எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இருளின் நிழல்-அத்தியாயம்-7

Priya pandu

Moderator

அத்தியாயம்-7

சென்னையின் நெடுஞ்சாலை பகுதி அது………. இரவின் இருளில் மிதந்துக்கொண்டு வந்தது அந்த நவீன வகையான கார்……. அதன் உள்ளே இருந்தவனோ தன் தூக்கத்தை விரட்டும் பொருட்டு எஃப்எம்மில் பாட்டு கேட்டுக்கொண்டே வந்தான்………. அதும் அவனும் சத்தமாக பாடிக்கொண்டே வர……… அவன் அருகில் உட்கார்ந்திருந்தவளோ……. காதினை கைகளால் அடைத்துக்கொண்டே அவனை முறைத்தாள்………​

“ம்ச்…. முகேஷ்…… கொஞ்சம் வால்யூம கம்மி பண்ணு……… சத்தம் காத அடைக்கிது…..”என்று அவள் கத்த…….​

“ம்ச்….. டெய்சி……. இப்போ மணி நைட் 12 ஆகுது……...இப்போ நைட் நம்ம சென்னையோட அவுட்டர்ல போய்ட்டு இருக்கோம்…….. இந்த மாதிரியான நேரத்துல தூக்கம் வேற கண்ணை கட்டுது……..அத தட்டுக்கதானே நானும் இப்டி பாட்டு போட்டு கத்திட்டு வரேன்…….”என்று அவன் எரிச்சலாக பதில் கூற……​

“ம்ச்….. அதுக்கு இப்டிதான் காத அடைக்கிற மாறி பாட்டு போடுவியா……… நிறுத்துடா….. எனக்கு காதே வலிக்கிது…….”என்று அவள் கத்த​

அதில் கடுப்பானவன் வால்யூமை குறைத்துவிட்டு அவளை முறைக்க……… "இப்போ எதுக்கு என்னை முறைக்கிற……..”என்று அவள் எகிற​

“முறைக்காம என்ன பண்ணுவாங்க…….. நம்மளுக்கு கல்யாணம் ஆகி 1வருஷம் கூட ஆகல……. ஆனா இதுவரை 1000முறை சண்ட போட்டாச்சி…….. “என்று அவன் பதிலுக்கு கத்த​

“ம்ச்….. அதுக்கு என்ன இப்போ……. ஒவ்வொரு தடவையும் நீதான் சண்ட போடுற……..”என்று அவள் அவனை குத்தம் சொல்ல…….​

“நானா சண்ட போடுறேன்…….. உனக்கு தான்டி என்னை பிடிக்கவே இல்ல…… பிடிக்காம எதுக்குடி என்னை கல்யாணம் பண்ண……..”என்று அவன் கத்த​

“ஆமா…… எனக்கு உன்னை பிடிக்கல தான்…….. அதுக்கு என்ன இப்போ……..”என்று அவள் திரும்ப கத்த​

அதில் இன்னும் கோவம் அதிகமானவன் காரை ஒரு ஓரத்தில் நிறுத்தியவாறே அவள் பக்கம் திரும்பி உட்கார்ந்தவாறே……..​

“அப்பறம் எதுக்குடி என்னை கல்யாணம் பண்ண…….”என்று அவன் அதட்ட​

“இங்கப்பாரு இந்த அதட்டுற வேலை எல்லாம் வச்சிக்காத……… எனக்கு அது பிடிக்காது………..”என்று அவள் எகிற……….​

அதில் அவனால் அவளை முறைக்க மட்டும் தான் முடிந்தது………​

இருவருக்கும் திருமணம் ஆகி 8மாதங்கள் தான் ஆகிறது…….. இருவரும் ஒன்னும் சாதாரண ஆட்கள் இல்லை……. சென்னையின் எக்ஸ் எம்எல்ஏ தவசியின் தம்பி தான் இந்த முகேஷ்…….. ஊர் முழுதும் இருக்கும் பொறம்போக்கு நிலத்தை ஆட்டைய போட்டு அதனை தன் பேரில் ரிஜிஸ்டர் செய்துக்கொண்டு………. கட்டப்பஞ்சாயத்து…….. ஆள் கடத்தி மிரட்டல்….. போதைப்பொருள் சப்ளே என்று ஒரு அடியாள் கூட்டத்தையே தன் கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டுபவன் தான் தவசி……..​

