எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இருளின் நிழல்-அத்தியாயம்-6

Priya pandu

Moderator

அத்தியாயம்-6

சென்னையின் டிஜிபி ஆபிஸில்………. டிஜிபி கதிர்வேலன் முன்னால் உட்கார்ந்திருந்தான் அம்ரிஸ்……….​

“சொல்லுங்க அம்ரிஸ்…….. இந்த லிசா இறந்து இதுவர 2 நாள் ஆச்சி………. அந்த பொண்ணோட போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டா………..இந்த கேஸ்ல உங்க கருத்து என்ன……...”என்றார் கதிர்வேலன்………..​

“எஸ் சார்……….”என்ற அம்ரிஸ் தன் கையில் இருந்த ஃபைலை தன் எதிரில் இருந்த டிஜிபி கையில் கொடுக்க…….. அதை வாங்கியவர் பிரித்து பார்த்தவாறே அம்ரிஸை பார்த்து தலை ஆட்ட………​

அதில்…….. “சார்……. இந்த பொண்ணு லிசா கேஸ் வெரி மிஸ்ட்ரி சார்……..”என்றவன் தான் இந்த கேஸை ஆரம்பித்த நிகழ்விற்கு சென்றான்…….​

அம்ரிஸ்…… லிசா உடலை சம்பவ இடத்திலே பார்த்தவன் உடல் கோவத்தில் இறுகிப்போனது……..​

ஏனென்றால் லிசா அவ்வளவு கொடூரமான முறையில் இறந்திருந்தாள்……. அவள் உடல் முழுதும் காயங்கள் தான்…… பல இடங்களில் நககீறல்கள் தான்……. அதும் அந்த இடத்தில் எல்லாம் பாதி சதைகளை காணவில்லை………. முகம் மட்டும் சிதையாமல் இருந்தது…….​

அதனை பார்த்ததும் அம்ரிஸின் உடல் இறுகிப்போனது…….. உடனே ராஜேஷிற்கு பதில் வேறு இன்ஸ்பெக்டரை மாற்றியவன்…….​

“இந்த பொண்ணோட போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் எனக்கு நாளைக்குள்ள கிடைக்கனும் மிஸ்டர் கார்த்தி……. இந்த ஏரியாவுல இருக்குற எல்லா சிசிடிவி ஃபூட்டேஷும் எனக்கு வந்தாகனும்……. அதும் உடனே……..அப்புறம் இந்த பொண்ணோட வீட்ல உடனே இன்பார்ம் பண்ணுங்க………..”என்றவன் பாடியை உடனே ஆம்புலன்ஸில் ஏற்ற சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்……..​

ஆனால் அன்று மாலையே அவனுக்கு கிடைத்த சிசிடிவி பூட்டேஜ் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்குயது……….​

ஏனென்றால் அந்த நேரம்…….. அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி பூட்டேஜும் வர்க் ஆகாமல் சதி செய்தது தான் அவன் அதிர்ச்சிக்கு காரணம்…….. சிசிடிவி பூட்டேஜை காட்டி அதன் நிபுணர்களிடம் விசாரிக்கும் போது……..​

“சார்……. யாரோ மாஸா…… ப்ளான் போட்டு எல்லா சிசிடிவி கேமிராவையும் ஒரே நேரத்துல ஹேக் பண்ணிருக்காங்க சார்…….. அதும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாம……..”என்று கூற…….​

இந்த செய்தி அம்ரிஸை யோசிக்க வைத்தது………. அதும் அடுத்த நாள் வந்த லிசாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் அவனை அதிர்ச்சியாக்கியது…….​

“என்ன சொல்றீங்க டாக்டர்……...”என்று அம்ரிஸ் கத்த​

“எஸ் சார்…… நான் சொன்னது எல்லாமே நிஜம்………….”என்று டாக்டர் குழப்பத்துடன் கூற……..​

“அது எப்டி சார்……. அந்த பொண்ணோட உடம்புல அவ்வளவு நக கீறல் இருக்கும் போது எந்த கை ரேகையும் சிக்கலனு சொல்றீங்க…….”என்று அம்ரிஸ் எகிற​

