எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாதை நீ பதாரம் நான் - கதை திரி

Status
Not open for further replies.
வணக்கம் நண்பர்களே,

என்னோட அடுத்த கதையின் டீஸரோட வந்து இருக்கேன்.

டைட்டில் - பாதை நீ பதாரம் நான்
#title_reserving

டீஸர்

வாளி நிறைய தோய்த்த உடைகளை எடுத்துக்கொண்டு ஷர்மிளா மொட்டை மாடிக்கு செல்ல, அவளைத் தொடர்ந்து அனைவரும் மொட்டை மாடிக்கு வந்தனர்.

கொடியில் அவள் உடையை காய போட, உமா கீர்த்தனாவின் தலைக்கு எண்ணெய் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார்.

கீர்த்தனா மற்றும் கதிரின் நடுவில் அன்பு அமர்ந்திருக்க, கதிரோ ஹெட்போனின் மூலம் அலைபேசியில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.

“அன்பு, உங்க அண்ணாக்கு பாட்டு கேக்கற பழக்கம் இருக்கா? இது பத்தி எல்லாம் என்கிட்ட சொன்னதே இல்லையே. நான் கேட்கும் போதெல்லாம் அவன் ஒரு ரசனை இல்லாதவன். எப்ப பாத்தாலும் பிசினஸ், பணம், பேங்க் அப்படியே சுத்திக்கிட்டு இருப்பான் தானே சொன்னீங்க" என்று அவனிடம் கேட்டாள்.

மூத்தவனைப் பற்றி இளையவன் இப்படி மனைவியிடம் கூறியிருக்கிறான் என்று தெரிந்ததும் மகனை முறைத்துப் பார்த்தார் உமா.

“ஐயோ அம்மா. நான் அப்படியெல்லாம் சொல்லல இவ எக்ஸ்ட்ரா பிட்டிங் போட்டு சொல்றாமா” என்றவன் மனைவியிடம் திரும்பி, “ஏன்டி உன்கிட்ட என்ன சொன்னேன். எங்க அண்ணன் பிசினஸ்ன்னு சுத்திகிட்டு இருப்பாரு யாருகிட்டயும் அவ்வளோ பெருசா சிரிச்சு பேச மாட்டாருன்னு மட்டும் தானே சொன்னேன்“ என்று அப்பாவியாக கேட்டான்.

குலுங்கி சிரித்த கீர்த்தனா, ”அத்தான் என்ன பாட்டு கேக்குறாரா இருக்கும். உங்களுக்கு தெரியுமா அத்தை?“ என்று உமாவிடம் கேட்க,

”தெரியலையே" என்றவர் ஆடைகளை காய போட்டுக் கொண்டிருக்கும் ஷர்மிளாவை பார்த்து, ”ஷர்மிளா உனக்கு தெரியுமா?“ என்று கேட்கவும்.

”எனக்கும் தெரியல அத்தை“ என்று கூறிவிட்டு உடைகளை காய போடுவதில் கவனத்தை வைத்திருந்தாலும் கணவனை பற்றி இவர்கள் பேசுவதை காதை தீட்டி வைத்து கேட்டுக் கொண்டு இருந்தவள் திரும்பி கதிர் இருந்த இடத்தை பார்த்தாள்.

தரையில் அமர்ந்து நீட்டி இருந்த காலையாட்டிக் கொண்டு கண்ணை மூடி பாட்டை ரசித்து அவன் கேட்டுக் கொண்டிருக்க, என்ன பாடலாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அவளுக்கும் பிறந்தது.

அருகில் இருந்த கணவனின் கையை சுரண்டிய கீர்த்தனா. சைகையிலேயே அவனிடம் அன்பு அலைபேசியில் மாட்டி இருந்த ஹெட்போனை கழட்ட சொல்ல அவனோ முடியாது என்று தலையாட்ட, “போயா” என்றவள் தானே எட்டி அலைபேசியில் இருந்து ஹெட்போனை கழட்ட கதிருக்கு மட்டும் கேட்டுக் கொண்டிருந்த பாடல் இப்பொழுது அனைவருக்கும் கேட்டது.

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால் ஓ…….மேலே…….கேட்காதே…….

பாட்டைக் கேட்டதும் கீர்த்தனா மற்றும் அன்பு விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினர்.

அவ்வளவு ஏன் ஷர்மிளாவே பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் கீழே அறைக்கு ஓடிவிட்டாள்.

ஹெட்போனை கழட்டியது தம்பி என்று நினைத்து அவனின் புஜத்தில் அழுத்தமாக கதிர் கிள்ளி விட,

“ஆஹ்” என்று வலியில் கத்தியவன் நான் இல்லை என்று செய்கை செய்து மனைவியை கை காட்டினான்.

தன்னை கணவன் மாட்டி விடுவான் என்று எதிர்பார்க்காத கீர்த்தனா கதிர் முறைத்து பார்க்கவும் பயந்து அவளும் ஓடிட,

“ஏய் கீர்த்தனா மசாஜ் பண்ணனும்னு சொன்ன”என்று பாதியில் எழுந்து சென்ற மருமகளை அழைத்தார் உமா.

“ஐயோ அத்தை எனக்கு வேணாம் உங்க மகன் ரெண்டு பேருக்கும் வச்சு விடுங்க.” விட்டால் போதும் என்று படியில் இறங்கிக் கொண்டே குரல் கொடுத்தாள்.

அறைக்கு வந்ததும் வாளியை எடுக்க மறந்தது நினைவு வரவும் வாளி எடுக்க ஷர்மிளா அறையின் வாசலுக்கு வர எதிரில் வந்த கதிர் மனைவியிடம் வாளியை கொடுத்துவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

வாசலில் நின்று கொண்டு கணவனை திரும்பிப் பார்த்தவள், “உங்களுக்கு அந்த பாட்டு கேட்கும் போது நம்ம செகண்ட் டைம் மீட் பண்ணது ஞாபகம் வந்துச்சா?“ என்று கேட்டு கணவனுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்தாள்.

அவள் ஞாபாகம் வைத்திருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனையும் அறியாமல் இதழ் ஓரம் சிறு புன்னகை உதிக்க ஆம் என்று கூறினான்.

------------------------------------------------

கதை ஜூலை 15 ஸ்டார்ட் பண்ணுறேன்.
கதையில் காமெடி பேமிலி ட்ராமா லவ் இப்படி எல்லாம் கலந்து இருக்கும்.

கதைக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் ❤️❤️❤️❤️

IMG_1660.jpeg
 
Last edited:
அத்தியாயம் 01

இனிமையான காலை வேளையில் கூடத்தை ஒட்டியிருக்கும் பூஜை அறையின் வாசலில் அமர்ந்து முருகனை மனதில் நிறுத்தி பயபக்தியோடு கந்த சஷ்டி கவசம் பாடிக்கொண்டிருந்தார் உமாதேவி.

எல்லா அன்னைகளையும் போல் அவரும் தன் பிள்ளைகளுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர். அவரின் உலகம் கணவர் பிள்ளைகள் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் அடக்கம்.

தினமும் காலையில் முருகனுக்கு கந்த சஷ்டி சொல்லாமல் அவரின் நாள் நகர்ந்ததே இல்லை. முருகனின் தீவிர பக்தை. அதனாலேயே அவரின் மூத்த புதல்வனுக்கு கதிர்வேல் என்று பெயரிட்டார்.

காலை நடையை முடித்துவிட்டு வீட்டு வாசலில் கிடந்த செய்தித்தாளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் ராகவன்.

பூஜை அறையை நெருங்கியதும் அதைக் கடந்து கூடத்தில் இருக்கும் சோபாவில் அமர்ந்து செய்தித்தாளை வாசிக்க தொடங்கி விட்டார்.

அவருக்கும் கடவுளுக்கும் நடுவில் இருக்கும் இணைப்பு புள்ளி அவர் மனைவி மட்டுமே. திருமணமான புதிதில் கணவரை மாற்ற முயற்சித்தவர் தான் உமா பின் நாட்களில் அவரின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுத்து விலகிவிட்டார்.

பூஜையை முடித்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தவர் காப்பி மற்றும் காலை சிற்றுண்டியை தயார்படுத்தினார்.

வீட்டில் மொத்தமாக மூன்று படுக்கை அறைகள். ராகவரின் அப்பா காலத்து வீடு என்பதால் கொஞ்சம் பழமை தன்மை சேர்ந்து இருந்தது.

வீட்டு அறைகளின் வாசல் கூடத்தை ஒட்டியே இருந்தது.

பூஜை அறையின் எதிரில் இருக்கும் அறையின் கட்டிலில் இரண்டு ஆண் மகன்கள் குப்புற படுத்து உறக்கத்தில் இருந்தனர்.

அவர்கள் வேறு யாருமில்லை உமா ராகவன் தம்பதியரின் புதல்வர்கள், கதிர்வேல் மற்றும் அன்பு செல்வன்.

கதிர்வேல் 30 வயது கடந்தும் திருமணத்தை தள்ளி போட்டுக்கொண்டு இருப்பதால் இளையவன் அன்புக்கும் இன்னும் வரன் ஏதும் அமையவில்லை.

கதிர்வேல் கல்லூரி முடித்ததும் ஒரு தனியார் கம்பெனியில் ஐந்து வருடங்கள் பணிபுரிந்தான். அதில் வந்த சம்பளத்தை சேர்த்து வைத்து தொழில் தொடங்க போவதாக வீட்டில் சொன்னதும் ராகவன் அதை கடுமையாக எதிர்த்தார்.

அப்பாவின் பேச்சை தட்ட முடியாமல் அவன் அல்லாாடிக் கொண்டிருந்த வேளையில் அவன் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு அவனுடைய பெயரில் நிலத்தை வாங்கி போட்டிருந்தார் ராகவன்.

தந்தையின் செயலில் கோபம் வந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாத நிலைமையில் இருந்தவன் பண உதவிக்காக வங்கிகளை நாட தொடங்கினான்.

வங்கிக் கடன் வாங்க லோ லோ என்று அலைந்து கஷ்டப்பட்டவன் எப்படியோ ஒரு தொழில் தொடங்கினான். அதில் இவனோடு இணைந்து நடத்திய இவனின் நண்பன் காசை ஏமாற்றி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.

மறுபடியும் பூஜ்ஜியத்தில் வந்து நின்றவனுக்கு அடுத்து என்ன செய்வதென்றே புரியவில்லை. வேலைக்கு செல்லவும் அவன் மனம் அவனுக்கு இடம் கொடுக்கவில்லை. முதல் செய்த தொழிலில் பார்த்த லாபம் அவனை திறமையானவன் என்று சொல்வதற்கு சான்றாக இருக்க பண உதவி இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது தவித்தான்.

மூன்று வருடமாக மறுபடியும் வங்கியில் கடன் வாங்க முயற்சிப்பவனுக்கு உதவி செய்யத்தான் ஆள் இல்லை.

ராகவனும் உமா தேவியும் மத்திய வகுப்பினர் அரச பள்ளியில் ஆசிரியராக இருவரும் பணிபுரிந்தனர். மகன் படும் கஷ்டங்களை பார்த்து உதவ நினைத்தாலும் அவனின் வருங்காலத்தை கணக்கில் கொண்டு பணரீதியாக எந்த உதவியும் செய்யவில்லை.

ஐந்து வருடங்களாக கதிர் சேர்த்து வைத்திருந்த காசில் வீட்டு செலவுக்கு கூட இருவரும் எடுத்ததில்லை. அவனின் மொத்த உழைப்பையும் தொழிலில் போட்டு நஷ்ட பட கூடாது என்றே அந்தப் பணத்தை அவனிடம் கொடுக்க மறுத்தனர்.

அதற்கேற்றார் போல் கதிரின் நண்பனும் அவனை ஏமாற்றி இருக்க அவர்களின் முடிவில் இன்னும் உறுதியோடு இருந்தனர்.

தொழில் செய்ய வேண்டும் முன்னேற வேண்டும் என்று தினமும் முயற்சி செய்து கொண்டிருப்பவனுக்கு எங்கிருந்து காதல் கல்யாணம் செய்ய நேரம் இருக்கும்.

ஒரு வாரத்துக்கு முன் கதிரிடம் அவனுக்கு திருமணம் செய்ய பெண் பார்ப்பதாக கூறவும் வீட்டினரோடு சண்டை போடத் தொடங்கி விட்டான்.

“இப்போ எனக்கு கல்யாணம் அவசியமா? இன்னும் நான் செட்டில் ஆகவே இல்லை. போன பிசினஸ்ல வாங்கின லோனையே போன வருஷம் தான் கட்டி முடிச்சேன். இப்போ மறுபடியும் லோன்னு போய் நிக்கிறப்போ எவனும் உதவி பண்ண மாட்டேங்குறான். நீங்களும் என்னை நம்பி பணம் தர மாட்டீங்க. வெளியிலேயேயும் லோன் தர மாட்டான்னா நான் என்னதான் பண்றது. இதுல எனக்கு கல்யாணம் தான் ஒரு கேடு” என்று கூறி திருமண பேச்சை ஒரேடியாக நிறுத்தி விட்டான்.

இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது அன்புதான். அன்புச்செல்வன் கல்லூரி முடித்ததும் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தவன் கை நிறைய சம்பாதித்து வீட்டிற்கு கொடுத்தான். அவன் அண்ணன் போல் தொழில் செய்ய வேண்டும் அதிக அளவு லாபம் ஈட்ட வேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லாதவன். கதிரை காரணம் காட்டி அவனுக்கு திருமணம் தள்ளி போக “அண்ணன் 32 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறான். அவனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று அக்கறை உங்களுக்கு இல்லையா?” என்று அவன் சொன்னதை கேட்டு தான் இந்தத் திருமண பேச்சை ஆரம்பித்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக கதிரே தனக்கு திருமணம் வேண்டாம் எனக் கூறுவான் என்று அன்பு கனவிலும் யோசிக்கவில்லை.

அந்தக் காட்சி கனவில் வந்து போக எரிச்சலோடு கட்டிலில் எழுந்து அமர்ந்தான் அன்பு.

அருகில் படுத்து இருந்த அண்ணனை பார்த்து, “நீ எல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா? 32 வயசாகியும் நீயும் கல்யாணம் பண்ற இல்ல, என்னையும் கல்யாணம் பண்ண விட மாட்டேங்குற. இந்த வருஷம் எனக்கு 30 ஆக போகுது. அதுக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணனும்னு பார்த்தா இந்த ஜென்மத்துல பண்ண மாட்ட போல. ஒருவேளை ரட்டன் டாட்டா மாதிரி வரணும்னு நினைக்கிறயோ... டேய் அண்ணா அப்படி ஏதாவது ஐடியா இருந்தா இப்பவே குழி தோண்டி புதைச்சுடுடா. உனக்கு கல்யாணம் பண்ணா தான் எனக்கு கல்யாணம் நடக்கும். அந்த ஒரு காரணத்துக்காக தயவு செஞ்சு கல்யாணம் பண்ணிக்கோடா” என்று தூக்கத்தில் இருக்கும் அண்ணனிடம் கெஞ்சியவன் வேலைக்கு செல்ல தயாராகும் பொருட்டு குளியலறைகுள் புகுந்து கொண்டான்.

அன்பு குளித்து முடித்து வெளியில் வரவும் கதிர் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளவும் சரியாக இருந்தது.

இருவரும் தயாராகி கூடத்துக்கு வர சாப்பாட்டு மேசையில் சிற்றுண்டி எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் உமா.

மகன்கள் இருவரும் அமர்ந்ததும் கணவரிடம் வந்தவர், “நீங்களும் வந்து சாப்பிடுங்க” என்று அழைத்தார்.

மகன்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இல்ல பிள்ளைகளுக்கு கொடு. நான் அப்புறமா சாப்பிடுறேன்” என்று கூறி அறைக்குள் நுழைந்து கொண்டார்.

கதிர் அன்று சண்டை போட்டதற்குப் பின் வீட்டில் யாரும் சரியாக பேசிக் கொள்ளவில்லை. ஒரு வாரம் ஆகியும் தந்தை தன்னிடம் ஒழுங்காக பேசவில்லை என்று தெரிந்தும் தெரியாதது போல் இருந்தான்.

தனக்கென்ன வந்தது என்று சாப்பாட்டில் கவனமாக இருந்த கதிரைக் கண்டு கோபம் அடைந்த உமா, “கதிர் நீ பண்றது எல்லாம் சரியே இல்லை. உன் நல்லதுக்காக தானே அப்பா எல்லாம் பண்றாரு. பாவம் ஒரு வாரமா அவரோட மூஞ்சியே சரியில்ல. ஒரு வார்த்தை அவர்கிட்ட போய் பேசி புரிய வச்சா தான் என்ன. உன் நல்லதுக்காக தானே கல்யாணம் பண்ண சொன்னாரு” என்று அவர் பேசிக்கொண்டே செல்ல இடை மறித்தவன், “நீங்க சொல்றதுக்கு எல்லாம் இதுவரை நான் ஆமா சாமி போட்டுகிட்டு தான் இருக்கேன். ஆனா கல்யாணம் அந்த மாதிரி விஷயம் இல்லம்மா. என்னோட பிசினஸ் லோன் முதல் ரெடி ஆகட்டும். அதுக்கப்புறம் பொண்ணு பாக்க ஆரம்பிங்க. நான் ஒன்னும் சன்னியாசியா போக போறேன்னு உங்க யார்கிட்டயும் சொல்லலையே. எனக்கும் கல்யாணம் பண்ணனும் குழந்தை குட்டி பெத்துக்கணும்னு ஆசை இருக்குதான். கொஞ்சம் டைம் கொடுங்க” என்று தம்பியையும் அன்னையையும் பார்த்து கூறியவன் கையை கழுவிக்கொண்டு வெளியே செல்ல ஆயத்தமானான்.

அண்ணன் செல்வதை கண்டதும் பாதி சாப்பாட்டில் கையை கழுவிக்கொண்டு அரக்க பறக்க அவன் பின்னே ஓடினான் அன்பு.

கதிர் பைக்கில் அமர சென்ற சமயம், “அண்ணா நேத்து பைக் டயர் பஞ்சர் ஆயிடுச்சு. பஞ்சர் போடுறவர் நேத்து இல்லன்னு சொல்லி பைக் அங்கயே வச்சுட்டு வந்துட்டேன். இன்னிக்கு ஒரு நாள் பைக் கொடுண்ணா ப்ளீஸ்” என்று கேட்டான்.

சாவியை அன்பிடம் கொடுத்தவன் அவனை முறைத்து பார்த்து விட்டு, “இனிமே தூங்கிட்டு இருக்கும்போது பக்கத்துல வந்து பேசி புலம்பிட்டு இருந்தேனா எதைக் கொண்டு அடிப்பேன்னு எனக்கே தெரியாது” என்று ஒற்றை விரல நீட்டி எச்சரித்தவன் கையில் கோப்போடு நடந்து செல்ல தொடங்கினான்.

“நம்ம சொன்னதெல்லாம் கேட்டு டென்ஷன் ஆகி இருப்பானோ. சரி ஈவினிங் வரும்போது பாத்துக்கலாம். இன்னும் அஞ்சு நிமிஷத்துல நான் கிளம்பல இன்னைக்கு நான் டெட் பாடி” என்று புலம்பிக்கொண்டு பைக்கை உயிர்பித்தான் அன்பு.

வீட்டிக்கு அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் வந்து நின்ற கதிர் காத்துக்கொண்டிருக்க, அவன் எற வேண்டிய பஸ்ஸும் கூட்டம் நிரம்பி வழிய வந்து நின்றது. அதில் கஷ்டப்பட்டு ஏறினான்.

கூட்டத்தில் கஷ்டப்பட்டு நசியாமல் கோப்பினை காப்பாற்ற தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் அதை வைத்திருக்கும் படி கூறினான்.

அதே நேரம் அவன் அலைபேசி அழைக்க எடுத்துப் பார்த்தான். கதிருடைய பள்ளி நண்பன் அசோக் அழைத்துக் கொண்டிருந்தான். அசோக் வங்கியில் பணிபுரிகின்றான் நீண்ட நாள் கழித்து கதிரை அவன் சந்திக்கவும் கதிரும் தனக்கு வங்கி கடன் கிடைக்கவில்லை என்று புலம்ப உதவி செய்ய முன் வந்தான். கிட்டத்தட்ட இன்று வங்கி கடன் உறுதி ஆகிவிடும் என்ற நிலையில் கூறியிருக்கின்றான். அவன் அழைக்கின்றான் என்றதும் தாமதிக்காமல் அழைப்பை எற்றான்.

“சொல்லுடா. இன்னும் ஹாஃப் அன் அவர்ல அங்கு வந்துருவேன்” என்று கதிர் உற்சாகமாக கூற,

“மச்சான் வெரி சாரி டா. மேனேஜர் திடீர்னு அந்த லோனை அவருக்கு தெரிஞ்ச யாருக்கோ கொடுக்கணும்னு பேசிகிட்டு இருக்காருடா. நான் என்ன சொன்னாலும் இனிமேல் அவர் கேட்க மாட்டாருன்னு நினைக்கிறேன். நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா ஹெல்ப் பண்றேன் டா மச்சான்” என்று அசோக் கூறவும் ஒரு வார்த்தையும் பதில் அளிக்காமல் அலைபேசி இணைப்பை துண்டித்தவன் ஓடும் பஸ்ஸிலிருந்து இறங்கினான்.


பயணம் தொடரும்...

கருத்துக்களை கருத்து திரியில் சொல்லுங்க 💕💕💕

Thread 'பாதை நீ பதாரம் நான் - கருத்து திரி
 
Last edited:
அத்தியாயம் 02

பஸ்ஸிலிருந்து இறங்கியவனுக்கு கோபம், ஏமாற்றம், இயலாமை எல்லாம் சேர்ந்து அவனை சிந்திக்க விடாமல் செய்தது.

சாலையோரத்தில் ஒரு பெட்டிக்கடை தெரியவும் அங்கே சென்றான்.

“அண்ணே ஒரு ***” என்று சிகரெட்டின் பிராண்டை சொல்லி வாங்கியவன் பணத்தை கொடுத்தான். (புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு)

சிகரெட் ரெண்டு இழு இழுத்ததும் புகையை ஊதி தள்ளியவனின் உணர்வுகள் அவன் கட்டுக்குள் திரும்பி வந்தது.

நிதானமாக சிகரெட்டை புகைக்க தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து அவன் முன் ஒரு பெண் வேர்க்க விறுவிறுக்க வந்து நின்றாள்.

பளிச்சென்று முகம் மை தீட்டிய கண்கள் இடுப்புக்கு மேல் இருந்த கூந்தலை கிளிப்ல் அடக்கி இருந்தாள். மெரூன் நிற சுடிதாரில் இருந்தவள் துப்பட்டாவை மடித்து ஒரு பக்கமாக அணிந்து, தோளில் பேஜ் நிற ஹேண்ட் பேக் மாட்டி இருந்தாள். முகத்தில் அங்கங்கே வியர்வை துளிகள் பூத்திருந்தன.

அவள் கதிரை முறைத்து பார்க்க யார் இது என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் கையில் இருந்த கோப்பை கண்டதும் தான் செய்த காரியத்தை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான்.

பஸ்ஸில் கதிர் கோப்பை கொடுக்கவும் வாங்கி வைத்தவள் இறங்கும்போது தன்னிடம் மறக்காமல் எடுத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் தனது வேலையில் மூழ்கி போனாள்.

