Fa.Shafana
Moderator
பட்டம்!
சமூக வலைத்தளங்களில் 2 நாட்களுக்கு முன்னர் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயத்தை என்னுடைய கற்பனையைக் கொண்டு மாற்றி எழுதிய சிறுகதை இது.
இந்த நாட்களில் நடந்த சம்பவம் 90ம் ஆண்டு காலகட்டத்தில் (90's கிட்ஸுக்கிடையே) நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற என் கற்பனையில் உருவான கதை.
முழுக்க முழுக்க கற்பனைக் கதையே அன்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.
கிழக்கிலங்கையின் ஒரு ஊரில் நடந்த சம்பவம் என்பதால் வாசிக்கும் போது அந்த உணர்வு வர வேண்டும் என்று அந்தப் பிரதேசத்தின் வட்டார வழக்கு மொழியில் கதையை எழுதி உள்ளேன்.
என் எழுத்தில் சற்றே வித்தியாசமான முயற்சி.
======================
"உம்மா செவ்வாய்கிழம ஸ்கூலுக்கு வரக்க பட்டம் ஒன்டு கட்டிட்டு வரச் சொல்லி டீச்சர் சொன்னவ"
பாடசாலை விட்டு வந்த ஸஹ்ரா சொல்லிக் கொண்டே தன் காலணிகளைக் கழற்றினாள்.
"இன்டக்கி வெள்ளிக்கிழமானே.. சனி, ஞாயிறு யாருட்டயாலும் சொல்லி செஞ்சி எடுக்கலாம். இப்ப போய் உடுப்ப மாத்திக்கி வா புள்ள"
அவளின் தாய் சமையலறையில் இருந்தவாறே குரல் கொடுத்தார்.
"சின்னதா தான் செய்யச் சொன்னவ. மஞ்சளும் சிவப்பும் கலர்ல நல்ல வடிவா இரிக்கணும் எனக்கி. வாப்பா கிட்ட டிசு பேப்பர் வாங்கியாரச் சொல்லணும் உம்மா"
"இன்னும் எடைல மூன்டு நாள் இரிக்கி புள்ள. கொஞ்சம் பேசாம இரியன்"
விறகடுப்பை ஊதி விட்டுத் திரும்பி மகளுக்குப் பதில் கொடுத்தார்.
"என்னயாம்? உம்மாவும் புள்ளயும் கதைக்கிறது கிணத்தடி வர சத்தம் கேக்குது" என்றபடியே குளித்து விட்டு தலையைத் துடைத்தபடியே வந்தார் அவளின் தந்தை.
"ஸ்கூலுக்கு பட்டம் செஞ்சிட்டு போகணும் வாப்பா. எனக்கி மஞ்சளும் சிவப்பு டிசு பேப்பர் வாங்கி தாறயலா?" அவளின் குரலில் ஒரு குதூகலம் ஒரு துள்ளல்.
"பின்னேரம் இல்லண்டா நாளக்கி வாங்கியாறன் புள்ள" என்றவரைத் தொடர்ந்து,
"இப்ப பள்ளிக்கு சொணங்குது புள்ள, வாப்பா வந்து கதைக்கட்டும்" என்ற ஸஹ்ராவின் தாயை ஆமோதித்து அவளது தந்தையும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குச் செல்ல தயாராகவென தன் அறைக்குள் நுழைந்தார்.
மஞ்சளும் சிவப்பும் நிறங்கள் கொண்ட பட்டம் ஸஹ்ராவின் கனவில் பறந்தது அந்த இரு நாட்களின் இரவு உறக்கத்தில்.
மூன்றாம் வகுப்பில் படிக்கும் அவளுக்கு மூவாயிரம் கனவுகள் வண்ண வண்ணப் பட்டங்களாக!
"உம்மா என்ன செய்றயல்? "
"ஒனக்கு பட்டம் கட்ட ஈக்கில் வேணுமில்லா? அதான் இந்த ஓலைல இருந்து ஈக்கில எடுத்து வெக்கன். பின்னேரம் கட்டலாம்" என்றார் கத்தியால் தென்னோலையில் இருந்து ஈர்க்குகளை சீவி எடுத்துக் கொண்டிருந்தவர்.
