எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இருளின் நிழல்-அத்தியாயம்-4

Priya pandu

Moderator

அத்தியாயம்-4

இரவு 10மணி…… நல்ல இருட்டான இடம் அது……… சென்னையின் ஐடி பார்க்கிற்கு என்று ஒதுக்கப்பட்ட சோழிங்கநல்லூர் பகுதி…… அத்தனை மணி நேரத்திற்கும் அங்குள்ள ஏரியாக்கள் அனைத்தும் ஜெகஜோதியாக மின்னிக்கொண்டு இருந்தது…….​

ஆனாலும் அந்த புகழ்பெற்ற ஐடி கம்பெனியை தாண்டினால் இருட்டில் தான் தவழ வேண்டும் அப்படிப்பட்ட இடம் அது…….​

நல்ல உயரமான ஐடிக்கம்பெனியாய் இருந்தாலும் அங்கிருந்து சிட்டிக்குள் வருவதற்கு குறைந்தது 1மணி நேரமாவது ஆகும்…… ஆனால் அங்கிருந்து சென்னை சுற்றி பல இடங்களுக்கு நிறைய அரசு பேருந்துக்கள் விடப்பட்டு இருந்தது….. அப்படியே அரசு பேருந்து இல்லை என்றாலும் அந்த தனியார் ஐடிக்கு சொந்தமாக கிட்டதட்ட 20 பேருந்துக்கள் அங்கு வேலை செய்யும் இஞ்சினியர்களுக்காக விடப்பட்டு இருந்தது………​

அப்படிப்பட்ட ஒரு ஐடிகம்பேனியில் வேலைப்பார்க்கும் பெண் தான் லிசா…… அவள் வசிப்பதோ பெருங்கலத்தூரில் ஆனால் வேலை செய்வதோ சோழிங்கநல்லூரில்…… கிட்டதட்ட போவதற்கும் வருவதற்கும் சென்னை ட்ராஃபிக்கில் முழுதாக 1மணி நேரமாவது ஆகும்………. அதில் அவள் சோர்ந்தே போய்விடுவாள்…….​

அந்த புகழ்பெற்ற கம்பெனியில் கிட்டதட்ட 2000 பேர் வேலை செய்கின்றனர்……. லிசாவும் அப்படிதான்……. அந்த ஐடி கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறாள் லிசா……. வயது 26……. கல்யாணம் ஆகாதவள்…….. அவளுக்கு வெறும் அம்மா மட்டும் தான்……. அப்பா அவள் சிறுவயதில் இருக்கும் போதே இறந்து போய்விட்டார்……..​

வேலை செய்துதான் சாப்பிட வேண்டும் என்றேல்லாம் இல்லை…… ஆனால் அவளுக்கு வேலை செய்ய பிடிக்கும்……. இப்போது தான் அவளின் அம்மா அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்……..​

லிசா தன் புது ப்ராஜக்ட்டுக்காக முக்கியமான மீட்டிங் ஒன்றினை முடித்துவிட்டு வந்தவள் அப்போது தான் மணியை பார்க்க அதுவோ 10 என்று காட்டியது………. அப்போது தான் அவள் இன்று ஸ்கூட்டியை எடுத்துவரவில்லை…….. சர்வீஸ் விட்டுவிட்டு காலையில் ஆபிஸ் பஸ்ஸில் வந்தோம் என்பதே நியாபகம் வந்தது………​

அதில் தன்னை நொந்துக்கொண்டவள்…….. இந்நேரத்திற்கு ஆபிஸ் பஸ் அனைத்தும் போய் இருக்கும் என்று யோசித்தவள்………. சரி கேப் எதாவது புக் செய்து போய்விடலாம் என்று கேப்பை புக செய்ய நினைக்க…….. ஆனால் அவளின் நேரம் போல் அவளால் எந்த கேப்பையும் புக் செய்ய முடியவில்லை…… அப்போது தான் அனைத்து கேப்பும் பிஸியாக இருப்பது புரிந்து……. கடுப்பானவள்………."ம்ச்….. இப்போதான் இந்த ஊர்ல எல்லாரும் சேர்ந்து கேப் புக் பண்ணுவாங்களா……… ச்ச…. எல்லாம் நம்ம நேரம்………. இனி என்ன பண்றது…….."என்று யோசித்தவள்………….. சரி பஸ் எதும் இருக்குமா என்று தன் போனிலே பார்த்தவள்…… இந்த நேரத்திற்கு கடைசியாக ஒரு பேருந்து இருப்பது தெரிந்து…… உடனே தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்….. தன் ஆபிஸில் இருந்து……..​

