சமாளித்துவிடுவேன்.' என இரு இமைகளையும் மூடினார். அப்போ முதல்ல போய் முகத்தை கழுவு கழுவிட்டு அவன் கிட்ட பேச்சு கொடுத்துடுறது ஏன்னா அவர் கூறவும் விறுவிறுவென வாஷ்பேஷன் சென்று தன் முகத்தைக் கழுவி கொண்டார்.

"வா இது தான் என் வீடு. உனக்கு நான் என்னுடைய வீட்டை சுத்தி காட்டுறேன்." என அவன் கூறவும் "நான் ஒரு தாசி இப்படிப்பட்ட என்னை நீங்க எப்படி உங்க வீட்டுக்கு கூப்பிடலாம்?" என அவள் கேள்வி எழுப்ப 'கேளு யார் வேண்டாம்னு சொன்னா? நல்லாவே நடிச்சிட்டு வர! என்ன மிஞ்சிடுவ போல?' என தனக்குள்ளேயே அவளைப் பற்றிப் பேசி சிரித்துக்கும் கொண்டான்.
"நீ தாசி கிடையாது. நீ ஒரு பொண்ணு. அது எல்லாத்தையும் விட நீ, இந்த பாருணி. என்னுடைய காதலி." என அவன் கூறியது அவளுக்கு ஒரு விதமான ஈர்ப்பை தந்தது. "என்ன கூட்டிட்டு போங்க?" என அவளது வார்த்தைகளை கேட்பதும் "இதோ! வா உள்ள கூட்டிட்டு போறேன்." என அவன் கொஞ்சலாக பேசினான். "ஹலோ மிஸ்டர் ரித்விக். என்ன அந்த மஹாசினி இடத்துல விட்டுட்டு திரும்பி உங்க வீட்டுக்கு வந்து தூங்குங்க. அ..அதோட, நான் என் மாம்ஸ் கிட்ட பேசணும். உங்க ஃபோன குடுங்க?" என கோபமாக ஆரம்பித்து மிருதுவான குரலில் பேசினால். "உன் மாம்ஸ்ட பேசணும்னா.. என் வீட்டுக்குள் வந்து என் அம்மாவை பாக்கணும்." என்றான் முடிவாக.

****
"இந்த இடம் சூப்பரா இருக்கு சத்ரியன். ஆமா! இன்னைக்கு நீ பிசினஸ் பாக்க போகல?" அவள் அந்த இயற்கை நிறைந்த பூங்காவை ரசித்தவரே பேசிக்கொண்டு இருந்தால். அவனும் அவளுக்கு எதிரே நடந்தபடி "இந்த இடத்துக்கு பலமுறை வரணும்னு ஆசை சங்கவை. அதான் இன்னைக்கு எம்ப்ளாயிஸ்க்கு லீவ் விட்டுட்டு, உன்னோட சேர்ந்து வந்துட்டேன் ஆனந்தமா இருக்கு." என அவன் அவளது கைகளை கோர்க்க முயன்று தோற்றுப் போக. அவனும் அவனது ரசனை வார்த்தைகளை ரசித்தவாறு நடக்க, அவளோ மௌனம் அவன் முகத்தை பார்த்து நடந்து செல்லும் வழியில்.. அவள் தனக்கு பின்னால் கல் இருப்பதும் தெரியாமல் கால் தடுக்க, அவனுக்கு சொல்லவா வேண்டும்? அவளின் இடையை தன் கரங்களுக்குள் கொண்டு வந்தான். அவளது முகத்தை பார்த்தபடியே!! அவளும் அப்படியே ஒரு காதல் பார்வை வீசினால்!!


நின்னேன் ஞான் கண்டலெ மேகம் பூக்கள் பெய்யும்மே!!உன்னவா ஞாண்ன்னே!! நெஞ்சில் தீர்த்தோனம் ப்ரனையப்ரபஞ்சமிலா!!!!!!!

என அவன் தன் இருதயத்தை அவளிடம் தன் கண்களால் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினான். பாடலாக, அவளுக்கு மனம் கேட்கவில்லை? அவளும் கண்களால் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் 'நீ என்ன நினைக்கிறாய்? என் மேல் உன் உணர்ச்சியின் பெயர்தான் என்ன?' என மனதின் கேள்வி தான்! அவளின் இரு கண்களில் உருண்டவிழிகள் மூலமாக அவள் கேட்க சத்ரியனுக்கு மனம் எங்கோ சென்றது இறக்கைப் போல. "என்னை விடுங்க" என சங்கவை கூற அவனும் விடுவித்தான் "சங்கவை. என்கிட்ட உனக்கு என்ன பிடிக்கும்?" என தன் மனதில் இருப்பதைக் "நீங்க ஒரு நல்ல பிசினஸ்மேன். ரித்விக் சீரியல் நடிக்கறதுக்கு காரணம். நீங்க தான் ஆனா, உங்கள கவனிச்சுக்க தான் யாரும் இல்ல? இப்படி நல்லது நினைக்கிற மனுஷங்களுக்களை கடவுள் ஏன் தான் சோதிக்கிறார்!! இரண்டு வருஷம் உங்கள தோழனா பார்த்துட்டு வரேன். ஒரு தடவை கூட உங்க சொந்தம் ரித்விக் ப்ரோவுடைய ப்ரண்ட்ஸ் தவிர நான் வேற யாரையும் பார்த்ததே இல்ல. உங்க அம்மா அப்பா ஏன் வராம இருக்காங்க?" என அவள் இதனால் வரை தன் மனதில் இருக்கும் கேள்வியை கேட்டால்.