****
"பட்டம் அழகா இரிக்கென? நானா அழகா கட்டி இரிக்கார்"
"ஓம்.. அவன் வேல மெனக்கெட்டு வந்து கட்டித் தந்துட்டு போறான், நீ என்னண்டா எடுத்து பாத்தே அதை கிழிச்சிடுவாய் போல இரிக்கி. அத அங்க ஓரமா வெச்சுப் போட்டு மத்த வேலைய பாரு புள்ள. என்னயாலும் எழுத இருந்தா எழுது, புத்தகத்த எடுத்து வாசி. எட்டு மணியாகட்டும் சாப்புட்டுப் போட்டு தூங்கு"
"சரி உம்மா" என்றவள் புத்தகத்தோடு அமர்ந்து கொண்டாலும் கவனம் என்னவோ அறையில் ஓரமாக இருந்த மேசைக்கு மேல் வைத்திருந்த பட்டத்தில் தான்.
"ஸஹ்ரா பேக் அடிக்கிட்டியா? நாளக்கி காலத்தால பென்சில் இல்ல ரப்பர் இல்லண்டுக்கு இரிக்காம எல்லாம் எடுத்து வெச்சுப்போட்டு சாப்புட வா"
என்றவரிடம் ஓடி வந்தவள்,
"உம்மா நாளக்கி நான் பட்டத்த கொண்டு போகயா?"
"நாளக்கி திங்கட்கிழம என்னத்துக்கு? செவ்வாய் தானே கொண்டு வரச் சொல்ல டீச்சர் சொன்னவ"
"ஓம்மா.. ஆனா கொண்டு போனா என்டத்த பாத்து மத்த புள்ளயல் செய்வாங்கல்லா?"
"அவங்களுக்கு யாராலும் செய்து குடுப்பினம். நீ ஆளுக்கு மூத்த வேல பாக்காம சும்மா இருந்தா காணும்" என்றவர் சோற்றைப் பிசைந்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தார்.
ஏதோ யோசனையிலே சாப்பிட்டு முடித்தவள் உறங்கச் சென்றாள்.
"என்ன புள்ள தூங்கிட்டாவா" ஸஹ்ராவின் தந்தை உணவுன்ன அமர்ந்தவர் கேட்க
"ஓம்.. இந்த மூண்டு நாளும் பட்டத்துட கத தான், இண்டக்கி பட்டத்தக் கட்டி எடுத்துப்போட்டு நாளக்கே கொண்டு போகப் போறாவாம்" என்றார் அவளின் தாயார் உணவைப் பரிமாறிவிட்டு தனக்கும் ஒரு தட்டை வைத்தவாறே.
"கட்டி முடிஞ்செண்டா கொண்டு போறானே?"
"இல்ல.. டீச்சர் செவ்வாய்க்கிழம தான் கொண்டு வரச் சொன்னவயாம். இவக்கு கூடப் படிக்கிற புள்ளயல்ட்ட காட்ட அவிசரம். அதான் வேணாமென்டன்"
*******
அடுத்த நாள் காலையில் பாடசாலை செல்லத் தயாராகி வந்தவள்,
"உம்மா பட்டத்த எடுத்துக்குப் போறனே. கவனமா கொண்டு போய் கொண்டு வருவன். யாரையும் தொடவும் உட மாட்டன். டீச்சர்ட மேசக்கி மேல இல்லண்டா கிளாஸ்ல கப்போட்டுக்கு மேல வெச்சிருந்துப்போட்டு எடுத்துக்கு வாறன்" என்ற அவளது கெஞ்சலையும் முணுமுணுப்பையும் தாங்க முடியாமல்,
"சரி கொண்டு போ புள்ள" என்றுவிட்டார் அவளது தந்தை.
"என்ன நீங்க.." என்று ஆரம்பித்த அவளது தாயையும்,
"பருவாயில்ல உடுங்க. கொண்டு போகட்டும். அவ ஆசையா கேக்கா" என்று நிறுத்திவிட்டார்.
ஏற்கனவே உடையணிந்து தயாராக இருந்தவள் தன் தந்தையின் அனுமதி கிடைத்ததும் அரக்கப் பறக்க புத்தகப் பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு, பட்டத்தையும் எடுத்துக் கொண்டாள்.
"உம்மா போய்ட்டு வாறன், வாப்பா போய்ட்டு வாறன்" என்றவள்
"அல்லாஹ்வுடைய அமானம் புள்ள" என்ற அவர்களின் பதிலையும் காதில் வாங்காது தெருவில் இறங்கி நடந்து தெருமுனையில் இருந்த தன் நண்பியின் வீட்டை அடைந்திருந்தாள்.
