எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நதியறியா பயணமிது. கதை திரி

Status
Not open for further replies.

Balatharsha

Moderator
அத்தியாயம் 01.
நான் அறியா உறவு தான்
என்னை பார்த்திடத் துடிக்கின்றது
வண்ண கோலம் பூண்டு.
எனக்கே உரிய உலகம்
உன் மடி என்ற
என் ஆசையை எவ்வாறு
நான் உரைக்க உன்னிடம்.


இரண்டாயிரம் பேர்களை உள்ளடக்க கூடிய பெரிய திருமண மண்டபம் அன்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
சிறுவர்கள் ஒரு புறம் மகிழ்ச்சியில் தங்களுக்கு தெரிந்த விளையாட்டுகள் அனைத்தையும் இன்றே விளையாடி தீர்த்துவிட வேண்டுமென முடிவோடு இருந்தவர்கள் போன்று கத்தி ஆரவாரித்து திருமண மண்டபத்தினை இரண்டாக்கிக் கொண்டிருந்தனர்.
இளம் பெண்கள் ஒரு புறம், தம்மால் முடிந்த அளவு தம்மை அலங்காரித்தவர்கள் அங்கு வரும் ஆடவர்களை தங்கள் அழகால் மயக்கி கொண்டிருந்தனர்.
திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்கும் முகமாக அந்த மண்டபத்தில் பணி புரியும் பெண்களாே புன்னகையுடனே வந்தவர்களுக்கு பழச்சாறு வழங்கிக் கொண்டிருந்தனர்.
திருமண மண்டபமோ விழா கோலம் பூண்டிருந்தது.
மணப்பெண் அறையில்
மணப்பெண் பானுவை அலங்கரித்தபடி கதை அளந்து கொண்டிருந்தாள் அவள் உயிர் தோழியும், சகோதரியுமான மேகலா.
"ஏய் பானு! நீ சும்மாவே அவ்ளோ அழகாய் இருப்ப, இன்னைக்கு தேவலோக பெண் ஆட்டம் ஜொழிக்கிறடி?.
உன்னை பாத்தா மாப்பிள்ளை பாடுதான் திண்டாட்டமா இருக்க போகுது.
இந்த சாறி வேற உனக்காகவே நெஞ்சது போல உன் கலருக்கு எடுப்ப இருக்கு. இத விட முகூர்த்த சாறி இன்னும் அழகா இருக்கும்."
என்று அவள் கூறிக்கொண்டே போகவும்
பானுவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
அவளோ இன்று தனக்கு திருமணம் என்ற ஒரு உணர்வே இல்லாது எதையோ வெறித்தபடி கண்கலங்கயவாறு இருக்க.
அவள் பின்னால் நின்று தலை அலங்காரம் செய்து கொண்டிருந்த மேகலா கண்ணாடி வழியே அவள் கலங்குவதைப் கண்டு,
"என்னதான்டி உனக்கு பிரச்சினை?.. எதுக்கு ஒரு மாதிரியாவே இருக்க?.
எத்தனை தடவை தான் உனக்கு சொல்லுறது.
யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் இப்பிடி ஒரு வாழ்க்கை கிடைச்சுடாதுடி!.
அம்மாவும் அப்பாவும் எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க தெரியுமா?...
அவங்க ஒரே பொண்ணோட வாழ்க்கை எப்பிடி அமையுமோன்னு எத்தனை தடவ வருதப்பட்டு என்கிட்ட சொல்லி அழுதிருப்பாங்க.
பையனும் செம்ம அழகு. ஊரிலையே பணத்துக்கு பஞ்சமில்லாத குடும்பம்.
இந்த காலத்தில கணவன் எப்படி அமையும் என்கிறதை பயத்தை விட, மாமியார் எப்படி அமையானவாங்களோன்ன பயந்தான் இந்த கால பெண்களுக்கு அதிகமே!.
ஆனா உனக்கு அந்த கவலையே தேவை இல்லைடி.
அவ்வளவு நல்லவங்க உன் மாமியார்."
"எங்க நிலமை தெரிஞ்சும் உன்னை பிடிச்சு போய் தானேடி உன்னை பொண்ணு கேட்டாங்க. அப்புறம் என்ன உனக்கு?..
அது எல்லாம் விடு!.. அவனை உனக்கு பிடிக்கல்லை எண்டதுக்கு ஒரே ஒரு காரணம் சொல்லு எதுவும் வேனாம்னு நிறுத்திடுவேம்" என்றவள்.
"என்ன மாப்பிள்ளைக்கு சிரிக்க மட்டும் தான் தெரியாது. அது கூட அவனுக்கு அழகாத்தான் இருக்கு.
உண்மைய சொல்ல போன, நீ மட்டும் அவனை வேண்டாம்னு சொல்லி இருந்தன்னா நானே அவனை கட்டியிருப்பேன்." என அவள் மனதை கடசி நிமிடத்திலாவது மாற்றிவிடலாம் என கூற.
உடனே பானு அவள் முகம் நோக்கி "நிஜமாத்தான் சொல்றியா மேகலா?....
அப்போ நீயே கட்டிக்கோ!" என்று வெடுக்கென பானு சொன்னதும்,
"ஏய் என்னடி?.. நான் சும்மா உன் மனச மாத்துறத்துக்காக சொன்னேன். என் தலையில அவனை கட்டிவிட பாக்குறியா?" என்று கேலியாக தொடங்கியவள்,
"பானு....! இங்க பாரேன்." என்று அவள் முகத்தை தன் புறம் திருப்பியவள்,
"இது விளையாட்டு இல்லடி. வாழ்க்கை...! புரிஞ்சுககோ!....
நாம பட்ட கஷ்டம் எங்களோட போகட்டும். நீயாவது நல்லா இருக்கணும்டி!.
இத்தனை வருசத்தில அம்மாவும் அப்பாவும் இவ்வளவு சந்தோஷம இருந்து நான் பாத்ததே இல்லை தெரியுமா?...
நீ கல்யாணத்தில இஷ்டமில்லன்னு சொன்னதும் எவ்வளவு உடைஞ்சு போயிட்டாங்க தெரியுமா?...
அதோட நீயும் இந்த பேச்சு தொடங்கின நாள்ல இருந்து அவங்க கூட சரியா பேசாமல் அவங்களை ரொம்ப கஷ்டபடுதிறியேடி.
அவங்களையும் சமாதாணப்படுத்தி, உன்னையும் அவங்க ஆசைக்கு சம்பதிக்க வைக்கிறதுக்குள்ள என் உயிரே போச்சு தெரியுமா?....
எல்லாம் முடிஞ்சு இவ்ளோ தூரம் வந்திட்டோம். அப்பிடினு நிம்மதியா இருந்தா, திரும்ப ஆரம்பிச்ச இடத்திலையே வந்து நின்னா என்னடி நான் பண்ணுவேன்?" என்று மேகலா சோர்ந்து போய் பேச.
எதையோ தீவிரமாக சிந்தித்த சின்னவளோ சட்டென தாவி அவளை அணைத்து கதறினாள்.
அவள் அழுததும் தங்களை பிரிவதை எண்ணித்தான் அழுகிறாள் என உணர்ந்த மேகலை,
அவள் முதுகினை ஆறுதலாக வருடி விட்டவாறே,
"என்னோட நல்ல தோழி என்கிறத விட என் பொண்ணுடி நீ..!.
எனக்கும் உன்னை பிரியிறது கவலை தான். ஆனா அதை விட என் பொண்ணுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமையப்போகுது என்கிற சந்தோஷமே அந்த சோகத்தை காணாம செய்திடிச்சு." என்றவள்"
"இப்போ என்ன?... எங்களை பிரியிறத நினைச்சுத்தானே அழுவுற? எப்போ உனக்கு எங்களை பாக்கணும்னு தோணினாலும் உன் முன்னாடி நாங்க இருப்போம்." என அவளுக்கு ஆறுதல் சொல்வதை போல் தனக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டாள் மேகலா.
உண்மையில் இருவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளில்லை. அவர்களின் முதல் சந்திப்பே பல உயிர்களின் தியாகத்திலும்,
பல விழிகளின் கண்ணிரிலும், பல உடல்களின் குருதியுடலிலும், பல இறப்புகளின் ஓலங்களில் நிகழ்ந்தது தான்.
சங்கமிப்பாள்........
 

Balatharsha

Moderator
அத்தியாயம் 02
உலகிலே மிக சிறந்த
தத்துவம்
வாழ்க்கை ஒரு போர்க்களம்.
துணிந்து நிற்பவனே
போரில் வெற்றி காண்பானாம்!.....
நல்ல வேடிக்கை தான்......
தவளவே அறியாத குழந்தையை
தலமை தாங்க அழைப்பது.
எழ கற்று காெடுக்கும் முன்
எதிர்த்து நில் என்றால்?..........
தலைக்கணம் பிடித்த
தலைவிதியை யார் தட்டி கேட்பது.?........


ஆம்.. மேகலா என்னும் மணிமேகலை யாழ்ப்பாணத்தில் பிறந்தவள்.
அன்று மழை வெழுத்து வாங்கிக் கொண்டிருந்தது.
இரவு ஒன்பது மணியளவில் பெண்ணின் அழுகுரல் அந்த மழையின் சத்தத்தையும் கிழித்துக்கொண்டு ஒலித்தது.

வேலைக்கு சென்ற சுந்தரம் மழையில் அகப்பட்டதால் வழமையாக ஏழுமணியளவில் வீடு வந்து விடுபவன், மழை நிற்கும் என பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு, இது சற்சமயம் நிற்காது, வீட்டில் மனைவி வேறு தனியாக இருப்பாள். என நினைத்து மழையில் நனைந்த படி ஒன்பது மணியளவிலே வீடு வந்தான்.

வந்தவன் தனது வீட்டினுள் அழுகுரல் கேட்கவும் அது தனது மனைவி காந்தியுடையது என உணர்ந்து
எதற்காக அழுகிறாள் என்பது புரிபட,
சைக்கிளை கீழே போட்டு விட்டு உள்ளே சென்றான்.

அவளாே பிரசவ வலியில் வீட்டு தூணில் சாய்ந்திருந்தவாறு வலி தாங்காது அழுவதை கண்டவன்,
உடனே அருகில் இருக்கும் அரச மருத்துவ மனைக்கு மழை என்றும் பாராது கையிலேயே தூக்கி சென்று சேர்தவன்
அந்த பிரசவ அறையையே சுற்றி சுற்றி வந்தான்.

சிறுது நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் நிம்மதி அடைந்தவன்,
அருகில் போடப்பட்ட பெஞ்சில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

அவ்வளவு பிரியம் அவன் மனைவி மீது.
இருவரது திருமணமும் காதல் திருமணமாகையால் குடும்பத்தை எதிர்த்து யாழ்ப்பாணம் வந்து தனித்து இருவருமே மனமொத்த தம்பதிகளாக நிறையான வாழ்க்கை வாழ்ந்துவருகின்றனர்.
இன்றாே அந்த பாசத்தை பங்குபோட இன்னொரு ஜீவன் தங்களுக்குள் வந்ததை நினைத்தவன் மனமோ இறக்கை கட்டி வானில் பறந்தது.

எப்போதடா தனது குழந்தையை பார்க்க அனுமதிப்பார்கள் என்ற ஆவலில் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த செவிலிய பெண் "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு,
உள்ள போயி பாருங்கோ!..
ஆனால் குழந்தையோட அம்மாவ தொந்தரவு செய்ய வேண்டாம்.. அவங்க ரொம்ப பலவீனமாக இருக்கிறாங்க." என்க.

"சரி நேர்ஸ் அம்மா." என்றவன், மனைவி இருந்த அறை நோக்கி நடந்தான்.

கசங்கிய காகிதமாக கிடந்த தன் மனைவியை கண்டவன் நெஞ்சமோ ரணமாக வலிக்க.
அவள் நெற்றியில் முத்தமிட்டவன், அவள் அருகில் ரோஜாப்பூ குவியலாய் கிடந்த அவன் மகளாே தனது பிஞ்சுப் பாதங்களை காற்றில் உதைந்து விளையாடி, தனது குட்டிக்கண்களை உறுட்டி தந்தைய கண்டு பொக்கை வாயை விரித்து சிரித்தது.

அந்த அழகுக்பெட்டகத்தையே இமைக்காது ரசித்திருந்தவன், இவள் என் தேவதை மனதிலோ பரவசம் தோன்ற, மறுநொடியே தனது கைகளில் ஏந்தி அதன் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
அவன் மீசை பட்ட இடம் அந்த பூக்குவியலுக்கு வலித்திருக்கும் போல. உடனே அழத்துவங்கியது.

அதுவரை எதுவும் அறியாது மூர்ச்சையாகியிருந்தவளோ குழந்தையின் அழுகுரலினில் தான் கண்விழித்தாள்.
கணவன் கையில் இருந்த குழந்தையை கண்டதும் வலி மறந்து புன்னகைத்தவாறே குழந்தையை தனக்கும் காட்டும்படி கண்களால் ஜாடை செய்ய.

குனிந்து குழந்தையை காட்டியவன் அவளின் சந்தோசத்தையும் பார்த்து கண்கசிந்தவனாக,
"நம்மளோட ஒரே சொந்தம் காந்தி!.
நம்ம ரத்தம்." என உணர்சிபொங்க கூறி மீண்டும் முத்தம் வைத்தவன் அதிர்ந்தான்.

ஏனெனில் அவள் உடல் அனலாக கொதித்தது.
உடனே அவள் நெற்றியில் கைவைத்து ஆராய்ந்தவன்.
குழந்தையை அவள் அருகில் கிடத்திவிட்டு விட்டு வைத்தியரிடம் ஓடிவந்தவன்,
தன் மனைவியில் உடல் அனலாக கொதிக்குது என்னவென்டு பாருங்காே." என வைத்தியரிடம் கூற.

வைத்தியரும் இதை எதிர்பார்திருந்தார் போல. உடனே அவளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

மழை நேரம் ஆகையால் அவள் உடல் ஜன்னி கண்டது.
எவ்வளவு முயற்சி எடுத்தும்
வைத்தியர்களால் அவளை காப்பாற்ற முடியவில்லை.
குழந்தை பிறந்த மூன்றே நாளில் அவள் இறந்து விட,
அவன் தான் அந்த பிஞ்சுடன் செய்வதறியாத திணறிப்போனான்.

ஒருபுறம் தான் உயிராய் நேசித்த மனைவியின் இறப்பு.
மறுபுறம் பிறந்த நாலிலிருந்து தாய் பால் என்பதையே அறியாது பசியால் அழும் குழந்தை.
எதை நினைத்து அவனும் வேதனை படமுடியும்?..

மனைவிக்கு செய்ய வேண்டிய இறுதிக்காரியம் அனைத்தும் செய்தவன், இங்கேயே இருந்தால் மனைவியின் பிரிவு தாங்கமல் தனக்கும் ஏதாவது நேர்ந்து, தனது குழந்தையும் அனாதை அகிவிடும் என பயந்தவனாய் தன் பிறந்த இடமான வவுனியா சென்றான்.

குழந்தையுடன் மகன் வவுனியா வந்ததையும், அவன் மனைவி பிரசவத்தில் இறந்ததையும் கேள்வி பட்ட அவனது உறவான தாயும், தங்கையும் அவன் மேல் இருந்த கோபத்தை விட்டு அவனை பார்க வந்தனர்.

அவன் நிலைமையை கண்ட தாய் உள்ளம் பதை பதைக்க
"என்னடா கோலம் இது?" என வருந்தினர்.

ஆம் அப்படித்தான் அவன் இருந்தான்.
சவரம் செய்யபடாத முகம். சோகத்தை தாங்காது உலகையே வெறுத்த தோற்றம் என அவனை பார்க முடியாமல் கண்ணீர் விட்டவர் அவனை ஆறுதல் படுத்தினார்.

அவன் தங்கையோ அவன் குழந்தையை வாரி அணைதனதவள்,
"இனி இது என்னோட பொண்ணுண்ணா. இவளை நானே வளர்த்து்கிறேன். நீ இவளை பற்றியே கவலை படாத!" என்க.

அவன் இருந்த நிலையில் சரி என சம்மதித்தவன் "ஆனா நான் எங்கயும் வரமாட்டேன்.
எனக்கு இப்போ தனிமை வேணும். அதனால இங்கேயே இருந்துக்குறேன். குழந்தையை எப்ப பாக்கணும்னு தோணுதோ அப்போ வந்து பாத்துக்கிறேன். அதுவரைக்கும் என்னை தொந்தரவு செய்யாதீங்க." என கூற.

வேறு வழி இல்லாது அவன் சொன்னது போலவே அவனை தொந்தரவு செய்யாமல் குழந்தையுடன் கிளம்பினார்கள்.

ஒவ்வொரு நாளும் அவன் தனது குழந்தையை சென்று பார்பான். அதற்கு தேவையானது அனைத்தும் செய்வான். ஆனால் அவன் மனைவி நினைவில் இருந்து கொஞ்சமும் அவனால் வெளிவர முடியவில்லை.

அவன் தங்கையே அவளுக்கு மணிமேகலை என பெயர் சூட்டி தன் மகள் போல் வளர்த்தாள்.
நாட்க்கள் வருடங்களாக உருண்டோடியது.

நான்கு வருடங்கள் கடந்த நிலையில் அவன் தங்கைக்கு திருமணம் பொருந்தி வரவே, மணிமேகலையால் அவள் திருமணங்கள் தடை படுவதை உணர்ந்த சுந்தரம் எல்லோடிடமும் மன்னிப்பு வேண்டியவன்,
இதுவரை இவளை கவனித்தவரை போதும். இனியாவது உன் வாழ்க்கைய வாழ்ந்துக்க. இவளை நானே வளத்துக்கிறேன்" என கூறி
குழந்தையை வாங்கியவன்,
குழந்தையுடன் கிளிநொச்சி சென்று அங்கு விடுதலை புலிகளின் இயக்கத்தால் நடத்த பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நான்கு வயதே நிறம்பிய பச்சிளம் குழந்தையை சேர்த்தான்.

ஆம்........ அங்கு சிறுவர்களை சேர்த்தால் அவளுக்கென்று இனி யாரும் இல்லை என அர்த்தம்.
இனி எச்சந்தர்ப்பத்திலும் உறவுகள் இருந்தாலும் அவர்களை பார்க வர முடியாது.
ஆனால் பெற்றவர்கள், சொந்தங்களை விட மிக சிறப்பாக குழந்தைகளை எவ்வித குறையுமின்றி வளர்ப்பார்கள்.

அத்தையை பிரிந்து வந்ததும், புதிய இடம் பதிய முகங்கள் என எல்லாவற்றையும் பார்த்து பயந்த குழந்தை விடாது அழுதது.
அந்த ஆசரமத்தில் முன்னூறுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
அதிகமானவர்கள் போரில் உயிர நீத்த மாவீரர்களின் பிள்ளைகளே!.
மேகலாவை ஆறு வயது பிரிவில் கொண்டு சென்று விட்ட மேற்பார்வையாளர் பெண்மணி, "இங்கே இரு". என அவள் அழ அழ விட்டு சென்றாள்.

சங்கமிப்பாள்........
 

Balatharsha

Moderator
அத்தியாயம்03.
வாழ்க்கையின் பிடிப்பினையே
எவர் எம்மை நேசிக்கிறார்கள்
என்பதிலும், அவருக்காக
வாழ்வதிலும் அடங்குகிறது.
என் வாழ்வில் இறைவன்
எனக்களித்த பெரும் வரம்
என்னை நேசிக்க வைத்து
என்னுடன் குருதியை பாகிரா தொப்பிள் கொடி அறுக்கா
என் அன்னையவள்
என் அக்காள்.



கதறக்கதற விட்டு சென்ற பெண்மணி போன திசையையே பார்த்தவாறே அழுதுகொண்டிருந்த அந்த ஆறு வயதுக்கு உற்பட்ட சிறுவர்களாே
அவளாகவே அழுகையை நிறுத்துவாள். என நினைத்து தங்கள் பாட புத்தகத்திலும், பேச்சிலும், விளையாட்டிலும் கவனமாக இருந்தார்கள்.
ஆம்!.. அங்கு புதிதாக சேர்ந்துகொள்ளும் சிறுவர்கள் அப்படித்தான். முதலில் அழுவதும், சிறிது நேரம் கடந்ததும் தாமாகவே அழுகையை நிறுத்தி விட்டு மற்றைய சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட தொடங்கிவிடுவது வழக்கமான ஒன்றாகிய படியினால் அவளை யாரும் பெரிது படுத்தவில்லை.

சாதரணமாக மேகலா யாருடனும் ஒட்டாதவள்.
ஊரில் இருக்கும் போது கூட அத்தையை தவிர அவள் எவருடனும் சேரமாட்டாள்.
இங்கு தன்னை அழைத்து வந்த தந்தையோ இதுவரை அவள் அறியாத ஒரு இடத்தில் விட்டு விட்டு சென்றதும்.
அனைத்து முகங்களும் புதிதாக இருப்பதனால் அவள் பயம் இன்னும் அதிகரித்து அழுகையும் அதனுடன் சேர்ந்து கொண்டது.

ஆற்றுவோர் தேற்றுவோர் இன்றி அவள் அழுது கொண்டிருப்பதை பார்த்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த கயல்வழியோ,

"இவ இப்போதைக்கு அழுகையை நிப்பாட்ட மாட்டா. இருங்கோடி வரேன்." என்று அவள் ஒத்த வயதுடையவர்களுக்கு சொல்லி விட்டு.
அவள் அருகில் வந்தவள்.
"இங்க பாருங்கோ குட்டி!.. ஏன் அழுகுறீங்கள்?.
அழகூடாது சரியா?." என ஆறுதல் கூறியவள் பேச்சை கேட்காமல் சின்னவள் அழுகையினை அதிகரிக்க.

"குட்டி இங்க அக்காவ பாருங்கோ. என தாடையை உயர்த்தியவள்," இங்க பாருங்கோவன்." என்று அவள் கையை பிடித்து தன்னை பார்க்கும் படி நிறுத்தி,
" இங்க எத்தின பேரு இருக்கினம் பாருங்கோ!.. அழுகையை நிப்பாட்டிட்டு
வாங்கோ நாங்களும் அவயோட போய் விளையாடுவம்.."
என்று அவள் கண்களை துடைத்து விட்டவள்.

"உங்கட பேரு என்ன செல்லம்?." என்று ஆசையாக அந்த சின்னவளை பிடித்துப்போய் கயல்விழி கேட்பதை காதிலே வாங்காது
அவள் அழுவதிலே குறியாக இருக்க.
"இங்கே! நீங்கள் அழாமல் அக்காவோட கதைக்க மாட்டிங்களே?.
அப்ப சரி. அப்படி என்டா நானும் உங்களோட கதைகேல. நீங்கள் அழுதா நானும் அழுவன்." என்றவள்,

"ஆ..........ஆ...........ஆ...."
என தனது கைகளிரண்டினாலும் கண்ணை கசக்கிய படி அழுவது போல் பாசாங்கு செய்யவும்.
மேகலை அவள் அழுவதை பார்த்து முதலில் அழுகையை கூட்டியவள்.
பிறகு தனது அழுகையை நிறுத்தி விட்டு தன் முன் அழுது கொண்டிருக்கும் தமக்கையை பார்த்தாள்.

இவள் அழுகையை நிறுத்தியதும் முகத்தை மூடி அழுவதுபோல் நடித்தவள் விரல் இடுக்குகளால் சின்னவளை பார்க்க,
அவள் அருகில் வந்த மேகலா
"அக்கா! அக்கா!.." என அழைத்தவள். "அழவேண்டாம் அக்கா!. நானும் அழேல." என தனக்கு தெரிந்த மழலை தமிழால் கூறினாள்.

அவள் அவ்வாறு சொன்னதும்
"ஐ..! குட்டி பிள்ளை, அச்சா பிள்ளை." என்று அவளை தூக்கியவள், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த கட்டிலில் அவளை இருத்தி, தானும் பக்கத்தில் அமர்ந்து.

"குட்டி!.. இப்ப சொல்லுங்கோ அக்காவுக்கு.
உங்கட பேரென்ன?" என பெரிய மனுஷி தோரணையுடன் கேட்க..
மேகலாவோ தனக்கு தெரிந்தாற்போல் தனது பெயரை "மதிமேதல" என்க.
"ஐய்யோ! என்ன வடிவான பேர் அக்கா குட்டிக்கு!" என்று ஆர்ச்சரியம் காட்டியவள், "அக்கா புள்ளைய இனிமேல் மேகலா என்டு தான் கூப்புடுவன் சரியா?." என்க
சின்னவளுக்கு என்ன புரிந்ததோ என்னமோ சரி என்று தலையை ஆட்டியது.

"சரி மேகலா. இனி நீங்களும் அக்காவோடயே இந்த கட்டில்லயே படுக்கோணும். நானும் மேகலாவோடயே படுத்துக்கிறன்." என்றவள்
"வாங்கோ இப்ப போய் விளையாடுவம்." என்று தனது கூட்டாளிகளுடன் அவளையும் அறிமுக படுத்தி சேர்த்து கொண்டவள் தான், மேகலாவை சிறிதும் விட்டு அகலவில்லை.
ஆம் அங்கு இருக்கும் குழந்தைகள் அப்படி இல்லை என்றால் தான் அதிசயம்.
ஏன் என்றால் ஆறு வயது வந்தாலே தங்களது வேலைகளை தாங்கள் தான் கவனித்து கொள்ள வேண்டும்.

சாதரணமாகவே பெண் பிள்ளைகளுக்கு தாய்மை உணர்வு தானாகவே வந்து விடும். இங்கு வளர்க்கும் விதமே அவர்களை செம்மையாக்க கூடியது.
இரக்க குணம் இயற்க்கையாகவே ஒட்டி கொள்ளும்.
தன்னை விட இரண்டு வயது சிறியவளுக்கு அவளே தாயாகினாள்.

அவளின் உடைகளை துவைப்பதிலிருந்து, அவளுக்கு சாப்பாடு ஊட்டுவது. படிப்பு சொல்லி தருவது என அனைத்துமே அவளாகி போனாள்.
ஆறு வயதில் தாய்மை நிறைவை பெற வேண்டும் என்றால், அது அங்கு வளர்க்கப்படும் பெண் குழந்தைகளால் மாத்திரமே சாத்தியம்.

அதற்கு காரணம் என்னவென்றால் அங்கு விதிக்கும் கட்டுபாடுகளும், நிபர்ந்தனைகளும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது தான் காரணமே!.
காலையில் யோக பயிட்சி. சாப்பிடும் முன்பு இறை தியாணம். இடை நேரத்தில் சாதரண போர் பயிட்ச்சி.
அது தற்பாதுகாப்புகலை போல் சொல்லித்தருவார்கள்.
அதுவும் விடுதலை புலிகளின் படை வீரர்களால்.
தூங்கும்போது பெண் விடுதி என்பதால் இரவு உடை மாத்திரம் அணிய வேண்டும். வேறு எந்த உடைக்கும் அனுமதி கிடையாது.
கட்டாயம் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.
கோப தாபங்களை வைத்துக்கொண்டு சாப்பிடாமல் எல்லாம் இருக்க முடியாது.
இப்படி இங்குள்ள கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலே சிறுவர்கள் நிறைவாகவே வாழ்ந்து வந்தனர்.

மனிமேகலைக்கு ஆறு வயது இருக்கும்
அவளை இறுகக்கட்டி தூங்கி கொண்டிருந்தவளை எழுப்பினாள் மேற்பார்வை பெண்மணி.

"மணிமேகலைய எழுப்பி இத அவகிட்ட குடு!" என்று ஒரு காகிதத்தை நீட்டினாள்.
அதை வாங்கி படித்த கயல்விழி அதில் இருந்த செய்தியை படித்து அதிர்ந்தவளாய் மேகலாவை எழுப்பினாள்,

"மேகலா.. மேகலா..! எழும்பி இங்க பாரு! என்ன கடிதம் வந்திருக்கு என்டு." என அவளை எழுப்பி அந்த கடிதத்தை படித்து காட்டினாள் கயல்.

அதில் இருந்தது இது தான்.
அவளது தந்தை ஒரு மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். என அவள் அத்தை எழுதிய கடிதம் தான் அது.

உள் நாட்டு போர் காரணமாக அங்கு கடிதம் போய் சேர ஒரு மாத காலம் தாமதம் ஆகியிருந்தது.
எ.ஒன்பது பாதை அடைத்தால் அங்கிருந்து யாழ்ப்பாணம் செல்வதென்பது கடல் மார்க்கமாக மட்டும் தான் இருக்கும்.
காகிதங்களும் அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
அதனால் தான் இந்த காலதாமதம்.
அவள் அதில் இருப்பதை வாசித்து காட்டிவிட்டு, அவள் அழுப்போகிறாள் என நினைத்து ஆறுதல் கூற தயாராக இருந்த கயல்விழிக்கு ஏமாற்மே எஞ்சியது.

அவளது முகத்தினில் எந்தவித மாறுதலும் இல்லாது சாதாரணமாக தூக்க கலக்கத்தில் கண்ணை கசக்கியவளை பாக்கும் போது அதிசயமாகத்தான் இருந்தது.

பிறந்ததில் இருந்து தந்தை பாசத்னை அறியாதவளாயிற்றே.
இப்போது உறவுகள் பாசமும் தெரியாத போது அப்பா என்று பாட புத்தகத்திக்காக மட்டுமே அது பெயரானது.

"சரியாக்க படுங்கோ!. விடிய பள்ளிக்கூடம் இருக்கு. விடிஞ்சு ஏழு அரைக்கு வான் கொண்டு வந்து வெளிக்கிட முன்னம் ஏறு என்டுவார் அந்த ரைவர்."
என்று அவள் படுத்து கொள்ளவும் தான் அவளுக்கு புரிந்தது தவறு எங்கென்று.

தாய் பாசமோ, தந்தை பாசமோ, உறவுகள் துணையோ அறியாத சின்ன பிள்ளையை கொண்டுவந்து விட்டுவிட்டு இப்ப செத்திட்டார் என்டா அது ஆரென்டே தெரியாதவ சாகிற போல தானே.
என நினைத்தவள் தானும் தூங்கிோனாள்.

இப்படி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் தான் மேகலா வாழ்வில் விவரம் புரிந்து இழப்பு என்பது எவ்வளவு கொடுமையானது என்பதே அவள் உணர்ந்ததே.

ஆம்..! அது வேறு யார் இழப்புமல்ல. அவளை அன்பாக வளர்க்கும் கயல்விழியின் மரணம் தான்.
அதிலும் அவள் மரணம் மிக கொடுரமாக நடந்தது மட்டுமின்றி, மேகலாவிற்க்கும் மரணத்தின் வாசல் வரை காட்டி விட்டு அவளை நடை பிணமாக, இல்லை.. இல்லை.. நடக்கமுடியாத சிறுமியாக மாற்றியது அந்த விதி.

சங்கமிப்பள்.............
 

Balatharsha

Moderator
அத்தியாயம்.04




அடிமேல் அடி வைத்து



பயணித்த பாதையில் தான்




எத்தனையோ இடர்களும் அதன்
வலிகளும்.



அத்தனையும் கடந்து



முன்னேறி பிரகாசித்த ஔியை கண்டு



மகிழ்ந்தது ஒரு
வினாடி தான்.



மறுநொடி விழுந்து விட்டேன்



புதை குழியில்
.



இனி மீண்டு வருவேன் என்ற



நம்பிக்கை அற்று



புதைந்தே போகிறேன்.......












மேகலாவின் எட்டாவது வயதினில்



வழக்கம் போல் பாடசாலைக்கு தயாரனார்கள். இரு சகோதரிகள் உற்பட முப்பது மாணவர்களை தாங்கி பாடசாலை நோக்கிச்சென்றது அந்த பாடசாலை பேரூந்து.



அவர்கள் இல்லத்தில் அதிகமான மாணவர்கள் ஆகையால் கிளிநொச்சியில் இயங்கும் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அவர்கள் இல்லத்திலிருந்து குறைந்தது முப்பது மாணவர்களாவது சேர்க்கபட்டிருந்தார்கள்..



வழமை போல் போர் சூழல். எப்போது என்ன நிகழும் என்பது யாரும் அறிந்திலர்.



இரண்டு வருடங்கள் யுத்தம் இல்லாமல் சுமூகமாக நாடு சென்கிறது எனில், இரண்டு வருடங்கள் அதை ஈடு செய்ய பயங்கர போர் நடப்பதும், அதில் போராளிகள் உற்பட பொதுமக்கள் என பல உயிர்கள் காவு வாங்ககப்படுவதும், பொது உடமைகள் உற்பட தனியார் சொத்துக்கள் தேசமாவதும் வழமையானதும், அங்கு வாழும் மக்களுக்கு பழகிக்போனதுமான ஒன்று.



பருவகால மாற்றங்களை போல யுத்த காலத்தையும் நிச்சயம் எதிர்பார்த்து காத்திருக்கலாம்.



முன்னர் நடந்த யுத்தத்தால் சேதமானக்கப்பட்ட கட்டிடங்கள் மீண்டும் துளிர் விட்டு முளைக்க ஆரம்பிக்கும் முன்னரே முற்றாக களை பிடுங்க படுவதால் அங்கே பெரிய அளவில் கட்டடங்கள் எழுப்பப்படுவதில்லை.



அதிக பட்ஷம் இடண்டு மாடிக் கட்டடங்களை தாண்டி எந்த ஓரு பில்டிங்கும் எழுப்பப்படுவதில்லை.



பாடசாலைகளில் மைதானம் அமைக்க பட்டிருக்குமோ இல்லையோ பெரிய அளவிளாலனா பங்கர்களை(பதுங்கல் குழி) நிச்சயம் காணலாம்.



அன்று பாடசாலையில் கற்று கொண்டிருந்த மாணவர்களுக்கு ஒரு திடீர் தகவல் அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.



பாடசாலையில் தாக்குவதற்கு ரகசிய திட்டம் ஒன்று நடைபெறுவதாகவும், அதற்கு முன்னர் மாணவர்களை பத்திரமாக வீடுகளுக்கு அனுப்புமாறு வந்த செய்தியால் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் உடனடியாக பாடசாலையை விட்டு வெளியேற்றனார்கள்.



இல்லங்களில் இருந்து வந்த மணவர்கள் அதிகதூரம் ஆகையால் இல்லத்திற்கு தொலைபேசியில் செய்தி வழங்கப்பட்டு அவர்களை பாடசாலை வெளி வளாகத்தினுள் நிறுத்திவைக்க கட்டளை பிறப்பிக்க பட்டது.

அப்போது தான் பஸ்ஸிற்காக காத்திருந்த


மேகலாவும், கயலும் பேசி கொண்டிருந்தனர்.



"அக்கா இப்பிடியே போன நாங்கள் எப்படிக்கா படிக்கிறது?.



இவங்களுக்கு நெடுவ(தினமும்) இதே வேலையா போச்சு.



இண்டைக்கு என்ன வடிவ(அழகா) பாடம் சொல்லி தந்து கொண்டிருந்தா கலா ரீச்சர். அதுகுள்ள குண்டு போடப்போறாங்கள் எண்டு சும்மா பொய்ய சொல்லி படிப்ப குழப்பி போட்டினம்" என மேகலா புலம்ப,



"சும்மா இரு மேகலா!. உனக்கு என்ன படிக்கோணும் தானே!



இல்லத்துக்கு வா!. நான் சொல்லி தாரன்.



இப்ப கொஞ்சம் பேசாம இரு. எனக்கு என்னமோ பயமா இருக்கு" என்றாள் கயல் எதுவென்ற அறியாத பயம் உடலில் தொற்றிக்கொள்ள.



ஆம் கயல் படிப்பில் அவ்வளவு சுட்டி. யாருக்கு புரிகிறதோ இல்லையோ கயல் உடன் சொல்லி தருவதை உடனும் பிடித்து விடுவாள்.



அவள் மேகலைா வகுப்பு தாண்டி வந்ததால் மேகலாவிற்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதும் அவளே!....



இவர்கள் பேசிக்கொண்டி இருக்கும் போதோ வாண் வெளியே கிபிர் வட்டம் அடிக்க தொடங்கியது.



வேறு இடங்களில் என்றால் வானத்தில் எது பறந்தாலும் அதை அவூர்வமாக பார்த்து மகிழும் சிறுவர்கள் மத்தியில், இந்த நாட்டில் மட்டும் பட்டம் பறந்தால் கூட பயம் கொண்டு பார்க தூண்டும் சூழல்.



எல்லா மாணவர்களும் அலறியடித்து கொண்டு நிற்கவும், சில மாணவர்கள் பங்கறுக்குள் ஒழிந்து கொண்டனர்.



மேகலா கயலை ஒட்டி இருந்தவள் "அக்கா வா!" என்று இழுக்க,



அவளோ அதிர்ச்சியில் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.



கயலை விட்டு ஐந்து அடி தள்ளி சென்றவள் காது இரண்டையும் பொத்தியபடி வானத்தை பார்க்க.



அது தனது பின் புறத்திலிருந்து தொடர்ந்து ஐந்தாறு குண்டுகளை கக்கிக்கொண்டிருந்தது.



அது கொட்டிய மறு நொடியே பாடசாலை புழுதிக்காடாகி கட்டடங்கள் தரைமட்டம் ஆகியது.



எங்கிருந்தோ நெருப்பாய் வந்த செல்லின் துண்டு ஒன்று கயலின் கழுத்தை துண்டு போட்டது.
தண்ணீர் குழாயினுள் வெடிப்பு ஏற்பட்டால் நீரானது எப்படி பீச்சியடிக்குமோ அதே போல் தான் கயலினி கழுத்திலிருந்து இரத்தம் பீச்சியடிப்பதை கவனித்த மேகலா,



"அக்கா!" என்று கத்திக்கொண்டே அவளை தாங்கலாம் என காலை எடுத்து வைக்க எத்தணித்தவள் காலானது எங்கே நகர்த்தி பார்? என்பது போல அடம்பிடிக்க, அப்போது தான் குனிந்து என்வென பார்த்தவள் அதிர்ந்தே போனாள்..



கயல் கழுத்தை துண்டித்த அதே செல் பீஸானது (குண்டின் பாகம்) அவன் பின் பகுதியில் ஒரு பகுதியை முழுமையாக வெட்டி சென்றிருந்தது.



என்ன செய்வதென தெரியாவில்லை அவளுக்கு. கால்களாே நிற்க தென்பின்றி தொய்ந்து விழ, அப்படியே தரையில் சரிந்தவள்,



அந்த நிலமையிலும் தமக்கையை வலியினூடே பார்த்தாள்.



அவளாே கழுத்து துண்டிக்க பட்ட மறுநொடியே மடிந்திருந்தாள்.



இரத்தமோ மேகலாவின் உடலில இருந்து முழுமையாக கொட்டி அந்த இடமே காய்ந்து ஜெலி போன்று கட்டியாக திரண்டிருந்தது.



அதிக ரத்த போக்கு காரணமாக மயக்க நிலைக்கு தள்ளப்பட்டவள் கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டாள்.



கண்ணிமைக்கும் நெடியில் அனைத்தும் நடந்து முடிந்தது.



எங்கும் மாணவர்களின் கூக்குரல்கள் அதிகமாண மாணவர்கள் காயம் பட்டும் ஒருசிலர் உயிர் நீத்தும் ,ஒரு சிலரோ பயத்தில் மயங்கம் கொண்டும் இருந்தனர்.



சில நிமிடங்களில் அவசர அம்புலன்ஸ் வந்துவிட அனைத்து ஆபத்தான மாணவர்களும் ஏற்ற பட்டு அங்கு பெரிதாக விடுதலை புலிகளால் அமைக்கப்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டனர். மேகலாவும் அதில் உள்ளடக்கம்.



அரைமயக்க நிலையில் இருந்த மேகலாவின் காதில் வைத்தியர்கள் பேசுவது தெளிவாக கேட்டது.



"இந்ந புள்ளை சரியான சின்ன பிள்ளையா இருக்கு.



ரத்தம் வேற நிறையவே போட்டுது.



அதோட இந்த பகுதியில வெட்டு பட்டதால கூடுதலா காலுக்கு போற ரண்டு நரம்பும் அறுந்திருக்க வாய்ப்பிருக்கு.



சில வேளையில் காப்பாற்ற முடியாமல் கூட போகலாம்.



அப்பிடி காப்பாற்றி சிகிச்சை குடுத்தாலும் அதை தாங்கிக்க இவளால முடியுமா எண்டு தான் தெரியேல?" என்று பேசுவது அவள் காதினில் தெளிவாக கேட்டதுமே முழு மயக்கமானாள் மேகலா.



சங்கமிப்பாள்..........
 

Balatharsha

Moderator
அத்தியாயம்.04




அடிமேல் அடி வைத்து



பயணித்த பாதையில் தான்




எத்தனையோ இடர்களும் அதன்
வலிகளும்.



அத்தனையும் கடந்து



முன்னேறி பிரகாசித்த ஔியை கண்டு



மகிழ்ந்தது ஒரு
வினாடி தான்.



மறுநொடி விழுந்து விட்டேன்



புதை குழியில்
.



இனி மீண்டு வருவேன் என்ற



நம்பிக்கை அற்று



புதைந்தே போகிறேன்.......












மேகலாவின் எட்டாவது வயதினில்



வழக்கம் போல் பாடசாலைக்கு தயாரனார்கள். இரு சகோதரிகள் உற்பட முப்பது மாணவர்களை தாங்கி பாடசாலை நோக்கிச்சென்றது அந்த பாடசாலை பேரூந்து.



அவர்கள் இல்லத்தில் அதிகமான மாணவர்கள் ஆகையால் கிளிநொச்சியில் இயங்கும் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அவர்கள் இல்லத்திலிருந்து குறைந்தது முப்பது மாணவர்களாவது சேர்க்கபட்டிருந்தார்கள்..



வழமை போல் போர் சூழல். எப்போது என்ன நிகழும் என்பது யாரும் அறிந்திலர்.



இரண்டு வருடங்கள் யுத்தம் இல்லாமல் சுமூகமாக நாடு சென்கிறது எனில், இரண்டு வருடங்கள் அதை ஈடு செய்ய பயங்கர போர் நடப்பதும், அதில் போராளிகள் உற்பட பொதுமக்கள் என பல உயிர்கள் காவு வாங்ககப்படுவதும், பொது உடமைகள் உற்பட தனியார் சொத்துக்கள் தேசமாவதும் வழமையானதும், அங்கு வாழும் மக்களுக்கு பழகிக்போனதுமான ஒன்று.



பருவகால மாற்றங்களை போல யுத்த காலத்தையும் நிச்சயம் எதிர்பார்த்து காத்திருக்கலாம்.



முன்னர் நடந்த யுத்தத்தால் சேதமானக்கப்பட்ட கட்டிடங்கள் மீண்டும் துளிர் விட்டு முளைக்க ஆரம்பிக்கும் முன்னரே முற்றாக களை பிடுங்க படுவதால் அங்கே பெரிய அளவில் கட்டடங்கள் எழுப்பப்படுவதில்லை.



அதிக பட்ஷம் இடண்டு மாடிக் கட்டடங்களை தாண்டி எந்த ஓரு பில்டிங்கும் எழுப்பப்படுவதில்லை.



பாடசாலைகளில் மைதானம் அமைக்க பட்டிருக்குமோ இல்லையோ பெரிய அளவிளாலனா பங்கர்களை(பதுங்கல் குழி) நிச்சயம் காணலாம்.



அன்று பாடசாலையில் கற்று கொண்டிருந்த மாணவர்களுக்கு ஒரு திடீர் தகவல் அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.



பாடசாலையில் தாக்குவதற்கு ரகசிய திட்டம் ஒன்று நடைபெறுவதாகவும், அதற்கு முன்னர் மாணவர்களை பத்திரமாக வீடுகளுக்கு அனுப்புமாறு வந்த செய்தியால் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் உடனடியாக பாடசாலையை விட்டு வெளியேற்றனார்கள்.



இல்லங்களில் இருந்து வந்த மணவர்கள் அதிகதூரம் ஆகையால் இல்லத்திற்கு தொலைபேசியில் செய்தி வழங்கப்பட்டு அவர்களை பாடசாலை வெளி வளாகத்தினுள் நிறுத்திவைக்க கட்டளை பிறப்பிக்க பட்டது.

அப்போது தான் பஸ்ஸிற்காக காத்திருந்த


மேகலாவும், கயலும் பேசி கொண்டிருந்தனர்.



"அக்கா இப்பிடியே போன நாங்கள் எப்படிக்கா படிக்கிறது?.



இவங்களுக்கு நெடுவ(தினமும்) இதே வேலையா போச்சு.



இண்டைக்கு என்ன வடிவ(அழகா) பாடம் சொல்லி தந்து கொண்டிருந்தா கலா ரீச்சர். அதுகுள்ள குண்டு போடப்போறாங்கள் எண்டு சும்மா பொய்ய சொல்லி படிப்ப குழப்பி போட்டினம்" என மேகலா புலம்ப,



"சும்மா இரு மேகலா!. உனக்கு என்ன படிக்கோணும் தானே!



இல்லத்துக்கு வா!. நான் சொல்லி தாரன்.



இப்ப கொஞ்சம் பேசாம இரு. எனக்கு என்னமோ பயமா இருக்கு" என்றாள் கயல் எதுவென்ற அறியாத பயம் உடலில் தொற்றிக்கொள்ள.



ஆம் கயல் படிப்பில் அவ்வளவு சுட்டி. யாருக்கு புரிகிறதோ இல்லையோ கயல் உடன் சொல்லி தருவதை உடனும் பிடித்து விடுவாள்.



அவள் மேகலைா வகுப்பு தாண்டி வந்ததால் மேகலாவிற்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதும் அவளே!....



இவர்கள் பேசிக்கொண்டி இருக்கும் போதோ வாண் வெளியே கிபிர் வட்டம் அடிக்க தொடங்கியது.



வேறு இடங்களில் என்றால் வானத்தில் எது பறந்தாலும் அதை அவூர்வமாக பார்த்து மகிழும் சிறுவர்கள் மத்தியில், இந்த நாட்டில் மட்டும் பட்டம் பறந்தால் கூட பயம் கொண்டு பார்க தூண்டும் சூழல்.



எல்லா மாணவர்களும் அலறியடித்து கொண்டு நிற்கவும், சில மாணவர்கள் பங்கறுக்குள் ஒழிந்து கொண்டனர்.



மேகலா கயலை ஒட்டி இருந்தவள் "அக்கா வா!" என்று இழுக்க,



அவளோ அதிர்ச்சியில் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.



கயலை விட்டு ஐந்து அடி தள்ளி சென்றவள் காது இரண்டையும் பொத்தியபடி வானத்தை பார்க்க.



அது தனது பின் புறத்திலிருந்து தொடர்ந்து ஐந்தாறு குண்டுகளை கக்கிக்கொண்டிருந்தது.



அது கொட்டிய மறு நொடியே பாடசாலை புழுதிக்காடாகி கட்டடங்கள் தரைமட்டம் ஆகியது.



எங்கிருந்தோ நெருப்பாய் வந்த செல்லின் துண்டு ஒன்று கயலின் கழுத்தை துண்டு போட்டது.
தண்ணீர் குழாயினுள் வெடிப்பு ஏற்பட்டால் நீரானது எப்படி பீச்சியடிக்குமோ அதே போல் தான் கயலினி கழுத்திலிருந்து இரத்தம் பீச்சியடிப்பதை கவனித்த மேகலா,



"அக்கா!" என்று கத்திக்கொண்டே அவளை தாங்கலாம் என காலை எடுத்து வைக்க எத்தணித்தவள் காலானது எங்கே நகர்த்தி பார்? என்பது போல அடம்பிடிக்க, அப்போது தான் குனிந்து என்வென பார்த்தவள் அதிர்ந்தே போனாள்..



கயல் கழுத்தை துண்டித்த அதே செல் பீஸானது (குண்டின் பாகம்) அவன் பின் பகுதியில் ஒரு பகுதியை முழுமையாக வெட்டி சென்றிருந்தது.



என்ன செய்வதென தெரியாவில்லை அவளுக்கு. கால்களாே நிற்க தென்பின்றி தொய்ந்து விழ, அப்படியே தரையில் சரிந்தவள்,



அந்த நிலமையிலும் தமக்கையை வலியினூடே பார்த்தாள்.



அவளாே கழுத்து துண்டிக்க பட்ட மறுநொடியே மடிந்திருந்தாள்.



இரத்தமோ மேகலாவின் உடலில இருந்து முழுமையாக கொட்டி அந்த இடமே காய்ந்து ஜெலி போன்று கட்டியாக திரண்டிருந்தது.



அதிக ரத்த போக்கு காரணமாக மயக்க நிலைக்கு தள்ளப்பட்டவள் கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டாள்.



கண்ணிமைக்கும் நெடியில் அனைத்தும் நடந்து முடிந்தது.



எங்கும் மாணவர்களின் கூக்குரல்கள் அதிகமாண மாணவர்கள் காயம் பட்டும் ஒருசிலர் உயிர் நீத்தும் ,ஒரு சிலரோ பயத்தில் மயங்கம் கொண்டும் இருந்தனர்.



சில நிமிடங்களில் அவசர அம்புலன்ஸ் வந்துவிட அனைத்து ஆபத்தான மாணவர்களும் ஏற்ற பட்டு அங்கு பெரிதாக விடுதலை புலிகளால் அமைக்கப்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டனர். மேகலாவும் அதில் உள்ளடக்கம்.



அரைமயக்க நிலையில் இருந்த மேகலாவின் காதில் வைத்தியர்கள் பேசுவது தெளிவாக கேட்டது.



"இந்ந புள்ளை சரியான சின்ன பிள்ளையா இருக்கு.



ரத்தம் வேற நிறையவே போட்டுது.



அதோட இந்த பகுதியில வெட்டு பட்டதால கூடுதலா காலுக்கு போற ரண்டு நரம்பும் அறுந்திருக்க வாய்ப்பிருக்கு.



சில வேளையில் காப்பாற்ற முடியாமல் கூட போகலாம்.



அப்பிடி காப்பாற்றி சிகிச்சை குடுத்தாலும் அதை தாங்கிக்க இவளால முடியுமா எண்டு தான் தெரியேல?" என்று பேசுவது அவள் காதினில் தெளிவாக கேட்டதுமே முழு மயக்கமானாள் மேகலா.



சங்கமிப்பாள்..........
 

Balatharsha

Moderator
அத்தியாயம் 05.
ஒருமாத காலமாக நினைவின்றி ஓரே படுக்கையாக கிடந்தவளாே
அன்று தான் கண்விழித்தாள்.
கண்விழத்தவள் முதலில் தேடியது கயல்விழியை தான்.

அங்கு அவளுக்கு முதுகு காட்டி எதுவாே செய்துகொண்டிருந்த தாதியிடம் "நான் அக்காவை பாக்கோணும்."என பின்புறமிருந்து அனுங்கலாக வந்த குரலிலில் திரும்பி பார்த்தாள்.
அவள் கண்களில் தெரிந்த வலியானது உடலின் வலியை படம் போட்டு காட்ட அவள் அருகில் வந்தவள்.

"எழும்பீட்டிங்களா குட்டி?.... இப்போ நோவு எல்லாம் எப்பிடி இருக்கு?.." என்றாள் அனுசரணையாய்.
மேகலாவுக்கோ அவள் கேள்வி கருத்தில் பதிந்தால் தானே! அதற்க்கு பதிலுரைக்க முடியும்?
திரும்பத் திரும்ப "நான் அக்காவை பாக்கோணும்... பாக்காேணும்..." என்று அதையே கூற.

"சரி குட்டி..! அக்காவ பாக்கலாம். இப்போ ஆஸ்பத்திரியில உங்க ஆசரமத்து காரங்க யாருமில்லை. அவையல் பார்வை நேரம் தான் வருவினம்.
அப்ப உன்ட அக்காவும் வருவாள். அப்போ பாத்துக்கலாம்.
இப்ப நீங்க தூங்குங்க." எனவும்.
அவள் கையை பிடித்த மணிமேகலை.
"அக்காக்கு ஒண்டும் ஆகேல தானே?" என பாவமாக கேக்க.

"இங்க பாருங்கோ.....
எனக்கு உங்க அக்கா ஆரெண்டே தெரியாது?...
இன்னும் கொஞ்சநேரத்தில அவயல் வருவினம். அப்போ பாருங்ககோ.
இப்ப எதுவும் யோசிக்காமல் நித்திரை கொண்டாத்தானே அக்கா வந்தும் அவங்களோட விளையாடலாம். படுங்கோ......!" என்றதும் தான் அவளும் கண்களை மூடி தூங்கினாள்.

பார்வை நேரம் நெருங்கியதும் அந்த இல்லத்தில் பணிபுரியும் பெண்மணி இரண்டு சிறுவர்களையும் தன்னோடு அழைத்து வந்திருந்தாள்.
அவர்கள் மேகலாவுடன் தங்கியிருந்த ஒரே வயது சிறுவர்கள்.
அவர்களை கண்ட தாதி பெண் மேகலாவுக்கு நினைவு திரும்பியதாகவும்,
அவள் எழுந்ததில் இருந்து யாரோ அக்காவை அழைத்ததாகவும் கூறியவள்,
"அவளோட அக்கா யாரு?... வந்திருக்கிறாளா?....." என்க.

அந்த பெண்ணுக்கு தான் என்ன செய்வதென்றே புரியவில்லை.
நடந்ததை தாதியிடம் கூறியவள், இதற்க்கு என்ன தீர்வென கேட்க.
"எதுவும் செய்ய ஏலாது.
உண்மையை சொல்லுங்கோ!...
இல்லை எண்டா எழும்புற நேரம் எல்லாம் அக்கா எங்க எண்டு கேட்டு எங்களை தாெல்லை பண்ணுவாள்." என கூறி அவள் நகர்ந்தாள்.

எதை கூறி தேற்றுவதென்பது தெரியாமல் உள்ளே சென்றவர்கள் தூங்கிக்கொண்டிருந்த மேகலாவை எழுப்பினார்கள்.
அவளும் எழுந்ததும் அனைவரையும் ஆர்வமாக பார்த்து விட்டு தமக்கையை காணாது ஏமாந்தவளாய் "அக்கா எங்க?" என்க.

அவர்களும் மறைக்க முடியாது உண்மையை சொன்னார்கள்.
"இல்ல...... என்ர அக்காவுக்கு எதுவும் இல்ல. நீங்கள் பொய் சொல்லுறிங்கள்.
எனக்கு அக்கா வேணும். கூட்டிட்டு வாங்கோ" என்று அந்த அறையே அதிரும் அளவிற்க்கு கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.

அந்த சத்தத்தில் முழு வைத்தியரும் அங்கு ஒன்று திரண்டநேரம் கத்தியே ஓய்ந்திருந்தவள் மூர்ச்சையாகியிருந்தாள்.
அங்கு நின்ற பெண்ணிடம் நடந்தவற்றை கேட்டறிந்த வைத்தியர்கள்,
அவள் இருக்கும் நிலையில் இப்படியே கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாளானால் அவள் உயிருக்க ஆபத்தென்பதை அறிந்தவர்கள், முடிந்த வரை அவளை தூக்கத்திலே வைத்திருக்க முடிவு செய்து அவளுடலில் மருந்தும் செலுத்தப்பட்டது.

சில வேளைகளில் மருந்தின் வீரியம் குறைந்து எழும்போதெல்லாம் கத்துவாள். மீண்டும் மருந்து ஏற்றினால் தான் சலனமே இல்லாமல் தூங்குவாள்.

இப்படியே ஆறு மாதங்கள் கழிந்திருந்தது. உண்மை எதுவென புரிந்து கொண்ட மேகலா, இனி தன் அக்காள் திரும்பி வர மாட்டாள். என அறிவுக்கு எட்ட, கொஞ்சம் கொஞ்சமாக அழுவதிலும் அடம்பிடிப்பதிலும் இருந்து வெளிவர துவங்கினாள்.
ஆனால் அவள் உடலின் காயம் மட்டும் ஆறுவதற்கு ஒரு வருட காலம் எடுத்தது.

அது வரை அவளை எழுந்து நடக்க கூடாது என வைத்தியர்கள் கூற.
அவளை வைத்திய சாலையிலே வைத்து பராமரிப்பதென்று முடிவானது.

ஒரு வருடத்தில் காயங்கள் ஆறி கொஞ்சம் கொஞ்சமாக நடக்க தொடங்கியிருந்தாள். அவள் நடப்பாளே தவிர ஒரு அளவு தூரத்தை தாண்டி அவளால் நடக்க முடியாது. நடையில் கூட மற்றவர்களிடமிருந்து மாறுபாடு தெரியும்.

இப்படி இருக்கத்தான் இறுதி போரும் தொடங்கியது.
அவரவர் தங்களையும், தங்கள் குடும்பம், உடமைகள் என காப்பாற்றிக்கொள்ள ஓட, இங்கோ சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் உயிரை காப்பாற்ற அங்கு பணிபுரியும் ஒவ்வொருவரும் சுயநலம் பாராது அப்படி போராடினார்கள்.
ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டது. அவர்களை பத்திரமாய் மறுபுறம் கொண்டு சேர்ப்பது அவரவர் கடமை என அனுப்பி வைத்தனர்.

ஒரு அணிக்கு இரண்டு நபர்களாக அந்த சிறுவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
மேகலா உற்பட அறுபது சிறுவர்கள் அந்த அணியில் உள்ளடக்கம்.
இராணுவ வீரர்களுக்கும், விடுதலை புலிகளுக்குமான இறுதி போர் தான் அது.
அதில் யார்?..எவர்?. என்ற பேதம் இல்லாமல் பல உயிர்கள் காவு வாங்கப்பட்டது.

எதிர் எதிரே ராணுவத்தினருக்கும் விடுதலை புலிகளுக்கும் போர் நிகழ்ந்து கொண்டிருக்க, நடுவில் எதுவுமே அறியா அப்பாவி மக்கள்.
விடுதலை புலிகள் கட்டுப்பாட்டிலிருந்து மூன்று கிலோ மீற்றர் முன்னேறி நடந்தால் இராணுவ முகாமை அடைந்து விடலாம்.

அப்படி அடைந்து விட்டால் தம் உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை என்ற நம்பிக்கை அவர்களிடம்.
ஆனால் நடக்கதான் முடியாதே!...
நடந்தால் எங்கு குண்டு உடலை துளைத்து விடுமோ என்ற பயம்!.
இருந்தும் சிலர் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேறு வழியில்லாததால் அந்த வழியையும் பயன்படுத்தினார்கள்.
சிலர் அதில் காயம் பட்டனர்.
சிலர் துப்பாக்கி தோட்டாவிற்கு இலக்காகினர்.
கண்முன்னே இரத்த ஆறு ஓடியது.
மனித உடலில் ஒவ்வொரு பாகமும் முன்னேறி செல்ல செல்ல காலில் மிதிபட்டும், முகங்களில் தெறிபட்டும் சிதறும். அதை இரக்கமே பாராதே கைகளால் வழித்து போட்டுவிட்டு முன்னேறி நடக்கவேண்டும்.

எங்கே மக்கள் ராணுவமுகாமை அடைந்து விட்டால் தங்களுக்கு இருக்கும் பாதுகாப்பே மக்கள் தான்.
அவர்கள் சென்றால் யாரை பணையம் வைத்து தங்களை காப்பாற்ற முடியும்?. என்று நினைத்த சில விடுதலை புலி வீரர்கள் அங்கு உள்ள பெரிய குழங்களை உடைத்து விட
அந்த இடமே வெள்ளக்காடானது.

அதை கடந்து இராணுவத்தினரிடம் செல்வது அவ்வளவு இலகுவில் முடியாதாகி போனது.
அவரவர் தங்கள் உடமைகளை அந்த இடத்திலே போட்டு விட்டு பிள்ளைகளை தலைக்குமேல் தூக்கி கொண்டு அந்த ஆற்றையும் கடந்து செல்லலாகினர்.
இப்படி தத்தமது உயிரை காக்க போராடியவர்கள் மத்தியில் சிறுவர்களுடன் பல மயில்கள் நடந்து வந்த அந்த அணிக்கு பொறுப்பான பெண்களோ "வேளைக்கு நடவுங்கோ!" என்று குரல் எழுப்பியவாறு வரவும், காயம் பட்ட கால்களினால் மேகலாவால் நடக்க முடியாமல் போக.
அதிலே சிறிது நின்று விட்டு நடப்போம். என நினைத்து நின்றே விட்டாள்.

எதிர்பாரா நேரம் தாறு மாறாக பொழிந்த செல்கள் அந்த இடத்தில் விழவே, அவளோடு வந்தவர்கள் உயிரை காத்துக்கொள்ள சிதறியடித்து ஓடியதில் அரை மயில் தூரம் அவளை கடந்து சென்று விட்டார்கள்.
மேகலாவாள் ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைக்க முடியவில்லை.

இனி தான் உயிர்தப்ப மாட்டேன் என நினைத்தவள் அங்கே இருந்த பாலை மரத்து அடிவேரின் கீழ் அமர்ந்தே விட்டாள்.
அப்பொழுது தான் ஒரு ஆண் தன் மனைவியுடன் ஒரு பெண் குழந்தையை தோழில் சுமந்து கொண்டு ஓடிவந்தார். அவர் மனைவி அவர் பின்னாடியே கையில் சிறுய பையுடன் வந்துகொண்டிருந்தாள்.
நீண்ட தூரம் நடந்து வந்தவர்கள் போல.
மேகலா முன் சிறுமியை கீழே விட்டவர், கொஞ்சம் இளைப்பாற எண்ணும் சமயம், மீண்டும் கொத்துக் கொத்தாக செல்கள் விழ தொடங்கியது.

எங்கிருந்து வருகிறார்கள் என கணிக்கமுடியாது கூட்டம் கூட்டமாக வந்த பொரும் மக்கள் தொகை உயிர்பயத்தில் அலறி அடித்தபடி ஓடவும் அதில் அகப்பட்ட அந்த சிறுமியும் அவர்கள் மத்தியில் அடித்துச் செல்லபட்டாள்.

இதை ஓரமாக இருந்தறே கவனித்த மேகலா சிறுமியை பின்தொடர்ந்து சென்று அவர்கள் தாய் தகப்பனிடம் ஒப்படைக்க அழைத்து வந்தபோது அவர்களை அங்கு காணவில்லை.
அவர்களும் அவளை தேடித்தான் சென்றிருந்தனர்.

மேகலாவோ இத்தோடு தான் இறந்து விடுவேன் என நினைத்து ஓய்ந்து அமர்ந்தவள்,
தன்னை விட சிறிமியாக இருந்தவளை அவர்கள் பெற்றவர்களோடு சேர்ப்பதற்காகவே தன்னால் முடியாவிட்டாலும் அவளுக்காக நடந்தாள்.
சின்னவளோ "அம்மா.... அப்பா..." என செல்லும் வழி எங்கும் பசியில் கத்த,
தனது தோளில் மாட்டியிருந்த பையை திறந்து சமபோஷாவையும், தண்ணீரையும் எடுத்து அதை குழைத்து உண்ணக்கொடுத்தாள்.

ஆம் அந்த சிறுவர் இல்லத்தில் எல்லோர் முதுகிலும் பை ஒன்று மாட்டி விட்டிருந்தனர் ஆசரமத்தவர்கள். எத்தனை நாட்கள் பயணமோ!
சிறுவர்கள் பசியில் துடித்துவிட கூடாதென சாப்பிட அந்த பையில் நீரும் சமபோஷா பைகளும் வைத்து விட்டிருந்தனர்.

மக்கள் ஆற்றை கடப்பதற்கு இராணுவத்தினரால் சின்ன சின்ன ஓடங்களை விடபட்டிருந்தது.,
அதில் மேகலாவையும், பானுவையும் ஏற்றி மூன்று நாட்கள் அலைக்கழித்த பின்னரே முகாமிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்..

அங்கு லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் நிரம்பி வளிய,
ஒவ்வொருவரும் தங்கள் உறவுகளை இழந்தும், உடலில் குண்டடியுடனும், சிறு சிறு செல் துண்டுகளை தம் உடலில் நினைவு சின்னமாக பொறித்து ரத்தக்களரியாய் அழுது பும்பிய படி இருக்க.
ஒரு ஓரமாக பானுவுடைய பெற்றோரும் அழுவதை கண்டவள், பானுவையும் அழைத்து கொண்டு அவர்கள் முன் நின்றாள்.
அவளை முதலில் கண்டவர்கள் பக்கத்தில் நின்ற பானுவை கண்டதும், தாவி அவளை அணைத்து உடலெங்கும் முத்தம் வைத்து.
"எங்கடி போன?.. எவ்வளவு தேடினம் தெரியுமே!..
ஆருடி உன்ன கூட்டி வந்தது?" எங்க.
பக்கத்தில் இருந்த மேகலாவை காட்டினாள் சின்னவள்.
அவளை நன்றியுடன் பார்த்த இருவரும் அவளையும் கொஞ்ச.
இதுவரை அவள் அறியாத உணர்வில் அவளது கண்களும் கலங்கியது.

"ஏன்ம்மா அழுவுற?. யாரு உங்களை அழைச்சிட்டு வந்தது?" என கேட்க.
"யாரும் இல்லம்மா!.. இந்த அக்கா தான் கூட்டி கொண்டு வந்தவா".. என்றாள் சின்னவள்.

அவர்களால் சற்றும் நம்பமுடியவில்லை தான். உடனே "உங்க அம்மா அப்பா தொலைஞ்சிட்டினமா?..." என கேட்க.
அமைதியாக சிறிது நேரம் நின்றவள் "எனக்கு யாருமே இல்ல அன்ரி"
"நான் சிறுவர் இல்லத்தில தான் வளந்தன். அவங்க கூட வரேக்க என்னால கனக்க தூரம் நடக்க முடியேல.
அப்ப தான் நீங்க வந்தீங்கள், குண்டு விழுந்து இவள சனம் தள்ளிட்டு போனத பாத்திட்டு இவள கூட்டி வந்து பாத்தா உங்கள அந்த இடத்தில காணேல."
"இவளும் உங்கள காணேல எண்டு அழ வெளிக்கிட்டாள்.
என்னால நடக்க முடியாட்டியும் கொஞ்சம் நடந்து கொஞ்சம் இருந்தும் கூட்டிகொண்டு வந்திட்டன்." என்க.

"அப்ப இந்த மூண்டு நாளும் என்ன சாப்பிட்டனீங்கள்? பசிக்கேலயே?" என்க
"இல்லயம்மா அக்கா பாக்கில வைச்சிருக்காம்மா. அத தந்தவா" என்று பானு சொல்லவும்.
மறு நொடியே பானுவின் தந்தை அவளை இழுத்து அணைத்து கொண்டு கண்ணீர் விட்டவர்.
"எங்களோட நீயும் வரியாம்மா!" என்க.

அவளும் இதுவரை கிடைத்தறியாத அரணைப்பில் "ஓம் வாறன்." என்றாள்.

இரண்டு மாதங்களில் முகாமில் ராணுவப் பாதுகாப்பில் இருந்தவர்கள், சில பல தோசனை சாவடிகளை சந்தித்த பின்னர் விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வந்து குடியேறினர்.

நாட்கள் உருண்டோட கிளிநொச்சியில் வசதியாக வாழ்ந்த பானு குடும்பம் அனைத்தையும் இழந்து முன்னேற தொடங்கியிருந்தது.

ஆனால் அங்கு இருந்ததைப் போல் இவர்களால் இங்கு முன்னேற முடியவில்லை.
எதை தொட்டாலும் போட்டியாக இருக்க, சாதாரண கூலி வேலையே பானுவுடைய தந்தையான வேல்முருகனால் செய்ய முடிந்தது.

இருவரும் பெரியவர்களாக வளர்ந்து இருவரும் உயர் தரத்தோடு படிப்பை தொடர பணமில்லாததால் முதலில் தையல், அழகுக்கலை என பயின்றவர்கள். தந்தையின் கஷ்டம் உணர்ந்து,
வேலை செய்ய தீர்மணித்து ஒரு நிறுவனத்தில் சேர்ந்து கெண்டனர்.
அதுவும் தையல் சம்மந்த பட்டது என்பதால் அவர்களுக்கும் அது வசதியாக போக அதிலே அவர்களது வாழ்கை ஓடியது.

மேகலாவுக்கோ சிறு வயதில் இருந்தே உறுத்தல்.
அவர்களே கஷ்டபடும்போது தானும் அவர்களுக்கு பாரமாகி விட்டோமே என்று.
இனியும் பாரமாக இருக்க கூடதென நினைத்தவள்,
"அம்மா நான் தனியா போகலாம் என்று இருக்கேன்." என சொன்னது தான் தாமதம் அவரோ சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.

"என்ன மேகலா!... உனக்கு நாங்க அவ்வளவுக்கு பாரமாகிட்டோமா?" என்றார் கோபமாக.
ஆம் அவர்கள் அவளை பானுக்கு நிகராக தான் வளர்த்தனர்.
பள்ளியில் கூட இருவரையும் ஒரே வகுப்பில் தான் சேர்த்து விட்டவர்கள்,
தம் மகள் தன்மை எப்படி அழைப்பாளோ அப்படியே நீயும் தம்மை அழைக்க வேண்டும் என கட்டளை இட்டு
அவள் வேலை செய்துவரும் பணத்தை கூட தான் வாங்குவதில்லை.
"கல்யாண வயசு வந்திட்டிருக்கு. உன்னோட திருமணத்திற்கு தான் இது தேவைப்படும்!.." என வாங்காது சேமிப்பிற்கே போனது.

மேகலாவோ இது சம்மந்தமாக வேறு எண்ணத்தில் இருந்தாள்.
அவளது பின் புறத்தில் காயம் பட்டதால் அவளாள் நீண்ட தூரம் நடக்க முடியாது.
ஏன் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாரம் கூட தூக்க மாட்டாள்.
அது அவளுக்கு பெரும் குறையாகவே தெரிந்தது. அது ஒரு காரணம் என்றால்,
சிறு வயதில் இருந்தே உறவுகளால் ஏமாற்ற பட்டவள்,
இனி தனக்கென்ற தனிப்பட்ட எந்த உறவும் வேண்டாம் எனவும், அவளை தேடிவந்த உறவுகளையும் கடவுள் பாதியோடு அழைத்ததனால் கடவுள் மீதிருந்த அவநம்பிக்கையில் சாமி கும்பிடுவதையே மறந்திருந்தாள்.

இதனாலே திருமணம் என்ற ஒன்று நடக்க போவதில்லை. அதற்கு தானும் அனுமதிக்க மாட்டேன். முடிவே எடுத்துவிட்டாள்.
புஷ்பாவின் கோபத்தினை கண்டு, "அப்படி இல்லைம்மா!..." என சமாளித்தவள்,
"நான் எங்க போக போறேன்?. மேல ஒரு அறை சும்மா தானே இருக்கு. அதை வீட்டு காறங்ககிட்ட கேட்டு வாங்கி தாங்க. இங்கையே இருந்துப்பேன்." என விடாப்பிடியாக நிற்க.

புஷ்பாவுக்கும் விருப்பமே இல்லை என்றாலும் அடம்பிடிக்கும் மகளை ஒன்றும் செய்ய முடியாதே!.
வேறு எங்காவது சென்றால் தானே பிரச்சினை!.. எங்க வீட்டிலயே தானே தங்க போகிறாள். எல்லாமே ஒண்ணு தான். என நினைத்து கொண்டவர், ஓனரிடம் அனுமதி வாங்கி அந்த அறையை அவளிடம் ஒப்படைத்தார். அதற்கும் தனி வாடகை தான். அதை அவளே பார்த்து கொள்வாள்.

என்ன தான் கடவுள் மேல் நம்பிக்கை இல்லை என்றாலும் தனது தங்கையும், தோழியுமான பானுவிற்காக அவளுடன் கோவில் செல்வது வழக்கம்.
அங்கு தான் இன்று நடக்க இருக்கும் திருமணத்திற்கே அடித்தளமிட்டாள் பானு.
சங்கமிப்பாள்.........
 

Balatharsha

Moderator
அத்தியாயம்.06



மேகலாவிற்கு சிறுவயதில் இருந்தே இசை மீது அளவில்லா காதல்.
அவள் வளர்ந்த இல்லத்தில் தினமும் காலையில் நடக்கும் பிறேயரில் இருந்து சாப்பிடும் போது அதற்கென்று தனி பாடல்.
இரவு உறங்க செல்லும் போது ஒரு பாடல் என அவர்களுக்காகவே விடுதலை புலிகளால் இயக்கி இசையமைக்க பட்ட பாடல்களை கேட்டு வளர்ந்தவளுக்கு அந்த இசை பிடித்து போகவே அதன் மேல் உள்ள ஆசையில் அவளாலும் இசை நயத்துடன் பாடமுடிந்தது.
பள்ளியில் கூட அது சம்மந்தமான பாடமாவே எடுத்தாள்.



என்னதான் கடவுள் பக்தி இல்லை என்றாலும் அவள் கல்விக்காக சைவத்தை பின்பற்றியே படித்ததனால் மதிப்பென்னுக்காக தேவாரங்களையும் பாடமாக்க வேண்டிய கட்டாயம். அதனால் அதையும் பண்ணுடன் பாடுவாள்.



புராணக்கதைகளை படித்து விட்டு கடவுளோ இல்லை.
"அப்படி ஒருவர் இல்லை என்ற தைரியத்தில் தானே கதை கதையாக எழுதி வைத்திருக்கிறார்கள்." என்று கேட்பாள்.

அதை யாரவது மறுத்து சொல்லி விட்டால் போதும்.

"ஏன் உன் கடவுள் இப்போ எங்கே போனாரு. முன்னாடி மனுசங்க கஷ்டபட்டத போல தானே இப்பவும் படுறான். இது அவன் கண்ணுக்கு தெரியலையா? சரி மனுசன் தான் சுயநலம சிந்திக்கிறான். அதனால கடவுளுக்கு மனுசனுக்கு தரிசணம் தரத்துக்கு விருப்பம் இல்லைனு வைச்சுப்போம்.



அப்போ பன்றிக்கு தாய்பன்றியா மாறி பால் குடுத்தாரே!
இப்போ எத்தினை நாய் தன்னோட குட்டிய தவிக்கவிட்டு வாகனங்களில அடி பட்டு சாகுது. ஏன் இப்போ வந்து பாலை குடுக்க சொல்லுறது?."
என்று கேலி போல பேசுவாள்.



தான் சாமி மீது நம்பிக்கை இல்லையென்றாலும் யார் பக்திக்கும் அவளால் இடையூறு வந்ததில்லை.

தனக்கு பிடிக்கவில்லை என ஒதுங்குவாளே தவிர, தேவையற்று நாத்தீகம் பேச மாட்டாள்.
தன்னை கட்டாயப்படுத்தினால் மட்டுமே இவ்வாறு சொல்லி செல்வாள்.

அவளுக்கும் என்ன தான் மன விரக்தியாக இருந்தாலும் சின்ன சின்ன ஆசைகள் இருக்கத்தான் செய்தது.

முதலில் இசை மீது ஆரம்பித்த காதல். படிப்படியாக ஒவ்வொரு விடயமாக ஆசை படத்தொடங்கினாள்.
அது அத்தனையுமே சுயநலமற்ற ஆசைகளே!.



தன்னை வளர்த்து இந்த உலகிற்கு தான் அநாதை என்று காட்டாது, தன்னையும் மகளுக்கு இணையாக வளர்த்தோரை கடசி காலம் முழுவதும் தான் கவனித்துக்கொள்ள வேண்டும்.
தன்னை போல ஆதரவற்றோர்க்கு சிறு சிறு உதவிகளாவது செய்ய வேண்டும்.


அதை இப்போதும் செய்கிறாள்.
தான் சம்பாதிக்கும் பணத்தில் சிறு தொகையை ஒரு உண்டியலில் போட்டு புதுவருஷம், தீபாவளி வந்தால் அந்த பணத்தை எடுத்து சிறுவர் இல்லம் சென்று அதை ஒப்படைப்பாள். அவர்களுக்கும் புது துணி எடுக்கும்படி கூறி.



படித்து ஏதாவது பட்டம் பெறவேண்டுமென்று இருந்த ஆசை அவர்கள் பணக்கஷ்டத்தால் தடைப்பட்டது.



அது கூட இங்கு சாதரண சன்னியாசம் செல்வதென்றால் கூட பட்டம் கேட்பார்கள்.



அனாதை இல்லம். அல்லது முதியோர் இல்லத்துக்கு சென்று முழுநேர தொண்டு புரிவதே அவளது ஆசை.
அதை அவள் நிறைவேறாத பட்டியலிலே சேர்த்து வைத்துள்ளாள்.



ஆனால் அதை எப்படியாவது ஒரு நாள் நிறைவேற்ற வேண்டும் என்பது அவள் கனவு.



இவ்வாறு இருக்கவே உலக பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான யாழ் மாகணத்தில் உள்ள நல்லூர் அலங்கார கந்தன் திருவிழாக்கோலம் கண்டான்.



இருபத்தைந்து நாட்கள் மிக சிறப்பான பூஜைகளுடனும், அலங்காரங்களுடனும் முருகன் ஆலயத்தில் நடை பெறுவது வழமை.



நல்லூர்கந்தன் திருவிழா தொடங்கினால் போதும்.



இருபத்தி ஐந்து நாட்களும் வடமாகாணமே விழாகோலம் பூண்டுவிடும்.



நல்லூர் பிரதேசம் எங்கும் சிறிய பெரிய அளவிலான கடைகள், விளம்பர நிறுவனங்கள், ஊடங்கள், குளிர்பாண நிலையங்கள், உணவகங்கள்,. கண்காட்சி நிலையங்கள்,.மாயா ஜால நிலையங்கள் என....இன்னும் பல தரப்பட்ட பார்பதற்கு அரிதான காட்சிகள் அனைத்தும் அந்த நாட்களில் காணலாம்.



கலாச்சார உடைகளை தவிர வேறு எந்த உடை அணிவதற்கும் அணுமதி மறுக்கப்படும்.



இங்கு பானுவோ மோகலாவுடன் மல்லுக்கட்டிக்கொண்டு நின்றாள்.



"நீ இப்போ வரப்போறியா? இல்லையா?......."



"எத்தினை தடவை தான் நான் உனக்கு சொல்லுறது?..
நான் எங்கையும் வரல்ல. அங்க கூட்டம் அதிகமா இருக்கும். பொய்யுக்கெல்லாம் சாமி கும்பிட என்னால முடியாது. நீ போ!" என்க.

"உன்னை யாரும் சாமி கும்பிடின்னு வற்புறுத்த மாட்டாங்க. எனக்கு துணையா வந்தா போதும்." என பானு அடம் பண்ண.



"அம்மா இவளை பாருங்கோ!....... எத்தனை தடவ சொன்னாலும் கேக்கிறாளில்ல." என்றவள்
"ஏன்டி!.. அதுதான் அம்மா வராங்களே அவங்க கூட போகவேண்டியது தானே!." என பெரியவள் சீறிச்சினக்க.



"அம்மா கூட போறதுக்கு பேசாம வீட்டில இருந்திடலாம். அவங்க உள்ள கிழவிங்க கூட இருந்து ஊர் வம்ப அளந்திட்டு இருப்பாங்க. அவங்க வாயை பாத்திட்டு என்னால இருக்க முடியாது. நீ வரா அவ்ளோ தான்."



"ஏய்.....! அந்த கல்ல என்னால பாக்க முடியாது. விளங்குதா இல்லையா உனக்கு?....
அதுவும் தீபம் காட்டுறப்போ அரோகரானு சொல்லுவாங்க பாரு!... ஷ்...சப்பா.....! முடியாதுடி என்னால!... கோவிலுக்கு வந்துட்டு என்னால கல்லுக்கிட்டல்லாம் வேண்டுதல் வைக்க முடியாது. அதுக்கு மைதியா வீட்டில இருந்திடலாம்." என்க



"இப்போ உனக்கு என்ன பிரச்சினை?.. கும்பிடுறது தானே!.. அதுக்கும் எங்கிட்ட ஐடியா இருக்கு." என்றாள்.



ஆம் அங்கு திருவிழா தொடங்கிவிட்டால் மாலை வேளைகளில் வேலை முடிந்ததும் பானு கோவில் சென்று பஜனையுடன் கலந்து கொள்வது வழக்கம். கூடவே மேகலாவையும் விட்டு வைத்ததில்லை.



மேகலாவிற்கு எந்த அளவு கடவுள் மீது நம்பிக்கை இல்லையோ!. அதே அளவு பானுக்கு கடவுள் மீது அதீத நம்பிக்கை.
அவர்கள் இல்லாத பஜனை அந்த ஊரில் எந்த கோவில்களிலும் கிடையாது.



எத்தனையோ தடவை பானுவை அவள் கேட்டு விட்டாள்.
"ஏன்டி!.... நீயும் தான் விழுந்து விழுந்து சாமிய கும்பிடிறியே இப்போ உனக்கு என்ன அந்த சாமி தந்திட்டாரு?... கிளிநொச்சில கார், வீடு என்று வசதியா வாழ்ந்த உங்களை இப்பிடி ஒண்ணுமே இல்லாம நிக்கவைச்சதை தவிர?...." என கேலிபேச,



"உனக்கு அது விளங்காதடி!..
சாமி ஒண்ண எங்க கிட்டருந்து எடுகிறாருன்னா அதை விட சிறப்பா ஒண்ண தரப்போறார்ன்னு அர்த்தம்." என அவளும் விடாமல் கூறுவாள்.



இன்று கோவிலில் சாமி கும்பிடாமல் இருக்க புதிதா ஒரு வழி வைத்திருப்பதாக பானு கூற. அவள் என்ன சொல்லப்போகிறாளோ!.. என மேகலாவும் ஆர்வமானாள்.



"உனக்கு சாமி கும்பிட பிடிக்காது.
அதை நான் ஏத்துக்கிறேன். ஆனா பாட்டு பாட பிடிக்கும் தானே!. அப்போ என்கூட வந்து பாடு...." என்க



"அது தேவாரம். நான் மாட்டேன்." என்றாள் மறுப்பாக.



"பள்ளிகூடத்தில படிப்பியே அது என்ன அப்போ?..." என எதிர் கேள்வி பானு கேட்க.

"அத நான் பாடமா தான் பாத்தேன்." என்க.



"அதே போலதான். இப்போவும் மியூசிக்கா நினைச்சு பாடிக்கோ!.
உனக்கு சங்கீதமாயும் போச்சு. என்கூட வந்ததாயுமாச்சு.
சாமியும் கும்பிடுற கட்டாயமுமில்லை. இப்போ ஓகே ஆகிட்டுதா?... போ...! போய் தயாராகு" என்று அவளை பேச விட்டால் அதற்கும் ஒரு விளக்கம் தருவாள் என நினைத்தவள் அவள் தங்கும் மேல் மாடி பகுதிக்கு இழுத்து வந்து உள்ளே தள்ளி கதவடைத்தாள்.



தயாராகி கீழே வந்தவள் பானுவை பார்த்தாள்.
இருவருமே சாதாரண காட்டன் புடவைதான் உடுத்தி இருந்தனர்.



பானுவிற்கு இடையை தாண்டய கூந்தல் என்பதால் அவள் பின்னலிட்டு நுணியில் ரப்பர் பாண்ட் போட்டிருந்தாள்.
காதில் சின்னதாக அழகிய பான்சி ஜிமிக்கி, கையில் இரண்டு ஜோடி வளையல்கள் என சர்வ சாதரணமாக அழகியாக இருந்தாள்.



மேகலாவும் அதற்கு சளைத்தவளில்லை. அவளும் பானுவை போலவே சாதரண நகைகளுடனும், முடிமட்டும் அவளை விட ஒரு சாண் குறைவு தான். அதனால் இரண்டு காதுகளில் இருந்து சிறுதொகை முடியை எடுத்தவள் பின் புறமாக அதை கொண்டுவந்து சிறிய கிளிப்பில் அடக்கி பின்புறம் முடியை விரித்து விட்டிருந்தாள்.



இருவரும் அழகில் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.

ஒரு விடயத்தில் மட்டும் மேகலா அதீத அழகு.....

ஆம்.... அது பக்குவமே .
எதையும் நிதாணித்து பொறுமையாக கையாளக்கூடியவள்.



அதற்காக பானு பக்குவமில்லாதவளில்லை.
மேகலா வளர்ந்த இடமும், சுழலும் அவளை இன்னும் மெருகூட்டியிருந்தது.



இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அழகென்று சொல்லிக்கொண்டிருக்கும் போது வந்த புஷ்பா இருவரையும் பார்த்து திகைத்து நின்றவர், தமக்கிருக்கும் மிகப்பெரிய பொறுப்பு அன்மையில் நெருங்கியதை எண்ணி கண்கலங்கியது சிறிது வினாடி தான்.



உடனே அடுப்படிக்கு சென்று மூன்று காய்ந்த மிளகாயும், கொஞ்ச உப்பையும் எடுத்து வந்தவர் அவர்கள் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து சுத்தி அடுப்புக்குள் போட்டு விட்ட பின்பே அவர்கள் போக அனுமதி வழங்கினார்.



இருவரும் கோவில் சென்று கோபுரத்தை கண்டு வணங்கிய பானுவை பார்த்தவள், உதட்டை சுழித்து மறு புறம் திரும்பி கொண்டாள்.



பின் கால் கழுவி சன்னிதானம் சென்று ஒவ்வொரு பிரகாரமாக பானு கும்பிடவும், ஏதோ வேடிக்கை பார்ப்பவள் போல் அவள் பின்னால் சென்று கொண்டிருந்தாள் மேகலா.



பூஜை ஆரம்பமாகவும் மேகலா பானுவை அர்த்தமாக பார்க்க "கொஞ்சம் பொறுத்துக்கோடி!" என்று கண்களால் கெஞ்சி விட்டு பஞ்ச ஆராத்தி காட்டிய பிறகே பஜனைக்கு சென்றனர்.