"எஸ் எனக்கு அம்மா அப்பா கிடையாது. அதோட அவங்க எனக்குன்னு கொடுத்துட்டு போன சொத்து ரித்விக் தான். இந்த பிசினஸ் எல்லாம் நானா செதுக்கி வளர்த்த ஒரு சாம்ராஜ்யம். ரித்விக் மட்டுமில்லாமல் ஐ மின், உதவி பண்ணாமல் இருந்திருந்தால்? இந்த நேரம் நான் பிச்சை தான் எடுத்துட்டு இருப்பேன். எனக்குன்னு ஒரு சொந்தம் இப்போ கிடைச்சிருக்கு." என அவன் சொல்லவும் "யாரது? எனக்கு நீங்க இன்ட்ரோ பண்ணிடவே இல்ல?" என கேள்வி கேட்க சற்று குறும்புக்கலந்த குரலுடன் அவர்கள் அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து அவளைப் பார்த்தபடி "எனக்கே எனக்கான சங்கீத சங்கவை. நீ இருக்க, இந்த ரெண்டு வருஷம் நம்ம எப்படி ஒண்ணா சேர்ந்து நடந்தோமோ? அதே போல், இன்னும் இரண்டாயிரம் வருஷம் நான் உன்னில் பாதியா இருந்து வாழ துடிக்கிறேன் சங்கவை." என அவன் இறுதியாக கூறிய வார்த்தைகளை கேட்டதும் பெண் அவள் திகைத்துப் போய் நிற்க. அவளது இதயம் ஒரு கணம் துடிக்காமலேயே நின்றது. "சத்ரியன் நா.. நான் சுத்தமான பொண்ணா தான் பிறந்தேன், வளர்ந்தேன் ஆனா? இப்போ நான் இருக்கிற இடம், என்னை போய்? நான் ஒரு ப்ராஸ்டியூட். என்கூட நீங்க சேர்ந்து எப்படி வாழ முடியும் சத்ரியன்?" என அவன் பேச ஆரம்பிக்க வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு "ஆமா! நீ சுத்தமான பொண்ணு நீ அந்த இடத்தில் விட்டு வெளிய வரணும். மீண்டும் ஒரு வாழ்க்கை புதுசா! உனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டா போதும். உன் முகம் மாறிடும் மஹாசினி இடத்தில இருந்து வெளிவர, நம்ம புது வாழ்க்கை சேர்ந்து வாழ, அது நமக்கு ரொம்பவே உதவியா இருக்கும். இப்ப புரியுதா?" என அவளது கரங்களைப் பிடித்து அவளது பதிலுக்காக காத்து வந்தான். "யோசிச்சு சொல்றேன் சத்ரு." என அவள் அவனைச் செல்லமாக அழைக்கவும் "சஞ்சு உனக்காக எத்தனை யுகமானாலும் வெயிட் பண்ணிட்டு இருப்பேன். ஐஸ்கிரீம் வேணுமா?" என கேட்கவும் இருவரும் ஒன்றாக "வெண்ணிலா குல்ஃபி!" எனவும் சத்ரியன் குல்ஃபி வாங்க சென்றான்.
வாங்கி வந்த குல்ஃபி சஞ்சு குல்ஃபியை சத்ருக்கு ஊட்ட. அவனும் அப்படித்தான் செய்தான். "சத்ரு. உன் இடது கரத்தில் இருக்கிற இந்த குல்ஃபியை என் வலதுகரத்தோட பின்னிக்கோ." என கூறவும் அவர் அவர்கள் அவர்களது குல்ஃபியை ரசித்து காதலோடு உண்டு வந்தார்கள்.

****

"அம்மா நான் பாருணியோட வீட்டுக்கு வந்து இருக்கேன்." என்கிற தன் மகனுடைய குரல் கேட்கவும். அவர்கள் இருவரையும் அன்பாக அழைத்தார் "பாருணி" "ஹான்! நீங்க எப்பிடி இருக்கீங்க அத்தே?" என கூப்பிடவும் மலர் "ஆண்டினு கூப்பிடாம அத்தேனு கூப்பிடவும் உடம்பெல்லாம் என் புல்லரிச்சு போச்சு. வா வா. ரித்திமா இன்னைக்கு உனக்கு புடிச்ச கோழி குழம்பு, மீன் வறுத்து, அதோட குளுகுளுன்னு ஐஸ் கியூப் போட்ட லெமன் ஜூஸ் பண்ணி வச்சிருக்கேன். நல்லா சாப்புடுங்க." என அவர் கூற மறு நொடி "எனக்கு கோழி குழம்பு பிடிக்கும் அத்தே. ஆனா, லேமன் ஜூஸ் தான் பிடிக்காது. ரோஸ்மில்க் இருக்கா?" என்றால் தன்னை அறியாமல்.