பட்டத்துக்குத் தேவையான வண்ணத் தாள் வாங்கியது, ஈர்க்கு வெட்டியது, பட்டம் செய்தது என பாடசாலை வரை தொடர்ந்த அவளது பேச்சு பாடசாலையிலும் நிறைவுறவில்லை, சக மாணவனாகிய ஸிமாக் அந்தப் பட்டத்தை எடுத்துக் கிழிக்கும் வரை.
******
"உம்மாஆஆஆஆஆஆ"
என்ற அழுகுரல் தெருமுனையில் கேட்க என்னவோ ஏதோவென்று அவளது தாய் வெளியே வந்து தெருவில் இறங்கிப் பார்க்க, தலை கலைந்து, கண்ணீர் வழிய ஒற்றைக் கையில் கிழிந்த பட்டத்தை பிடித்தவாறு மற்றைய கையால் புத்தகப் பையை தரையில் போட்டு இழுத்துக் கொண்டும் வந்து கொண்டிருந்தாள் ஸஹ்ரா!
"ஏ புள்ள! என்ன நடந்த? உடுப்பெல்லாம் என்ன இப்பிடி ஊத்த. உன்ட பட்டத்துல கோலமென்ன? நீ வந்து நிக்கிற கோலமென்ன? ஸ்கூல் பேக்க இப்பிடிப் போட்டு இழுத்தா அது பிஞ்சி போகாதா? யாரோட சண்ட பிடிச்ச நீ?" என்று வேகமாக, வரிசையாக கேள்விகளை அடுக்க,
புத்தகப் பையை உதறிவிட்டு பட்டத்தை தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டவள்,
"நான் என்ன சண்டக்காரியா? நான் யாரோடையும் சண்ட பிடிக்கல்ல. அந்த அவன் இரிக்கானே ஸிமாக் அவன்தான் என்ட பட்டத்த எடுத்துக் கிழிச்சுப் போட்டான்" என்று மீண்டும் குரலெழுப்பி அழ ஆரம்பித்தாள்.
"வாய மூடு. ரோட்டுல வெச்சி கத்துறல்ல. வா ஊட்ட போக" என்றவர் குனிந்து அவளது புத்தகப் பையை எடுத்துக் கொண்டார்.
வீட்டு வாசலில் தொப்பென்று அமர்ந்தவள் பட்டத்தை அணைத்துப் பிடித்துக் கொண்டு தன் கால்களை உதறியபடி,
"எனக்கி நாளைக்கி ஸ்கூலுக்கு கொண்டு போக பட்டம் வேணும்" என்று அழ,
"பட்டத்த இன்டக்கி கொண்டு போகாத என்டு சென்னத்த கேக்காம கொண்டு போய் கிழிச்சுப்போட்டு இப்ப பட்டம் கேக்குறல்ல செல்லிட்டன்"
"நான் கிழிக்கல்ல. உம்மாஆஆஆஆஆஆ. அவன் தான் கிழிச்ச. அந்த தெறிச்சவன் ஸிமாக் தான் கிழிச்ச"
"நீ இப்ப வாய மூடல்லண்டா வாயப் போட்டு தச்சி வெச்சிடுவன். அதென்ன தெறிச்சவன் அது இது என்டு கூடப் படிக்கிற புள்ளயல பேசுற? நல்லா இரிக்கா இப்பிடி பேசுறது? இப்பிடி பேச நீ எங்க பழகின புள்ள? ஆ..?
நீ தான் சென்னத்த கேக்காம டீச்சர் நாளக்கி கொண்டு வர சென்ன பட்டத்த இண்டக்கி கொண்டு போனா பட்டம் கொண்டு வராத புள்ளயல் எடுத்துப் பாக்கத் தான் செய்யும்"
"பத்தா.. பாக்குற மட்டும் தான? என்னத்துக்கு அவன் கிழிக்கணும்"
"வேணுமென்டா கிழிக்கிற? மெல்லிய டிசு பேப்பர் கை பட்ட ஒடனே கிழிஞ்சி இரிக்கும்"
"இல்ல அவன் வேணுமென்டே தான் கிழிச்ச"
"ஒனக்கு நல்லாத் தெரியுமா வேணுமென்டு தான் கிழிச்சான் எண்டு? அப்பிடி அவன் வேணுமென்டே கிழிக்கிறன்டா நீ அவனுக்கு என்ன செஞ்ச? நீ என்னயாலும் செஞ்சிரிப்பாய் அவன் கோவத்துல கிழிச்சிரிப்பான். அப்பிடியா?"