பஜனை பாடும் இடத்தில் குறைந்தது அறுபது பேர் தம்மை மறந்து பாடிக்கொண்டிருந்தனர்.
அங்கு இருப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் பாட சந்தர்ப்பம் வழங்க படும்.

அவர் சொல்லி கொடுக்க சுற்றி உள்ளவர்கள் சொல்லி தருவதுபோல் ராகத்தோடு பாடவேண்டும்.



மேகலாவின் முறை வர அத்தனை பேர் மத்தியில் அவள் குரல் மட்டும் இனிமையாக மைக் வழி எல்லோர் செவிகளை தீண்டியது. கல்லை கூட உருக வைக்கும் தேன்குரல் அது. தாளத்திற்கும் ஆர்மோணியத்திற்கும் இடையில் இன்னும் இனிமை சேர்க்க.



கோவிலில் நின்றவர்களை அவள் குரல் மயக்கி அந்த குரலுக்கு சொந்த காரி யார்? என அறியும் ஆவலை தூண்டியது.



அதில் முகிலனின் அன்னை சுந்தரியும் உள்ளடக்கம்.

ஆம் அவர்கள் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டவர்கள்.



கார்முகிலனது தந்தை தமிழ் அரசியல் வாதிகளில் பெரும் தலைவரும் சிறந்த ஆசிரியருமாவர்.



அரசியலில் இறங்கியதும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளி மாவட்டம் சென்றவர் கொழும்பில் வசித்து வருகிறார்.



அவர்கள் சொந்தங்கள் எல்லாமே யாழ்ப்பாணத்தில் தான்.



அவர் முத்த புதல்வன் கார்முகிலன். சிறந்த தொழிலதிபர்.



தந்தை அரசியலில் தன்னுடன் வர கேட்டும், தனக்கு அதில் விருப்பமில்லை என மறுத்தவன், பல மாகணங்களில் தனது பல விதமான தொழில்களை ஆரம்பித்து கொடிகட்டி பறக்கிறான்.



தந்தை அரசியல் வாதி என்பதால் எந்த வித சிக்கலும் இல்லாமல் அது செல்கிறது.



முகிலனுக்கு ஒரு தங்கையும் ஒரு தம்பியும்.



தம்பி மயூரன் அவன் பொறுப்பற்று ஊர் சுற்றித்திரிபவன்.



தங்கை படிப்பில் சுட்டி என்பதால் அவள் விருப்பபடி கொழும்பிலுல்ல மருத்துவக் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறாள்.



ஆண்டில் ஒருமுறை வரும் நல்லூரன் திருவிழாவை காண சுந்தரி யாழ்ப்பாணம் வருவது வழக்கம். அதற்காகவே இந்த முறை வரும்போது ஒரே அடமாக தனது மூத்த புதல்வனையும் அழைத்து வந்திருந்தார் சுந்தரி.



அவர்களுக்கு இங்கும் பெரிய அளவிலான பங்களா உண்டு.



அதை அவனது தந்தை யோகலிங்கத்தின் தமயனார் ஆனா சுந்தரலிங்கம் தான் ஆட்களை நியமித்து பார்த்து கொள்கிறார்.

சுந்தரி ஊருக்கு வந்தால்


இருபத்தைந்து நாட்களும் திருவிழா கண்டு விட்டே செல்வது வழக்கம்.



முதலில் தனக்கு அதிக வேலை வரமுடியாது. என அடம்பிடித்த கார்முகிலன் யாழ்பாணத்து நிறுவனத்தில் காலவதியான பொருட்களை மார்க்கெட்டின் செய்ததால் கோட் , கேஸ் என வழக்கு தொடுக்க பட்டிருக்கும் காரணத்தில் வரவேண்டிய சூழ்நிலையினால் சுந்தரியுடன் வர சம்மதித்தான்.



சங்கமிப்பாள்............
 

Balatharsha

Moderator
அத்தியாயம்.07

சாதரணமாகவே நல்லூரான் சன்னதியில் மக்கள் கூட்டம் அலை மோதும்.
இன்று திருவிழா முதல் நாள் வேறு. மக்கள்கூட்டத்தினை சொல்லவே தேவையில்லை. கோவில் உட்சன்னிதானம் பெரிய விசாலமான கிட்ட தட்ட ஐயாயிரம் மக்களுக்கு மேலாக உள்ளடக்க கூடிய அரசர்கள் வாழ்ந்த அரண்மனை போன்ற அமைப்பு.
அதை விட பல லட்ஷம் பத்தர்களை உள்ளடக்க கூடியது வெளிப்புற தேரோடும் வீதி.

எப்போதுமே பஜனையானது பழனி ஆண்டவர் சன்னிதாணத்திலே இடம்பெறும்.
ஒலி பெருக்கி வழியே எல்ல இடமும் பஜனை ஒலிப்பதனால்
இங்கிருந்து தான் பாடப்படுகிறத என யாராலும் சரியாக கணித்திடமுடியாது. பழனி ஆண்டவரை தொழும் பக்தர்கள் சிலவேளைகளில் அதை கவனிக்கலாம்.
கூட்டம் அதிகமாதலால் நெரிசலோடு நெரிசலாக அதை கவனிக்கும் சந்தர்பம் குறைவாகவே இருக்கும்.

இங்கு சுந்தரியோ கோவில் பின்புற சன்னிதானத்தில் அர்தநாதீஸ்வரரை தொழும் போது தான் அவர் காதினில் அந்த தேனிசை கேட்டது.

முகிலனுக்கு கூட்டம் என்றால் அறவே ஆகாத ஒன்று.
அதை விட இங்கு அனைத்த கோவில்களிலும் விதிக்க படாத சட்டமும், ஆனால் அனைத்து சைவ மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட சட்டம் இது.

அதாவது கோவில் உற்பிரகாரத்திற்கு செல்ல வேண்டுமாயின் அனைத்து ஆடவர்களும் மேல் அங்கியை களைந்து, வேட்டி அல்லது பேன்ட்டோடு கட்ட வேண்டும்.
அதன் காரணமாகவே முகிலன் வெளிவீதியில் உள்ள வேப்பமர அடியினில் திருவிழா காலங்களில் மக்கள் இளைப்பாற பரப்பப்பட்ட மணலில் அமர்ந்து கொண்டான்.

அவனுக்கும் அந்த குரலானது ஒலி பெருக்கு வழியாக இன்னிசை மீட்டது. அந்த குரலிலே அது ஒரு இளம் பெண்ணின் குரல் என உறுதியாக தெரிய எந்தவித ஆர்வமும் காட்டாமல் அமைதியாக அமர்ந்து விட்டான்.

ஏனென்றால் அவனுக்கு தன் குடும்பப்பெண்களை தவிர வேற்று பெண்களை அறவே பிடிக்காது.
ஒரு சில பெண்கள் மூலம் வேண்டாத அனுபவங்கள் அவன் நெஞ்சினில் ஆறாத வடுவாக பதிந்திருந்தது.

அவன் மூளையானது எவ்வளவு தான் கட்டுப்பாடோடு இருந்தாலும், பாடலில் மயங்கிய அவன் மனமோ அவளை பார்த்தே ஆகவேண்டுமென அவனுக்கு எதிராக வாதாட்டத்தில் ஈடுபட்டது.

பாக்குறதனால ஒண்ணும் நீ அவமேல் மயங்கிட மாட்ட போய் பாரு!.. என அது கூற.
மூளையோ அதற்கு எதிராக.
" ஏன் பாக்கிறதால தான் என்ன வந்திட போகுது?. இந்த பெண்ணுங்களினால நடந்தது மறந்து போச்சா?.. எதுவும் தேவையில்ல அமைதியா இரு!." என்க

"நான் கலையை தான் ரசிக்க சொன்னேன். கலைக்குரியவளை பாரட்டுறதனாலயோ, பாக்கிறதனாலயோ எதுவும் நேராது." என எதிர் வாதம் செய்தது மனசு,
மூளைக்கும் மனதுக்கும் நடக்கும் போராட்டத்தில் என்ன செய்வதென தெரியாமல் அப்படியே அமர்ந்து விட்டான் முகிலன்.

இங்கு சுந்தரியோ அந்த குரலழகியை காணும் ஆவலில் கூட்டத்தை பிளந்து முடிந்த அளவு வேகமாக வந்து கொண்டிருந்தார்.

கண்களை மூடி இசை நயத்துடன் ஆர்மோணியத்திற்கு ஏற்றாட்போல் மணிமேகலை பாடல் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்க,
அவள் செல்ஃபோனும் விடாமல் பல முறை சிணுங்கியது.
அதை உணர்ந்து கண்விழித்தவள் அதில் தெரிந்த இலக்கத்தில் யாரென அறிந்தவள் பாடல் முடியும் வரை சைலண்ட்டில் போட்டாள்.
தனது பாடல் முழுமையாக பாடி முடிந்ததும் பானுவிடம் மெதுவாக

"முதலாளி கால் பண்றார். என்னன்னு போய் கதைச்சிட்டு வரேன்" என கூறியவள், போனை தூக்கி கொண்டு எழுந்து வெளியேற வழி தோடினாள்.
வழி இல்லாமல் போகவே பானுவை மைக்கின் அருகில் நகர்ந்து அமர கூறி வழி எடுத்தவள் மெது மெதுவாக அந்த பஜனை கூடத்தை கடந்து வெளியேறினாள்.

ஆலய உற்பகுதியினுள் ஃபோன் பேசுவதும், புகைப்படம் எடுப்பதும் முற்றாக தடை செய்ய பட்டிருந்ததனால் வெளியே வந்தாக வேண்டிய கட்டாயம்.

அதே நேரம் சுந்தரியும் அந்த பஜனை கூடத்தை நெருங்கி இருக்க, மைக் பானுவிடம் மாறியதனால் இம்முறை பாடும் முறை பானுவினுடையதாகியது.
பானு பாடிக்கொண்டிருப்பதை கண்ட சுந்தரி அவள் தான் முதல் பாடலும் பாடினாள் என நினைத்துவிட்டார்.

அவர் காதில் இப்போது பாடும் பானுவின் குரலும் முன்னைய குரலிலின் பிரமை.
அந்த குரல் தன் இனிமையால் அவள் மூளையை வேலை நிறுத்தம் செய்திருந்தது.
முதல் குரலுக்கும் அவள்தான் சொந்த காரி என முடிவே பண்ணிவிட்டாள்.

என்ன தான் முகிலன் வைராக்கியமாக இருந்தாலும்,
மனதின் ஊந்துதலால் அந்த இடந்தில் அமரமுடியாமல் "சரி ஒருமுறை அது யார் என்று தான் பார்த்து வருவோமே!.. என்ன நேர்ந்துவிட போகிறது?. தூரத்தில் நின்றே பார்த்து விட்டு வருவோம்."
என எழும் நேரத்தில் வேறு குரல் ஒலி பெருக்கியில் கேட்க, அது அவனுக்கு தெளிவாகவே தெரிந்தது இது முன்னர் பாடியவள் குரலில்லை என்று.

இருந்தும் பாடியவள் அந்த கூட்டத்தில் தானே இருப்பாள். என நினைத்தவன், தனது மேல் ஆடையை களைந்து இடுப்பில் கட்டியவாறு வர, உள்ளே இருந்த வேகமாக வந்த பெண்ணுடன் மோதிக்கொண்டான்.

தான் தான் வேட்டியில் கவனத்தை வைத்ததனால் கவனிக்காது மோதிவிட்டோம் என உணர்ந்து மன்னிப்பு வேண்டலாம் என நினைத்து அவளை ஏறிட்டவனை முந்திக்கொண்டவள்.

மோதியதும் விழுந்து சிதறிய தனது பழைய மாடல் ஃபோனை ஒவ்வொரு பகுதியாக தரையில் இருந்து பொறுக்கி எடுத்தவள்
பாதிகவனத்தை ஃபோனிலும், மீதியை அவன் மேலும் வைத்தவள்,
"மன்னிச்சிடுங்க சார்.....
நான் அவசரமா ஃபோன் பேச வந்ததால எதிர வந்த உங்களை கவனிக்கல" என்று கூறி அதே அவசரத்துடன் ஃபோனின் பாகங்ளை பொருத்தி ஆன் செய்தவாறு அந்த இடத்தை விட்டு அகன்று சற்று கூட்டம் குறைந்த பகுதிக்கு சென்று பேசலானாள்.

இங்கு முகிலனுக்கோ பெரும் ஆச்சரியம்.
பெண்கள் என்றாலே திமிர் பிடித்தவர்கள், கொஞ்சம் அழகென்றாலே தலைக்கணம் பிடித்து திரிவார்கள், ஆனால் இவளோ நான் மோதியதற்கே சாரி கேக்கிறாளே!... என நினைத்து அங்கு வந்த பெண்களுடன் அவளை ஒப்பிட்டு பார்க்கலானான்.

எல்லா பெண்களும் தங்களை இன்னும் அழகாக காட்டுவதற்கு அதிக ஒப்பனையுடனும் உடல் பூராகவும் பலவகை ஆபரணம் அணிந்தும், கலாசார உடையாயினும் விலை உயர்ந்ததாகவும் உடுத்தும் முறைகூட ஏதோ பேஷன் ஷோவுக்கு போவதை போலவே தயாராகி வந்திருந்தனர்.
ஆனால் இவள் மட்டும் எந்த வித ஆடம்பரமுமின்றி சர்வசாதரணமாக காட்டன் புடவையிலேயே அழகாக இருக்க கொஞ்ச நேரம் அவளையே பார்த்தவன் மன கண்ணில் வேறு ஒரு பெண்ணின் உருவமானது தோன்றி மறைய,
எல்லா பெண்களும் ஒரே போல தான். என நினைத்தவன் தன் வேண்டாத சிந்தனைகளை உதறி தள்ளியவனாய் முன்னர் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்றமர்ந்தான்.

பேசி முடித்து உள்ளே வந்தவள், பானு அருகில் அமர்ந்து மீண்டும் பஜனையில் கலந்து கொண்டாள்.
பஜனை முடிந்ததும் வெளியே வந்தவர்கள் "பேகலாமாடி..." என மேகலா வினவ.
"கொஞ்ச நேரம் மணல்ல இருந்திட்டு அப்படியே கோவில் பின் பக்கம் மணி கடைகளையும் பாத்திட்டு போவோம்." என பானு கூற.
"ஏன் நீ ஏதாச்சும் வாங்க போறியா?..."
"லூசு!.. இங்க வந்தவங்க எல்லாருமே வாங்கிறாங்க என்ன? " என சின்னவள் பதில் கேள்வி கேட்க.
"இங்க பார் பானு!... மத்தவங்க பேச்சு நமக்கு தேவையில்ல..
நாம எப்பிடி இருக்கணும்னு மட்டும் பாப்போம். நீ ஏதாவது வாங்க போறியா .......?. அப்டினா நான் வரேன்.
சும்மா வாங்கலனா அங்க கடை போட்டவங்களுக்கு இடைஞ்சல் பண்றதா போயிடும்.
அவங்களும் ஏதோ நீ வாங்க தான் போறேன்னு எல்லாத்துக்கும் விளக்கம் தந்திட்டிருப்பாங்க.
நீ எதுவுமே வாங்கலனா எப்பிடி இருக்கும்?...
இதே அவன் வாங்கிறவங்களுக்கு விளக்கம் சொன்னான்னா அவனுக்கு காசாவது வரும்.
இங்க கடை போட அரசாங்கம் இருபத்தைஞ்சு நாளுக்கும் நாற்பது ஆயிரம் ரூபா வாடகை கேக்கிறாங்க தெரியுமா?......
பேசாம அவங்க வியாபாரத்த கெடுக்காம இப்பிடி உக்காந்திட்டு போகலாம்." என நீண்ட விளக்கம் சொல்லி முடித்தவளிடம்.

"அம்மா தாயே!... தப்புத்தான் நான் ஒத்துக்கிறேன். அதுக்காக இவ்ளோ பேசி உன் தொண்ட தண்ணிய எதுக்கு வத்தவச்சிக்கிற?.." என்றவள்.

"சரிடி!.. கடை கிட்ட போயி விளக்கமெல்லாம் கேக்க வேண்டாம். சும்மா நடந்திட்டே என்னென்ன கடை போட்டிருக்காங்கன்னு வேடிக்கையாவது பாத்திட்டு வரலாமா?.. பிளீஸ்டி....." என கெஞ்ச.

"சரி ரொம்ப தூரம் போகவேண்டாம். பக்கமா போயிட்டு திரும்பிடலாம். அப்புறம் கூட்டமா இருக்கும் நெரிசிடுவாங்க." எங்க.
"எங்க வீட்டில ரண்டு கிழவிங்களோட நான் படுர பாடு!..." என மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாகவே சொன்னாள்
தலையில்செல்லமாக ஒரு கொட்டு வைத்தவள்,
"வா வந்து தொலை" என எழ போகவே.

"பெண்ணுங்களா...!" என்ற குரல் மிக அருகில் கேட்டதும் திரும்பி பார்தனர்.
ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் நிற்பதை கண்டவர்கள்,

"சொல்லுங்க ஆர்ன்டி" என்க
"ஏம்மா எங்கயாச்சும் அவசரமா கிளம்பிட்டிங்களா?.. இப்படி இருந்து கதைக்கலாமே?" என அவர்கள் முதலில் இருந்த இடத்தை காட்டி உற்கார சொல்ல.

பெரியவர் கூறுவதை தட்டமுடியாதே அவரருகிலே அமர்ந்ததும்
"நீங்க இங்க எப்பவுமே பஜனை பாடுவிங்களா?......." என வினவினார்.
உடனே பானுவும் "ஓம் ஆர்ன்டி. நீங்களும் எங்க கூட இண்டைக்கு பஜனை பாடினீங்களா என்ன?" என ஆர்வமாக.
"இல்லம்மா...! எனக்கும் பாட விருப்பம் தான். ஆனா பாடவெல்லாம் வராது."
"ஓ....." என்றவள் "அப்ப ஏன் கேட்டிங்க ஆர்ன்டி?.." என்க.

"சாமி கும்பிடும் போது அழகான குரல் கேட்டிச்சு. அது யாரெண்டு பாக்க வந்தப்போ தான் அது நீ என்று தெரிந்தது." என பானுவை பாராட்டுவது போல் அவர்கூற.
"தாங்க்ஸ் ஆன்டி.." என்றவள் "என்னை விட இவ ரெம்ப நல்லா பாடுவா. நீங்க கேக்கலையா." என்க.

"இல்லையேம்மா...!.
"எனக்கு முன்னாடி பாடினதே இவ தான் ஆன்டி" என்கவும்.
"ஓ..... நான் அதை கவனிக்கலம்மா.
ஆனா நீ பாடினது எல்லாருமே கவனிச்சிருப்பாங்க. அவ்வளவு நல்லா இருந்திச்சு." என்றவர்,

"நீங்க சின்ன பெண்ணா இருக்கிங்க.
வயசு போனவங்க கூட இருந்து பஜனையெல்லாம் பாடிட்டு........
உங்க வயசில யாரையுமே பஜனை கூடத்தில் காணலையேம்மா!.. உங்க வயசு பொண்ணுங்களை பாருங்க, எப்பிடி சந்தோஷமா திருவிழாவை கொண்டாடுறாங்க." என அவர் கூற..

"ஐயோ ஆர்ன்டி!.. எங்களுக்கு அது சுத்தமா சரி வராது. அதிலையும் இவ இருக்காளே!... சுத்தம்!.. ஏதாச்சும் ஒண்ணு சொல்லி பாருங்க, அதுக்கு பாட்டி மாதிரி நிறைய விளக்கம் தருவா." என மேகலாவை வம்பிழுத்தவளை கண்டு சிரித்த சுந்தரி.

"உனக்கு இவ யாரும்மா?." என்க.
" அக்கா தான் ஆர்ன்டி!.. ஆனா அக்கா என்கிறதை தாண்டி நல்ல தோழி." என பெருமையாக சொல்ல.
அவள் பேச்சில் வசீகரிக்க பட்ட சுந்தரி
"நீங்க இருக்கிறது எங்கம்மா?"
"பக்கம் தான் ஆர்ன்டி . ஒரு ஐநூறு மீற்றர் நடந்து போனா வீடு வந்திடும்."
"ஓ... வீட்டு விலாசம் தரலாமேடா!.. !" என சட்டென அவர் கேட்டதும்.

"ஏன் ஆர்ன்டி எங்க வீட்டு விலாசம்?" என பானுவும் சிந்திக்காமல் கேட்க.

"ஏன்மா இவ்வளவு பழகிட்டோம். ஊருக்கு வரும் போது உன்க வீட்டுக்கும் வந்து பேவேன்ல்ல. ஏன் என்னை உங்க வீட்டுக்கு கூப்பிட மாட்டிங்களா?" என சுந்தரி வருத்தமாக வினவினார்...

அவரது வருத்தம் கண்டவள் "ஐயோ ஆர்ன்டி...! தாராலமா வாங்க. திடீர்ன்னு அட்ரஸ் கேட்டதும் தான் ஏன்னு கேட்டுட்டேன்" என தடுமாறிய புன்னகையுடனே கூற.

மேகலாவிடம திரும்பியவர் "இரண்டு பேருமே அவ்வளவு அழகா இருக்கிங்க. வீட்டுக்கு போயி அம்மாகிட்ட சுத்தி போட சொல்லுங்க.
எல்லாரோட கண்ணும் உங்க மேல விழுந்திருக்கும். இந்த சின்ன வயசில எவ்வளவு பெரிய சிந்தனை." என பெருமை பேசியவர்,

"ஏன்மா உன் தங்கை மட்டும் தான் பேசுவாளா?. நீ பேசவே மாட்டியா?" என்க.
"அப்படில்லாம் இல்ல ஆர்ன்டி.... நானும் பேசுவேன்." என சங்கடமாக புன்னகைத்தவளுக்கு உதவ வந்தாள் பானு.

"அவ இப்பிடிதான் ஆர்ன்டி . பழகும் போது நல்ல பொண்ணு மாதிரித்தான் தெரிவா,
கொஞ்சம் போச ஆரம்பிச்சான்னா உங்களுக்கே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவா, பாத்து நடந்துக்கோங்க."
என எச்சரிப்பதை போல் கேலி பேசவும்
"நல்லா பேசுறேம்மா நீ....! சரி அடுத்த தடைவை உன் வீட்டில சந்திக்கிறேன்." என்றவர், விலாசத்தையும் மறக்காமல் கேட்டு வாங்கிக் கொண்டு இருவரிடமிருந்தும் விடைபெற்றார்.

சங்கமிப்பாள்...........
 

Balatharsha

Moderator
அத்தியாயம்.08



இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில் வேலை முடிந்து வீடு வந்த சகோதரிகள் இருவரும் களைப்பு தீர பெற்றோருடம் வெளிஹாலில் இருந்து பேசியவர்கள்



"இரவு என்னம்மா சமையல்?" என்றவளிடம்,



"இனிதான்ம்மா..! எதாவது பாத்து செய்யணும்." என்க.



பானுவோ தனக்கு உடம்பு முடியவில்லை என பொய் சாட்டு சொல்லி நழுவிவிட , அவளை விட்டுவிட்டு தாயும் மகளுமாக சமையல் அறை சென்றார்கள்.



உள்ளே சென்றவர்கள் "இடியாப்பம் அவிச்சிடலாம்மா" என்றவாறு, அதற்கு தேவையான மாவை பிசைய ஆரம்பக்க, அவள் அருகில் அரிவாள் மனையை போட்டு அமர்ந்த புஷ்பா



"மேகலா..." என தடுமாறினார் அவளிடம் எப்படி ஆரம்பிப்பதென்ற தயக்கத்தில்.



"சொல்லுங்கம்மா...! என்ன அசதியா இருக்கா?....இடியாப்பம் தானே நீங்க போங்கம்மா! நான் பாத்துக்கிறேன்." என்றவளிடம்,



"அது இல்லடா!... அம்மா உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்டா."என்க.



"என்னம்மா சொல்லுங்காே!." என கவனத்தை மாவிலிருந்து எடுக்காமலே வினவயவளிடம்,



"யாராச்சும் உங்க இரண்டு பேரையும் கோவில்ல சந்திச்சு பேசினாங்களாடா?."



" அப்பிடி எதுவும் நினைவில்லையேம்மா!.. எதுக்கும்மா கேக்குற?. யாராச்சும் ஏதும் தப்பா சொன்னாங்களா?..." என புரியாது சின்னவள் கேட்க.



"இல்லடா!... என் பெண்ணுங்களை யாரும் தப்பா சொல்லிட மாட்டாங்க.



அப்பிடி என் பெண்ணுங்களும் எந்த சந்தர்பத்திலையும் நடந்துக்க மாட்டங்கன்னு அம்மாக்கு தெரியாதா?.



அம்மா அதுக்காக கேக்கலம்மா!....



யாரோ ஒரு அம்மா உங்க ரண்டு பேரையும் பாத்தாங்களாம்.,



உங்க கூடவும் பேசினாங்களாமே?....



உங்க ரண்டு பேரோட பாட்டும் நல்லா இருந்திச்சுன்னு பாராட்டினாங்களாம்." என்று அவர் சொல்லிக்கொண்டு போக.



அப்போது தான் நினைவு வந்தவளாக



"ஆமாம்மா!.. பானு கூட அவங்ககிட்ட வாயாடிட்டே இருந்தாம்மா!. இப்போ தான் நினைவு வருது.



உங்களுக்கு இதை யாரும்மா சொன்னாங்க?" என்க.



"இங்க ஒரு தரகரு வந்தாரு மேகலா.



அந்த அம்மாவுக்கு உன்னோட தங்கையை



ரொம்ப பிடிச்சு போச்சாம்.



அது தான் அவளை பொண்ணு கேட்டு தரகரை அனுப்பினாங்க.



நல்ல வசதியாம்!....



மாப்பிள்ளை கூட ஏதோ பெரிய பெரிய தொழில் எல்லாம் செய்யிறாராம்.



எங்களுக்கு சம்மதம் என்டா தன்னோட பையனிட்டையும் சம்மதம் வாங்கிடலாம்ன்னு பேசிட்டு வர சொன்னாங்களாம்." என புஷ்பா தகவலை கூற.



" நிஜமாவாம்மா சொல்லுறிங்க?....



சூப்பர்ம்மா........ அந்த அம்மாவும் ரொம்ப நல்லவங்க போல தாம்மா இருக்காங்க.



பானுவுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா அத விடவேற என்னம்மா வேணும்?.



நீங்க ஓகே சொல்லிட்டிங்க தானே!....



இப்பவே போய் நான் பானுகிட்ட சொல்லுறேன்மா." என்று அவள் சந்தோஷ துள்ளளுடன் கையில் பிசைந்த மாவையும் கழுவாது எழுந்து கொண்டவளை தடுப்பது போல.



"இல்லடா!.. அம்மா வேண்டான்னு சொல்லிட்டேன்." என சட்டென கூறி தலை கவிழ்ந்தவரை கேள்வியாக பார்த்தவள்,



"என்னம்மா சொல்லுறீங்க?... எதுக்கு அப்பிடி சொன்னீங்க?.



எத்தனை தடவை எங்கிட்டையே சொல்லி வருத்தப்பட்டிருப்பீங்க. எப்பிடி உங்க ரண்டு பேரையும் கரைசேர்க போறனோ தெரியல்லன்னு.



இப்போ நல்ல சம்மந்தம் தேடி வரும்போது எதுக்கும்மா வேண்டாம்ன்னு சொன்னீங்க?." என சற்று கோபமாக கேட்டவள், எதுவே நினைவு வந்தவளாய்,



"ஏம்மா!... வரதச்சனை நிறைய கேட்டாங்களா?.



அது தான் வேண்டாம் என்டிங்களா?. இதை யோசிக்காமல் எதுக்கு வேண்டாம் என்டிங்கனு அறிவு கெட்ட தனமா கேட்டிட்டிருக்கேன்." தாய் வேண்டாம் என்றதற்கு இது தான் காரணமாக இருக்குமோ என நினைத்து கூறியவள்.



"சரி விடுங்கம்மா!.. எங்க வசதிக்கு ஏத்தாப்போல வரன் வராமலா போக போகுது" என தாயை சமாதாணம் செய்வதற்காய் கூறவும்.



"அதுக்காக நான் வேண்டாம்னு சொல்லல்ல மேகலா.



அவங்க வரதட்சணைன்னு ஒரு பைசா கூட கேக்கலடா." என்க



"அப்புறம் எதுக்கும்மா நல்ல இடத்தை வேண்டாம் என்டிங்க." என கோபமாக கேட்க.



"அவள் அக்கா நீ இருக்கும் போது எப்பிடிம்மா அவளுக்கு கட்டி கொடுக்க முடியும்?.



ஊரும் எங்களை தான் தப்பா பேசும்.



அதை விட நாளைக்கு உனக்கு கல்யாணம் பேச்சு வரப்போ அக்கா இருக்கும்போது தங்கைக்கு எப்பிடி கட்டி கொடுத்தீங்க?.



பெண்ணுக்கு ஏதாவது குறையானு என்னை பாத்து யாரும் கேட்டிட கூடாதும்மா.



இவளுக்கு இப்போ என்ன அவசரம். விடுமா...! எது கடவுள் விதிச்சிருக்கானோ அது தான் நடக்கும்." என்ற புஷ்பாவிடம்.



"அம்மா புரியாம பேசாதிங்க.



அந்த காலத்தை போல இப்போ இல்லை.



பாக்க பொண்ணு நல்லா இருந்தா போதும் குறையே இருந்தாலும் ஏத்துப்பாங்க."



"ஊரு என்ன பேசும்னு வாழ்ந்தா ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா தான்மா பிறக்கணும்.



ஏன்னா அவங்க என்ன நினைக்கிறாங்க, என்ன பேசுறாங்கனு அவங்களுக்கே தெரியாது.



இன்டைக்கு ஒண்ணு சொல்லுவாங்க.



அதே வாயால நாளைக்கு ஒண்ணு பேசுவாங்க.



அவங்களா எங்களை பாத்துக்க போறாங்க?."



"அதோட நாங்க தான்மா ஊரு என்ன நினைக்கும்ன்னு பயந்திட்டே இருக்கோம். ஆனா ஊரு நம்மளை பற்றி கொஞ்சமும் நினைக்காதும்மா. அவங்க அவங்க தங்களோட பிரச்சினையை பாக்கவே நேரம் சரியா இருக்கும்.



இதில நீங்க வேற ஊருக்கு பயந்திட்டு." என்றவள்



"இப்பிடி ஒரு நல்ல இடம் தானா வந்த அமையும் போது வேண்டாம்ன்னு சொல்லி இருக்கிங்களே!..



நீங்களே பானுக்கு வந்த நல்ல வாழ்க்கையை வேண்டாம்ன்னு கெடுத்து வைச்சிட்டீங்களேம்மா!......



நாங்க தான் இப்போ இவ்வளவு கஷ்ரப்படுறோம். அவளாவது நல்லா இருக்க வேண்டாமா?.



முதல்ல அந்த கல்யாணத்தை பேசி முடிங்க.



எப்பிடியாவது என் வாழ்க்கையை நானே அமைச்சுப்பேன். எனக்கென்னு இந்த உலகத்தில ஒருதன் பிறக்காமலா போயிட போறான்.



ஆனா ஒண்ணும்மா நான் அடிச்சு சொல்லுவேன். எனக்காக என்ன ஏத்துக்கிற மாப்பிள்ளை வருவாரும்மா!.



யாரு என்ன சொல்லுவாங்கனு யோசிக்காம அவ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுங்க." என்க.



"இருந்தாலும் எனக்கு சரியா படலம்மா வேண்டாம்..



எனக்கு நீ வேற, அவ வேற இல்லை. உனக்கு முதல் கல்யாணம் முடியட்டும், அவளுக்கு அப்புறம் பாப்போம். வயசா போயிட்டுது அவளுக்கு?" என மறுக்க.



"ஐயோ அம்மா என்ன பாத்திட்டு இருந்தா இப்பிடி ஒரு இடம் மறுபடியும் கிடைக்காதும்மா!....



அத விட நாளைக்கு எனக்கு நீங்க நல்ல இடத்தில கட்டி வைச்சு,



அவளுக்கு இப்போ வந்த இடம் மாதிரி அமையல்லன்னா என்னோட மனச்சாட்ச்சியே என்ன கொண்டிடும்மா!. என்னால அவ வாழ்க்கையே வீணாக போச்சென்று." என கூற,



"எதுக்கு மேகலா பெரிய பெரிய வார்த்தையா பேசிற?.....



சரி நான் அந்த தரகரிட்டையே சம்மதம் சொல்லிறேன்." என்றதும்,



"அம்மான்னா அம்மா தான்!....." என அவரை கொஞ்சியவள் சமையல் செய்து விட்டு சாப்பிடும் போது பானுவுக்கும் கல்யாண தகவலை சொல்ல.



மேகலாவை பார்த்தவள், அவளது கவனமோ சாப்பிடுவதிலே இருக்க,



"எனக்கு இதில் இஷ்டம் இல்லை."



என்று ஒரு வார்த்தையில் நிறுத்தியவள். சாப்பாட்டை பாதியிலே வைத்துவிட்டு எழுந்துவிட்டாள்



"சரிதான் இவ அடம் பிடிக்க ஆரம்பிச்சிட்டா, இனி இந்த பேச்சை இப்படியே நிறுத்திட வேண்டியது தான்."

என


வேல் முருகனும் இந்த பேச்சிலிருந்து பின் வாங்கி கொள்ள.



தாயை திரும்பி பார்த்தாள்,



அவராே எங்கே தேடி வரும் நல்ல வரன் கைமீறி போய் விடுமோ!.. என வேதனை கொள்வது தெரிய,



"அம்மா!.." என அவளை ஆறுதலாக தட்டி கொடுத்தவள், கண்களால் நான் சம்மதிக்க வைக்கிறேன். என ஜாடை காட்ட,

அவ அடத்துக்கு முன்னால


நடக்கிற காரியமா?.... என்பது போல் அவரும் எழுந்து கொண்டார்.



ஏனெனில் பானு ஒரு விடயத்தை வேண்டாம் என்றால் என்ன பாடு பட்டு திணித்தாலும் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது.



அந்த அளவுக்கு அடம்பிடிப்பாள் பானு.



பானுவின் அறை சென்ற மேகலா அவள் நாளை வேலைக்கு தயாராவதற்கான தனது உடையை அயன் பிடித்துக்கொண்டிருக்க,



"எதுக்கு சாப்பிட்ட குறையில எழுந்து வந்த?." என கோபமாக கேட்டவள் பேச்சு காதினில் வாங்காதவள் போல நின்றவளிடம்,

"உன்னை தான் கேட்கிறேன் பானு.

அமைதியா நிக்குற,..


சொல்லுடி!..." என்க.



"எனக்கு இந்த பேச்சு பிடிக்கல. அதான் அமைதியா இருக்கேன்."



"எந்த பேச்சு?.. எதுக்கு சாப்பிட்ட குறையில வந்தேன்னு கேட்டதா?. இல்லை சாப்பிடும் போது பேசினதா?." என மேகலாவும் விட்டுகொடாமல் வினவ,



"ரண்டும் பிடிக்கல்ல. போதுமா?... பேசாமல் போயி தூங்கு. நாளைக்கு பேசிக்கலாம்." என அவள் எரிந்து விழ,



"எதுக்கு பிடிக்கல உனக்கு?... அவங்க உனக்கு கெட்டதா நினைக்க போறாங்க?..



ஏதோ பேச கூடாததை பேசினது போல எந்திருச்சு வர.



இப்பாே இல்லனனாலும் எப்பவாவது இப்பிடி ஒரு சம்பவத்தை சந்திச்சு தான் ஆகணும்." என்றவளிடம்



"ஏன் நீ சந்திக்க மாட்டியா என்ன?..... உனக்கு நடக்கட்டும் அப்புறம் நான் பாத்திக்கிறேன்."



"பைத்தியக்காரி மாதிரி பேசாதடி!.

இப்போ தேடி வந்தது உன்னை. எனக்கு எப்போ வருதோ அப்பாே பண்ணிக்கலாம்


." என எதிர் வாதம் மேகலா புரிய.



"யாருக்கு கதை அளக்குற?.



எனக்கு தெரியாத நீ என்ன செய்வன்னு.



சின்ன வயசில எனக்கு சொல்லல.



காலம் பூராவம் உங்க கூடவே வாழ்ந்துடுவேன்னு." என்க.



"ஏய் லூசு அது அறியாத வயசில விளையாட்ட சொன்னதை இப்போ சொல்லிட்டு திரியுற மக்கு." என திட்ட.



"எனக்கு தெரியும். நீ இப்பாே என்னை சம்மதிக்க வைக்கத்தான் இப்பிடி பேசுற. அப்புறம் நீ கட்டிக்காம இப்பிடியே இருந்துடலாம்னு நினைக்கிற?." என அவள் பிடிவாதமாக நிற்க.



"சின்ன பிள்ளை மாதிரி பேசாத பானு.



இது உனக்கு அமைஞ்ச சம்மந்தம். என்னையும் கேட்டு யாராச்சும் வந்திருந்தா நானும் ஒத்திட்டிருப்பேன்.



உன்னை போலல்லம் அடம் பண்ண மாட்டன்." என்க



"சரி அப்போ நானும் இவங்களையே கட்டிக்கிறேன். ஆனா உன் கல்யாணத்துக்கப்புறம் சரிதானா?" என்க.



"பெரியவங்க போல பேசாத பானு.



நீ பொறுத்து இருப்ப.



இல்லன்னு சொல்லல்ல. அவங்க அப்பிடில்லடி!. அவங்களுக்கு கல்யாணம் நடந்தாகணும். புரிஞ்சுக்கோ...! " என எடுத்து கூற.



"அப்பிடி இல்லன்னா போகட்டுமேன்.



நல்ல பொண்ணா பாத்து கட்டி வைக்கட்டும்.



எனக்கு உன்கூட, இல்லன்னா உனக்கு முடிஞ்ச அப்புறம் செய்து வைக்கட்டும்." என சாதாரணமாக பானு கூற.



"இப்போ உனக்கு நான் தான் பிரச்சினையா இருக்கேனா பானு?....." என கோபமாக கத்தியவள்,

"சரிடி..!


இப்போசொல்லுறேன் கேட்டக்கோ!...



ஆமா எனக்கு கல்யாணத்தில விருப்பமில்லை தான். நான் செஞ்சுக்கவும் மாட்டேன் தான். ஆனா இப்போ நீ ஓகே சொல்லல்ல அப்பிடினா யாருக்கும் நான் தொந்தரவாயும் இருக்க மாட்டேன்.



உனக்கு நான் இங்க அம்மா, அப்பா கூட இருக்கிறது பிடிக்கலனா உன் இஷ்டம்.



யாருக்கும் நான் சொல்லாம இந்த ஊரை விட்டே போயிர்றேன்.



அப்புறம் நான் உனக்கு முன்னடி இருக்கேன். என் கல்யாணத்துக்கு அப்புறம் தான் நீ கட்டிப்பேன்னு சொல்ல மாட்டேல்ல." என்றவள் வேகமாக அவள் அறையிலிருந்து வெளியேறி தன் மாடியறை புகுந்தாள்.



பானுவிற்க்கு திக்கென்று ஆனது.



அவளுக்கு முன்னாடியே தெரிந்த விடயம் தான். சின்ன வயதிலிருந்து மேகலா எந்த புது உறவும் வேண்டாம் .என கூறி கொண்டே இருப்பாள்.



அப்போது பானுக்கு எந்த உறவை அவள் கூறுகிறாள் என்று புரியாது.



வளர வளர அந்த பேச்சை மேகலா எடுப்பதில்லை.



இருவருக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம் என்ற போதிலும் மேகலாவினுடைய நடத்தைகள் எப்போதும் பெரியவர்கள் சிந்தனை போல் தான் இருக்கும்.



பானுவிற்கு அந்த பேச்சின் அர்த்தம் புரிய வர,



அக்கா என்ன தான் பிடிவாதமாக நின்றாலும் தன் வாழ்க்கையை பயம் காட்டி, தன் திட்டத்தை நிறைவேற்றி விடலாம் என நினைத்திருக்க .இவள் தன்னை பயம் காட்டி செல்ல திடுக்கிட்டாள்.



எங்கு அவள் சொன்னதை செய்து விட்டால்!.....



"போய் விடுவியா என்னை விட்டு?.. பாக்கிறேன் நீயா?... நானான்னு?...."



என அவள் மாடி அறை தேடி சென்றாள்.



மேகலாவிற்கு தெரியும் எப்படியும் இவள் வருவாள் என்று.



தினம் இது நடப்பது தானே!...... பானு மேகலா மீது கோபம் கொண்டாலும் இல்லை, மேகலா பானுவிடம் கோபம் கொண்டாலும் மாறி மாறி ஒருவர் அறை தேடி ஒருவர் வருவது வழமையே.



இன்று தன்னை இவ்வளவு பேச வைத்தவளிடம் தான் பேச போவதில்லை என நினைத்தவள் போர்வைக்குள் தன்னை முழுமையாக புகுத்தி கொண்டு தூங்குவது போல் நடிக்க,

தூங்குபவள் போல போர்த்து மூடி கிடந்தவளை கண்டவள், "இவ ரொம்ப தான் பண்ற" என்று முணுமுணுத்தவாறு



அவள் அருகில் சென்று போர்வையை இழுத்து தூக்கி எறிந்தாள்.

அவளின் செய்கையில் உண்டான கோபத்தில் பானுவை முறைத்தவள்,


மீண்டும் போர்வை எடுத்துவந்து போர்வைக்குள் புகபோனவளிடமிருந்து போர்வைை இழுக்க.



"உனக்கிப்போ என்ன வேணும்?..." என்க.



"எதுக்குடி அப்பிடி பேசினா?....அவ்ளோ பெரிய மனுசி ஆகிட்டியா?.....



போயிடுவியா நீ எங்களை விட்டுட்டு?....



கொண்டிடுவேன். இனி இப்பிடி பேசினேன்னா!.." என்றவள்,

"அப்பிடி பேசினத்துக்கு


சாரி கேளுடி!.." என



அவள் அடுக்கடுக்காய் கேட்ட கேள்வியும் கேட்ட விதமும் சிரிப்பை வரவைத்தாலும் மேகலாவும் வீம்பாக



"எதுக்கு உன்கிட்ட நான் சாரி கேக்கணும்?.



நான் தப்பு செய்த மாதிரி எனக்கு படல. அதனால நான் கேக்கிறதா இல்லை."என விட்டேறியாக மேகலா கூற,



"என்னடி ரொம்ப ஓவரா போற?. ஏய் இங்க பாரு இப்பிடியே பேசினேன்னா நான் நானவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன். கொன்னுடுவேன்." என்க.



"ஆமாடி!.. நான் அனாதை தானே யாரும் ஏதுவம் செய்யலாம். எனக்காக கேக்க யாரிருக்கா ?." என்றவளிடம்



"ஏன்டி இப்பிடி பேசுற? உனகென்ன நான் சம்மதம் சொல்லணும் அவ்ளோ தானே!" என அவள் பேச்சில் அழவே வெளிக்கிட்டாள் பானு.



"ஏய் ....ஏய் ....! லூசு நான் சும்மா தானேடி சென்னேன்." என அவளை கட்டி கொண்டவளை தள்ளி விட்டவள்.



"நான் உனக்கு கெட்டது நினைச்ச போல தானே இப்பிடில்லாம் பேசி என்னை கஷ்ட படுத்துற.



எப்பவாச்சும் எங்க வாயால நீ சொன்னா போல சொல்லி இருப்போமா?...

நீதான் உன் மனசார எங்களை உறவா ஏத்துக்கல.


அதான் இப்பிடி பேசுற." என்றவள்,



"யாருக்காச்சும் இந்த ஊரில நீ வேற்று தாய் பிள்ளை அப்பிடினு தெரியுமா?..... என் சொந்த அக்காவா இருந்தா கூட இப்பிடி பாசம் வைச்சிருப்பனோனு தெரியாதுடி!..
என்னடி குறை வச்சோம்னு இப்பிடி ஒரு வார்த்தை பேசினா?...



அம்மா அப்பாக்கு மட்டும் இது தெரிஞ்சுது செத்துடுவாங்கடி!... இப்பிடி நீ சொன்னானு தெரிஞ்ச அடுத்த நிமிஷம்." என விம்மலிடையே கூறியவளிடம்.



"சாரிடி சாரி!.." என்று மேகலா அவளை மறுபடியும் அணைக்கவும் அவளும் அதற்கு அடங்கி போக.



"சரி சொல்லு!.. எதுக்கு இப்பிடி கல்யாணம் கட்டிக்க மாட்டேன் என்கிற.?.." என்க



அவள் அமைதி காக்க,



"இன்னும் நீ என்னை உன் தங்கையா ஏற்கல அப்பிடி தானே?..." என்றவளிடம்,



"இல்லடி லூசு...! இன்னொரு மேகலா இந்த உலகத்துக்கு வேண்டாம். அதனால தான்." என்க.



"என்ன உலர்ற?....."



"இல்ல பானு!.. என்னோட பிரச்சினை உனக்கு தெரியும். எனக்கு பின் பக்கம் பிரச்சினை இருக்கு. இந்த ஊணத்தோட என்னை யாரும் ஏத்துக்க மாட்டாங்க.



அப்பிடி ஏத்துக்கிட்டாலும் நாளைக்கு குழந்தை பிறக்கும் போது நிச்சயம் பின்னால அடி பட்டதனால எனக்கு ஏதாவது ஆகிடிச்சுன்னா என் பிள்ளை என்னை போலவே ஆயிடும்டி!.. வேண்டாம்!...



என்னால ஒரு உயிர் பூமியில வந்து கஷ்ட பட நான் அனுமதிக்க மாட்டேன்.



எனக்கு எல்லா சந்தோசத்தையும் தர நீ இருக்கிறியேடி!.. அதுவே எனக்கு போதும்.



நீ நிறைய பெத்து தா!.. இந்த பெரியம்மா எத்தனை வேணும்னாலும் வளர்த்து தாறேன்." என்றவளை ஆர தளுவியவள்,
"நீயே எல்லாத்தையும் தப்பா கணிச்சு முடிவெடுக்காதடி.



உன்னோட அப்பாக்கு விதியை எதிர்த்து போராட தெரியலை.



ஆனா எல்லாரும் அப்படி இல்லை.



இதை கூடிய விரைவில புரிஞ்சிப்ப" என அவள் கன்னத்தில் முத்தமிட்டு கடித்து விட்டு "நான் போய் தூங்க போறேன்." என்றவளை "இங்கயே படுத்துக்கோ" என இழுத்து தனதருகில் படுக்கவைத்தவள் தானும் தூங்கி போனாள்..







சங்கமிப்பாள்............
 

Balatharsha

Moderator
அத்தியாயம் 09



விடிந்ததும் மேகலா பானுவின் சம்மதத்தை தாய்க்கு தெரிவித்ததும் அவரும் அளவில்லா மகிழ்ச்சியில் மகளின் முகமாற்றத்தை கவனிக்க தவறிவிட்டார்.



என்னதான் தனது தமக்கையிடம் அவள் கோபத்தை குறைக்க சம்மதம் தெரிவித்தாலும் அன்னை தன்னிடமும் "உனக்கு விருப்பம் தானா?" என்று ஒரு வார்த்தை கேட்பார், அப்போது அவளுக்காக தான் சொன்னேன். அவளது திருமணத்தின் பின் என் திருமணப் பேச்சை ஆரம்பியுங்கள். என கூறலாம் என நினைத்திருக்க.



புஷ்பாவோ மேகலா சொன்னதை வைத்து அவளிடம் ஒரு வார்த்தை கேட்காமல் தரகரிடம் சம்மதம் தெரிவிக்க, அடுத்த கட்டத்திற்கு பேச்சு நகர்ந்தது.



அதனால் உண்டான கோபத்தில் புஷ்பாவுடனான பேச்சை நிறுத்தினாள். அப்போதாவது தாய் தன்னிடம் என்னவென்று கேட்பார் என நினைத்திருக்க, அதற்கும் மேகலா தடை போட்டாள்.



"இப்போ நீங்கள் பேச போனா அவ திரும்ப முருங்கை மரம் ஏறுவா. எல்லாப் பேச்சு வார்த்தையும் முடியட்டும் பிறகு அவளை சாமாதானம் செய்யலாம். இதெல்லாம் அவளோட நல்லதுக்குன்னு தெரியிறப்போ அவளாகவே பேசுவா. கொஞ்ச நாள் பொறுங்கம்மா." என கூற.



அவருக்கும் மேகலா சொல்வதே சரியென பட்டதால் அவரும் அவளை கண்டு கொள்ளாது விட்டு விட்டார்.



தரகர் மூலம் பெண் வீட்டார் சம்மதம் அறிந்த சுந்தரி,



இனிமேல் தான் தனக்கு பெரிய சிக்கலே என எண்ணினார்.



ஆம் அவரத மகன் சம்மதம் கிடைக்க வேண்டுமே!..



அவன் தான் எதற்கும் பிடி கொடுக்காமல் "பார்க்கலாம்...." என்ற ஒற்றை வார்த்தையை வைத்தே இத்தனை ஆண்டுகளை கடத்தி விட்டானே.



சுந்தரியும் நல்ல பெண் அமையும் வரை அவன் சொல்வதற்கு தலை அசைத்தார். அவனுக்கேற்ற பெண்ணை தேடி போகாத கோவிலும்மில்லை. வணங்காத சாமியுமில்லை.



கடசியில் தனது சொந்த இடமான யாழ்ப்பாணத்திலே பெண்ணை பார்த்து அவளது சுற்றத்தாரையும் இரண்டே நாட்களில் விசாரித்து பார்ததில்



நல்ல குடும்பம். மரியாதை தெரிந்து யாரையும் நேகடிக்காத பெண்கள். என்ன போரால் பாதிக்க பட்டு கஷ்ரப்படுகிறார்கள்.



இதை தவிர பெண் வீட்டில் குறை என்று கூற எதுவும் இல்லை என்றதனால் தனது மூத்த மகனுக்கு பேசி முடிக்கலாம் என்றெண்ணி பானுவை பெண் கேட்க தரகரை அனுப்பினார்.



அவங்க சம்மதம் மட்டும் கிடைச்சிட்டா முகிலன் காலில விழுந்தாவது சம்மதம் வாங்கிட வேணும்.



வயசு வேறு ஆண்டுக்கு ஒண்ணுன்னு போய்டிருக்கு



இவன் என்னடான்னா என்னை அம்மா ஸ்தாணத்திலேயே வைச்சிருக்க பாக்கிறான். இப்படியே போனா எப்போ நான் பாட்டியாகிறது?.. என நினைத்து மகனிடம் இதை பற்றி இன்னைக்கே பேசிடணும் என முடிவெடுத்தவராய் அவன் வரவுக்காக காத்திருந்தார்.



இரவு பத்து மணியளவில் வீடு வந்த முகிலன் சுந்தரி தனக்காக புதிதாக காத்திருப்பதை கண்டு,



"என்னம்மா....! எதுக்காக தூங்கல?.. என வினவனான்.



ஆம்.... முகிலனது கண்டிப்பான சட்டம் இது. தொழில் விஷயமாக வெளிய போன வர லேட்டாகும், என்னை எதிர்பார்து காத்திட்டிருந்து உன்க உடம்ப கெடுத்துக்காதிங்க. என கண்டிப்போடு கூறுவான்.



சில நாட்கள் அவன் சொல்லை கேட்கமால் காத்திருந்து அவனிடம் முறையாக வாங்கி கட்டியவர், பின் அவனுக்காக காத்திருப்பதை தவிர்க தன்னை பழக்கி கொண்டார்.



இன்று மறுபடியும் சுந்தரி காத்திருக்க, தன்னிடம் முக்கியமாக பேசுவதற்காக தான் காத்திருக்கிறார் என்பதை அறிந்தவன்.



"கொஞ்சம் இருங்கம்மா!.. நான் இப்போ வந்திடுறேன்." என கூறி தன் அறைசென்றவன் பத்தே நிமிடத்தில் பிரெஸ் ஆகி கீழே வந்தான்.



"சொல்லுங்கம்மா!.. என்ன அப்படி முக்கியமான விடயம்?.. எதுக்காக என்னை எதிர்பாத்து காத்திட்டிருந்திங்க?.." என்க.



தன் மனதை புரிந்து கொண்ட மகனை நினைத்து பெருமையாக உணர்ந்தார்.



அவன் அப்படி கேட்டதில் ஆச்சரியப்பட எதுவுமில்லையே.



இந்த வயதிலே பல கம்பனிகளுக்கு முதலாளியாக இருப்பததென்றால் சாதாரணமானதா என்ன?... ஒரே பார்வையில் தன் முன் நிற்பவரை எடை போடும் கூரிய விழிகளும், எதனையுப் தீர்கமாகவும், நிதானமாகவும் எடுக்கும் முடிவுவே அவனது வெற்றிக்கு காரணமாக இருக்கும் போது பெற்றவள் மனமறியாதவனா முகிலன்?...



"சொல்லுங்கம்மா அப்பிடி என்ன முக்கியமான என்ன விஷயம்?..." என மீண்டும் வினவ.



"ஆமாடா!.. உன்கிட்ட பேசணும்ன்னு தான் வெயிட் பண்னேன். சரி நீ சொல்லு, அம்மா எது செய்தாலும் உங்க மூணு பேரோட நல்லதுக்கும் தான்னு நீ நம்பிறீயாப்பு?.." என்க.



"என்னம்மா. இது கேள்வி?. நீங்க மட்டுமில்லை, அப்பாவும் எதை செய்தாலும் அதில எங்க நன்மையில்லாம இருக்காது. இப்போ எதுக்கு இந்த கேள்வி? முதல்ல அத சொல்லுங்க." என்க.



"உங்க சந்தோஷத்துக்காக எல்லாத்தையும் செய்யிற அம்மா சந்தோஷமா இல்லப்பு. உன் விஷயத்தில அம்மாவா என் கடமையில இருந்து தவறிட்டனோன்னு தோனுது ." என்க.



அவர் பேச்சின் நோக்கம் புரிந்தாலும், அதை ஏற்றுக்காெள்ள மறுத்தவனாய், "எனக்கு என்னம்மா குறை?. நீங்க தான் நிறைய தன்னம்பிக்கையும், தைரியமும் தந்து வளத்திருக்கிறிங்களே!. அதோட எனக்கு ஏதாவது தேவைன்னா பணத்தை விட்டெறிஞ்சா போதும்!.. என்ன தேவையோ எல்லாம் கிடைச்சிடும். அப்புறமென்னம்மா கவலை?". என்க



"நீ சொல்லுறது சரிதான்டா!..

பணத்த விட்டெறிஞ்சா


கிடைக்காதது எதுவும் இல்லை தான்.



ஆனா உண்மையான அன்பும், அரவணைப்பும் பணதால முடியாதுடா.



வேணும்னா நடிக்காறவங்கள வாங்கிக்கலாம்." என்றவர்.

"முகில்..!


இது வரை நான் உன்கிட்ட எதுவும் கேட்டதில்லை!.. இப்போ கேக்கிறது எனக்கு நல்ல மருமகளும், உன்னை அன்பா பாத்திக்க மனைவியும் தானேடா கேக்கிறன்." என வருத்தமாக கூற.



"அம்மா!.... இப்போ அதுக்கு என்ன அவசரம்? அதெல்லாம் அப்புறம பாத்துக்கலாம்.



இப்போ போய் தூங்குங்க." என அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளியிட நினைத்தவனிடம்,



"நல்லா இருக்குடா உன் பேச்சு!... இன்னும் எத்தினை வருசத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம்ன்னு சொல்லுவ?.. இன்னும் அதை நம்ப நான் ஒண்ணும் முட்டாள் கிடையாது. அதோட நீயும் சின்ன பையன் இல்லை.



இருபத்தொன்பது வயசாகுது. இன்னும் அப்புறம், அப்புறம்ன்னு சொல்லுற, உனக்கு பின்னாடி உன் தம்பி, தங்கை இருக்காங்க.



அவங்களுக்கு எப்படா நல்லது செய்து பாக்க முடியும்?." என ஆதங்கமாக கேட்க.



" அவங்கள நானாம்மா தடுத்தேன்.? அவங்களுக்கு என்ன செய்யணுமோ செய்யுங்க." என்க.



"எப்பிடிடா..? எப்பிடி.......? அண்ணன் நீ இருக்கும் போது அவங்களை பத்தி யோசிக்க முடியும்?



உன் தங்கை வேற உனக்கு ஒரு நல்லது நடக்காம தனக்கு எதுவும் வேண்டாம்ன்னு தன்னோட பர்த்டேய கூட கொண்டாட மாட்டேன்னு அடம் பிடிக்கிறா.



அண்ணா, அண்ணானு உனக்காக உயிரை விடுறவளுக்கு என்ன கைமாறு செய்ய போற?. உனக்கு நல்லது நடக்காம இந்த வீட்டில எந்த நல்ல காரியம் நடக்கப்போறது கிடையாது.
நானும் அதை நினைச்சு ஏங்கி ஏங்கி எனக்கு வேணும்னா கருமாரி நடக்கும்." என்று அழுதவர்.



"அதுக்கப்புறம் நீ எப்படி இருக்கணும்னு ஆசை படுறியோ அப்பிடி உன் இஷ்டத்துக்கு வாழ்ந்துக்கோ!" என சத்தம் போட்ட ஆரம்பித்து விட்டார்.



அழுகையோடு தெடர் இருமலும் சேர்ந்து கொண்டது. ஆம் அவர் ஒரு ஆஸ்துமா நோயாளி.



"என்னம்மா இது? பாருங்க உடம்புக்கு முடியாம வந்திட்டிது. இதுக்குத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்து என்னோடு சத்தம் போட்டிங்களா?..." என அருகில் இருந்த குளிர் சாதனபெட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து காெடுத்தான்.



அதை வாங்காது தட்டி விட்டவர்,



"எப்பவோ ஒரு நாளைக்கு உன்னை நினைச்சு போக போற உயிர் தானே!.. இப்பவே போகட்டும். நீ உன்னோட வேலைய பாரு." என அவர் விலகி வந்து இரும.



தன்னுடைய நன்மைக்காகவே அவர் இவ்வாறு செய்கிறார் என தெரியும், ஆனால் அவனும் தான் என்ன செய்வான். பெண்கள் மேல் தனக்குண்டான அவ நம்பிக்கையே அவனின் இந்த முடிவுக்கு காரணம் என எப்படி கூறமுடியும்?.



ஆனால் தொடர்ந்து இருமும் சுந்தரி தன் சம்மதம் கிட்டும் வரை அருகாலேயே அனுமதிக்க மாட்டார் என்பதை புரிந்தவன்.



"எதுக்கும்மா இப்போ சின்ன குழந்தை போல அடம்பிடிக்கிறீங்க? இதை குடியுங்க உங்க பேச்சை கேக்குறேன்." என்றவாறே தண்ணீரை அவரிடம் நீட்டினான்.



சுந்தரிக்கு அதன் பொருள் புரிந்தாலும் "என்ன சொல்ற அப்பு? அப்போ பொண்ணு பாக்கலாம் என்கிறியா?..." என நம்பமுடியாது ஆச்சரியாம் கலந்த புன்னகையோடு கேட்க.

அவரது சந்தேகமான பேச்சையும் தன் சம்மதத்தால் உண்டான சந்தோஷத்தையும் ரசித்தவாறே அவர் கன்னங்களை தன் இரண்டு கையிலும் தாங்கியவனாய்,
"இந்த அடம்பிடிக்கிற குழந்தைக்காக சம்மதிக்கிறேன்.



"ஆனா ஒரு கண்டிஷன்" என்க



"என்னடா கண்டிஷன்?" என்றவர் முன் தண்ணீரை நீட்டி "இதை மறந்திட்டிங்களே!.." என்று சிரித்தவாறு கூற,
"நீ சம்மதிச்சதுமே ஆஸ்துமாவே போச்சுடா! இந்த இருமல் எம்மாத்திரம்?" என்றவர் அதை ஓரமாக வைத்து விட்டு.



"அப்பு அம்மாக்கு தூக்கம் வருது. நாளை மறு நாளே பொண்ணு பாக்க போகலாம். நல்ல நாள் வேற" என்க.



"அப்போ பெண்ணை பாத்திட்டு தான் எங்கிட்ட சம்மதம் வாங்கினிங்களா?...

ஏதோ செய்யுங்க. நீங்க சந்தோஷமா இருந்தா சரிதான். பொண்ணு யாருன்னாவது சொல்லுவிங்களா?!" என்க.



"அவளை உனக்கு தெரிஞ்சிருக்காதுடா!... ஆனா நல்ல பொண்ணு. நல்லா பாட்டு பாடுவா.
அன்னைக்கொரு நாள் என்கூட நீ நல்லூருக்கு வந்தப்பாே அவ பஜனை பாடினாளே!... நீ கேட்டியா?. என்க.



அவனுக்கும் அந்த நாள் நினைவில் அவளை பார்க்க போய் இடையில் ஒரு பொண்ணுடன் மோதுண்டு அவளை ரசித்தது.



பிறகு வேண்டாத நினைவுகளால் அந்த குரலழகியை காணாது சென்றது. என நினைவு வர,



"கேட்டேன்ம்மா!.. ஆனா பாக்கல" என கூறிவன்,
"சரி நீங்க தூங்குங்க." என்று அவரை அனுப்பி விட்டு.
தனதறைக்கு சென்றவன்
"அம்மா நீங்க எப்பிடி பொண்ணுங்களை புகழ்ந்தாலும் அவங்க அடிப்படை குணம் மாறாதும்மா!. என்னோட சில கசப்பான அனுபவங்கள் உங்களுக்கும் வேண்டாம்ன்னு தான் இவ்வளவு நாள் அவங்கள விட்டு ஒதுங்கியே இருந்தேன்.



ஆனா விதி உங்களோடும் விளையாட போகுது.



பார்க்கலாம் எவ்வளவு தூரம் போக போகுதுனு." என்று நினைத்தவன் தூங்கிவிட்டான்.



மேகலாவோ அங்கும் இங்கும் ஓடி திரிந்தவள், தன்னுடைய பதட்டம் புஷ்பாவிடம் இல்லாது கூலாக அமர்ந்து டீவி பார்ப்பதை கண்டு,



" என்னம்மா செய்யிறீங்க?.. இங்க பாருங்க எங்க வைச்சது எங்க இருக்கு?.., எடுத்தா எடுத்த பொருளை அந்த இடத்தில வைக்க தெரியாதா?...



எத்தனை தடவை தான் சுத்தம் பண்ண வீட்டையே சுத்தம் பண்ண முடியும்?.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர போறாங்க. நீங்க என்னடான்னா சும்மா டீவியிலையே இருகிங்க." என பரபரத்தவளை,



"அடியே!... உன்னோட அலப்பறை தாங்க முடியலடி.



மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நாலு மணிக்கித்தானேடி வருவாங்க.



பத்து மணியிலயே எங்களை போட்டு படுத்திறியே.



நேற்று இரவு தொடங்கின அலப்பறை, இன்னும் முடிஞ்ச பாடு இல்லங்க உங்க பொண்ணுக்கு.



இவங்க வந்து போகும் வரை இவ மூச்சை கூட நிம்மதியா விட விடமாட்டா!.. முதல்ல அந்த டீவியை நிப்பாட்டுங்க. அது தான் அவள் கண்ணை உறுத்திட்டிருக்கு" என்றவர்.



அந்த இடத்த விட்டு எழுந்தவாறு "இங்க வா!.." என்று மேகலாவை அழைக்க.



"என்னம்மா?....எனக்கு வேலை நிறைய இருக்கு. நீங்க சும்மா பேசிறதா இருந்தா பிறகு பேசலாம்." என்று அவள் விலகவும். உடனே அவள் காதை பிடித்து திருகியவர் "அப்பிடி உனக்கு என்னடி வேலை இருக்கு?.. வேண்டிய எல்லாம் செய்தாச்சு கொஞ்சம் இப்பிடி இரு.



சும்மா சுத்தம் பண்ண வீட்டையே கூட்டி நிலத்தை தேய்ச்சிடாதடி!.. பிறகு வீட்டு ஓணர் நிலத்தை போடுன்னு சொல்லிட போறாரு." என்க.



"எப்ப பாத்தாலும் விளையாட்டுதான் உங்களுக்கு.



அவங்க பெரிய இடம்ல்ல. இந்த மாதிரி வீட்டை அவங்க பாத்தே இருக்க மாட்டாங்க. அது கூட நல்லா இல்லன்னா ஏதாச்சும் தப்பா நினைப்பாங்க. அதான் வாங்க அந்த கதவுக்கு கேட்டீன் பேடலாம். ஆணியை மட்டும் அடிச்சிட்டா போதும். நானே மீதிய பாத்துப்பேன்." என்க.

"


சரி தான்டி!. ஆனா எங்க நிலமை தெரிஞ்சு தானே பொண்ணே கேட்டாங்க. ரொம்ப எதுவும் யோசிக்காதை சரியா?" என்றவர் அவளுக்கு உதவி செய்ய துவங்கினார்.



மாலை ஆனதும் பானுவை தயார் செய்து அவள் அறையிலே இருத்தப்பட்டிருக்க, மாப்பிள்ளை வீட்டார் இரண்டு கார்களில் வந்து இறங்கியிருந்தனர்.



முகிலன், சுந்தரி, யோகலிங்கம் அவர் தமயனான சுந்தரலிங்கம் ஒரு காரிலும்.



மற்றயதில் சுந்தரலிங்கம் மனைவி அவர் புதல்வர்களான கரன், நிதா, சாமிளா, என வர அவர்களை வரவேற்ற வேல்முருகன் தம்பதியினர் இருக்கையில் அமர வைத்து, ஒரு சில நலன் விசாரணையுடன் மாப்பிள்ளையை பார்தனர்.



பார்க ஆண் மகனுக்குரிய அத்தனை அம்சமும் இருந்தவனை கண்டு திருப்தியானார்கள்.
பொண்ணை அழைத்து வருவதாக கூறி உள்ளே சென்றார் புஷ்பா.



உள்ளே வந்தவர்,



"மேகலா அலங்காரம் பண்ணதெல்லம் போதும். மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்து காத்திட்டிருக்காங்க, அவளை வரச்சொல்லு" என்க.



பானுவோ புஷ்பாவின் புறம் திரும்பி முறைத்தவள்.



"இங்க பாருடி!.. இந்த கிழவியமுதல்ல வெளிய போக சொல்லு. வந்திட்டாங்க பெரிய அக்கறை காட்டிட்டு." என முணுமுணுக்க.



"என்னடி வாய் நீளுது. சொன்ன பேச்சை கேட்டு சீக்கிரம் காஃபியை எடுத்திட்டு வா!" என்றவர் சென்றுவிட.



"இவங்க சொன்னா நான் கேட்கனுமா?... என்னால முடியாதுடி!." என வெளியே வர மறுத்தாள் பானு..

இவர்கள் இருவர் பேச்சிலும் உண்டான சினத்தினை அடக்கியவளாய்,


"எதுக்குடி கடசி நேரத்தில அடம்பிடிக்கிற?.



அவங்க உன்னோட நல்லதுக்கு தானே செய்யிறாங்க. வா!.. முதல்ல எல்லாருமே காத்திட்டிருக்க போறாங்க." என்க.



"இத பாருடி! உனக்காக நான் வரேன். ஆனா அவங்க சொன்னது போல காஃபில்லாம் எடுத்திட்டு வர முடியது." என அடம்பிடிக்க.



"உங்க ரண்டு பேருக்கு நடுவில மாட்டிட்டு நான் படுற பாடு." என்றவள்,
"இரு அம்மாவையே கேட்டுட்டு வரேன்." என கதவு மறைவில் நின்று புஷ்பாவை அழைத்தாள்.

அவள் குரல் கேட்டு அருகில்


வந்தவர், "என்னம்மா?"



"அவள் வெளியே வரணும்னா காஃபி எடுத்திட்டு வர மாட்டாளாம்." என கூற.



"இது ஒரு இம்சையடி!.. நேரகாலம் தெரியாம அடம்புடிப்பா, காஃபிய நீ எடுத்துட்டு வந்து குடும்மா. அவ பின்னாடி வரட்டும். இவங்கள எதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம்." என்க.
அவளும் தாய் சொற்படி அதை எடுத்து வந்து அனைவருக்கும் கொடுக்க, அங்கிருந்தவர்களில் சுந்தரியை தவிர மற்றவர்கள் பெண் மேகலா என்றே நினைத்தனர்.



சங்கமிப்பாள்......
 

Balatharsha

Moderator
அத்தியாயம் 10.



மேகலா காஃபியை கொண்டுவந்து ஒவ்வொருவர் முன் நீட்டவும் அவளை பாத்துக்கொண்டே எடுத்தார்கள்.



அது வரை யாரையும் நிமிர்ந்து பார்க்காதவன் மேகலா அவன் முன் தட்டை நீட்டியதும் நிமிர்ந்து பார்த்தவன் அவளை கண்டதும் அதிர்ந்தே போனான்.
இவ கோவில்ல என்னை மேதினவாளாச்சே.



அப்பிடின்னா கோவில்ல பாட்டு பாடினவ இவ தானா?...



என நினைத்தவாறு அவளை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்தான்.



கோவிலில் பார்த்தது போலவே சர்வ சாதரணமாக காட்டன் புடவையில் பெண் பார்க்கும் வைபவம் போல எந்த வித அலங்காரமும் இல்லாமலே தேவதை போல் தான் இருந்தாள்.



முகிலன் மாத்திரம் அவளை அந்த நிலையில் ரசிக்கவில்லை.



கூட வந்த கரனும் அவளது சாதரண கோலங்கண்டு ரசிக்கலானான். இந்த காலத்தில் எந்த வித ஒப்பனையும் இல்லாமல் இருப்பார்களா என்ன?.... அதுவும் ஒப்பனையே இல்லாமல் இவ்வளவு அழகாக இருக்க முடியுமா?. முகத்தை கழுவி பவுடர் கூட போட்டது போல தெரியவில்லை.



சின்னதாக கறுப்பு நிற பொட்டு மாத்திரம் புருவங்களுக்கு நடுவே அவள் எலும்பிச்சம் பழக்கலருக்கு தனியாக எடுத்து காட்டியது.



தமையன் அருகில் நகர்ந்து அமர்ந்த கரன்,



"அண்ணா பொண்ணு சாதாரணமா இருந்தாலும் நீங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தது வீண் போகல்ல. அவ்வளவு அழகா இருக்காங்க." என மற்றவர் காதில் விழாது கூறினான்.



வந்தவர்கள் அனைவருமே சாதாரண ஏழை வீட்டு பெண் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என நினைத்திருக்க.



அவளோ அனைவரையும் பார்த்து புன்னகை சிந்தியவள் இறுதியாக சுந்தரியிடம் காஃப்யை நீட்டினாள்.



அவளை சிறு புன்னகையுடன் எதிர் கொண்டவர்,



"என்னம்மா!.... என் மருமக காஃப்பி குடுப்பான்னு எதிர் பார்த்தா நீ எடுத்திட்டு வந்திருக்க." என்க.



எதை சொல்லி சமாளிக்கலாம் என்று முழித்தவள்,



"அது ஆர்ன்டி இதெல்லாம் பழக்கமில்லையா..! அதனால அவ கொஞ்சம் பயப்படுறா. எங்க தான் காஃப்பி எடுத்து வந்தா பதட்டத்தில கீழே போட்டிடுவேன். அப்புறம் அதுவே அபசகுணமாகிடுமோன்னு?.. அதான் என்னை எடுத்துட்டு போ!.. பின்னாடி நான் வரேன்னா அதான் நான்.......!" என முடிக்க முடியாமல் தடுமாறியவள்,



"நான் போய் அவளை அழைச்சிட்டு வரேன்." என வேகமாக திரும்பிக்கொண்டாள்.



முகிலனுக்காே எதையோ தன்னிடம் இருந்து பகிரங்கமாக பறித்ததைப்போல முகமானது இறுகிப்போனது.

அவனருகில்


இருந்த கரனுக்கோ அளவில்லா சந்தோஷம்.



"அப்பாே இவ பொண்ணில்லையா?.. அப்பிடின்னா எனக்குத்தான் அவ." என தனக்குள் சொல்லி கொண்டவன் பார்வை சென்று கொண்டிருந்த மேகலாவின் பின்னே சென்றது.



சிறிது நேரத்தில் பானுவை அழைத்து வந்து நின்றாள் மேகலா.

வந்ததும் தலைகுனிந்து நின்றவள் காதினில்


"எல்லாருக்கும் வணக்கம் சொல்லுடி!" என மேகலா கூற.



அனைவருக்கும் பொதுவாக கை கூப்பி வணங்கம் கூறிட,



"ஏய் அதை சிரிச்ச போல தான் சொல்லுறது." என்று கிசு கிசுத்து,



"வெக்கப்பட்டு தரைய பாத்தது போதும் கொஞ்சமா நிமிர்ந்து மாப்பிள்ளையை பாரு!" என்றவள், அப்போது தான் தானும் அவனை ஆராந்தாள்.​



அவன் அசைவுக்கு ஏற்றால் போல் அலைபாயும் கேசம்.



ஒரே பார்வையில் எதிராளியை எடைபோடும் கூரிய விழிகள்.



அழகான நீண்ட நாசி. அளவாக ட்ரீம் செய்யப்பட்ட தாடி.



கார்முகிலன் எனும் பெயருக்கு ஏற்றால் போல் நிறமும் சற்று குறைவு தான் என்றாலும் அவன் உதடுகள் அவன் கலருக்கு எதிர்மறையாக சிவப்பாகவும் ஆனால் எங்கோ என்னை சிரிக்க வைத்துத்தான் பாரேன் என்பது போல் அடம்பிடித்தது.



எப்போது உடற்பயிற்சி மூலம் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பான் போல. ஒரு ஆண் மகனுக்கு உரித்தான அத்தனையும் அவனிடம் இருக்க,



மேகலாவோ பானுவிற்கு அவன் அழகை இரண்டு மடங்காக வர்ணித்து கொண்டிருந்தாள்.



அப்போதாவது அவன் அழகை ரசித்து தன் பிடிவாதத்தை விட்டு மனதார சம்மதித்து விடுவாள் என்ற நப்பாசையில்.



அவள் சாமத்தியமும் வேலைசெய்ய தொடங்கியது.



அவளும் சம்மதித்தாள்.



இருவரும் தமக்குள் பேசிக்கொள்வதை கண்ட சுந்தரியோ,



"என்ன மேகலா'.. என் மருமக என்ன சொல்லுறா" என்க.



அவரது திடீர் கேள்வியில் சற்று தடுமாறியவள்,



"அது....! மாப்பிள்ளை அழகா இருக்கிறாரு என்கிறா ஆர்ன்டி." என சமாளித்தாள்.



இவளது பதிலில் சட்டென நிமிர்ந்த முகிலனாே மேகலாவை அடிபட்ட பார்வை பார்த்தவன், மற்றவர் கருத்தில் படும் முன் வேறு திசையில் பார்வையை மாற்றிக்கொண்டான்.



அவனுக்குமே அப்போது தன்னிடம் தோன்றிய உணர்வுகும் என்ன காரணம் என தெரியவில்லை.



"என் பிள்ளையை யாருக்கு தான் பிடிக்காது?. அவன் கறுப்பு வைரமாச்சே!" என மகனை பெருமை பேச.



"இவங்க வேற." என்று உச்சு கொட்டிய இளையவர்கள்.



"ஏன் சித்தி அண்ணாவை நீங்க சொல்லி தான் தெரியுமா?. அவர் பின்னாடி எத்தனை பொண்ணுங்க ஒரு சிரிப்புக்காக தவமிருக்காங்க.
நீங்க புகழ்ந்த வரை போதும்.




ந்த பேச்சை விட்டிட்டு மீதிய பேசி முடிங்க. இல்லனா நாங்க அண்ணியை இப்பவே தூக்கிட்டு போயிடுவோம்." என்க.



அவர்களது பேச்சில் பெரும் சிரிப்பொலி எழுந்து அடங்கியது.



பெண் பார்த்து இரண்டு வாரங்களிலே திருமணம் என்று முடிவாக அதற்கேற்றால் போல் வேலைகளும் ஆரம்பமானது.



மேகலா அவன் அழகை வர்ணித்து அவளை சம்மதிக்க வைத்து இரண்டு நாள் முழு ஈடுபாட்டாேடு இருந்தவள் மூன்றாம் நாள் பழையபடி முகத்தை தூக்கி வைத்து எதையோ பலமாக சிந்தித்துக்கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிய.



" என்னாச்சுடி?.." என கேட்டால்



"ஒன்றுமில்லடி!.. போற இடம் எப்பிடி இருக்குமோனு பயமாக இருக்கு" என கூறுவாள்.



அவள் அப்படி கூறவும்



"இது உனக்கு மட்டும் இல்லை பானு பொண்ணா பிறந்தாலே ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு கட்டத்தில இப்படித்தான். இதில பயப்பட ஒண்ணுமில்லடி!. உன்னோட கடமையை உணர்ந்து நீ சரியாய் நடந்துகிட்டா நீ போற இடத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. உன்னால முடிஞ்ச வரை விட்டு கொடுத்து போ. நீ என்ன கொடுக்கிறியோ அது தான் உனக்கு திரும்ப வரும். முதல்ல கொஞ்சம் உன்னை மாத்திக்கிறது கஷ்டம் தான், போக போக அது தானாகவே பழகிவிடும். அதே மாதிரி உன் இயல்பு குணத்தையும் அவங்களுக்காக தொலைச்சிடாத. தவறென்று பட்டா உடனே உன் எண்ணத்தை சொல்லிடு!.



அதை ஏற்கிறதும், விடுறதும் அவங்க முடிவென்று விட்டிடு..



அதுக்காக உன் எண்ணத்தையும் திணிக்காத.



பட்டு தெளியிறத போல பாடம் யாராலயும் சொல்லி தர முடியாது. பட்டு தெளிந்து வந்தா நான் முதலே சென்னேன் நீ கேட்கலனு அதையே சொல்லி காட்டி அவங்கள இன்னும் நோகடிக்காத. அந்த இடத்தில் அவங்களுக்கு தேவை ஆறுதலும் அரவணைப்பும் தான். புரியுதா?"



என்று ஒரு தாயாக மாறி தன் தங்கைக்கு அறிவுரை கூறிக்கொள்வாள்.



பெண் பார்க்கும் படலம் முடிந்த மறு நாளே இவர்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு இரண்டு வார விடுமுறை கூறிய மேகலா பானுவிற்கு திருமணமாகையால் இன்றிலிருந்து அவள் வர மாட்டாள். என கடிதம் கொடுத்தள்,



அங்கு வேலை செய்யும் அனைவருக்கு பானுவின் திருமணத்திற்கு அன்றே அழைப்பு விடுத்தும் வந்தாள்.



பாவம் தான் விடுத்த அழைப்பு தன் வாழ்க்கை பாதையினையே மாற்றப்போவதை அறியாமல் திருமணத்திற்கு வேண்டிய ஆயத்தங்களை செய்யலானாள்.



முதல் வாரம் வீட்டு வேலைகள், பலகாரம் செய்வதோடு கழிந்து விட,



அடுத்த வாரம் முகூர்த்த நாளில் முகூர்த்த புடவை எடுக்கவென பெண் வீட்டாரை சுந்தரி குடும்பம் அழைத்தது.



இங்கு பானுவோ தாயுடன் பேசுவதென்றால் தேவையை பொறுத்தே பேசுவாள். அதுவும் மேகலாவிற்காக.
தந்தையோ தன் நெருங்கிய சொந்தங்களுகக்கு திருமணத்திற்கு அழைப்புவிடுக்க கிளிநெச்சி சென்றுவிட்டார்.



பெண் பார்த்து நாள் குறித்து விட்டால் மணப்பெண் வீட்டை விட்டு செல்லக்கூடாது என்பது நம் நாட்டு வழக்கம்.



ஆகையால் முகூர்த்த புடைவை எடுப்பதற்காக புஷ்பா தான் போக தீர்மானமானது.



புஷ்பாவை அழைத்து செல்ல மாப்பிள்ளை பகுதியிலிருந்து மூன்று கார்களில் வந்திறங்கினார்கள்.



உள்ளே வந்து காஃபி குடிச்சிட்டு போலாம் என்று புஷ்பா அழைக்க. இப்போவே நல்ல நேரம் ஆரம்பிச்சிடிச்சு சம்மந்தி. பிறகு வரும்போது சாப்பிட்டுக்கலாம்." என்று கூறியவர்,



"எங்க சம்மந்தி யாரையுமே காணல்ல?.. யாரும் உங்க கூட புடவை எடுக்க வரல்லையா?." என கேட்க.



அதே நேரம் மேகலாவும் வந்தவர்களை வரவேற்க்கும் முகமாக வெளியே வந்தாள்.



காரில் நடுவே இருந்த கரன் மேகலாவை கண்டதும். நிதாவிடம் தள்ளுடி புளி மூட்டை. நான் கீழே இறங்க போகிறேன்." என்க.



"நீ எதுக்கு இப்போ இறங்கிற?.. பேசாமல் இரு!.. என்னால இறங்கி திரும்ப ஏற முடியாது." என்க.



"இப்பிடி கண்ட படி திண்டு உடம்பை யானை கணக்க வைச்சிருந்தா இறங்கி ஏற கஷ்டமாத்தான் இருக்கும்." என்றவன்,



அவளை விலத்தி இறங்க எத்தணிக்கையில்



"ஏய் மலை மாடு!.. காலை மிதிக்கிற. இரு நானே இறங்கி விடுறேன்." என்றவள் இறங்க அவள் பின்னே கரன், சர்மிளா என்று வரிசையில் மூன்று கார்களில் இருந்தும் இறங்கினார்கள்.



மேகலாைவை ரசித்தவாறு கரன் நிற்க. அவனை இடித்தவாறு சர்மிளா தமயன் அருகில் வந்து தன் துப்பட்டாவை அவனிடம் நீட்டினாள்.



ஏற்கனவோ தன் ரசனையை கெடுப்பதுபோல் சர்மிளா இடித்ததில் கடுப்பாகியவன் முறைத்தவாறே



அவள் நீட்டிய துப்பட்டாவை காட்டி "என்னதிது?" என்க.



"தெரியலயா?... வைச்சுக்கோ!.. உனக்கு தேவைப்படும்."என்க.



"என்ன நக்கலா?.. நான் என்ன சல்வாரா போட்டிருக்கேன்." என கோபமாக கேட்டவனிடம்,



"நீ என்ன போட்டிருக்கியோ எனக்கு தெரியாது." அவன் வாயருகே விரலை நீட்டி "ஆனா ஜொல்லு என்ற பேரில ஜெல்லு வடிக்கிற. நீ வடிக்கிற ஜெல்லில ஆறே ஓடப்போகுது. சும்மாவே எனக்கு நீச்சல் தெரியாது. அதுதான் முன் எச்சரிக்கைக்கு வைச்சுக்கோ!" என்றாள்.



அவளும் பெண் பார்க்க வந்த அன்று முகிலனிடம் கரன் கூறியது.



பெண் அவள் இல்லை என்றவுடன் அவளை விடாது கரன் சைட் அடித்தது அனைத்தும் பார்த்தவள் தானே.



தங்கை தன்னை கண்டு கொண்டாளே!... என வெட்கப்பட்டு கால் பெருவிரலால் தரையில் படம் வரைந்தவனை பார்த்து.



"நீ என்னவேனாலும் பண்ணு ராசா.



பிளீஸ்....! வெக்கம் என்ற போரில இத மட்டும் பண்ணாத. என்னால பாக்க முடியல." என இவர்கள் பேச்சு நீண்டுகொண்டே இருக்க.



இவர்கள் அருகில் வந்த நிதா



"என்னடா பண்ணிட்டு இருக்கிங்க ரண்டு பேரும்?. உங்களை பாத்தா அண்ணன் தங்கை போலயா இருக்கு?. ஏதோ கட்டிக்கிற முறை பொண்ணு பையன் மாதிரில சண்டை போடுறிங்க.



எங்க வந்திருக்கிறோம் என்கிறது மறந்து போச்சா?. அவங்க பாத்தா என்ன நினைப்பாங்க?." என கண்டிக்க.



"நாங்க அப்பிடித்தான்." என்றவன் ஒரு கையால் "இவ என் தங்கைடி!" என்று கட்டி கொள்ள. சர்மியும் தன் பங்கிற்கு அண்ணன்டா!"



என்று கட்டிக்கொள்வதை பார்த்த நிதா.



"இதுங்களை திருத்தவே முடியாது." என இவர்களிடம் இருந்து சற்று விலகியே நின்று கொண்டாள்.



அவர்கள் மூவரும் ஒரே தாய் பிள்ளைகள் என்றாலும் சர்மி கரன் உறவானது சகோதர உறவையும் மீறிய நல்ல நண்பர்களாக மாறியிருந்தது.



நிதா கொஞ்சம் பொறுப்பான பெண் என்றதனால் இவர்கள் போல் பெரிதாக குறும்பில் ஈடுபடுவதில்லை.



இங்கு புஷ்பாவோ சுந்தரி கேட்ட கேள்விக்கு "நான் மட்டுந்தான் சம்மந்தி வரேன். எங்களுக்கு சொந்தம்ன்னு இங்க யாருமில்ல. எல்லருமே கிளிநொச்சி தான். நாங்கள் இங்க இடம்பெயர்ந்து வந்ததால இங்கேயே இருந்துட்டோம். இவர் இன்னைக்குத்தான் சொந்தகாரங்களுக்கு சொல்லவே போராரு!.. நாளைதான் வருவார்" என்க.



"என்ன சம்மந்தி நீங்க?.. நல்ல காரியத்துக்கு போகும்போது தனியவா?..." என இழுத்தவர்.