எப்படியும் அவள் ஆபிஸில் இருந்து பஸ் நிறுத்தம் செல்ல 10நிமிடம் ஆகும்……. எனவே அந்த இருட்டில் இதுவரை நடந்து பழக்கம் இல்லாதவள் தன் போனின் டார்ச்சை அடித்துக்கொண்டு பஸ் ஸ்டான்ட் நோக்கி சென்றாள்…….​

கிட்டதட்ட ஆபிஸில் இருந்து ஒரு 20 அடி எடுத்து வைத்திருப்பாள்……… அவள் பின்னால் எதோ அரவம் கேட்க….. உடனே திரும்பி பார்த்தவள் அங்கு எதும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள்……​

மீண்டும் லிசா பின்னால் எதோ நிழல் தெரிய அப்போது தான் அவளுக்கு தன்னை சுற்றி நடக்கும் அமானுஸ்யம் புரிய ஆரம்பித்தது……. தன் பின்னால் மெதுவாக திரும்பியவள்……… அங்கு யாரும் இல்லாததை பார்த்தவள் இதயம் பயத்தில் படப்படக்க…….. தன்னை சுற்றி இன்னொரு தரம் பார்த்துவிட்டு……… தன் போனின் டார்ச் லைட்டை ஆன் செய்து சுற்றிமுற்றி பார்த்தாள்……​

அவள் கண்களுக்கு சுற்றியும் இருட்டு தான் தெரிந்தது…….. பயத்தில் நாக்கு வரள….. கை கால்கள் நடுங்க மேலும் இரண்டு அடி எடுத்துவைக்க…… எங்கோ தூரத்தில் ஒரு நாய் ஊளையிடும் சத்தம் கொடூரமாக கேட்டது…….. அதில் திடுக்கென்று அவளுக்கு தூக்கிப்போட…….. நடுங்கும் கைகளை கட்டிக்கொண்டு……… போனின் டார்ச் லைட்டை ஆன் செய்தபடியே மேலும் முன்னேற………​

அப்போது அவளின் பின்னால் எதோ ஒரு உருவம் நடந்து வருவதை போல அவளுக்கு அரவம் தெரிய……….. மெதுவாக மிக மெதுவாக திரும்பி பார்த்தவள்…… அங்கு தனக்கு பின்னால்…… அதும் தனக்கு மிகமிக அருகில் தெரிந்த உருவத்தை பார்த்து உயிரே போகும் அளவிற்கு மிரண்டவள்……..​

தன் தைரியத்தை கூட்டி………. “யாரு………...”என்றாள் வெளியில் வராத குரலில்……..​

அதில் அந்த பக்கம் இருந்து எதோ அமானுஸ்யமான சத்தம் கேட்க…….. தன் காதுகளை கூர்மை ஆக்கிக்கொண்ட லிசா……… அந்த உருவத்தின் சத்தத்தை அனுமானிக்க முயன்றாள்………​

அப்போது அந்த உருவத்தின் சத்தமோ……….. வெறும் மூச்சி காத்து சத்தம் தான் கேட்டது……. அதும் மிக வேகமான……… தாருமாறான……. மூச்சிக்காற்று………​

ஒருவன் மூச்சிக்காற்றிலே நாம் இவ்வளவு பயப்படுவோம்…….. என்று யாராவது அவளிடம் சொல்லிருந்தாள்………. “சோ ஃபன்னி……..”என்று முடித்துருப்பாள்……..​

ஆனால் இப்போது அந்த கொடூரமான மூச்சிக்காற்று அவளை உயிருடன் கொல்லும் அளவிற்கு வேகமாக சுழன்றது…….​

“யாருனு கேட்குறேன்ல………. யாருங்க……….”என்று அவள் பயந்தவாறே கேட்க………​

இப்போது அந்த மூச்சி சத்தம் நின்றது போல அவளுக்கு தோன்றியது……​

அதனை கேட்டு கொஞ்சம் பயத்தை கட்டுப்படுத்தியவள்……… மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு………​

