எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உள்ளத்தில் தித்தித்தாய்-16

அத்தியாயம் 16

மகதி ஒரு எமோஷனல் ப்ளோவில் மனதில் இருப்பதெல்லாம் சொல்லி விட்டு, பின்பு தான் என்ன சொன்னோம் என்பதையே நினைவு கூர்ந்து மானசீகமாய் தலையில் அடித்துக் கொள்ள, ராகவனோ மனைவியை காதல் பொங்க பார்த்துக் கொண்டிருந்தான். 'என்ன ரவுடி இப்படி பாக்குறாரு... ஒருவேள நாம கொஞ்சம் ஓவரா போயிட்டமோ?' என்று எண்ணிய மகதி,

"என்னை எதுக்காக பாக்குறீங்க? ரோட்டை பார்த்து வண்டிய ஓட்டுங்க!" என்று அவன் கவனத்தை திசை திருப்ப முயல ராகவன் லேசாய் இதழ்களை வளைத்தபடி, "அப்போ என்னை உனக்கு புடிச்சிருக்கு? அதுவும் ரொம்ப...!" என்று இழுக்க மகதிக்கோ முகம் சிவந்தது.

'அத தான நானும் சொன்னேன் அதையே திரும்ப சொல்லிக் காட்டணுமா?' என்று எண்ணியவள்,

"ஆமா எனக்கு புடிச்சிருக்கு உங்களுக்கு எப்படியோ!" என்று அவன் மனதை ஆராய போட்டு பார்த்தாள். "சில விஷயங்கள் வெளிய சொல்லி தான் தெரியணும்ன்னு இல்ல!" என்று ராகவன் பிகு பண்ண, 'தோப்பா இப்படி சொன்னா என்ன அர்த்தம்?' என்று மகதிக்கு மூக்கு விடைத்தாலும்,

"அப்போ சொல்ல மாட்டீங்க?" என்று புருவம் உயர்த்தி கேட்டாள். அதற்கு அவனும் கிண்டலாக, "என்னோட கல்யாணம் நின்னு போனப்போ மண்டபத்துல நிறைய பொண்ணுங்க இருந்தாங்கள்லடி? நான் எல்லாத்தையும் விட்டுட்டு நீ தான் வேணும்னு கை காட்டுனப்பவே உனக்கு புரியலையா?" என்று கேட்க, 'இது என்னோட புது கதை?' என்பது போல் மகதி பார்த்து வைத்தாள்.

"அப்படின்னா... கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை உங்களுக்கு பிடிக்குமா?" என்றவள் நம்ப முடியாமல் கேட்க மனைவியின் முக பாவனையை பார்த்து ராகவனுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது.

இருப்பினும் அதை இதழ்களுக்கு இடையில் அடக்கியவன், "ம்ஹும்... அதெல்லாம் சொல்ல முடியாது!" என்று மறுபடியும் பல்ப் கொடுக்க, "இது என்ன உங்க கூட ஒரே தொல்லையா போச்சு... எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்ல மாட்டீங்களா? எனக்கு நீங்க இப்படி பண்ணுறது பிடிக்கவே இல்ல!" என்று சிணுங்கி கொண்டாள்.

அவள் கொடுக்கும் ஒவ்வொரு ரியாக்ஷனுக்கும் ராகவனின் மனம் தான் உருகோ உருகென்று உருகி போக, "இதோ பாருடி... சும்மா கார்ல ஒக்காந்து சினுங்கிட்டே இருக்காத... அப்பறம் காரை நிப்பாட்டிட்டு நான் ஏதாவது பண்ணிடுவேன்!" என்று மிரட்ட, 'இது வேறயா?' என்பது போல் பார்த்த மகதி,

"சரி நம்மள விடுங்க எங்க போறோம்னு நீங்க சொல்லவே இல்லையே?" என்று விட்ட கதையை தொடங்க, சரியாக ராகவன் ஒரு சின்ன பில்டிங்கிற்க்கு அருகே வண்டியை நிறுத்தினான். இரண்டு மாடிகளை மட்டுமே கொண்ட அந்த பில்டிங் வெளியே 'கே கே டெக்னிக்கல் சொலுஷன்!" என்று சின்னதாய் நேம் போர்டு தெரிய மகதிக்கு குழப்பமானது.