மேகலாவை "ஏம்மா...! நீ இங்க வா!.." என அழைக்க.



அவளும் அவர் பேச்சை மதித்து அருகில் வந்ததும்,



" நீயும் எங்ககூட வா!" என்க.



"இல்லை ஆர்ன்டி!.. பானு வீட்டில் தனியாக இருக்கா. நீங்க அம்மாவையே அழைச்சிட்டே போங்கோ!" என மறுக்க.



"இங்க பாரு...! பானு ஒண்ணும் சின்ன பொண்ணில்லை. அதுவும் அக்கம் பக்கம்ன்னு நிறைய வீடுகள் இருக்கிறப்போ உன் தங்கையை யாரும் தூக்கிட்டு ஓட மாட்டங்க வா!" என அவளை கையோடு அழைத்து காரினில் அமரவைத்தார்.



ஒரு காரில் முகிலன் வண்டியோட்ட புஷ்பா சுந்தரலிங்கம் அவர் மனையாள் என ஏறிக்கொண்டனர்.



அடுத்த வண்டியில் மயூரன் வண்டி ஓட்ட வான்மதி, சுந்தரி மேகலாவும்,



மற்றயதில் டிரைவர் வண்டி ஓட்ட யேகலிங்கம், சர்மிளா, நிதா, கரன், வந்தனர்.



மேகலாவிற்கோ அனைத்து முகங்களும் புதிதாக இருக்க.



இவங்க யாரையுமே பெண் பாக்குறன்னைக்கு நான் காணல்லையே!. என சிந்தனையில் இருந்தவளிடம்,



"என்ன மேகலா பேசாமலே வர்ற?" ஏன் எல்லாரையும் பார்த்து பயந்திட்டியா?.... எல்லாம் என் பசங்க தான்மா!" என்றவர் வன்மதியை காட்டி



"இவள் என் கடக்குட்டி. முகிலன்னா உயிர். அவனுக்காக என்னவேனாலும் செய்வா.



இப்ப கூட அண்ணனோட கல்யாணத்துக்காக பரீட்சையை கூட விட்டிட்டு அண்ணியை பாத்தே ஆகணும்னு தான் வந்திருக்கா." என்றார்.



அவளும் மேகலாவை பார்த்து புன்னகைக்க மேகலாவும் புன்னகைத்தாள்.



"இவன் என்னோட ரண்டாவது பையன் மயூரன்." என்றவர் அவனை பற்றி சொல்ல எதுவும் இல்லை என்றது போல் அமைதியாகினார்.
அவனை பற்றி கூறும்போதே கண்ணாடி வழியே மயூரனை பார்த்தவள் அவன் முகமும் தாயின் அறிமுகத்தால் இறுகியதை காணநேர்ந்தது.



அறிமுக படுத்தி முடிந்ததும், கார் ஓட்டியவாறு திரும்பி பார்க்க முடியாததனால் அவனும் கண்ணாடியில் அவளை காண, தன்னை அவனும் பார்கிறான் என தெரிந்தவள், அவனை பார்த்து புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான்.
ஏனோ தெரியவில்லை தனக்கும் ஒரு தம்பி இருந்திருந்தால் இப்படி தான் இருந்திருப்பான் என முதல்முறையாக தோன்றியது அவளுக்கு.

பின் எந்தவித பேச்சுமின்றி அமைதியாவே பயணித்தனர்.



சங்கமிப்பாள்.......
 

Balatharsha

Moderator
அத்தியாயம் 11



யாழ்ப்பாண பெரும் நகர்பகுதியில் அமைந்துள்ள பெரிய அளவிலான கட்டிடத்தில் நுழைந்தது அவர்களது கார்கள்.



ஆம் யாழ்ப்பாணத்தினிலே பெரிய அளவிலான ஐந்து மாடிக்கட்டடம் அது. இன்னும் பெரிய அளவில் கட்டி இருப்பார்கள் தான். யாழ் குடா சிறிய அளவிலான குடா என்பதாலும் அதன் நிலப்பரப்பு சுண்ணாம்பு படிவக்கற்கள் ஆகையால் அங்கு ஐந்து மாடிக்கட்டடங்கள் கட்டுவதற்கே அனுமதி.



மேலதிகமாக மாடிகள் அமைத்தால் அந்த கட்டிடம் மண்ணுக்குள் புதையும் அபாயம் இருப்பதால் இது வரை அது போல எந்த கட்டிடமும் முளைக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை.



எந்த பக்கம் திரும்பினாலும் கண்ணாடிகளில் அவர்கள் பிம்பமே தெரிந்தது.
தரையோ வெள்ளை நிறத்தால் பளிங்கு போல் அதில் கூட தெள்ள தெளிவாக முகம் பார்க்க கூடிய நில அமைப்பு. முற்றிலும் குளிரூட்ட பட்டு, ஆங்காங்கே யாரும் உடுத்தறியா விலை உயர்ந்த ரக புடவைகளை ஆறடியை விட சற்று கூடிய உயரத்தில் பெண் பொம்மைகள் அழகாக உடுத்தி வருவோரை வரவேற்பதாய் இரு கரங்களையும் கூப்பி சிரித்தபடி நின்றிருந்தது.







ஒரு பெரிய நீளத்திற்கு பெரிய அளவில் மேஜைகள் அடுக்கப்பட்டு அங்கு வந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புடவைகளை காட்டியவாறு இருந்தார்கள் அங்கு பணிபுரிவோர்.
அவர்கள் பின்னால் கண்ணாடி தடுப்பிட்டு, பார்பவர்களை கவரும் வகையில் அழகாகவும் நேர்த்தியாகவும் அதன் விலைக்கு தகுந்தார் போலவும் புடவைகள் அடுக்கபட்டு இருக்கும் அழகே சொன்னது அது புடவைக்கான பகுதி என்று.



இதுவரை இது போன்ற கடையை கண்டறியாத மேகலா ஆர்வமாக ஒவ்வொரு இடமாக பார்த்து ரசித்துக்கொண்டு வர.



அவள் அருகில் சென்ற சுந்தரி "என்னம்மா அப்படி அபூர்வமாக பாக்கிற? என்க.



"இல்லை ஆன்ட்டி!.. இதுவரை இப்படி ஒரு கடையை நான் பாத்ததில்லை. ஏன் இப்படி ஒரு கடை யாழ்ப்பாணத்தில் இருக்கிறது கூட தெரியாது." என அவள் வெகுளியாக கூற.



எதையும் மறைக்காமல் கூறும் மேகலாவை வியப்பாக பார்த்தவர்.



"மனசில தோனுறத அப்பிடியே சொல்லுற! யாரும் தனக்கு தெரியாத விஷயத்தை தெரியாதுன்னு ஒத்துக்கொள்ள தயங்குவாங்க. எங்க தன்னை குறைத்து எடைபோட்டு விடுவாங்களோனு நினைச்சு. ஆனா நீ வித்தியாசமானவ தான்..." என்றவர்.



"இது என் மகனோட கனவு . இதுவும் அவனாடே கடுமையன உழைப்பில ஒன்னு" என்க.



அவரது பேச்சு புரியாது மேகலா சற்று இமை சுருங்க அவரையே பார்த்திருக்க. "அவள் பார்வையின் பொருளறிந்து வெளிப்படையாக நகைத்தவர், எல்லா விஷயத்தியும் நீ இவ்வளவு வெள்ளந்தியா இருக்கிறது நல்லதில்லம்மா. ஏமாத்திடுவாங்க" என்றவர். "இது எங்க கடைம்மா" என்க.



"ஓ....அப்படியா ஆன்ட்டி?.. ரொம்ப அழகாவும் நேர்த்தியாவும் இருக்கு." என்க.



இப்போது தான் அவள் தன்னை ஆன்ட்டி என அழைத்ததை கவனித்தவர்.



"அது என்ன ஆன்ட்டி?.. உன் தங்கைக்கு நான் அத்தைன்னா உனக்கும் நான் அத்தை முறை தான். நீயும் அப்படியே கூப்பிடு!" என்கவும் சங்கடமாக தலை அசைத்தவள்,



" சரி ஆன்ட்டி!" என மீண்டும் அழைத்தவள் காதை பிடித்தவர்



"இப்ப தானே சொன்னேன். அப்புறம் ஆன்ட்டி என்ற" என செல்லமாக காதை திருக.



"சாரி அத்தை." என்றதும் தான் அவர் அவள் காதில் இருந்தே கையை எடுத்தார்.



இவர்கள் பேச்சுக்களை தூர நின்று பார்த்தவாறு இருந்த முகிலனும் அவர்கள் பேச்சினை மிக நுணுக்கமாகவே கவனித்துக் கொண்டிருந்தான்.



சிறியவர்கள் தங்களுக்கான உடையை தாமே தேர்வு செய்கிறோம் என்று வேவ்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட.



புஷ்பா, சுந்தரி, மேகலா, கரனின் தாயாரான மலர், முகிலன், தந்தையர்கள் இருவருமே நின்றனர்.



முகிலனை கண்டதும் அப் பகுதிக்கு பொறுப்பாளர்



"சார்!..." என்று அவனை நாடி வரவும். "கல்யாண புடவை காட்டுங்க" என கூறி விட்டு அவன் ஒதுங்கி கொண்டான்.



அவர்களை தனியே அழைத்துச் சென்றவர், அனைவரையும் இருக்கையில் இருத்தி ஒவ்வொரு புடவையாக காட்டவும் முகூர்த்த புடவையை முதலில் காட்ட சொன்னார் சுந்தரி.



மரூண் கலரில் தங்க நிற ஜரிகைகள் ஆங்காங்கே கொடிகளில் பூக்கள், இலைகள் என்று படர்ந்திருக்க அகலாமான கரையில் இரண்டு மயில்கள் தங்கள் அலகை இதய வடிவம் போல் பெருத்தியிருந்த புடவையினை பார்த்ததும் மேகலாவிற்கு அது பிடித்து விட, பானுவிற்கு இது அழகாக இருக்கும். என நினைத்தவள் வெளிப்படையாக கூறமுடியாது அதையே இமையசையாது பார்த்திருக்க.



சுந்தரியோ அதை கவனிக்காது



"வேறு காட்டுங்கள்." என பல புடவைகளை குவித்து பார்த்துக்கொண்டிருந்தார்.



வேறு ஒரு புடவையை எடுத்து காட்டிய சுந்தரி "இது எப்படி இருக்கு?" என்று அங்கு உள்ளவரை கேட்க. அனைவருமே அது நன்றாக இருப்பதாக சொல்லவும் மேகலாவையும் கேட்டனர். அதை பார்த்தவளுக்கு அதுவும் மரூண் கலரில் தங்க ஜரிகையில் இலைகள் மாத்திரமே இருந்தது. சாதாரண கரை. அதுவும் பார்க அழகு தான். அதை விட இது சுமார் தான். என நினைத்தாலும் அதை வெளியில் காட்டாது,



"நல்லா இருக்கு அத்தை!" என்றாள்.



மேகலாவின் முகத்தில் அந்த புடவையை பார்க்கும் போது இருந்த ஆர்வம் ஏனோ இந்தபுடவையை பார்க்கும் போது இல்லாமல் போனதை ஓரமாக நின்ற முகிலன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.



பின் மணவறை சாறி. ஈவ்னிங்க் ரிசப்ஷன் என அவளுக்கே பார்த்து பார்த்து எடுத்தவர்கள்

அனைவருக்கும்
எடுத்து முடிய. மேகலாவை அவளுக்கு விரும்பியவாறு எடுக்கும்படி கூறவும்



"எனக்கு எதுவும் வேணாத்தை" என மறுத்தாள்.



"ஏன்மா!... எதுக்கு உனக்கு வேண்டாம்?...." என சுந்தரி வினவ.



"எங்கிட்ட இருக்கு அத்தை!.. நல்லூர் திருவிழாக்கு தான் வாங்கினேன்." எனக்கு அது பாேதும் என்க.



"மேகலா இது வீட்டில முதல் முதலா நடக்கிற விஷேசம். புதுசாவே போடுடா!.." என்க. மனமே இல்லாது தலையாட்டியவள் தனக்கு வேண்டியதை தானே தேர்வு செய்வதாக கூறியவள்,



சாதாரண புடவை பகுதிக்கு சென்று தேர்வு செய்யவதை கண்ட சுந்தரி. அவள் அருகில் வந்து "என்னம்மா நல்லதா தான் எடேன். பணத்தை பற்றி யோசிக்காதடா!.. இது எங்க கடை தானே!..." என்கவும்.



அவரை பார்த்து சிறிதாக புன்னகைத்தவள்.



"எனக்கு அதெல்லாம் பிடிக்காது அத்தை. சாதரணமா தான் உடுத்துவேன்." என்றவள் புடவையினை தேர்வு செய்ய.



"சரி சாதரணமாவே உடுத்திக்கோ. கொஞ்சம் பட்டு கலந்ததாவே எடுடா. விசேஷம்ல நிறைய பேரு வருவாங்கடா." என்றவும். புஷ்பா மேகலா அருகில் வந்து



"அவங்களுக்கு மரியாதையா இருக்காதுன்னு நினைக்கிறாங்க போல. கொஞ்சம் நல்லதா எடுக்கலாமே!.." என கெஞ்சுவதைப்போல் புஷ்பா கேட்க.



"ம்ம்.." என்றவள். சாதாரணமான மஜந்தா கலரில் கரையில் பட்டு போடர் அமைந்தது போல எடுத்துக் கொடுத்து விட்டு ஆண்கள் பகுதிக்கு அவர்கள் செல்ல,
முகிலன் அங்கு நின்றவரிடம் ஒரு புடவையினை காட்டி எதுவோ கூறி விட்டு சென்றான்.



ஆண்கள் பகுதியில் ஆண்களுக்கு வேண்டிய உடைகளை எடுத்தவர்கள். முகிலனுக்கு உயர்ரக பட்டு வேஷ்டி, பானுவுக்கு எடுத்த ரிசப்ஷன் உடை கலரில் கோட், சூட் என அன்றைய உடைகளை எடுத்து.



வீட்டுக்கு அனுப்ப சொல்லி வெளியேற இளவட்டங்களும் கதையளர்ந்தபடி வந்து சேர்ந்தனர்.



"என்ன வேண்டியது எல்லாம் எடுத்தாச்சா?" என சுந்தரி வினவ.



கரன் முந்திக்கொண்டு "ஓ..... அது தான் நாலு லாறியில் அனுப்ப வேண்டிவரும்ன்னு அங்கு நின்ற அந்த அங்கிள் சொன்னரே." என்றவன் சர்மிளாவை காட்டி "இவள் மட்டுமே ரண்டு லாறி சித்தி." என்க.



நான் அவ்ளோவு எல்லாம் எடுக்கல. நாலு செட் தான் எடுத்தேன்." என கரனை முறைத்தவாறு சர்மி கூற.



"ஐய்யோ!.. என்னமா புளுகிறா." என வாய் மேல் கைவைத்து பொய்யாக ஆச்சரிய பட்டவன், முகிலனிடம் திரும்பி



"அண்ணா உன்னோட ஒரு வருஷ உழைப்பு இவளே உறிஞ்சிவிட்டா" என்று அவனிடம் புகார் அளிக்கவும்.



சர்மியோ தாயிடம்



"பாரும்மா இவனை" என அழுவது போல் கூற.



இவர்கள் பேச்சு வார்த்தையில் தன்னை மறந்து அவர்கள் சம்பாசனையையும் சண்டையையும் பார்த்து புன்னகைத்தவள் பார்வையில் விழுந்தான் மயூரன்.



இவர்களுடன் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் ஏதோ கடமைக்கு வந்தவன் போல் ஒதுங்கியே நிற்பதை கண்டவள் எதுக்கு இவன் மட்டும் தனியே நி்ற்கிறான்?.



இவனை யாருமே கண்டு கொள்வதை போலும் தெரியவில்லை.



ஏதோ டிரைவர் போல வந்தான். அவ்வாறே எல்லா விடயத்திலும் பின் வாங்குகிறான்.



என்ன தான் இவனுக்கு ஆச்சு?.



ஏன் மற்றவர்களும் அவனிடம் முகம் காெடுத்து பேசவில்லை. என அவனையே ஆராய்ந்தவள், அவர்களுக்கே இல்லாத அக்கறை எனக்கு எதற்கு? என நினைத்து அவனை பற்றிய சிந்தனையில் இருந்து வெளியே வந்தாள்.



இவர்கள் சண்டை முடிந்து வீடு செல்லுகையில் முன்னர் எவ்வாறு வந்தனரோ அவ்வாறே காரில் சென்றார்கள்.



என்னதான் மயூரனை பற்றி சிந்திக்காதே என்று மூளை கூறினாலும் மனம் என்னமோ அவனையே சுற்றலானது. என்னதான் இவன் பிரச்சினை? என்று நினைத்தவள் அவனையே மிறர் வழியே பார்க்கலானாள்.



அவனும் இடை இடையில் இவளையே பார்க்க. ஒரு சிரிப்பை மட்டும் அவனுக்கு அளித்தவள் சாலையை வெறிக்க தொடங்கினாள்.



கல்யாண வேலையில் நாட்கள் இறக்கை கட்டி பறந்தது.



முன்னையதை விட பானுவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள்.



எப்போதும் யோசனையுடனே தனது அறையிலேயே முடங்க தொடங்கினாள்.



அவளுக்கே தான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற குழப்பம். எதனால் என்று பல முறை நினைத்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன்னை சாதாரணமாக இருப்பதாக காட்டிக்கொண்டாள்.



என்னதான் தங்கை தெளிவானது போல் காட்டிக் கொண்டாலும். அவள் தன்னால் தான் இவ்வாறு இருக்கிறாள் என்பதை அறியாதவள் இல்லை மேகலா.



முடிந்த அளவு அவளுடன் இருந்து தனக்கு தெரிந்த அறிவுரைகளையும் தங்கள் கஷ்டத்தை எடுத்த அவளுக்கு புரியும்படி கூறுவள்.



விடிந்ததும் திருமணம் என்றாகி விட, மண்டபத்தில் தான் திருமணம் நடைபெற இருப்பதால் அனைவருமே முதல் நாள் இரவே அங்கு கூடி விட்டனர்.



இரவு மணபெண் அலங்காரங்களுக்கு வேண்டியவற்றை ஒழுங்கு படுத்தியவள் "பானு நீ இப்போவே தூங்கு இல்லைன்னா மேக்கப் நல்லா இருக்காது ." என்று அவளை உறங்க செய்தவள்.



நாளையோடு தன் தங்கையை பிரிய போகிறேன் என்ற கவலை அவளை வாட்ட.



முடிந்தவரை கண்ணீரை உள்ளிழுத்தவள் அது முடியாமல்

தா


ன் அழுவதை உறங்கும் தங்கை கவனித்தால் எங்கே அவள் மனம் உடைந்து விடுவாளோ!..... என நினைத்தவள் அந்த அறையுடனே ஒட்டி இருந்த குளியல் அறை புகுந்து அந்த நான்கு சுவர்களுடனும் தன் சோகத்தை பகிர்ந்து கொண்டாள்.



எத்தனையோ துன்பத்தை சிறு வயதில் இருந்தே அனுபவித்தவள். யுத்தத்தின் பின் அழுவதையே விட்டிருந்தாள்.



சிறு வயதில் இருந்து அனுபவித்த வேதனையில் இப்போது நடப்பது அவள் மனதிற்கு சிறிதாகவே பட்டது.



எத்தனை பிணங்கள் அவள் காலிலே மிதிபட்டதும், எத்தனை சிறுவர்கள் தாய் தந்தையை இழந்தும், தாய் ரத்த ஆற்றில் இறந்து கிடப்பது கூட அறியாமல் பச்சிளம் குழந்தை தன் தாயின் மார்பதனில் பால் குடித்த காட்ச்சியை நேரடியாக கண்டதினாலோ என்னமோ மரத்து போய் இருந்தது அவளது இதயம்.



இறப்பு என்பது ஏதோ ஒரு மூலையில் தினமும் நடக்கும் ஒரு இழப்பாக இல்லாமல். ஒரு சம்பவமாகவே பட்டது.



கண்களில் கண்ணீர் கூட அவள் அனுபவித்த காயங்களின் வடுக்களால் அதன் சுரப்பியை இழந்து வரமறுத்திருந்தது.



ஆனால் இன்று தன் உயிராக நினைக்கும் தங்கை தன்னுடன் இருக்கும் கடசி தருணம் இது என நினைக்க அவள் மனம் மறுத்தது.



அவன் வெளிப்பாடே இத்தனை நாள் அவள் மறந்திருந்த கண்ணீர் அவள் விழிதனை நனைத்து காட்டாறு போல் ஆறுதல் கூற கூட யாருமின்றி கரைந்தாள்.



என்னதான் அவள் அழுதாலும் அவள் தன் வாழ்கை பயணத்திற்கான அடியை எடுத்து வைக்கிறாள் என்று தன்னையே தேற்றி கொண்டவள்.



சிறிது நேரத்தில் தன்னை சரி செய்து கொண்டு வெளியே வந்து பானுவின் அருகினிலே படுத்துக் கொண்டவளுக்கு தூக்கம் தான் வர மறுத்தது.



விடியும் தருவாயில் கண்கள் சொருக, நடக்க இருக்கும் விபரீதம் அறியாமல் தூங்கி போனாள் மணிமேகலை.



சங்கமிப்பாள்..............
 

Balatharsha

Moderator
அத்தியாயம் 12



விடியும் தருவாயில் உறங்கியதனாலோ என்னமோ மேகலா அசந்து தூங்க அவர்கள் அறை கதவும் தட்டப்பட்டது.



தட்டும் ஓசையில் இருவருக்கும் வழிப்பு தட்டிவிட மேகலாவால் கண்கள் திறக்க முடியாமல் எரிச்சல் ஏற்படவே பானுவை கதவை திறக்க சொல்லிவிட்டு படுத்திக்கொண்டாள்.



கதவை திறந்ததும் உள்ளே வந்த புஷ்பாவோ



"என்னங்கடி ரண்டு பேரும் இப்பிடி தூங்குறீங்க?. இன்னைக்காவது வேளையோட எழுந்து ரெடியாக வேண்டாமா?..... இன்னும் கொஞ்ச நேரத்தில் படப்பிடிப்பு அது இது என்று வந்து விடுவாங்க. மாப்பிள்ளை அழைப்பு வேறு இருக்கு.
நீயும் இப்படி தூங்கினா எப்படி மேகலா?. எழுந்து ஆக வேண்டியதை கவனி!..." என்க.



தாய் சொல்வதில உள்ள உண்மை புரிந்தவளாய். தன் கண்னெரிச்சலை கூட பொருட்படுத்தாது.



" இதோ எழும்பிறேன்மா!.." என்றவள் பானுவை குளித்து வரும்படி கூறி. அருகில் இருந்த அறை தாய் தங்கிய அறை என்பதால் தானும் அதற்குள் புகுந்து, குளித்துவிட்டு சாதாரண சுடிதாரில் வந்தவள், பானுவை அலங்காரம் செய்து முடித்து விட்டு தான் தயாராகலாம் என நினைத்து மணப்பெண் அறை நுழைந்தாள்.



இவர்கள் இருவரும் அழகுக்கலை பயின்றதால் பானுவை தயார் செய்வது மேகலா என்றானது.



குளித்து வந்த பானுவிற்கு சாதாரண மணவறை புடவையே உடுத்து விட்டவள், ஒவ்வொரு அலங்காரங்களையும் முடித்து அவளை பார்க்க தேவைதை போல் தெரிந்தாள் பானு.



ஆனால் என்னமோ பானுவின் முகத்தில் என்றுமே இல்லாத கலையிழந்த தோற்றமே மேகலாவுக்கு ஏதோ அசம்பாவிதத்திற்கு அறிகுறியாக தோன்ற.



பானுவை தேற்றும் விதமாக ஒரு சில வார்த்தைகளை கூறியவள்.



"இங்க பாரு பானு உனக்கு கல்யாண பேச்சு தொடங்கிய நாளில இருந்து நான் சொல்லாததை
இன்னைக்கும் புதுசா சொல்ல போரது கிடையாது.
நம்ம அப்பா எங்க இரண்டு பேரையும் நினைத்து தான் வயது போச்சு என்று கூட யோசிக்காமல் வெயிலிலும், மழையில் கூலி வேலைக்கு போய்ப்படாத பாடு படுகிறார்.
இப்பிடி நீ இருந்தா அவர் மனசு என்ன வேதனைப்படும் என்று யோசிச்சு பாரு!" என்றவள்.



அவளை ஆரத்தழுவி அவளது கவலைகளை மறக்கடிப்பதாக நினைத்து தனது வேதனைகளை போக்கிக்கொண்டாள்.



சிறிது நேரத்தில் மாப்பிள்ளை அழைப்பு என்று பெண் வீட்டார் சார்பில் கிளிநெச்சியில் இருந்த பானுவின் சித்தி மகனை மாப்பிள்ளை தோழனாக மாப்பிள்ளை கோலத்திலேயே பெரியவர்களோடு அனுப்பிவைத்தனர்.



மாப்பிள்ளை வீட்டு வாசலில் நிறைகுடம், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், குத்துவிளக்கு, வீபூசி, சந்தனம், கும்குமம் என மங்கள பெருட்கள் சகிதம், அவர்களை வரவேற்கவென பன்னீர் தெளித்து வரவேற்கவும்.



உள்ளே சென்றவர்கள் மாப்பிள்ளையை ஒரு மரப்பலகையில் கிழக்கு நோக்கி அமர்த்தி, வெற்றிலையை சுருட்டி அதனுள் சில்லறை காசை வைத்து முகிலன் கையில் கொடுத்து, பாலில் மஞ்சள், அறுகு, சில்லறை காசுகள், போட்டு அவன் தலையில் மூன்று முறை ஒவ்வொருதராக வைத்து அவனை குளிக்க அனுப்பி வைத்தனர்.



முகிலன் தயாரகி வந்து சாமி தரிசனம் முடித்து பெற்றவர்கள் காலில் விழுந்து வணங்க. மாப்பிள்ளை தோழனான விக்கி அவன் தலையில் தலப்பாகை அணிவித்து அவனை அலங்கரிக்க பட்ட காரில் மண்டபம் அழைத்து சென்றான்.



அவன் வரும் காரை கண்டது பெண் வீட்டார் மேள, தாளங்களுடன் மாப்பிள்ளையை வரவேற்க.



மாப்பிள்ளை தோழனான விக்கி மண்டப வாசலிலே ஒரு தட்டை வைத்து முகிலனை அதில் ஏறி நிற்க சொல்லி அவன் காலை கழுவி விட.



அதன் பிரதி உபகாரமாக முகிலன் அவன் கையில் மோதிரம் அணிவித்ததும் மேளதாளங்களுடனே மணமேடை அழைத்து செல்லப்பட்டான் முகிலன்.



ஐயர் மந்திரங்கள் ஓத மாப்பிள்ளையும், மாப்பிள்ளை தோழனும் அவர் சொல்லி தருவதை திரும்ப சொல்லிக் கொண்டிருக்கவும்.



வெளியே வந்து எட்டி பார்த்த மேகலா சம்பிர்தாயங்களை கவனித்து விட்டு உள்ளே வந்தவள், "மாப்பிள்ளை வேட்டி சட்டையில் நல்ல ஸ்மார்ட் டி" என்றவள் அலங்காரங்களை சரி பார்த்த படி பெண்ணை எப்போது அழைப்பார்கள் என எதிர் பார்த்தபடி இருக்க.



அவள் ஃபோன் நானும் இருக்கின்றேன் என்னையும் கவனி என்று அழைத்தது.



"யாரிது இந்த நேரத்தில?..." என்று நினைத்தவள் திரையில் தெரிந்த எண்ணை கண்டுவிட்டு "பானு என்னடி வேலை இடத்தில் இருந்து இப்போ போன் பண்றாங்க." என்றவள்,



"இரு பேசிட்டு வரேன் !.."என்றவாறு அதை உயிர்பித்து பேசியவள் காதில் எதிர்புறம் பேசியவர் பேச்சானது மேளதாளம் நடுவில் கேட்காமல் போகவே,



"இருடி!.. ஐந்தே நிமிடத்தில் வந்திடுறேன்." என மட்டபத்தை விட்டு வெளியே வந்து பேசலானாள்.

தன்னோடு
வேலைசெய்யும் பெண்ணிடம் இரண்டு வாரம் தான் லீவ் என்பதனால் தனக்கு தரப்பட்ட தையல் வேலையை முடித்து கொடுக்க வேண்டிய திகதிக்குள் வாடிக்கையாளர் வரும்போது சேர்த்து விட சொல்லி கொடுத்தவள், அது சரி என்று அவர் சொன்னால் பிரச்சினை இல்லை. அதில் திருத்தங்கள் இருப்பின் கேட்டு வை!.. பிறகு வந்து தான் பார்த்து கொள்வதாய் சொல்லி வந்தாள்.



இன்று தான் அந்த வாடிக்கையாளர் வந்திருப்பார் போல. ஆனால் இவள் வடிவமைத்த அந்த ஆடையில் பெரிதாக பிழை இருப்பதாகவும் அந்த வாடிக்கையாளர் பெரிய கஷ்டமர் என்பதால் இவளை இவள் முதலாளி போன் போட்டு வறுத்தெடுத்து கொண்டிருந்தார்.



மேகலாவே என்ன செய்வதென்று தெரியவில்லை. இங்கு பெண்ணை மண மேடைக்கு அழைக்க போகிறார்கள் அதைவிட முகூர்த்த புடவை வேறு மாற்ற வேண்டும். இவர் போனை வைப்பது போல் தோன்றவில்லை.



என்ன செய்வதென யோசிக்கவும் அவரே முடிக்க வேண்டிய அபிஷேகச்களை முடித்தவர் வைத்து விட,



அப்பாடா!... என்றிருந்தது மேகலாவிற்கு.



"என்ன ஒரு இடி மழை!.." தொடர்ந்து பதினைந்து நிமிடங்காக கேட்ட சத்தத்தில் அவள் காதே வெடித்திருக்கும் போலிருந்தது.



"இனியாவது இந்த போன் ஆஃப் பண்ணி வை மேகலா!.." என்று தன்னிடமே சொன்னவள். திரும்ப அழைத்து திட்ட ஆரம்பித்தால் பானுவை தயார் பண்ண முடியாது



என நினைத்தவள் மண்டபத்தை நோக்கி சென்றாள்.....



அவள் உள்ளே செல்லவும் ஒரே சல சலப்பாக இருக்க. "என்னாச்சு?.." என்று கூட்டத்தை பிளந்து பார்த்தாள் மேகலா.



புஷ்பா தான் தரையில் இடிந்து அழுதவாறு இருக்க. வேல் முருகன் அவரை ஆறுதலாய் அணைத்தபடி இருந்தார்.



மேகலாவை கண்டுவிட்டுஅங்கு நின்ற பெண்னொருவர் "இதோ அந்த பெண்ணோட அக்காகாறி அவளை எங்கேயோ அனுப்பி வைச்சிட்டு வந்துட்டா." என்று கூற.
புஷ்பாவை சுற்றி நின்ற கூட்டம் மேகலாவை சூழ்ந்து கொண்டது.



புஷ்பாவும் எழுந்து அவர்களை விலத்திக்கொண்டு அவளிடம் வந்தவர்,



"மேகலா எங்கடா போனிங்க ரண்டு பேரும்?. நான் ரொம்ப பயந்தே போனேன்.



எங்க பானு?.. அவளை மணமேடைக்கு கூப்பிடுறாங்க, முதல்ல அவளை கூட்டிட்டு போம்மா!" என்க.



மேகலாவுக்கு தான் எதுவுமே புரியவில்லை.



"அம்மா!... முதல்ல பதட்ட படாதிங்க." என்று அவரை அருகில் இருந்த இருக்கை இழுத்து அமர வைத்தவள்.



"என்னம்மா ஆச்சு?.. ஏன் எல்லாரும் உங்களையே சுத்தி நிக்கிறாங்க?.. எதுக்கு அந்த அம்மா என்னை பாத்து கோபமாக பேசினாங்க?... என்னாச்சு?.. உங்க உடம்பிற்கு ஏதாவது செய்யுதா?.." என உள்ளே பதட்டமாக இருந்தாலும் நிதானமாக வினவியவளிடம்,



"அவங்கள விடுமா!.. அவங்க அப்பிடித்தான். என் புள்ளங்களை தப்பா பேசுறாங்கடா!.. நீயும் உன் தங்கையும் வெளியே போய் இருக்க.



ரண்டு போருமே ஓடி போய்டிங்க என்றாங்கம்மா!..



அவங்க நல்லா சொல்லிட்டு போகட்டும் என்பொண்ணுங்களை எனக்கு தெரியாதா?.... எங்க அவ?.. அவளை முதல்ல கூப்பிடு!......." என்க.



"அவ அறையில தானே இருக்கா. நீங்க இங்க தேடினா எப்பிடி கிடைப்பா?.." என்று நின்றவர்களை கடந்து மணபெண் அறை திறந்து பார்த்தவள் அங்கு பானு இல்லாமல் போக. குளியலறையை திறந்து பார்த்தாள். அங்கும் இல்லை என்றதம் தான்.



அவள் மூளை வேலை செய்யவே தொடங்கியது. அப்படின்னா பானு...?



"இல்லை...! என் தங்கை அப்படி செய்திருக்க மாட்டா." என்று அந்த அறை கட்டிலிலே அமந்து விட.



உள்ளே போனவளை காணாது மாப்பிள்ளை வீட்டு சொந்தங்கள் வந்து "என்னம்மா நல்லா நடிக்கிற போல.
உன் தங்கையை வெளிய கூட்டிடு போய் யாருக்கும் தெரியாம அனுப்பி வைச்சிட்டு இங்கு வந்து எதுவும் தெரியாத போல வேஷம் போடுறியா நீ....?
இதுக்குத் தான் தராதரம் தெரியாத குடும்பத்தில் பெண் எடுக்க வேணாம்னு முதலிலேயே சொன்னேன்.
அக்கா தான் ஏதோ பொண்ணு அழகி, பாடுவாள், ஆடுவாள் என்று ஏதோதோ சொன்னாங்க.
ஆனா இப்பிடி கடசி நேரத்தில ஓடுவாள்னு யாரு கண்டா?.."



"இவன் வேற, இது வரை கல்யாணமே வேண்டாம் என்றிருந்தவன், இப்போ தான் ஏதோ மனம் மாறி ஒத்துக்கிட்டான். இப்போ இப்பிடியானதும் இனி தான் சாமியாராவே இருந்துக்கிறேன் என்க போறான்." என கூச்சலிட்டாள்.



அங்கு நடப்பதை அனைத்தையும் சுந்தரி அவர்கள் குடும்பம் எதுவும் செய்ய முடியாதவர்களாக ஓரமாக நின்று
தனது பிள்ளை வாழ்க்கையில் தானே மண்ணை அள்ளி போட்டு விட்டேனே என்று அவள் பேச முடியாது வாயடைத்து நிற்க.



மண மேடையில் இருந்து அத்தனையும் பார்த்து கொண்டிருந்தவன் அவர்கள் அருகில் வந்து அவர்கள் பேச்சை கவனிக்கலானான்.



அங்கு நின்ற முகிலனின் நெருங்கிய சொந்தமாண பெண்ணோ மேகலாவை உழுக்கி,
"இப்போ நீ உண்மையை சொல்ல போறியா இல்லையா?... சொல்லல்ல உங்கள் குடும்பத்தை கூட்டத்தோட போலீஸில் ஒப்படைச்சிடுவேன்." என்று அவளை மிரட்டி கொண்டிருக்க.



மேகலாவால் எதை தான் சொல்லி அவர்கள் பட்ட அவமானத்தை போக்க முடியும்.



ஆனால் அவள்தான் எதுவும் செய்யவில்லையே?...



"ம்மா..! சத்தியாமாக எனக்கு எதுவுமே தெரியாது. எனக்கு அவசரமா என்னோட வேலை இடத்தில இருந்து ஃபோன் வந்சிச்சு. பேசத்தான் வெளியே போனேன்." என்று அவள் அழுதவாறு கூற.



"உங்களை போலயிருக்கிறவங்களுக்கு ஏமாத்துறது என்ன கஷ்டமா?.." என ஆரம்பித்து வாயில் வந்ததை எல்லாம் பேசவும்.



மேகலாவால் எதுவுமே சொல்ல முடியவில்லை...



தன் பெற்றோரை பார்தவள் அத்தனை பேர் மத்தியிலும் அவர்கள் கூனிக் குறுகி நிற்பதை அவளால் பார்க்க முடியவில்லை.



ஆனால் நடந்த நிகழ்வையும் மாற்ற முடியாதே!.. என்று அவள் அவர்களிடம் ஓடி சென்று கட்டி அணைத்து



"ம்மா..... ப்பா....." என்று தேம்பியவள்.



"அவங்க சொல்லுறது போல நான் எதுவுமே பண்ணலம்மா. பானு எங்க போனாள்னு சத்தியாமா எனக்கு தெரியல்ல.



நான் நிஜமாவே போன் தாம்மா பேச போனேன்." என்றவள் விடாது தாயை கட்டிக்கொண்டு அழ.



அவ்வளவு சலசலப்பையும் கிழித்துக்கொண்டு வந்தது முகிலனின் அடி வயிற்றில் இருந்து வந்த கோபக்குரல்.



"எல்லாரும் உங்க உங்க வேலையை பாக்கிறீங்களா?.....



எங்க சொந்த பிரச்சினையை நாங்கள் பார்த்துக்கிறோம்." என்றது தான் அது.



அவன் வார்த்தையில் மொத்த சத்தமும் அடங்கி விட, ஒட்டு மொத்த கூட்டத்தையும் அறையை விட்டு வெளியேற சொன்னவன்.



சுந்தரியிடம் வந்து.



"இப்போ புரியுதாம்மா!... எதுக்காக இவ்வளவு நாள் எதுவுமே வேண்டாம் என்றிருந்தேன்னு?...



இப்போ உங்க ஆசையால என் மானமே போச்சு. இப்போ சந்தோஷமா உங்களுக்கு?..

இந்த பெண் வர்கமே இப்பிடித்தான்.
எனக்கு முன்னாடியே இது போல ஏதாவது ஆகும்னு தெரிஞ்சு தான் எதுவுமே வேண்டாம்ன்னு ஒதுங்கியே இருந்தேன்.



மொத்தமா கூட்டத்த கூட்டி அசிங்க படுதிட்டாளுங்க.
நீங்க இந்த பேச்சு எடுக்கும் பேதே எனக்கு தெரியும்.
இதோ.... இத மாதிரி அனுபவிக்க போறீங்கனு. ஆனா இவ்ளோ சீக்கிரமா அனுபவிப்பிங்கன்னு கொஞ்சமும் நினைக்கலம்மா!.."



"இப்போது என்னத்த செய்து வந்திருக்கிறவங்க வாயடைக்க போகிறீர்க?.
கெஞ்சம் முன்னாடி பார்த்திங்க தானே!....
என்னெல்லாம் பேசினாங்கன்னு.
இது இந்த கேவலமான குடும்பத்திற்கு பழக்கப்பட்டதா இருக்கலாம். ஆனால் நமக்கு அப்படியா?....
வெளி இடங்களில தலை காட்ட முடியாதளவுக்கு செய்து வைச்சிட்டாங்க."



என்று கோபமாக அந்த மண்டபமே அதிரும்படி கத்தியவன்.



மேகலா தாயை கட்டிக்கொண்டு அழுவதை பார்த்து



"ஏய்.... இங்கே பார்!...



இந்த அழுது நீலி கண்ணீர் வடிச்சு இங்கு எந்த பிரியோசனமும் இல்லை.



நீயாவே உன் தங்கையை அனுப்பிச்சியோ!... இல்லை அவளே ஓடிப்போனாளோ!.. எனக்கு தெரியாது.



ஆனால் என் மானம் எந்த ஓடுகளியாலும் போக நான் அனுமதிக்க மாட்டேன். யாரையும் நாங்கள் திருமணம் செய்னு நிர்ப்பந்திக்கல்ல.



இவ்வளவு தூரம் வந்த பிறகு உன் தங்கை எவன்கூடவோ ஓடி போவா, எங்கிருந்தாலும் வாழ்கனு அர்ச்சதை தூவ நான் ஒன்றும் சினிமாவில வார ஹூரோ கிடையாது..........



குறிச்ச நேரத்தில் குறித்த முகூர்த்தத்தில் என் கல்யாணம் நடந்தே தீரணும்.



எங்க போவியோ!... இல்லை எவன் காலை பிடிப்பியோ!.. உன் தங்கை இங்க வரணும் என ஆண் சிங்கமாய் கர்ஜிக்க,



அவனது கோபக் குரலில் வெகுண்டவள்.



"அவ எங்க போனான்னே தெரியாதே!.. எப்படி குறித்த முகூர்த்தத்தில் அவளை கூட்டி வர முடியும்?.." என்க.



"அது எனக்கு தெரியாது?.. என் கல்யாணம் நடக்கணும்". என் மானத்திற்கோ தொழிலுக்கோ இந்த தடை பட்ட திருமணத்தால் இழுக்கு நேர நான் அனுமதிக்க மாட்டேன்.



சங்கமிப்பாள்.............
 

Balatharsha

Moderator
அத்தியாயம் 13.
"ஏன் உன் தங்கை இடத்தில் நீ இருந்தாலும் எனக்கு ஆசேபனை இல்லை. ஆனால் இந்த திருமணம் இன்றே நடக்கணும்." என தீர்மாணமாக கூற.
அவன் கூறியதை கவனமாக செவி மடுத்தவள், அவன் கடசியாக கூறியதை ஏற்க முடியாமல் "என்னது?..." என்க.
"ஏன் உன் இத்து போன காதுக்கு நான் சொன்னது விளங்கவில்லையா என்ன?....
எனக்கு தேவை என் திருமணம் குறித்த நேரத்தில நடக்கணும்.
என் தொழில் முறை நண்பர்கள் வர நேரமாகுது. உன் கூட பிறந்தவள் எவன் கூடவோ ஓடி போய்டா.
இப்போது அவளை தேடி கண்டு பிடிச்சு கூட்டிட்டு வரேன் என்கிறது பொய்யாக தான் இருக்கும். உனக்கும் வேற வழி கிடையாது." என்க.
தாய் புஷ்பாவை அடிபட்ட பார்வை பார்தவள், அவர் தனக்காக பேச வருவார் என நினைக்க.
அவரோ எதனையையும் கண்டு கொள்ளும் நிலமையில் இல்லையே.
பெண்ணை பெற்று இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் நிற்கும் எந்த பெற்றோர் தான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு சமூகத்தின் முன் நின்று பேச முடியும்?. அவரால் தலை நிமிர்ந்து பார்கவே முடியாத போது கேட்கவா முடியும்?.
அவரை பார்க்கவே புரிந்தது. இவர்கள் தனக்காக பேச வரமாட்டார்கள் என்று. இனி தனக்காக தான் தான் வாதட வேண்டும் என நினைத்தவள்.
"இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். எனக்கு இதில் உடன் பாடு இல்லை." என்று அவள் மறுத்து கூற.
அவளை பார்த்து ஒரு கேலி புன்னகை உதிர்த்தவன்,
"இங்கு யாரும் உன்னை கட்டிக்கொள்ளணும்ன ஆசையில் உன்கிட்ட சம்மதம் கேட்கல. அப்பிடி உன்கிட்ட சம்மதம் கேக்கிறதா நீ நினைச்சா அது உன் முட்டாள் தனம்.
என்னடா இவன் பெண் பார்க்க வந்ததில் இருந்து பேசாமல் இருக்கிறானே அம்மாஞ்சி என்று நினைத்து தானே இவ்வளவும் உன் தங்கை செய்தாள். எனக்கும் இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை.
அம்மாவோட கட்டாயத்தால தான் ஒத்து கொண்டதே. அதனால தான் எதிலும் என்னால முழுமனதா ஈடுபட முடியாம ஒதுங்கி நின்றதே.
நல்ல குடும்பத்தில் பெண் பார்ப்பாங்கனு அவர் பொறுப்பில் எல்லாவற்றையும் ஒப்படைச்சது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிய வைச்சிட்டிங்க. எங்கள் தகுதிக்கு எத்தனை உயர்ந்த குடும்பம் காத்திருக்க. ஓடுகாலி குடும்பம் தான் என் அம்மா கண்ணில் பட்டிருக்கு."
"உன் ஓடுகாலி தங்கை செய்த தவறுக்கு நீ தண்டனை அனுபவி. முகூர்த நேரம் நெருங்குது எல்லோரும் வர ஆரம்பிச்சிட்டாங்க. ஊருக்கு படங்காட்டிய வரை போதும். இனி வரவங்களாவது தப்பா நினைக்காத மாதிரி எழுந்து தயாராகு!" என கட்டளையிட.
"நீங்கள் யார் என்ன சொன்னாலும் நான் உங்கள் பேச்சை கேட்கிறதா இல்லை. எனக்கு திருமணம் என்ற ஒன்றே வேண்டாம். நான் என் வாழ்க்கையில் இருந்து அதை அடியோடு வெறுக்கிறேன். என்னிலையில் இருக்கிற எந்த பொண்ணும் இந்த முடிவைத்தான் எடுப்பா.
இப்படி நான் இருக்கும்போது உங்கள் பேச்சுக்கு கட்டு படுவேனு எப்படி நினைப்பீர்க?" என்று அவள் தனது ஆதங்கத்தை மூச்சு விடாமல் சொல்லி முகத்தினை மூடி கதறவும்.
"இங்க யாருடைய சம்மதமும் நான் கேட்கல்லை. கட்டளையா மட்டுமே தான் சொல்கிறேன்.
இல்லை உன்னால் இதற்கு சம்மதிக்க முடியாதுன்னா உன் இஷ்டம்.
இன்னும் கொஞ்ச நிமிஷத்தில இந்த வயது போன தம்பதிகள் கம்பி எண்ண நீ ஆசைப்பட்டா தாரலமாக நீ போகலாம்.
ஆனால் ஒன்னு!..
உன்னையும் உன் ஓடி போன கேவலங் கெட்ட தங்கையும் மட்டும் நிம்மதியா இருக்க விடுவேனு மட்டும் நினைச்சிடாத. உன் தங்கை மீது மானநஷ்ட வழக்கு போட்டு அவள் எங்க இருந்தாலும் வாழ்கையில் மீள முடியாத அளவிற்கு உங்க எல்லாரையும் ஊரார் முன்னிலையில் அசிங்க படுத்தி ஜெயிலில போட்டிடுவேன்."
"ஐந்து நிமிடங்கள் உனக்கு சந்தர்பம் தரேன். நல்லா யோசித்து ஒரு முடிவெடு." என்றவன் அவள் பதிலுக்காய் கட்டிலிலே அமர்ந்து விட.
மேகலா என்ன செய்தாலும் பாதிக்க படுவது தன்னை வேற்று பிள்ளையாக நினையாது உயிராக வளர்த்த பெற்றோர்களே.
அவர்கள் ஏற்கனவே ஊரார் முன்னிலையில் தலையே நிமிர முடியாமல் இருக்கின்றார்கள். இன்னும் ஒரு அசிங்கமா?.... என்னை இவ்வளவு காலம் வளர்தவர்களுக்கு நான் செய்யும் நன்றி கடனா இது?... இது தான் நான் கடசி காலம் மட்டும் அவர்களை கண்ணுக்குள் வைத்து பார்க ஆசைப்பட்ட காட்ச்சியா ?.....
இங்கு என்னதான் நடக்கிறது?.... வேடிக்கை பார்க்கும் ஒருவருக்கு கூட எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா?.... பானு செய்த பாவத்திற்கு எப்படி அவள் தமக்கை தண்டனையை ஏற்பாள். சட்டத்தில் கூட அப்படி இல்லையே!... தவறு செய்த ஆயிரம் பேர் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்க பட்டு விடக்கூடாது என்பது தானே சட்டத்தின் நடைமுறையே!... அதுவும் இது சாதரண தண்டனையா?.... ஆயுள் பூராகவும் விருப்பமே இல்லாமல் கடமைக்கு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வாழ்வது என்பது சாதரணமானதா?.... இதற்கு ஒரு நிமிட தூக்கு தண்டனை போதுமே!.. நின்மதியாக போய் சேர்ந்து விடலாம்.
இது சுய இரக்கம் கொள்ளும் நேரமில்லை.
நான் தாமதிக்கம் ஒவ்வொரு வினாடியும் என்னை கண்ணுக்குள் வைத்து பாதுகாத்தவர்கள் இவன் மிரட்டலுக்கு பயந்தே ஏக்கத்தில் உயிரை விட்டு விடக்கூடும்......
இல்லை எனக்கு தான் வாழ்வு இல்லை என்று ஆகி விட்டதே!..... அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும் சாதாரணமாக ஊராருக்காகவும் அவன் கௌரவம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக நடக்கும் ஒரு கண்கட்டு நாடகம் தானே இந்த திருமணம்!. என நினைத்தவள். தாயை கட்டிக்கொண்டு
"ம்மா......" என்று தேம்பியவள் "என்னை மன்னிச்சிடுங்கம்மா!.. எல்லாம் என்னால வந்த குழப்பம் தான். நான் மட்டும் பானுவை வற்புறுத்தி சம்மதிக்க வைக்காம இருந்திருந்தா இந்த அசிங்கம் நேர்ந்திருக்காதுல்ல.
அவ எப்படியும் மனசு மாறுவான்னு நினைச்சு உங்களை இந்த நிலமைக்கு ஆளாக்கிட்டேன். சாரிம்மா!..." என்றவள். "நான் ஆரம்பிச்சு வைச்சதை என்னால தான் முடித்து வைக்க முடியும்னா அதையும் நானே பொறுப்பேற்கிறேன்."
என்று ஒரு முடிவெடுத்தவளாய் எழுந்து கண்களை துடைத்தவள்
"எனக்கு சம்மதம்" என எங்கோ பார்த்தவாறு ஒற்றை வரியில் கூற.
"நல்லது..." என்று அவளை போலவே உயிரற்று கூறியவன், தாயிடம் கண்ணை காட்டி விட்டு வெளியேற. சுந்தரியோ முன்வந்து அவளை தயாராக்க வான்மதியும் உதவுவாதாக அந்த அறையிலே நின்று விட்டாள்.
மீதமுள்ளவர்கள் கல்யாண வேலையை பார்க்க வெளியேறினார்கள்.
நின்ற சடங்குகள் மீண்டும் ஆரம்பமாக. முகிலனோ இறுகிய முகத்துடன் ஓமகுண்டலத்துக்கு நிகராக கோபகணலாய் அமர்ந்து ஐயர் மந்திர மோத அதையே வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
இங்கு இது வரை தமையன் கோபப்பட்டு பார்த்திருக்கிறாள் தான் வான் மதி. ஆனால் இன்று அவன் கொந்தளித்தது போல் பார்க்க வில்லை. அதை அவளால் தாங்கி கொள்ளவும் முடியவில்லை.
எல்லாம் இந்த கேவலம் கெட்ட குடும்பத்தால் வந்தது என அவர்கள் மேல் ஒரு வஞ்சத்தை வளர்த்துக்கொண்டே மேகலாவை தயார் படுத்தினாள்.
தமையன் மேல் உயிரான அன்பு தங்கை ஆயிற்றே. உடன்பிறப்புக்கு ஒன்றென்றால் அவளால் தாங்கி கொள்ள முடியுமா என்ன?..
மண்டபம் பூராகவும் நின்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல்,
ஒரு சிலர் ஓடி போனவள் வந்து விட்டாளோ!... என்றும், ஒரு சிலர் அவள் ஓட வில்லையாம் எங்கேயோ போனாளாம் என்றும். ஒரு சிலர் நிதர்சனம் புரிந்தும் பேசிக்கொண்டு இருக்க. மேகலாவோ பல குழப்பங்களுக்கு நடுவே தயாராகி கொண்டிருந்தாள்.
அவளுக்கோ என்னதான் நடந்ததென்று புரியவில்லை.
இந்த நிமிடம் கனவாக இருக்க கூடாதா?.. என்று தான் அவள் வேண்டுதலே.
நேற்று வரை இது போல் தன் வாழ்கையில் கனவு கூட வரக்கூடாது என்ற மனநிலையில் இருந்தவளுக்கு இன்று நடப்பவற்றால் அவள் இருக்கும் மன நிலைதான் என்ன?..
இதற்கிடையில் பானு எங்கே போனாள்?.... அவளுக்கு என்னவாகிருக்கும்?... யாரையாவது நம்பி போய் அவர்கள் ஏமாற்றி விட்டால் அவள் வாழ்க்கை என்னாவது?
இருக்காது!.. என் தங்கை அப்படி பட்டவள் கிடையாது.
அவளை நாங்கள் அப்படி வளர்க்கவில்லை. அப்படி ஏதாவது இருந்திருந்தால் தன் முடிவிலே இருந்து சாதித்திருப்பாள்.
என்னிடம் அவள் எதுவும் மறைத்ததில்லை. அப்படி இருக்காது என்று நினைத்தவள்.
மறைக்காதவள் தான் இந்த காரியம் செய்தாளா? என்று தனக்குள் தானே கேட்டுக்கொண்டாள்.
ஒரு வேளை என்னை நினைத்து தான் ஓடினாளோ?... நான் கல்யாணமே வேண்டாம் என்று இருப்பதை போல் தானும் காலம் பூராகவும் என்னை போலவே இருக்க முடிவெடுத்து விட்டாளோ?...
எவ்வளவு எடுத்து சொன்னேன்டி!.
ஃபோன் பேசுறதுக்கு முன்னாடி கூட கிளிப்பிள்ளைக்கு சொல்லுறதை
போல படிச்சு படிச்சு சொன்னேனே!....
எவ்வளவு பெரிய இக்கட்டில் என்னை மாட்டி விட்டுபோய்ட தெரியுமா?...
என்னை விடு!.. நம்மை பெற்றவர்களை நீ இது வரை இந்த நிலமையில் பார்த்திருக்க மாட்ட. எனக்கு அந்த நிலையை எதுக்குடி தந்தா?.. என்று அவளை மனதோடு திட்டியவாறு இருந்தவள்
நாளைக்கு நீ வந்து உன்னால தானே எனக்கு கல்யாணமே வேண்டாம்னு ஓடினேன். இப்போ எனக்கு பார்த்த மாப்பிள்ளையே நீ கட்டிட்டு என் வாழ்க்கையை நீ வாழ்றியானு கேட்டா நான் எங்க கொண்டு போய் என் முகத்தை வைப்பேன்?.
எதுக்கு இந்த மாதிரி பண்ண?.. நான் என்ன தான் செய்வேன்?. ஆண்டவா இதுவரை நீ இருக்கிறதா எனக்கு நம்பிக்கை இல்லை.
ஆனால் நீ இருந்தால் அவள் வந்து என்கிட்ட இந்தமாதிரி கேட்கிறத போல வைச்சிடாதே!....
இது அவள் வாழ்கை. அதை நான் திருடி வாழபோகிறேன்.
இனி என்ன நடக்கும் என்கிறதும் எனக்கு தெரியாது.
என்னால என்னை சுற்றி உள்ளவங்களுக்கு எந்த தீங்கும் வராமல் பார்த்து கொள்!. நான் பிறந்ததும் அம்மாவை முழுங்கினேன்.
வளர்ந்து அப்பா முழுங்கினேன். பள்ளி பருவத்தில் உயிராக வளர்த்த அக்காவை முழுங்கினேன். இப்போது யாரை முழுங்க விதி சதி வகுக்குதோ தெரியல்ல.
என் அதிஷ்டத்தால யாருக்கும் துன்பம் வராமல் பார்த்து கொள். என மனமுருக இதுவரை அறியாத ஆண்டவனிடம் பெரிய அளவிலான கோரிக்கையை வைத்தாள்.
ஐயர் பெண்ணை அழைத்து வர சொல்லவும் வான்மதி அவளை மணமேடை வரை கெண்டு வந்து விட்டவள், அவள் பின்னாலே நின்று கொள்ள, வேல் முருகனும் புஷ்பாவும் கன்னியாதானம் செய்ய
சில சம்பிர்தாயங்கள் மத்தியில் முகூர்தநேரம் நெருங்கிய காரணத்தால் முகூர்த்த புடவை உடுத்த முடியாமல் போகவே அதை அவள் மேல் போர்த்தி விட்ட சுந்தரி ஐயர் கெட்டி மேளம் முழங்க மங்கள நாண் அவள் சங்கு கழுத்தில் பூட்டினான்.
இத்தனையும் அவள் கண்கள் குளம் கட்டவே தலை குணிந்தவாறு சகித்து கொண்டிருந்தாள்..
அவனை குங்குமம் வைத்து விடும்படி சொல்ல அவள் தலையின் பின் புறமாக கொண்டுவந்து நெற்றியில் வைத்தான். பின் மாலை ஒருவருக்கொருவர் மாறி மாறி மூன்று முறை மாற்றி அக்கினியை வலம் வந்து மெட்டி அணிவித்து. திரை மறைவில் பால்பழம் இருவருக்கும் வழங்க பட்டது.
அதை அவர்கள் மூன்று முறை மாறி மாறி ஊட்டி விட வேண்டும். வேமகலா ஏதோ கடமைக்காகவே செய்து கொண்டிருந்தாள்.
சடங்குகள் அனைத்தும் முடிந்து பெண் வீட்டுக்கு தான் முதலில் செல்வது முறை. ஆனால் முகிலன் அதை மறுத்து விட்டான்.
அதோடு தனது இந்த அசிங்கத்துக்கு காரணமான அந்த குடும்பத்தோடு இன்றிலிருந்து எந்த உறவும் வைக்க கூடாதென்று கண்டிப்பாக கூறி விட்டு மேகலாவை பார்த்தவன்
"உனக்கும் சேர்த்து தான் இது பொருந்தும். அவர்கள் குடும்பம் வேறு. நம் குடும்பம் வேறு. புரியும் என்று நினைக்கிறேன்." என்றவன் காரில் போய் ஏற.
"ம்மா..." என்று புஷ்பாவை கட்டிகொண்டவள் "நான் போக மாட்டேன்மா. உங்க கூடவே இப்பிடியே இருந்திடுறேன்." என்று கதறவும்.
அவளை தன்னோடு சேர்த்தணைத்து முதுகினை வருடி விட்டவர். "இனி நாங்க இல்லம்மா உன் குடும்பம்.
அவங்க தான். நீ சந்தோஷமா இருக்கிற என்ற சொல்லோ போதும்டா இந்த அம்மாவுக்கு. என் பொண்ணும்மா நீ.
நீ எங்க இருந்தாலும் அந்த இடம் கோவிலா தான் இருக்கும்.
ஆனாலும் உன்னை நாங்க கட்டி குடுத்த சந்தர்ப்பத்தினால சில பிரச்சினை வந்தாலும் கொஞ்சம் அனுசரிச்சு போடா!... அம்மாக்கு உன் தங்கை எடுத்து தந்த நல்ல பெயர் போதும்!.... நீயும் அப்படி செய்ய மாட்டேனு அம்மா நம்புறேன்."
என்று அவரும் தன் நிலமையை நினைத்து வருந்தியவர்.
"சரிடா!... நல்ல நாள் அதுவுமா அழ கூடாது. நல்லது தானே நடந்திருக்கு. என்னோட பொண்ணில ஒரு பொண்ண அம்மா சந்தோஷமா வழி அனுப்பி வைக்கிறேன்." என்றவர்.
"அம்மாவ மறந்திடாதடா?....." என்று ஆற்றாமையோடு சொல்ல. அந்த நொடியே உடைந்து கதறினாள் மேகலா.
அவள் அழுவதை காரில் இருந்த பார்த்த முகிலன் தாயிடம்,
"அம்மா போதும் இவங்க சீரியல். அவளை அழைச்சிட்டு வாங்க போகலாம்." என சினக்க.
இவர்கள் அருகில் சென்ற சுந்தரி
"வாம்மா!... நல்ல நேரம் முடியுறத்துக்குள்ள போகலாம்." என புஷ்பாவிடம் இருந்து பிரித்தவர்.
"கவலை படாதிங்க சம்மந்தி. நான் அவளை உங்களை விட நல்லா பாத்துகிறேன்.
நாங்க போய்ட்டு வரோம் சம்மந்தி" என்று விடைபெற்று அவளை அழைத்து வந்து முகிலன் அமர்ந்திருந்த காரின் பின்புறம் அவனருகில் அமர்த்திவிட்டு அவர் பின்னால் நின்ற காரில் ஏறிக்கொண்டார்.


சங்கமிப்பாள்.........
 

Balatharsha

Moderator
காரில் ஏறும்வரை அழுதவள். முகிலன் பக்கத்தில் இருப்பதை உணர்ந்து கண்ணீரை துடைத்து எதுவும் அறியாதவள் போல் வெளிபுறம் பார்வையை புதித்தாள்.

முகிலனுக்கோ ஆர்ச்சர்யம். அவளது குடும்பத்தாரோடு இனி உறவில்லை என கூறியதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தவள், இப்போது அமைதியாக இருக்கிறாளே!....
ஒருவேளை இது இவர்களுக்கு சரியான தண்டனை இல்லையோ?....
இதை விட பெரிதாக ஏதாவது செய்திருக்க வேண்டுமோ!... என்றெண்ணியவன்.

எதற்கு தண்டனை? அப்படி என்ன நேர்ந்து விட்டது?. கட்டாயப்படுத்தி திருமணம் என்றார்கள். சம்மதித்தேன். பெண்ணை பிடித்து தான் சம்மதித்தேனா என்ன?..... அவளோ, இவளோ! யாரை திருமணம் செய்து கொண்டாலும் எல்லாம் ஒன்று தான். இதில் பழி தீர்பதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் இவள் நடந்து கொள்ளும் முறை தான் விசித்திரமாக இருக்கிறது.
எல்லா பெண்களுமே சாதரணமாக திருமணம் செய்து குடும்பத்தை பிரிவதென்றால் குறைந்தது ஒரு நாளாவது அழுவார்கள். ஆனால் இவள் அவர்கள் உறவே இல்லை என்கிறேன், காரில் ஏறியதும் அழுகை நின்று விட்டது.

ஒரு வேளை இந்த திருமணம் நின்றது இவள் நாடகமாக இருக்குமோ!.
ச்சே ச்சே!.. இவளை பார்க்க அப்படி ஒன்னும் தெரியவில்லையே!.... என நினைத்தவன்,
முகிலா நீ யாரையும் இலகுவில் எடை போட்டு விடாதே!.... அனுபவம் பாடமாகலாம். ஆனால் அனுபவங்கள் பாடமாக கூடாது. என்று தனக்கே கூறியவன் காரை எடுக்கும் படி கட்டளை இட. கார் சாலையில் சீறியது.

மேகலாவிற்கோ மனம் பூராகவும் ரணமாக இருந்தாலும், இவன் முன்னால் தன்னை பலவீனமாக காட்டிக் கொள்வதா?. அதையும் நடிப்பு என்பான். கண்ணீரின் மதிப்பு தெரியாதவனிடத்தில் என்ன அழுது? எதை நிரூபிப்பது?

சாதாரணமாக அவள் அழாதவள் அழத்தெரியாதவள் என்று இவனுக்கு தெரியுமா என்ன?.. மற்றவர்கள் அழுதால் கூட அவள் தானே முன்னின்று ஆறுதல் கூறுவாள்.
ஏன் போர்காலத்தில் கூட தன்னால் நடக்க முடியவில்லை. இனி நான் இறக்கபோகின்றேன் என்று உணரும் தருவாயில் கூட அவள் அழவில்லையே!.... தானே முன் வந்து அதை ஏற்றுக்கொள்ள துணிந்து தானே அதே இடத்தில் அமர்ந்தாள்.
தாய் தந்தையை தவறவிட்டு பானு தவித்ததனால் தானே அவளை காப்பாற்றி அவள் பெற்றோர்ரோடு சேர்க வேண்டும் என்று தனது வலியை கூட பொருட்படுத்தாது போர்கால சூழலில் இருந்து மீண்டும் வந்தாள்.

அப்படிப்பட்டவள் தன் குடும்பத்தை வேதனை படுத்தி பார்க்கவேண்டும் என நினைப்பவன் முன் அழுதால் அவள் தோற்று விடமாட்டாளா?.. என எண்ணித்தான், இதோ வழி விடு வந்து விடுகிறேன். என அடம்பிடிக்கும் கண்ணீரை முடிந்த அளவு கட்டுப்படுத்தி தன் புறம் இருந்த சாலையில் பார்வை பதித்தாள்.

சிறிது நேரத்தில் கார் யாழ்ப்பாண பகுதியிலே பணக்காரர்கள் குடியிருப்பான நாவலர் வீதியில் நுழையவும் மேகலா அந்த இடத்தை மிக ஆர்வமாக பார்த்தாள்.

பத்து அடிக்கு உயரமான எல்லை சுவர்கள்.
ஒரே நேரத்தில் மூன்று கார்கள் உள்நுழைய கூடிய வெளிப்புற கேட். முகிலன் தந்தை அரசியல் வாதி என்பதால் இரண்டு புறமும் அரச காவல் படையினர். மூன்று கார்கள் செல்லும் கேட்டின் விரிவு இருந்தாலும் உள்நுழைய அது இரண்டாக ஒடுங்கி இரு புறமும் பாக்கு மரங்கள் அணிவகுக்க. இடை இடையே பூத்து குழுங்கும் பூ மரங்கள் அந்த பாதையை அழகாக்கி வருவோரை தலை அசைத்தே வரவேற்றது.

கழுகு மரங்களை தாண்டி மா, பலா, கொய்யா என பல பயனுள்ள மரங்களும் இருநூறு மீற்றர் தாண்டவும் பல வகையாண பூந்தோட்டம் விதம் விதமாக பூக்கள் பூத்துக் குழுங்க. சிறுது நேரம் தனது மனதில் உள்ள குழப்பங்களை எல்லாம் ஓரம்கட்டியவள், தன்னை மறந்து ரசித்தபடி வந்தாள்.

கிட்ட தட்ட அரை கிலோமீற்றர் தூர இடைவெளி வீட்டிற்கும் கேட்டிற்கும். அவளுக்கோ தான் எங்கோ பூங்காவில் இருப்பது போன்ற பிரம்மை.
சுற்றி வர மரங்களை பார்த்து வந்தவள் கார் நின்றதை அறியாமல் காரிலே அமர்ந்திருக்க.
காரை விட்டு இறங்கியவன் வீடு வந்து எல்லோரும் இறங்கியாயிற்று. இவள் இன்னமும் இறங்காமல் இருப்பதை கண்டு,

"என்ன தங்க தட்டு வைச்சா தான் மகாராணி காரில் இருந்து இறங்குவிங்களோ?.." என நக்கலாக கேட்க.
அவன் குரலில் ரசனை கலைந்து நிஜத்திற்கு வந்தவள், எதுவும் கூறாமல் காரை விட்டு இறங்கினாள்.

"கொழுப்பு....! உடம்பு பூராவும் கொழுப்பு." என்றவன் விறு விறு என்று வீட்டில் நுழைய
"அப்பு..! கொஞ்சம் நில்லடா!" என தடுத்த சுந்தரி,

"என்ன தான் பேசின பெண்ணை நீ கல்யாணம் செய்துக்கல என்றாலும் அத்தனை சடங்குகளும் முறைபடி தானே நடந்திச்சு.
அதே போல ஆலத்தையும் சுத்திட்டே உள்ளே போலாம்." என்றவர்,
இருவரையும் அருகருகே நிற்க வைத்து கமலத்தை அழைத்து ஆலத்தி கொண்டு வர சொன்னார்.

அவளும் ஒரு தட்டில் சுன்னாம்பும் குங்குமமும் கரைத்து மூன்று வழைப்பழத்தை உரித்து சரி பாதியாக வெட்டி திரியை அதனுள் நுழைத்து தீபம் போல் ஏற்றி கொண்டு வந்து சுந்தரியிடம் கொடுக்க,

இரண்டு சுமங்கலி பெண்கள் இருவரையும் மூன்று முறை இடப்புறமும், மூன்று முறை வலபுறமும் சுற்றி குங்குமத் தண்ணீரை இருவர் நெற்றியில் வைத்து அருகில் கும்பம் வைக்கபட்டு ஏற்றாமல் இருந்த குத்து விளக்கை மேகலாவை ஏற்ற சொன்னார்.
அவள் ஏற்றியதும் உள்ளே வலது காலை எடுத்து வைத்து வந்தவர்கள், நேராக சுவாமி அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி வணங்க சொல்ல,

இவற்றில் சிறிதும் நம்பிக்கை இல்லை என்றாலும் வந்த முதல் நாளே நாத்தீகம் பேசி தர்கம் புரிய மனமில்லாமல் அவர்கள் சொன்ன படியே செய்தாள்.

கண்களை மூடி "என்னையே கும்பிட வைச்சிட்டாயே!.." என்று மனதுள் ஆரம்பித்தவள்.
"என்னதான் இங்க ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில இங்கு வந்தாலும் என் கடமையை நான் சரி வர செய்வேன். இந்த வீட்டுக்கு நல்ல மருமகளா இருப்பேனே தவிர நல்ல மனைவியாய் ஒருக்காலும் இருக்க மாட்டேன்.
இது என் தங்கை வாழ்க்கை. அதோடு என்னை போல இன்னொரு ஜீவன் இந்த உலகத்துக்கு வேண்டாம்.

எனக்காவது எந்த துன்பமும் அனுபவிக்காமல் முதல்ல சிறுவர் இல்லம்.
அது போக பிறகு நல்ல பெற்றோர் என்று தந்த. ஆனால் என் பிள்ளைக்கு எனக்கு கிடைத்தது போல அமையும்ன்னு என்ன நிச்சயம்?.. என எண்ணியவள், அதை கற்பனையில் கூட பார்க்க முடியமல் கெட்ட கனவு கண்டதை போல் திடுக்கிட்டு கண்களை திறந்துகொள்ள,

நீண்ட நேரமாக இவள் அப்படி என்ன வேண்டுகிறாள்?. என அவளையே பார்த்து கொண்டிருந்த அனைவரும் இவள் திடுகிட அவர்களும் பயந்தே விட்டனர்.

"என்னாச்சும்மா?.. எதுக்கு இப்படி பயந்த?.." என சுந்தரி கேட்டதும். ஒன்னும் இல்லை என தலையாட்டியவளை பார்க்க ஏதோ இருப்பதாகவே தோன்றியது முகிலனுக்கு.
அவனும் அவள் மணமேடை ஏறியதிலிருந்து பார்கிறானே!..
இத்தனை மணிநேரமும் ஆகியும், அவள் தன் புறமே திரும்பி பார்க்க கூட இல்லையே.
கட்டாயத்திருமணம் என்றாலும் ஏதோ ஊந்துதலில் தன் கணவனை பார்க்க தோன்றாதா என்ன?..
அவனே சென்று கதை கேட்டாலும் அதற்கு செயலையே விடையாய் கொடுக்கிறாளே தவிர எங்கு தன்னை பார்க்கிறாள்?..

"அம்மா..!" என அழைத்தவன் "உங்க சம்பிரதாயங்கள் முடிஞ்சிச்சா?." என்க. "இன்னும் சாப்பிடவே இல்லையேடா!.." என்க.
"வாங்க சாப்பிடுவோம்." என டைனிங்க் டேபிளை நோக்கி முன்னே நடந்த முகிலனின் கையை பிடித்து நிறுத்திய சுந்தரி.

"நாங்கள் தான் அங்க சாப்பிட போறோம். நீயும் உன் சம்சாரமும் இங்கேயே சாமி முன்னாடி தான் ஒருதருக்கு ஒருதர் ஊட்டி விட்டு சாப்பிடணும்." என கூறிக்கொண்டே.
வாழையிலையை விரித்தவர்.
அவர்கள் இருவரையும் அமர்த்தி சாப்பாடு பரிமாறி விட்டு முகிலனை மேகலாவிற்கு ஊட்டி விட சொன்னார்.
முகிலனுக்கோ ஏகாபோக மகிழ்ச்சி.
இப்போது என்னை பார்த்து தானே ஆகணும். எப்படி பார்க்காமல் ஊட்டுறேன்னு பார்கிறேன். என நினைத்தவன் ஒரு பிடி எடுத்து அவளுக்கு ஊட்டிவிட, எங்கோ பார்த்தபடி வாயை திறந்து வாங்கிக்கொண்டாள்.

"இப்போ நீ ஊட்டு மேகலா." என்க. சங்கடமாகவே சாதத்தை எடுத்தவள் தன் கையையே பார்த்தவாறு அவனுக்கு ஊட்ட .
வேண்டும் என்றே தலையினை பின்னிழுத்தான் முகிலன்.

சாதம் எல்லாம் தரையில சிதற மேகலாவிற்கு என்ன செய்வதென்று புரியாமல் இம்முறை மிகக்கவனமாக அவனை பார்த்து ஊட்டுவதற்காக சாதத்தை அவன் வாயருகில் கொண்டு செல்ல.
அவனாே வாயை திறவாது அடம்பிடித்தான்.
அவன் ளையாடை கண்டு எல்லோரும் அவளை கேலி செய்து புன்னகைக்க, ஏனாே அவளுக்கு அது அழுகையை வரச்செய்தது.

கண்ணை முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை உள்ளிழுத்தவளால் சில வினாடிகள் மட்டுமே அது சாத்தியமாக. அவளையும் மீறி உருண்டு அவள் கன்னம் வழி விழுந்த கண்ணீரை கண்ட அவனது வாய் தானாக திறந்து உணவினை வாங்கி கொண்டது.

உணவு உண்டு முடிய மேகலாவை ஒரு அறையை காண்பித்த சுந்தரி,
"எதிர்பார சம்பவங்களால நீ ரொம்பவே மனசுடைஞ்சிருப்ப,
எதைப்பற்றியும் யோசிக்காம நின்மதியா கொஞ்சம் ஓய்வெடு!.." என்று விட்டு அவர் சென்று விட்டார்.

மேகலாவிற்கு தான் எல்லாமே புதிதாகவும் வீட்டில் யாரவது தனக்கு துணையாக வந்திருந்தால் நன்றாக இருக்கும். என தோன்றியது.

அதக்கு தான் முற்றாக முழுக்கு போட்டு விட்டானே!... இனி எனக்கு சொந்தம் என்று இத்தனை நாள் கூறிக்கொண்டிருந்த யாருமே எனக்கில்லையா?.. எனக்கு ஒரு கஷ்டம் என்றால் யாரிடம் என் மனவேதனையை கூறி ஆறுதல் தேடுவேன்?.. எல்லா உறவும் ஒரு நாளில் பனி கட்டி போல் அல்லவா கரைந்து விட்டது.

எனக்காவது பறவாயில்லை. ஆனால் அம்மா, அப்பா நிலை?... ஒரே நாளில் எத்தனை மன உலைச்சல். ஒரு மகளை காணவில்லை. ஒருத்திக்கு இப்படி ஒரு இக்கட்டில் மாட்டக்கொண்டாள். இனி ஊரார் பேசும் கேலி பேச்சுக்கள். அத்தனையையும் எப்படி தாங்கி கொள்ள போகிறார்களோ?... அழுதே கரையப்போகின்றார்களே! அவர்களுக்கு யார் ஆறுதல் கூறுவார்கள்?." என நினைத்து கலங்கியவள். கட்டினில் படுத்திருந்ததால் இருந்த அலைச்சலும் அழுகையும் சேர்ந்து தூங்கியே போனாள்.

அவளை ஒரு அறையில் விட்டு வந்த சுந்தரி முகிலன் அறைய திறந்து கொண்டு உள்ளே வந்தவள்.
"அப்பு..! அம்மா மேல கோபமாடா?.." என கேட்க.

"எதுக்கும்மா உங்க மேல எனக்கு கோபம்.?... உங்களுக்கு தான் என்ன தெரியும்?. ஒரே தடவை பார்த்து உங்களுக்கு அந்த பெண்ணை பிடிச்சு போக தானே பொண்ணு கேட்டிங்க.
அவங்களுக்கே அவங்க பொண்ணு அப்பிடி செய்யும்னு தெரியாத போது உங்களுக்கு எப்பிடிம்மா தெரியும்?.
விடுங்கம்மா நடக்க வேண்டியது தான் உங்க இஷ்டப்படி நடந்திச்சே!.." என்று தாயை பார்த்து புன்னகைப்பவனை பார்த்தவர்.

"புதுசா இருக்கப்பு நீ இப்படி சிரிக்கிறதை பார்க்குறபோ.
இதுவரை சின்ன தப்பு நடந்தா முதல் கோபப்படும் ஆள் நீ தான். ஆனா இவ்ளோ பெரிய பிரச்சினையை சாதாரணமா எடுத்ததை நினைக்க ஆர்ச்சர்யமா இருக்கு." என்றவர்.

"அப்பு....." என்று இழுக்க.

"சொல்லுங்கம்மா இன்னும் என்ன புதிர் வைச்சிருக்கிங்க?...." என தாயின் புகழ்சியில் கேலி கலந்து கேட்க.

"அது.... இன்னைக்கே சடங்கை வைச்சிடலாமா?..." என்ற தாயின் தயக்கத்தில்.
எந்த சடங்கினை கூறுகிறார் என புரிந்து கொண்டவன்,

புன்னகை மாறாத முகத்துடனே,
"இது வரை நடந்த எதுவும் என் விருப்பத்தோடு நடக்கல. இனியும் எதுக்கு கேட்டிட்டு. உங்க இஷ்டம்மா. எதுக்கும் நான் ரெடி தான்.!" என்க..

"சந்தாேஷம்டா!. சம்மதிச்சது. என்றவர்,
அவனது மலர்த முகத்தை கண்டு,
மருமக வந்ததுமே சிரிப்பும் வந்து ஒட்டிக்கிச்சு. கொஞ்சம் கூட குறைய மாட்டேன்குதே!" என்றவர் சென்று விட.

"என்ன நடக்க காத்திட்டு இருக்கோ!" என்று வாய்விட்டு புலம்பியவன் இருந்த அசதியல் அவனும் தூங்கி விட்டான்.
 

Balatharsha

Moderator
காரில் ஏறும்வரை அழுதவள். முகிலன் பக்கத்தில் இருப்பதை உணர்ந்து கண்ணீரை துடைத்து எதுவும் அறியாதவள் போல் வெளிபுறம் பார்வையை புதித்தாள்.

முகிலனுக்கோ ஆர்ச்சர்யம். அவளது குடும்பத்தாரோடு இனி உறவில்லை என கூறியதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தவள், இப்போது அமைதியாக இருக்கிறாளே!....
ஒருவேளை இது இவர்களுக்கு சரியான தண்டனை இல்லையோ?....
இதை விட பெரிதாக ஏதாவது செய்திருக்க வேண்டுமோ!... என்றெண்ணியவன்.

எதற்கு தண்டனை? அப்படி என்ன நேர்ந்து விட்டது?. கட்டாயப்படுத்தி திருமணம் என்றார்கள். சம்மதித்தேன். பெண்ணை பிடித்து தான் சம்மதித்தேனா என்ன?..... அவளோ, இவளோ! யாரை திருமணம் செய்து கொண்டாலும் எல்லாம் ஒன்று தான். இதில் பழி தீர்பதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் இவள் நடந்து கொள்ளும் முறை தான் விசித்திரமாக இருக்கிறது.
எல்லா பெண்களுமே சாதரணமாக திருமணம் செய்து குடும்பத்தை பிரிவதென்றால் குறைந்தது ஒரு நாளாவது அழுவார்கள். ஆனால் இவள் அவர்கள் உறவே இல்லை என்கிறேன், காரில் ஏறியதும் அழுகை நின்று விட்டது.

ஒரு வேளை இந்த திருமணம் நின்றது இவள் நாடகமாக இருக்குமோ!.
ச்சே ச்சே!.. இவளை பார்க்க அப்படி ஒன்னும் தெரியவில்லையே!.... என நினைத்தவன்,
முகிலா நீ யாரையும் இலகுவில் எடை போட்டு விடாதே!.... அனுபவம் பாடமாகலாம். ஆனால் அனுபவங்கள் பாடமாக கூடாது. என்று தனக்கே கூறியவன் காரை எடுக்கும் படி கட்டளை இட. கார் சாலையில் சீறியது.

மேகலாவிற்கோ மனம் பூராகவும் ரணமாக இருந்தாலும், இவன் முன்னால் தன்னை பலவீனமாக காட்டிக் கொள்வதா?. அதையும் நடிப்பு என்பான். கண்ணீரின் மதிப்பு தெரியாதவனிடத்தில் என்ன அழுது? எதை நிரூபிப்பது?

சாதாரணமாக அவள் அழாதவள் அழத்தெரியாதவள் என்று இவனுக்கு தெரியுமா என்ன?.. மற்றவர்கள் அழுதால் கூட அவள் தானே முன்னின்று ஆறுதல் கூறுவாள்.
ஏன் போர்காலத்தில் கூட தன்னால் நடக்க முடியவில்லை. இனி நான் இறக்கபோகின்றேன் என்று உணரும் தருவாயில் கூட அவள் அழவில்லையே!.... தானே முன் வந்து அதை ஏற்றுக்கொள்ள துணிந்து தானே அதே இடத்தில் அமர்ந்தாள்.
தாய் தந்தையை தவறவிட்டு பானு தவித்ததனால் தானே அவளை காப்பாற்றி அவள் பெற்றோர்ரோடு சேர்க வேண்டும் என்று தனது வலியை கூட பொருட்படுத்தாது போர்கால சூழலில் இருந்து மீண்டும் வந்தாள்.

அப்படிப்பட்டவள் தன் குடும்பத்தை வேதனை படுத்தி பார்க்கவேண்டும் என நினைப்பவன் முன் அழுதால் அவள் தோற்று விடமாட்டாளா?.. என எண்ணித்தான், இதோ வழி விடு வந்து விடுகிறேன். என அடம்பிடிக்கும் கண்ணீரை முடிந்த அளவு கட்டுப்படுத்தி தன் புறம் இருந்த சாலையில் பார்வை பதித்தாள்.

சிறிது நேரத்தில் கார் யாழ்ப்பாண பகுதியிலே பணக்காரர்கள் குடியிருப்பான நாவலர் வீதியில் நுழையவும் மேகலா அந்த இடத்தை மிக ஆர்வமாக பார்த்தாள்.

பத்து அடிக்கு உயரமான எல்லை சுவர்கள்.
ஒரே நேரத்தில் மூன்று கார்கள் உள்நுழைய கூடிய வெளிப்புற கேட். முகிலன் தந்தை அரசியல் வாதி என்பதால் இரண்டு புறமும் அரச காவல் படையினர். மூன்று கார்கள் செல்லும் கேட்டின் விரிவு இருந்தாலும் உள்நுழைய அது இரண்டாக ஒடுங்கி இரு புறமும் பாக்கு மரங்கள் அணிவகுக்க. இடை இடையே பூத்து குழுங்கும் பூ மரங்கள் அந்த பாதையை அழகாக்கி வருவோரை தலை அசைத்தே வரவேற்றது.

கழுகு மரங்களை தாண்டி மா, பலா, கொய்யா என பல பயனுள்ள மரங்களும் இருநூறு மீற்றர் தாண்டவும் பல வகையாண பூந்தோட்டம் விதம் விதமாக பூக்கள் பூத்துக் குழுங்க. சிறுது நேரம் தனது மனதில் உள்ள குழப்பங்களை எல்லாம் ஓரம்கட்டியவள், தன்னை மறந்து ரசித்தபடி வந்தாள்.

கிட்ட தட்ட அரை கிலோமீற்றர் தூர இடைவெளி வீட்டிற்கும் கேட்டிற்கும். அவளுக்கோ தான் எங்கோ பூங்காவில் இருப்பது போன்ற பிரம்மை.
சுற்றி வர மரங்களை பார்த்து வந்தவள் கார் நின்றதை அறியாமல் காரிலே அமர்ந்திருக்க.
காரை விட்டு இறங்கியவன் வீடு வந்து எல்லோரும் இறங்கியாயிற்று. இவள் இன்னமும் இறங்காமல் இருப்பதை கண்டு,

"என்ன தங்க தட்டு வைச்சா தான் மகாராணி காரில் இருந்து இறங்குவிங்களோ?.." என நக்கலாக கேட்க.
அவன் குரலில் ரசனை கலைந்து நிஜத்திற்கு வந்தவள், எதுவும் கூறாமல் காரை விட்டு இறங்கினாள்.

"கொழுப்பு....! உடம்பு பூராவும் கொழுப்பு." என்றவன் விறு விறு என்று வீட்டில் நுழைய
"அப்பு..! கொஞ்சம் நில்லடா!" என தடுத்த சுந்தரி,

"என்ன தான் பேசின பெண்ணை நீ கல்யாணம் செய்துக்கல என்றாலும் அத்தனை சடங்குகளும் முறைபடி தானே நடந்திச்சு.
அதே போல ஆலத்தையும் சுத்திட்டே உள்ளே போலாம்." என்றவர்,
இருவரையும் அருகருகே நிற்க வைத்து கமலத்தை அழைத்து ஆலத்தி கொண்டு வர சொன்னார்.

அவளும் ஒரு தட்டில் சுன்னாம்பும் குங்குமமும் கரைத்து மூன்று வழைப்பழத்தை உரித்து சரி பாதியாக வெட்டி திரியை அதனுள் நுழைத்து தீபம் போல் ஏற்றி கொண்டு வந்து சுந்தரியிடம் கொடுக்க,

இரண்டு சுமங்கலி பெண்கள் இருவரையும் மூன்று முறை இடப்புறமும், மூன்று முறை வலபுறமும் சுற்றி குங்குமத் தண்ணீரை இருவர் நெற்றியில் வைத்து அருகில் கும்பம் வைக்கபட்டு ஏற்றாமல் இருந்த குத்து விளக்கை மேகலாவை ஏற்ற சொன்னார்.
அவள் ஏற்றியதும் உள்ளே வலது காலை எடுத்து வைத்து வந்தவர்கள், நேராக சுவாமி அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி வணங்க சொல்ல,

இவற்றில் சிறிதும் நம்பிக்கை இல்லை என்றாலும் வந்த முதல் நாளே நாத்தீகம் பேசி தர்கம் புரிய மனமில்லாமல் அவர்கள் சொன்ன படியே செய்தாள்.