கதிர் ஓடும் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் கண்டக்டர், “யார்ரா இவன் சாவு கிராக்கி காலங்காத்தால” என்று எரிச்சலோடு சத்தமிட திரும்பிக் கதிர் நின்ற இடத்தை பார்த்தவளுக்கு அவன் அங்கு இல்லை என்றதும் பதட்டமாகி அவசரமாக கோப்பை பார்வையிட்டாள்.

கோப்பின் உள்ளே கதிர் அவனின் தொழில் சம்பந்தமான யோசனைகளும் அதில் எவ்வாறு லாபம் ஈட்டலாம் என்றும் எழுதி இருந்தது. கூடவே கதிரின் புகைப்படம் மற்றும் அவனின் சில ஆவணங்களும் இருந்தன.

அவன் வங்கி கடனுக்காக எழுதி இருந்த கடிதத்தையும் மேலோட்டமாக பார்த்தவள் உடனே எழுந்து கண்டக்டரிடம் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி நடக்கத் தொடங்கினாள்.

அவள் ஆவணங்களை பார்வையிட்டதில் சிறிது தூரம் பஸ் அவன் இறங்கிய இடத்திலிருந்து பயணப்பட்டு விட்டதால் அவன் இறங்கிய இடத்துக்கு மூச்சிரைக்க வேகமாக நடந்து வந்தாள்.

அந்த இடத்தில் அவன் இல்லை என்றதும் வேறு எங்கேயாவது அருகில் தென்படுகிறானா என்று விழியை சுழற்றி தேடியவளின் பார்வையில் விழுந்தான் கதிர்.

அவன் நிதானமாக புகைத்துக் கொண்டிருப்பதை கண்டதும் அவளுக்கு சினம் எழ முறைத்து பார்த்துக் கொண்டு அவன் முன்னே சென்று நின்றாள்.

அவளின் முறைப்பை கண்டதும் வாயிலிருந்து சிகரெட்டை கைக்கு மாற்றியவன் அவள் கடுமையாக முறைக்கவும் புகையை தரையைப் பார்த்து ஊதி விட்டு சிகரெட்டை காலில் போட்டு மிதித்தான்.

“ஃபைல்...” என்று அவன் கை நீட்ட கோப்பை கொடுக்காமல், “சார் படிச்சவர் தானே நீங்க. இப்படி பப்ளிக் பிளேஸ்ல ஸ்மோக் பண்ணிட்டு இருக்கீங்க? சரி அத விடுங்க ஓடுற பஸ்ஸிலிருந்து இப்படித்தான் இறங்குவீங்களா? உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தா பஸ்ஸில் இருந்த அத்தனை பேருடைய நேரமும் வேஸ்ட் ஆயிருக்கும். இந்த பீக் அவர்ஸ்ல வேற பஸ் கூட வராது சார். பைலையும் வாங்காமல் இறங்கிட்டீங்க.. உங்கள.. இப்ப பாருங்க உங்களால எனக்கு கிளாசுக்கு லேட் ஆகப்போகுது. மனுஷங்களோட டைமுக்கு கொஞ்சம் வேல்யூ குடுங்க சார்” என்று அவனுக்கு நீளமாக அறிவுரை கூறினாள்.

கதிருக்கு அறிவுரை கொடுத்து பழக்கமே தவிர யாரிடமும் அறிவுரை கேட்டு பழக்கம் இல்லை. அவன் அறிவுரை கூற தொடங்கினாலே அன்பு கையெடுத்து கும்பிட்டு ஓடிவிடுவான். இப்பொழுது தானே அந்த நிலைமையில் இருப்பதை நினைத்து பார்த்தவனுக்கு சிரிப்பு வந்திட அவன் உதட்டில் சிறுமுறுவல் பூத்தது.

அவன் சிரிப்பை கண்டதும், “என்ன சார் நான் உங்கள திட்டி கிட்டு இருக்கேன் சிரிக்கிறீங்க? பட், நீங்க ரொம்ப திறமையானவர் தான். உங்களோட பிசினஸ் ஐடியா ரொம்பவே நல்லா இருந்துச்சு கண்டிப்பா லோன் கிடைக்கும்” என்றாள் அவனை பாராட்டும் விதமாக,

விரக்தியின் உச்சத்தில் இருந்தவனிடம் ஆறுதலாக அவள் பேச தன் கஷ்டத்தை மறைக்காமல் கூற தொடங்கினான்.

“ஐடியா நல்லா இருந்து மட்டும் என்னங்க பிரயோஜனம். இங்க திறமைக்கு மதிப்பே இல்லங்க. லோன் கேட்டு போனா கேரண்டி இருக்கா? சொத்து இருக்கா? எப்பவும் இதே தான் கேக்குறாங்க. ஏங்க இங்க ஒரு மனுஷன் திறமையை மட்டும் முதலீடா போட்டு எதையுமே சாதிக்க முடியாதா?பணக்காரங்க லோன் வாங்குனா குடுத்துறாங்க நம்ம கிட்ட தான் இங்க போ, அங்க வா, அந்த பைலை கொண்டு வா, இந்த டாக்குமெண்ட் வேணும், அந்த டாக்குமெண்ட் வேணும்னு உயிரை வாங்குவாங்க. கடைசில எல்லாமே சரியா வந்து கிடைக்கப் போற நேரத்துல எவனாவது வந்து குழப்பி விட்டுறாங்க” என்றான் விரக்தியாக,

”எத்தனை வருஷமா லோனுக்கு ட்ரை பண்றீங்க சார்”அவனுக்கு ஆறுதல் கூறுவதற்கு பதிலாக சம்பந்தமே இல்லாம கேள்வி கேட்டாள்.

”நான் ப்ரீவியஸா பண்ண பிசினஸ்க்கு லோன் எடுத்தேன் மேடம். லாஸ்ட் இயர் தான் கட்டி முடிச்சேன். இப்போ ஒன் இயரா தான் மறுபடியும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்” என்றான்.

தோளில் இருந்த கை பையை கழட்டி அதற்குள் இருந்த விசிட்டிங் கார்ட் ஒன்றை நீட்டினாள்.

அதை கையில் பெற்றுக் கொண்டவன் வாசிக்க அது ஒரு பேங்க் மேனேஜரின் விசிட்டிங் கார்ட் என அவனுக்கு புரிந்தது.

“ஷர்மிளா, அனுப்பினாங்கன்னு சொல்லி போய் மீட் பண்ணுங்க. கண்டிப்பா உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க” என்று கூறியவள்
அவன் அந்த கார்டை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ரோட்டில் போகும் ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டாள்.

அவள் எங்கே செல்ல வேண்டும் என்று கூறியதும் உடனே ஓட்டுனரிடம் அண்ணா அங்க போக எவ்வளவு ஆகும் என்று கேட்டான் கதிர்.

அவர் விலையை சொன்னதும் அவனே பணத்தை எடுத்து ஓட்டுனரிடம் நீட்ட, “இது என்ன? என்னை வேலைக்கு லேட்டான பாவத்திற்கான பிராயச்சித்தமா? இல்ல உங்களுக்கு உதவினத்துக்கான சன்மானமா? என அவள் கேட்க சிரித்துக் கொண்டே , “எப்படி வேணாலும் எடுத்துக்கோங்க” என்று அவன் கூறியதும் ஆட்டோ நகர தொடங்கியது.

விசிட்டிங் கார்டை பார்த்துக்கொண்டே ஆட்டோவை பார்த்தவன், “தேங்க்ஸ் ஷர்மிளா”என்று அவள் பெயரை மென்மையாக உச்சரித்தான்.

*********
பைக்கை வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு அவசரமாக அலுவலகத்துக்குள் நுழைந்தான் அன்பு.

அவனுக்கு ஒதுக்கப்பட்ட கேபினுக்குள் நுழைந்ததும் அவன் நண்பன் பிரகாஷ், “என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட” என்று கடிகாரத்தை பார்த்துக் கொண்டு கேட்டான்.

“சீக்கிரமா…இதுவே லேட்டு டா கீர்த்து வண்டிய பாத்த?” என்றான் கேள்வியாய்.

“ஆமாண்டா, இன்னைக்கு ஆபீஸில் முதல் ஆளாவந்ததே அவ தானே” என்று கூறி அன்பின் தலையில் இடியை இருக்கினான் பிரகாஷ்.

“போச்சு போ” என்று தலையில் கை வைத்தவன், “மச்சான் எனக்கு ஒரு உதவி பண்றியா டா?” என்று பிரகாஷிடம் கேட்டான் அன்பு.

“சொல்லுடா”

“என் கூட கேண்டீன் வரைக்கும் வாடா. கீர்த்தனாவை பாத்துட்டு வந்துடலாம்”

“டேய் உன் ஆள பார்க்கிறதுக்கு என்னை ஏன் டா கூப்பிடுற?”

அன்பு வேலை செய்யும் அலுவலகத்தில் மூன்று வருடங்கள் முன் வந்து சேர்த்தாள் கீர்த்தனா. அன்புக்கு பார்த்ததுமே கீர்த்தனாவை பிடித்து விட அவனுடைய மனதை மறைக்க இயலாமல் அவளிடம் தன் காதலை கூறிவிட்டான். ஆரம்பத்தில் அன்பின் மேல் அவளுக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. ஒரு ப்ராஜெக்ட்டில்இருவரும் சேர்ந்து வேலை செய்யும் போது மெல்ல மெல்ல அவளின் மனம் அவன் பக்கம் சாய தொடங்கியது. ஒரு வருடம் அவனை அலைய விட்டு அதன் பின்பே காதலை கூறினாள்.

அன்பும் கீர்த்தனாவும் காதலிப்பது வீட்டினருக்கு தெரியாது. ஆனால், அலுவலகத்தில் உள்ள அனைவருக்குமே நன்றாக தெரியும்.

“டேய் என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாதடா. அவ வல்லவன் படத்தில் வார 10 ரீமாசென்க்கு சமம் டா”

“யாரு நம்ம கீர்த்தனாவா?” என்றான் பிரகாஷ் நம்ப முடியாமல்.

“பின்ன, ரோட்ல போற யாரோவை பத்தியா சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்றான் கடுப்பாக,

”நீ என்னடா பண்ண?“

“ஒரு மாசமாவே எங்க ரெண்டு பேருக்கும் சண்டை டா. அவ வீட்ல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம். என்னை எங்க வீட்ல சொல்ல சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டு இருந்தா. அண்ணா இருக்கும்போது நான் எப்படி பண்ண முடியும்னு சொல்லி சொன்னேன். அப்ப அவர் கல்யாணத்துக்கு சீக்கிரம் நடத்துற வழிய பாருன்னு சொன்னா. நானும் கஷ்டப்பட்டு அம்மா அப்பாவ கன்வின்ஸ் பண்ணி அவனுக்கு பொண்ணு பாக்கலாம்னு பிளான் பண்ணிட்டு இருக்கும் போது கல்யாணமே வேணான்னு என் தலையில் குண்டை போட்டுட்டான் டா அவன்.

இது தெரிஞ்சு இவ பத்ரகாளி மாதிரி ஆடிட்டா. எனக்கு அன்னைக்குன்னு பாத்து ரோஷம் வந்துடுச்சா… வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் இவ போனையே நான் ஆன்சர் பண்ணல. நைட்டு லைட்டாசரக்கு அடிச்சிட்டு இருந்தேன் டா அப்போ னு பாத்து மறுபடியும் கரெக்டா கால் பண்ணிட்டா. ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கும் போது ஒரு ப்லொவ்ல பிரேக்கப் பண்ணலாம்னு சொல்லிட்டு போனை வச்சுட்டேன் மச்சான்.

இப்போ அவளை எப்படி ஃபேஸ் பண்றது தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் டா” என்றான் ஒன்றுமே தெரியாத பிள்ளை போல்.

“என்ன டா இப்படி பண்ணிட்ட” என்று பிரகாஷ் கூறிட அவன் கையைப் பிடித்தவன், “மச்சான் நீ தாண்டா ஹெல்ப் பண்ணனும்” என்று கெஞ்ச தொடங்கி விட்டான்.

“சரி வா” என்று கூறி நண்பனை கேண்டினுக்கு அழைத்து செல்ல வாசலிலேயே இவர்களை கண்டுவிட்ட கீர்த்தனா தன் விழிகளாலேயே அன்பை எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்பு அவளைக் கண்டதும் பிரகாஷின் பின் ஒளிந்து கொள்ள, ”நான் பார்த்துக்கிறேன் டா பயப்படாம வா டா“ என்று தனக்கு பின்னால் இருந்த அன்புவிடம் கூறியவன் திரும்பி கீர்த்தனாவை பார்க்க, அவளோ பத்ரகாளி அவதாரத்தில் பிரகாஷின் கண்களுக்கு காட்சியளிக்க தொடங்கினாள்.

பயத்தில் கை கால் நடுங்க கையெடுத்து கும்பிட்டு, “ஐயோ ஆத்தா நான் இல்ல” என்று கூறி ஓடிவிட்டான் பிரகாஷ்.

கண்ணை மூடி பிரகாஷின் பின் ஒளிந்து கொண்டிருந்தவன் யாரோ ஓடும் சத்தம் கேட்டு கண்ணை திறந்து பார்க்க தனக்கு முன்னால் அவன் இல்லை என்றதும் பயத்தில் வேர்த்து வடிய தொடங்கியது அவனுக்கு.

எச்சிலைக் கூட்டி விழுங்கியவன். ஐந்து அடி தூரத்தில் நிற்கும் கீர்த்தனாவிடம் செல்ல இரண்டு நிமிடம் எடுத்துக்கொண்டான்.

ஆமையை விட பொறுமையாக அவள் முன் வந்து அமர்ந்தான். உதடுகள் ரெண்டையும் ஃபெவிக்கால் போட்டு ஒட்டியது போல் திறக்க முடியாமல் கஷ்டப்பட்டவன் ஒரு வழியாக, “சாரி”என்ற வார்த்தையை கஷ்டப்பட்டு வாயை திறந்து அவன் கூறிய மறு நொடி கீர்த்தனாவின் வாய் பேசுவதற்கு பதிலாக அவளின் கை பேசிவிட்டு இருந்தது.

பயணம் தொடரும்...


கருத்துக்களை கருத்து திரியில் சொல்லுங்கள் 💕💕💕

thread 'பாதை நீ பதாரம் நான் - கருத்து திரி'
 
அத்தியாயம் 03

மிஞ்சி மிஞ்சி போனால் கெட்ட வார்த்தையில் திட்டுவாள் என்று நினைத்திருந்தவன் அவள் கை நீட்டவும் மிரண்டு விட்டான்.

அவள் அடித்த ஒற்றை அறையில் அவனின் பன்னு கன்னம் வீங்கி சிவப்பாக காட்சியளித்தது.

அவனை அறியாமல் அவளுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து “சாரி” என்றான்.

அன்பின் இயல்பே இதுதான். அவன் குடும்பத்தினர் மற்றும் கீர்த்தனா என்று அவனுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் மன்னிப்பு கேட்க தயங்கவே மாட்டான். அவர்களின் மீது அவனின் பேருக்கு ஏற்றார் போல் அன்பு அதிகமாகவே வைத்திருப்பான்.

சிரித்த முகமாகவே இருக்கும் அன்பு தன் முன்னால் சோக சித்திரமாக அமர்ந்திருப்பதை காண விரும்பாத கீர்த்தனா, “இட்ஸ் ஓகே” என்று கூறி அவன் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.

அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டு , “தயவு செஞ்சு நான் சொல்றத கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கோ அன்பு. வீட்ல ரொம்ப பிரஷர் பண்றாங்க கல்யாணம் பண்ணிக்க சொல்லி. நீ என்னடான்னா இன்னும்குழந்தை மாதிரி விளையாடிகிட்டு இருக்க. நமக்கு டைம் இல்ல. இன்னும் மூணு மாசம் தான் என்னால தாக்கு பிடிக்க முடியும் அதுக்கப்புறம் ரொம்ப கஷ்டம். சோ, நீ தயவு செஞ்சு உங்க அண்ணன் கல்யாணத்தைசீக்கிரம் முடிக்க வழியை பாரு” என்றாள் தன்மையாக.

அவள் கூறுவதற்கெல்லாம் ‘சரி சரி’ என்று தலையாட்டிக் கொண்டிருந்தவன் திடீரென, “ஆமா கோவம் வரும் போது எல்லாம் எத்தனை வாட்டி பிரேக் அப் பண்ணிக்கலாமுன்னு நீ சொல்லி இருக்க, இப்போ நான் ஒரு வாட்டி தெரியாம சொல்லிட்டேன். இந்த சின்ன விஷயத்துக்கா என்னை போட்டு அடிச்ச?” என்றான்.

சாந்தமாய் இருந்தவள் மறுபடியும் முறைத்து பார்க்க தொடங்கவும், “சத்தியமா எனக்கு தெரியல. ஏன் அடிச்சன்னு மட்டும் சொல்லு, ப்ளீஸ்” என்றான்.

“உன்னை யாருடா குடிச்சிட்டு எனக்கு கால் பண்ண சொன்னது. சரி எனக்கு கால் பண்ணது கூட பரவால்ல யாரு அந்த பக்கம் பேசுறாங்கன்னு கூட தெரியாமலா பேசுவ. அம்மா தான் ஃபோன ஆன்சர் பண்ணாங்க. நீ பேசின எல்லாத்தையும் அவங்க தான் கேட்டாங்க.

நல்லவேளை உன் மேல இருந்த கோவத்துல உன் நம்பர் டெலிட் பண்ணிட்டேன். வீட்ல நம்ம விஷயம் யாருக்கும் தெரியாது. உங்க அண்ணன் கல்யாணம் முடிஞ்சதும் சொல்லிக்கலாம்னு பொறுமையா இருந்தேன். நீ பேசுனது கேட்டுட்டு அம்மா வந்து என்கிட்ட பேசினாங்க “யாரோ ஒருத்தன் இப்படி கால் பண்ணி பேசுறான் நீ யாரைவது லவ் பண்ணுறியான்னு கேட்டாங்க. நீ குடிச்ச விஷயம் கூட அவங்களுக்கு தெரிஞ்சுருச்சு. அப்போ உன்ன பத்தி சொன்னா ரொம்ப தப்பா இருக்குமேன்னு ராங் நம்பர்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.

ஒரே ஒரு நல்ல விஷயம் நீ உன் பேரையும் என் பேரையும் மென்ஷன் பண்ணாம பேசினதால நம்ம ரெண்டு பேரும் தப்புச்சோம். இனிமே தயவு செஞ்சு குடிச்சிட்டு யாருக்கு போன் பண்ணி தொலைச்சுராத” என்று கூறினாள்.

தான் செய்த முட்டாள் தனமான செயலின் வீரியம் புரிந்ததும் மறுபடியும் மன்னிப்பு கேட்டான்.இருவரும் அலுவலக நேரம் ஆரம்பிக்கவும் அவரவர் இருக்கைக்கு சென்று வேலையை பார்க்க தொடங்கினர்.

மாலை ஆனதும் வீட்டுக்கு செல்ல தயாராகி கொண்டு இருந்தவளின் முன் வந்து நின்ற அன்பு, “வா, நானே உன்ன வீட்ல ட்ரோப் பண்றேன்” என்றான்.

லேப்டாப்பை மூடி பையில் வைத்துக் கொண்டு இருந்தவள், “உன் பைக் பஞ்சர் ஆச்சே அதுக்குள்ள சரி பண்ணிட்டியா என்ன?”என கேட்டாள்.

“அது அண்ணா..” என்று ஆரம்பித்தவன் சட்டென நிறுத்தி “ஏய் உனக்கு எப்படி தெரியும் என் பைக் பஞ்ச்ர் ஆயிடுச்சுன்னு?” என்று கேட்டான்.

நாக்கை கடித்துக் கொண்டவள், “அது…நான்தான் கோவத்துல உன் பைக் பஞ்சர் பண்ணிட்டேன்” என்றாள்.

அன்பும் கீர்த்தனாவும் ஒரே ஏரியாவில் அடுத்தடுத்த தெருவில் வசிக்கின்றனர். அன்பு கீர்த்தனாவின் எதிர் வீட்டில் வசிக்கும் அவன் நண்பனை ட்ராப் செய்ய வந்தபோது நண்பனின் அம்மா காபி குடிக்க அழைத்ததும் வீட்டுக்குள் சென்று விட்டான்.

வெளியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்த கீர்த்தனா எதிர்வீட்டின் வாசலில் அன்பின் பைக்கை காணவும் அவன் மேல் இருந்த கோபத்தில் யாருக்கும் தெரியாமல் பைக்கை பஞ்சர் செய்துவிட்டு வீட்டுக்குள் ஓடி விட்டாள்.

நடந்ததை கீர்த்தனா தன் வாயாலேயே கூறிட, “அடிப்பாவி உன்ன சும்மா விடமாட்டேன்” என்று கூறி அவளை துரத்த தொடங்க ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் அவனிடம் சிக்காமல் கேபினை சுத்தி சுத்தி ஓடிக்கொண்டிருந்தாள் கீர்த்தனா.

இருவருக்கும் சிறிது நேரத்திலே கலைத்து விட சிரித்துக் கொண்டே பைகளை எடுத்துக்கொண்டு வாகன இருப்பிடத்திலிருந்து பைக்கில் ஏறி வீட்டுக்கு பயணித்தனர்.

போகும் வழியில், “உங்க அண்ணனுக்கு இதுவரைக்கும் லவ்வே வந்ததில்லையா?” என்று தன் நீண்ட நாள் சந்தேகத்தை கேட்டாள்.

தன் தோளில் தாடையை வைத்து கேள்வி கேட்பவளைபார்த்து புன்னகைத்தவன், “ஏன் இல்ல வந்திருக்கே” என்றான்.

“எதே… உன் அண்ணன் லவ் பண்ணாங்களா? இதை இல்லையா நீ முதலில் சொல்லி இருக்கணும். அந்த பொண்ணு எங்க இருக்காங்க? ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்களா?“ என்று ஆர்வமாய் கேட்டாள்.

”ஏய் ஏன் ரொம்ப அவசர படுற. அவனுக்கு லவ் வந்திருக்குன்னு தான் சொன்னேன் தவிர அவன் ஒரு பொண்ண லவ் பண்ணினானு உன்கிட்ட சொல்லல. அவனுடைய லவ் அவன் பிசினஸ்” என்று கூறியவன் சிக்னலில் சிவப்பு விழ வண்டியை நிறுத்தினான்.

குழப்பமாய் கீர்த்தனா அவனைக் காண, “அண்ணாக்கு சின்ன வயசுல இருந்து பெரிய பிசினஸ்மேன் ஆகணும்னு ஆசை. ஆசைன்னு சொல்றதை விட வெறின்னு கூட சொல்லலாம். நல்லா படிச்சான். அவனோட பிசினஸ் ஐடியாஸ் எல்லாம் கேட்டு நானே பிரம்மச்சு போயிருக்கேன். என்கிட்ட மட்டும் அவ்வளவு பணம் இருந்துச்சுன்னு வை அவன்கிட்ட கொடுத்து உனக்கு என்ன பிசினஸ் வேணுமோ பண்ணிக்கோன்னு விட்டுருவேன். ஆனா, நானே மாச சம்பளம், அம்மா அப்பாவும் ரிட்டயர்ட் ஆயிட்டாங்க. என்னோட சம்பளத்தில் தான் ஃபேமிலியை ரன் பண்ணிட்டு இருக்கோம். இப்படி ஒரு சிட்டுவேஷன்ல என்னால ஹெல்ப் பண்ண முடியலன்றது ரொம்ப வருத்தமா இருக்கு” என்றவன் சிக்னல் பச்சை நிறம் மாறவும் வண்டியை உயிர்பித்து செலுத்தினான்.