"என்ன இடம் இது ... எதுக்காக இங்க வந்திருக்கோம்? ஒருவேள இங்கேயும் பஞ்சாயத்தா?" என்று விழி விரித்து கேட்க, ராகவனோ அவள் தலையில் தட்டி, "பஞ்சாயத்துக்கு எதுக்குடி உன்னை கூட்டிட்டு வர போறேன்... அமைதியா கூட வா!" என்று காரில் இருந்து கீழே இறங்க, 'என்ன இவரு ஒரு இன்ஃபர்மேஷனும் சொல்லாம இப்படி நட்டாத்துல நிறுத்துராரு?' என்று புலம்பியபடி மகதி கீழே இறங்க ராகவன் விறு விறுவென்று உள்ளே சென்றான்.

இவளோ தயங்கி அவனை ஃபாலோ பண்ண, முன்னால் இருந்த ரிசப்ஷன் பெண்ணிடம் என்னவோ சொன்னவன், வாசலில் நின்ற மகதியை பார்த்து, சீக்கிரம் வா என்று அழைக்க, மகதி புடவை தலைப்பை சுற்றியபடி அவன் அருகே வந்து, "ஐயோ என்னன்னு இப்போவாச்சும் சொல்லுங்க!" என்று கெஞ்சினாள். அதே நேரம் ரிசப்ஷன் பெண்ணும், "சார் உங்கள உள்ள வர சொன்னாரு!" என்று மரியாதையோடு கூற, அவன் மனைவியை அழைத்துக் கொண்டு மாடியில் இருந்த ஒரு அறைக்கு சென்றான்.

செல்லும் வழியில், கீழே இருந்த தளத்தை கூர்ந்து பார்த்த மகதி, 'இது ஏதோ ஆபீஸ் மாதிரி இருக்கே?' என்று சுய அலசலில் இருக்க சரியாக ஐந்து நிமிடத்தில் மேலே இருந்த ஒரு அறைக்குள் மனைவியோடு சென்று அமர்ந்திருந்தான் வீர ராகவன். தனக்கு முன்னாள் பட்டை அடித்து 50 வயதின் மத்தியில் இருக்கும் ஒரு பெரியவர் அமர்ந்திருப்பதை பார்த்த மகதி எதிரே இருந்த நேம் பிளேட்டையும் கவனித்தாள். 'கிருபாகரன் எம்.டி எம் பி. ஏ!' என்று போடப் பட்டிருக்க மகதிக்கு மண்டை வெடித்தது .

ராகவன் வேறு, "இது தான் என்னோட மிஸ்ஸஸ்!" என்று
அவளை அறிமுகப் படுத்திவிட்டு பின்பு என்னென்னவோ குடும்ப விஷயங்களை எல்லாம் பேச ஆரம்பித்து விட, மகதி என்னடா இது என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த கிருபாகரனும் ராகவனிடம் மரியாதையாக பேசுவது தெரிய அவளுக்கு நேரம் செல்ல செல்ல பொறுமை குறைந்தது..சம்பந்தமே இல்லாமல் அந்த இடத்தில் இருப்பது போலவும் இருக்க பொறுமையை இழுத்துப் பிடித்து அமர்ந்திருந்தாள். எப்படியோ ராகவன் மற்றும் கிருபாகரனின் பேச்சு ஒரு முடிவுக்கு வர, அவர் மகதியிடம் கேட்டார்.