கண்களை மூடி "என்னையே கும்பிட வைச்சிட்டாயே!.." என்று மனதுள் ஆரம்பித்தவள்.
"என்னதான் இங்க ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில இங்கு வந்தாலும் என் கடமையை நான் சரி வர செய்வேன். இந்த வீட்டுக்கு நல்ல மருமகளா இருப்பேனே தவிர நல்ல மனைவியாய் ஒருக்காலும் இருக்க மாட்டேன்.
இது என் தங்கை வாழ்க்கை. அதோடு என்னை போல இன்னொரு ஜீவன் இந்த உலகத்துக்கு வேண்டாம்.

எனக்காவது எந்த துன்பமும் அனுபவிக்காமல் முதல்ல சிறுவர் இல்லம்.
அது போக பிறகு நல்ல பெற்றோர் என்று தந்த. ஆனால் என் பிள்ளைக்கு எனக்கு கிடைத்தது போல அமையும்ன்னு என்ன நிச்சயம்?.. என எண்ணியவள், அதை கற்பனையில் கூட பார்க்க முடியமல் கெட்ட கனவு கண்டதை போல் திடுக்கிட்டு கண்களை திறந்துகொள்ள,

நீண்ட நேரமாக இவள் அப்படி என்ன வேண்டுகிறாள்?. என அவளையே பார்த்து கொண்டிருந்த அனைவரும் இவள் திடுகிட அவர்களும் பயந்தே விட்டனர்.

"என்னாச்சும்மா?.. எதுக்கு இப்படி பயந்த?.." என சுந்தரி கேட்டதும். ஒன்னும் இல்லை என தலையாட்டியவளை பார்க்க ஏதோ இருப்பதாகவே தோன்றியது முகிலனுக்கு.
அவனும் அவள் மணமேடை ஏறியதிலிருந்து பார்கிறானே!..
இத்தனை மணிநேரமும் ஆகியும், அவள் தன் புறமே திரும்பி பார்க்க கூட இல்லையே.
கட்டாயத்திருமணம் என்றாலும் ஏதோ ஊந்துதலில் தன் கணவனை பார்க்க தோன்றாதா என்ன?..
அவனே சென்று கதை கேட்டாலும் அதற்கு செயலையே விடையாய் கொடுக்கிறாளே தவிர எங்கு தன்னை பார்க்கிறாள்?..

"அம்மா..!" என அழைத்தவன் "உங்க சம்பிரதாயங்கள் முடிஞ்சிச்சா?." என்க. "இன்னும் சாப்பிடவே இல்லையேடா!.." என்க.
"வாங்க சாப்பிடுவோம்." என டைனிங்க் டேபிளை நோக்கி முன்னே நடந்த முகிலனின் கையை பிடித்து நிறுத்திய சுந்தரி.

"நாங்கள் தான் அங்க சாப்பிட போறோம். நீயும் உன் சம்சாரமும் இங்கேயே சாமி முன்னாடி தான் ஒருதருக்கு ஒருதர் ஊட்டி விட்டு சாப்பிடணும்." என கூறிக்கொண்டே.
வாழையிலையை விரித்தவர்.
அவர்கள் இருவரையும் அமர்த்தி சாப்பாடு பரிமாறி விட்டு முகிலனை மேகலாவிற்கு ஊட்டி விட சொன்னார்.
முகிலனுக்கோ ஏகாபோக மகிழ்ச்சி.
இப்போது என்னை பார்த்து தானே ஆகணும். எப்படி பார்க்காமல் ஊட்டுறேன்னு பார்கிறேன். என நினைத்தவன் ஒரு பிடி எடுத்து அவளுக்கு ஊட்டிவிட, எங்கோ பார்த்தபடி வாயை திறந்து வாங்கிக்கொண்டாள்.

"இப்போ நீ ஊட்டு மேகலா." என்க. சங்கடமாகவே சாதத்தை எடுத்தவள் தன் கையையே பார்த்தவாறு அவனுக்கு ஊட்ட .
வேண்டும் என்றே தலையினை பின்னிழுத்தான் முகிலன்.

சாதம் எல்லாம் தரையில சிதற மேகலாவிற்கு என்ன செய்வதென்று புரியாமல் இம்முறை மிகக்கவனமாக அவனை பார்த்து ஊட்டுவதற்காக சாதத்தை அவன் வாயருகில் கொண்டு செல்ல.
அவனாே வாயை திறவாது அடம்பிடித்தான்.
அவன் ளையாடை கண்டு எல்லோரும் அவளை கேலி செய்து புன்னகைக்க, ஏனாே அவளுக்கு அது அழுகையை வரச்செய்தது.

கண்ணை முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை உள்ளிழுத்தவளால் சில வினாடிகள் மட்டுமே அது சாத்தியமாக. அவளையும் மீறி உருண்டு அவள் கன்னம் வழி விழுந்த கண்ணீரை கண்ட அவனது வாய் தானாக திறந்து உணவினை வாங்கி கொண்டது.

உணவு உண்டு முடிய மேகலாவை ஒரு அறையை காண்பித்த சுந்தரி,
"எதிர்பார சம்பவங்களால நீ ரொம்பவே மனசுடைஞ்சிருப்ப,
எதைப்பற்றியும் யோசிக்காம நின்மதியா கொஞ்சம் ஓய்வெடு!.." என்று விட்டு அவர் சென்று விட்டார்.

மேகலாவிற்கு தான் எல்லாமே புதிதாகவும் வீட்டில் யாரவது தனக்கு துணையாக வந்திருந்தால் நன்றாக இருக்கும். என தோன்றியது.

அதக்கு தான் முற்றாக முழுக்கு போட்டு விட்டானே!... இனி எனக்கு சொந்தம் என்று இத்தனை நாள் கூறிக்கொண்டிருந்த யாருமே எனக்கில்லையா?.. எனக்கு ஒரு கஷ்டம் என்றால் யாரிடம் என் மனவேதனையை கூறி ஆறுதல் தேடுவேன்?.. எல்லா உறவும் ஒரு நாளில் பனி கட்டி போல் அல்லவா கரைந்து விட்டது.

எனக்காவது பறவாயில்லை. ஆனால் அம்மா, அப்பா நிலை?... ஒரே நாளில் எத்தனை மன உலைச்சல். ஒரு மகளை காணவில்லை. ஒருத்திக்கு இப்படி ஒரு இக்கட்டில் மாட்டக்கொண்டாள். இனி ஊரார் பேசும் கேலி பேச்சுக்கள். அத்தனையையும் எப்படி தாங்கி கொள்ள போகிறார்களோ?... அழுதே கரையப்போகின்றார்களே! அவர்களுக்கு யார் ஆறுதல் கூறுவார்கள்?." என நினைத்து கலங்கியவள். கட்டினில் படுத்திருந்ததால் இருந்த அலைச்சலும் அழுகையும் சேர்ந்து தூங்கியே போனாள்.

அவளை ஒரு அறையில் விட்டு வந்த சுந்தரி முகிலன் அறைய திறந்து கொண்டு உள்ளே வந்தவள்.
"அப்பு..! அம்மா மேல கோபமாடா?.." என கேட்க.

"எதுக்கும்மா உங்க மேல எனக்கு கோபம்.?... உங்களுக்கு தான் என்ன தெரியும்?. ஒரே தடவை பார்த்து உங்களுக்கு அந்த பெண்ணை பிடிச்சு போக தானே பொண்ணு கேட்டிங்க.
அவங்களுக்கே அவங்க பொண்ணு அப்பிடி செய்யும்னு தெரியாத போது உங்களுக்கு எப்பிடிம்மா தெரியும்?.
விடுங்கம்மா நடக்க வேண்டியது தான் உங்க இஷ்டப்படி நடந்திச்சே!.." என்று தாயை பார்த்து புன்னகைப்பவனை பார்த்தவர்.

"புதுசா இருக்கப்பு நீ இப்படி சிரிக்கிறதை பார்க்குறபோ.
இதுவரை சின்ன தப்பு நடந்தா முதல் கோபப்படும் ஆள் நீ தான். ஆனா இவ்ளோ பெரிய பிரச்சினையை சாதாரணமா எடுத்ததை நினைக்க ஆர்ச்சர்யமா இருக்கு." என்றவர்.

"அப்பு....." என்று இழுக்க.

"சொல்லுங்கம்மா இன்னும் என்ன புதிர் வைச்சிருக்கிங்க?...." என தாயின் புகழ்சியில் கேலி கலந்து கேட்க.

"அது.... இன்னைக்கே சடங்கை வைச்சிடலாமா?..." என்ற தாயின் தயக்கத்தில்.
எந்த சடங்கினை கூறுகிறார் என புரிந்து கொண்டவன்,

புன்னகை மாறாத முகத்துடனே,
"இது வரை நடந்த எதுவும் என் விருப்பத்தோடு நடக்கல. இனியும் எதுக்கு கேட்டிட்டு. உங்க இஷ்டம்மா. எதுக்கும் நான் ரெடி தான்.!" என்க..

"சந்தாேஷம்டா!. சம்மதிச்சது. என்றவர்,
அவனது மலர்த முகத்தை கண்டு,
மருமக வந்ததுமே சிரிப்பும் வந்து ஒட்டிக்கிச்சு. கொஞ்சம் கூட குறைய மாட்டேன்குதே!" என்றவர் சென்று விட.

"என்ன நடக்க காத்திட்டு இருக்கோ!" என்று வாய்விட்டு புலம்பியவன் இருந்த அசதியல் அவனும் தூங்கி விட்டான்.
 

Balatharsha

Moderator
காரில் ஏறும்வரை அழுதவள். முகிலன் பக்கத்தில் இருப்பதை உணர்ந்து கண்ணீரை துடைத்து எதுவும் அறியாதவள் போல் வெளிபுறம் பார்வையை புதித்தாள்.

முகிலனுக்கோ ஆர்ச்சர்யம். அவளது குடும்பத்தாரோடு இனி உறவில்லை என கூறியதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தவள், இப்போது அமைதியாக இருக்கிறாளே!....
ஒருவேளை இது இவர்களுக்கு சரியான தண்டனை இல்லையோ?....
இதை விட பெரிதாக ஏதாவது செய்திருக்க வேண்டுமோ!... என்றெண்ணியவன்.

எதற்கு தண்டனை? அப்படி என்ன நேர்ந்து விட்டது?. கட்டாயப்படுத்தி திருமணம் என்றார்கள். சம்மதித்தேன். பெண்ணை பிடித்து தான் சம்மதித்தேனா என்ன?..... அவளோ, இவளோ! யாரை திருமணம் செய்து கொண்டாலும் எல்லாம் ஒன்று தான். இதில் பழி தீர்பதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் இவள் நடந்து கொள்ளும் முறை தான் விசித்திரமாக இருக்கிறது.
எல்லா பெண்களுமே சாதரணமாக திருமணம் செய்து குடும்பத்தை பிரிவதென்றால் குறைந்தது ஒரு நாளாவது அழுவார்கள். ஆனால் இவள் அவர்கள் உறவே இல்லை என்கிறேன், காரில் ஏறியதும் அழுகை நின்று விட்டது.

ஒரு வேளை இந்த திருமணம் நின்றது இவள் நாடகமாக இருக்குமோ!.
ச்சே ச்சே!.. இவளை பார்க்க அப்படி ஒன்னும் தெரியவில்லையே!.... என நினைத்தவன்,
முகிலா நீ யாரையும் இலகுவில் எடை போட்டு விடாதே!.... அனுபவம் பாடமாகலாம். ஆனால் அனுபவங்கள் பாடமாக கூடாது. என்று தனக்கே கூறியவன் காரை எடுக்கும் படி கட்டளை இட. கார் சாலையில் சீறியது.

மேகலாவிற்கோ மனம் பூராகவும் ரணமாக இருந்தாலும், இவன் முன்னால் தன்னை பலவீனமாக காட்டிக் கொள்வதா?. அதையும் நடிப்பு என்பான். கண்ணீரின் மதிப்பு தெரியாதவனிடத்தில் என்ன அழுது? எதை நிரூபிப்பது?

சாதாரணமாக அவள் அழாதவள் அழத்தெரியாதவள் என்று இவனுக்கு தெரியுமா என்ன?.. மற்றவர்கள் அழுதால் கூட அவள் தானே முன்னின்று ஆறுதல் கூறுவாள்.
ஏன் போர்காலத்தில் கூட தன்னால் நடக்க முடியவில்லை. இனி நான் இறக்கபோகின்றேன் என்று உணரும் தருவாயில் கூட அவள் அழவில்லையே!.... தானே முன் வந்து அதை ஏற்றுக்கொள்ள துணிந்து தானே அதே இடத்தில் அமர்ந்தாள்.
தாய் தந்தையை தவறவிட்டு பானு தவித்ததனால் தானே அவளை காப்பாற்றி அவள் பெற்றோர்ரோடு சேர்க வேண்டும் என்று தனது வலியை கூட பொருட்படுத்தாது போர்கால சூழலில் இருந்து மீண்டும் வந்தாள்.

அப்படிப்பட்டவள் தன் குடும்பத்தை வேதனை படுத்தி பார்க்கவேண்டும் என நினைப்பவன் முன் அழுதால் அவள் தோற்று விடமாட்டாளா?.. என எண்ணித்தான், இதோ வழி விடு வந்து விடுகிறேன். என அடம்பிடிக்கும் கண்ணீரை முடிந்த அளவு கட்டுப்படுத்தி தன் புறம் இருந்த சாலையில் பார்வை பதித்தாள்.

சிறிது நேரத்தில் கார் யாழ்ப்பாண பகுதியிலே பணக்காரர்கள் குடியிருப்பான நாவலர் வீதியில் நுழையவும் மேகலா அந்த இடத்தை மிக ஆர்வமாக பார்த்தாள்.

பத்து அடிக்கு உயரமான எல்லை சுவர்கள்.
ஒரே நேரத்தில் மூன்று கார்கள் உள்நுழைய கூடிய வெளிப்புற கேட். முகிலன் தந்தை அரசியல் வாதி என்பதால் இரண்டு புறமும் அரச காவல் படையினர். மூன்று கார்கள் செல்லும் கேட்டின் விரிவு இருந்தாலும் உள்நுழைய அது இரண்டாக ஒடுங்கி இரு புறமும் பாக்கு மரங்கள் அணிவகுக்க. இடை இடையே பூத்து குழுங்கும் பூ மரங்கள் அந்த பாதையை அழகாக்கி வருவோரை தலை அசைத்தே வரவேற்றது.

கழுகு மரங்களை தாண்டி மா, பலா, கொய்யா என பல பயனுள்ள மரங்களும் இருநூறு மீற்றர் தாண்டவும் பல வகையாண பூந்தோட்டம் விதம் விதமாக பூக்கள் பூத்துக் குழுங்க. சிறுது நேரம் தனது மனதில் உள்ள குழப்பங்களை எல்லாம் ஓரம்கட்டியவள், தன்னை மறந்து ரசித்தபடி வந்தாள்.

கிட்ட தட்ட அரை கிலோமீற்றர் தூர இடைவெளி வீட்டிற்கும் கேட்டிற்கும். அவளுக்கோ தான் எங்கோ பூங்காவில் இருப்பது போன்ற பிரம்மை.
சுற்றி வர மரங்களை பார்த்து வந்தவள் கார் நின்றதை அறியாமல் காரிலே அமர்ந்திருக்க.
காரை விட்டு இறங்கியவன் வீடு வந்து எல்லோரும் இறங்கியாயிற்று. இவள் இன்னமும் இறங்காமல் இருப்பதை கண்டு,

"என்ன தங்க தட்டு வைச்சா தான் மகாராணி காரில் இருந்து இறங்குவிங்களோ?.." என நக்கலாக கேட்க.
அவன் குரலில் ரசனை கலைந்து நிஜத்திற்கு வந்தவள், எதுவும் கூறாமல் காரை விட்டு இறங்கினாள்.

"கொழுப்பு....! உடம்பு பூராவும் கொழுப்பு." என்றவன் விறு விறு என்று வீட்டில் நுழைய
"அப்பு..! கொஞ்சம் நில்லடா!" என தடுத்த சுந்தரி,

"என்ன தான் பேசின பெண்ணை நீ கல்யாணம் செய்துக்கல என்றாலும் அத்தனை சடங்குகளும் முறைபடி தானே நடந்திச்சு.
அதே போல ஆலத்தையும் சுத்திட்டே உள்ளே போலாம்." என்றவர்,
இருவரையும் அருகருகே நிற்க வைத்து கமலத்தை அழைத்து ஆலத்தி கொண்டு வர சொன்னார்.

அவளும் ஒரு தட்டில் சுன்னாம்பும் குங்குமமும் கரைத்து மூன்று வழைப்பழத்தை உரித்து சரி பாதியாக வெட்டி திரியை அதனுள் நுழைத்து தீபம் போல் ஏற்றி கொண்டு வந்து சுந்தரியிடம் கொடுக்க,

இரண்டு சுமங்கலி பெண்கள் இருவரையும் மூன்று முறை இடப்புறமும், மூன்று முறை வலபுறமும் சுற்றி குங்குமத் தண்ணீரை இருவர் நெற்றியில் வைத்து அருகில் கும்பம் வைக்கபட்டு ஏற்றாமல் இருந்த குத்து விளக்கை மேகலாவை ஏற்ற சொன்னார்.
அவள் ஏற்றியதும் உள்ளே வலது காலை எடுத்து வைத்து வந்தவர்கள், நேராக சுவாமி அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி வணங்க சொல்ல,

இவற்றில் சிறிதும் நம்பிக்கை இல்லை என்றாலும் வந்த முதல் நாளே நாத்தீகம் பேசி தர்கம் புரிய மனமில்லாமல் அவர்கள் சொன்ன படியே செய்தாள்.

கண்களை மூடி "என்னையே கும்பிட வைச்சிட்டாயே!.." என்று மனதுள் ஆரம்பித்தவள்.
"என்னதான் இங்க ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில இங்கு வந்தாலும் என் கடமையை நான் சரி வர செய்வேன். இந்த வீட்டுக்கு நல்ல மருமகளா இருப்பேனே தவிர நல்ல மனைவியாய் ஒருக்காலும் இருக்க மாட்டேன்.
இது என் தங்கை வாழ்க்கை. அதோடு என்னை போல இன்னொரு ஜீவன் இந்த உலகத்துக்கு வேண்டாம்.

எனக்காவது எந்த துன்பமும் அனுபவிக்காமல் முதல்ல சிறுவர் இல்லம்.
அது போக பிறகு நல்ல பெற்றோர் என்று தந்த. ஆனால் என் பிள்ளைக்கு எனக்கு கிடைத்தது போல அமையும்ன்னு என்ன நிச்சயம்?.. என எண்ணியவள், அதை கற்பனையில் கூட பார்க்க முடியமல் கெட்ட கனவு கண்டதை போல் திடுக்கிட்டு கண்களை திறந்துகொள்ள,

நீண்ட நேரமாக இவள் அப்படி என்ன வேண்டுகிறாள்?. என அவளையே பார்த்து கொண்டிருந்த அனைவரும் இவள் திடுகிட அவர்களும் பயந்தே விட்டனர்.

"என்னாச்சும்மா?.. எதுக்கு இப்படி பயந்த?.." என சுந்தரி கேட்டதும். ஒன்னும் இல்லை என தலையாட்டியவளை பார்க்க ஏதோ இருப்பதாகவே தோன்றியது முகிலனுக்கு.
அவனும் அவள் மணமேடை ஏறியதிலிருந்து பார்கிறானே!..
இத்தனை மணிநேரமும் ஆகியும், அவள் தன் புறமே திரும்பி பார்க்க கூட இல்லையே.
கட்டாயத்திருமணம் என்றாலும் ஏதோ ஊந்துதலில் தன் கணவனை பார்க்க தோன்றாதா என்ன?..
அவனே சென்று கதை கேட்டாலும் அதற்கு செயலையே விடையாய் கொடுக்கிறாளே தவிர எங்கு தன்னை பார்க்கிறாள்?..

"அம்மா..!" என அழைத்தவன் "உங்க சம்பிரதாயங்கள் முடிஞ்சிச்சா?." என்க. "இன்னும் சாப்பிடவே இல்லையேடா!.." என்க.
"வாங்க சாப்பிடுவோம்." என டைனிங்க் டேபிளை நோக்கி முன்னே நடந்த முகிலனின் கையை பிடித்து நிறுத்திய சுந்தரி.

"நாங்கள் தான் அங்க சாப்பிட போறோம். நீயும் உன் சம்சாரமும் இங்கேயே சாமி முன்னாடி தான் ஒருதருக்கு ஒருதர் ஊட்டி விட்டு சாப்பிடணும்." என கூறிக்கொண்டே.
வாழையிலையை விரித்தவர்.
அவர்கள் இருவரையும் அமர்த்தி சாப்பாடு பரிமாறி விட்டு முகிலனை மேகலாவிற்கு ஊட்டி விட சொன்னார்.
முகிலனுக்கோ ஏகாபோக மகிழ்ச்சி.
இப்போது என்னை பார்த்து தானே ஆகணும். எப்படி பார்க்காமல் ஊட்டுறேன்னு பார்கிறேன். என நினைத்தவன் ஒரு பிடி எடுத்து அவளுக்கு ஊட்டிவிட, எங்கோ பார்த்தபடி வாயை திறந்து வாங்கிக்கொண்டாள்.

"இப்போ நீ ஊட்டு மேகலா." என்க. சங்கடமாகவே சாதத்தை எடுத்தவள் தன் கையையே பார்த்தவாறு அவனுக்கு ஊட்ட .
வேண்டும் என்றே தலையினை பின்னிழுத்தான் முகிலன்.

சாதம் எல்லாம் தரையில சிதற மேகலாவிற்கு என்ன செய்வதென்று புரியாமல் இம்முறை மிகக்கவனமாக அவனை பார்த்து ஊட்டுவதற்காக சாதத்தை அவன் வாயருகில் கொண்டு செல்ல.
அவனாே வாயை திறவாது அடம்பிடித்தான்.
அவன் ளையாடை கண்டு எல்லோரும் அவளை கேலி செய்து புன்னகைக்க, ஏனாே அவளுக்கு அது அழுகையை வரச்செய்தது.

கண்ணை முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை உள்ளிழுத்தவளால் சில வினாடிகள் மட்டுமே அது சாத்தியமாக. அவளையும் மீறி உருண்டு அவள் கன்னம் வழி விழுந்த கண்ணீரை கண்ட அவனது வாய் தானாக திறந்து உணவினை வாங்கி கொண்டது.

உணவு உண்டு முடிய மேகலாவை ஒரு அறையை காண்பித்த சுந்தரி,
"எதிர்பார சம்பவங்களால நீ ரொம்பவே மனசுடைஞ்சிருப்ப,
எதைப்பற்றியும் யோசிக்காம நின்மதியா கொஞ்சம் ஓய்வெடு!.." என்று விட்டு அவர் சென்று விட்டார்.

மேகலாவிற்கு தான் எல்லாமே புதிதாகவும் வீட்டில் யாரவது தனக்கு துணையாக வந்திருந்தால் நன்றாக இருக்கும். என தோன்றியது.

அதக்கு தான் முற்றாக முழுக்கு போட்டு விட்டானே!... இனி எனக்கு சொந்தம் என்று இத்தனை நாள் கூறிக்கொண்டிருந்த யாருமே எனக்கில்லையா?.. எனக்கு ஒரு கஷ்டம் என்றால் யாரிடம் என் மனவேதனையை கூறி ஆறுதல் தேடுவேன்?.. எல்லா உறவும் ஒரு நாளில் பனி கட்டி போல் அல்லவா கரைந்து விட்டது.

எனக்காவது பறவாயில்லை. ஆனால் அம்மா, அப்பா நிலை?... ஒரே நாளில் எத்தனை மன உலைச்சல். ஒரு மகளை காணவில்லை. ஒருத்திக்கு இப்படி ஒரு இக்கட்டில் மாட்டக்கொண்டாள். இனி ஊரார் பேசும் கேலி பேச்சுக்கள். அத்தனையையும் எப்படி தாங்கி கொள்ள போகிறார்களோ?... அழுதே கரையப்போகின்றார்களே! அவர்களுக்கு யார் ஆறுதல் கூறுவார்கள்?." என நினைத்து கலங்கியவள். கட்டினில் படுத்திருந்ததால் இருந்த அலைச்சலும் அழுகையும் சேர்ந்து தூங்கியே போனாள்.

அவளை ஒரு அறையில் விட்டு வந்த சுந்தரி முகிலன் அறைய திறந்து கொண்டு உள்ளே வந்தவள்.
"அப்பு..! அம்மா மேல கோபமாடா?.." என கேட்க.

"எதுக்கும்மா உங்க மேல எனக்கு கோபம்.?... உங்களுக்கு தான் என்ன தெரியும்?. ஒரே தடவை பார்த்து உங்களுக்கு அந்த பெண்ணை பிடிச்சு போக தானே பொண்ணு கேட்டிங்க.
அவங்களுக்கே அவங்க பொண்ணு அப்பிடி செய்யும்னு தெரியாத போது உங்களுக்கு எப்பிடிம்மா தெரியும்?.
விடுங்கம்மா நடக்க வேண்டியது தான் உங்க இஷ்டப்படி நடந்திச்சே!.." என்று தாயை பார்த்து புன்னகைப்பவனை பார்த்தவர்.

"புதுசா இருக்கப்பு நீ இப்படி சிரிக்கிறதை பார்க்குறபோ.
இதுவரை சின்ன தப்பு நடந்தா முதல் கோபப்படும் ஆள் நீ தான். ஆனா இவ்ளோ பெரிய பிரச்சினையை சாதாரணமா எடுத்ததை நினைக்க ஆர்ச்சர்யமா இருக்கு." என்றவர்.

"அப்பு....." என்று இழுக்க.

"சொல்லுங்கம்மா இன்னும் என்ன புதிர் வைச்சிருக்கிங்க?...." என தாயின் புகழ்சியில் கேலி கலந்து கேட்க.

"அது.... இன்னைக்கே சடங்கை வைச்சிடலாமா?..." என்ற தாயின் தயக்கத்தில்.
எந்த சடங்கினை கூறுகிறார் என புரிந்து கொண்டவன்,

புன்னகை மாறாத முகத்துடனே,
"இது வரை நடந்த எதுவும் என் விருப்பத்தோடு நடக்கல. இனியும் எதுக்கு கேட்டிட்டு. உங்க இஷ்டம்மா. எதுக்கும் நான் ரெடி தான்.!" என்க..

"சந்தாேஷம்டா!. சம்மதிச்சது. என்றவர்,
அவனது மலர்த முகத்தை கண்டு,
மருமக வந்ததுமே சிரிப்பும் வந்து ஒட்டிக்கிச்சு. கொஞ்சம் கூட குறைய மாட்டேன்குதே!" என்றவர் சென்று விட.

"என்ன நடக்க காத்திட்டு இருக்கோ!" என்று வாய்விட்டு புலம்பியவன் இருந்த அசதியல் அவனும் தூங்கி விட்டான்.
 

Balatharsha

Moderator
பகுதி. 15.

அத்தனை சம்பிரதாயங்கள் முடியும் வரை பொறுத்திருந்த கரன் மேகலாவை அறையில் விட்டதும் தான் தாமதம்.
தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தோட்டத்துப் பக்கம் சென்றான்.

மேகலா தான் தன் வாழ்க்கை துணையாக வருவாள் என பலகற்பனை செய்தானோ அத்தனையும் கற்பனையோடே கருகிப்போனது.

அவளை பார்த்த நெடியில் அவள்தான் முகிலனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என நினைத்து தன்னை தேற்றியவன்,
அவள் பெண் இல்லை. அவள் தங்கை தான் மணப்பெண் என்றதும் மேகலாவின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசிக்க தொடங்கினான்.

அவளை சரியாக கவனிக்காதவர் கூட அவளை பார்க்கும் ஒரே பார்வையில் சொல்லி விடுவார்களே அவள் முகர்ந்தாலே வாடிவிடும் அனிச்சை மலர் போல் மென்மையானவள் என்று.

ஏன் திருமண மண்டபத்தில் கூட அவளைஅத்தனை பேர் சுற்றி நின்று குற்றம் சுமத்தும் போது கூட அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாமல் தன்னை குற்றமற்றவள் என்று நிரூபிப்பதற்கு தன் பெற்றோரிடமே எப்படி மன்றாடினாள். அவளை பார்த்தா அத்தனை கூட்டம் வீண் பழி போட்டது?... எப்படிக் கதறினாள். ஒருவர் கூட முன் வந்து அவளுக்காக வாதடவில்லையே!... ஏன் தான் கூட வாதாடதது எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்திவிட்டது. தன் முதல் காதல் துளிர் விட்ட அடுத்த நொடியே எவர் கண் பட்டதோ உடனேயேவா கருக வேண்டும்?....

அதற்கு காரணம் அவன் அண்ணன் என்பதே வேதனையாக இருந்தது.

யாராவது உனக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்றால் யோசிக்காமல் சொல்லுவான், என் அண்ணன் முகிலன் தான் எனக்கு பிடித்த முதல் ஹீரோ என்று.
அவன் நடை, உடை, பாவனை, தைரியாமாகவும், நிதானமாகவும் எதை செய்தால் என்ன நிகழும் என்றும் ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வைக்கும் முகிலனை அவ்வளவு பிடிக்கும் அவனுக்கு.

இருக்காத பின்ன! எந்த வித ஆதரவும் இல்லாமல் தனியே நின்று இத்தனை தொழில்களை மொழி பிரச்சினயையும் தாண்டி நாடு பூராகவும் நேர்த்தியாக செய்பவன் என்றால் எந்த அளவவிற்கு திடமானவனாக இருப்பான்.

ஆனால் இன்று மேகலாவிடம் அவன் நடந்து கொண்ட விதமும், அவள் தங்கையை தண்டிப்பதை விடுத்து, மேகலாவை தண்டிப்பதாக கூறியது அவனுக்கு முகிலன் மேல் சின்ன வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. அது அவள் மேல் இருந்த காதலினால் உண்டானது இல்லை.
சாதாரணமாக மனிதாபிமானம் உள்ள எவருக்குமே இதை பார்த்தால் கோபம் வரத்தான் செய்யும்.

அவள் தங்கை திருமணம் வேண்டாம் என்று ஓடி போனால் அப்படியே விட்டு விடவேண்டியது தானே?....
ஏன் இத்தனை நாளும் தனக்கு திருமணம் வேண்டாம் என்று தானே அண்ணா கூறினார்.
இது தான் தனக்கான சந்தர்ப்பம் என நினைத்து இனிமேல் இந்த திருமணம் என்ற பேச்சையே எடுக்காமல் விட்டு விட வேண்டியது தானே?... அண்ணனுக்கு இந்த ஊரையோ, உலகத்தையோ வாயை மூட வைப்பது பெரிய விஷயம் இல்லை. அவர் ஒற்றை விழி அசைவிற்கே நடுங்கும் ஊரா அண்ணனை எதிர்த்தோ அசிங்கமாகவோ பேசும்?... இல்லை நிச்சயமாக இல்லை.!......

ஆனால் எதுக்கு ஊரை காரணம் காட்டி தனக்கு திருமணமே வேண்டாம் என அடம்பிடித்த பெண்ணை வற்புறுத்தி திருமணம் செய்ய வேண்டும்?. எத்தகைய கதறல் அது!. போலீஸை காரணம் காட்டி கத்தி முணையில் ஒரு பெண்ணை நிறுத்தி திருமணம் செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன?... என்று மண்டபத்தில் படாத ஆதங்கம் இப்போது தோட்டத்தில் தனிமையில் மனதினில் பெரும் ஒருதலை பட்டி மன்றமே நடத்திக்கொண்டிருந்தான்.

திடுமென பின்புறத்தில் இருந்து அவன் தோளை தழுவிய கரத்தை வைத்து யாரென உணர்ந்தவன்.

"சர்மி....." என்று அவளை கட்டிக்கொண்டு சிறு குழந்தை போல் அழ.
அவன் முதுகினை ஆதரவாக வருடியவள்,

"சரிடா.... சரிடா....! சின்ன பையன் மாதிரி ஆழாத.
எனக்கு தெரியும் நீ எந்தளவுக்கு வேதனையில இருப்பன்னு.
இப்பிடி யோசிச்சு பாரேன். மண்டமத்தில் முகில் அண்ணா அவங்கள தாயாராக சொல்லும் போது, தான் கல்யாணமே செய்துக்க மாட்டேன்னும், எனக்கு அதில விருப்பம் இல்லைன்னும் எவ்வளவு கத்தினாங்க.

ஒரு வேளை நீ அவளை வருசக் கணக்க உருகி உருகி காதலிச்சு அவங்க கல்யாணமே செய்துக்க விருப்பமில்லைன்னு அப்போ சொல்லிருந்தா உனக்கு தானே கஷ்டம்?.. இதுக்கு பதினைந்து நாள்ல உண்மை தெரிஞ்சது எவ்வளவோ பரவாயில்லடா!.. உனக்கு ஒன்னு கடவுள் தரல்லன்னா அது உனக்கானது இல்லை. நிச்சயமா அதை விட ஏதோ பெருசா வைச்சிருப்பாரு." என தேற்ற.

அவளை வேதனையோடு நிமிர்ந்து பார்த்தவன்
"ஆனா முகில் அண்ணா செய்தது தப்பு சர்மி...! எதுக்காக விருப்பமே இல்லாத பொண்ணை கட்டாயப்படுத்தி தாலி கட்டணும்.
இந்த உலகத்தில வேற பொண்ணா இல்லை?..". என்றவனை.

"இல்லடா கரன் அண்ணா!.... முகில் அண்ணா எந்த விஷயம் செய்தாலும் ஒரு காரணம் இருக்கும்.
இதுவும் நிச்சயம் ஒரு காரணம் இல்லாமல் இருக்காது. நீ வேணும்னா பாரு!" என்றவள்.

"இதோட உன் ஒரு தலை காதலை விட்டுட்டு, சாதாரணமா இரு!..." என்க.

"இல்லை சர்மி... நான் எங்கயாச்சும் போய் கொஞ்ச நாளைக்கப்புறம் வரலாம்னு இருக்கேன்." என்றவனை,

"லூசாடா நீ.....! எதுக்கும் தீர்வு நீ உன்னை மறைச்சுகிறது இல்லை. அது தற்காலிக முடிவா வேணும்னா இருக்கலாம்.
அப்புறம் நீ அண்ணியை பார்க்கும் போது அதே நினைவு திரும்ப வரும். அதை விட்டிட்டு உன் மனசுக்கு அவங்க அண்ணி என்று புரிய வை!. காலம் போக போக அதுவே பழகிடும். உன் காயமும் ஆறிடும்." என்றவள்,

"வாடா உள்ள!... யாராச்சும் நீ அழுதிட்டு இருக்கிறதை பார்த்தால் புதுப்பிரச்சினை கிழம்பிடுவாங்க" என்றவள் அவனை இழுத்து கொண்டு சென்றாள்.

மேகலாவோ அசந்து தூங்கும் நேரம் கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டு,

"யாரு இது?.. எதுக்கு இப்போ இந்த தட்டு தட்டுறாங்க?..." என்று எரிச்சலுடன் கண் விழித்தவள்,
தான் இருக்கும் இடத்தை பார்து, எந்த இடம் இது என முதலில் குழம்பி. பிறகு விடிந்ததில் இருந்து நடந்த விடயங்கள் கண்முன் வந்து போக நிதர்சனம் உணர்ந்தவள் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க,

"இதோ வரேன்." என்று குரலை வெளியே அனுப்பி விட்டு எழுந்து நடப்பதற்குள் கதவே உடையும் அளவு மீண்டும் மீண்டும் தட்டப்பட்டது.

"என்ன இது? அதுதான் வருகிறேன் என்றேனே!... பிறகு இப்படியா தட்டுவாங்க. என்னதான் அவங்க வீட்டுக் கதவா இருந்தாலும் ஒரு வரைமுறை வேண்டாம்!.." என்று மனதோடு புலம்பியவாறே கதவை திறக்க.
வான்மதி தான் நின்றிருந்தாள். அவள் முகத்தில் மேகலாவை பார்க்கும் பார்வையில் நெருப்பு தெறித்தது.

"அம்மா உங்களை குளிச்சிட்டு தயாராக சொன்னாங்க." என அழுத்தமாக விழுந்த வார்த்தைகளை கண்டுகொள்ளாது,

"தயாராகிறதா?... எங்க இந்த இருட்டும் நேரததில!" என புரியாது கேட்க.

"என்ன மதி!... உன்னை என்ன செய்யச்சொன்னேன். நீ என்னடான்னா வாசல்ல வச்சு என் மருமகளோட பேசிட்டு இருக்க." என குரலை உயர்த்தியவாறே வந்த சுந்தரி.

"நீ போ!... நான் என் மருமகளை தயார் பண்ணிக்கிறேன்." என்க.
"நல்ல மருமக தான்." என வாயை ஓரங்கட்டி சுழித்து விட்டு சென்றாள் மதி.

"அவ அப்பிடித்தான் நீ வாம்மா!.." என்று உள்ளே அழைத்தவர்,
"போய் குளிச்சிட்டு வாடா!.. உன்னை தயார் பண்ணனும்." என்க.

"எதுக்கத்தை?.. எங்கையாச்சம் போக போறோமா?.". என அப்பாவியாய் அவள் கேட்க.

"என்னம்மா சின்ன பொண்ணாட்டம் கேட்கிற?. இன்னைக்கு தானே கல்யாணம் முடிஞ்சிருக்கு. செய்ய வேண்டிய சடங்கு இன்னும் இருக்கே!.." என்றவர். "இன்னைக்கு உங்களுக்கு முதலிரவுடா" என்றதும் அதிர்ந்தாள் மேகலா.

ஏதோ குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தாலியை வாங்கி கொண்டாகிவிட்டது.
ஆனால் இதை யோசிக்கவே இல்லையே!... இப்போ என்ன செய்வது?.. ஏதாவது சொல்லி சமாளிப்போமா?. என்ன என்று சொல்வது?. என யோசித்தவளை நிஜத்திற்கு கொண்டு வந்தது சுந்தரியின் குரல்.

"என்னம்மா யோசிக்கிற......? இங்க பாரும்மா! நடந்தது எல்லாமே சரினு சொல்லமாட்டேன். இதை நீ ஏத்துக்கவும் நாள் ஆகும்ன்னு எனக்கு தெரியும்.
ஆனா சம்பிர்தாயம் அப்பிடி இல்லம்மா!... கட்டாயம் நடக்க வேண்டிய நேரம் நடந்தே ஆகணும். ஒரு புள்ளையை பெத்திட்டா உங்க ரண்டு பேருக்குள்ள இருக்கிற இடைவெளிய அதுவே குறைச்சிடும்." என்க.

மேகலாவால் எதுவும் பேச முடியவில்லை. எதை வேண்டாம் என நினைக்கிறாளோ அதுக்கே அத்திவாரம் இடச்சொல்கிறார்கள். அதுவும் இன்றே!.
என்ன கொடுமை? இனி என்ன எல்லாம் அனுபவிக்க போகின்றேனோ!.. என்றெண்ணியவள் அமைதியகவே குளியலறை புகுந்தாள்.

மனம் எரிமலையாக கொதிக்க அந்த நீர் அதை அணைத்து விடுமா என்ன?..
முடிந்தளவு குளித்து அதை அடக்க முயற்ச்சி எடுத்தாளே தவிர அது அணைந்த பாடில்லை.

பேசாமல் இந்த முரடனிடமே சொல்லி விடலாமா?..... எனக்கு இதில் இஷ்டம் இல்லை என்று.
இஷ்டமில்லை என்று சொல்லியும் கட்டாய தாலி கட்டியது போல் முதலிரவையும் முடித்து விட்டால்!.. என நினைத்தவளுக்கு நீரில் நிற்கும் போதே வேர்த்தது.

தனியே நின்றால் தேவையில்லாத கற்பனையே தன்னையே கொன்று விடும் என நினைத்தவள் வேவகமாக குளித்து விட்டு வெளியே வந்தாள்.

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல்.
தனிமையில் தேவையில்லாத கற்பனையே தன்னை கொன்றுவிடும் என வெளியே வந்தால், அலங்காரம் முதல் இரவென்று சிங்கத்திடம் தனியாக அனுப்பி வேடிக்கை பார்க்க பாக்கிறார்கள்.

என்ன செய்து இதிலிருந்து தப்புவது?. என பயந்தவள் முகத்தினில் வடிந்த வியர்வை பவுடர் கொண்டு மூன்று தடவைக்கு மேல் ஒத்தி எடுத்த சுந்தரி, அதற்கு மேல் இது சரிக்கு வராது என நினைத்து,

"எதுக்கம்மா பயப்பிடுற?..." ஏதோ காட்டுக்கு வேட்டைக்கு தனியா அனுப்புற போல பயப்படுகிற.
முதல்ல கொஞ்சம் பயமாக தான் இருக்கும், அப்புறம் எல்லாம் பழகிடும்." என சொன்ன மாமியாரை பார்த்தவள்.
அப்போதிருந்த நடுக்கத்தில் சரி என்று வெறுமனை சொல்லி விட்டு தலை குனிந்து கொள்ள,

"கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ!.. நல்ல நேரம் வரட்டும்." என்றவர் வெளியேறி விட்டார்.
அத்தனை அலங்காரங்களையும் பிய்த்து போட்டால் என்ன என்றிருந்தது.
யார் மனதையும் நோகடிக்க கூடாது என்ற ஒரு காரணத்திற்காக பொறுத்தவள்.

"அவன் மட்டும் என்கிட்ட வரட்டும் எது கிடைக்கிறதோ அதனாலயே மண்டையை உடைச்சிடுகிறேன்.
கட்டாயப்படுத்தி தாலி கட்டிட்டா எல்லாத்துக்கும் கட்டாயபடுத்த முடியுமா?" என பொங்கினாள்.
பாவம் இந்த தைரியம் அவன் முகத்தை கண்டதும் இருக்குமிடம் தெரியாமல் போகப்போகிறது என்பதை அறியவில்லை.

சிறுது நேரத்தில் அவளை அழைத்து சென்றவர், அவளை அவன் அறை வாயிலில் நிற்க வைத்து "பயப்பிடாதம்மா!... பாத்து நடந்துக்கோ!..." என்று கதவை திறந்து உள்ளே அனுப்பியவர் "மறக்காமல் கதவை பூட்டிக்கோம்மா!" என்று விட்டு போக.

இவ்வவு நேரமும் சுந்தரி கூட வந்த தைரியத்தில் வந்தவள். உள்ளே நுழைந்ததும் முகிலன் கட்டினில் மேல் சம்மணம் இட்டு மடியில் இரு தலையணையை வைத்து அதில் முண்டு கொடுத்து போனை நோண்டிக் கொண்டிருப்பதை கண்டதும்
அவ்வளவு நேரம் அவனை அப்படி செய்வேன், இப்படி செய்வேன். என பெரிய வீராங்கனை போல் தனக்குள் போட்ட திட்டங்கள் எல்லாம் மறந்து போய்,
காலையில் அவன் கோபம் கொண்ட தருணமே பல தடவை அவள் கண் முன் வந்து போனது.

அதை நினைத்து கொண்டே வந்தவள் கதவுடனே ஒட்டி நின்று விட்டாள்.
அவனை பார்த்து கொண்டே இருபது நிமிடங்களுக்கு மேல் நின்றிருப்பாள். அத்தனை நிமிடமும் தன்னை பலாத்காரம் செய்து விடுவானோ!.. என்ற பயம் மட்டுமே அவள் மூலையில் ஓடியது.
சிறுது நேரத்தில் அவளை நிமிர்ந்து பார்த்தவன்.

"என்ன?" என புருவ அசைவில் வினவ.
அவளோ பேச்சு வராமல் "ஒன்றும் இல்லை." என்பதாக கதவுடன் ஒட்டி நின்றவாறே வேக வேகமாக தலையசைத்தாள்.

"அப்புறம் எதுக்கு அங்கயே நிக்கிற?.. போய் படுக்க வேண்டியது தானே!...." என்றவனை எதுக்கு என்றது போல் அவள் பார்க்க.

அவள் விழிப்பதையும், நடுக்கத்தையும் பார்த்தவனுக்கு, அவள் செயலில் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி அவளை சீண்டிப்பார்க்கும் எண்ணம் தோன்றியது.

"என்ன உனக்கு முதலிரவு வேணுமா?... தூங்க சொன்னாலும் என்னையே பாத்திட்டு நிக்கிற?." என்றதும் கதவு சுவற்றுடனே ஒட்டிச்சென்றவள், ஓரமாக அப்படியே இருந்து கொண்டாள்.

கட்டிலில் இருந்த தலகணியையும், குளிர் தாங்க கூடிய நில விரிப்புடன் போர்வை ஒன்றையும் அவள் அருகில் கொண்டு சென்று கொடுத்தவன்.

"இப்படி தினமும் நான் நல்லவனா இருக்க மாட்டேன். ஒரே அறையில் கதா நாயகனும் நாயகியும் ஒன்னுமே நடக்காம இருக்கிறது படத்துக்கும், கதைக்கும் வேணும்னா சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் நிஜத்திற்கு இவ்வளவு அழகான மனைவியை பக்கத்தில் வைச்சுட்டு எந்த உணர்சியும் இல்லாத நல்லவனாட்டம் நான் நடிக்க மாட்டேன். கூடிய விரைவில் அந்த நாளையும் எதிர்பாத்து காத்திரு.! உனக்கு விருப்பம் இல்லை என்றாலும் அது நடந்தே தீரும்." என பொய்யாக அவளை மிரட்டுவதற்கே சொன்னான்!.

பாவம் அவள் தூக்கம் தான் தொலைந்தது.
தனிமையிலே படுத்து பழகியவள். சில வேளைகளில் மாத்திரம் பானு அவளுடன் தூங்குவாள். ஆனால் இன்று ஒரு ஆணுடன், அதுவும் தனிமையில் இப்படி ஒரு சூழ்நிலையில் எல்லாமே கனவு போல் இருந்தாலும் இனி அதை பழகித்தானே ஆகவேண்டும்.
ஆனால் இவன் சொல்வதை பார்த்தால் பயமாக இருக்கே!
ஒரு வேளை சொன்னது போல் செய்து விடுவானோ?.. என அவனையே திரும்பி திரும்பி பார்த்து இரண்டு மணி தாண்டிய பிறகே தூங்கினாள்.

சங்கமிப்பள்.......
 

Balatharsha

Moderator
அத்தியாயம் 16



காலை கண்விழிக்கும் நேரம். பறவைகளில் பாடலோடும், வீட்டில் பெரிதாக ஒலித்துக்கொண்டிருந்த கந்தசஷ்டி கவத்தோடு கண்விழித்தாள் மேகலா.



தான் இருக்கும் இடம் புதிதாக இருக்க.



நேற்றிருந்த மனநிலையில் எதையும் கவனிக்க தோன்றவில்லை அவளுக்கு. ஆனால் இப்போது முகிலன் நன்றாக உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு திருப்தி அடைந்தவளாய் அந்த அறையை அப்போது தான் சுற்றிப் பார்த்தாள்.



பெரிய விசாலமாக அவள் குடும்பம் தங்கி இருந்த வீட்டைப்போல அவனது அறையின் தோற்றம். அதனுடன் ஒட்டிய குளியல் அறை. சுற்றி இளம்பச்சை வர்ணப்பூச்சு அந்த அறையை இன்னும் அழகாய் காட்ட, கண்ணாடியால் ஆன ஜன்னல்களுக்கு அதே நிறத்துடன் சற்று வெள்ளை கலந்து திரைச்சீலை.



ஒரு பக்கசுவற்றில் கோட் சூட் அணிந்திருந்தவன், மேல் கோட்ரை கழட்டி பின்புறம் தோளோடு பிடித்தபடி சண்கிளாஸ் அணிந்து வெகு ஸ்டைலாக நடந்து வரும்போது எடுத்கப்பட்ட ஆளுயர புகைப்படம்.



திடீர் என பார்த்தால் அவனே நேரில் நிற்பது போல் இருக்கும்.



மற்றைய சுவர் முழுவதும் கண்ணாடி பதிக்கபட்ட அலுமாரிகள். அவன் தொழில் சம்மந்தமான ஆவணங்களும், உடைகளும் இருக்கவேண்டும்.



அதன் அடிப்பாகத்தில் அவனது விதவிதமான காலணிகளும்,



கதவருகில் அழகான வேலைபாடுகளுடன் கூடிய ட்ரெஸ்ஷிங்க் டேபிள். அதில் பல விதமான வாசனை திரவியங்கள், ஆண்கள் பூசும் கிறீம், பொடி ஸ்பிறே என பல விதமான ஆண்களுக்குரிய அழகு சாதனப்பொருட்க்கள் வைக்க இடம் போதாமல் ஒன்றின் மேல் ஒன்று சண்டை போட்ட படி இருந்தது.



அதன் மேற் சுவற்றில் இரண்டு வெள்ளை புறாக்கள் ஒன்றில் கழுத்து பகுதியில் இன்னொன்று படுத்திருப்பதை போல் வடிவமைக்க பட்டு வயிற்று பகுதியில் வட்ட வடிவில் கடிகாரம் பொருத்தப்பட்டு இருந்தது. சுற்றி உள்ள சுவர்களில் சின்ன சின்னதாய் அவனது இப்போதைய புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தது.



அனாவசியமாக அந்த அறையில் வேறு எந்த பொருளும் இல்லாமல் பார்ப்பதற்கு அழகாகவும், நேர்த்தியாகவும் இருந்தது.



இவற்றை ஒவ்வொன்றாக ரசித்தவள், பெரும் ரசனைக்காரன் தான். என எண்ணும் சமயம் அவனுடலில் அசைவு தெரிவதை கண்டு.



"ஐய்யையோ எழுந்துக்க போறானே!.." என பயந்து குளியலறை புகுந்தவள் போன வழியே திரும்பினாள்.



எப்படி குளிக்க முடியும்?.. மாற்று உடைதான் இல்லையே. அதோடு பல் விளக்குவதற்கு பிறஸ் கூட இல்லை. என உணர்ந்து வெளியே சென்று யாரையாவது கேட்கலாம் என வெளியே வந்தாள்.



கதவை திறந்ததும் வெளியே நின்ற சர்மிளாவாே



"குட் மார்ணிங்க்." அண்ணி என அவள் வரவிற்காய் காத்திருந்தவள் போல் வணக்கம் வைத்து. "நல்ல தூக்கம் போல." என்றவாறு கையில் இருந்த புடவையையும் பிறஸ்ஸையும் கொடுத்தவள். "சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க!.. கோவிலுக்கு போகணும்." என அவசரப்படுத்த,



அவளை கேள்வியோடு நோக்கியவள்,



"ரொம்ப நேரமா இங்கேயே நிக்கிறீங்களா?...... " என அவளது பெயர் தெரியாமல் தடுமாறினாள்.



"நான் சர்மி அண்ணி!.. நீங்க அப்பிடியே கூப்பிடுங்க. வேற ஏதோ கேட்டிங்களே?.." என்றவள்!.... "ஆ... நினைவு வந்திடிசு. ரொம்ப நேரம் எல்லாம் இல்ல. இப்ப தான் ஒரு அரைமணி நேரமாய் தான்." என சாதாரணமாக சொல்ல.



அவள் கூறியவிதத்தில் தோன்றிய புன்னகையினை மறைக்காமல்



"அரை மணிநேரமா நின்னியா?



அப்பவே கதவை தட்டி இருக்கலாமே சர்மி...!. நான் எழுந்திருப்பேன்." என்க.



" ஐய்யையோ!... நேற்று என்ன சம்பவங்கள் நடந்திச்சோ!.. எப்பிடியண்ணி கதவதட்ட முடியும்?... அப்புறம் உங்க சந்தோஷத்துக்கு நான் நந்தியாக கூடாதுல்ல." என சங்கடமே இல்லாமல் அவள் கூற.



அவள் சொன்னதும் ஒரு மாதிரியாகி போனது மேகலாவிற்கு.



அந்த பேச்சை மாற்ற நினைத்தவளாய்,



"ஆமா எந்த கோவில் போறோம்?..." என கேட்க.



"ஆண்ணி...... நீங்க வேற!.. ஏற்கனவே சீக்கிரம் எழுந்திருச்சிருகிங்க.



இப்போ எங்கூட பேசிட்டு இருக்கிறது மட்டும் சித்திக்கு தெரியணும்.. ரண்டு பேரையுமே துவைச்சு எடுக்க போறாங்க. போய் குளிச்சிட்டு வாங்க." என்று அவளை அனுப்பிவிட்டு சர்மியும் போய்விட்டாள்.



முகிலன் எழுவதற்கு முன் தயாராகி அறையிலிருந்து கீழே வந்தவள் எல்லோரும் பரபரப்பாக பொங்கலுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு செல்வதை கண்டு,



"என்னத்தை எதுக்கு இவ்வளவு பரபரப்பா இருக்கிங்க?" என்க.



"வந்திட்டியாம்மா!... சீக்கிரம் கிளம்பு சன்னதி முருகன் கோவில் போய் பொங்கல் வைக்கணும்! நேற்று கல்யாணத்தில பிரச்சினை வரும்போது நல்லபடியா எல்லாம் முடிஞ்சா பொங்கல் வைக்கிறதா வேண்டிகிட்டேன்!..



அதான் நல்லமடியா கல்யாணம் முடிஞ்சுதுல்ல. அப்புறம் எதுக்கு சாமியோட கடனுகளை வைச்சிருப்பான்?. அது தான் இன்னைக்கே நேர்த்திய முடிச்சிடலாம்னு தயாராகியாச்சு.



ஆமா எங்க உன் புருசன் ? எழுந்திட்டானா?..... காஃபி கலந்து கிச்சன்ல மூடி வைச்சிருக்ககேன். நீயும் குடிச்சிட்டு அவனுக்கும் கொண்டுபோய் குடு!.



அப்பிடியே அவனையும் எழுப்பி தயாராக சொல்லுடா!. மத்தம்படின்னா காலையோட எழும்பி வீட்டையே ரண்டாக்கி நம்ம பிபியை ஏத்திவான். அவசியமான நேரம் எழுந்துக்க மாட்டான்." என்றவர்.



"சரி சரி நேரமாகுது அப்புறம் மீதிய பேசிக்கலாம். முதல்ல போய் அவனை எழுப்பு." என அவளை துரத்தினார்.



கையில் காஃபியுடன் அறை வந்தவள் அவன் நன்கு தூங்கிக் கொண்டிருக்கவும்.



" அத்தை சொல்லுகிறாங்கனு மறுத்து பேச முடியாமல் வந்தாச்சு. ஆனால் எப்படி இந்த சிடுமூச்சிய எழுப்புறது. இவனோட பேசுறதுக்கே மூணு நாள் ஒத்திகை பார்கணுமே!. அப்படி ஒத்திகை பார்த்தாலும் நடுக்கம் இல்லாம பேசலாமா என்கிறதே சந்தேகம்!. இதில எப்படி நான் போய் இவனை எழுப்புறது?.



ஐயோ அத்தை என்னை இப்பிடி மாட்டி விட்டுடிங்களே!.." என்று மனதினிலே புலம்பியவள்.



என்ன செய்யலாம்?.. என யோசித்து கொண்டிருந்த போது தான் ஜன்னல் கண்ணில் பட்டது.



அதை கண்டதும் ஒரு எண்ணம் தோன்ற.



"நல்ல ஐடியா!." என உட்சாகமானவள், "இதை திறந்து விட்டாலே சூரியன் இந்த சிடுமூஞ்சி முகத்தில் பட்டதும் எழுந்துடுவான்." என நினைத்து ஜன்னல் திரையை ஒதுக்கி அதை முழுவதுமாக திறந்து விட்டாள்.



அவள் நினத்தது போல் சூரியன் முகிலன் மீது பட்டது தான். ஆனால் அவன் அதையும் பொருட்படுத்தாது குப்பற தன்னை புரட்டிக்கொண்டு படுத்துக்கொண்டான்.



அவன் செய்கையை கண்டவள்,



"சூரியன் இப்பிடி அடிக்குது. இந்த சிடுமூஞ்சி கவுந்து படுக்கிறத பாரு!. மூஞ்சூறு.. மூஞ்சூறு.....!"



என்று பொங்கியவள்.



"இப்பாே என்ன செய்தா எழும்புவான்?. பேசாமல் தலைகணிய எடுத்து ரண்டு சாத்து சாத்துவோமா?" என்று நினைத்தவள் உடனே "வேண்டாம்.. வேண்டாம்..!. எழுந்தான்னா என்னை முறைத்தே சாகடித்துடுவான்."



என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் கண்களில் அகப்பட்டது அலாரம் கடிகாரம்.



இப்போதைய நேரத்தை சரியாக பிடித்ததும் அது சத்தம் போட தொடங்க, அதை அவன் அருகில் வைத்தவள். ஓட இடம் தேடி பதட்டத்தில் பக்கமிருந்த பாத்ரூமில் ஓடி ஔிந்து கொண்டாள்.



ஆலாரம் சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்தவன்



"யாரு இந்த வேலை பார்த்தது?." என சினத்தோடு கடிகாரத்தி்ன் அலாரத்தை நிறுத்தி விட்டு சுற்றி பார்க்க யாரையும் காணவில்லை.



ஆனால் காஃபி மாத்திரம் மூடிய படி இருக்க அதை எடுத்து "யாராய் இருக்கும்?..." என்ற சிந்தனையோடு பருகுபவனை குளியலறையில் இருந்து எட்டிப்பார்த்தவள்.



மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வரவும் அவளை கண்டவன்.



நீதானா இந்த வேலையை பார்த்தது?... வாடி வா....! என நினைத்தவன் தன் முன் வந்து நின்றவளிடம்,



"எதுக்கு அலாரம் வைச்சா?....." என்க.



"அத்.... அத்...அத்தை தான்" என திக்கு திணறி அவள் சொல்ல.



"ஓ... உணக்கு திக்கு வாயா... ? உன்னையா என் தலையில கட்டி வைச்சாங்க?" என்க.



எனக்கு திக்கு வாயா? நீ தான் சிடுமூஞ்சி. யாரும் என்னை உன் தலையில கட்டல்ல! நீ தான் என்னை விருப்பமே இல்லாத கல்யாணத்துக்கு மிரட்டி சம்மதிக்க வைச்ச." என கத்த வேண்டும் போல் இருந்தாலும்.



எங்கு அவன்முன் ஒரு வார்தை பேசவே நாக்கு தந்தியடிக்கிறதே!... என அமைதி காக்க.



"என்னவாம் அம்மா?......" என முகிலன் கேட்டதும்.



"கோவில்... கோவில் போகனுமாம். வேளையோட எழுந்து தயாராக சொன்னாங்க." என மீண்டும் திணறியே கூறியவள் சொல்ல வந்ததை சொல்லிவிட்டேன் என மௌனமானாள்.



"ஹீம்......" என்ற ஒரு வார்த்தையில் முடித்தவன். தேனீரை அருந்தி விட்டே தயாரகி வந்தான்.



கீழே வந்தவன் யாரையும் காணாது மேகலா மாத்திரம் ஒரு இருக்கையில் முதுகுகாட்டி அமர்ந்திருக்க, அவளருகில் வந்தவன்,



"எங்க யாரையும் காணல்ல.?" என்க.



திடீரென தன் பின்புறம் கேட்ட குரலில் திடுக்கிட்டு அவசரமாக இருக்கையில் இருந்து எழுந்தவள்



"எல்லாரும் வெளியே போயிட்டாங்க. உங்களை அழைச்சிட்டு வர சொன்னாங்க." என்றதும்.



"ம்... வா போகலாம்." என நடந்தவன் பின்னே சொன்றாள்.



இருவரும் தம்மை நோக்கி வருவதை கண்ட சுந்தரி



"என்னடா பொண்ணுங்க நாங்களே சீககிரம் தயாராகிட்டாேம். நீ ஆடி, அசைஞ்சு வர!. சரி சரி நேரமாகுது எல்லாரும் வண்டியில ஏறுங்க." என்றதும்.



சர்மி முந்திக்கொண்டு "நான் அண்ணிக்கு பக்கத்தில தான் இருப்பேன்." என கூச்சலிட்டபடி ஏற.



அவள் கையை இறுக பிடித்த மதி,



"என்னடி என்கூட தானே எப்பவும் ஒட்டிட்டு திரிவ!.. இன்னைக்கு என்ன புதுசா அண்ணி நொண்ணின்டு. ஒழுங்க என்கூட இரு!.." என பல்லை கடித்தபடி கூற.



"ஆமாடி!.. முன்னாடி எனக்கு யாருமில்லை. நிதா தானும் தன்னோட பாடும். இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் படிப்புன்னு கொழும்பு போயிடுவ. எனக்கு அண்ணி தானே எப்பவும். அது தான் இப்பவே ஒட்டிக்கிறேன்." என சொன்னவள் அவளது கையினை உருவி விட்டு ஓட.



"இவளையும் மயக்கிட்டியா?... இந்த கேவலமானவ உனக்கு முக்கியம்னு போறல்ல. இவ தொங்கச்சி செய்த வேலையை இவளும் செய்வா அப்போ தெரியும்டி இவ எப்பிடினு!.." என தனக்குள்ளே சொன்னவள் மேகலாவை முறைத்தவாறே நின்று கொண்டாள்.



இதை எதையும் அறியாது வண்டியில் ஏறி ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டாள் மேகலா.



முகிலனை மேகலா அருகே இரு என சுந்தரி சொல்லி முடிப்பதற்குள் சர்மி அவனை முந்திக்கொண்டு அவள் அருகில் அமர்ந்தாள்.



"அடியே வாயாடி!.. இந்தப் பக்கம் வாடி!.. புருஷன் பொண்டாட்டிய பிரிச்சிடுவ போலயே!.." என சுந்தரி அவளை செல்லமாக திட்டியவாறு எழுந்து கொள்ள சொல்ல.



"இல்லை அவ இருக்கட்டும்." என்றவன் தனி இருக்கையில் அமர்ந்து கொண்டான்.



அப்பாடா!.. என்றிருந்தது மேகலாவிற்கு எங்கு சுந்தரி சொன்னதும் பக்கத்தில் அவன் இருந்தால் மூச்சுக்கூட விட முடியாமல் திணற நேருமோ?. என்று பயந்திருந்தவள். சர்மி பக்கத்தில் அமர்ந்ததும் அப்போதைக்கு அவள் தான் கடவுளாக தெரிந்தாள்.



அனைவரும் ஏறக்கூடிய பெரிய அளவிலான வண்டி தான் அது. மேகலாவின் பின் புறம் இருந்த இருக்கையில் சுந்தரியும், சர்மியின் அன்னை மலரும் அமர்ந்திருந்தனர். கடசி இருக்கையில் இளவட்டங்கள் இருக்க மயூரனும் முகிலனை போல் தனி இருக்கையில் அமர்ந்து கொண்டான்.



வண்டி செல்ல ஆரம்பித்ததும் பின்புறம் திரும்பிய மேகலா "அத்தை சன்னதி கோவில் ரொம்பத்தூரமா?.." எனக்கேட்க.



" ஏன்னம்மா இப்பிடி கேக்குற?.. யாழ்ப்பாணத்தில இருந்துட்டே இது கூட தெரியவில்லனா எப்பிடி?..." என்க.



அவளுக்கே தான் தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லையே. ஏதோ தங்கையின் பிடிவாதத்தால் தான் கோவிலே செல்வாள். அதும் தூரம் என்றால் நகரவே மாட்டாள். இதில் சன்னதி என்றால் சுத்தம்!...



"நிஜமாவே தெரியாது." என்றவளை வினோதமாக பார்த்தவர்.



"ஏன் நீ ஒரு தடவைகூட போகலயா?.. என்றதற்கு



"இல்லை..." என்று தலையசைத்தவள் "எனக்கு சாமி நம்பிக்கை இல்லை. விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நான் அவனை கும்பிட்டது இல்லை."



"என்னை மன்னிச்சிடுங்க அத்தை.



நான் வாதம் பண்ணுகிறேன்னோ, நாத்தீகம் பேசுகிறேன்னோ நினைக்காதிங்க.



நாம செய்யும் தவறுகளை குறைக்கிறதுக்காகவோ, இல்லனா மறைக்கிறதுக்காகவோ உருவாக்க பட்டது தான் இந்த கடவுள் என்ற சொல்லே.



கண்ணால காணாத எதையும் நான் நம்புறதா இல்லை." என்க.



"என்னடாம்மா இப்படி சொல்ற?." என வருத்தமாக கேட்டவர்,



"கடவுளை பாக்க முடியாட்டிக்கும் உணர முடியும்மா!.. இப்பிடில்லாம் அவனையே சோதிக்கிறது போல பேசக்கூடாதுடா!.." என்றவர் எதுவோ நினைவு வந்தவராக,
"அப்போ நீ கோவிலில்ல பாடினதா உன் தங்கை சொன்னாலே. அப்போ இதுவும் பக்தியின் வெளிபாடு தானே!" என்கவும்.



"இல்லத்தை அவனை மனதால உணருற அளவுக்கு நான் ஞானி எல்லாம் கிடையாது. கோவிலில் பாடினது என் தங்கையோட சந்தோஷத்துக்காக தான். எனக்கு நம்பிக்கை இல்லை என்றதுக்காக அடுத்தவன் நம்பிக்கையை நான் கெடுக்க மாட்டேன். அவ ஆசைக்காக தான் கோவில் போவேன். இப்ப கூட உங்க நிறைவுக்காக தான் வரேன்." என்க.



"நீ எப்படி பேசுறது கஷ்டமா தான் இருக்கு. கடவுள் நம்பிக்கையை யாராலையும் திணிக்க முடியாது. நீயே ஒரு நாள் உணர்ந்துப்ப." என்றவர் அவள் கேட்ட முதல் கேள்விக்கு விடையளிக்கும் விதமாய்



"ஆமாம்மா நீ கேட்டா மாதிரி செல்வச்சன்னதி கோவில் தூரம் தான். கிட்ட தட்ட யாழ் நகரப்பக்கம் இருந்து இருபது கிலோ மீற்றர் வரும்மா. சரி உனக்கு சன்னிதி கோவில் பற்றி என்னெல்லாம் தெரியும்." என்று பொதுப்படையாக கேட்க.



"அவ்ளோ தெரியாது அத்தை. சும்மா சாதாரணமா பூசாரி வாய் கட்டி பூசை செய்வாருனும், எந்த நாள் சரிசனத்துக்கு போனாலும் அடியார்களுக்கு அன்னதானம் சன்னதியான் மடத்தில் சாப்பாடு போடுவாங்கனும் தெரியும்." என்க.



"அவ்வளவு தெரியுமா உனக்கு?." என கேலி பேசியவர்,
"ஆமாம்மா! எப்பவுமே கஷ்டப் படுறவங்களுக்கும் அவனை நாடி வருவோரும்கும் இல்லை என்று சொல்லாமல் அன்னம் தானமா கொடுப்பாங்க. அதனால அந்த முருகனுக்கு அன்னதானகந்தன் என்று பெயர்கூட இருக்கு.



அப்புறம் எதுக்காக அங்க பூசகாரி வாய் கட்டி பூசை செய்யிறாங்க தெரியுமா? அது பெரிய கதைம்மா......... அந்த கோவில் எப்படி தோன்றிச்சு தெரியுமா?..



என்றவர் அந்த ஆலய வரலாற்றை சொல்ல ஆரம்பிக்கவும் அனைத்து இளவட்டங்களும் தங்களது பேச்சை நிறுத்தி விட்டு சுந்தரி சொல்ல போகும் ஆலய சிறப்பை கேற்பதற்கு ஆர்வமானார்கள்.







(சங்கமிப்பாள்......)
 

Balatharsha

Moderator
தொண்டமன் ஆற்றங்கரையில் ஒரு முனிவர் மனதிலே முருகனுக்கு கோவில் கட்டி பூஜித்து வந்தவர் ஆற்றங்கரையிலே சமாதியாகி அந்த இடத்தில் பூவரசமரம் மூளைத்தது.



தினமும் கதிர்காமர் என்பவர் அந்த ஆற்றிலே மீன்பிடித்து அவர் குடும்பத்தை ஓட்டி வந்தார்.



மீன் பிடிக்க போகும் முன் அந்த முனிவர் சமாதியை வணங்கி விட்டு செல்வது வழக்கம்.



அன்றும் அதே போல் சாமதியை வணங்கி விட்டு ஆற்றில் இறங்கி மீன் பிடிக்க



முருகப்பெருமான் அவன் முன் மனித உருவில் தோன்றி



"கதிர்காம இங்கு வா!.." என அழைத்தார். அவனும் அவர் முகத்தோற்றத்தில் வசீகரிக்கப்பட்டு அவர் அழைத்ததும் செல்ல.



அங்கு இருந்த பாதசுவடினை காட்டி



"இது வீரபாகு தேவருடைய பாதச்சுவடிகள். ( சூரன் சம்காரத்தின் போது படை தளபதியாக இருந்த வீரபாகு தேவர் இலங்கை வந்தபோது முதல் முதலில் பதித்த பாதசுவடு.)



பூவரச மரம் உள்ள சமாதியையும் காண்பித்தவர் இதன் பூஜை முறைகளை நீ தான் கவனித்து கொள்ள வேண்டும்." என கட்டளையிட,



கதிர்காமரோ



"ஐயனே நான் சாதாரண மீனவன். ஆகம முறையோ, மத்திரங்களோ அறியாதவன். எப்படி இதன் பூஜையை நான் நடத்துவது." என்க.



"கதிர்காமா!. எனக்கு ஆகமங்களோ, மந்திரங்களோ அது எதுவும் தேவையில்லை. உனக்கு தெரிந்தது போல் மன பக்தியுடன் செய்தாலே போதும்" என கூறி மறைந்தார்.



மனித உருவில் காட்சி தந்து தன்னையே பூஜைக்கு இறைவன் அழைத்த காரணத்தால் அவர் கூற்றின் படியே கதிர்காமனும் மந்திரங்கள் ஓதாது பூஜையினை ஆரம்பித்தான்.



அதன் பிற்படே கறுப்பு துணியினால் வாய்கட்டி பூஜை செய்யும் முறையானது அங்கு நடைமுறைவகிக்கின்றது.



இன்றும் வீரபாகு தேவரின் பாதசுவடும், பூவரச மரமும் அங்கு பாக்கலாம்." என கூறிய சுந்தரி ,



அங்கு சிறப்பு என்னவென்றால் அந்த ஆற்றிலே நீரடி. முருகனுடைய பாதத்தில் நீயே கதி என விழுந்துவிட்டால்


தீராத வியாதிகளை தீர்து சகல செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.



முகூர்த்த நாட்களில் குறைந்தது ஐந்து திருமணங்களாவது நடைபெறும்.



அதுவும் மந்திரங்கள் ஓதப்படாமல் (கப்புறாளை) வாய் கட்டியே மாங்கல்யத்தை மணமகனிடம் தருவார்.



அவ்வளவு சிறப்பு மிக்க தலம்." என சுந்தரி அந்த கோவில்களின் சிறப்புகளை சொல்லிக்கொண்டிருந்தார்.



மேகலாவிற்கும் கதையின் சுவார்ஷியம் பிடித்துப்போக சுந்தரியையே ஆர்வமாக பார்த்திருந்தவள்,



"அப்போ.... மற்ற கோவில்கள்ல அர்ச்சனை செய்யும் போது பெயர் நட்சத்திரம் சொல்லி பூஜை செய்வாங்களே!... இங்க அது எதுவும் இல்லையாத்த?." என்க.



"இறைவனை மனதால நினைத்தாலே முருகன் யாருக்கு என்ன வேண்டுமோ செய்வான் என்பது நம்பிக்கைம்மா!...



அங்க தானே போறோம். எல்லாவற்றையும் நேரடியா பார்க்கும் போது உனக்கே எல்லாம் புரியும்.." என்றவர் அந்த பேச்சுக்ு முற்றுப்புள்ளியிட.



அதோடு அந்த பேச்சை எடுக்கவில்லை யாருமே!



முகிலன் எந்த பேச்சிலும் ஈடுபாடு காட்டவில்லை. சன்னதியான் வரலாறு ஏற்கனவே தெரிந்திருந்ததனால் கண்ணாடி வழியே வீதியையே நோட்டமிட்டபடி வந்தான்.



இதற்கு முன்னர் மேகலா பேசிய நார்த்தீக வார்த்தைகளை கேட்டும் கூட அவன் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.



ஆனால் மற்றவர்களது நம்பிக்கையை தான் கெடுக்க மாட்டேன் என்றதும் அவளை திரும்பி ஒரு மாதிரியாக பார்த்து வைத்ததை அவன் பின்னால் இருந்து முகிலனை போல் எதையுமே கண்டு கொள்ளாது இருந்த மயூரன் கண்டு விட்டான்.



இன்னும் சில பேச்சு வார்த்தைகள் மத்தியில் வண்டி கோவிலை அடைந்தது. கோவிலில் பொங்கலுக்கு பூசகாரியிடம் அனுமதி வாங்கியவர்கள்.



பொங்கலுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய.



மேகலாவையும், முகிலனையும் கோவிலுக்கு மேற்க்கே உள்ள ஆற்றில் குளித்து வருமாறு சுந்தரி அழைக்க. மேகலாவோ உடை எதுவும் எடு்த்து வரவில்லை. எப்படி குளிப்பது?.. என மறுத்தாள்.



மதியை அழைத்த சுந்தரி



"வண்டியில இவங்க இரண்டுபேரோட ட்ரெஸ்ஸும் இருக்கு எடுத்துவா!.. ஆத்தில குளிச்சுட்டு வந்ததுக்கப்புறம் தான் பொங்கல் வைக்கணும்." என கூற.



"நானும் ஆத்தில குளிக்கப்போறேன்." என்று அடம்பிடித்தாள் மதி.



"


ஏய்..! உனக்கு நான் ட்ரெஸ் எடுத்து வைக்கல்ல. அப்புறம் மாத்திக்க எதுவும் இல்லை. பேசாம சொன்னதை செய்!.." என அவசரப்படுத்த,



"யாரு சொன்னது?.. நான் சன்னதி போறோம்னதுமே மாத்து உடை எடுத்து வைச்சிட்டேன்." என்றவாறு வண்டியை நோக்கி ஓடினாள்.



அவள் எடுத்து வந்ததும். கோவிலுக்கு மேற்கு திசையில் இருந்த ஆற்றங்கரைக்கு அழைத்து சென்ற சுந்தரி "பாத்து இறங்குங்கடா!.. படியில பாசி இருக்கும். ஆத்தில தண்ணியும் அதிகமா ஓடுது. பத்திரமா குளிச்சிட்டு வாங்க." என அனுப்பி வைத்தவர் கரையிலேயே நின்று கொண்டார்.



முதலில் முகிலன் ஆத்தில் இறங்க, பின்னே மேகலா இறங்கினாள். சுந்தரி கூறியதை போல் படி கொஞ்சமாக பாசி படிந்து வழுக்கி விடுவதை போல் தான் இருந்தது.
ஆற்று தண்ணீருக்குள் கூட மூன்று படிகள் மறைந்திருக்க படிகளையே பார்த்து இறங்கியவள் என்ன நடந்ததே அவள் கவனிக்க வில்லை.
திடீர்ரென தான் தண்ணீருக்குள் விழுந்து ஆற்றோடு அடிபட்டுக்கொண்டு செல்வதை உணர்ந்து, நீரோடு போராடி மீண்டு வருவதற்காக எதிர் நீச்சல் போட்டவள் மிக குறுகிய காலப்பகுதியில் பெய்த மழை காரணமாக நீரோட்டம அதிகமாக இருந்ததனால் அவளால் நீரோட்டத்தை எதிர்த்து நீச்சல் போட முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் நீந்த முடியாது. தான் இனி இல்லை என்றே முடிவெடுத்து விட்டாள் மேகலா.....



மக்கள் கூட்டம் அதிகமாக இருக்க, ஆற்றில் குளிப்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சுந்தரி திடீர் என இறங்கிய மேகலாவை காணாது திரும்பிய போது அவள் ஆற்றோடு அடித்து செல்வதை கண்டு பதறியவள்.



முகிலனை பார்த்தார். அவன் ஆற்றில் இருந்து அப்போது தான் முங்கி எழுந்திருந்தான்.



அவன் எழுந்தது தான் தாமதம்



"டேய் அப்பு.....! நம்ம மேகலாவை ஆறு அடிச்சிட்டு போகுதடா! இன்னும் கொஞ்சம் தூரம் போயிட்டாள்னா கடலுக்க போயிடுவா. சீக்கிரமா அவளை போய் காப்பாத்துடா!..." என்று முடிப்பதற்குள்.



மேகலாவை திரும்பி பார்த்தவன் அவளை ஆறு அடித்து செல்வதற்குள் தான் காப்பாற்றி விடவேண்டும் என்று வேகமாக நீந்தினான்.
அந்த ஆற்றின் வேகம் கொஞ்சம் அவனையும் நிலை குலைய வைக்கத்தான் செய்தது.



கொஞ்சம் அவன் அசந்தால் அவனையும் கடலுடன் சேர்த்துவிடும் வேகம்.



இருந்தும் மேகலாவை காப்பாறியாக வேண்டும் என்ற வெறி அதையும் தாண்டி இருந்ததனால். ஆறும் அவள் பக்கம் அடித்து சென்றதால் மிக விரைவிலேயே மேகலாவை பிடித்து விட்டான்.



எதிர் நீச்சல் போட்டதனாலோ இல்லை தான் இனி உயிரோடு இல்லை என மனம் தளர்ந்ததனாலோ நீர் அதிகம் குடித்ததனாலோ மேகலா மயங்கி இருக்க, அவள் புடைவை தலைப்பை தன் இடுப்பில் கட்டியவன் ஒரு கையல் அவள் இடையை பற்றி அவளை ஆற்றின் கரைவழியே இழுத்துவந்து கரை சேர்த்தான்.



அவளை தூக்கி வந்து தரையில் கிடத்திய பின்புதான் அத்தனை நேரமும் மேகலா அடித்து செல்வதை வேடிக்கை பார்த்த கூட்டம் கூடிவிட அவர்களை அவ்விடத்தில் நிற்கவிடாது துரத்தியவன்,

"


இவ்வளவு நேரம் காப்பாத்தாம வேடிக்கை தானே பார்த்தங்க?... இப்போது மட்டும் என்ன அக்கறை?.. படம் புடிச்சு லைக் வாங்க போறீங்களா?.." என சீறியவனை அடக்கிய சுந்தரி.



"டேய் அவங்களை விடுடா!... இவளை முதல்ல பாரு!.. கண்ணே திறக மாட்டேன் என்கிறா" என்க.



அவள் கண்களை பிரித்து பார்த்தவன். தன் காதை அவள் நெஞ்சின் மேல் வைத்து பார்த்தான். தாயை அவள் காலை சூடுபரவ தேய்க சொன்னவன், கையை தான் தேய்து விட்டு அவசரமாக கன்னத்தில் அடித்துப்பார்த்தான்.



அவளோ எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து மீண்டிருக்கிறேன், இதற்கெல்லாம் அசருவேனா என அதே நிலையில் படுத்திருக்க.



அவள் வயிற்றில் ஒருகரம் வத்தவன் மறு கரத்தை தன் கை மீதே வைத்து அழுத்தம் கொடுக்க, அவள் வாய்வழியே அருவியாக கொட்டியது நீர்....

"


எவ்வளவு தண்ணி குடிச்சிருக்கா?.." என்று பதறியவர், "இன்னும் அழுத்துடா!.." என்க. அவனும் அழுத்தம் கொடுக்க, கடசி சொட்டு நீரும் வந்தும் அவள் எழுந்த பாடில்லை.



சுந்தரியே பொறுமை இழந்தவராய் புலம்ப ஆரம்பித்து விட்டார்.
"ஐயோ ஆத்தில குளிக்கமாட்டேன்னு சொன்ன பொண்ணை கட்டாய படுத்தி இப்போ இப்படி ஆகிடிச்சே!.." என்க.



அவர் புலம்பலில் சினம் கொண்டு. "கொஞ்சம் பேசாமல் இருக்கிங்களா?..." என கத்தியவன் அவள் கன்னத்தை மறுபடியும் தட்ட அவள் எழுந்தால் தானே.



இம்முறை அவள் உதடுகளை பிரித்தவன் அவள் செவ்விதழை தான் இதழ் கொண்டு மூடி தன் சுவாசமதை அவள் வாய் வழியே செலுத்தி தன் மூச்சு காற்றை அவளுடன் பகிர்ந்து கொண்டான்.



அவள் நெஞ்சதனை அவளுக்க வலிக்காமல் சாதுவாக அழுத்தி விட.



ஒரு புரையேறிய இருமலுடன் எழுந்து கொண்டவள் தொடர்ந்து இருமல் எடுக்கவும் அவள் நெஞ்சை வருடி விட்ட சுந்தரி
"மெதுவ மூச்செடுத்து விடும்மா சரியாகிடும்" என்க.



சாதாரணமாக எழுந்து அமர்ந்தவள் சுற்றி நடப்பது புரிய
"என்னாச்சு அத்த?.. தண்ணி அடிச்சிட்டு போனது தான் நினைவிருக்கு. அப்புறம் எதுவுமே நினைவில்லை." என் வினவ.



அவளை இறுக அணைத்து கொண்டவர் "பயந்தே போய்டேன்டா!... எங்கே உனக்கு......." என்று சொல்ல முடியாமல் முண்டு விழுங்கிய சுந்தரி
"இப்போ உனக்கு ஒன்னுமில்லையே!.. சுவாசிக்க சிரமமா இருக்கா?... இல்லைனா பக்கத்தில டாக்டர் யார்கிட்டயாவது காட்டுவோமா?.." என்க.



"எனக்கு ஒன்னுமில்லை அத்தை. நல்லா தான் இருக்கேன்." என்றதும்.



"ஏன்ம்மா சொல்லித்தானே அனுப்பினேன். படி வழுக்கும் பாத்து இறங்குனு." என்க.



"இல்லத்தை நான் கவனமாய் தான் இறங்கினேன். என்னாச்சுனு தான் தெரியலை." என்றவள்.
"என்னை ஆறு அடிச்சிட்டு தானே போச்சு அப்புறம் எப்பிடி நான் இங்க?.."



"முகிலன் தான்மா தூக்கிட்டு வந்தான். நீ மயக்கமாகிட்டதனால உனக்கு தெரியல"



அந்த முருகன் தான் காப்பாத்தி இருக்காரு. வாங்க போகலாம்." என்றவர்
"இந்த விஷயம் இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்டா! அப்பாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆகிடும்.



எல்லா வேண்டுதலும் முடியட்டும் பிறகு போகும் போது சொல்லிக்கலாம்." என்றவர். அப்போது தான் மதியே நினைவில் வந்தாள்.



"இவ எங்க போயிட்டா?... இவ்வளவு கலவரத்திலையும் இவளுக்கு எதுவும் தெரியாத என்ன?.."



என மதியை காணாது புலம்பியவர்
"அப்பு..! நீ இவ கூட இரு!.. நான் மதி எங்கன்னு பாத்திட்டு வரேன்." என்று ஆற்றை நோக்கி நடக்க.



மேகலாவையே முறைத்துக்கொண்டிருந்தவன், சுந்தரி விலகியதும்,



"உனக்கு அறிவே இல்லையா?.. எங்க போனாலும் உனக்கு கூட்டத்த கூட்டுறது தான் வேலையா?.. அது தான் படியில பாசி இருக்கென்னு தெரியுதுல்ல. காலை பாத்து வைச்சாத்தான் என்ன?. கூட்டத்த கூட்டி நாலு நாளையுக்கு நாடு பூரா உன்னை பத்தியே பேச வைக்கலாம்ன்னே கனவு காண்றியா?..." என குரலில் இறுக்கம் காட்டி கேட்க.



அவன் அவ்வாறு கேட்டதும்
"இதெல்லாம் தானாவே நடக்கிற ஒரு விபத்து. இதில் நான் என்ன செய்தேன்?... யாராச்சும் வேணும்ன்னு ஆத்தில அடிபட்டு போவங்களா?...
எங்கேயோ இருந்து வந்து தொண்டமனாற்றில முத்தியடையணும்ன்னு தான் என் வேண்டுதலா என்ன?... லூசு மாதிரி பேசுறான்.



ஏதோ பல தடவை கூட்டத்தை கூட்டினமாதிரியே கத்திட்டிருக்கிறது." என நினைத்தவள். மண்டபத்தில் அவளை சுற்றவர நின்று ஏசியவர்களின் காட்சி மன கண்ணில் பட.



ஆமா இவரு பெரிய மன்மதன். இவரை நாம கவருறத்துக்கு கூட்டத்தை கூட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். சிடுமூஞ்சி உனக்கு கழுத்த நீட்டிட்டு தினமும் என்ன நடக்குமோனு நான் தானே பயந்திட்டிருக்கேன் . என மனதினுள்ளே திட்டியவள்.



"சாரி...... நான் வேணும்ன்னு பண்ணல்ல. தெரியாம வழுக்கிடுச்சு." என்றாள்.



அவள் முகத்தினில் தெரிந்த அத்தனை உணர்வுகளையும் கண்டவனாளா அவள் மனதில் ஓடியதை கணிக்க முடியாது?. இருந்தும்,



"ம்ம் இனியாவது பாத்து நடந்தக்கோ!... எப்பவும் உன்னை காப்பாதிட்டு நான் இருக்க மாட்டேன்." என்றதோடு அமைதியாகிவிட..



