எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அன்பின் ராகம் (கதை திரி)

Kavisowmi

Well-known member
அன்பின் ராகம்
1
அந்த அதிகாலை வேளையில் எங்கோ தொலைவில் இருந்த கோவிலில் இருந்து கந்தசஷ்டி கவச பாடல் மெலிதாக கசிந்து வந்து கொண்டு இருந்தது. திலகவதி சமையல் அறையில் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.
ஏற்கனவே சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்திருக்க, குருமா வைப்பதற்காக கேரட், பீன்ஸ் இன்னும் தேவையானதை எடுத்தவர் ஒரு பாத்திரத்தில் வெட்டி காய்கறிகளை போட்டுக்கொண்டு இருக்க,
தன் அறையில் தூக்கம் கலைந்து கண் திறந்தான் ராம், இருபத்தியேழு வயது இளைஞன். சிவந்த நிறம், ஆறடிக்கு சற்றே குறைவான உயரம்,. சிகரெட் பிடிக்காத சிவந்த உதடு, கொஞ்சமாக சுருள் கலந்த தலைமுடி, தொடர் உடற்பயிற்சியின் விளைவாக வந்த தேவைக்கு அதிகமாக சதைபிடுப்பு எங்கும் இல்லாத உடல்வாகு என்றிருந்தான் அவன். எழுந்தவன் கண்களை திறந்து கண்ணாடியில் முகம் பார்த்தபடி நேரம் பார்க்க, வழக்கத்தை விடவும் சற்று தாமதமாக விழித்திருந்தான்.
இன்றைக்கு வாக்கிங் போக முடியாது என நினைத்தவன், முந்திய இரவு யோசித்து கொண்டு இருந்ததை தனது அன்னையிடம் கூற நினைத்தபடி வேகமாக காலை கடன்களை முடித்து, தனது மொபைலை எடுத்துக் கொண்டு தனது அன்னையைத் தேடி சமையல் அறைக்குள் வந்தான்.
அவர் தரையில் அமர்ந்து காய் நறுக்குவதை பார்த்தவன் இவனும் தாயார் அருகில் அமர, “என்ன ராம் இப்பதான் எழுந்தையா?” அப்பா கூட வாக்கிங் போகலையா? காலையிலேயே அம்மாவை தேடி வந்து இருக்கற என்ன விஷயம்?” என விசாரித்தார் அவனது அம்மா திலகவதி.
“அம்மா அது வந்து” என்றபடி வெட்டி வைத்திருந்த கேரட் இரண்டை வாயில் போட்டவன், “அம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மா இத அப்பாகிட்ட சொன்னா மொறைபாங்க, நீங்க தான் எனக்கு பதில் சொல்லணும்” என ஆரம்பித்துவிட்டான்.
“பீடிகையெல்லாம் பலமாக இருக்கு, என்ன ஆச்சு?” திலகவதி கேட்க,
“அம்மா இப்ப பார்த்து இருக்கறமே அந்த பொAண்ணு, வேணாம்மா”
“டேய் என்னடா இப்படி சொல்லற? நிச்சயத்துக்கு தேதி குறிச்சிட்டு வந்தாச்சு, இப்ப போய் இப்படி சொல்லற, தப்பு ராம்! அந்த பொண்ணுக்கு என்ன குறை? ரொம்ப அமைதியான பொண்ணு, உன்னோட குணத்துக்கும் அவளுக்கும் நல்லதாகவே பொருத்தி போகும். பார்க்க அவ்வளவு சாந்தமான முகம் அவ்வளவு அழகா இருக்கறா, பொண்ணு இல்லாத வீட்டுக்கு இனி எல்லாமுமா இருக்க போறான்னு ஆசைபட்டா, இப்போ இப்படி வந்து சொல்லற, யாராவது பொண்ண பற்றி தப்பா சொன்னாங்களா?”
“ஐயோ அம்மா அப்படியெல்லாம் எதுவும் இல்லை”
“அப்புறம் என்னடா? இப்படி வந்து சொல்லற”
“அம்மா இந்த வாட்சப் போட்டோ பாரேன்” அவன் தனது மொபைலில் எடுத்துக்காட்ட அங்கு அழகாக இளம்பச்சை சுடிதாரில் சிரித்து கொண்டு இருந்தாள் அவள்.
மொபைலை பார்த்தவர் “எவ்வளவு அழகாக இருக்கறா என்னோட மருமகள் எதுக்கு இந்த போட்டோவை காட்டின?”
“அம்மா ரொம்ப சின்ன பொண்ணா தெரியறா, உங்களுக்கு தெரியலையா?”
“இதுதான் உன்னோட பிரச்சினையா? அவளுக்கு இருபத்தியோரு வயசு முடிய போகுதுடா பார்க்கத்தான் உனக்கு அப்படி தெரியறா, உன்னோட பாட்டி என்னோட மாமியாருக்கு கல்யாணம் ஆகும் போது வயசு என்ன தெரியுமா? வெறும் பதினாலுதான். எனக்கு கல்யாணம் ஆகும் போது அப்பதான் பதினேழு முடிந்து பதினெட்டு தொடங்கிச்சு”
“அம்மா அதுக்கு பேரு கல்யாணம் இல்ல, குழந்தை திருமணம், தப்பு தப்பா சொல்ல கூடாது. அந்த காலத்தில் உங்களுக்கு மட்டும் இல்லை பாட்டியையும் கொடுமை படுத்தி இருக்கறாங்க கல்யாணம் என்கிற பேர்ல, அதில்லமா அந்த பொண்ணுக்கும் எனக்கும் நிறைய வயசு வித்தியாசம் இருக்கற மாதிரி தோணுது”
“ராம் அந்த பொண்ணு கிட்ட பேசுனயா!! அதனால்தான் உனக்கு பிடிக்காமல் போயிடுச்சா உனக்கும் வயசு இதிபத்தியேழுதான் ஆகுது, உன்னை விடவும் ஆறு வயது தான் சின்னவ. இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம், நம்ம சந்துருக்கு எப்படி முடிச்சாங்க பார்த்தியா? அவங்க ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட பன்னிரெண்டு வயசு வித்தியாசம். உனக்கு அப்படி பார்க்கலைடா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நின்றா அவ்வளவு பொருத்தமா இருக்கும்”
“அன்றைக்கு வந்தவங்க சொன்னது கவனிச்சியா? அத்தனை பேரும் உங்க ரெண்டு பேரோட பொருத்தத்தைதான் பேசினாங்க, நான் கூட இங்கே வந்ததும் போன் பண்ணி சுற்றி போட சொன்னேன் தெரியுமா?” பேசியபடி கேஸ்டவ்வை பற்ற வைத்து ஒரு புறம் குருமாவிற்கு தாளித்து விட்டவள், அடுத்த அடுப்பில் சப்பாத்தி கல்லை வைக்கவும்,
பிசைந்து வைத்த மாவை உருட்டி சப்பாத்தி போட ஏதுவாக தேய்த்து தந்தபடி “அம்மா” என மறுபடியும் ராம் ஆரம்பித்தான்.
“ராம் இனி பேசினா கோபம் வந்துவிடும், கொஞ்சம் யோசித்து பாரு இத மாதிரி நீயும் என்னுடைய மருமகளும் சமையற்கட்டுல பேசி சிரிச்சிட்டே சமையல் பண்ணினா எவ்வளவு அழகா இருக்கும். நான் ஒரு பக்கம் கனவு கண்டுட்டு இருக்கிறேன். நீ என்னடான்னா வந்து இப்படி சொல்லற. போ போய் ரெடி ஆகிட்டு வா சமையல் வேலை முடிஞ்சது, அப்பாவும் இப்ப வந்திடுவாங்க, என்கிட்ட சொன்னது மாதிரி வேற யார் கிட்டேயும் உளரி வைக்காத, அவங்ககிட்ட சொல்லிட்டோம், அவங்க உறவுக்காரங்ககிட்ட சொல்ல ஆரம்பிச்சுட்டேன்னு நேற்று போன் பண்ணினாங்க, இனி வேண்டாம், பிடிக்கலைன்னு சொன்னா அது அந்த பொண்ணதான் பாதிக்கும் புரியுதா? பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இப்ப வேண்டாம்னா பொண்ணு சரியில்லை போல, அதனால்தான் வேண்டாம்ன்னு சொல்லறாங்கன்னு பேச ஆரம்பித்தா கஷ்டம். நம்மால வாழ்ந்ததாகதான் இருக்கணும், யாரும் கெட்டு போனதா சொல்ல கூடாது. என்ன சரியா?”
“ம் சரிம்மா” என்றபடி மாடி ஏறியவனுக்கு இரண்டு நாட்கள் முன்பு பார்த்த அந்த முகம் மனதில் தோன்றியது. சுமித்ரா ஓரளவு உயரம், இடுப்பு வரை நீண்ட தலைமுடி. கண்களில் இவனை பார்த்த போது தோன்றிய சிறு குறும்பில் பார்த்த நொடியே இவனை அவள் அடியோடு சாய்த்திருந்தாள்.
மல்லிகா ராகவேந்தரின் ஒரே தவபுதல்வி. இவர்கள் மொத்தமாக பதினோரு பேர் பார்க்க சென்றிருக்க, அங்கும் அது போல பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் என பதினைந்து பேருக்கு மேல் இருந்தனர்.
“பொண்ணு ரொம்ப அமைதி. அதிர்ந்து பேச தெரியாது எங்க வீட்டு பொண்ண கட்டிக்க உங்க பையன் கொடுத்து வச்சிருக்கணும்” என்பது போல இவர்கள் காதுபடவே பேசினர்.
திலகவதி பெண்ணை அழைத்து வரவும் இயல்பாக அழைத்து அருகில் அமர்த்தி கொண்டார்.
“என்னமா படிச்சு இருக்கற?” திலகவதி கேட்க, சங்கீதம் போல விழுந்தது அவளது குரல்.
“பிஎஸ்சி பிசிக்ஸ்” என அவள் கூறியது அவ்வளவு இனிமையாக இருந்தது. அதுவரை அவளை நிமிர்ந்து பார்க்க தயங்கிய ராம் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
மாநிறத்திற்கும் சற்றே கூடுதல் நிறம். ஏனோ இங்கு அழைத்து வந்த கூச்சமோ ஏதோ.
முகம் லேசாக முத்து முத்தான வியர்வையோடு பிங்க் நிறத்தை தத்து எடுத்து இருந்தது.
திலகவதி தன் கைகளுக்குள் அவளது கையை வைத்தபடி “பயப்படாத சுமித்ரா இதெல்லாம் இயல்பாகவே நடக்கற விஷயம்தான், ராம் ரொம்ப நல்லவன், உன்னை பூ மாதிரி பார்த்துப்பான். இங்கே நீ எப்படி இருந்தியோ அதே மாதிரி அங்கேயும் இருக்கலாம். உன்னை கேள்வி கேட்க அங்கே யாருமே கிடையாது”
திலகவதி கேட்ட ஒவ்வொன்றிற்கும் சுமித்ரா பதில் சொல்லச் சொல்ல, தன்னை அறியாமல் அவளது முகத்தை பார்த்து கொண்டு இருந்தான் ராம்.
திலகவதிக்கு கேட்டது வரைக்கும் திருப்தியை தர, நிமிர்ந்து ராமிடம் பிடித்து இருக்கிறதா என கேட்க நினைத்தவர் அவனது முகம் பார்த்தே புரிந்து கொண்டார்.
“எங்களுக்கும் பொண்ண ரொம்ப பிடித்து இருக்கு. ராம் ஏதாவது பொண்ணுகிட்ட பேசறதுன்னா பேசிவிட்டு வா” என்றுவிட்டார்.
ஐந்து நிமிடத்தில் பேச அருகில் இருந்த அறை ஒதுக்கித் தரப்பட, கொஞ்சம் பதட்டதோடு ராமும், அதை விட பதட்டத்தோடு சுமித்ராவும் நின்றிருந்தனர்.
சுமித்ரா சேலையின் முந்தியை திருகியபடி நிற்க, ராமோ பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தில் தோன்றி இருந்த வியர்வையை துடைத்து கொண்டு இருந்தான்.
“என்னை உனக்கு பிடிச்சிருக்குதா?” என இவன் கேட்க, அதே நேரம் அவளும் அதையே கேட்டிருந்தாள். ஒரே நேரத்தில் இரண்டு பேரும் ஒன்றையே கூற இருவர் முகத்திலும் லேசான புன்னகை தோன்றி இருந்தது.
“சுமித்ரா” என மறுபடியும் ஆரம்பித்தவன் ”லேடிஸ் பஸ்ட், என்ன உங்களுக்கு பிடித்து இருக்கா?” என இவன் கேட்க,
பிடித்து இருக்கிறது என்பது போல அவள் தலையாட்டினாள்.
“உங்களோட வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குது, பேசறதே பாடற மாதிரி அவ்வளவு இனிமையாக இருக்குது, சோ. தலையாட்டாம பதில் சொல்லுங்க”
“பிடிச்சிருக்கு”
“போதுங்க” என்றபடி வெளியேறி இருந்தான்.
இவன் தந்தை அருகில் போய் நிற்கவும், திலகவதி சுமித்ராவின் தாயார் மல்லிகாவிடம் “எங்களுக்கு பொண்ண பிடிச்சி இருக்கு போய் சீக்கிரம் நல்ல நாள் பார்த்துவிட்டு நிச்சயம் பண்ணிடலாம்” என சொல்லிவிட்டு புறப்பட தயாராகினர்.
“ராம் போகலாமா?”
“சரிமா”
“என்ன சரி? பொண்ணு கிட்ட நம்பர் ஏதாவது வாங்கினயா? நீ நம்பர் கொடுத்தாயா?”
இல்லை என்பது போல அவன் தலையாட்ட,
“இரு நான் வாங்கிட்டு வரேன், இந்த காலத்தில் இப்படியும் பிள்ளைங்க இருக்கதான் செய்யுது. சுமித்ரா போன் நம்பர் தாம்மா, எனக்கு உன்கிட்ட பேசணும்ன்னு தோணினா கூப்பிடுவேன்ல” என நம்பரும் வாங்கி இவனிடம் தந்து இருந்தார்.
அன்று இரவே ‘குட் நைட்’ மெசேஜ் தட்டி விட்டவன், அவளை வாட்ச்சப்லும் இணைத்து இருந்தான். இயல்பாக எதாவது போட்டோ அனுப்பு என இவன் கேட்க, அவள் அனுப்பிய புகைப்படம் பார்த்தவனுக்கு குழப்பம் தோன்றி இருந்தது.
இந்த வார இறுதியில் நிச்சயம் செய்வதாக கூறியிருக்க அவள் அனுப்பி இருந்த புகைப்படத்தில் ஜூன்ஸ் டீசர்ட்டில் பதினைந்து, பதினாறு வயது பெண் போல மிகவும் சிறியவளாக தெரிந்தாள்.
இப்போது தனது தாயாரிடம் பேசவும் கொஞ்சம் திருப்தியாக உணர, வேகமாக குளித்து புறப்பட்டு வெளியே வந்தான். தந்தை டைனிங் ஹாலில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிட்டு கொண்டு இருக்க, அருகில் சென்று அமர்ந்தான்.
இவனை பார்த்ததும் தட்டில் சாப்பிட திலகவதி எடுத்து வைக்க, தகப்பனார் கிருஷ்ணனோ “ராம் இன்றைக்கு சாயங்காலம் கடைக்கு போகணும், பொண்ணுக்கு சேலையும் அப்படியே மோதிரமும் வாங்கணும். இன்றைக்கு வாங்கிட்டா மத்த வேலை பார்க்க சரியாக இருக்கும் என்ன சொல்லற?” என விசாரித்தார்.
“சரிப்பா”
“என்னவோ போடா, என்ன சொன்னாலும் ஒரே ஓரு வார்த்தையில் பதில் சொல்லற. திலகவதி நான் கிளம்பறேன்” என கிளம்பிப் போனார்.
ராமின் தந்தை அருகிலேயே ஸ்டேஸ்னரி பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி விற்று கொண்டு இருந்தார். ராம் படித்து முடிக்கவும் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலேயே அக்கவுண்டன்சி வேலை கிடைக்க, ஆரம்பத்தில் பதினைந்து ஆயிரமாக இருந்த சம்பளம் இப்போது இருபத்தைந்தாக மாறி இருந்தது. சம்பளம் சற்றே குறைவாக தோன்றினாலும் தாய் தந்தையை அருகிலேயே இருந்து பார்க்க வேண்டும் என்பது அவனது ஆசை. அதற்கு ஏற்றாற் போல் வேலையும் அமைய, வாழ்க்கை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நடந்து கொண்டு இருந்தது.
இவன் சாப்பிட்டு முடித்து எழுந்தவன் “அம்மா நானும் ஆபீஸ் கிளம்பறேன்மா”
“சரி ராம். அப்பா சொன்னது ஞாபகம் இருக்குல்ல. சாயங்காலம் கடைக்கு போகணும் சீக்கிரமே வந்துவிடு” என்ன கூறியபடி கதவை அடைத்தவருக்கு,
தனக்கு பின்னால் பாசத்தோடு அணைத்தபடி “எங்க அம்மா குணத்துக்கு இங்க வர்ற பொண்ணுங்க கொடுத்து வச்சி இருக்கணும். லவ் யூ மாம்” என மகன் சொன்னது ஞாபகம் வர, புதிய உறவு வரப்போகும் நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.
 
Last edited:

Kavisowmi

Well-known member
2
அர்ஜூனனின் பார்வை இப்படி தான் இருந்து இருக்குமோ? நேர் கொண்ட பார்வை கூடவே இலக்கை விட்டு இங்கும் அங்கும் நகராத குறி விலகாத பார்வை! தொலைவில் தெரிந்த பறவையை தனது டிஎஸ்எல்ஆர் கேமராவில் படம் பிடித்து கொண்டு இருந்தான் குரு.
அவசர தேவைக்கான சில முக்கிய பொருட்கள் இருக்கும் சிறு பேக்கை முதுகில் மாட்டி இருந்தவன், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக பறவையை படம் பிடிக்க அருகில் இருந்த உயரமான மரத்தின் மேல் படுத்தபடி பார்த்துக் கொண்டு இருந்தான். எதிர்பார்த்த பறவை கிடைக்காவிட்டாலும் இன்று அவனது கேமராவிற்கு நல்ல தீனி கிடைத்து இருந்தது.
குரு!! இவனை பற்றி என்ன சொல்ல?! இன்னும் சில மாதங்களில் இருபத்தி ஆறு வயதை தொடப்போகிற இளைஞன். ஆறடி உயரம். சக மனிதர்களை போல மாநிறம், முகத்தில் எப்போதும் நிரந்தரமாக உறைந்திட்ட சிரிப்பு. கண்களில் பவர் கிளாஸ் உபயம் தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்த்ததினால். காற்றில் கலைந்தாடும் தலை கேசம். கொஞ்சம் தாடியுண்டு. ஒரு வாரமாக காட்டில் சுற்றுவதினால்! யார் இங்கே பார்க்க போறா, அதுவும் இந்த ஆட்களே இல்லாத காட்டில், இதுவும் ஒரு காரணம்.
ஒரே ஒரு குறிக்கோள்தான் இவனுடையது. வாழ்க்கை வாழ்வதற்கே! அனைத்து ஊர்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும். இவன் கால்தடம் பாதிக்காத இடம் இருக்க கூடாது. இவனது வீட்டிலும் இவனது விருப்பத்திற்கு தலை சாய்க்க அன்றிலிருந்து இன்றுவரை இவனது வேலையே பொழுது போக்காய் மாறிவிட்டது. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தது. படிப்பு முடியும் போதே கேம்பஸ்சில் செலக்ட் ஆகி இருக்க, அப்போது ஆரம்பித்தது இந்த ஊர் சுற்றும் படலம்.
முதலில் பதினோரு மாத அக்ரிமெண்ட்டில் வேலை கிடைத்தது சென்னையில்.
அந்த பதினோரு மாதமும் சென்னையின் அவன் கால் பதிக்காத, பார்க்காத இடம் இல்லை எனும் அளவிற்கு சுற்றி இருந்தான். அடுத்தது மும்பை, அங்கு முடியவும் மத்திய பிரதேசம் தற்போது பெங்களுரில் வேலைக்கு செலக்ட் ஆகி இருந்தான். கிடைத்த விடுமுறையை செலவு செய்ய இந்த முறை இந்த காட்டை தேர்வு செய்திருந்தான்.
இவனது ஹாபி போட்டோ எடுப்பது, எடுத்த போட்டோகளை எக்ஷிபிஷன் போல நடத்துவது. அது மட்டும் இல்லாமல் ஸ்கூல், காலேஜ் என்ன அவ்வப்போது இவனது புகைப்படத்தை கண்காட்சியாக வைத்து கொண்டிருந்தான். சிறப்பான புகைப்படத்தை போட்டிகளுக்கும் அனுப்பி வைத்து, அதற்கும் பரிசுகளை வாங்கி கொண்டு இருந்தான்.
தற்சமயம் வந்தது கூட அமெரிக்காவில் நடக்க இருக்கும் புகைபட போட்டியில் கலந்து கொள்ள புகைப்படம் எடுக்கத்தான். அதற்கு இந்த காட்டைத் தேர்வு செய்திருந்தான். இங்கு வந்து முழுதாய் பதினைந்து நாட்கள் முடிந்திருக்க, இன்றோடு புறப்பட்டு விட வேண்டும் அவன்.
இந்த பதினைந்து நாட்களுமே தங்கி இருந்தது அருகில் இருந்த மலைகிராமத்தில். அவர்களோடு நன்றாகவே இந்த நாட்களில் பழகி இருந்தான். எப்போதும் முன் எச்சரிக்கை அதிகம், அதனால் கூடவே அவர்களின் ஒருவனை அழைத்து வந்திருந்தான்.
இவனது முடிவை சொன்னபோது இவனது தாயார் சொன்னது “உன்னோட ஆசைக்கு கொஞ்ச நாள் சுற்றிக்கோ. அதுக்காக உனக்குன்னு எந்த பொறுப்பும் இல்லைன்னு அர்த்தம் இல்லை. உன்னோட பாதுகாப்பு முக்கியம், எங்கே எவ்வளவு தூரம் போனாலும் இங்கே உனக்காக ஒரு குடும்பம் காத்திட்டு இருக்கு அப்படிங்கறத மறக்க கூடாது”
“மாம்! ஏன் இப்படி பேசறிங்க?”
“தப்பா எதுவும் செய்யமாட்டேன்னு நம்பிக்கை இருக்கு குரு, ஆனாலும் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை இல்லையா?”
“மாம், தப்பா எதுவுமே நடக்காது என்னுடைய கல்யாணம் கூட உங்களுக்கு பிடித்த பெண் கூட தான் நடக்கும். நீங்க கவலையே பட வேண்டாம்” அப்படி ஒவ்வொரு முறையும் சொல்லி வருபவன் தான்.
கொஞ்சம் அம்மா மீது எப்போதுமே உரிமை அதிகம் இவனுக்கு. படித்தது ஹாஸ்டலில் அப்போது இருந்தே விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு செல்வது.
ஒவ்வொரு முறையும் இவன் விடுமுறை முடிந்து புறப்படுகையில் இவன் தாயார் “நாலு நாள் தங்கறே, ஆனால் அடுத்த தடவை எப்ப வருவேன்னு என்ன ஏங்க வைக்கறடா” என்பார்.
இந்த முறை அவனுடைய குடும்பத்தோடு பேசியே முழுதாய் பதினைந்து நாட்கள் முடிந்து இருந்தது. டவர் இல்லாத காட்டு பகுதி. புறப்பட வேண்டும் என நினைக்கவும் அனைவரது முகமும் கண்முன் வருகிறது.
நேரம் பார்க்க, மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது. இப்போதே லேசாக பனி விழ ஆரம்பித்து இருக்க, காற்றோடு இலேசாக குளிர ஆரம்பித்து இருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் இருட்டி விடும் எனப் புரிய, அவனை தாண்டி இரண்டு கிளைகளுக்கு அப்பால் படுத்திருந்தவனைப் பார்த்தான்.
இவனுக்குதான் இந்த காடு அதிசயம், சற்று தொலைவில் படுத்து இருந்தவனுக்கு இல்லை போலும். நீண்ட மரத்தில் குப்புற படுத்தபடி கீழே விழாமல் இருக்க, மரத்தை இருக்கி அணைத்தபடி நல்ல தூக்கத்தில் இருந்தான்.
தனது கையில் இருந்த கேமராவை பாதுகாப்பாக எடுத்து வைத்தவன், சற்றே இறங்கி அவன் இருந்த கிளைக்கு சென்றவன் “டேய் மாறா, எழுந்திரு” என தட்டினான்.
கண்ணை கசக்கியபடி விழித்தவனை “டேய் கீழ விழுந்துடாதே, எலும்பு மிஞ்சாது”
“முடிஞ்சுதுங்களா துரை. போகலாமா?”
“போகலாம், இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிடும், அப்புறம் இங்கே இருக்கிறது ரிஸ்க்” பேசியபடி இவன் இறங்க, இவனை தொடர்ந்து அவனும் இறங்கினான்.
“என்னா தூக்கம் தூங்கற?“

“அது வந்து துரை பொண்சாதி மாசமா இருக்கறா இல்லையா, ராத்திரி ஆனா காலு நோவுது கை நோவுதுன்னு தூங்க மாட்டேங்கறா. அவ கூடவே முழிச்சி இருக்கிறானா இந்த காற்றுக்கு தூக்கம் வந்திடுது”
‘சரி தான் நீ பாட்டுக்கு என் கூட வந்துட்டே. காலையில் யார் பார்த்துப்பா?”
“அவளோட அம்மா, என்னோட அம்மா ரெண்டு பேரும் பக்கத்தில் தான் சாமி இருக்கறாங்க நல்லா பார்த்துப்பாங்க”
இரண்டு பேரும் பேசியபடி அவன் தங்கி இருந்த கிராமத்தை நோக்கி நடக்கத் துவங்கினர். குரு நடக்க சற்றே திணறினான், மாறனுக்கு அது ஒன்றும் கஷ்டமான காரியமாக தோன்றவில்லை. அசால்டாக வேகமாக நடந்து கொண்டு இருந்தான். நடக்கின்ற அலுப்பு தெரியாமல் இருக்க அவனிடம் பேசியபடி வந்து கொண்டிருந்தான் குரு.
“மாறா, இங்கே விலங்குகளோட நடமாட்டம் கிடையாதா”
“ஏன் அப்படி கேட்கறிங்க? போன மாசம் கூட புலி ஊருக்குள்ள வந்துட்டு போச்சு, அப்புறம் காட்டெருமை அடிக்கடி வரும். யானை சொல்லவே வேண்டாம். அடிக்கடி வரும். நீங்க தான் பார்த்திருக்கறிங்களே”
“பயம் இல்லையா உங்க ஆளுங்களுக்கு? கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல இங்கே இருக்கிறிங்க”
“துரை இங்கேயே வாழ்ந்தாச்சு புதுசா எங்கேயும் போய் வாழ முடியாது. இந்த பூமி தான் எங்களோடு, இத விட்டுட்டு எங்கேயும் போக மாட்டோம்”
“இந்த கவர்மெண்ட் உங்களுக்கு எதுவுமே செய்யலையா? இங்கே கரண்ட் இல்லை, தண்ணீர் கூட இங்கே இருக்கற ஓடையில் தான் எடுக்கறிங்க, ரோடு வசதி இல்லை, ஏதாவது வேண்டும்னா மலையவிட்டு இறங்கி தான் போகணும். முக்கியமா ஏதாவது வேணும்னா என்ன செய்விங்க?”
“ரேசன்கார்டு தந்து இருக்கே, அத வாங்க போக கூட திருவிழா மாதிரி போவாங்க மொத்தமா. கீழே போனா டிரக் வரும், அதுல போனம்மின்னா மதியம் போய் சேர்ந்திடலாம். பொருட்களை வாங்கிட்டு அதே டிரக்ல இங்கே வந்தா மறுபடியும் வீட்டு வந்து சேர ராத்திரி
ஆகிடும். அப்புறம் இங்கே விளையற கிழங்கு தான் பாதி நாள் சாப்பாட்டுக்கு”
இவர்கள் பேசியபடியே இருப்பிடத்தை அடைந்து இருந்தனர். தனக்காக ஒதுக்கி இருந்த குடிசை பகுதிக்குள் நுழைந்தவன், நாளை செய்ய வேண்டியதை பட்டியல் இட்டபடி ஏற்கனவே கேமராவில் பதிவு செய்திருந்த படத்தை ஓட விட்டான்.
முதல் படத்தில் பாம்பு தன் இரையை விழுங்கிக் கொண்டிருக்க, அடுத்த படத்திலோ அதே பாம்பை கழுகு கவ்விக்கொண்டு இருந்தது. இயற்கையின் உணவுச் சங்கிலியை இவன் வியந்தபடி இருக்க, மாறன் சாப்பிட கிழங்கு மற்றும் கொஞ்சம் தேனோடு வந்து இருந்தான். இருந்தாங்க துரை இன்றைக்கு சாப்பிட்டு இதுதான்”
“என்ன மாறா, வாசமே தூக்கலா இருக்கு?”
“கிழங்கு தான், அதுல கொஞ்சம் மசாலா போட்டு இருக்கறாங்க. வெறும் கிழங்க இந்த தேன்ல முக்கி சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும். சாப்பிட்டு பாருங்க துரை”
“தேங்க்ஸ், இங்கே உன்னோட அறிமுகம் மட்டும் கிடைக்கலைன்னா ரொம்ப கஷ்டப்பட்டு போய் இருப்பேன்”
“துரை எனக்கு அங்கே இருந்து வர்ற டிரக் ஒட்டற டிரைவர் என்னுடைய நண்பன் அவன் சொன்னா என்ன உதவி வேணும்னாலும் செய்வேன். சாப்பிடுங்கள் உங்க கூட தூங்கற பையனை வரச்சொல்லறேன்”
“உட்காரு மாறா நீயும் சாப்பிடு”
“அங்கே பொண்சாதி சாப்பிடாமல் காத்திட்டு இருப்பா” அவன் வெட்கப்பட்டு சிரிக்க, அவனது முகம் பார்த்தவனுக்கும் சிரிப்பு வந்தது.
எளிய மனிதர்கள் அவர்களது எண்ணமும் எளியது. இவ்வாறு மனதில் நினைத்தவன் “சரி நீ கிளம்பிக்கோ நான் பார்த்துக்கறேன்”
“ஏதாவது ஓன்றுன்னா சத்தம் கொடுங்க, பக்கத்து குடிசையில்தான் இருப்பேன்” இதுவும் இவன் இங்கு வந்த நாளில் இருந்து தினமும் சொல்வது தான். இரவு கூட வீட்டிற்கு இரண்டு பேர் என காட்டு விலங்குகள் வருகிறதா என பார்க்க காவல் காத்துக்கொண்டு இருந்தனர். இவன் இங்கே வந்த அடுத்த நாள் கூட சிறுத்தை புலி நுழையவும், அதை துரத்த விடிய விடிய விழித்திருந்தனர்”
காலையில் புறப்பட ஏதுவாக குரு வைத்திருந்த சிறு பையில் மொத்த பொருட்களையும் அடைக்க ஆரம்பித்தான். ஐந்து மணிக்கு எழுந்து புறப்பட்டால் சரியாக பத்து மணிக்கு டிரக்கில் ஏறிவிடலாம் என நினைத்தபடி, மறுபடியும் கூட ஒரு முறை இதுவரை எடுத்த புகைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தான்.
அவனுக்கு பெஸ்ட் என தோன்றுவதை தனது பாக்கெட்டில் இருந்து சிறு டைரியில் குறிப்பெழுதி வைத்து விட்டு நிம்மதியாக கண் மூடினான். ஆனால் விடியற்காலம் நான்கு மணியை தொடும் போதே பரபரப்பு தொற்றி கொண்டது. அந்த நேரத்தில் மாறனின் மனைவிக்கு இடுப்பு வலி துவங்கி இருக்க அவளது சத்தம் கேட்டு கண் விழித்தவன் வேகமாக அருகில் இருந்த அவனது குடுசைக்கு அருகில் சென்றான்.
ஏற்கனவே பலரும் அருகில் கூடி இருக்க அவர்களோடு இவனும் நின்றிருக்க குடிசையின் உள் இருந்து வந்த வயதான பாட்டியோ “கழுத்துல குடல் சிக்கி இருக்கு. பிள்ளை வலி தான், உசிற காப்பாத்தனும்னா டவுன் ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போங்க. இனி இந்த உசிரு சாமி கைலதான் இருக்கு” என்றபடி நகர.
நிமிடம் கூட தாமதிக்காமல் வேகவேகமாக வேலையில் ஈடுபட்டனர் அங்கிருந்தவர்கள் இரண்டு பெரிய மூங்கில் எடுத்து வரப்பட்டு அதில் தொட்டில் போல கட்ட நால்வர் ஆளுக்கு ஒரு புறமாக பிடித்து கொள்ள மாறனின் மனைவி வள்ளி அதில் ஏற்றப்பட வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தனர். கூடவே குருவும் அவர்களோடு இறங்க ஆரம்பித்தான். இதயம் முழுவதும் பயம் அவனது மனதில் அந்த நிமிடம் இருந்தது. கூடவே இந்த அரசாங்கத்தின் மேல் முதல் முதலாக கோபம் வந்தது.
இத்தனை பேர் இருக்கும் இடத்தில் சிறு சுகாதார நிலையம் கூட இல்லாதது வெறுப்பாய் இருந்தது. பாதி தூரம் வரும் போதே தனது நோக்கியா செல் பேசியில் பேட்டரியை போட்டவன் சிக்னல் ஏதாவது கிடைக்கிறதா என்பதை பார்த்தபடி வேகமாக இறங்கினான். எப்போதுமே காடுகளுக்கோ சிக்னல் இல்லாத பகுதிக்கு செல்லும் போது இரண்டு பேட்டரிகளை முழுவதுமாக சார்ஜ் செய்தபடி தனியாக கவரில் போட்டு எடுத்து செல்வது அவனது வழக்கம்.
இன்றும் அது போலவே கொண்டு வந்திருந்தான்.
வள்ளியின் இடைவிடாத சத்தத்தோடு கூடவே “இன்னும் கொஞ்ச தூரம் தான், அழாதே போய்விடலாம்” என்ற சமாதான குரலும் போட்டியிட, சற்றே சிக்னல் கிடைக்கவும் அவசர ஆம்புலன்ஸ் தேவைக்கு போன் செய்தவன் விவரம் கூற உடனே புறப்படுவதாக கூறி இருந்தனர்.
சிறு ஓடையை தாண்டி வரவும் ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருக்க, முதலுதவியை முதலில் செய்தவர்கள், நேராக கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வண்டியை வேகமாக விட்டனர். மனைவியின் கூடவே ஏறிய மாறனின் கையில் பாக்கெட்டில் இருந்து மொத்த பணத்தையும் எடுத்து கையில் கொடுத்தவன், “செலவுக்கு வச்சிக்கோ எதுவும் ஆகாது. நான் மறுபடியும் உன்ன வந்து பார்க்கறேன்” என சொல்லவும். அந்த நேரம் மாறனின் கண்களுக்கு குரு கடவுளாகத்தான் தெரிந்தான்.
ஆம்புலன்ஸ் புறப்படவும் அடுத்து வர இருக்கின்ற டிரக்கிற்காக காத்திருக்கும் போது தான் நிறைவாக உணர்ந்தான் குரு. தன்னால் ஆன உதவியை செய்த நிம்மதி மனதில் இருந்தது. யாருமே சாதிக்க முடியாததை தான் மட்டும் தனியாக சாதித்த உணர்வு இருந்தது. இரங்கும் போது இருந்த பரபரப்பு குறைந்து இருக்க, வழியில் இருந்த கல்லில் அமர்ந்தான் கொஞ்சம் ஆசுவாசமாக.
 