பேசுவாளா(னா)?

 
பேச்சு 5

"இப்படித்தான் எங்க அண்ணனுடைய பொண்ணுங்க இருப்பாங்க ஒருத்திக்கு பிடிச்சது தான் இன்னொருத்தி கேட்பா. நல்லா சாப்பிடு, இந்த அத்தையுடைய சமையல் எப்படி இருக்குன்னு கண்டிப்பா சொல்லணும்" என மலர் கூறினார் "இவர் தான் எங்களுடைய தோட்டக்காரர் அண்ணன். எங்க வீட்ல எல்லாருமே சமம். ஆமா மாமா எங்க?" என தன் அம்மாவிடம் கேள்வி கேட்டான் "அவருக்கு நல்ல தூக்கம் காலைல இருந்து எழவே இல்ல. நீ சாப்பிடு. பாரு, உன்னை பத்தி கொஞ்சம் சொல்லு?" என அவர் தன் மகனுக்கு பிடித்த பெண்ணிடம் பேச வேண்டும் என்கிற ஆர்வத்திலும், அவளின் குணத்தையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு கேட்டார்.

அந்த கணம் தன் கைகளில் நீரை ஊற்றி கழுவியவன் தன் அலைபேசி மூலம் அவர்களின் உரையாடல்களை மறைமுகமாக எடுத்து வைத்தான். அவனது மனதில் இந்த செயலை செய்ய வேண்டும், செய்தே ஆக வேண்டும்! என்கிற அன்பு கர்வம் எழுந்தது. இனி, இவர்களது வாழ்வில் நடக்கவிருக்கும் துன்பம் அறியாமல் அவளோட ஆனந்தமாக இணைந்து கொண்டு வீட்டை சுற்றி காட்டி வர தன் மாமாவின் அறையில் அவர் இல்லாமல் இருக்க அதை பார்த்தவனுக்கு
"மாமா அவருடைய அறையில காணோம்?" என அதிர்ந்த விழிகளில் கண்ணீர் வெளி வராத குறை தான் அவனுக்கு.

"உன் மாமா என் அறையில் இருக்கார். அதோட, இப்போ தான் எழுந்து உன் ரூம்ல இருக்கேன் மலர். தயவு செஞ்சு யாரும் வரவேண்டாம்னு சொன்னார்." என அன்னை கூறினாலும் அன்று அவர் தூக்கில் தொங்கியது ரித்துவிக்கின் மனதிலும் அவனின் கண்கள் வழியே அப்பட்டமாக தெரிந்தது.

அதை புரிந்து கொண்டவர் "கவலப்படாத ரித்திமா. மலர் கூட தான் நான் இருக்கேன். நீ பாருணி கூடவே இருந்து அவளை பாத்துக்கோ." என கூறினார்.

ரித்விக் தன் வீட்டை சுற்றிக் காட்ட மலர் தன்னுடைய அறையில் அவருடைய அண்ணனை பார்த்து "அண்ணா இப்போ என்ன செய்ய காத்திருக்கானோ? குடும்பத்தோட வாழ்ந்தவன் தானே? இப்படி ஒரு சோதனை எந்த ஒரு பொண்ணுக்கும் வந்திடவே கூடாது! என் புருஷன் உடைய.. ஐயோ!! ஏன்னா? ஏன்? அவருக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்! எப்படி துடிச்சு போய் இருப்பார்? ஹா..ஹான் அண்ணா!! இது ரித்தி பார்க்க கூடாது. நீங்க இன்னைக்கு இந்த அறையில், என்னோடவே துணைக்கு இருங்க. ப்ளீஸ் அண்ணா! எனக்காக?" எனக்கு கதரும் தங்கையின் நிலையை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.


ஆனால் இறைவனின் சூழ்ச்சி வேறு கோணத்தில், கோரமாக அவர்களது வாழ்விற்கு ஒரு விரிசல் விழும் என நினைக்க தவறினார்கள். தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று இது தான் என் ரூம். இந்த ஜன்னல் வழியா தான் நான் நைட் ஷாட் முடிச்சுட்டு வரும்போது.. இதோ! இந்த ஏனைய கீழ வச்சுட்டு போயிடுவேன். அதிலேயே ஏறி வந்து ஜன்னலை திறப்பேன். அதுக்காகவே தான் இந்த ஜன்னல்." என அவன் அவளிடம் பேச அவளது மனம் 'பைத்தியம் முத்தி போய் என்ன எல்லாம் பேசிக்கிட்டு இருக்கான்? நான் இந்த ஜன்னலை பத்தின எந்த விஷயமும் கேட்காமல் சும்மா இருந்தாலும் கூட விடமாட்டான் போலயே! மஹாசினி கிட்ட இருந்து தப்பிக்கணும். மாம்ஸ் கிட்ட பேசணும்.' என சிந்தையில் இருந்தவள் "ரித்விக் நான் என்னுடைய தோழி கிட்ட பேச முக்கியமான விஷயம் இருக்கு?" என அவள் அப்பாவி நிறைந்த முகத்தோடு கேட்க. மேலும்,அவனை உருக வைத்தால் அவனின் பாரு. அவளிடம் தன்னுடைய அலைபேசியை தந்தான் அதை வாங்கிக் கொண்டு அலைபேசியை திறந்தவள், தன்னுடைய தோழிக்கு அழைப்பு தந்தாள்.