மதியை தேடிவந்த சுந்தரி அவள் எதுவும் அறியாமல் உள்ளாசக் குளியல் குளிப்பதை கண்டு.



"மதி மேல வா!.. நாங்க கிளம்ப போறோம்." என்க.



"கொஞ்சம் இருங்கம்மா!... இன்னும் பத்து நிமிஷம்." என கெஞ்சியவளிடம்.



"இருக்கிற விசருக்கு போட்டேன்னா!... இங்க என்ன நடந்திட்டிருக்கு.., அது எதுவும் தெரியாம நீ அங்க குஷியா நீச்சல் போட்டிட்டா இருக்க?... மரியாதையா மேல வாடி!... அப்புறம் உனக்கும் ஏதாவது ஆகிடப்போகுது." என திட்டி அழைக்க.



"உன்கூட ஒரே ரோதனமை்மா." என்றவாறு மேலே வந்து உடை மாற்றும் அறை நோக்கி செல்ல.



"மேகலாவையும் கூட்டிட்டு போடி!.." என்றவரை முறைத்தவள்.



"வேணும்னா அந்த மேடத்தை நீ கூட்டிட்டு வா!... என்கிட்ட அவளை விடாதா. அப்புறம் ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது." என்று நில்லாது சென்று விட்டாள்.



முகிலனிடம் அவன் உடையை கொடுத்த சுந்தரி,
"மேகலா விஷயத்தில இவ இந்த மாதிரித்தான் நடந்துக்குறா. நீ போ!.. நான் இவளை அழைச்சிட்டு போகிறேன்." என்று அவளை அழைத்து சென்றார்.



தயாராகி வந்தவர்கள்,
தனியாக இருந்த பிள்ளையார் சன்னிதானத்தின் முன்புறம் தான் பொங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் எல்லாம் தயார் நிலையில் வைத்திருந்த மற்றவர்கள், முகிலனிடம்

"பானையை அடுப்பில ஏத்திட்டேன்னா மீதியை நாங்க பாத்துப்போம். அரிசி போட மட்டும் நீங்க வந்தா போதும். அதுக்குள்ள மேகலாவை அழைச்சிட்டு உள்ள போய் முருகனை கும்பிட்டு வந்துவிடலாம்." என அவன் தந்தை சொல்ல.



அவர் சொற்படியே அடுப்பை கற்பூரம் கொண்டு பற்ற வைத்தவன் பானையை அடுப்பில் ஏற்றி விட்டு மேகலாவிடம்
"வா!... என்ற ஒற்றை சொல்லோடு முன்னே நடக்க அவளும் அவன் சொல்லுக்கு கட்டு பட்டு அவன் பின்னே சென்றாள்.



கரு மூர்த்தியான முருகப்பெருமான் அங்கு வேல் வடிவத்தில் காட்சி கொடுக்க. கண் மூடி வேண்டியவனை பார்த்துக்கொண்டிருந்த மேகலா, இவனுக்குள் இப்படி ஒரு பக்தியா?..
சாமி பக்தி இருக்கிறவங்க இவனை போல முரடனாவா இருப்பாங்க?.. என தனக்குள் கேள்வி எழுப்பியவள்,



அது சரி இவன் தான் மனிதர்கள்லயே விசித்திர மனிதனாச்சே!.. இதில் என்ன அதிசயம்?.. என நினைத்து அவனையே வழியசையாது பார்த்திருக்க.



அவன் கண்களை திறந்தது அவள் கருத்தில் படவில்லை. சாதாரனமாக எப்பவும் கோவில் வந்தால் வேடிக்கை பார்ப்பதை போல் கைகளை கட்டி நின்றவளை கண்டவன்.



"என்ன என்னையே பாத்திட்டிருக்க?. சாமி கும்பிடு!.." என்று அதிகாரமாக வந்த குரலில் தன்னையே அறியாது கண்களை மூடி கைகளை குவித்து முருகன் முன் நின்றாள்.



கடவுளே இல்லை என வரும்போது சொன்னவள் தன் மிரட்டலில் கண்மூடி நிற்பதை கண்டு சிறு புன்னகை சிந்தியவன் இவளை இதே போல மிரட்டியே வைச்சிருந்தா தான் தன் வழிக்கு வருவாள். என நினைத்துக்கொண்டான்.



சிறிய கோவிலாக இருந்தாலும் பார்க அழகாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்ச்சம் என ஆலயத்துக்குண்டான சிறப்புக்கள் அனைத்தும் நிறைந்திருந்தது.



முகிலன் பின்னால் சென்றவள் அவன் செய்வதை போல் அனைத்தையும் செய்தாள். அவன் வந்து முன்புற சன்னிதானத்தில் அமர அவன் அருகில் நின்று கொண்டவளை நிமிர்ந்து பார்த்தவன்
"ஏன் உன்னை இருக்க சொல்லி சொல்லணுமாே?.." என்ற. அவன் குரலில் சட்டென அவன் அருகிலேயே இடிப்பதைப்போல் அமர்ந்து கொண்டாள்.



சிறிது நேரத்தில் எழுந்து,
"வா!... பொங்கலுக்கு அரிசி போடணும்." என கூறி அழைத்து சென்றான்.
இருவரும் அங்கு செல்லும் நேரம் பாலும் பொங்கி வழிய சரியாக இருந்தது.



அரிசியை களைந்து வைத்த சுந்தரி இருவரையும் மூன்று முறை பானையை சுற்றி போட சொல்லவும் அவர் சொன்னதை போலவே செய்தனர்.



பொங்கல் எல்லாம் முடிந்து அங்கு வரும் பக்தர்களுக்கும் அதை பகர்ந்து தாமும் உண்டு வீடு சென்றனர்.





சங்கமிப்பாள்............
 

Balatharsha

Moderator
அத்தியாயம் 18

செல்லும் வழியினில் இருந்த புடவைக்கடையின் முன் காரை நிறுத்தும்பி சுந்தரி கூற.

"எதுக்கும்மா இங்க?" என தாயிடம் முகிலன் வினவ..

"மருமக மாத்திக்க வேற துணி இல்லடா!.. அதான் இங்கேயே அவசர தேவைக்கு இரண்டு எடுத்துட்டுபோயிடலாம்." என்றதும்.

"எதுக்கும்மா இங்க எடுத்துகிட்டு?.. அப்புனமா எங்க கடையிலையே எடுத்திடலாம். ரொம்ப அசதியா இருக்கு. நேர வீட்டுக்கு வண்டியை விடுங்க." என்க.

" என்னடா பேச்சு பேசுற?...... நாங்க எல்லாரும் குத்தாட்டம் போடுற நிலையிலயா இருக்கோம்?..
நீ பாட்டுக்கு அசதி அது இதுன்னு போய் தூங்கிடுவ.
இவ போனதும் என்னத்தை மாத்திப்பா?...
வந்த களையோட கடைக்கு போக சொல்கிறாயா?... இப்போ கூட அவள் உடுத்திருக்க புடவையே சர்மியோடது தான். ஏதோ அவள் ட்ரெஸ் இவளுக்கு போதும் என்றதனால இன்னைக்கு சமாளிச்சாச்சு.
மண்டபத்தால வந்தவள அவ வீட்டுக்கு கூட அனுப்பல. அனுப்பி இருந்தாலும் வீட்டில் இருக்கிற தன்னோட உடைகளை எடுத்து வந்திருப்பா.
இப்போ என் மருமகள் எதுவும் இல்லாதவ போல சர்மியோட புடவையை மாத்தி கட்டியிருக்கா?... என அவனை கோபமாக திட்டியவர்,
டிரைவர் புறம் திரும்பி. "நீ நிறுத்துப்பா!..." என கட்டளையுடன் நிறுத்திக்கொண்டார்.

எல்லா இடங்களிலும் பெரிய அளவிலான புடவை கடைகள் இருப்பதில்லை. ஒரு சில இடங்களில் மாத்திரமே அவ்வாறான பெரிய அளவிலான கடைகள் இருக்கும்.
யாழ்ப்பாண நகரப்பகுதியில் மாத்திரமே பெரிய அளவில் எந்த துறை நிறுவனங்களையும் பார்க்கலாம்.

இவர்கள் செல்லும் வழியில் அப்படி பெரிய அளவில் இவர்கள் எதிர்பார்ப்பதை போல் கடைகள் எதுவும் இல்லாத காரணத்தினால். சற்று பெரியளவில் இரண்டு தளங்களை கொண்ட புடவை நிலையத்துற்கு முன் வண்டி நிறுத்த பட்டது.

மேகலாவை தன்னுடன் வருமாறு அழைத்த சுந்தரியை தடுத்த சர்மி.

"நீங்க எதுக்கு சித்தி?..... நானும் அண்ணியும் போயிட்டு வரோம்." என்க.

"எதுக்குடி!.. நாங்க வந்தா உன்னை என்ன செய்திடுவோம்ன்னு என்னை தடுக்கிற?. நாங்க எல்லாரும் தான் வருவோம்." என்று சுந்தரி சொல்ல.

"இல்லம்மா... அவங்க இரண்டு பேருமே போய் வரட்டும். ஒரே களைப்பாக இருக்கு. அதோடு இது எங்க கடையளவுக்கு விசாலமா எல்லாம் இல்லை. இவ ஒருத்திக்கு ட்ரெஸ் எடுக்க எல்லாரும் போனால் அவங்க தொழில் கெட்டிடும். அவங்களே போய் வரட்டும்." என்க.

மகனில் பேச்சில் உள்ள உண்மை புரிந்தவர்,
"சரிடி!... நீயே இவளை கூட்டிட்டு போய் வா!" என சம்மதம் வழங்க.
மேகலாவை அழைத்து கொண்டு சர்மி உள்ளே சென்றாள்.

இரு தளங்கள் மாத்திரமே இருந்தது. கீழ் தளம் ஆண்களுக்குரிய ஆடைகளும்.
மேல்தளத்தில் பெண்களுக் குரியவையும் இருக்க.
பெண்களுக் குரியவை எங்கு என்று விசாரித்து மேலே சென்றனர் இருவரும்.

சர்மி மேகலாவுக்கு தானே உடையை தேர்வு செய்கிறேன் என்க.

"சரி சர்மி!.. ஆனா ரொம்ப கிரான்டும் வேண்டாம், அரைகுறையான ட்ரெஸ் வேணாம்." என்க.

"நல்ல பட்டிக்காட்டான் அண்ணி நீங்க!.. சரி வாங்க கொஞ்சம் நல்லதாவே எடுக்கலாம்." என்றவள்,
மூன்று சாதாரண காட்டன் புடவையில் அதுவும் மேகலாவின் தேர்வில் எடுத்தவள்.

"இனி என்னோட முறை." என்று அங்கு தொங்க விடப்பட்டிருந்த ஒரு சில டாப்பை காட்டினாள் சர்மி.
அதில் நீளமானதை எடுத்தவள் "இது எனக்கு ஓகே." என்றவும் சரி என மீதியை பார்க்க இம்முறை மதி தேர்வு என்பதால் கடை பூராகவும் தேடலானாள்.

இங்கு இவர்களை காணாது பொறுத்து பொறுத்து பார்த்த மதியோ.
"ம்மா....! என்னம்மா இதுங்க செய்யுதுங்க?.
போய் எவ்வளவு நேரமாகுது. வருதுங்களா பாருங்க?...
வரவர இந்த சர்மியும் இவகூட சேர்ந்து ரொம்பத்தான் ஆடுகிறா" என சினத்தோடு புலம்பியவளிடம்.

"எதுக்கு இப்போ என் மருமகளை வம்புக்கு இழுக்கிற?. வந்து முழுசா ஒரு நாள் ஆகல்ல. அதற்குள் நாத்தனார் கொடுமைய ஆரம்பிச்சிடாத. உனக்கு ட்ரெஸ் எடுக்கும் போது மாத்திரம் ஒரு நாள் ஆனாலும் வரமாட்ட,
அவங்க இப்போ தானே போனாங்க. வருவாங்க இரு!" என்க.

"ம்மா!.. என் அவசரம் புரியாம பேசாதிங்க." என நெளிபவளை கண்டவர்..

"எதுக்கு இப்போ நெளிஞ்சிட்டிருக்க?.. என்ன உன் அவசரம்.?..." என்றவரிடம்.
தன் கையின் கடசி விரலை மாத்திரம் உயர்த்தி காட்டியவளிடம்.
"இதுக்கு தான் இந்த கத்தலா?.... அது தான் கடைக்குள் அவங்க நிற்கின்றார்களே!... நீயும் போகவேண்டியது தானே!" என்றார்.

அவளுக்கும் இருந்த அவசரத்தில் இதற்கெல்லம் கூச்சம் பார்த்தால் இங்கேவே போய் விடவேண்டியது தான். என நினைத்தவள் வேகமாக உள்ளே சென்றாள்.

அங்கிருந்த பெண்ணிடம் பாத்ரூம் எங்கே என்று கேட்க.
மேலே கைகாட்டியதும் மேலே வந்தவள். சர்மியோடு, மேகலா வாதாடிக்கொண்டிருப்பதை கண்டாள்.

அதாவது சர்மியோ ஒரு டாப்பை எடுத்துக் காமித்து "இதை எடுப்போம் அண்ணி உங்களுக்கு அழகாய் இருக்கும்." என்க.
மேகலாவோ அதை பார்த்ததும் முகத்தை சுழித்து
"எனக்கு இதெல்லாம் பிடிக்காது சர்மி. வேணும்னா நீ எடுத்துக்கோ உனக்கு அழகா தான் இருக்கும்." என்றவள் "என்னை கட்டாய படுத்தாத சர்மி." என மறுக்க.

"அண்ணி!.. முன்னாடியே உங்களுக்கு நான் சொல்லிட்டேன்.
இது என்னோட செலக்ஷன் தான். இதை நீங்கள் எடுத்தே ஆகணும். பிளீஸ் அண்ணி...! எனக்காக!...."என கெஞ்ச.

அவளுக்காக அந்த உடையை எடுப்போமா?.. என்று மீண்டும் அந்த உடையை பார்த்தவளுக்கு சுத்தமாக அது பிடிக்கவில்லை.
அதில் முழுவதும் களி நூள் வேலைபாடுகளுடன் உடலாேடு ஒட்டும் துணியின் தன்மையும், உயரம் கூட குறைவாக கோணலாக வெட்டப்பட்டு இருக்க. எப்படி அவளாள் அதை வாங்கி கொள்ள மனம் வரும். அப்படியான உடையை இதுவரை அவள் தொட்டு கூட பார்த்ததில்லை.

"எனக்கு பிடிக்கல்லனா விடு சர்மி!.. எதுக்கு அடம் பிடிக்கிற?." என்றவளிடம்.

"எதுக்காக உங்களுக்கு அது பிடிக்கல்ல." என மறு கேள்வி கேட்க.
அவளும் அதன் காரணங்களை கூறவும்.

"என்ன அண்ணி நீங்க?.. உங்க உடம்பொன்னும் ரொம்ப அகலமில்ல. அதனால இறுக்கமா இருக்காது. உங்க பாடிக்கேத்தா மாதிரி அழகாக இருக்கும். அப்புறம் இதை போட்டுக்கிட்டா உயரமா தெரிவிங்க?... அப்போ தான் அண்ணனோட உயரத்துக்கு மேச் ஆவிங்க." என்று மேகலா மனதை மாற்ற அவள் முயற்சி செய்ய.

"எனக்கு வேணாமே சர்மி!." என அவளும் அடம்பிடிக்க.
"சரி உங்களுக்கும் வேணாம். எனக்கும் வேணாம்.
இதை முதலில் போட்டு காட்டுங்க.
நீங்க சொன்னது போல இருந்தா நானே அதை வைச்சுடுறேன்."என்க.

"நிஜமாவா?.. அப்புறம் நீ பேச்சு மாறமாட்டாயே!.." என்றவள் அதை எடுத்து கொண்டு சற்று தூரம் செல்ல.

அதை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தவள் மதி, இவர்கள் பேச்சில் கடுப்பாகி பாத்ரூமில் நுழைந்து கொண்டாள்.
மேகலாவே சிறிது தூரம் சென்றதும் தான் நினைவு வந்தவளாய், ட்ரயல்ரூம் எங்கிருக்கிறது என்று கூட கேட்க்காமல் இவ்வளவு தூரம் வந்து விட்டேனே!.. என நினைத்தவள். அருகில் அவசரமாக வாடிக்கையாளருக்கு காட்டும் துணிக்கட்டுடன் சென்ற பெண்ணை மறித்து ட்ரயல்ரூம் எங்கிருக்கிறது?. என் கேட்க..

"சாரிக்கா!.. இங்கு ட்ரயல் ரூம்னு எதுவும் இல்லை. வேணும்னா நீங்க பாத்ரூம் தான் பாவிக்கணும். பட் இப்போ தான் ஒரு கேர்ள் உள்ளே போனாங்க.
இதுதான் அது." என்று காட்டியவளிடம். "மாத்துவதற்கு வேறு இடமே இல்லையா?.." என்க.
யோசித்தவள்.

"இருக்குக்கா!.. பட் உள்ள இருட்டா இருக்கும். பரவாயில்லனா ஸ்ராக் வைக்கின்ற சின்ன ரூம் இருக்கு அங்க போறிங்களா?..." என்க.
யோசித்தவள் முகிலன் அசதியாக இருக்கு என சொன்னது நினைவுவர.

பாத்ரூமை பார்த்து கொண்டிருந்தால் நேரமாகிவிடும்.
"சரி சிஸ்டர் அங்கே கேமெரா எதுவும் இல்லையே!.." என கேட்க.

"நீங்க வேற அக்கா!.. கடைக்கே கேமெரா இல்லை.
அந்த இருட்டு அறையிலயா இருக்க போகுது.?........ ஒன்னுமில்லை பயப்படாமல் போங்க. உள்புற தாப்பாள மறக்காம போட்டுக்கங்க." என கூறி அந்த அறையை காட்டி விட்டு சென்றுவிட,

மேகலாவும் நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல் உள்ளே நுழைந்து கொண்டாள்.
அந்த கடையின் தோற்றம் அதுதான்.

முதலில் வாடிக்கையாளர் உடை தேர்வு செய்யுமிடம், அதன் பின் காசு கவுண்டர், சின்ன ஓடையாய் ஒடுங்கி உள்ளே சென்றால் பாத்ரூம். அதை தாண்டி கடசியாகவே அந்த பெண் கூறிய ஸ்ராக் ரூம் என்றிருந்தது.
இவர்களது உரையாடலானது பாத்ரூம் முன்பே நடந்து முடிந்து.

கொண்டு வந்த உடைக்கு மாறியவள், சர்மியிடம் காட்டுவோம். என கதவை திறக்க, எங்கு அது திறபட்டால் தானே!. தாள்ப்பால் தான் சரியாக திறபடவில்லையோ என நினைத்து அதை முடிந்தளவு இழுத்து, இப்போதும் திறந்து பார்த்தாள். முடியவில்லை......
காற்று கூட உள் நுழையாத அறை. கதவும் திறக்க மாட்டேன் என்கிறது.
ஒரு புறம் பதட்டம், மறுபரம் வியர்வை. நேரமாகிறது என்ற பயம் வேறு.

கதவை பல முறை தட்டி பார்த்து விட்டாள். யாரும் அந்த புறம் வந்ததற்கான சத்தம் கூட இல்லை. ஆனால் பெரிதாக ஒலித்த எப்.எம் வானொலி சத்தம் அவளின் காதுகளில் இப்போது சிறிதாய் விழுந்தது.

எதுவும் இப்போது செய்ய முடியாது. யாராவது இந்த பக்கம் வந்தால் தான் எனக்கு உதவ முடியும். என்ன நடந்திருக்கும் கதவிற்கு. பூட்டும் போது சாதாரணமாக தானே இருந்தது. எந்த கோளாறும் போல் தெரியவில்லை.

இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்தால் இருட்டிலே காற்றுமில்லாமல் மூச்சு முட்டி செத்து விடுவாள் போல் இருந்தது மேகலாவிற்கு.

"இந்த சர்மியாவது போனவளை காணவில்லை என்று வந்து பாக்கிறாளா?.. எந்தத் துணிய புரட்டிக் கொண்டிருக்கிறாளோ.?.... யாராவது வாங்களேன். எனக்கு மயக்கம் வந்துடும் போல் இருக்கே!" என்று மீண்டும கதவை தட்டிப்பார்த்தாள். பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

இங்கு சர்மியோ மேகலாவை காணாது "எங்கே போனாங்க?.. இவ்வளவு நேரமாக காணலையே?..". என அவள் சென்ற திசை நடக்கவும் அவளை கண்ட மதி.
"என்ன சர்மி!... இன்னுமா துணி எடுத்து முடியல்ல?..." என்க.

"முடிஞ்சுது மதி!.. அண்ணி ட்ரயல்ரூம் போனாங்க. இன்னமும் காணல்ல." என கூற.

"என்ன சொல்ற சர்மி?.. இங்க தான் ட்ரயல்ரூமே இல்லையே!.. அப்புறம் எப்பிடி உன் அண்ணி போக முடியும்?.." என்க.

"உனக்கு இங்க ட்ரயல்ரூம் இல்லனு எப்படி தெரியும்?.." என சர்மி கேட்க.

"ஏய் நான் பாத்ரூம்ல இருக்கும் போது யாரோ இரண்டுபேர் பேசினத கேட்டேன். அத வைத்து தான் சொல்லுறேன்.
இங்க ட்ரயல்ரூமே இல்லை." என்றவளை நம்பாத சர்மி கவுண்டரில் இருந்த பெண்ணிடம்,

"இங்கு ட்ரயல்ரூம் எங்கிருக்கு?." என கேட்க.

"சாரி மேடம்!.. இங்க அப்பிடி எதுவுமே இல்லை. இது சின்னகடை என்கிறதனால அதெல்லாம இல்ல." என கூற.

"அப்போ அண்ணி எங்கே போயிருப்பாங்க?..." என கேட்டவள்.

"ஒருவேளை பாத்ரூம் போய் மாத்துவாங்களோ?..." என்றதும்.

"அதுக்கு வாய்ப்பே இல்லை.!.. இப்போ தான் நான் அங்கிருந்து வரேன். என்னை தவிர அங்க எந்த ஈ, எறும்பு கூட இல்லை.
ஒருவேளை உன் தொல்லை தாங்காமல் உன் அண்ணி கீழே போயிருப்பாங்காே?.. என்னமோ!..." என கேலி பேச.

"இல்லடி!.. நான் இங்கே தான் இருக்கேன். அப்புறம் எப்பிடி அவங்களால் என்னை தாண்டி போக முடியும்?.." என்க.

"உன் தொல்லை தாங்காம உன்னை ஏமாத்திட்டு போயிருப்பாங்க. வா!..." என்று அவளை கீழே அழைத்து போனவள் அங்கும் அவளை காணவில்லை என்றதும்.
"என்ன மதி!... இவங்க எங்கே போயிட்டாங்க?.
இங்கேயும் காணலையே!...
இப்போ எங்க தான் இவங்கள போய் தேட முடியும்?..
அண்ணா வேற திட்டபோறரு." என பதற.

" சும்மா பதறாம வா!.. ஒரு வேளை அங்கயும் போயிருக்க வாய்ப்பிருக்கு." என்று வண்டியை நோக்கி சென்றனர்.

" மதி இங்கேயும் அவங்க இல்லன்னா அம்மா என்னை கொண்டிடுவாங்கடி என்ன செய்யறது." என்க.

" புலம்பாமல் வா!.. எப்பிடியும் இங்கே தான் வந்திருப்பா" என்றவள் வண்டியில் ஏறி பார்க்க. அங்கும் அவள் இல்லை.
இருவரையும் பார்த்த சுந்தரி அவர்கள் பின்னால் மேகலாவை எதிர்பார்த்திருக்க அவளை காணாது.

"இரண்டு பேரும் வரீங்க. எங்க என் மருமக.?" என கேட்க.

"அவளை தான் நாங்களும் தேடிட்டு வரோம்மா!" என்று மதி கூற.

அவளை நம்பாது சர்மியை திரும்பிப்பார்த்தார் சுந்தரி.
"ஆமா சித்தி!.. அண்ணி ட்ரயல்ரூம் போறேன்னு போனாங்க. பட் அங்க ட்ரயல் ரூமே இல்ல சித்தி!..
அங்கே தேடிட்டு, அப்புறம் கீழேயும் தேடிப்பாத்தோம் எங்கேயுமே இல்ல. அதுதான் ஒரு வேளை இங்கே வந்திருப்பாங்களோனு இங்கே வந்து பாக்க இங்கேயும் இல்லை.
அப்போ எங்கே தான் போயிட்டாங்க?.." என்று சர்மி அழுபவள் போல் வினவ..

"அவளா?... அவளோட தங்கை மாதிரி எங்கயாச்சும் ஓடிப்போயிருப்பா" என்ற மதியை
"என்னடி பேச்சு பேசுறா நீ?.. அண்ணி என்ற மரியாதவேண்டாம்." என அடக்க.

"யாரை அண்ணி என்றீங்க?.. திடு திடுப்பென வந்து நான் தான் அண்ணினா உடனே அவளை என் அண்ணின்னு ஏத்துக்கனுமா?.."
என எதிர்த்து வாயாட..

அவள் பேச்சை கேட்டவனாே, "இங்க என்ன நடந்திட்டிருக்கு?.. உன்கிட்ட பேசிட்டிருக்கிறது பெரியவங்க." என முகிலன் மதியின் மேல் அனல் பார்வை வீசியவாறு குரலை உயர்த்த.

அவன் பார்வையில் அமைதியானாள் மதி.
"ம்மா வாங்க முதல்ல என்னாச்சுனு பார்க்கலாம்." என வண்டியிலிருந்து இறங்கிய முகிலன் பின்னால் சர்மி, சுந்தரி மதி என கடைக்குள் நுழைந்தனர்.

அவன் எங்கே என்று சர்மியிடம் கேட்க.
"மேலே" என்றதும்.
மேல் ஏறி சென்றவன். அங்கு நின்றவர்களிடம் "ட்ரயல்ரூம் எங்கே?.." என்றதும்.

"சாரி சார்.... இங்கே அப்பிடி எந்த அறையும் இல்லை." என சர்மிக்கு சொன்ன பதிலே அவனுக்கும் சொல்லப்பட்டது.

"ட்ரெஸ் மாத்திரேன்னு எந்த பக்கம் போனான்னு தெரியுமா சர்மி?.." என்க.

அவள் சென்ற திசையை காட்டியவள் திசையில் வேகமாக நடந்தான் முகிலன்.
இங்கு மேகலாவின் நிலையோ மோசமாகியது. வியர்த்து கொட்டி வெளிச்சம், காற்று கூட இல்லாமல் மயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டவள்
வெளியில் நடையின் சத்தம் உணர்ந்து
தனக்கு யாராவது உதவுவார்கள் என நினைத்தவள் கதவை வேகமாக தட்டினாள்.

அங்கு வந்தவனோ அந்த இடம் பூராகவும் தேடிவிட்டு பாத்ரூம் தாண்டும் போது கதவும் தட்டப்பட அதன் அருகில் சென்றவன்.

"மேகலா!..." என சந்தேகமாக குரல்கொடுக்க.
அவன் குரலுக்கு ம்ம்... என்ற முனகல் சத்தம் வரவும் கதவை தள்ளியவனுக்கு அது திறபடாமல் முரண்டு பிடிக்க.

"எதுக்கு மேகலா உள்ளயே நிக்கிற?.. வெளிய வா!.. என்றவனுக்கு.

"என்னால கதவ திறக்க முடியல்ல." என இயலாமையாக வந்தது அவளது குரல்.

"என்னது...! உன்னாலயும் முடியலையா?.." என்ன காரணம் என ஆராய்ந்தவன் வெளிப்புற தாப்பாளை அப்போது தான் பார்த்தான்.
அதை யாரோ வெளிப்புறமாக போட்டிருப்பதை கண்டு
அதை இழுத்து கதவை தள்ளியவன் அவள் நிலை கண்டு அருகில் வர அவன் மேல் மயங்கி சரிந்தாள் மேகலா...
சங்கமிப்பாள்........
 

Balatharsha

Moderator
அத்தியாயம் 18

செல்லும் வழியினில் இருந்த புடவைக்கடையின் முன் காரை நிறுத்தும்படி சுந்தரி கூற.

"எதுக்கும்மா இங்க?" என தாயிடம் முகிலன் கேட்க..

"மருமக மாத்திக்க வேற துணி இல்லடா!.. அதான் இங்கேயே அவசர தேவைக்கு இரண்டு எடுத்துட்டுபோயிடலாம்." என்றதும்.

"எதுக்கும்மா இங்க எடுத்துகிட்டு?.. அப்புறமா எங்க கடையிலையே எடுத்திடலாம். ரொம்ப அசதியா இருக்கு. நேர வீட்டுக்கு வண்டியை விடுங்க." என்க.

" என்னடா பேச்சு பேசுற?...... நாங்க எல்லாரும் குத்தாட்டம் போடுற நிலையிலயா இருக்கோம்?..
நீ பாட்டுக்கு அசதி அது இதுன்னு போய் தூங்கிடுவ.
இவ போனதும் என்னத்தை மாத்திப்பா?...
வந்த களையோட கடைக்கு போக சொல்கிறாயா?... இப்போ கூட அவள் உடுத்திருக்க புடவையே சர்மியோடது தான். ஏதோ அவள் ட்ரெஸ் இவளுக்கு போதும் என்றதனால இன்னைக்கு சமாளிச்சாச்சு.
மண்டபத்தால வந்தவள அவ வீட்டுக்கு கூட அனுப்பல. அனுப்பி இருந்தாலும் வீட்டில் இருக்கிற தன்னோட உடைகளை எடுத்து வந்திருப்பா.
இப்போ என் மருமகள் எதுவும் இல்லாதவ போல சர்மியோட புடவையை மாத்தி கட்டியிருக்கா?... என அவனை கோபமாக திட்டியவர்,
டிரைவர் புறம் திரும்பி. "நீ நிறுத்துப்பா!..." என கட்டளையுடன் நிறுத்திக்கொண்டார்.

எல்லா இடங்களிலும் பெரிய அளவிலான புடவை கடைகள் இருப்பதில்லை. ஒரு சில இடங்களில் மாத்திரமே அவ்வாறான பெரிய அளவிலான கடைகள் இருக்கும்.
யாழ்ப்பாண நகரப்பகுதியில் மாத்திரமே பெரிய அளவில் எந்த துறை நிறுவனங்களையும் பார்க்கலாம்.

இவர்கள் செல்லும் வழியில் அப்படி பெரிய அளவில் இவர்கள் எதிர்பார்ப்பதை போல் கடைகள் எதுவும் இல்லாத காரணத்தினால். சற்று பெரியளவில் இரண்டு தளங்களை கொண்ட புடவை நிலையத்துற்கு முன் வண்டி நிறுத்த பட்டது.

மேகலாவை தன்னுடன் வருமாறு அழைத்த சுந்தரியை தடுத்த சர்மி.

"நீங்க எதுக்கு சித்தி?..... நானும் அண்ணியும் போயிட்டு வரோம்." என்க.

"எதுக்குடி!.. நாங்க வந்தா உன்னை என்ன செய்திடுவோம்ன்னு என்னை தடுக்கிற?. நாங்க எல்லாரும் தான் வருவோம்." என்று சுந்தரி சொல்ல.

"இல்லம்மா... அவங்க இரண்டு பேருமே போய் வரட்டும். ஒரே களைப்பாக இருக்கு. அதோடு இது எங்க கடையளவுக்கு விசாலமா எல்லாம் இல்லை. இவ ஒருத்திக்கு ட்ரெஸ் எடுக்க எல்லாரும் போனால் அவங்க தொழில் கெட்டிடும். அவங்களே போய் வரட்டும்." என்க.

மகனில் பேச்சில் உள்ள உண்மை புரிந்தவர்,
"சரிடி!... நீயே இவளை கூட்டிட்டு போய் வா!" என சம்மதம் வழங்க.
மேகலாவை அழைத்து கொண்டு சர்மி உள்ளே சென்றாள்.

இரு தளங்கள் மாத்திரமே இருந்தது. கீழ் தளம் ஆண்களுக்குரிய ஆடைகளும்.
மேல்தளத்தில் பெண்களுக் குரியவையும் இருக்க.
பெண்களுக் குரியவை எங்கு என்று விசாரித்து மேலே சென்றனர் இருவரும்.

சர்மி மேகலாவுக்கு தானே உடையை தேர்வு செய்கிறேன் என்க.

"சரி சர்மி!.. ஆனா ரொம்ப கிரான்டும் வேண்டாம், அரைகுறையான ட்ரெஸ் வேணாம்." என்க.

"நல்ல பட்டிக்காட்டான் அண்ணி நீங்க!.. சரி வாங்க கொஞ்சம் நல்லதாவே எடுக்கலாம்." என்றவள்,
மூன்று சாதாரண காட்டன் புடவையில் அதுவும் மேகலாவின் தேர்வில் எடுத்தவள்.

"இனி என்னோட முறை." என்று அங்கு தொங்க விடப்பட்டிருந்த ஒரு சில டாப்பை காட்டினாள் சர்மி.
அதில் நீளமானதை எடுத்தவள் "இது எனக்கு ஓகே." என்றவும் சரி என மீதியை பார்க்க இம்முறை மதி தேர்வு என்பதால் கடை பூராகவும் தேடலானாள்.

இங்கு இவர்களை காணாது பொறுத்து பொறுத்து பார்த்த மதியோ.
"ம்மா....! என்னம்மா இதுங்க செய்யுதுங்க?.
போய் எவ்வளவு நேரமாகுது. வருதுங்களா பாருங்க?...
வரவர இந்த சர்மியும் இவகூட சேர்ந்து ரொம்பத்தான் ஆடுகிறா" என சினத்தோடு புலம்பியவளிடம்.

"எதுக்கு இப்போ என் மருமகளை வம்புக்கு இழுக்கிற?. வந்து முழுசா ஒரு நாள் ஆகல்ல. அதற்குள் நாத்தனார் கொடுமைய ஆரம்பிச்சிடாத. உனக்கு ட்ரெஸ் எடுக்கும் போது மாத்திரம் ஒரு நாள் ஆனாலும் வரமாட்ட,
அவங்க இப்போ தானே போனாங்க. வருவாங்க இரு!" என்க.

"ம்மா!.. என் அவசரம் புரியாம பேசாதிங்க." என நெளிபவளை கண்டவர்..

"எதுக்கு இப்போ நெளிஞ்சிட்டிருக்க?.. என்ன உன் அவசரம்.?..." என்றவரிடம்.
தன் கையின் கடசி விரலை மாத்திரம் உயர்த்தி காட்டியவளிடம்.
"இதுக்கு தான் இந்த கத்தலா?.... அது தான் கடைக்குள் அவங்க நிற்கின்றார்களே!... நீயும் போகவேண்டியது தானே!" என்றார்.

அவளுக்கும் இருந்த அவசரத்தில் இதற்கெல்லம் கூச்சம் பார்த்தால் இங்கேவே போய் விடவேண்டியது தான். என நினைத்தவள் வேகமாக உள்ளே சென்றாள்.

அங்கிருந்த பெண்ணிடம் பாத்ரூம் எங்கே என்று கேட்க.
மேலே கைகாட்டியதும் மேலே வந்தவள். சர்மியோடு, மேகலா வாதாடிக்கொண்டிருப்பதை கண்டாள்.

அதாவது சர்மியோ ஒரு டாப்பை எடுத்துக் காமித்து "இதை எடுப்போம் அண்ணி உங்களுக்கு அழகாய் இருக்கும்." என்க.
மேகலாவோ அதை பார்த்ததும் முகத்தை சுழித்து
"எனக்கு இதெல்லாம் பிடிக்காது சர்மி. வேணும்னா நீ எடுத்துக்கோ உனக்கு அழகா தான் இருக்கும்." என்றவள் "என்னை கட்டாய படுத்தாத சர்மி." என மறுக்க.

"அண்ணி!.. முன்னாடியே உங்களுக்கு நான் சொல்லிட்டேன்.
இது என்னோட செலக்ஷன் தான். இதை நீங்கள் எடுத்தே ஆகணும். பிளீஸ் அண்ணி...! எனக்காக!...."என கெஞ்ச.

அவளுக்காக அந்த உடையை எடுப்போமா?.. என்று மீண்டும் அந்த உடையை பார்த்தவளுக்கு சுத்தமாக அது பிடிக்கவில்லை.
அதில் முழுவதும் களி நூள் வேலைபாடுகளுடன் உடலாேடு ஒட்டும் துணியின் தன்மையும், உயரம் கூட குறைவாக கோணலாக வெட்டப்பட்டு இருக்க. எப்படி அவளாள் அதை வாங்கி கொள்ள மனம் வரும். அப்படியான உடையை இதுவரை அவள் தொட்டு கூட பார்த்ததில்லை.

"எனக்கு பிடிக்கல்லனா விடு சர்மி!.. எதுக்கு அடம் பிடிக்கிற?." என்றவளிடம்.

"எதுக்காக உங்களுக்கு அது பிடிக்கல்ல." என மறு கேள்வி கேட்க.
அவளும் அதன் காரணங்களை கூறவும்.

"என்ன அண்ணி நீங்க?.. உங்க உடம்பொன்னும் ரொம்ப அகலமில்ல. அதனால இறுக்கமா இருக்காது. உங்க பாடிக்கேத்தா மாதிரி அழகாக இருக்கும். அப்புறம் இதை போட்டுக்கிட்டா உயரமா தெரிவிங்க?... அப்போ தான் அண்ணனோட உயரத்துக்கு மேச் ஆவிங்க." என்று மேகலா மனதை மாற்ற அவள் முயற்சி செய்ய.

"எனக்கு வேணாமே சர்மி!." என அவளும் அடம்பிடிக்க.
"சரி உங்களுக்கும் வேணாம். எனக்கும் வேணாம்.
இதை முதலில் போட்டு காட்டுங்க.
நீங்க சொன்னது போல இருந்தா நானே அதை வைச்சுடுறேன்."என்க.

"நிஜமாவா?.. அப்புறம் நீ பேச்சு மாறமாட்டாயே!.." என்றவள் அதை எடுத்து கொண்டு சற்று தூரம் செல்ல.

அதை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தவள் மதி, இவர்கள் பேச்சில் கடுப்பாகி பாத்ரூமில் நுழைந்து கொண்டாள்.
மேகலாவே சிறிது தூரம் சென்றதும் தான் நினைவு வந்தவளாய், ட்ரயல்ரூம் எங்கிருக்கிறது என்று கூட கேட்க்காமல் இவ்வளவு தூரம் வந்து விட்டேனே!.. என நினைத்தவள். அருகில் அவசரமாக வாடிக்கையாளருக்கு காட்டும் துணிக்கட்டுடன் சென்ற பெண்ணை மறித்து ட்ரயல்ரூம் எங்கிருக்கிறது?. என் கேட்க..

"சாரிக்கா!.. இங்கு ட்ரயல் ரூம்னு எதுவும் இல்லை. வேணும்னா நீங்க பாத்ரூம் தான் பாவிக்கணும். பட் இப்போ தான் ஒரு கேர்ள் உள்ளே போனாங்க.
இதுதான் அது." என்று காட்டியவளிடம். "மாத்துவதற்கு வேறு இடமே இல்லையா?.." என்க.
யோசித்தவள்.

"இருக்குக்கா!.. பட் உள்ள இருட்டா இருக்கும். பரவாயில்லனா ஸ்ராக் வைக்கின்ற சின்ன ரூம் இருக்கு அங்க போறிங்களா?..." என்க.
யோசித்தவள் முகிலன் அசதியாக இருக்கு என சொன்னது நினைவுவர.

பாத்ரூமை பார்த்து கொண்டிருந்தால் நேரமாகிவிடும்.
"சரி சிஸ்டர் அங்கே கேமெரா எதுவும் இல்லையே!.." என கேட்க.

"நீங்க வேற அக்கா!.. கடைக்கே கேமெரா இல்லை.
அந்த இருட்டு அறையிலயா இருக்க போகுது.?........ ஒன்னுமில்லை பயப்படாமல் போங்க. உள்புற தாப்பாள மறக்காம போட்டுக்கங்க." என கூறி அந்த அறையை காட்டி விட்டு சென்றுவிட,

மேகலாவும் நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல் உள்ளே நுழைந்து கொண்டாள்.
அந்த கடையின் தோற்றம் அதுதான்.

முதலில் வாடிக்கையாளர் உடை தேர்வு செய்யுமிடம், அதன் பின் காசு கவுண்டர், சின்ன ஓடையாய் ஒடுங்கி உள்ளே சென்றால் பாத்ரூம். அதை தாண்டி கடசியாகவே அந்த பெண் கூறிய ஸ்ராக் ரூம் என்றிருந்தது.
இவர்களது உரையாடலானது பாத்ரூம் முன்பே நடந்து முடிந்து.

கொண்டு வந்த உடைக்கு மாறியவள், சர்மியிடம் காட்டுவோம். என கதவை திறக்க, எங்கு அது திறபட்டால் தானே!. தாள்ப்பால் தான் சரியாக திறபடவில்லையோ என நினைத்து அதை முடிந்தளவு இழுத்து, இப்போதும் திறந்து பார்த்தாள். முடியவில்லை......
காற்று கூட உள் நுழையாத அறை. கதவும் திறக்க மாட்டேன் என்கிறது.
ஒரு புறம் பதட்டம், மறுபரம் வியர்வை. நேரமாகிறது என்ற பயம் வேறு.

கதவை பல முறை தட்டி பார்த்து விட்டாள். யாரும் அந்த புறம் வந்ததற்கான சத்தம் கூட இல்லை. ஆனால் பெரிதாக ஒலித்த எப்.எம் வானொலி சத்தம் அவளின் காதுகளில் இப்போது சிறிதாய் விழுந்தது.

எதுவும் இப்போது செய்ய முடியாது. யாராவது இந்த பக்கம் வந்தால் தான் எனக்கு உதவ முடியும். என்ன நடந்திருக்கும் கதவிற்கு. பூட்டும் போது சாதாரணமாக தானே இருந்தது. எந்த கோளாறும் போல் தெரியவில்லை.

இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்தால் இருட்டிலே காற்றுமில்லாமல் மூச்சு முட்டி செத்து விடுவாள் போல் இருந்தது மேகலாவிற்கு.

"இந்த சர்மியாவது போனவளை காணவில்லை என்று வந்து பாக்கிறாளா?.. எந்தத் துணிய புரட்டிக் கொண்டிருக்கிறாளோ.?.... யாராவது வாங்களேன். எனக்கு மயக்கம் வந்துடும் போல் இருக்கே!" என்று மீண்டும கதவை தட்டிப்பார்த்தாள். பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

இங்கு சர்மியோ மேகலாவை காணாது "எங்கே போனாங்க?.. இவ்வளவு நேரமாக காணலையே?..". என அவள் சென்ற திசை நடக்கவும் அவளை கண்ட மதி.
"என்ன சர்மி!... இன்னுமா துணி எடுத்து முடியல்ல?..." என்க.

"முடிஞ்சுது மதி!.. அண்ணி ட்ரயல்ரூம் போனாங்க. இன்னமும் காணல்ல." என கூற.

"என்ன சொல்ற சர்மி?.. இங்க தான் ட்ரயல்ரூமே இல்லையே!.. அப்புறம் எப்பிடி உன் அண்ணி போக முடியும்?.." என்க.

"உனக்கு இங்க ட்ரயல்ரூம் இல்லனு எப்படி தெரியும்?.." என சர்மி கேட்க.

"ஏய் நான் பாத்ரூம்ல இருக்கும் போது யாரோ இரண்டுபேர் பேசினத கேட்டேன். அத வைத்து தான் சொல்லுறேன்.
இங்க ட்ரயல்ரூமே இல்லை." என்றவளை நம்பாத சர்மி கவுண்டரில் இருந்த பெண்ணிடம்,

"இங்கு ட்ரயல்ரூம் எங்கிருக்கு?." என கேட்க.

"சாரி மேடம்!.. இங்க அப்பிடி எதுவுமே இல்லை. இது சின்னகடை என்கிறதனால அதெல்லாம இல்ல." என கூற.

"அப்போ அண்ணி எங்கே போயிருப்பாங்க?..." என கேட்டவள்.

"ஒருவேளை பாத்ரூம் போய் மாத்துவாங்களோ?..." என்றதும்.

"அதுக்கு வாய்ப்பே இல்லை.!.. இப்போ தான் நான் அங்கிருந்து வரேன். என்னை தவிர அங்க எந்த ஈ, எறும்பு கூட இல்லை.
ஒருவேளை உன் தொல்லை தாங்காமல் உன் அண்ணி கீழே போயிருப்பாங்காே?.. என்னமோ!..." என கேலி பேச.

"இல்லடி!.. நான் இங்கே தான் இருக்கேன். அப்புறம் எப்பிடி அவங்களால் என்னை தாண்டி போக முடியும்?.." என்க.

"உன் தொல்லை தாங்காம உன்னை ஏமாத்திட்டு போயிருப்பாங்க. வா!..." என்று அவளை கீழே அழைத்து போனவள் அங்கும் அவளை காணவில்லை என்றதும்.
"என்ன மதி!... இவங்க எங்கே போயிட்டாங்க?.
இங்கேயும் காணலையே!...
இப்போ எங்க தான் இவங்கள போய் தேட முடியும்?..
அண்ணா வேற திட்டபோறரு." என பதற.

" சும்மா பதறாம வா!.. ஒரு வேளை அங்கயும் போயிருக்க வாய்ப்பிருக்கு." என்று வண்டியை நோக்கி சென்றனர்.

" மதி இங்கேயும் அவங்க இல்லன்னா அம்மா என்னை கொண்டிடுவாங்கடி என்ன செய்யறது." என்க.

" புலம்பாமல் வா!.. எப்பிடியும் இங்கே தான் வந்திருப்பா" என்றவள் வண்டியில் ஏறி பார்க்க. அங்கும் அவள் இல்லை.
இருவரையும் பார்த்த சுந்தரி அவர்கள் பின்னால் மேகலாவை எதிர்பார்த்திருக்க அவளை காணாது.

"இரண்டு பேரும் வரீங்க. எங்க என் மருமக.?" என கேட்க.

"அவளை தான் நாங்களும் தேடிட்டு வரோம்மா!" என்று மதி கூற.

அவளை நம்பாது சர்மியை திரும்பிப்பார்த்தார் சுந்தரி.
"ஆமா சித்தி!.. அண்ணி ட்ரயல்ரூம் போறேன்னு போனாங்க. பட் அங்க ட்ரயல் ரூமே இல்ல சித்தி!..
அங்கே தேடிட்டு, அப்புறம் கீழேயும் தேடிப்பாத்தோம் எங்கேயுமே இல்ல. அதுதான் ஒரு வேளை இங்கே வந்திருப்பாங்களோனு இங்கே வந்து பாக்க இங்கேயும் இல்லை.
அப்போ எங்கே தான் போயிட்டாங்க?.." என்று சர்மி அழுபவள் போல் வினவ..

"அவளா?... அவளோட தங்கை மாதிரி எங்கயாச்சும் ஓடிப்போயிருப்பா" என்ற மதியை
"என்னடி பேச்சு பேசுறா நீ?.. அண்ணி என்ற மரியாதவேண்டாம்." என அடக்க.

"யாரை அண்ணி என்றீங்க?.. திடு திடுப்பென வந்து நான் தான் அண்ணினா உடனே அவளை என் அண்ணின்னு ஏத்துக்கனுமா?.."
என எதிர்த்து வாயாட..

அவள் பேச்சை கேட்டவனாே, "இங்க என்ன நடந்திட்டிருக்கு?.. உன்கிட்ட பேசிட்டிருக்கிறது பெரியவங்க." என முகிலன் மதியின் மேல் அனல் பார்வை வீசியவாறு குரலை உயர்த்த.

அவன் பார்வையில் அமைதியானாள் மதி.
"ம்மா வாங்க முதல்ல என்னாச்சுனு பார்க்கலாம்." என வண்டியிலிருந்து இறங்கிய முகிலன் பின்னால் சர்மி, சுந்தரி மதி என கடைக்குள் நுழைந்தனர்.

அவன் எங்கே என்று சர்மியிடம் கேட்க.
"மேலே" என்றதும்.
மேல் ஏறி சென்றவன். அங்கு நின்றவர்களிடம் "ட்ரயல்ரூம் எங்கே?.." என்றதும்.

"சாரி சார்.... இங்கே அப்பிடி எந்த அறையும் இல்லை." என சர்மிக்கு சொன்ன பதிலே அவனுக்கும் சொல்லப்பட்டது.

"ட்ரெஸ் மாத்திரேன்னு எந்த பக்கம் போனான்னு தெரியுமா சர்மி?.." என்க.

அவள் சென்ற திசையை காட்டியவள் திசையில் வேகமாக நடந்தான் முகிலன்.
இங்கு மேகலாவின் நிலையோ மோசமாகியது. வியர்த்து கொட்டி வெளிச்சம், காற்று கூட இல்லாமல் மயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டவள்
வெளியில் நடையின் சத்தம் உணர்ந்து
தனக்கு யாராவது உதவுவார்கள் என நினைத்தவள் கதவை வேகமாக தட்டினாள்.

அங்கு வந்தவனோ அந்த இடம் பூராகவும் தேடிவிட்டு பாத்ரூம் தாண்டும் போது கதவும் தட்டப்பட அதன் அருகில் சென்றவன்.

"மேகலா!..." என சந்தேகமாக குரல்கொடுக்க.
அவன் குரலுக்கு ம்ம்... என்ற முனகல் சத்தம் வரவும் கதவை தள்ளியவனுக்கு அது திறபடாமல் முரண்டு பிடிக்க.

"எதுக்கு மேகலா உள்ளயே நிக்கிற?.. வெளிய வா!.. என்றவனுக்கு.

"என்னால கதவ திறக்க முடியல்ல." என இயலாமையாக வந்தது அவளது குரல்.

"என்னது...! உன்னாலயும் முடியலையா?.." என்ன காரணம் என ஆராய்ந்தவன் வெளிப்புற தாப்பாளை அப்போது தான் பார்த்தான்.
அதை யாரோ வெளிப்புறமாக போட்டிருப்பதை கண்டு
அதை இழுத்து கதவை தள்ளியவன் அவள் நிலை கண்டு அருகில் வர அவன் மேல் மயங்கி சரிந்தாள் மேகலா...
சங்கமிப்பாள்........
 

Balatharsha

Moderator
பாகம். 19
உள்ளே சென்றவன் அந்த சிறிய அறையில் அவள் தட்டுத் தடுமாறுவதை கண்டு அவளருகில் செல்ல
அவன் மீது மயங்கி சரிந்தாள் மேகலா!...

அவள் மயக்கம் கொண்டதில் பயந்தவனாய், அறையிலிருந்து வெளியே தூக்கி வந்து தன் உடலலோடு சாய்த்தவாறே தரையில் அமர்ந்தவன் பின்னால் நின்ற குடும்பத்தவர்களிடம்,

"கூட்டமா நின்னா அவமேல எப்பிடி காத்து விழும்? இந்த இடத்தை விட்டு வெளிய போங்க.
அவளே அந்த அறையில காத்தில்லாததனால தான் மயக்கமாகிருப்பா" என்றவன் சர்மிபுறம் திரும்பி,

"கவுண்டர்ல போய் கொஞ்ச தண்ணி வாங்கி வா!......." என்க.
மேகலாவுடைய இந்த நிலைக்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வில் இருந்தவள், தமையனின் உத்தரவை ஏற்று கவுண்டரில் இருந்த பெண்களிடம் நடந்தவற்றை கூறி தண்ணீர் வாங்கியவள்
அதே வேகத்தோடு தண்ணீர் போத்தலை அவனிடம் நீட்ட.
தண்ணீரை உள்ளம் கையில் ஊற்றி மேகலாவின் முகத்தை துடைத்து விட்டான்.

சர்மி பின்னால் வந்த சுந்தரியோ முகிலன் அருகில் மண்டியிட்டு அமர்ந்து.

"மேகலா!. அம்மாடி.!.. "என அவள் கன்னம் தட்டி அழைத்தார்.

அவர் தட்டிய வேகத்தில் கண் விழித்தவள் சுந்தரியின் நடுக்கம் கண்டு தன் நிலமை என்ன என உணர்ந்து, சற்று பயந்தவளாய் சர்மியை தொடர்ந்து முகிலனை திரும்பி பார்க்க.

"என்னாடாம்மா ஆச்சு?. எதுக்கு அந்த அறைக்குள்ள போன?...." என சுந்தரி வினவ.

"இல்லத்தை!.. என்னாச்சு அப்பிடினு சரியா தெரியல.
ஆனா நான் உள்ளே போகும் போது கதவு சாதாரணமா தான் இருந்திச்சு. எப்பிடி அது திறக்க முடியாம இறுகிச்சுன்னு தெரியல.
எவ்வளவோ முயற்சி செய்து திறந்திடலாம்ன்னு பாத்தேன் முடியல.
யாராவது வருவாங்களானு ரொம்ப நேரமாவே கதவுக்கு கிட்டவே இருந்து வெளியால் யாராவது வரும் சத்தம் கேட்டால் உதவிகேட்கலாம்னு நினைச்சா யாரும் வந்தாபோல தெரியல." என்க.

"அதெல்லாம் சரிம்மா!... அதுதான் ட்ரயல்ரூம் இல்லனு தெரிஞ்சும் எதுக்கு இதுக்குள்ள போன?... பேசாம விட்டிருக்கலாமே" என்க.

"சித்தி!.. நான் தான் சித்தி, அண்ணிய கட்டாய படுத்தினேன்." என்றவள் அவள் போட்டிருந்த ட்ரெஸ்ஸை காட்டி
"அவங்களுக்கு அந்த டாப் பிடிக்கல. எனக்கு அதை பாக்கும் போது அவங்களுக்கு நல்லா இருக்குமாப்பாேல தோனிச்சு. அவங்க கலருக்கும் அழகுக்கும் நல்லா இருக்கும்.
அதனால பிடிக்கல என்டவங்கள போட்டு காட்ட சொன்னேன். அதோட அழகை பாத்திட்டு சில வேளை எடுத்துப்பாங்கனு நினைச்சு தான் அனுப்பினேன். ஆனா இங்க ட்ரயல்ரூம் இல்லனு சத்தியமா தெரியாது சித்தி.
அவங்க என் தொல்லை தாங்காம தான் இதுக்குள்ள வந்திருப்பாங்க போல." என கண்கலங்கியவள்,
மேகலாவின் கைகளை இறுகப்பிடித்து "சாரி அண்ணி......" என்க.

"என்னடி!..... செய்யிறதெல்லாம் செய்திட்டு சாரி சொன்னா எல்லாம் சரியாகிடுமா?... நாங்க இவ எங்கேயோ போயிட்டான்னு இங்க தேடாமல் வேற எங்கயாசும் தேடியிருந்தா என்னாயிருக்கும்?.....
நல்ல வேளை கதவை தட்டிட்டு மயங்கினா!..... நாங்க வரக்கு முன்னாடி மயங்கி அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ணிருப்ப?.." என்றவர் பேச்சில் அழத்தொடங்கியவளை பார்க்க பாவமாகிபாேனது மேகலாவிற்கு.

"அவள திட்டாதிங்கத்த!... இப்பிடில்லாம் ஆகும்னு அவளுக்கு என்ன தெரியும்?. என்மேல தான் தப்பே. ட்ரயல் ரூம் இல்லனதும் தூக்கி போட்டுட்டு வந்திருக்கணும்.
நான் தான் எதுவும் யோசிக்கால் லூசு தனமா இதுக்குள்ள வந்து இந்த மாதிரி ஆகிடிச்சு.
அவ என்ன பண்ணுவா?.." என தன்னால் அவளுக்கு விழும் ஏச்சை தாங்கமுடியது தன் மாமியாரிடமே சர்மிக்காக வாதாடி அவளுக்கு பரிந்து பேசுபவளையே வைத்த கண் வாங்காமல்
சிறிது நேரம் அமைதியாய் அவர்கள் பேச்சை கேட்டிருந்தவன்,

"நீ உள்ளே போகும்போது இங்க யாராவது இருந்தாங்களா?.." என்றான் சம்மந்தமே இல்லாது.

அவளோ இதை எதற்கு இவன் கேக்கிறான்?. என நினைத்தவளாய், யாரு நின்னாங்க என யோசித்தவள், அந்த மாதிரி எவரும் இருந்ததாக நினைவே இல்லை.

"யாருமே இல்லையே!....
ஆனால் நான் ட்ரயல் ரூம் தேடும் பாேது இங்க வேலை செய்ற பெண் தான் ட்ரயல்ரூம் இல்லை. வேணும்னா இந்த அறையை யூஸ் பண்ண சொன்னாங்க.
மற்றம்படி யாருமில்லை. அந்த பொண்ணுக்கும் ஏதோ அவசரம் போல போய்டாங்க.
அவங்க போனதுக்கப்புறம் தான் நானும் உள்ளே போனேன்." என்றவள் பதிலில்
குழப்பமாகிப் பாேனது.

அப்போ இவளை யார் உள்ளே வைத்து பூட்டி இருப்பார்கள்? என்றவாறு அவளையே முறைத்தவன்.

"உனக்கு அறிவில்லையா?... அறை இருந்தா என்ன? ஏதுன்னு யோசிக்காமல் போய்டுவியா?..." என சிடு சிடுக்க.

"ஆமா!... இவரு மட்டும் அறிவ வண்டல் வண்டலா வைச்சிருக்காரு. இல்லாதவங்களுக்கு அளந்து தரபோராரு!.. ஆள பாரு!..."
என நினைத்தவள் அவனை தயக்கமாக பார்க்க.

"என்ன பாக்கிறா?... நீ உள்ள போய் தாப்பாள் போட்டதும் கதவு தானாவே இறுகல. யாரோ வேணும்னே வெளிய தாப்பா போட்டிருக்காங்க.
சரி தாப்பா போட்டா பிரச்சினை இல்லை. உள்ள ஏதாவது கேமெரா இருந்த என்ன பண்ணுவ" என்க.

"அதெல்லாம் நான் அந்த பொண்ணுட்ட விசாரிச்சுட்டு தான் போனேன்.
கடையிலயே இல்லையாம்!.." என்பதை வடிவேல் பாணியில் அவள் சொன்னதில்
வந்த சிரிப்பை அவளிடம் இருந்து மறைத்து.

"ஏன் உனக்கு இதுக்குள்ளே தான் வரணுமா?... அந்த அறையை வெளியே இருந்து பாக்கும்போதே தெரியுதே இருட்டா இருக்குன்னு. பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு அதுக்குள்ள போனா?.. அதோ அந்த பாத்ரூமை பாவிச்சிருக்கலாம்ல்ல" என அருகில் இருந்த அறையை காட்டவும்.

"எல்லாம் யோசிக்கிறோம். இத மட்டும் யோசிக்க மாட்டோமா?..... வந்திட்டாரு ஐடியாசொல்ல." என மனதில் தான் அவனை அர்ச்சித்தவள்,

"அது.... நான் வரும்போது பாத்ரூமில் யாரோ இருந்தாங்க. அதனால தான்..." என இழுக்க.

"என்னது!.... பாத்ரூம்ல யாரோ இருந்தாங்களா?....." என்று அவளிடமே திருப்பி கேட்டவன்.

"அது யாருன்னு உனக்கு தெரியுமா?....." என்க.

"நான் என்ன உள்ளேயா போய் பார்த்தேன்?...
என்னை மாத்திரம் அறிவிருக்கா. அறிவியல் இருக்கானு கேக்க தெரியுது. அது அங்க மாத்திரம் இருக்கா என்ன?..... பாத்ரூமுக்குள் இருக்கிறவங்கள உங்க முடகத்த காட்டுங்க, நான் பார்க்கணும்னா கேட்கமுடியும்?.
மூஞ்சிய பச்சமிளகாய் கடிச்சவன் மாதிரி வைச்சிட்டு பைத்தியகார தனமா கேட்டா இவருக்கு அறிவிருக்குனு நாங்க நினைக்கணுமாக்கும். என மீண்டும் மனதில் அவனை புகழ்ந்தவள்.

"இல்ல... அவங்க உள்ள இருந்ததால நான் பாக்க முடியல." என்க.

"சரி பாக்க முடியல. அவங்க வெளிய வரும் வரை கூடவா உன்னால பொறுத்திருக்க முடியாது?..." என அவன் அடுத்த கேள்வி கேட்க.

மேகலாவோ இதற்கு என்ன பதில் சொல்வதென முழித்தாள்.
அது தான் அவன் தனக்கு அசதியாக இருக்கிறது என கூறியதன் காரணத்தால் தானே எதற்கு அவனை இன்னும் நேரம் கடத்தி கஷ்டப்படுத்துவான், முடிந்த அளவு வேளையோடு வீடு செல்வ வேண்டும். அவனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். என்று தானே இருட்டு அறையை கூட பொருட்படுத்தாமல் உள்ளே சென்றாள்.
இப்போது இவன் கேட்கும் கேள்விக்கு விடையளித்தால். ஏதாவது நினைப்பானோ?.... இல்லை என்னை பற்றி நீ எதுக்கு கவலை படுற?. என கேட்டுவிட்டால்.
வேண்டாம் மேகலா!...... முன்னர் எப்படி இவனிடம் மௌனமாக இருப்பாயோ அப்படியே இருந்து விடு!..
இல்லை உனக்கு தான் ஆபத்து. என தன்னை தானே எச்சரித்தவள், தன்னில் தான் தவறு என்பதைப்போல் தலை கவிழ.

" அவளே பயந்துபோய் இருக்கா.... நீ வேற அவளை மிரட்டாதடா!. ஏற்கனவே எதிர்பாராத நிறைய சம்பவங்களால அவ சோந்திருப்பா, நீயும் கேள்வி மேல் கேள்வி கேட்டு இன்னும்
கஷ்டப்படுத்தாத வா முதல்ல போகலாம். அங்க எல்லாரும் நம்மள எதிர்பாத்திட்டிருக்பாேறாங்க." என்றவர்,

"நீ வாம்மா!.." என அவளை எழுப்ப.
அவளுக்கு இன்னும் தலை சுற்றல் சரியாகாததனால் எழுந்தவள் மீண்டும் அவன் மீதே விழு.

"பாத்தும்மா!..." என்ற சுந்தரி, தன் கையை பிடித்து எழுந்து கொள்ள சொன்னார்.

"வேண்டாம்மா!.. நீங்க விடுங்க நானே அவளை எழுப்பிக்கிறேன்." என்றவன், அவளை சற்று விலத்தி எழுந்து கொண்டவன், குனிந்து அவள் இடுப்பில் ஒரு கையும் மற்றய கையில் அவள் கையையும் பிடித்து எழுப்பியவன் அதே நிலையில் அவளை நெருங்கி அணைத்தவாறே கூட்டிச்செல்ல.
இடை தொடுதலிலும் அவனது நெருக்கத்திலும் சங்கடமாக உணர்ந்தவள், அவனது வழிநடத்தலில் வருவதை விரும்பாது அதே இடத்தில் நின்று
காெண்டாள்.

தான் அடி எடுத்து வைத்தும் அவள் வைக்கவில்லை என்றதும்
"என்னாச்சு?... நடக்க முடியல்லையா?." என்க.

"அப்படி எதுவும் இல்லை" என மறுப்பாக தலையசைத்தவள் அவன் கை பதிந்திருந்த இடையினை பார்க.
அவள் பார்வையின் பொருள் விளங்கியவன்.

"இப்போ உனக்கு சரியாகிடிச்சா?... நீயாகவே நடந்து வருவியா?...' என கேட்டவன் கேள்வியில் தன் ஒரே பார்வையில் தன் மனதை விளங்கி கொண்டவனின் கன்னியத்தை கண்டு பெருமையாகவே உணர்ந்தாள் மேகலா.

"எனக்கு எதுவுமில்லை. நான் நல்லாத்தான் இருக்கேன்..." என்றவாறு அவன் கரங்களை தன் இடையில் இருந்து எடுத்து விட்டவள் முன் பகுதியை நோக்கி நடந்து வருவதை கண்ட மற்றவர்களும் அவளுக்கு எதுவும் இல்லை என முன்னே நடக்க.

நேற்றைய திருமண அலைச்சல் மனச்சோர்வு, இன்று உடலலைச்சல், வெள்ளம் அடித்துச்சென்ற மயக்கம், இப்போது அறை இருட்டில் சுவாசத்திற்கு போராடிய தருணங்கள் எல்லாமாக சேர்ந்து இப்போது புதிதாக தலை வலி வேறு அவள் நடையை தள்ளாட வைத்தது.

கால்கள் பின்னி நடக்க முடியாமல் ஒவ்வொரு அடியாக மெதுவாக வைத்து வந்தவளின் பின்னால் வந்த முகிலனோ அவளை பார்த்தபடியே வந்ததனால் அவள் நடையின் வேறுபாடு உணர்ந்து வேகமாக நடந்தவன் அவள் அறியும் முன்னரே, அவளை கைகளில் ஏந்தி முன்னேறிச்சென்றான்.

என்ன நடக்கிறது என உணர சில வினாடிகள் எடுத்தது மேகலாவிற்கு..
பின்பு தன் நிலை புரிந்து

"என்னை கீழே விடுங்க. நான் நடந்து வரேன்." என்க.

தான் கைகளில் ஏந்தி இருந்தவளை முறைத்தவறே,
"அதை தான் நானும் பார்த்தேனே!.. எப்படி நடந்தன்னு. இப்போது வந்தியே போதையில் தள்ளாடுறத போல தள்ளாடிட்டேவா?.. உன்னை நடக்க வைச்சு கூட்டி போனா இன்னைக்கு வீடு போக முடியாது. அதோடு இது ஒன்னும் கீழ் தளம் இல்லை. படியில் இறங்கும் போது கொஞ்சம் தள்ளாடினா போச்சு. அங்கபிரதட்டை தான் அடிக்கணும். இந்த கடையே உன்னை தான் வேடிக்கை பார்க்கும் பரவாயில்லையா?...." என்றவன் அவளை பார்ப்பதை விட்டு போகும் வழியையே பார்த்தபடி படியில் இறங்க.

எங்கே தன்னை கீழே போட்டு விடுவானோ என்ற பயத்தில் அவன் சட்டையை இரு கைகளாலும் இறுக பற்றிக்காெண்டு தானும் படிகளையே திரும்பி பார்த்தாள்.

தன் சட்டையை பாதுகாப்பாக இறுக பற்றி இருப்பதையும் பார்த்தவன். எவ்வளவு நம்பிக்கை என்மேல?.. என நினைத்து தனக்குள்ளே சிரித்தவாறு வண்டியில் ஏறியவன் அவளை டபிள் சீட் இருந்த இருக்கையில் இருத்தி அருகிலே தானும் அமர்ந்து கொண்டான்.

மேகலாவிற்கு முதல் முறை ஒரு ஆணின் அருகில் சங்டமாக இருந்தாலும் அனைவர் முன்பும் தன்னை காட்டிக்கொள்ள விரும்பாமலும் காட்டி கொண்டால் மட்டும் மூஞ்சூறு அப்படியே கேட்டுவிடும்!. ஏதாவது காரணம் சொல்லி தான் நினைப்பதை தானே செய்வான் என்ற எண்ணம் வர ஜன்னலோடே ஒட்டியவாறு இருந்துவிட்டாள்.

அவள் அவ்வாறு இருந்தால் முகிலன் உயரத்திற்கு அவன் கால்களை குறுக்கி இருப்பதற்கு அவனால் முடியாத காரணத்தால் அவள் ஒதுங்கி இருப்பது வசதியாக போக கால்களை விசாலமாக விரித்து விட்டு அவளை இடிப்பது போலவே அமர்ந்து கொண்டான்.

நான் ஒதுங்கி போனாலும் இவன் விடமாட்டான் போயே!.... இவன் விஷயத்தில் நல்ல பிள்ளையாக இருப்போம்ன்னு வாயை கட்டுப்படுத்திக் காெண்டிருந்தால் முடியாது போலயே!....
என்று வந்த கோபமதை தனது பற்களை கடித்தவாறு அடக்கியவளின் பற்கள் நொருங்கும் சத்தம் முகிலனுக்கு கேட்காமலில்லை.

அதே கோவததோடு அவன் புறம் திரும்பி பார்க, அவனோ சாதாரணமாக ஒற்றை புருவம் உயர்த்தி "என்னவென்று கேட்டான்.

மேகலாவிற்கோ பானுவை பெண் பார்த்ததில் இருந்து இவனது ஒரு சில நடவடிக்கைகளை கவனித்து கொண்டு தான் இருக்கின்றாள்.
எதையும் ஆழமாக பார்த்தே அதை புரிந்து கொண்டுவிடும் திறமை.
சாதாரணமாக யாரிடமும் பேசமாட்டான். அப்படி பேசினால் நிச்சயம் அந்த நபர் மேல் கோபமில்லாமல் இருக்காது. அதைவிட வாயல் பேச மாட்டானே தவிர அவன் ஒவ்வொரு அங்கமும், செயலும் பேசும். ஏன் அவன் நடையின் வேகத்தை வைத்தே அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சாதாரணமாக முகிலனை யாரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியது. தன் உடலுக்கென்றே ஒரு சிஸ்டம் வைத்திருப்பான்.
மொத்தத்தில் சிரிப்பென்ற ஒன்றை அந்த எந்திர மனிதனிடம் அவள் இதுவரை அறிந்ததில்லை.

இப்போதும் அவன் கண்களால் என்ன என்று கேட்க. வந்த கோபத்தை ஒதுக்கி அவன் செயற்பாடுகளின் அர்த்தமதை தேடிக்கொண்டிருந்தவளிடம்,

"என்ன அப்படி பலத்த யோசனை?.. வைச்ச கண் வாங்காம என்னையே பாக்கிற?..
எல்லாரும் இருக்கும் போது இப்படி பார்கிறத மத்தவங்க பாத்தா
நேரகாலம் தெரியாமல் ரொமான்ஸ் பண்றதாக நினைக்க மாட்டார்க?.... அவங்களுக்கு மட்டுமில்லை எனக்கே அப்படித்தான் தெரியுது.". என்றவன் கேலி புதிதாக இருந்தாலும்.

இவனது பேச்சில் போன கோபம் மீண்டும் அவள் அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொண்டது.

வேகமாக அவனிடத்தில் இருந்து பார்வையை அகற்றியவள் கண்ணாடி வெளியே பதித்துக்கொண்டாள்.
சிறிது நேரம் சென்றிருக்கும் வெளிக்காற்றின் பரிசத்தில் மேகலா தூங்கிப்போக,
அவள் தலையானது வண்டியின் அசைவுக்கு ஏற்றால் போல் கண்ணாடியில் முட்டி மோத,
தன்னை மறந்து தூங்கியவள் தலையினை தன் தோள்மீது சாய்த்தவன் அவள் உயரத்திற்கு ஏற்றாற்போல் பதிந்து அமர்ந்து கொண்டான்.

வீடு வந்ததும் இருந்த களைப்பில் எவரையும் கவனிக்காது எல்லோரும் இறங்கி சென்று விட்டனர். மேகலா தூங்கிகொண்டு இருந்ததனால் தன் தோள்களில் இருந்து எழுப்ப விருப்பமில்லாமல் இருந்தவன். இப்படியே இருந்து கொள்ள முடியாதே என்று அவளை தட்டி எழுப்ப அவள் எழுந்து கொண்டால் தானே!....

அவளது முடியில் சிறிதை எடுத்து அவள் காதுக்குள் நுழைக்க. அதன் குறுகுறுப்பில் நெலிந்தவள் விழித்தும் கொண்டவள்,
முகிலன் தோளில் சாய்ந்து இருப்பது அறிந்து வேகமாக எழுந்து "சாரி..... தூக்கத்தில் தெரியாமல்........" என தடுமாற.

எதுவும் அறியாதவன் போலவே "பறவாயில்லை வா!.. வீடு வந்திடிச்சு. எல்லாரும் இம்மாத்திரம் தூங்கியே இருப்பாங்க. எனக்கும் உன்னை தூக்கியே அசதியாக இருக்கு." என்றவன் இரண்டு கைகளையும் உயர்த்தி விரல்களின் சொடக்கு எடுக்க.

"ம்ம்.. ." என எழுந்து கொண்டவளுக்கு வழி விட.
அவன் இருந்த இருக்கையை தாண்டித்தான் செல்ல வேண்டும் என்பதால் அவனை விலத்தி கால்களை எடுத்து வைத்தவள் அவனது நீளமான கால் மேகலாவை தட்டி விட,
அவன் மடி மீதே விழுந்தாள்.

அவனுக்கும் அந்த நொடியே அவளை அணைத்தால் என்ன எனத்தோன்றியது.
ஒரு தலை சிலுப்பலுடன் தன் மனதில் தேவையில்லாத சிந்தனையை அடக்கியவன்
"என்ன இது வேண்டாத சிந்தனை.?" அனுபவத்தை மறந்து இவள் அருகாமையில் தன்னை தொலைப்பதை அவனாலும் மறுப்பதற்கில்லை.
தன் மனதின் ஓட்டத்தை மறைக்கும் விதமாய்

"என்ன?. எப்பவும் உன்னை தூக்கிட்டே வருவேன்னு நினைச்சு தானே இந்த மாதிரி பண்ற?..." என்றவன் அவளை தன் மடிமீதிருந்து எழுப்பி விட்டு அவளை முந்திக்காெண்டு நடக்க.
அவன் பின்னால் அவளும் சென்றாள்.

இன்று நடந்த சம்பவங்களை நினைத்தவனுக்கு யார் அவளை அந்த அறையில் வைத்து பூட்டினார்கள் என்ற கேள்வி மட்டும் அவனை குடையத்தொடங்கியது. அந்த கடையில் கேமெரா இல்லாதது அவளை அடைத்து வைத்தவருக்கு வசதியாக போனது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
அவளை அடைத்தது ஒரு பெண் என்பதும், அந்த பாத்ரூம் பெண்களது என்பதால் அங்கு இருந்தவர்களில் ஒருவராகத்தான் இருக்கும் என்பதும் உறுதியானது.
ஆனால் இங்கு இவளுக்கு எதிரியார்? என்பதே அவன் கேள்வியாகவும் இருந்தது.
பாவம் தன் தங்கையும் பாத்ரூக்கு அவசரமாக சென்றதை மறந்துவிட்டான் பாேலும்.

சங்கமிப்பாள்.........
 

Balatharsha

Moderator
பாகம். 20.
வேட்டி சட்டையை களைந்து வீட்டில் எப்போது இருப்பது போல் சாட்ஸ்ஸுக்கு மாறி வெளியே வந்தவனை கண்டவள், வேகமாக தன்னை திருப்பிக்கொண்டு.

மூஞ்சூறு இவனை என்ன சொல்லி திட்டுறதுன்னு கூட தெரியல்லை.
இங்க ஒரு பொண்ணு இருக்கிறாளேங்கிற எண்ணம் வேண்டாம்?.
சின்ன பையன போல முட்டி மேல் சாட்ஸ போட்டிட்டு. இந்தமாதிரி என்முன்னாடி வரவதற்கு சங்கடமா இருக்காதா?..
அது சரி....! அவனுக்கெங்க இருக்க போகுது? எனக்குத்தான் ஒருமாதிரியா இருக்கு." என நினைத்தவள் கதவுப்புறமே திரும்பி நின்றுகொள்ள.

முகிலனோ அவளை கண்டும் காணதவன் போல் கட்டிலில் படுத்துக்கொண்டான்.
மெதுவாக திரும்பி பார்த்தவள் அவன் படுத்திருப்பது கண்டு, வாங்கி வந்த உடையுடன் பாத்ரூம் சென்று அந்த உடைக்குமாறி வெளியே வந்தவள்,
இருந்த அசதியில் எங்கே தூங்குவதென தெரியாது இடம் தேடிட,

அவள் நோக்கம் புரிந்தவனாய்,
"என்ன தேடுற?" என்றவன். "ஏசி போட்டிருக்கு தரையில் படுத்துக்காத!...
கட்டிலிலே படுத்துக்கோ.
ஏற்கனவே தண்ணி அடிச்சிட்டு போனதில உடம்பில குளிர் தேங்கியிருக்கும். பிறகு காய்ச்சல் ஏதாவது வந்திடப்போகுது." என்க.

"எந்த கட்டிலில் தூங்குறது?... நீங்க தான் படுத்திருக்கிறீர்களே!" என கூற.

"அது சரி!...... உன்னை கட்டில்ல படுத்துக்கோனா என்னையே தரையில தூங்க சொல்லுவ போல!.... நீ நினைக்கிறது போல அந்த அளவுக்கு எனக்கு பெரிய மனசெல்லாம் இல்ல." என்றவன்,

" இந்த கட்டில் பெரிசா தானே இருக்கு?. இதிலேயே படுத்துக்கலாம்.
ரண்டு பேரை தாங்காத அளவுக்கு கட்டில் ஒன்னும் மோசமில்லை. நீயும் அவ்வளவு பூதமில்ல. " என்றவன்.

"அது சரி!.... உன்கிட்ட ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன். என்ன நீ எதுக்கெடுத்தாலும் தொப்பு தொப்புனு மயங்கி விழுற?... நானே பயந்துட்டேன். பார்வைக்கு மட்டுந்தான் ஏதோ பறவாயில்லாம இருக்க!... தூக்கினா காத்தடிச்ச பலூன் போல தான் கனமே இல்ல. ஏன் நீ சரியாக சாப்பிடுறதில்லையா?.. உடம்பில தென்பில்லாதவங்களுக்கு தான் இந்த மாதிரி அடிக்கடி மயக்கம் வரும்." என கேட்க.

அவளும் எதை சொல்வாள்.
போர் சூழலில் அகப்பட்டு உடலில் இருந்த இரத்தம் முழுவதும அந்த நேரம் ஏற்பட்ட காயத்தால் இல்லாமல் போனதும். பிறகு இரத்தம் ஏற்றப்பட்டு அது கூட அவளுக்கு வருடக்கணக்கில் மருந்து, மாத்திரை, சத்திர சிகிச்சை என அவள் எடுத்துக்கொண்ட மருந்தின் தாக்கத்தாலும்
அவள் உடலில் தென்பில்லாமல் இரத்த அளவு குறைந்து இதயத்தின் துடிப்பு வேகம் எப்போதும் தனக்கு மற்றவர்களை விட சற்று அதிகமாக தான் இருக்கும்.

கொஞ்சம் மனதாளவில் பயந்தாலும் இரத்த அழுத்தம் அதிகரித்து மயக்கம் வந்துவிடும்.
எப்படித்தான் அவளுக்கு இரத்தம் ஏற்றினாலும் மறு நாள் ரத்த வீதத்தினை பரிசோதித்து பார்த்தால் சாதாரணமாக பன்னிரண்டு இருக்க வேண்டியது எட்டு வீதத்திற்கு கூடியது இல்லை.
விடுதியில் இருக்கும்போது அவளை எந்த வேலையும் செய்ய விடுவதோ, பயப்படும் விஷயங்களை அவளுக்கு காட்டுவதோ இல்லை. அது அவளுக்கே தெரியும் என்பதால்.
தன்னால் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது என்பதற்காகவே சின்னவயதிலேயே எந்த ஒரு தாக்கத்தையும் மனதளவிற்கு அவள் கொண்டு செல்வதில்லை.
கண்ணால் பார்த்தோமா?... அவ்வளவு தான். அதோடே விட்டு விடுவாள்.

ஏன் கயல் இறந்ததும் தன் மனம் ஏற்கும் வரை தான் அழுததே!
அதன் பிறகு அழுதது என்றால் நேற்றைய நாளில் தான். அவளை வளர்த்தவர்கள் கூட அவள் அழுததை பார்ததில்லை. திடமாகவே இருந்து கொள்வாள்.

இதன் காரணமாக தான் அவளுக்கு வாழ்கை மீது பற்றே இல்லாமல் போனதே!..
ஒரு புறம் தன் காயப்பட்ட ஊனமான உடல். இன்னொரு புறம் எந்த அதிர்சியையும் தாங்கிகொள்ளாத மனமும், இதயமும்.
இதனோடு போராடி தான் வெல்ல முடியாது என்ற கோழைத்தனம்.
எப்படி பானுவின் பலம் மேகலாவோ!.. அதே போல் தான் மேகலாவின் பலம் பானுவாக இருந்தாள்.

சிறிது காலத்திற்கு முன்னர் தான் பானு மேகலாவிடம் நானும் நீயும் கல்யாணம் செய்து கொண்டால் ஒரே வீட்டிற்கு மருமகளாக போகலாம். அப்போது தான் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க முடியும் என்பாள். அவள் பேச்சில் மேகலாவோ நடக்கும் போது அதை பார்த்து கொள்ளலாம் என்று ஒரு சின்ன சிரிப்போடு அந்த பேச்சை தட்டிக்களிப்பாள்.

இப்போது முகிலன் கேட்கும் கேள்விக்கு எப்படி அவள் உண்மையை சொல்வது?.. இதை ஏன் நேற்று இவன் தன்னை வற்புறுத்தி தாலி கட்டும் போது சொல்லவில்லை.
சொல்லி இருந்தால் இதையே காரணங்காட்டி இந்த திருமணத்தையே நிறுத்தி இருக்கலாமே!..... ஆனால் நேற்று இருந்த மன உலைச்சலில் அது தோன்றாதது எவ்வளவு பெரிய தவறாகி விட்டது.

ஏற்கனவே பானு செய்த வேலையால் தன் குடும்பத்திற்கு ஏமாற்றுகாரர் என்ற பட்டம்.
இப்போது இந்த விஷயம் தெரிந்தால் அதுவே உண்மையாகிவிடுமே. இதை ஏன் என்னிடம் மறைத்தாய்?... ஒரு நோயாளியை தன் தலையில் கட்டிவிட்டார்கள் என சத்தம்போட்டான் என்றால்?...
என அவள் பலவாறு சிந்திக்கையிலே.

அவளது முகமாற்றங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவன் எதற்கு இப்படி யோசிக்கிறா?... இது சாதாரண கேள்வி தானே!... இவ யோசிக்கிறத பார்த்தா வேறு ஏதாவது இருக்குமோ?....
என்று அவள் முகத்தில் வந்து போன மாற்றங்களை வைத்து கணித்தவன்.

"மேகலா....." என அழைக்க.
அவனது அழைப்பானது அவள காதில் எட்டாமல் தன் சிந்தனையில் உலன்றவளை "உன்னைத்தான் மேகலா!." என சத்தமாக அழைக்க.
அவன் குரலில் நிகழ்வுக்கு வந்தவளிடம்,

"என்ன விடை தெரியாத கேள்வியா கேட்டுட்டேனோ?..." என கேலியாக வினவியவன்,

"சரி விடு! மயக்கம் என்கிறது பயத்தினால கூட வரும் தானே!..
உனக்கும் அசதியா இருக்கும், வந்து படுத்துக்கோ" என்க.

அவன் பேச்சில் அப்பாடா!.. தானே சமாளிச்சிட்டான். என மனதின் புலம்பல்களை ஒதுக்கி வைத்து விட்டு. அடுத்து அவன் கூறியது நினைவு வந்தவளாக,

"என்னது?... உன்க பக்கத்தில நான் தூங்குறதா?...." என அதிர்ந்தவள்.
"வேண்டாம்... வேண்டாம்... நான் தரையிலே படுத்துக்கிறேன்.." என அவசரமாக அவனிடம் இருந்து பார்வையை திரும்பி தரையில படுப்பதற்காய் இடம் பார்க.

"ஏய்....!. அறிவிருக்கா உனக்கு?.. சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா?... " என சிடு சிடுக்க.

மேகலாவுக்கு அவன் மேல் கொலை வெறியே வந்தது.
"எதக்கு இப்போ என்னை அறிவிருக்கானு திட்டுறீங்க?..
எனக்கு அறிவில்லனே இருக்கட்டும், முதல்ல உங்களுக்கு அறிவிருக்கா?...
இப்படி அரையும் குறையுமாக போட்டுகிட்டு பக்கத்தில படுத்துக்கோன்றிங்க.
ஒரே அறையில ரண்டுபேரும் இருக்கிறதே எதுவோ போல இருக்கு. இதில ஒரே கட்டில்ல படுத்துக்கிறதே அதிகம், அப்படியிருக்கும் போது அரையும் குறையுமா ட்ரெஸ் போட்டிருந்தா எப்பிடி?..." என தடுமாறியவள்,

"உங்களுக்கு வேணும்னா சங்கடமா இருக்காது. எனக்கு இருக்கும்" என்றதும்.
தன்னை ஒருதடவை பார்த்துக் கொண்டவன்.

"ஏன் இதுக்கு என்ன?.... நான் எப்பவுமே வீட்டில இப்பிடித்தான் இருப்பேன்." என்றான், அவள் தலை குனிந்து நிற்க. தானே தொடர்ந்தான்.

"உனக்கு எங்க என்னை இப்படி பார்த்ததும் மனசு தடுமாறி என்மேல காதல் வந்துவிடுமோனு பயம். என் மனசு சுத்தம். அதனால எனக்கு எதுவும் தப்பா தெரியல. மடியில் கனமில்லனா பயமெதுக்கு." என்று அவளை சீண்டுவதற்காக மிடுக்காக கேட்டு வைக்க.

என்ன இது?.. என்ன நான் சொல்கிறேன். சம்மந்தமே இல்லாமல் பேசிட்டு!. முட்டிக்கால் தெரிந்தால் காதல் வருமா என்ன?.. லூசுத்தனமால்ல இருக்கு. என நினைத்தவள்.