"ஹாய்மா... உன் வீட்டுக்காரர் எல்லாம் சொன்னாப்ல. நீ பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் தான முடிச்சி இருக்க? காலேஜ் படிக்கும் போதே intrern இல்ல வேற ஏதாவது ப்ரிவியஸ் வொர்க் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?" என்று கேட்க மகதி தயக்ககமாய், "இல்ல சார் நான் இப்ப தான் காலேஜ் முடிச்சேன்.. ஸோ fresher தான்!" என பெயருக்கு சொல்ல மனம் வேறு படபடவென்று அடித்துக் கொண்டது.

"நம்மகிட்டயும் நிறைய freshers வொர்க் பண்றாங்க ராகவன்... சோ நீ கவலைப்படாத!" என்று அவனிடம் கூறியவர், "உனக்கு கேம்பஸ்ல ஒர்க் கிடைச்சதுன்னு சொன்னாரேமா... அதுக்கு எவ்வளவு பேக்கேஜ் அலார்ட் பண்ணாங்க?" என்று விசாரிக்க, தற்பொழுது மகதியின் முகத்தில் தீவிரம் வந்து ஒட்டிக் கொண்டது.

"சார் த்ரீ பாய்ண்ட் 4 எல்...!" 'மூன்று லட்சத்தி நாற்பதாயிரம்!' என்றவள் சொன்னதைக் கேட்டு யோசித்த கிருபாகரன், "ராகவா உன் வொய்ஃப்க்கு கேம்பஸ் கிடைச்ச அளவுக்கு என்னால இங்க பேக்கேஜ் கொடுக்க முடியாதுப்பா. உனக்கே தெரியும், இது ஒரு ஸ்டார்ட் அப் தான்னு... அதனால ஸ்டார்டிங்ல இங்க 15000 தான் சம்பளம் கொடுக்க முடியும்... அப்பறம் போக போக மகதி டேலண்ட் அண்ட் ஒர்க்கிங் ஸ்டைல் பாத்துட்டு நான் பேக்கேஜ இன்க்ரீஸ் பண்ணி ஸ்டாப்பா மாத்திக்கிறேன். அதுவரைக்கும் அவங்க டேட்டா அனலிஸ்ட் ட்ரெய்னியா இங்க ஒர்க் பண்ணட்டும்... இதுல ஒன்னும் பிரச்சனை இல்லையே?" என்று கேட்க மகதியின் கண்கள் பெரிதாக விரிந்தது.

'வாட் நான் ஒர்க் பண்ண போறேனா?' என்றவள் நம்ப முடியாமல் ராகவனை பார்த்து, 'கண்களாலே இது நிஜம் தானா?' என்று வினவ அவனோ உறுதிக்கு கண்ணசைத்து, காரியத்திலும் கண்ணாக இருந்தான்.

"உனக்கு இந்த சேலரி ஓகேவா மகதி... பிகாஸ் உனக்கு கொடுத்த பேக்கேஜ்ல இங்க பாதி தான் இருக்கு!" என்று கேட்க மகதியோ அவசரமாய் சொன்னாள். "அதலாம் எனக்கு பிரச்சனை கிடையாது... நான் ஆறு மாசத்துல என் டேலண்ட்ட ப்ரூவ் பண்ணிட்டு பேக்கேஜ் ரைஸ் வாங்கிடுவேன்!" என்று உறுதியாக சொல்ல கிருபாகரனுக்கும் மகதியின் காண்பிடன்ட் ஸ்பிரிட் பிடித்து இருந்தது.

'பெரிய குடும்பத்துப் பெண் இத்தனை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வருவாளா?' என்றவர் யோசித்து இருந்தால்... அதை மகதி முற்றிலுமாக தகர்த்து இருந்தாள்.

ஒருமுறை கிருபாகரனின் குடும்பத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்திற்கு வீர ராகவன் தான் உதவி செய்து தீர்த்து வைத்தான். தற்பொழுது அந்த பழக்கத்தில் தான் தன்னுடைய மனைவிக்கு ஒரு வேலை என்று அவன் கேட்டிருக்க கிருபாகரனாலும் மறுக்க முடியவில்லை. காரணம் ராகவன் செய்த உதவி அந்த மாதிரி!