*******

காதலோடு குல்ஃபியை ருசித்தவர்கள் "சத்ரு. நான் என்னுடைய இடத்துக்கு போகணும்" என அவள் கூறவும் "சஞ்சு. முதல்ல என் வீட்டுக்கு போகலாம்.அப்புறம், ரித்விக் வரட்டும். பிறகு மஹாசினி இடத்துக்கு போ. என் கூட வரவிருப்பமில்ல?" என அவன் கேட்க "சரி சத்ரு போகலாம்." என அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

வழியெங்கும் நிசப்தம் மட்டுமே. ஆனால் வானம் அப்படி நிசப்தமாக செல்லவில்லை. இடியும்,மின்னலும் ஆக இருந்தது. கருப்பு காகம் போல மழையை பொழியும் நெய்தல் நிலத்தின் தலைவன் மழையை தரையில் வீழ்த்தெடுக்க சற்று நாழிகை மட்டுமே இருக்கிறது என்பதை அறிகுறியாக காட்டியது. வீட்டிற்கு வந்தவர்கள் சற்று நேரம் உரையாடி கொண்டு இருந்தார்கள்.

*****

"அண்ணா அவன் தான் போன் பண்றான்? இப்போ, நாம என்ன செய்ய?" என அவர் சற்றும் கவலையும், கோபமாக பேசினார்.
"நீ கொடு. நான் பேசுறேன்." என அவரிடம் நீட்டியவர் பேச ஆரம்பித்தார். "ஹாய் மலரின் சகோதரன். எப்படி இருக்கீங்க? சந்தோஷம் தானே?" என அவன் பேசும் முன்னர் பேசும் அவருக்கு கோபம், அதிர்ச்சியும் கூட! "ஏன்!!! ஏன்டா?? உனக்கு எங்க மேல ஏன் இவ்வளவு கோவம்? பகை? வெறி? மாப்பிள்ளையை எங்க கிட்ட கொடுத்துடுடா? மலர் பாவம். அவளுடைய, பையன் ரித்விக்கு தெரிஞ்சா ரொம்ப கவலைப்படுவான், மனசு உடைஞ்சு போயிடுவான்." என அவர் கூறவும் அவரை பேச விடாமல் அவன் முந்திக் கொண்டான் "ம்ப்ச்! போன் தங்கச்சி புருஷன் செத்துப் போய் ரெண்டு மணி நேரம் ஆச்சு. அதோட, அவனுக்கு இறுதி சடங்கும் நானே செஞ்சுட்டேன். நான் கொடுத்த உன் புருஷன் உடைய கால்ல உன் மகன் பார்க்கவே இல்லையா? ஐயோ!! ஏன் சொல்லாம இருந்தீங்க? இப்போ அவ குங்குமம் போச்சுன்னு உன் சகோதரி உன்கிட்ட எப்படா சொல்லுவ? இப்போ கேப்பா என்ன செய்வ?" என அவன் தன் பேச்சை முடித்த அழைப்பை துண்டிக்க சகோதரனிடம் "அண்ணா அவேன் என்ன தான் சொன்னான்? என் ஆத்தான் திரும்பி வந்துருவாரு தானே?" என கண்கள் நிரம்ப நீருடன் 'ஆனந்தமாக இறக்கவா?அல்லது கவலையோடு இறக்கவா?' என்கிற கேள்வி அவருடைய கண்களில் தெரிய..

அவர் சகோதரரின் இதழ் வார்த்தைகள் வராத அளவு கேள்விப்போட்டு அவரது மனமானது தடுத்தது. இருப்பினும், 'மெய் அதனை கூற வேண்டும் தானே?' என மறு திசை புத்தியானது ஒரு கேள்வியை தர அவருக்குத்தான் பாவம் 'தன்னுடைய வாழ்வு தான் திசைக்கு ஒவ்வொன்று எனப் பிரிந்து கோர வேதனையில் துடித்து வருகிறது. என நினைத்தாலும் என் தங்கையின் வாழ்விலும் இப்படியா நடக்க வேண்டும்?' என்கிற சோகமும் அவரது பிம்பமாக அமர்ந்து யோசிக்க வைத்தது.

