அத்தியாயம் 10
ருத்ரன்-அன்புச்செல்வி இருவரும் காரில் ஏறி அமர
வேதா டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு காரை ஓட்ட ஆரம்பித்தான்.
அவர்களின் பின்னே மற்றும் முன்னே இரண்டு கார்களில் ருத்ரனின் அடியாட்கள் பாதுகாப்பிற்க்காக வந்து கொண்டிருந்தனர்.
ருத்ரன் எங்கே அதையெல்லாம் கவனித்தான் அவனின் கவனம் மொத்தமும்
அவன் மனைவியிடம் தான் இருந்தது அவளை பார்க்க பார்க்க அவனின் ஆழ் மனதில் அவள் மேல் இருந்த ஆசை,காதல்,ஏக்கம் என அனைத்தும் இன்று ஒரு படி கூட ஆரம்பித்தது.
புவி ஈர்ப்பு விசையை போன்ற ஏதோ ஒரு விசை அவளின் புறம் அவனை கட்டி இழுத்தது.
ஆனால் அன்புசெல்வியோ இங்கே தன்னால் ஒருவன் தவித்து கொண்டு இருக்கிறான் என்பதை கூட அறியாமல் ஜன்னல் வழியாக சிறு பிள்ளையை போன்று மரம்,செடி,கார் என்று அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டே வந்து கொண்டு இருந்தாள்.
அன்புச்செல்வியால் எவ்வளவு நேரம் இப்படி வேடிக்கை பார்த்து கொண்டே வர முடியும்
இரவு தூங்காமல் ருத்ரனுக்காக காத்திருந்தது வேறு கண்கள் இரண்டும் எரிச்சல் கொடுக்க
சீட்டில் அமர்ந்து கொண்டே தூங்கி தூங்கி விழ ஆரம்பித்தாள்.
அன்பு தூங்கி வழிவதை பார்த்த ருத்ரன் அவளை தன் மடியில் சாய்த்து படுக்க வைத்து கொண்டான்.
அவளை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்த ருத்ரனின் பார்வை அவள் மூக்கில் இருந்த ஒற்றை கல் பதித்த மூக்குத்தியின் மீது படிந்தது அதை தன் கையில் தொட்டு பார்த்தவனின் முகத்தில் தன்னையும் அறியாமல் இதழில் ஒரு சிறு புன்னகை மலர்ந்தது.
ஒரு இரண்டு மணி நேர பயணத்திறக்கு பிறகு
“வேதா அந்த ஹோட்டல் பக்கம் வண்டியை நிறுத்து” என்று கூறினான் ருத்ரன்.
“எதுக்கு அண்ணா” என்று வேதா பதிலுக்கு கேட்டான்
“நீங்க யாரும் இன்னும் சாப்பிடவேயில்லையே அதான் போய் சாப்பிட்டு வாங்க” என்றான் ருத்ரன்.
“பரவாயில்லை அண்ணா போற வழியில பார்த்துக்கலாம்” என்று வேதா பதில் கூறினான்.
“வேதா சொன்னதை மட்டும் செய்” என்று ருத்ரன் பதிலுக்கு கோபத்துடன் பேச
தன் முன்னே இருந்த கார் கண்ணாடி வழியாக ருத்ரனின் கோபத்தை பார்த்தவன்
‘ஏதோ காரணம் இருக்கிறது’ என்று மனதில் நினைத்த வேதா காரை ஓரம் கட்டினான்.
அனைவரும் கீழே இறங்கி சாப்பிட சென்று விட
வேதா காரில் இருந்து இறங்கி “அண்ணா உங்களுக்கு சாப்பிட எதாச்சும் வேணுமா” என்று கேட்டான்.
“எனக்கு எதுவும் வேண்டாம் நீ இந்த இடத்தை விட்டு முதல்ல போறியா” என்று ருத்ரன் கோபத்துடன் கூறினான்.