"எனக்கு ஒன்றும் கனமில்லை. நான் ஏன் பயப்படபோறேன்." என்றவள் அவன் பேச்சுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து வேகமாக வந்தவள் கட்டிலின் மறுபக்கம் படுத்துக்கொண்டாள்.

அவள் செய்கையில் சிரிப்பு வந்தாலும் அதை அவளுக்கு காட்டினால் மீண்டும் ஏதாவது முரண்டு பிடித்து தரையில் படுத்து கொள்வாள். என நினைத்து அவளுக்கு தெரியாமல் மறு புறம் திரும்பி படுத்துக்கொண்டான் முகிலன்.

பாவம் சிறு வயதில் இருந்தே தனக்கிருக்கும் பழக்கத்தை மறந்துவிட்டாள் பாேல.
பிறந்ததில் இருந்து யாரோ ஒருவரின் அரவணைப்பில் வளர்ந்தவள். முதலில் அத்தையை கட்டிக்கொண்டு தூங்கினாள்.
பிறகு கயலின் அரவணைபில் அவளை கட்டிக்கொண்டு தூங்கினாள்.
பிற்பாடு பானு என்றானது.
தனக்கான அறை எடுத்து சென்றவள் பானு இல்லாது சமயங்களில் தலகணியை கட்டிக்கொண்டு தூங்குவது என பழக்கமாகிப் போனது.

இன்று அவன் உசுப்பேற்றி விட தன் பழக்கத்தை மறந்து கட்டில் நுணியில் படுத்திருந்து தூக்கம் வராமல் கண்ணை உறுட்டியவாறு இருந்தவள் எப்படி தூங்கினாள் என்று தெரியாமல் தூங்கவிட்டாள்.

தூரத்தே பாட்டு கேட்பது போல் இருக்க தனது போனின் அழுகுரல் தான் என்பது மூளை எடுத்துரைத்தது. கண்களை திறவாமலே போனை எடுக்க கையை தூக்கியவன் கையானது எதிலே சிறைபட்டு விறைத்திருப்பது போல் தோன்ற, மெதுவாக கண்களை திறந்து பார்த்தான் முகிலன்.

மேகலா தான்!....
தன் தலைக்கு இரு கைகளையும் குடுத்து படுத்திருந்த அவனது கைகளிலே தலயை வைத்து படுத்திருந்தவள், தலகணியை இறுக அணைத்து தூங்குவதாக நினைத்து அவன் இடையினை இறுக பிடித்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

எங்கே போனின் சத்தத்தில் அவளது தூக்கம் கலைந்து விடுமோ என நினைத்தவன் மற்றைய கையினால் அதை அணைத்து விட்டு அவள் முகம் தனது முகத்திற்கருகில் தெரியவும்,
அவளை அசைக்காது அவள் புறம் மெதுவாக திரும்பி படுத்துக்கொண்டவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.

நிலா கூட தேய்ந்து வளரும், ஆனால் அவள் முகமானது செதுக்கிய முழுமதியையே தோற்கடித்து விடும். அழகாக இரண்டு மீன்களை மதியவளில் நீந்த விட்டதைப்போல் விழிகள். அதை இன்னும் எடுத்துக்காட்ட திருத்தப்படாமலே இயற்கையில் அழகான வாள் போன்ற புருவம், சிறிய நாசியாக இருந்தாலும் கொஞ்சம் நீளமாக அவள் முகத்திற்கு எடுத்த காட்டக்கூடிய மூக்கு, தூக்கத்தில் கூட சிறிதளவு புன்னகை சிந்தியவாறு இருந்த சிவந்த குட்டியான இதழ்கள், அதன் ஓரத்தில் எங்கே கண்பட்டு விடுமோ என கடவுளே அவளுக்கு வைத்தனுப்பிய குட்டியான கருநிற மச்சமானது பார்பவரை கவரும்.
அவளை கண்டவர்களை மீண்டும் ஒரு முறை பார்கத் தூண்டும் அழகிதான் அவள்.

ஆனாலும் தன்னுள் பெரிய ரகசியம் புதைத்து வைத்திருக்கிறாள் என்பது மட்டும் அவளது சில பார்வை மாற்றங்களில் அவனுக்கு புரியாமலில்லை.
எல்லோர் முகத்தை வைத்து அவர்கள் மனதை கண்டு கொள்ளும் வித்தை தெரிந்த முகிலனிடமே இவளிடம் அந்த கலை தோற்று விட்டது. அத்தனை அழுத்த காரியவள்.

ஆனாலும் அவனும் தன் தோள்வியை ஏற்றுக்கொள்ளவதாக இல்லை. இன்று தானே முதல் நாள். இனியும் என் கூடத்தானே இருக்க போகிறாள், எப்படியும் அதை தெரிந்து கொள்ளலாம் என்று தன்னையே குழப்பிக்கொண்டிருந்தவன்
எங்கே தன் தேவையில்லாத சிந்தனையால் அவளின் இந்த அருகாமையை தவற விட்டு விடுவோமோ என நினைத்து, அதை ஓரம் கட்டி அவள் அழகில் மூழ்கலானான்.

எங்கே அவன் சிந்தனை அவனை விட்டது.
மீண்டும் திருமண நாளை நினைவு படுத்த,
எதற்கு நான் இவளை அப்படி இரு இக்கட்டில் நிக்க வைத்து திருமணத்தை நடத்தினேன்?.
திருமணம் நின்றதற்கு சந்தோஷம் தானே படணும். அப்புறம் எதுக்கு இவளை வற்புறுத்தினேன்.
என தன்னையே கேள்வி கேட்டவன், முதல் முதலில் அவளை கோவிலில் மோதிவிட்டு எங்கே திட்டுவாளோ என நினைத்திருக்க, அவளோ தன்மேல் தான் பிழை என்று இருவரின் தவறையும் தன்மேலே போட்டுக்கொண்டு அவனிடம் மன்னிப்பு வேண்டி தனது போனிலேயே குறியாக இருந்ததும். மற்றவர்களை விட அவள் மாத்திரம் அவன் கண்ணுக்கு எந்தவித பந்தாவும் இல்லாமல், அழகி என்று கொஞ்ச கூட கர்வமில்லாமல் சாதாரண உடையில் மிக எழிமையாக இருந்தது. அவனுக்கு அவளை பிடித்துப்போக, முன்னால் நடந்த அனுபவங்களினால் அவளை தன் மனதில் இருந்து ஓரம் கட்டி வைத்தான்.

பின் தாயின் வற்புறுத்தலால் பெண் பார்க்கும் படலம் நடைபெற அங்கு சென்றவன், அவள் கையில் காஃபி தட்டுடன் வர அவள் தான் பெண் என்று நினைத்து ஏதோ மனதில் சந்தோஷமாக உணர்வு தோன்ற, ஒரு வித திருப்தி அவனிடம்.

அன்று கோவிலில் நடந்த விபத்தில் தனக்கு இவள் நினைவிருப்பது போல் இவளுக்கும் தன்னை நினைவிருக்குமா? என்று தான் அவளை ஆராச்சிப்பார்வை பார்தவாறு இருந்தான்.

ஆனால் அவளோ அவனை கண்டது போல் எந்த பாவனையும் இல்லாமல் மற்றவர்களுக்கு காஃபியை கொடுத்தது போல் தான் ஒரு சின்ன சிரிப்புடனே தனக்கும் தந்துவிட்டு போவதை பார்த்தவனுக்கு சிறிய ஏமாற்றம் மாத்திரமே மிஞ்சியது.
ஆனால் அவன் அன்னையோ "எங்கம்மா பொண்ணு?.." என கேட்டதும் தான் இவள் பெண் இல்லை என உணர்ந்தவனுக்கு ஏமாற்றமாகி பாேனது.

மேகலா தான் தன் மனைவி என்றிருந்த சந்தோஷம் பறந்து போய் மேகலாவையே ஏக்கமாக பார்க்க, அவளோ அவனை கண்டு கொண்டது போல தெரியவில்லை.
இவளும் மற்ற பெண்கள் போல தான்.
என் கலரை வைத்தே மனமும் இருட்டாக இருக்கும் என்று நினைத்திருப்பாள். என நினைத்தவன் அவளை பற்றி நினைப்பதை தவிர்த்துக் கொண்டான்.

இனி நடப்பவை விதியின் கையில் என நினைத்து பானுவை மணக்க ஒப்புக்கொண்டான்.

ஆனாலும் மேகலாவின் ஒவ்வொரு அசைவுகளையும் அவன் கவணிக்காமல் இல்லை. அவளின் பேச்சு, நடத்தை, சாறி விஷயத்தில் கூட மற்றவர்களின் கருத்திற்கு மதிப்பு கொடுத்து தனக்கு பிடித்ததை ஒதுக்கி வைத்தது, தங்கை தனியாக இருப்பாள் என்று அவளை விட்டு வர மறுத்தது. என தங்கை மேல் இருந்த பாசம், பெற்றவர்களை மதிப்பது என்று அவளை இன்னும் ரசிக்க வைத்தது.

ஏன் இன்று சர்மியை சுந்தரி திட்டும்போது கூட அவளை திட்ட விடாது தன் உடல் நிலையை கூட பெரிது படுத்தாமல் தன் மேல் தான் தவறு என்று கூறியது. தன்னிடம் மட்டும் பேச நடுங்குபவள் தாயிடமும் ,சர்மியிடமும் வந்த ஒரே நாளில் உரிமையோடு நடந்து கொள்வது என அவள் குணங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தவன் திடீர் என்று கனவில் இருந்து எழுந்தது போல் திடுக்கிட்டான்.

"அப்போ எனக்கு இவளை பிடிச்சிருக்கா?... அதனால் தான் இவள் பற்றிய நல்ல விஷயங்களை ஒவ்வொன்றாக கவனித்தேனா?.. அவளை திருமணத்தில் வற்புறித்தியதற்கும் காரணம் இது தானா?..". என தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டவன்.

இருந்தும் ஒரு சில விஷயங்களை வைத்து அவளை மற்ற பெண்களில் இருந்து வேறுபடுத்த முடியாதே!... அவளை இப்போது தானே எனக்கு தெரியும். ஏன் இவள் வந்த இடத்தில் நல்லவள் போல் நடிக்கலாம் தானே!... என்று நினைத்தவன்.
இவள் நம்மிடம் நடித்து எதை சாதிக்க போகிறாள்?...
பானு தானே அம்மா பார்த்த பெண். இவள் எதற்கு நடிக்க வேண்டும்? என அந்த எதிர்மறையான சிந்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தவன்.
நேற்று அவள் அவனுடனான திருமணத்தை மறுத்தது நினைவு வர

"எதுக்கு இவ என்னை திருமணம் செய்ய மாட்டேன் என்றாள்?..
ஒரு வேளை தங்கை ஓடிய கவலையில் இருக்குமோ?.... இருக்காதா பின்னே?.... அந்த நிலையில் அவளுந்தான் என்ன செய்வாள்?...
ஆனால் திருமணத்தையே தான் வெறுக்கிறேன் என்றல்லவா அவள் சொன்னது போல் எனக்கு நினைவு!.
என்ன காரணமாக இருக்கும்?...
ஒருவேளை என்னை போல் காதலால் பாதிக்க பட்டிருப்பாளோ?..." என அவளைய வைத்த கண்கள் வாங்காமல் பல பதில் தெரியா.... தெரிந்து கொள்ள நினைக்கும் கேள்விகளை மனதிலே அடிக்கிக் கொண்டிருந்தவன்.
அவள் உடலில் அசைவு தெரிய எங்கே தன்னை கண்டு விடுவாளோ!.. என தூங்குவதை போல் கண்களை முடிக்கொண்டான்.


சங்கமிப்பாள்....
 

Balatharsha

Moderator
பாகம். 21.

அவள் உடலில் அசைவு தெரியவும் கண்களை மூடிக்கொண்டவன் தூங்குவதை போல் நடிக்க.
கண்விழித்தவள் அருகில் முகிலன் முகம் தெரிய, முதலில் குழம்பியவள் பின் அவன் கட்டிலில் தூங்கியது நினைவு வந்தது.

"நல்லவன் போல பேசிட்டு இப்போ எப்படி ஒட்டிட்டு படுத்திருக்கிறான் பாரேன்." என தான் அவன் பக்கம் வந்து அவனை கட்டிக்கொண்டு தூங்கியதை அறியாது வேகமாக அவன் எழுவதற்கு முன் எழுந்தவள் அப்போது தான் கவனித்தாள் அவனை அணைத்து தூங்கியது தான் என்பதை.

"ஐய்யையோ!.. நான் தான் இவன்கிட்ட போனேனா?... நல்ல வேளை இந்த மூஞ்சூறு எழுந்திரிக்கல்ல. எழுந்திருந்தா தூங்கும் போது பேசின பேச்சுக்கு இப்போ நானே கட்டிப்பிடிச்சு தூங்கிறதை பாத்திருந்தா முன்னாடி சொன்னத போல தன் மேல மயங்கித்தான் கட்டிபிடிச்சேன் என்பானே!....." என புலம்பியவள்.

"முதல்ல இந்த பழக்கத்தை மாத்தணும். எப்போ பாத்தாலும் தூக்கத்தில எதையாவது கட்டிபிடிச்சிட வேண்டியது. நல்ல வேளையா இன்னைக்கு எழுந்துக்கல. நாளை என்னையே அறியாமல் இப்படி தூங்கும் போது இவன் முன்னாடி எழுந்திட்டான்னா என்னை என்ன நினைப்பான்?." என எண்ணியவள், உடனே

"ஓ...... அம்மணிக்கு இப்படி வேறு நினைப்பிருக்கோ?... இன்னைக்கு மாத்திரம் தான் இந்த கட்டிலில தூங்கிறது. இனி நினைச்சுக்கூட பாக்க கூடாது. அவனே உன்னை கட்டில்ல தூங்க வைக்கிறதுக்காக உன் தன்மானத்தை சீண்டினாலும் அதை காதிலயே வாங்காம தரையிலயே படுத்திடணும்." என்று மெதுவாக புலம்பினாலும் தெளிவாகவே புலம்பியவாறு தூங்கும் அவனையே பார்த்தவள்.

"பாரு எப்படி தூங்கிறான்னு?... பகல்ல கூட கும்பகர்ணன் போல தூங்கிட்டு."என இதற்கு முன் தானும் இதைத்தான் செய்தேன் என்பதை மறந்து அவனை திட்டுவதற்காக வார்த்தை தேடியவள்,

"பனை மரத்துக்கு பிறந்திருப்பான் போல, கட்டில் கூட போதாம கால் அந்தரத்தில தொங்கிட்டு இருக்கு. மற்றவங்களுக்கு ஊத்தி வைச்ச பாலெல்லாத்தையும் இவனே திருடி குடிச்சிருப்பான் போல. அதான் அளவுக்கு மீறி வளந்திருக்கான்.
பேசாமல் இந்த கட்டிலை ஒதுக்கிட்டு தனக்கு ஏத்த மாதிரி கட்டில் செய்து போட்டிருக்கலாம்.

அது சரி இவனுக்கு கட்டில் செய்யிற மரத்தில இரண்டு கட்டில் செய்திடலாம் என்னு மாட்டேன் சொல்லிருப்பாங்க." என்றவள்,

"மூஞ்சிய பாரு தூங்கும் போது கூட உர்றான் குட்டானாட்டம் மூஞ்சிய வைச்சிட்டு.
இவனுக்கு சிரிக்க தெரியுமா தெரியாதா என்று கூட தெரியலையே!." என யோசனையினூடே அவனை ஆராயளானாள்.

திருமணத்திற்காக ஒட்ட வெட்டப்பட்ட மீசை சின்னதாக ட்ரீம் செய்யப்பட்ட தாடி என பார்த்தவாறு வந்தவள்
"அதென்னா மீசையை காணல்ல?... தாடி மாத்திரம் வைச்சிருக்காரு.
மீசை இருந்தா எப்பிடி இருக்கும். வரைஞ்சு பாத்திடுவாேமா?.. வரையும் போது எழுந்திட்டா?.... ஐயோ வேண்டாம் பேசாமல் மனசுக்க வரைஞ்சு பாத்திடலாம்." என நினைத்தவளாய் கண்களை மூடி கட்பனையில் கொண்டு வந்தவள்,

"இருந்தாலும் நம்ம வசிகரா கட்டபொம்மன் வடிவேல் அளவு கூட இவன் வரமாட்டன்." என தனக்குள்ளேயே கூறியவள் பேச்சினில்
கண்கள் மூடி தூங்குவது போல் பாவனை செய்த முகிலனுக்கு சற்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"இவ வேற நேரங்காலம் தெரியாமல் காமடி பண்ணிட்டு இருக்கா. என அவன் புழுங்கிக்கொண்டிருக்கும் நேரம் அவன் கையிலிருந்த போன் மீண்டும் ஒலிக்க.

அவன் கையை பார்த்தவள் "தூங்கும் போது கூட போன் வைச்சிட்டு தான் சாரு தூங்குவாரோ?" என நினைத்தவள், எங்கு போன் சத்தத்தில் எழுந்து விடுவான் என அவசரமாக முகம் கழுவ பாத்ரூமுக்குள் புகுந்தாள்.

முகத்தை கழுவி வெளியே வந்து பார்க்கும் போது முகிலனை அவன் அறையில் காணவில்லை.
வெளியே பேச்சுக்குரல் கேட்கவும் மாடியில் இருந்து இறங்கி வந்தவளை பார்த்த சுந்தரி.

"வாம்மா எழுந்தாச்சா?.... இப்போ உடம்புக்கு பறவாயில்லையா?..." என அக்கறையோடு வினவ.

"பறவாயில்லை" என தலை அசைத்தவளை பார்த்த முகிலனுக்கு தான் நித்திரையாக கிடப்பதாக நினைத்து அவள் பேசியவை நினைவில் வந்து
இதழில் சிறிய சிரிப்பொன்று தந்துவிட்டு போனது. அதை யாரும் கவனிக்காமலில்லை. எதுக்கு இப்போ சிரிக்கிறான் என்பதே அவர்கள் கேள்வியாக இருக்க. அது புதுமண தம்பதியருக்குள் நடந்ததாக இருக்கும் என்று நினைத்தவர்கள் விட்டபேச்சை தொடர்ந்தனர்.

"ம்மா....! சொன்னா புரிஞ்சுக்கங்கம்மா!... அவசரம போயே ஆகணும். இங்க வந்தே ஒரு மாதமாச்சு. இதுக்கு மேலேயும் அங்கே போய் வேலை கவனிக்கலனா யாருமே வேலைய சரியாக செய்ய மாட்டாங்க. முக்கியமில்லாத வேலைனா பொறுமையா போய்க்கலாம். ஆனா இது முக்கியமான மீட்டிங்க்ம்மா.
போய்ட்டு உடனேயே வந்திடுறேன்" என்க.

"டேய்!.. கல்யாணம் ஆகி இரண்டு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள வேலை அது இதுனு சொல்லி வெளியில கிளம்பினா எப்படிடா?..
குறைஞ்சது இன்னும் இரண்டு நாள் அதிகமா மேகலாவோடு இருந்திட்டு போடா!.. இல்லைன்னா அவளையும் உன்கூட அழைச்சிட்டு போ!.. என்க.

மேகலாவிற்கு அத்தையின் பேச்சில் உடன்பாடு இல்லை.
அவளுக்கு யாழ்பாணத்தை அவ்வளவிற்கு பிடிக்கும்.
போர் ஓய்ந்து ராணுவகட்டுப்பாட்டில் இருந்த காணிகளை விடுதலை செய்ததும் சொந்த ஊரிற்கே போய் விடலாம் என்ற தாய் தந்தையிடம் "அங்கே வேண்டாம். இங்கேயே இருந்து கொள்ளலாம்." என்று கூறியதே மேகலா தான்.

அவளுக்காக தான் அவள் குடும்பம் கூட சொந்த ஊரையும் சொந்தங்களையும் விட்டு இங்கேயே இருந்து விட்டார்கள்.
அதன் பிறகு அவள் இதுவரை யாழ்பாணத்தை விட்டு பிற ஊர்களுக்கு போனதில்லை.
அது ஒரு மாத பயணம் என்றாலும் சரி .ஒரு நாள் பயணம் என்றாலும் சரி.
அத்தை கூறியதில் விருப்பம் இல்லை என்றாலும் எதுவும் கூறாது மௌனமாக நின்றவளை பார்த்தவன்,

"வேண்டாம்மா! அவ உங்க கூடவே இருக்கட்டும்" என்க.

இவர்கள் பேச்சுக்கிடையில் மதியினது ஃபோன் பல முறை அடிப்பதும், மதி அதை கட் பண்ணி வைப்பதுமாக இருந்தாள்.
சுந்தரியோ ஒரு கட்டத்துக்கு மேல் பாெறுக்க முடிமாமல்,

"என்ன மதி விடாமல் ஃபோன் அடிச்சிட்டே இருக்கு?.. என்னனு கேட்டுட்டு தான் கட் பண்ணேன்.
யாராவது அவசரத்தில அடிச்சிருக்க போறாங்க" என்க.

"அது அவ்வளவு அவசரமான கால் எல்லாம் இல்லம்மா. என் ஃபிரெண்ட் தான். என்க.

மீண்டும் ஃபோன் வர இம்முறை முகிலனே தொடங்கினான்.

"மதி...!.." என்று கோபமாக அழைத்தவன்.
"முதல்ல அந்த ஃபோனை பேசிட்டு வா!... இல்லையா அதை உன் அறையில் வைச்சிட்டு வா!...
இப்படி பேசிட்டிருக்கும் போது இத்தனை முறை ஃபோன் அடிச்சா அதோட சத்தம் இங்க இருக்கிறவங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்னு உனக்கு தெரியாதா?.
அதை விட இப்போ புதுசால்லாம் ஃபோன் வர ஆரம்பிச்சிருக்கு. உனக்குத்தான் நல்லதில்லை." என தான் இதுவரை கவனித்ததை எச்சரிப்பது போல் கூற.

"அது யாருமில்லண்ணா!.. என் ஃபிரென்ட் தான். அவ காலேஜ் மாறப்போறாளாம்." என்றவள் "நான் என்னனு கேட்டிட்டு வரேன். இல்லனா விடாம அடிச்சிட்டிருப்பா." என தமையனிடமிருந்து தப்பிப்பத்காக மழுப்பி விட்டு அந்த இடத்தை விட்டகன்றாள்.
சிறிது நேரம் கழிந்து வந்தவள்,

"அண்ணா நானும் இங்கேயே ஒரு காலேஜில சேர்ந்து படிக்கிறேனே பிளீஸ்..!" என கெஞ்ச.

"எதுக்குடி?.. அவனவன் கொழும்பில் படிக்க தவம் கிடக்கிறான். ஏன் நீயும் அப்பிடித்தானே அடம்பிடிச்சு உங்க அண்ணன் சிபாரிசில் அங்க சீட் வாங்கின.
இப்போ என்னன்னா அங்க முடியது. இங்க தான் படிப்பேன்னு கெஞ்சிற!" என்று சுந்தரி கேட்க.

"ம்மா ஃபிளீஸ்ம்மா!.. அங்க இருந்த என்னோட ஒரே ஒரு ஃபிரென்ட் வேணி கூட இப்போ காலேஜ் மாறிட்டா. எனக்கு அங்க யாருமே பெரிசா டச்சில இல்லை. இங்கனா மொழி பிரச்சினைனு வராது." என்க.

"இது என்னடி புது கதையாக இருக்கு?.. உனக்கு தான் சிங்களம் தலைகரணமா தெரியுமே!..
பிறகு உனக்கென்ன மொழி பிரச்சினை" என்ற சுந்தரியிடம்.

"அண்ணா...! அம்மா குறுக்கு கேள்வி கேட்டு என்னை குற்றவாளி போல பாக்கிறாங்க.
நீங்களாவது சொல்லுங்கண்ணா. நான் இனிமேல் எங்கேயும் போகல. இங்கேயே படிச்சுக்கிறேனே!..." என்று அவனருகில் அமர்ந்து அவன் தாடையை பிடித்து கெஞ்சவும், அவளது கெஞ்சல் அவனிடம் நன்கு வேலை செய்தது.

"சரி.. சரி... என்ன உனக்கு இங்க படிக்கணும் அவ்வளவு தனே!... அம்மாவுக்கும் கொழும்பு வாழ்க்கை சரி வரல. நீ இங்கேயே படிச்சா அவங்களும் உனக்கு துணையா இங்கேயே இருந்துப்பாங்க." என்கவும்.

"அது சரிடா!.. ஆனால் இவ இப்போ படிக்கிற காலேஜ் இலங்கையிலயே பெரிய காலேஜ்டா!.. அதை விட்டு இங்கே...." என அவர் கூறவந்ததை இடை மறித்தவன்,


"ம்மா நல்லா படிக்கிறவங்க எங்க படிச்சாலும் நல்லாத்தான் படிப்பாங்க. அவதான் ஆசை படுறாளே!.. படிக்கட்டும்.." என்றவன்.
"ரண்டு நாள்ல என்கூட கிளம்பு மதி.
உன் காலேஜ்ல பேசிட்டு உன்னோட சர்டிபிகேட் எல்லாம் எடுத்துவந்து இங்க சேர்த்து விடுறேன்." என்றான்.

இவர்கள் பேச்சில் போது தமையன் தங்கைக்கு இடையில் இருக்கும் நெருக்கத்தையும், அதிக பாசத்தினையும் கவனித்துக் கொண்டிருந்த மேகலா.
இவர்கள் பேச்சில் தான் எதுவும் பேசுவதற்கில்லை என எழுந்து சமையலறை சென்றவள் அனைவருக்கும் சேர்த்தே தேனீர் கலந்து கொண்டு வந்தவளை,

"என்னடாம்மா!.. நாங்க இங்க உன் புருஷன் ஊருக்கு கிளம்ப போறானேன்னு அவனை போக விடாமல் தடுக்கிறதுக்கு பேசிட்டு இருக்கோம்.
நீ என்னடானா எதுவுமே பேசாமல் சாவகாசமாய் கிச்சன் போய் காஃபி கலந்து எடுத்து வர" என்றவர் முன் தட்டை நீட்டியவள்,

"அது அவரு இஷ்டம் அத்தை. அவசரம்னா போய் வரட்டுமேன். அங்கேயே இருக்க போறேன்னா சொன்னாரு.
என்ன வேலையோ அதை முடிச்சிட்டு இங்க தானே வரணும்." என எங்கே தன்னையும் அவனுடன் சுந்தரி அனுப்பி விடுவாரோ என்று அவள் முந்திக்கொள்ள.

"அது சரி!.. எனக்கென்னு வாய்ச்சிருக்கிறது பூராவும் ஒரே மாதிரிய இருக்கு. என் புள்ளைக்கேத்த மருமக தான். என்றவர்,

அப்புறம் என்னடா!.... அவளே சம்மதிச்சட்டால்ல கிளம்பு!... ஆனா வேலையே கதினு கிடக்காம சீக்கிரம் வந்திடு!.." என கூறியவர், அவள் தந்த காஃபியை ஒரு மிடர் குடித்து விட்டு,

"என்னம்மா இது?.. இங்கே இருந்த காஃபி பவுடர் தானே!.." என சந்தேகமாக வினவ.
அவர் கேட்ட தோறணையில்
ஒருவேளை காஃபி பவுடர் என்று மாறி வேறு எதையாவது போட்டு விட்டேனோ!... என குழம்பியவள்,
"இல்லையே காஃபி போடும் போது காஃபி வாசனை வந்திச்சே!... அப்புறம் ஏன் இப்படி அத்த கேட்கிறாங்க?... என அவளுமே குழம்பிப்போக.

அவளது முகத்தில் தெரிந்த மாறுதல்களை பார்த்திருந்தவர்,
"பயப்படாதம்மா!.. நாங்க காஃபி போட்டா வாசனையோ இந்த ருசியோ வந்ததில்லை. அது தான் கேட்டேன்." என அவளை பாராட்டினார்.

தான் போட்ட முதல் காஃபியிலேயே அத்தையின் மனதை கவர்ந்து பாரட்டு வாங்கியதில் வெட்கத்தில் முகம் சிவந்தவள்.
மற்றவர்களுக்கு கொடுக்க.
" பாத்தும்மா காஃபி சூட இருக்கு. காலில் கொட்டிட போகுது." என எச்சரிக்க
அதை ஆமோதிப்பதாய் தலையசைத்தவள்,
மிக கவனமாகவே அனைவருக்கும் கொடுத்தாள்.

சுந்தரியை போலவே அனைவரும் அவளை பாராட்ட.
முகிலனுக்கும் அவள் கைகளினால் போட்ட காஃபியை ருசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது.
என்ன செய்ய அனைவரை தாண்டி இறுதியாக இருப்பவனுக்கு இறுதியாகத்தானே கொடுக்க முடியும்.

மதிக்கு கொடுத்தவள், இறுதியாக இருந்த கப் காஃபி தழும்பாமல் மெதுவாக தட்டையே கவனித்தவாறு இரண்டு அடிகள் எடுத்து வைக்கவில்லை. எதுவே அவள் கால்களை தட்டி விட.
முகிலனை நோக்கி போனவள் அவன் மீதே தடக்குண்டு விழுந்ததில் அதில் இருந்த சூடான காஃபியும் அவன் மேல் கொட்டியது. பாவம் அவன் கெட்ட நேரம் பனியன் மாத்திரமே அணிந்திருந்ததனால் நேரடியாக நெஞ்சு பகுதியில் சிந்தியதுமில்லாமல், அவன் மீது விழுந்தவள் கைகளிலும் சிந்தியது.

எதிர்பாராமல் நடந்த சம்பவத்தால் பதறியவாறு அவன் மேல் இருந்து எழுந்தவள் எங்கு அவனுக்கு சகாயமாகிவிடுமோ என பயந்தவளாய் அவன் மேலிருந்த காஃபியை கைகளால் தட்டி விட,

"ஏய்....! என்ன நாடகமா போடுற?.... வேணும்னு தானே அண்ணான் மேல காஃபியை கொட்டின?.". என்று சத்தம் போட்டவாறே அவளை இழுத்து தள்ளி விட்டவள் தமையன் அருகில் வந்தமர்ந்து,

"என்னண்ணா காஃபி கொட்டின இடம் இந்தமாதிரி சிவந்திருக்கு." என்று அவன் நெஞ்சு பகுதியை சுட்டிக்காட்டி,
"எல்லாம் இவ உங்கள பழி தீர்க்க செய்த நாடகம்ணா!..
இப்போ இவளை யாராவது காஃபி கேட்டோமா?... முன்னாடியே இப்படி செய்தா இப்படி ஆகும்னு சரியா பிளான் போட்டு செய்திருக்க." என அவள் மேல் எரிந்து விழ.

"இல்லை..... நிஜமா அந்த மாதிரில்லாம் இல்லவே இல்லை. என் காலை எதுவோ தட்டி விட்டதனால் தான்." என்று தட்டி விட்ட இடத்தை திரும்பி பார்த்தவளுக்கு, அங்கு தட்டி விடும்படி எதுவுமே இல்லை என்றதனால் ஏமாற்றமாக முகிலன் புறம் திரும்பியவளிடம்.

"என்ன அடுத்த கதை ரெடி பண்ணிட்டியா?... செய்யிறதையும் செய்திட்டு பூதம் வந்து இவளை தட்டி விட்டிச்சாம்." என கேலியாக பேச.

"நிஜமாவே நானா வேணும்னு எதையும் செய்யல்ல. எதுவோ தட்டினதால தான்....." என அவள் மீண்டும் அதையே சொல்ல.

"நீ இப்போ என்ன சொல்ல வர?... நீ போன பாதையில் நான் தான் இருந்தேன். அப்போ நான் தான் உன்னை தட்டி விட்டு என் அண்ணனை நானே காயப்படுத்தினேன்னு என் மேலயே பழியை போட பார்க்கிறாயா?...." என்று அவள் ஆங்காரமக கத்த.

"ஐயோ!.. நான் ஏன் உங்க மேல பழி போடணும்?.. . என்னை நம்புங்க!.. நிஜமாவே எதுவோ தடக்கிச்சு. அது உண்மை." என சொன்னதையே திரும்ப சொல்ல.

"கொஞ்சம் அமைதியா இருக்கிங்களா?.." என இம்முறை சத்தம் போட்ட சுந்தரி.
"இப்போ உங்க இரண்டுபேருக்கும் இது எப்படியாச்சு எங்கிறது தான் முக்கியமா?.. போய் மருந்து எடுத்து வா சர்மி." என சர்மியை அனுப்பியவர். மதியின் புறம் திரும்பி,

"எதுக்கு இப்ப உன் அண்ணிகூட வீணா வாதம் செய்திட்டிருக்க. என்னமோ தெரியாமல் நடந்ததை பெருசு பண்ணிட்டு" என்றவரிடம்,

"இல்லையம்மா!. இவ என்மேலயே பழியை தூக்கி போட பார்கிறா" என அவள் கண்ணை கசக்கவும். இவ்வளவு நேரமும் சூடான காஃபியின் எரிச்சலை தாங்கிக்கொண்டிருந்தவனால் தன் தங்கை அழுவது தாங்க முடியாமல்,

"எதுக்கும்மா இப்போ மதியை அதட்டுறிங்க? தப்பு செய்தவ அவ. அவளை இப்போ யாராவது காஃபி கேட்டோமா?... பேசாமல் தன்னோட வேலையை பார்க்க வேண்டியது தானே!.." என்று தங்கையை சமாதாணம் செய்வதற்காய் பிழை அனைத்தையும் மேகலா மீது போட்டதும்.

தான் வேண்டுமென செய்யவில்லை என சொல்வதை யாரும் நம்பவில்லை. என்பது அவளுக்கு அழுகையை வர வைத்தது.
எங்கே அங்கேயே நின்றிருந்தால் உண்மையாகவே அழுது விடுவோமோ என்று நினைத்தவள்,
யார் முகத்தையும் பாராமல் தங்கள் அறைக்குள் ஓட.

மதியோ தான் வென்றாதாக நினைத்து ஓடும் அவளையே பார்த்து யாருக்கும் தெரியாமல் மர்ம புன்னகை சிந்தியவள்,

"இது என்னோட மூன்றாவது முயற்சி. இன்னும் உனக்கு நிறைய வைச்சிருக்கேன். இதுக்கே ஓடி ஒழிஞ்சிட்டா எப்பிடி?.. இன்னும் நீ நிறைய சம்பவங்களை பாக்க வேணாம்?... என்று மனதிலே நினைத்து கழுத்தில் இருந்த செயினை கடித்த படி அவளை எரிக்கும் பார்வை பார்த்து நின்றாள்.

சங்கமிப்பாள்.....
 

Balatharsha

Moderator
பாகம். 22.


மாடி ஏறிச்செல்பவளையே பார்த்திருந்த முகிலனின் மார்பினில் சர்மி கொண்டுவந்த ஆயில்மன்ட் தடவி விட்ட சுந்தரி.

"அப்பு.....! உண்மை எதுன்னு சரிய தெரியாம அவமேல தப்பு சொல்லுறியேடா!... அவளை பாத்தா அப்பிடியா தெரியிது?. எவ்வளவு ஆசையா எல்லாருக்கும் காஃபி போட்டிட்டு வந்தா, நம்ம எல்லாரும் பாராட்டும்போது அவ முகம் எவ்வளவு சந்தோஷமா இருந்திச்சு.
அதே சந்தோஷத்தோடயும், எதிர் பார்ப்போடையும் தானே உன்கிட்டையும் வந்திருப்பா.

ஆனா நீ இவ பேச்சை கேட்டு, கட்டின பொண்டாட்டின்னு கூட பாக்காம வீணா பழிய தூக்கி போடுறியே!... அவ சொன்னது போல எதாவது தட்டியும் விட்டிருக்கலாம்ல்ல.
இது கொஞ்சம் கூட நல்லாவே இல்லடா!.. என் புள்ளங்கள இதுவரை எந்த தப்பும் செய்யாத நல்ல புள்ளங்களா வளத்திருக்கேன்னு தான் பெருமை பட்டுட்டிருந்தேன். ஆனா இன்னைக்கு எந்த பக்கம் நியாயம் இருக்குனு ஆராயாமலே சட்டென பழிய அவமேல போடுவேனு நினைச்சுக்கூட பாக்கலடா!..." என்றவர் இயலாமையில் ஒரு பெருமூச்சினை விட்டு எழுந்து சென்றுவிட்டார்.

மற்றவர்களும் ஒவ்வொருவராக அந்த இடத்தை விட்டு அகல,.

மதி மேகலாவை தன் கால் கொண்டு தட்டி விட்டது, முகிலனுக்கு தாய் அறிவுரை கூறியது என ஒரு சீன் விடாமல் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து ஓரமாக நின்று அவதாணித்துக் கொண்டிருந்தான் மயூரன்.

ஆனால் முன் வந்து உண்மையை கூறவில்லை. அவன் கூறினாலும் அந்த வீட்டில் அவன் பேச்சை நம்புவார்களா?. என கேட்டால் அது என்னமோ சந்தேகம் தான்.

ஆம்!.. அது தான் உண்மை!... சிறிது நேரம் அவனுக்கும் பேச அனுமதி வழங்கபடுவது என்னமாே உண்மை!.. ஆனால் அதை கேட்பதோடு சரி. அதை யாரும் நடைமுறை படுத்துவதில்லை. காரணம் அவன் முன்னர் செய்த தவறுகளே!....
அதை திருத்திக்கொள்ள அவனுக்கு யாரும் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்பதைவிட,
எங்கே தான் கேட்டால் அதற்கு மறுத்து விடுவார்களோ!.. என அவனும் கேட்கவில்லை.

மதியினுடைய சதி வேலைகளை பார்த்துக்கொண்டிருந்த ஒரே சாட்சி மயூரன் தான்.
அவனும் அந்த வீட்டில் சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாயே திறப்பான். எல்லோரையும் பார்து ஒரு அலட்சிய சிரிப்பொன்றை சிந்திவிட்டு அவனும் அந்த இடத்தைவிட்டகன்றான்.

அனைவரும் சென்றதும் அதே இடத்தில் இருந்த முகிலனுக்கோ மேகலா சொல்வதை நம்பவும் முடியவில்லை.
நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
பழி வாங்குபவள் எதற்க்கு இத்தனை பேர் முன் செய்ய வேண்டும்?..
இத்தனை பேரின் முன்னால் செய்தால் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்று தெரியாத குழந்தை அவளில்லையே!..
ஆனால் எதுவோ தட்டி விட்டது என்று சொல்கிறாளே!...
இங்கு தட்டும் அளவிற்கு எதுவுமே இல்லையே!...

மதியை தவிர அவள் கடந்து வரும் பாதையில் யாரும் இல்லை. என் மேல் உயிரையே வைத்திருக்கும் தங்கை இந்த மாதிரி செய்யவாளா?... நிச்சயமாக இல்லை. என எல்லா பக்கமும் யோசித்தவனுக்கு விடையே கேள்வியாகிப்போக.

எப்போதும் போல் மேகலா அவனுக்கு புரியாத புதிராகவே தெரிந்தாள்.

சுடு காஃபி பட்ட இடம் எரிச்சல் எடுக்க, அதை குனிந்து பார்த்தவன். அந்த இடம் ஆயில்மன்ட் போட்டதனால் நீர்கொப்பளம் போடவில்லை.
ஆனால் வெந்ததற்கு அடையாளமாக சிவந்திருந்தது.

தன் பேசிய வார்த்தையின் தாக்கத்தால் முகத்தை கூட தன் புறம் திருப்பாமல் போனவளை நினைத்தவன்,
ஒரு வேளை அழுதிருப்பாளோ!.. என்ற எண்ணம் வர. சரி சமாதாணம் பண்ணுவோம். என தன் அறை சென்றான்.

மேகலாவோ எதுவும் நடவாததை போல் அறையில் இருந்த இருக்கையில் அமர்ந்ருந்தவள். முகிலனின் வருகை உணர்ந்து அவனை பார்பதை தவிர்த்து கண்ணாடி மேசை மேல் கலைந்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக அடுக்கி வைப்பதை பார்த்தவன்.

அவள் அருகில் வந்து
"என்மேல கோபமா?.." என்க.
அவனை பாரமலே "இல்லை" என்பதாக தலை அசைத்தாள்.

அவளின் பாராமுகம் கவலயை தர.
"மேகலா.....!" என்றழைத்தவனிடம்
இம்முறை "சொல்லுங்க" என்றாள் அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவாறு.

அவனுக்கோ பெரும் ஆர்ச்சரியம்.
தான் ஏசியதில் அழுதிருப்பாள் என நினைத்தால், அழுததற்கான சிறு அறிகுறி கூட இல்லாமல் இலகுவாக நின்றிருந்தாள்.
அவளையே ஆராட்ச்சி பார்வை பார்த்து கொண்டிருந்த முகிலனை சுயத்திற்கு கொண்டுவரும் பொருட்டு.

"கூப்பிட்டிங்க. அப்புறம் எதுவுமே பேசாம என்னையே பார்த்திட்டு நிக்கிறிங்க. சொல்லுங்க." என்க.

"அது.... ஒன்றுமில்லை." என்று அவள் தெளிவை கண்டு குழம்பி தடுமாறிட,

"ம்....." என்ற ஒற்றை சொல்லுடன் தான் பார்த்த வேலையை தொடர்ந்தாள்.

அவள் அடுக்கும் பொருளையே பார்த்தவன் அப்போது தான் அவள் கையை கவனித்தான்.
மதி தட்டியதில் மேகலாவின் கைமீதும் சுடு காஃபி ஊற்றியே முகிலனில் தெறித்தது.
அதன் சூட்டில் அவள் பெருவிரலோடு சேர்த்து அதன் கீழும் சிறு பகுதி பொங்கி நீர் கோர்த்துப்போய் இருந்தது.

ஆனால் மேகலாவோ அதை சட்டை செய்யமால் தன் வேலையே குறியாக இருக்க.
அவள் கையினை எதிர்பாரா சமயம் பிடித்தவன்,

"என்ன மேகலா இது?.. உனக்கு இப்படி பொங்கியிருக்கிறது கூடவா தெரியல்லை. இப்படியே விட்டா செப்டிக்காகிடும்" என்றவன் அவளை இழுத்து வந்து கட்டிலில் அமர்த்தி, கீழே ஓடிச்சென்று மருந்தை எடுத்து வந்து மெதுவாக அதன் மேல் போட்டுவிட்டு டாக்டருக்கு ஃபோன் செய்தான்.

தனக்கே இவ்வளவு எரிச்சலாக இருக்கும் போது அவளுக்கு எந்தளவு வலியும், எரிச்சலும் இருக்கும் என நினைத்தவன்.

"எதுக்கு மேகலா உனக்கும் காஃபி கொட்டினது சொல்லாம மறைச்ச?....
எனக்கிருக்கிற போல தானே உனக்கும் வலிக்கும்.
நானும் உன்னை புரிஞ்சுக்காம உன் மேல தான் தவறெங்கிறது போல பேசிட்டேன்.
நீயும் அதை பெரிசு படுத்தாம அமைதியாவே வந்திட்டியே!.... உன்மேல தவறில்லனா நின்னு நிருபிச்சிருக்கலாமே!.." என்றவனை இயலாத பார்வை பார்த்தவள்.

"எப்பிடி நிருபிக்கிறது?... அது தான் எனக்கு எந்த ஆதாரமுமே இல்லையே.
அதை விட இங்க என் பேச்சை நம்பிறதுக்கோ, கேட்கிறதுக்கோ யாருமில்லை எனும்போது யாரு கிட்டை என்னத்த சொல்லி எதை நிரூபிக்கிறது?. எனக்கு உரிமையில்லாத இடம் வேற, எதற்கு சும்மா நின்று வாதாடி என் மனநிலையை கெடுத்து கொள்ளணும்?.....
அதோட இதெல்லாம் எனக்கு பெரிய காயமே இல்லை. இதை விட பெரிய காயத்தை சுமந்து அந்த வடுவோடு வாழ்ந்திட்டு இருக்கேன். இந்த வலி எல்லாம் என்னை எதுவும் செய்யாது." என்றவள் எழுந்து கொள்ள.

கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதை தான் அவள் அப்படி கூறுகிறாள் என நினைத்தவன்.

"சரி நீ இந்த கையோட எதுவும் செய்ய வேணாம். கொஞ்சம் ஓய்வெடு!.. இன்னும் கொஞ்ச நேரத்தில டாக்டர் வந்திடுவாரு. அதுவரை நான் வெளிய இருக்கேன்." என்றவன் வெளியேற.

மேகலாவும் அங்கு என்ன நடந்தது?.. எப்படி தான் தட்டுபட்டேன்.? என்பதை சிந்திக்க தொடங்கினாள்.
தான் வந்த இடத்தில் எதுவுமில்லை. ஆனால் மதி மாத்திரமே இருந்தது நினைவு. சரியாக இரண்டடி எடுத்து வைத்து மற்றைய கால் எடுக்கும் போது தன்னை எதுவோ தடக்கியது அதுவும் மதியில் புறம் இருந்த கால் தான் தடக்கியது.
எப்படி பார்தாலும் மதிதான் ஏதுவோ செய்திருக்கிறாள்.
ஆனால் தமையனுக்கு காயப்படும் படி எதற்கு அவள் செய்ய வேண்டும்?.. அவளுக்கும் எனக்கும் என்ன முன் விரோதம்?.. இதுவரை நான் அவளை பார்த்தது கூட இல்லை. முதல் முறை முகூர்த்த புடவை எடுக்கும் போதுதான் பார்த்ததே.
அப்போது நன்றாக தானே பேசினால். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் என்னை பார்க்கும் விதமே சரியில்லை என்பதை சரியாக கணித்தாள்.

ஆனால் அவள் மேல் சந்தேகபட எதுவுமே இல்லாமல் போக அந்த எண்ணத்தை தவிர்த்தாள்.

டாக்கர் அவள் அறை நுழைய, அவர் பின்னால் முகிலனும் நுழைந்தான்.
டாக்டரை கண்டதும் எழுந்து கொண்டவளை பார்த்து.
"இரும்மா!...." என்றவர் அவள் காயத்தை பார்த்து "நல்ல சூடு போல!... இப்படி பொங்கி இருக்கு" என்று அதன் மேல் பூச ஆயில்மென்ட் கொடுத்தவர்.

"இதை பூசினா நீர் கொப்பளம் உடைக்கும். காயம் ஆறும் வரை தொடர்ந்து பூசுங்க." என்றவர், டிடி இன்ஜெக்ஷன் போட்டு விட்டு. உள்ளே குடிப்பதற்கும் மருந்து எழுதிக் கொடுத்தார்.
ஊசி ஏற்றும் போது எல்லோரும் பயப்படவது போல் மேகலாவும் பயப்படுவாள் என்று முகிலன் எதிர்பார்க்க, அவளோ சிறிதும் முகம் சுழிக்காது சிரித்தபடி இருப்பதை கண்ட இருவருக்குமே ஆர்ச்சர்யமாகி போனது.. டாக்டரோ நேரடியாக கேட்டு விட்டார்.

"நீ எல்லாரையும் விட ரொம்பவே வித்தியாசமான பாெண்ணும்மா!... எனக்கு தெரிஞ்சு ஊசினா யாருன்னாலும் பயப்படுவாங்க. நீ பயம் என்கிறதே இல்லாம இயல்பா சிரிச்சிட்டு இருக்க." என்க.

அவரை சிரித்த முகத்துடனே ஏறிட்டவள்,
"முதல் தடவைனா பயம் வந்திருக்கும் டாக்டர்.
சின்ன வயசில் என் பாதி நாளே ஊசியோட தானே!... அதான் பழகிடிச்சு" என கூற.

"அப்படி என்ன நோய் வந்திச்சு?..." என்று கேட்டவரிடம்,
"அது செல் பீஸ்(குண்டில் பாகம்.) பட்டிச்சு டாக்டர்." என்றவள் மருந்து சாப்பிடும் முறை எப்படி என கேட்க.

"அதிலே எழுதியிருக்கேன். மெடிக்கல்ல தரும்போது சொல்லியே தருவாங்க" என்றவர் முன்னைய பேச்சை மறந்து அவள் கேள்விக்கு பதிலளித்து இருவரிடமும் சொல்லிவிட்டு விடைபெற்றார்.

முகிலனுக்கு அவர் விடைபெற்று போவதில் கவனம் செல்லவில்லை. அவளுக்கு சிறுவயதில் காயம் பட்டது என்பதே அவன் முழுகவனத்தையும் ஆக்கிரமித்திருக்க.
அவளிடம் நேரடியாக கேட்டு விடுவோமா?.. எப்போ எந்த இடத்தில் காயம் பட்டது. என நினைத்தவன்.

வேண்டாம் பெரிய காயமாக இருந்திருக்காது. இப்பாேது அது முற்றாக மாறி இருக்கும். அப்படி இருந்தால் சொல்லி இருப்பாளே!.. என நினைத்தவன் அதை அப்படியே விட்டும் விட்டான்.

அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக பேசுவதில்லை மேகலா.
முடிந்த வரை தனது அறையிலே முடங்கிக்கிடப்பாள். தேவை என்றால் மாத்திரம் சர்மியிடமும், சுந்தரியிடமும் பேசுவாள்.
இரண்டு நாட்களில் முகிலனும் மதியும் கொழும்பு சென்று இன்றுடன் மூன்று நாட்கள் கடந்திருந்தது.

திருமணவிழா முடிந்து அவர்கள் உறவான பெரியப்பாவின் வீடு இவர்கள் வீட்டிற்கு அடுத்த வீடு என்பதால் அவர்களும் தங்கள் வீடுகளுக்கு சென்று விட.
யோகலிங்கமும் அரசியல் சந்திப்பொன்று இருப்பதாக வெளி மாவட்டம் சென்று விட்டார்.

சுந்தரியும் மேகலாவுமே தனித்து விடப்பட்டனர். இடையிடையே சர்மி வந்து அவர்களுடன் அரட்டை அடித்து செல்வாள்.
அன்றும் அப்படி அவள் அரட்டை முடிந்து சென்றதும்.
மேகலாவும் சமையலறை சென்று தோசை ஊற்றலாம் என்று அதன் ஏற்பாடுகளை செய்ய,
திடீர் என ஹாலில் இருந்து வந்த விழுந்து நொருங்கும் சத்தத்தில்
என்ன சத்தம்?.. என பார்க்க வந்த மேகலாவின் கண்ணில் வீசிங் அதிகமாகி மூச்சுக்கு திணறிக் கொண்டிருந்த சுந்தரியை கண்டவள்,

"அத்தை...!" என கத்தியவாறு அவர் அருகில் ஓடினாள்.
இதுவரை இப்படி ஒரு நோயை நேரடியாக பாத்திராத மேகலா பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல்

"அத்தை..! என்ன செய்யிதத்த?" என்று கேட்க.
அவரும் திணறியவாறே தன் கை பையை எடுத்து வரும்படி சொல்ல. அவளுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் அவரை சோபாமீதே சரிந்து படுக்க வைத்தவள் நெஞ்சை தடவி விட்டவாறு ,

"இப்போ சொல்லுங்க அத்த.!" என்றவளிடம் "என் கைபை அறையில் இருக்கு. அதை எடுத்து வா!..."என்க.
இம்முறை சுந்தரி நிதானமாக கூறியதால் ஒரு அளவு மேகலாவால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஓடிச்சென்று சுந்தரியில் பையை எடுத்து வந்தவள் அவளிடம் அதை நீட்ட.
தட்டு தடுமாறி பையினுள் கைவிட்டவர் அஸ்தலீன் பம்மை எடுத்து மூச்சை உள்ளிழுத்து அதை வாயில் சொருகி இருண்டு முறை புஷ் பண்ணியவர் நெஞ்சை தடவியபடி சாய்ந்து அமர்ந்து காெள்ள.

கிச்சனில் சென்ற மேகலா இளம் சூட்டு நீரை ஒரு கிளாஸ்ஸில் கொண்டுவந்தவள்,
அவர் சோபாவில் சாய்ந்து சோர்ந்து போய் அமர்ந்திருப்பதை கண்டு
அவர் கையை மெதுவாக பற்றியவள்,
.
"என்னத்த இது?... இப்படி கஷ்டப்படும் அளவு என்ன வருத்தம் இது?. மூச்சு விடக்கூட இப்படி சிரமப்படுறீங்க.."என்க..

சுந்தரியோ மூச்சு திணறல் நின்று களைப்பில் ஓய்ந்து கிடந்தவர், அவள் பதட்டம் கண்டு.
"எனக்கு ஒன்னும் இல்லைம்மா!... இடைக்கிடை இப்பிடித்தான். வீசிங் வரும். பம்ப் பாவிச்சதும் அடுத்த நிமிஷம் காணமல் போயிடும். இதுக்கா நீ இப்படி பயப்படுகிற?.." என்று அவளை தேற்றியவர்.
அவள் கையில் இருக்கும் கிளாசை பார்த்து "என்ன இது?.." என்க.

"சுடு தண்ணீ அத்த!.. இதை குடிங்க கொஞ்சம் நல்லாயிருக்கும்' என்க.
அதை வாங்கி பருகிய சுந்தரி.

"இரவு சாப்பாட்டுக்கு தோசை ஊத்துறேன்னு போனியே ஊத்திட்டியா?..."

"எங்க?.. அதுகுள்ள தான் உங்களுக்கு இப்படி ஆகிடிச்சே!.." என்றதும்.

"சரிம்மா!... நான் கண்ணம்மாவையே ஊத்த சொல்கறேன்." என்றவர். சொன்னது போல் தோசை ஊற்றி சாப்பிட்டு விட்டு தூங்க போக.
மேகலாவோ தான் சுந்தரியுடனே படுத்து கொள்வதாக அடம்பிடித்தாள்.

எங்கே தான் சென்று விட்டால் சுந்தரிக்கு மீண்டும் அதேபோல் வந்தால் யார் அவரை கவனித்து கொள்வார் என்ற பயம் அவளுக்கு.
அவளின் அடத்தை கண்டு முதலில் தன்னிடம் பம்ப் இருக்கிறது நான் பாத்து கொள்கிறேன் என்றவர். மேகலாவோ ஒரே பிடியாக நின்று அவருடனே படுத்துக்கொண்டவள்,
எங்கே மீண்டும் சுந்தரிக்கு முடியாமல் வந்துவிடுமோ என்ற பயத்தில் சிறிதும் தூங்காமல் அவரையே கவனித்துக்கொண்டிருந்தாள்.

தான் கண் விழிக்கும் நேரமெல்லாம் மேகலா தூங்காமல் இருப்பதை பார்த்து "எனக்கு எதுவுமாகாது நீ தூங்கு!.." என்று அவர் என்ன சொன்னாலும் கேட்காமல் அவளோ விடியும் வரை முழித்தே இருந்தாள்.

சங்கமிப்பாள்..........
 

Balatharsha

Moderator
காலை கடன்களை முடித்தவள் காஃபியை சுந்தரிக்கு கொடுத்து விட்டு தானும் ஒரு கப்புடன் அவர் அருகில் அமர்ந்தாள்.
"இப்போ உடம்புக்கு எப்பிடி இருக்கு அத்த.?" என்க.

" அது நேத்தே சரியாகிடிச்சு. நீ தான் சொன்னத கேக்காம கண் முழிச்சு உடம்பை கெடுத்துக்கிட்ட.
முகிலனும் இப்படித்தான் பதறுவான். அம்மா மேல் அவ்வளவு பாசம்." என்க.

"அதை விடுங்க அத்த. உங்க ரண்டு பசங்கள்ல எதுக்கு சின்னவரு மட்டும் எப்போவும் இந்த குடும்பத்துக்கு சம்மந்தமில்லாதவர போல ஒதுங்கியே இருக்காரு?...
நீங்க யாருமே அவரை கண்டுக்கிறதில்லையே?.." என்று தனது நீண்ட நாள் சந்தேகத்தை சுந்தரியிடம் கேட்க.

"உன்கிட்ட சொன்னா என்ன?....
சின்ன வயதில் இருந்தே அவன் அப்படித்தான்.
உண்மையை சொல்லணும்னா அவனோட அந்த நிலமைக்கு நாங்கள் எல்லோரும் தான் காரணம். என்றவர்,
நீ சொல்லு?..
என் குடும்பத்தை பத்தி உன்னோட கருத்து என்ன?.." என கேட்க.

அவளுக்கு என்ன தெரியும்?... அவளுக்கு தெரிந்ததெல்லம் மரியாதையானதும், வசதியான குடும்பம் என்று மாத்திரம் தான். அதுவும் திருமணப்பேச்சின் போது புஷ்பா மேகலாவிடம் பானுவை பெண் கேட்ட செய்தியை சொன்ன போது தான். இவரது கேள்வியில் இப்போது இந்த கேள்விக்கு என்ன அவசியம் என நினைத்திருக்க.

"என்னடாம்மா இப்படி யோசிக்கிற?....
உனக்கு என்ன தோணுதோ சொல்லு." என்றவரிடம்.

"எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனா கௌரவமான, அன்பான குடும்பம்னு தெரியும்." என்க.

"உண்மதாம்மா!!...." நீ சொல்லுறத போல அன்பும், கௌரவும் மாத்திரம் தான் எங்களது பரம்பரை சொத்து.
இந்த கார், பங்களா, சொந்தம் எல்லாம் முகிலனோட இருபத்தியொரு வயதிற்கு பிறகு வந்தது."
"முன்னாடி நாங்களும் சொந்த வீடு கூட இல்லாம தான் இருந்தோம்.
உன் மாமா டீச்சரா இருந்தாலும். இவர் சம்பளமே இருபதாயிரம் தான். வேறு எந்த வருமானமும் இல்லை.
அதை கூட முன்னாடி இருந்த போர் சூழல்ல ஆதரவற்ற மூன்று குழந்தைகளை தன் செலவில் படிக்க வைச்சாரு.

ஒரு பொண்ணு, இரண்டு பசங்க. பள்ளிக்கூடம் முடிச்சிட்டு வந்தும், இரவும் இவரே பாடம் சொல்லி தருவாரு.
என்னோட பசங்க மூணு. அவரு உதவியில் வளந்தவங்க மூணுன்னு எனக்கு ஆறு பசங்க.
அவங்க எல்லாரையும் விட என்னோட முகிலனுக்கு ஒரு வயது அதிகம்.
அவர் சம்பளத்தில குடும்பத்தை கொண்டு போறதே கஷ்டமா இருக்கும்.
ஆனா இவரு சமூகபணின்னு இல்லாததை எல்லாம் இழுத்து வந்திடுவாரு.
எனக்கு அம்மா மட்டுந்தான் அவங்களும் மயூரன் பிறந்ததும் கண்ணை மூடிடாங்க.

இவர் அண்ணன் அப்பவே வசதி தான்.
அவரும் உன் மாமா கஷ்டத்தில் இருக்கும் போது அப்பப்பாே உதவுவாரு.
யாரு தாம்மா ஒருதனுக்கு தொடந்து சும்மா எல்லாம் செய்ய முடியும்?.. அப்படி செய்தாலும் தனக்கென்று எதுவுமே வைச்சிகிட்டது கிடையாது. எல்லாமே வள்ளல் பரம்பரையில பிறந்தா மாதிரி தாணம் செய்திடுவாரு. என் புள்ளங்களுக்கு ஏதோ கொண்டு வந்து தர பணத்தை மறைச்சு வைச்சுத்தான் அவங்க தேவைகளையே என்னால நிறைவேற்ற முடிஞ்சிது.

முகிலனுக்கும் மயூவுக்கும் ஐந்து வயது வித்தியாசம். அவன் பிறந்திருக்கும் போது பாக்க அவ்வளவு அழகா குண்டா இருப்பான்.
முகிலன் கலர் கம்மி என்றதினால இவன் கலரா பிறந்ததை பாத்ததும் சந்தோஷம்.

முகிலனை விட சின்ன பையன் வேற. கொஞ்சம் செல்லம். முகிலுக்கும் தம்பினா உயிர். அவன் தப்பு செய்து நாங்க அடிக்க போனா எங்களையே உறுக்குவான்னா பாத்துகோயேன்.
எல்லார் செல்லமும் மதி பிறந்ததும் அவனை நான் கொஞ்ச காலம் கண்டுக்காமலே விட்டுட்டோம்.
இவருக்கும் சமூகதொண்டு ,ஆசிரியர் என்கிறதனால இவருக்கிருக்குற நல்ல பெயரை வைத்து பெரிய கட்சி காரங்க ஊள்ளூராட்ச்சி தேர்தல் வந்த சமயம் இவரையும் தேர்தலில் நிக்க சொல்லி வற்புறுதினாங்க. இவரும் கொஞ்சம் கட்சியில் பிஸியாகிட்டாரு.

முகிலன் தான் இவனை நல்லா பாத்துப்பான். படிப்பு சொல்லி தரதில இருந்து தம்பியை முழுதாக கவனிக்க தொடங்கினான்.
முகில் பதினொன்று படிக்கும் போது இங்க இருந்தா அரசாங்கத்தில் இவர் கூட்டு அமைச்சதனால எங்கே இவர் உயிருக்கு ஆபத்து வந்திவிடுமோனு நாங்க குடும்பத்தோட கொழும்பு போயிட்டாேம்.

இவர் பொறுப்பெடுத்த பசங்களை ஒரு இல்லத்தில சேர்த்து விட்டுடாரு. முகிலன் தான் கொஞ்சம் இங்கயிருந்து வர அடம்பிடிச்சான்.
வேற வழியில்லையே!.. அவனுக்கு புரியிறது போல எடுத்து சொல்லித்தான் கூட்டிட்டே போனோம்.

அங்கும் போயும் கஷ்டம் தான். என்னதான் அரசியல்ல இருந்தாலும் நேர்மையானவர் என்றதனால யாருகிட்டையும் இவரும் கை நீட்டினதில்லை. தன் பதவியை தப்பாக்கூட பயன்படுத்தல்ல. அப்படி ஒரு மனுஷன் என் புருஷன்."

"அது வரை முகில் நல்ல விதமாய் தான் மயூவையும் பாத்தான். அவனுக்கும் எந்த கெட்ட பழக்கமுமில்லை. அண்ணன் என்றதனால அவன் மேல அதிக பயம் கலந்த அன்பு.
முகிலும் உயர்தரத்தில் நல்ல மதிப்பெண் எடுத்து மொறட்டுவ பல்கலை கழகத்தில் என்ஜினியரிங்க் படிக்க அவனுக்கு வாய்ப்பு கிடைச்சு. ஒன்றரை வருஷம் தங்கி இருந்து படிச்சான்ம்மா.

திடீர்ன்னு என்னாச்சோ தெரியல அங்கே இருந்து வீட்டுக்கு வந்தவன் தான் இனி நான் எதுவும் படிக்க போறதில்லை.
நான் தொழில் ஏதாவது தொடங்க போகிறேன்னு ஒரே அடம்.
அடம் என்றதை விட வெறி என்று சொல்லாம்.
அது வரை என் பையனை அப்பிடி நான் பாத்ததே இல்லை. அப்போ அவன் கண்ணை பாக்கணுமே எப்பிடி ரத்தக்கலர்ல இருந்திச்சு தெரியுமா?... நானே பயந்திட்டேன்.

இன்னைக்கு வரை அந்த முகிலன் என் கண்ணுக்கையே நிக்கிறான்.
என்புள்ளை அதுக்கு பிறகு சிரிச்சு நான் பார்ததே ஒரு இரு முறைதான் பாத்திருப்பேன் என்று நினைக்கிறேன். நானும் பல முறை கேட்டு பாத்திட்டேன் என்னாச்சு?.. எதுக்கு படிப்பை பாதியிலே நிறுத்துறன்னு?...
அதுக்கு அவன் சொன்ன ஒரே பதில்
இந்த உலகத்தில காசில்லனா தூசி கூட மதிக்காதுனு. இதை தவிர அவன் எதுவுமே சொல்லல.

காசுக்காக படிப்பை விடுறியேனு கேட்டதுக்கு. படிப்புக்கு மரியாத அந்த காலம். இப்போல்லாம் மரியதையே பணத்துக்குத்தான். என்றுட்டான்.
இவரும் இவனோட பிடிவாதத்தை பாத்திட்டு
அங்க இங்க கடன்பட்டு கொஞ்ச காசு குடுத்தாரு.
ஒரு கிழமை தான்ம்மா சரியாக இருக்கும் யாரை பிடிச்சானோ!.. என்னமோ தெரியல்ல?. கொழும்பில் கடையோ..... ஏன் சின்ன இடம் கிடைக்கவோ பல லட்ஷம் கொட்டணும். ஆனா அவனுக்கு இருந்த வெறியில ஒரு பத்து அடியில சின்னதா கடை எடுத்து புடவைகடை வைச்சான்.

அவனோட எட்டு வருட இடைவிடாத கடின உழைப்பினால தான் இத்தனை சொத்தும். இப்போ அவன் கால் பதிக்காத தொழிலே இல்லை.

முன்னாடி என் புருஷன் தாணம், தர்மம்ன்னு செய்யும் போது என் புள்ளைங்களை கவனிக்காம என்ன தர்மம் வேண்டிக்கிடக்கென்டு இவர்மேல கோபம் வரும். ஆனால் அவர் செய்த புண்ணியம் தான் இப்போ நாங்க இப்படி இருக்க காரணம் என்று நினைச்சுப்பேன்.

இவன் எப்போ பொறியியல் படிக்க மொறட்டுவ போனானே என் சின்னவன் தானே தன்னை கவனிக்க தொடங்கிட்டான்.
தன்னோட தொழில் பிஸியில தம்பியை மறந்திட்டான் பெரியவன்.
அதை தனக்கு சாதகமா பயன்படுத்தி அண்ணன் ஒரு புறம் உழைக்க தன் நண்பர்களோடு சேர்ந்து அந்த பணத்தில் ஊர்சுத்துறதுனு தொடங்கியவன் தான்.
வேண்டாத சகவாசகங்களால உள்ள கெட்ட பழக்கங்கள்னு பழக ஆரம்பிச்சிட்டான். நாங்களும் எத்தனையோ தடவை அவனை மிரட்டி பார்த்திட்டோம். ஆனா சின்ன வயசில குடுத்த செல்லத்தால் எங்க பேச்சையே மதிக்காம தான் செய்யிறதே சரினு செய்ய ஆரம்பிச்சிட்டான்.

ஒரு தடவை இவன் கல்லூரி படிக்கும்போது குடிச்சிட்டு வீதியில இரவு நேரம் தகராறு செய்திருக்கான். அந்த நேரம் அந்த வழியால போன போலீஸ் பாத்திட்டு டேஷன் கூட்டிட்டு போய் அடிச்சிருக்காங்க. இவன் அப்பா பேரை சொல்லி வெளியே வந்திருக்கான்.

அந்த போலீஸ் காரர் அப்பாக்கு தெரிஞ்சவர் போல. எங்கேயோ கண்டு நடந்ததை சொல்லி உங்க பையனை பத்திரம பாத்துக்கங்க. அவனோடு நண்பர்கள் என்ற பேரில திரியிறவங்க பெரிய ரவுடிங்க. எனக்கு தெரிஞ்சு இவங்க எல்லாரும் படிக்கிறவங்க போல தெரியல. எப்பிடி உங்க படிக்கிற பையனோடு சேர்ந்தாங்கனும் தெரியல.
இப்பவே உங்க பிள்ளையை கண்டிச்சு வையுங்க. பிறகு விபரீதத்தில் முடியும்." என்றவும்.

"நான் பார்த்து கொள்கிறேன்." என்று விடைபெற்றவர்.
வீட்டில் மயூரன் வரவுக்காக காத்திருந்தார்.
அவனோ பட்ட பகலிலேயே தள்ளாடியவாறு வர.
சுந்தரியை முறைத்த யோகலிங்கம்.

"இது தான் புள்ளையை கவனிக்கிற லட்ஷனமா?. என அவர் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.
"உன் பிள்ளை என்ன காரியம் செய்து வைத்திருக்கிறான் தெரியுமா?... நேற்று இவனும் இவனோட குடிகார நட்பு கூட்டத்துக்கும் இன்னொரு டீமுக்கும் தெருவில் பெரிய தகராறு.
அப்போ அந்த வழியா ஜீப்பில் போன போலீஸ் ஒட்டு மொத்த கூட்டத்தையும் தூக்கிட்டு போய் சாத்தி இருக்காங்க.

இவரு என் பெயரை சொல்லி தப்பிச்சிட்டாரு.
இது வரைக்கும் நானே என் பதவியை சொல்லி உதவி கேட்டது கிடையாது. ஆனா இவரு கேவலமாக காரியம் செய்திட்டு என் பெயரை பாவிச்சிருக்காரு.
நான் நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனால் இவனோ ரவுடி வேலை பார்த்திட்டு, என் கௌரவத்தை கெடுத்ததுமில்லாமல் தன் தண்டனையில் இருந்தும் தப்பி இருக்கிறான்.
இனி யார் என்னை மதிப்பாங்க?... அந்த போலீஸ் வேற என்கிட்ட சொன்னது போல் இன்னும் எத்தனை பேருகிட்ட சொல்வானோ.?..

இதில் இவர் கூட்டாளிகள் பெரிய ரவுடிகளாம். படிக்குற இவனுக்கு அப்படியானவங்க எப்படி பழக்கம்.?..
இவனை.....!" என்று அவனை அடிக்க போனவரை அந்த போதையிலும் கைபிடித்து தடுத்தவன்.

"என்னை அடிக்க உங்களுக்கு என்ன உரிமையிருக்கு?.. இதோ இவங்க வேணும்னா என்னை கேட்க்கலாம்.." என்று தாயை காட்டியவனை கோபத்தோடு பார்த்த சுந்தரி.

"என்ன பேச்சு பேசுகிறதுனு தெரிஞ்சு தான் பேசுகிறாயாடா?... அவரு உன் அப்பா!...." என்க.

"அப்பா...... ஹீம்ம்..... அப்பா..... அப்பாவே தான்.
யாருக்கும்மா இவர் அப்பா?...." என்று மறு கேள்வி கேட்க.

"டேய்...! மரியாதையாக பேசு!... உனக்கு செல்லம் தந்தது எவ்வளவு பெரிய தப்புனு இப்போ புரியுது. குடிச்சிட்டு வந்தா என்னவும் பேசலாமாடா?.." என்று அவன் சட்டையை இறுக பிடித்து உழுக்கியவர் கையை இழுத்து தட்டியவன்,

"சும்மா என்னை மிரட்டாதிங்க. நீங்கள் வேணும்னா உங்க புருஷனை தலையில் வைச்சு கொண்டாடுங்க. இவர் எங்களுக்கு என்ன செய்தாரு?..."
"நாங்க யாழ்ப்பாணத்தில இருக்குறப்போ
ஊரில உள்ளவங்களை படிக்க வைக்கிறேனு எங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை கூட சரியாக செய்யல்லையே!.... சரி கடமை வேண்டாம். பாசமாச்சும் காட்டினாரா?... ஊரில் இருக்கிறவங்களை பாக்கவே அவருக்கு நேரம் போதாது. இதில் எங்களை எப்படி கவனிக்க சாருக்க நேரம்?..
நல்ல வேளை அண்ணா இருந்தான். இல்லைனா மதி பிறந்ததும் என்னையும் அனாதையாக விட்டிருப்பாரு." என்க.

"டேய்...! எதுக்குடா இந்த பேச்சு பேசுறா?. மத்த புள்ளைங்கள விட உன்மேல தானேடா பாசமாக இருந்தோம்." என சுந்தரி ஆதங்கமாய் கேட்க.

"எல்லாமே பொய்ம்மா!.....
இப்போ இவர கேளுங்க........ அண்ணன் சம்பதிச்சத தவிர எங்களுக்காக இவரு என்ன சேத்து வைச்சிருக்காருன்னு". என்றவாறே
இரண்டு கைகளையும் விரித்து ஒன்றும் இல்லை என்பது போல் காட்டியன்.
இந்தாளுட்ட எதுவும் இருக்காதும்மா!.. கேட்டா நேர்மை, நீதி என்றுவாரு."
"யாருக்கு தேவை இவர் நேர்மையும் நீதியும்.......?
இவரோட நேர்மை, நீதி, தர்மம் இதுங்கள வைச்சு என்னத்தை சாதிச்சாரு?.

இவர் அண்ணன் குடும்பம் கூட இவரை மதிக்கலயே!. ஏன்னா அவங்க குடுக்கிறத கூட தர்மம் பண்ணாரு. ஒரு நல்ல நாளுக்கு புதுட்ரெஸ் போட்டிருக்கோமா?.
இவரு தர்மம் பண்ணினவங்க கூட தீபாவளி, வருஷம்னு புது உடுப்பு போட்டாங்க.
ஆனா இந்தாளு புள்ளங்க நாங்க எதுக்கும் வளியில்லாம வீட்டிலையே இருந்தோம்."
"அண்ணா மட்டும் முயற்சி பண்ணலனு வையுங்க. மதியும் ஔவையாரா வீட்டிலையே இருந்திருப்பா" என்றவன்.
உள்ளே செல்ல.

அவன் கூறுவதிலும் தவறு இருப்பது போல் சுந்தரிக்கு தோன்றவில்லை.
அவன் சொன்னது அத்தனையும் உண்மை தானே.
என்ன மகன் வாய் திறந்து கொட்டிவிட்டான். அவளாள் கொட்ட முடியவில்லை. இருந்தும் தன் கணவனை மகனே இப்படி பேசுவதை தாங்கி கொள்ளாமல்.
அவனை போக விடாமல் தடுத்தவர்.

"இதை பாருடா அவர் ஒண்ணும் கெட்டது பண்ணல. அப்படியே பண்ணாலும் எனக்கு மாத்திரம் தான் அவர கேட்கிற உரிமையே தவிர, நீ அவரை கேள்வி கேட்க நான் அனுமதிக்க மாட்டேன்.
அவர் உங்களை கவனிக்கல்ல எங்கிறியே. யாரு சம்பாத்தியத்தில நீ வளர்ந்த?.. அவரு சம்பாத்தியத்தில தான் மிச்சம் புடிச்சு உங்களை வளர்த்தேன்.
மரியாதையாக போய் அப்பாகிட்ட மன்னிப்பு கேள்!.." என அவரும் அவனுக்கு நிகராக சத்தமிட.

"அப்பா!.... இவரு?...." என்றவன். "ஓகே உங்க கணவர் கிட்ட மன்னிப்பு கேட்டிடுறேன். ஆனால் என் விஷயத்தில் அவரை தலையிட வேண்டாம்னு சொல்லுங்க." என்க.

"டேய்....! அவர் உன் அப்பாடா!..அவர் உன்னை தட்டி கேக்காம யார் கேப்பாங்க?..." என்க

"தட்டி கேட்க மட்டும் தான் அப்பாவா?... அப்பிடி ஒரு அப்பா எனக்கு தேவையில்லை." என போதையில் சொல்லிச் சென்றவனை வலி நிறைந்த பார்வை பார்த்தவரிடம்.

"இப்போது தான் புரியுது சுந்தரி. எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன்னு.
நல்ல சமூக தொண்டாளரா இருந்தேனே தவிர, நல்ல அப்பாவாக இருக்க மறந்திட்டேன்.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானாக வளருமுனு பழைய பழமொழிய நம்பி வாழ்ந்திட்டன்.
நான் செய்த தவறே என் பி்ள்ளையை கண்டிக்க தகுதியற்றவனாக்கிடிச்சு." என உடைந்த குரலில் கூறியவரும் வெளியேறி விட.

மகனுக்கும் கணவருக்கும் நடுவில் அகப்பட்டு சுந்தரி தான் நொருங்கி போனாள்.
தவறை கண்டித்ததற்கு இந்த பேச்சா?... ஆனால் மயூரனை இப்படியே விட முடியாதே?...
முகிலனிடம் சொல்லிவிடுவோமா? என யோசித்தவர். வேண்டாம் அவனே பாவம் இப்போ தான் தொழில் தொடங்கி இரண்டு வருடமாகிறது. அதுவும் அவன் படும் கஷ்டங்கள் கண்முன்னே காண்பவர் ஆச்சே. இருக்கும் உலைச்சல் போதாது என்று இது வேறு. எதற்கு அவனுக்கு சொல்லி அவனையும் கஷ்டப்படுத்துவான் என்று நினைத்தவர் அவனிடம் சொல்லாமல் விட்டு விட்டார்.

அவர் அப்போதாவது சொல்லி இருக்கலாம். மயூரன் நடவடிக்கையை. முகிலனை வேதனை படுத்தும் என சொல்லாதது மதியை வேதனை படுத்தும் என்று நினைக்கவில்லை.

அந்த பிரச்சினையின் பிறகு அவன் தந்தை அவனுடன் பேசுவதில்லை. அத்தோடே அவரும் அவனை கவனிப்பதையோ, கண்டிப்பதையோ விட்டுவிட்டார். அவருக்கும் தன் பிள்ளைகளை வளரும் வயதில் சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றவுணர்வு.

மயூரனது தகாத பழக்கங்களால் அவனது கல்லூரியில் இருந்து துரத்தி விடப்பட்டான்.
இந்த தகவல் முகிலுக்கு தெரிய வரவும். தாயிடம் கேட்டதற்கு அவனது தகாத பழக்கங்களை பற்றி கூறியவர். அவனது நட்பு வட்டாரங்களை கூறாமல் மறைத்து விட்டார்.

சரி இவன் படிப்பிற்கு சரி வரமாட்டான் என நினைத்த முகிலன் தன்னுடன் தொழிலை பார்க்க வரும்படி கேட்கவும்.
"கொஞ்ச நாள் கழிச்சு வரேன்." என்றவனை.

தான் தான் படிப்பை கெடுத்து இளம்வயதில் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை. தம்பியாவது கொஞ்ச காலம் அனுபவிக்கட்டும். என நினைத்தவன் விட்டுவிட்டான்.

ஆனால் தகாத பழக்கங்களை இனி தொடராதே என்ற கண்டிப்புடனேயே!...
ஒரு வருடம் கழிந்த நிலையில் திடீர் என முகிலனிடம் வந்தவன்,

"அண்ணா நானும் உங்கள போல தொழில் தொடங்க போகிறேன். பணம் தேவை." என கேட்க.
அவனும்.இப்போதாவது தம்பிக்கு பொறுப்பு வந்ததே என்ற நினைப்பில் அவன் கேட்கும் தொகையை என்ன?..ஏது?.. என்று கேட்காமல் கொடுத்து விட்டான்.

அவன் பணம் கேட்டது விடுதி ஒன்று ஆரம்பித்து, அதற்குள்ளே பார், கிளப் என்று வைத்தால் கொழும்பின் நாகரீக வாழ்கைக்கு நன்றாக அது பொருந்தும் என்று அவனது வேண்டாத நற்புக்களின் அறிவுரையின் பெயரில் அதை தொடங்கும் பணியில் ஈடுபட்டான்.

அன்று மதியினுடைய உயர்தர பரீட்சை கடசி நாள்.
அவளது இன்டெக்ஸ் நம்பர் அடிப்படையில் நீர்கொழும்பில் உள்ள பாடசாலையில் தான் அவளுக்கு தேர்வுகள் நடைபெற்றன.

கிட்டத்தட்ட கொழும்பிற்கு நீர் கொழும்பிற்கும் இடையேயான தூரமானது முப்பத்தி எட்டு கிலாே மீட்டர். காலையிலேயே மதி தயாராகி விடுவதால் முகில் தான் தன் வண்டியில் அவளை ஏற்றிச் செல்வதும் வருவதுமாக இருப்பான்.

காலையில் அவளை கொண்டுவந்து விட்டவன்.
"மதி எனக்கு ஈவ்னிங் ஒரு மீட்டிங்க் இருக்கு. சாயம்காலம் மயூவை அனுப்பிறேன் அவன்கூட வந்திடு" என்கவும்.

அவளும் சரி என்று பரீட்டை எழுதத் சென்றாள்.
உண்மையில் மயூரன் அடிப்படையில் நல்லவன் தான்.
உறவுகள் மேல் பாசமும் அதிகம். ஆனால் அவனது வேண்டாத நண்பர்களினால் தான் இன்நிலைக்கு தள்ளப்பட்டான்.

சின்ன வயதில் தந்தை தம்மை கவனிப்பதில்லை என்று சிறு வருத்தம் இருந்ததுவும் உண்மையே!...

அன்று அளவுக்கு மிஞ்சிய போதையின் காரணத்தினால் தான் அப்படி பேசினான். ஆனால் தந்தை மீதி எப்போதிருக்கும் மரியாதை இல்லாமலில்லை.
போதையில் தந்தையை பேசி விட்டு அடுத்த நாள் காலையில் தன் தவறை உணர்ந்து. தந்தை முன் தலை நிமிர்ந்து பார்பதற்கே சங்கடமாகத்தான் இருந்தது.

அவன் பேச்சில் நொந்துபோன யோகலிங்கமும் தன் குற்றவுணர்வால் ஒதுங்கி கொள்ள. தனக்கிருந்த சங்கடத்தால் தந்தையின் ஒதுக்கமும் அவனுக்கு வசதியாகவே மாறியது.

முகிலன் கொடுத்த அத்தனை பணத்தையும் முதலாக போட்டு அவனது நண்பர்கள் பங்குதாரராக கூட்டுச்சேர்ந்து விடுதியை ஆரம்பித்தான்.

மதியினுடைய பரீட்சையின் கடசி நாள் தான் மயூரன் விடுதியின் திறப்பு விழாவும்.
இவனது நட்பு வட்டாரங்களால் அவன் குடும்பத்தில் இருந்து யாரும் வரவில்லை. முகிலனுக்கு மீட்டிங்க் என்றதினால் அவனாலும் கலந்து கொள்ள முடியவில்லை.

தன் தம்பிக்கு வாழ்த்து கூறியவன்,
"உன் ஹோட்டல் திறப்பு விழா காலையில் தானே!.." என கேட்க.

"ஆமாண்ணா!.. மதியத்தோட முடிஞ்சிடும்." என்க.

" அப்போ சரி!.... இரண்டு மணியளவில் மதியை அழைச்சிட்டு வரது உன் பொறுப்பு." என கூறிவிட்டு அவன் செல்ல.

சரி என்று அவனும் சம்மதித்தான்.
திறப்பு விழாவில் அவன் நட்புக்கள் மாத்திம் என்பதனாலும், அது பார் என்பதனாலும் குடி கும்மாளம் என்று அங்கு வந்தவர்கள் பார்ட்டியை கழிக்க.
மயூரனோ தங்கையை அழைத்து வரும் பொறுப்பை தமையன் தன்னிடம் விட்டதனால் தனது நண்பர்களின் வேண்டுகோளை மறுத்தான்.

"சரி நீ குடிக்க வேண்டாம்.
இந்த கோலாவையாவது குடி!.." என்று கொடுக்க. அவனும் அது சாதாரண கோக் என்று நினைத்து குடித்தான்.
ஆனால் அது சாதாரண கோலா கிடையாது. போதை மருந்து கலக்கபட்ட கோலா.

அதை குடித்ததும் தலை சுற்றுவதபோல் இருக்க. அதில் போதை மருந்து கலந்திருப்பதை புரிந்து கொண்டவன்.
"ஏன்டா இப்படி பண்ணிங்க?.. எவ்வளவு தூரம் போகணும் தெரியுமா?... உங்க வேலையா இப்போ எப்படி அவளை கூட்டி வர முடியும் ?..என்க.

"டேய் இன்னும் நேரம் இருக்குடா! தூங்கி எந்திரிச்சதும் போதை தெளிஞ்சிடும். போய் தூங்கு!.." என்று அவனை அந்த விடுதி அறையில் விட்டு சென்றார்கள்.

அந்த போதையிலும் தங்கையை அழைத்து வரவேண்டும். என்று அவன் மூளை அவனுக்கு கூறிக்கொண்டிருந்தது.
தூங்கி எழுந்தவன் நேரத்தை பார்க்க மூன்று மணியாகி இருக்க.
தங்கையை அழைத்து வரும் நேரமும் ஒரு மணிநேரத்தை கடந்திருந்தது.

அவனுக்கு போதை தான் தொளிந்த பாடில்லை.
தட்டி தடுமாறி அறையை திறந்து கொண்டு வந்தவன் கார் சாவியை எடுத்து நடந்து போவதை பார்த்த அவன் நண்பர்கள்.
அவன் நிலமையை பார்த்து.
"டேய் அவன் இந்த போதையில் கார் ஓட்டினா ஆக்சிடன்ட்டாகிடும்." என்றவர்கள், தாமே கார் ஓட்டுவதாக கூறி அவனுடன் கிளம்பினார்கள்.

மதியோ மயூரனை இரண்டு மணியில் இருந்து எதிர்பார்த்து காத்திருந்தாள். ஐந்து மணியாகியும் காணவில்லை. போனை பரீட்சை ஹாலுல்க்கு கொண்டு செல்ல அனுமதி இல்லாததால் அதை எடுத்து வரவும் இல்லை. பக்கத்தில் இருந்த கடையில் போனை வாங்கி மயூரனுக்கு அழைத்தாலும் அவன் எடுப்பதாக தெரியவில்லை.

ஒருகட்டத்திற்கு மேல் இவனை நம்பி என்னை எதற்கு அண்ணா விட்டான் என்றே தோன்றியது.
நேரம் நகர நகர பயமும் தொற்றிக்கொண்டது.

முழுவதும் சிங்களவர்கள் ஏரியா. ஒரு சிலரை தவிர தமிழர் என்றாலே உதவ முன்வரமாட்டார்கள். என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே
அவள் முன்னால் கார் வந்து நின்றது.

அது மயூரன் கார் என்பது அவளுக்கு தெரியும்.
ஆனால் அதில் இருந்தவர்கள் தான் புதிதாகவும், பார்பதற்கு அவர்கள் போதையில் இருப்பது போல் தெரிய.
மயூரனை பார்த்தாள் மதி.
அவன் அவர்களை விட மோசமாக பின் இருக்கையில் சாய்ந்து இருந்தவாறு கண்களை மூடி எதுவோ புலம்பிக்கொண்டிருந்தான்.