அன்பின் பேச்சிலேயே அவன் அண்ணன் மேல் அவன் வைத்திருக்கும் பாசத்தை புரிந்து கொண்டவள், “ஏன் அன்பு, உனக்கு உன் அண்ணன் மேல கோபமே இல்லையா? நீ மட்டும் சம்பாதிச்சு வீட்டுக்கு கொடுக்கிற அவர் பாட்டுக்கு பிசினஸ்ன்னு போயிட்டு இருக்காரு உனக்கு அவர் மேல வருத்தம் இல்லையா?” என்று கேட்டாள்.

“நீ நினைக்கிற மாதிரி இல்லை என் அண்ணா. அவன் ஒன்னும் பொறுப்பில்லாதவன் கிடையாது கீர்த்து. வாழ்க்கையில ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கான். அவன் வேலைக்கு போயிட்டு இருந்த போது கூட அந்த பணத்தில் ஒரு பைசா எடுத்து செலவு பண்ண மாட்டான். ஆடம்பரம் அவனுக்கு சுத்தமா பிடிக்காது. தனக்குன்னு இருக்க ஒரு சின்ன ஆசைகள் கூட அவன் நிறைவேத்துனது கிடையாது.

நாளைக்கு அவன் பிசினஸ் கிளிக் ஆகி லட்ச லட்சமா, கோடி கோடியா சம்பாதிச்சா கூட எங்க கிட்ட கொடுத்து சந்தோஷப்படுவானே தவிர அவனுக்காக அவன் செலவு பண்ணிக்கவே மாட்டான். அதனால நீ அண்ணாவை அப்படி தப்பா நினைக்காதே” என்று கூறியவன் அவளின் தெருமுனையில் பைக்கை நிறுத்தினான்.

வண்டியிலிருந்து இறங்கியதும், “உங்க அம்மா உன்னையும் உங்க அண்ணனையும் ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்க. இந்த காலத்துல இப்படி அன்பா பாசமா அண்ணன் தம்பிங்க இருந்து நான் பார்த்ததே இல்லை. சீக்கிரமே உங்க அண்ணன் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி பெரிய ஆள் ஆகணும்னு நான் அந்த கடவுளை வேண்டிக்கிறேன்” என்றவள் அவனை பிரிய மனமே இல்லாமல் வீட்டை நோக்கி நடந்தாள் அவனின் இதய ராணி.

சூரியன் அன்றைய நாளின் பணியை முடித்து கிளம்பும் வேளையில் மொட்டை மாடியில் நின்று அதை ரசித்துக்கொண்டிருந்தான் கதிர்.

ஒற்றையடி பாதையில் பயணித்துக் கொண்டிருந்தவனுக்கு பல வருடங்கள் கழித்து அவன் பாதையில் வெளிச்சமும் பூக்களும் சேர்ந்தது போல் தோன்றியது.

ஷர்மிளா விசிட்டிங் கார்டில் இருந்த வங்கி விலாசத்திற்கு சென்றவன் மேனேஜரை சந்திக்க வேண்டும் என்று கூறினான். மேனேஜரிடம் ஷர்மிளா அனுப்பியதாக கூறியதும் அவனின் கோப்பை பார்வையிட்டு சீக்கிரமே லோனுக்கு ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

மேனேஜர் அவனிடம் பேசிய விதத்திலேயே கண்டிப்பாக வங்கி கடன் கிடைக்க உதவுவார் என நம்பினான் கதிர்.

இத்தனை நாள் பட்ட கஷ்டத்துக்கு கடவுளாக பார்த்து தனக்கு உதவி செய்யவே ஷர்மிளாவை அனுப்பி இருக்கிறார் என்று யோசித்துக் கொண்டே வீட்டின் மொட்டை மாடிக்கு வந்தவன் சூரிய அஸ்தமனத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனைப் போலவே டி-ஷர்ட்டும் லுங்கியும் உடுத்தி கையில் காபி கப்புகளோடு அருகில் வந்து நின்றான் அன்பு.

அன்பு நீட்டிய கப்பை வாங்கிக் கொண்டவன், “பைக் போய் எடுத்துட்டியா” என்று கேட்டான் கதிர்.

காபியை ஒரு மிடறு பருகி விட்டு, “ஆமா போய் எடுத்துட்டு வந்துட்டேன்” என்றான்.

“யாரு டா அந்த பொண்ணு லவ்வரா?“ என்று கதிர் கேட்டதும்,

“அது…” என்று இழுத்து கூற வந்தவன் அண்ணனின் பார்வையை கண்டதும் “ஆமா” என்று தலையாட்டியபடி அமைதியாக காபியை குடிப்பதில் கவனமானான்.

காபி குடித்து முடித்ததும், “இன்னைக்கு போன இடத்தில் சக்சஸ் ஆச்சா” என்று ஆர்வமாக அன்பு கேட்க,

“ரொம்ப பாசிட்டிவா தான் பேசினாங்க. கண்டிப்பா கிடைக்கும்னு நம்புறேன். இதை இப்போதைக்கு வீட்டில யார்கிட்டயும் சொல்லாத. லோன் கிடைச்சதும் சொல்லிக்கலாம். எனக்கு ஒரு டூ மந்த்ஸ் டைம் கொடு அதுக்குள்ள கண்டிப்பா லோன் வந்துரும். உன் லவ் மேட்டர் வீட்டுல சொல்லி சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன்” என்று கூறியவன் காபி குடித்து முடித்ததும் தம்பியின் கையில் இருந்த காலியான கப்பை சேர்த்து எடுத்துக்கொண்டு படியில் இறங்கி செல்ல அவன் சென்ற வழியை பார்த்துக்கொண்டு நின்றான் அன்பு.

வெளிப்படையாய் காட்டும் பாசத்தை விட ஒருவர் இன்னொருவருக்காக யோசித்து அவர்களின் நிலைமையை புரிந்து செயல்படுவதும் கூட ஒரு வித பாசம் தான்.


பயணம் தொடரும்...

கருத்துக்களை கருத்து திரியில் சொல்லுங்கள் 💕💕💕


Post in thread 'பாதை நீ பதாரம் நான் - கருத்து திரி'
 
Last edited:

Mathykarthy

Well-known member
அன்பு அண்ணனை நல்லா புரிஞ்சு வச்சிருக்கான்.... கதிரும்... 😌😌😌

அண்ணன் தம்பி பான்டிங் அருமை.... ❣️
 
அன்பு அண்ணனை நல்லா புரிஞ்சு வச்சிருக்கான்.... கதிரும்... 😌😌😌

அண்ணன் தம்பி பான்டிங் அருமை.... ❣️
ஆமா 😍😍
உங்க ஆதரவுக்கு நன்றி 💕💕💕💕
 
அத்தியாயம் 04

கரும்பலகையில் இடியம்ஸ் (idoms) என எழுதிவிட்டு தன் மாணவர்களை திரும்பிப் பார்த்தாள் ஷர்மிளா.

மற்றைய வகுப்புகளுக்கும் இவள் எடுக்கும் வகுப்புகளுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. இவள் வகுப்பில் 15 வயது முதல் 60 வயது வரை இருக்கக்கூடிய ஆங்கிலம் கற்க விரும்புவர்கள் இருந்தனர்.

ஒரு கையில் வெள்ளை நிற சாக் மறுக்கையில் டஸ்டர் வைத்துக்கொண்டு நின்றவள் மாணவர்களிடம், “இடியம்ஸ் னா என்ன?” என்று கேட்டாள்.

இதுவரை கேள்விப்பட்டதுமில்லை ஒரு அனுமானத்தில் அர்த்தம் கண்டுபிடித்து சொல்லும் அளவிற்கு அந்த சொல் புரியவுமில்லை.

மாணவர்கள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டு பின் தெரியவில்லை என்று தலையசைத்ததும் அவளே, “இடியம்ஸ் னா தமிழ் ல மரபுசொற்தொடர்கள். இந்த இடியம்ஸ் வர்ட் பை வர்ட் டிக்ஷனரி பார்த்தாலும் மீனிங் புரியாது. நம்ம சாதாரணமா சொல்லுற விஷியத்தை இன்னொரு மாதிரி கூட சொல்லலாம். உதாரணத்துக்கு இப்போ ஒருத்தர் அவசரப்பட்டு ஒரு வேலையை செய்துகொண்டு இருக்காரு னா அவர பார்த்து நம்ம என்ன சொல்லுவோம்?” என்று கேட்டாள்.

மாணவர்கள் மத்தியில் பல கைகள் உயரவும் அதில் ஒருவரை தேர்வு செய்தவள், “நீங்க சொல்லுங்க?” என்று நாற்பது வயது ஆணிடம் கூறினாள்.

அவர் உற்சாகமாக எழுந்து, “காம் டவுன்னு சொல்லுவோம் ஷர்மிளா” என்றார்.

“எக்ஸாக்ட்லி. திலீப் சார் சொன்ன மாதிரி சொல்லுவோம். தேங்க்யூ திலிப் சார் நீங்க உட்காரலாம்.” என்று அவள் கூறியதும் புன்னகையோடு அமர்ந்தார்.

தொடர்ந்து அவளே, “காம் டவுன் னு சொல்றதுக்கு பதிலா ஹோல்டு யூர் ஹார்ஸஸ் (Hold yours horses) னும் சொல்லலாம்” என்று கூறியவள் அதைக் கரும்பலகையிலும் எழுதினாள்.

“நீங்க எல்லாரும் இப்ப அதிகமா இங்கிலீஷ் படம் பாக்குறீங்க. அதுல எல்லாம் இந்த இடியம்ஸ் அதிகமா வரும். ஒரே விஷயம் தான் ஆனா அதை சொல்ற விதங்கள் வேறுபடும். இப்படி நான் இன்னைக்கு பத்து இடியம்ஸ் உங்களுக்கு பத்து சொல்லி தர போறேன்”என்று கூறி வகுப்பை நாற்பது நிமிடங்கள் நடத்தி முடித்தாள்.

வகுப்பு முடிந்து மணி 5.40 ஆனதும் அனைவரும் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தனர். அதில் சிலர் ஷர்மிளாவிடம் பாட சம்மந்தமான சந்தேகத்தை கேட்க முகம் சுளிக்காமல் நேரமெடுத்து அவர்களுக்கு கற்பித்து கொண்டிருந்தாள்.

“ஷர்மிளா, ஐ ஹவ் சம்திங் டு டெல் யூ னா ஐ ஹவ் எ ஃபிஷ் டு ஃப்ரை (I have fish to fry) தானே” என்று முப்பத்தைந்து வயது நிறைந்த இல்லத்தரசி விஜயா தன் சந்தேகத்தை கேட்டார்.

“கரெக்டா தான் சொல்றீங்க ஆனா அதுல ஒரு சின்ன மிஸ்டேக் இருக்கு. ஐ ஹவ் எ பிக் (Big) ஃபிஷ் டு ஃப்ரை. நீங்க ‘பிக்’ மிஸ் பண்ணிட்டீங்க விஜயா மேடம்” என்று அவள் கூறியதும் சின்ன பெண் போல் வெட்கப்பட்டவர், “நெக்ஸ்ட் டைம் இந்த மிஸ்டேக் விடாம பாத்துக்கிறேன்” என்று கூறி கிளம்பிவிட்டார்.

மாணவர்கள் அனைவரும் வகுப்பு விட்டு வெளியேறியதும் பையை எடுத்துக் கொண்டு இன்ஸ்டிட்யூட்டின் வாசலுக்கு வந்தாள் ஷர்மிளா.

ஏ என் எஸ் இன்ஸ்டிட்யூட்டில் (ANS institute) ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவள் தான் ஷர்மிளா. இங்கே பாடசாலை குழந்தைகளுக்கு மட்டும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தவள் குழந்தைகளின் பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் எடுக்க தொடங்கினாள்.

மற்ற வகுப்புகளை விட அந்த வகுப்புக்கு மாணவர்கள் அதிகமாக வர தொடங்கினர்.

இன்ஸ்டிட்யூட்டின் உரிமையாளர் கூட்டத்தை கட்டுப்படுத்த எண்ணி மாணவர்களை இரண்டு மூன்று பிரிவுகளாக மாற்றி அனைத்து வகுப்புக்கும் ஷர்மிளாவையே ஆசிரியராக நியமித்தார்.

பெற்றோருக்கான காலையில் இரண்டு வகுப்புகளும் மாலையில் ஒரு வகுப்புமாக நடைபெறும்.

காலை வகுப்புகளில் பெரும்பாலும் இல்லத்தரசிகள் வருவார்கள். மாலையில் நடக்கும் வகுப்புகளுக்கு ஆண் பெண் கலந்து இருப்பார்கள். காலை வகுப்புகளுக்கு வர முடியாத இல்லத்தரசிகளும் இந்த வகுப்பில் கலந்துக்கொள்வார்கள்.

ஷர்மிளா முதுகலை கல்வி ஆங்கிலத்தில் முடித்து வேலையில்லாமல் இருந்தபோது அவள் வேலைக்கு சேர்ந்த இடம் இந்த இன்ஸ்டிடியூஷன் தான்.

இன்ஸ்டிட்யூஷனில் அவளை பிடிக்காத ஆட்களே இல்லை. அனைவருக்குமே உதவும் மனப்பான்மை கொண்ட அழகிய பெண். அவள் முகம் மட்டுமல்ல அவளின் அகமுமே அழகுதான்.

8 வருடங்களாக இதே இன்ஸ்டிட்யூஷனில் தான் பணிபுரிகிறார். பல இடங்களிலிருந்து அவளின் திறமைக்கும் உழைப்புக்கும் இப்போதும் கூட வேலை வாய்ப்புகள் வந்த வண்ணமே உள்ளன. இருந்தாலும் தன்னை நம்பி படிக்க வரும் ஒவ்வொருவருக்காகவும் தனக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கின்றாள்.

வழமையாக அவளின் வகுப்பு தான் கடைசியாக முடியும். ஆறு மணிக்கு அவள் வெளியே வந்ததும் தான் செக்யூரிட்டி இன்ஸ்டிட்யூட்டின் கதவை அடைப்பார்.

அவள் வெளியே நிற்கவும் கதவை மூடிக்கொண்டு இருந்த செக்யூரிட்டி, “ டீச்சர், உங்க கிளாஸ் பார்த்து எனக்கு இங்கிலீஷ் கத்துக்கணும்னு ஆசையா இருக்குது. நானும் வரலாமா?” என்று கேட்டார்.

“கணபதி அண்ணா இது என்ன கேள்வி. கண்டிப்பா வாங்க உங்களுக்கு ஃப்ரீயாவே எடுத்திடறேன். உங்க ஷிப்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் எந்த பேட்ச் நடந்துட்டு இருக்குதோ அதுல நீங்களும் படிச்சுக்கோங்க”என்றாள்.

அவர் சிரித்த முகமாக, “நன்றி டீச்சர்” என்றார்.

இன்ஸ்டிட்யூட்டின் வாசலுக்கும் கேட்டுக்கும் பத்தடி தூரம் இருக்கும். வாசல் கதவை மூடுவதற்காக உள்ளே வந்த செக்யூரிட்டி இப்பொழுது கேட்டுக்கு செல்ல அவரின் பின்னால் வந்தாள் ஷர்மிளா.

கேட்டின் அருகே பைக்கில் ஒருவன் நிற்க அவனைக் கடந்து சென்றாள்.

ஷர்மிளா பைக்கை கடந்து சென்றதும் அந்த பைக்காரனும் அவள் பின்னாலேயே வந்தான்.

பஸ் ஸ்டாப் வரை அவளைப் பின் தொடர்ந்து வந்தவன் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு அவள் முன் வந்து நின்றான்.

பார்ப்பதற்கு வாட்ட சாட்டமான ஆளாக தெரிந்தாலும் இப்படி பெண்கள் பின்னால் சுற்றுகிறானே என்று நினைத்த ஷர்மிளா அவனை கண்டுகொள்ளாமல் பஸ் வருவதற்காக காத்துக் கொண்டு நின்றாள்.

அவன் நெருங்கி வருவது போல் தெரிந்ததும் எச்சரிக்கை உணர்வாக அவனை முறைத்துப் பார்த்தவள் குனிந்து அவளின் காலில் இருந்த செருப்பை பார்த்து மறுபடியும் அவனை முறைத்து வைத்தாள்.

அவள் பார்வையில் அர்த்தம் ‘நீ இன்னும் ஒரு அடி என்னை நோக்கி எடுத்து வைத்தால் என் செருப்பாலேயே உன்னை அடிக்க தயங்க மாட்டேன்’ என்று இருந்தது.

அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்ததும் கலகலவென சிரிக்க தொடங்கினான் அந்த ஆண்.

மானத்துக்கு பய்ந்து ஓடிவிடுவான் என்று அவள் நினைத்திருக்க அவனின் சிரிப்பு அவளைக் குழப்பியது.

குழப்பத்தோடு அவனை பார்த்தாள்.

“ஹாய். நீங்க மறந்துட்டீங்க நினைக்கிறேன்.ரெண்டு மாசத்துக்கு முன்னாடி மீட் பண்ணொமே” என்று கூறி அவளுக்கு தன்னை நினைவுபடுத்த முயற்சித்தான் அந்த ஆண்.

மறுபடி அவள் அவனை புரியா பார்வை பார்க்க, “பஸ்ல உங்க கிட்ட பைல் கொடுத்தேனே. அதுல கூட விஷுவலி சேலஞ்ச் இருக்கிறவங்களுக்காக ஸ்பெஷல் கெஜட் ஐடியா இருந்துச்சு” என்று அவன் கூறிக் கொண்டிருக்கையில் இடைமறித்தவள்

“ஞாபகம் இருக்கு… கதிர் ரைட்?” என்று கூறினாள்.

அவளை வித்தியாசமாக பார்த்து வைத்தவன்,“ஏங்க எல்லாருக்கும் பேஸ் தான் ஞாபகம் இருக்கும். உங்களுக்கு மட்டும் எப்படிங்க என் ஃபேஸ் மறந்துடுச்சு பட் என் பிசினஸ் ஐடியா ஞாபகம் இருக்கு”என்று கேட்டான்.

”ரொம்ப நல்ல ஐடியா அண்ட் யூனிக்காவும் இருந்துச்சு. அதனாலதான் என் மைண்ட்ல அப்படியே இருக்கு. ஆமா நீங்க எங்க இங்க?“ என்று கேட்டாள்.

தன் தொழில் யோசனையை அவள் பெருமையாக சொல்வதை சந்தோஷமாக கேட்டவன் அவள் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டதற்கு “உங்களை பார்க்க தான்” என்றான்.

“என்னையா?” என்று ஆச்சரியமாக கேட்டவள், “லோன் கிடைச்சிடுச்சா?”என்றாள்.

‘ஆம்’ என்று தலையாட்டியவன் பைக்கில் இருந்த ஸ்வீட் பாக்ஸை எடுத்து வந்து அவளின் முன் நீட்டினான்.

ஸ்வீட் பாக்ஸை திறந்து அவள் ஸ்வீட் எடுக்க போக, “ஏங்க ஃபுல் பாக்ஸ் உங்களுக்கு தான்”என்றான்.

“எனக்கு எதுக்குங்க ஃபுல் பாக்ஸ். எங்க வீட்ல நானும் என் தாத்தாவும் மட்டும்தான். அவர் சுகர் சாப்பிட மாட்டார். கிளாஸ் ஹவர்ஸ்ஸா இருந்தா ஸ்டுடென்ட்ஸுக்கு கொடுத்து இருப்பேன். அதுவும் இல்ல, அதனால ஒன்னு போதும்” என்று கூறி ஒரே ஒரு இனிப்பு துண்டை மட்டும் எடுத்துக்கொண்டாள்.

ஹேண்ட் பேக் பையில் பத்திரமாக இனிப்பை வைத்தவள். “இங்கு எப்படி வந்தீங்க?” என்று கேட்டாள்.

“பைக்ல தான்” என்று கதிர் கூறியதும் அவள் முறைத்துப் பார்க்க, “அன்னைக்கு ஆட்டோவில் ஏறும் போது இந்த பிளேஸ் தானே சொன்னீங்க. அது ஞாபகத்துல இருந்துச்சு அதான் இங்க வந்து உங்களுக்கு ஸ்வீட் கொடுத்துட்டு போலாமேன்னு வந்தேன்” என்றான்.

“எவ்ளோ நேரமா நிக்கிறீங்க?”

“ஒரு டூ ஹவர்ஸ்” என்றான் சாதாரணமாக.

”டூ ஹவர்ஸ்சா? உங்களுக்கு தான் என் பெயர் தெரியுமே உள்ள வந்து யாருகிட்டையாவது கேட்டு இருக்கலாமே”என்றாள்.-

“அதுல என்னங்க இருக்கு. எனக்கு லோனுக்கு ஹெல்ப் பண்ண உங்களுக்காக ஒரு டூ ஹவர்ஸ் வெயிட் பண்ண முடியாதா எனக்கு” என்று கூறியவன் அவளின் பஸ் வரவும் அவளிடமிருந்து விடைபெற்றான்.

பஸ்ஸில் ஏறி ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தவள் முகம் கை, கால் கழுவிக்கொண்டு கூடத்துக்கு வந்தாள்.

சமையலறையில் இருந்து கையில் தேநீரோடு கூடத்துக்குள் நுழைந்தார் ஆல்பர்ட்.

“தாத்தா ஏன் இப்ப அவசரப்பட்டு டீ போட்டு வந்தீங்க. நானே போட்டு குடிச்சிருக்க மாட்டேனா?” என்று தாத்தாவை கடிந்தவள் அவர் கொண்டு வந்து கொடுத்த தேநீரை பருகினாள்.

அவள் அருகிலேயே அமர்ந்து ஆல்பர்ட், “இதுல என்னமா இருக்கு. நைட் நீதானே சமைக்க போற” என்று கூறினார்.

ஆல்பர்ட் அவர்கள் 83 வயது என்று சொல்ல முடியாத அளவுக்கு சுறுசுறுப்பானவர். இந்த வயதிலும் மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் தன் வேலையை தானே செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.

ஆல்பர்ட் ரோஸி என்பவரை திருமணம் முடித்து அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். முதலில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு வருடம் கழித்து இன்னொரு பெண் குழந்தையும் பிறந்தது.

ஆண் குழந்தைக்கு ரிச்சர்ட் என்றும் பெண் குழந்தைக்கு புளோரா என்றும் பெயரிட்டார்.

ரிச்சர்ட் 25 வயதில் தன் காதலியான நான்சியை திருமணம் முடித்து அவருக்குப் பிறந்த குழந்தைதான் ஷர்மிளா.

ஷர்மிளாவுக்கு ஐந்து வயது இருக்கும் போது ஒரு ஆக்சிடென்டில் ரிச்சர்ட் இறந்துவிட நான்சி தான் குழந்தையை தனியாக வளர்த்து வந்தார்.

கணவர் இறந்த சோகத்தில் உடல் நிலையை சரியாக கவனிக்காத காரணத்தினால் ரிச்சர்ட் இறந்த இரண்டாவது வருடமே அவரும் உயிரிழந்தார்.

நான்சியின் பெற்றோர் குழந்தையை சரியாக கவனிக்காததால் அவர்களோடு சண்டையிட்டு ஷர்மிளாவை தங்களோடு கூட்டிக் கொண்டு வந்தனர் ஆல்பர்ட்டும் ரோஸியும்.

மகனின் மகளுக்கு அவர்களே எல்லாமாக ஆகினர்.

ஷர்மிளா காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போது அவளின் பாட்டி ரோஸியும் இறந்துவிட இப்பொழுது அவளுக்கென்று இருப்பது அவளின் தாத்தா ஆல்பர்ட் மட்டும்தான்.