அவன் கூறியதை கேட்ட வேதா எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
வேதா சென்று விட்டானா என்று ஒரு பார்வை பார்த்த ருத்ரன்
தன் மடியில் படுத்திருந்த
அன்புச்செல்வியை பார்த்தான் காரின் ஜன்னல் மூடி இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்து கொண்டான்.
ருத்ரன் தலை குனிந்து அவளின் செவ்விதழை பார்த்தவனுக்கு நேற்று அவள் முத்தமிட்டது நினைவுக்கு வர அதன் மென்மையை இப்போதே உணர வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது.
ருதரனின் உடல் சூடு வேறு அதிகரித்தது தன்னை கட்டுப்படுத்த முடியாமல்
கீழே குனிந்து அவளின் இதழை கவ்வி முத்தமிட ஆரம்பித்தான்.
அன்புச்செல்வி அவன் முத்தமிட்ட உணர்வில் மெல்ல கண்விழிக்க உடனே அவளிடமிருந்து விலகி ஒன்று தெரியாதவனை போன்று அமர்ந்து கொண்டான் ருத்ரன்.
கண்விழித்த அன்புச்செல்வி தூக்கத்திலேயே மெல்ல அவன் மடியில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.
“என்னங்க ஊருக்கு வந்துட்டோமா” என்று அவள் கேட்க ருத்ரன் அவளின் பேச்சை காதில் கூட வாங்காமல்
தன் சுயம் இழந்து பார்வையை அவளின் புடவை விலகி தெரிந்த முன்னழகில் ஓடவிட்டு ரசித்து கொண்டிருந்தான்.
அன்பு மீண்டும் “என்னங்க” என்று கேட்க
பதிலுக்கு ருத்ரன் இல்லை என்று ஏதோ மந்திரித்து விட்டவை போன்று தலையை மட்டும் ஆட்டினான்.
பின் தன்னை நிலைப்படுத்தி கொண்டவன் “நீ எதாச்சும் சாப்பிடுறியா அன்பு” என்று கேட்டான் ருத்ரன்.
“இல்லை வேண்டாம் ஆனால்” என்றவள் தன் சுண்டு விரலை மட்டும் தூக்கி அவன் முன் காட்ட
உடனே “பாத்ரூம் போகனுமா” என்று ருத்ரன் கேட்டான்.
அவளும் பதிலுக்கு சிறு பிள்ளையை போன்று ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.
“சரி வா போலாம்” என்றான் ருத்ரன்
உடனே அவளும் காரில் இருந்து இறங்க போக
“இரு டி” என்று அவளின் கை பிடித்தவன் அவள் முன்னே விலகி இருந்த புடவையை ஆங்காங்கே சரி செய்தவன் “இப்போ இறங்கு” என்றான்.
ருத்ரன் அன்புச்செல்வியை அந்த ஹோட்டலின் உள்ளே அழைத்து சென்றவன் கழிவைறை எங்கே இருக்கிறது என்று கேட்டு அவளை அங்கே அழைத்து சென்றான்.
ருத்ரன் அவளுக்காக வெளியே
காத்திருக்க கழிவறையின் உள்ளே சென்றவள் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள்.
அன்பு வெளியே வந்தவுடன் அவளை அழைத்து கொண்டு
அந்த ஹோட்டலில் இருந்த
டேபிள் ஒன்றின் அருகில் இருந்த சேரில் அமர வைத்தான் ருத்ரன்
“இங்கேயே இரு” என்று கூறிவிட்டு சென்றான்.
அன்புச்செல்வி சுற்றி முற்றி பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தாள்
பக்கத்தில் இருந்த டேபிளில் வேதா மற்றும் ருத்ரனின் அடியாட்களும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
ருத்ரன் திரும்பி வரும் போது அவன் கையில் ஒரு ஐஸ்கிரிமுடன் வந்தான்
அதை அன்புச்செல்வியிடம் நீட்ட அவளும் பதிலுக்கு ஏதோ மிட்டாயை பார்த்த குழந்தையை போன்று ஆர்வத்துடன் வாங்கி கொண்டாள்.