இவனை நம்பி இத்தனை தடியர்களுடன் எப்படி போவது? என யோசித்து கொண்டிருக்கையில்.

"என்னம்மா பாக்கிற?... எல்லாம் உன் அண்ணாவோட ஃபிரென்ஸ் தான் பயப்படாமல் ஏறு!.." என்றவர்களை பார்து தயங்க .

"அட நீ வேற, எங்களை பார்த்தா பொறுக்கி பயலுங்க மாதிரியா தெரியுது?.. நாங்களும் உன் அண்ணன் போல தான், நம்பி ஏறும்மா!." என்றவர்களை அண்ணன் இருக்கிறான் தானே என்ற நம்பிக்கையில் ஏறினாள்.

காரில் ஏற்கனவே மயூரனோடு சேர்த்து நான்கு பேர் இருந்தனர். பின்னால் மயூரனோடு சேர்ந்திருந்த நண்பர்களில் ஒருவன் இறங்கி விட.
மயூரன் ஓரமாகவும், அவனுக்கு பக்கத்தில் மற்றவன் மதி நடுவிலும் அவளுக்கு அடுத்து இன்னொருவன் என்று இருந்தனர்.

கொஞ்ச தூரம் எந்த இடைஞ்சலும் இல்லாமல் தான் சென்றது.
சிறிது நேரத்தின் பின் மதியை ஒருவன் இடிக்கவும். அவளோ முடிந்தளவு தன்னை குறிக்கி கொண்டவள்.

அதன் பிறகும் முடியாமல் போக
"அண்ணா கொஞ்சம் விலத்தி இருக்கிங்களா?... ரொம்ப நெருக்கம இருக்கு." என்க.

"என்னம்மா நான் வேணும்னா இடிக்கின்றேன். எனக்கும் நெருசலா தான் இருக்கு. அதனால உன்னை நெருங்கியிருக்க வேண்டியிருக்கு. என அவன் தன்மேல் உள்ள நியாயத்தை சொல்ல.
பின் கொஞ்ச நேரம் சாதாரணமாக இருந்தவர்கள் மறுபடியும் மற்றைய பக்கம் இருந்தவன் இடிக்க.
கோபம் கொண்ட மதி.

"என்னண்ணா விளையாடுறிங்களா?.... கொஞ்ச நேரம் நல்லா தானே வந்திங்க. பிறகென்ன திரும்ப ஆரம்பிக்கிறீங்க?..." என்க.

அவர்கள் போதையில் இருந்ததினால் "என்னடி ரொம்ப பத்தினி வேஷம் போடுகிற.
எங்களுக்கு தெரியாத உன்னை போல பெண்ணுங்க எப்பிடினு.
முதல்ல துள்ளுவீங்க அப்புறம் ருசி கண்டா நாளுக்கு ஒவ்வொருதனா கூட்டிட்டு ஒவ்வொரு ரூமா சுத்துவீங்க." என்றவன் அவள் கையை பிடிக்க.

அவனிடமிருந்து தன் கையை உருவியவள், கன்னத்தில் ஒன்று விட்டாள்.
அவள் அடித்த கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவளை இறுக கட்டிப்பிடித்தவன் அவளுக்கு உதட்டில் முத்தம் குடுப்பதற்காக அவள் முகத்தை தன்புறம் திருப்புவதற்கு முயட்சி செய்ய,
அவளோ அவனிடமிருந்து திமிறியவாறு தன்முகத்தை அவன்புறம் திருப்பாமல் போராடினாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் போராட முடியவில்லை.
இரண்டு புறம் இருந்தும் மயூரன் நண்பர்கள் அவளை கண்ட இடம் எங்கும் கையை வைக்க.
தன் கையை உயர்த்தி மயூரனின் தலையை பிடித்து இழுக்க அவனிருந்த போதையில் தட்டு தடுமாறி எழுந்தவன்.

தன் தங்கையை இவர்கள் தப்பாக பயன்படுத்துவதை கண்டு அவர்களை அடித்தான்.
அவர்களோ அவன் கன்னத்தில் கனமாக ஒன்று போட.
இருந்த போதையிலும், அவர்கள் அடித்த வேகத்திலும் மயக்கத்திற்கு சென்றான்.

இவனை நம்பி வந்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது அப்பாேது தான் மதிக்கு தெரிந்தது. இவனெல்லாம் ஒரு அண்ணன். குடிகார நாய்!... என்று பொருமியவள். இன்னும் ஒரு முறை தமையனை எழுப்ப முயற்ச்சி செய்து மறுபடியும அவன் தலை முடியை பிடித்திழுத்தும் அவன் எழுந்த பாடில்லை. அவர்களோ எகத்தாளமாகவே மதியை பார்த்து சிரித்தார்கள்.

"என்னதான் முயற்சி பண்ணாலும் அவன் எழும்ப மாட்டான்.
இன்னைக்கு எங்க விடுதியோட திறப்பு விழா.. பார், கிளப் என்று எல்லாம் இருக்கு. அயிட்டம் தான் இல்லைனு கவலை. இப்போ நீ வந்ததனால அந்த குறையும் இல்லை" என்று அவர்கள் சிரிக்க.

தமையனை நம்பி பிரியோசனம் இல்லை என நினைத்தவள் வீதியால் போபவரிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்து கத்த ஆரம்பித்தாள்.
இரண்டு முறை தான் கத்தி இருப்பாள். மூன்றாவது முறை ஒருவன் அவள் வாயை பொத்த. மற்றவன் கை இரண்டையும் அசையாது பிடித்திருந்தான்.


நேரம் நான்கு நாட்பதை தாண்டியும் மகள் வரவில்லை என பதட்டமடைந்த சுந்தரி முகிலனுக்கு போன் போடவும்.
அப்போது தான் மீட்டிங்க் முடிந்து வெளிய வந்தவன் தாயின் இலக்கத்தில் இருந்து போன் வருவதை கண்டு,

"இந்த நேரம் அம்மா கூப்பிடமாட்டாங்களாே!... என யோசனையோடு அழைப்பை ஏற்று காதில் வைத்தது தான்.
பதட்டமும், அழுகையுமாக "மதியை இன்னும் காணல்லடா! மயூரனுக்கு போன் பண்ணாலும் எடுக்கிறான் இல்லை. என்னனு பாருடா.!..." என்றதும் தான்.

அவனது மீட்டிங்கே நீர் கொழும்பில் இருந்து ஆறு கிலோமீற்றர் தூரத்தில் என்றதனால் தான் பார்த்து கொள்வதாக கூறி போனை வைத்தவன். மதியின் பரீட்சை இடத்திற்கு போக.
அப்போது தான் மதி மயூரன் காரில் ஏறிவதும் அவள் பின்னால் இன்னொருவன் ஏறுவதையும் பார்த்தான்.

"யாரு இவன்?..." என்ற கேள்வி முகிலை குடைய. அவனை பார்க்கும் போதும் நல்ல அபிப்பிராயம் தோன்றாததனால் அவர்களையே பின் தொடர்ந்து சென்றான்.

காரின் சைட் மிரர் வழியே பார்த்தவனுக்கு மயூரன் தூங்கி கொண்டிருப்பதை போல் இருக்க.
மயூரனும் அதே காரில் தான் வருகிறான் என்பதனால் தன் சந்தேகத்தை விடுத்தாலும்
எதுவோ அவனுக்கு நெருடலாகவே இருக்க, அவர்களை பின் தொடர்வதை நிறுத்தாமல் தொடர்ந்தான்.

மதி கத்தும் சத்தம் கேட்பது போல் இருக்கவும். காரை வேகமாக ஓட்டியவன் தனது காரை மயூரன் காருக்கு முன் இருநூறு மீற்றர் தூரத்தில் குறுக்காக நிறுத்தி இவர்கள் வரவிற்கு காத்திருக்க.
"யாரிது?.. வேகப்பாதையில் காரை குறுக்கால் நிறுத்தியிருக்கிறது?.." என்று நினைத்தவன் தன் காரையும் ஓரங்கட்ட,

காரை நோக்கி வந்தவனை கண்டவர்கள்.
"யாருடா இந்த ஹூரோ?.. இவ சத்தம் போட்டதால காப்பாத்த பின் தொடர்ந்து வந்திருக்கானோ!..." என்று ஒருவன் கேலியாங வினவ.

மற்றவனோ "டேய் இது மயூ அண்ணன் போல இருக்குடா!... போன வாரம் தான் இவனை பத்திரிக்கையில் பேட்டி கண்டிருந்தாங்க. அப்போ தான் இவனை பார்த்தேன்." என்கவும்.

"டேய் இவன் பிஸினஸ் காரன்டா!.. ஏசி அறையில இருந்தவனுக்கு அடி தடி எதுவும் வராது. இவனால எங்களை எதுவும் செய்ய முடியாது." என்றவன் காரை விட்டு இறங்கி வர.

இரண்டு எட்டில் இறங்கியவனை நெருங்கியவன் ஒரு குத்து விட்டான் ஏகா வசனம் பேசியவனுக்கு.
விட்ட குத்தில் வயிற்றை பிடித்துக்கொண்டு அந்த இடத்திலே அவன் அமர்ந்து விட.

இதற்கிடையில் வேக பாதையில் இவர்கள் கார் நிற்பதை கண்டு அறிவிக்க பட்டு போலீஸ் அங்கு வந்தனர். போலீஸை கண்ட அந்த கும்பல் மதியை விட்டு இறங்கி ஓட முயட்சி செய்தவர்களை மடக்கிப் பிடித்த முகிலன் நடந்ததை ஸ்ரேட்மென்டாக எழுதி கொடுத்து விட்டு மதியையும் மயக்கத்தில் இருந்த மயூரனையும் அழைத்து கொண்டு சென்றனர்.

நடந்தவற்றை வீட்டில் கூறியவன். மதியை கவனிக்க சொல்லி விட்டு மயூரனை அவனது அறையில் படுக்க விட்டவன், யாரிடமும் பேசாமல் சென்றுவிட்டான்.

மறுநாள் காலையில் வீடுவந்த முகிலன் நேராக மயூரன் அறைக்கு சென்று அவனை எழுப்பியவன்.
அவனை தன் கைகள் வலிக்கும் வரை கண்ணங்களில் மாறி மாறி அறைந்தவன்.

"எப்பத்தில் இருந்துடா இந்த பழக்கம்?. கண்ட காளி பசங்களோட சேர்ந்து இல்லாத பொல்லாததை எல்லாம் தேடி வைச்சிருக்கியா?..... இதனால தான் உன்னை காலேஜ்ல இருந்து தூக்கினாங்களா?.. ஏதோ கொஞ்ச நாள் நான் என் வேலையில் கவனமாக இருந்தா நீ இப்படித்தான் சீர் கெட்டு போவாயா?.... நான் இல்லைனா கூட நீ தானேடா குடும்பத்தை கவனிச்சுக்கணும்.. ஆனா நீயோ என்ன காரியம் செஞ்சு வைச்சிருக்க?..
நீயெல்லாம் என் தம்பி!.. உன்னை நான் வளர்த்தேன்னு சொல்லவே அருவெருப்பாக இருக்கு."
"பட்ட பகலிலே குடிச்சிருக்க. உன்னை நம்பித்தானே அவளை உன் பொறுப்பில விட்டேன். ஆனா அந்த பொறுகி பயலுங்களையும் அழைச்சிட்டு போயிருக்க.

நான் மட்டும் சரியான நேரம் வரல்லனா மதி நிலமை?...... நீ எல்லாம்?....." என்றவன் அவன் முகத்தை பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு "எக்கேடாவது கெட்டுத்தொலை.
இனி அண்ணான்னு என் பக்கம் வந்தேன்னா மனுஷன இருக்க மாட்டேன்."
என்று பெரிந்து தள்ளிவிட்டு சென்றவனையோ பார்த்துக்கொண்டிருந்தவன்.

அவன் சென்றதும், நேற்று நடந்தவற்றை ஒவ்வொன்றாக அவன் நினைவுக்கு கடினப்பட்டு கொண்டுவந்தான். நண்பர்கள் என்ற பெயரில் செய்த துறோகத்தை நினைக்க ஆத்திரமாக வந்தது.

இவனோ திறப்பு விழாவிற்கு போனதில் இருந்து தங்கையை அழைத்து வரவேண்டும் என்பது தான் அவன் குறிக்கோளாக இருந்தது.
தனது நண்பர்களிடமும் அதை கூறினான்.
இவன் தங்கை என்றதும் அவர்கள் தங்களுக்குள்ளே ஒரு திட்டம் போட்டு இவனை போதையாக்கி, மயூரனை வைத்தே அவளை கடத்தி பலாத்காரம் பண்ணுவதே அவர்கள் திட்டம்.

அவனுக்கு அவர்களை கொள்ள வேண்டும் போல் வெறி வந்தது.
தன்னை உயிராக வளர்த்த அண்ணன் கூட தன்னை அடித்து விட்டரே.
எல்லாம் என் வேண்டாத சகவாசம் என்பது காலம் கடந்து தான் அவனுக்கு புரிந்தது.

அன்று தந்தை கூறியபோது அவரை எதிர்த்து பேசியது எந்த அளவு தன்னை கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது.
என்னதான் தந்தை மேல் வெறுப்பு என்றாலும் வாயில் வந்ததை எல்லாம் பேசி அவரை நோகடித்திருக்க கூடாது என்பது இப்போது அவனுக்கு உறைத்தது.
ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு எல்லோர் முகத்திலும் தான் முழிப்பது.
முதலில் தான் நல்லவனாக வேண்டும். எல்லோரும் தன்னை நம்ப வேண்டும் .என நினைத்தான்.

தன் கெட்ட பழக்கங்களிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்தொடங்கினான்.
ஆனால் வீட்டில் அவனை யாரும் கண்டு கொள்வதில்லை. வருவான் சாப்பிடுவான். தூங்குவான். அந்தளவுதான் அவன் உரிமை என்றானது.

அவனாக பேசினாலும் நின்று கேற்பார்களே தவிர யாரும் அதை நடைமுறை படுத்துவதுதில்லை.
அந்தளவு அவன் அக்குடும்பத்திற்கு வேண்டாதவன் ஆகினான்.
காலப்போக்கில் அதுவே அவனுக்கு பழகிப்போக. பேசியும் என்ன பலன் என்று பேசாமலே விட்டும் விட்டான்.

ஆனால் முகிலன் மாத்திரம் தேவைகளுக்கு மட்டும் பேசுவான். மற்றவர்களிடமும் அப்படித்தான் அவன். அவனும் தன் தொழிலிலே இருப்பதனால் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
தொழில் தொடங்க என்று காசை வாங்கியவன் அவர்கள் நட்பு வேண்டாம் காசு போனால் போகிறது என்று அதை அப்படியே விட்டு விட்டான்.

இவன் கேட்டாலும் அந்த கும்பல் திரும்ப அவனுக்கு கொடுக்கபோவதில்லை என்பது அவனுக்கே தெரியும்.
என்று சுந்தரி மயூரனின் கடந்த காலத்தை பற்றி சொல்லி முடிக்கவும்
அவரிடமிருந்து காலியான காஃபி கப்பை வாங்கியவள்.

"ஏன் அத்த!.. இதில எங்க தப்பிருக்குனு உங்களுக்கு தோனுது.?." என் அவள் கேட்க..

"என்னம்மா!.. அவ செய்தது எல்லாமே தப்புனு தோனலையா?.." என்க.

"க்ஹூம்... தப்புத்தான். ஆனா இதில் மயூரன் மட்டும் தப்பு பண்ணான்னு எனக்கு தோனல்ல." என்க.

"அதெப்பிடி சொல்ற?"

"முதல் தப்பே உங்க மேல தான் அத்தை. மற்ற பசங்க மாதிரியே நீங்க அவருக்கும் செல்லம் குடுத்திருக்கணும்.
அப்புறம் தெருவில் சண்டை போட்டாருனு மாமா கோபபட்டாரு.
கோபபட்டது தப்பில்ல. ஆனால் அவர் என்ன நிலையில இருக்கும் போது கோபப்பட்டாரு?.. அது மாமா மேலதான் தப்பு.
சாதாரணமா இருக்கும் போதே இந்த காலத்து பசங்ககூட பேசமுடியாது. அதுவும் குடி போதையில் இருக்கும் போது பேசினா!...
சின்ன பிரச்சினையையே பெரிதாக்கிற போதை.
இது ஏற்கனவே மாமாவோட செயலால அவர் மனசுக்க வருத்தம் இருந்திருக்கு. இவரும் கோபப்பட்டதும் அப்பாவால தனக்கு உதவி தான் செய்யமுடியல்ல. உபத்திரம் செய்கிறார் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.

முதலில் இருந்தே பிள்ளைங்களை கண்டிக்கணும். இடையில் கண்டிச்சா அதுவும் தோளுக்கு மேல் வளர்ந்தவர்களை கண்டிக்க நிச்சயம் தகராறு வரும்.

என்னை பொறுத்தவரை நீங்கள் சொல்றதை வைச்சு பாக்கிறப்போ மயூரனுக்கு மட்டுமில்ல மற்ற இருவருக்கும் அதே வருத்தம் மாமா மேல நிச்சயம் இருக்கும்.

என்ன இவரு குடிச்சிட்டு வந்ததனால மனதை மறைக்க தெரியாமல் உலறிட்டாரு.
நிதானமாக இருக்கும் போது பேசி இருந்தா அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிந்துணர்வு இருந்திருக்கும்.
கௌரவத்தையும், சமூகத்தையும் பாக்குற அப்பாவால வீட்டு பிள்ளைங்க மனசு பாக்க முடியவில்லை.
இது யார் தப்பு?...

நீங்களும் அந்த சமயத்தி இவருகிட்ட மயூ நட்பு வட்டாரத்தை பற்றி சொல்லி இருக்கலாம். சொல்லிருந்தா அப்போவே அவர் திருந்த நிறைய சந்தர்ப்பர் இருந்திருக்கும்.

அப்புறம் மயூ தொழில் தொடங்க போகிறேன்னதும். என்ன தொழில், யாரு கூட ஆரம்பிக்க போறனு ஒரு கேள்வி கேட்காம தம்பி தொழில் தொடங்க போறானேனு சொன்னதும் முன்ன பின்னே யோசிக்காம கண்ண மூடிட்டு பணம் கொடுத்தாரே முகிலன், அவர் மேலயும் தப்பிருக்கு.

அப்புறம் கடசியாக சொன்னீர்களே. அவருக்கே தெரியாமல் போதை மாத்திரை கோலாக்குள்ள கலந்தாங்கனு.
பிறகு அவர் மேல கோபப்படுறது நியாயமே இல்லையே!..
அந்த நிலையில் கூட அவர் தன் தங்கையை காப்பாற்ற போராடினார் என்கிறீங்க.
அவரது நிலையில அவரால முடியலங்குறது தானே நிஜம். தங்களோட சதிக்கு இவரை பகடையாக்கினவங்களை விட்டிட்டு இவரு மேல தப்புனு சொல்றது அதை விட நப்புத்த.
அவருக்கே தெரியாம நடந்த தவறுக்கு இந்த தண்டனைல்லாம் அதிகம்.

ஏதோ மதிக்கு எதுவுமாகம தப்பிச்சான்னு உங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு அந்த பேச்சை அப்படியே விட்டிருக்கலாம்.
இவரும் தம்பியோட தப்பை கண்டிச்சு அடித்தது தப்பில்ல. அது அவர் கடமையும் கூட!. தம்பி தவறு செய்யிறான்னு தெரிஞ்சும் காண்டுக்காம விட்டாத்தான் தவறு. தமையன் என்ற பொறுப்பெடுத்த கண்டிச்சதனால தான் உங்க ரண்டாவது மகன் திரும்பி உங்களுக்கு கிடைச்சாருக்காரு.
இப்பிடி நீங்களே முழு தவறுகளை செய்துவிட்டு. பழியை மட்டும் மொத்தமாக அவர்மீது போட்டிட்டு அமைதியா இருக்கிறது கொஞ்சமும் சரியாக எனக்கு படவில்லை." என்றவள்.

"மன்னிச்சிடுங்க அத்த!. நான் உன்க ரண்டாவது பையன் மேல தப்பே இல்லனு சொல்ல வரல்ல. ஆனால் அவர் மீது மட்டும் தப்பில்லனு தான் சொல்றேன்.
என் மனசுக்கு பட்டதை சொல்லிட்டேன்..
தவறா இருந்தா மன்னிச்சிடுங்க." என்றவள் கப்களை எடுத்துக்கொண்டு சமையல் அறை சென்றாள்.

சுந்தரிக்கும் அடிப்படை தவறு எங்கு நடந்தது என்பது அப்போது தான் புரிந்தது.
அவரும் குழப்பத்துடனே தன் அறைக்கு செல்ல.
நடந்த பேச்சுவார்தைகளையும், வாத பிரதிவாதங்களையும் வாசல் கதவருகே நின்று கேட்டுக்கொண்டிருந்தான் மயூரன்.
ஒவ்வொரு வார்த்தையிலும் தன் குற்றங்களை சுட்டிக்காட்டினாலும் தன் தரப்பில் இருந்து யோசித்தது மேகலா மீது நல் மதிப்பை உண்டாக்கியது.
கிச்சனுக்குள் வந்தவள் சுந்தரி சொன்ன கதையை கேட்டதும், தவறு செய்தான் என்ற காரணத்திற்காக சொந்த பிள்ளையை ஒதுக்கி வைக்கும் போது.
தன்னை வளர்த்தவர்கள் தன் பிடிவாதத்தையும் தவறையும் பொறுத்து, தன்னை ஒதுக்காமல் பெற்ற பிள்ளைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தனக்கும் தந்ததை நினைத்தவள் வளர்த்தவர்களை நினைத்து பெருமை பட்டாள்.
தன் தாய் தந்தையின் நினைவு அதிகமாக வர அவர்களை பார்கவேண்டும் பேச வேண்டும்போல் இருந்தது.
ஆனால் முகிலனின் கண்டிப்பு நினைவு வரவும் அதை ஓரங்கட்டியவள், அவர்கள் நினைவுடனே அன்றைய வேலைகள் ஒவ்வொன்றாக பார்க்க.

அவள் முகத்தில் தெரிந்த மாற்றத்தை வைத்து என்னவென்று சுந்தரி அக்கறையாக அவளை விசாரிக்கவும்.
அவரிடம் தன் எண்ணத்தை மறைக்காமல் கூறியவள்.
என்னன்னே தெரியல்ல அத்த!.. வீட்டு நினைவாகவே இருக்கு. ஒரு தடவை பார்த்தா நல்லா இருக்கும்." என்றவளை பாவமாக பார்தவர்.
"பாக்கிறது கஷ்டம்ம்மா. முகிலனுக்கு தெரிஞ்சா உன்கூடவே என்னையும் சேர்த்து புதைச்சிடுவான்.
வேணும்னா நீ அவங்க கூட பேச உதவி செய்கிறேன்." என்கவும்.

"வேணாம் அத்தை. ஏதோ எனக்கு
தோனிச்சு. நீங்கள் கேட்டதினால சொன்னேனே தவிர.
அவர் பேச்ச மீற விருப்பமில்லை.
காலம் வரும் அதுவரை காத்திருக்கேன். என்க.
"நீ பானு சொன்னது போல் நல்லாத்தான் பேசுற!..
முதல் தடவை பாக்குறப்போ தெரியாம கேட்டுட்டேன் உனக்கு பேச தெரியாதானு." என கேலி செய்தவர்.

உன் அத்தை நான் சொல்கிறேன்!... நீ பேசும்மா. உனக்கும் அவங்க நினைவா இருக்காத என்ன?...
அவன் ஒரு முரடன்ம்மா அப்படித்தான் கோபத்தில் பேசுவான்." என்றவர்.
தன் போனை எடுத்து நீட்டினார்.


சங்கமிப்பாள்.......
 

Balatharsha

Moderator
பாகம். 24.



சுந்தரியோ மேகலா சொல்வதை கேட்காமல் செல்லில் மேகலா வீட்டிற்கு அழைப்பை தொடுத்து விட்டு மேகலாவிடம் கொடுத்தார்.







"இப்பாே தான் முகிலன் இல்லையே !.. பயப்பிடாம பேசும்மா!.. அப்பிடி ஏதாவது பிரச்சினைன்னா நான் பார்த்துக்கிறேன்." என்றவர்.



"நீ ரொம்பத்தான் அவனுக்கு பயப்படுகிற, அதுதான் உன்னை ரொம்பவே மிரட்டி வைச்சிருக்கிறான்." என்றவர் அவள் பெற்றோரிடம் மனம் விட்டு பேசட்டும் என விலகி சென்று விட்டார்.



பானு வீட்டிலாே திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்தும் அவர்கள் முன்னைய மனநிலைக்கு திரும்பவில்லை.



பானு செய்த காரியத்தால் பெரியவள் என்ன கொடுமையை அனுபவிக்கிறாளோ!. என்ற கவலை அவர்களை சாதாரணமாக விட்டு வைக்கவில்லை.



எந்த நேரமும் மேகலாவை பற்றியே கணவனும், மனைவியும் பேசிக்கொண்டிருப்பார்கள்.



புஷ்பாவிற்கு தன் மூத்த மகள் எங்கு சென்றாலும் சமாளித்து கொள்வாள் என்ற நம்பிக்கை இருந்தாலும். மண்டபத்தில் தாண்டவமாடிய முகிலன் அடிக்கடி நினைவில் வந்து பயமுறுத்த. மற்றவர்களை அவள் சமாளித்தாலும் முகிலனை அவளால் சமாளிக்க முடியும் என அவர்களுக்கு தோன்றவில்லை.



இப்போதும் ஆளுக்கொரு மூலையில் தலையில் கைவைத்தவாறு அமர்ந்திருந்தனர்.



ஃபோன் அலறுவதை கேட்ட வேலு.



"போன் அடிக்குது.... யாருன்னு பாரு!.." என்க.



" யாருங்க நமக்கு போன் போடுவாங்க?.. மூத்தவளை தான் அவளோட புருஷனே பேச கூடாது என்டிட்டாரே!... மத்தது எல்லார் நிம்மதியையும் கெடுத்திட்டு ஒடிப்போனவ அப்பிடியே போகாம மண்டபத்தில இருந்து நேரா வீட்டில வந்து குந்திட்டு இருக்குது.



கேட்டா ஊரில இல்லாத காரணத்தை சொல்லுறா

அது


கம்பனி காரங்களாத்தான் இருக்கும். அடிச்சிட்டு யாரும் எடுக்கேல என்டதும் விட்டிடுவாங்க." என அசண்டையாக,



ஒரு முறை அடித்து ஓய்ந்து மறுமுறை அழைப்பு வரவும்.



"புஷ்பம்.... யாருக்கோ அவசரம் போல. அதை என்னனு முதல்ல கேள்!.." என்ற வேலுவின் பேச்சில்.



சலிப்புடனே எழுந்து சென்றார்.



எப்போது பானு மண்டபத்தை விட்டு வெளியேறினாளோ அப்போதிருந்து ஆளாளுக்கு அவர்களை நேரிலும், போனிலும் என்ன? ஏது?.. என்று காரணங்கேட்டு குடையத் தொடங்கினார்கள்.



அதனால் தான் புஷ்பாவிடம் இத்தனை சலிப்பு.



ஃபோன் சார்ச் போடப்பட்டு பானு அறையின் வெளிப்புற ஜன்னலிற்கு அருகில் இருந்த மேசைமீது தான் வைக்கப்பட்டிருந்தது. ஜன்னல் திறந்திருந்ததனால் அவர்கள் பேச்சு பானுவின் காதில் மிக நேர்த்தியாக விழுந்தது.



ஃபோன் இலக்கத்தை பாராது அழைப்பை ஏற்றவர் "ஹலோ..!" என்றது தான் தாமதம்.



மறு பக்கத்தில் இருந்து வந்த "அம்மா!..." என்ற ஏக்கம் நிறைந்த குரலில் மேகலா தான் என்று சந்தோசத்தில்.



"அம்மாடி மேகலா...! நீயாடா?........



எப்படிடா இருக்க?...... அங்க எந்த பிரச்சினை இல்லையே!.." என ஏக்கம் நிறைந்த குரலில் அவர் கேட்க.



மேகலா தான் அழைப்பில் என்று தெரிந்ததும். வேகமாக ஓடி வந்தவள் தாயிடம் இருந்து ஃபோனை பறித்து ஸ்பீக்கரில் போட்டவள் அருகில் நின்று கொண்டு அவள் பேச்சை ஆர்வமாக கேட்கலானாள்.



"அம்மா.....! எதுக்கும்மா இப்படி பதர்றீங்க?..... எனக்கு இங்க எதுவுமில்லை. நான் நல்லாத்தான் இருக்கேன். இங்க எல்லாருமே என்னை நல்லா கவனிச்சுக்கிறாங்க." என்றவள்.



"நீங்க எப்பிடிம்மா இருக்கிங்க?... சாப்பிட்டிங்களா?...." என்க.



"ஏதோ இருக்கேன்டா!.... என் பொண்ணு அங்க என்ன கொடுமை அனுபவிக்கிறாளோனு ஒவ்வொரு நாளும் நானும் உன் அப்பாவும் பயந்திட்டே இருக்கோம்." என்க.



"ஐயோ அம்மா....! நீங்க வேற,



நானும் முதல் அப்பிடித்தாம்மா நினைச்சேன். பானு செய்த வேலையினால எனக்கு கெடுதல் நினைப்பாங்கனு. ஆனா நாங்க நினைச்சது போலவே இல்லம்மா.



இவரு கூட மண்டபத்தில மாத்திரம் தான் தன்னோட மானம் போச்சுன்னு கத்தினாரு, அப்புறம் சாதாரணமாகிட்டாரு.



என்னை பற்றி கவலைப்படவே தேவையில்லை.



இப்போ கூட அத்தை தான் உங்ககூட பேசச்சொல்லியே ஃபோன் பண்ணி தந்தாங்க." என்று சந்தோஷமாக சொல்லவும்.



"அப்பிடியாம்மா!... என்னமோ உன்னை அவங்க வீட்டில ஒருத்தியா பாத்துக்கிட்டா சந்தோஷம்." என்கவும்.



"அப்பா எங்கம்மா?." என கேட்க. "இருக்காருடா. நீ பேசிறதை கேட்டுட்டு தான் இருக்காரு!." என்கவும்.



"ஏன் அவரு என்கூட பேசமாட்டாராமா?..." என அவள் கோபம் கலந்த உரிமையில் செல்லமாக கேட்க.



மனைவியிடம் இருந்து ஃபோனை வாங்கியவர் "என்னடாம்மா அப்பாமேல கோபடுகிற?.. அங்க போய் ஒரு வாரம் ஆகல்ல மாப்பிள்ளையோட குணம் உனக்கும் வந்திடிச்சா என்ன...?" என மகளை சீண்டவும்.



"எதுக்குப்பா இப்போ அவரை இழுக்கிறீங்க?.... மகளை கட்டிக்குடுத்ததும் உங்க கடமை முடிஞ்சுதுன்னு ஒதுங்கிட்டிங்களா?.... நானா போன் எடுத்தாக்கூட பேசமாட்டிங்களோ!.." .



"அம்மாடி...! அப்பாக்கு மட்டும் என் பொண்ணோட பேச ஆசை இருக்காதாம்மா?..... அப்பா உன்னை நல்ல சூழ்நிலையில மாப்பிள்ளைக்கிட்ட ஒப்படைக்கேலயேடா!..." என்று குரல் உடைந்தவர்.



சிறிது நேரம் பேச்சை தவிர்த்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டு.



"அது தான்ம்மா நீ அம்மா கூட பேசும்போது உன் நிலமையை தெரிஞ்சுகிட்டு. அவ பேசி முடிச்சதும் அப்பா பேசுவாம்னு இருந்தேன். அப்பாவை மன்னிச்சிடும்மா!.." என்க.



விளையாட்டாக சண்டையிட்டவள் பேச்சை நிஜமென நினைத்து வருந்தியவரிடம்.



"எனக்கு எதுவுமில்லப்பா!... நான் நல்லாத்தான் இருக்கேன்.



சும்மா உன்க கூட ஒரு வாரமா சண்டை போடலையா, அது தான் சின்னதா சீண்டி பாத்தேன்.



என் அப்பா எவ்வளவு கஷ்டத்தை தாங்கி வந்தவரு, அப்போல்லம் உடைஞ்சு பாேனது கிடையாது. இப்போ அப்பிடி என்ன நடந்திட்டுது என்டு இந்த கவலை?...



நீங்க எதுவும் யோசிச்சு உடம்பை கெடுத்துக்காதிங்கப்பா. உங்க பொண்ணு எதையும் சமாளிச்சிடுவேன்." என தைரியம் கூற.



"தெரியும்டா!. என் பொண்ணுக்கு இதெல்லாம் சின்ன விஷயம்னு. உன் அம்மா தான் எப்போ பாரு தானும் குழம்பி என்னையும் குழப்பிட்டு இருக்கா" என்க.



"ஓ.... அந்தம்மா வேலை தானா இது?.." என சிரித்தவள். "அது தானே பாத்தேன் என்னோட அப்பா எப்போவும் ஸ்ராங்க்." "ஃபோன குடுங்கப்பா அவங்க கிட்ட. என்னோட அப்பாவையே அழ வைப்பாங்களா அவங்க?.... அவங்களை ஒரு கை பார்த்துடுறேன்." என்க.



"இந்த உன் பொண்ணு எதுவோ தரபோறாளாம்." என அவரும் சிரித்துக்கொண்டே மனைவியிடம் கொடுக்க.



"சொல்லுடாம்மா!.. என்ன தரப்பாேற?.." என்க.



"அம்மா!.... அப்பாவ சும்மா குழப்பிட்டு இருக்காதிங்க சரியா?..." என்கவும்.



"சரி தாயே!... அப்பிடியே அதை அவருக்கும் சொல்லிடு!.." என்று பவ்வியமாக மகளுக்கு சொல்ல.



மேகலாவோ அவரின் பேச்சின் விதத்தில் சிரித்தவள். சிறிது அமைதிக்கு பின்.



"அம்மா!..." என்று இழுக்க,



"சொல்லும்மா என்ன?..."



"அது....". என எங்கு தான் கேட்டால் தாய் சங்கடப்படுவாரோ என்று அவள் எடுத்த பேச்சில் இருந்து பின்வாங்க.



அவள் யாரை பற்றி பேச வருகிறாள் என்பது அவர்கள் மூவருக்கும் தெரியாமலில்லை.



"நீ பானுவை தானே கேட்கிற?" என்றவரிடம்.



"ஆமாம்மா!.. அவளை பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?.." என வினவ.



"ஹூம்ம்........."என்ற பெரிய மூச்சை இழுத்து விட்ட புஷ்பா.



"என்ன தெரியணும்?.. அவ தான் மண்டபத்தை விட்டு நேர வீட்டுக்கு வந்துட்டாளே!.."



"என்ன? ஏதுனு கேட்டா நிறைய காரணம் சொல்கிறா" என்றவரை இடை மறித்த மேகலா.



"என்னம்மா சொல்லுறீங்க?... வீட்டிலயா வந்து இருந்தா அந்த எருமை!..



அங்க எத்தனை அசிங்கப்பட்டோம். ஆனால் அந்த பெரிய மனுஷி எதுவும் தெரியாமல் கௌரவமாக அங்கே வந்து ஒலிஞ்சிருந்தாங்களா?... திருமணம் வேண்டாம் என்று ஒரே முடிவாக சொல்லி இருக்கலாமே. சம்மதிக்கிறது போல சம்மதிச்சிட்டு கடசி நேரத்தில அங்கிருந்து ஓடி வந்தா பிரச்சினை முடிஞ்சிடிச்சுனு நினைச்சாளா?? ......



என்னை என்னவெல்லாம் பேசினாங்க அவங்க. இவ மட்டும் தப்பிச்சா போதும்னு நினைச்சாளோ!....



கடசியில என்ன மாட்டி விட்டுட்டாள்ம்மா!..." என மேகலா பேசிக்கொண்டிருப்பதை ஸ்பீக்கர் வழியே கேட்ட பானு,



தாயிடம் மேகலாவிடம் தான் பேச போவதாகவும் போனை தரும்படி செய்கையால் கெஞ்சினாள்.



"அம்மா எனக்கு அவ தங்கையே இல்லம்மா!. அவளை நினைச்சாலே கோபமா வருது. அவளுக்கு நாங்க என்ன கெட்டதா நினைச்சோம்?.... அவ நான் கெட்டது நினைச்சேன்னு நினைச்சுத் தானே அந்த காரியம் பண்ணா?." என அவள் தன் ஆதங்கத்தை எல்லாம் பொழிந்து கொண்டிருக்கவும்.



சிறிது நேரம் அமைதியாக இருந்த புஷ்பாவிடம்



"என்னம்மா! பேச்சை காணல.



உன் பொண்ணை திட்டுறதனால அமைதிய இருக்கிங்களா?...." என கேட்க.



"இல்லடாம்மா. அவள் என்ன சொல்லுறானு கொஞ்சம் கேட்டிட்டு பேசலாமேடா!.... அவ வேறு ஒரு காரணத்துக்காக தான் மண்டபத்தை விட்டு வெளியே வந்தாளாம்.



என்ன ஏதுன்னு நீயே கேளும்மா!.. உனக்கே புரியும்" என அவளிடம் போனை கொடுக்க போக.



"அம்மா!... அவகூட நான் பேசுறதா இல்லை. அது தான் சொன்னேனே!.. எனக்கு தங்கைனு யாருமில்ல. அவ செய்த வேலைக்கு இப்போ இல்லை, இனி எப்போவும் நான் அவகூட பேசுறதாக இல்லை." என்க.



அவள் பேச்சை கேட்ட பானு வாய் பொத்தி அழுதவாறு தன் அறையில் ஓடிச்சென்று கட்டிலில் விழுந்து கதறத்தொடங்கனாள்.



அவள் அப்படி அழுவதை ஜன்னலினால் பார்த்துக்கொண்டிருந்த பெற்றவர்கள் அதை தாங்காது.



"அம்மாடி!.. அவள் என்ன சொல்ல வரானு ஒரு வாட்டி கேட்டுட்டு ஒரு முடிவு எடுக்கலாமேடா!.. என்க.



"அம்மா அவகூட கடசி நேரம் வரை இருந்தேன்ம்மா....!. எத்தனையோ நல்ல விஷயங்களை ஒவ்வொன்னா எடுத்து சொன்னேன்.



சரி நான் சொன்னதை தான் கேக்கல. நாங்க முகூர்த்த புடவை எடுத்து வந்த நாள்ல இருந்து இவ சரியில்லை.



அப்பவாச்சும் எனக்காவது சொல்லி இருக்கலாமே. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு.



நான் என்ன சொன்னாலும் கறட்டி ஓணான் கணக்க தலையை ஆட்டிட்டு.



நான் அசந்த நேரம் என்னையும் உங்களையும் அந்த முரடன் கிட்ட மாட்டி விட்டு போயிட்டா. அப்போ எங்களை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் சுயநலமா இருந்திட்டு.



இப்போ என்னம்மா பெரிய காரணம் சொல்ல போறாங்க உங்க மக?."



"எனக்கு எந்த காரணமும் தேவையில்லை.



உங்களுக்கு அவ தேவையா இருக்கலாம்!...



என்னை தேவையில்லனு போனவளை நான் தேடமாட்டன்.



என்கூட அவளை பேசவேண்டாம்னு சொல்லுங்க.



இல்லை நீங்களும் என்னை சமாதாண படுத்த அவளை பற்றி ஏதாவது என்கிட்ட பேசினிங்க, நான் இனி உங்க கூடவும் பேச மாட்டேன்." என்றவள்,



அத்தனையையும் மூச்சு விடாமல் பேசியதனாலோ, இல்லை கோபமோ!.. இல்லை பானுவை திட்டியதனால் வந்த அழுகைகை மறைக்க தன்னை அவர்களிடம் இருந்து ஒலிப்பதற்காகவோ சிறிது நேரம் அமைதிகாத்தவள்,



"அம்மா...... சாரிம்மா.... ஏதோ ஒரு வேகத்தில இப்படி பேசிட்டன். மன்னிச்சிடும்மா!.. நீங்க என்னை பற்றி கவலை படாமல் நல்லபடியா சாப்பிட்டு சந்தோஷமா இருங்க.



எனக்கு இங்க எந்த குறையுமில்லை."



"சரிம்மா நான் இன்னொரு நாள் பேசுறேன்.



இவருக்கு தெரியாது நான் உங்க கூட பேசுறது. அத்தை தான் நான் வேணாம்னு சொல்லியும் பிடிவாதமா பேச சொன்னாங்க. ரொம்ப நேரம் பேசிட்டு இருந்த ஊருக்கு போனவரு எப்போ வருவாருன்னு தெரியாது. வந்தா ஏதாவது பிரச்சினையாகிடும்மா.



தப்பா எடுத்துக்காதிங்க." என்றவள்.



"அவளையும் நல்லா பாத்துக்கங்க. அவளும் என்னை பற்றி யோசிச்சிட்டு இருப்பா. எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லைனு நீங்களா சொல்லுறது போல சொல்லிடுங்க. நான் அவ மேல அக்கறை பட்டேன்னு சொல்லிடாதிங்க." என்றவள்



"சரிம்மா நான் வைக்கிறேன்." என வைத்து விட.



தமக்கையின் அத்தனை கோப பேச்சிலும் மனதுடைந்து அழுதவள் கடசியாக அவள் தன்மேல் அக்கறை பட்டதில் இவள் எப்பவும் மாறமாட்டாள். துரோகம் செய்தவரை கூட மன்னிச்சிடுவாள் என நினைத்து தன் கண்ணிரை துடைத்து எழுந்து அமர்ந்தாள்.



மேகலாவும் போன் பீக்கரில் இருப்பது தெரியாமல் பானுவின் மேல் இருக்கும் அக்கயைில் தாயிடம் அவளை கவனிக்க சொல்லி



போனை வைத்தவள் ஏதோ இதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்தது போல் மனதில் ஒரு திருப்தி பரவ சந்தோஷமாகவே அன்றைய நாளை கழிக்க தொடங்கினாள்.



அன்று இரவே முகிலனும் மதியும் கொழும்பில் இருந்து வந்து விட்டனர்.



வழமைக்கு மாறாக மேகலாவின் உற்சாகம் இருவர் கண்களிலும் படாமலில்லை.



இவர்கள் இருவரையும் கண்டதும் மேகலா பழைய படி ஓட்டிற்குள் ஒலிந்து கொள்ளும் நத்தை போல அறையிலே அடைந்து கொண்டாள்.



இவ்வளவு நேரமும் சுகந்திரமாக திரிந்தவள் தங்கள் இருவரையும் கண்டதும் மேகலாவின் செயற்படுகள் மாற தொடங்கியதையும் இருவரும் கவனித்தவனர்.



அந்த பயம் இருக்கட்டம் என்ற எண்ணத்தோடு மதியும் மற்றவர்களோடு இயல்பாக பழகுவதை போல் தன்னிடமும் சகயமாக பழகவைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முகிலனும் தமக்குள் நினைத்து கொண்டனர்.



இரவு தூங்குவதற்கு வந்த முகிலன் மேகலா தன் கட்டிலில் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்தவன்,



கோவிலில் இருந்து வந்த அந்த மாலை பொழுது நினைவு வர. அவள் தன்னை தூக்கத்தில் இருப்பதாக நினைத்து பேசியது நினைவு வந்து அவன் இதழில் சிறு புன்னகையினை ஒட்டிச் சென்றது.



அதன் பின் இருவரும் ஒரே கட்டிலில் இது வரை தூங்கியதில்லை.



இன்று தானாக வந்து தூங்கும் தன் மனைவியின் தூக்கம் கெடா வண்ணம் மறு புறம் வந்து படுத்துக்கொண்டவன். ஏசி போட்டதினால் குளிர் உடலில் பரவ. போர்வையை தேடியவன் மேகலா அதை போர்த்தியிருப்பதை கண்டான்.



அவனுக்கு அந்த பேர்வையை தவிர வேறு எந்த போர்வை போத்தினாலும் தூக்கம் வராது. ஆனால் அவள் போத்தி இருப்பதால் குளிரை பொறுத்துக்கொள்ள முடியாதே.



மெதுவாக அவள் போத்தி இருக்கும் போர்வையை இழுத்தவன் தானும் அதற்குள்ளே தன்னை புகுத்திக்கொண்டு அவளை அணைத்தவாறே விளக்கை அணைத்து விட்டு தூங்கி விட்டான். இருந்த குளிரில் முகிலன் உடல் சூட்டின் கதகதப்பில் அவளும் அவன் அணைப்பிற்கு தன்னை அடக்கியவள் நன்றாக தூங்க தொடங்கினாள்.



சங்கமிப்பாள்...........
 

Balatharsha

Moderator
பாகம். 25



எவ்வளவு மறுத்தும் மேகலாவை ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றாள் பானு., பஜனைகள் முடிந்து வீடு திரும்ப இரவு நெடுநேரம் ஆகியிருந்தது. யாருமற்ற வீதியில் நடந்து வந்துகொண்டிருந்தனர் இருவரும்.



பயத்தினால் மேகலாவின் கையை இறுக பிடித்து ஒட்டியவாறே பானு வர.



மேகலாவோ பானுவை அர்சித்தவாறு வந்தாள்.



"எருமை இதுக்குத்தான் வரமாட்டேன்னு சொன்னேன். இப்போ பாரு என்ன நேரம்னு கூட தெரியவில்லை. சன நடமாட்டம் இல்லாததை பார்த்தா பன்னிரண்டு மணியிருக்கும் போல.



இல்லைனா நாங்க தான் இருட்டில பாதை மாறி வரோமோ தெரியல்லை"



என பானுவை திட்டியபடி வர.



பகலில் சோலையாய் காட்சி தரும் வீதியோர மரங்கள் கூட இருவருக்கும் பூதம் போலவே தெரிந்தது. அது காற்றில் அசைவது கூட இவர்களை பயமுறுத்த. நிலா வெளிச்சத்தை தவிர அந்த பாதையில் ஒரு வீதி மின்விளக்கு கூட இல்லை.



ஆனால் பகலில் பார்க்கும் போது ஒவ்வொரு மின் கம்பத்திலும் மின்குமிழ் பொருத்தப்பட்டிருப்பதை மேகலா பல முறை பாத்திருக்கிறாள்.



இப்போது அது ஏன் எரியவில்லை என்ற கேள்வி அந்த நேரத்திலும் அவளுக்கு தோன்றாமலில்லை. ஒரு வேலை கறண்ட் கட்டோ?.... இல்லையே இன்னைக்கு அந்த மாதிரி பத்திரிகையில நான் காணல்லயே!.. என்ற சிந்தனையில் வந்தவள் பானுவிடம் இதை பற்றி கூறினால் ஏற்கனவே பயந்திருப்பவள் இன்னும் பயந்து விடுவாள் என அமைதியாக வீதியை பார்த்தவாறு நடந்தாள்.



இத்தனை நேரம் நிலா ஒலியில் நடந்தவர்கள் அந்த சாலையில் திடீர் என தெரிந்த வாகன வெளிச்சத்தில் கண்கள் கூச.



அதை தாங்காது முகத்தை கையினால் மூடினாள்.



திடீரென "அக்கா!.... அக்கா!..." என்று பானுவின் அலறல் சற்று தொலைவில் கேட்க.



என்னானது பானுவிற்கு? என பயந்து கண்களை திறந்தவள் அவளை யாரோ இருவர் வந்தநின்ற காரின் அருகில் இழுத்து செல்வது தெரிந்தது.



ஒடிச்சென்று அந்த இருவரையும் தன்னால் முடியுமட்டும் இழுத்தும் அடித்தும் பார்த்தாள். அவர்கள் பானுவை விடுவதுபோல் தெரியவில்லை.



பொறுமை காற்றில் பறக்க அவளை பிடித்திருந்த ஒருவனின் கையை பிடித்து தசை பிரியும்வரை கடித்து வைத்தாள்.



அவனோ "பாஸ் இந்த பொண்ணு கடிச்சு வைச்சிட்டா பாஸ். வலி பொறுக்க முடியல. நீங்க இவளை கவனிச்சுக்காேங்க" என்றதும் தான் தாமதம்.



காரின் உள்ளே இருந்து இறங்கி வந்தவனை பார்த்த மேகலாவிற்கு அவனை இதற்கு முன்னர் பல முறை கண்டது போலும் இருந்தது.



அவன் யாரென ஆராயும் பார்வை பார்த்தவள். தற்போதைய சிக்கலான நிலைபுரிய தன் ஆராச்சியை விட்டு. பானுவை காப்பாற்ற வேண்டும் நினைத்தவள்,



மற்றவனையும் கடிக்க போனாள்.



அதற்குள் அந்த புதியவன் மேகலாவை அசையாது பின்புறம் பிடித்து "நான் இவளை கவனிச்சுக்கிறேன். நீங்கள் அவளை எங்கு சேர்கணுமோ சேர்த்துடுங்க." என கூற.



தலைவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டவர்களாக பானு கத்தக்கத்த காரினில் கடத்திச்சென்றனர்.



தன்னை இரும்பு பிடி படித்தவனிடமிருந்து விடுபட போராடி சோர்ந்தவள் "என்னை விடுடா பொறுக்கி!." என கோபமாக காத்த.



"பொறுக்கி தான்டி......!. நான் பொறுக்கி தான்...... நீயும் உன் கணவனை போல பார்த்த உடனேயே கண்டுபிடிச்சிட்டியே! அதி புத்திசாலி ஜோடி தான்." என்றவன் "உன் புருஷன்கிட்ட என்னை பற்றி கேள்! இன்னும் நிறைய கதை சொல்லுவான்." என்றவன் இன்னும் தன்னுடன் அவளை இறுக்கி கொள்ள. அடுத்து அவன் என்ன செய்ய போகிறானோ என்ற பீதி உருவாக, அதற்குமேல் தாங்காது உடலை உதறி விழித்துக்கொண்டாள்.



விழித்ததும் அறையே இருட்டிப்போய், கனவிற்கும் நினைவிற்கும் வித்தியாசம் தெரியாது குழம்பியவள்



சுற்றும் முற்றும் பார்வையை பதியவிட்டாள்.



கண்ணாடி ஜன்னல் வழியே ஊடுருவிய தெருவிளக்கின் வெளிச்சமானது அவள் நிலையினை உணர்த்தி, கண்டது கனவென்று எடுத்துரைத்தது.



தன் கண்களில் பதிந்த மின்விளக்கையே பார்த்தவாறே விழிக்கும் போது எப்படி படுத்திருந்தாளோ அப்படியே அசையாது படுத்திருந்தவள் பதட்டம் இன்னும் அடங்கவில்லை.



எங்கே அசைந்தாள் கனவில் இறுக பற்றியவன் உண்மையில் வந்துவிடுவானோ என்ற பயம் அவளுக்கு.



இன்னமும் கண்டது கனவென்று அவளால் நம்பமுடியவில்லை.



கனவில் நடந்த அத்தனை காட்சிகளும் மீட்டிப்பார்த்தாள்.



"சம்மந்தமில்லாத கனவாக இருக்கே.



எங்கள யாரு கடத்த போறாங்க?. கடத்துற அளவுக்கு எக்ககிட்ட என்ன இருக்கு?. யாருகூவும் பகையுமில்லையே! பானு என்கூட இருக்கான்னா நான் அப்போது கல்யாணம் செய்யதுக்கலன்னு தானே அர்த்தம்.



என்ன பிடிச்சிருந்தவன் கடசியா உன் புருஷன்கிட்ட கேள்!.. நான் எவ்வளவு கெட்டவன்னு சொல்வான்னு சம்மந்தமில்லாமல் பேசினானே!...



அவன் யார்?... எதற்கு பனுவை கடத்த வேண்டும்?... ஆனால் அவனை எங்கேயோ பார்த்தது போல இருக்கே...! கனவில் கூட அப்படித்தானே தோனிச்சு.



இதுவரை இப்படி ஒரு கனவு நான் கண்டதில்லையே! என அவள் கனவைபற்றியே சிந்தித்தவாறு இருந்தாள்.



கனவில் பின்புறமிருந்து இறுக பற்றியது போல் இப்போதும் இருந்தது.



"அப்போ நான் கண்டது கனவில்லையா?... என அறியும் ஆவலில் மெதுவாக பின்புறம் திரும்பிப்பார்த்தாள்.



முகிலன் தான் தன்னை நெளித்து தன் வயிற்றுப்குதிக்குள் அவளை அடக்கி இறுக அணைத்துத் தூங்கிக்கொண்டிருப்பது அந்த மின்விளக்கின் ஔியில் தெரிந்தது.



அவன் அவ்வாறு படுத்திருப்பதும், தான் அவன் உடலாேடு ஒட்டி படுத்திருப்பது அப்போது தான் உணர்ந்தாள். அவன் அணைப்பில் அடங்கியிருப்பதில் சங்கடம் கொண்டவள், அவனிடமிருந்து விடு பட தன்மேல் இறுகிய அவனது கைகளை விலக்க நினைத்து அவன் கையினை படிக்க,



"அமைதியா படுடி!. தூக்கம் வருது." என்று விட்டு அவன் மீண்டும் படுத்துக்கொண்டான்.



மேகலாவிற்கோ சினம் பற்றிக்கொண்டு வந்தது.



அப்போ தெரியாமல் இவன் இப்படி ஒட்டி படுக்கல்லையா?... தெரிந்து தான் செய்கிறானா?.. என்று.



மேகலா திடுக்கிட்டு எழுந்து போதே அவள் அசைவில் அவனும் எழுந்து விட்டான்.



தான் கட்டிக்கொண்டு தூங்குவது தெரிந்தால் என்ன செய்வாள் என்று பார்ப்பதற்காகவே கண்மூடி தூங்குபவனைப்போல் படுத்திருந்தான்.



ஆனால் நெடுந்தூர பயணத்தின் அசதியால் அவளை கவனிக்காமல் தூக்கம் அவன் கண்களை தழுவும் நேரம் தான் மேகலா அவன் தன்னை கட்டிப்பிடித்து தூங்குவதில் சங்கடங்கொண்டு அவனை விலக்கிவிட நினைக்கையில் அவனது பதிலால் கோபம் கொண்டவள்.



மீண்டும் அவன் கையை பலம்கொண்டு எடுத்துவிட துணிய.



எங்கு அது அசைந்தால் தானே. அத்தனை பலத்தையும் தன் கைகளில் காண்பித்தான் முகிலன்.



திரும்பி கடிகாரத்தை பார்க அந்த சிறு வெளிச்சத்தில் நேரம் இரண்டை தாண்டியிருப்பது தெரிந்தது.. அப்படியே முகிலனையும் பார்க அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தவன்.



"என்னை பாத்தது போதும். இப்போ தூங்கு மேகலா!. காலையில முன்னாடி நிக்க வைச்சு ரசிக்கலாம். இந்த மாதிரி தலையை திருப்பி பாத்தா கழுத்து சுழுக்கிக்க போகுது." என்க.



"முதல்ல என்மேல இருந்து கையை எடுங்க. நான் கீழேயே படுத்துக்கிறேன்." என்க.



எதுக்கு?. நான் உன்னை கட்டி பிடிச்சுக்க கூடாதா?..." என கேட்டவனிடம்.



"விளையாடுறிங்களா?... முதல்ல தள்ளி படுங்க." என சிடுசிடுத்தாள்.



"இதோ பார்ரா!... இவங்க எங்களை கட்டிபிடிச்சு தூங்கலாமாம். நாங்க தூங்கினா விளையாடுறோமாம்.



தூக்கம் வருது மேகலா. பேசாமல் படு!.." என்று அவளை இறுக அணைத்தவாறு படுத்துக்கொண்டவனது பேச்சன் அர்த்தம் புரிந்தது.,



"அப்போ அன்னைக்கு நான் தெரியாம கட்டிபிடிச்சிட்டு தூங்கினது இவனுக்கு தெரியுமா?... அப்புறமேன் என்னை தள்ளி படுக்க சொல்லல?" என நினைத்தவள்,



அவனது அணைப்பிற்குள் படுத்திருப்பது குறுகுறுப்பாக இருக்க, மீண்டும் நெளிந்தாள்.



"இப்பாே என்னடி?.. சொன்னா கேக்க மாட்டியா?... அப்புறம் தூக்கம் கலைஞ்சுதுனு வையி வேற எண்ணம் வந்திடும். இப்போ கட்டிபிடிக்கத்தான் செய்யிறேன். பிறகு வேறு ஏதாவது செய்ய வேண்டி வரும். என்ன முதல் இரவு அன்னைக்கு சொன்னது மறந்திடிச்சா?.." என்றவன் கேள்வியில்



அன்று அவன் சொன்னதை நினைவில் கொண்டு வந்தாள்.



இப்படி ஒரு அழகான மனைவியை பக்கத்தில் வைச்சிட்டு நல்லவன் போல நடிக்கமாட்டேன். உனக்கு விருப்பம் இல்லை என்றாலும் அது நடக்கும் என்றது. இப்போதும் அவள் கண் முன் வந்து அவன் சொல்வது போல் தோன்ற.



எங்கே அவன் சொன்னது போல் செய்து விடுவானோ என்று பயந்து அவன் அணைப்பில் அடங்கி அமைதியானாள்.



சிறிது நேரம் கடந்து மீண்டும் அவள் நெளிய. " சொன்னால் கேட்க மாட்ட!.." என்று இன்னும் அவளை இறுக்கினான்.



"விடுங்க நான் பாத்ரூம் பேகணும். இப்படி பிடிச்சிருந்தா எப்படி போறது?. அது தான் நெளிஞ்சேன் என்க.



"அதை முதலே சொல்ல வேண்டியது தானே!" என்றவன் தன் இறுக்கத்தை தளர்த்தியதும், அவனிடமிருந்து தன்னை விடுவித்து எழுந்தவளுக்கு, இருட்டை கண்டதும் மீண்டும் கனவு நினைவில் வந்து. போன பதட்டம் மீண்டும் அவளை தொற்றிக்கொண்டது.



கண்மூடி படுத்திருந்த முகிலன் அவள் எழுந்து கட்டிலிலே இருப்பதை கண் திறவாமலே உணர்ந்தவன்.



"என்ன கலை போகல்லையா?...." என்க.



"அதுக்குள்ளவே தூங்கிட்டாரா?... யாரு அந்த கலை?



கனவில் கூட அவ வருவாளா?..." என்று நினைத்திருக்க.



அவள் அசையாது அதே இடத்தில் இருப்பதை பார்த்தவன் படுத்திருந்தவாறே விளக்கை போட்டுவிட்டு அவளை பார்த்தான்.



அவள் முகமோ வியர்வையால் ஈரமாக இருந்தது.



தானும் எழுந்தமர்ந்தவன். "என்னாச்சு கலை?... எதுக்கு இப்படி வேர்த்திருக்கு.?...



எதையாவது பார்த்து பயந்திட்டியா?.." என அவள் முகத்தை கைகளில் ஏந்தியவாறு வினாவ.



இல்லை என்பதாய் தலையசைத்தவளை நம்பாது,



"கெட்ட கனவு ஏதாவது கண்டியா?..." என்க.



அந்த கனவையே நினைத்துக்கொண்டிருந்தவள்



ம்ம்.....". என்றாள்.



"கனவுக்கா இப்படி பயப்படுற?.... நானும் என்ன ஏதோனு பயந்திட்டேன். சின்ன பிள்ளையாட்டம் இருக்கிறியே கலை. கனவுனு தெரிஞ்சும் எதுக்கு பயப்பிடுகிற?... தூங்கி எழுந்ததும் அதை மறந்திடணும்." என்று அவளை தேற்றும் விதமாய் கூறியவன்.



"பாத்ரூம் போகணும் சொன்ன போய் வா!..." என்க.



அந்த கனவின் தாக்கத்தில் இருந்தவள் எழாமல் முழித்தபடி இருக்க.



"இன்னும் என்னடி?....." என்றவனிடம்



"பயமா இருக்கு." என வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் இடையில் எச்சிலை முழுங்கி சொன்னவளை பார்க்க சிரிப்பு வந்தாலும், அவள் பயந்திருக்கும் போது சிரிப்பது அழகல்ல. என நினைத்து.



"சரி அதுக்கு இப்போ என்ன செய்யலாம்." என வேண்டுமென்றே கேட்டான்.



"அது வரைக்கும் நீங்களும் என்கூட வாங்க." என்க.



"பாத்ரூம் ரொம்ப தூரத்தில இருக்கு பாரு துணைக்கு நானும் வர. என்று பொய்யாக சலித்தவன்!.... சரி வா!.. " என எழுந்து அவள் பின்னால் நடந்தான்.



அவளுக்கோ கணவன் அருகில் இருந்தும் கனவின் தாக்கம் குறையவில்லை.



எதற்கு அந்த கனவு வரவேண்டும்?.



எதை அது அவளுக்கு உணர்த்துகிறது?. என்பதுவே கேள்வியாக இருந்தது.



ஒருவேளை பானுவுடன் பேசிவிட்டு அவள் நினைவிலே உறங்கியதனால் அப்படி கனவு வந்திருக்குமோ!.. என்று தன்னிடமே அதற்கான விடைதேடியவளிடம்.



"இதுவரை வந்தது போதுமா கலை?... இல்லன்னா உள்ள போகவும் பயமாக இருந்தா சொல்லு .எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை." என்று அவளை ஓரப்பார்வை பார்த்து கண்ணடித்து கேட்டான்.



அவளும் கனவு பற்றிய நினைவில் இருந்ததினால் அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல்.



ஆமோதிப்பதாய் தலையசைத்து "ம்... வாங்க.." என்க.



அவளது பதிலை கேட்டு ஓரப்பார்வையுடன் உதட்டினுள் மர்மமாய் புன்னகைத்தவனை கண்டு, ஏதோ தவறாக சொல்லி விட்டோம் என்பது புரிய. தன் கனவு பற்றிய சிந்தனைகளை தூக்கி எறிந்தவள்,



"என்ன கேட்டிங்க எனக்கு அப்போ சரியா காதில விழல்ல?.." என்க.



அவனோ அதே மந்திரப்புன்னகை மாறாது. "பாத்ரூம் வந்திடிச்சு. உள்ளே போகவும் பயமா இருந்தா சொல்லு அங்கேயும் துணைக்க வரேன் என்றேன். என்க.



அப்போது தான் தான் நிற்கும் இடத்தை கவனித்தவள்,



கோபமாக அவனை முறைத்துவிட்டு உள்ளே சென்றதும் கதவை ஓங்கி சாத்திக்கொண்டாள்.



அவள் செயலில் பலமாக சிரித்தவன்,



"உனக்கு பயமாக இருக்குமே உதவலாம்னு கேட்டா முகத்தில அடிக்கிறது போல கதவை சாத்துறதுதான் உன்க ஊர் பண்பாடா?.." என்று கோபம் போல் கேட்டாலும், கேட்டதற்கு எதிர்மறையாக சிரித்தவனது செயலை உள்ளிருந்து கேட்டவள்.



"என்ன பேச்சு இது?... இதில் புதிசா கலை என்னு பெயர் வேற. எவ அந்த கலையோ?... அவனோட பழைய லவ்வரா இருக்கும். அது தான் அவளோட நினைப்பில என்கூட ரொமான்ஸ் பண்ணிட்டு.



பயமா இருக்குனு உதவி கேட்டா இப்பிடியா பண்றது?." என்று பாத்ரூமிலே இருந்து பொருமியவள் தன் வேலையை முடித்து விட்டு வெளியே வர.



அவனோ விட்டு சென்ற இடத்தில் சுவரோடு சாய்ந்தவாறு அவள் வரவை எதிர்பார்த்து தனக்குள் சிரித்தவாறே நின்றான்.



முதல் முறையாக அவள் முன் சிரிக்கிறான். ஆனால் அதை ரசிக்கும் மனநிலைதான் அவளிடம் இல்லை.



அவன் தன்னை பார்த்து கேலி செய்து சிரிப்பது போல தான் தோன்றியது.



உள்ளே செல்லும் போது எப்படி முறைத்தாளோ அதே முறைப்புடனே வெளியே வந்தவள், தனது தரைவிரிப்பை எடுத்து விரித்து விட்டு அவனுக்கு முதுகு காட்டியவாறு படுத்துக்கொண்டாள்.



அவள் படுத்துக்கொள்ளும் வரை நின்ற இடத்தில சாய்ந்து பார்த்தவாறு நின்றவனை திரும்பி பார்த்தவள்.



"விளக்கை அணைச்சிட்டு தூங்குங்க." என திரும்பி படுத்துக்கொள்ள.



விளக்கை அணைத்துவிட்டு அவள் பின்புறமாக படுத்துக்கொண்டவன், முன்னையதுபோல் அவளை இறுக்கமாக அணைத்தவாறு தூங்க.



தான் தரையில் படுத்தால் அவன் கட்டிலில் படுத்துக்கொள்வான். முன்னைய போல் சங்கடமில்லாது நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்து தரையில் வந்து படுத்தால்,



கட்டிலில் செய்ததையே இங்கும் செய்ய, அவன் பிடியில் இருந்து திமிறி எழுந்து அமர்ந்தவள்.



"என்ன இது ஒட்டிட்டு?.. உங்க இடம் அது தானே!.. கட்டில்ல போய் படுங்க. நான் தூங்கணும்." என்க.



"நான் மட்டும் முளிச்சிருந்து உங்கூட ரொமான்ஸ்ஸா பண்ண போறேன். நானும் தான் தூங்கணும். பேசாமல் படு!.." என்க.



"நீங்க தான் தரையிலயே படுத்துக்க மாட்டிங்களே!.. போய் அங்கே படுங்க." என விரட்டினாள்.



"அது அப்போ!... இப்போ உன்னை கட்டிப்பிடிச்சிட்டு தூங்கினா தான் தூக்கமே வரும் போல இருக்கு. தொல்லை பண்ணாம தூங்கு." என்றவன் கண்மூடிக்கொள்ள.



"உங்களுக்காக தானே நான் கட்டில்ல படுக்காம இங்க வந்து படுத்தேன். அதிலயே போய் படுத்துக்கங்க. எந்த தொந்தரவும் இருக்காது." என்றவளை பார்த்தவன்.



"நீ என்கூட தூங்கிறது எனக்கு தொந்தரவா?... நீ சொல்லுறதை பாத்தா எனக்கு தொந்தரவா இருக்கும்னு தான் இங்க வந்து படுத்தியா?... உன் நல்ல எண்ணம் புரியாமல் என்னை நீ விலத்தி போறியோனு நினைச்சுட்டேன் .அப்படி நீ என்னை விலத்த நினைச்சு இங்க வரல்ல தானே!..." என கேட்க.



அது தான் உண்மை என்றாலும் அப்படிச்சொன்னால் அவன் கட்டிலில் படுத்துக்கொள்வான் என்று நினைத்து அவளும் "இல்லை." என்க.

"


நீ எனக்கு ஒன்னும் தொந்தரவில்லை. நீயும் வா!.. எங்கூடயே படுத்துக்காே!.. எனக்கும் தரையில் படுத்தா தூக்கம் வராது." என்று அவளை எழுப்ப.



அவளோ மறுப்பாய் தலையசைத்து அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.



என்கிட்டயே உன் தந்திரத்தை காட்டுறாயா?.. என நினைத்து அவளை படுத்தவாக்கிலே தூக்கியவன் கட்டிலில் கிடத்தி அவள் அருகில் தானும் படுத்துக்கொண்டு முன்னையது போலவே இறுக கட்டிக்கொண்டே தூங்கிப்போனான்.



முதலில் நெளிந்தவள் அவன் பிடிவாதம் தெரிந்ததினால் சிறிது நேரம் தூக்கம் வராமல் முழித்திருந்தவள், எப்போது தூங்கினாள் என தெரியாமல் அவனுடன் ஒட்டியவாறே தூங்கி போனாள்.



சங்கமிப்பாள்........
 

Balatharsha

Moderator
பகுதி. 26.

யாழ்ப்பாணக் கல்லூரி சேர்ந்து ஒரு மாத காலம் கடந்திருந்தது மதிக்கு.
கொழும்பு கல்லூரியில் இருந்து வந்தவளுக்கு. இடையில் சேர்வதற்கு யாழ்பாண பல்கலை கழகத்தில் இடம் கிடைக்காது என்று முதலில் மறுத்தார்கள். பதினைந்து நாள் போராட்டத்தின் பின் தான் முகிலனின் விடா முயற்சியால் அவளுக்கு இடங்கிடைத்தது.

என்னதான் முகிலனிடமும் மற்றவர்களிடமும் மேகலா ஒதுங்கிக்கொள்ள முயற்ச்சி செய்தாலும்.
அவனும் அவளை விடுவதாக இல்லை. இரவில் தனியே படுத்துக்கொண்டால். அவளை கட்டிலில் தூக்கிகிடத்தி தானும் அவளுடன் ஒட்டிக்கொண்டு தூங்குவான்.
இல்லையென்றால் அவளுடன் சேர்ந்து தானும் தரையிலே படுத்துக்கொள்ள பழகிக்கொண்டான்.

மொத்தத்தில் மேகலாவின் அணைப்பு இல்லாமல் இந்த ஒன்றரை மாதங்களில் அவன் தூங்கியது இல்லை.

கலை.. கலை..! என்று அவள் பல்லவியே பாடிக்கொண்டு திரிய. அந்த அறைலேயே முகிலனுடன் அவள் போராட வேண்டியிருந்தது.
அவனது இந்த நெருக்கமே சற்று இருவரது இடைவெளிரயை குறைத்திருந்தது எனலாம்..

இப்போதுதெல்லாம் மேகலாவிற்கு முகிலன் மேல் கொண்ட பயமும் சற்று குறைந்திருந்தது.

மதி மட்டும் அந்த குடும்பத்தில் மேகலாவிடம் இருந்து விலகியே இருந்தாள்.
புதிதாக கல்லூரியில் சேர்ந்ததனால் அவளது குறிப்பு புத்தகத்தில் பாடங்களை முழுமைபடுத்த வேண்டும் என்பதில் பிஸியாக இருந்தாலும் இடையிடையே மேகலாவை முகிலிடம் மாட்டி விடவும் மறக்கவில்லை.

முகிலனுக்கு எந்த செயல் செய்தாலும் அதில் திருப்தி இருக்க வேண்டும் என நினைப்பவன்.
அப்படி இல்லை என்றால் அது யாராக இருந்தாலும் அவரை கண்டித்து விட்டே அடுத்த வேலை பார்ப்பான்.

அன்று காலை அவசரமாக கிளம்பியவனை, தடுத்த சுந்தரி.
"என்னடா இப்படி அவசரமாக கிளம்புறியே!. கொஞ்சமா சாப்பிட்டுத்தான் போயேன்." என்று அவர் அக்கறையாக கேட்க.

அவர் தன்மேல் வைத்திருக்கும் பாசத்தையும் அக்கறையையும் இன்று நேற்று பார்ப்பவன் இல்லையே முகிலன்.

தந்தை சமூகம் அது இது என்று பிள்ளைகளை கவனிக்கவில்லை என்று மனம் தளராமல் தன்னால் முடிந்தவரை பிள்ளைகளை பாசத்துடன் வளர்ப்பவராச்சே.
அவரது சொல்லை தட்டமனம் வராமல் நேரம் போனாலும் பறவாயில்லை என்று போனில் யாருக்கோ அழைத்தவன் பதினைந்து நிமிடங்கள் லேட் ஆகும் என கூறி சாப்பிடுவதற்காக அமர்ந்தான்.

இன்னைக்கு உனக்கு பிடிச்ச சாப்பாடு தான் செய்யணும்னு பாத்து பாத்து ஒருதங்க செய்தாங்க.
எப்பவும் வேலை வேலை என்று காலையில சாப்பாடால் போறியாம்!.. அதனால பிடிச்சதா செய்தா உனக்கு பிடிச்ச சாப்பாடு என்றதனாலையே கொஞ்சமாச்சும் சாப்பிடுவியாம் என்று நேற்றே உனக்கு என்ன பிடிக்கும்னு என்னை குடைஞ்சிட்டே இருந்தாங்க.

உனக்கு தான் எது நல்லா இருக்காட்டிக்கும் சாப்பாடு நல்லா இருக்கணுமே.
ஒரு வேளை சாப்பிட்டாலும் வயித்துக்கு வஞ்சகம் பண்ணாமல் சாப்பிடுவ, அதில் கொஞ்ச குறை இருந்தாலும் சாப்பிட மாட்டேன்னு அவங்களுக்கு சொன்னேன்.
அவங்க தான் சமைச்சிருக்காங்க உன் வயித்துக்கு வஞ்சகம் பண்ணாமல் நல்லாவே சாப்பிடு." என்க.

"என்னம்மா என்னை புகழ்றீங்களா?.. இல்லை சமைச்சவங்களை புகழ்றீங்களா?... அப்பிடி யாரு சமைச்சாங்க?... நீங்க பண்ற பில்டப்ப பார்த்தால் எனக்கே வேலையை மறந்து ருசிச்சு சாப்பிடணும் போல இருக்கு. சீக்கிரமா தட்டில வையுங்க." என ஆர்வமானான்.

"எனக்கும் லேட் ஆகுது. எனக்கும் வையுங்க." என வேகமாக தயாராகி ஓடிவந்த மதி. தட்டை தானே எடுத்து அமர்ந்து கொண்டாள்.
இருவருக்கும் மேகலாவை அழைத்தே பரிமாற வைத்தார் சுந்தரி.

முதலில் மதிக்கு பரிமாற.
"வாசனையே ஆள தூக்குதே! எனக்கும் மினக்கடுத்தாம வையி பாக்கலாம்." என்றவன் பரிமாறியதும்
சிறிய துண்டாக பிய்த்து உருளை கிழங்குடன் தொட்டு வாயில் அவன் வைத்தான்.

மூவரும் என்ன சொல்வானோ என்று ஆர்வமாக பார்க்க. அவன் முகத்தில் வந்த மாறுதலில் தன்னுடையதை சாப்பிடாமலே வைத்துவிட்டாள் மதி.

மற்றவர்களுக்கு அவனது முகமாறுதலின் பொருள் விளங்கவில்லை.
ஆனால் எதுவோ சரியில்லை என்று மட்டும் இருவருக்கும் புரிந்தது.
சாப்பிட்ட தட்டிலே வாயில் இருந்ததை துப்பியவன்.

"இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா? இதை மனுஷன் சாப்பிடுவானா?. என் நேரத்தையே வீணடிச்சிட்டிங்க." என்று சுந்தரியிடம் கத்தியவன், மேசையிலிருந்த தட்டை தூர வீசியடித்தான்.

"இங்க யாரும் புதுசா சமைக்க தேவையில்லை.
இதுவரை யாரு சமைச்சாங்களோ அவங்களையே செய்ய சொல்லுங்கள்.
இரவு பகல் பாராமல் கஷ்டபடுறதே நல்ல சாப்பாட்டுக்குத்தான், இதை கூட சரியா செய்ய தெரியல்லனா முதலில் இந்த சமையல் செய்தவரை மாத்துங்க."
என்றவன் கையை கழுவிவிட்டு சென்றுவிட்டான்.

மதியோ இங்கு நடந்த கூத்தையும் மேகலாவையும் மனதில் சந்தோஷத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த காட்சியை பார்க்கத்தானே தமையனோடு சாப்பிடவே அமர்ந்தாள்.

நேற்று சுந்தரியிடம் யாருக்கு என்ன பிடிக்கும்?. நாளை முழுவதும் தான் தான் சமைக்க போவதாக சுந்தரியிடம் கூறிக்கொண்டிருந்ததை டீவி பார்த்துக்கொண்டிருந்த மதி இவர்கள் பேச்சையே கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஒவ்வொருக்கும் பிடித்த சாப்பாட்டை பற்றியும் சொன்ன சுந்தரி முகிலன் விருப்பத்தையும் கூறினார்.

காலையில் முகிலன் சாப்பிடாமல் செல்வதை மேகலா இங்கு வந்த கொஞ்ச நாட்களிலே கவனித்திருந்தாள்.
சரி பிடித்த சாப்பாடு செய்தால் விரும்பி சாப்பிடுவான் என்று காலையில் அவனுக்கு பிடித்தது போல் செய்தாள்.

இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த மதியோ அண்ணன் சாப்பாட்டு விடயத்தில் எத்தளவு கரார் என்பது தெரிந்ததனால் இவர்கள் பேச்சை மறந்து. காலையில் எதேட்சையாக கிச்சன் சென்றவள்.
சமையல் வாசனை மூக்கை துளைக்க, "யாரு இப்படி வாசனையாக சமைச்சது." என்று ஒவ்வொன்றாக திறந்து பார்க்க.
அது முகிலன் விருப்ப உணவுகளாக இருந்தது.

நேற்று தாய்கும் மேகலாவிற்கு நடந்த பேச்சுவார்த்தைகளை நினைவுகொண்டவள்.
"ஓகோ!.. மேடத்தோட கைவண்ணமா?... இப்படி சமைச்சு என் அண்ணனையே கவுக்க திட்டமாே?..." என்று கருகியவள். ஒவ்வொன்றாக எடுத்து சுவை பார்த்து விட்டு.

"ம்..... சும்மா சொல்லக்கூடாது. நல்லாத்தான் சமைச்சிருக.
ஆனால் இது எனக்கு நல்லதில்லையே!..." என்றவாறு உப்பை எடுத்தவள் உருளைகிழங்கு கறியிணுள் ஒரு தொகை போட்டு கலந்து விட்டு எதுவும் அறியாதவள் போல வெளியேறினாள்.

முகிலன் கோபம் எதற்கென்று புரியாது
"எதுக்கத்தை இப்படி பண்ணாரு?. நல்லாத்தானே சமைச்சேன்." என்றவள் "நீங்களே சாப்பிட்டு பாருங்கத்தை." என்க.
மதி தட்டிலிருந்த பூரியை கறியுடன் தொட்டு வாயில் வைத்த சுந்தரி. ஓடிச்சென்று சிங்கில் துப்பியவர்.

"என்னம்மா ஒரே உப்பா இருக்கு?. நீ ருசி பாக்கலையா?" என்க.
"இல்லையே அத்தை நான் பாத்தேனே நல்லாத்தானே இருந்திச்சு." என்றவள், தானும் தெட்டு வாயில் வைத்து விட்டு.

"ஆமாத்தை உப்பு அதிகமாத்தான் இருக்கு.
நான் சமைச்சு முடிய ருசி பார்க்கும் போது இப்படியில்லையே.
ஆனா இப்போ முழு உப்பையும் கொட்டினது போல எப்படி அதிகமாச்சு?. என்று அதே கேள்வியை சுந்தரியிடம் கேட்க.

எல்லாத்தையும் செய்துட்டு எதுவும் தெரியாத பச்சை பிள்ளையாட்டம் எங்ககிட்டயே கேளு!...
இப்போ உனக்கு திருப்தியா?... யாரையுமே சாப்பிட விடாம செய்யிறதில என்ன ஆனந்தமோ!.. நீயோ உன் சமையலை வைச்சு கொட்டிக்கோ!.. இது தானே உனக்கு தேவை!" என்றவள் தானும் எழுந்து சென்றாள்.

மேகலாவிற்கு உண்மையில் எதுவும் புரியவில்லை.
சமைக்கும் போது எல்லாமே சரியாக இருந்தது. இப்போது மட்டும் எப்படி உப்பு அதிகமாகும்?. சமையல் தெரியாதவன் கூட இந்தளவிற்கு உப்பை கொட்ட மாட்டானே.!
இதை பார்த்தால் வேண்டுமென்றே செய்தது போலல்லவா இருக்கிறது.
நிச்சயம் நானில்லை. இவர்கள் சாப்பிடாமல் இருப்பதால் எனக்கு எந்த லாபமுமில்லை என தெரிந்தும்
ஏன் இப்படி பேசுறாங்க?.. என்று மனம் வேதனை கொண்டவள்,
அமைதியாகவே அறையில் முடங்கிவிட்டாள்.

மதியவேளை ஒருவேலையாக பக்கத்து தெருவிற்கு வந்தவன் வீட்டிலேயே சாப்பிட்டை முடித்து விட்டு போகலாம் என வந்தான்.
சுந்தரி ஹாலிலே கவலையாக இருப்பதை கண்டு, என்ன என விசாரிக்க,

"எதுக்குடா இப்படி செய்த?... உனக்கு எல்லாம் சரியாக இருக்கணும்.
அதுக்காக உனக்கு பிடிக்கல்லை, அதில் உப்பு அதிகமாக இருக்குதுன்னா அதை தன்மையாக சொல்லி புரியவைக்க வேண்டியது தானே?...
பாவம் நீ தினமும் காலையில் சாப்பிடாமல் போற,
உனக்கு பிடிச்சதை செஞ்சா கொஞ்சமாவது சாப்பிட்டுவன்னு பார்த்து பார்த்து சமைச்சா உன் மனைவி.
அதுவும் நேற்றையில இருந்து என்னை இருக்க விடாம உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு குடைஞ்சிட்டிருந்தா!..
இப்படியா முகத்தில் அடிச்சதைபோல தட்டை தட்டி விடுவ?.

பாவம் காலையில் நீ போனதும் அறைக்குள்ள போனவ வெளியில் வரவேயில்லை.
சாப்பிட கூப்பிட்டாலும் பசிக்கல்லன்னு உள்ளேயே அடைஞ்து கிடக்க.
முதல்ல உன்னோட முரட்டு தனத்தை தூக்கிபோடு!.
எங்களுக்கு உன் குணம் தெரியும். ஆனால் பாவம் அவளுக்கு இதெல்லாம் புதுசாக இருக்கும்.
அவள பாத்தாளே எவ்வளவு மென்மையானவள்ன்னு உனக்கு புரியவில்லையா?...

அப்புறம் உன்னை மட்டும் யோசிக்காத. உன் எதிரில் இருக்கிறவங்க பத்தியும் யோசிக்கணும்டா!.
இருபத்தி ஒரு வயதிற்கு பிறகு நீ என் கட்டுபாட்டில் இல்லை. எதை சொன்னாலும் ஏதோ ஒரு அடம். மத்தவங்க உணர்வுகளை மதிக்கிறதே இல்லை.
எதுக்கு நீ இந்தமாதிரி மாறினாயோ எனக்கு தெரியல்லை.
இதுவரை உன்னை நினைத்து பெருமை பட்ட எனக்கே,
இப்போ அது தப்போன்னு தோணுது.

அவளை இக்கட்டில் நிற்க வைச்சு திருமணம் செய்த நாளில இருந்து உன்னால் ஏதோ ஒரு வகையில் மனம் வேதனை பட்டுட்டே இருக்கா.
ஒரு தடவை அவளோட நிலையில் இருந்து யோசித்துப்பாருடா!.
இப்படி ஒரு இக்கட்டில எந்தப்பெண்ணை நீ கூட்டிட்டு வந்தாலும்.
பகையை அவள் ஏதோ ஒரு வகையில் காட்டுவ.

ஆனால் என் மருமக அப்படி எதுவுமே செய்யல்லை. முடிஞ்சவரை எல்லார் மேலயும் அன்பாகத்தானே நடந்துக்கற?
உனக்கும் உன் தங்கைக்கும் தான் அவள் எப்போதும் வேண்டாதவள்.
நீ செய்தது போதாதுக்கு உன் தங்கை வேற அவளை திட்டிட்டு போறாள்."
"அவளை அவள் சொந்தங்ககிட்டருந்து பிரிச்சு அண்ணன் மாறி தங்கை மாறி நல்லா கொடுமை படுத்துங்க.
திட்டிட்டு நீ உன் வேலையை பாரு. ஆறுதலுக்குக் கூட ஆள் இல்லாமல் அவள் அந்த அறையிலேயே சாப்பாடு தண்ணியில்லாமல கிடந்து சாகட்டும்." என்று அவனை ஒரு வார்த்தை பேச விடாமல் பொரிந்து தள்ளியவர்.
தானும் தன் அறையில்சென்று கதவடைத்துக்கொண்டார்.

இப்போது தான் அவனுக்கே தெரியும் காலை உணவு செய்தது தன் மனைவி என்று.
முன்னா் தெரிந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பான். ஆனாலும் அவள் ஆசையாகவும், அக்கறையோடு செய்தாள் என்பது தெரிந்திருந்தால் கொஞ்சம் பேச்சையாவது குறைத்திருப்பான்.

தான் காலையில் சாப்பிடுவதில்லை என்று அக்கறையோடு சமைத்தவளை திட்டியதுமில்லாமல்.
அவள் மனம் நோகும்படி நடந்து விட்டோமே என்பது கஷ்டமாகிப்போக.

நான் தான் கோபத்தில திட்டிட்டேன்னா இவளாவது நான் தான் சமைச்சேன்னு சொன்னா என்ன?..
என்று நினைத்தவன். பரிசு கொடுத்தால் நான் செய்தேன்னு முன்வந்து வாங்கிகொள்ளலாம்.
திட்டினால் யாராவது சொல்வார்களா?...
முதல்ல இவளை சமாதாணம் செய்யணும். மதி வேற எரியிறது போதாதுன்னு எண்ணெய் ஊத்திட்டு போயிருக்க. என்று புலம்பியவன் தன் அறை கதவை தள்ள, அது உற்புறம் பூட்டப்பட்டிருந்தது.

"கலை." என்றழைத்தவனுக்கு எந்த பதிலும் இல்லாமல் போக மீண்டும் அழைத்தான்.
எந்த சத்தமும் இல்லை.
என்ன செய்கிறாள் என சாவியின் தூவார வழியே பார்க்க அவள் கட்டிலில் கதவிற்கு முதுகு காட்டி படுத்திருப்பது தெரிந்தது.