இருவரும் இரவு உணவாக உப்புமா செய்து சாப்பிட்டவர்கள் அடுத்த நாள் ஆலயத்துக்கு காலையிலேயே செல்ல வேண்டுமென்று நேரத்திற்கே சென்று உறங்கினர்.

பயணம் தொடரும்...
 
அத்தியாயம் 05

ரோஸியின் நினைவு தினம் என்பதால் ஆலயத்துக்கு காலையிலேயே வருகை தந்திருந்த ரிச்சர்ட் ஷர்மிளா ஒன்றாக இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

அவர்களுக்கு இரண்டு இருக்கையின் பின்னால் அமர்ந்திருந்தார் ரிச்சர்டின் மகள் புளோரா.

ரோஸியின் இறப்புக்கு பின்னால் நடந்த சில கசப்பான நிகழ்வுகளினால் மகளிடம் பேசுவதை நிறுத்திவிட்டார் ரிச்சர்ட்.

ரிச்சர்ட் மிகவும் பாசமானவர் அமைதியானவர் இறை பக்தி உடையவர். அப்படி இருந்த போதிலும் அவருக்கு ஒருவரிடம் பேச பிடிக்கவில்லை என்றால் யார் வந்து சொன்னாலும் தனக்குப் பிடிக்காதவர்களோடு உரையாடவே மாட்டார்.

ஆனால் பெற்ற மகளே அந்த பட்டியலில் இணைந்து கொள்வாள் என்று அவருமே எதிர்பார்த்து இருக்கவில்லை.

ஷர்மிளா எவ்வளவு எடுத்துக் கூறியும் புளோராவை மன்னிக்கவும் பேசவும் ரிச்சர்ட் தயாராக இல்லை.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலியை சாக்காக வைத்துக் கொண்டு தந்தையை தூரத்திலிருந்தாவது பார்த்துவிட வேண்டும் என்று வந்துவிடுவார்.

இன்று தாயின் இறந்த தினம் என்பதால் கண்டிப்பாக தந்தை வருவார் என்று உறுதியாக தெரியும் மற்றும் வேறு சில முக்கியமான காரியங்களுக்காகவும் வருகை தந்திருந்தார் அவர்.

திருப்பலி முடிந்து கூட்டம் கலைய தாத்தாவின் கையை பிடித்து, “வாங்க தாத்தா நம்மளும் கிளம்புவோம். வீட்ல நிறைய வேலை இருக்கு. நாம அனாதை ஆசிரமத்துக்கு வேற போகணும்” என்று அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை கூறி அவரை அழைத்தாள்.

அவளின் கரத்தின் மேல் தன்னுடைய கரத்தை வைத்தவர், “என்ன அவசரம் பொறுமையா போகலாம். இன்னிக்கு அத விட ரொம்ப முக்கியமான ஒரு வேலை இருக்கு” என்று புதிராக பதில் அளித்தார் ரிச்சர்ட்.

“அதைவிட முக்கியமான விஷயமா என்னது?” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரின் அருகில் வந்து நின்றார் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜேக்கப்.

இருவரும் அமைதியாக இருக்க “என்ன தாத்தாவும் பேத்தியும் பேசிகிட்டு இருந்தீங்க நான் வந்ததும் பேச்சை நிப்பாட்டிடீங்க” என்று கேட்டார் அவர்.

“பெருசா ஒன்னும் இல்ல பாதர் வீட்டுக்கு கிளம்பலாம் வேலை இருக்குன்னு சொல்லிட்டு இருக்கா” என்றார் ரிச்சர்ட்.

“வீட்டுக்கு போறதுக்கு எதுக்கு இவ்வளவு அவசரம். வாங்க உங்க ரெண்டு பேர் கிட்டயும் முக்கியமான ஒரு விஷயம் பேசணும்” என்று ஆலயத்தோடு ஒட்டி இருக்கும் அவரின் அறைக்கு இருவரையும் அழைத்து சென்றார்.

பாதர் ஜேக்கப்பின் அலுவலக அறையில் அவருக்காக காத்திருந்த புளோராவை கண்டதும் ரிச்சர்ட் முகத்தை திருப்பிக் கொண்டார்.

தந்தையை கண்டதும் இருக்கையில் இருந்து தானாக எழுந்து நின்று கொண்டார் புளோரா.

ரிச்சர்ட்டின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருந்த ஜேக்கப், “குடும்ப பிரச்சினை எல்லாம் வீட்டோட வச்சுக்கோங்க ரிச்சர்ட். இப்ப வந்து உட்காருங்கள்” என்று புளோராவின் அருகில் இருக்கும் இருக்கைகளை காட்டி கூறினார்.

இதுதான் சந்தர்ப்பம் என்று ஷர்மிளா புளோராவின் அருகில் இருக்கும் இருக்கையை தவிர்த்து விட்டு மற்ற இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ள ரிச்சர்ட் அவரின் மகளின் அருகே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

பேத்தியை முறைத்துக் கொண்டு இருக்கை சென்று அமர்ந்தவர், “சீக்கிரம் விஷயத்தை ஷர்மிளா கிட்ட சொல்லுங்க பாதர். வீட்ல நிறைய வேலை இருக்கு” என்று இவ்வளவு நேரம் சாந்தமாக இருந்தவர் எரிச்சலாக கூறினார்.

பங்குத்தந்தை ஆலயத்தில் தனக்கு உதவி செய்யும் ஒரு குட்டி பையனை அழைத்து, “வெளியில இருக்க அந்த அங்களை கூட்டிட்டு வா” என்று கூறினார்.

“சரி ஃபாதர்” என்று கூறிய அந்த சிறுவன் வெளியே ஓடி சென்று யாரையோ கையோடு கூட்டிக்கொண்டு வந்தான்.

சிறுவன் அழைத்து வந்த நபர் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருந்தான்.

ஷர்மிளாவுக்கு அவனைக் கண்டதும் ஏதோ புரிவது போல் தோன்ற அறையில் இருந்த அனைவரையும் முறைத்து பார்த்தாள்.

அவள் முறைப்பைக் கண்டதும் சிரித்துக் கொண்டே பாதர் ஜேக்கப், “நீ புத்திசாலின்னு நான் அடிக்கடி உங்க தாத்தா கிட்ட சொல்லிக்கிட்டு இருப்பேன். அதை நிரூபிச்சுட்ட” என்றவர் தொடர்ந்து பேசினார்.

“இது ஜான் மெக்கானிக்கல் இன்ஜினியர் படிச்சிட்டு. ஹூண்டாய் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்க்கிறான். நல்ல பையன். எந்த கிட்ட பழக்கமும் இல்லை. இவன் தங்கச்சிகளுக்கெல்லாம் கல்யாணத்தை முடிச்சிட்டு தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இருந்ததால இவ்வளவு நாள் கல்யாணத்தை தள்ளி போட்டான். எனக்கு நெருங்கின சொந்தம்” என்று அவனைப் பற்றிய முழு விபரத்தையும் கூறி முடித்தார்.

“என்னை பத்தி” என்று ஷர்மிளா ஆரம்பிக்க, “அதுவும் சொல்லிட்டேன். இவனுக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல” என்றார் ஜேக்கப்.

நிலைமை கை மீறி போவதை உணர்ந்த ஷர்மிளா அவர்கள் வேகத்தை கண்டு பயந்தாள், “நான் அவர் கிட்ட தனியா பேசணும்” என்று கூறினாள்.

ஜான் தானே முன்வந்து, “கண்டிப்பா பேசலாம். நான் பேசிட்டு வாரேன் பாதர்” என்று ஜேக்கப்பிடம் கூறி அவன் அறையை விட்டு வெளியேற அவன் பின்னோடு சென்றாள் ஷர்மிளா.

இருவரும் வெளியேறியதும் புளோராவும் ரிச்சர்ட்டும் பங்குத்தந்தையை புரியாமல் பார்க்க,

அவரோ, “சரி அடுத்த மாப்பிள்ளை பார்க்கிறேன்” என்று கூறினார்.

இப்படியும் கொஞ்ச நேரத்தில் வந்து இந்த கல்யாணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று ஜானை எப்படியாவது கூற வைத்து விடுவாள் ஷர்மிளா என்று எல்லோருக்கும் புரிந்தது இருந்தும் ஒரு சிறு நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் நினைத்தது போலவே அறைக்குள் வந்த ஜான், “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை” என்று நாகரீகமாக தன்னுடைய விருப்பமின்மையை கூறிவிட்டு கிளம்பினான்.

ஒன்றுமே நடவாதது போல் மறுபடியும் அறைக்குள் நுழைந்த ஷர்மிளா, ”வேற ஏதாச்சும் பேசணுமா பாதர்” என்று கேட்டாள்.

அவள் முகத்தை பார்த்து அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவர் அறையிலிருந்து அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

ரிச்சர்ட் ஒன்றுமே பேசாமல் வீட்டுக்கு நடையை கட்ட அவர் பின்னால் செல்ல தொடங்கிய ஷர்மிளாவை ஜேக்கப் பாதரின் குரல் தடுத்து நிறுத்தியது.

“ஷர்மிளா கொஞ்சம் இங்க வா” என்று அழைத்தார்.

அவளுக்கு கைகுழந்தையாக திருமுழுக்கு கொடுத்ததில் இருந்து ஷர்மிளாவை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஜேக்கப்.

ரிச்சர்டின் குடும்பத்தினருக்கு ஜேக்கப் பாதர் ஒரு முக்கியமான நபர். அவர்கள் வீட்டில் எந்த நல்ல காரியமும் அவர் இல்லாமல் நடந்தது கிடையாது.

பல ஆலயங்களுக்கு அவர் பங்குத்தந்தையாக மாற்றலாகி சென்றபோதும் அவரோடு தொடர்பிலேயே இருந்து கொண்டனர்.

அதிர்ஷ்டவசமாக சில வருடங்களுக்கு முன் மறுபடியும் அதே ஆலயத்துக்கு அவர் பங்குத்தந்தையாக வரவும் ஷர்மிளாவின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

ஜேக்கப்புக்கும் ஷர்மிளா என்றால் ஒரு தனி பிரியம். தான் முதலில் திருமுழுக்கு கொடுத்த குழந்தை அவள் தான் என்பதால் கூட இருக்கலாம்.

ஷர்மிளா அருகில் வந்ததும் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “உன் தாத்தா மறுபடியும் புளோரா கிட்ட பேசுறது உன் கையில தான் இருக்கு. இப்படியே நீ காலம் பூரா இருந்தா அதுல யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. சீக்கிரமே ஒரு நல்ல முடிவு எடு” என்று கூறினார்.

அவர் முகத்தை நேராக பார்த்தவள், “நான் நிம்மதியா இருக்குது உங்களுக்கு பிடிக்கலையா?” என்று கேட்டாள்.

“நீ நிம்மதியா இருக்கிறதை விட. நீ சந்தோஷமா வாழனும்னு நான் நினைக்கிறேன்” என்று அழுத்தமாக கூறியவர் மற்ற வேலைகளை பார்க்கச் சென்றார்.

அவர் கூறியதன் அர்த்தம் புரிந்ததும் ஒரு பெருமூச்சை விட்டவள் சோகச்சித்திரமாக நின்று கொண்டிருந்த புளோராவின் அருகே சென்றாள்.

“இப்ப என்ன நடந்துச்சுனு சோகமா மூஞ்சியை இப்படி தூக்கி வெச்சிட்டு இருக்கீங்க” என்று அவரிடம் கேட்டாள்.

“ஏன் உனக்கு தெரியாதா?” என்றார் கோவமாக,

“சரி தெரியும். சாரி. வாங்க வீட்டுக்கு போகலாம்” என்று கூறி அவரின் கையை பிடித்து கொண்டாள்.

அவர் அசையாமல் நிற்கவும், “உங்க யாருக்குமே என்னோட விருப்பம் என்னோட ஆசை எதுவுமே முக்கியம் இல்ல இல்லையா?” என்று கேட்டு வராத கண்ணீரை துடைப்பது போல் நடித்தாள்.

அவளின் நடிப்பை உண்மை என்று நம்பி, “அப்படி எல்லாம் இல்ல. எனக்கு உன்னோட விருப்பம் உன்னோட ஆசை இருந்தா முக்கியம்” என்று கூறியவர் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி ஷர்மிளாவோடு சேர்ந்து நடந்தார்.

வீட்டுக்கு வந்ததுமே மனைவியின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தவர் காலையில் அவரின் காதல் மனைவி ரோஸிக்காக வாங்கிய பூ மலர்களையும் புகைப்படத்துக்கு முன் வைத்தார் ரிச்சர்ட்.

அனாதை ஆசிரமத்திற்காக மதிய உணவை தாங்களே இன்று சமைத்து தருவதாக கூறியதால் அந்த வேலையே அவர் ஆரம்பிக்க அவரோடு இணைந்து கொண்டாள் ஷர்மிளா.

ஓரமாக நின்று கொண்டிருந்த புளோராவை இழுத்து வந்தவள், “உங்க அம்மாவுக்காக தான் சமைக்கிறோம். நீங்களே வரலைன்னா எப்படி. உங்க அம்மாக்கு உங்களை சமைக்க வேண்டாம்னு சொல்ற உரிமை இங்க யாருக்கும் இல்லை” என்று தாத்தாவை பார்த்துக்கொண்டு கூறினாள்.

அவள் கூறுவதை கேட்டதும் சமையலறையில் இருந்து வெளியேறினார் ரிச்சர்ட்.

அவர் கோபமாக செல்கிறாரோ என்று பயந்து புளோரா ஷர்மிளாவை பார்த்து, “நான் வருஷத்துல ஒருவாட்டி தான் இந்த வீட்டுக்கு வரேன். அன்னை கூடவா இப்படி நீங்க சண்டை போட்டுக்குவிங்க” என்றார் வருத்தமாக,

“நாங்க எப்போ சண்டை போட்டுக்கிட்டோம். தாத்தா சும்மா சீன் போடுறாரு. அவருக்கு வெங்காயம் வெட்டினதுல கண் எரிந்து இருக்கும். இதுதான் சாக்கு னு சொல்லி ஓடிட்டாரு” என்று கூறினாள்.

கட்டிங் போர்டின் மேல் பாதியாய் வெட்டி இருந்த வெங்காயத்தை பார்த்ததும் அவள் கூறுவது உண்மைதானோ என்று தோன்ற தொடங்கியது புளோராவுக்கு.

தாத்தாவை நினைத்து சிரித்துக்கொண்டேன் காய்கறிகளை நறுக்க தொடங்கினாள் ஷர்மிளா.

அவள் கூறியதைக் கேட்டு சமையல் அறையோடு ஒட்டி இருந்த குளியலறையில் முகம் கழுவிக் கொண்டிருந்த ரிச்சர்ட்டுக்கும் இதழில் புன்னகை மலர்ந்தது.

ஒருவழியாக சமைத்து முடித்து எல்லா உணவு பதார்த்தங்களையும் பேக் செய்து அனாதை இல்லத்துக்கு எடுத்து சென்றவர்கள் அங்கே இருக்கும் குழந்தைகளுக்கு தங்கள் கையாலேயே பரிமாறி அவர்களோடு சேர்ந்து உணவு அருந்திவிட்டு வீடு திரும்பினர்.

புளோராவும் மாலை ஆனதும் தனியாக தான் இருக்கும் வீட்டுக்கு மனமே இல்லாமல் கிளம்பி சென்றார்.

பயணம் தொடரும்...
 
Last edited:

Mathykarthy

Well-known member
ப்ளோரா தனியா தான் இருக்காங்களா... தாத்தாக்கு ஏன் பொண்ணு மேல கோபம்..... 🤔

ஷர்மி வர்ற மாப்பிள்ளை எல்லாம் ஓட விடுறா போல.....😄

சிஸ் தாத்தா பேர் ஆல்பர்ட்னு முன்னாடி எபில குடுத்துருக்கீங்க அப்பா பேர் ரிச்சர்ட் சொல்லியிருக்கீங்க ....

நைஸ் அப்டேட் 🥰🤗
 
ப்ளோரா தனியா தான் இருக்காங்களா... தாத்தாக்கு ஏன் பொண்ணு மேல கோபம்..... 🤔

ஷர்மி வர்ற மாப்பிள்ளை எல்லாம் ஓட விடுறா போல.....😄

சிஸ் தாத்தா பேர் ஆல்பர்ட்னு முன்னாடி எபில குடுத்துருக்கீங்க அப்பா பேர் ரிச்சர்ட் சொல்லியிருக்கீங்க ....

நைஸ் அப்டேட் 🥰🤗
தாத்தா பெயர் ஆல்பர்ட் ரிச்சர்ட்.
ரோஸி அவங்க பையனுக்கும் தன்னோட கணவர் பெயர் வைக்கணும் னு ஆசை அதனால தாமஸ் ரிச்சர்ட் னு பெயர் வச்சாங்க.

நான் அதை அடுத்த எபி ல சொல்ல நினைச்சேன் 😁💕

உங்களுக்கு வேற டவுட் இருந்தா கேளுங்க ❤️❤️
 

Mathykarthy

Well-known member
தாத்தா பெயர் ஆல்பர்ட் ரிச்சர்ட்.
ரோஸி அவங்க பையனுக்கும் தன்னோட கணவர் பெயர் வைக்கணும் னு ஆசை அதனால தாமஸ் ரிச்சர்ட் னு பெயர் வச்சாங்க.

நான் அதை அடுத்த எபி ல சொல்ல நினைச்சேன் 😁💕

உங்களுக்கு வேற டவுட் இருந்தா கேளுங்க ❤️❤️
ஓகே சிஸ் 👍❤️
 
அத்தியாயம் 06

“என்னம்மா இன்னைக்கு நீ தனியா வந்திருக்க?” என ஷர்மிளாவை பார்த்து கேட்டார் காய்கறி கடைக்காரர்.

வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்திருந்தாள் அவள்.

“தாத்தாக்கு லைட்டா உடம்பு சரியில்ல அதான் நான் வந்தேன்” என்று கூறிக்கொண்டே தக்காளிகளை கூடையில் எடுத்து போட்டு அவரிடம் கொடுத்தாள்.

தக்காளியின் எடையை பார்த்தவர் ஷர்மிளாவிடம் விலையை கூற அவளும் பணத்தை எடுத்து நீட்டினாள்.

காலையில் தனியாக சந்தைக்கு வந்தவள் வீட்டுக்கு தேவையான காய்கறி, மீன், முட்டை என்று எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வந்தவள் தக்காளி வாங்க மறந்திட தாத்தா அடிக்கடி வரும் கடையில் வாங்க வந்து விட்டாள்.

கல்லாவை திறந்து பார்த்துவிட்டு கடைக்காரர், “சில்லரை இல்லம்மா” என்று கூறினார்.

“அப்போ அந்த மீதி பணத்துக்கு கருவேப்பிலை கொத்தமல்லி தாங்க” என்று கூறினாள்.

வளமையாக வரும் வாடிக்கையாளர் என்பதால் சற்று அதிகமாகவே கொத்தமல்லி, கருவேப்பிலை எடுத்து அவர் கொடுக்க, “எதுக்கு இவ்ளோ தரீங்க. மீதி பணத்துக்கு எவ்வளவு முடியுமோ அது மட்டும் தந்தால் போதும்” என்றாள்.

அவளை ஆச்சரியமாக பார்த்த கடைக்காரர், “நீ என்னம்மா இப்படி இருக்க. அவன் அவன் காசு கொடுக்காம கருவேப்பிலை வாங்கிட்டு போவான். நீ கொடுக்குறத வேணான்னு சொல்றியே” என்றார்.

அவரைப் பார்த்து முறுவலித்தவள், “வீட்ல இருக்குறது ரெண்டே பேரு. நீங்க குடுக்குற கொத்தமல்லி, கருவேப்பிலையை நான் பயன்படுத்தி முடிக்கறதுக்குள்ள அது எப்படியும் கெட்டுப் போயிடும். இதுக்கு நீங்க வேற யார் கிட்டயாவது கொடுத்தா உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் நினைக்கிறேன். இதுல இன்னொரு விஷயமும் இருக்கு ஃப்ரீயா குடுத்தா நிறைய பேருக்கு அதோட அருமை புரியறதில்லை. நிறைய வீட்ல சாப்பிட்டு முடிச்சதும் பிளேட்ல கருவேப்பிலை, கொத்தமல்லி தான் அதிகமா குப்பைல போடுவாங்க” என்று அவள் கூறிட அதை ஆமோதித்தார் கடைக்காரர்.

“எதுக்குமா அடுத்த வீடு. என் வீட்டிலேயே இந்த கதை தான் நடக்குது. நீ சொன்ன மாதிரி இனிமேல் எல்லாருக்கும் இலவசமா கொடுக்கும்போது கொஞ்சமா தான் கொடுக்கப் போறேன்” என்று கூறியவர் தக்காளியை அவளிடம் கொடுத்துவிட்டு அடுத்த வாடிக்கையாளர்கள் வரவும் அவர்களை கவனிக்க தொடங்கினார்.

எல்லா பைகளையும் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கியவளை தடுத்து நிறுத்தியது ஒரு குரல்.

“எக்ஸ்யூஸ் மீ, வெயிட்” என்று சத்தம் கேட்கவும் நடையை நிறுத்தியவள் திரும்பிப் பார்க்க அங்கே கதிர் நின்று கொண்டிருந்தான்.

கருப்பு மற்றும் சிவப்பு நிற செக் ஷர்ட் அணிந்து இருந்தான் அவன்.

“ஹாய், நீங்க எங்க இங்க?” என்று உற்சாகமாக கேட்டாள்.

“அது ஒரு சின்ன வேலை விஷயமா வந்தேன்”என்று கூறியவன் அவன் கையில் இருந்து ஒரு அட்டையை நீட்டினான்.

அவன் கையில் இருந்ததை உன்னிப்பாக பார்த்தவள் கைநீட்டி வாங்கினாள்.

“இது எப்படி உங்ககிட்ட வந்துச்சு” என்று கேட்டாள்.

“நீங்க பர்ஸ்ல இருந்து காசு எடுக்கும் போது கீழே விழுந்துச்சு. நான் அதை தூரத்தில் இருந்து பார்த்துகிட்டு இருந்தேன். அதுதான் வந்து எடுத்து கொடுத்தேன்” என்றான்.

“இது யாருடைய ஐடி” என்று அவளின் கையில் இருக்கும் அட்டையை பார்த்துக் கொண்டு கேட்டான்.

“இது என் அப்பாவோடது” என்று கூறினாள்.

“அவரோட ஐடிய நீங்க ஏன் வச்சிருக்கீங்க அவர்கிட்டே கொடுக்கலாமே”

“இத நான் அவர் கிட்ட கொடுக்க முடியாது தூரத்தில் இருக்காரு” என்று கூறினாள் ஷர்மிளா.

சட்டென்று அவள் கூறிய பதிலை புரிந்து கொண்டவன், “சாரி” என்றான்.

“நீங்க சாரி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர் இறந்து ரொம்ப வருஷம் ஆச்சு”என்று கூறியவள் கையில் இருந்து பொருட்கள் எல்லாம் கண்களால் காட்டி, “ரொம்ப நேரமா இது கையில வச்சுட்டு நிக்க முடியல. வாங்க நடந்துக்கிட்டே பேசலாம்” என்று கூறினாள்.

அவளுடன் சேர்ந்து நடந்து படி கதிர், “உங்க அப்பானா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ?” எனக் கேட்டான்.