"இல்ல நான் ஒண்டும் செய்யல்ல"
"அப்ப அவன் வேணுமென்டே கிழிக்கல்ல. தவறி கிழிஞ்சிரிக்கி அவ்வளவும் தான். ஒழும்பி உள்ளுக்கு போ, இந்த பேக்க கொண்டு போய் மேசைல வெச்சுப் போட்டு உடுப்ப மாத்திட்டு குளி" என்றவர் ஞாபகம் வந்தவராக,
"அவன் பட்டத்த கிழிச்சென்டு அவனோட நீ சண்டக்கி போனா புள்ள?"
"இல்ல"
"இல்லன்டா.. எப்பிடி உன்ட உடுப்பெல்லாம் இப்பிடி ஊத்தயாகி இரிக்கி? அப்ப வீட்ட அழுற மாதிரி க்ளாஸ்லயும் நெலத்துல பெரண்டு அழுதிரிக்காய். அப்பிடித்தானே?" என்ற தன் அன்னைக்கு பதில் கூறாது தலை குனிந்து கொண்டாள். அவளது விரல் தரையில் ஏதோ கிறுக்கிய வண்ணம் இருந்தது.
"வெக்கமில்லயா புள்ள? உன்ட க்ளாஸ்ல, அடுத்த க்ளாஸ்ல என்டு எம்புட்டு புள்ளையல், டீச்சர்மார் இரிப்பாங்க? அவங்க எல்லாம் பாத்துட்டு இரிக்க நீ இப்பிடி உழுந்து பெரண்டு அழுதானா?"
என்று அவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அவ்வழியாக வந்தவர் ஒருவர்,
"என்ன ஸஹ்ரா ஸ்கூல் கலஞ்சி வந்து இன்னம் உடுப்பு மாத்தல்லயா? உம்மாவோட என்ன பிரச்சின?" என்றார் அவளை விளையாட்டாக சீண்டிவிட எண்ணி.
குரலை வைத்து அவரை அடையாளம் கண்டு கொண்டவள் தலை நிமிராது குனிந்தே இருக்க,
"ஒண்டும் இல்ல ஸிமாக்ட வாப்பா, நாளக்கி ஸ்கூலுக்கு பட்டம் கட்டிக்கி வரச் சொன்னாம். இவட பெரியப்பாட மகன் நேத்து வந்து கட்டிக் குடுத்துட்டு போன. இண்டைக்கி ஸ்கூலுக்கு கொண்டு போக கூடப் படிக்கிற புள்ளயல் அத கிழிச்சிப் போட்டாங்க" என்று
அவர் ஸிமாக் என்று கூறாது பொதுவாக கூறி வைக்க கோபம் கொண்டு நிமிர்ந்த ஸஹ்ரா,
"அதென்ன உம்மா கூடப் படிக்கிற புள்ளையல் என்டு எல்லாரையும் செல்றயல்?" என்று கேட்டவள்,
ஸிமாக்கின் தந்தையை நோக்கி,
"கூடப் படிக்கிற புள்ளையல் இல்ல ஒங்குட புள்ள ஸிமாக் தான் என்ட பட்டத்த எடுத்து கிழிச்ச. அவன் தான் கிழிச்ச" என்றாள்.
"ஸிமாக் பட்டத்த எடுத்து கிழிக்கும் வர நீ எங்க பராக்கு பாத்திட்டு இருந்த நீ?" என்று அவளைப் பேச விடாமல் அவர் தடுக்க
"நான் பராக்கு பாக்கல்ல உம்மா, எடுக்காத வேணாம் எண்டு தான் சென்னன் அவன் தான் கேக்காம எடுத்து கிழிச்சிப் போட்டான்" என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
"ச்சே.. அவனால சரியான கரச்சல் ஸஹ்ராட உம்மா. இண்டைக்கி ஊட்ட போய் இரிக்கி அவனுக்கு" என்று ஸிமாக்கின் தந்தை அவனைத் திட்ட ஆரம்பிக்க,
"இஞ்சப் பாருங்க ஸிமாக்ட வாப்பா நீங்க போய் புள்ளய ஒண்டும் ஏசுறல்ல. இவவும் சரியான ஆள் இல்ல. இவக்கும் கவனம் இல்ல தான். இண்டைக்கி தான் பட்டத்த ஸிமாக் கிழிச்ச. மத்த நாளக்கி பென்சில காணம், கொப்பிய காணம் எண்டு கெழமக்கி நாலு பென்சில், ரப்பர், மாத்தக்கி நாலு கொப்பி வாங்குற ஆள் தான் இவ. இவட கையால கிழிய இருந்த பட்டம் தான் ஸிமாக்ட கையால கிழிஞ்சாக்கும். உடுங்கோ நாளக்கி இல்லண்டா நாளண்டக்கி ஒரு பட்டம் கட்டி குடுக்கலாம்.