அவள் முன்னே இருந்த இருக்கையில் ருத்ரன் அமர்ந்து கொண்டு அவளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
அன்புச்செல்வியோ குழந்தையை போன்று வாயில் ஒழுகவிட்டு அந்த ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.
அதை பார்த்த ருத்ரன் “என்ன டி ஒழுங்கா சாப்பிட மாட்டியா” என்று கூறிக் கொண்டே தன் முன்னே இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து அவள் அருகில் வந்து இதழில் ஒழுகி இருந்த ஐஸ்கிரிமை துடைத்துவிட்டான்.
இதையெல்லாம் அவனின் அடியாட்கள் பார்த்து கொண்டே தான் அமர்ந்து இருந்தனர்.
அதில் ஒருவன் “என்ன வேதா அண்ணா பொண்டாட்டி வந்துட்டா புலி கூட பூனையா மாறிடும் போலயே” என்று கூறிக்கொண்டே சிரிக்க
“அதுக்கு தான் டா கல்யாணமே பண்ணக்கூடாதுன்னு சொல்றது
பார்த்தியா அண்ணன் நிலைமைய” என்றான் வேதா அவர்களை பார்த்து கொண்டே.
பின் அனைவரும் சாப்பிட்டு முடித்து மீண்டும் காரில் ஏறி புறப்பட்டனர்.
ஒரு வழியாக ருத்ரனின் கார் அன்புச்செல்வியின் ஊரின் உள்ளே நுழைந்தது.
ஊருக்குள் வரிசையாக செல்லும் காரை பார்த்த அந்த ஊர் மக்கள்
“யார் வீட்டுக்கு இத்தனை கார் போகுது” என்று பேசிக் கொண்டிருந்தனர்.
கார் நேரே சென்று ஈஸ்வரனின் வீட்டு வாசலில் நின்றது
உள்ளே சாப்பிட்டு கொண்டு இருந்த
ஈஸ்வரன் வெளியே கார் நிற்க்கும் சத்தம் கேட்டு
யார் என்று பார்ப்பதற்காக வெளியே வந்தார்.
காரில் இருந்து வெள்ளை வேஷ்டி சட்டையில் இறங்கிய ருத்ரனை பார்த்தவர்
அடித்து பிடித்து உள்ளே ஓடி கையை கழுவிவிட்டு வந்தார்.
ருத்ரன் இறங்கியவுடன் அவனின்
பின்னே அன்புச்செல்வியும் இறங்கினாள்.
காரை திறந்த வேதா கையில் அவர்களின் உடமைகளை வைத்து கொண்டு நின்றிருந்தான்.
அதுமட்டுமல்லாமல் இன்னும் பத்து அடியாட்கள் வேறு வந்திருந்தனர்
அவர்கள் அனைவரும் வீட்டை சுற்றி காவலுக்கு நின்று கொண்டனர்.
அன்புச்செல்வி ருத்ரனுடன் ஜோடியாக நிற்பதை பார்த்த அங்கிருந்த அக்கம் பக்கத்தினர்
தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டு நின்றிருந்தனர்.
ஈஸ்வரன் கையை கழுவிவிட்டு ஓடி வந்து “வாங்க மாப்பிள்ளை வா அன்பு மா உள்ளே வாங்க” என்று அவர்களை அழைத்து சென்றார்.
“இவரு தான் நம்ம அன்புச்செல்வியை கல்யாணம் பண்ணிக்கிட்டவரா” என்று பக்கத்து வீட்டில் நின்று கொண்டு இருந்த பெண்மணி தன் கணவனிடம் கேட்டாள்.
“ஆமாம் டி இவரு *** கட்சியில் பெரிய ஆளு ரவுடி பெரிய பணக்காரனும் கூட” என்றான் அவளின் கணவன்.
“இந்த அன்புக்கு ஒரு விவரமும் தெரியாதே இவளை கட்டிக்கிட்டு
என்ன பண்ணுறானோ பாவம் அந்த ஆளு” என்றாள் அந்த பெண்மணி.
“அதெல்லாம் அவள் புருஷன் பாடு உனக்கு என்ன டி உள்ளே போய் சூடு தண்ணீ வை குளிக்கனும்” என்று அவளை உள்ளே அனுப்பி வைத்தான் அவள் கணவன்.
வீட்டின் உள்ளே வந்த ருத்ரன் வீட்டையே சுற்றி முற்றி பார்த்து கொண்டே நின்றிருந்தான்.
“உட்காருங்க மாப்பிள்ளை
நீயும் உட்காரு மா” என்ற ஈஸ்வரன் இரு நாற்காலியை எடுத்து போட இருவரும் அமர்ந்தனர்.
வேதா டிராவல் பேக்கை உள்ளே வைத்து விட்டு வெளியே சென்று நின்று கொண்டான்.
ஈஸ்வரன் சமையலறைக்குள் காபி போட சென்றார்.
தன் எதிரே பார்த்த ருத்ரன் அங்கே சுவற்றில் மாட்டியிருந்த அன்பின் தாயின் புகைப்படத்தை பார்த்தான் அதில் பார்வதி என்று பெயர் எழுதப்பட்டு இருந்தது.
அப்போது ஈஸ்வரன் காபியுடன் வெளியே வந்தார் இருவருக்கும் கொடுத்தவர் “ரொம்ப நன்றி மாப்பிள்ளை எனக்காக என் பொண்ணை இங்கே கூட்டிட்டு வந்ததுக்கு” என்றார்.
காபியை குடித்து கொண்டே இருந்த ருத்ரன் “நான் ஒன்னும் உங்களுக்காக வரல என் பொண்டாட்டி சொன்னான்னு தான் இங்கே வந்தேன்” என்றான்
ருத்ரன்.
அவன் பேசியதை கேட்ட ஈஸ்வரனின் முகம் மாறிவிட்டது இருந்தாலும் சமாளித்து கொண்டு “பரவாயில்லை மாப்பிள்ளை யாருக்காக வந்தா என்ன” என்று அவர் கூற
அன்புச்செல்விக்கு தன் தந்தையை பார்க்க பாவமாக இருந்தது.
காபியை கூட குடிக்காமல் அப்படியே கையில் வைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.
அப்போது “அன்பு” என்று கத்தி கொண்டே பொறுமையாக சுவற்றை பிடித்து கொண்டே உள்ளே நடந்து வந்தார்
முனியம்மா.
ஈஸ்வரனின் தாய் பக்கத்து தெருவில் தான் தனியாக வசித்து கொண்டிருக்கிறார்
அன்புச்செல்வி திருமணம் முடிந்து வந்த செய்தி கேட்டு இங்கே வந்திருந்தார்.
வீட்டின் உள்ளே வந்தவர்
“அன்பு எப்படி சாமி இருக்க” என்று அவளின் கன்னத்தை பிடித்து கொண்டே கேட்க
“நல்லாருக்கேன் அப்பத்தா நீ எப்படி இருக்க” என்றாள் அன்பு
“நல்லாருக்கேன் சாமி” என்றவர் பக்கத்தில் இருந்த ருத்ரனை திரும்பி பார்த்தார்.
“ஏன் பா நீ தான் அன்பை கல்யாணம் கட்டுனவனா” என்று முனியம்மா கேட்க
“ஆமாம் பாட்டி” என்றான் ருத்ரன்.
“ஏன் பா நீ என்ன நொண்டியா கால் எல்லாம் நல்லா தான இருக்கு” என்று காலை பார்த்தவர் அது நன்றாக இருக்க
“உனக்கு வேற எதாச்சும் குறை இருக்கா
கண்ணு நல்லா தான தெரியுது” என்று அந்த பாட்டி ருத்ரனின் கண்ணை மீண்டும் சந்தேகமாக பார்த்து கொண்டே கேட்டார்.
அவர் கூறியதை கேட்ட ருத்ரன்
‘இந்த கிழிவி என்ன லூசா’ என்று அவரை பார்த்தான்.
தொடரும்….