கண்களை மூடி அழுத்தமான மூச்சுக்காற்றை வெளியிட மனதை கல்லாக்கி தன் தங்கையிடம் "மலர் மாப்பிள்ளை இனி திரும்ப வரவே வாய்ப்பு இல்லம்மா. என் நிக்கிதா உயிரோட என்ன விட்டு எங்கேயோ தூரமா இருக்கா. மாப்ள நம்ம எல்லாரையும் விட தூரமா போயிட்டார் மா." என கண்ணீர் வடித்தபடி அவரது வகுடு குங்குமத்தை அழித்து, சிவப்பு நிற பொட்டை எடுத்து, தங்கையின் தாலி எடுக்கும் கணம்.. "அண்ணா!!! அ..அத்தான் என்னை விட்டு போயிட்டாரா?? ஹய்யோ!!! ரித்தி குட்டி பாவம். அவனுக்கு இந்த விஷயத்தை சொன்னா மனச உடைஞ்சு போயிருவான்." ஐயோ என தலையில் அடித்துக் கொள்ள அழுதார் மலர்.

*******

தோழி தன்னுடைய அழைப்பை ஏற்றதும் "மாம்ஸ் எப்படி இருக்க? என் லக்கேஜ்?" என அவள் கேட்க "மச்சி நீ ஒரு நடிகை! இப்படி எல்லாம் கேட்கலாமா? சரி அத விடு. இப்போ, ஷாட்லையா இருக்க? நேத்து கூப்பிட்டா அதே நம்பர்ல இருந்து கூப்பிடுற சொல்லு? என் பெயரை சொல்ல உனக்கு என்ன அவ்வளவு கஷ்டம்?" என கேட்க "நீ எப்படியாவது என்ன காப்பாத்து மாம்ஸ்?" "ஹா! ஹா! கையில நெய்யை வைச்சுட்டே ஊரெல்லாம் தேடுனாலாம்? நீ கேட்ட உடனே ரித்விக் சார் ஹெல்ப் பண்ணுகிறார். உன்னை வேணும்னா அந்த மஹாசினி இடத்துல இருந்து காப்பாத்துவார். மனசு தளரவிடாமல் அவரோட நடிச்சு ஸ்டார் ஆகு, அது போதும் அவரே உன்னை மொத்தமா அங்கிருந்து காப்பாத்தி கூட்டிட்டு வந்துருவார்." என அவளது தோழியிடம் பேச.


அவளை அன்பாக பின்னாலிருந்து அரவணைத்தது இருகரங்கள். அவளது இடையில் பற்றி அவள் பார்வையிட.. பெண் துவண்டு போனால் யாரடி உயரத்தின் அழகுகேஷம் கொண்ட மரத்தின் கிளைகள் போல் இருபுறமும் மீசை முளைத்தால் அழகிய தேவன் போல் வெற்றி மார்பை அவளது ஆடையிருப்பதை தான் அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால் அவனது வசீகரமான பார்வை அவளை இழுக்க. இவளது மிருதுவான இதழின் அசைவு எவ்வாறு துவண்டு போயிருக்கும் என்பதை காண துடித்தான் அவனது மனம் எங்கே சென்றது இறகைப்போல பறந்து சென்றது

இறகை போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே! குழந்தை போலே.. தவிழ்கிறேனே உந்தன் பார்வை தீண்டயிலை! தொலையாமல் தொலைந்தேனே உன் கைகள் என்னை தொட்டதும்! கரையாமல் கரைந்தேனே உன் மூச்சுக்காற்றுப் பட்டதும்! அநியாய காதல் வந்ததே அட காதல் ஆசை தந்ததே எனக்குள்ளே ஏதோ மின்னல் போல தொட்டுச் சென்றதே!!!

"ஹலோ மிஸ்டர் ரித்விக்! என்ன பண்ணிட்டு இருக்கீங்க? டோட் யூ ஹெவ் எனி சென்ஸ்? யோ! என்ன ஏதாவது பேசு."என குரலை உயர்த்தி பேசியவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை "ஹா..ஹான்.. இவனுக்கு பைத்தியம் முத்தி போச்சி. டேய்!! என்ன விடுடா லூசு!!!" என்றவுடன் தான் அவன் "ஊஸ்ப்!!! ஐயம் சாரி பாரு. இனி உன் அனுமதி இல்லாமல் நா இப்படி ஹக் பண்ணதுக்கு மன்னிச்சிடு.
இப்போது தான் டைரக்டர் சார் என் லேண்ட்லைன்க்கு கூப்பிட்டார். ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணனுமா, பேர் எல்லாம் நீயே சொல்லிட்ட, ப்ரோமோ போடணும் அதனால புது புது நடிகர்கள் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். நீ பாருணியோட சேர்ந்து வந்துருனு சொன்னார். அதனால நாளைக்கு கிளம்பனும். நீ இங்க இருக்கியா?" எனக் கேள்வியோடு அவளிடம் பதிலுக்காக காத்திருந்தான். "அப்படியா சரி, நான் நாளைக்கு வரேன். என்ன ஏன் இடத்துல கொண்டு போய் விட்டுடுங்க. இங்க இருக்க என்னால முடியாது! மழை வந்தாலும் வந்துடும்? சங்கவை கூப்பிட்டு அவளையும் அழைச்சிட்டு போனீங்க தானே? நீங்களே விட்டுடுங்க எங்க ரெண்டு பேரையும்." என தன் அருமையவள் பேசிய மறுகணமே சத்ரியன் வீட்டிற்கு ஆவலோடு சென்று அவர்களை ஒப்படைத்துவிட்டு மஹாசினியிடம் டைரக்டர் கூறிய செய்தியை தெரிவித்துவிட்டு பணம் தந்து வீட்டுக்கு வந்தவன்.. சோர்வு ஆதலால், இளைப்பாரி விட்டு படிகளில் ஏதும் பேசாமல் வந்தவன். தன் மாமாவும் அன்னையாரும் என்ன கதைத்து வருகிறார்கள்? என்பதை தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டு வந்தான். வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் அவர்கள் பேசி வருவதை அவனால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