எனவே எதுவும் யோசிக்காமல், "நீ உன்னோட வைஃபை கூட்டிட்டு வாப்பா... பேசிக்கலாம்!" என்று சொல்லி விட்டார். அவனும் அழைத்து வந்து மனைவியின் கனவை உறுதிப்படுத்தி இருக்க மகதிக்கு காற்றில் பறக்காத குறை தான்.

"மகதி உன்னோட காலேஜ் சர்டிபிகேட்ஸ், அப்பறம் பான் கார்டு டீடைல்ஸ்... இதையெல்லாம் நாளைக்கு வந்து ஆபிஸ்ல கொடுத்துடும்மா... நீ நெக்ஸ்ட் மண்டேல இருந்து வொர்க்ல ஜாயின் பண்ணிக்கலாம்!" என்று கிருபாகரன் கூற மகதி வேகமாய் தலையசைத்தாள்.

"கண்டிப்பா சார் தேங்க்யூ சோ மச்!" என்று வெளியே கூறினாலும் ஒரு இன்டர்வியூ கூட வைக்காமல் டைரக்டாக வேலைக்கு எடுத்துக் கொண்டிருப்பதும் சிறிது நெருடியது. ராகவனும் மனைவியின் மகிழ்ச்சியில் மனம் குளிர்ந்து, "ரொம்ப தேங்க்ஸ் சார்!" என்று கூற கிருபாகரன் மறுத்தார்.

"ஐயோ நீ என்னப்பா பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு நீ பண்ண உதவிய விடயா நான் பெருசா பண்ணிட்டேன்?" என்று கேட்க ராகவனும் சிரித்தபடி, "கண்டிப்பா மகதி இந்த ஆப்பர்சுனிட்டிய பெஸ்ட்டா யூஸ் பண்ணிப்பா சார். யூ வில் ஸீ இட்!" நம்பிக்கையோடு சொல்லி, மனைவி மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டான் ரவுடி ராகவன்.

பின்பு அவர்கள் விடை பெற்றுக் கொண்டு கிளம்ப, மகதியோ இறக்கை முளைக்காத குறையாய் கிட்டத்தட்ட மனதால் பறந்த படி ராகவனோடு வந்து கொண்டிருந்தாள்.

காரில் ஏறும் வரை அமைதியாக இருந்தவள், ஏறி அமர்ந்த அடுத்த நிமிடம் அவனை தாவி அணைத்துக் கொண்டு, "என் வாழ்க்கையோட ஒரு பெஸ்ட் சர்ப்ரைஸ் இது.... தேங்க்யூ சோ மச்!" என்று உணர்ச்சிகளால் ஆர்ப்பரிக்க, ராகவனின் முகத்திலும் புன்னகை பிறந்திருந்தது.

"பிடிச்சிருக்கு தானே?" என்றவன் கேட்க மகதியோ அவனைப் பிரிந்து, "ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!" என்றாள் முகம் கொள்ளா சிரிப்போடு.

உடனே ராகவன் வம்பாய், "ஓ என்னை விட பிடிச்சிருக்கா?" என்று கேட்க, "உங்கள இதைவிட பிடிச்சிருக்கு... நீங்கதான் ஃபர்ஸ்ட் அப்பறம் தான் இதெல்லாம்!" என்று அவனுக்கும் ஐஸ் கட்டியை தூக்கி தலையில் வைத்து விட ரவுடி தொப்புக்கடி என்று கீழே விழுந்து விட்டான். இருப்பினும் அவள் என்னவோ யோசித்து,

"நீங்க முன்னாடியே சொல்லி இருந்தா நான் சர்டிபிகேட்ஸ் எடுத்துட்டு வந்திருப்பேன்ல இப்ப பாருங்க வெறும் கையை வீசிட்டு வந்திருக்கேன்... கொஞ்சம் கூட ப்ரொபஷனலாவே இல்ல!" என்றவள் குறைப்பட அவனும் வண்டியை எடுத்தபடி,

"வேலையில ஜாயின் பண்ணதுக்கப்புறம் ப்ரொபஷனலா இரு.. அண்ட் கேட்கணும்னு நினைச்சேன் நிஜமாவே உனக்கு 15,000 சம்பளம் போதுமா?" என்றவன் கேட்க அவளோ சீரியஸாக சொன்னாள்.