அவனுக்கு ஒரே ஒரு தம்பி அவன் தான் முகேஷ்………. நல்ல படித்தவன் என்றேல்லாம் இல்லை……. அண்ணன் பொறம்போக்கு என்றால் தம்பி பொறுக்கி…….. கூட படித்த பெண்களை ஆட்கள் வைத்து மிரட்டி தன் ஆசையை தீர்த்துக்கொள்ளும் பக்கா பொறுக்கி……..​

அவனால் நிறைய பெண்கள் படிப்பினை விட்டு நின்றுவிட்டனர்……… இப்படியாக அவனை அடக்க ஆள் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தான்……. அவனின் அண்ணனுக்கு முகேஷ் என்றால் அவ்வளவு பாசம்…… அவனை தன் பிள்ளை போல வளர்த்தான்……. இவனை வளர்க்க அவன் திருமணம் கூட செய்துக்கொள்ளவில்லை………..​

ஆனால் இவனோ அவன் அண்ணனையே சாப்பிட்டு விடுவது போல அத்தனை அயோக்கியதனமும் செய்துக்கொண்டு இருந்தான்………​

அப்படிப்பட்டவனுக்கு தான் தவசி கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தான்……… அதும் இன்னொரு ஆட்சியில் இருக்கும் எம்எல்ஏவின் மகளான டெய்சியை……​

டெய்சி பார்க்க அப்படியே பொம்மை போலவே இருப்பாள்……… ஆனால் அவளும் அவனை விட கேப்மாறி தான்……​

அவள் இந்த காலத்து ப்ளே கேர்ள்……. அவளுக்கு நாள் முழுதும் பப்பில் குடிக்க வேண்டும்……… இரவானால் தனக்கு பிடித்த பாய் பெஸ்டியுடன் அந்த இரவை சந்தோஷமாக ஓட்ட வேண்டும்………. அப்படி வாழ்ந்திருந்தவளை இப்படி ஒரு பொறுக்கிக்கு திருமணம் செய்து வைத்தாள் அவள் பின்ன கதறமாட்டாளா…….​

அவளை விட யாரும் மோசம் இல்லை என்று இருந்தவளுக்கு இப்போது தன்னை விட ஒருவன் மோசமாக இருப்பதில் கொஞ்சம் பொறாமை………​

அதனால் தான் திருமணம் ஆன நாள் முதல் அவனை தாளித்துக்கொண்டே இருக்கிறாள்…….. அவனோ நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்………. ஆனால் நான் இப்படிதான் என்பது போல் சுற்ற ஆரம்பிக்க…….. அவளும் அப்படித்தான்……… இதனால் இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை…...ஆனால் இருவரும் இப்போது வரை சேர்ந்து இருப்பதற்கு காரணம்,……. அவர்களின் அரசியல் வாழ்க்கை தான்………..​

இருவரது குடும்பமும் அரசியலில் குதித்தவர்களாக இருப்பதால் இந்த கல்யாணத்தால் அவர்களின் பெற்றவர்களுக்கும், முகேஷின் அண்ணன் தவசிக்கும் இது மிகவும் முக்கியமான கல்யாணமாக இருந்தது……..​

அதன்படி தான் இருவருக்கும் திருமணம் பேச……… முகேஷ், டெய்சியை பல தடவை பல பார்ட்டிகளின் அவளின் பாய் பெஸ்டியுடன் மிகவும் நெருக்கமாக பார்த்திருக்கிறான்…… ஆனால் அவளின் அழகு அவனையும் பித்துக்கொள்ள தான் வைத்தது……. இருந்தும் அவளை திருமணம் செய்ய அவன் யோசிக்க……..​

“இங்கப்பாரு முகா…….. உனக்கு கல்யாணம் பண்ணனும்……. அதுவும் இந்த மாறி கேரேக்டர்ல தான் மேரேஜ் பண்ணனும்னு அண்ணா நினைக்கல…….. ஆனா நமக்கு இந்த அரசியல் செல்வாக்கு ரொம்ப முக்கியம்……. அவளோட அப்பன் எதிர்க்கட்சியில நமக்கு ஒரு சீட்டு வாங்கித்தரேனு சொல்லிருக்கான்……… உனக்கே தெரியும் நான் 5வருஷத்துக்கு முன்னால மினிஸ்டர்க்கு நின்னு தோத்த விஷ்யம்……… ஆனா இவன நம்புனா நம்ம காலத்துக்கும் செட்டில் ஆகிடலாம்……. அதுனால இந்த கல்யாணத்த பண்ணிக்கோ……...”என்றான் தவசி​