"மலர், நான் இந்த பெட்டியை கொண்டு போய் சுடுகாடுல புதைச்சுட்டு வந்துட்டேன். குழிதோண்டி எல்லாம் வச்சுட்டாங்க, இதை புதச்சிட்டு வர்றது மட்டும்தான் பாக்கி." என்ன சகோதரன் பேச அவர் விழிகளை துடைத்த படி தழுதழித்த குரலில் "அண்ணா. தயவு செஞ்சு இந்த விஷயம் ரித்திகுட்டிக்கு தெரியக்கூடாது? என் பூவும் பொட்டும்.." என தன் விழி நீரைத் துடைத்தவர் சற்று அமைதியாக 'என்கிட்ட இருந்து எதுவும் மறைக்க வாய்ப்பு இல்ல? ஆனா அம்மா பூ,பொட்டுன்னு சொல்றாங்க? என்ன பேசிட்டு வராங்கன்னு கேட்போம்.' என தனக்குத்தானே கூறியவன் கவனிக்க தொடங்கினான். அப்போது அவன் கடிகாரத்தை பார்க்க அது நான்கு மணி என காட்டியது அவனும் சத்ரியிடம் விஷயத்தை கூற அவனும் அங்கு விரைதான்.

*****

பெண்டியர்கள் இருவரும் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு சங்கவை ஓய்வெடுக்க பாருணிக்கு ஷீலாவை பார்க்க வேண்டும் என தோன்றியது! அப்போது எதார்த்தமாய் ஷீலா "என்ன ஓய்!" என மென்மையான குரலில் கேட்க "உள்ள வா." என்ற மஹாசினியின் தமையன் குரல் கேட்டது. இவள் அந்த அறைக்கு வெளியே நின்று என்ன நடந்து வருகிறது என்பதை கவனிக்க தொடங்கினால்.

"ஏய் அக்கா இவளுடைய நடத்த சரியில்லாமல் இருக்கு என்ன கேளுங்க சொல்லுடி?" என்கிற இந்த குரலை கேட்கவும் அவளுக்கு அதிர்ச்சி. வெளியே நின்று கேட்டுக் கொண்டிருக்கும் பாருணியின் செவிகளால் இதை நம்பவே முடியவில்லை. "ஷீலா அக்கா? இவங்க யாரைப் பத்தி பேசிட்டு வராங்க?" என தனக்குத்தானே கேள்வி எழுப்ப அதே சமயம் "டேய்!! இந்த மஹாசானிய லேசா எடை போடக்கூடாது. என்னடி? நானும் என் தங்கச்சி ஷீலாவும் பார்த்துட்டு வாரோம். ஏண்டி நீ எங்க வாழ்க்கையில வந்த? நான் இந்த நிலையில எழுந்து நடக்க கூட முடியாதவளுக்கு என்னை தள்ளிவிட்ட அந்த விதி தேவி நீ! உன்னை வச்சு எனக்கு ஆண்டவன் தந்த பரிசு பார்!!! இதுக்கு என்ன பதில் சொல்லப் போற???" என அவர் பேச "அது அது வந்து மஹாசினி மேடம் நா வேணும்னு.. அன்னைக்கு அப்படி செய்யல? இத எத்தனை தடவை நான் சொல்ல!!! ஐயோ!!!! தயவு செஞ்சு என்னை விட்டுடாதீங்க?" என கேட்டவுடன் "எப்பையும் இந்த அசல் மஹாசினிகிட்ட நீ விட்டுடுங்கன்னு! கெஞ்சி அழுவ? இது என்ன புதுசா இருக்கு? சரியில்லையே..?" என அந்த அசல் மஹாசினி கர்ஜித்தார். பாருணி குழம்பி போய் தனக்குள் 'அன்னைக்கு என்கிட்ட கர்ஜித்த பெண் சிங்கம்! மஹாசினி இல்லை. அப்போ இவங்க யாரு? பாசமா என்கிட்ட மௌனம்,மலரா சிரிச்ச முகமா, இருந்த இந்த ஷீலாவுடைய அசல் முகம் கோபம், பேராசை அதோட ,நடிப்பு. இப்போ இந்த மஹாசினி யாரு? ஷீலாவுடைய அக்கா நிலைக்கு இவங்க காரணமா? என்ன நடந்திருக்கும்?' என அறைக்கு வெளியே நின்றபடி சிந்தையில் தள்ளப்பட்டு மேலும் கவனிக்க தொடங்கினால்.