“சார் நாங்க உண்மைய தான் சார் சொல்றோம்……. அந்த பொண்ணோட உடம்புல அங்க அங்க அடிப்பட்டு இருக்கிறது உண்மை தான்…….. ஆனா அதுக்கு நமக்கு ஆதாரமா ஒரு கைரேகை கூட கிடைக்கல சார்……… அதுமட்டும் இல்ல……. நமக்கு ஆதாரத்துக்குனு ஒரு ஹூமன் ஹேர்…….. அன்ட் அவங்களோட ஆப்டிக்கல்ஸ் எதுமே நமக்கு கிடைக்கல சார்……….”என்று அவர் கூற………​

“ம்ச்….. வாட் அப்போ நீங்க சொல்றத வச்சி பார்க்கும் போது…… இது எதோ பேய் இல்லனா சாத்தான் கொன்னதா வச்சிக்கலாமா……….”என்று அம்ரிஸ் கிண்டலாக கூற​

“நம்மளால நம்ப முடிலைனாலும்…….. இங்க அதுதான் நடந்தமாறி இருக்கு சார்……..”என்று அந்த டாக்டர் கூற​

“ஷட் அப்……… ஜஸ்ட் ஸ்டாப்…….. படிச்சவங்க தானே நீங்க இத கூடவா நம்புவீங்க…….”என்று அவன் கத்த​

“சார்……. நீங்க நம்பலைனாலும் நான் சொல்ல வேண்டியத சொல்லிடுறேன் சார்……. ஒரு சாதாரண ஹூமன் தாக்குனா அந்த அளவுக்கும் இந்த பொண்ண தாக்கிருக்குற விதத்துல இது ஒரு ஹூமன் தாக்குனது மாறி தெரில……. ஒரு சைக்கோவா இருப்பானோனு நீங்க யூகிச்சாலும் அவனும் ஹூமன் தானே………. சோ இது மிஸ்ட்ரியாதான் இருக்கு……….”என்று டாக்டர் கூற​

அதில் கடுப்பானவன்……… "வேற எதும் அந்த பொண்ண………ரேப்…....”என்று அம்ரிஸ் இழுக்க……..​

“நோ சார்….. அப்டி எதும் ஆகல……..”என்று அந்த டாக்டர் முடித்துக்கொள்ள……..​

அம்ரிஸிற்கு இந்த கேஸ் ஒரு பெரிய சவாலாகவே இருந்தது……… அவன் சோர்ந்து போனான் என்றேல்லாம் இல்லை…….. அவனுக்கு தான் சவால்கள் பிடிக்குமே……..​

இங்கு அம்முவோ……… தன்னையே குறுக்குறுவேன பார்த்துக்கொண்டிருக்கும் யுகாவை பார்த்து பக்கென்று இருந்தது……..​

“சொல்லு ருதா……. நீ என்னமோ எங்கிட்ட மறைக்கிற……..”என்று இதுவரை 10தடவைக்கு மேல் கேட்டுவிட்டான்…….. அப்போது எல்லாம் அவள் அமைதியாக அவனை பார்த்தாளே ஒழிய எந்த பதிலையும் அவள் கூற வில்லை…….​

அதற்கு காரணம் அம்ருதாவின் அந்த ஓவியம்……… அதனை பார்த்து தான் யுகா அவளை பிடித்துவிட்டான்…….​