நீங்க கடைல இருந்து பகல் சாப்பாட்டுக்கு ஊட்ட போறயலாக்கும். போய் சாப்புடுங்கோ. நானும் இவவ குளிக்க வெச்சி சாப்பாட்ட குடுக்கன்" என்றார்.
ஸிமாக்கின் தந்தை ஸஹ்ராவை வாஞ்சையாக ஒரு பார்வை பார்த்து
"நீங்க நல்ல புள்ளல்லா? போய் குளிச்சிட்டு சாப்புடுங்கோ. நான் வாறன்"
என்றுவிட்டு அவ்விடத்தில் இருந்து நகர,
"வா புள்ள வந்து உடுப்ப மாத்து" என்றவர் சமையலறைப் பக்கம் சென்றார்.
"எனக்கி பட்டம் வேணும்" என்றாள் அவள் மீண்டும்.
"அத பொறகு பாப்போம் இப்ப வா" என்றார் அவளின் தாய்.
******
"அவட ஊட்டுப் பக்கம் தான் வாப்பா வாற. அவ அழுதுட்டு போனத்த வாப்பா கண்டு என்னன்டு கேட்டா நான் பட்டத்த கிழிச்சென்டு சொல்லுவா" என்றவன்,
"பயமா இரிக்கி உம்மா. வாப்பா வந்தா அடிப்பாரா? நான் அவட பட்டத்த வேணுமென்டு கிழிக்கல்ல" என்று மந்திரம் போல ஸிமாக் தன் தாயிடம் சொல்லிக் கொண்டே இருக்கும் போது, அவனின் தந்தை வரும் அரவம் கேட்டது.
ஓடிப் போய் சமையலறையில் ஓரு ஓரமாக நிலத்தில் அமர்ந்து தன்னை மறைத்துக் கொண்டான்.
வீட்டுக்குள் வந்தவர் கிணற்றடிக்குச் சென்று முகம் கை கால் கழுவிக் கொண்டு வந்து சாப்பிட அமர்ந்து அமைதியாக சாப்பிட இவனுக்கோ அப்பாடா என்று ஒரு நிம்மதி மனதில் பரவியது.
'வாப்பாக்கு இன்னமும் ஸ்கூல்ல நடந்தது தெரியா போல. இல்லண்டா இப்பிடியா உக்காந்து சாப்பிடுவார்!" என்று நினைத்துக் கொண்டான்.
சாப்பிட்டு முடித்தவர்,
"ஸிமாக் எங்க?" என்று தன் மனைவியிடம் கேட்க,
"இங்கான் இருந்த. இப்ப ஆளக் காணம்" என்று யோசனையாக பதிலளித்தவருக்கும் அவன் சமையலறையில் ஒளிந்து கொண்டது தெரிந்திருக்கவில்லை.
"கூப்பிடிங்கோ.. இவடத்து கடைக்கு ஒரு அலுவலா அனுப்ப இரிக்கி" என்றார் தனக்கு எதுவும் தெரியாதது போலவே.
வீட்டுக்குள் தான் இருப்பான் என்று இருவருக்கும் ஒரு அனுமானம் இருந்த போதும் எங்கே என்று தெரியவில்லை.
"ஸிமாக் வாப்பா கூப்புற்றார். இவடத்த கடைக்கு போகணுமாம் இங்க வாங்க" என்று அழைத்த வண்ணம் அவனின் தாய் முன் வாசலுக்குச் செல்ல தந்தை அறைக்குள் சென்றார்.
மெதுவாக அவ்விடம் விட்டு வெளியே வந்தவன் நல்ல பிள்ளை போல தன் தந்தையின் முன் போய் நின்றான்.