*******

ரித்விக் மிகப்பெரிய குழப்பத்திற்கு தள்ளப்பட்டான். காரணம், 'தன்னிடம் மறைக்கும் வகையில் என்ன விஷயம்? அந்த பெட்டியில் மறைந்திருக்கும்? ஏன் தன் அன்னை பூ,பொட்டு என தழுதழுத்து குரலில் பேச வேண்டும்?' என்று கேள்வியோடு மேலும் தாமதம் செய்யாமல் அறையினுள் செல்ல அவர்களிடம் "என்கிட்ட என்ன விஷயத்தை மறைச்சிட்டு வரீங்க? இந்த பெட்டியில் அப்படி என்ன இருக்கு மாமா? உண்மைய சொல்லுங்க? இந்த பெட்டில.. என் அம்மா பூ,பொட்டு ஆஆஆஆ!!! என்னதான் சம்பந்தம்?" என அவன் வேதனையில் கர்ஜித்தான்.
"என் வாழ்க்கை போச்சு!" என அவருடைய தாயார் கதற 'வாழ்க்கை' என்கிற வார்த்தையை கேட்கும் போது ஒரு முறை அவனிடம் " ரித்தி அப்பா இன்னும் வலியோட உடம்பு சரியில்லாமல் இருக்கார். அவர் குணமாகினால் நான் அழகு குட்டி தரிசனம் செய்ய வரேன்னு கந்தன் கிட்ட வேண்டி இருக்கேன் எனக் கூற அம்மா உனக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும் சொல்றத விட அவர் மேல நீ வச்சிருக்கான் காதல் அவர் உன் மேல வச்சிருக்கேன் காதல் வேற லெவல் என அவன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு அவர்தான் என் வாழ்க்கையே எப்படி நிகிதா அண்ணி யாஷிகா மதுஷிகா என் அண்ணனுடைய வாழ்க்கையோ அது போல தான் எனக்கு என் புருஷன் நீ எல்லாம் அவர் இல்லாமல் எனக்கு வேறு எதுவுமே இல்லை என அவர்கள் ஐந்து வருடத்திற்கு முன்பு ஏதோ ஒரு தருணத்தில் பேசியதை கேட்டவனுக்கு இப்போது புரிந்தது அப்பா அப்பா நம்ம எல்லாரும் விட்டுட்டு ஏன்னா அவனது கண்களில் இருந்து கண்ணீர் தானாக வலியை தொடங்கியது அவனும் தன் மாமாவோடு சேர்ந்து தன அப்பாவின் சடலத்தை புதைத்து வந்தவனுக்கு சத்ரியனின் துணை தேவைப்பட்டது. சந்தேகத்தின் பெயரில் சத்ரியனோடு அவர்கள் பேசி வருவதை கவனிக்க வேண்டும் என்று தான் அவனை அழைத்து வரச் சொன்னான். ஆனால், அவன் வந்த பிறகு தன் வீட்டில் தன் அப்பா தன்னை விட்டு சென்று விட்டார் என்கிற கேள்வியை செவியில் சேர்ந்தவுடன். மறந்து போய் வேறு ஏதோ உலகில் மிதந்து கிடந்து கண்ணீரின்..கண்ணீராக வழிந்து கிடந்த ரித்விக்கின் மனம் மிகவும் வாடிய பயிராக மாறிவிட்டது. சத்ரியன் துணையும் தேவைப்பட்டது. இதற்காகத்தான் அவனை அழைத்தேனா? என்பது போல் முன்கூட்டியே தன் தோழன் அனைப்பு அவனுக்கு தேவைப்பட்டு இருக்கிறது. என்னவோ நேரம் அவனை அங்கு வரவைத்து இருக்கிறது. தன் தோழனை பார்த்து அவனிடம் "என்னடா ஏதோ நடந்துருச்சு. விடு, இ.. இனியாவது தைரியமா வேலைய பாரு. அம்மாவை நல்லபடியா பார்த்துக்கோ. அதோட மாமாவும் இருக்காரு. உன்னுடைய கசின்ஸ் எல்லாம் தேடி கண்டுபிடிக்கணும் இல்ல.. அதுக்காகவாது நீ வெயிட் பண்ணுடா! உன்ன போட்டு வருத்திக்காதே? அம்மாவ அதை வச்சு சந்தோஷப்படுத்து..உன் கசின்ஸ் தேடி கண்டுபிடித்து அம்மா முன்னாடி கொண்டு வந்து நிறுத்தினாலே..! போதும், அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க??" என அவன் அவனுக்கு தைரியத்தை ஊட்டினான். அவன் பேசியதை கேட்கும் நிலையில் ரித்விக் இல்லை ஆதலால் அவன் "ஸ்டாப் இட் சத்ரியன்!!!!! எதுக்காக அவங்க என்கிட்ட இந்த விஷயத்த மறைச்சிருக்காங்கன்னு தெரியாம நானே குழம்பி போய் கிடைக்கேன்? நானா படி இறங்காமல் இருந்திருந்தால்.. மாமா பாட்டுக்கு எங்க அப்பா செத்தது கூட என்கிட்ட சொல்லாம அவர் போய் புதைச்சுட்டு வந்து இருப்பார். நான் ஏதோ எதார்த்தமா போனனால எங்க அப்பா செத்து விஷயம் தெரிய வந்துச்சு. பிள்ளை கிட்ட தன்னுடைய அப்பா இறந்த விஷயத்தை சொல்ல கூட முடியாத அளவுக்கு என்ன மறைச்சு வச்சிருக்காங்கன்னு எனக்கு தெரியவே இல்லைடா." என அழுது கரைத்தான் தோழனும் அவனது பேச்சைக் கேட்டு கொண்டு 'என்னவாக இருக்கும்?' என சந்தேகத்தில் ஆழ்ந்து போனான்.