“உன்னதானே கேக்குறேன் ருதா…...கொஞ்சமாச்சும் என்னையும் ஒரு மனுசனா மதிடீ…… உனக்காக தான் நானும் இங்க என்னோட வேலை எல்லாம் விட்டுட்டு வந்து உட்கார்ந்துருக்கேன்…… ஆனா நீ எங்கிட்ட எதையும் சொல்லல……. இன்ஃபெக்ட் உன்னோட அந்த தீஸிஸ் முடிஞ்சது கூட நானா தான் கண்டுப்பிடிச்சேன்……. இப்போ என்னனா……..”என்றவன் கோவத்தில் என்ன செய்கிறோம் என்பதை கூட மறந்தவனாக அங்கு டேபிளில் இருந்த படத்தை எடுத்தவன்…….. அதனை கிழிக்க போக………​

அவனது நோக்கம் புரிந்தவளாக………… "யுகா………..”என்று கத்தியவள் அவன் அருகில் ஓடியவள்………… அவனை கன்னத்தில் ஓங்கி விட்டாள் ஒரு அறை………​

அதில் யுகா அதிர்ந்து போய் அவளை காண………. அவளோ……. அவன் கையில் இருந்த அந்த படத்தை பிடிங்கிக்கொண்டு தன் அறைக்கு ஓடிவிட்டாள்………​

அவளின் இந்த செயலை அதிர்ந்தவாறே நின்றவன்…… பின் தன் நிலையை உணர்ந்து தலையை தொங்கப்போட்டுக்கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டான்……..​

அம்ருதாவின் இந்த நிலை அவனை பயப்படுத்தியது……….. ஏனென்றால் அவன் பார்த்தது அப்படிப்பட்ட படம்……… அது ஒன்றும் இல்லை……… அது யாரோ இரண்டு பேரின் காதல் காட்சி……….. அதும் யாரின் முகமும் அதில் தெளிவாக இல்லை…….. ஒரு மதில் மேல் உட்கார்ந்துக்கொண்டு இருவரும் நிலாவை பார்த்து காதலித்துக்கொண்டிருந்தனர்………​

யுகா தன் ஆபிஸிற்கு தேவையான ஒரு டாக்குமென்டை அம்ருதாவின் அறையில் இருந்த பீரோவில் வைத்திருக்க……… அதனை எடுக்க வந்த போது தான் அவன் கையில் சிக்கியது இந்த படம்………​

அம்ருதா எப்படி நன்றாக கதை எழுதுவாளோ அதே போல தான் நன்றாக படம் வரைவாள்…….. ஆனால் இப்போது அவள் வரைந்திருக்கும் இந்த படம்……… அவளை ராணி போலவும்…… பின்னால் ஒரு அரண்மனை போலவும்……. பக்கத்தில் ஏதோ ஒரு உருவம் நிற்பது போலவும் வரைந்திருப்பதை பார்த்தான்…….​

அதை பார்த்ததும் அவனுக்கு அது சாதாரண படம் போல தான் இருந்தது…….. அதனை வைத்து அவளிடம் விளையாடலாம் என்று தான் அதனை அவள் கண் முன்னால் கொண்டுவந்து அவளை விசாரிக்க ஆரம்பித்தான்…….​

ஆனால் அதனை கண்டு அவள் முகம் போன போக்கை கண்டு அதில் எதோ இருப்பது யுகாவிற்கு தெரிந்து போனது…….. அப்போது தான் அவனும் அந்த படத்தினை ஊன்றி பார்த்தான்……….அதும் ஏதோ வித்தியாசமான தோரணையில்……… அதன் கீழ் அம்ருதா எழுதிருந்த வாக்கியம் தான் அவனை கோவத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது………. அதனால் தான் அதனை கிழிக்க முயன்றான்………..அவன் தான் சிறு வயதில் இருந்தே அவளை பார்த்து வருபவன் ஆயிற்றே……… அவளின் உடல்மொழி, அவளின் கண்கள் சொல்லும் மொழி கூட அவனால் அறிந்துக்கொள்ள முடியும்……….. அப்படிப்பட்டவன் அவளது திருத்திரு விழிகளை வைத்து கண்டுப்பிடிக்கமாட்டானா என்ன………​