“தெரியல. அப்பா சாகும்போது எனக்கு அஞ்சு வயசு. அவர் ஒரு போட்டோகிராபர். வீட்ல இருக்கறதை விட வெளில தான் அதிகமா இருப்பாரு. எனக்கும் அவருக்குமான நேரங்கள் ரொம்ப கம்மி. சீக்கிரமே என்னை விட்டுட்டு போவாருன்னு நினைச்சு இருக்க மாட்டார். தெறிஞ்சு இருந்தா கண்டிப்பா என்கூட அதிக நேரம் இருக்க முயற்சி பண்ணி இருப்பாருன்னு நினைக்குறேன்”என்று கூறினாள்.

அவள் சிரமப்பட்டு பைகளை தூக்கிக்கொண்டு நடப்பதை கண்டவன், “ரெண்டு பேக்கு என்கிட்ட தாங்க நான் தூக்கிட்டு வரேன்” என்று கூறியவன் அவள் மறுத்தும் கேட்காமல் பைகளை தன் கைகளுக்கு மாற்றிக் கொண்டான்.

வேர்த்து இருந்த முகத்தை அவள் கைக்குட்டையால் துடைப்பதை பார்த்த வன்னம் , “நீங்க ரொம்ப வித்தியாசமா இருக்கீங்க ஷர்மிளா. அப்பாவ பிடிக்குமான்னு கேட்டா தெரியலைன்றீங்க. ரோட்ல யாருன்னே தெரியாத எனக்கு லோன் வாங்குறதுக்கு ஹெல்ப் பண்றீங்க. காய்கறி கடைக்காரருக்கு கூட ஐடியா கொடுக்குறீங்க” என்று தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறினான்.

“அப்படியா… ஆனா என்ன பொறுத்த வரைக்கும் நான் ஒரு சராசரி பொண்ணு தான்” என்றாள்.

“இந்த ஐடி கார்டு ஏன் நீங்க வச்சிருக்கீங்க” என்று கேட்டான்.

“நமக்கு நெருக்கமானவங்க இறந்து போயிட்டா அவங்க சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாம் தூக்கி போட மனசே வராது. டிரஸ் கூட ஈசியா தூக்கி கொடுத்திட முடியும் ஆனா அவங்கள சார்ந்த சில விஷயங்களை நம்மளால யாருக்குமே கொடுக்க முடியாது. இந்த ஐடி கார்டு மாதிரி. எங்க அப்பாவோட நிறைய திங்ஸ் எங்க வீட்ல இன்னும் இருக்கு. அவர் கடைசியா சாகப்போறதுக்கு முன்னாடி படிச்சது ஜெயகாந்தன் புக் அதுக்குள்ள ஒரு புக் மார்க் வச்சிருக்காரு. அதுக்கப்புறம் அந்த கதைல என்ன நடந்துச்சுன்னு அவருக்கு தெரியாதுல. அவர் கடைசியா படிச்ச அத்தியாயத்தை நான் அடிக்கடி படிப்பேன். அவரே என்கூட இருக்குற மாறி இருக்கும்” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்தவளின் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் சிந்தியது.

தன் மனதில் உள்ளதை எல்லாம் ஒரு அந்நியனிடம் கூறுகின்றோம் என்று அவளின் புத்திக்கு உரைக்க உடனே கண்களை துடைத்து கொண்டவள், “ஆஃப் ட்ராக் போய் பேசிட்டேன். சாரி நான் எமோஷனல் பர்சன் கிடையாது. ஆனா என்னையும் அறியாமல் வந்திடுச்சு” என்றாள்.

“ஐயோ நீங்க வேற. நான் தான் கேள்வி கேட்டு சும்மா இருந்த உங்களை அழ வச்சுட்டேன். சரி அதெல்லாம் விடுங்க உங்களுக்கு ஒரு காபி வாங்கி தரட்டுமா?“ என்று கேட்டான்.

கண்ணீர் வடித்ததை பார்த்து பாவப்பட்டு கேட்கிறானோ என்று நினைத்தவள் அவனை பார்த்து சிரித்து, “அதெல்லாம் ஒன்னும் வேணாம்” என்றாள்.

”ஐயோ நீங்க அழுததுக்காக காபி வாங்கி தரேன்னு சொல்லலங்க. அன்னைக்கு ஸ்வீட்டு கூட இரண்டு எடுத்துட்டு விட்டுட்டீங்க. லோன் கிடைக்குறதுக்கு நீங்கதான் முக்கிய காரணம். ட்ரீட் கொடுக்க முடியலன்னு எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதுக்காக தான் கூப்பிடுறேன்” என்றான்.

அவள் நம்பா பார்வை பார்க்க, “நிஜமாங்க” என்றான்.

‘அப்படியா’ என்பது போல ஒரு பாவனை செய்தவள் பக்கத்தில் ஒரு பழைய டீக்கடை தெரியவும் கதிரிடம் திரும்பி, “உங்களுக்கு இப்ப என்ன… எனக்கு ட்ரீட் கொடுக்கணும் அவ்வளவு தானே. அதோ இருக்கே அந்த டீ கடையில ரெண்டு சமோசா ரெண்டு பன் பட்டர் ஜாம் வாங்கி தாங்க. அது போதும்” என்று அந்தக் கடையை காட்டி கூறினாள்.

இருவரும் கடைக்குள் நுழைந்து சமோசா, பன் பட்டர் ஜாம் வாங்கிக் கொண்டிருக்கும் போது, “உங்களுக்கும் சேர்த்து வாங்கிக்கோங்க ரொம்ப நல்லா இருக்கும்” என்று கூறினாள் ஷர்மிளா.

கதிர் தனக்கு மட்டும் வாங்காமல் தன் வீட்டினருக்கும் சேர்த்து வாங்கிக் கொண்டான்.

கதிருக்கு முப்பத்திரண்டு வயது என்று தெரியும். அதனால் கண்டிப்பாக அவனுக்கு திருமணம் முடித்து மனைவி குழந்தைகள் இருக்கும் என்று நினைத்திருந்தாள் ஷர்மிளா.

கடையை விட்டு வெளியேறியதும், “இது உங்க வைஃபை சாப்பிட வைங்க கண்டிப்பா அவங்களுக்கு பிடிக்கும்” என்று கூறினாள்.

“வைஃபா? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலங்க” என்றான் கதிர்.

அவன் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியதும் இவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மை இல்லாமல் ஒரு வித விலகல் தன்மையோடு, “இங்கிருந்து என் வீடு பக்கம் தான் நானே போய்க்கிறேன்” என்று கூறி அவன் கைகளில் இந்த பையை கேட்டாள்.

“இவ்வளவு தூரம் வந்தாச்சு பரவால்ல நானே வீடு வரைக்கும் வந்து கொடுத்துட்டு போறேன்” என்று கூறினான்.

குழப்பத்துடனே அவன் கூறியதற்கு சரி என்று தலை அசைத்தாள்.

ஐந்து நிமிட நடையில் வீட்டை நெருங்கி விட்டனர்.

ஷர்மிளா வீட்டின் வாசலில் தாத்தா நிற்பதை கண்டதும் கதிரை வாசலோடு அனுப்பினாள் தவறாகிவிடும் என்று யோசித்தவள் அவனை உள்ளே அழைத்தாள்.

ஷர்மிளாவை கண்டதும் கேட்டின் கதவை திறந்து விட்ட ரிச்சர்ட் கதிரை பார்த்ததும் சினேகமாக புன்னகைத்து, “உள்ள வாங்க தம்பி” என்றார் தாத்தா.

கூடத்தில் உள்ள தொலைக்காட்சியின் அருகில் ஷர்மிளாவின் தந்தை வாங்கிய விருதுகள் ஷேல்ப்பில் நேர்த்தியாக அடுக்கப்பட்டு இருந்தன.

வாங்கி வந்த பொருட்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு ஷர்மிளா சமையல் கட்டுக்குள் நுழைய கதிரை கூடத்தில் அமர்த்தி அவனோடு பேசத் தொடங்கினார் ஆல்பர்ட் ரிச்சர்ட்.

கூடத்தை கதிர் சுற்றி பார்த்துக்கொண்டு இருக்க சமயல் கட்டில் இருந்து ஷர்மிளா, “கதிர் ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. காபி குடிச்சிட்டு போலாம்” என்று கூறினாள்.

சரி என்று கூறியவன் ஷேல்ப்பில் விருதுகளோடு இருந்த புகைப்படங்களையும் பார்க்க தொடங்கினான்.

வீட்டின் வாசலில் ஆல்பர்ட் ரிச்சர்ட், ரோஸி, தாமஸ் ரிச்சர்ட், நான்சி மற்றும் ஷர்மிளா இல்லம் என்று எல்லாருடைய பெயரும் போட்டு இருந்ததை பார்த்த கதிர், “உங்களுக்கும் உங்க பையனுக்கு ஒரே பெயரா சார்” என்று கூடத்தில் இருந்த தாமஸ் ரிச்சர்டின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டு கேட்டான் கதிர்.

கூடத்தில் இருக்கும் மேசையில் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்த மனைவி ரோஸின் புகைப்படத்தை பார்த்து ஒரு பெருமூச்சை விட்ட ரிச்சர்ட், “ஆமா தம்பி. அதுக்கெல்லாம் காரணம் என்னோட வைஃப். அவளுக்கு என்னோட பேர் எங்களுக்கு அப்புறமும் இந்தக் குடும்பத்துல இருக்கணும்னு ஆசைப்பட்டா அதனாலதான் என் மகனுக்கு தாமஸ் ரிச்சர்ட் னு பெயர் வச்சா. அவனுக்கும் பையன் பிறந்தா பெயர் வைக்கும் போதும் ரிச்சர்ட் னு சேர்த்து வைக்கணும்னு சொல்லி இருந்தா. கடைசில அவங்க எல்லாரும் என்ன விட்டுட்டு போயிட்டாங்க நான் எப்போ எனக்கு மறுபடியும் அவங்களை பார்க்க காலம் வரும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றார்.

கையில் காபி கப்புகளோட வந்த ஷர்மிளா தாத்தாவைப் பார்த்து முறைத்து விட்டு ஒரு கப்பை எடுத்து கதிரிடம் கொடுத்தாள்.

ஷர்மிளாவிடமிருந்து காப்பியை வாங்கிக் கொண்ட கதிர், “உங்க பாட்டி உண்மையிலேயே கிரேட். தன்னோட கணவர் மேல அவங்க எவ்வளவு அன்பு வச்சிருந்தா இவர் பெயரை தன்னோட மகனுக்கும் அவருக்கு அடுத்து அவரோட குழந்தைக்கும் வைக்கணும்னு ஆசைப்பட்டிருப்பாங்க” என்று கூறினான்.

அமோதிப்பாக தலையசைத்தவள், “காபி சூடு ஆறிட போகுது குடிங்க” என்றாள்.

காபி குடித்து முடிந்ததும் எழுந்து கிளம்ப ஆயுத்தமானவனின் கண்களில் பழைய காலத்து புகைப்படம் ஒன்று விழுந்து அவன் கவனத்தைக் கவர்ந்தது.

அந்தப் புகைப்படத்தில் இருந்த பெண் குழந்தையை எங்கேயோ பார்த்தது போல் தோன்றியது கதிருக்கு.

அந்தப் புகைப்படத்தை ஷர்மிளாவிடம் சுட்டி காட்டி, “இந்த போட்டோல இருக்க குழந்தை முகத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குங்க” என்று கூறினான்.

அந்த பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தில் நிற்பது தன்மகள் புளோரா என்று தெரிந்த தாத்தா ஷர்மிளாவை கேள்வியாக பார்த்தார்.

“அவங்க என் அப்பாவோட தங்கச்சி. அவங்க தான் உங்களுக்கு லோன் கொடுத்த பேங்க் மனேஜர்” என்ற தகவலையும் சேர்த்து கதிரிடம் கூறினாள்.

“ஓ அதுதான் எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சா?என்னங்க அப்பாவோட தங்கச்சின்னு சொல்லுறீங்க? அத்தைன்னு சொல்ல வேண்டியது தானே” என்று சிரித்தபடி கூறினான்.

அவன் கூறியதுக்கு சிரித்து சமாளித்தவள் அவன் கிளம்பவும் வழியனுப்ப வாசலுக்கு வந்தாள்.

போகும் முன் அவளின் அலைபேசி எண்ணை கதிர் கேட்க மறுக்க முடியாமல் கொடுத்தாள்.

நடப்பதை பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவுக்கு பல கேள்விகள் மனசுக்குள் எழுந்தன.


பயணம் தொடரும்...

ப்ளீஸ் கருத்து திரியில் உங்க கருத்துக்களை சொல்லுங்க. இந்த திரியில் கருத்து போட்டா கதை எடுக்கும் போது ரிமோவ் ஆகிடும்.

Thread 'பாதை நீ பதாரம் நான் - கருத்து திரி'
https://www.narumugainovels.com/threads/15772/
 
Last edited:
அத்தியாயம் 07

“உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க. வேலைக்கு போற திமிர்தானே உன்ன இப்படிப் பேச வைக்குது. இது சரிப்பட்டு வராது நான் பேசி வச்ச மாப்பிள்ளையோட உனக்குச் சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று கீர்த்தனாவைப் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தான் அவளின் தமையன் மாதவன்.

தங்கையின் காதல் விவகாரம் கேட்டதிலிருந்து அவளை முறைத்துக் கொண்டிருந்த விஜி மாதவன் மாப்பிள்ளை பார்த்து இருப்பதாகக் கூறவும் பதறி எழுந்தவள், “அண்ணா விளையாடுறியா இவ்வளவு நேரமா நான் என் வீட்டுக்காரர் தம்பிக்குத் தான் கீர்த்தனாவைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேசிக்கிட்டு இருக்கேன் இப்ப வந்து இப்படி சொல்ற” என்றாள் விஜி.

ராம் சித்ரா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் மாதவன், விஜி, கீர்த்தனா.

மாதவன் விஜி இருவரையும் விட கீர்த்தனா நீண்ட காலம் கழித்துப் பிறந்த குழந்தை.
அண்ணன் அக்கா கல்லூரியில் படிக்கும் போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

கல்லூரியில் உடன்படித்த ரமேஷை காதலித்த விஜி ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாள். விஜிக்கு குழந்தைகள் பிறந்த பின்பு தான் மறுபடியும் அவளை ஏற்றுக் கொண்டனர் பெற்றோர்.

மாதவனுக்கு விஜி ஓடிப்போய் திருமணம் செய்தத்தில் விருப்பமில்லை என்றாலும் அவளின் திருமணச் செலவு மிச்சம் என்று நினைத்துக் கொண்டான். கல்லூரி படிப்பை ஒழுங்காக முடிக்காத விஜி போல இல்லாமல் கஷ்டப்பட்டுப் படிப்பை முடித்த மாதவனுக்கு அரசு உத்தியோகமும் கிடைத்தது.

அரசு உத்தியோகம் கிடைத்த விஷயம் தெரிந்ததுமே சொந்தத்தில் நான் நீ எனப் போட்டிப் போட்டுக் கொண்டு மாதவனை மாப்பிள்ளை கேட்டு வந்தனர்.

ராம் அவரின் சொந்த அக்கா மகளை மகனுக்குத் திருமணம் செய்து வைக்க யோசித்துக் கொண்டிருக்கும் போது மாதவன் தன்னை மாப்பிள்ளை கேட்டு வந்தவர்களில் செல்வந்தரான அவர்களின் தூரத்து சொந்தத்தினர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்து வைக்கச் சொல்லிக் கூறி விட வேறு வழி இல்லாமல் மகனின் ஆசையை நிறைவேற்றினர்.

மாதவனின் மனைவி ரம்யா வசதியான குடும்பத்தில் பிறந்தவள். இரண்டு வருடம் பல்லைக் கடித்துக் கொண்டு மாமனார் மாமியாரோடு வாழ்ந்தவளுக்கு அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் தனிக் குடித்தனம் போக வேண்டுமெனக் கணவரிடம் அடம் பிடித்தாள். மாதவன் முடியாது என்று கூறி விடவும் என்ன செய்யலாம் என்று யோசித்தவள் கணவருக்கு பணத்தாசையை ஊட்டத் தொடங்கினாள்.

தனிக் குடித்தனம் சென்றால் தன் வீட்டில் வீடு வாங்கி தருவார்கள் கார் வாங்கி தருவார்கள் என்றெல்லாம் அவள் கூற மனம் மாறியவன் வயதான பெற்றோர் மற்றும் உடன்பிறந்த தங்கை என்று யாரையும் பற்றி யோசிக்காமல் தனிக்குடித்தனம் சென்று விட்டான்.

வீடு கார் எனச் சுகபோக வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தவன் பெற்றோர்க்கு வீட்டுச் செலவு கூட பணம் கொடுக்க தோன்றவில்லை.

ஆரம்பத்தில் மகன் பணம் கொடுக்காததால் சிரமப்பட்டு சித்ரா கணவரின் ஓய்வூதியத்தில் குடும்பத்தை நடத்துவதற்காகச் செலவுகளைக் குறைத்துக் கொண்டார்.

பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு நின்ற மகளைக் கல்லூரியில் சேர்க்க வழி தெரியாது தவித்த ராம் மனைவியின் தாலியையும் இன்னும் சில நகைகளையும் விற்று கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

உடன் பிறந்தவர்கள் நல்ல நிலைமையிலிருந்த போதும் தனக்கு உதவி செய்யவில்லை என்றதும் அவர்கள் மேலிருந்து கொஞ்சநஞ்ச பாசமும் கீர்த்தனாவுக்கு வற்றத் தொடங்கியது.

தான் படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்று முடிவு செய்தவள் ஒரு வெறியோடு படித்து முடித்துப் பிரபலமான ஐடி நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை செய்து கொண்டிருக்க இத்தனை வருடம் கண்ணுக்குத் தெரியாத தங்கை இருவர் கண்களுக்கும் தெரியத் தொடங்கினாள்.

கணவரின் தம்பிக்குத் தங்கையின் மேல் ஒரு கண் என்று தெரிந்து கொண்ட விஜி மனதுக்குள் பல கணக்குகள் போட்டுக் கொண்டாள். தங்கை நன்றாகச் சம்பாதிப்பதால் மாமியார் வீட்டில் வரதட்சணை கேட்க மாட்டார்கள் மற்றும் தங்கையே தனக்கு ஓரகத்தியாக வந்தால் தன் கையை எப்பொழுதுமே ஓங்கி நிற்கும் என்று பல கனவுகளுடன் கணவரின் தம்பிக்காகப் பெண் கேட்டு வந்தாள்.

அவளின் கெட்ட நேரத்துக்கு மாதவனும் தன்னுடன் வேலை பார்க்கும் ரஞ்சனை மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்து இருப்பதாகக் கூறவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

இதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது என்று முடிவு செய்த கீர்த்தனா ஒருவரைக் காதலிக்கிறேன் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடு வீட்டில் நின்று தைரியமாகக் கூறவும் மாதவன் அவளை வசைபாடத் தொடங்கி விட்டான்.

விஜியும் மாதவனும் மாறி மாறி தாங்கள் பார்த்த மாப்பிள்ளை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ன மூச்சு பிடித்துப் பேசிக் கொண்டிருக்க ராமும் சித்ராவும் இது எதையுமே கவனிக்காமல் தங்கள் போக்கில் இருப்பதை அப்போது தான் கவனித்தான் மாதவன்.

மாதவன் அமைதியானதும், “டீ போட்டுவிட்டு வரேன்” என்று சமையலறைக்குள் நுழைந்தார் சித்ரா.

ராம் சாய்வு நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்திருக்கவும் அவர் அருகே வந்தவன், “அப்பா இவ்வளவு பேசிட்டு இருக்கேன் நீங்க அவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லலாம் இல்ல அண்ணன் சொல்றத கேளுன்னு சொல்லுங்க” என்றான் மாதவன்.

கண்ணைத் திறந்து மகனைப் பார்த்தவர், “இதுல நான் சொல்றதுக்கு என்னப்பா இருக்கு அதான் அவளுக்கு யாரோ புடிச்சிருக்குன்னு சொல்றாளே. அவளுக்குப் பிடித்தவனைக் கல்யாணம் பண்ணிக்கட்டுமே” என்று கூறிட கீர்த்தனாவின் முகம் பிரகாசம் அடைந்தது.

தந்தை கொடுத்த பதிலில் எரிச்சல் அடைந்தவன், “அவ சின்ன பொண்ணு நல்லது கெட்டது எல்லாம் நம்ம தான் சொல்லிக் கொடுக்கணும். அந்த பையன் யாருன்னு தெரியல அதுக்கு முன்னாடியே இப்படி சொல்றீங்களே இது நல்லா இல்லப்பா. நீங்க வேணும்னா உங்க கடமையிலிருந்து தவறலாம் நான் அப்படி இருக்க முடியாது என் தங்கச்சிக்கு யாரைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்குத் தெரியும். இதுக்கு அப்புறம் உங்க கிட்டப் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை அம்மா கிட்டப் பேசுகிறேன்“ என்று சமையல் அறைக்குள் சென்றான்.

”அம்மா“

”சொல்லுப்பா“

”அப்பா பொறுப்பில்லாமல் பேசுறாரு இதுக்கு அப்புறம் அவரை நம்பி பிரயோஜனம் இல்லை நீ சொல்லு நான் மாப்பிள எப்ப பொண்ணு பார்க்க கூட்டிட்டு வரட்டும்“ என்று கேட்டதும் சகோதரிகள் இருவரும் சமையல் கட்டு வாசலில் வந்து நின்று அன்னையின் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

வாசலில் கீர்த்தனாவின் பக்கம் பார்வையைத் திருப்பியவர் அவளைப் பார்த்துக் கொண்டே, ”இது அவளுடைய வாழ்க்கை. அவளுக்கு ஒருத்தனை புடிச்சிருக்குன்னு சொல்றா எப்படி உங்களுக்கு பிடிச்சவங்கள நீங்கக் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களோ அதே மாதிரி அவளும் பண்ணிக்கட்டுமே“ என்று அவர் ஒரே போடாக கூறிடத் திகைத்து நின்றான் மாதவன்.

கோபம் கண்ணை மறைக்க, ”இந்த கல்யாண எப்படி நடக்குது நானும் பாக்குறேன் அவ அண்ணன் னு என் சார்பா நான் ஒரு பைசா கொடுக்க மாட்டேன். வரதட்சணை வாங்காமல் உங்க பொண்ண யாரு கல்யாணம் பண்றாங்க நானும் பார்க்கிறேன்“ என்று கூறியவன் வீட்டை விட்டு வெளியேறினான்.

விஜியோ இதுதான் சந்தர்ப்பம் என, ”அவன் கெடக்குறாமா என் கொழுந்தன் வரதட்சணை வாங்காமல் நம்ம கீர்த்தனாவைக் கல்யாணம் பண்றதுக்கு ரெடியா இருக்காரு ம்மா இவன் காசு தரவில்லை என்றால் பரவாயில்லை“ என்று பெருமையாகக் கூறினாள்.

”உன் கொழுந்தனை இங்க எனக்கு ப்ரீயாவே கொடுத்தாலும் வேணாம்“ என்று கூறினாள் கீர்த்தனா.

”கீர்த்தனா அமைதியா இரு“ என்று சித்ரா கூற தங்கை நக்கலாகப் பார்த்த விஜி, ”அப்படிச் சொல்லுமா சின்ன புள்ள கணக்கா பேசிக்கிட்டு இருக்கா“ எனக் கூறியவள் சித்ராவின் அருகே வந்து அவரின் கையைப் பிடித்துக் கொண்டு, ”இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகலாமா யாரோ ஊர் பெயர் தெரியாத பையனுக்குக் கொடுப்பதை விட என் கொழுந்தனுக்கு கீர்த்தனாவைக் கல்யாணம் பண்ணி கொடுத்தா ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருப்போம் நல்லா யோசிமா“ என்று கொஞ்சலாக சித்ராவின் தாடையைப் பிடித்தாள்.