*******

"அக்கா இவ என்னடான்னு பார்த்தா சீரியல் கெஸ்ட் ரோல் ஆஃபர் இப்போ வந்த பாருணி. அவளுக்கு கொடுத்து இப்போ ஹீரோயின் ஆக வேலை பார்த்து அவளை காப்பாற்ற நினைக்க முயற்சி பண்றாங்க தோணுது?" என்றால் வினோதமான குரலில். "ஷீலா! இவ சொன்னது போல சங்கவை இந்த ஊர் முழுக்க என் பிசினஸை கொண்டு போய் சேர்த்தா. இந்த பாருணி உலகம் பூரா கொண்டு போய் சேர்க்கப் போறா. எனக்கு சந்தோஷமா இருக்கு! இந்த அசல் மஹாசினி நான் கூட இப்படி யோசிச்சது கிடையாது? என்னுடைய நகல் நீ பலே! சபாஷ்! போ ரொம்ப நேரமாச்சு போய் நீ வேலைய பார் ஷீலாமா. ஏய்!! இவள கண்காணிச்சுக்கிட்டே இருங்கடா! இந்த குரங்கு என்ன வேணும்னாலும் பண்ணும்." என ஷீலாவோடு சேர்த்து தான் இந்த நகல் மஹாசினியை செல்ல அவர்களை பின் தொடர்ந்து வந்தவர்கள் பாருணி அமர்ந்திருப்பதால் அவளை கண்டுகொள்ளவில்லை. அது அவளுக்கு ஒரு வகையில் நல்லதாக போயிற்று ஷீலாவை எப்போதும் பார்ப்பது போல அவள் இருக்கும் சமையல் அறைக்கு சென்று பார்க்க "பாருணி என்னம்மா சீரியல் சூட் நாளைக்கு இருக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்ல? எதுக்கு இங்க வந்திருக்க?" என அவள் பேசும் முன்னரே

"அக்கா! என்னன்னு தெரியல சூட்டிங் போக என்னன்னு.. அங்க போகவே மனசு வரமாட்டேங்குது. பேசாட்டி மனசு வரல நான் நடிக்க வரலைன்னு சொல்லிடவா நல்லா இருக்கும் தானே?" என ஒரு நடிப்பு அவள் நல்ல முறையில் ஷீலாவிடம் செய்து காட்ட. "அப்போ நீ ஏன் பேட்டி எடுக்க போன?" என ஷீலா அவளை சரியான விதத்தில் மடக்கி போட "அங்கு நான் போனேன் இல்லன்னு சொல்லவே மாட்டேன்! ஆனா? இப்போ தினமும் ஷாட் கிடைக்கும். உங்களோட சேர்ந்து என்னால பேச முடியுமான்னு..தெரியல? நீங்களும் பிஸி, நானும் பிஸி, அதான் ஷீலா அக்கா. உங்களை பார்க்க நான் ஓடோடிங்க வந்தேன். ரொம்ப நேரமா நீங்க கண்ணுக்கு தென்படவே இல்ல? எங்க போயிருந்தீங்க அக்கா?" ஏன அவள் இறுதி கேள்வி கேட்கவும் 'இவ இப்படி கேள்வி கேட்டு உண்மைய தெரிஞ்சுக்க நினைக்கிறான்னு எனக்கு தோணுது.' மறுபக்கம் 'இல்ல வாய்ப்பில்லை. பாருணிக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்காது! அவ இந்த வந்து ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள.. அதை எப்படி கண்டுபிடித்து இருக்க முடியும்? சங்கவை, அவளுக்கே தெரியாது? அப்படி இருக்க இவளுக்கு மட்டும் தெரியுமா என்ன? நீ ஏன் ஏதேதோ கற்பனை செஞ்சு குழம்பி போய் கடக்காத! உணவுக்கு வந்து இருக்கிற வாய்ப்பிருக்கு. அதனால, அவளுக்கு சாப்பாடு சமைச்சு போட்டு கொடு.' என நீண்ட க
நேரமாக அவள் தன் மனசாட்சியுடன் உரையாடிக்கொண்டு இருந்தால்.

தன்முன்னே நின்று கொண்டு இருக்கும் பெண்ணிடம் "சமையல் செய்ய..ஜா.. சாமான் வாங்கப் போனேன்." என திக்கித் தெணறி கூற "எ..எல்லா பொருளும் புதுசா நேத்து வாங்கி வச்சா தான் மஹாசினி சொன்னாங்க."


பேசுவாளா(னா)?

 
Status
Not open for further replies.
Top