அதனால் தான் அவள் வாயில் இருந்து உண்மையை வரவழைக்க செய்தது….. அம்ருதா இதுவரை அவனிடம் நடந்துக்கொள்ளாத நடத்தையை காட்டியது……..​

இப்போது தான் அவன் மனதில் இன்னும் சந்தேகம் வலுப்பெற்றது…….. சாதாரண ஒரு ஓவியத்திற்கு போய் ஏன் இவள் இப்படி நடந்துக்கொள்கிறாள்…… என்று அவன் மூளை பரப்பரவென யோசிக்க……… அதை விட…… இப்போது தன் ருதா என்ன செய்துக்கொண்டிருப்பாள் என்று தான் அவன் மனம் யோசித்தது………​

தான் விளையாட்டாக செய்த செயல் அவளை எந்த அளவிற்கு கோவம் செய்ய வைத்திருந்தால் இதுவரை தன்னை அதட்டி கூட பேசாதவளை இன்று அடிக்க வைத்திருக்கும் என்று யோசித்தவனால் அதன் பின் தன் அறையில் உட்கார முடியவில்லை………..​

யுகா வேகமாக தன் அறையில் இருந்து வந்தவன்….. அம்ருவின் அறை வாசலில் போய் நின்றான்……….. அவனுக்கு ஏனோ தெரியவில்லை திடீர் என்று அவனுக்கு தயக்கம் அவள் அறையை தட்ட……..​

இதுவரை அவள் அறையை தட்டியது கூட இல்லை………. அதிரடியாக அவள் அறையை திறந்து சென்றுக்கொண்டிருந்தவனால் இப்போது அவள் அறையை தட்ட கூட முடியவில்லை……….​

இந்த திடீர் மாற்றம் யுகாவிற்கு பிடிக்கவில்லை……….. அதும் தான் உயிர் போல நினைக்கும் தன் ருதாவின் அறையை திறக்க அவனுக்கு உரிமை இல்லையா என்ன என்று அவன் மனம் அவனை பாடாய் படுத்தியது………​

அவள் அறையின் வாசலிலே 10நிமிடமாக நின்றவன்………. அதன் பின்னும் அங்கு நிற்க முடியவில்லை………. தன்னை தானே நொந்துக்கொண்டவனாக விருவிருவென வெளியில் சென்றுவிட்டான்……..​

இங்கு அம்ருவோ…….. தன் அறையின் பால்கனியில் இருள்படிந்த வானையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தாள்……….​

அவள் மனம் அவளை துன்புறுத்தியது………. இதுவரை ஒரு கடுமையான சொல் கூட பேசாத தானா தன் யுகாவை அறைந்திருக்கிறோம் என்று நினைக்கும் போதே அவளுக்கு கஷ்டமாக இருந்தது……… அந்த நேரத்தில் என்ன செய்கிறோம் என்று கூட யோசிக்காமல் அவனை அறைந்தது அவளை வதைக்கதான் செய்தது…….​

“ஏன் யுகா……… ஏன் என்ன இந்த நிலையில கொண்டு வந்து விட்ருக்க…….. உன்ன அடிக்கற மாறி கொண்டு வந்து நிறுத்திட்டியேடா…….. ஏன்டா என்னை இப்டி வதைக்கிற………..”என்று அவள் மனம் அவனை மனதிலே வசைப்பாட………. அவள் கண்களோ அவளையும் அறியாமல் கண்ணீரை கசிந்தது……..​

இங்கு இப்படி இருக்க………. அங்கு அம்ரிஸோ……… தன் அடுத்தக்கட்ட கேஸிற்காக பெரும்பாக்கம் புறப்பட்டான்……. அவன் ஜீப்பில் செல்லும் போது அவனுக்கு தோன்றியது அனைத்தும் லிசா கேஸை பற்றி தான்…….​