”உனக்கு ஒரு வாட்டி சொன்னா புரியாதா?மறுபடியும் இன்னொரு வாட்டி சொல்லனுமா? உனக்கு பிடிச்சவங்க தானே நீ கல்யாணம் பண்ண அதே மாதிரி அவளும் பிடித்தவனைத் தான் கல்யாணம் பண்ணுவா. நீ ஓடிப்போய் கல்யாணம் பண்ணி இருந்தாலும் உன்னை சேர்ந்துக்கிட்டதுமே 30 பவுன் நகை உன் புருஷனுக்கு பைக் எல்லாம் வாங்கி கொடுத்த எங்களுக்கு கீர்த்தனாவுக்கும் பண்ணத் தெரியும். பொறுப்பான அண்ணியா உன் கொழுந்தனுக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வை“ என்று கூறியவர் அவளின் கைகளில் டீயைக் கொடுக்க, ”ஒரு டீக்கு வழி இல்லாம நான் உங்க வீட்டுக்கு வரல“ என்று கத்திவிட்டு தங்கையை இடித்துக் கொண்டு சமையலறை வாசலைத் தாண்டி கூடத்துக்கு வந்தவள் கீர்த்தனாவின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது மகனை அடித்து எழுப்பிக் கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.

மருமகனை அடித்துச் செல்வதைப் பார்க்கப் பொறுக்காமல், ”அக்கா ஏன்மா இப்படி இருக்கா?“ என்று வருத்தத்தோடு கூறினாள்.

”அவ புள்ளே அவ கொஞ்சம் அடிப்பான் நம்ம ஒன்னும் சொல்ல முடியாது. நீ மாப்பிள்ளை வீட்ல பொண்ணு பார்க்க நாளைக்கு சாயந்திரம் வர சொல்லு“!என்று கூறியவர் டம்ளரில் டீ யை கணவர் கொடுத்துவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்கச் சென்றார்.

சந்தோஷமாக அறைக்கு சென்றவள் கைப்பேசியை எடுத்து அன்புச் செல்வனுக்கு அழைத்தாள்.

விஷயம் கேள்விப்பட்டதும் அன்புக்கு தன்னுடைய காதையே நம்ப முடியவில்லை.

“நிஜமா தான் சொல்றியா?”

“என்னாலே நம்ப முடியல. அம்மா அப்பா இவ்வளவு சீக்கிரம் ஓகே சொல்லுவாங்க நானும் எதிர்பார்க்கல. ஒரு வேளை அண்ணா அக்கா மேல இருந்து கோவத்துல எப்படி ஓகே சொல்லிட்டாங்களோ“ தீவிர சிந்தனையோடு கூறினாள்.
”எதுவா இருந்தா என்ன நமக்கு நல்லது தான் நடந்திருக்கு“ எனக் கூறியவள், ”உங்க வீட்ல எப்படியாவது சொல்லி நாளைக்கு கூட்டிட்டு வந்துடுடா“ எனக் கெஞ்சலாக முடித்தாள்.

”உங்க வீட்ல ஏண்டி இவ்வளவு அவசர படுத்தறாங்க நான் என்ன எங்க வீட்ல விஷயத்தைக் கூட சொல்லல. இது எப்ப சொல்லி எப்படிக் கூப்பிட்டு. எனக்குக் கண்ணே கட்டுற மாதிரி இருக்கு“ எனப் புலம்பினான்.

”நல்ல சான்ஸ் டா நாளைக்கு மட்டும் நீங்க வரலான வீட்ல எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல சோ எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்துடு ப்ளீஸ் லவ் யூ“ என அழைப்பைத் துண்டித்தாள்.

தீவிர சிந்தனையிலிருந்த அன்பு ‘வேற வழியே இல்ல அண்ணன் காலில் தான் விழனும்’ என்று மனதுக்குள் நினைத்தவன் அவனைத் தேடி மொட்டை மாடிக்குச் சென்றான்.

எப்போதும் போல் சூரிய அஸ்தமனத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனை நெருங்கியவன், “அண்ணா ஒரு உதவி” என்று ஆரம்பித்தான்.

“என்னடா ரெண்டு மாசம் அமைதியா இருந்த இப்ப மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா என்ன பைக் வேணுமா?” எனக் கேட்டான் கதிர்.

இல்லை எனும் விதமாகத் தலையாட்டியவன், “அம்மா அப்பா கிட்ட நான் லவ் பண்ற விஷயத்தைச் சொல்லி கீர்த்தனா வீட்டுக்கு நாளைக்கு கூட்டிட்டு போக நீ தான் ஹெல்ப் பண்ணனும்” எனக் காலில் விழுந்துவிட்டான்.

“என்னடா விளையாட்டுரியா?”

“இல்ல நான் சீரியஸா தான் சொல்றேன்”

இடுப்பு கை வைத்துக் கொண்டு யோசித்தவன், “அந்த பெண் வீட்டில் ஓகே சொல்லிட்டாங்களா ?” என்று கேட்டான்.

“ஆமா நா நீ தான் ஏதாவது பண்ணி ஆகணும்”என அவன் மன்றாட, “சரி பார்த்துக்கலாம் விடு” என்று சொன்னவன் பெற்றோரை எப்படிச் சம்மதிக்க வைப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.


பயணம் தொடரும்...
 
அத்தியாயம் 08

என்றும் இல்லாத திருநாளாய் மூத்தமகன் தங்களோடு உணவருந்துவதைக் கண்டு ஆனந்தத்தில் தழைத்திருந்த உமாதேவி அவன் தட்டில் காலியாகும் உணவுகளை நிரப்பிக் கொண்டு குடும்பத்தினரோடு சந்தோஷமாக உணவருந்தினார்.

கதிர் காலை வெளியே சென்றால் மாலை ஒரு மணி நேரம் வீட்டிற்கு வந்து தேநீர் அல்லது காபி அருந்திவிட்டு ஏழு மணி போல் மறுபடியும் வெளியே கிளம்பினால் வீட்டுக்கு வர நல் இரவாகும் அதனால் வீட்டினரோடு அவன் இரவு உணவருந்துவதே அரிது.

உணவருந்திக் கொண்டிருக்கும்போது அண்ணனின் கையை இடித்து சொல்லு சொல்லு என்பது போல் ஜாடை காட்டிக் கொண்டிருந்தவனை உமாதேவி கண்டு கொள்ளவில்லை ஆனால் ராகவனின் பார்வையில் விழ என்னமோ பெரிய விஷயம் பேசப் போகிறார்கள் எனப் புரிந்தது அவருக்கு.

சாப்பிட்டு முடித்ததுமே அனைவரும் கூடத்தில் அமர்ந்து இருக்க ராகவன், “ஏதோ சொல்லணும் என்பதற்காகத் தான் இந்த நேரத்தில் வீட்டில் இருக்கிற புரியுது கதிர். என்ன சொல்லனுமோ அதை தயங்காம சொல்லு” என கூறினார்.


தந்தை தன்னை கண்டு கொண்டதில் கதிருக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. சிறுவயதிலிருந்தே அவன் அப்பா பிள்ளையாகவே வளர்க்கப்பட்டவன். விடலை பருவம் வந்ததும் அவரோடு இருந்த ஒட்டுதல் குறைந்த போதும் பாசம் அப்படியேதான் இருந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வெளி மனிதர்களின் முன்னால் அதைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் அவர்களின் பூசல்கள் அறிந்தது உமாதேவி அன்பு மட்டுமே. வெளி உலகத்தைப் பொறுத்தவரை அவர்கள் ஒற்றுமையான தந்தை மகன்.

நெடுநாள் கழித்து தந்தையோடு நேராய் பேசுவதற்குத் தயக்கம் இருந்தாலும் இதுக்கு மேலும் விஷயத்தை ஆரப் போட முடியாது என்று விளங்க, “அன்பு ஒரு பொண்ண லவ் பண்றான். அவன் ஆபீஸ்ல வேலை செய்ற பொண்ணு தான். பொண்ணு பேரு கீர்த்தனா. அப்பா ரிட்டயர் கவர்மெண்ட் ஸ்டாப் அம்மா ஹவுஸ் வைஃப் ஒரு அண்ணா அவரும் கவர்மெண்ட் ஸ்டாப் தான் அப்புறம் ஒரு அக்கா கல்யாணம் ஆயிடுச்சு ஒரு பையன் இருக்கான். பெரிய வசதியான குடும்பம் இல்லை ஆனால் நான் விசாரிச்ச வரைக்கும் அந்த பொண்ண பத்தி எல்லாருமே நல்லதாக சொன்னாங்க. இந்த விஷயம் எனக்கு எப்பயோ தெரியும். அன்பு உங்க கிட்ட சொன்னா நல்லா இருக்கும்னு நினைச்சேன். இப்போ அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க அந்த பொண்ணும் அன்பை பிடிச்சிருக்கு அவனுக்குத்தான் கல்யாணம் பண்ணும் னு சொல்லி வீட்டில் சொல்லி இருக்கா. நாளைக்கு அவங்க வீட்டுக்குப் பேசக் கூப்பிட்டு இருக்காங்க . என்ன சொல்றீங்க?” என்று பெற்றோர் இருவரிடமும் கேட்டான் கதிர்.

அன்பின் காதல் விவகாரம் கேட்டதும் உடைந்தே போய்விட்டார் உமாதேவி. அவருக்கு அவரின் இரு குழந்தைகளும் இரண்டு கண்கள் என்றாலும் கதிரை விட அன்பு அவரின் சொல் கேட்டு நடக்கும் பிள்ளை என அவன் வாழ்க்கை குறித்துப் பல கனவுகளில் இருந்தவருக்கு இச்செய்தி உவப்பானதாக இல்லை.


உமாதேவி அன்பைப் பார்த்து பார்வையில் அப்பட்டமாக அவரின் ஏமாற்றம் தெரியக் கலங்கிய கண்களோடு அவர் அருகே வந்த அன்பு, “ சாரிமா உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு எல்லாம் இல்ல. சொல்லத் தைரியம் வரலாமா. அண்ணா கல்யாணத்தை விட என் கல்யாணத்துல பற்றி உங்களுக்கு நிறையக் கனவு இருக்கிறது எனக்குத் தெரியுமா அதனால்தான் உங்க கிட்ட சொல்றதுக்கு எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. தயவு செஞ்சு என்னை வெறுத்துறாதீங்க அம்மா” என்று அவரைக் கட்டி அணைத்து அழ தொடங்கினான்.

மகன் கண்ணீர் வடிப்பதைப் பார்க்கப் பொறுக்காமல் தன்னிடமிருந்து அவனைப் பிரித்தவர் கணவரைப் பார்த்து, “ எனக்கு இதில் சம்பந்தம் நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்.

ராகவன், “உனக்கு சரினா எனக்குச் சரிதான். நாளைக்கு அந்த பொண்ணு வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்” என்று கூறினார்.

கண்ணீரை கைகளால் துடைத்துக் கொண்டு மூவரையும் கட்டியணைத்து நன்றி கூறினான் அன்பு.

“ஒரு நிமிஷம்” என்றார் உமாதேவி.

கதிரோடு சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தவன் பயத்தோடு அன்னையை நோக்கினான்.

“எப்படியும் அந்த பொண்ணு தான் மருமகனும் முடிவு ஆயிடுச்சு அதனால பெரியவன் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் அன்பு கல்யாண நடக்கணும்” என்று கூறியதும் அனைவரும் கதிரின் பக்கம் திரும்பினர்.

எல்லோரிட கவனமும் கதிர் மேல் இருக்கவும் தீவிர யோசனையிலிருந்தவன், “சரி பொண்ணு பாருங்க” என்று கூறி விட்டு அறைக்குள் சென்றான்.

கதிர் அன்புக்காகவாவது திருமணத்திற்கு ஒத்துக் கொள்வான் என்று தெரிய இந்த நிபந்தனையை வைத்தார் உமாதேவி. வேறு வழி இல்லாமல் கதிர் ஒத்துக் கொள்ளவும் சந்தோஷத்தோடு கல்யாண தரகருக்கு அழைத்துப் பேசி கதிர்க்காக வரன் பார்க்கக் கூறினார்.


வீட்டில் அனைவரும் பொறுமையாகக் கிளம்பிக் கொண்டிருக்கப் பயத்தில் ஒரு ஜீவன் மட்டும் சுற்றிக்கொண்டிருந்தது.

கழுத்தில் தங்கச் செயின் வெள்ளை நிற சட்டை அணிந்து தலைமுடி சீவிக் கொண்டிருந்தவனுக்கு உள்ளுக்குள் பதட்டமாக இருந்தது. “எல்லாம் நல்லபடியா முடிஞ்சுரும் ஆண்டவா” என்று கடவுளோடு உரையாடலை நடத்திக் கொண்டிருந்தவன் அறைக்குள் நுழைந்த அண்ணனைப் பார்த்தான்.

எப்பொழுதுமே வெளியே கிளம்பும்போது நேர்த்தியாக அயன் பண்ணிய சட்டை அணிந்து கொண்டு வெளியே செல்லும் கதிர் இன்று ஏனோ தானோ என்று கிளம்பி இருக்க, “ என்னன்னா இந்த சட்டையைப் போட்டு இருக்க உனக்கு இது நல்லாவே இல்ல அதுவும் அயன் பண்ணக் கூட இல்லனாசட்டையைக் கழட்டிக் கொடு நான் பண்ணி அயன் பண்ணி தாரேன்” என்று அண்ணனிடம் கூறினான்.

“நீ தான் இன்னைக்கு மாப்பிள்ளை நான் இல்ல. சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா லேட் ஆகுது” என்று கண்ணாடியைப் பார்த்து தலையை கோதிக் கொண்டு கூறியவன் வெளியேறினான்.

“மாப்பிள்ளை மட்டும் தான் நல்லா டிரஸ் பண்ணனுமா என்ன” என்று வாய்க்குள் கூறிக் கொண்டவன் கிளம்பி வீட்டினரோடு கீர்த்தனாவின் இல்லத்துக்குப் பயணம் ஆனான்.

வந்தவர்களை மரியாதையாக வரவேற்று அமர வைத்தனர் சித்ரா ராம் தம்பதியினர்.

நேற்று நடந்த சண்டையில் தங்கையின் பெண் பார்க்கும் சடங்குக்கு வர முடியாது எனக் கூறிவிட்டான் மாதவன்.

விஜியும் வரக்கூடாது என்று முடிவெடுத்தாலும் அப்படி என்ன மாப்பிள்ளை எனத் தெரிந்து கொள்ளும் ஆவலோடு இருந்தவள் கணவனிடம் எப்படியாவது இந்த சம்பந்தத்தை நிறுத்த வழி பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வந்திருந்தாள். சொந்தக்கார பெண்கள் கீர்த்தனாவை அலங்கரித்துக் கொண்டிருக்க அவர்களோடு ஒருவராக நின்று கொண்டாள்.

பக்கத்து வீட்டுக் குட்டி பெண் ஓடிவந்து கூடத்தில் அமர்ந்திருக்கும் கதிரையும் அன்பையும் பார்த்துவிட்டு கீர்த்தனாவின் அறைக்குள் நுழைந்து, “அக்கா ரெண்டு பேர் வெளியில உட்கார்ந்து இருக்காங்க அதுல யாரு மாமா” என்று பழகத் தோஷத்தில் உரிமையோடு கேட்டாள்.

“அன்பு எப்பவுமே கிளீன் ஷேவ் தான்” என்று அவள் நாணத்தோடு குனிந்து கொண்டு சொல்ல, “கீர்த்தனா என்னடி புதுசா வெட்கம் எல்லாம் படுற” என்று கேலி செய்தனர் அவள் வயது ஓத்த பெண்கள்.

“பொண்ண அழிச்சிட்டு வாங்க” என்று சபையிலிருந்தவர்கள் கூற உறவுக்கார பெண்களால் அழைத்து வரப்பட்டாள் கீர்த்தனா.

புகைப்படத்தில் கூட பார்க்காமல் நேராகப் பெண்ணை பார்த்த அன்புவின் பெற்றோருக்கு கீர்த்தனாவைப் பிடித்துப் போய்விட அவர்கள் முகம் மலர்ச்சி காட்டிக் கொடுக்க கீர்த்தனாவைக் கூட கவனிக்காமல் பெற்றோரின் கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் நிம்மதி வந்தது.

கீர்த்தனாவை தன் அருகில் அமர்த்திக் கொண்ட உமா வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார்.


“எங்களுக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு. இப்போதைக்கு சிம்பிளா ஒரு நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம் அடுத்த மாசம் நல்ல நாள் இருந்தா பார்த்து சொல்லுங்க” என்று கூறினார்.

சித்ராவும் ராமும் ஒருவர் முகத்தை ஒருவர் குழப்பமாகப் பார்த்துக்கொண்டனர்.

“நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்குங்களா ஒரு மாசம் டைம் பத்தாது சரி பிரச்சனை இல்ல ரெண்டு மாசம் கழிச்சு வச்சுக்கலாம்” என்றார் அவர்களின் நிலைமை புரியாமல்.

“அதுக்கு இல்லைங்க எங்களுக்கு கல்யாணத்துக்கு முதல் நாள் நிச்சயம் வைத்துத் தான் பழக்கம்” என்றார் சித்ரா.

“அவ்வளவு தானா. அப்போ இப்ப பூ வச்சு பொண்ணு உறுதி பண்ணிக்கிறோம் ஒரு ஆறு மாசம் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் தேதி முன்னாடி நிச்சயம் வைச்சுக்கலாம் அதுல ஒன்னும் பிரச்சனை இல்ல”

மனைவியிடம் கண்ணை முடித்திருந்த ராம் தான் பார்த்துக் கொள்வதாகச் செய்கை செய்தவர். “ எங்களுக்கு இருக்கிறது மூன்று பசங்க. மூத்தவங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆயிடுச்சு. கீர்த்தனா கடைசி குழந்தை என்பதற்காகத் தான் இவ்வளவு நாள் மாப்பிள பாக்காம இருந்தோம். இப்போ அவளுக்கும் வயசு 25 ஆயிடுச்சு இப்ப கட்டிக் கொடுத்தால் தானே சரியா இருக்கும். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நீங்க கேக்குற எல்லாம் எங்களால முடிஞ்சா கண்டிப்பா பண்றோம்” என்றார்.

அவர் கூறியதைக் கேட்டதும் உமாதேவிக்குச் சினம் வர, “எங்கள பார்த்தா பணத்தாசை பிடிச்சவங்க மாதிரி தெரியுதா?” என்றார்.

அவர் அருகே அமர்ந்த கீர்த்தனாவுக்குப் பயம் வர அவரின் கையை பிடித்துக் கொண்டு, “அப்பா அந்த மீனிங்ல சொல்லல அத்தை” என்றாள்.
அவள் அத்தை என்று கூறியதுமே கிளீன் போல்டாக மாறிய உமாதேவியின் கோபம் சற்று தணிந்தது.


அவர் கீர்த்தனா பேசியதைக் கேட்டு அமைதியாகிவிட்டார் என்பதை ராகவன் மற்றும் அவரின் புதல்வர்களும் உலகத்தின் எட்டாம் அதிசயம் போல் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

கணவர் அருகே வந்த சித்ரா, “நானே பேசுகிறேன்” என்று கூறியவர், “நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சா நல்லதுன்னு தோணுது அதனாலதான் இன்னொரு மூன்று மாதத்தில் அவளுக்குக் கல்யாணம் பண்ற மாதிரி யோசித்தோம் தயவு செஞ்சு அதுக்கு மட்டும் முடியாதுன்னு சொல்லிடாதீங்க” என்று அவர் பணிந்து கேட்டார்.

சித்ரா பணிந்து பேசுவதைப் பார்த்ததும் தன்னுடைய நிலைமையைச் சொன்னால் புரிந்து கொள்வார் என்று நினைத்த உமாதேவி, “தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க சம்மந்தி. நான் கல்யாணம் உடனே வேணாம்னு சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. என் மூத்த பையனுக்கு இன்னும் கல்யாணம் நடக்கல அவனுக்கு வரன் பாத்துக்கிட்டு இருக்கோம் நல்ல பொண்ணா அமைந்ததும் அவனுக்கு முதல்ல கல்யாணத்தை முடிச்சிட்டு தான் அன்புக்கு பண்ணனும்னு முடிவா இருக்கேன் இதுல எந்த மாற்றமும் இல்லை” என்றார்.

அவர் கூறிய காரணம் கீர்த்தனாவுக்கும் சரி என்று பட, “ ஆமா அம்மா அன்பு அண்ணாவுடைய கல்யாணம் முடியட்டும் அதுக்கப்புறம் எங்க கல்யாணத்தை பாத்துக்கலாம்” என்று அன்பின் குடும்பத்தில் ஒருவராக யோசித்துக் கூறினாள்.

மருமகளின் தெளிவான பேச்சில் கவரப்பட்ட உமாதேவி, “பாத்தீங்களா மருமகளை சரின்னு சொல்லிட்டா நாம முதல்ல பேசுனது போலவே நிச்சயத்தை மட்டும் பண்ணிக்கலாம் பெரியவன் கல்யாணம் முடிந்ததும் ரெண்டும் மூணு மாசம் கழிச்சு இவங்களோட கல்யாணத்து நடத்தலாம்”

“அது சரிப்பட்டு வராதுங்க சீக்கிரமே கல்யாணம் நடந்தால் தான் எல்லாருக்கும் நல்லது” என்று வம்படியாக நின்றார் சித்ரா.

இப்படியே அவர்கள் மாறி மாறி பேசிக்கொண்டு இருக்கவும், “அண்ணா ஏதாவது பண்ணு ப்ளீஸ்” என்று பக்கத்திலிருந்த அண்ணனைச் சுரண்டினான் அன்பு.

கதிருக்கே சற்று குற்ற உணர்ச்சியாகத் தான் இருந்தது தன்னால்தான் இவ்வளவு வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்று அவனுக்குப் புரியாமல் இல்லை இருந்தாலும் என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்குப் பதில் தான் தெரியவில்லை.

கதிருக்கு ஒரு யோசனை தோன்ற இவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது போல், “மூணு மாசத்துக்குள்ள அன்பு கீர்த்தனா கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாள் பாருங்க அங்கிள்” என்று ராமிடம் கூறியவன் அன்னையிடம் திரும்பி, “வீட்டுக்குப் போய் பேசிக்கலாமா” என்று முடித்து விட்டான்.

மகன் கூறிய வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அமைதி காத்தவர் வீட்டுக்கு வந்ததும் அவனைப் பிடித்து விட்டார்.

“கதிர் நீ சொன்ன வார்த்தைக்காகத் தான் அம்மா பொறுமையாக வந்து இருக்கேன் என்னை ஏமாத்தணும்னு முயற்சி பண்ணாதே” என்றார் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு.

“உங்களுக்கு ரெண்டு வாரம் டைம் அதுக்குள்ள எனக்கு ஒரு நல்ல பொண்ணா பாருங்க. கல்யாண சிம்பிளா பண்ணாலும் ஓகே. இல்ல அன்போடு கல்யாணமும் என்னோட கல்யாணமும் சேர்ந்து நடந்தாலும் எனக்கு ஓகே” என்று கூறியவன் அவ்வளவுதான் என்பது போல் அறைக்குள் செல்ல, “ ரெண்டு வாரத்துல பொண்ணுக்கு நான் எங்க போவேன்” என்று அவர் வாய் விட்டு புலம்பினார்.

“அது உங்க பிரச்சனை” என்று அறைக்குள் இருந்து கவுண்டர் கொடுத்தான் அவரின் ஆசை அருமை மகன்.

பயணம் தொடரும்...
 
அத்தியாயம் 09

வங்கியின் வாசலில் கையை பிசைந்து கொண்டு நின்ற புளோராவை கண்ட கதிர், “மேடம் ஏதாச்சும் பிரச்சனையா” என்று கேட்டான்.

“கதிர் நீங்க என்ன இங்க பண்றீங்க”

“பேங்க்ல ஒரு செக் டெபாசிட் பண்ண வந்தேன். நீங்க இப்படி டென்ஷனா வாசல்ல நிக்கவும் ஏதாச்சு ஹெல்ப் வேணுமா கேட்க வந்தேன்”

அரை மணி நேரம் வண்டிக்காகக் காத்திருந்த புளோரா முச்சக்கர வண்டி கார் எதுவுமே கிடைக்கவில்லை என்றதும் வேறு வழி இல்லாமல், “கதிர் இப் யூ டோன்ட் மைண்ட் என்னை ****** ஹாஸ்பிடல்ல ட்ராப் பண்ணுறீங்களா” எனக் கேட்டுக்கொண்டார்.

கதிர் செக்கையே யோசனையாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவர், “ உங்களுக்கு இப்ப இந்த செக்க டெபாசிட் பண்ணனும் அவ்வளவு தானே” என்று அதைக் கையில் வாங்கிக் கொண்டவர் அவனுடைய கணக்கு எண் கேட்டு அறிந்து கொண்டு வங்கியில் வேலை செய்யும் ஒருவரை அழைத்து வேலையை ஏவினார்.

“அவங்க கரெக்ட் டெபாசிட் பண்ணிடுவாங்க. நீங்க இப்ப என்னைக் கொஞ்சம் அவசரமா அந்த ஹாஸ்பிடல் ட்ராப் பண்ண முடியுமா?” என்று அவர் கேட்டதும் அவர் கூறிய ஹாஸ்பிடலுக்கு கதிர் அவனுடைய பைக்கில் அழைத்துச் சென்றான்.

ஹாஸ்பிடல் வாசலில் நின்று கொண்டிருந்த ஷர்மிளா புளோரா கதிரோடு பைக்கில் வருவதைக் கண்டு திகைத்தாள்.

ஷர்மிளாவை கண்டதும் கதிரின் முகத்தில் தானாக ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

பைக்கை அவளின் அருகில் வந்து நிறுத்தியவன் புளோரா இருப்பதைக் கூட மறந்து, “ வாட் அ சர்ப்ரைஸ் உங்கள இங்க பார்ப்பேன்னு நினைச்சுக் கூட பாக்கல. உங்க போன் ஒர்க் பண்றது இல்லையா நான் ரெண்டு மூணு வாட்டி கால் பண்ண நீங்க எடுக்கவே இல்ல. என்று பேசிக் கொண்டே போனான்.

யார் இவன் லூசு மாதிரி நிலைமை புரியாமல் பேசிக்கிட்டு இருக்கான் என்று மனதுக்குள் அவனை வறுத்து எடுத்தவள் பெயருக்கு அவனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு வண்டியிலிருந்து இறங்கிய புளோராவை நெருங்கி, “ பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல காலையில இருந்து ஒன்னுமே சாப்பிடல சர்ச் மீட்டிங் போனவர் அங்கே மயக்கம் போட்டு வந்துட்டாரு. லோ பிபி அவ்வளவுதான் பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்லன்னு டாக்டர் சொன்னாரு” என்று அத்தைக்கு விளக்கிக் கூறினாள்.

இடையே புகுந்த கதிர், “ தாத்தாவுக்கு உடம்பு சரியில்லையா எனக்கு ஒரு கால் பண்ணி இருக்கலாமே” என்று கூறியவனை விசித்திரமாகப் பார்த்தார் ஷர்மிளா.

நான் ஏன் உங்களுக்கு சொல்லணும் என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தையை அவள் கேட்பதற்கு முன், “ சரி வந்ததுக்கு அப்பாவ பார்த்துட்டு போறேன் என்று அவள் கையின் பிடித்துக் கொண்டு அவர் மருத்துவமனைக்குள் நுழைய பின்னாடியே வால் பிடித்தது போல் கதிரும் வந்தான்.

அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே புளோராவோடு உள்ளே ஆல்பர்ட் அவர்களை அனுமதித்த அறைக்கு வந்து சேர்ந்தனர்.

உறக்கத்திலிருந்த ஆல்பர்ட் அறைக்குள் ஆரவாரம் கேட்கவும் மெல்லக் கண் விழித்தார்.

கவலையாகப் பார்த்துக் கொண்டிருந்த மகளுக்கு ஆறுதல் கூற வந்த நாவை அடக்கியவர் பார்வையைக் கதிரின் பக்கம் திரும்பிக் கொண்டு, “நீங்க என்ன தம்பி இங்க பண்றீங்க” என்று வினவினார்.

அவர் அருகே வந்தவன், “ இப்ப எப்படி இருக்கு சார்” என்று அவரை நலம் விசாரித்தான்.

“காட் கிரேஸ்ல எனக்கு ஒன்னும் இல்லை. ஜஸ்ட் லோ பிபி என்று தான் டாக்டர் சொன்னாரு. நொவ் ஐ அம் பைன்” என்று முடித்துக் கொண்டார்.

இத்தனை வருடத்தில் உடம்பு சரியில்லை என்று ஒரு நாள் கூட தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பார்த்ததில்லை புளோரா. அதில் சற்று உணர்ச்சிவசப்பட்டவர், “ அவரே எப்படி நடந்து கொள்கிறார் என்று உனக்கு புரியுதா?” என்று ஷர்மிளாவை பார்த்துக் கேட்டவர் கதிர் இருப்பதைக் கூட பொருட்படுத்தவில்லை.

“எல்லாம் உன்னால தான். உன்னுடைய வாழ்க்கையை சரி பண்ணனும்னு தான் அவர் தினம் யோசிச்சிட்டு இருக்காரு. ஒருவாட்டி தப்பு நடந்துவிட்டால் மறுபடியும் முயற்சி பண்ண மாட்டாங்களா என்ன. இல்லை எங்க எல்லாரையும் தண்டிக்க வேண்டும் என்பதற்காக இப்படி பண்ணிட்டு இருக்கியா?. நாங்க பண்ணது தப்பு தான் அதுக்காக உன் வாழ்க்கையை நீயே இப்படி அழிச்சுக்காதே. இன்னைக்கு மயக்கம் என ஆரம்பிச்சது நாளைக்கு எதில் கொண்டு போய் முடிக்கும் என்று எனக்கு தெரியல” அவரின் அபாண்டமான பேச்சும் குற்றச்சாட்டிலும் விக்கிது போய் நின்றாள் ஷர்மிளா.

ஆல்பர்ட் மகளின் குற்றச்சாட்டில் உடன்பாடு இல்லை என்றாலும் கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்று அனுபவத்தில் கற்றுக் கொண்டவர் அமைதியாக நடப்பது வேடிக்கை மட்டும் பார்த்தார்.

கண்களில் நீர் கோர்க்கத் தாத்தா உதவிக்கு வருவாரா என்பது போல் ஏக்கமாகப் பார்த்தாள்.

பேத்தி தன்னைப் பார்ப்பது கடைக்கண்ணால் தெரிந்தாலும் வாய் திறக்கவில்லை மனிதர்.

“எங்க மேல எல்லாம் உனக்கு உண்மையாவே பாசம் இருந்துச்சுன்னா தயவு செஞ்சு கல்யாணம் பண்ணிக்கோ. அப்பாவை நான் நல்லா பாத்துக்குறேன். அவரை உன்ன விட நல்லா என்னால பாத்துக்க முடியும். கல்யாணம் பண்ணிப்பியா மாட்டியா?” பதில் தெரியாமல் உன்னை இன்று விடமாட்டேன் என்று ஷர்மிளாவை இன்று ஒரே பிடியாகப் பிடித்து விட்டார்.

தற்காலிகமாக இந்த பிரச்சனை ஒத்திவைப்பதற்காகச் சரி என்று தலையசைத்தவள் அதோடு சேர்த்து, “எல்லா உண்மையும் தெரிந்ததுக்கப்புறம் என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறாங்களோ அவங்கள மட்டும் தான் கல்யாணம் பண்ணத் தயாரா இருக்கேன்” என்று அவள் கூறிட,

“இந்த உலகத்தில் யாரும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டதே இல்லையா?” எனக் கேட்டார் புளோரா.

புளோரா கூறியதில் அதிர்ச்சி அடைந்த கதிர் மனதுக்குள் ஆயிரம் யோசனைகள், “ஷர்மிளா டிவோஸியா.. என்ன காரணத்துக்காக டிவோர்ஸ் ஆயிருக்கும்.. இப்படி ஒரு நல்ல பொண்ணு டிவோஸ் பண்றதுக்கு அவனுக்கு எப்படி மனசு வந்துச்சு.. அன்லக்கி ஃபெல்லோ ஒரு நல்ல பொண்ணு மிஸ் பண்ணிட்டான்..” என்று அவன் யோசனை சென்று கொண்டிருக்கும் வேளையில் அவனின் மனசாட்சி, ‘அப்ப நீயே கல்யாணம் பண்ணிக்கோ’ என்ற ஒரு யோசனை அவன் முளையில் போட்டு விட ஸ்தம்பித்துப் போய்விட்டான்.

ஷர்மிளாவின் பதிலில் திருப்தி அடைந்த புளோரா, “இப்போ தான் மனசுக்குச் சந்தோசமா இருக்கு. சரி அப்பாவ பாத்துக்கோ நான் நைட்டு வரேன்” என்று கூறிவிட்டுத் திரும்பியவர் கதிரை பார்த்து, “தேங்க்ஸ் கதிர் ட்ராப் பண்ணதுக்கு நம்ப ரெண்டு பேரும் கிளம்பலாம் உங்களுக்கும் வேற வேலை இருக்கும் இல்ல" என்று கிளம்பச் சென்றவரை தடுத்தான் கதிர்.

“மேடம் ஒரு நிமிஷம். ஷர்மிளாவை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான்.

வந்தது முதல் அவன் அதிகப்பிரசிகத்தனமான பேச்சைக் கேட்டு அவனின் மேல் கோபத்தில் இருந்தவள் இப்பொழுது எரிச்சல் வர, “ ஹலோ சார் நானும் ஆரம்பத்திலிருந்து பார்த்துகிட்டு இருக்கேன் ஒருவாட்டி ஒரு பொண்ணு சிரிச்சு பேசிட்டா ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்குறீங்க. உங்க கிட்ட கேட்டனா என்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி. யாரு எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னு நான் டிசைட் பண்ணிக்கிறேன். உங்கள் பரிதாபம் இங்க யாருக்கும் தேவை இல்லை. ப்ளீஸ் லீவ்” என்று கூறி கதவை கை காட்டினாள்.

“இல்ல நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க லட் மீ எக்ஸ்ப்ளைன்” அவன் பேச முயலவும்,

“ப்ளீஸ் லீவ் ஃப்ரம் திஸ் ப்ளேஸ்” எனச் சத்தமாக கூறினாள்.

அவனைப் பொறுத்தவரை ஷர்மிளா மென்மையான பெண் உதவும் மனப்பான்மை உடையவள் மட்டும் தான் அவளின் இந்த பரிணாமம் அவனுக்குப் புதிது அவளைக் கையாள தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தவனுக்கு உதவிக் கரம் நீட்டினார் தாத்தா.

“ஷர்மி இப்போதான் உன்னோட பாஸ்ட் தெரிஞ்சு யாரு வந்து கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டாலும் கல்யாணம் பண்றதுக்கு ரெடி என்று சொன்ன. அதுக்குள்ள பேச்சு மாறிட்ட. அவர்கிட்ட நடந்ததெல்லாம் சொல்லு அதுக்கப்புறம் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டா நீ சொன்ன மாதிரியே அவரை கல்யாணம் பண்ணிக்கணும்” எனக் கூறிவிட்டார் தாத்தா.

இதுநாள் வரையிலும் அவளின் முடிவுகளுக்குக் குறுக்கே வராத ஆல்பர்ட் முதல் முறையாகத் தலையிடவும் கதிரின் முன்பு அவர் அசிங்கப்படுத்த விரும்பாதவள் சரி என்று தலையசைத்துக் கொண்டாள்.

அவள் சம்மதித்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. எப்படியும் தன்னுடைய கடந்த காலத்தைத் தெரிந்து கொண்டால் அவளைத் திருமணம் செய்யும் முடிவை விட்டு விடுவான் என உறுதியாக நம்பினாள்.

மருத்துவமனையிலிருந்த காபி ஷாப்பிற்கு அவளை அழைத்து வந்த கதிர் அவளின் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

புளோரா வேலையை விட்டுவிட்டு பாதியில் அவசரத்தில் வந்ததால் வங்கிக்குக் கிளம்பி விடத் தாத்தாவை அறையில் செவிலியரின் கண்காணிப்பில் விட்டவள் கதிரோடு தனியாகப் பேச வந்தாள்.

அவன் காபி வாங்கச் சென்ற நேரம் அவன் எப்படி எல்லாம் ஓட விடுவது என்று யோசனையிலிருந்தவள் அவன் வந்து அமர்ந்ததும் பேசத் தொடங்கினாள்.

“ஃபர்ஸ்ட் சாரி உங்க கிட்ட நான் சத்தம் போட்டு இருக்கக் கூடாது. அதுக்கு எனக்கு உரிமை இல்லை” என ஆரம்பித்தவள் ஒரு பெருமூச்சு எடுத்துக் கொண்டு, “எக்ஸஸ்பெண்ட் பெயர் மேத்யூ. எங்க அப்பாவோட தங்கச்சி பையன் தான். ஐ மீன் உங்களுக்கு லோன் கொடுத்த மேனேஜர் புளோரா ஓட பையன். சின்ன வயசுல இருந்து மேத்யூனா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு வயசுக்கு மேல அது காதலா மாறிச்சு. வீட்ல எல்லாருக்குமே அவன நான் லவ் பண்ணது தெரியும். ரெண்டு பேரும் காலேஜ் முடிச்சதுமே பெரியவங்களோட பேசின்ஸ்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எல்லாமே நல்லா தான் போச்சு. கல்யாணம் முடிஞ்சு சிக்ஸ் மன்த்ல யூகே ல மேத்யூக்கு வொர்க் கிடைச்சுச்சு அங்க போய் செட்டில் ஆகிட்டு என்னை கூப்பிடுறேன்னு சொன்னான். ஆறு மாத கழிச்சு வீட்டுக்கு வந்தான். அடிக்கடி போன் வரும் என் பக்கத்துல இருந்தா தனியா போய் பேசுவான். ஆரம்பத்துல நான் அத பெருசா எடுத்துக்கல அதுதான் நான் செஞ்ச தப்பு எங்க அனிவர்சரி செலிப்ரேஷன் முடிஞ்சதும் மறுபடியும் கிளம்பிட்டான். ஒருநாள் எனக்கு யூகே நம்பர்ல இருந்து கால் வந்தது ஒரு வெள்ளைக்காரி பேசினா என் ஹஸ்பண்ட் அவளோட லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறதா சொன்னா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

பயணம் தொடரும்...
 
Last edited:
அத்தியாயம் 10

ஷர்மிளா மற்றும் கதிர் அமர்ந்திலிருந்த மேசையின் அருகில் வந்து காபி ஷாப்பில் வேலை செய்யும் சிப்பந்தி மேசையில் காபியை வைத்து விட்டு செல்ல டிஷ்யூவை கொண்டு கண்களிலிருந்து வழிந்தக் கண்ணீரைத் துடைத்தவள் பேச ஆரம்பிக்கவும் ஷர்மிளாவை தடுத்த கதிர், “காபி குடிச்சிட்டு பேசலாம்” என்று கூறிவிட்டான்.

கை நடுக்கத்தோடு காபியை பருகியவளுக்கு அதை குடித்து முடிக்கும் வேகமே இருந்தது அதன் ருசிக் கூட அவளின் நாவில் நிற்கவில்லை.

அவசரமாக குடித்து முடித்து அவனின் முகம் பார்க்க, கதிர் காப்பியை ரசித்து ருசித்து ஒவ்வொரு மடக்காய் பொறுமையோடு குடிப்பதைப் பார்த்தவளுக்கு பொறுமை பறந்து கொண்டு இருந்தது.

ஒரு வழியாக காப்பியை குடித்து முடித்தவன், “இப்போ ஆரம்பத்தில் இருந்து நிதானமா என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க” என்றான்.

தனது கடந்த காலத்தை மூன்றாம் நபருக்கு கூறுவதை அறவே வெறுத்தவள் எழுந்து சென்று விடுவோமா என்று கூட யோசித்தாள். இருந்தும் தாத்தாவுக்கு கொடுத்த வாக்குக்காக தொடர்ந்து கூறத் தொடங்கினாள்.

ஷர்மிளாவின் அன்னை இறந்ததும் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தனர் ரிச்சர்ட் ரோஸி தம்பதியினர்.

அதே நேரம் குடும்பப் பிரச்சினையில் கணவரைப் பிரிந்து வந்த புளோரா மகனோடு பெற்றோர் வீட்டில் அடைக்கலமானார்.

மேத்யூ ஷர்மிளா இருவருக்கும் பெரிய வயது வித்தியாசம் இல்லாததால் இருவருமே ஒன்றாக சேர்ந்து விளையாடிப் படித்துச் சண்டை போட்டு வளர தொடங்கினர்.

அண்ணன் மகளை தன்மகள் என நினைத்து அவளுக்கு எல்லாமும் ஆக இருக்க தொடங்கினார் புளோரா.

பத்தின பருவத்தை அடைந்ததும் மேத்யூ மேலிருந்த நேசம் ஷர்மிளாவுக்கு காதலாக மாறத் தொடங்கியது.

மருமகளின் மனசு புரியவும் பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்த புளோரா இருவரும் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்று கொண்டிருக்கும் வேளையில் திருமணத்தை செய்து வைத்தார்.

மேத்யூவுக்கு ஷர்மிளாவின் மேல் காதல் என்றெல்லாம் இல்லை வீட்டில் சொன்னார்கள் திருமணம் செய்தேன் என்று போல் தான் வாழ ஆரம்பித்தான்.

அவனின் கனவு ஆசைகள் வேறாக இருந்தது. வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும். வெளிநாட்டவர்கள் போல் வாழ்க்கை ரசித்து வாழ வேண்டும் என்று கொள்கை கொண்டவன்.

ஷர்மிளாவை திருமணம் செய்ததால் அவன் ஆசைகள் எல்லாம் நிராசையாக போக அவளோடு ஒன்றி வாழ ஆரம்பித்தும் அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

காதலித்தவனை திருமணம் செய்த சந்தோஷத்தில் வானில் சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தவளுக்கு கணவனின் விருப்பங்கள் மெல்ல விளங்கத் தொடங்கியது.

அவரின் ஆசைப்படி வெளிநாட்டிற்கு அனுப்ப தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தாள்.
மேத்யூவுக்குமே தனக்காக யோசித்து செயல்படும் மனைவி மேல் மெல்ல காதல் துளிர்விட தொடங்கிய வேளையில் அவனுக்கு விசா வந்துவிட யூ கே கிளம்ப தயாரானவன் அங்கே இப்பொழுது கிடைத்ததை விட நல்ல வேலை கிடைத்ததும் அவளை வந்து அழைத்து செல்வதாக கூறிவிட்டு சென்றிருந்தான்.

ஆனால் விதி வேறாக இருந்தது.

யூகேயில் வந்திரங்கியதும் சீக்கிரமே மனைவியை தன்னோடு அழைத்து வர வேண்டும் வீடு வாங்க வேண்டும் என்று பல மனக்கணக்குகளோடு வேலைக்கு வந்தவனுக்கு அவனோடு வேலை செய்யும் ஜெனியை பார்த்ததும் அனைத்து மருந்து போனது.

ஜெனி அவனுக்கு மேலதிகாரியாக வேலை செய்ய அடிக்கடி இருவரும் தனித்து நேரம் செலவழிக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகுது.

அவளின் வெளித்தோற்றத்தை கண்டு மயங்கியவன் அவளின் அழகிற்கு அடிமை ஆகினான்.

ஜெனிக்கும் மேத்யூ மேல் விருப்பம் வரத் தொடங்கவும் அவர்களின் இரண்டு மாத பழக்கத்தின் முடிவில் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் என்ற பெயரில் வாழத் தொடங்கினார்கள்.

இது எதுவுமே தெரியாமல் கணவனுக்காக தினமும் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் ஒரு பேதை பெண்.

ஒரு நாள் ஜெனி மேத்யூவின் அலைபேசியில் அவனும் ஷர்மிளாவும் இருக்கும் திருமண படத்தை பார்த்து அதிர்ந்தவள் அவனிடம் சண்டை போட அவள் மேல் தீராத ஆசையில் இருந்தவனுக்கு உண்மையை கூறி அவளை பிரிய மனது வரவில்லை, தங்களுடையது கட்டாய திருமணம் என்று கூறி ஜெனியை சமாதானம் படுத்தினான்.

மேத்யூ மேல் இருந்து கண்மூடித்தனமான காதலினால் அவன் கூறுவதை நம்பியவள் அவனிடம் ஷர்மிளாவை விவாகரத்து செய்துவிட்டு வர சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தாள்.

ஒரு மாசம் தாக்குப் பிடித்தவனுக்கு அதற்கு மேல் அவளை சமாளிக்க வழி தெரியாமல் ஷர்மிளாவை காண வந்தான்.

ஷர்மிளா நீண்ட நாள் கழித்து கண்ட கணவனை ஓடி சென்று அணைத்து முத்தமிட்டவள் இன்னும் பத்து நாட்களில் தங்களின் திருமண நாள் வரப்போவதால் அதற்காக தன்னை காணும் ஓடி வந்திருக்கின்றான் என்று தவறாக நினைத்துக் கொண்டாள்.

மனைவியின் அணைப்பு அவனை கட்டிப் போட ஜெனியை மறந்தவன் மனைவியின் கவனிப்பில் பத்து நாள் உண்டு குடித்து சந்தோஷமாக இருந்தான்.

அடிக்கடி அலைபேசியில் அழைத்து ஜெனி அவனை தொடர்பு கொண்டு ஷர்மிளாவிடம் விவாகரத்து கேட்டாயா என்று நச்சரிக்க கண்டிப்பாக கூறி விடுகிறேன் என்று அவளை சமாளித்தவன் யூகே கிளம்பும் வரை வாயை திறக்கவில்லை.

ஷர்மிளாவின் கண்களுக்கு புலப்படாத ஒரு விஷயம் புளோராவின் கண்களுக்கு புலம்பட்டது.

ஆண்களைப் பற்றி புளோராக்கு இருந்த நல்ல எண்ணத்தை முற்றிலுமாக மாற்றி இருந்தார் அவருடைய கணவர் ஜேம்ஸ்.

வீட்ல இருக்கும் அப்பா அண்ணா ஆண்களைப் போலவே மற்றவர்களையும் நல்லவர்கள் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தவர்க்கு கணவர் ஜேம்ஸ் நடவடிக்கைகள் வித்தியாசமாக தெரிந்தது.

முதல் முறை அவரை வேறொரு பெண்ணோடு பார்த்தவருக்கு அவருடைய உலகமே தலைகீழாய் மாறி போய்விட அழுது கரைந்தார்.