தன்னை சுற்றி முற்றி ஒரு பார்வை பார்க்க……… அங்கு யாரும் இருப்பதற்கான அடையாளம் கூட இல்லாமல் போனது போல் அவளுக்கு தோன்றியது……….​

அதில் ஒரு பெரும்மூச்சினை வெளியிட்டவள்………… "கர்த்தாவே……….”என்று ஒரு சிலுவையை போட்டுக்கொண்டு……. “நாம சீக்கரம் இங்க இருந்து போறது தான் நல்லது……"என்றவள் வேகமாக திரும்ப…… அவள் முகத்திற்கு மிக அருகில் ஒரு கருப்பு உருவம்….. கண்கள் இரண்டும் சிவந்த நிறத்தில்…….. வாயில் இரண்டு கோர பற்களுடன்…… கண்களில் அத்தனை வெறியுடன் அவளை தான் எள்ளல் பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தது………..​

அதை பார்த்த லிசா……… உடல் நடுங்க…………..ஆஆஆஆஆஅ………….. என்ற லிசாவின் ஹை டெசிபல் அலறல் தான் கேட்டது……….​

இங்கு அம்ருதா காலையில் எழுந்து தலை விரி கோலமாக கிட்சனுக்குள் வர…….. அவளின் இந்த தோற்றத்தில்………….. ஆஆஆஅ அம்மா பேய்…………. என்று யுகா கத்திக்கொண்டே கிட்சன் மேடையில் ஏறி உட்கார……….. இதில் அம்ருதா அவனை கோவமாக முறைத்தாள்………..​

“எரும மாடே………. நான் தான்டா……..”என்று அவன் அருகில் வந்து அவன் தலையில் ஒரு தட்டு தட்ட……..​

அதில் கடுப்பானவன்……… "ஏய் பக்கி……. இந்த தலைமுடிய தூக்கி கொண்ட போடுவாங்களே அப்டி ஒன்னு இருக்குனே உனக்கு தெரியாதா……. எப்போ பாரு…. தலையை விரிச்சி போட்டு பே…….. னு வர வேண்டியது……….இப்போ இருக்குற கேட்டப்க்கு நைட் இருந்த கேட்டப்பே எவ்வளவோ மேல்…………..”என்று அவன் கடிந்துக்கொள்ள…….​

அதில் கடுப்பானவள் அவனை முறைத்தவாறே………. "ம்ம்ம்ம்ம் ராஜா நைட் இத சொல்லிருக்க வேண்டியது தானே……. அப்போ ஏன் பயந்து கத்துன…….."என்று அம்ருதா அவன் காலை வாரிவிட……..​

அதில் கடுப்பானவன்……… "ம்ம்ம்…. அப்போ மேக்கப்போட பார்த்துட்டேன்……. இப்போ மஃப்டில பார்த்துட்டேன்……. அதான் கத்துனேன்………… உன்ன ரெண்டுத்துலையும் என்னால பார்க்க முடில…….."என்று அவன் பொய்யாக அலட்டிக்கொள்ள……… அதில் கடுப்பனவள்………. தட் தட் என்று காலை தரையில் உதைத்தவாறே அவன் பக்கம் வந்து…...அவன் கையில் இருக்கும் காபி மக்கை பிடிங்கிக்கொண்டு போய் ஹாலின் உள்ள சோபாவில் உட்கார்ந்தவாறே டிவியை ஆன் செய்ய………​

அதில் கடுப்பானவன்……… "ஏன்டி மாடே…….. உனக்கு சொந்தமாவே காபி போட்டு குடிக்க தெரியாதா…….. எப்போ பாரு என் கையில இருக்குற காபியையே பிடிங்கிட்டு போற…...”என்று அவன் கத்த……..​

“ம்ச்….. நீ வீட்ல வெட்டியாதானே இருக்க இன்னொன்னு போட்டு குடி………. நான் என்னை உன்ன மாறி வெட்டியாவா இருக்கேன்…….. ஐ ஹாவ் லாட் ஆப் வர்க்…….. அன்ட் எனக்காக ஒரு ஃபேன் பட்டாளமே வைட் பண்ணுது……. என் அப்டேட்காக……...”என்று அவள் தலையை சிலுப்பிக்கொள்ள………​