"இப்போ எல்லாம் வேலை கிடைக்கிறதே கஷ்டமா இருக்குங்க... சோ ஒரு ஒர்க்ல ஜாயின் பண்ணிட்டு எக்ஸ்பீரியன்ஸ் earn பண்ணதுக்கப்புறம் தான், நாம நினைக்கிற சம்பளம் எல்லாம் ஈஸியா கிடைக்கும்!" என்று சொல்ல அவனும், "ஆனா உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம தான நார்த்ல 30000 சம்பளம் கொடுக்குறேன்னு சொன்னாங்க?" என்றான் விடாமல்.

"ரைட்டு தான். ஆனா அதுக்காக இங்கிருந்து டோட்டலா அங்க டிரான்ஸ்பர் ஆகணுமே! ஆகாமடேஷன் ஃபுட்டு, டிராவல் எக்ஸ்பென்ஸன்னு எக்கச்சக்கமான செலவு இருக்கு இல்லையா? சோ அத எல்லாம் கால்குலேட் பண்ணி பார்த்தா, 30,000 கரெக்ட்னு தோணும்... ஆனா இங்க அப்படி இல்லைல. சென்னை மாதிரியான ஊரா இருந்தா கூட இன்னும் அடிச்சு 20 25-வது பேசி இருக்கலாம் நம்ம ஊருக்கு இதுவே அதிகம்ங்க!" என்று கூற ராகவன் யோசித்தபடி,

"உனக்கு ஓகேன்னா, ரைட்டு மகதி. அண்ட் இன்னொரு விஷயம், வேலைக்கு அரேஞ்ச் பண்ணிட்டு என்னடா இப்படி சொல்றான்னு நினைக்காத. நீ வேலைக்கு போனாலும் வீட்ல ஒரு சில விஷயத்துல உன் உரிமைய விட்டுக் கொடுத்துற கூடாது புரியுதா? முக்கியமா உன் அக்காவை ஆட விட்டு வேடிக்கை பார்க்க கூடாது!" என சொல்ல அவளோ பாவமாய் கேட்டாள்.

"நீங்க ஏன் அக்காவ தப்பா புரிஞ்சுக்கிறீங்க? அவ என்ன விட வீட்டை மேனேஜ் பண்றதுல சமத்து தெரியுமா? என்ன விட நல்லா சமைப்பா வீட்ல இருக்குறவங்களுக்கு என்ன வேணும்னு பார்த்து பார்த்து செய்வா... எல்லாத்துக்கும் சரியா பிளான் பண்ணுவா!" என்று தர்ஷினியை பற்றி மகதி பெருமையாய் பேச ஆரம்பிக்க ராகவன் அவளை முறைத்து, "இதைதான் பண்ணாதன்னு சொல்றேன் உன் அக்காவும் அந்த வீட்டுக்கு ஒரு மருமக தான்.. அவளுக்கும் அங்க உரிமை இருக்கு. பட் அதுக்காக உன்னோட உரிமையையும் சேர்த்து அவளே எடுத்துக்க கூடாது... உனக்கு என்ன வந்து சேரணுமோ அது அவளுக்கு போகக்கூடாதுன்றது என்னோட விருப்பம். அத புரிஞ்சு நீ நடந்துக்கணும்... இதுல என்னோட மரியாதையும் தான் அடங்கி இருக்கு மகதி!" என்றவன் ஒரு இக்கு வைக்க மகதிக்கு ஜெர்க் ஆனது. 'என்ன இப்படி எல்லாம் சொல்றாரு ஒருவேள தர்ஷினி மாதிரி நம்மளையும் சமைக்க சொல்லிடுவாரோ?' என்று பீதியாய் பார்க்க அவன் அதை கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