அந்த காலத்தில் கணவர் தவறு செய்தாலும் அனுசரித்து போய் வாழ வேண்டும் என்று பல மனைவிகள் இருந்திட அதில் ஒருவராக இவரும் மாறி போனார்.

கண்களுக்கு முன்னால் தெரியும் அக்கிரமத்தை கண்டும் காணாதவர் போல் இருந்தவர் ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சு முட்ட அந்த பந்தத்தில் இருந்து வெளியே வந்தே தீர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு தாய் தந்தையரை தேடி வந்துவிட்டார்.

அந்த நேரத்தில் மற்ற பெற்றவர்களைப் போல் இல்லாமல் மகளை அரவணைத்து ஆறுதல் கூறினார்கள் புளோராவின் பெற்றோர்.

பல வருடங்கள் கழித்து கணவனைப் போல் அடிக்கடி ஓடி ஒளிந்து வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கும் மகனை கண்டவருக்கு வரலாறு மறுபடியும் திரும்புகிறதோ என்று தோன்றியது.

தாய் அறியாத சூல் அன்றோ.

மகன் மேல் ஷர்மிளா வைத்திருக்கும் அபரிவிதமான காதலை அறிந்தவருக்கு அவள் இது எப்படி தாங்குவாள் என்ற பயம் அவரை மௌனம் காக்க வைத்தது.

இருந்தும் மகன் கிளம்பும் நாள் வர அவனை தனிமையில் அழைத்து பேசி கண்டித்தவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு உடனடியாக வர கூறினார்.

கிளம்பும் நேரத்தில் பிரச்சினை வேண்டாம் என்று முடிவு செய்தவன் தாய்க்கு கூறியதற்கெல்லாம் சரி சரி என தலையாட்டி விட்டு விமானத்தில் ஏறி இருந்தான் மேத்யூ.

வந்ததுமே அவனைப் பிடித்துக் கொண்ட ஜெனி எப்போது விவாகரத்து கிடைக்கும் என்று திரும்பத் கேட்டாள்.

ஜெனி அவனை விட அதிக சம்பளம் வாங்குகிறாள். இப்பொழுது இவர்கள் இருக்கும் இல்லம் கூட அவளுடையது தான். அவனுக்காக புதிய கார் ஒன்று கூட வாங்கிக் கொடுத்திருக்கிறார். இப்படி இந்த சலுகைகள் எல்லாம் விட முடியாமல் சரி நீயே ஷர்மிளாவிடம் பேசு என அலைபேசியை நீட்டினான்.

ஒரு கூட்டை கலைத்து இன்னொரு இன்னொரு கூடை கட்டினால் அது நிலைக்காது என்று அறியாத ஜெனி தானே ஷர்மிளாவின் அலைபேசி எண்ணை மேத்யூவின் அலைபேசியில் இருந்து எடுத்து அழைத்திருந்தாள்.

கணவனின் உண்மையான குணம் அறிந்ததும் ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் அழுது கரைந்தவள் மனசை கல்லாக்கிக் கொண்டு அவனுக்கு விவாகரத்து அளிக்க ஒப்புக்கொண்டாள்.

ஷர்மிளா மூலம் விஷயம் தெரிந்ததும் மகள் என்றும் பாராமல் புளோராவை ஒரு வழியாகி இருந்தார் ரிச்சர்ட்.

மகளை வீட்டை விட்டு அனுப்பியது மட்டுமில்லாமல் ஷர்மிளா புளோராவை நீ அத்தை என்று அழைக்கக்கூடாது என்று சத்தியம் வாங்கி இருந்தார்.

அப்பொழுது கோபத்தில் ஏதோ செய்கிறார் கோபம் தணிந்தால் சரியாகி ஆகிவிடுவார் என்று நினைத்த ஷர்மிளா அமைதியாக இருந்தாள். மற்றும் அவளுக்குமே பிரிவு விவாகரத்து அந்த வலிகளில் இருந்து வெளியே வருவதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது.

விவாகரத்து பெற்றதும் மேத்யூ யூகேக்கு சென்று ஜெனியை திருமணம் செய்து கொண்டான்.

விவாகரத்து நடந்த பின்பு ஷர்மிளாவை மற்றவர்கள் பார்க்கும் பார்வையே வேறாக இருந்தது.

ஷர்மிளா பற்றி நன்கு தெரிந்தவர்கள் கூட அவளைப் பற்றி அவதூறாக பேச தொடங்கினர்.

சில வருடங்கள் ஆனதும் அந்த பேச்சுக்கள் எல்லாம் நின்று போனாலும் அவள் பட்ட அவமானங்கள் அவளை ஒரு கூட்டுக்குள்ளே அடித்துக் கொள்ள வைத்தது.

காதல் திருமணம் என்ற வார்த்தைகளை வெறுக்க தொடங்கியவள் எல்லோரிடம் ஒரு அடி தள்ளியே இருந்தாள்.

நடந்ததை அவள் கூறி முடித்ததும் முகத்தில் எந்தவித பாவனையும் இல்லாமல், “எனக்கு உங்களை கல்யாணம் பண்றதுக்கு எந்த அப்ஜக்ஷன் இல்லை” என்றான் கதிர்.

அவனை பார்த்து ஏளனமாக புன்னகைத்தவள், “ உங்க பரிதாபம் எனக்கு தேவையில்லை நீங்க போய் வேற யாராவது நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க நான் கிளம்புறேன். உங்க கிட்ட பேசிட்டு இருக்க எனக்கு டைம் இல்ல” என்று கூறி எழுந்து நின்றாள்.

இது தான் ஷர்மிளா மற்றவர்களின் பார்வை கூட தன் மேல் பரிதாபமாக விழக் கூடாது என்று நினைப்பாள்.

“நீங்க என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க நான் உங்களுக்கு வாழ்க்கை கொடுக்கலைங்க நீங்க தான் எனக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு சொல்ல வரேன்” என்றான் தெளிவாக.

“என்ன உளறீங்க? உங்களுக்கு ஏன் நான் வாழ்க்கை கொடுக்கணும்”

“அது கொஞ்சம் பெரிய கதை. கேக்குறதுக்கு உங்களுக்கு டைம் இருக்கா” என்றான் கதிர்.
அவன் குரலிலேயே தீவிரவும் பேச்சில் நக்கலும் இரண்டும் தாண்டவம் ஆடுவதை கண்டு கொண்டவள் என்னதான் கூறுகின்றான் என்று கேட்போமே என்று முடிவு செய்து, “ டைம் இருக்கு சொல்லுங்க” என்றாள்.


நகைச்சுவை விட்டுவிட்டு தீவிர முக பாவத்தோடு இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் என்ன நடந்தது என்று கூறத் தொடங்கினான் கதிர்.

பயணம் தொடரும்...
 
Last edited:
அத்தியாயம் 11

இரண்டு நாட்களுக்கு முன்..

கதிரின் பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்து ஒன்றரை வாரங்கள் ஆகியிருந்தது.

ஒரு வாரத்திற்கு முன் சிரித்த முகமாக உமா தேவியார் கொடுத்திருந்த சாம்பார் வடையை ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்த தரகர் இன்று மணக்க மணக்க இருந்த ஃபில்டர் காப்பியை குடிக்காமல் அமர்ந்திருப்பதை பார்த்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் கதிர்.

கதிரை கண்டதும் எழுந்து நின்ற தரகர், “தம்பி வாங்க வாங்க உங்களுக்காக தான் காத்துட்டு இருந்தேன்” என்று கதிரின் கைகளைப் பிடித்து தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.

தரகரின் பேச்சு சத்தம் கேட்டு கூடத்துக்கு வந்த உமாதேவி, “ வந்துட்டியா கதிர் தரகர் அண்ணா உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணுமாம். பேசிட்டு வா காபி போட்டு தரேன்” என்று கூறி சமையலறைக்குள் சென்று மறைந்தார்.

அப்படி என்ன முக்கியமான விஷயத்தை பற்றிப் பேச போகிறார் என்ற யோசனையோடு தரகரை ஆவலோடு பார்த்தான்.

அவர்கள் தெருவிலேயே வசிக்கும் தரகர் என்பதால் கதிரை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார் அதனால் தான் செய்யப் போகும் காரியத்தை முன்கூட்டியே தெரிவித்து விட்டு செய்வோம் என முடிவு செய்தார்.

“சொல்லுங்க அங்கிள்” என்றான்

“அது.. வந்து… தம்பி..” என்று இழுவையாக கூறி, “ ஒரு சின்ன பிரச்சனை” என்று ஆரம்பித்தார்.

பிரச்சனை என்று கூறியதும் அவன் முகம் தீவிரமாக, அதைக் கண்ட தரகர், “பயப்படுற அளவுக்கு பிரச்சினை இல்லை” என்றவர் மேற்கொண்டு, “முதல் மாதிரி இல்ல தம்பி இப்போ பையன பெத்தவங்கள விட பொண்ணு பெத்தவங்க நிறைய எதிர்பார்க்கிறார்கள் தம்பி. சொந்த வீடு சொத்து பத்து இன்னும் அந்த நகை நட்ட மட்டும் தான் கேட்கல இதெல்லாம் கூட உங்க கதையில பிரச்சினை இல்லை ஆனால் சுய தொழில் பண்றவங்களுக்கு எங்க தம்பி பொண்ணு குடுக்குறாங்க. எல்லாரும் மாத சம்பள கார மாப்பிள்ளை தான் கேக்குறாங்க. மாசம் முடிஞ்சா சம்பளம் வருமான்னு கேக்குறாங்க. நான் என்ன பண்ணட்டும். நீங்க வேற உண்மையை எல்லாம் சொல்லித்தான் கல்யாணம் பண்ணனும்னு முடிவுல இருக்கீங்க. இப்படியே போனா எந்த பொண்ணும் கிடைக்காது தம்பி. அதனால நீங்க பிசினஸ் பண்றவருன்னு சொல்லாம மறைச்சிடவா” என்றார் முகத்தில் அசட்டு சிரிப்போடு.

“பொய் சொல்ல சொல்றீங்களா அங்கிள்” என்றான் கதிர் கோபக் குரலில்.

“தம்பி அப்படி இல்ல. உண்மைய மறைக்க தான் சொல்றேன். எனக்கு தெரியாதா உங்களுக்கு பொய் சொன்னா பிடிக்காதுன்னு” வார்த்தைகளை மாற்றி போட்டு எப்படியாவது கதிரிடம் சம்மதம் வாங்கி விட வேண்டும் என முயற்சித்துக் கொண்டிருந்தார்.

“அங்கிள் உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு. கீதா அக்காவை இப்படி யாராவது பொய் சொல்லி கல்யாணம் பண்ணி இருந்தா நீங்க ஏத்துக்குவீங்களா” எனக் கசப்பான உண்மையை அவரின் புத்தியில் அடிப்பது போல் கூறி விட்டான் கதிர்.

இல்லை எனத் தலையசைத்தவர், “ ஆனா ஒன்னு தம்பி. உங்கள மாதிரி ஒரு தங்கமான மாப்பிள்ளையை நான் மத்தவங்கள மாறி வேணா சொல்ல மாட்டேன்” எனக் கூறியவர் ஒரு அர்த்தமான பார்வையை கதிரின் மேல் வீசிவிட்டு கிளம்பினார்.

மகனின் குணம் அறிந்ததாலேயே தரகரை நேராக அவனிடம் பேச வைத்தார் உமா. இப்போது அவர் நினைத்தது போலவே நடந்திருக்கவும் கவலைப்படுவதற்கு பதிலாக இப்படி ஒரு மகனை பெற்றெடுத்த பூரிப்போடு காபியை போட்டுக் கொண்டு வந்து மகனிடம் கொடுத்து விட்டு சென்றார்.

இன்று

நடந்ததை எல்லாம் கேட்டதும் ஷர்மிளாவுக்கு கதிர் மேலிருந்து நல்ல எண்ணம் கூடியதே தவிர அவனை திருமணம் செய்து கொள்வதை பற்றி அவர் சிந்திக்க கூட தயாராக இல்லை.

“இவ்வளவுதானா. இப்போ என்ன உங்களுக்கு பொண்ணு கிடைக்கல ஒரு ரெண்டு மூணு மாசம் வெயிட் பண்ணுங்க நல்ல பொண்ணு அமையும் அவங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கோங்க. அதை விட்டுட்டு என்கிட்ட வாழ்க்கை அது இதுன்னு கேட்டுட்டு இருக்கீங்க” என்றாள்.

“என்கிட்ட அவ்வளவு டைம் இல்ல”

“ ஹலோ சார் வாழ்க்கை பூரா வரப்போற துணையே தேர்ந்தெடுகிறதுக்கு டைம் இல்லன்னு சொல்றீங்க ரொம்ப தப்பு. உங்க தம்பி கல்யாணம் நடக்கணும்னா உங்க கல்யாணம் நடக்கணும் அதுதான் உங்க பிரச்சனை அதை முதலில் எப்படி சரி பண்றதுன்னு பாருங்க. நான் உங்களை கல்யாணம் பண்றது எல்லாம் நடக்காது. எனக்கு இந்த கல்யாணம் காதல் இது மேல இருந்த நம்பிக்கை இப்ப இல்ல. மோர் ஓவர் உங்க வீட்ல ஒரு டிவோர்ஸ்சி பெண்ணை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஓகே சொல்லுவாங்களா? நான் ஒரு கிறிஸ்டியன் அந்த பிரச்சனையும் வரும் தயவு செஞ்சு வேறு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணுங்க. எனக்கு தெரிஞ்சு யாராவது இருந்தா நானே உங்களுக்கு பயோடேட்டா அனுப்புறேன்” என்றவளை முறைத்த பார்த்தான் கதிர்.

“எங்க வீட்டுக்கு ஒத்துக்கிறது எல்லாம் என் பிரச்சனை. என்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது உங்ககிட்ட இருக்கிற ரீசன் என்னன்னு சொல்லுங்க” என்றான் அதே முறைப்போடு.

கதிரை வேண்டாம் என்று சொல்வதற்கு காரணங்கள் தேடிக் கொண்டிருந்தவள் கண்களுக்கு மருத்துவமனையின் விளம்பர பேனர் கண்ணில் பட்டது.

“உங்களுக்கு இப்ப காரணம் தானே வேணும். உங்களை எனக்கு முன்ன பின்ன கூட தெரியாது ஏதோ ரெண்டு மூணு வாட்டி மீட் பண்ணோம் உதாரணத்துக்கு நம்ம கல்யாணம் பண்ணி அதுக்கப்புறம் உங்களுக்கு ஏதாவது வியாதி இருக்குன்னு எனக்கு தெரிஞ்ச நான் என்ன பண்ணுவேன்” என்ற அந்த நொடி அவளுக்கு மனதில் தோன்றியதை கூறிவிட்டாள்.

ஷர்மிளா கூறியதைக் கேட்டதும் யோசனையில் அவன் புருவம் சுருங்க அதை அவளும் கவனித்தாள்.

அவளது கேள்வி நியாயமானதாக இருந்தாலும் சராசரி எந்த ஆண்மகனும் இப்படி ஒரு பெண் கூறுவதை கேட்டால் கோபம் வரத்தான் செய்யும் ஆனால் இங்கு இருப்பவன் கதிர் ஆகிற்றே யோசனையில் சுருங்கிய புருவம் விரிய, “ என் கூட வாங்க” என்று அவள் கையைப் பிடித்து அழைத்து சென்றான்.

உடல் பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனையில் இருக்கும் வரிசைக்கு சென்றவன், “ ஃபுல் பாடி செக் அப் பண்ணனும்” என்று அங்கே அமர்ந்திருக்கும் பெண்ணை பார்த்து கூறினான்.

அந்த பெண்ணும் தாங்கள் வைத்திருக்கும் முழு உடம்பு பரிசோதனை (புல் பாடி செக் அப்) பேக்கேஜ்களை விளக்க, “எது எடுக்கலாம்” என்று கேட்டு ஷர்மிளாவின் முகம் பார்த்தான்.

அவளோ நடப்பதை கண்டு மலங்க மலங்க விழித்துக் கொண்டு இருந்தாள்.

அவள் பதில் சொல்லாமல் நிற்க அவனே ஒரு பேக்கேஜ் தேர்ந்தெடுத்து அதற்கான விலையை கேட்க அந்த பெண் சொன்ன விலையில் கேட்டு அதிர்ச்சி ஆகிவிட்டான்.

ஷர்மிளாவுக்குமே அவர்கள் சொன்ன விலையை கேட்டு சற்று ஆச்சரியமாக இருக்க கதிரை திரும்பிப் பார்த்தாள்.

கதிர் பர்சை கையில் வைத்து யோசித்துக் கொண்டிருந்தவன் ஷர்மிளா தன்னை பார்ப்பதை கண்டதும் நொடியும் தாமதிக்காமல் பர்சில் இருந்த பணத்தை எடுத்து நீட்டி இருந்தான்.

எடுக்க வேண்டிய பரிசோதனைகளுக்கான ரிசிப்டை கதிரின் கையில் கொடுத்த பெண், “முதல்ல பிளட் சாம்பிள்ஸ் அண்ட் யூரின் சாம்பிள்ஸ் அந்த ரூம்ல கொடுத்துடுங்க” என்று ஒரு அறையை காட்டி கூறியவள், “ஸ்கேன் மட்டும் ரிசிப்ட்ல போட்டு இருக்க ரூம் நம்பர்ஸ்க்கு போய் எடுத்துக்கோங்க சார். ரிப்போர்ட் நாளைக்கு வந்துரும்” என்று கூறி அவர்களுக்குப் பின் இருக்கும் நபர்களை முன்னழைத்தாள்.

கையில் ஊசி வைத்துக் கொண்டு இருப்பவரை பார்த்ததும் கதிருக்கு சற்று பயம் வர அதை அவன் முகமும் பிரதிபலித்தது.

“உங்களுக்கு இதெல்லாம் தேவையா நான் உதாரணத்துக்கு சொன்னதெல்லாம் சீரியஸ் எடுத்துக்கிட்டு இப்படி நீங்க நடத்துகிறது எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றாள் ஷர்மிளா எரிச்சலாக.

“நான் நீங்க சீரியஸா பேசுறீங்க நினைச்சு தான் இப்படி பண்ணேன்” என்று கூறியவன் ஊசி குத்தவும் பயமும் வலியும் ஒன்று சேர ஷர்மிளாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

அவன் நடவடிக்கைகளைப் பார்த்த ஊசி குத்திய பெண்ணுக்கு சிரிப்பு வந்துவிட்டது. வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியவள், “ அந்த வாஷ் ரூம்ல போய் யூரின் சாம்பிள்ஸ் எடுத்துட்டு வந்து குடுங்க” என்று அவன் கையில் ஒரு ட்ரான்ஸ்பெகன்ட் குட்டி டப்பாவை கொடுத்தாள்.

எழுந்து கழிப்பறைக்கு சென்றவன் உள்ளே நுழையாமல் திரும்பி ஷர்மிளாவை பார்த்தான்.

என்ன என்பது போல் அவள் புருவம் உயர்த்த,

“பிளட் சாம்பிள் கொடுக்கும்போது உள்ள வந்த மாதிரி இங்கேயும் உள்ள வாரீங்களா என்று பார்த்தேன்” என்றான் சிரிக்காமல்.

அவனை முறைத்து பார்த்தவள், “ நான் கிளம்புறேன் தாத்தா தனிய இருப்பார்” என்று சென்றுவிட்டாள்.

அதே நேரம் உமாதேவியும் கீர்த்தனாவும் மடிக்கணனியை வைத்துக்கொண்டு தீவிரமாக கதிருக்கு பெண் தேடிக் கொண்டிருந்தார்கள்.

பெண் பார்த்து உறுதி செய்த அன்றிலிருந்து வேலை முடிந்ததும் அன்போடு உமாதேவி காண்பதற்காக வீட்டிற்கு வந்து விடுவாள் கீர்த்தனா.

அவளுக்கு உதவி செய்கின்றேன் என்று பெயர் வழியில் சமையலறை நுழைந்து அவர் செய்து வைத்த சிற்றுண்டி எல்லாவற்றையும் ருசிக்கிறேன் என்ற பெயரில் காலி செய்து விடுவாள்.

இரண்டு மகன்கள் கணவர் மட்டுமே வாழ்க்கை என்று இருந்தவருக்கு கீர்த்தனாவின் வரவு நிறைவை அளித்தது.

அத்தை அத்தை என்று தன் பின்னால் சுற்றும் பெண்ணை அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது அவள் வரவில்லை என்றால் கூட தானே அழைத்து ஏன் இன்று வீட்டுக்கு வரவில்லை என்று கேட்டு விடுவார்.

இருவரும் இந்த இடைப்பட்ட நாட்களில் நன்கு நெருங்கி இருக்க தரகர் வந்து சென்ற செய்தியை கீர்த்தனாவிடமும் கூறியிருந்தார்.

“கவலையை விடுங்க அத்த நான் இருக்கும் போது எதுக்கு பயப்படுறீங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கதிர் மாமாக்கு நல்ல பொண்ணா பாக்குறோம்” என்று கூறி அவரையும் சேர்த்து மடிக்கணினி முன் அமர வைத்தாள்.

மேட்ரிமோனி வெப்சைட்டில் கதிர்காக இருவரும் பெண் பார்த்துக் கொண்டிருப்பதை ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்த்தான் அன்பு.

கீர்த்தனா சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருந்த உமாவை பார்த்ததும் நல்ல ஜாடிக்கேத்த மூடி தான் என்று சிரித்துக் கொண்டான்.

“அத்தை இந்த பொண்ணு நல்லா இருக்கு இல்ல. அவங்க போன் நம்பர் கிடைக்குதான்னு பார்க்கலாமா?” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் நுழைந்த அன்பு, “ என்ன விளையாண்டுக்கிட்டு இருக்கியா? ஏதோ சும்மா பாக்குறேன் நினைச்சா சீரியஸ பார்த்துகிட்டு இருக்க. இது கதிர் அண்ணாக்கு தெரிந்தால் என்ன எப்படி எடுத்துப்பாரு தெரியல. சும்மா தேவை இல்லாம பிரச்சனையாகும். காபி குடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பு” என்றான்.

அன்பு பேசியதை கேட்டதும் கோவம் வந்தாலும் வருங்கால மாமியார் முன் காட்ட முடியாத காரணத்தால் அடக்கி வாசித்தவள் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, “ பாருங்கள் அத்தை கதிர் மாமாக்கு ஹெல்ப் தானே பண்றேன். ஏன் என்னை இப்படி வீட்டை விட்டு துரத்து பார்க்கிறார்” என்று குற்றப்பத்திரிகை வாசித்தாள்.

அவளின் ஓவர் பெர்ஃபார்மன்சை கண்டு கொண்டவன் ‘என்னம்மா நடிக்கிறா’ என மனதுக்குள் கூறிக் கொண்டான்.

“டேய் நீயும் ஹெல்ப் பண்ண மாட்ட அவளை ஹெல்ப் பண்ண விட மாட்டேங்குற பின்ன எப்படி தாண்டா உங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்கிறது” என்று அங்கலாய்த்தார் உமாதேவி.

“அம்மா அவளுக்கு தான் அண்ணனை பத்தி தெரியாது உனக்கு நல்லா தெரியும் இல்ல. அவன் வந்ததும் நீங்களே கேளுங்க ஓகே சொன்னா அப்புறம் ப்ரோசீட் பண்ணுங்க” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் வாசலில் பைக் சத்தம் கேட்க மூவரும் வெளியே எட்டிப் பார்த்தனர்.

ஒரு கையை மடித்த வண்ணம் வீட்டினுள் நுழைந்தான் கதிர்.

பயணம் தொடரும்...
 
Status
Not open for further replies.
Top