"கடைக்குப் போய்.." என்று கூறிக் கொண்டே அவனருகில் வந்து,
"என்னத்துக்குடா நீ ஸஹ்ராட பட்டத்த எடுத்த..?" என்று கேட்டு அவனது முதுகில் பலமாக ஒரு அடி வைக்க,
"உம்மோவ்.." என்று கத்தியபடி அறையை விட்டு வெளியே பாய்ந்து வீட்டை விட்டு தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்தவன் தன் தந்தை பின்னால் துரத்தி வருவது அறிந்து கண் மண் தெரியாமல் ஓடி இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த மன்ஸுர் நானாவின் இறைச்சிக் கடையில் போய் நின்றான்.
புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஓடிவந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தன் கடைக்கு முன்னால் வந்து நின்றவனைக் கண்டு பதறியவர்.
"ஏ.. ஸிமாக்! என்ன வாப்போய் இப்பிடி ஓடி வாற? என்ன நடந்த?" என்றார் தன் கடையில் இருந்து வெளியேறி அவனருகில் வந்து நின்று.
தான் ஓடி வந்த வழியைத் திரும்பிப் பார்த்தவன்,
"மா.. மா.. வாப்..வாப்பா அடி..க்க வாறார்"
என்றான் மூச்சிறைக்க.
"ஏன் அடிக்க வாறார். நீங்க என்ன செஞ்ச?" என்று கேட்டு முடிக்கும் போது அவனது தந்தை கடையருகே வந்துவிட்டார்.
"மன்ஸுர் நானா அவன ஓட உடாதீங்க. அப்பிடியே புடிச்சிக்கொங்க. இண்டைக்கி அவன்ட தோல உரிச்சி உங்கட எறச்சி கடைல தொங்கப் போடாம நான் இவடத்த உட்டுப் போறல்ல" என்று கத்த,
இவனோ பெரியவரின் பின்னால் ஒளிந்து மறைந்து கொண்டான்.
"பயமா இரிக்கி மாமா" என்றவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
"என்ன கத இது? புள்ள என்ன செஞ்சான் என்டு.." என்றவரை முடிக்க விடாது,
"என்ன செஞ்சானா? இவனோட எந்த நாளும் எனக்கு கரச்சல் தான். கெழமக்கி ரெண்டு நாள் ஸ்கூல் போக மாட்டான், போனாலும் படிக்க மாட்டான், படிக்கிற புள்ளையல படிக்க உடவும் மாட்டான்.
இன்டக்கி ஒங்குட ஊட்டுப் பக்கத்துல இரிக்கிற ஸஹ்ராட பட்டத்த கிழிச்சென்டு அந்தப் புள்ள அழுதுக்கு இரிக்கி, ஊட்ட போய் பாத்தா இவன் ஒளிஞ்சிக்கி இரிக்கான்.
இவன பெத்து வளத்தத ஒரு தென்னப்புள்ளய நாட்டி தண்ணி ஊத்தி இருந்தா பட்டம் செய்ய ஈக்கிலாலும் எடுத்து இரிக்கலாம்" என்க
அங்கே கூடி இருந்தவர்களுக்கு சிரிப்பு வந்தது. ஸிமாக் ஸஹ்ராவின் பட்டத்தை கிழித்தது, அவள் அழுதது என விடயம் தெரிந்தவர்கள் சிலர் அங்கே இருக்க ஒவ்வொருவரும் ஸிமாக்கின் தந்தையை சமாதானம் செய்ய ஆரம்பித்தனர்.
"சின்னப் புள்ளயல் அப்பிடித்தான். இதுக்கு போய் புள்ளய அடிக்க இம்புட்டு தூரம் வெரசிக்கி வந்தா நீங்க?
உடுங்கோ உடுங்கோ இன்டக்கி சண்ட புடிப்பாங்க நாளக்கி சேந்துக்கு விளையாடுவாங்க" என்று மன்ஸுர் நானா சொல்ல,
"இவனுக்கு பட்டம் கொண்டு வரச் சென்னதே நெனப்பு இல்ல மன்ஸுர் நானா. நெனப்பு இருந்தா பட்டம் கட்டிக் கேட்டிரிக்கணுமா இல்லையா? இண்டக்கி ஸ்கூலுக்கு போய் அந்தப் பட்டத்த கண்டு தான் நெனப்பு வந்திரிக்கும்" என்றார் தன் மகனை அறிந்தவராக.