அதில் அவளை பார்த்து மூக்கை சுழித்து வக்கனை செய்தவன்………. “பெரிய ஃபேன்…….. இவ அப்டேட் போடுனனும்னு அவங்களாம் தவம் கிடக்குற மாறி பீத்திட்டு கிடக்கா…….. ஒரு நாலு ஒடச ஃபேன்ஷ வச்சிட்டு இவ சிலுப்பல் தாங்கள……...”என்று அவன் தலையிலே குட்டிக்கொள்ள……..​

“ஏற்கனவே அங்க ஒன்னும் இல்ல இன்னும் குட்டி குட்டி தலைய இல்லாம பண்ணிக்காத……...”என்று அவள் கிண்டல் செய்ய………​

அதில் எரிச்சலுடன்………. “ஏய் ருது…….. இந்தியா வந்து முழுசா ஒரு வருஷம் ஆச்சி…. இன்னும் உன் ரிசர்ச் முடிலையா………..”என்றான் யுகா அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தவாறே​

அதில் அம்ருதா ஒரு திருட்டு முழி முழித்தவள்……. “இன்னும் இல்லடா……"என்றாள் தயங்கியவாறே​

அவளை ஒரு கூர்மையான பார்வை பார்த்தவன் அவள் அருகில் உட்கார்ந்தவாறே…… "உனக்கு என்ன பிரச்சனை ருது…….. இப்போ எங்கிட்ட பொய்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டியா……...”என்றான் அவளை வருத்தமாக பார்த்தவாறே……….​

அதில் அம்ருதா அவனை பாவமாக பார்த்துவிட்டு……….. “ரிசர்ச் முடிஞ்சி நாலு மாசம் ஆகிட்டு……..”என்றாள் தயங்கியவாறே​

அதில் யுகாவின் முகம் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் இறுகி இருக்க…….. அம்ருதா அவன் கையை தன் கைக்குள் வைத்துக்கொண்டு……..​

“சாரிடா பயில்வான்………. என் மேல கோவமா இருக்கியா…………"என்றாள் தவிப்புடன்​

அதில் யுகா அவள் முகத்தையே பார்த்தவாறே………… "உனக்கு ரிசர்ச் முடிஞ்ச அடுத்த நாளே எனக்கு தெரியும்……… நீ ரிசர்ச் பேப்பர் சமிட் பண்ணிட்டனு……...”என்று அவன் கூற​

அதில் அதிர்ந்தவள் அவனை தான் பாவமாக பார்த்தாள்………​

அந்த பார்வையில் அடிப்பட்டவன் போல………. “ம்ம்ம்…. ரிசர்ச் பண்றேன் பண்றேனு அந்த 6மாசமும் என்னை சுடுகாடு வர கூட்டுட்டு போனியே………. இப்போ ஒரு நாலு மாசமா என்னை எங்கையும் கூட்டுட்டு போல நீயும் வெளில போல…… அதுலையே எனக்கு தெரியும் உன் ரிசர்ச் முடிஞ்சிட்டுனு……..’என்றவன் அவளை ஏன் மறைத்தாய் எனபது போல் பார்க்க……….​

அவள் தலை குனிந்துக்கொண்டு……… "நம்ம பேமிலி நம்மகிட்ட எதோ மறைக்கிறாங்க யுகா……...”என்று அம்ருதா கூற……….​

அதில் திடுக்கிடுவது அவன் முறை ஆனது…………​

“என்ன சொல்ற ருது……...”என்று அவன் அவசரமாக கேட்க……….​

“அப்போ அதுல நீயும் இருக்கியா………"என்று அவசரமாக அவனை பார்த்து அவள் கேட்க…….​

அதில் தன் அதிர்ச்சியான முகத்தை கொஞ்சம் சமாதானம் செய்ய முயன்றவன்…….​

“யாரும் உங்கிட்ட இருந்து எதையும் மறைக்கலடா ருது………..”என்று அவன் தவிப்புடன் கூற……..​

“இல்ல……. நான் சின்ன பிள்ளையில இருந்து எல்லாரையும் நோட் பண்ணி இருக்கேன்……. எல்லாரும் எதாவது பேசுவாங்க…… ஆனா நான் வந்தா மட்டும் அப்படியே பேச்ச மாத்திடுவாங்க……..”என்று அவள் வருத்தமாக கூற…….​

“ம்ச்…. ருது அப்டிலா எதும் இல்லடா………….அப்படி அவங்க மறைச்சாங்கனா அதுல எதாவது ஒரு ரீசன் இருக்கும்……..”என்றான் அவன்​