அவன் எவ்வளவோ கூறியும் டிஜிபி லிசா கேஸை க்ளோஸ் செய்ய சொல்லிவிட்டார்………..​

“ஏன் சார்…….. வருசக்கணக்கா சாட்சி, ஆதாரம் இல்லாம கேஸ் ஓப்பன்லையே இருக்கும் போது…….. இந்த கொலை நடந்து ஒரு வாரம் தான் சார் ஆகுது…….. அப்புறம் ஏன் சார் க்ளோஸ் பண்ண சொல்றீங்க……..”என்று அம்ரிஸ் அழுத்தமாக கேட்க…….​

அதில் அவனையே அழுத்தமாக பார்த்த கதிர்வேலன்………. “மிஸ்டர் அம்ரிஸ் உங்க ஆதங்கம் எனக்கு புரிது……. நாம நிறைய கேஸ் பாத்துருக்கோம்…….. ஏன் நிறைய கொலை கேஸ்ல வருஷங்கள் ஆனாலும் அத யார் செஞ்சானு ஒரு எவிடன்ஸும் கிடைக்காது………. அப்டி இருக்கப்போ……… ஒரு வாரம் ஆன இந்த கேஸ க்ளோஸ் பண்ண நினைக்கிறது….. லிசாவோட அம்மா தான்……...”என்று அவர் முடிக்க.​

அதில் அவரையே புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த அம்ரிஸ்……… "வாட்……...”என்று சத்தமாக கேட்க​

அதில் ஆம் என்று தலை ஆட்டிய டிஜிபி……… "லிசாவோட அம்மா ஒரு ஹார்ட் பேஷன்ட்….. இப்போ அவங்க இருக்குறது ஒரு க்ரிட்டிகலான கன்டிசன்ல…….. அவங்களால மேற்கொண்டு தன்னோட பொண்ணுக்கு யாரு இந்த கெடுதல செஞ்சதுனு தெரிஞ்சிக்க விருப்பம் இல்லை…….. அது அவங்க ஹெல்த்த பாதிக்கும்னு அவங்க ரிலேடிவ்ஸ் சொல்றாங்க………. நாங்க லிசா எதோ ஆக்ஸிடன்ட்ல செத்ததா நினைச்சிக்கிறோம்…… நீங்க இப்டி அடிக்கடி வந்து அவ அம்மாவ கொன்னுடாதீங்கனு சொல்றாங்க……. இதுக்கு மேலயும் யாராவது வந்து எங்கள டிஸ்டர்ப் பண்ணா லிசா அம்மா உயிர் போறதுக்கு காரணம் போலீஸ் தானு சொல்லிடுவோம்னு சொல்லிட்டாங்க……...”என்றார் பெருமூச்சி ஒன்றினை வெளியிட்டவராக​

“வாட் சார்… ஆனா அந்த பொண்ணு கொடூரமான முறையில இறந்துருக்கா சார்…….”என்று அம்ரிஸ் கத்த​

“கூல் டவுன் மிஸ்டர் அம்ரிஸ்……… இதுக்கு முடிஞ்ச எஃப்போர்ட்ட நாம போட்டாச்சி…….. அது மட்டும் இல்லாம பெரிய தலைகளோட தலையீடு லிசா வீட்டு பக்கம் இருக்கு……. அவங்களும் அவங்கள நிம்மதியா விடுங்கனு தான் சொல்றாங்க….. சோ நீங்க அடுத்த கேஸ பார்க்கலாம்…….”என்ற் முடித்துவிட்டார் அவர்​

அதில் கடுப்பானவன்………. “ஓகே சார்……...”என்று முடித்துவிட்டு வெளியில் வந்துவிட்டான்…….. ஆனால் அவன் மனம் கொந்தளித்தது……. அதும் அவனது இத்தனை வருட போலீஸ் வாழ்க்கையில் இது தான் அவன் பின்வாங்கிய முதல் கேஸ்……. அதுவே அவனை வெறியேற்றியது……..​

அப்படி கோவத்தில் இருந்தவனுக்கு தான் வந்தது அடுத்த கேஸ்………..​

(நிழல்கள் தொடரும்…….)

 
Last edited by a moderator:
Top