அவன் சொல்ல வருவது முகேஷிற்கு புரியதான் செய்தது……… அவனும் தான் பார்க்கிறானே தனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து தன் அண்ணன் தன்னை வளர்க்கப்பட்ட பாடு…….. அதனாலே இதுவரை அவன் சொல் பேச்சி கேட்டு தான் அனைத்தும் செய்தான்……..​

“ஆனா அண்ணா……… அவ நல்ல பொண்ணு இல்லணா….. ஒரே பாய் பெஸ்டிகூடவே சுத்துறா……...”என்று அவளை பற்றி கம்பளைன்ட் பண்ண……..\​

“ம்ச்…. முகா அவ எந்த மாறி பொண்ணுனு எனக்கு தெரிலனு நெனைக்கிறீயா……. ஆனாலும் நான் இந்த கல்யாணத்துக்கு அவசரப்படுறேனா அதுக்கு காரணம் நிறைய இருக்கு…….. அவ அந்த வீட்டுக்கு ஒரே பொண்ணு………. ரோடு போடுற கான்ட்ராக்ட்ல இருந்து பில்டிங் கட்ற கான்ட்ராக்ட் வர அவனுக்கு நிறைய கமிஷன் வருது……. நீ மட்டும் அந்த வீட்டுக்கு மருமகன் ஆகிட்ட எல்லாமே உனக்கு தான்…….. என்ன நான் சொல்றது புரிதா…….”என்று தவசி கூற​

அதில் மெல்ல தலை ஆட்டியவனின் தலையை பாசமாக வருடியவன்………. “நீ யோசிக்கிறது புரிதுடா…… சும்மா பேருக்கு பொண்டாட்டினு கூட வச்சிக்கோ……. அதுக்கு அப்புறம் உன் இஷ்டப்படி சுத்து உன்னை யாரு கேட்க போறா……. என்ன நான் சொல்றது சரியா……..”என்று அவனை பாசமாக வருடியவாறே கேவலமான உபதேஷத்தை அவனுக்கு கூற……….​

அதில் புன்னகைத்த முகேஷும், டெய்சியை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டான்……… இருவரும் பெயருக்கு திருமணம் செய்துக்கொண்டார்களே ஒழிய…… யாரும் திருந்தியபாடு இல்லை…….. இவன் ஒரு பக்கம் ஊதாறியாக சுத்த……… அவள் ஒரு பக்கம் நாதாறியாக சுற்றினாள்…….​

ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் ஆறாம் ஏழாம் பொருத்தம் தான்……… "எனக்கு இது செய்……..”என்று அவள் வேலைக்காரியை கட்டளை இட…….. “இல்ல எனக்கு இதுதான் வேணும்…….”என்று அவன் கட்டளை இட்டு மோதிக்கொள்வார்கள் இருவரும்……..​

இதில் தவசிக்கு தான் ப்ரசர் எகுறும்…….பல நாள் அவன் இவர்களை கண்டுக்கொள்ளவே மாட்டான்……..​

இப்போது கூட தவசியும் டெய்சியின் அப்பா குமாரனும் வலியுறித்தியதால் மட்டுமே பாண்டிச்சேரிக்கு ஒரு திருமணத்திற்கு கெஸ்ட்டாக சென்று வேண்டா வெறுப்பாக கலந்துக்கொண்டு திரும்ப சென்னை வந்துக்கொண்டிருக்கின்றனர்……​

“நீ என்னை மதிக்கறதே இல்ல……… புருஷனு மனசுல நினைப்பு இருக்கா……..”என்று அவன் வெறுப்பாக அவளை பார்க்க​

அதில் சத்தமாக சிரித்தவள்……… "புருஷனா நீயா……. ஹாஹா……….நல்ல ஜோக்……. இதுவரை புருஷனா எனக்கு எதாவது செஞ்சிருந்தா அந்த நினைப்பு வந்துருக்கும் எனக்கு……..”என்று அவள் எகிற​

“என்ன கிண்டல் பண்றீயா……… அதான் நான் பண்ண வேண்டிய வேலை எல்லாம் உன் பாய் பெஸ்டிஸ் பண்றானுங்க இல்ல……. அப்புறம் என்னை ஏன் சீண்டுற……...”என்று அவன் நக்கலாக கூற​

அதில் கடுப்பானவள்……… "மைன்ட் யுவர் டக் முகேஷ்……….. இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசுனாலும் நா மனிசியா இருக்க மாட்டேன்……..”என்று அவள் கத்த​

“ஏய் நிறுத்திடி…….. பெரிய பத்தினி மாறி சீன் போடுறா……… என்ன உன் கதை எல்லாம் எனக்கு தெரியாதுனு நினைச்சியா……...”என்று அவன் எகிற​

“யூ யூ…. உன்ன சும்மா விடமாட்டேன்டா…….. இப்போவே என் அப்பாட்ட சொல்லி உன்ன உள்ள போட சொல்றேன்………..”என்று அவள் கத்த​

“போடி போ போய் சொல்லு………. நீ ஒழுக்கமா இருந்தா ஏன் உன் அப்பன் என்னை மாறி பொறுக்கிக்கி உன்னை கட்டிக்கொடுக்க போறான்……...முதல போய் அத பண்ணு…….. எனக்கும் என் அண்ணன் இருக்கான் அவன் என்னை பார்த்துப்பான்…….”என்று இவனும் கத்த……..​

இருவரும் மாறி மாறி தங்களை திட்டிக்கொள்ள……… அவர்கள் மறந்து போனது காரின் வெளியில் நிலவிய அமானுஷ்ய சத்தத்தினை தான்………. அவர்கள் இருவரும் திட்டி தீர்த்துக்கொண்டு ஒரு வழியாக முகேஷ் காரினை ஆன் செய்ய முயல……. ஆனால் அவனால் காரினை இயக்க முடியவில்லை………​

மேலும் மேலும் அவன் காரினை ஆன் செய்ய முயன்றானே ஒழிய அவனால் அதனை நகர்த்த முடியவில்லை……..​

“ஷட் இதுவேற……….”என்று மேலே முயல…….. ஆனால் ஒன்றும் நடப்பது போல தெரியவில்லை…….​

இவனை காச் மூச் என்று கத்திவிட்டு அவனை கண்டுக்கொள்ளாமல் தன் அலைபேசியை நோண்டிக்கொண்டு இருந்த டெய்சி…….. அவனை கடுப்பாக பார்க்க……. அப்போது தான் அவளும் காரினை இயக்க முடியவில்லை என்பதனை உணர்ந்தாள்……..​

“ம்ச்…….. இவ்ளோ நேரம் நீ மக்கர் பண்ணுன இப்போ உன் டப்பா காரா……..”என்று டெய்சி நக்கலாக கூற​

அதில் நிமிர்ந்து அவளை முறைத்தவன்……….. தன் பணியை தொடர……….​

“ம்ச்……… பெட்ரோல் காலியா இருக்கும்……….”என்றால் அதே நக்கலாக​

“கடுப்பாக்காதடி……..இப்போதானே டேங்க் ஃபில் பண்ணிட்டு வந்தோம்……….”என்று அவன் கடுத்து குதற………​

“ம்ச்……...இந்த கத்தலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல……….”என்று அவள் கடுப்படித்தவாறே காரின் வெளியில் பார்க்க………. அங்கு ஒரே இருட்டு தான் இருந்தது……. அதனை பார்த்தவளுக்கு அப்போது தான் பயம் லேசாக மனதை கவ்வியது…….​

“ஏய் முகேஷ் எவ்வளவு நேரம் இறங்கி போய் பாரு……… இங்கையே உட்கார்ந்து சீன் போடாத……….”என்றாள்​

அதிற்கும் அவளை முறைத்துக்கொண்டே தன் பக்க காரின் கதவை திறந்துக்கொண்டு அவன் இறங்க……… அவளோ இறங்குபவனை தான் அடிக்கண்ணால் பார்த்தாள்………​

முகேஷோ தன் காரின் முன்பக்க கதவை திறந்து அங்கு இருந்த ஒயர்களை ஆராய……. அவன் கண்ணுக்கு எதும் தப்பாக தெரியவில்லை……..​

“ம்ச்….. எல்லாம் சரியாதானே இருக்கு……….”என்று புலம்பலோடு காரில் ஏறி உட்கார…….​

அவன் பக்கத்தில் இருந்தவளோ……… அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்திருந்தாள்…….​

(நிழல்கள் தொடரும்……..)

 
Last edited by a moderator:
Top