“இல்ல…… நம்ம சொந்த ஊர் கேரளா தானே……… இதையே நான் எவ்வளவு தடவ கேட்டும் அவங்க சொல்லல தெரியுமா……….. ஏன் சொல்ல மாட்றாங்க…….. ஏன் நம்ம சொந்த ஊருக்கு நம்மள கூட்டிட்டு வர மாட்றாங்க…….. இப்டி எனக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கு யுகா………..”என்று அவள் தலை குனிந்தவாறே கூற……..​

அதில் அதிர்ந்தவன்……… "அப்போ அதனால தான் நீ இந்தியா போனும்னு அடம்பிடிச்சியா………….”என்று அவளை கோவமாக பார்த்தவாறே கேட்க……..​

அவளோ அவனை சடார் என்று தலை நிமிர்ந்து பார்க்க……….​

“நோ நோ ருது அதுனால தானு சொல்லிடாத………..”என்று அவள் கையை ஆதரவாக தொட……….​

அவள் எதோ சொல்ல வருவதற்கு முன்………………​

“இன்றைய முக்கிய செய்திகள்…………. ஐடிதுறையில் வேலைப்பார்த்து வந்த லிசா என்ற பெண்ணின் மரணம் இன்று தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது………….”என்று அவள் வைத்த நியூஸ் சேனலில் ஒரு செய்தி வாசிப்பாளர் அவசரமாக வாசிக்க…… அதை கேட்ட அம்ருதாவின் தலை அவசரமாக நியூஸ் சேனலை பார்க்க………​

அதில் யுகா தலையில் அடித்துக்கொண்டவன்………… "ஏன்டி இன்னும் இந்த பழக்கத்த நீ மாத்தலையா…… நியூஸ்ல கொலைகேஸ்……. தற்கொலை……. இப்டி எதாவது ஒரு நியூஸ் வந்துட்டா போதுமே இப்டி ஆர்வமா அத பார்த்துட்டு என்ன பண்ண போற…..”என்று அவன் கேட்க​

அதில் சின்ன சிரிப்பை உதிர்த்தவள்………. “அதுல வரது என் கதையில வர மர்டர் மாறி இருக்கானு செக் பண்ணுவேன்……...”என்றாள் கேலியாக​

“அடியேய் கொலைகாரி…….. இப்டியாடி யோசிப்ப நீ……….”என்று யுகா திட்ட……..​

அம்ருதாவோ டிவியையே பார்க்க………. அவனும் பார்த்தான்………​

“சென்னையில் சோழிங்கநல்லூரில் உள்ள பிரபலமான ஐடி துறையில் மென்பொறியாளராக பணிப்புரிபவர் மிஸ் லிசா…… அவர்கள் நேற்று இரவு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்……. அவரின் உடலில் பல காயங்களுடன் கொடூரமாக இருந்தது…….. போலீஸ் கொலையாளிகளை தேடி வருகின்றனர்……...”என்ற நியூஸ் ஓடிக்கொண்டு இருக்க திறையில் அந்த பெண்ணின் புகைப்படம் வர……..​

அம்ருதா அதனை யோசனையாக பார்க்க………. யுகாவோ….. தன் போன் அடிப்பதை பார்த்து அதற்கு பதில் சொல்ல எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்…………​

“இந்த கொலை பற்றி சென்னைக்கு புதிதாக வந்த ஏசிபி மிஸ்டர் அம்ரிஸ் ரகோத்மன்…… அவர்களிடம் நமது செய்தியாளர் கேட்டதற்கு அவர் சொன்னதாவது………….” என்று ஒரு வீடியோவை போட…….​

“கண்டிப்பா இந்த கொடூரமான கொலைய செஞ்ச அந்த கொலைகாரன கண்டுப்பிடிச்சி அவனுக்கு இத விட கொடூரமான தண்டனை தராம நான் ஓயமாட்டேன்……….”என்று தனது கம்பீர குரலில் சொன்னான்……… அவன் அம்ரிஸ் ரகோத்மன்……..

அதை கேட்ட அம்ருதா அதிர்வுடன் அவனை வெறிக்க……. அவளுடன் சேர்ந்து இரு கண்களும் வெறியுடன் அம்ருதாவை வெறித்துக்கொண்டிருந்தது……………………​

(நிழல்கள் தொடரும்……….)

 
Last edited by a moderator:
Top