"ஆ.. வாப்பா செல்றது உண்மையா ஸிமாக்?" என்று கேட்க
ஆம் என்று அவன் தலை ஆமோதிப்பாக மேலும் கீழும் ஆடியது.
"சரி சரி உடுங்கோ. சின்னவன் தானே வளர வளர சரியாகிடும்"
"ஆ.. சரியாகல்லன்டா நீங்கான் அவன ஒங்குட வீட்ட வெச்சி வளருங்கோ மன்ஸுர் நானா. நான் அவன என்ன என்டும் கேக்க மாட்டன்" என்றவரிடம்,
"ஆ.. அத அவன் வளரக்க பாக்கலாம் இப்ப நீங்க ஊட்ட போங்கோ. இவன் பின்னேரம் வரட்டும்" என்று அவரை அனுப்பி வைக்க, கூடி இருந்தவர்களும் கலைந்து சென்றனர்.
தன் கடை ஊழியரைப் பார்த்து,
"நான் ஊட்ட போய் சாப்புட்டு வாறன்" என்றுவிட்டு,
"வாங்க ஸிமாக்" என்று அவனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
"இன்னம் சாப்புடல்ல தானே?"
"இல்ல மாமா. வாப்பா வந்து அடிப்பார் எங்குற பயத்துல எனக்கு பசிக்கயும் இல்ல" என்றான் அப்பாவியாக.
"வந்து கைய கால மொகத்த கழுவுங்க சாப்புட" என்றவர் தானும் குளித்து விட்டு வந்து சாப்பிட அமர்ந்தார்.
சாப்பிட்டு முடிந்ததும் தன் மகனிடம்,
"ஸிமாக்குக்கும் ஸஹ்ராவுக்கும் ஆளுக்கொரு பட்டம் கட்டிக் குடுங்க மகன். அவட பட்டத்த இவர் கிழிச்சென்டு.." என்றவரை மறித்து,
"ஓம் வாப்பா இண்டக்கி ஸ்கூல்ல முழுக்க அந்தக் கத தான். இவர் கிழிச்சாம் அவ அதுக்கு க்ளாஸ்ல உருண்டு பெரண்டு அழுதாம்" என்க
"இவர அடிக்க இவங்கட வாப்பா வீட்ட இருந்து நம்முட கடை மட்டும் வெரசிக்கி வந்து.. அத ஏன் கேக்குறீங்க" என்று சிரித்தவர்,
"உம்மா கிட்ட காசு குடுத்திரிக்கன் வாங்கிக்கி போய் டிசு பேப்பர் வாங்குங்கோ" என்றார்.
"நானா ஸஹ்ராட மஞ்சளும் சிவப்பும் கலர். அதே போல ஒன்டு செஞ்சி குடுப்போம். எனக்கி பச்சையும் நீலமும் கலர்ல ஒரு பட்டம் ஸ்கூலுக்கு கொண்டு போக, நீலமும் வெள்ளையும் பாம்பு பட்டம் ஒன்டு ஊட்ட வெச்சு விளையாட" என்றான் நடந்த அத்தனையும் மறந்தவனாக.
"ஓம்.. வாப்பா வெரசக்க லாம்பெண்ண பட்ட சாரப் பாம்பு போல தல தெறிக்க ஓடினவருக்கு விளையாட பாம்புப் பட்டம் வேணுமா?" என்றான் மன்ஸுர் நானாவின் மகன்.
"அதெல்லாம் சொல்லிக் காட்டப்படா நானா. வாங்க நாம கடைக்கி போய் டிசு பேப்பர் வாங்குவோம்"
"பட்டத்துக்கு ஈக்கில் வேணுமில்லா ஒங்கட ஊட்டுல இரிக்கா?" என்று பெரியவன் கேட்க,
"இல்ல ஸஹ்ராட வீட்ட இரிக்கும். அவட உம்மா நெறைய ஈக்கில் சீவி வெச்சாம் தேவப்பட்டு புள்ளயல் வந்து கேட்டா குடுப்போம் என்டு சென்னாம். ஸஹ்ராட ஊட்ட போய் வாங்கிக்கி வரவோம் நானா. அப்படியே அவக்கும் பட்டம் கட்டித் தாரன்டு சொல்லிப் போட்டு வரவோம்" என்றவனைக் கூட்டிக் கொண்டு பெரியவன் கடையை நோக்கி நடந்தான்.