Last edited:

Kavisowmi

Well-known member
3
மாலை ஐந்து முப்பதை தொடும் போதே அழைக்க ஆரம்பித்து இருந்தார் திலகவதி. போனை அட்டென் செய்தவனிடம் “புறப்பட்டாச்சா ராம், ஒரு மணி நேரம் முன்னாடியே பர்மிஷன் கேட்க சொன்னேனே. கேட்டதானே நான் இங்கே புறப்பட்டாச்சு, நீயும் நானும் தான் போக போறோம், அப்பாவுக்கு கடையில் வேலை இருக்குன்னு சொன்னாங்க”
“ம், சரிமா, கிளம்புறேன்” தனது சீட்டில் இருந்து எழுந்தவன் சக நண்பர்களை பார்க்க,
அருகில் அமர்ந்து இருந்த நண்பனோ “என்ன அம்மா பிள்ளையை, அம்மா கூப்பிட்டாச்சா?”
“போடா” என்றவன் கையில் கிடைத்த பென்சிலை வீச, அதை அப்படியே கேட்ச் செய்தவன் “ஆல் த பெஸ்ட் ராம்” சத்தமிட, சிரித்தபடி தலையாட்டி விட்டு புறப்பட்டான்.
இவனது ஆபீஸ் செல்வபுரம் பகுதியில் சற்றே உட்புறத்தில் இருந்தது. முதல் மாடி முழுவதும் இவர்களது ஆபீஸிற்காய் தேர்வு செய்து இருந்தனர். தனது ஹெல்மெட்டை தலைக்கு அணிந்தவன் தனது ஹீரோ ஹோண்டாவை உயிர்பித்தான். ராமுடைய நல்ல பழக்கங்களில் ஒன்று தலைகவசம் இல்லாமல் வண்டியை தொட மாட்டான், இன்றும் அது போலவே தனது வீட்டை நோக்கி வண்டியைத் திருப்பினான்.
இவனது வீடு வடகோவை பகுதியில் இருந்தது. ஆரம்பத்தில் இவர்கள் இந்த வீட்டை வாங்கிய பொழுது இவனுக்கு வயது ஐந்து இருக்கலாம். வெகுவாக வீடுகள் இல்லாமல் அமைதியாக இருந்த ஏரியா, தற்சமயம் பெரிய பெரிய கட்டிடங்கள், கடைகள் என வெகுவாக மாறி இருந்தது. இப்போதெல்லாம் இருபத்தி நான்கு மணி நேரமும் வண்டிகளின் ஓயாத சத்தம் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும்.
மூன்று செண்ட் இடத்தில் முன் புறம் வண்டி நிறுத்த சிறு போர்டிகோ, கூடவே கேட்டின் அருகே ரோஜா செடி சிலதும். மறுபுறத்தில் செம்பருத்தி செடி இருக்க, ரோட்டில் இருந்த பெரிய புங்கை மரம் எப்போதும் குளிர்ந்த காற்றை இவர்களுக்கு பரிசளித்துக் கொண்டு இருந்தது.
கீழே ஹால், கிச்சன், தாய் தந்தைக்கு பெட் ரூம் என கட்டியிருக்க மாடியில் அதே போல பெரிய ஹால் இரண்டு பெட் ரூம் கட்டியிருந்தார்கள். வீட்டின் அருகே வண்டியை நிறுத்தியவன் அழைப்பு மணியை அழுத்தவும் கதவைத் திறந்தவர்,
“வா, வா உனக்காக தான் காத்து இருக்கிறேன். போ போய் டிரஸ்சேஞ்ச் பண்ணிட்டு வா காபி எடுத்து வைக்கிறேன்”
“அம்மா இந்த டிரஸ்சே நல்லாதானே இருக்கு. முகம் கை கால் கழுகினா பத்தாதா?“
“பத்தாதுடா, ஆபீஸ்க்கு போட்ட டிரஸ்ஸோட வருவாயா? நல்லதா போட்டுட்டு வா. சோம்பேறி”
“அம்மா பக்கத்தில் இருக்கற கடைக்கு இது போதாதா?”
“டேய் நாம இப்போ பொண்ணு வீட்டுக்கு போயிட்டு, கடைக்கு போக போறோம்”
“என்னது பொண்ணு வீட்டுக்கா? இப்போ எதுக்கு அங்க போகணும்? துணிக்கடைக்கு தானே போகணும்ன்னு சொன்னிங்க?”
“நிச்சயம்ன்னா சும்மாவா? அந்த பொண்ணுக்கு நம்ம சார்பாக மோதிரம் போடணும்டா அதற்கு அளவு வாங்க வேண்டாமா? சீக்கிரம் கிளம்புடா, ஏதாவது சொல்லிட போறேன். அவனவன் பொண்ண பார்க்க, பேச ஐடியா கிடைக்கலைன்னு சுற்றுவான். இங்கே நானே இவனுக்கு எடுத்து கொடுத்தாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கறான் தத்தி”
“நடந்துங்க அம்மா நடந்துங்க. அங்கே யாராவது என்னுடைய முகத்தை பார்க்கட்டும் அப்புறம் இருக்கு”
“என்னடா ஓவரா மிரட்டற? அன்றைக்கு எல்லோரும் ஆர்வமா வரப்போகிற மாப்பிள்ளையை வேடிக்கை பார்த்தாங்க, இன்றைக்கு எல்லாம் அங்கே யாருமே இருக்க மாட்டாங்க, பொண்ணும் பொண்ணோட அப்பா அம்மாதான் இருப்பாங்க. போயிட்டு வந்துவிடலாம்” பேசியபடியே கையில் எடுத்து வந்த காபியை இவனது கையில் தர, வாங்கி அருந்தியபடி
“இது வேண்டாத வேலைமா”
“டேய் பேசாமல் கிளம்பற. இவன் டெய்லியும் குட் மானிங் சொல்லவும் குட்நைட் சொல்லத்தான் நம்பர் வாங்கி தந்தேனா“
“அம்மா இத யார் சொன்னாங்க?”
“என்னோட மருமகள்தான். போன் பண்ணி அவள்கிட்ட பேசினேன். உன்னை தெரியும்டா எப்படியும் பேசி இருக்க மாட்டே, எதுக்கும் கேட்டு வைக்கலாம்ன்னு கேட்டா மெசேஜ் பண்ணுவாங்க அத்தை தினமும் காலையில் குட்மானிங் சொல்வாங்க. நைட் குட் நைட் சொல்லுவாங்கன்னு அந்த பிள்ளை சொல்லுது. ஒரு விஷயத்தில் ரெண்டு பேரும் பக்காவா பொருந்தி போறிங்க, ரெண்டு பேருமே ஒன்னா நம்பர் தத்திடா,
புரிய வைக்கறதுக்குள்ள நான் ஒரு வழி ஆகிடுவேன் போல இருக்கு. ஏதோ கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் பேசி வாங்கி இருந்தா, கல்யாணத்து அன்றைக்கு பதட்டம் இருக்காது, எடுக்கிற வீடியோ நல்லா வரும்ன்னு நினைச்சா, என்னுடைய பேர பசங்க உங்க ஆல்பம் பார்த்து யாரு இது பாட்டி உர்ன்னு இருக்கறாங்கன்னு கேட்க போறாங்க“
“அம்மா நீ ரொம்ப என்னை ஓட்டற”
“டேய் ஏதாவது சொன்னா உன்னை நீ மாத்திக்க போறியா? இல்லல்ல, அப்புறம் என்ன?
குடிச்சாச்சுன்னா டம்ளரை கொடு, அங்கே போயிட்டு, மறுபடியும் கடைக்கு போயிட்டு வர டைம் ஆகிடும்”
இருவருமே பேசியபடி வண்டியில் ஏற, பெண்ணின் வீட்டை நோக்கி வண்டியை திருப்பினான். பெண்ணின் வீடு வடவள்ளியில் இருந்தது. இவர்கள் வீட்டில் இருந்து ஆறேழு கிலொமீட்டர் தொலைவு.
வண்டியில் போகும்போது “இப்ப போறதுக்கே இப்படி யோசிக்கறையே ராம். நாளைக்கு திருமணம் முடிந்ததும் அடிக்கடி போகணுமே அப்பவும் இப்படி தான் சொல்வாயா? அவளோ அவங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு. எப்படியும் மாதத்தில் நாலு தடவையாவது போகணும்ன்னு சொல்வா”
“அம்மா அதுக்கு இன்னும் நாள் இருக்கு. அப்ப பார்த்திருக்கலாம்“
“என்னடா பார்க்க போறே? நானும் பார்க்கதானே போறேன்” இருபது நிமிட பிரயாணத்தில் சுமித்ராவின் வீட்டை அடைந்து இருந்தனர் இருவரும்.
ஏற்கனவே போனில் சொல்லி இருந்ததால் இவர்கள் வரவுமே வாசல் வரை வந்து அழைத்து சென்றனர். ஹாலில் அமர்ந்திருக்க, வரவேற்பதற்கு அடையாளமாக முதலில் தண்ணீர் எடுத்து வந்தாள் சுமித்ரா.
அதை இருவருக்கும் தர, அன்று போல அருகில் அமர்த்திக்கொண்டார் திலகவதி.
இரண்டு நிமிடம் போகவும் “அத்தை என்னுடைய ப்ரெண்டுங்க அன்றைக்கு வரும் போது இவங்கள பார்க்கல. பார்க்கணும்ன்னு சொன்னாங்க. வரச்சொல்லவா பக்கத்தில் தான் வீடு, போன் பண்ணினா உடனே வந்துடுவாங்க”
“ம் சொல்லுமா, எப்படியும் பத்து நிமிடமாவது இருப்போமே“
“ஒரு நிமிடம் அத்தை” என்றபடி உள் அறைக்குள் சென்னவள் செல்பேசியில் பேசிவிட்டு வந்து மறுபடியும் அமரவும், சுமித்ராவின் தாயார் மல்லிகா காபி கொடுக்கவும் சரியாக இருந்தது. அடுத்த சில நிமிடத்திலேயே ஓ,வென கத்தியபடி சிறுவர் சிறுமியர் என ஆறு பேர் கொண்ட குழு உள் நுழைந்தார்கள்.
ராமை பார்த்து. அதிலிருந்த சுட்டிதனமான பெண் ஒருத்தி “அங்கிள் நீங்க தான் எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறிங்களா?”
அந்த பெண் கேட்கவும் இவனது முகத்தில் லேசாக தோன்றிய புன்னகையோடு ஆமாம் என்பது போல இவன் தலையாட்ட,
“சரி அங்கிள் பார்க்க எங்க அக்கா மாதிரி அழகா இல்லாட்டியும், ஏதோ சுமாராக இருக்கறிங்க. எங்க அக்காவை அடிக்கடி இங்கே கூப்பிட்டுட்டு வருவிங்க தானே”
“ஏய் வாலு பேசாம இரு” என சுமித்ரா கூறவும்,
திலகவதியோ “குழந்தை தானே பேசட்டும் விடு சுமி” என்றவர் “ராம் பதில் சொல்லுடா” என்க,
“அழைச்சிட்டு வருவேன்டா குட்டிமா”
“ஓகே அக்கா , அங்கிள் அழைச்சிட்டெல்லாம் வருவாங்களாம், அங்கிள் நல்லவர் தான், நீ கல்யாணம் பண்ணிக்கோ” எனவும் திலகவதிக்குதான் சிரிப்பை அடக்க முடியவில்லை. “சுமித்ரா இவங்கதான் உன்னோட ப்ரெண்டா?”
“ஆமாம் அத்தை, அன்றைக்கு நீங்க வரும் போது எல்லோரும் ஸ்கூல் போய் இருந்தாங்க அதனால தான் இப்போது வரச்சொன்னேன்”
அதற்குள்ளாக ராகவேந்தரும் வந்திருக்க, சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு அளவு மோதிரம் வாங்கி புறப்பட்டனர்.
வண்டியை ஸ்டார்ட் பண்ணவும் சிரிக்க ஆரம்பித்து இருந்தார் திலகவதி ”என்னுடைய மருமகள் எப்படி குழந்தை தனம் மாறாமல் இருக்கறா?”
“அம்மா அதற்கு தான் வேண்டாம்ன்னு சொன்னேன் நீ கேட்கலை”
“போடா மறுபடியும் அப்படி பேசாத. நீ அந்த சின்ன பசங்க கிட்ட பேசும் போது அவள் உன்னை எப்படி கவனிச்சா தெரியுமா. அவளுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குடா”
“அம்மா”
“எப்படியும் இன்னும் கல்யாணத்துக்கு முன்னாடி நாலைஞ்சு தடவை பார்க்க வேண்டியது வரும். நல்லா பேசிக்கோ. போன வாரம் ஒரு கல்யாணத்துக்கு போனமே பொண்ணும் மாப்பிள்ளையும் எப்படி பேசிட்டு இருந்திங்க தெரியுமா? அதுமாதிரி நீ அவளும் உரிமையா பேசிக்கணும்”
அதற்குள்ளாக காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடைக்கு வந்து இருந்தனர். வண்டியை பார்க் செய்தபடி “பொண்ணு இல்லாத வீடுன்னு சொல்லி சொல்லியே உனக்கு பைத்தியம் பிடிக்க போகுது. இப்படி உருகுறீங்க”
“பின்ன இல்லையா? வீட்டுக்கு மூன்று ஆம்பிளைங்க இருக்கறீங்கன்னுதான் பேரு, பாதி நேரம் தனியாகத்தான் இருக்கிறேன். இவள் வந்துட்டா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னென்ன செய்வோம் தெரியுமா. நிறைய யோசித்து வச்சிருக்கறேன்”
“உங்கள திருத்த முடியாது, வந்து மோதிரம் டிசைன் பாருங்க. கிட்டத்தட்ட பத்துக்கும் மேல் தேர்வு செய்து கடைசியாக ஒன்றை தேர்வு செய்ய. கார்டில் பணம் செலுத்தியவன் போகலாமா எனவும்,
“டேய் எங்கே போகலாமான்னு கேட்கறே ? சேலை எடுக்கணும் அந்த துணிக்கடைக்கு போகலாம் வா. என அழைத்து சென்றவள் அங்கேயும் பல சேலைகளை பார்த்து கொண்டிருக்க,
“அம்மா உனக்கு கூட இப்படி தேடி இருக்க மாட்ட”
“இருடா இது நல்லா இருக்குல்ல” கடைசியாக அழகான மெரூன்கலர் பட்டு கோல்டன் கலர் பார்டர் சேலையை தேர்வு செய்தவர் ‘அது சுமிக்கு அழகா இருக்கும். நிச்சயத்து அன்றைக்கு அவ தனியா தெரியணும் இல்லையா. தேவதை மாதிரி இருக்கணும்டா, அச்சச்சோ மறந்துட்டேன் அளவு ப்ளெவ்ஸ் வாங்கல பேசிட்டே கிளம்பி வந்துவிட்டோம்”
“ம்மா. ஒன்று மட்டும் நிஜம் ,கல்யாணத்துக்கு அப்புறம் இங்கே மாமியாரும் மருமகளும் சேர்ந்து மகனைதான் கொடுமை பண்ண போறிங்க, அது தான் நடக்க போகுது. நல்லா கேட்டுக்கோங்கமா. மறுபடியும் அளவு ப்ளெவ்ஸ் வாங்கிட்டு வரலாம் வான்னு என்னை கூப்பிட கூடாது நான் வரமாட்டேன்”
“ஓவரா பண்ணாத, நீ ஒன்றும் வர வேண்டாம், நான் அப்பாவை அழைச்சிட்டு போய் வாங்கிட்டு வந்துக்கறேன். உனக்கு இருபத்தி ஐந்திலேயே பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரம் என்னை பாட்டின்னு கூப்பிட பேரனோ, பேத்தியோ இருந்து இருக்கும். நீ தான் கேட்கலை. இப்பவும் இப்படி விருப்பம் இல்லாத மாதிரி நடந்தால் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கு தெரியுமா?”
“ஐயோ அம்மா அழுதுடாதிங்க. எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு
அதுவும் அவளோட ப்ரெண்டுங்க 'கூட்டத்தை ரொம்ப ரொம்ப பிடித்துருக்கு சரியா? நீ வரச் சொன்னா எங்கே கூப்பிட்டாலும் வரேன்”
ராம் எப்போதும் அப்படித்தான் அவனுக்கு அவனுடைய அம்மா வருத்தப்படக்கூடாது. எவ்வளவு தான் அம்மாவோடு கூட கூட பேசினாலும் வருத்தமாக பேசினாள் என்றாள் அவ்வளவு தான் திலவதியுடம் சரண்டர் ஆகி விடுவான். இப்போதும் அதுவே நடந்தது.
பேசியபடியே வீடு வந்திருக்க உள் நுழைந்தவருக்கு தெரியவில்லை, சூழ்நிலை வேறாய் அமைய, தீர்வு இதுதான் என நினைத்து தானே இனி சுமித்ராவை இங்கே அழைத்து வர வேண்டாம் என்று அவரே சொல்வார் என.
 

Kavisowmi

Well-known member
4
கல்லில் அமர்ந்திருந்த குரு சுற்றிலும் பார்க்க, நீண்ட நேர் கோட்டில் பயணித்தது சாலை. அடர்வனம் எனும் அளவிற்கு இரண்டு புறமும் இடைவெளி இல்லாமல் அடைந்திருந்த மரங்கள் கூடவே புதராய் மண்டிக்கிடந்த சிறு செடி, கொடிகள். சூரியனின் வெம்மை தெரியாத அளவிற்கு இதமாய் சற்றே ஈரபதத்தோடு வீசும் காற்று. மனது ஏகத்திற்கு அமைதியாக இருந்தது.
எதை பற்றிய யோசனையும் இல்லாமல் சற்று நேரம் கண்கள் மூடி அமர்ந்தவன் கண்களை திறக்க காற்றின் வேகத்திற்கு கலைந்தாடும் கேசம் எதுவும் அவனுக்கு பொருட்டாக தோன்றவில்லை. கண்கள் தூரமாய் வெறித்திருக்க மூளை வேகமாக செயல் பட்டு கொண்டிருந்தது. அடுத்த பத்து நாட்களுக்கான ப்ளான் அவனது மண்டைக்குள் வரிசையாக வலம் வந்து கொண்டு இருந்தது.
அடுத்தது நேராக இங்கிருந்து இறங்கியதும், அருகில் இருக்கும் ஊரில் இரவு தங்கி விட்டு நேராக பெங்களூர் செல்ல வேண்டும். ஆபீஸை பார்த்து விட்டு தங்குவதற்கு ஏதுவாக இடம் பார்க்க வேண்டும்.
புதிதாக ஒவ்வொரு ஊருக்கும் போகும் போது இவன் சந்திக்கும் முக்கிய பிரச்சினை. இந்த இட பிரச்சனை.
இவனது பாலிசி எலி வளையானாலும் தனி வளை நல்லது. இவனுக்கு மொத்தமாக கூட்டமாக தங்குவது பிடிக்காத விஷயம். ஒவ்வொரு முறையுமே வேலை கிடைப்பது இந்த நிமிடம் வரை சிரமமாக இருந்தது இல்லை. இவனது திறமை உடனே வேலையை தேடித் தந்தது, தங்கும் அறைதான் இவனை ஒவ்வொரு முறையும் ஆட்டம் காண வைக்கும்.
இம்முறை எப்படி சமாளிப்பது? என யோசிக்க எதுவும் நினைவிற்கு வர வில்லை.
வெறித்த பார்வையை, தாவி ஓடிய சிறு முயல் குட்டி கலைத்து விட, அதை பார்க்கவும் அவனை அறியாமல் துரு துரு வென தன்னிடம் வம்பிழுக்கும் பெண்ணின் ஞாபகம் வந்தது.
தனது பேகின் உள் இருந்த தனது அன்ட்ராயிட் போனை எடுத்து உயிர்ப்பித்தான். இந்த இடத்தில் சுத்தமாக மறுபடியும் டவர் இல்லாமல் நெட்ஓர்க் கட் ஆகி இருந்தது. கடைசியாக இவன் இங்கு வருவதற்கு முன்னால் வாட்ச்சப் சாட்டிங்கில் பேசியது. அதை படிக்க படிக்கவே உதட்டில் சிறு சிரிப்பு தோன்றி இருந்தது.
“ஹீரோ ஸார் எங்கே இருக்கறிங்க?”
“அதென்ன எப்ப பாரு இப்படியே கூப்படற” இவனது கேள்வி இப்படியாக தொடர
“உயிரை காப்பாற்றினவங்கள என்ன சொல்லி அழைப்பாங்க நான் கூப்பிடறதுதான் சரி”
“இதையே ஒவ்வொரு முறையும் சொல்லுவாயா? அத விடு இப்போது எங்கே இருக்கற? காலேஜ்லயா? நாளைக்கு லீவு தானே வீட்டுக்கு போகலையா?”
“ஷப்பா ஒரு தடவை தான் தெரியாம தப்பு பண்ணுவாங்க, எப்பவும் இததான் கேட்பிங்களா? பெங்களுரில் இருக்கற காலேஜ்ல நடத்த போகிற ஒர்க்ஷாப்பிற்கு நான் செலக்ட் ஆகி இருக்கறேன், மேக்ஸ் சம்மந்தபட்டது, இன்னும் ஒன் மந்த் அங்கேதான் இருக்க போறேன். இங்கே எங்க காலேஜ்ல இருந்து என் கூட இன்னும் ரெண்டு பொண்ணுங்க வராங்க. பிஸி இனி நீங்களே சாட்டிங் வந்தா கூட நான் வர மாட்டேன்”
“ஆல் த பெஸ்ட். விஷாலி”
“தேங்க்யூ. தேங்க்யூ, இப்ப ஸார் சொல்லுங்க உங்களோடு ப்ளான் என்னன்னு, ஏன்னா கடைசியாக சாட் பண்ணும் மோது வேலைய விடப்போறதா சொன்ன மாதிரி இருந்தது”
“அதெல்லாம் விட்டு வேற வேலையும் கிடைச்சாச்சு. இப்போதைக்கு இன்னும் மூன்று மாதத்தில் நடக்க போகிற சிறந்த புகைபடபோட்டிக்கு நல்ல போட்டோ தேவைபடுதுன்னு கிளம்ப போறேன்”
“பையனா பொறந்தா இது நல்ல பெனிபிட், ஈசியா வெளியே விடறாங்க.
யாருக்கும் பயப்பட வேண்டாம். யார் கிட்டேயும் பர்மிஷனும் கேட்க வேண்டாம்”
“யார்மா சொன்னாங்க? உனக்கு இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டது யாரு? அப்படி எதுவும் இல்லை. என்னோட அம்மா சொல்வாங்க எவ்வளவு உயரம் வேணும்னாலும் பற ஆனால் உன்னோட கூடு இங்கே தான் இருக்கு. அதற்கு திரும்பி வந்துடுன்னு, எங்க வேணும்னாலும் போகலாம், ஆனாலும் இங்கேயும் கேட்டுட்டு தான் போகணும். புரிஞ்சுதா”
“நல்லா புரிஞ்சது, கேட்காமல் எங்கேயும் நான் போக மாட்டேன் ஓகே வா? பை”
இவன் மனதில் நினைத்து கொண்டது ‘இவள் குட்டி புயல்தான்’
மொபைலை பார்த்தவனுக்கு புயலை பார்த்த சந்தர்ப்பம் ஞாபகம் வந்தது. இவன் நான்காம் வருடம் இன்ஜினியரிங் படித்த போது நடந்தது. அன்றைய நாளும் புகைப்பட கண்காட்சி ஒன்றை முதல் முதலாக அந்த ஆடிட்டோரியத்தில் நடத்திக்கொண்டு இருந்தான். அவன் மட்டும் அல்ல இன்னும் அவனது நண்பர்கள் பலர் ஏதோ ஒரு ஸ்டாலை போட்டு இருக்க முதல் முதலாக இவனது தொகுப்பை இவனும் அங்கே போட்டிருந்தான்.
இவனது காலேஜ் மட்டும் அல்லாது பிற காலேஜ் ஸ்டூடண்டும் வந்து கொண்டு இருந்தனர். வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் விளக்கமாக எந்த நாட்டு பறவை, எந்த சீசனுக்கு இங்கே வரும், எந்த இடத்தில் எடுத்தது என தெளிவாக புரியும் படி விளக்கிக் கொண்டு இருந்தான்.
விஷாலியை பார்த்தது அப்போதுதான் முதல் முறை. இவனிடம் கேட்க அவளுக்கு நூறு சந்தேகம் இருந்தது. ஒவ்வொரு போட்டோவையும் எடுத்த இடம் சூழ்நிலை அனைத்தையும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தாள்.
அந்த நாட்களில் இந்த அளவுக்கு சுற்றியது இல்லை. தமிழ் நாட்டில் ஓரளவிற்கு சுற்றி இருந்தான். அங்கிருக்கும் பெஸ்டானது தான் அப்போது இருந்தது.
அனைத்தையும் பார்த்தவள் அந்த வாரம் முழுவதும் கண்காட்சி இருக்க, அடுத்தடுத்த நாட்களிலும் வேறு வேறு நண்பர்களோடு வந்து சென்று கொண்டிருந்தாள்.
அப்போது குரு படித்தது கோவையில் பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியில்.
அப்போதே பிடிவாதமாக ஹாஸ்டலில் தங்கி இருந்தான். ‘தனியாக எல்லாம் விட முடியாது எதுவாக இருந்தாலும் இங்கே எங்க கூட இரு’ என தந்தை ஒரு புறம் கூற, இவனது தாய், சகோதரன் இருவருமே ‘இங்கே பக்கத்தில் தானே தூரமாக ஒன்றும் தங்கலையே பார்த்துக்கலாம்ங்க’ என இவனது ஆசைக்கு துணை நின்றதினால் இது சாத்தியமாகி இருந்தது.
நான்கு நாட்களாய் அவளை கவனித்தவன், ஐந்தாவது நாளும் வரவும் இவளை தனியாக அழைத்தவன் “எந்த காலேஜ் நீ? நீ ஏன் தினமும் இங்கே சுத்திகிட்டு இருக்கற?” என கேட்கவும் ஒரு நிமிடம் தயங்கியவள், படபடவென பேச ஆரம்பித்தாள்.
நீண்ட நாட்களாய் தெரிந்த நண்பனை போல் இயல்பாக பேச்சு வந்தது அவளுக்கு. சிறு தயக்கம் கூட இல்லாமல் அவள் பேசவும் இவனுக்குத்தான் அவள் பேசி முடிக்கும் போது தன் மேல் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
தான் படிக்கும் காலேஜின் பெயரை சொன்னவள் “தினமும் வேற வேற போட்டோஸ் மாத்தறிங்க. அதுதான் ஒரு ஆர்வத்தில் வரேன். இன்றைக்கும் மாற்றி இருக்கறிங்க.
ஏன் கண்காட்சிதானே அப்போது வரத்தானே செய்வாங்க? உங்களோடு போட்டோஸ் நல்லா இருந்தது, ப்ரெண்டுங்க கிட்டே சொன்னேன், அவங்க பார்க்க ஆசைப்பட்டாங்க, அதில் ஒன்றும் தப்பு இல்லையே? என்னவோ தப்பு பண்ணின மாதிரி கூப்பிட்டு கேட்கறிங்க? நான் உங்களை ஏதாவது டிஸ்டப் பண்ணினேனா? இல்லையே! ஏன் முதல் நாள் தவிர உங்க கிட்ட இதுவரைக்கும் எதுவுமே கேட்க கூட இல்லை, இந்த நான்கு நாளுமே”
“எங்க காலேஜ்ல இருந்தும் இங்கே ஸ்டால் போட்டு இருக்கறாங்க. நானும் இங்கேதான் ஒரு வாரமாக இருக்கிறேன். இந்த நேரம் கூட்டம் கம்மி அதனால சுற்றி பார்த்துவிட்டு இருக்கிறேன். கூடவே யாராவது நானும் வரேன்னு சொன்னா வராதேன்னா சொல்ல முடியும். அதனால அழைச்சிட்டு வரேன்”
“ஓ சாரி எந்த இடத்தில் உங்களோட ஸ்டால் இருக்கு? நானும் வந்து பார்க்கிறேன்”
“வாங்க. உங்கள மாதிரி கூப்பிட்டு ஏன் வந்திங்கன்னு கேட்க எல்லாம் மாட்டேன்”
“அது தான் ஸாரி கேட்டுட்டேனே இனி அத விட்டுடுங்க“
“ஜயோ மரியாதை எல்லாம் வேண்டாம். என்னோட பேரு விஷாலி இனி நீங்களும் நானும் ப்ரெண்ட்ஸ் ஓகே”
இயல்பாக கை குலுக்க அவள் கை நீட்டவும், இவனுமே கை குலுக்கியவன் “ஓகே. நான் குரு, படிக்கறது இன்ஜினியரிங். தற்சமயம் தங்கி இருக்கிறது காலேஜ் ஹாஸ்டலில் தான்”
“நானும் ஹாஸ்டல் தான். ஊரு சென்னை. அப்பா அம்மா ஒரு தம்பி. தம்பிக்கு இப்போது தான் பதிமூன்று வயது ஆகுது. இங்கே கிருஷ்ணம்மாள் காலேஜ் பிகாம், இது ரெண்டாவது வருடம். மேல படிக்கணும் இன்னும் மூன்று வருஷம் இங்கே தான்”
“ஆனால் சென்னையில் இல்லாத காலேஜா இவ்வளவு தூரம் வந்து இருக்கறிங்க”
“எல்லோருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும்ல வெளியூரில் தங்கி படிக்கணும்ன்னு, அது மாதிரி எனக்கும். உடனே எல்லாம் ஓகே சொல்லல, அழுது அடம் பிடிச்சு கடைசியாக தான் இங்கே வந்து சேர்ந்தேன். என்னுடைய கஸின் ஒருத்தன் இங்கேதான் படிக்கறான். கடைசியாக அவன் நான் பார்த்துக்கறேன் அனுப்பி விடுங்கன்னு சொல்லவும் சரின்னு சம்மதிச்சாங்க, இங்கே பிரச்சினை எதுவும் இல்லை. லீவு விட்டா வீட்டுக்கு போயிடுவேன். ஜாலியா போயிட்டு இருக்கு லைப். ஊருக்கு போனா தம்பி இருப்பான். ரெண்டு நாள் ஜாலியா அவன்கிட்ட வம்பிழுக்கலாம். மறுபடியும் இங்கே. இப்போதைக்கு ரசித்து வாழறேன்”
“ஓகே நான் வரேன். எந்த இடத்தில் உன்னோட ஸ்டால்?”
“ம். வாங்க அந்த கடைசியில் திரும்பினா ரெண்டாவது எங்களோடது. ஆனால் பார்த்துவிட்டு சிரிக்க கூடாது. ஏன்னா அங்கே இருக்கிறது எல்லாம் குழந்தைங்க ரைம்ஸ் புக்” அவள் சொன்ன விதமே சிரிப்பை தூண்ட,
“அதில்லென்ன சிரிக்க இருக்கு? இப்போது இருக்கற பேரண்ட்ஸ் எல்லோரும் தன்னுடைய குழந்தைக்கு இதெல்லாம் வாங்கி கொடுக்கறாங்களே! இந்த ஐடியா யாரோடது?”
“என்னுடையது தான் ஓரளவுக்கு சேல்ஸ் பண்ணிட்டோம். நீங்களும் வாங்களேன்”
“வரலாமே, ஆனா எதையும் நான் வாங்க மாட்டேன். ஏன்னா இப்போதைக்கு எனக்கு யூஸ் ஆகாதே”
“தெரிஞ்சவங்களுக்கு பக்கத்தில் இருக்கற குழந்தைகளுக்கு கிப்ட் கூட பண்ணலாம்”

“இப்ப தெரியுது எப்படி வேகமாக உங்கோடது காலியாகுதுன்னு, இப்படிதான் பேசி பேசி ஒவ்வொருத்தரோட தலையிலேயும் கட்டறிங்களா?”
“ஹலோ, என்ன அப்படி சொல்லறிங்க வந்து பாருங்க. அதுக்கப்புறம் பேசலாம்”
அடுத்த ஸ்டாலில் இருந்தவனை பார்த்து கொள்ள சொல்லியபடி வா என்றபடி இவன் அவளோடு நடக்க,
அடுத்த திருப்பத்தில் இருந்த ஸ்டாலுக்கு இவனை அழைத்து சென்றாள். அங்கு அழகாக அடுக்கிய குட்டி குட்டி புத்தகங்கள், கூடவே கார்ட்டூன் புத்தகம், கொஞ்சம் கலரிங் புக்ஸ் என குழந்தைகளை கவரும் அனைத்தும் இருந்தது.
கைக்கு கிடைத்த சில புத்தகங்களை பிரித்துப் பார்த்தவன் “சூப்பராக இருக்கு விஷாலி குட் ஐடியா, ஓகே நான் அப்போ கிளம்பறேன்”
“இருங்க இவங்க என்னுடைய ப்ரெண்டு” என அவள் அறிமுகப்படுத்த, சிறிது நேரம் அவர்களிடம் பேசியபிறகு புறப்பட்டான்.
புறப்பட்ட குருவிற்கு கொஞ்சம் ஆச்சர்யம்தான் விஷாலியை நினைத்து. பார்த்த சில நிமிடத்திலேயே நீண்ட நாள் பழகியது போல அவள் இயல்பாக பேசியது ஆச்சர்யமாக இருந்தது. இந்த நான்கு வருடத்தில் அவனது சக கல்லூரி மாணவியர் கூட இன்னும் இவனிடம் இப்படி பேசியதில்லை.
இவனும் இவனது அன்னையிடம் பேசுவான்தான் “லொட லொடன்னு பேசாத போடா. உனக்கு வாயே வலிக்காதா?” என்பார் அவர். ஆனால் இவள் அவனையும் மீறி இருந்தாள்.
அப்போது அவளைப் பற்றி அப்படி நினைத்தவன்தான் ஆனால் அடுத்து சில மாதங்கள் கழித்து பார்க்கும் போது அவளையும் சேர்த்து இழுத்து கொண்டு ஓடிக் கொண்டிருந்தான். தங்களது உயிரை காத்து கொள்ள!
 

Kavisowmi

Well-known member
5
“திலகா, ராம் எங்கே?” கேட்ட தன் கணவனைப் பார்த்த திலகவதிக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. நேற்றிலிருந்தே கொஞ்சம் கோபமாக சுற்றி கொண்டு இருந்தார்.
“இன்னும் குளிச்சிட்டு வரலைங்க, இப்போ வந்திடுவான்”
“ம் சரி இன்னும் நிச்சயத்திற்கு போகும் போது என்னன்ன வேணும்ன்னு லிஸ்ட் போட்டு வச்சிடு, கடைசி நேரத்தில் இது இல்லை, அது இல்லைன்னு சொல்ல கூடாது”
“ம் சரிங்க”
“அப்புறம் நம்ம சுந்தரம் இருக்கான்ல அவன் பொண்ணு வீட்டை பார்க்கணும்ன்னு சொல்லி அட்ரஸ் கேட்டான், குடுத்து இருக்கிறேன்” என்றவரை பார்த்தவள்,
“இபபோ ஏன் கொடுத்திங்க அவரு எங்கே போணாலும் ஏதாவது பிரச்சினையை இழுத்து விடறாரு, இப்ப எதற்காக அங்கே போகணும். நிச்சயத்துக்கு போகும் போது பார்த்தா பத்தாதா?”
“நான் எதை செய்தாலும், நீ என்ன மட்டும் குறை சொல்லு. நீ என்ன செஞ்சு வச்சிருக்கற? முதலில் ராமை கூப்பிடு ரெண்டு பேருக்கும் பயம் விட்டு போச்சு, எனக்கு வர வர மரியாதை இல்லாம போகுது இந்த வீட்ல”
“இப்போ எதுக்கு இவ்வளவு கோபம்? முதல்ல சாப்பிட உட்காருங்க”
“எதையும் பேச விட்டுடாத, சாப்பாடு போட்டு கடைக்கு அனுப்பி வச்சிடு. நான் எதையும் கேட்க கூடாது அப்படி தானே”
“நாங்க என்ன செஞ்சோம் இப்ப எதுக்கு எங்கள திட்டறிங்க?”
கேட்கும்போதே ராமும் இறங்கி வர. ஹாலில் ஒரு புறம் முழுவதும் அடைத்தது போல் இருந்த புகைப்படத்திலேயே கிருஷ்ணனின் கண்கள் நிலைத்து இருந்தது.
“ராம் இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயம் பண்ண பொண்ணு வீட்டுக்கு போகணும். இப்பவாவது கால்ல சக்கரம் கட்டிட்டு ஊர் சுத்தற உன்னோட தம்பி வருவானா இல்லை வரமாட்டானா? இப்ப அவன் எங்கே இருக்கிறான்?”
“அப்பா அவனுக்குதான் போன்ல டிரை பண்ணிட்டு இருந்தேன். நாட்ரீச்சபில்ன்னு வருதுபா டிரை பண்ணிட்டே இருக்கிறேன் எப்படியும் வந்திடுவான்பா”
“இந்த தடவை எங்கே போறேன்னு சொன்னானா இல்லையா? இந்த வீட்ல யாரு நான் சொல்லறத கேட்கறா? அன்றைக்கே சொன்னேன் அவன வீட்ல இருந்து படிக்க வையின்னு அதையும் கேட்கல, வீட்டுக்கு சொல்லாம சுற்றி பார்க்க போன போதும் எதுவும் அவனை பேச விடலை, கேட்டா என்னுடைய பையன் தப்பு பண்ண மாட்டான்னு பேச வேண்டியது. இப்ப பாரு ரெண்டு பையன்னு எல்லோருக்கும் தெரியும். இன்னோருத்தன் வரலையான்னு கேட்டா என்ன பதில் சொல்லறது?”
“அப்பா ஏதோ காட்டுபக்கம் டவர் இருக்காதுன்னு சொன்னான். வந்திடுவான்பா”
“ஆரம்பத்திலேயே சொன்னேன் உனக்கும் உன்னோட அம்மாவுக்கும். அவன் என்ன கேட்டாலும் சரி சரி சொல்லவச்சு இப்போ இங்கே வந்து நிற்குது? நிச்சயத்துக்கு அவன் வரலைன்னா அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”
“இப்ப எதுக்கு சத்தம் போடறிங்க? அவன் என்ன வேணும்னா செல்போனே அட்டென் பண்ணாம இருக்கறான். அங்கே என்ன சூழ்நிலையோ? இங்கே உடனே முடிவாகும்ன்னு நினைக்கலையே வந்திடுவான்ங்க”
. “வரணும். வரலைன்னா நீதான் திட்டு வாங்குவ” என்றபடி சாப்பிட அமர்ந்தவர் “ராம் உன்னோட ப்ரெண்டுங்க யாருக்காவது சொல்லறதுன்னா சொல்லிடு”
“ஆபீசில் தான் சொல்லணும்பா சொல்லிடறேன்”
“சரி நான் வரேன்” அவர் புறப்படவும்
“என்னமா ஆச்சு? காலையிலேயே ஏன் இவ்வளவு கோபமாக இருக்கறாங்க?”
. “காலையிலேயே சுந்தரத்தை பார்த்தாங்க போல இருக்கு அதுதான் இப்படி பேசிட்டு போறாங்க. நீ சாப்பிடு ராம். எப்போ குருவை கூப்பிட்ட?”
“நைட்ல இருந்து டிரை பண்ணறேன். எடுக்க மாட்டேங்கறான். பாருங்க ஹால் முழுவதும் சின்னதும் பெருசுமா போட்டோவை மாட்டி வச்சா பார்த்தா கோபம்தானே வரும். வர்ற உறவுக்காரங்களுக்கு என்ன பதில் சொல்லறது. அப்பா சொல்லறதும் சரிதானே”
“நான் என்னடா செய்யறது? சென்னையில் முதலில் வேலை கிடைக்கும் போது என்ன நடந்துச்சு, நீயே யோசித்து பாரு! அங்கே எல்லாம் வேண்டாம்ன்னு எத்தனை முறை சொன்னோம், கேட்டானா? பின்னாடியே சுற்றி போகறதுக்கு ஓகே வாங்கிட்டான்”
அன்றைய நாள் இப்போதும் ஞாபகத்தில் இருந்தது இருவருக்கும்.
வேலைக்கான ஆர்டரை வாங்கி வந்தவனுக்கு முதலில் கிருஷ்ணனிடம் அனுமதி கிடைக்கவில்லை “அங்கெல்லாம் வேண்டாம், இங்கேயே வேற நல்ல வேலையா தேடு” என ஒரே பேச்சில் முடித்து கொண்டு கிளம்பி இருந்தார்.
அன்றைய காலையில் ஆரம்பித்தவன் திலகவதியின் முந்தானையை பிடித்தபடி அலைந்து கொண்டு இருந்தான்.
“குரு ஏண்டா விடிஞ்ச நேரத்தில் இருந்து என் பின்னாடி சுத்தற?”
“அம்மா நீயே சொல்லு, முழுசா ஒரு மணி நேரம் உன்னோட பின்னாடி சுற்ற உனக்கே கோபம் வருது, அதனால தான் கேட்கறேன் இப்ப இருக்கற மாதிரிதான். எப்படி ஹாஸ்டலில் படிச்சேனோ அத மாதிரி நினைச்சுக்கோங்க லீவ் விட்டா இங்கே வந்திடுவேன். ராம் நீயாவது சொல்லேன்”
“எப்ப பாரு அவனை சப்போட்டுக்கு கூப்பிடாதே. இந்த முறை என்னால பேச முடியாது”
“அம்மா நான் தானே உன்னோட செல்ல பையன், இந்த ஒரே ஒரு முறை மட்டும் சம்மதம் வாங்கி தருவீங்களாம், அப்புறம் கேட்கவே மாட்டேன்”
அருகில் அமர்ந்தபடி குருவின் சேட்டைகளை பார்த்து கொண்டு இருந்த ராமிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை “அம்மா நம்பாத, அவன் அப்படிதான் ஐஸ் வைப்பான் அப்புறம் நீங்களும் நானும்தான் அப்பாவை சமாளிக்கணும். கோர்த்து விட்டுட்டு இவன் எஸ் ஆகிடுவான், சிக்கிக்க போறது நீங்களும் நானும்தான். வேணும்னா பாருங்க இன்றைக்கு நைட் ஆனாலும் பிடித்து இருக்கற முந்தானையை விட மாட்டான். லாஸ்ட் டயம் ஹாஸ்டலில் தங்க போறதுக்கும் இப்படிதான் கெஞ்சினான். கேட்டா வெளி உலகம் தெரியணும்ன்னு கதை சொல்லுவான். என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையான்னு கேட்பான்”
“மாம் உங்க பையன் வளர்ந்துட்டான்மா, அவனை ஒரு இடத்தில் கட்டிப்போட நினைக்காதிங்க” அவனை போலவே மிமிக்ரி செய்தவன். “குரு கரெக்டா சொன்னேனா உன்னை மாதிரியே?” என கேட்க
“டேய்” என ஆரம்பித்தபடி குரு அவனை துரத்த ஆரம்பித்தான். அவனது கைக்கு அகப்படாமல் போக்கு காட்டியபடி ஓடிக்கொண்டு இருந்தான் ராம்.
ஒருவழியாக ஓடி களைத்து அம்மாவின் அருகில் வந்த குரு “மாம்” என்றபடி மறுபடியும் ஆரம்பித்து இருந்தான் “என்னுடைய செல்ல அம்மால்ல நான் தானே உங்களோட செல்ல பையன்”
“டேய் அப்போ நான் யாரு?”
“பேசாமல் இரேன்டா, மறுபடியும் ஓட வைக்காதே. சொல்ல வர்றதையும் மறக்க வச்சிடுவ போல இருக்கு மாம். சம்பளம் பாருங்க. ஸ்டாட்டிங்கே நாற்பது ஆயிரம்மா! வெளிநாட்டுக்கு போக கூட வாய்ப்பு இருக்கலாம்” கண்களை விரித்தும் சுருக்கியும் விதவிதமான செய்கையில் சிறு பையனை போல் கெஞ்சியவனை பார்க்க சற்றே பாவமாக தான் இருந்தது.
“என்னது வெளிநாட்டுக்கு போறியா?” திகைத்தபடி திலகவதி கேட்க
“ம்மா இல்லை வந்து அது நான் உங்க பையன் இல்லையா? அப்படியெல்லாம் எங்கேயும் போக மாட்டேன். இங்கே மட்டும் வேலை செய்யறதுக்கு அப்பா கிட்ட பேசுங்கமா ப்ளீஸ்”
“டேய். போதும்டா அப்பா வரட்டும் பேசி பார்க்கலாம். நீ அம்மாவை விட்டு நகரு, பாவம் அவங்கள சமைக்க விடு இப்படியா படுத்தி எடுப்ப”
“நீ சொல்லு ராம் நான் போகலாம் தானே இந்த வேலைக்கு?! ம்மா நீயாவது சொல்லு”
“விதவிதமா இப்படி கேட்கற? அப்பா வரட்டும் பேசி பார்க்கறோம்”
இரவு வரவும் வேலை விஷமாக பேச அவரோ வேண்டாம் என்பதிலேயே பிடிவாதமாக இருந்தார் “முழுசா ஆறுமாதம் முடியலை லாஸ்ட் டயம் என்ன பண்ணினான்? நீதான் இரண்டு நாளா சாப்பிடாம தூங்காம அழுதிட்டு இருந்த! நான் இனி அவனை எங்கேயும் விடறதா இல்லை இந்த பேச்சை இத்தோட விடுங்க”
அன்றைய நாள் முடிய அடுத்த நாளில் நேராக கேட்டிருந்தான் குரு தந்தையிடமே “அப்பா எனக்கு ஓகே சொல்லுங்க வேலையில் ஜாயின் பண்ணிட்டா லீவுக்கு வீட்டுக்கு வந்திடுவேன். தினமும் போன் பண்ணுவேன் தப்பா எதுவும் நடந்திருக்க மாட்டேன் நம்புங்கபா”
ராம் தந்தையை பற்றி அறியாத ஒன்றை இவன் சரியாக தெரிந்து வைத்திருந்தான். என்ன தான் மற்றவரிடம் முடியாது என மறுத்தாலும் மகனாய் வந்து கேட்கும் போது அவரால் மறுக்க முடியாது. இதை சரியாக கணித்தவன் நேரடியாக கேட்க,
தயங்கியபடி “சொல்லாமல் எங்கேயும் போக கூடாது. என்கிட்ட சொல்லாட்டி பரவாயில்லை வீட்டில் அம்மா கிட்டேயோ ராம் கிட்டேயோ சொல்லணும். போயிட்டு வா” என்றுவிட்டார்.
முதல் மாத சம்பளத்தில் இவன் ஆசையாய் வாங்கியது இந்த கேமரா, அதுவும் தவணைக்கு தான். அந்த மாதத்தில் வீட்டிற்கு வந்தவன் எடுத்த போட்டோகளைதான் வீடு முழுவதும் மாட்டி இருந்தான். இவன்
அண்ணனோடு எடுத்தது இங்கே ஒன்று மாட்டி இருக்க, அளவில் சிறியதாக ஒன்றை எப்போதும் தனது அறையில் மாட்டி இருந்தான். கூடவே அப்போது ஆரம்பித்தது இந்த தேடுதல் வேட்டை.
தேடி தேடி போட்டோ எடுக்க எந்த இடம் போனாலும் முதலில் ராமிற்கு சொல்லி விடுவான். போகும் இடம் அங்கிருக்கும் சூழ்நிலை மொத்தத்தையும்.
நான்கு வருடம் கடந்திட்ட நிலையில் இப்போது அவனது சுபாவம் ஓரளவிற்கு வீட்டில் புரிந்து கொண்டு இருந்தனர்.
என்றாவது திலகவதி புலம்பும் போது ராம் தான் சமாதானம் செய்வான். “இன்னும் கொஞ்சம் நாள் தான் அவனுக்கென்று குடும்பம் குழந்தை வரும் போது மாறிடுவான் மா. வேணும்னா பாருங்க காட்டு பக்கத்தில் போகாமல் இருக்க போகிற நாளும் வரும். அப்போது சொல்லுவிங்க ராம் சொன்னது மாதிரியே நடந்துக்கறான்னு”
இப்போதும் அதை நினைத்தவன் “அம்மா ஆபீஸ் கிளம்பறேன். குருவோட போனுக்கு டிரைபண்ணி பார்க்கிறேன். நீங்க எதையும் யோசிக்காதிங்க” சொன்னவன் கிளம்பி இருந்தான்.
எப்படியும் போனை அட்டென் செய்வான் என்ற நம்பிக்கை இருந்தது. கொஞ்சமாக ஊர் சுற்றுவதில் ஆர்வம் இருந்தாலும் பொறுப்பு உள்ளவன்தான். இங்கே தேடுவார்கள் என்பதும் தெரியும்தான்.
குரு புறப்பட்டு கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆகி இருந்தது. எப்படியும் இன்றோ அல்லது நாளையோ வந்து விடுவான் என நினைத்தவன் மேசேஜ்,வாட்சப்,மெயில் என அனைத்திற்கும் கால் மீ என மேசேஜ் தட்டி விட்டவன் தனது அலுவலகம் நோக்கி வண்டியை திருப்பினான்.
அதே நேரம் சுமித்ரா வீட்டில் வேறு ஒரு பிரச்சினை நடந்து கொண்டு இருந்தது. திலகவதி தன் கணவனிடன் ஏன் சொன்னிங்க என கேட்ட அந்த சுந்தரம் பெண்ணின் வீட்டில் பேசி குழப்பி விட்டு சென்றிருந்தார்.
அவர் போகும் வரை பொறுமையாக இருந்த சுமித்ரா அவர் புறப்பட்டதும் தந்தையிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
“அப்பா இப்பவே இப்படி மாற்றி மாற்றி பேசினா எப்படிபா? நீங்க எதுக்கும் இன்னமும் கொஞ்சம் விசாரிங்க நமக்கு இந்த இடம் சரியாக வரும்ன்னு தோணல நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம்ன்னு பேசிட்டு போனாங்க இப்போ இவர் வந்து வேற மாதிரி பேசறார்? அன்றைக்கு நீங்க தானே சொன்னிங்க மாப்பிள்ளை வீட்ல பெருசா டெளரி கேட்கலை உங்க பொண்ணுக்கு நீங்க ஆசைபடறத செய்ங்க போதும்ன்னு சொன்னாங்கன்னு சொன்னிங்க இவர் வேற மாதிரி சொல்லிட்டு போறார்?”
ஏற்கனவே நகை பற்றிய பேச்சு திலகவதியும் சரி கிருஷ்ணனும் சரி எதுவுமே எடுக்கவில்லை. ஏன் அதை பற்றி யோசிக்க கூட இல்லை. ஆனால் வந்தவர் “அவங்க கேட்டு இருக்க மாட்டாங்க மொத்தமாக அறுபது பவுன் போட்டுடுங்,க ரொக்கப்பணம் இரண்டு லட்சம் கொடுங்க, மாப்பிள்ளைக்கு செயின் மோதிரம் கல்யாணத்துக்கு முந்தய தினம் போடுங்க” என ஒரு லிஸ்ட் கொடுத்து விட்டு சென்றிருந்தார்.
மாற்றி மாற்றி பேசற குடும்பத்தில் நமக்கு சம்பந்தம் வேண்டாம். இந்த கல்யாணம் வேண்டாம்பா என ஒரேடியாக மறுத்துக்கொண்டு இருந்தாள் சுமித்ரா.
 

Kavisowmi

Well-known member
6
குரு இன்னமும் பழைய நினைவில் மூழ்கி இருந்தான் அதே கல்லில் அமர்ந்தபடி.
அன்று குரு மிகுந்த ஆர்வமாக அந்த நாளை எதிர் நோக்கி காத்திருந்தான். அவனுக்கு தெரிந்து முதல் முதலாக வீட்டிற்கு தெரியாமல் நடந்த ஏற்பாடு இது மிகுந்த உற்சாகத்தோடு ஆர்வமும் கூடவே சேர்ந்து இருந்தது.
குரு கூட கொஞ்சமாய் நல்ல பையன்தானோ இது வரை வீட்டிற்கு தெரியாமல் எதுவும் செய்ததில்லை. படிப்பு முடிய இன்னும் இரண்டு செமஸ்டர் இருக்க, இந்த முறை விடுமுறைக்கு வீட்டுக்கு தெரியாமல் இரண்டு நாட்கள் சுற்றி பார்க்க முடிவெடுத்து இருந்தான். அவன் தேர்ந்தெடுத்து இருந்தது தேனி தாண்டி இருந்த வனப்பகுதியை. டிரக்கிங் போக முடிவு எடுத்தவன், அதற்காக ஏற்பாடு செய்து தரும் நிறுவனத்திடம் ஆன்லைனில் புக் செய்து இருந்தான்.
கிட்டத்தட்ட ஏழு ஆயிரம் ரூபாய் கூடவே தேவையானது என கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்தான். ஹாஸ்டலில் உடன் தங்கும் தோழனிடம் அவனது கேமராவை கேட்டிருக்க அதையும் வாங்கி இருந்தான். அந்த காட்டு பகுதியில் குரங்குகள், முயல் என நிறைய விலங்குகள் இருக்கும் என கூறி இருக்க அந்த நாளுக்காக ஆசையாய் காத்திருந்தான்.
படிப்பதற்கு என காலேஜ் விடுமுறை தந்திருக்க இவனோ “அசைமெண்ட் முடிக்கணும் மாம், ரெண்டு நாள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் வந்து விடுவேன், அப்பா கிட்ட சொல்லிடுங்க” என கூறியிருந்தான்.
ஆனால் ராம் எளிதாக இவனை கண்டு பிடித்திருந்தான். “குரு ஏன் ரெண்டு நாள் லேட்டாகும்ன்னு சொன்ன அம்மா கிட்ட?”
“ராம் அது தான் அசைமெணட்”
“யாருக்கு? என்ன நம்ப சொல்லறையா? கோகுல்கிட்ட கேட்டுட்டேன், வீட்டுக்கு தெரியாம என்ன செய்யற? மெளனமா இருந்தா விட மாட்டேன். அம்மா கிட்ட சொல்லவா?”
“ஏய் வேண்டாம் ஏன்டா நீ வேற?! தெரியாம எதுவும் செய்யல, தேனி பக்கத்தில் டிரக்கிங் ஏரியா இருக்குதுன்னு சுற்றி பார்க்க அழகா இருக்கும்ன்னு நெட்ல பார்த்தேன். போய் பார்க்கலாம்ன்னு ஆன்லைனில் புக் பண்ணி இருக்கறேன்”
“ஏன்டா உனக்கு புத்தி இப்படி போகுது? வீட்டில் சொன்னால் அப்பாவே அழைச்சிட்டு போக போறாங்க எதுக்காக சொல்லாமல் போகணும்?”
“ராம் நான் என்ன குழந்தையா? தெரியாம போவதில் தான் திரில்லிங்கே இருக்கு. உனக்கு சொன்னா புரியாது, ப்ளீஸ் அம்மா கிட்டேயோ அப்பா கிட்டேயோ உளறிடாத ப்ளீஸ் ப்ளீஸ். பணம் கட்டிட்டேன் ராம், போகலைன்னா வேஸ்டு, திரும்ப தர மாட்டாங்க! அவங்க பேஜ்லயே அத மென்சன் பண்ணி இருக்கறாங்க”
“ரெண்டு வருட சேமிப்புடா, ஏழாயிரம் ரூபாய்! திரும்ப வாங்க முடியாது. டேய் லைன்ல தானே இருக்கற?”

“ம் ம் எந்த வெப்சைட்?”
“அது வந்து” என அதனுடைய பெயரை சொன்னவன் “ராம் இவங்க வருஷா வருஷம் நிறைய பேரை அனுப்பி இருக்கறாங்க, கமெண்ட்ஸ்ல இவங்களுக்கு ஃபைவ் ஸ்டார் போட்டு இருக்கறாங்க நீயே படித்து பாரு”
“குரு,அதெல்லாம் டிரிக் அப்படி தான் போடுவாங்க எனக்கு நீ தனியாக போறது பிடிக்கலை”
“டேய் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத! நான் மட்டும் போகலை, என்னோட சேர்த்து கிட்டத்தட்ட நூற்றி இருபது பேர் வராங்க. இங்கே இருந்து மட்டும் இல்லை சென்னை தர்மபுரி மதுரையின்னு எல்லா ஊர்ல இருந்தும் நிறைய அறிமுகம் இல்லாதவங்கள பார்க்க போறேன், பயம் எதுவும் இல்லை. நிறைய முன்னேற்பாடு செஞ்சு இருக்கறாங்க.
நீயே அவங்களோட வெப் பேஜை பாரு வர்றவங்களோட லிஸ்ட் இருக்கு பன்னிரெண்டு வயசு சின்ன பொண்ணு கூட வருது, நீ என்ன நினைச்சு கவலை படற! அது தான் மொபைல் இருக்கே எப்ப வேணும்னாலும் பேசிக்கலாம். நீ ஏன் பயந்துக்கற நான் இங்கே இருந்து கிளம்புன நேரத்தில் இருந்து திரும்பி வர்ற வரைக்கும் ஒன் ஹவருக்கு ஓரு தரம் உனக்கு போன் பண்ணறேன் சரியா? நீ மட்டும் வீட்ல சொல்லாம இருந்தா போதும், புரியுதா? அம்மா கிட்ட ஏதாவது சொல்லிடாத! பாரு ரெண்டு நாள், ரெண்டு நாள்ல உன் முன்னாடி வந்து நிற்க போறேன் ஓகே! ஓகேவா? சொல்லுடா?”
அவனுடேய மெளனம் இவனை கெஞ்ச வைத்து இருந்தது. “ப்ளீஸ் ராம் இந்த ஒரு முறை தான் இனி இத மாதிரி செய்ய மாட்டேன். கடைசி வருஷம்டா ஏதாவது மறக்க முடியாதது மாதிரி செய்யணும்ல்ல? நாலு வருஷம் முடிய போகுது ரொம்ப போரிங்கா போகுதுடா காலேஜ்! அவனவன் எவ்வளவு தப்பு பண்ணறாங்க தெரியுமா? தம் அடிக்கறது தண்ணி அடிக்கறதுன்னு”

“ஓ ஸாருக்கு அதெல்லாம் செய்யலைன்னு வருத்தமா வேற இருக்குதா?” ராம் இப்படி கேட்கவும்

“குரு சொதப்பறையேடா! அண்ணனையே சமாளிக்க முடியலைன்னா அப்பா கிட்டே மாட்டினா அவ்வளவு தான் போல இருக்கு டேய் அண்ணா ஜஸ்ட் நடக்கறது சொன்னேன்டா. நான் அப்படி கிடையாதுன்னு உனக்கு தான் தெரியுமே”

“ம் நான் விசாரிச்சிட்டு எனக்கு திருப்தியாக இருந்தா தான் விடுவேன், சரியா? அப்புறம் பணம் இருக்கா ஏதாவது வேண்டுமா?”
அதெல்லாம் இருக்கு நான் பார்த்துக்கறேன். பணம் கட்டியாச்சுன்ணா, செலவுக்கும் கைல இருக்கு இது போதும். மாதமாதம் தனியாக நீ வேற தர்ற, அப்பாவும் தர்றாங்க அதிகமாக செலவு செய்யறது இல்ல” ஒருவாராக பேசி சம்மதம் வாங்கி இருந்தான்.
பேசிக்கொண்டு இருக்கும் போதே திலகவதி ராமை தாண்டி நடந்தவர் “இன்னும் குரு கூட தான் பேசறையா?”
“ஆமாம்மா” எனவும்
“அது தான் ரெண்டு நாள்ல வந்து நிற்க போகிறான். அப்புறம் எக்ஸாம்மிற்கு போனா போதும்ன்னு தானே சொன்னான். சரி பேசு உங்களுக்குல்ல பேசிக்க நிறைய இருக்கும்” என்றபடி நகர

“சரிடா. பத்து நிமிடம் கழித்து கூப்பிடறேன்” என கட் செய்தவன், அவன் சொல்லியிருந்த அந்த நிறுவனத்தை தேடி அவர்களது பாதுகாப்பு எப்படி என்பதை செக் செய்தான்.

பாதுகாப்பு பெரியதாக செய்தது போல் தெரியவில்லை. வனப்பகுதி என்பதால் அங்கிருக்கும் வனத்துறையினரிடம் அனுமதி வாங்கியே காட்டிற்குள் அனுமதித்தனர். ரயிலில் தேனியில் இருந்து இறங்கவும் காட்டின் முகப்பு வரை அழைத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன் பிறகு மலை ஏற வந்திருப்பவர்கள் மொத்தமாகவோ சிறுசிறு குழுக்களாகவோ மலை ஏறியதாக கூறி இருந்தனர். பெரும்பாலும் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என சேர்ந்தே புக் செய்து இருப்பதினால் பெரிதாக சிரமம் இருந்ததாக யாரும் குறிப்பிடவில்லை. மொத்தத்தில் நல்ல அனுபவம் என முடித்து இருந்தனர்.
பத்து மணிக்கு மலை ஏற ஆரம்பித்தால் மாலை ஐந்து மணிக்கு மலை உச்சிக்கு சென்று விடலாம். ஏற்கனவே இரவு தங்குவதற்கு கூடாரம் அமைத்து இருக்க, மறுநாள் புறப்பட்டு கீழே இறங்கி வருவதாக ஏற்பாடு செய்து இருந்தது. மதியம் உணவு பாதி வழியிலும், இரவிற்கு மலை உச்சியிலும் ஏற்பாடு அவர்களே செய்திருந்தனர். பெரிதாக எடுத்து செல்வதற்கு தனியாக எதுவும் தேவையில்லை என கூறியிருந்தனர்.
இவர்கள் ஏறுவது சிறு மலை தான் அந்த இடத்தை சுற்றிலுமே அடர்ந்த காட்டு பகுதி தான். இந்த நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை இது போல ஏற்பாடு செய்து அனுப்பிக் கொண்டு இருந்தது. இது வரை எந்த ஒரு கறும் புள்ளியும் இல்லை.
சென்று வந்தவர்கள் அங்கே பார்த்த ஒவ்வொன்றை பற்றியும் அழகாக கமெண்ட் செய்திருக்க ஒவ்வொரு முறையும் சென்று வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருந்தது.
எழுதி இருந்ததை மொத்தமாக படித்தவனுக்கு திருப்தி வர குருவிற்கு மறுபடியும் அழைத்தவன் “குரு. ஓகேதான் போயிட்டு வா. இது தான் வீட்டுக்கு சொல்லாமல் போறது கடைசியாக இருக்கணும். மறுபடியும் இந்த மாதிரி தப்பு செய்யாதே” என்றபடி கட் செய்ய.
இருவருக்குமே அப்போது தெரியவில்லை முதல் பொய்யிலேயே மாட்டிக் கொள்ள போவது.
அடுத்த நாள் காலை அழகாக விடிய தன்னிடம் இருந்த சிறு பேக்கில் ஒரு செட் உடையை எடுத்து வைத்தவன், கேமரா கூடவே கொஞ்சம் தண்ணீர் கேக் துண்டுகள் இரண்டு என அளவாக எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரம் முன்னதாக ரயில் நிலையத்தில் காத்திருந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் இவனோடு இன்னோரு குடும்பமும் இவன் அருகில் வந்து நின்றது. ஐந்து வயது குழந்தை ஒன்று அழகாக அவனது அன்னையின் முதுகில் தொற்றியபடி இவனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தது.
அந்த குழந்தையின் தந்தை இவனை பார்த்து “ஹாய் ப்ரோ நீங்க எந்த ஊருக்கு போறிங்க?”
“ஹாய்” என ஆரம்பித்து “நான் குரு” என அறிமுகப்படுத்தி கொண்டவன் இறங்கும் இடம் சொல்ல, நாங்களும் அங்கே தான் வரோம். ஏற்கனவே போய் இருக்கிறோம் இந்த முறை பொண்ணையும் அழைச்சிட்டு போகலாம்ன்னு இருக்கிறோம். நிறைய குரங்குகள் இருக்கும். முயல் நிறைய பார்க்கலாம்” சற்று நேரத்தில் இருவருமே நண்பர்கள் ஆகி இருந்தனர்.
“பத்து நாள் லீவு அதுதான் குடும்பத்தோடு புறப்பட்டாச்சு. நீ என்ன செய்யற?”
படிக்கிறேன் ப்ரோ” என ஆரம்பித்து பேசிக்கொண்டு இருக்கும் போதே ராம் அழைத்து இருந்தான்.
“சொல்லு ராம்”
“எங்க இருக்கற, புறப்பட்டாச்சா?”
“ரயில்வே ஸ்டேசன் இன்னும் ரயில் வரல கொஞ்ச நேரம் ஆகும்”
“பார்த்து பத்திரமா போயிட்டு வா அடிக்கடி போன் பண்ணு”
“ம்,சரி, நீ வேலைக்கு புறப்பட்டாச்சா? இங்கே இருந்தே நிறைய பேர் வர்றாங்க போல இருக்கு, பயப்படாதே நான் பார்த்துக்கறேன்”
“சரி” என கட் செய்திருந்தான்.

ரயில் வந்து நிற்கவும் இவர்களின் பெட்டியில் ஏற அந்த கப்பாட்மெண்ட் முழுவதுமே அங்கு செல்லும் சுற்றுலா பயணத்திற்காக தனியாக புக் செய்து இருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் தங்களுக்குள் சலசலப்பாக பேசிக்கொண்டு இருந்தனர்.

தனியாக வந்தது தெரியாத அளவிற்கு அத்தனை பேரிடமும் சற்று நேரத்தில் நட்பு உதயமாகி இருந்தது. புதுமண ஜோடி ஒன்று சற்றே வயதான தம்பதியினர் ஒன்று என கிட்டத்தட்ட பத்து பேர் அங்கேயே சேர்த்து இருந்தனர்.

ரயில் புறப்பட பத்து நிமிடம் இருக்கும் போது கடைசியாக வந்து சேர்ந்தாள் விஷாலி. கொஞ்சம் பெரிய பேக்கோடு இவனின் எதிர் இருக்கையில் அமர்ந்தவள் இவனை பார்த்து “ஹாய் குரு இவங்க எல்லோரும் டிரக்கிங்தான் வர்றாங்களா? பரவாயில்லை போர் அடிக்காது! இங்கேயே இத்தனை பேர்ன்னா, ஸ்பாட்ல இன்னும் நிறைய பேர் இருப்பாங்க” இரண்டு பேரும் சேர்ந்து அழகாய் ப்ளான் போட்டது போல இயல்பாய் பேசத் தொடங்கி இருந்தாள்.
குரு சத்தியமாக இவளை, அதுவும் இந்த இடத்தில் எதிர்பார்க்க வில்லை. கிட்டத்தட்ட பார்த்து மூன்று மாதங்கள் முடிந்து இருந்தது. அவளது முகத்தையே சுத்தமாக மறந்து இருந்தான்.
அவள் கேட்டதிலேயே தெரிந்து விட்டது இவனுக்கு இவன் இங்கே வரப்போவது ஏற்கனவே அவளுக்கு தெரிந்து இருக்கிறது என்று அதனால் தான் புறப்பட்டு வந்தாளோ என்று கூட தோன்றியது.
“உன்மையை சொல்லு நீ என்ன பாலோ பண்ணறையா, இங்கே வர்றது உனக்கு எப்படி தெரியும்?”
“என்ன மறுபடியும் முதல்ல இருந்தா? ரெண்டு நாள் பக்கத்தில் எங்கேயாவது சுற்றி பார்க்க தனியா போகணும்ன்னு தோணிச்சு. இங்கே புக் பண்ணினேன். நீங்க வர்றது எனக்கு தெரியாது உங்களுக்கு நான் வர்றது பிடிக்கலைன்னா என்னால ஒன்றும் செய்ய முடியாது” என்றவள்,
அருகில் அமர்ந்து இருந்த குட்டி பெண்ணிடம் “ஹாய் குட்டி பாப்பா, நான் விஷாலி உங்க பேர் என்ன? என ஆரம்பித்துவிட்டாள்.
“நான் ஓன்னும் பாப்பா இல்லை சுருதி யூகேஜி”
“வாவ் அவ்வளவு பெரிய பொண்ணா நீங்க இவங்க யாரு உன்னோட அப்பா, அம்மாவா?”
“ஆமாம்”
“என்கிட்ட வர்றிங்களா? என்னுடைய மொபைல்ல கார்டூன் படம் வச்சி இருக்கிறேன், நாம ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்கலாமா?”
“ஓ, பார்க்கலாமே” என இவளின் அருகில் வரவும் இருவருமே கார்டூனில் ஒன்றி இருந்தனர்.
இவன் நிமிர்ந்து விஷாலியை பார்க்க, அவள் சொன்னது பொய் என்பது நன்றாக தெரிந்தது. ‘பணம் கட்டினா அழைச்சிட்டு போக போறாங்க, இதில் இவன் கோபபட எதுவும் இல்லையே, அதுவும் சில தடவை பார்த்து இருந்தவளிடம்’ நினைத்துக் கொண்டவன், அமைதியாக ஜன்னல் இருக்கையில் அமர்ந்து, கையில் வைத்திருந்த ஹெட்செட்டை மாட்டி பிடித்த பாடலை ஓட விட்டு கண்களை மூடிக் கொண்டான்.
புறப்படபோகிற சத்தம் ஸ்பீக்கரில் அலற ரயில் புறப்பட்டது, கூடவே பிரச்சனையும் குருவோடு சேர்ந்து புறப்பட்டது.
 

Kavisowmi

Well-known member
7
மதியம் இரண்டு மணியை தாண்டி இருக்க, மொத்தமாக வந்து இறங்கி இருந்தனர். ஏற்பாடு செய்து தந்து இருந்தவர் நடுவில் நின்று பேசிக்கொண்டு இருந்தார்.
அறுபது பேர் அளவில் வந்திருக்க “நண்பர்களே இன்னமும் பலர் வந்து கொண்டு இருப்பதினால், இந்த நேரத்தில் அங்கு செல்ல முடியாது. அருகில் உள்ள மண்டபத்தை இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். நாளை காலையில் மலை ஏறத் துவங்கலாம் குழுக்களாக, இப்போது நாம் நேராக மண்டபத்திற்கு செல்லலாம்”
அவர்கள் அனைவரையும் அழைத்து செல்ல, அவர்களோடு குருவும் இணைந்து கொண்டான். மதிய உணவை உண்டு விட்டு வந்திருந்த ஒவ்வொருவரோடும் பேசிக்கொண்டு இருந்தனர். தனது பேக்கை ஒரு ஓரமாக வைத்தவன் கையில் கேமராவோடு அருகில் சுற்றி பார்த்து வர புறப்பட்டு இருந்தான் குரு.
மாலை ஆகவும் இன்னும் நிறைய பேர் இணைத்து இருந்தனர். இவர்களோடு அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு புறப்படுவதாக முடிவு செய்து இருந்தனர். அடுத்த நாளை பற்றிய ஆளுக்கு ஒரு கனவுகளோடு தூங்கச் சென்றதனர்.
பெண்களுக்கு தனியாக அறை ஒதுக்கி இருக்க வந்திருந்த பெண்களோடு இணைந்து இருந்தாள் விஷாலி.
மூன்று மணிக்கே ஒவ்வொருவரும் புறப்பட்டு தயாராக இருந்தனர்.
“அதிகமாக சுமை எடுத்து செல்ல வேண்டாம். இங்கேயே உங்களுடைய பொருட்களை வச்சிட்டு வரலாம். போயிட்டு வந்த பிறகு இந்த பொருட்களை எடுத்துட்டு போயிடலாம்” என அறிவித்து இருக்க, குரு கேமராவோடு குடிக்க தண்ணீர் மட்டும் எடுத்து கொண்டு புறப்பட்டு இருந்தான்.
ஒவ்வொருவராக வந்து வண்டியில் ஏற குருவோடு இவளும் ஏறி இருந்தாள். நேற்று பார்த்த போது பேசியது, அதற்கு பிறகு அவளிடம் இவன் இது வரை எதுவுமே பேச வில்லை. முதுகில் சுமந்த சிறு பேக்கோடு ஏறி இருந்தாள். இவனின் கண் பார்வை படும் இடத்தில் ரயிலில் பார்த்த அந்த குழந்தையோடு பேசிக் கொண்டிருந்தாள். இவனோடு பேச அவளும் முயற்சிக்கவில்லை.
காட்டின் துவக்கம் வரை அழைத்து சென்றவர்கள் இவர்களை இறக்கி விட்டு செல்ல நால்வர், இருவர், குடும்பமாக மலை ஏற ஆரம்பித்தனர்.
அத்தனை பேரையும் முந்திக்கொண்டு குரு வேகமாக சென்று கொண்டிருந்தான். அவனை விடவும் சற்றே பின் தங்கியபடி மலையின் பாதையில் ஏறிக்கொண்டு இருந்த விஷாலிக்கு சற்றே கோபம்தான்.
மனதிற்குள் திட்டியபடி அவனை பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். ‘இடியட் இவன் வர்றதா தெரிஞ்சதாலதானே புக் பண்ணினேன். இவன் இப்படி போனா இங்கே யாரையும் தெரியாது. இங்கே வந்தே இருக்க கூடாது’ இவள் இப்படி நினைத்து நடக்க,
ஒரு திருப்பம் தாண்டவும் குருவின் போனிற்கு அழைப்பு வந்தது. அழைத்தது இவனது ஹாஸ்டல் மேட் காலேஜ் மேட் கோகுல்.
“ஹேய் கோகுல் சொல்லுடா, பத்து நிமிடம் தாண்டி கூப்பிட்டு இருந்தா லைனே கிடைச்சு இருக்காது. நல்ல வேளை எனக்கு இப்பவே கூப்பிட்ட”
“குரு ஸாரிடா என்னுடைய கஸின் விஷாலி, அவளும் அங்கே வந்து இருக்கறா கொஞ்சம் அவளை பார்த்துக்கோடா”
“அப்படின்னா நீ சொல்லித்தான் இங்கே வந்தாளா?”
“பார்க்கும் போது உன்னை பற்றியும் சொல்லுவேன். லாஸ்ட் டைம் நீ போறத பற்றி சொல்லி இருந்தேன், அத வச்சு இவளும் புக் பண்ணி இருப்பா போல இருக்கு. ப்ளீஸ்டா திரும்பி வர்ற வரைக்கும் கொஞ்சம் அவளையும் பார்த்துக்கோ, அவளால இன்றைக்கு நான் ஊருக்கு போகல. இங்கே தான் இருக்கிறேன். இப்போ எங்கே இருக்கறா? உன்னோட பக்கத்தில் இருக்கறாளா?”
“இல்லை கொஞ்சம் பின்னாடி வர்றா, ஒரு பேமிலி கூட பேசிக்கொண்டு வர்றா, நான் பார்த்துக்கறேன்” என்றவன் போனை கட் செய்து விட்டு ராமின் நம்பருக்கு போன் செய்தான். ராம் போனை எடுக்கவும்,
“குட் மானிங் ராம்”
தூக்க கலக்கத்தோடு “குட்மானிங், புறப்பட்டாச்சா?”
“ம், மலை ஏற ஆரம்பிச்சாச்சு! இனி டவர் கிடைக்காது, ஸாரி எழுப்பிட்டேனா?”
“அதெல்லாம் இல்லடா எழுந்திருக்கற நேரம்தான், ஆல் த பெஸ்ட் ஜாக்கிரதையா பார்த்து போயிட்டு வா”
“சரிடா” என்றபடி திரும்பி பார்க்க, சற்று தூரத்தில் இவனை பார்த்தபடி வந்து கொண்டு இருந்தாள் விஷாலி.
‘எவ்வளவு தைரியம் முன்ன பின்ன தெரியாதவனை நம்பி இவ்வளவு தூரம் வர்றதுக்கு? அதுவும் வீட்ல சொல்லாமல் வர்றதுக்கு?’ ஒரு மனம் இப்படி நினைக்க, இன்னொரு மனமோ ‘டேய் நீ மட்டும் என்ன பண்ணி வச்சிருக்கற? நீயும் சொல்லாமல்தானே வந்த?’ என இடித்துரைக்க ‘நமக்கெதுக்கு, நாம போகலாம், தேவைபட்டா பார்த்திருக்கலாம், ஒரு வேளை இவளும் நம்மல மாதிரி தானோ?! எதையாவது புதுசா செய்யணும்ன்னு புறப்பட்டு வந்து இருப்பாளோ?’
இப்போதைக்கு இவளுக்கு நம்மளோட உதவி தேவை இல்லை இன்னும் கொஞ்சம் மேல போகவும், அப்போது பார்த்திருக்கலாம் என நினைத்தவன், வேகமாக மேலே ஏறினான்.
பெரிதாக பசுமையாய் எதுவும் இல்லை. சிறுசெடிகள், கொடிகள் காய்ந்துதான் இருந்தது ஒரு வேளை மழை பெய்யும் நாட்களில் பசுமையாக இருந்து இருக்குமோ?
இன்னும் சற்று தூரம் நடந்ததும் ஒன்றையடி பாதை துவங்கி விடும், கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தாண்டியபிறகு மறுபடியும் சற்றே பெரிய பாதை தோன்றும். ஆரம்ப செக்கிங் முடிந்து வந்திருக்க, அடுத்து இந்த இடத்தில் கையெழுத்து போட்டு விட்டு மேலே செல்ல வேண்டும்.
மரங்களுக்கு நடுவே நடக்கும் போது தெரிந்த லேசான குழுமை இந்த பாதையில் நடக்கும் போது தெரியவில்லை. சற்றே சூரியனின் கதிர்கள் கொஞ்சம் உக்கிரமாக மேலே விழுந்து கொண்டு இருந்தது. காய்ந்த புற்கள் கூடவே சிறு சிறு முட்செடிகள். என கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
முதல் முதலாக ஆசையாக வந்தது சற்றே இப்போது சலிப்பாக இருந்தது
குருவிற்கு. பசுமை எங்கும் குடிகொண்டு இருக்கும் என நினைத்து வர, இங்கேயோ வறண்டு கிடந்தது பூமி. சற்றே வேகமாகவே மலை ஏறிக்கொண்டு இருந்தான். பறவைகள் கூட சற்றே வேகமாக ஒரு புறம் இருந்து மறு பக்கத்தை நோக்கி பறந்து கொண்டு இருந்தது. அதையும் போட்டோ எடுத்தான்.
எதிர்பட்ட மரங்களில் குரங்குகள் ஏறி இறங்கி விளையாடி கொண்டு இருந்தது. அதிலும் ஒரு குரங்கு இன்னொரு குரங்கின் வாலை பிடித்து இழுத்து வம்பிழுக்க அந்த குரங்கு இதை துறத்தி விட மறுபடியும் வாலை பிடித்து இழுக்க பார்க்கவே சிரிப்பாய் இருந்தது குருவிற்கு.
இதை தான் குரங்கு சேஷ்டை என்கிறார்களோ?! என நினைத்தவனுக்கு இவன் ராமிடம் வம்பிழுப்பது நினைவில் வந்தது. சிரித்தபடி ஒரு இடத்தில் நின்றவன் சற்று நேரம் அந்த காட்சியை தான் எடுத்து வந்திருந்த கேமராவில் பதிவு செய்தான்.
அதே நேரம் சென்னையில் இவர்களை அனுப்பி இருந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்த திவாகரின் போன் அடித்தவண்ணம் இருந்தது. போனை அட்டென் செய்தவன் “எஸ் திவாகர் பேசறேன் என்ன விஷயம்?”
“ஸார் இங்கே கொஞ்சம் ப்ராபளம் ஆகிடுச்சு, என்ன செய்யறதுன்னு தெரியலை, அதனால தான் உங்களை கூப்பிட்டேன். நீங்க தான் ஏதாவது செய்யணும். இதனால எத்தனை பேருக்கு பதில் சொல்ல போறோம்ன்னு தெரியவில்லை, எனக்கு பயமாக இருக்கு”
“என்ன விஷயம் முதலில் சொல்லு. நீயே பேசினா எனக்கு எப்படி புரியும். முதலில் சொல்லு”
“ஸார் வந்து மலைக்கு அந்த பக்கம் காட்டு தீ எறிஞ்சிட்டு இருக்கு ஒரு வேளை காற்று இந்த பக்கத்தில் திரும்பினா இந்த மலைக்கும் தீ பரவ வாய்ப்பு இருக்கு அப்படின்னு இப்பதான் தகவல் வந்தது. கிட்டத்தட்ட நூற்றி இருபது பேர் அங்கே போய் இருக்கறாங்க எல்லோருமே ஓரளவிற்கு ரிச், பிரச்சினை ஆனா பதில் சொல்ல முடியாது”
“வாட் இவ்வளவு லேட்டா சொன்னா என்ன செய்யறது? இப்போதைக்கு எல்லாரும் பாதி மலையை தாண்டி இருப்பாங்களே. தீ எரிகிறதுன்னா எப்படி மேல விட்டாங்க அங்கேயே நிறுத்தி இருப்பாங்களே, உனக்கு யார் சொன்னாங்க?“
“இப்போது தான் போன் வந்தது. எப்போதும் இருக்கறவர் லீவ்ல போய் இருக்கறாரு. இப்போ செக்போஸ்ட்ல இருக்கறவரு புதுசு செக்போஸ்டில் இருந்தவர் ஒவ்வொருத்தருக்கும் பணம் வாங்கிட்டு உள்ளே விட்டு இருக்கறாரு”
“ஷிட் இது ஒரு சாபக்கேடு எங்கேன்னாலும் காசு வாங்கிட்டு யோசிக்காமல் அனுப்பி வைக்கறது, நீ ஒன்று செய் அங்கே எல்லோரும் போய் இருக்க மாட்டாங்க. எப்படியும் கொஞ்சம் பேராவது பின்னாடி இருப்பாங்க, அவங்கள மட்டுமாவது திரும்ப கூப்பிடுங்கள்” என்றபடி கட் செய்தவன். தனக்கு தெரிந்த அதிகாரிக்கு போன் செய்தான்.
“ஸார் நான் சென்னையில் இருந்து திவாகர் பேசறேன். அங்கே தீ பரவறதா தகவல் வந்து இருக்கு உண்மையா?”
“ஓ ஆனா இப்போ எங்களோட நிறுவனத்தின் சார்பாக கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல அந்த மலையில் இருக்கறாங்க”
“வாட் எப்படி விட்டாங்க? போன வாரமே வெயில் அதிகமாக இருக்கு
தீ பிடிக்க வாய்ப்பு இருக்கு, அதனால யாரும் மலைக்கு மேல போகாதிங்கன்னு சொல்லி இருந்தோமே. இப்போது அந்த பகுதியை நோக்கி தான் தீ வேகமாக வந்துவிட்டு இருக்கறதாக தகவல் வந்து இருக்கு”
“இப்போது என்ன செய்யலாம்?”
“என்ன கேட்டா நான் என்ன சொல்ல? இப்போது காட்டில் ஆபீஸர்ஸ் யாரும் இருக்க மாட்டாங்க ரெண்டு நாளைக்கு முன்னாடியே எல்லோரும் கீழே இறங்கியாச்சு”
“பிரச்சினை பெருசு தான் போல இருக்கு, உங்க ஆளுதான் பணத்தை வாங்கிட்டு உள்ளே விட்டு இருக்கறாங்க, இப்போது அங்கே இருக்கறவங்களோட நிலைமை எந்த நேரத்திலேயும் அவங்க இருக்க இடத்திற்கு தீ பரவலாம். கடைசி நேரத்தில் யாருக்கும் தகவலும் சொல்ல முடியாது மீடியாவுக்கு விஷயம் தெரிஞ்சுதுன்னா அவ்வளவு தான். நான் அங்கே கிளம்பி வரேன்”
அவன் அந்த நேரத்தில் அந்த காட்டுப்பகுதியை நோக்கி கிளம்பி இருந்தான்.
இங்கோ தங்களை நோக்கி ஆபத்து வருவதை தெரியாமல் மகிழ்ச்சியாகவே மலையில் ஏறிக்கொண்டு இருந்தனர் வருங்கால தம்பதிகள், குடும்ப உறுப்பினர்கள் இளையவர்கள் என மொத்தமாக பேசியபடி, சிரித்தபடி சில நேரம் சற்று தூரம் ஓடியபடி என!
முன்னதாக சற்றே உயரமான இடத்தில் ஏறிக்கொண்டு நின்ற குரு சுற்றிலும் கேமரா வழியாக கண்களை வைத்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். வேகமாக ஏறி இருந்ததால் தனியாக வந்து கொண்டிருந்தான்.இனி கூடவே யாரையாவது சேர்த்து கொண்டு சற்று மெதுவாக நடக்கலாம் என்ன நினைத்து அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தான்.
மேலிருந்து கீழ் நோக்கி பார்க்க இரண்டு வளைவு தாண்டி விஷாலி வந்து கொண்டு இருப்பது தெரிந்தது. அதுவும் தனியாக வந்து கொண்டிருந்தாள்.
இவள் ஏன் தனியாக வந்துட்டு இருக்கறா? சேர்த்து தானே வந்துட்டு இருந்தா! என நினைத்தவன், அவளது வருகைக்காக அந்த இடத்தில் அமர்ந்து வரும் வரையில் காத்திருக்க ஆரம்பித்தான். இன்னும் சிறிது தூரம் ஏறியவுடன் பாறைகள் மிகுந்த பகுதி இருந்தது. அதை தாண்டி மறுபடியும் மாலை வரை மலை ஏற வேண்டும்.
நேரம் பார்க்க அப்போதுதான் நான்கு மணியை தொட்டு இருந்தது. கால்கள் இரண்டும் இப்போதே வலி எடுக்க ஆரம்பித்து இருந்தது. அதோடு பசி வேறு.
ஆளுக்கு நான்கு சப்பாத்தி ஒரு சில்வர் காகிதத்தில் தந்து இருந்தனர். சாப்பிட நினைத்தவன், விஷாலிக்காக காத்திருக்க இருந்தான். சிறிது நேரத்தில் விஷாலியின் குரல் கேட்டது. “காப்பாற்றுங்க காப்பாற்றுங்க!” கூடவே ‘ஆ’ என்ற கத்தலோடு “ஹெல்ப் மீ” என வாய்க்கு வந்தபடி கத்திக்கொண்டு இருந்தாள் விஷாலி
விஷாலியின் குரல் கேட்டு. சற்றே அதிர்ச்சி அடைந்தவன் அவளின் சத்தம் வந்த திசை நோக்கி வேகமாக ஓடினான் குரு.
 

Kavisowmi

Well-known member
8
விஷாலியின் குரல் கேட்டு வேகமாக ஓடியவன் எதிர்பட்ட திருப்பத்தில் அவளை பார்க்கவும் அடக்கமுடியாத அளவிற்கு சிரிக்கத் துவங்கி இருந்தான். கையில் வைத்திருந்த லேஸ் பாக்கெட்டை பிடித்து இழுத்தபடி குரங்கு இரண்டு நின்றிருக்க, பயத்தில் இன்னும் வேகமாக கத்திக் கொண்டு இருந்தாள் அவள்.
“ஏய்,விஷாலி கையில் இருக்கறத கீழே போடு, குரங்கு கூட சண்டை போடற! நீ சரியான தைரியசாலி தான்”
“பயமா இருக்கு குரு, போக மாட்டேங்குது” விஷாலியை விட்டு நகர்வதாக இல்லை அவளின் அருகில் நின்றிருந்த குரங்கு.
வேகமாக அருகில் நெருங்கியவன் அவளது கையில் உள்ளதை தட்டி விடவும் கீழே விழுந்ததை எடுத்தபடி குரங்கு நகர “உன்னை யாரு தனியாக வரச்சொன்னது? உன் கூட வந்தவங்க எங்கே?”
“அவங்க வழியில் உட்கார்ந்து வர்றேன்னு சொன்னாங்க. நீ பக்கத்தில்தான் இருக்கற உன் கூட வரலாம்ன்னு கொஞ்சம் வேகமாக வந்தேன்”
“பேக்ல என்ன வச்சு இருக்கற?”
“பார்த்தா சிரிக்க மாட்டிங்கன்னா தரேன்”
“கொடு பார்க்கலாம்” வாங்கியவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது. உள்ளே இருந்தது எல்லாமே தின்பண்டங்கள், லேஸ், குர்குரே ,பிஸ்கெட் என வகை வகையாக”
“என்ன இது மினி ஸ்னேக்ஸ் கடையே இருக்குது. பேசாம உன்னோட ப்ரெண்டுங்க கிட்டேயே உன்னை விட்டுவிட்டு வந்து இருக்கலாம்போல இருக்கு, அவங்களோட ஒரு வாரத்திற்கான சாப்பாடு உன்கிட்ட இருக்குது”
“கிண்டல் பண்ணாதிங்க குரு, எனக்கு பசி தாங்க முடியாது. திரும்ப போற வரைக்கும் என்ன செய்யறதாம்? தனியா இருக்கும்போது இது தான் என்னோட துணை”
“அப்புறம் என்ன செய்விங்க, உடம்பு போட்டுட்டேன் மறுபடியும் சாப்பிடாம இருக்கறதா?”
“ஐய எனக்கு அப்படி எதுவுமே கவலை கிடையாது. கிடைச்சு இருக்கறது ஒரு லைப் அத என்ஜாய் பண்ண வேண்டாமா உடம்பு போடறேன் ஒல்லியா இருக்கறேன் இப்படி யோசிக்கற பழக்கம் எனக்கு கிடையவே கிடையாது”
“ம் வித்தியாசமான பொண்ணுதான்” குருவும் இவளோடு பேசியபடி நடக்க இவன் அமர்ந்து இருந்த இடம் வரவும் அதில் அமர்ந்தவன் “இங்கே உட்கார்ந்து சாப்பிடலாம். எனக்கு கூட பசிக்குது. தண்ணீர் கேன் வச்சு இருக்கறதானே?”
“இருக்கே இங்கே சப்பாத்தி மட்டும்தான் தந்தாங்க”
“கவலையை பாரேன். பாதி தூரம்தான் வந்து இருக்கறோம், இன்னும் நிறைய தூரம் போகணும். தப்பான இடத்திற்கு வந்த மாதிரியே தோணுது”
“ஏன் அப்படி சொல்லறிங்க குரு?”
“ரொம்ப வறண்டு இருக்கறதால இப்படி தோணுதோ என்னவோ. இந்த இடம் இந்த நிமிஷம் சுத்தமாக பிடிக்கலை”
“எனக்கும் அப்படிதான் இருக்குது பாரஸ்ட் ஆளுங்களும் யாரும் இருக்கற மாதிரி இல்லை. நாம கத்தி பேசினா நமக்கே எக்கோ அடிக்கும் போல இருக்கு, காற்று வீசினா கூடவே மரத்தோட சத்தம் யாரோ கூப்பிடற மாதிரி பயமாக இருக்கு”
“ஏது விட்டா பெருசா பேய் கதை சொல்லுவ போல இருக்கு”
“ம்,ஆமாம் குரு ஹாஸ்டலில் இப்படி கதை சொல்லி நிறைய பேரை பயமுறுத்தி இருக்கிறேன். என்னுடைய ரூம் மேட் ஆரம்பத்தில் என் கூட தங்க வரமாட்டேன்னு ஒரே அழுகை. இப்போ அவதான் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்ட் தெரியுமா?”
“சாப்பிடு, சாப்பிட்டதும் நடக்க ஆரம்பிக்கலாம். பொறுமையாக போனால் கூட ஆறுமணிக்கு முன்னாடி போய்விடலாம்”
“அங்கே தங்கறதுக்கு என்ன மாதிரி ஏற்பாடு பண்ணி இருப்பாங்க உங்களுக்கு ஏதாவது தெரியுமா குரு”
“கூடாரம் மாதிரி ஏதாவது இருக்கும், எனக்கும் தெரியலை, இங்கே வந்தபிறகு தான் இன்னும் கொஞ்சம் விசாரித்து இருக்கலாமோன்னு தோணுது. டூ லேட் இனி எதுவும் செய்ய முடியாது. போயிட்டு திரும்ப காலையில் இறங்கிடலாம் மலைய விட்டு, அது வரைக்கும் எதுவும் செய்ய முடியாது”
“ஆமாம் குரு காற்று கூட அனலா அடிக்கிற மாதிரி இருக்கு யோசிக்காமல் வந்திட்டமோன்னு தோணுது. எனிவே வந்தாச்சு எதையும் மாற்ற முடியாது”
“சாப்பிட்டாச்சா கிளம்பலாமா?” குரு எழவும், முன்பு விஷாலி பேசியபடி வந்து கொண்டிருந்த தம்பதியினர் தங்களது ஐந்து வயது குழந்தையோடு இவர்களின் அருகில் வரவும் சரியாக இருந்தது.
“ம் போகலாம் குரு, வேகமாக போகாதே, எங்க கூடவே வாயேன். பேசிட்டே போக நல்லா இருக்கும்” விஷாலி இப்படி சொல்லவும் அவளது முகத்தை பார்த்தவனுக்கு கொஞ்சம் பாவமாகவே இருந்தது. இவன் வருவதை தெரிந்துதானே இவ்வளவு தூரம் புறப்பட்டு வந்து இருக்கிறாள், நினைத்தவன் “சரி இனி சேர்ந்தே போகலாம்” என்றவன் ஒரு கையில் அவளது பேக்கை எடுத்து அவளுக்கு மாட்டியபடி முன்னால் நடக்க ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் எல்லாம் கொஞ்சமாக சூழ்நிலை மாற ஆரம்பித்தது. முதலில் சில குரங்குகள் சத்தமிட்டபடி வேகமாக மரத்தில் தாவிக்கொண்டு இருந்தது. அப்போது கூட வரப்போகிற ஆபத்து அவர்களுக்கு புரியவில்லை.
ஐந்து வயது குழந்தையை தோளில் தூக்கி வைத்தபடி குரு முன்னால் நடந்து சென்றிருக்க அவனுக்கு அருகில் விஷாலி நடந்து கொண்டிருந்தாள். சற்று பின்னால் குருவின் தோள் மீது இருந்த குழந்தைக்கு விளையாட்டு காட்டியபடி குழந்தையின் தாய் தந்தையர் வந்து கொண்டு இருந்தனர்.
சுற்றுப்புற மாற்றத்தை முதலில் உணர்ந்தது விஷாலிதான். பறந்து வந்த சாம்பல் துகள் லேசாக வெதுவெதுப்பான சுட்டோடு கையில் பட, ஒரு நிமிடம் தயங்கியவள், நடந்து கொண்டிருந்த பாதையை விட்டு நகர்ந்தவள், மலையின் மேலிருந்து கீழே எட்டிப் பார்க்க, இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த நெருப்பை பார்த்தால்.
“குரு இங்கே நெருப்பு” என சத்தமாக கத்தியவளை தொடர்ந்து அருகில் நின்றிருந்த நால்வரும் நெருங்கி பார்க்க.
பார்க்கும் போதே வேகமாக அடித்த காற்றிற்கு ஏற்றாற் போல் சுழன்றபடி தீ வேகமாக பரவிக் கொண்டு இருந்தது. பட் பட்டென வெடித்த மரத்தின் ஓசை கூடவே பறவைகளின் கூக்குரல், இன்னும் கத்தியபடி ஓடிக்கொண்டிருந்த குரங்குகள் கூட்டம், என தெரியவும் ஒரு நிமிடம் நின்றவன் அடுத்த நொடி வேகமாக ஓட ஆரம்பித்தான்.
கூடவே வந்து கொண்டிருந்தவர்களை பார்த்து கத்தியபடி “நெருப்பு இந்த திசையை பார்த்து தான் பரவிக்கிட்டு இருக்குது. எவ்வளவு வேகமாக போக முடியுமோ அவ்வளவு வேகமாக என் கூட வாங்க”
“எங்க போறோம் குரு விஷாலி கேட்டபடி ஓடி வர”
“இன்னும் கொஞ்ச தூரத்தில் பாறைகள் நிறைந்த பகுதி இருக்கு. அங்கே போய்விடலாம், விஷாலி உன்னோட பேக்கை வீசிடு, அத வச்சிக்கிட்டு வேகமாக போக முடியாது” அவன் சொல்லும் வரை அவளுக்கு தெரியவில்லை. வேகமாக கழற்றி வீசியவள் இவனோடு ஓட, அவன் தூக்கிய குழந்தையோடு ஓடினான்.
அவனோடு சேர்ந்து நால்வரும் ஓட காற்றின் வேகத்திற்கு ஏற்றாற்போல்
வேகமாக தீயும் பரவிக் கொண்டு இருந்தது.
“குரு நம்ம கூட வந்தவங்க?” கேட்கும் போதே விஷாலியின் குரலில் அழுகை தெரிந்தது.
“இப்ப யோசிக்க நேரம் இல்லை. வேகமாக ஓடி வா, எங்கேயாவது அவங்கள காப்பாற்றிக்கொள்ள ஏதாவது முயற்சி எடுத்து இருப்பாங்க”
“எப்படி?” என கேட்டவளின் குரலில் இருந்தது அழுகை மட்டுமே. அழுதபடி அந்த இடத்திலேயே நின்றிருந்தாள்.
“விஷாலி பைத்தியமா உனக்கு?” கேட்டவன் அவளது கைகளை பிடித்து இழுத்தபடி வேகமாக ஓடிக் கொண்டு இருந்தான்.
சற்று தூரம் ஓடவும் பாறைகள் பகுதிக்கு வர, வேகமாக குழந்தை, அதன் பெற்றோர், விஷாலி, இவன் என பாறைக்கு நடுவில் இருந்த பகுதிக்கு அழைத்து சென்றவன், அவர்களை அமர வைத்து சுற்றிலும் பார்க்க, கற்களும் பாறைகளுமாக இருந்ததாலோ என்னவோ, அந்த இடத்தில் செடிகளோ காய்ந்த புற்களோ இல்லாமல் வெறுமையாக காணப்பட்டது.
வந்து அமரவும் குழந்தையின் பெற்றோர் குழந்தையை வாங்கிக் கொள்ள விஷாலிதான் நடக்கவிருப்பதை நினைத்து கதறி அழ ஆரம்பித்தாள்.
“விஷாலி அழாதே”
“பயமாக இருக்கு குரு, நான் திரும்பி போவேனா அம்மா அப்பாவுக்கு வந்தது தெரியாது. சொல்லாமல் வந்ததிற்கு கடவுள் எனக்கு தண்டனை தந்துட்டாரு, அம்மா அப்பா எவ்வளவு நம்பினாங்க நான் இல்லாம அவங்க எப்படி இருப்பாங்க?”
“ஏய், லூசா நீ? நீ மட்டுமா இங்கே சிக்கிட்டு இருக்கற? உன்னை மாதிரி இன்னும் நூற்றிஇருபது பேர் இங்கே இப்படி தான் மாட்டிட்டு இருக்கறாங்க. ஏன் நான் மட்டும் சொல்லிட்டா வந்தேன்? சொல்லாம தான் வந்து இருக்கிறேன். ஏதாவது பண்ணலாம் பேசாம இரு”
அடுத்துதடுத்து காற்று வேகமாக வீச. வேகமான காற்றோடு தீயும் தலைக்கு பேல் பறக்க தலையை குனிந்தபடி இறைவனிடம் வேண்டுதலை வைத்தபடி கண்களை மூடி அமர்ந்து இருந்தனர்.
சற்றே காற்று குறையவும் திரும்பி பார்க்க, நெருப்பு மலையின் உயர்ந்த பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்தது. விடிய விடிய குழந்தையை தவிர யாரும் தூங்க வில்லை.
மொபைலில் டவரும் இல்லை. யாரையும் தொடர்ப்பு கொள்ளவும் முடியவில்லை. விஷாலிக்கு கூட அழுகை குறைந்து இருந்தது. ஆனால் அந்த இடத்தில் இருந்து எப்படி வெளியேறுவது? அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் பாதுகாப்பு தானா? எதுவும் தெரியாமல் விழித்து கொண்டு இருந்தனர்.
குருதான் அனைவரையும் தேற்றிக்கொண்டு இருந்தான். “இப்போதைக்கு யார் கிட்டே இருந்தும் உதவியை எதிர்பார்க்க முடியாது. காலையிலேயே வரை வெயிட் பண்ணி ஆகணும். இந்நேரம் இங்கே தீ விபத்து நடந்தது, நாம இத்தனை பேர் வந்தது ஒரளவுக்கு மற்றவங்களுக்கு தெரிந்து இருக்கும். நிச்சயமாக நாளைக்கு நம்மளை தேடி யாராவது வருவாங்க அது வரைக்கும் நாம காத்திருந்துதான் ஆகணும்”
சொன்னவனுக்கு கூட மிகுந்த யோசனைதான். ‘இந்நேரம் மீடியாவிற்கு இங்கு நடந்தது சென்றிருந்தால் வீட்டிற்கும் தெரிந்து இருக்கும். அம்மா அழுதிட்டு இருப்பாங்களோ? ராம் உளறாம இருந்தா நல்லா இருக்கும்’ இப்படி நினைத்தவன் அடுத்த நிமிடமே ‘இந்த ராமோட முகமே கண்ணாடி மாதிரி, முகத்தை பார்த்தா கண்டு பிடிச்சிடுவாங்க, நிச்சயமாக தெரிந்து இருக்கும்’
முதல் முதலில் ஆசைபட்ட இப்ப பாரு, நல்லா சிக்கிக்க போற குரு, நீ வீட்டுக்கு போனால் முதலில் உனக்கு இருக்கு. நல்லா அடி விழப்போகுது இதோட உன்னோட ஹாஸ்டல் வாழ்க்கைக்கு மூடு விழா தான்’
காற்றோடு லேசான அனல் அடிக்க விடிவதற்காக காத்திருந்தனர். ஒவ்வொருவரது மனநிலை ஓவ்வொரு விதமாக இருக்க, அடுத்த நாள் விடியல் லேசான தூறலோடு துவங்கி சற்று நேரத்தில் மழையால வலுத்தது.
மழை விழ ஆரம்பிக்கவும் எழுந்தவன், மற்றவர்களையும் அழைத்தாபடி மெதுவாக மலையை விட்டு கீழே இறங்க ஆரம்பித்தான். மழை துளி விழவும் இப்போது புகையோடு அங்கங்கே எரிந்து கொண்டிருந்த மரங்களில் தீ அணையும் சத்தம் வித்தியாசமாகக் கேட்டு கொண்டு இருந்தது.
கையில் மொபைலை தேட, அது எங்கேயோ விழுந்து காணாமல் போய் இருந்தது. கூட இருந்த யாரிடமும் கூட மொபைல் இல்லை. குரு முதுகில் மாட்டியிருந்த பையில் அவன் நண்பனிடம் அவன் வாங்கி வந்திருந்த கேமரா மட்டும் பத்திரமாக இருந்தது. அந்த ஓட்டம் ஓடி வந்தும் கூட.
விழுந்த சாரலை பொருட்படுத்தாமல் கேமராவை வெளியே எடுத்தவன் இயற்கையின் கோர தாண்டவத்தை படம் பிடிக்க ஆரம்பித்தான்.
அப்போது அவனுக்கு தெரியவில்லை கருகிய மரமும் வழியில் இறந்து கிடந்த முயல்களும் சில குரங்குகள் மட்டுமே பலியாகி இருக்கும் என நினைத்திருக்க, அது பொய் எனும்படி கூற தயாராக இருந்த காட்சி அவனுக்காக காத்திருக்குமென.
கண்களை கேமராவில் ஓட்டியபடி நடக்க ஆரம்பிக்க ஒரு மணி நேரம் நடந்த நிலையில் அடுத்தடுத்த திருப்பம் தெரியவும் கருகிய மரத்தின் மேல் பார்வையை பதித்தபடி வந்தவனுக்கு, சற்றே ஓய்ந்த தோற்றத்தோடு பின்னால் வந்த விஷாலியின் அழுகையோடு கதறல் ஓலி வேறு கூற சற்றென திகைத்துத் திரும்பினான் குரு.
 

Kavisowmi

Well-known member
9
அதே நேரம் ராமின் நிலை வேறாய் இருந்தது வீட்டில் டிவியில் சொன்ன செய்தியை கேட்டவனது முகம் மொத்தமாக மாறி இருந்தது. கண்கள் குளமாக கட்டியிருக்க எப்போது வேண்டுமானாலும் அணை உடையும் என்பது போல நின்றிருந்தான். டிவியில் ஒவ்வொன்றையும் காட்ட காட்ட பதறியபடி நின்று கொண்டு இருந்தான், அந்த இடத்தை விட்டு அகலாமல்.
அனைத்து சேனல்களிலும் பிரதான செய்தியாக திரும்ப திரும்ப இதை மட்டுமே கூறிக்கொண்டு இருந்தனர். முதல் கட்ட அறிக்கையாக காட்டு தீ வேகமாக பரவிக் கொண்டு இருக்கின்றது. அந்த காட்டில் நூற்றி இருபது பேர் வரை சிக்கி இருக்க கூடும் என கூறப்படுகிறது. தற்சமயம் மீட்பு படையினர் உள் நுழைந்து உள்ளனர். இது வரை எந்த தகவலும் ஒருவரை பற்றியும் கிடைக்கவில்லை என வந்தது.
அடுத்து சற்று நேரத்தில் தற்போது கிடைத்த தகவலின் படி என புதிதாக கிடைத்த செய்தி மறுபடியும் கூறிக்கொண்டு இருந்தனர். “காற்றின் வேகத்திற்கு அங்கே அங்கே தீ பிடித்தவண்ணம் உள்ளது. இது வரை சற்று தூரம் ஏறியவர்கள் என இருபத்தி ஐந்து பேர் வரை கீழே இறங்கி உள்ளனர். நூறு பேரின் நிலை என்ன. இது வரையிலும் தெரியவில்லை”
“சம்பவ இடத்தில் இருந்து நமது செய்தியாளர் கூறுவதை கேட்கலாம் வாருங்கள்”
“சொல்லுங்க ராஜேந்திரன் அங்கே சம்பவ இடத்தின் நிலவரம் என்ன? எத்தனை பேர் மாட்டி இருக்க கூடும்? அவர்களின் நிலை என்ன? எத்தனை பேரை காப்பாற்ற முடியும்? அல்லது எல்லோரையும் காப்பாற்ற முடியுமா? சொல்லுங்கள் ராஜேந்திரன்”
“என்ன சொல்ல இந்த நிறுவனம் எப்படி இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தார்கள் என்பதே ஆச்சர்யமாக உள்ளது சகோதரி, சென்ற வாரமே வெப்பம் அதிகமாக உள்ளது என கூறியிருந்த நிலையில் இவர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி தந்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது”
“அருகில் இருந்தவர்கள் காப்பாற்றபட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே தீயில் கருகிய மரங்கள் அங்கங்கே வழியை மறைத்தபடி விழுந்து கிடப்பதினால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறியிருக்கிறார்கள். இன்று மதியத்திற்குள் இன்னும் பலரை மீட்க முடியும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். அருகில் உள்ள கிராமவாசிகளும் தங்களது பங்கிற்கு இவர்களோடு இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அடுத்த தகவல் கிடைக்கவும் உங்களிடம் வருகிறேன் சகோதரி நியூஸ் ஒன் தொலைக்காட்சிக்காக உங்கள் ராஜேந்திரன்”
செய்தியை கேட்டு ராம் திகைத்தபடி நின்றிருக்க, கடைக்கு புறப்பட்டு வந்த கிருஷ்ணன் ராமின் முகத்தை பார்க்க அவனது முக மாற்றம் கூடவே கேட்டு கொண்டிருந்த செய்தி எதுவோ புரிவது போல் தோன்ற யோசிக்காமல் “ராம் இங்கே வா, குரு எங்கே?” என்ற கேள்வியை கேட்டிருந்தார்.
கேட்டது தான் தாமதம் நடந்ததை சொல்லி இருந்தான். “எனக்கு பயமாக இருக்குதுபா இப்படி ஆகும்ன்னு தெரியாது”
அடுத்த நொடியே கன்னத்தில் பளார் என அறைந்து இருந்தார். “வேலைக்கு போனா பெரிய மனுசன் ஆகிட்டயா? ஏதா இருந்தாலும் சொல்லணும்ன்னு சொல்லி இருக்கிறேனா இல்லையா?” பேச பேசவே அடுத்த ப்ளாஸ் நியூஸ் ஓலிபரப்பு ஆனது.
“சற்று முன்பு கிடைத்த தகவலின்படி முதல் கட்டமாக பத்து பேரின் உயிரற்ற உடல் தீயில் கருகியபடி கிடைத்துள்ளதாக தெரிவித்து உள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றவர்களின் உறவினர்கள் பலர் வந்தவண்ணம் உள்ளனர்”
செய்தியை கேட்டு திலகவதி மயங்கி சரிந்திருந்தார் “குரு குரு” என அனத்தியபடி!
சில நிமிடத்திலேயே வீட்டில் உள்ளவர்கள் கிளம்பி இருந்தனர் குரு சென்றிருந்த மலையை நோக்கி. அழுகை ஓயாமல் திலகவதி பின் இருக்கையில் சாய்ந்திருக்க, அவரை எப்படி சமாதானம் செய்வது என தெரியாமல் ராம் அருகில் இருந்தான் “அம்மா அவனுக்கு எதுவும் ஆகி இருக்காதுமா அழாதிங்க”
“பேசாதடா நீயும் அவன் கூட சேர்ந்துட்டு பொறுப்பில்லாமல் நடந்து இருக்கறல்ல? அவனுக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னை உயிரோடு பார்க்க முடியாது பார்த்துக்கோ”
“ஏன் மா இப்படி பேசறிங்க? அவன் புத்திசாலி நிச்சயமா மாட்டி இருக்க மாட்டான்” ,
சம்பவ இடத்தை நெருங்கி இருந்தனர். ஏற்கனவே பலர் வந்து காத்திருக்க அவர்களோடு இவர்களும் இணைந்து கொண்டனர். லேசான தீ காயத்தோடு இருப்பவர்களுக்கு அங்கேயே முதலுதவி செய்து அனுப்பிக்கொண்டு இருந்தனர்.
சற்றே ஒதுக்குபுறமாக வந்திருந்த வண்டிகளை போட்டபடி ஏதாவது தகவல் கிடைக்கின்றதா என பலர் காத்திருந்தனர். அவர்களோடு இவர்களும்தான்.
அதிலும் ஒரு பெரியவர் அழுதது கண் கலங்கும்படி இருந்தது “ஐடி ஃபீல்டில வேலை செய்யறா என்னோட பொண்ணு, ரிலாக்சேஸனுக்காக அவங்க ஆபீஸ்ல இங்கே அனுப்பி வச்சு இருக்காங்க, ரெண்டு நாள் தான்பா வந்துடுவேன்னுட்டு வந்தா, ஒரு தகவலும் தெரியவில்லை. நியூஸ் கேட்டு நிமிஷத்தில் இருந்து இங்கே தான் இருக்கிறேன். என்னோட பொண்ணுக்கு எதுவும் ஆகாமல் திரும்ப வந்தா போதும்”
ஒவ்வொன்றையும் பார்க்கும் போது இன்னும் பயமாக இருந்தது ராமிற்கு. திலகவதி இன்னமும் அழுது கொண்டு தான் இருந்தார். சற்று நேரம் பார்த்தவன் தந்தையிடம் சொல்லி விட்டு மீட்புப்பணியினரோடு ராமும் புறப்பட்டு இருந்தான்.
அதே நேரம் காட்டில் விஷாலியின் கத்தலை கேட்டவுடன குரு திரும்பி பார்க்க எதிர்பட்ட காட்சியை பார்த்தபடி பத்தடி பின்னால் அப்படியே நின்றிருந்தாள் அவள். கண்களில் குளமென கண்ணீர்.
அவளின் பார்வை படும் தூரத்தில் தாய் குரங்கு ஒன்று தனது குட்டியை இருக்கி அணைத்தபடி தீயில் கருகி இருந்தது. அதை பார்த்து தான் அழுதுகொண்டு இருந்தாள் இவளது அழுகை கேட்டு நால்வரும் இவளை நெருங்கவும் இவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்தது மரம் ஒடிந்து விழவும் சரியாக இருந்தது. சில நிமிடத்தில் நால்வரும் உயிர் தப்பி இருந்தனர்.
குரு முடிவாக சொல்லி விட்டான். இனி போறது நமக்கு பாதுகாப்பு இல்லை இங்கேயே வெயிட் பண்ணலாம். நிச்சயமாக யாராவது வருவாங்க நம்மை காப்பாற்ற. விழுந்த மரம் முழுவதும் பாதையை மறைச்சு இருக்கு, இத எடுக்க நிச்சயம் வனத்துறையினர் அதுற்குடைய உபகரணத்தோட வந்தா தான் முடியும். நாம கொஞ்சம் பாதுகாப்பான இடத்தில் காத்திருக்கலாம்”
“ஒரு வேளை யாருமே வரலைன்னா?” குழந்தையின் தகப்பனார் கேட்க,
“அப்படி இல்லைங்க சார். நிச்சயம் வருவாங்க, ஏன்னா இங்கே வந்தவங்களோட நிலைமை என்னன்னு பதில் சொல்ல வேண்டிய கடமை கவர்மெண்டுக்கும் இருக்கும் தானே, நாமதான் பார்த்தோமே இங்கே வந்தவங்க நிறைய பேர் ஐடி பிப்பில்ஸ், இந்நேரம் நிறைய பேர் தேடி வந்து இருப்பாங்க. நாம இங்கே மாட்டி இருக்கறதால நமக்கு தெரியாம இருக்கு” சொன்னவன் கூடவே இந்நேரம் ‘ராம், அப்பால்லாம் இங்கே வந்து இருப்பாங்க’ மனதிற்குள் சொல்லி கொண்டான்.
மரங்கள் இல்லாத திறந்த வெளியில் ஐவரும் அமர்ந்திருக்க விஷாலி குருவை பார்த்து “குரு வரும் போது சினேக்ஸ் கேட்ட குரங்கு தானே அது அதற்கு இப்படி ஒரு முடிவு வந்து இருக்க வேண்டாம்”
“விஷாலி தொட்டத்திற்கும் அழற முதலில் அழாம உட்காரு, நீ பயபடறது இல்லாம எல்லோரையும் பயப்பட வைக்கிற, வந்த லேசான மழையால பெரும்பாலும் நெருப்பு அணைஞ்சாச்சு, எப்படியும் கீழே இருந்து ஆட்கள் வந்திட்டு இருப்பாங்க இங்கே வந்துட்டா கீழே போயிடலாம். அது வரைக்கும் இங்கே காத்து இருந்து தான் ஆகணும்”
கிட்டத்தட்ட நேற்று ஓட ஆரம்பித்தது இந்த நிமிடம் வரை உயிரை காப்பாற்ற ஓடிக்கொண்டு தான் இருந்தனர். முடிவு தான் என்னவாக இருக்கும் என்பது தெரியாமல் இருக்க, எல்லோருமே சோர்ந்து இருந்தனர். குழந்தை சுருதி தாயின் மடியில் தலை வைத்து தூங்கி இருக்க விழித்திருந்த நால்வருக்கும் அடுத்து என்ன செய்வது என்பது தெரியவில்லை.
பசி ஒரு பக்கம் வயிற்றை கிள்ளிக்கொண்டு இருந்தது. அதிக நேரம் உணவு உண்ணாமல் அமர்ந்து இருப்பதும் அவ்வளவு சரியாக தெரியவில்லை. சற்றே பாதையின் ஓரத்தில் மேலிருந்து குரு கீழே பார்க்க ஆறு ஏழு வளைவு தாண்டி அசைவு தெரிந்தது. பாதையில் விழுந்திருந்த மரங்களை மீட்பு படையினர் வெட்டி எடுத்துக் கொண்டு இருந்தனர்.
“விஷாலி, ப்ரோ ரெண்டு பேரும் இங்கே வாங்க அவங்க வந்தாச்சு, நாம இங்கே இருக்கறத அவங்களுக்கு சொல்லணும்” இவன் அழைத்தான்.
“எப்படி குரு முடியும்?” இரண்டு பேருமே ஆர்வமாக கேட்க
“விஷாலி உன் கிட்ட கர்சீப் இருக்கா?”
“இருக்கு குரு, இருந்தாங்க” என அவள் தர அதே நேரம் குழந்தை சுருதியின் தந்தை வேந்தனும் தன்னுடைய கர்சீப்பை எடுத்து நீட்டினான்.
“எதுக்கு குரு?” ஆர்வம் இரண்டு பேர் முகத்திலும் இருந்தது.
“கீழே இறக்கம் தானே, ஒரு சின்ன கல்லில் இந்த கர்சீப்பை கட்டி அங்கே வேலை செய்யறவங்க மேல படற மாதிரி வீசினா, அவங்க நம்மள பார்த்திட்டா போதுமே, கொஞ்சம் வேகமாக நமக்கு உதவி கிடைக்கும்ல?”
“எஸ் கிடைக்கும், ஆனால் அவ்வளவு தூரம் போகுமா?”
சும்மா ஒன்னுமே முடியாதுன்னு நிக்கறதுக்கு டிரை பண்ணி பார்க்கலாமே” முதலில் விஷாலியின் கைகுட்டையில் சிறு கல்லை கட்டி கீழே வீச அது பாதி தூரத்தில் கல் கழன்டு விழ, கர்சீப் பாதியிலேயே நின்று விட்டது. இவர்கள் எதிர் பார்த்த தூரம் போகவில்லை.
இம்முறை சற்றே பெரிய கல்லில் அடுத்த கர்சீபை இருக்கி கட்டியவர்கள்
விழாது என தெளிவுபடுத்தி விட்டு வேகமாக வீச இம்முறை ஏமாற்ற வில்லை. ஏற்கனவே மரம் வெட்டி அப்புறபடுத்தி கொண்டிருந்தவனின் அருகில் விழ, கைகுட்டையை பார்த்தவன் இயல்பாக உயரத்தை பார்க்க, மேலே குரு கையை ஆட்டிக்கொண்டு இருந்தான். கூடவே இரண்டு பேரும்.
மேலே நின்றிருந்தவர்களுக்கு நிழல் படம் போல் தெரிந்தது இவர்களை காட்டி அவன் அருகில் இருந்தவர்களிடம் சொன்னது. சிறு சிறு பொம்மையாய் காட்சி தர
கீழேயிருந்தவர்கள் இவர்களை நோக்கி கையை ஆட்டி வருகிறோம் என்பது போல செய்கை செய்தனர்.
கொஞ்சமாக ஆசுவாசமாக உணர ஆரம்பித்தனர். இவ்வளவு நேரம் இருந்த பதற்றம் கொஞ்சமாக குறைந்து இருந்தது நால்வருக்கும். உதவி கிடைத்து விடும் என்பதே பெரிய நிம்மதியை தந்தது.
இன்னமும் சுருதி தூங்கிக்கொண்டு இருக்க “ஏன் சிஸ்டர் சுருதி ரொம்ப நேரம் தூங்கறா போல இருக்கு?”
“ஃபீவராக இருக்கு குரு அதுதான் தூங்கறா இங்கே நடந்தது பார்த்து பயந்திட்டா போல இருக்கு”

“விடுங்க சிஸ்டர் இன்னும் எப்படியும் இரண்டு மணி நேரம் தான் நாம கீழே போயிடலாம், இனி பயம் இல்லை”
அவ்வப்போது மேலிருந்து கீழே பார்த்த வண்ணம் இருந்தனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் முடிந்த நிலையில் இவர்கள் இருந்த இடத்தில் மரங்களை அப்புறப்படுத்த வந்து இருந்தனர். அப்புறபடுத்திய அடுத்த நொடி முதலில் வந்தது ராம்.
வேகமாக வந்தவன் குருவை இழுத்து அணைத்திருந்தான். “தேங்க்ஸ் கடவுளே. நிறைய பயந்துட்டேன் குரு, நல்ல வேளை எதுவும் ஆகல, ஏதாவது ஆகி இருந்தா கடைசி வரைக்கும் என்னால குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வந்து இருக்க முடியாது” கண்கள் கூட கலங்கி கண்ணீர் விழவா என கேட்டு நின்றது.
“டேய் ராம் என்ன இது கண்ல தண்ணீர்? இவ்வளவு சின்ன பையனா நீ? அழற சேம் சேம் அப்பா அம்மா எங்கே”
“ம் கீழே இருக்கறாங்க, அம்மா ஓரே அழுகை நேற்றிலிருந்து இன்னும் சாப்பிடல”
“போன் இருக்கா? டவர் இருந்தா பார்த்து கூப்பிட்டு சொல்லிடலாம். அழாமயாவது இருப்பாங்க” குரு சொல்ல
“இதோ இரு கூப்பிட்டு பார்க்கறேன் உன்னோட போன் என்ன ஆச்சு?”
“யாருக்கு தெரியும் எங்க விழுந்திடுச்சுன்னு, ஓடும் போது தவறி விழுந்துடுச்சு போல இருக்கு”
“போகட்டும் விடு, உனக்கு எதுவும் ஆகல, அதுவே போதும்” பேசியபடி போனில் முயற்சி செய்ய
“இல்லைடா லைன் கிடைக்கலை” ராம் கூறவும்
அப்போது மீட்பு பணியில் இருந்தவர்கள் இரண்டு பேர் “ஹலோ நான் சக்தி. இதுக்கும் மேல யாராவது சிக்கி இருக்க வாய்ப்பு இருக்கிறதா?”
“முதல்ல மேல வந்தது நாங்க தான் ஸார். எங்களுக்கு முன்னாடி யாரும் போகல அதனால மேல ஆட்கள் இருக்க வாய்ப்பு இல்லை”
“ஓகே எதுக்கும் நாங்க ஒரு முறை செக் செய்திடறோம் நீங்க கீழே போகலாம், ராம், ராம் தான உங்களோட பேரு? நீங்களும் இவங்க கூட கீழே இறங்கிடுங்க. எங்களுக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு வரோம், இப்படியே கொஞ்ச தூரம் போனீங்கன்னா வண்டி நிறுத்தி வச்சி இருக்கிறோம், அதுல போயிடுங்க. ராம் உங்க உதவிக்கு நன்றி” சொன்னவர்கள் வேலையில் ஈடுபட்டனர்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் மலையின் அடி வாரத்தை தொட்டு இருந்தனர். இறங்கிய பிறகுதான் தெரிந்தது பாதிப்பு எவ்வளவு பெரியது என்று. நேரில் பார்க்கவும் நிறைய அதிர்ச்சியோடு திகைத்து நின்றனர் அனைவரும்.
 

Kavisowmi

Well-known member
10
கீழே இறங்கி வரவும் அந்த இடமே ஒரே பரபரப்பாக காணப்பட்டது. போலீஸ் ஒருபுறம் வேக வேகமாக கூட்டத்தை அப்புறபடுத்தியபடி இருந்தது. கூடவே மீட்பு குழுவினரால் அழைத்து வரப்பட்டவர்களிடம் விசாரித்து, காயம் பட்டவர்களை உடனுக்குடன் மருத்துவரிடம் அனுப்பி வைத்துக் கொண்டு இருந்தனர்.
மருத்துவர்கள் ஒரு புறம் தீ காயம் பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்து கொண்டிருந்தனர். உயர் சிகிட்சை தேவைப்படுவோரை அங்கிருந்த ஆம்புலன்சில் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு உடனுக்குடன் அனுப்பி வைத்து கொண்டிருந்தனர்.
இதில் ஓயாது ஒலித்த ஆம்புலன்சின் சத்தம், பதற்றத்தோடு கூடியிருந்த உறவினர்கள், கிராமவாசிகள், வேடிக்கை பார்க்க என ஒரு கூட்டம், அவர்களை விரட்டியபடி போலீசார் என பரபரப்பாகவே இருந்தது.
ஸ்ரெட்சர் தூக்கிய செவிலியர் அவசரகதியாக சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு இருந்தனர். மருத்துவர்கள் முதலுதவிக்கு தேவையானதை தயாராக வைத்தபடி காத்திருந்தனர்.
இத்தனையையும் சுற்றி பார்த்தவன் “அண்ணா அப்பா எங்கே??”ராமை பார்த்து கேட்க,
“வண்டியை இங்கே பார்க் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க, கொஞ்சம் அந்த பக்கத்தில் போட்டு இருக்கிறேன், அம்மா அழறதால அப்பா அம்மா கூட இருக்கறாங்கன்னு நினைக்கிறேன். வா நாம போகலாம்”
“ராம் இரு இவங்க கிட்ட சொல்லிட்டு வந்திடறேன் என்றவன் விஷாலி நின்றிருந்த திசையை பார்க்க, அதற்கு முன்பு சுருதியும் அவளை சுமந்தபடி அவளது தாய் தந்தை இருவரும் இவனது அருகில் வந்திருந்தனர்.
சுருதி குடும்பத்தினரை கூப்பிட அவர்களது குடும்பம் மொத்தமும் காத்திருக்க சுருதியின் காய்ச்சலுக்கு அங்கேயே மருத்துவம் பார்த்து விட்டு புறப்பட தயாராக இருந்தனர். குருவிடம் வந்தவன் “தேங்க்ஸ் குரு இந்த நாளை மட்டும் இல்லை உன்னையும் மறக்க மாட்டேன். இது என்னோட நம்பர். நாம இன்னொரு நாள் சந்திக்கலாம் வரேன்” என புறப்பட,
சற்று நகர்ந்து விஷாலி நின்றிருந்தாள். அவளை அழைத்து போக கோகுல் முன்னமே வந்து காத்திருந்தான். குருவை பார்த்ததுமே அருகில் வந்தவன் “தேங்க்ஸ்டா இவளுக்கு ஏதாவது ஆகி இருந்தது, இவங்க அப்பா அம்மாவுக்கு பதில் சொல்லி இருக்க முடியாது”
விஷாலியை பார்த்தபடியே “உன்னோட கஸின் கிட்ட சொல்லு, இனி இது மாதிரி பைத்தியகாரதனம் எதுவும் பண்ண கூடாதுன்னு. நீயும் இது மாதிரி காரியத்துக்கு துணை போகாதே, எதா இருந்தாலும் அவளோட அம்மா அப்பாவை அழைச்சிட்டு போக சொல்லு” சொன்னது என்னவோ கோகுலிடம் தான் ஆனால் பார்வை முழுவதும் விஷாலியின் மேலேயே இருந்தது”
இவனுடைய அத்தனை பேச்சுக்கும் தலையை மட்டுமே ஆட்டிக் கொண்டு இருந்தாள்.
“விஷாலி நீ என்ன பண்ண போற?” சட்டென கேட்கவும் பதில் சொல்ல தெரியாமல் விழித்தவளை பார்த்தவன்
“கேட்டது புரியலையா? இப்போது நேரா எங்க போக போற, வீட்டுக்கா இல்லை ஹாஸ்டலுக்கா?”
“ஹாஸ்டலுக்கு தான் போகணும். வீட்டுக்கு இந்த வாரம் வர்றதா சொல்லல, கோகுல் என்ன கூப்பிட்டுட்டு போய் ஹாஸ்டலில் விட்டுடு, அங்கே போய் தங்கிக்கறேன். இந்த வாரம் முடியவும் ஊருக்கு போகலாம்”
“வேண்டாம் நீ வீட்டுக்கு கிளம்பு, ஏற்கனவே பார்த்து பயந்திருக்கற, ரெண்டு நாள் தங்கிவிட்டு ஹாஸ்டல் வந்தா போதும். அம்மா, அப்பா, தம்பி கூட இருக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்”
உண்மை தான் இதுவரை இறந்தவர்கள் பதினேழு பேர். ஒவ்வொருவராக இறக்கிவர அவர்களின் உறவினர்கள் கதறியது இன்னும் கொடுமையாக இருந்தது. இறப்பே வலி நிறைந்தது தானே!
இங்கு நடந்தது மனதை விட்டு அகல நீண்ட நாட்கள் பிடிக்கும், அதுவும் இறப்பின் விளிம்பை பலர் பார்த்து விட்டு வந்திருந்தனர். பலருக்கு லேசான காயம் பட்டு இருந்தது. இதில் காயம் படாமல் இறங்கியவர்கள் இவர்கள் ஐவர் மட்டுமே. இந்த மலையேற்றத்தில் கலந்து கொள்ள நினைத்தவர்கள் அனைவருக்கும் இந்த சம்பவம் ஆயுள்காலம் உள்ள வரை மறக்காது என்பதில் துளி கூட சந்தேகம் கிடையாது.
குரு சொன்னது எதற்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை விஷாலி. “மிடியா பர்சன் அந்த பக்கமாக நிற்கறாங்க, பே ன்னு வேடிக்கை பார்த்துட்டு பக்கத்தில் போயிடாதே, டிவியில உன்னோட முகம் வந்தா நீ மட்டும் இல்லை கோகுலும் மாட்டிக்குவான்”
கோகுல் வர்றேன்டா, காலேஜில் பார்க்கலாம்” என்றவன் ராமோடு நகர்ந்தான் தாய் தந்தை இருந்த இடத்தை நோக்கி. கூட்டத்தை விலக்கியபடி வண்டி இருக்கும் இடத்தை நெருங்க, ஏற்கனவே இறங்கியதும் போன் செய்து இருந்ததால் திலகவதியின் அழுகை ஓரளவிற்கு கட்டுபட்டு இருந்தது.
குருவை கண்ணில் பார்த்தால் போதும் என்பது போல் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தார். இவன் வரவும் காரின் வெளியே தொலைவை வெறித்தபடி நின்றிருந்த கிருஷ்ணன் இவனது முகத்தை பார்த்தவர்,
“வண்டியில் ஏறு வீட்டுக்கு போகலாம்” என்றார். அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. இவன் அமைதியாக பின் புறம் அமர, திலகவதிக்கு அப்போது தான் உயிரே வந்தது.
“குரு உனக்கு எதுவும் ஆகல தானே, ஏன்டா இப்படி செஞ்ச?” என கேட்டபடி மறுபடியும் அழ ஆரம்பித்தார். அழும் போதே மகனின் மேல் மொத்தமாக பார்வையால் ஸ்கேன் செய்திருந்தார். எந்த காயமும் இல்லை என தெரியவும் அங்கே சற்று நேரம் காயம்பட்டவர்களை பார்த்தவர் அல்லவா இன்னும் அழுகை வந்தது.
அதுவும் இறந்தவர்களின் குடும்பத்தார் அழுவதை பார்க்கவும்தான் கிருஷ்ணனும் ராமும் அவரை இங்கு அமர வைத்து காத்திருக்க ஆரம்பித்தனர். ராம் போனில் சொல்லவும் கிருஷ்ணன் திலகவதியிடம் சொல்லியவர், இவர்கள் வருவதற்காக காரின் அருகிலேயே காத்திருந்தார்.
“கடவுளே என்னுடைய மகனை காப்பாற்றிட்ட” என்றபடி திலகவதி திரும்பவும் அழவும் காரில் மறுபுறம் ஏறிய ராம் “ம்மா நிறைய அழுதாச்சு, இனி அழாதிங்க”
அமைதியாக தாயின் அருகில் அமர்ந்த குரு எப்படி சமாதான படுத்துவது என தெரியாமல் ராமை பார்க்க, அவனோ கண் ஜாடையில் மடியில் படுத்துக்கோ என்பது போல ஜாடை காட்ட, தாயின் மடியில் தலை வைத்து படுத்த சில நிமிடத்திலேயே தூங்கி இருந்தான்.
மகன் மடியில் படுத்ததுமே திலகவதியின் அழுகை நின்றிருந்தது. அவனின் தலையை தடவியபடி அவர் அமர்ந்து இருக்க, ராம் தன் தந்தையிடம் “அப்பா அம்மாவும் சாப்பிடலை குருவும் சாப்பிடலை, வழியில் எங்கேயாவது நிற்பாட்டுங்கபா சாப்பிட்டுட்டு போகலாம்” என்றான்.
அடுத்து எதிர்பட்ட ஹோட்டலில் காரை நிறுத்தும் போது குரு நல்ல தூக்கத்தில் இருந்தான்.
“அம்மா அவனை எழுப்புங்கமா”
“வேண்டாம் ராம் தூங்கட்டும் பார்சல் ஏதாவது வாங்கிக்கோ எழுந்தா கொடுத்துக்கலாம்”
“ம்மா உங்களுக்கு”
“எனக்கும் எதுவும் வேண்டாம் இவனை பார்த்ததே போதும்”
அம்மா இருங்க நானே ஏதாவது வாங்கிட்டு வரேன். எப்படியும் கொஞ்ச நேரத்தில் எழுந்து பசிக்கித்துன்னு கேட்பான் அப்போ ரெண்டு பேரும் சாப்பிடுங்க” கிருஷ்ணனும் ராமனும் சாப்பிட்டு விட்டு இருவருக்கும் வாங்கியபடி வண்டியில் ஏறினர்.
இரண்டு மணி நேரம் போல் தூங்கிய குரு விழித்து எழவும் ஓரமாக வண்டியை நிறுத்தி திலகவதியும் அவனுமாக சாப்பிட்டனர். அடுத்து வண்டியை எடுத்தவ கிருஷ்ணன் நேராக தங்களது வீட்டிற்கு வந்த பிறகே வண்டியை நிறுத்தினார்.
இறங்கி கதவை திறந்து விட்டவர் உள்ளே நுழைந்துதான் தெரியும் விழுந்தது அறை பளாரென்று குருவின் கன்னத்தில் ஒன்று.
“என்ன செய்யறிங்க? என குருவை மறைத்தபடி திலகவதியும்,
“தம்பியை அடிக்காதிங்க” என தந்தையை ராமும் மறைத்து நின்றனர்.
“எல்லாம் நீ குடுக்கற செல்லம், இப்போது சொல்லறதுதான் இனி அவன் ஹாஸ்டலில் எல்லாம் தங்க வேண்டாம். இங்கே இருந்தே காலேஜிற்கு போயிட்டு வரட்டும்” என கோபமாக சொல்லி விட்டு தனது அறைக்குள் நுழைந்திருந்தார்.
குரு அமைதியாக ஷோபாவில் அமர்ந்து இருக்க, அருகிலேயே திலகவதியும் அமர்ந்து இருந்தார். ராம் தான் “அம்மா நான் குருவை பார்த்துக்கறேன், நீங்க போய் தூங்குங்க, நேற்றும் நீங்கள் தூங்கலை உடம்புக்கு ஏதாவது ஆகிடப்போகுது”
“ஆமாம்மா போய் தூங்குங்க அப்பா அடிச்சாங்கன்னு எனக்கு கோபம் எல்லாம் இல்லை. அடிக்காமல் இருந்து இருந்தாதான் ஃபீல் பண்ணி இருப்பேன். வீட்டுக்கு வந்ததே போதும்ன்னு இருக்கு, ராம் கூட போய் தூங்கிக்கறேன்” என குரு சொல்லவும் எழுந்து போனார்.
“டேய் வாடா நீயும் மேல ரூம்புக்கு இங்கே உட்கார்ந்து என்ன செய்ய போற எழுந்திரு”
“விட மாட்டியே வரேன், ரொம்ப பயந்திட்டியா? அங்கே வரும் போது பார்த்தேனே பேய் அறைஞ்ச மாதிரில்ல வந்த”
“நீ வேற அப்பா முகத்தை பார்த்தே கண்டு பிடிச்சிட்டாங்க, உன்னோட புண்ணியத்தில் எனக்கும் கன்னத்தில் ஒன்று விழுந்தது. அம்மாவை தான் சமாளிக்க முடியலை”
“ஸாரி டா இப்படி ஆகும்ன்னு நினைக்கலை, எனக்கு போன் வேணும் எப்ப வாங்கி தர்ற?”
“உனக்கில்லாததா? நாளைக்கே வாங்கி தர்றேன். இனி இப்படி எங்கள பயமுறுத்தாதே”
“ஏய் என்ன என்னவோ வேணும்ன்னு போய் சிக்கின மாதிரி சொல்லற? எல்லா இடத்திலேயும் பணம் படுத்தும் பாடு, கவர்மெண்ட் ஆபீஸ்ஸர்ஸ் சரியா இருந்து இருந்தா இப்படி நடந்து இருக்காது”
“ம் ஆனாலும் இது வரைக்கும் இருபது பேர் இறந்ததாக நியூஸ்ஸில் சொல்லி இருக்கறாங்க கிட்டத்தட்ட அதிகமாக காயம் ஆனவங்கன்னு பத்து பேரை சொல்லி இருக்கறாங்க லேசான காயம் பட்டவங்க கணக்கே இல்லை. கேட்கும் போதே பதட்டமா இருக்கு நம்மள மாதிரி தானே ஒவ்வொருத்தரும் துடிச்சு இருப்பாங்க, பொறுப்பில்லாத அரசாங்கமும், கை நீட்டற அதிகாரிங்களும் இருக்கற வரைக்கும் இது மாதிரி அப்பப்போ நடந்துட்டு தான் இருக்கும் யாராலையும் தடுக்க முடியாது, வெறுப்பா இருக்குது குரு”
“டேய் நீ ஏன்டா இப்படி பொங்கற? அமைதியான ராமா இது? ஆத்தாடி எனக்கே பயமா இருக்கு! வா போய் தூங்கலாம். அப்பாவை எப்படி சமாதானம் பண்ணறதுன்னு யோசிச்சா, நீ இப்படி அப்பா முன்னாடி பேசி இன்னும் ஏத்தி விட்டுடாதே, வழக்கம்போல காலையில் அப்பா கால்ல விழுந்திட வேண்டியதுதான் சரியாகிடுவாங்க! சரியாகிடுவாங்கதானே?”
இருவருமே பேசியபடி தூங்க சென்றனர் அடுத்த நாள் மட்டும் அல்ல அதற்கு அடுத்த நாளுமே இவனால் தந்தையோடு பேச முடியவில்லை.
அவருக்கும் தன் மேலேயே வருத்தம் தான். கோபமாக அடித்து விட்டார், ஆனால் அதற்கு பிறகு யோசித்து பார்க்கையில் ஏதாவது ஆகி இருந்தால் என்னவாகி இருக்கும் என்று இப்போதும் யோசிக்க முடியவில்லை.
இரண்டு நாட்கள் முடிந்து இருந்தது. ராம் குருவை அழைத்து சென்று அவனுக்கு பிடித்த மாடலில் போன் வாங்கி தந்திருந்தான்.
குரு முதலில் கோகுலுக்கு போன் செய்தவன் விஷாலி பற்றி விசாரித்துக் கொண்டான். “அவங்க வீட்ல கொண்டு போய் விட்டுவிட்டேன். அவள் தைரியமான பொண்ணு பயம் ஒன்றும் இல்லை” என கூறி இருந்தான் கோகுல். அவன் கூப்பிட்டு முடிக்கவும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் தெரியாத நம்பரில் இருந்து போன் வந்தது, அழைத்தது விஷாலி.
“என்ன பற்றி விசாரிச்சிங்களாம் பயப்படாதிங்க, இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்க மாட்டேன். முக்கியமான விஷயம் சொல்லதான் கூப்பிட்டேன். நான் நல்லா யோசித்து ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறேன்”
“என்ன முடிவு” யோசனையோடு குரு கேட்க,
“நான் என்னுடைய லைப்ல ரெண்டு பேருக்கு மரியாதை கொடுக்க கூடாதுன்னு நினைப்பேன். அதில ஒருத்தரா உன்னை செலக்ட் பண்ணியாச்சு”
“இன்னமும் எனக்கு புரியவில்லை விஷாலி”
“இருடா சொல்லறேன்”
“ஏய் என்ன மரியாதை குறையுது?”
“பதில் சொல்ல விடறையா? அப்ப இரு அந்த ரெண்டு பேர் யாருன்னா ஒன்னு என்னோட ப்யூச்சர் ஹஸ்பெண்ட் இன்னொருத்தர் என்னோட பெஸ்ட் ப்ரெண்ட். உயிர் காப்பான் தோழன் அப்படி தானே சொல்வாங்க? அந்த இடத்தில் உன்னை வைக்க போறேன். இனிமேல் என்கிட்ட நீ மரியாதையை எதிர் பார்க்காதே ஓகே”
“என்ன பேச்சு பேசற? எப்படியோ கூப்பிட்டுகோ, எனக்கு பிரச்சினை இல்லை. ஊருக்கு போய் இதைதான் யோசித்தாயா? உன்னையெல்லாம் என்ன செய்ய? அன்றைக்கு கல்லுக்கு பதிலா உன்னை உருட்டி விட்டு இருக்கணும்”
நான்கு நாட்களை தாண்டி இருக்க இறுக்கம் குறைந்து, நார்மலான நிலைக்கு வர ஆரம்பித்து இருந்தனர். இயல்பாக நடந்த நிகழ்வை கூறி கிண்டல் செய்ய முடிந்தது இருவராலும்.
“அது தான் நடக்கலையே, சோ இனி நீ என்னோட இம்சையை சகிச்சுதான் ஆகணும் வேற வழி இல்லை, இனி நீ ஆயுசுக்கும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”
“தெய்வமே போனை வை” அப்போது ஆரம்பித்தது இவர்களது நட்பு படலம், இன்று வரை தொடர்கிறது. அதிகமாக பேசியது இல்லை ஆனாலும் அவள் பற்றியது அனைத்தும் இவனுக்கு தெரியும். அது போல தான் அவளுக்கும் இவனது அனைத்தும் அத்துப்படி.
அதன் பின் கிட்டத்தட்ட இருபது நாட்கள் முடிந்த பிறகு ஹாஸ்டலுக்கு செல்ல அனுமதித்தார் இவனது தந்தை. அதுவும் நூறு கன்டிஷன்களோடு.
“தம்பி என்ன செய்யற?” என்ற சத்தம் கேட்கவும் பழைய நினைவுகளில் இருந்து சட்டென கலைந்தவனுக்கு காலுக்கு அருகில் லேசாக தட்டியவர், கட்டையில் அடிக்கும் சத்தம் கேட்க நிகழ்காலத்திற்கு வந்திருந்தான்.
 

Kavisowmi

Well-known member
11
“மாற்றி மாற்றி பேசற குடும்பத்தில் நமக்கு சம்மந்தம் வேணாம்பா” என ஆணித்தரமாக கூறிய சுமித்ராவை எப்படி சமாளிப்பது என விழித்து கொண்டு இருந்தனர் இருவரும்.
“அப்படி எதுவும் இருக்காது சுமி, நீ தெரியாம பேசற, நாம மறுபடியும் அவங்க கிட்ட பேசலாம். யாரோ சொன்னத வச்சு முடிவு செய்ய கூடாது. அவங்கள பற்றி நிறைய பேர் கிட்ட விசாரிச்சுட்டேன். குறைவாக எதுவுமே இல்லை. பையன் ரொம்ப நல்ல பையன் அதிர்ந்து பேச தெரியாது. அவர் கூட நீ சேர்த்து நின்றால் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கு. அந்த அளவுக்கு ரெண்டு பேருக்கும் பொருத்தம் நல்லா இருக்கு”
“அப்பா பேச்சை மாத்தாதிங்க நான் என்ன சொல்லிட்டு இருக்கறேன் நீங்க எத பேசறிங்க வந்தவர் என்ன சொன்னார்? நகை அதிகமாக கேட்கறாங்க! இப்ப இத கேட்பாங்க அடுத்த முறை அப்படியே மகனுக்கு வண்டி வாங்கி தந்திடுங்கன்னு சொல்வாங்க. அப்படியே டிவி, ப்ரிஜ், வாசிங்மெஷின்னு பட்டியல் போயிட்டே இருக்கும், இப்ப ஆளை விட்டு கேட்பாங்க அப்புறம் நேரடியா கேட்பாங்க, நல்லவேளை இப்பவே இவங்களோட குணம் தெரிஞ்சுதே போதும்பா இந்த இடம் நமக்கு ஒத்து வராது. வேற மாப்பிள்ளை பாருங்க”
“பைத்தியம் மாதிரி உளர கூடாது சுமித்ரா அவங்க நிச்சயத்துக்கு தேவையானதை வாங்கிட்டதா சொல்லி இருக்கறாங்க” தாய் மல்லிகாவின் எந்த சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை.
“ஓ அந்த தைரியம் தான் இப்படி கேட்க ஆள் அனுப்ப சொல்லிச்சா?” அம்மாவை பார்க்காமல் அப்பாவிடம் திரும்பியவள்
“அப்பா சும்மா சும்மா என்ன சொன்னாலும் தலையாட்ட கூடாது. தெளிவாக பேசிடுங்க நகை அன்றைக்கு பேசினதுதான். அதுக்கு மேல எதுவும் கொடுக்க கூடாது. கல்யாணத்துக்கு செலவு கூட ஆளுக்கு பாதின்னு பேசுங்கள் தாரளமாக கொடுக்கலாம்”
“ஏன் அவங்க பக்கத்தில் இருந்தும் உறவுக்காரங்க வருவாங்க தானே சமையலுக்குன்னு நாம மட்டும் கொடுக்க வேண்டாம், அவர்களையும் கொடுக்க சொல்லுங்க, இப்போது யாரு தனியா பொண்ணு வீட்டுக்காரங்க மட்டும் செலவை ஏற்றுக்கராங்க நிறைய கல்யாணம் இப்போது இப்படி தான் நடக்குது”
“அது மாதிரியே அப்பாவை பேச சொல்லுங்க, இவ்வளவு ஆன பிறகு எல்லா செலவிலேயும் ரெண்டு பேருக்கும் சமமா பிரிச்சுக்கறதா இருந்தா மேற்கொண்டு பேசலாம்ன்னு சொல்லுங்க, இதுக்கு சம்மதம்ன்னா பார்க்கலாம்”
“சுமி நீயா முடிவு பண்ணாத, என்ன நடந்ததுன்னு ஒரு முறை அவங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம், நாமளே முடிவு எடுக்க வேண்டாம். என்ன சொல்லறது புரியுதா? கொஞ்சம் அமைதியாக இரு, எங்களுக்கு இருக்கிறது நீ ஒரே பொண்ணு, ஏதா இருந்தாலும் உனக்கு செய்யாமல் யாருக்கு செய்யாமல் போறோம். கடன் வேணும்னாலும் வாங்கிக்கலாம்”
“எப்படிபா கடன் வாங்கிட்டு எப்படி அடைப்பிங்க உங்களுக்கு வயது ஏறத்தான் செய்யுது இறங்கல நம்ம தகுதிக்கு ஏற்ற மாதிரி பார்த்தா போதும்” இதற்கு மேல் மகளிடம் தர்க்கம் பண்ண விரும்பாத ராகவேந்தர் வெளியில் புறப்பட்டார்.
“அப்படி பேசாதடா கேட்கறவங்க வளர்த்தது சரி இல்லைன்னு சொல்ல போறாங்க ஓரே பொண்ணுன்னு யாராவது செல்லம் கொடுத்து கெடுத்து வச்சி இருக்கறாங்கன்னு பேச போறாங்க தாயார் மல்லிகா இப்படி சொல்லவும் இன்னும் கோபமாக பேச ஆரம்பித்தாள் சுமி.

“இதை தான்மா தப்புன்னு சொல்லறேன். சில விஷயங்களை என்னால எற்றுக்கொள்ள முடியாது, அதுல இதுவும் ஒன்று. குடுத்தா என்னன்னு நீங்க யோசித்தா, அவங்க வாங்கினா என்னன்னு யோசிக்கதானே செய்வாங்க! நீங்க எதுவுமே செய்ய வேண்டாம் நானே பார்த்துக்கறேன்”
“அந்த மாப்பிள்ளை எப்படி திரும்ப இந்த வீட்டு படியை மிதிக்கறாங்கன்னு பார்க்கறேன் மகனே கேட்க வாயே இருக்காது, நீங்க போங்கம்மா, உங்க வேலையை பாருங்க, இதுக்கு மேல நடக்க போறத வேடிக்கை மட்டும் பாருங்க, துண்டை காணோம் துணியை காணோம்ன்னு ஓட வைக்க போறேன் அந்த மாப்பிள்ளையை, எப்படி அப்படி ஒரு அப்பாவி மாதிரி முகத்தை வச்சிட்டு இப்படி கேட்க தோணுது?” முகம் சிவக்க கோபமாக கத்தியவள் வேகமாக தனது அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து இருந்தாள்.
அறைக்குள் போன பிறகும் கோபம் அடங்கவில்லை சுமித்ராவிற்கு. ‘பேர் மட்டும் ராம்ன்னு வச்சா போதுமா நடந்துக்கறது அப்படியே ஆப்போசிட், நல்ல வேளை இப்பவாவது இவங்களோட சுயரூபம் தெரிஞ்சுதே’
சில நிமிடம் தான் அமைதியாக கட்டிலில் அமர்ந்து யோசித்தவள் சற்றும் தாமதிக்காமல் பார்க்க வரும் போது தந்து சென்றிருந்த ராமின் நம்பருக்கு தனது செல் பேசியில் அழைத்திருந்தாள். முதல் ரிங் முழுவதும் அடித்து நின்றிருக்க மறுபடியும், மறுபடியும் முயற்சி செய்து கொண்டிருந்தாள். ‘ரெண்டு நேரம் மெசேஜ் செஞ்சா இவங்க என்ன கேட்டாலும் ஓகே சொல்லணுமா அந்த அளவுக்கு முட்டாள் மாதிரியா தெரியறோம்?! எவ்வளவு நேரம் ஆனாலும் சரி பேசாமல் போனை வைக்கப் போறது இல்லை’
நான்கு முறை முயற்சி செய்து ஐந்தாவது முறை முயற்சி செய்யும் போது போனை அட்டென் செய்தான் ராம்.
“ஹலோ” என இவனது குரல் கேட்டது தான் தெரியும் பொறிய ஆரம்பித்தாள் இவள்.
“போன் எடுக்க இவ்வளவு நேரமா ஐந்தாவது தடவை கூப்பிடறேன். அப்படி என்ன வேலை செஞ்சிங்க?”
“சுமி தானே இப்ப தான் வேலை விட்டு வந்தேன். பாத்ரூமில் முகம் கழுக போய் இருந்தேன் அது தான் போன் அடிச்சது தெரியலை, ஆமாம் ஏன் கோபமாக பேசற மாதிரி இருக்கு என்ன ஆச்சு?”
“உங்க அம்மாகிட்ட என்ன சொன்னிங்க? பிடிக்கலைன்னா முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே! எதுக்காக பொய்யா நடிக்கணும்?”
உண்மையிலேயே ஒரு நிமிடம் பயந்திருந்தான் ராம். ‘நாம அம்மாகிட்ட தானே சின்ன பொண்ணா தெரியறா வேண்டாம்ணோம், இது எப்படி இவளுக்கு தெரிஞ்சது? அம்மா அப்படி வெளியே சொல்லற ஆள் கிடையாதே’ மனதில் நினைத்தவன் “சுமி நீ என்ன சொல்லற எனக்கு புரியவில்லை”
“என்ன உங்களுக்கு புரியவில்லை? இங்கே உங்கள் பொண்ணுக்கு நீங்க விருப்ப படறத செய்ங்கன்னு சொல்லிட்டு, பின்னாடியே நகை இவ்வளவு போட சொல்லுங்கன்னு ஆள் அனுப்பினா என்ன சொல்லுவாங்க? பிடிக்கலைன்னா அன்றைக்கே பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய் இருக்கலாமே மாற்றி மாற்றி பேசினா?”
“ஹலோ என்ன ஓவரா பேசறிங்க நாங்க யாரையும் அங்கே அனுப்பல, அதுவும் நகை கேட்டு வாய்ப்பே இல்லை ஒரு விஷயம் தெரிஞ்சிக்கோங்க எங்க அம்மாவே வரப்போற மருமகளுக்காக ஆளுக்கு இருபது ,இருபது பவுன் சேர்த்து வச்சி இருக்கறாங்க, அப்படி இருக்கும் போது அவங்க ஏன் இப்படி கேட்க போறாங்க? யாரை வேணும்னாலும் குறை சொல்லுங்க எங்க அம்மாவை சொல்லாதிங்க புரியுதா?”
“அம்மாவுக்கு உன்னை ரொம்ப பிடித்து இருக்கு அதனாலதான் பேசாமல் இருக்கிறேன், எங்க சொந்தத்தில் பொண்ணு தர நிறைய பேர் ரெடியா இருக்கறாங்க, அம்மாவுக்கு பார்த்ததும் உன்னை தான் ஏனோ ரொம்ப பிடிச்சி போச்சு, நீ என்னடான்னா இவ்வளவு பேசற!”
“என்ன நான் பொய் சொல்லறது மாதிரி பேசறிங்க? காலையில் வந்தாரே ஒருத்தர் அவர் யாரு? நீங்க அனுப்பாமல் தான் தனியாக வந்தாரா? கேட்டா ஆமாம் கேட்டேன்னு சொல்லுங்க, அத விட்டுட்டு இப்படி பேசாதிங்க”
“யாரு சுந்தரம் அங்கிளா?” ராம் கேட்கவும்,
“பேர் எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நகை அதிகமா வேணும் இது அதுன்னு நிறைய பேசினாரு”
“சுமித்ரா ஏதோ மிஸ் அன்டஸ்டேண்டிங் என்னன்னு பார்க்கறேன்”
“இதோ பாருங்க நீங்க எதையும் பார்க்க வேண்டாம். விருப்பம் இருந்தா தெளிவாக சொல்லுங்க மனசில் ஒன்றை வைத்து வெளியே வேற பேசக்கூடாது. இங்கேயும் அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, கடன் வாங்கின்னாலும் அவங்க கேட்கிறது செய்திடலாம்ன்னு பேசிட்டு இருக்கறாங்க அவங்கள கடனாளி ஆக்கறதில் எனக்கு விருப்பம் இல்லை”
“சுமித்ரா நீங்க இவ்வளவு கவலை பட வேண்டிய தேவையே இல்லை. இங்கே உன்னை நிச்சயம் பண்ண புடவை தேவையானத வாங்கி உறவுக்காரங்களுக்கு சொல்ல ஆரம்பிச்சாச்சு, நீ பயப்படற மாதிரி எதுவும் ஆகாது. வேணும்னா மறுபடியும் அம்மாவை அங்கே வரச்சொல்லறேன். நேரடியாக பேசிக்கோங்க, ஏன்னா அம்மாவை பொறுத்தவரைக்கும் யார் கிட்டேயும் நேரத்திற்கு தகுந்த மாதிரி பேசற பழக்கம் கிடையாது”
தெளிவாக இவனது பேச்சை கேட்டவளுக்கு கொஞ்சம் கோபம் குறைந்து இருந்தது. கூடவே கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் தோன்றி இருந்தது. ஒரு வேளை தப்பு அவங்க பேர்ல இல்லாமல் இருந்தால் தான் பேசியது அதிகபடிதானே. வீட்டில் அம்மாவோடு பேசுவது வேறு சரியாக பேசாத ஒருவனோடு இவ்வளவு நேரம் பேசியது, அதுவும் அவ்வளவு கோபமாக என்பது வேறல்லவா?! இத்தனைக்கும் இவள் பேச பேச தன்மையாகவே பதில் சொல்லி கொண்டு இருந்திருக்கிறான் அவன்.
“ஸாரி நான் வேணும்ன்னு எதுவும் சொல்லல கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு பேசுதுன்னு யோசிக்க வேண்டாம்”
“அம்மா எப்பவுமே என்கிட்ட சொல்வாங்க ராம் கொஞ்சம் அமைதி, அவனுக்கு பார்க்கற பொண்ணு அவனுக்கும் சேர்த்து பேசணும்ன்னு, சொன்னது மாதிரியே பார்த்து இருக்கறாங்க. நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன். அப்புறம் உங்க அப்பா அம்மாவுக்கு மட்டும் தான் என்னை பிடிச்சுதா உனக்கு பிடிக்கலையா?”
இப்படி கேட்கவும் “ராம் அம்மா கூப்பிடற மாதிரி இருக்கு நான் வச்சிடறேன்” என கட் செய்திருந்தாள் அவள்.
“வாயாடி” என்ன செல்லமாக கொஞ்சியபடி தாயாரை தேடி சென்றான் ராம். “அம்மா சுந்தரம் அங்கிள் அவரோட வேலையை சரியா செஞ்சிட்டு போய் இருக்கறாரு”
“என்னடா ஆச்சு?” திலகவதி காபியை கலக்கியபடி பேச்சு கொடுக்க நடந்ததை சொல்லவும் “ம்மா எவ்வளவு கோபம் வருது அந்த பொண்ணுக்கு”
“என்னடா பயமா இருக்கா?”
“ஐய்ய அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எப்படி அந்த பொண்ண எந்த ஆங்கில்ல உங்களுக்கு பிடிச்சதுன்னு யோசிச்சிட்டு இருக்கிறேன்”
“டேய் அந்த பொண்ணும் கொஞ்சம் உன்ன மாதிரி தான். மனதிற்குள் எதையும் வச்சிக்க தெரியாது. விளையாட்டு தனமாவே வளர்ந்து இருக்கறா போல இருக்கு, சின்ன பொண்ணு தானே போக போக சரி ஆகிடுவா, இப்போ என்ன பண்ணலாம் நீ சொல்லு, இருக்கற குழப்பத்தை சரிபண்ணாம அப்படியே விடறது சரியா படலை”
“நீ என் கூட வர்றியா நாளைக்கு சாயங்காலமா இந்த ப்ளவுஸ் வந்துடுச்சு இல்லையா சரியா இருக்கான்னு கேட்டுவிட்டு, அப்படியே இந்த பிரச்சினையையும் முடிச்சிட்டு வந்துவிடலாம்”
“ஆமாம்மா நானும் அதை தான் சொல்லணுன்னு நினைச்சிட்டு வந்தேன். இப்பவே குழப்பத்தோட ஆரம்பித்தால் நல்லா இருக்காது. முதல் கோனல் முற்றும் கோனல் அப்படின்னு ஆகிட கூடாது. நீங்க பார்த்த பொண்ணு, எப்படியும் உங்க கூடதான் பாதி நேரம் இருக்க போறா, ஆரம்பத்திலேயே தப்பான எண்ணம் வந்திடுச்சுனா பின்னாடி மாத்திக்கறது கஷ்டம்”
“சரிடா குருவிற்கு போன் அடிச்சையா அவன் அட்டென் பண்ணினானா?”
“இல்லைமா. டிரை பண்ணிட்டு தான் இருக்கிறேன். எந்த இடத்தில் இருக்கறான்னு கூட தெரியவில்லை. அவனா கூப்பிட்டா தான் தெரியும். எப்படியும் அழைப்பான். நானும் டிரை பண்ணிட்டு தான் இருக்கிறேன்”
“சரிடா நைட்க்கு என்ன டிபன் வேணும்? சப்பாத்தி போட்டுடலாமா?”
“மா எது ஈசியாக இருக்குமோ அதை செய்யுங்க எனக்கு என்ன தந்தாலும் ஓகே தான். குறை சொல்ல மாட்டேன்”
“இந்த விஷயத்தில் அண்ணன், தம்பி ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கறிங்க, இன்னும் அவன் கூட இருந்தா நான் தான் சமைப்பேன்னு அடம்பிடித்து ரகளை பண்ணி இருப்பான்”
“ஏம்மா குருவை மிஸ் பண்ணறிங்களா? இந்த முறை வந்தா பேசலாமா இனி இங்கேயே வேலை தேடிக்கோன்னு சொன்னா கேட்டுப்பான்மா, அவனுக்கு என்னை விடவும் உங்க மேல பாசம் ஜாஸ்தி”
“அதனால தான்டா அவனோட எல்லா ஆசைக்கும் சரின்னு சொல்லிட்டு இருக்கிறேன். ஊர் ஊரா சுற்றாமல் ஒரு இடத்தில் வேலையில் இருந்தாலே இப்போதைக்கு போதும். ஒரு வருஷத்துக்கு மேல ஒரு இடத்தில் நிற்கிறது இல்லை. நாளைக்கு அவனுக்கும் பொண்ணு தேடும் போது நிச்சயமாக கட்டிக்க போற பொண்ணு யோசிப்பால்ல”
“ம்மா நிறைய யோசிக்கறிங்க கவலையே படாதிங்க இந்த முறை எங்க வேலைக்கு சேர போறானோ அந்த இடத்தில்தான் கடைசி வரைக்கும் வேலை செய்வான் நம்புங்க” ஏதேச்சையாக விழுந்த வார்த்தைகள் தான் அது அப்படியே பலிக்க போவதை அப்போது யாரும் உணரவில்லை.
 

Kavisowmi

Well-known member
12
சத்தம் கேட்டதும் கூடவே அடிக்கும் ஒலி கேட்க, சட்டென கண் திறந்தான் குரு. ஆடு மேய்க்கும் முதியவர் ஒருவர் கையில் வைத்திருந்த கட்டை கொண்டு அவனது காலுக்கு அருகில் தட்டியபடி நின்றார்.
கிட்டத்தட்ட காலுக்கு அருகில் பெரிய கருந்தேள் தனது கொடுக்கை வளைத்தபடி இவனை கொட்டுவதற்கு தயாராக நின்றிருந்தது. சட்டென காலை நகர்த்தியவன் பின் புறம் நகர அமர்ந்து இருந்த கல்லில் இருந்து லேசாக சரிந்தான்.
தேளை அடித்த அந்த காட்டுவாசியோ “பயப்படாத தம்பி அடிச்சிட்டேன். செடிங்க இருக்கற பக்கத்தில் உட்காரும் போது கவனமாக இருக்க வேண்டாமா? இந்த பக்கத்தில் பாம்பே சர்வ சாதாரணமாக நடமாடும் கடிச்சு இருந்தா கஷ்டமா போய் இருக்கும். அதுவும் கருந்தேள் விஷம் ஜாஸ்தி மலை மேலன்னா கூட விஷமுறிவுக்கு கசாயம் மாதிரி ஏதாவது தருவாங்க இங்கே ஆளுங்களும் இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகணும்னா கூட அரை நாளே ஆகும்”
இவன் சரியும் போதே வழக்கம்போல அவனது மொபைல் செடிகளுக்கு நடுவில் தவறி இருந்தது. அதை அவனும் உணரும் நிலையில் இல்லை. ஏனென்றால் பார்த்த தேளின் சைஸ் அப்படி மிகப்பெரியது சில நேரங்களில் இவனும் பார்த்து இருக்கிறான்தான் அது எல்லாமே அளவில் சிறியது. தேள் கடி கூட வாங்கி இருக்கிறான் பயந்தது எல்லாம் இது வரையிலும் இல்லை ஆனால் இன்று அது அவன் பார்க்கும் போது அவனுக்கு அருகில் நின்றிருந்த தோரணை அப்படி. வளைந்து கொடுக்கை திருப்பி நின்றதே ஒரு ஜான் உயரம் இருந்தது. கடித்து இருந்தால் பயத்திலேயே உயிர் போய் இருக்குமோ என நினைக்கும் அளவில் இருந்தது.
காடு ஒவ்வொரு முறையும் இவனுக்கு புது புது அனுபவங்களை தந்து கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு நினைவு அந்த இடத்தை மறக்க முடியாதபடி ஏதாவது ஒரு நிகழ்வு அவனின் நினைவில் நீங்காத பொக்கிஷமாக சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
முதலில் தீ விபத்தில் தப்பித்தான் என்றால் அடுத்து கொஞ்ச நாள் கழித்து சென்ற இடத்தில் நடந்தது வேறு மாதிரி அனுபவம்.
அந்த காட்டில் முதல் முதலாக பாம்பு முட்டையில் இருந்து வெளிவருவதை பார்த்தவன் அதன் அருகில் கேமராவில் படுத்தபடி பாம்பு குட்டிகள் வெளிவருவதை படம் பிடித்துக் கொண்டு இருந்தான். பத்து முட்டைகளுக்கு மேல் இருக்க கவனமெல்லாம் பாம்புகளை படம் பிடிப்பதில் இருக்க, சட்டென கேட்டது மெளிதாக ஷ் என்ற சத்தம் மெதுவாக திரும்பி பார்க்க, ஒரு அடி உயரத்திற்கு உயர்த்தியபடி நல்ல பாம்பு படம் விரித்து இவனை தீண்ட தயாராக நின்று கொண்டு இருந்தது.
அத்துமீறி வந்ததும் இல்லாம என்னோட குழந்தைகள படம் எடுக்கிறாயா என கேட்பது போல சட்டென உருண்டு நகர்ந்திருந்தான். இப்போதும் அந்த விடியோவை பார்த்தால் பாம்பு நின்றிருந்த தோற்றம் கண்முன் வந்து போகும்.
அதற்காக பயந்து எல்லாம் வரவில்லை. படம் எடுத்து நின்ற பாம்பை கூட கேமராவில் சில போட்டோக்களை எடுத்தபிறகே அந்த இடம் விட்டு நகர்ந்தான்.
தெரியாமல் சிக்கியது என்றால் கடைசியாக வால்பாறை தாண்டிய பகுதியில் காட்டு யானையின் அட்டகாசத்தை எடுக்கும் போது யானை துரத்தியது தான். உயிரை கையில் பிடித்த படி ஒடியது அன்று தான்.
இதெல்லாம் ஒரு விதம் எனில் ஒரு இடத்திற்கு செல்லும் போது நடந்தது வேறு மாதிரியான அனுபவம். காட்டில் வழி தெரியாமல் கிட்டத்தட்ட ஒரு நாள் சுற்றியலைந்திருந்தான். இவனை பொறுத்தவரைக்கும் அட்வென்ஜர் யாரும் பெற முடியாத அனுபவம் தனக்கு வேண்டும் அவ்வளவு தான். இது எதுவுமே இவன் வீட்டில் யாரிடமும் சொன்னது கிடையாது. சில சமயம் ராம் கவனித்து கேட்பது உண்டு அவனிடம் மழுப்பலாக ஏதாவது சொல்லி நகர்ந்து விடுவான்.
சொல்வது எல்லாமே அந்த இடம் ரொம்ப சேஃப், பயம் தேவையே இல்லை கூடவே அங்கு இத்தனை மக்கள் வாழறாங்க நான் மட்டும் தனியாக இருக்கப்போவது இல்லை இது மாதிரி தான் சொல்லிவிட்டு வருவது. இந்த காட்டில் பெரிதாக எந்த ஆபத்தும் வரவில்லை என நினைக்க, நியாபகத்தில் வைத்துக்கொள் என்பது போல இந்த சம்பவம் நடந்து இருந்தது.
மனபூர்வமாக மனதில் இருந்து வார்த்தை வந்தது குருவிற்கு “நன்றி பெரியவரே இனி கவனமாக இருக்கிறேன்”
“இதமா வீசுற காற்றுக்கு கண்ணு சொக்கதான் செய்யும் தப்பு இல்லை ஆனாலும் கவனமாக இருக்கணும் இல்லையா இங்கே புலி,யானைகளோட தொந்தரவும் இருக்குது”
அதே நேரம் டிரக்கர் வரும் ஓசை கேட்க “உங்களை எப்பவும் மறக்க மாட்டேன் பெரியவரே” என கூறிவிட்டு புறப்பட்டான். பெரியவரும் தனது ஆடுகளை ஓட்டியபடி நகர்ந்து சென்றார்.
வண்டியில் ஏறியவன் நினைவில் இருந்தது தனது உடைமைகளை எடுத்தபடி நேராக பெங்களூர் செல்ல வேண்டும். அடுத்ததாக வேலைக்கு வரச்சொல்லி இருந்த நிறுவனத்தை பார்க்க வேண்டும், இப்படி தான் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.
தனது தாயின் நினைவோ, குடும்பத்தினர் தேடுவார்கள் என்ற நினைவோ எதுவுமே இல்லை. ஏன் போன் பான்ட் பாக்கெட்டில் இருந்து தவறி விழுந்ததும் தெரியவில்லை. இருந்த நோக்கியா சிறிய போன் கூட ஜார்ஜ் இல்லாமல் தூங்கி இருந்தது. இவனது கவனம் முழுவதும் பெங்களூரில் இருந்தது.
வேலைக்கான ஆர்டரை மெயிலில் அனுப்பி இருந்தனர். இவனை செலக்ட் செய்திருப்பதாக கூறி இதுவும் அவனுக்கு ஆச்சரியம் தான். இன்டர்வியூ எதுவும் இல்லை. ஏன் இவனை பார்க்க கூட இல்லை. ஜஸ்ட் இவனது பயோடேட்டாவை அனுப்பி இருந்தான். வேலைக்கு ஏற்கனவே ஆட்கள் தேவை என்பதை அறிந்து கொண்டு

யாராவது விளையாடுகிறார்களா என்ற எண்ணமும் மூளையின் ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது. அதை உறுதி செய்வதற்காகவே வேக வேகமாக கிளம்பி இருந்தான்.
அலுவலகம் பிடித்து இருந்தால் பார்த்து விட்டு நேராக கோவை சென்று ஒரு வாரம் தங்கி விட்டு மறுபடியும் பெங்களூரில் வீட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகு தனது உடைமைகளை எடுத்து வந்து இங்கு செட் செய்ய வேண்டும்.
ஊர் ஊராக சுற்றுவதாலோ என்னவோ அதிகமாக எதுவுமே வைத்து கொள்வது இல்லை. உடைகள் கூட பீரோ நிறைய வைத்தது இல்லை. ஜூன்ஸ் பேண்ட் பத்து வைத்திருந்தான் பெரும்பாலும் விதவிதமான கலரில் டீசர்ட், கேசுவல் எப்போதாவது. இவனது உயரத்திற்கு இவன் அணியும் உடை இன்னும் இவனை உயரமாக காட்டும்.
அங்கிருந்து உடைமைகளை எடுத்துக்கொண்டு பெங்களூர் பஸ் பிடித்து வர அடுத்த நாள் காலை ஆகி இருந்தது. பெங்களூருக்கு வந்தவனுக்கு அருகில் இருந்த சிறு ஹோட்டலில் தங்குவதற்கு புக் செய்து விட்டு, குளித்து உடை மாற்றி, உணவு உண்டபிறகுதான் போனின் ஞாபகம் வந்தது.
பேக்கில் இருப்பதாக நினைத்து பேக்கில் தேட அங்கும் இல்லை மொத்தத்தையும் கலைத்து தேட போன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. நெற்றியில் கை வைத்து யோசிக்க கடைசியாக எப்போது போன் எடுத்தோம் என யோசிக்கவும் தேளை பார்த்தபடி பின் புறம் சரிந்தது ஞாபகத்தில் வந்தது.
‘வழக்கம்போல போனை தொலைச்சாச்சு ரைட்டு இனி புதிது தான் வாங்கணும்’
காட்டில் இருந்து கிளம்பி இரண்டு நாட்கள் தாண்டி இருந்தது. மதியம் வரை தூங்கி எழுந்தவன், நேரம் பார்க்க மதியம் இரண்டு மணியை தொட்டு இருந்தது. கீழே ரெஸ்ட்டாரண்ட்டில் உணவு உண்டவன் நேராக கால்டாக்சி புக் செய்து வேலைக்கு அழைத்து இருந்த ஐடி கம்பெனியை நோக்கி வண்டியில் புறப்பட்டான்.
இவனை தேர்வு செய்திருந்த டீம் லீடர் பதவிக்கு கிட்டத்தட்ட என்பது ஆயிரம் சம்பளம் என குறிப்பிட்டிருக்க, நேரில் பார்க்கவில்லை, நேர்காணலும் எதுவுமில்லை. ‘நீங்க ஆபீஸ் வரும் போது இன்டர்வியூ பார்த்து கொள்ளலாம்’ என்பது போல மெயில் வந்திருக்க யாராவது விளையாடுகிறார்களா என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமே, எதை பற்றியும் யோசிக்காமல் அவனை இங்கு அழைத்து வந்து இருந்தது.
ஏழு மாடி கட்டிடம் இதில் இவன் தேடி வந்த அலுவலகம் ஆறாவது மாடியில் இருந்தது. அருகில் இருந்த லிப்டை பயன் படுத்தி ஆறாவது மாடியில் இறங்கியவுடன், அலுவலகத்தை அடைந்து, அங்கு இருக்கும் ரிஷப்ஷனிஸ்டிடம் தன்னை அறிமுகம் செய்யவும் அடுத்து இருந்த அறையை காட்டினாள் அவள்.
“டூ மினிட் ஸார் பக்கத்து ரூம்ல வெயிட் பண்ணுங்க எங்களோட டீம் லீடர் உங்களை வந்து சந்திப்பார்”
அருகில் இருந்த அறையின் ஷோபாவில் தன்னை பார்க்க வரப்போகும் அந்த நபரைக் காண கொஞ்சம் ஆர்வமாகவே அமர்ந்திருந்தான்
சரியாக ஐந்து நிமிடம் இடைவெளியில் இவனை காண வந்தது கோகுல் இவனது கல்லூரி நண்பன். அவனை பார்த்ததுமே இவனது முகத்தில் அடக்கமுடியாத புன்னகை தோன்றி இருக்க வந்தவனுக்கும் அதே நிலை தான்.
புன்னகையோடு கை குலுக்குவதற்காக அவன் கை நீட்ட, நீட்டிய கரத்தை இழுத்து அணைத்த குரு “டேய் பக்கி நீ இன்னும் உயிரோடுதான் இருக்கறையா?” என கேட்க,

“ஏன் கேட்க மாட்ட இந்த கேள்வியை நான் தான் கேட்கணும். எப்படி இருக்கற? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு உன்னோட ரெஸ்யூம் பார்த்ததும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? உனக்காக ரெண்டு நாளா வெய்டிங்”
“நானும் உன்னை இந்த இடத்தில் எதிர் பார்க்கல எப்படி இருக்கற எத்தனை குழந்தைங்க?”
“டேய் போன வருஷம் தான மேரேஜ்க்கு வந்துட்டு போன. அதுக்குள்ள என்னவோ பத்து வருஷம் ஆன மாதிரி கேள்வி கேட்கற?”
“ஓ ஸாரி டா”
“அது போகட்டும் உன்னை கேட்டு ரெண்டு நாளைக்கு முன்னாடி ராம் அண்ணா போன்ல கூப்பிட்டு இருந்தாங்க, உன்னோட போன் என்ன ஆச்சு? அப்பா திட்டினாங்கன்னு ஓடி வந்துட்டியா என்ன? நீ தான் அம்மா செல்லம் ஆச்சே”
“ராமா போன் பண்ணினான்?” குருவிற்கு அப்போதும் சந்தேகம்தான்.
“ஆமாம்டா ஏன் ஷாக் ஆகிற?”
“அவ்வளவு சீக்கிரம் கூப்பிட்ட மாட்டானே, போன் மிஸ் ஆகிடுச்சு, நீ இன்னும் ராம் கூட பேசிட்டு தான் இருக்கிறாயா?”
“டேய் என்ன கொலை குற்றம் பண்ணின மாதிரி கேட்கற? ராம் அண்ணா கூட வாரம் ஒரு முறை பேசிட்டு தான் இருக்கிறேன். குட் நியூஸ் தான். உன்கிட்ட தான் முதலில் சொல்லணும்ன்னு சொன்னாங்க, இந்தா போன் பேசிட்டு குடு, எல்லோரும் போன் கூட குடும்பம் நடத்தினா நீ வேற மாதிரி இருக்கற, போன் தொலைஞ்சிடுச்சின்னா வேற வாங்க மாட்டியா? ஏதாவது அவசரம்னா எப்படி உன்னனை கான்டாக்ட் பண்ணறது?”
“டேய் அடங்குடா, அட்வைஸ் பண்ணாத! ஒரு மாதம் வரைக்கும் போன் இல்லாமல் இருந்து இருக்கிறேன். எதுக்குமே அடிக்ட் ஆக கூடாது. அது போனா இருந்தாலும் சரி வேற எதா இருந்தாலும் சரி”
“அப்பா உன்கிட்ட கேள்வியே கேட்கலை, அப்படியே என் பின்னாடி வா, கேண்டீன் காபி குடிச்சிட்டே பேசலாம். இந்த ஆபீஸ் உனக்கு ஓகே தான?”
“ஏன் பிடிக்கலைனா என்ன செய்ய போற?”
“டேய் குரு இந்த நக்கலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. என்ன அண்ணா நம்பர் மறந்து போச்சா?”
“டேய் பிச்சுடுவேன், பிஸின்னு வருது, வழக்கமா ஒரு ரிங்ல எடுத்துடுவானே. என்ன பண்ணறான்? யார் கிட்டேயும் பேசற டைப்பும் கிடையாது. கோகுல் இந்தா போனை பிடி எனக்கு இப்ப காபி வேண்டாம், அப்படியே வெளியே என் கூட வா, பக்கத்தில் ஏதாவது போன் கடையில் போன் வாங்கிட்டு அப்படியே சிம் ஒன்றும் வாங்கலாம்”
“கோகுல் இங்கே எத்தனை வருஷமா வேலை செய்யற?”
“முதலிலேயே பெங்களூரில்தான் வேலை கிடைச்சுது, இங்கே இந்த ஆபீஸ் மாறி ரெண்டு வருஷம் ஆக போகுது, நீ தான் ஒரு இடத்தில் இருக்காம ஊர் ஊரா சுத்தறதா ப்ரெண்டுங்க சொன்னாங்க, பேசாமல் இனி இங்கேயே செட்டில் ஆகிடு குரு”
“பார்க்கலாம்டா” பேசியபடி இருவரும் வாசலுக்கு வந்திருக்க, எதிர்பட்ட போன் கடையில் லேட்டஸ்ட் மொபைலை வாங்கியவுடன், ஆக்டிவேஷனில் இருந்த சிம்மை மாட்டி மறுபடியும் தாயின் நம்பருக்கு அழைப்பு விடுத்தான் குரு.
 

Kavisowmi

Well-known member
13
அடுத்த நாள் தன் தாயாரிடம் சொன்னது போலவே மாலை சற்று முன்னதாக ராம் வந்திருக்க, சுமித்ராவின் வீட்டை நோக்கி இருவரும் சென்று கொண்டிருந்தனர்.
நேற்று போய் பேசிவிடலாம் எனக்கு முடிவு செய்தவனுக்கு இப்போது கொஞ்சம் தயக்கம் வந்து இருந்தது.
“ம்மா நிச்சயத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு, அப்பவே பேசிக்கலாம் வண்டியை வீட்டுக்கு திருப்பிடவா?”
நேற்று பேசியதோடு சரி அதன் பிறகு வழக்கமான குட்நைட் கூட இவன் சொல்லவில்லை. கொஞ்சம் கோபம் கூட இருந்தது. எப்படி தப்பா யோசிக்கமுடியுது என. ஆனால் ஒன்றை மறந்து விட்டான். இருவரும் பிடித்தது பிடிக்காதது என பட்டியலிட்டு பேசி இருந்தால் இந்நேரம் இது போல சின்ன பிரச்சினை கூட தோன்றி இருக்காது என்பதை.
“ம்மா பதில் சொல்லுங்க”
“ராம் இங்கே இருந்தே கன்னத்தில் வச்சேன்னா இந்த பக்கம் என்ன பார்த்து திரும்பிடுவ, பேச போறது நான்தான், நீ இல்லை. இத பற்றி யோசிக்காமல் வண்டியை ஓட்டு, சரியா பேச கூடவா தயங்குவ? என்ன ராம் இப்படி இருக்கற? பின்னாடி அந்த பொண்ணு கூட எப்படி தான் பேச போகிறாயோ? அந்த பொண்ணு சின்னபசங்க கூட ப்ரெண்ட்லியா இருக்கற பொண்ணு, அப்போ எவ்வளவு பேசுவா நீ என்னடான்னா?”
“அம்மா நேற்று பேசும் போது கொஞ்சம் கோபமாக பேசிவிட்டேன் அதனால்தான் யோசிக்கறேன்”
“யாரு? நீ? அதுவும் கோபமா? சிரிக்க வைக்காத ராம், வண்டியில் உட்கார்ந்து இருக்கும் போது சிரிக்க கூடாதேன்னு பேசாமல் இருக்கிறேன்”
ம்மா மெசேஜ் கூட பண்ணல” ராம் கூறவும் இன்னும் சிரிக்க ஆரம்பித்தார் திலகவதி.
“எது அந்த குட்நைட் மெசேஜா?”
“மா ரொம்ப ஓட்டறிங்க”
“வண்டியை இந்த பக்கத்தில் திருப்பு, கொஞ்சம் ஸ்வீட்டும் பூவும் வாங்கிட்டு போகலாம்”
அருகில் இருந்த அந்த ஸ்வீட் ஸ்டாலில் ஸ்வீட் வாங்கியவர் அந்த கடைக்கு எதிரில் அமர்ந்து இருந்த பூக்கார பெண்மணியிடம் பூவை வாங்கியபடி, “ராம் இப்போ போகலாம்டா”
அடுத்த ஐந்து நிமிடத்தில் சுமித்ராவின் வீட்டுக்கு எதிரில் வண்டியை நிறுத்தி இருந்தான்.
வாசலில் நிற்கவும் மழை லேசாக தூறல் ஆரம்பித்து இருந்தது. கதவின் அருகே சென்ற ராம் லேசாக தட்ட, கதவை திறந்தவர் சுமித்ராவின் தாயார் மல்லிகா. இவர்களை பார்க்கவும் முகம் மலர்ந்தவர் “வாங்க சம்மந்தியம்மா, வாங்க மாப்பிள்ளை, உள்ளே வாங்க”
என வரவேற்றார்.
“சம்மந்திமா சுமியோட ஜாக்கெட் தச்சு வந்திடுச்சு, சரியாக இருக்கான்னு பார்த்துவிட்டு போகலாம்ன்னு வந்தோம். சுமி எங்கே?”
“உட்கார்ங்க, காப்பி வைக்கிறேன். சுமித்ரா பின்னாடி தோட்டத்தில் பூ பறிக்க போறேன்னு போனா, இருங்க போய் வரச்சொல்லறேன்”
“நான் வேணும்ன்னா போய் வரச்சொல்லவா?” ராம் கேட்கவும் திலகவதிக்கு கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்.
“போய்விட்டு வாங்க மாப்பிள்ளை நாங்க இங்கே பேசிட்டு இருக்கிறோம்”
“இந்தாங்க சுமித்ரா வந்ததும் இந்த பூவை வச்சு விடுங்க சம்மந்திமா, உறவுகள்னாலே சில நேரம் ஏதாவது பிரச்சினை வந்துடுது, அது மாதிரி தான் நேற்று நடந்ததும். அத மறந்திடுங்க இன்னும் கூட கொஞ்சம் பேசணும் சுமியும் வரட்டும்” திலகவது துவங்க,
“நாங்க எதுவுமே தப்பா நினைக்கலை கல்யாணம்ன்னு வந்தா சின்ன சின்னதா ஏதாவது வந்துட்டு தான் இருக்கும். நாம தான் அனுசரிச்சு போகணும், அது போல தான் இதுவும். எங்களால் முடியாட்டி சொல்லி இருப்போம். இருங்க காபி எடுத்துவிட்டு அப்புறம் பேசலாம்” மல்லிகா சமையல் அறைக்குள் போகவும் திலகவதி அங்கிருக்கும் ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.
சுமித்ராவின் புகைப்படம் ஒன்று ஸ்கூல் யூனிபார்மோடு இரட்டை ஜடை போட்டவளாய் கைகளில் பரிசு கோப்பையை தாங்கியபடி, தாய் தந்தைக்கு நடுவில் நின்றபடி இருந்தது. கொஞ்சம் பழைய காலத்து வீடு, பெரிய வராண்டா அதை தாண்டவும் ஹால், ஹாலின் வழியே செல்வது போல சமையல் அறை, டைனிங்ஹால், எதிர் புறத்தில் இரண்டு படுக்கை அறை, ஹாலின் கடைசியில் பின்புற தோட்டக் கதவு தெரிந்தது.
வீட்டின் அமைப்புதான் சற்றே பழையதாக இருந்தது. உள்ளே அலங்காரம் முழுவதும் தற்போதைய காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி இருந்தனர்.
திலகவதி பார்த்து கொண்டு இருந்தது போதே, காபி டம்ளரோடு மல்லிகா வந்திருந்தார். காபி டம்ளரை திலகவதியின் கையில் தந்தவர், “சுமித்ரா சின்ன பொண்ணு விளையாட்டுதனமாக ஏதாவது பேசி இருந்தா அத மறந்திடுங்க”
“என்ன இப்படி சொல்லறிங்க சுமித்ரா மேல எந்த வருத்தமும் இல்லை. நீங்கள் அத பற்றி யோசிக்கவே வேண்டாம். எங்களுக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய கடமை இருக்குது இல்லையா? அன்றைக்கு பார்க்க வரும் போதே எல்லா விஷயத்தையும் பேசி இருந்தா இந்த குழப்பம் இப்போது வந்து இருக்காது”
திலகவதி சொல்லவும் என்ன பதில் சொல்வது என தெரியாமல் மல்லிகா அமைதியாக நிற்க. “நீங்க உட்காருங்க பசங்க வந்திடட்டும். வீடு அழகா இருக்கு டெக்ரேஷன் கூட நிறைய செஞ்சு இருக்கறிங்க” என இயல்பாக்க முனைந்தார் திலகவதி.
பேப்பர் பெயிண்டிங், செயற்கை பூக்கள் அலங்காரம் என பார்க்க அழகாகவே இருந்தது. “சுமிக்கு இதெல்லாம் செய்ய பிடிக்கும். எதையாவது செஞ்சுட்டு தான் இருப்பா, புதிது புதிதாக எதையாவது இடம் மாற்றி போட்டுட்டுடே இருப்பா”
“இது நல்ல விஷயம் தானே சம்மந்தி, இப்ப எந்த பொண்ணுங்க வீட்டு வேலை செய்யறாங்க. கைல சின்னதா தூசு கூட படக்கூடாதுன்னு நினைக்கறாங்க”
அதே நேரம் தோட்டத்தில் பனியை விட மென்மையான லேசான சாரல் மேனியில் விழ அந்த குளுமையை அனுபவித்தபடி மல்லிகை செடியின் அருகில் கையில் பிடித்திருந்த கிண்ணத்தில் சில பூக்களை பறித்து நிரப்பியிருந்த சுமித்ரா, விழுந்த மழை துளியை கண்கள் மூடி ரசித்துக் கொண்டு இருந்தாள்.
அன்று பெண் பார்க்க வரும் போது கவனிக்காததை இப்போது கவனித்தான் ராம். சுமித்ராவின் நீளமான பின்னிய கூந்தல் அவளது இடுப்பை தொட்டபடி நீண்டிருந்தது. காற்றிற்கு ஏற்றாற் போல் லேசாக முகத்தில் விழும் சிறு சிறு கூந்தல் முடி கூட கவிதையாக தோன்றியது.
அவளையே வைத்து விழி அகற்றாமல் ரசனையோடு பார்த்து கொண்டு நின்றான் இவன். இரண்டு நிமிடம் முடியவும் தன்னை கூர்ந்து பார்ப்பதாக உள் உணர்வுக்கு தோன்ற இயல்பாக திரும்பி பார்த்தாள் அவள்.
பார்த்ததுமே ஆச்சர்யம் அவள் முகத்தில். தோட்டம் வரை வந்திருக்கிறானே! கூடவே லேசான வெட்கம், ‘கண்களை மூடியபடி நின்றிருந்தோமே, என்ன நினைச்சிருப்பாங்க?!’ என்பது போல.
“மழையில் நனைய பிடிக்குமா சுமி?” ராம் இப்படி கேட்கவும்
“ம் ரொம்ப உங்களுக்கு பிடிக்குமா?”
“நனைய பிடிக்கும்தான், ஆனா இப்போ ரசித்து நனையற இந்த பெண்ணைதான் ரொம்ப பிடிச்சிருக்கு”
“வீட்டுக்குள்ள போகலாம். யாரெல்லாம் வந்திங்க நீங்க மட்டும் தானா?”
“நானும் அம்மாவும் சில விளக்கம் தர வேண்டியது இருக்குதே, உருத்தலோட எந்த உறவும் தொடங்க கூடாது. எங்க உன்னோட ப்ரெண்டுங்க? நான் அவங்க கூட தான் தோட்டத்தில் இருக்கறன்னு நினைச்சிட்டு வந்தேன்”
“இனி தான் வருவாங்க” என்றபடி வீட்டுக்குச் செல்ல திரும்பியவளை பார்த்தபடி
“போன்ல கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லல சுமி?”
“என்ன கேட்டிங்க?” சுமித்ரா ராமின் முகம் பார்த்து கேட்க,
“அம்மா அப்பாவுக்கு மட்டும்தான் பிடிக்குமா? உனக்கு பிடிக்காதான்னு கேட்டேனே! இப்போது பதில் சொல்லு” கைகளை கட்டியபடி அவன் நின்றிருந்த தோற்றம் பதில் கேட்காமல் நகர மாட்டான் என்பதை உறைக்க, ஏனோ அது கூட அவளுக்கு பிடித்து இருந்தது.
“கொஞ்சம் பிடிவாதமும் அதிகமோ?” உதட்டில் தோன்றிய சிரிப்போடு சுமித்ரா கேட்க,
“பிடிச்சவங்க கிட்ட மட்டும்” ராமின் முகத்திலும் லேசான சிரிப்பு இருந்தது.
“இங்கையே பேசிட்டு இருந்தா நம்மள தேடி இங்கே வநதுடுவாங்க ரெண்டு அம்மாவும்”
“நானும் இங்கேயே இருக்க போறேன்னு சொல்லலையே, பதில் சொன்னா போயிடலாம், ரெண்டு அம்மாவும் இங்கிதம் தெரிஞ்சவங்க அவ்வளவு சீக்கிரம் இங்கே வர மாட்டாங்க வேணும்னா உண்மையா இல்லையான்னு செக் பண்ணிடலாமா?”
“எப்படியாம்?” கேட்டவளுக்கு இன்னும் சிரிப்பு வந்தது.
“ஒரு அரைமணிநேரம் இப்படியே பேசலாம் நம்மள கூப்பிட வர்றாங்களா இல்லையான்னு பார்க்கலாம்” அவன் இப்படிச் சொல்லவும்,
“சரி தான் நீங்க பெரிய ஆள் தான். நான் இதுக்கு செட் ஆக மாட்டேன். உள்ள வாங்க அங்கே போய் பேசிக்கலாம்” இவனை தாண்டி அவள் நகரப் போகவும், அவளது ஒரு கையை பிடித்து நிறுத்தி இருந்தான்.
“பதில் சொல்லு சுமி”
“என்ன பண்ணறிங்க?” அவள்கேட்கும் போதே கையை விட்டுவிட்டான்.
“ஸாரி ஸாரி சுமி”
“பிடிச்சதால போன் பண்ண, பேச தோணுச்சு, சண்டை போட தோணுச்சு, ஒருத்தரை மனசுக்கு பிடிச்சா அவங்களுக்குன்னு ஒரு பிம்பம் நாமளே உருவாக்கி வச்சிருப்போம். அது பொய்யா போச்சுதுன்னா வருமே அந்த கோபம்தான் அப்போ இருந்தது. அதுதான் போன்ல அப்படி பேசிட்டேன். பதில் போதுமா? வாங்க உள்ளே” சொல்லியவள் வேகமாகவே ஹாலின் உள்ள நுழைந்திருந்தாள்.
அடுத்து வந்த ராமின் முகத்திலும் சரி முதலில் வந்த சுமித்ராவின் முகத்தில் தெரிந்த பூரிப்பும் மலர்ச்சியுமே இரண்டு பெற்றோருக்கும் மகிழ்ச்சியை தந்தது. அன்று போலவே சுமியை அருகில் அழைத்து வைத்து கொண் திலகவதி, வாங்கி வந்த பூவை வைத்து விட்டபடி
“சம்மந்திமா மற்றவர்கள பற்றின கவலை நமக்கு வேண்டாம். நாம இப்பவே பேசிவிடலாம். அன்றைக்கு சொன்னது தான் உங்களால் முடிஞ்சத செய்தா போதும், கல்யாண செலவு கூட ரெண்டு பேரும் பாதி பாதி செலவு செய்தால் போதும். அது போலதான் மண்டப செலவு மணவரை அலங்கார செலவு எல்லாமே ரெண்டு பேரும் பிரிச்சுக்கலாம்.
இதைதான் நிச்சயத்துக்கு வரும் போது பேசணும்ன்னு இருந்தோம். அதுக்குள்ள இந்த மாதிரி குழப்பமாயிடுச்சு. இதுவும் நல்லதற்குதான். பரஸ்பரம் நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க நல்ல சந்தர்ப்பம். கல்யாணம்ன்னு வரும் போது இப்படி தான் ஆளுக்கு ஒன்று சொல்வாங்க கலைச்சு விட, குழப்பம் பண்ண இப்படி அதையே நினைச்சிட்டு இருக்க கூடாது. திருமணம் முடிஞ்சதுன்னா அப்புறம் யாரும் கருத்து சொல்லறேன்.
இப்படி அப்படின்னு பேசிட்டு வர மாட்டாங்க, நான் சொல்லறது சரிதானே சம்மந்திமா?
சுமி இந்த ப்ளைவுஸ் போட்டு பார்த்துவிட்டு சொல்லுமா அளவு சரியா இருக்குதான்னு நாங்க புறப்படறோம்” என அவர் முடிக்க,
ரவிக்கையை எடுத்தபடி சுமி தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.
“சுமித்ரா விளையாட்டு போல ஏதாவது பேசி இருந்தா மன்னிச்சிடுங்க” திலகவதியை பார்த்து மல்லிகா கேட்க,
“ஹய்யோ என்னதிது ராமும் சுமியும் என்ன பேசினாங்கன்னு எனக்கு தெரியாது. அது என்னன்னு எனக்கு தெரிஞ்சுக்கவும் வேண்டாம்” அவர் சொல்லிக் கொண்டிருக்கும்பேதே சுமித்ரா வரவும்
“என்னமா ஏதாவது ஆல்டரேஷன் இருக்குதா?” என பேச்சை அந்த பக்கம் திருப்பிவிட்டார்.
“இல்லைங்க அத்தை சரியாக இருக்கு”
“சரிடா புறப்படறோம்” என கூறிவிட்டு புறப்பட்டனர் இருவரும். வண்டியில் போக போக
“ஏன் ராம் அந்த பெண்ணை தான் அவ்வளவு பிடிக்குதே உனக்கு? அப்புறம் ஏன் வரமாட்டேன்னு சொல்லற? பிடிக்கலைன்னு சொல்லிடாதே நான் நம்ப மாட்டேன். தோட்டத்தில் இருந்து வரும் போது பார்த்தேனே உன்னோட முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் அவ்வளவு பிரகாசமாக எரிந்தது”
“ம்மா நான் எப்போது பிடிக்கலைன்னு சொன்னேன். சும்மா சும்மா அவங்க வீட்டுக்கு போறது தான் பிடிக்கலை”
டேய் ஏதாவது சொல்லிட போறேன். இந்த காலத்து பொண்ணுக்கு பாதி நாள் அவங்க வீட்டில் தான் இருக்கணும்ன்னு ஆசை படுவாங்க, வாரத்திற்கு ரெண்டு தடவையாவது போக வேண்டியது வரும் இப்பவே டிரைன் ஆகிக்கோ”
ம்மா எனக்கு நம்ம வீட்டை தவிர வேற எதுவுமே பிடிக்க மாட்டேங்குது எங்கேயும் போகவும் பிடிக்கலை என்ன செய்ய?
“போடா எனக்குன்னு பிறந்து இருக்கற பாரு, இப்படி ஒரு பையன் ஊர் சுத்தற அப்படி ஒரு பையன், குரு இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவான்ல?”
“அவனோட ப்ரெண்டுங்க எல்லோர் கிட்டேயும் சொல்லி வச்சி இருக்கிறேன், எப்படியும் வந்திடுவான். மொபைல்ல கையில் இன்னும் எடுக்கல போல இருக்கு சுவிட்ச்ஆப்ன்னு வருதுமா”
அதற்கு பிறகு ராம் பேசியது எல்லாவற்றிற்கும் ம் ம் என்பது மட்டுமே திலகவதியிடம் இருந்து பதிலாய் வந்தது.
ராமிற்கும் திலகவதியின் மனநிலை புரிய அப்போதே முடிவு செய்து விட்டான், இனி இவர் குருவை பற்றி கவலை படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை. அதை செயல் படுத்த குருவின் வருகைக்கு காத்திருக்க ஆரம்பித்தான்.
 

Kavisowmi

Well-known member
14
காலை முதலே பரபரப்பாக இருந்தது ராமின் வீடு. நெருங்கிய உறவினர்கள் மாலை நிச்சய விழாவிற்கு காலையிலேயே வந்து இருந்தனர். திலகவதி காலில் சக்கரம் கட்டியது போல் இங்கும் அங்கும் ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
சுந்தரம் காலையிலேயே வந்தவர் வந்ததுமே ராமிடம் “கிருஷ்ணன் தான் விவரம் இல்லாதவனா இருக்கிறான், நீயாவது விவரமாக பொழைச்சுப்பன்னு பார்த்தா நீயும் அப்படி தான் இருக்கற. நானே போய் இன்னும் கொஞ்சம் நகை சேர்த்து போட சொல்லிட்டு வந்தா அம்மாவும் பையனும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு வந்து இருக்கறிங்க” என குறைபட்டார்.
“அங்கிள் நாம உழைக்கற காசே மிச்சம் ஆகறது இல்லை, எதுக்கு அடுத்தவங்க
கிட்ட வாங்கணும்?”
“ம் ம். அதுவும் சரிதான், எங்க இந்த குரு பையனை காணோம்?”
“வந்துடுவான் அங்கிள் சாயங்காலம் தானே பொண்ணு வீட்டுக்கு போகணும் அதுக்குள்ள வந்துடுவான்”
என்னவோ இந்த காலத்து பசங்களுக்கு பொறுப்பே இருக்கிறது இல்லை. எனக்கென்னமோ உன்னோட தம்பி வருவான்னு தோணல. வர்றதா இருந்தா இந்நேரம் வந்து இருக்கணுமே. என்ன சொல்லற?”
திலகவதி சரியாக அந்த நேரம் வந்தவர் “நீங்க சாப்பிட வாங்கண்ணா. ராம் உன்னோட ப்ரெண்டுகிட்ட போன்ல பேசணும்ன்னு சொன்னியே பேசிட்டு வா” என அவனை நகர்த்தியவர்,
சற்று நகரவும் “அப்பா எங்கே ராம்? முன்னாடி கேட்கறாங்க”
“இருங்கம்மா பார்த்து அனுப்பி விடறேன்”
“டேய். குருகிட்ட இருந்து போன் ஏதாவது வந்ததா? அப்பா கிட்ட போய் ஏதாவது கேட்கவே பயமாக இருக்கு. குருவை கேட்டு சண்டை போட்டா என்ன செய்ய? இதுக்கு பயந்திட்டே காலையில் இருந்து அவர் கண்ல சிக்காம சுத்திட்டு இருக்கிறேன்”
“ம்மா, அவன் இன்னும் போன் அட்டென் பண்ணல. இப்போது எந்த இடத்தில் இருக்கறான்னும் தெரியவில்லை. அவனோட போனுக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன். எப்பவும் இப்படி பண்ண மாட்டான். ஏன் இந்த முறை இப்படி இருக்கறான்னு தெரியலை”
“வேற எதுவும் பிரச்சினை இருக்காதுல்ல ராம்?” கொஞ்சம் கவலையோடு கேட்ட திலகவதியை பார்த்தவன்,
“ம்மா. போகும் போது சொல்லிட்டுதானே போனான். பதினைந்து இருபது நாளைக்கு போன் பண்ண மாட்டேன், அந்த இடத்தில் சிக்னல் கிடைக்காதுன்னு சொன்னானே, அவன் சொன்னது வச்சு பார்த்தா எப்படியும் இன்றைக்கு கூப்பிடுவான். இவ்வளவு சீக்கிரமாக இந்த ஃபங்சனை வச்சி இருக்க வேண்டாம். இந்த நிச்சயதார்த்தம் இன்னும் ஒரு வாரம் கழித்தே வைத்து இருக்கலாம். இவ்வளவு டென்சன் நமக்கு இருந்து இருக்காது. அவனும் இங்கே வந்து பத்து நாள் தங்கிட்டுதான் அடுத்த வேலைக்கு போவேன்னு சொல்லி இருந்தான்”
“அப்படி சொல்லாத. நல்ல விஷயம் நடக்கும் போது மாற்றி பேச கூடாது. தப்பு நம்மளோடது தான். எப்படியும் வந்திடுவான்னு நினைச்சேன். சாயங்காலம் போட்டுக்கறதுக்கு டிரஸ் தச்சு வந்ததே போட்டு பார்த்தாயா?”
“ம்மா. நான் என்ன குழந்தையா?. சரியாக தான் இருக்கும் மூன்று மணிக்கு ரெடி ஆனா போதும் தானே”
“போதும்டா சரி நான் கொஞ்சம் காபி போட்டு வேணும்ங்கறவங்களுக்கு கொடுத்துட்டு வரேன்” என சமையல் அறையை நோக்கி செல்ல இவன் முன் வாசலுக்கு தந்தையை தேடி நகர்ந்தான்.
கிருஷ்ணன் வாசலின் முன்பு உறவினறோடு பேசிக்கொண்டு இருக்க. அருகில் வந்தவன்.
“அப்பா கூப்பிட்டிங்களா?”
“ம். இந்தா டிராவல்ஸ்காரங்களோட நம்பர். போன் பண்ணினா எடுக்கலை, கூப்பிட்டு சாயங்காலம் பொண்ணு வீட்டுக்கு போறதுக்கு டெம்போ டிராவல்ஸ் ஒன்றும், ரெண்டு கார் வேணும்ன்னு சொல்லிடு. நான்கு மணிக்கு முன்னாடி இங்கே வரச்சொல்லிடு. ஏற்கனவே முன்பணம் கொடுத்தாச்சு. இந்தா அதோட பில் அம்மாகிட்ட கொடுத்திடு. குருகிட்ட பேசினயா?”
அப்பா அவன் பெங்களூர் ஆபீஸ்ஸை பார்த்துவிட்டு வர்றதாக சொல்லி இருந்தான்.
“நீ பேசினாயா இல்லையா?”
“இல்லைபா” தலை குனிந்தபடி பதில் சொல்ல,
“இந்த மாதிரி நேரத்தில் கூட இருந்தா எவ்வளவு உதவியா இருக்கும்? நான் சொல்லறத எப்பதான் கேட்க போறானோ?! பாரு பார்த்தா திட்டுவேன்னு காலையில் இருந்து உன்னோட அம்மா கண்ணுக்கு சிக்காமல் சுத்திட்டு இருக்கறா. வர்றவங்க கேட்டா என்ன பதில் சொல்லறது?”
“ஆபீஸ்ல லீவு கிடைக்கலைன்னு சொல்லிடலாம்பா”
“இதுக்கு மட்டும் வேகமாக பதில் வருமே, உன்னோட அம்மா கிட்டேயும் சொல்லி கேட்கறவங்ககிட்ட இந்த பதிலையே சொல்ல சொல்லு. அவன் நேராக வரட்டும் பேசிக்கறேன்”
கிருஷ்ணன் பேசியதற்கு எல்லாமே சரி என தலையாட்டியவன் தனது தாயாரை தேடிச்சென்றான்.
“அம்மா இந்த பில்ல பத்திரமாக வைக்க சொன்னாங்க. தம்பியை பற்றி கேட்டா வேலை லீவு கிடைக்கலைன்னு சொல்ல சொன்னாங்க”
“அதை ஏண்டா இவ்வளவு டல்லா சொல்லற?”
“ம்மா.. குருவை ரொம்ப மிஸ் பண்ணறேன்மா. அவன் இருந்தா இந்த இடம் இப்படியா இருக்கும். ஒரே சத்தமாக, கலகலப்பா. போம்மா நான் தான் தப்பு பண்ணிட்டேன். அப்பவே அவன்கிட்ட பேசிட்டாவது பொண்ணு பொண்ணு பார்க்க போய் இருக்கணும். வந்தா அவனும் வருத்தபடுவான்”
“முதல்ல இருந்து மறுபடியும் ஆரம்பிக்காத, இந்நேரம் வந்து இருக்கணும் தானே. போ வேற வேலை இருந்தா பாரு, மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் தூங்கி எழுந்திரு. நாலுமணிக்கு கீழே வந்தா போதும்”
“இவன் வேற இவன் மட்டும் தான் மிஸ் பண்ணறானாம். எனக்கு எதுவுமே இல்லை போல இருக்கு. அவன் வரட்டும் ரெண்டு நாளைக்கு பேசாமல் தண்ணி காட்டறேன். போன் பண்ணாம சுற்றினதுக்கு அது தான் தண்டனை”
“யார் நீங்களாமா? வந்து பக்கத்தில் நின்னாலே போதும் எல்லாத்தையும் மறந்திடுவிங்க”
“டேய் அத ஒன்றை வச்சுதானே ரெண்டு பேரும் இப்படி பண்ணிட்டு இருக்கறிங்க. இரு இந்த காபியை முன்னாடி குடுத்திட்டு வரேன். அத்தை வீட்டில் எப்போது வர்றாங்களாம்?” கேட்டபடியே காபியை தட்டில் சுமந்தபடி ஹாலிற்கு வர,
“கிளம்பியாச்சுன்னு போன் பண்ணினாங்கமா. வந்திடுவாங்க”
“இந்தா நீயும் ஒரு டம்ளர் காபி குடி. அப்பாவுக்கு ஒன்று எடுத்துவிட்டு போய் குடு. சாயங்காலம் பொண்ணு வீட்டுக்கு எடுத்துட்டு போகிற பூ பழம் எல்லாம் எடுத்து வைக்கணும். ரெண்டு பேரும் பையனா பிறந்ததிற்கு ஒருத்தன் பெண்ணா பிறந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும். எனக்கு உதவியா இருக்கும்ல”
“ம்மா. இது அநியாயம் நாங்க எப்போ தனியா உங்களை கஷ்டபட விட்டோம்? எந்த வேலையாக இருந்தாலும் செஞ்சு தருகிறோமே”
அதுவும் உண்மை தான் இரண்டு பேருமே தாயாரை தனியாக எந்த வேலையும் செய்ய விட்டதில்லை. அதிலும் குரு இருந்தால் சமையல் அறையே ரணகளமாக காட்சி தரும். சமைக்க, பாத்திரம் கழுவ என எதையாவது சொல்லிக் கொண்டு போய் நின்றால் போதும். சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவுக்கு பேசிக்கொண்டு இருப்பான்.
“மதியம் தூங்குடா. எழுந்திருக்கும் போது ப்ரெஸ்ஸா தெரிவ”
“ம்மா பகல்ல நான் என்றைக்கு தூங்கி இருக்கறேன்? தூக்கம் எல்லாம் வராது. ஏதாவது செய்யணும்னா சொல்லுங்க”
“சரி என் கூட வா ரூம்பிற்கு, பொண்ணு வீட்டுக்கு எடுத்துட்டு போக பதிமூன்று தட்டு ரெடி பண்ணனும் மேல இருந்து எடுத்துகொடு. ஆபீசில் இருந்து ப்ரெண்டுங்க யாராவது வர்றாங்களா?”
“அப்பா தான் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம் கல்யாணத்துக்கு பத்திரிகை அடிச்ச பிறகு சொல்லிக்கலாம்ன்னு சொன்னாங்க”
“அதுவும் சரி தான். அப்பா பூ வாங்கிட்டு வந்துட்டாங்களா? வந்தாச்சுன்னா பக்கத்தில் கட்டறதுக்கு கொடுக்கலாம். இன்றைக்கு பார்த்து பூ விலை அதிகம்ன்னு பேசிட்டு இருந்தாங்க”
“அப்பாவும் நானும் தான் சொன்னமே கட்டின பூ வாங்கிக்கலாம்ன்னு நீங்க தான் கேட்கலை”
“டேய். பூ விலை அதிகமா இருக்கு ராம்அம்மா, விலைக்கு வாங்காதிங்க. உதிரி பூ வாங்கி கட்டிக்கலாம். நாங்க கட்டி தரோம்ன்னு சொன்னதே அவங்க தான். அக்கம் பக்கத்தில் இருக்கறவங்களும் வேணும்டா. நாம என்ன தனித்தீவுலயா இருக்கறோம்? நாளைக்கு அவங்க வீட்டு விசேஷத்துக்கு நாம திரும்ப செய்து கொடுக்க தானே போறோம்”
இதுவும் உண்மை திலகவதியின் குணம் அது. இன்னமும் திலகாம்மா என கேட்டு இவருக்கு உதவி செய்ய அங்கே நிறைய உறவுகளை சம்பாதித்து இருந்தார்.
மதியம் இரண்டு மணியை தாண்டவும் பரபரப்பு தொற்றி கொண்டது. வந்திருக்கும் பெண்களுக்கு பூ கொடுத்து, காபி கொடுத்து, எடுத்து செல்ல வேண்டிய பொருட்களை தனியாக எடுத்து வைத்து, கூடவே வரும் போன்களை அட்டென் செய்து, வழி தெரியாதவர்களுக்கு வழி சொல்லி என, திலகவதிக்கு உண்மையில் நிற்க நேரம் இல்லை.
அங்கே மாடியில் ராம் தயாராகிக் கொண்டு இருந்தான். கூடவே குருவின் நம்பருக்கு டயல் செய்ய, வழக்கம் போல சுவிட்ச்ஆப் என திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லி கொண்டு இருந்தது அது.
இனி சொன்னாலும் புறப்பட்டு வர முடியாது என தெரிந்தாலும் தகவலாவது சொல்லிவிடலாம் என்ற நப்பாசை. கூடவே இன்னோரு மனமோ, ‘ஒரு வேளை வீட்டுக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருப்பானோ, வந்தா நல்லா இருக்கும்’ என இப்படியும் ஆசைப்பட்டுக் கொண்டு இருந்தது.
மூன்று மணியை நெருங்கவும் திலகவதி அழைப்பது கேட்டது. “ராம் கிளம்பிட்டன்னா கீழே வா”
தனது அறையில் புறப்பட்டவன் கண்ணாடியில் தனது முகம் பார்க்க,
இளம் சந்தனநிற பேண்ட் நீலநிறத்தில் முழுக்கை சட்டை அவனது நிறத்தை இன்னும் எடுப்பதாக காட்டியது. கடைசியாக தலைமுடியை வாறியவன் திருப்தி ஆகவும் தனது போனில் சுமித்ராவிற்கு அழைப்பு விடுத்தான். இரண்டாவது ரிங்கில் எடுத்தவள் “சொல்லுங்க” என்றபடி அமைதியாக இருக்க,
“இங்கே புறப்பட தயாராகிட்டோம் சுமி”
“ம். ம்.”
“அங்கே எல்லோரும் வந்தாச்சா?”
ம்”
“என்ன கலர் டிரஸ் போட்டு இருக்கற? எது போட்டாலும் உனக்கு அழகாகதான் இருக்கும். அங்கே வந்தே பார்த்துக்கறேன். ப்ரெண்டுங்க எல்லாம் வந்தாச்சா?”
“ம்.. ம்.”
“என்ன ஆச்சு. ஒரே வார்த்தையில் பதில் சொல்லிட்டு இருக்கற?”
“ம்.. அம்மா நிறைய பேருக்கு சொல்லி இருக்கறாங்க. வீடு முழுக்க ஆட்களாக இருக்கறாங்க. உங்களோட போன் வரவும் ஓரே கிண்டல். அது தான்”
“ஓகே ஓகே. நான் வேணும்னா வச்சிடவா?” ராம் கேட்கவும் செகண்ட் கால் வருவதற்கான பிப் ஒலி கேட்டது.
“இல்லை தப்பா நினைச்சுக்க வேண்டாம். உங்களுக்கு போன் வருதா சத்தம் கேட்குது” அதற்குள்ளாக அடுத்த பிப் சத்தம் மறுபடியும் கேட்க,
“ப்ரெண்டுங்க யாராவது வாழ்த்து சொல்ல கூப்பிடுவாங்க இரு யாருன்னு பார்க்கிறேன். போனை வச்சிடவா?”
“ம்.. ம் அவளது சத்தத்தோடு கூடவே தொடர்ந்து சிரிப்பொலி அங்கே அவளின் நிலையை கூற, இவனுக்கும் உதட்டோர புன்னகை உற்பத்தி ஆகி இருந்தது.
உண்மையிலேயே சுமி நிலை வேறாக இருந்தது. அவளுடைய காலேஜ் நண்பிகள் பலர் வந்திருக்க வந்த நேரம் முதலே இவளை கிண்டல் செய்து முகம் சிவக்க வைத்துக்கொண்டு இருந்தனர். இப்போது போன் வரவும்,
“சுமிக்கு தனியா எந்த மேக்கப்பும் தேவையில்லை. முகமே பிங்க் நிறமா மாறி இருக்கு”
“சும்மா இருங்களேன் ப்ளீஸ்” சுமி சொன்னது யாருக்கும் காதில் விழவே இல்லை.
“அதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தோம்?” சொல்லி முடிக்கவும் அடுத்த சிரிப்பொலி கிளம்பியது.
வீட்டிற்கே அலங்காரம் செய்ய பார்லரில் இருந்து பெண்ணை அழைத்திருக்க, அவருடைய அலங்காரத்தில் தேவதையாக காட்சி தந்தாள். “சவுரி வேண்டாம் சுமித்ரா உங்களோடதே முடி நீளமா இருக்கு” இப்படி அந்த பெண் சொல்லவும். கூட இருந்த தோழி ஒருத்தி,
“ஏய். கண்டு பிடிச்சுட்டேன். சுமியோட இந்த லாங்ஹேர் பார்த்ததும் மாப்பிள்ளை ஸார் ஓகே சொல்லி இருப்பாங்க. கரெக்டா?”
அதே நேரம் அங்கே பெங்களூரில் குரு தனது மொபைலை கட் செய்தவன், ”அண்ணா நம்பர் பிஸின்னு வருதுடா. யார் கிட்டேயும் இவ்வளவு நேரம் பேச மாட்டான். இரு அம்மாவுக்கு கூப்பிட்டு பார்க்கிறேன்”
அடுத்து தாயாருக்கு அழைக்க இரண்டு முறை ரிங் போய் கொண்டு இருந்தது, ஆனால் எடுக்கவில்லை. மறுபடியும் முயற்சி செய்ய, கொஞ்சம் பதட்டம் கூட தோன்றி இருந்தது, முகம் லேசாக வியர்க்க ஆரம்பித்தது குருவிற்கு. எப்போதும் முதல் ரிங்கிலேயே எடுத்து விடுவார்கள் வீட்டில் இரண்டு பேருமே!
“டேய்.. என்ன இது? எதுக்கு உனக்கு இவ்வளவு வேர்க்குது?! மறுபடியும் கூப்பிடு” கோகுல் சொல்லவும்,
இந்த முறை திலகவதி போனை எடுக்க. “ம்மா”
“குரு. குருதானே? இப்போ எங்கடா இருக்கற?”
“பெங்களூரில்மா. ஏன்மா போனை எடுக்கலை வெளியே எங்கேயாவது வந்து இருக்கறிங்களா. ஒரே சத்தமாக இருக்கு?”
“டேய் ரெண்டு நாளைக்கு முன்னாடி வர வேண்டியவன் அங்கே என்ன பண்ணற? இன்றைக்கு ராமோட நிச்சயம்”
“என்னது? இதெல்லாம் டூ மச்மா, ஜாதகம் பார்க்க கொடுக்க போறிங்கன்னு தானே சொன்னிங்க. இப்போ நிச்சயம்னு சொல்லறிங்க? இது சரியில்லை. இப்போது புறப்பட்டா கூட என்னால கலந்துக்க முடியாது”
“என்ன என்னது? எத்தனை போன் செய்ய? இங்கே உன்னோட அபபாகிட்ட ரெண்டு பேராலையும் பதில் சொல்ல முடியலை. நீ அங்கே இருந்து பேசற. முதலில் கிளம்பி வா வீடு நிறைய ஆட்கள் இருக்கறாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் புறப்படணும். இது யாரோட நம்பர்? உன்னோட பழைய நம்பர் என்ன ஆச்சு?” கரெக்டான கேள்வியை திலகவதி கேட்க.
“ம்மா போன்ல ப்ராபளம், நான் அங்கே வரேன் பேசிக்கலாம், நீங்கள் அங்கே கவனிங்க. நானும் இப்பவே புறப்படறேன்” கேட்ட செய்தியே மகிழ்ச்சியை தர வேலை, இடம் எல்லாமே இரண்டாம் பட்ஷமாக தெரிய, அத்தனையும் மறந்து தனது நண்பனிடம் சொல்லி விட்டு குரு தன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.
 

Kavisowmi

Well-known member
15
ராம் கீழே வரவும் ஒவ்வொருவராக புறப்பட்டனர். திலகவதி ராமிடம் “குரு பேசினான்டா. புறப்பட்டு வரானாம்” என் தகவல் சொன்னார்.
அது அப்போதைக்கு நிம்மதியை தர அடுத்த சில நிமிடத்தில் சுமித்ராவின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
அங்கே சுமித்ரா வீட்டிலோ இவர்களை விட ஆரவாரமாக பெரிய கூட்டமே கூடி இருந்தனர். வரவேற்க என அத்தனை குட்டிஸ்களும் வாசலில் நின்றிருந்தனர்.
மல்லிகா ராகவேந்திரர் இன்னும் நெருங்கிய உறவினர்கள் வாசலோடு வரவேற்று அழைத்துச் செல்ல, அனைவருக்கும் வரவேற்பு அறையில் வரிசையாக அமர இருக்கை போட்டு இருந்தனர். நடுநாயகமாக மாப்பிள்ளை அமர அழகான ஷோபா இரண்டு போட்டு இருக்க, ஒன்றில் ராமை அமர வைத்தவர்கள் பெண்ணை அழைத்து வந்தனர்.
வந்திருந்த கூட்டம், கூடவே நண்பர்களின் கேலி என ரத்தம் மொத்தமும் முகத்தில் பாய, பிங்க் நிறத்தில் நின்றிருந்தாள் சுமித்ரா. பெரிய ஜமுக்காளம் விரித்திருக்க கொண்டு வந்த பூ, பழ தட்டுகளை ஒவ்வொருவராக கொண்டு வந்து தர பெற்று கொண்டு நின்றிருந்தாள்.

இள நீலநிறத்தில் கருநீலபார்டரோடு கிட்டத்தட்ட இவனது கலரிலேயே அவளும் உடை அணிந்திருந்தாள். இது இயல்பாகவே இந்த கலர் ஒற்றுமை அமைந்திருக்க பார்த்தவன் கண்கள் அழைத்து வந்த அவளை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தது.
கொடுத்து முடிக்கவும் எடுத்து வந்திருந்த பட்டு சேலையை அணிவதற்கு உள் அறைக்குள் அழைத்து சென்றனர். இவர்கள் எடுத்து வந்திருந்த மெரூன் பட்டு சேலையை அணிவித்து அழைத்து வந்தவர்கள் ராமின் அருகில் அமர வைக்க, பார்த்த அத்தனை பேருக்கும் அவ்வளவு திருப்தி.
ராமின் அருகில் அமரவும் சற்றே குனிந்து நிலையில் இன்னும் சிவந்திருந்தாள். ராமின் முகத்தில் கூட அங்கங்கே லேசாக வியர்வை முத்துக்கள் பூத்து இருந்தது. கொஞ்சம் பதட்டதோடு, படபடப்பாக.
வயதில் பெரியவர் ஒருவர், “மாப்பிள்ளை பொண்ணுக்கு மோதிரம் போடறதுன்னா போடச் சொல்லுங்க” என்க,
ஏற்கனவே வாங்கி வந்திருந்த மோதிரத்தை ராமும் அவனுக்காக வாங்கியிருந்த மோதிரத்தை சுமித்ராவும் மாற்றி அணிவிக்க, அருகில் இருந்த ஸ்வீட்டை ஊட்டிவிடச் சொல்லவும் எடுத்து ஊட்டி விட்டான்.
“என்ன மாப்பிளை ஒவ்வொன்னும் சொல்லணுமா? சந்தனம் குங்குமம் பொண்ணுக்கு வச்சி விடுங்க. நெற்றி வகிட்டில் குங்குமம் வச்சி விடுங்க. நிச்சயம் முடிஞ்சாலே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி என்ன சொல்லறிங்க?” கூட்டத்தில் ஒருவர் சொல்ல சுற்றிலும் சிரிப்பலை கிளம்பியது அவர்கள் பேசியது சுமித்ராவை இன்னும் அழகாக்கி இருந்தது.
“சுமித்ராமா இப்போது உன்னோட முறை. மாப்பிள்ளைக்கு நீயும் ஸ்வீட் கொடுத்து சந்தனம் குங்குமம் வச்சி விடும்மா” இப்படி சொல்லவும் அடுத்த சிரிப்பொலி கிளம்பியது. முகம் முழுக்க இரண்டு பேருக்குமே சிவந்து இருந்தது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது அந்த நிகழ்வு.
அப்போது கூட சுமித்ராவிடம் பேசிக்கொண்டு இருந்தான் ராம் “சுமித்ரா ஏன் இவ்வளவு நெர்வஸா இருக்கறிங்க? ரிலாக்ஸ்” இதை சொன்ன அவனும் கூட கொஞ்சம் பதட்டத்தோடு காணப்பட்டான். நடந்த நிகழ்வுகளை ஒரு புறம் விடியோ எடுத்தபடி இருக்க. ராமும் தனது மொபைலை தந்திருந்தான் போட்டோ எடுக்க என.
“இல்லை. சுற்றிலும் ஆட்கள் அதிகமா இருக்கறாங்க. அதுதான்” தலை குனிந்தபடி பதில் சொன்னவள் தனது கை குட்டையில் முகம் துடைத்தபடி நின்றிருந்தாள்.
“போதும் பொண்ணு மாப்பிள்ளை உட்காருங்கள். பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணறதுக்கு வாங்க” என சொல்லவும் ஒவ்வொருவராக இருவருக்கும் சந்தனம் குங்குமம் வைத்து ஆசிர்வாதம் செய்து விட்டு நகர்ந்து கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடிந்து இருந்தது. “சரிபா. பொண்ணு மாப்பிள்ளை இப்படி உட்காருங்க. நாம பேசிடலாமா என்றபடி அதே பெரியவர் மிச்ச விஷயங்களையும் பேசிடலாமா?” என ஆரம்பித்து,
“மாப்பிள்ளை வீட்ல வர்ற செலவு எல்லாத்திலேயும் பாதி பாதியாக பிரிச்சிக்கலாம்ன்னு சொல்லியிருக்கறாங்க. வேற ஏதாவது பேசறதா இருந்தாலும் பேசிட்டுங்க”
“இல்லைங்க, எங்களுக்கு பரிபூரண சம்மதம்” சுமித்ராவின் தகப்பனார் ராகவேந்திரர் கூறவும்,
“சரிப்பா. திருமணத்திற்கு நல்ல நாள் இப்போதே பார்த்திடலாமா. நான் நாலு நல்ல நாள் சொல்லறேன் பொண்ணுக்கு எந்த நாள் தோதுபடும்ன்னு பொண்ணோட அம்மா பார்த்து சொல்லுங்க, காலண்டர் எடுத்துவிட்டு வாங்க” என்றபடி சற்றே நகர்ந்து முன்புற வராண்டாவிற்கு சென்று இருந்தனர். இன்னமும் கூட ஒவ்வொருவராக சுமித்ரா ராமிடம் பேசியபடி தான் இருந்தனர்.
பத்து நிமிடம் முடியவும் மொத்தமாக இவர்கள் இருந்த இடத்திற்கு வந்தவர்கள் “இந்த மாத கடைசியில் ரெண்டு முகூர்த்த நாள் இருக்குது. இத விட்டா இதற்கு பிறகு மூன்றாவது மாதத்தில் தான் நல்ல முகூர்த்தம் இருக்குது. எந்த தேதியில் வைக்கலாம்னு ரெண்டு பேரும் பார்த்து சொல்லுங்க”
கிருஷ்ணனோ “எனக்கு எந்த முகூர்த்தமாக இருந்தாலும் சரிதான் பொண்ணு வீட்ல அவங்களுக்கு எந்த தேதியில் சொல்லறாங்களோ அப்போது பண்ணிடலாம்”
“ராகவேந்திரா நீதான் சொல்லணும். என்ன கேட்டா மாத கடைசியில் வரும் முகூர்த்த தேதி சரியாக இருக்கும். ஏன்னா கல்யாண பத்திரிகை அடிக்க மண்டபம் பார்க்க டைம் வேண்டுமே என்ன சொல்லறிங்க? பொண்ணு கிட்ட கேட்டு சொல்லுங்க”
ராமின் அருகில் நின்றிருந்த திலகவதி சுமித்ராவிடம் “என்ன சுமித்ரா? உனக்கு அந்த தேதி ஓகே தானே? இல்லை தேதியில் மாற்றணுமா?”
அந்த டேட்டே ஓகே தான் அத்தை என அவள் தலையை மட்டும் ஆட்ட,
“சரி இனி என்ன? ரொக்கம் ஏதாவது இப்பவே கொடுக்கறிங்களா இல்லை பிறகா?”
“ஒரு லட்சம் தர இப்போ ரெடியா இருக்கு” மல்லிகாவை எடுத்துட்டு வா என்பது போல தலையாட்ட. உள் அறைக்குள் சென்றவர் எடுத்து வந்து தரவும், அத்தனை பேர் முன்பும் தட்டில் வைத்து தர, இனி இத முறைப்படி எழுதிடலாமா? என கூறி,
“யார்பா ரெண்டு வீட்டோட சார்பில ரெண்டு பேப்பர்ல சொல்லறமாதிரி எழுதுங்க” என ஆரம்பித்தார். இன்னாறது பேரனுக்கும் திலகவதி கிருஷ்ணனின் முத்த புதல்வன் ராமுவிற்கும் தெய்வதிரு இவர்களது பேத்தியும் மல்லிகா ராகவேந்திரர் புதல்வி சுமித்ராவிற்கும் ஆவணி மாதம் இருபத்தி ஆறாம் நாள் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயக்கியபட்டு முடிவு செய்யப்படுகிறது”
“வாங்க பொண்ணு வீட்டுக்கு சார்பாக ரெண்டு பேரும் பையன் வீட்டு சார்பில் ரெண்டு பேரும் சாட்சி கையெழுத்து போடுங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒன்றை வச்சிக்கோங்க. அவ்வளவுதான் முடிஞ்சதுயா”
அப்போதே நேரம் ஏழு மணியை தொட்டு இருந்தது. அனைவருக்கும் இரவு உணவிற்கு ஏற்பாடு செய்திருக்க. ஒவ்வொருவராக சாப்பிட அழைத்து சென்றனர். கடைசியில் ராம் சுமித்ரா இருவரையும் அமர வைத்து உணவு பரிமாற பட. கூடி இருந்தவர்களின் கிண்டலுக்கு நடுவே இனிதாக அன்றைய நாள் முடிவடைந்து இருந்தது.
இவர்கள் புறப்பட இரவு ஒன்பது மணியை தொட்டு இருந்தது. சாப்பிட்டு முடிக்கவும் சுமியிடம் சொல்லி இருந்தான் ராம் “வீட்டுக்கு போனதும் போன் பண்ணறேன் சுமித்ரா” என சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் மகிழ்ச்சியோடு நிறைவாகவே தலையாட்டி அனுப்பி வைத்தாள்.
சிலர் நிச்சயம் முடியவும் பெண் வீட்டில் இருந்தபடியே அப்படியே கிளம்பி இருக்க மிச்ச உறவினர்களை அழைத்து கொண்டு ராமின் வீட்டை நோக்கி புறப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் உறவினர்கள் ஒவ்வொருவராக சொல்லி விட்டு புறப்பட்டு கொண்டிருந்தனர்.
அதில் சிலர் “திலகாம்மா அடுத்த ஆறு மாதத்தில் சின்ன பையனுக்கும் நல்ல பொண்ணா பார்த்து கட்டி வச்சிருங்க” என்றும் சொல்ல,
“ம். செய்யலாம் செய்யலாம். அதுக்கு அவன் சம்மதிக்கணுமே”
“ஏம்மா அப்படி சொல்லறிங்க. ரெண்டு பையன்களும் ராமர் லஷ்மணன் மாதிரி இருக்கறாங்க. உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டாங்க”
“சரி சரி உன்னோட வாய் முகூர்த்தம் அப்படியே பலிக்கட்டும்” என கூறவும்,
“வரோம் மா” என புறப்பட்டு சென்றனர்.
அங்கே சுமித்ரா வீட்டில் உறவினர்கள் அனைவரும் சென்றிருக்க சுமித்ராவின் தாயார் மல்லிகா சுமியிடம் “கட்டியிருக்கும் சேலையை மாற்றிவிட்டு வா சுமி.
தலையை மெதுவாக அவிழ்த்து விடறேன்”
“இதோ வரேன்மா” என்றவள் பத்து நிமிடத்தில் குளித்து உடைமாற்றி வரவும், அருகில் அமர வைத்து தலையை பிரித்து விட்டு ஏற்கனவே தலையில் வைத்திருந்த மல்லிகை சரத்தை எடுத்து விட்டவர் “கொஞ்சமாக வச்சி விடறேன் அத மட்டும் வச்சிக்கோ சுமி”
“ம்.. சரிமா.. டயர்டா இருக்கு. தூக்கம் வருது”
“இரு.. இரு.. திருஷ்டி சுற்றி போடறேன், அப்புறம் போய் தூங்கிக்கோ. ஊரே உங்க பொருத்தம் பற்றி தான் பேசினாங்க”
“பச். என்ன பொருத்தம் இருந்து என்ன மா? எத்தனை விஷயம் மாறினால் என்ன? கல்யாணம்ன்னு வரும் போது, பணம் நகைன்னு கேட்க தானே செய்யறாங்க, கொடுக்கும் போது எதுவுமே சொல்லாமல் வாங்கிக்க தானே செய்யறாங்க”
“நீ ரொக்கம் கொடுத்தத சொல்லறையா? காலகாலமா தொடர்ந்து வர்றதுடா சட்டுன்னு மாறிடாது. இன்னும் நாள் ஆகும். பாரேன் இன்னும் ரெண்டு மூன்று தலைமுறை மாறும் போது இந்த மாதிரி வாங்கறது சுத்தமாக நின்றாலும் நின்றுவிடும்”
“போம்மா. வருங்காலத்தில் பையனுக்கு முதலில் பொண்ணு இருக்கான்னு பார்க்கணும். ஆண்களை விடவும் பெண்களோட பிறப்பு விகிதம் குறைஞ்சிட்டு வர்றதா ஆர்டிகல் சொல்லுது”
“போதுமே உன்கிட்ட பேச முடியுமா?” அப்போது போன் வரவும்.
“யார்டா? மாப்பிள்ளையா?”
“ஆமாம்மா”
“சரி பேசிட்டு தூங்கு. நான் போய் சமையல் கட்டை ஓரம் பண்ணிட்டு வரேன்” என நகரவும்,
“ஹலோ” என்றபடி போனை அட்டென் செய்தாள்.
“சுமி. நான் தான்”
“சொல்லுங்க”
“என்ன பண்ணிட்டு இருக்கற சுமி?”
“தூக்கம் வருது. தூங்க போறேன்”
“ம்.. இங்கேயும் அப்படி தான் செம டயர்ட். இப்ப தான் உறவுக்காரங்க எல்லோரும் கிளம்பி போனாங்க. ஸாரி சுமி. ரொக்கப்பணம் கொடுக்கும் போது உன்னோட முகத்தை பார்த்தேன் உன்னோட முகமே சரி இல்லை. உனக்கு இதெல்லாம் பிடிக்கலைன்னு நினைக்கறேன் என்ன செய்ய? பிடிக்குதோ இல்லையோ சில நேரத்தில் சில விஷயத்தில் அனுசரிச்சு தான் போக வேண்டியதா இருக்கு சில விஷயங்களை மாற்ற முடியறது இல்லை. எல்லாமே கல்யாணம் வரைக்கும் தான். அப்புறம் பாரேன் இன்றைக்கு பேசின யாரும் மறுபடியும் வந்து பேசிட்டு நிற்க மாட்டாங்க”
“அப்போ நகை கேட்கலாம்ன்னு சொல்லறிங்களா?”
“அப்படி கிடையாது சுமி. அம்மாவுக்கு பொண்ணு வீட்ல இருந்து நகை வாங்கறது இஷ்டம் கிடையாது. லாஸ்ட் தடவை ஒரு பொண்ணு பார்த்தாங்க எனக்காக. நான் பார்க்கலை அம்மாவே பார்த்து முடிவு ஆகிற மாதிரி இருந்தது. அம்மா நகை எதுவும் தேவையில்லை உங்கள் பெண் மட்டும் போதும்ன்னு சொன்னாங்க. அங்கே இருந்தவங்க ஆளுக்கு ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க பையனுக்கு ஏதாவது நோய் இருக்கா. அதனால்தான் இப்படி கேட்கறிங்களா அப்படின்னு அம்மா கடுப்பாகி உங்க பொண்ணே வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டாங்க. அதனால உன் விஷயத்தில் எதுவுமே சொல்லல. உங்கள் வீட்ல நகை கம்மியா போட்டா கூட எதுவும் கேட்க மாட்டாங்க, நீ நம்பலாம். ஓகே குட் நைட் சுமித்ரா, நாளைக்கு கூப்படறேன்” என கட் செய்தவன் தாயாரை தேடி கீழே வந்தான்.
அங்கே வெளிகதவு லேசாக திறந்து இருக்க சமையல் அறையில் பாத்திரம் கழுவிக் கொண்டு இருந்தார் திலகவதி. கிருஷ்ணன் தூங்க சென்று இருந்தார். தன் அம்மா கழுவியதை அவரோடு பேசியபடி ஒவ்வொரு பாத்திரமாக எடுத்து அதனதன் இடத்தில் வைக்க துவங்கினான் ராம்.
“போய் தூங்கலாம்ல ராம், நான் பார்த்துக்கறேன்” திலகவதி கூறவும்.
“போங்கமா உங்களுக்கு தூக்கம் வரலையா? நானும் கூட நிற்கறேன். கொஞ்ச நேரம் தானே மணி பதினோன்று ஆக போகுது”
“சொன்னால் கேட்க மாட்ட. இதையெல்லாம் சரியா அடுக்கு” என்றபடி பாத்திரம் கழுவி வைக்க, அதே நேரம் கதவை திறந்தபடி குரு உள் நுழைந்து கொண்டிருந்தான்.
சமையல் அறையில் சத்தம் கேட்கவும் மெதுவாக வந்தவன் வாயில் அருகில் நிற்க, முதலில் பார்த்தது ராம். “குரு” என அவன் அருகில் நகர போகவும்,
“ஷ்” என்றபடி உதட்டில் கை வைத்தவன் இவனை வெளியே வரும் படி ஜாடை காட்ட வாய்க்குள் சிரித்தபடி ராம் வெளியேவர, வேகமாக தனது கண் கண்ணாடியை கழட்டி சட்டைக்குள் வைத்த குரு, ராம் எடுத்து வைத்த பாத்திரத்தை இவன் எடுத்து வைக்கத் துவங்கினான் அமைதியாக.
 

Kavisowmi

Well-known member
16
கிட்டத்தட்ட ஒரே உயரம், உடை கூட ஒன்று போல் அமைந்திருக்க, கண்களின் கண்ணாடி மட்டுமே இருவரையும் சற்றே வேறுபடுத்திக் காட்டியது. குரு அமைதியாக எடுத்து வைத்து கொண்டிருக்க, திரும்பி பார்க்காமலேயே குரல் கொடுத்தார் திலகவதி,
“குரு, வந்தாச்சா?” என.
“ம்மா டூ மச் எப்படி கண்டு பிடிச்சிங்க. திரும்ப கூட இல்லை”
“நான் உன்னோட அம்மாடா. உன்னை எனக்கு தெரியாதா? நீ முன்னாடி கேட் ஓபன் பன்னும் போதே தெரியும். எதுல வந்த?”
“அது. மா வண்டி எதுவும் கிடைக்கவில்லை. ஊட்டிக்கு காய்கறி ஏற்றி வந்த டெம்போல”
“என்ன அவசரம்? பஸ்ல வர வேண்டியது தானே”
“ம்மா. நமக்கு என்ன வேணும் வீட்டுக்கு வரணும் எதில் வந்தா என்ன? எந்த வண்டி கிடைக்குதோ அதில வந்துவிட வேண்டியது தான். அம்மா அத விடுங்க. சாரோட விஷயம் என்னன்னு பார்க்கலாம்”
“என்னடா பார்க்க போற?” ராம் கேட்கவும்
“இருடா சொல்லறேன், பார்த்து ஒரு மாதம் இருக்குமா. அதுக்குள்ள என்ன மேஜிக்மா இது. இங்கே வா”
“என்ன குரு என்ன ஆச்சு?” ராம் கேட்கவும்,
“அம்மா உனக்கு தெரியலையா? இவன் கலராகிட்டே வரான். ஏம்மா பொண்ணுங்களுக்குத்தான மேரேஜ்னா ஒரு அழகு வரும்ன்னு சொல்லுவாங்க? இங்கே அப்படியே ஆப்போசிட்டா இருக்கு. என்ன நடக்கிறது ப்ரோ?”
“டேய் குரு வந்ததும் ஏன் அவன்கிட்ட வம்பு இழுக்கற?” திலகவதி கேட்கவும்
“அதுதானே. ம்மா குரு கிட்ட ரெண்டு நாள் பேசபோறது இல்லைன்னு நீ சொன்னேல்ல, அத செய்மா முதல்ல?”
“போட்டு தர்றியா மகனே, இரு ஒரே நிமிடம். ஏன் சார் போன் பண்ணும் போது பிஸின்னு வந்தது அப்படி யார் கிட்டேங்க சார் கடலை போட்டிங்க?”
“ம்மா. இவனை என்னன்னு கேளு”
“டேய் உங்களோடத நீங்களே பேசி முடிச்சிக்கோங்க. என்ன இதிலே இழுக்க கூடாது. போய் ஹால்ல உட்காருங்க ரெண்டு பேரும் பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன். குரு சாப்பிட்டயா. ஏதாவது செய்யவா?”
“சாப்பிட்டாச்சுமா. நல்ல கடையில்”
“அடிங்க. காலையில் எனக்கு இத செஞ்சு தாங்க, அத செஞ்சு தாங்க அப்படின்னு சொல்லிட்டு வா முதுகிலேயே வைக்கறேன்”
“மா ரொம்ப டெரரா பேசறிங்க, நீ வா பையா உன்கிட்ட இன்னும் நிறைய கேட்க வேண்டியது இருக்குது, முதல்ல உன்னோட போனை கொடு” என்றவன் ராமின் பாக்கெட்டிலிருந்து கேட்காமலேயே எடுத்து இருந்தான்.
“எதுக்குடா உனக்கு?”
“குடுடா அவசரபடற. அதுவும் போனை தர்றதுக்கு இவ்வளவு யோசிக்கற? ஏதாவது சிக்ரெட் இருக்கா? ஒரு வேளை போன்ல பேசற டைம்மா?”
“குரு, அவன் அப்பவே குட்நைட் சொல்லி இருப்பான். பேசறத பற்றி அவன்கிட்ட கேட்கற?”
“குடுடா போனை” பத்து நிமிட அலைகழிப்பிற்கு பிறகு “இன்றைக்கு ஃபங்சனை போட்டோ எடுத்து இருப்பதானே பார்க்கலாமா?” என கேட்கவும்,
“பார்த்துட்டு தா” என ஹாலில் அமர்ந்தபடி டிவியை ஆன் செய்தான் ராம்.
போட்டோ கேலரிக்குள் நுழைந்தவன் போட்டோக்களை பார்த்தபடி “வாவ், ராம் மோதிரம் கைல வாங்கின பொண்ணு கூட பேசாமல் இருக்கு, உன்னோட முகம் ஏன் இவ்வளவு சிவந்திருக்கு?” இப்படி சொல்லவும்,
ஷோபா ஓரத்தில் இருந்த தலையனையை எடுத்து அடித்தவன் “ஏண்டா கிண்டல் பண்ணறதுக்கு போனை வாங்கி பார்த்து விளையாடறையா இரு” என்றவன் ஷோபாவில் அமர்ந்தவன் மேல் விழவும், .

“அம்மா அடிக்கறான்” என சத்தமிட்டபடி போனோடு குறுகி அமர்ந்திருக்க, கிடைத்த இடத்தில் அடி விழுந்து கொண்டு இருந்தது. “நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா?”
“இந்த போட்டோவை பார்த்தா அப்படி தெரியலையே பையா”
“ராம் எழுந்திரு அவன் மேல இருந்து, குரு இந்தா பாலை பிடி குடிச்சிட்டு போய் தூங்குங்க, காலையில் பேசிக்கலாம்”
“நான் நிறைய பேசணும்மா ராம்கிட்ட, பையா அந்த பொண்ணு கிட்ட பேசறையா? எத்தனை முறை பேசுவ ஒரு நாளைக்கு? எத்தனை முறை போய் பார்த்துட்டு வந்து இருக்கற? பொண்ணோட பேர் என்ன? முக்கியமான கேள்வி பொண்ணுக்கு தங்கச்சி யாராவது இருக்கறாங்களா?”
“டேய், ஒரு மார்கமாத்தான் வந்து இருக்கற. அம்மா பேசாமல் இவனுக்கும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுங்க. ரொம்ப ஆர்வமாக கேட்கிறான்”
“டேய். சதிகாரா. நான் இன்னும் நிறைய இடம் பார்க்கணும். உன்னோட பையன கூப்பிட்டுட்டு டிரக்கிங் போகணும். அப்புறம் வண்டியில் வச்சி இந்த ஊரையே சுற்றி காட்டணும் அதற்கு முன்னாடி வாய்பே இல்லை, எப்படியும் இன்னும் ஏழு வருஷமாவது ஆகும். ஏய். என்ன அப்படி பார்க்கற? பொய் எல்லாம் இல்லை. நிஜமாக தான் சொல்லறேன் வா ராம் நிஜமாகவே தூக்கம் வருது, உன்னோட ரூம்ல போய் மிச்சத்த பேசிக்கலாம்”
“அங்கே வந்தா சத்தம் இல்லாமல் தூங்கணும் என் கிட்ட வம்பு பண்ண கூடாது”
“காட்பிராமிஸ் வம்பிழுக்க மாட்டேன். அம்மா சாவியை கொடுங்க நான் கேட்டை பூட்டிவிட்டு வரேன்” என சாவியை வாங்கியவன் கேட்டை நோக்கி சென்றான்.
“போ. ராம் தூங்கு நாளைக்கு ஆபீஸ் இருக்குல்ல, காலையில் பேசிக்கலாம்”
“சரிம்மா” என்றவன் “டேய் வா தூங்கலாம்” என அழைத்தபடி முன் செல்ல,
“ராம் நான் வேணும்னா என்னுடைய ரூம்ல தூங்கட்டுமா?”
“முதல்ல என் கூட ரூம்புக்கு வா, அப்புறம் தூங்குவியாம்” கூடவே அழைத்து வந்தவன் அறைக்குள் வரவும் கதவை வேகமாக மூடியபடி “சொல்லு இனியாவது ஒரே இடத்தில் வேலை செய்யற ஐடியா இருக்கா. இல்லையா?”
“ஏய்.. என்ன அங்கே நல்லவன் மாதிரி கூப்பிட்டுட்டு வந்துட்டு, இங்கே வில்லன் மாதிரி பேசற?”
“குரு, அம்மா இதுக்கு மேல வருத்த பட கூடாது. வில்லன் மாதிரி இல்ல வில்லன் தான் சொல்லு”
“என்ன சொல்லணும்?”
“இனி முன்னாடி மாதிரி இஷ்டத்திற்கு வேலையை மாற்ற கூடாது. ஒரு இடம்னா அங்கே தான் தொடர்ந்து வேலை செய்யணும். நீ ஊர் ஊரா சுற்றுவது கூட பெருசா தெரியவில்லை. வேலையை மாற்றி ஊரை மாத்தறது தான் அவங்களுக்கு ரொம்ப கஷ்டபடுத்துது”
“டேய் என்னடா, ஒரே நாள்ல இவ்வளவு பொறுப்பானவனா மாறிட்ட?”
“பேச்சை மாத்தாத கேட்டதுக்கு பதில் சொல்லு”. ராம் கையை கட்டியபடி அவனை பார்த்து கேட்க,
குருவோ கட்டிலில் தலையனையை மடியில் எடுத்து வைத்தபடி “என்ன டா ப்ராமிஸ் பண்ணனும் சொல்லு செய்யறேன்”
“இப்ப சேர்ந்து இருக்கற இடத்தில் தொடர்ந்து வேலை செய்யணும்”
“ஏய் என்ன விளையாடுகிறாயா. இன்னும் ஆபீஸையே ஒழுங்காக பார்க்கலை. அப்புறம் எனக்கு அந்த ஆபீஸ் செட் ஆகுமோ இல்லையோ. அதெல்லாம் பார்த்த பிறகு தான் சொல்ல முடியும்”
“ஏன் உன்னோட ப்ரெண்ட் கோகுல் அங்கே தானே வேலை செய்யறான், அவனுக்கு அந்த ஆபீஸ் செட் ஆகும் போது உனக்கு ஆகாதா?”
“டேய் அவனும் நானும் ஒன்னா? என்னோட திங்கிங் வேற, அவனோடது வேற. எப்படி நீ இப்படி எதிர் பார்க்கற? சரிடா. என்ன தான் பதில் சொல்லணும்ன்னு எதிர் பார்க்கற? ஒகேன்னு சொல்லணுமா? ஓகே போதுமா. இன்னும் என்ன? சரிடா இனி ஒரே இடத்தில் இருக்க பார்க்கிறேன். அப்படி எல்லாம் பார்க்காத, தூங்கலாம் வா”
“நகர்ந்து படு. மேல கால் போட கூடாது” ராம் சொல்லவும்,
“இதுகெல்லாம் கேரண்டி வாரண்டி தர முடியாது. நீ தான கூப்பிட்டுட்டு வந்த. பின்னாடி என்ன குறை சொல்ல கூடாது”
“உன்னோட கஷ்டம்டா. ம்.. வேலை செய்யற இடம் பிடிக்கலைன்னா கஷ்ட பட வேண்டாம் சரியா?”
“ராம் தூங்குடா, என்ன கஷ்டம்? பிடிக்கலைன்னா போடா நீயும் ஆச்சு உன்னோட வேலையும் ஆச்சுன்னு வரப்போறேன். எப்படியும் ஒரு வருஷம் அக்ரீமென்ட் போடுவாங்க பார்க்கலாம்” என்றவன் சற்று நேரத்திற்கெல்லாம் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று இருந்தான்.
இரவு மூன்று மணியை தொட ராம் தண்ணீர் குடிக்க எழுந்தவன், குருவின் முகம் பார்க்க ஆழ்ந்த தூக்கத்திலும் புன்னகைத்தபடி இருந்தான். அருகில் வந்தவன் குருவின் தலை கோதி விடவும் புரண்டு படுத்தபடி குரு “தூங்குடா” என்றான்.
“தூங்கலையா நீ?”
“சத்தம் கேட்டா எழுந்திடுவேன் தெரியாதா? ம்” மறுபடியும் படுத்தவன் தூங்கி இருந்தான்.
“நீ மாறவே இல்லைடா” என்றபடி தூங்க ஆரம்பித்தான் ராம். விடியற்காலை ஐந்து மணியை தொடவும் ராமின் போனில் இருந்து அலாரம் அடிக்க ஆரம்பித்தது.
“கண்களை திறக்காமலேயே ராம் அலாரத்தை ஆப் பண்ணு. இதுக்குதான் உன் கூட தூங்க வர்றது இல்லை”
“ஆப் பண்ணிட்டேன்டா”
“நன்றி பையா. வாக்கிங் போகலையா?” மறுபடியும் புரண்டு படுக்க,
“இல்லைடா”
“குட் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு” சொன்னவன் மறுபடியும் தூங்கி இருக்க,
“இவன் தூங்கற கோழி தூக்கத்துக்கு என்ன தூங்க சொல்லறான்” என்றபடி ராம் மறுபடியும் படுக்கையில் படுக்க, மீண்டும் எழும் போது நேரம் எட்டு மணியை தொட்டு இருந்தது.
வேகமாக குளித்து வெளியில் வந்தவன் குருவை எழுப்பி விட்டான் “குரு எழுந்திரு நேரம் ஆச்சு”
“நீ குளிச்சிட்டு எழுப்பி விடு”
“டேய் நான் கிளம்பியாச்சு. எழுந்திரு”
“ம். ஆபீஸ் போகணுமா?” குரு எழுந்தபடி கேட்க.
“இல்லை லீவ்ன்னு மெசேஜ் அனுப்பிட்டேன்” எழுந்து குளித்து வரவும், குருவோடு இருவரும் கீழே வர, ஹாலில் இருந்த ஷோபாவில் திலகவதி அமர்ந்து இருந்தார்.

ராம் குருவிடம் படியில் இறங்கியபடி “பொண்ண பார்க்க வருகிறாயா? அழைச்சிட்டு போறேன்”
“பார்க்கணுமா ப்ரோ?” என இதற்கு குரு கிண்டலாக கேட்க,
“டேய் நீ வர்றலையேன்னு கேட்டா என்னையவே ஓட்டற”
அதென்ன ப்ரோ, கரெக்டா ஆறு மணிக்கு குட் மானிங் மேசேஜ் அனுப்பணுமா? இதற்கு நேரடியா போனை பண்ணி பேசலாமே?”
“டேய். பார்த்துட்டு தான் இருந்தியா? உன்னை..”
“என்னை உன் கூட அழைச்சிட்டு போனா, இப்படி தான் பல்ப் வாங்கணும். இறங்குடா” என்றபடி முன்னாடி நடந்தவனின் தோளில் தொங்கியபடி, பின்னால் படி இறங்கி வந்து கொண்டு இருந்தான் குரு.
இருவரையும் ஒன்றாக பார்த்த திலகவதிக்கு கூட லேசாக தன்னை அறியாமல் கண் கலங்கியது. அந்த நேரம் அவர் மனதில் கடவுளே இந்த ஒற்றுமை கடைசி வரைக்கும் நிலைத்து இருக்கணும் என நினைத்தவர் பார்த்து கொண்டு இருக்க,
குரு “ராம் எடு ஜூட்” என்றவன் வேகமாக படிக்கட்டுகளை இரண்டு இரண்டாக தாவி திலகவதியின் அருகில் வந்ததும் மடியில் படுத்து இருந்தான். “நான் தான் ஃபஸ்ட்” என்றபடி.
“குரு சின்ன குழந்தை மாதிரி என்ன விளையாட்டு, எழுந்திரு அம்மாவுக்கு கால் வலிக்கும்” ராம் சொல்லவும்,
“போடா.. போடா”
“இறங்கு.. குரு இறங்குடா. ஏய்.. அப்பா வராங்கடா”
“எங்கே?” என்றபடி மடியில் இருந்து தரைக்கு இறங்கியவன் தேட,
திலகவதி, “அப்பாவுக்கு இவ்வளவு பயமா? அவங்க காலையிலேயே கடைக்கு போயாச்சு”
“அம்மா குரு வந்தது தெரியுமா?” ராம் கேட்கவும்
“தெரியும், தெரியும். காலையில் எதுவும் பேச வேண்டாம் மதியம் வந்து பேசிக்கறேன்னு போய் இருக்கறாங்க”
“என்னது? எத்தனை நாள் வச்சு பேசுவீங்க, நான் இன்றைக்கே இத முடிக்கணும், அதனால ராம் நாம கடைக்கு போகலாம். கடையில் வச்சி எதுவும் பேச முடியாது அங்கே போய் பார்த்துட்டா வீட்ல வந்துபேச மாட்டாங்க. எப்படி?”
“ப்ராடு வா போகலாம். அழைச்சிட்டு போறேன்”
“டேய் ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு போங்க” திலகவதி தட்டில் இட்லியை எடுத்து பரிமாற,
“இதோமா” என்றபடி ராம் அமர்ந்தான். அவனுக்கு அடுத்த இருக்கையில் குரு அமர்ந்த போது சரியாக அந்நேரம் அவனுக்கு போன் வந்தது. அழைப்பது கோகுல் என எண்ணைப் பார்த்ததும் அழைப்பை ஏற்று சொல்லு “கோகுல்”
“டேய் வேலை ஓகேவா. அக்ரிமெண்ட் டைப் பண்ண சொல்லிடவா? கேட்டது புது மொபைலில் என்பதால் சத்தம் தெளிவாக கேட்டது. திரும்பி அவன் ராம்மை பார்க்க, அவன் குருவையேதான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“ஓகேடா. இன்னும் ரெண்டு நாள்ல வரேன். வந்ததும் பேசிக்கலாம். அப்புறம் முக்கியமான விஷயம் எனக்கு அங்கே தங்கற மாதிரி வீடு ஒன்று ரெடி பண்ணணும். என்னால யார் கூடவும் தங்க முடியாது, தனி வீடாக வேணும், உன்னால ஏற்பாடு செய்து தர முடியுமா? ரொம்ப நாட்களாக பெங்களூரில் தானே இருக்கற முடியும்தானே?”
“குரு நான் குடியிருக்கற அப்பாட்மெண்டில் கூட வீடு ஒன்று இப்போது தான் காலி ஆகி இருக்கு, நான் கேட்டுட்டு சொல்லவா?”
“கோகுல் ஏமாற்றிடாதே, அங்கே வரும் போது வீடு வேணும்”
“வாடா.. வாடா.. பார்த்துக்கலாம்” எனவும் சிரித்தபடி போனை வைத்தவன் ராமிடம் திரும்பி “இப்ப ஓகே வா? சாப்பிடு ப்ரோ. அப்பா கடைக்கு போயிட்டு அப்படியே உனக்கு பார்த்து இருக்கற பொண்ணையும் பார்த்துவிட்டு வந்துவிடலாம். சரியா?”
“ராம் சுமிய பார்க்க போறியா? இரு ஸ்வீட் ஏதாவது செய்து தரேன் எடுத்துட்டு போங்க” திலகவதி கூறவும்,
“ராம் அம்மாவுக்கு என்ன ஆச்சு? இந்த பொண்ண அவ்வளவு பிடிச்சிருக்கா என்ன?”
“குரு இந்த பொண்ண பார்த்த நாளில் இருந்து அம்மா இப்படி தான் இருக்கறாங்க”
“அம்மா சிரமம் எதுவும் பட வேண்டாம் நாங்களே கடையில் வாங்கிக்கறோம்”
“அவளுக்கு பால்கோவா பிடிக்கும்டா”
“ராம் கேட்டுக்கோ. கிளம்பலாமா?” குரு சொன்னபடி வெளியேறவும்.
“அம்மா மதியம் ஆகிடும் வர. ஏதாவதுன்னா போன் பண்ணுங்க” சொல்லியவனை முன்புறமாக தள்ளியபடி “டேய் கிளம்புடா. அம்மா பார்த்துப்பாங்க” இழுத்துக்கொண்டு புறப்பட்டான் குரு.
 
Top