"தென் என்னோட அம்மா... அவங்க கிட்டயும் நீ குனிஞ்சு குனிஞ்சு போய் கொட்டு வாங்குறது எனக்கு பிடிக்கல... நான் இருந்தாலும் இல்லைன்னாலும் எனக்கு கிடைக்குற மரியாதை உனக்கும் கிடைக்கணும்டி. அதுவும் உன்னோட கையில தான் இருக்கு... நீ எப்படி நடந்துகுறியோ அப்படித்தான் எங்கம்மா உன்னை ட்ரீட் பண்ணுவாங்க... ஒவ்வொரு தடவையும் என்னால வந்து உன்னை காப்பாத்திட்டு இருக்க முடியாது... உனக்கு வாய் இருக்குல்ல?" என்று கேட்க மகதியின் தலை தானாய் ஆடியது.

"சோ இனிமேல் உன்ன அவங்க இன்சல்ட் பண்ற மாதிரி ஏதாவது பண்ணா நீயும் திருப்பி குடுக்கணும்!" என்று சொல்ல மகுதி தன்னையும் அறியாமல் கேட்டு விட்டாள். "ஆமா நீங்க எதுக்காக உங்க அம்மா மேல இவ்வளவு கோவப்படுறீங்க?"

"கோபப்படுறேனா?" என்று ராகவன் புருவம் உயர்த்த, "இல்ல எல்லா வீட்டுலயும் பசங்க பொண்டாட்டியா இல்ல அம்மாவான்னு வந்தா அம்மாவுக்கு தான் முதல் உரிமை கொடுப்பாங்க... ஆனா நீங்க என்னடான்னா!" என்றவள் முடிக்காமல் நிறுத்த ராகவன் தெளிவாய் சொன்னான். "எங்க அம்மா மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு மகதி... அவங்க இல்லைனா நான் இந்த உலகத்துக்கே வந்திருக்க முடியாது... பட் அதுக்காக ஒருத்தவங்க நம்ம குடுக்குற மரியாதைய மிஸ் யூஸ் பண்ண கூடாதுல? அது அம்மாவா இருந்தாலும் சரி.. நீயா இருந்தாலும் சரி! நீ மத்தவங்க கிட்ட ஹார்சா நடந்துகிட்டா நான் உன்னையும் திட்ட தான் செய்வேன்!" என்று கூற, 'அது சரி ரவுடி தெளிவா தான் யோசிக்கிறாரு!' என்று மகதி நினைத்துக் கொள்ள ராகவன் அவள் தோள் தட்டி,

"ஆமா உங்க வீட்டுக்கு இந்த ரூட்லதான போகணும்?" என்று கேட்க மஹதியின் முகம் மாறியது. "எங்க வீட்டுக்கா எதுக்கு?" என்றாள் அவசரமாய். இப்பொழுது வரை மறு வீடு கூட அவர்கள் செல்லவில்லை அப்படி இருக்கும் பொழுது திடீரென்று பிறந்த வீடு என்றதும் மகதியின் முகமே மாறிப்போனது. அதிலும் அன்று பிரச்சனையாகி திருமணம் முடிந்த பின்பு சிவமுத்து மகளிடம் கூட ஒரு வார்த்தை பேசவில்லை. லலிதா கூட அடிக்கடி போன் பண்ணி பேசினார். ஆனால் அவர் மீதும் மகதிக்கு செம்ம கோபம். 'அம்மா என்ன பண்ணுவாங்க அவங்க எப்பவும் இப்படி தான?' என்று மனம் லலிதாவுக்காக பேசினாலும், அட்லீஸ்ட் தனக்கு ஆறுதலாகவாவது ஏதாவது செய்திருக்கலாம் என்று பிடிவாதமாய் நினைத்துக் கொள்ள ராகவன் கூலாக சொன்னான்.
 
Top