*****
"இன்னாங்க ஸஹ்ரா நான் கிழிச்ச மாதிரியே ஒரு பட்டம் கட்டித் தந்துட்டன். இனி என்னோட சண்டக்கி வரப்படா" என்று ஸிமாக் பட்டத்தைக் கொடுக்க,
"என்ன வாப்போய் ஸிமாக்! உங்க அடிக்க வாப்பா தெரத்திக்கி வந்தாம், மன்ஸுர் நானாட கட வர நீங்க ஓடிடாமே உண்மையாவா? வாப்பா அடிச்சிப்போட்டாரா மகன்?"
என்று ஸஹ்ராவின் தாயார் வாஞ்சையாக அவனைப் பார்த்துக் கேட்க,
"இல்ல மாமி, ஒரு அடி தான் முதுகுல அடிச்சார். பொறகு நான் ஓடி மாமாட கடைக்கி ஓடி வந்துட்டன். மாமா அடிக்க உடல்ல" என்றவன்
"நான் பட்டத்த வேணுமென்டு கிழிக்கல்ல. எப்பிடி கட்டி இரிக்கென்டு பெரட்டி பெரட்டிப் பாத்தன் கிழிஞ்சிட்டு"
என்று இருவரிடமும் கூறிவிட்டு,
"வாங்க நானா நாம போவோம். பாம்பு பட்டம் செய்ய நேரம் இரிக்கா இப்ப?" என்று கேட்டுக் கொண்டே பெரியவனின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
"இண்டக்கி ஊர் முழுக்க ஸிமாக் ஸஹ்ராட பட்டத்த கிழிச்ச கதயா தான் இரிக்கும் போல ஸிமாக்" என்று பெரியவன் கேட்டுச் சிரிக்க,
"ஒங்குட வாப்பா மன்ஸுர் மாமா இல்லன்டா எங்கட வாப்பா என்ட தோல உரிச்சி தொங்கப் போட்டிரிப்பார் நானா" என்று சிறியவனும் சேர்ந்து சிரித்தான்.
பல வண்ணங்களில் பறக்கும் பட்டம் போல் தானே நம்முடனே இருக்கும் சிறுவர்களும்!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம், ஒவ்வொரு குணம்!
பட்டம் பறக்கும் வானம் பார்க்க அழகு போல
சிறுவர்கள் சூழ் இவ்வுலகம் அழகே!
சிறுவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை அவர்களாக ஏற்றுக் கொள்வோம்!
அரவணைப்பும் அன்பும் அவர்களை மாற்றும்.. வெற்றியாளர்களாக்கும்!
******
கதை பற்றிய உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே!
நன்றி!
===================
வட்டார மொழிச் சொற்களின் அர்த்தம்.
எடைல - இடையில்
இரிக்கி - இருக்கு
இரியன்- இரு
வடிவா - அழகா
தாறயலா - தருவீர்களா
பின்னேரம்- மாலையில்
சொணங்குது - தாமதமாகிறது
ஜும்மா தொழுகைக்கு - வெள்ளிக்கிழமைகளில் மதியம் தொழும் தொழுகை
வெக்கன் - வைக்கிறேன்
அவிசரம் - அவசரம்
ஊட்ட - வீட்ட, வீட்டில்
உடுப்பு - உடை
ஊத்த - அழுக்கு
என்னாலும் - ஏதாவது
ஒழும்பி - எழுந்து
பெரண்டு - புரண்டு
ஸ்கூல் கலஞ்சி வந்து - பள்ளி விட்டு வந்து
ஒங்குட - உங்கள்
கரச்சல் - பிரச்சினை
கெழமக்கி - வாரத்துக்கு
மாத்திக்கி - மாதத்திற்கு
கொப்பி - Note book
உடுங்கோ - விடுங்கள்
நாளண்டக்கி - நாளை மறுநாள்
உடாதீங்க - விடாதீர்கள்
ஒங்குட ஊட்டுக்கு - உங்கள் வீட்டுக்கு
வெரசிக்கி - விரட்டிக் கொண்டு
தெரத்திக்கி - துரத்திக் கொண்டு
லாம்பெண்ண - மண்ணெண்ணெய்
உடல்ல - விடவில்லை
பெரட்டி - பிரட்டி
உழுந்து - விழுந்து

Last edited: