எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் விழி வழியே என்னை கண்டேனே

Status
Not open for further replies.
குட்டி டீஸர்...

அன்று இரவு சோர்வுடன் வீடு வந்து சேர்ந்தான் தேவ். வீட்டின்னுள் நுழைந்தவன் அங்கு தரையில் தன்னை குறுக்கிக்கொண்டு படுத்திருந்த மனைவியைக் கண்டு குழப்பம் அடைந்தான். ' இங்க ஏன் படுத்துருக்கா' என்று நினைத்தவன் அவள் அருகில் வேகமாக சென்று மண்டியிட்டு அமர்ந்தவன் "அம்மலு.. அம்முலு… " என்று அவள் கன்னம் தட்டி எழுப்ப அவள் எழவில்லை.

அவள் அசையாமல் இருக்கவும் அவனுக்கு பயம் பிடித்துக்கொண்டது. அவளை தன் மடியில் கிடத்தியவன் எழுப்ப முயற்சிக்க அவள் அசைந்து கொடுத்தாள் இல்லை. அவள் மயங்கி இருக்க கூடும் என்று யூகித்தவன் எழுந்து நின்று, அவளை தூக்கி சோபாவில் கிடத்திவிட்டு ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தான்.

மெல்ல கண்களை திறந்தவள் எதிரில் தேவ் பதற்றத்துடன் நின்றிருக்க, முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தவள்... பின், அனைத்தும் நினைவு வர எழுந்து அமர்ந்தவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதைக் கண்டு அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், " என்னாச்சு அம்முலு ஏன் அழற " என்று பதற்றமாக கேட்க…

அழுகையை அடக்கமாட்டாமல் முகத்தை மூடி அழுதவளின் கைகளை பிடித்துக்கொண்டு, "என்னாச்சுன்னு சொல்லுடி ஏன் அழற " என்று அழுத்தமாக கேட்டான். அதில் விழிகள் திறந்து அவனை புருவம் சுருக்கி உற்று பார்த்தவள், அவன் பின்னால் கை காட்டினாள். என்னவென்று திரும்பி பார்த்தவனுக்கு பெரும் அதிர்ச்சி.

அவளுக்கு அனைத்தையும் எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும் என்று இருந்தவனுக்கு இப்பொது என்ன சொல்லி புரியவைப்பது என்று விளங்கவில்லை. எப்படியும் தான் சொல்ல வேண்டும் என்றிருந்த விஷயம் தான் ஆனால் இப்படி அவள் தெரிந்துகொள்வாள் என்று அவன் எண்ணவில்லை.

தொலைக்காட்சியை அணைத்துவிட்டு பெரு மூச்செடுத்து தன்னை சமன் படுத்திக்கொண்டு அவளிடம் திரும்ப, அவளும் எழுந்து நின்றிருந்தாள்.

இன்னும் அழுது கொண்டிருந்தவளிடம் நெருங்கி நின்றவன், " அம்முலு நான் சொல்லறத கொஞ்சம் கேளு, நான்… " என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவனை கை நீட்டி தடுத்தவள், " பாத்துட்டேன்… எல்லாம் பாத்துட்டேன் … என்ன ஏமாத்திடிங்கல " என்று கதறி அழுதொடங்கினாள் . தான் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்காமல் அழுவது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இருந்தும் தன்னை கட்டுபடுத்திக்கொண்டவன் அவள் அழுகையை தடுக்கும் வழி அறியாமல் தவித்து போனான். யாரை கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தானோ அவளையே இப்படி அழவிட்டு பார்க்கும் தன் விதியை நொந்து கொண்டு நின்றிருந்தான்.

சிறிது நேரத்தில் கண்களை துடைத்து தன்னை திடப் படுத்திக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள், " இதுக்கு தான் என்ன விலக்கி வச்சீங்களா… சொல்லுங்க யார் அவ… ம்ம்ம் அவ கூட அப்படி கொஞ்சிக் குலாவிட்டு எப்படி என் கூட இருக்க முடிஞ்சுது உங்களால… அது லவ் மட்டும் இல்ல அத தாண்டியும் உங்களுக்குள்ள ஏதோ ஒரு ரிலேஷன் இருந்திருக்கு சொல்லுங்க " என்று அவன் சட்டையை பிடித்து அழுத்தத்துடன் அவள் கேட்டது கோபத்தை கிளறவும்.. கோபப்பட சரியான தருணம் இதுவல்ல என்று புரிந்தவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் கையை எடுத்துவிட்டு,

" ஆமா அவ கூட நான் லிவிங் டுகெதர் ரிலேஷன்ல இருந்தேன்…"

Story link ???

 
Status
Not open for further replies.
Top