இம்முறை "கலை.." என கதவை பலமாக தட்டியதும் தான் எழுந்து கொண்டாள்.
கதவின் சத்தமும் முகிலனது கலை என்ற அழைப்பிலும் யார் என்பதை தெரிந்து கொண்டு கதவை திறந்து விட்டு கட்டிலிலே போய் படுத்துக்கொண்டாள்.

தான் வந்திருப்பது தெரிந்தும் அமைதியாக படுத்தவளின் அருகில் அமர்ந்தவன்,
"எதுக்கு சாப்பிடாம படுத்திருக்க?... வா எனக்கு பசிக்குது. வந்து சாப்பாட்டை போடு!" என்க.
"அத்தை வெளியில் தான் நிக்கிறாங்க. அவங்களை கேளுங்க. எனக்கு உடம்புக்கு முடியல்லை." என்க.

அவள் நெற்றியை தொட்டுப்பார்த்தவன், தொடுகையில் மாற்றம் தெரியவில்லை என்றதும், "உடம்புக்கு என்ன செய்யிது?.." என கேட்க.

எதுவும் இல்லாம எதை சொல்வாள் அவள்?... பொய் சொல்ல பிடிக்காதவளாய்.
அமைதியாக படுத்திருக்க,

" வா கலை!.. காலையில இருந்து எதுவும் சாப்பிடல்ல. இப்போ ரொம்ப பசிக்குது." என்க.

அவன் பசி என்றவும் அமைதியாக எழுந்து வெளியேறியவளையே பார்த்திருந்தவன்,

"எனக்கு தெரியாத என் கலை எப்பிடின்னு?.. எதை சொன்னா எப்பிடி என் வழிக்கு வருவேன்னு எனக்கு தெரியும் கலை ." என்றவாறு அவள் பின்னால் சென்றான்.

அவன் வந்து இருக்கையில் அமர்வதற்கு முன்னர் தட்டை எடுத்து வைத்து சாப்பாட்டை போட்டவள் தன் வேலை முடிந்ததென்று போவதற்கு எத்தணிக்க.

"இரு கலை எனக்கிருக்கிற பசிக்கு எத்தனை தடவை சாப்பிடுறேனோ தெரியாது. பக்கத்திலையே நின்று பரிமாறு." என்க.

அவன் சாப்பிடுவதை பார்துக்கொண்டிருந்தவள் அவன் நிதானாக சாப்பிடுவதனால் பக்கத்தில் இருந்த இருக்கையை இழுத்து அமர்ந்து சாப்பாட்டு மேசைமேல் தலை வைத்து படுக்கும் வரை அமைதியாக உண்டுகொண்டிருந்தவன்
அவள் சரிந்த அடுத்த நொடியே,

"கலை அந்த பாெரியலை எடுத்து வைக்கிறியா?.!" என
அருகில் இருப்பதை கூட மேகலாவிடம் ஏவயவனிடம்.
ஏன் பக்கத்தில தானே இருக்கு, அதைக்கூட எடுத்து சாப்பிட ஐயாவால் முடியாதாக்கும்!...
கலை தான் வந்து வைக்கணுமோ!.. என நினைத்தவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தாலும் முன்னையது போல அமைதியாகவே அவன் கேட்டதை எடுத்து வைத்து விட்டு நகர.

"நீ சாப்பிட்டியா?" என்ற அவனது கேள்விக்கு.
"பசி இல்லை." என்ற பதில் மட்டுமே வர.
"காலையில சாப்பிட்டியா இல்லையா?." என்றான்.
"இல்லை... அப்பவும் பசியில்ல." என உயிரே இல்லாது பதிலுரைத்தவளுக்கு.

"ஏன் பசிக்கல்லை?.... புருஷன் திட்டினா பசி எடுக்காதா என்ன?..." என்று தன் தட்டிலிருந்த சாதத்தை பிசைந்தவாறு அவன் கேட்க.

அவனை விரத்தியாக பார்த்தவள், தன் பார்வையை அவனிடமிருந்து மீட்டு, முன்னைய இருக்கைக்கு செல்ல.
தனது வலிய கரத்தினால் அவள் இடையை பின்புறமாக இருந்து வளைத்தவன்.

"ராங்கிடி உனக்கு." என்று கடித்த பற்களிற்கிடையில் அவளை செல்லமாக திட்டியவாறு தன் மடிமீதே அவளை அமர்த்தி தன் தட்டிலிருந்த சாதத்தை பிசைந்து ஊட்டுவதற்காக வாயருகில் காெண்டுசென்றான்.

அவனது கலையோ அதை பிடிவாதமாக முகத்தை திருப்பி மறுத்தவள்.
" இது என்ன விளையாட்டு?.. முதல்ல என்னை விடுங்க.
இது ஒன்னும் உங்க அறை கிடையாது. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? என அவனிடமிருந்து எழுந்துகொள்ள அவள் திமிற.

அவனது ஒற்றை கரத்தின் வலிமையினால் அது முடியாமல் போனது.

சொன்னது புரியல்லையா உங்களுக்கு?.. விடுங்க வீட்டில அத்தை இருக்காங்க?.. பாத்தா தப்பா எடுத்துக்க போறாங்க" என்று அவள் அவனை திரும்பி முறைத்தவாறு கூற.

"ஏன் நான் என்ன கண்டவன் பொண்டாட்டியையா பிடிச்சு வைச்சிருக்கேன்?.....
யாரு பாத்தாலும் தப்பா எடுக்க மாட்டாங்க. புதுசா கல்யாணமான தம்பதினா இப்பிடித்தா சில்மிஷம் பண்ணுவாங்கன்னு கண்டும் காணமல் போயிடுவாங்க.
நீ சாப்பிடுற வரை நான் உன்னை ஒரு இஞ்கூட நகர விடமாட்டேன்.
சீக்கிரம் சாப்பிட்டேனா யாரோட கண்ணிலயும் படாம போயிடலாம். எப்பிடி வசதி?" என புருவ உயர்த்தி கேட்க.

மேகலாவிற்கு அவன் தன்னிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையில் எங்கு தன்னை அறியாமல் அவன் புறம் சாய்ந்து விடுவேனோ! என்ற பயம் முதல் முறை தோன்றியது.
அதே சிந்தனையில் அவனையே வைத்த கண் வாங்காது இருந்தவளிடம்.

"கலை!..... என்னை சைட் அடிக்கிறியா?.. இப்போ சாப்பிடு.
ரூம்ல போய் ரொமான்ஸ் பண்ணலாம்." என கூற.
அவனது பேச்சில் கோபமாக திரும்பி அமர்ந்தவளின் கதினுள்,

"பிளீஸ் கலை!... ரொம்ப நேரமா இப்பிடியே அடம் பண்ணிட்டு இருக்காதடா?... உன் வெயிட்ட என்னால தாங்க முடியல்ல. கால் ரொம்ப வலிக்குது." என்று அவன் பொய்யாக முகத்தை சுழித்து சொல்ல.

"நல்லா வலிக்கட்டும். நானா இருத்த சொன்னேன்?.." என்று தன் கைகளை கட்டிக்கொண்டு வேண்டுமென்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருக்க.
அவள் செயலில் பெரிதாக சிரித்தவன்.

"சரி உன் ஆசை தீர இருந்துக்கோ. ஆனா இங்க வேண்டாம். நம்ம ரூமில" என்றவன்.
சாப்பாட்டை ஊட்டிவிட.
இந்த முறை எதுவும் சொல்லாமல் வாயை திறந்து வாங்கிக்கொண்டாள்.

இருவரும் இருந்த பசியில் சாப்பாடு எப்படி காலியானதோ தெரியாமல் முடிந்து விட. சாப்பிட்டு முடித்ததும்,
"எனக்கு அவசரமா வேலை இருக்கு கலை. ரொம்ப லேட்டாச்சு. நீ உள்ள போய் ஓய்வெடுத்துக்கோ.
நான் என் வேலையை முடிச்சிட்டு வரேன்." என கூறி செல்பவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இத்தனை அவசர வேலையிலும் தான் சாப்பிடவில்லை என்று தன் வேலையை பொருட்படுத்தாது. எனக்காக இத்தனை மணிநேரம் செலவழித்திருக்கிறான். நான் சாப்பிடுவது அவன் வேலைகளை விட முக்கியமானதா?.
இவனுக்கு அவ்வளவு முக்கியமானவளா நான்?.. என முதல் முதலில் முகிலன் மேல் என்னவென்றே புரியாத அரும்பு ஒன்று மலரத்தொடங்கியது.

முகிலனுடன் இருக்கும் சமயங்களில் நேரம் போதாமலும்.
மற்றைய பொழுதுகளில்
ஒவ்வொரு மணிநேரமும் நாட்களாகவே சென்றது.
அதனால் வீட்டில் இருக்கும் வேலைகளில் பாதி வேலையாவது இப்போது கலை பார்த்துக்கொள்வாள்.

இன்று வெள்ளிக்கிழமை ஆகையால் ஒவ்வொரு வெள்ளியிலும் கோவில் சென்று குடும்பத்தவர் பெயரில் அர்சனை செய்வது சுந்தரியின் வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வெள்ளியன்று அதே கோவிலில் அன்னதானம் கொடுப்பதும் வழயைமான ஒன்று.
இன்று அதற்கான பணத்தை கோவில் நிர்வாகியிடம் ஒப்படைத்தால் தான் எதிர்வரும் வெள்ளியன்று அன்னதானம் வழங்க முடியும்.

இதை பற்றி நேற்றைக்கே சுந்தரி மேகலாவிடம் கூறியவள், நீயும் என்னுடன் வரவேண்டும் என அன்புக்கட்டளையிட அவளும் அதற்கு சம்மதித்தாள்.

காலையில் சுந்தரிக்கு ஏற்பட்ட ஆஸ்த்துமாவினால் அவரது உடல் எழுந்து நடக்கவே ஒப்புக்கொள்ளவில்லை.
அதனால் மனம் உடைந்தவர்
"என்னம்மா இப்படியாகிடிச்சே!...
இப்போ என்ன செய்யிறது. வீட்டிலயும் யாரும் இல்லை. இல்லைன்னா இந்த பணத்தை கட்டச்சொல்லி அனுப்பி இருக்கலாம்.
கோவில் காரியத்தில் காலம் தாழ்த்துறது அவ்வளவு நல்லதில்லை.
இந்த ஆஸ்த்துமாவும் காலநேரம் தெரியாமல் வந்து தொலைஞ்சிருக்கு. யாரை அனுப்புறதுன்னே தெரியல்லை. என வருந்தப்பட.

"இதுக்கு எதுக்கத்தை கவலைப்படுறீங்க?..
நான் போயிட்டு வரேன்.
உங்க பெயரை சொல்லி பணத்த கட்டினா சரிதானே!.. என்க.

"நிஜமாத்தான் சொல்லுறியாம்மா?..
உனக்கு எந்த சங்கடமும் இல்லையே!.." என் மகிழ்ந்து கேட்க.
"எனக்கு என்ன சங்கடம்? நானே போறேன். கவலைபடாம இருங்க." என்றவள்,

"சர்மி வீட்டில் தானே இருப்பா அத்த?.. அவளையும் கூட்டிப்போய் வரவா?" என்க.
"அவள் பேகமுடியும்னா நான் ஏன்ம்மா புலம்ப போறேன். அவள் மூணு நாள் கோவில் வர முடியாது." என்றதும் தான்..... "ஓ......." என்றவள்.
"அதுக்கென்ன நான் தனியவே போய் வரேன்.
சந்தைக்கும் போய் கொஞ்ச காய்கறி வாங்க வேண்டியிருக்கு. அதையும் வாங்கிட்டு வர தாமதமாகும். அப்புறம் என்னை காணல்லன்னு தேட கூடாது." என்றவள் தயாராகி கோவிலுக்கு புறப்பட்டாள்......

சங்கமிப்பாள்..........
 

Balatharsha

Moderator
பாகம். 27.


கோவிலுக்கு சென்றவள் அத்தையின் திருப்திக்காக குடும்பம் பெயரில் அர்சனை ஒன்றை செய்தவள்,
கோவில் நிர்வாகியிடம் பணத்தை கட்டி அதற்கான பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டவள்,
ஆட்டோவை பிடித்து சந்தைக்கு புறப்பட்டாள்.

எங்கு பார்த்தாலும் பல விதமான காய்கறி கடைகள். பழக்கடைகள், பனை ஓலை பொருட்கள். வெற்றிலை கடைகள், உள்ளூர் உற்பத்தி திண்பண்டங்கள். பூக்கடைகள். பெண்கள் அலங்கர பொருட்கள் என கண்களை கவரும் விதமாக இருந்தது.

திருவிழா போல மக்கள் கூட்டம் அலைமாேத. எங்கு திரும்பினாலும் ஒரே சல சலப்பாக இருந்தது.

மேகலாவோ தான் எதை வாங்க வேண்டும் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தவள், அதில் இருந்தவற்றை ஒவ்வொன்றாக பார்த்து விட்டு.
முதலில் பழக்கடையில் சில பழங்களை வாங்கியவள்.
மரக்கறி(காய்கறி) கடையில் நின்று காய்கறிகளை அதன் தன்மையை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

"அக்கா...! என சிலிர்ப்போடு அருகில் கேட்ட குரலில் அது யார் என்பதை அறிந்தவள்.
இரண்டு மாதங்கள் கடந்து அந்த குரலை கேட்கும் போது தன்னையே அறியாமல் "பானு...!" என்றவாறு திரும்பியவள் பானுவை கண்டுவிட்டு அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்ததும் தான் தாம் பேசிக்கொள்ளாதது நினைவு வந்தது.

தெரியாதவளைப்போல திரும்பி நின்று காய்கறிகளை வாங்கியவள்.
அவள் அழைப்பிற்கு செவிசாய்காமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

இத்தனை நாள் ஊர் பேச்சுக்கு பயந்து வீட்டிலே அடைந்திருந்தவள், இப்படியே அடைந்து கிடப்பதால் நடந்த எதையுமே மாற்ற முடியாது. இனி என்ன நடக்கிறதோ அதை கவனிப்போம்.

தலைக்கு வந்த ஒன்று தலைபாகையுடன் சென்றது. என சந்தோஷப்படுவதை தவிர இதில் வருத்தப்பட எதுவுமில்லையே!..

இதுவரை தமக்கை தான் வாழ்கை என்று இருந்தவள். தான் தெரியாமல் செய்திருந்தாலும் அவளுக்கு நல்லது தானே நடந்திருக்கிறது.
ஆனால் என்ன? அவள் குணத்திற்கு தான் இந்த முசுடு கொஞ்சமும் பொருத்தமில்லை.

சரி வேறு வழி?..... குரங்கிற்கு வாக்கப்பட்டால் கொப்புக்கொப்பாக தாவித்தானே ஆகவேண்டும். என நினைத்தவள்,

மேகலா தன் மென்மையினால் யாராக இருந்தாலும் அவர்களை வசியம் செய்து விடுவாள். அந்தளவிற்கு கெட்டிக்காரியாச்சே!.. என தமக்கையை பெருமையாக நினைத்தவள்.
வழமைக்கு மாறாக காலையிலேயே எழுந்து காலை சமையல்களை முடித்தவள்.
மதிய உணவிற்கு வீட்டில் காய்கறி இல்லததனால் தானே மார்க்கெட் சென்று வாங்கி வருவதாக சொன்னபோது. இத்தனை நாளும் அடைந்து கிடந்தவள், இன்று யாரும் சொல்லாமலே எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்வது மட்டுமில்லாமல்.
சந்தைக்கும் தானே செல்வதாக சொல்லவும் இவள் மாற்றத்தை பெற்றோர்களினால் நம்ப முடியவில்லை.

ஆனால் அவளுக்கும் ஒரு மாற்றம் தேவையே!... எத்தனை நாளைக்கு தான் ஊர் என்ன சொல்லும் என பயந்து கொண்டே வாழமுடியும்.
இவள் தேடியதை அவளே எதிர்கொள்ளட்டும்.
காலப்போக்கில் அது மறைந்து விடும். என நினைத்தவர்கள் அவளை வெளியே போக சம்மதித்தனர்.

அப்படி வந்த இடத்தில் தான் எதிர்பாராமல் மேகலாவை கண்டாள். தான் செய்த தவறை அவளுக்கு புரியும்படி கூறி மன்னிப்பு வேண்டுவோம். மன்னித்தால் என்றால் நல்லம். இல்லையா தன் பக்கம் உள்ள உண்மையை சொன்னேன் என்ற திருப்தியில் இருப்போம் என்றெண்ணி அக்கா என்று அழைத்தாள்.

சந்தை தாண்டி அவள் மேல் உள்ள கோபத்தில் வேகமாக நடந்தவள்.
"அக்கா நில்லுக்கா!.. உன்கூட கொஞ்சம் பேசணும் பிளீஸ்....!
அக்கா ஒரு தடவை என் பேச்சை கேளேன். அப்புறம் நீ என்னை மன்னித்தாலும் சரி, இல்லன்னா அடித்தாலும் சரி ஏத்துக்கிறேன்." என்று அவள் பின்னாலே தொடர்ந்து வந்தவள்.

"அடியேய் மேகலா!.. சொன்ன உனக்கு விளங்காதா?.... நில்லுடி!...." என்க, அதற்கும் மேகலா மசிந்த பாடில்லை.

மேகலாவோ சந்தை தாண்டி வந்து நான்கு சந்தியை கடந்து விட்டாள்.
"அடியே முகிலன் பொண்டாட்டி...! இப்போ என்னை பாரு!.... உனக்கு நான் இல்லன்னா தான் என் அருமை புரியும்.
உன்னால் புழைச்ச உயிர் உன்னாலையே போகட்டும்." என சொல்வது அந்த வாகன இரைச்சலிலும் மேகலாவிற்கு கேட்டது.

"இவள் ஏன் இப்படி சொல்கிறாள்?. அடுத்த வில்லங்கத்தை இழுத்து வைக்க போகிறாளோ!." என திரும்பிப்பார்த்தாள்.

நடு சந்தியில் நின்று மேகலாவையே பார்த்திருந்தவள்.
அவள் தன்னை திரும்பி பார்க்கிறாள் என்பது தெரிந்ததும்.
"நீ இப்போ என்கூட பேசாம போற தானே போக்கா!... நல்லா போ!..... இனி உன் வாழ்கையில என்னை பார்க்கவும் தேவையில்லை. பேசவும் தேவையில்லை. நான் இந்த உலகத்தை விட்டு போயிடுறேன்." என மனம் நொந்தவாறு கூற.
மேகலாவிற்கு இவளின் திடீர் செயலால் எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே உறைந்து நிற்றுவிட்டாள்.

இன்று பார்த்து வாகனங்கள் எல்லாமே வேகமாக செல்வது போல அவளுக்கு தெரிந்தது.
வேகமாக வந்த வாகனங்கள் ஒன்றிரண்டு இவளை பார்த்து வேகத்தை குறைத்தும், சில வாகனங்களோ தமது கட்டுப்பாட்டை இழந்து கடசிநேரத்தில் அவளை இடித்து விடாது திருப்பிச்சென்றது.

"பானு வந்திடுடி!.... இது விளையாடுற இடமில்லை. நடு ரோடுடி!... பானு வாடி!.. ஏதாவது வேகமா வந்து இடிச்சிட போகுது." என்று அவள் கத்திக்கொண்டிருக்க.

மோர்டார் சைக்கிளில் வந்தவனோ பானு அருகில் வேகத்தை குறைத்து.
"ஏம்மா குடும்பத்தில பிரச்சினைன்னா உங்க பஞ்சாயத்தை வீட்டில வைச்சுக்க வேண்டியது தானே!...
அப்பிடியும் செத்துத்தான் ஆகணும்னா
எங்கயாசும் மலையிலயோ, இல்லை ஆறு ,குளம் பாத்து விழுந்து சாவு!..
நீ பாட்டுக்கு நடு ரோட்டில நின்னு வேகமா வர வாகனத்தில விழுந்து, அவன் குடும்பத்தை எதுக்கும்மா அலைக்கழிக்க பாக்கிற?.... பேசாமல் போய் அதோ அங்க மருந்து கடை இருக்கு எதையாவது வாங்கி குடிச்சிட்டு செத்துப்போ!..
வந்திட்டாங்க காலங்காத்தால எங்க உயிரை எடுக்க." என அவரோ சீறி சினந்துவிட்டு போக.

இவர் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவள் "வாடி இந்த பக்கம்!.
கண்டவன் கிட்டல்லாம் ஏச்சு வாங்கிட்டு இருக்க." என அவளாே கரையில் நின்று கூறி பானுவிடம் போக எத்தணித்தாள்.

தாறு மாறாக வந்த வாகனத்தினால் அவளாள் பானுவருகில் செல்ல முடியவில்லை.
"நீ என்கூட பேசுறேன்னு சொல்லு நான் வரேன்" என அவளு பிடிவாதம் செய்ய,

"வந்து தொலையடி!.. நான் உன்கூட பேசித்தொலையிறேன்." என பயந்து அவள் கூறிய சந்தோஷத்தில் ஒவ்வொரு வாகனத்தின் இடைகளாலும் வந்தவள் "சரி வா போகலாம்!.." என கை பற்றி அழைத்த பானு கையினை உதறியெறிந்தவளோ! கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.

மேகலா அறைந்த வேகத்தில் கண்கள் கலங்க கன்னத்தில் கைவைத்து அவளையே பார்த்து நின்றவளிடம்,

"உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சில்ல?..... இதேபோல தான் அன்னைக்கும் யாருக்குமே சொல்லாமல் ஓடிப்போய், நான் இந்த நிலையில நிக்கிறேன்.
இது போதாதா?.... இன்னும் எந்த விதத்தில என்னை சாகடிக்கணும்?... சொல்லுடி!.." என உழுகிகியவள். அப்போது தான் தாம் நிற்பது வீதியில் என்பது புரிந்து சுற்றும் முற்றும் பார்க்க. ஒரு சிலர் இவர்கள் இருவரையும் வேடிக்கை பார்ப்பது தெரிந்தது.

"வா என்கூட.." என அவளை தறதறவென இழுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த தேனீர்கடைக்குள் புகுந்தாள்.

அதேநேரம் காரில் வந்து கொண்டிருந்த முகிலனுக்கு தாகம் எடுக்க, பக்கத்தில் இருந்த கடையில் ஜீஸ் வாங்கி குடிக்கலாம் என்று காரை ஓரங்கட்டியவன் அந்த கடையில் இருந்து வந்த ஒரு பெண்ணை பார்த்து விட்டு,

"இவள் இன்னும் இங்கே தான் சுத்துறாளா?.... இவளை பார்த்தா கல்யாணம் செய்தவபோல தோணலையே!.. ம்ம்... ஆளும் முன்னாடி இருந்ததை விட இரண்டு மடங்கு அழகு கூடி தான் இருக்கா.
இந்த அழகால யாருக்கு ஆபத்தோ?.... ஒருவேளை அவனையே இன்னும் காதலிச்சிட்டு இருக்காளோ!.. இருக்கலாம்!.. இவ யாரை காதலிச்சா எனக்கென்னா?
இவ முகத்தில முழிச்சாலே நல்லாகியிருகிற மனநிலை கெட்டு போயிடும்.
எங்க சந்திச்சு இவ கொட்டம் அடக்க முடியுமோ அங்கே சந்திக்கும் வரை பொறுத்திருப்போம்." என்று நினைத்தவன் காரிலேயே இருந்து கொண்டான்.

கடை வாசலிலே நின்ற அந்தப் பெண் பைக்கில் வந்த ஒரு ஆணின் பின்னால் ஏறிச்செல்வதை பார்த்து.
"எனக்குத்தெரிஞ்சே மூனாவது! இன்னும் இவ லிஸ்ட்ல எத்தனையோ?..... இவளை போல இருக்கிறவங்களால தான் பெண்கள் மேலயே கோபம் வருது." என நினைத்தவன்,

மறுபடியும் காரிலிருந்து இறங்கும் போது தான் அனைவருக்கும் காட்சிப்பொருளாக நடு வீதியில் வித்தை காட்டிக்கொண்டிருக்கும் பானுவை கண்டான்.
அவளோ யாரையோ பார்த்து
" உன்னால புழைச்ச உயிர் உன்னாலையே போகட்டும்." என கத்துவதை பார்த்துக் கொண்டிருந்தவன்,

யாருக்கு கேக்கணும்னு வீதியில் நின்னு இந்தமாதிரி கத்துகிறா?.. என பானு எந்த பக்கம் பார்த்தாளோ அதே பக்கம் பார்க்க.
மேகலா இவளின் செயலில் அசையாது பிரமை பிடித்தவள் போல் நிற்பது தெரிந்தது.

அவளுக்கு இவளால் ஏதாவது ஆகிவிடுமோ? என்று பயந்தவாறு இவர்களின் செயல்களை தூரத்திலே நின்று வேடிக்கை பார்த்தவாறு நின்றான்.

பின் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றும் விடாமல் பார்த்தவன் எதுவோ அவர்களை பின் தொடர்ந்து செல்ல தூண்டவும்.
அவர்கள் அறியாதவாறு பின்தொடர்ந்து சென்றான்.

பாவம் இவர்கள் இருவருக்கும் தெரிய வாய்ப்பில்லை தங்கள் இரண்டு கண்களாலும் தங்களையே ஏதோ ஓர் சூழ்ச்சியில் சிக்க வைக்க காத்திருக்கும் இரண்டு ஜோடிக்கண்களுக்கு உரியவர்கள் தங்களைகளை கண்டுவிட்டதை.

பானுவை இழுத்து வந்தவள் அனாதையாக கிடந்த இருக்கையில் அமரவைத்து,
தன் கோபம் குறையும் வரை அமைதி காத்தவள், பின்
"சாரிடி ... அடிச்சது வலிக்குதா?.." என்க.

இழுத்து வந்த வேகத்தில் என்ன சொய்ய போகிறாளோ எனபயந்திருந்தவள், அவளது கேள்வியில் சிரித்துவிட.

"எதுக்குடி சிரிக்கிற?... கன்னத்தில தானே அடிச்சேன். தலையில் அடிபட்டு மூளை பிசகினவ போல இலிக்குற?..."
என்க.

"நீ மாறவே மாட்டியாடி?... நீ என்னை அடிச்சத பார்த்திட்டு, அந்த சிடுமூஞ்சி அத்தான் குணம் உனக்கும் வந்திடிச்சோன்னு பயந்துட்டேன்." என்க.

அவள் முகிலனை பற்றி பேசியதும் பானு செய்த வேலை நினைவு வர, போன கோபம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
"இப்போ உனக்கு என்ன பிரச்சனை?.." என சற்று சினந்தவள்., "நான் ஒன்னும் தனியாள் கிடையாது. என்னை காணாேம்ன்னு வீட்டில தேட போறாங்க. நான் வரேன்." என எழுந்து கொள்ள.

"இப்போ எதுக்கு பயந்து சாகிற?. உன்கூட கொஞ்சம் பேசணும்." என்றவளிடம்,

"என்ன பேசணும்?... அது தான் பெருசா செய்தது போதாதா?.... நீ செய்த வேலையினால நான் தான் அனுபவிக்கிறன்.
என் வாழ்க்கையிலயே விரும்பாத தண்டனை. இதுக்கு மேலயும் ஏதாவது செய்யணும்ன்னு நினைக்கிறா?...." என கேட்டவள் முன் குற்ற உணர்வினால் தலை குனிந்து கொண்டவளை பார்த்தவள்.

"சரி உன் ஆசைப்படி பேசிட்டேன். அத்தை தேடப்போறாங்க நான் வரேன்."என்க.

"அக்கா!.." என்று அவளை போக விடாது அழைத்தவள்.
"நீ கடசி வரைக்கும் என் பக்கத்து நியாயத்தை கேக்கலையேக்கா!. என்மேல அவ்ளோ தான் நம்பிக்கையா?..." என்க.

"ம்ம்... நானும் கேக்கத்தான் நினைச்சேன் பானு. இப்போ இல்லை. கல்யாணத்தன்னைக்கு ஊரார் முன்னாடி எங்க முகத்தில கரியை பூசிட்டு போனியே அப்போ!...

அத்தனை பேரும் உன்னை நான் தான் எவன் கூடவோ அனுப்பி வைச்சேன்னு என்மேல அபாண்டமா பழி போட்டாங்களே அப்போ!..

அவ்வளவு ஏன்?.. இப்போ என் கணவனா இருக்காரே முகிலன். என்னை பாத்து நீலிக்கண்ணீர் வடிச்சது போதும்னு சொல்லி.
கல்யாணத்தில ஒரு துளிகூட விருப்பமில்லாத என்னை கட்டாயப்படுத்தி அத்தனை பேர் முன்னாடி அவன் கட்டின தாலியை தலை குனிஞ்சு வாங்கிக்க வைச்சாரே அப்போ
எதுக்குடி இப்பிடி பண்ண?.. இப்போ உனக்கு சந்தோஷமானு உன்னை அத்தனை பேர் முன்னாடி நிக்க வைச்சு உன்மேலையும் தவறில்லை. நானும் தப்பு செய்யலனு எல்லார் முன்னாடியும் சொல்ல வைக்கணும்னு நினைச்சேன்.
கடசிநேரம் வரை உன்னை நம்பி மண்டபம் வரை கொண்டு வந்தேனே!... உனக்கு நான் கெட்டது நினைச்சேன்னு நினைச்சு தானே அந்த காரியம் பண்ண?"

"இப்போ என்ன காரணம் சொல்ல போற?...
உனக்கு விருப்பம் இல்லைன்னு முன்னாடியே சொல்லி இருக்கலாமே!.... வற்புறுத்தினேன் தான் இல்லைன்னு சொல்லல. நீ ஒரே முடிவோட இருந்திருந்தா நிச்சயம் நான் கட்டாயபடுத்தி இருக்க மாட்டேன். ஆனா நீ சம்மதம் சொல்லிட்டு கடசிநேரம் கழுத்தறுத்திட்டியேடி!.." என இத்தனை நாள் காட்டாத ஆதங்கத்தை அவளிடம் காட்ட,

"அக்கா நான் சொல்லலாம்ன்னு தாக்கா இருந்தேன். அந்த தீபன் தான்." என்றதும்.

"தீபனா? அது யாரு? "என தன் புருவங்கள் முடிச்சிட பானுவை பார்த்தவள்.
"யாரது?... அப்போ மண்டபத்தில அவங்க சொன்னது போல யார் கூடவோ ஓடி போய் இருக்க?... அப்பிடி தானே!.." என்க.

"ஏய் லூசு!.. என்னை பேச விடுறீயா?... பெரிய அறிவாளியாட்டம் கேள்வி கேட்கிறதா நினைப்பாடி?..." என இடைமறித்தவள்,

"இங்க பாரு உன் பொய் காரணத்தை எல்லாம் எனக்கு கேக்க நேரமில்லை. என்ன பேசணுமோ பேசிட்டு விடு!. நான் போகணும்." என்க.

"போயி அந்த சிரிக்க தெரியாதவன் மூஞ்சியையே பாக்க போறீயா?... சொல்லி வையி இந்த பானு யாருன்னு.
பெரிய இவனா உன் புருஷன்?..மண்டபத்தில சாமி ஆடினானாமே?.. உன்னை ரொம்ப மிரட்டினானாம்?... என்ன கேக்க யாருமில்லன்னு நினைச்சானா?.... என் கையில மட்டும் கிடைச்சான்னு வை!.. வடிவேல் சொன்னது போல கசக்கி தூக்கி போட்டிடுவேன்." என்க.

"ஏய்!.. சும்மா அவரை பத்தி குறை சொல்லாம, என்ன பேசணுமாே அதை சொல்லு" என்க.

"நீ விட்டு குடுக்க மாட்டியே!.. ஏதோ நல்லது நடந்தா சந்தோஷம்." என்றவள், "எங்க விட்டேன்?" என்றவளை முறைத்தவள்.

"தீபன்ல விட்ட சொல்லு.!.." என எடுத்து கொடுக்க.

"அக்கா உனக்கு ஒரு விஷயம் மறைச்சிட்டேன். என்றவளிடம்.
"நீ உன் கதையை சொல்லு!. எத்தனைய மறைச்சேன்னு நான் சொல்கிறேன்." என்றவளிடம்,

"நம்ம வேலைக்கு சேர்ந்து ரண்டு வருஷம் இருக்குமாக்கா?..." என கேட்க.
"ம்ம்.... அதுக்கு என்ன?... "
"வேலையில சேர்ந்து கிட்ட தட்ட ஒன்பது மாதம் இருக்கும்க்கா.
அப்போ பாஸ் பையன் தீபன் இருக்கான்ல்ல. நம்ம கம்பனிக்கு அவன் அப்பாவை பாக்க வந்தான்.
அப்போ நானும் சாரோட ரூமில ஏதோ சந்தேகம் கேட்க போயிருந்தேன்.
அப்பதான் அவனை முதல் முறை பாத்தேன்.
அப்புறம் அவனை நான் கண்டுகிட்டதே இல்லை.


அதுக்கப்புறம் தினமும் வர தொடங்கினான். ஒரு நாள் என்கிட்ட வந்து உன்னை எனக்கு பிடிச்சிருக்கு.
நாம லவ் பண்ணிக்கலாமானு கேட்டான்.
எனக்கு இதில எல்லாம் நம்பிக்கையும் இல்லை. இஷ்டமும் இல்லை. அப்பிடினு சொல்லிட்டேன் வந்துட்டேன்.
அவனும் அப்பவே நான் சொன்ன பதிலுக்கப்புறம் அங்க வரதும் இல்லை. என்னை பாக்கிறதும் இல்லை.
எனக்கு அது சாதாரணமா தெரிஞ்சதனால அப்படியே உங்கிட்ட சொல்லம விட்டுட்டேன்.

அதுக்கப்புறம் எனக்கும் முகிலனுக்கும் கல்யாணம்ன்னு நீ அங்க வேலை செய்தவங்களுக்கெல்லாம் அழைப்பு வைச்சு, நான் இனி வேலைக்கே வரமாட்டேன்னு சொல்லிட்டு வந்தல்ல.
அப்போ தான் பிரச்சினையே ஆரம்பமாச்சு.

பொண்ணு பாா்த்திட்டு போய் மூனாவது நாள் இருக்கும் என் போனுக்கு புது நம்பர்ல இருந்து ஃபோன் வந்திச்சி.
யாரா இருக்கும்ன்னு எடுத்து பேசினேன்.

அவன் தான்.
நான் தீபன் பேசுறேன். உனக்கு கல்யாணமாமே!.." என்றவன். "பானு இப்பவும் நான் உன்னைத்தான் விரும்புறேன். உனக்கு தொந்தரவு தரக்கூடாதுன்னு தான் கொஞ்ச காலம் கடக்கட்டும் உன்கவீட்டு பெரியவங்க கிட்ட பேசி கல்யாணம் செய்துப்போம்னு காத்திருந்தேன்னு ஏதோல்லாம் சொன்னவன்.

முகிலன் நல்லவனில்லை. ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்பி ஏமாத்திட்டு தான் உன்னை கட்டிக்க சம்மதிச்சிருக்கான்.
அவளும் இவனுக்கு கல்யாணம் என்ற பேச்சு அடிபட்டு மருந்தை குடிச்சிட்டு ஆஸ்பத்திரியில படுத்திக்கா! நீ நம்பலன்னா தான் சொல்லுற இடத்துக்கு வா!... நான் நிரூபிக்கிறன்." என்டான்.

"எனக்கும் என் சந்தேகத்தை போக்கணும் என்று தோனிறிச்சு. பட் நாள் குறிச்சதனால என்னால வீட்ட விட்டு வரமுடியாது." என்டேன்.

அதுக்கு அவன் இன்னும் என்னை தன்கூட வர வைக்க என்னல்லாம் பேசினான்.
நான் எதுக்கும் மசிஞ்சு காெடுக்கல.

அப்புறம் உன் பிரச்சினை அவனுக்கு தெரிஞ்சிருக்கும் போல.
நானும் நீயும் மருமகளா போனால் ஒரே வீட்டில தான் போகணும்ன்னு ஒருதடவை கம்பனியில வைச்சு பேசினதை கேட்டிருக்கான்.

தன்னை கல்யாணம் செய்துக்கிட்டா தனக்கும் ஒரு அண்ணன் இருக்கானாம் அவன் ஒரு பொண்ணை காதலிச்சானாம். ஆனா அந்த பொண்ணு ஏமாத்திட்டு யாரையோ கட்டிக்கிட்டு வெளிநாடு போயிட்டாளாம்.
அதனால கல்யாணம் வேண்டாம்ன்னு ஒரே பிடிவாதமாம். அது தான் நானும், அவனும் கல்யாணம் செய்துகிட்டா. உன்னையும் அவனோட அண்ணனையும் சேத்து வைச்சிடுவோம். அப்புறம் நாம விரும்பினது போல இரண்டு பேரும் ஒன்னாவே ஒரே வீட்டில இருந்துக்கலாம்னு......." என அவள் கூறிக்கொண்டு இருக்கும் போதே இடை புகுந்தவள்,

"அவன் சொன்னான்னு நீயும் அவன் பேச்சை கேட்டு அவனை நம்பி போனியா?..உனக்கு அறிவு இருக்காடி?.. இல்லைனா அதை கொண்டுபோய் யாருக்காச்சும் வாடகைக்கு விட்டிட்டியா?... மூளை என்கிறது கொஞ்சமாச்சும் பாவிக்கிறதுக்குத்தான் இருக்கு.
சும்மா மூலையிலைய அதை வைச்சிருக்கமால் கொஞ்சமாச்சும் பாவிச்சுக்கோ!....
அவனுக்கு எங்கடி அண்ணன் இருக்கான்?.
நம்ம பாஸ்கு ஒரே பையன் மட்டுந்தான் என்கிற மறந்திட்டியா?.... அவன்கிட்ட கம்பனி நிர்வாகத்தை ஒப்படைக்கும் போதே அதை சொல்லித்தானே அவனை அறிமுகப்டுத்தினாரு." என்றவும்.

"ஆமால்லக்கா!..... அதை நான் மறந்துட்டேன். நீ சொன்னது போல மூளைய அடகு வைச்சிட்டேன் போல." என்க.

"அப்புறம் என்னாச்சு?...." என்றாள் மேலும்.

"அப்புறம் நானும் நீயும் ஒரே வீட்டில என்டது கொஞ்சம் சறுக்கிட்டேன்..
இரண்டு பேருக்கும் ஓரே வீட்டில வாழ்க்கை கிடைச்சா உனக்கு ஒன்னுன்னா நானே உன் கூட இருந்து பாத்துக்கலாம்னு நினைச்சேன்.
ஆனாலும் அவனுக்கு எதுவுமே சொல்லல.

அப்புறம் நீங்க முகூர்த்த புடவை எடுக்க போன அன்னைக்கு வீட்டுக்கே வந்துட்டான்.
வந்தவன் திரும்பவும் உன் புருஷனை பற்றியே தப்பாச்சொன்னான்.
நானும் அதை உண்மைன்னு நம்பிட்டேன்.

அப்போ தான் நான் சொன்னேன். இந்த விஷயத்தை வீட்டுகாரங்ககிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்துவோம்." என்டதுக்கு.

"இல்லை அப்படி மட்டும் செய்திடாத,.
இவன் காதலிச்சு ஏமாத்தின பொண்ணை தாலி கட்டுர நேரமா நான் கூட்டி வந்து உண்மைய ஊரார் முன்னால சொன்னா அவனால மறுக்க முடியாது.
அவனுக்கு வேற வழியில்லாமல் அந்த பொண்ணையே கட்டிப்பான்.
அந்தப்பொண்ணுக்கும் அவ ஆசைபட்ட வாழ்க்கை கிடைக்கும்.
நாமளும் எந்த சிக்கலும் இல்லாமல் கல்யாணம் செய்துக்கலாம். என்றான்.

அதனால தான் உங்க யாருகிட்டையும் நான் சொல்லலை.
ஆனா உங்கிட்ட இந்த விஷயத்தை ஒழிச்சு வைக்க நான் எவ்வளவு பாடு பட்டேன் தெரியுமா?" என்க.

"அப்புறம் ஏன் அந்த பொண்ணு மண்டபத்திற்கு வரல்ல?..." என மேகலா வினவ.
"அது தான்க்கா எனக்கே தெரியலை. நானும் கடசி வரைக்கும் காத்திருந்தேன். அவனுக்கு போன் பண்ணா எடுக்கிறானே இல்லை.
அவன் முகிலனை பத்தி சொன்னதை நம்பி. சரி ஒரு ஏமாத்துக்காரனை கட்டிக்கிறதை பாக்க, வாழ்க்கை பூர கல்யாணமே செய்துக்காம இருந்திடலாம்ன்னு நினைச்சுத்தான். நீ போன் பேசின நேரமா பின் வாசல் வழியால ஓடிட்டேன்."

"வீட்டுக்கு வந்த அப்புறம் தான் என் மூளைக்கே உறைச்சுது உங்க எல்லாரையும் தவிக்கவிட்டிட்டு வந்துட்டேன்னு.
உடனேயே உனக்கு போன் பண்ணேன். உன் போன் ஆஃப்ல இருந்திச்சு.

சத்தியமா உன்னை அந்த முசுடுகிட்ட மாட்டி விடுற எண்ணமே எனக்கில்லக்கா!... அவனும் உனக்கு இப்படி கட்டாயத்தாலி கட்டுவான்னு நானும் நினைக்கல." என்றவள்.

"ஆனா இப்ப வரை அந்த நாயி அந்த பொண்ணை கூட்டி வரவும் இல்லை. நிரூபிக்கவும் இல்லை. ஏன் என் போனை கூட எடுக்கல."
அப்புறம் தான் புரிஞ்சிது அவன் பொய்சொல்லி இருக்கான்னு.

ஆனா எதுக்கு ஏன் என்றது மட்டும் இன்னும் தெரியலை.
சரி எனக்கு என்ன ஆனா என்ன?. உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சுதே அதுவே போதும்." என்றவளை.
மண்டை மேல இரண்டு காெட்டு வைத்தவள்.

"கண்டவன் பேச்சைக் கேட்டு செய்யிறதெல்லாம் செய்திட்டு.
பெரிய தியாகி போலவா பேசுற?..
அவனை பார்க்கும்போதே உனக்கு தெரியலையா?..பொம்புள பொறுக்கின்னு.
அவன் முதல் பொய்யே அவன் சொன்னது பூராகவும் பொய்ன்னு தெரியுது.
ஒரு தடவை என்கிட்ட சொல்லி இருந்தாலும் உன் சந்தேகத்தை நானே தீர்த்து வைத்திருப்பேன்.
இப்போ பாரு. உன் வாழ்க்கை எப்படி கெட்டு பேச்சு. கல்யாண மண்டபத்தை விட்டு ஓடின பொண்ணை யாரு கட்டிப்பாங்க?.
எதுவுமே யோசிக்க மாட்டியா?.... இதில மேடம் எங்களை தனிய விட்டுட்டு வந்திட்டோம்ன்னு போன் போட்டு வேறு வர சொல்லுவாங்களாம்.

மொத்த குடும்பத்தையும் கூண்டோட களிதிங்க வைக்கிறதுக்கு."
"விசரி ...விசரி..... இப்போ உன் வாழ்க்கைய எப்படி சரி பண்ண போற.?.. உன்னை ஒரு நல்ல இடத்தில கட்டிக்கொடுக்கணும்னு எப்படில்லாம் கனவு கண்டேன் தெரியுமா?.... எவனோ வருவானாம், இல்லாதது எல்லாம் சொல்லுவானாம், நாங்க எதுவுமே விசாரிக்காமல் இவங்களை கட்டி குடுத்திடுவாேம்ன்னு மண்டபத்தை விட்டு ஓடுவாங்களாம்." என்றவள்.

"என்னடி முளிக்கிற?... இப்போ என்ன செய்யிறது சொல்லு?...". என்றவள் தானே தொடர்ந்தாள்.
"உனக்கு தானே முகிலனை நிச்சயம் பண்ணோம். உனக்கே அவரை விட்டு தரேன்." என்க.

"உன் காலில் விழுந்து கேட்கிறேன் தாயே!... நான் செய்த தப்பிலயே சரியான தப்பு இது தான். நீயே உன் ஆத்துக்காரரை வைச்சுக்கோ!.. என்னை ஆளை விடு.
உன் முசுடு அத்தான் நிழல் கூட என்மேல் விழுந்திதுன்னு வையி. எனக்கு நிக்காமல் பின்னால போகும்.
நீயாவது இரண்டு மாசம் தாக்கு பிடிக்கிற, இரண்டு வினாடி கூட என்னால் முடியாது தாயி!....

எனக்குன்னு ஒரு ராமசாமி, குப்புசாமி கூடவா இல்லாமல் போக போகிறான்.
எங்கயாச்சும் இருப்பான் நான் பொறுக்கி எடுத்துக்கிறேன்.
நீ எதுவும் யோசிக்காம போக்கா. உன் மாமியாரு தேட போறாங்க." என கூற.

"அப்போ உன் புராணம் முடிஞ்சிது கிளம்புங்கிற?... சரிடி பாத்துப்போ. இனியாவது அந்த மூளைய பாவிச்சுக்கோ.
இல்லன்னா துரு கட்டிடபோகுது." என எழுந்தவர்கள் ஒரு முறை இறுக அணைத்து விட்டே விடைபெற்றனர்.

இத்தனை பேச்சு வார்த்தைகளையும் இரண்டு மேசை தள்ளி இருந்த முகிலன் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். அவர்கள் பேச்சும் தெளிவாய் அவன் காதில் விழுந்தது.

தீபன் என்ற பெயர் அவனுக்கு எதையோ நினைவு படுத்த. தன்னை தவறாக கூறுவதென்றால் அவனை தவிர வேறு யாராக இருக்க முடியும்?..

சற்று முன் கடையில் பார்த்த பெண்ணும் அவனுடன் சேர்ந்து நினைவில் வந்தாள்.

"இதுங்கள அப்பவே ஒரு கை பாத்திருக்கணும்.
நாய் குரைக்குதுன்னு நானும் சேர்ந்து குரைச்சா எனக்கும் அதுக்கும் வித்தியாசம் தெரியாதுன்னு ஒதுங்கி போனா. அதையே என் பலவீனமாக நினைச்சுட்டாங்களா?.... இவனை?..." என்று பற்களை நற நறவென கடித்தவன்.

தன்னை நிதானப்படுத்திக்கொண்டு.
இவர்கள் எந்த தீபனை சொல்கிறார்கள்
என்பது தெரியாமல் வீணாக பிரச்சினை பண்ண கூடாது.
இன்றே அதற்கான விடையை கண்டு பிடிக்கின்றேன். என்று நினைத்தவன் மேகலாவின் பின்னாலே வீடு சென்றான்.
சங்கமிப்பாளா....
 

Balatharsha

Moderator
பாகம். 28



சுந்தரி முடியாமல் தனது அறையிலேயே முடங்கிவிட,
வழமைக்கு மாறாக கல்லூரி நேரத்தில் ஹாலில் இருந்த மதியை வரும் போதே கண்டவள், அவளை பொருட்படுத்தாமல் உள்ளே செல்ல.

"என்ன அண்ணியாரே!.. ரொம்ப சென்டிமென்ட் ஷோ வோ?". என பொடிவைத்து பேசியவளை
புரியாமலும், அவளோடு பேசப்பிடிக்காமலும் அமைதியாக அதே இடத்தில் சமைந்துவிட்டாள்.

ஆம் அங்கு பார்த்த இரண்டு ஜோடி கண்களில் ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரி மதி தான்.

"அக்காவும் தங்கையும் ஒருவழிய ஒன்னு சேந்திட்டிங்க போல." என டீவி ரிமோட்டை கையில் வைத்து தட்டியவாறு மேகலாவை சுற்றி வந்தவள்,

"இது வெல்லாம் ஒரு குடும்பமா?.... உங்களுக்கெல்லாம் கௌரவம்ன்னு ஏதாவாது இருக்கா?... இல்லன்னா பிறக்கிறப்ப தொப்பிள் கொடிய வெட்டும் போது அதையும் வெட்டி குப்பை தொட்டியில் போட்டுட்டாங்களா?........" என எழனமாக கேட்டவள்,

"நடு ரோட்டில் நின்னு வித்தை காட்டிட்டு நிக்கிறா உன் தங்கை.
நீயும் உனக்கு அவ செய்த வேலையை மறந்திட்டு, பாச மழை பொழியிற!.

இல்லை.....! சும்மா தான் கேட்கிறேன். மண்டபத்தில் போட்டது ட்ராமாவா? இல்லைன்னா தெருவில் போட்டது ட்ராமாவா?...." என அவளை வார்த்தைக்கு வார்த்தை குத்திப்பேசியவள்.

"எது எப்படியோ போய் தொலையுங்க.
ஆனா ஒன்னு இந்த வீட்டில் உனக்கு மருமகள் என்கிற உரிமை ஒரு போதும் கிடைக்காது.
நானும் விடமாட்டேன்." என இழக்கமாக குரலை வைத்து கூறியவள்.

ஒரு பலத்த சிரிப்பிற்கு நடுவே.
"என்னடா இவளா இப்படி வில்லியாட்டம் பேசுறாள்ன்னு பாக்கிறியா?... பின்ன இல்லாம?" என்று அவள் பேசிக்கொண்டே போகவும்.

மேகலாவோ தங்கையுடன் தான் பேசியதை மதி கண்டதனால் வீட்டில் அதை சொல்லி ஏதாவது பிரச்சினை இழுத்து வைச்சிருக்காளோ!. என பயந்து அமைதி காத்தாள்.

"என்ன அண்ணியாரே!.. வாயே திறக்கிறீங்க இல்லை.
நானே எவ்ளோ நேரம் தனிய பேசுறது?..
இப்போ நிறைய கேள்வி உங்க மனசில ஓடிட்டிருக்குமே!.. கேளுங்க...... எல்லாத்துக்கும் எங்கிட்ட பதில் இருக்கு." என தரையினை பார்தவள் முகத்தினை குனிந்து பார்த்தவள்,

"எப்போ பாத்தாலும் எதுவும் தெரியாத பச்சைபுள்ளை ரிஜாக்ஷன் தானா?..
ஓகே நானே சொல்லிடுறேன்."

"எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல.
மண்டபத்தில உன் தங்கையை ஓட வைச்சது.
அப்புறம் என் அண்ணா உன்னால ஊரார் முன்னாடி அசிங்கப்பட்டது.
மண்டபத்தில மானம் போக போகுதுன்னு உன்னை கழுத்த நீட்டுன்னு கேட்டா பெருசா பண்ணுற!"

"ஆமா நீ என்ன பெரிய அழகியாடி?.... அவனையே கெஞ்ச விட்டு வேடிக்கை பாக்கிற?.... அப்புறம்!...." என்று இழுத்தவள். "ம்ம் இப்பாதைக்கு இவ்வளவு தான் சொல்லுவேன். இன்னும் இருக்கு. என்னனு கூடிய சீக்கிரம் உனக்கு புரிய வைக்கிறேன்." என்றவள்.

"இப்போ உனக்கு கேள்வி ஏதாவது கேட்க தோணிருக்குமே!...." என்க.

"நீ தான் எதுவுமே கேட்காம எல்லாத்தையும் சொல்கிறாயே. இதுகப்புறம் நான் என்ன கேட்கிறது?.." என்றவள் மீண்டும் நீயே சொல் என்பதாக அமைதியாக.

"என்ன அண்ணி? இப்படி எல்லாத்துக்கும் பச்சை பிள்ளை மாதிரி முகத்தை வைச்சிட்டு நிற்கிற." என கையில் இருந்த ரிமோட்டால் அவள் தாடையை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவள்.

"எப்படி?... எப்படி?... நீ எனக்கு அண்ணியா?.... உன் மொத்த குடும்பத்துக்கே எப்பவும் துறோகம் மட்டும் தான் செய்து தான் பழக்கமா?....
யாரு கையால தாலி வாங்கி இங்க வந்தியோ!.. அவர் கையாலையே உன் கழுதை புடிச்சு வீட்டிலிருந்து விரட்ட வைக்கல்ல நான் வான்மதி இல்லடி!." என்றவள் சபதத்தில் மேகலா அவளை நிமிர்ந்து பார்க்க.

"என்னடி அப்பிடி பாக்கிற?......... பாக்க வில்லி மாதிரியா தெரியிறேன்?. ஆமா உனக்கு எப்பவுமே நான் வில்லிதான்."

"என்னடா சன்னதி ஆத்தில பாத்து பக்குவமா தானே இறங்கினோம். எப்படி உள்ளே விழுந்தோம்ன்னு சந்தேகம் வந்திருக்குமே!.
வந்திருக்கும்... வந்திருக்கும்....!.... வராம?...
நல்லா ஒருவாட்டி அந்த நாளை நினைச்சுப்பாரு.
உனக்கு முன்னாடி அண்ணன் இறங்கனாரு.
அப்புறம் அண்ணன் பின்னாடியே மேடம்.
அம்மணி பாசி என்டதும் ரொம்பவே நிதானமா தான் இறங்கினாங்க.
என்ன செய்ய?.. நான் நிதனமா இல்லையே! ரொம்பவே உன் மேல கோவத்தில இருந்தேனே!..
அதான் உன் பின்னாடி இறங்கினது நான் என்கிறதனால யாருக்கும் தெரியாம தள்ளி விட்டேன்.
அப்பவே ஆறு அடிச்சிட்டு பாேயிருந்த நீயும் நிம்மதியா போயிருப்ப.
நானும் நிம்மதியா இருந்திருப்பேன்.

பாரு கடவுளுக்கு கூட பிடிக்கல.
நீ தண்டனை அனுபவிக்காம சாகிறது.
அது தான் அண்ணா ரூபத்தில காப்பாத்திட்டாரு போல."

"அந்த புடவைக்கடையில் கூட நீ அறையில மாட்டுப்பட்டல்ல.
அது கூட இந்த அடியாளின் சித்தமே!..
நம்பவே முடியலல்லல்ல?.... அவ்வளவு கிளீனா பண்ணிட்டேன். அதனால தான் யாருமே கண்டு பிடிக்கல.
சும்மா உன் கூட கண்ணாம்பூச்சியாட்டம் தான் ஆடினேன்.
எப்பிடியும் நீ வெளிய வருவன்னு தெரியும்.
நாங்க இல்லனாலும் யாராவது உன்னை காப்பாத்தி இருப்பாங்க.
இதுல ஹைலைட் என்ன தெரியுமோ?..." என பெரிதாக சிரித்தள்.

"நீ மயங்கினது தான்!...
நானே அதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கலன்னா பாரேன்!.
ஏன்டி செல்லம் ரொம்ப பயந்திட்டியா?..." என கொஞ்சுவது போல் தன் கைகளால் அவள் தடையை பிடித்து ஆட்டியவள் .

"நல்ல வேளை கேமெரா இல்லை. அது இல்லன்னு பாத்ரூம் உள்ள நான் இருந்தது தெரியாம,
நீயும், கடையில வேலை செய்யிற பொண்ணும் பேசினதை கேட்டுத்தானே செய்ததே.!

அப்புறம் காஃபி போட்டா என் குடும்பத்தை கவுக்க பாத்த?....
அது தான் உன்னை நான் கவுக்கலாம்ன்னு நினைச்சே!...
பாவம் என் அண்ணன் தான் இடையில மாட்டிகிட்டாரு.
இருந்தாலும் மனந்தளராத விக்கிரமாதித்தியன் போல அதை நீ பழி தீர்கத்தான் செய்தன்னு எப்படி உன்னை மாட்டி விட்டேன் பாத்தியா?.." என பெருமையாக கூறியவள்,

"உன் புருஷனுக்கு பிடிச்ச ஐட்டமா ஆசையா செய்தால்ல. சும்மா சொல்லக்கூடாது ரொம்ம நல்ல கைப்பக்குவம். செம்ம டேஸ்டு!.
பட் அண்ணா அதை சாப்பிடல்லையே!.... அவருக்கு தான் குடுத்து வைக்கல. அதுக்குள்ள நான் தான் உப்பை கிள்ளி...... இல்லை இல்லை. அள்ளி கொட்டிட்டனே!..." என தான் செய்ய வீரதீர செயல்களை தன் வாயாலே செல்லட்டும் என அமைதி காத்திருந்தாள்.

"என்ன அண்ணியாரே!.. நீங்களே அறியாத நிறைய தகல்களை தந்திருக்கிறேன். முகத்தில் ஆர்ச்சரிய படக்கூடிய மாதிரி எந்த ரேகையையும் காணவில்லையே!... என்ன காரணமோ?..." என்று சங்க தமிழில் கேலி பேச.

"இத்தனை கேவலமான செயல்களை செய்வது இந்த குடும்பத்து பெண்தானா? என்ற சந்தேகம் மட்டுந்தான் நாத்தனாரே.
இதில் ஆர்ச்சரிய படுவதற்கு எதுவுமே இல்லை." என்றவள்.

"இங்க பாரு. பானு தப்பு பண்ணா தான். நான் இல்லைன்னு மறுக்கல்ல. அது உங்க குடும்ப கௌரவத்துக்கும் இழுக்குத்தான்.
அதை மாத்த யாராலும் முடியாது.
உன் அண்ணன் கோபப்பட்டதும் தப்பில்ல.
அதற்கான தீர்வை தான் அன்னைக்கே கண்டு அவளுக்கு பதிலா என்னை கூட்டிவந்துட்டாரே.
உன் அண்ணன் கோபப்பட நான் தான் காரணம்ன்னு என்னை பழி தீர்கிறதனால உனக்கு என்ன வந்துவிடப்போகுது?.

எப்போவாச்சும் ஒரு நாளைக்கு உன் குடும்பத்திற்கு நீ தான் இந்த காரியங்கள் செய்தனு தெரிஞ்சா அவங்க வளர்த்த விதம் தான் சரியில்லைனு உன்னையும் மயூரனைப்போல் ஒதுக்கி வைச்சிட்டா என்ன செய்வ?..." என்க.

"ஆமாடி!.. கோபப்பட நீதான் காரணம்.
என் அண்ணன் இது வர மண்டபத்தில கோபப்பட்டதை போல கோபப்பட்டு நான் பார்த்ததில்லை.

அதக்கு காரணம் நீ தானே!.. உன் ஓடுகாளி தங்கையை சாவடிச்சா கூட என் ஆத்திரம் தீராது.
அதான் அவளை தண்டிக்க முடியாதே!... அண்ணா அவளுக்கு பதில் உன்னை தானே கூட்டி வந்தார். அது தான் நானும் அவளுக்கு பதில் உன்னை வதைக்கிறேன்."
என்றவளை பாவமாக பார்த்தவள்.

"ஏன் மதி இதுக்கு அப்புறமும் நீ விரித்த வலையில் சிக்குவேன்னா நினைக்கிற?...
எனக்கு தெரியும் மதி. ஏதோ இந்த வீட்டில தான் சரியில்லன்னு.
முன்னம் எதுவும் தெரியாது. சுடு காஃபியை உன் கால் கொடுத்து தட்டி விட்ட பாரு அப்போது உன் மேல் ஒரு சந்தேகம்.
எதையும் ஆராயமா முடிவெடுக்க கூடாது என்கிறது என் கொள்கை.

அதனால் அமைதியா விட்டு விட்டேன்.
இனி கவனமாகவே இருந்துக்குறேன்." என்றவள்.

பழங்களை ப்பிறிஷ்சில் அடுக்க ஆரம்பிக்க.
"பார்க்கலாம் நீயா? இல்லை நானான்னு?" என்றவள் ரிமாட்டை ஷோபாமீது தூக்கி எறிந்து விட்டு தனதறைக்குள் செல்ல.
மேகலாவோ எதுவும் நடவாததுபோல தன் வேலையை தொடர்ந்தாள்.

சரியாக இரண்டு நிமிடமிருக்கும்.
முகிலனோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வேகமாக வந்தவன் ஒரு நிமிடம் நின்று மேகலாவை உற்று பார்த்து விட்டு தன் அறையில் செல்வதை பார்த்தவள்.

"என்னாச்சு? எதுக்கு இப்படி பாத்தாரு?. மதி பேசினதை கேட்டிருப்பாரோ?....
சீச்சீ...
அவள் தான் முன்னாடியே போயிட்டாளே! இவரு இப்போ தானே வந்தாரு.
ஆனா முகமும் சரியில்லையே!..... .. என்னவா இருக்கும்?.." என நினைத்தவள்.

"சூட ஏதாவது கொண்டு போவமா?....
வேண்டாம்.... சும்மாவே சூடாத்தான் இருக்காரு, யூஸ் ஏதாவது கொண்டு போகலாம்." என நினைத்தவள்.

ஆப்பிள் யூஸ் கொண்டு அவர்கள் அறை நுழைய.
"என்னா?....." என்றான் எடுத்த எடுப்பில்.

அவன் கேட்ட திணுசில்.
"இது சூடா இல்லை மேகலா.
கொதி நிலை! இப்படியே திரும்பி போயிடு!. எவன் கூடவோ நல்லா மல்லுக்கட்டிட்டு வந்து நிக்கிறான். நீ மட்டும் கையில கிடைச்ச. கைமாதான்." என்று நினைத்தவள்.

எதுவுமில்லை என்பதாய் தலையை ஆட்டி விட்டு. கொண்டு வந்த ஜூஸை மேசை மீது வைத்து விட்டு நகர.

"மேகலா......" என்றழைத்தான் இதுவரை இல்லாத மென்மையான குரலில்.

இவன் தான் அழைத்தானா? இல்லை எனக்குத்தான் அப்படி தோன்றுதா?... என்ற சந்தேகம் வர. அவனை திரும்பிப்பார்த்தாள்.

அவனோ முதலில் என்ன!.. என்று கேட்டது போலவே அதே மிடுக்கோடு "என்ன பாக்கிற?...". என்றவும்.

இவனாவது அப்படி கூப்பிட்டானாவது. எல்லாம் என் பிரம்மை தான் சம்மந்தமில்லாம யோசிக்கிது. என்று தன் தலைமேல தட்டியவள்.

"ஜூஸ் வைச்சிருக்கு குடிங்க." என்பதாய் சொல்லி செல்ல.
திடீர் என்று அவளை அசையவிடாது பின்புறமிருந்து வேலி போட்டது அவன் கரங்கள்.
முதலில் அவன் அணைப்பிற்குள் அடங்கியவள்.

அவனது அதிக ஒட்டுதலாலும், கன்னத்தில் கன்னம் வைத்து உரசியவன் தாடி அரும்பு முடியின் உரசலாலும் உடல் கூசியவள்,
"விடுங்க!." என இது வரை இல்லாதது போல கிறக்கமாகவே கூறி விலக முயன்றாள்.

அவள் குரலின் உள்ள வேறு பாட்டை உணர்ந்தவன்,
"ஏன் கலை என்னை துரத்துற?... என்னை உனக்கு பிடிக்கலையா?..' என்று தன் கைகளினால் தன் வித்தையை அவள் மேனிதனில் காட்டத்தொடங்கியவன் கைகளை பற்றியவாளோ!

"என்ன இது விடுங்க முதல்ல." என்று அவன் பிடியினுள் விலக முடியாது அவளும் அவனுக்குள் நெளிந்து கொண்டிருந்தாள்.

"நான் கேட்டதுக்கு பதில சொல்லு விடுறேன்." என்றவனிடம்.

"என்ன இது புதுசா எல்லாம் கேள்வி?." என்று அவன் கைகள் தந்த குறுகுறுப்பில் அவள் கோவமாக சீறவும்.

"இது என்னடா வம்பா போச்சு?... கட்டின பொண்டாடிகிட்ட கேக்காம, பக்கத்து வீட்டுகாரன் பொண்டாட்டியையா கேக்க முடியும்?" என்று வம்பு வளர்த்தான் அவன்.

"சரி...! நான் சொல்லுறேன். முதல்ல என்னை விடுங்க. கதவை வேற திறந்து இருக்கு. வயசு பொண்ணு வீட்டில இருக்கா. அவளை வைச்சிட்டு என்ன காரியம் பண்றீங்க.?" என எரிச்சலோடு கூறினாள்.

"அப்பாே கதவை பூட்டிட்டு வந்தா ஓகேவா?..." என ஒரு மார்க்கமாக கேட்டு கண்ணடித்து விலகவும்.
அவன் செயலில் ஈர்க்கபட்டாலும் அதை வெளியில் காமிக்காது .
"ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்." என்றவள்.

"வேலைக்கு பாேகாம இங்க என்ன பண்றீங்க?." என்கவும்.

"யாரு சொன்னா?... இன்னைக்கு தான் வாழ்கையிலையே உருப்படியான பெரிய வேலை பார்த்தே இருக்கேன்." என்றவன்.

"சொல்லு நீ!..
நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே!.." என்கவும்.
"என்ன கேட்டிங்க.?.." என்றாள் தெரியாதவள் போல்.

"என்னை உனக்கு பிடிக்குமா? பிடிக்காதா?....." என அவள் முன்வந்து நின்றவன், அவள் கண்களை ஊடுருவியவாறு கேட்டான்.

என்கே அவள் பொய் சொன்னாலும் அவள் கண்களிலாவது உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்றெண்ணி.
அவளோ அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தவாறே எந்த வித தயக்கமும் இல்லாமல்,

"இது என்ன கேள்வி?...
ஏதோ ஒரு இக்கட்டில் நம்ம திருமணம் நடந்து முடிஞ்சிடிச்சு. இதில் யார் விருப்பமும் இல்லை.
இருந்தும் என்கிட்ட கணவன் என்கிற முறையில நான் செய்த ஒரு சில தவறினால திட்டினிங்களே தவிர, வேற எந்த குறையுமே எனக்கு வைச்சதில்லையே.
அந்த முறையில எனக்கு மட்டுமில்லை என் நிலையில எந்த பொண்ணு இருந்தாலும் உங்களை அவர்களுக்கு பிடிக்கும்." என்றாள்.

இதற்கு முன்னர் தான் அவளிடம் செய்த குறும்பில் இருந்த தடுமாற்றம் இப்போது அவள் முகத்தில் கண்டுகொள்வே முடியவில்லை.

அவனுக்கு இவளின் உண்மை மனதை அறிந்து கொள்வது எப்போதும் போல் சாவாலாக இருந்தது.
"அப்போ என் மேல இவளுக்கு காதல் இல்லையா?.. எதுக்கு நான் கேட்ட கேள்விக்கு பொதுப்படையாவே பதில் சொல்லறா.? அவளிடத்தில எந்த பொண்ணு இருந்தாலும் பிடிக்குமா?... அவ்வளவுதானா நமக்குள்ள இருக்கிறது?.. என நினைத்தவன்.

அதை தன் முகத்தில் காட்டாது. புருவங்களிற்கிடையில் முடிச்சிட இன்னும் அவளை ஆராய்ச்சி பார்த்தவன்,
". நீ பிழை செய்தியா?.அப்படி என்ன பிழை செய்த?" என்க.

"மறந்துட்டீங்களா?... சூடான காப்பியை உங்க மேல கொட்டினது, அப்புறம் உங்க சாப்பாட்டில உப்பு அதிகமா போட்டு, நீங்க கூட என்னை திட்டினிங்களே! நினைவில்லையா?.." என்றவளின் பதிலில்.

"ஓ......... ஆமால்ல....... அதெல்லாம் நீ தான் செய்தால்ல!.. மறந்துட்டேன்." என்றவன்.
"அது சரி. இப்போ நான் யாரையாவது காதலிச்சு, இல்லை என்னை யாராவது காதலிச்சு..... வேணாம். வேணாம். ஏன் வேற ஒருத்தி?..
உன் தங்கையே வந்து தனக்குத்தான் என்னை பேசி முடிச்சாங்க, என்னை விட்டு குடுன்னு கேட்டா நீ விட்டு குடுத்துடுவியா?...." என இலகுவாக அவன் வினவ.

"அது எப்படி முடியும்?.... நிச்சயமாக மாட்டேன்?..." என்றவள்.
"அவளுக்கு தான் அந்த ஆசையே இல்லையே!" என்க.

"அதை எப்படி நீ உறுதியாக சொல்லுற?... நான் அறிஞ்சவரை உன் தங்கை யாரு கூடவும் ஓடிப்போகலயாம்.
உன் வீட்டில தானாமே இருக்கா. உனக்கு அது தெரிய வாய்ப்பில்லை.
நீ தான் நான் சொன்ன ஒரு காரணத்துக்காக உன் வீட்டக்காரங்க கிட்ட பேசுவதில்லையே!" என்க.

அவன் பேச்சில் முழித்தவள்
"அது..... எனக்கு என் தங்கை குணத்தை பத்தி தெரியும். அதனால தான் அப்படி சொன்னேன்." என்று தாறுமாறாக தடுமாறவும்.

"ஓ.... உன் தங்கையை பத்தி தெரியுமா?... அது தான் உன்னக்கே தெரியாமல் மண்டபத்த விட்டு ஓடிப்போனாளா?..."என நக்கலாக அவன் கேட்டான்.

எங்கே வசமாக மாட்டிக்கொள்ள போவதாக நினைத்து. "அது அவ உங்கள விட்டு தான்னு கேட்டா நான் என்ன சொல்ல முடியும்?. உங்களுக்கும் அவளை பிடிச்சிருந்தா நான் என்ன செய்ய முடியும்?. தாராளமாக விட்டு கொடுத்துவிடுவேன்." என்றாள் தடுமாற்றம் குறையாமல்.

"ஏதுக்கு கலை இப்படி நாக்கு சுளகு மாதிரி புடைக்கிது?. ஏதாவது என்கிட்டருந்து மறைக்கிறாயா?..." என்க.

முன்னைய விட இரண்டு மடங்கு தயங்கி தடுமாறினாள்.
ஒரு விஷயம் இல்லையே!. இரண்டு விஷயங்கள் அல்லவா மறைக்கிறாள்... முதலில் அவள் தங்கையை பற்றி தகவல். மற்றையது அவன் தங்கை தனக்கு எதிராக பழிவாங்குவது என்று இரண்டு விஷயங்களை ஒரே நேரத்திலல்லவா மறைக்கிறாள்.
தனது தங்கை பற்றியது இனி இவனுக்கு வேண்டாத பேச்சுத்தான். அவனும் அவளுக்கு மூன்றாவது மனுஷியே!.. அது இப்போது தேவையானது இல்லை.
ஆனால் மதி அவன் சொந்த தங்கையாயிற்றே.
எங்கு உண்மையை சொன்னால் மயூரனை போல அல்லவா அவளையும் ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

சொந்தங்கள் இல்லாமல் வாழ்வது கொடுமை தான். ஆனால் சொந்தங்கள் இருந்தும் ஒட்டுதல் இல்லாமல் யாருமற்ற தனிமையில் வாழ்வது நரகத்தை விட கொடுமையானது.

இந்த வீட்டிற்கு மயூரன் போதும்.
என நினைத்தவள்.
இதுவரை தான் இங்கு வந்த காலத்தில் இருந்து அண்ணன் தங்கை இடையில் நிகழும் பாசப்பிணைப்பை பார்த்ததினால்.
உண்மையை கூறினாலும், வீட்டிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகவில்லை தங்களை பிரிக்க நான் ஏதோ சதி செய்வதாக நினைக்க கூடும்.

எதற்கு தேவையில்லாத பிரச்சினையை நானே இழுத்து வைப்பான்?.. அவளே என்னிடம் தான் செய்த வேலையை சொன்னதற்கு காரணமே தமையனிடம் நான் சொன்னால் அதை அவன் நம்ப வாய்பில்லை என்ற நம்பிக்கையில் தானே!

இத்தனை பெரிய ரகசியத்தை துணிந்து என்னிடமே கூறினாள்.
பிழையும் செய்து விட்டு, சபதமும் செய்கிறாள் என்றாள் நிச்சயம் அவள் தவறு செய்ததாக நினைக்க மாட்டான். அப்படி நினைத்தாலும் அவளிடம் இருக்கிறதே கல்லையும் கரைக்கும் கண்ணீர் என்கின்ற ஆயுதம்.

அதை பார்த்த அடுத்த நொடியே என்னை துரத்தினாலும் அதிசயப்படுவதற்கில்லை.
அப்படி அவர்கள் அன்பானவர்கள். அவளும் தமையன் பானுவால் கோபம் கொண்டான் என்றுதானே ஆதங்க படுகிறாள். அதிலும் தவறேதும் இல்லையே!. காலம் கடந்தால் தானாக அதன் வடுவும் அழிந்து விடும். அவள் கோபமும் குறைந்து விடும். என நினைத்தவளை முகிலனது
"கலை" என்ற குரல் நிஜத்துக்கு அழைத்தது.

"என்ன கலை? ஆரம்பத்தில நல்லா தானே இருந்த ?... கேள்வி மாற மாற உன் தடுமாற்றமும் யோசனையும் அதிகமாகுது போல இருக்கே!... நீ யோசிக்கிறத பார்த்தா பயங்கரமா எதையோ என்கிட்டயிருந்து மறைக்கிற போல." என கேள்வியால் குடைய.

"அப்படி எதுவும் இல்லையே!... நான் வே...வேற எதையோ ஒன்ன நினைச்சிடடிருந்தேன்." என்று மழுப்பியவளை,

"ஓ...... என்ற ஒற்றை எழுத்தில் பதில் உரைத்தாலும் அவனது கூரிய பார்வையுமன, புருவ முடிச்சும் அதற்கு எதிராக நீ சொன்னதை நம்பக்கூடியது போல் இல்லை என்று சொல்லாமல் சொன்னது.

அவன் முகபாவங்களின் மாற்றத்தில் எங்கே தன் பொய்யை கண்டு விடுவானோ என்று பயம் கொண்டவள்.
தனது பார்வையை அவனிடமிருந்து விலக்கியபோது மேசை மீதிருந்த ஜூஸை எதேட்சையாக கண்களில் தட்டுப்பட, பேச்சை மாற்றும் பொருட்டு தட்டு தடுமாறி,

"ஜூஸ் குடிக்கலையா?........ ஐஸ் போட்டு எடுத்து வந்தேன். குளிர் குறையப்போகிறது." என்றவும்.
அவளின் பேச்சு மாற்றத்தை அறிந்தாலும், "சரி எடுத்து குடு!" என்க.

அதை அவனிடம் எடுத்து நீட்டினாள்.
"சரி வேறு எதுவோ யோசிச்சேன் எண்டியே எதை பத்தி யோசிச்சா?.."என மறுபடியும் அங்கேயே நின்றான்.

இவன் இந்த பேச்சையே விட மாட்டானா?....
ஏதோ திருடனை விசாரிக்கிறது போலயே விசாரிச்சிட்டு.
எந்த களவை பிடிக்க இந்த அடுக்கிய கேள்வியோ?.....
தப்பு பண்ணவங்க யாரோ?... கேள்வி மட்டும் குடைஞ்சு குடைஞ்சு என்கிட்ட கேக்குறது.

இப்பிடி குறுகுறுன்னு பாத்திட்டு கேக்கிறவன் கிட்ட எப்பிடி பொய் கூட சரியா வருதில்லை. அவன் சொன்னது போல நாக்கு தந்தியடிக்குது. என்று நினைத்தவாறு மீண்டும் சிந்தனை வட்டத்திற்குள் நுழைய.
முகிலனே அவளை நிஜ உலகிற்கு கொண்டு வந்தான்.
சங்கமிப்பாள்.......
 

Balatharsha

Moderator
பாகம்...... 29.





முகிலன் அழைத்ததும் நினைவுக்கு வந்தவள் என்ன? என்பதாய் முழிக்க.



அவள் முழித்த முழியில் வந்த புன்னகையை அவளிடமிருந்து மறைத்தவன்.



"சொல்லு கலை என்ன யோசனை? நான் கேள்வி கேட்டிட்டிருக்கும்போது யோசிக்கிற அளவுக்கு என்ன இருக்கு?.". என கேட்க



"அது வந்து.... நம்ம மயூரன் பத்தி தான்." என அவன் மேல் பழியை திடுதிடுப்பென தூக்கிப்போட்டாள்.



அந்த பதிலில் இன்னும் குடைவது போல் அவைளை பார்த்தவன்.



"நான் கேட்ட கேள்விகளுக்கும் நீ அவனை பத்தி யோசிக்கிறத்துக்கும் என்ன சம்மந்தம்?... இந்த பேச்சில அவன் எங்க வந்தான்." என்க.



உங்கள் பேச்சில மயூரன் வரல்ல தான்.



ஆனால் நான் பதில் சொல்லாமல தவிக்கிறத்துக்கும், மதியை பற்றிய உண்மையை மறைச்சு பொய் சொல்லுறத்துக்கும் அவனும் ஒருவகையில் காரணம்!... தானே என மனதில் நினைத்தவள்.



"நம்ப பேச்சில அவர் வரல்ல தான்.



ஆனா இங்க நடக்குறத இரண்டு மாதமா பாத்திட்டு தான் இருக்கேன்.



எல்லாத்தையுமே யோசித்து செய்யிற உங்களுக்கு கூட அவரை பத்தி எந்தவித கவலையும் இல்லை என்கிறது தான் என் வேதனையே!..." என்க.



"யாரு சொன்னா உனக்கு அவன பத்தி கவலை இல்லாமல நான் இருக்கின்றேன்னு?" என திருப்பி கேட்க.



"யாரு சொல்லணும்?. அவரை பத்தி பெரிசா அப்படி என்ன கவலை பட்டுட்டிங்க?.. வந்த நாளில இருந்து நானும் பார்த்துட்டு தானே இருக்கேன்.



யாராவது அவரை இந்த வீட்டில ஒருதனா மதிக்கிறீங்களா?.



ஏன் சகமனுஷனாக கூட நினைக்கிதில்லையே.?...



பெரியவங்கள்ல இருந்து சின்னவங்க வரை ஒதுக்கி தானே வைச்சிருக்கிங்க." என்றவள்.... "ஏன் வேலைக்காரங்க கூட மதிக்கிறதில்ல".

"


ஏதோ வருவாரு, சாப்பிடுவாரு, தூங்கிடுவாரு. இதை தான் இந்த வீட்டில் அவரு செய்த பாத்திருக்கேன்.



அதனால தான் நானே அவரை பத்தி அத்தை கிட்ட கேட்டேன்.
அவர் செய்த தவறை மட்டும் சுட்டிக்காட்டி இதனால தான் யாருமே அவருகூட பேசுவதில்லை. என்று சொன்னாங்க." என்றவள்,



"ஏன் இந்த உலகத்தில யாருமே தப்பு செய்ததில்லையா?...... அப்படி செய்யாதவன் மனுசனேவே இருக்க முடியாது.



தினமும் ஒரு நாளைக்கு ஒரு தவறாவது செய்திட்டு தான் இருக்கோம்.



தப்பு செய்துட்டாருன்னு . அவரு கூட பேசாம அனாதைபோல என்னன்னு கேட்க கூட ஆளில்லாமல் ஒதுக்கித்தான் வைக்கணும் என்டா,



உந்த உலகத்தில் யாருமே யார் கூடவும் பேசாம ஊமைபோல் தான் இருக்கணும்.



தவறு செய்து அதை உணர்ந்து திருந்தி வரும்போது எப்படி தண்டி உரிமை இருக்கோ.. அதே போல தானே அதை மன்னிக்கும் கடமையும் நமக்கிருக்கு. அதை எப்படி மறந்தீர்கள்?"



செய்த தவறை திரும்ப திரும்ப நினைவு படுத்தி அவரை மூணாவது மனுஷன போல ஒதுக்கி வைச்சு, அந்த குற்ற உணர்விலே அவரை காலம் பூராகவும் வேதனை பட வைக்க போகிறீர்களா?...." என கேட்டவள்,



முகிலன் ஏதுவே சொல்ல வர அதை தடுத்து.



"தெரியும் நீங்கள் என்ன சொல்ல வாரீங்கனு!. நான் அவனை ஒதுக்கி வைக்கலையே! அவன்கூட நல்லாத்தானே பேசுறேன்!... மத்தவங்க பேசாம இருக்கிறதுக்கு நான் என்ன செய்ய முடியும். இததானே கேக்க வந்திங்க.?" என அவன் மனதை அப்படியே கூறியவளிடம் ஆம் என தலையசைக்க.



"எப்பிடி?.... அவரால போய் பேச முடியும்?.... அது தான் அவரு தன் தப்ப உணர்ந்திட்டாரே!. அவருக்கும் தான் செய்தது தவறென்று தெரிஞ்சு குற்ற உணர்வால ஒதுங்கத்தான் பாப்பாரு. அதை முதல்ல போக்கணும். அவரை மத்தவங்களும் மதிக்கிறபடி செய்யணும்..



முதல்ல நீங்க அவரு கூட மனம் விட்டு பேசுங்க.
அத்தை சொன்னத வைத்து பார்க்குறப்போ அவருக்கு நீங்க தான் முதன்மையானவர்னு தெரியுது.



அவர் நீங்க திட்டினதால தான் வேதனையில இருக்கிறாருன்னு நினைக்கிறேன். நீங்கள் மட்டும் அவர் கூட மனம்விட்டு பேசினா, அவரோட குற்ற உணர்வு கொஞ்சமாவது குறையும்.



அதாேட உங்க வீட்டில உள்ளவங்களையும் பேச சொல்லுங்க.



இதுக்காக அவங்க பேசாததுக்கு நான் என்ன செய்ய முடியும்னு சொல்லவேண்டாம்.



உங்க கட்டுப்பாட்டில தான் இந்த குடும்பம் இருக்கிறது எனக்கு தெரியாதா?..







அவரை கவனிக்காம விட விட. அவருக்கே ஒரு கட்டத்தில விரக்தி வந்து, எப்படி நான் திருந்தினாலும் தன்னை அப்படியே தான் நினைக்க போகிறாங்க. என்ற எண்ணம் வந்திச்சுன்னா. முன்னாடி செய்ததையே திரும்ப செய்ய ஆரம்பிச்சிடுவாரு"



என்றவள்.
"அப்புறம்......" என மீதியை எப்படி கூறுவது என இழுக்கவும்.



"சொல்லு கலை!.. இவ்வளவு பாடம் எடுதாச்சு. இன்னும் எதுக்கு பயப்படுறவ போல தயங்குற?" என்றவன் அவள் கூறவருவது எதுவென எதிர்பார்த்திருந்தான்.



"முதல்ல சொன்னதை செய்யுங்க பிறகு மீதிய சொல்றேன்." என்க.



"அப்படி என்ன கலை சொல்ல போற?



பெருசா பூகம்பம் ஏதாவது வைச்சிருக்கியாே?.." என விடாது கேட்க.



"நீங்க நினைக்கிறது போல எதுவும் இல்லை. என்னதான் நீங்க அவரை பத்தி நல்லவிதமாக எல்லாருகிட்டையும் பேசினாலும் அவங்க அவரை மதிப்பாங்கனு எனக்கு தோணல.



ஆனதால அவரும் ஏதாவது வேலை செய்ய உதவலாமே?.. வேலை கூட அவருக்கு மரியாதையை தேடித்தரும்." என்க.



"வேலையா?... இப்படித்தான் முதல்ல ஒரு தொகை பணம் கேட்டான். நானும் என்ன? ஏதுன்னு கேட்காம அவன் மேல இருந்த நம்பிக்கையில பணத்தை கொடுத்தேன்.



இப்பவும் அதே தவறை செய்ய சொல்கிறாயா?.." என்று அவன் மேகலாவை எதிர்க் கேள்வி கேட்க.



"உங்களை யாரு அவர் பணம் கேட்டதும் என்ன? ஏதுன்னு கேட்காம கொடுக்க சொன்னது?



படிச்சுகொண்டிருந்தவருக்கு எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் தொழில் தொடங்க போறேன்னு பணம் கேட்கிறாரு. அதுவும் அவருக்கு ஏற்கனவே தாகாத பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சும் பெரிய வள்ளல் போல தம்பி கேட்டதும் கொடுத்தது உங்க தப்பு." என்று அவனிடம் கொஞ்சம் காரமாகவே கேட்டவள்,



"நான் ஒன்னும் தனியா தொழில் தொடங்க உதவி செய்ய சொல்லல்ல. உங்க ஆபீஸ்க்கே கூட்டிட்டு போய் பொறுப்புன்னா என்னன்னு முதல்ல கத்துக்குடுங்க.



அதை அவர் சரிவர செய்தா மீதியை நீங்களே பார்த்துக்கங்க.

உத்தியோகம் புருஷ லட்ஷணம்.



ஒரு ஆணுக்கு வேலை மட்டும் தான் மதிப்பை தேடித்தரும்." என்றவள் தான் பேச வந்தது இதுதான், முடிந்து விட்டது என தன் பேச்சை நிறுத்தி அவனை ஏறிட்டாள்.



"ஹூம்... உனக்குள்ள இத்தனை அறிவா?..." என வியந்தவன்,
"பாரேன் நான் கூட என் தம்பியை பத்தியும் அவன் எதிர்காலத்தையும் யோசிக்காம அவன் செய்த தப்பையே பட்டியலிட்டனே தவிர. அடுத்து என்ன செய்யணும் எண்டு நானோ இல்லை என் வீட்டுக்காரர்களோ கவலை படல்ல.



உன்னை ஒரு இக்கட்டில் நிற்க வைச்சு தான் தாலியை கட்டினேன்.



அதை எல்லாம் மனதில் வைச்சு என் குடும்பத்துக்கு கெடுதல் நினைக்காம உனக்கு கெடுதல் நினைக்கிறவங்களுக்கே நல்லது செய்ய நினைக்கிற பாரு நீ உண்மையில் பெரிய மனுஷி தான் கலை." என்றவன்,



" இதுக்கு முன்னாடி இப்படி யாரும் எனக்கு அறிவுரை சொன்னதில்ல என்கிறதை விட சொல்லவிட்டதில்லை உன்னை தவிர." என்றவன் தான் குடித்த ஜூஸ் கிளாசை மேகலாவிடம் நீட்டினான். அதை வாங்கியவளும் திரும்பி நடக்க,



அவளை போக விடாமல் அவன் முன்னால் வந்தவன்.



"என் கண்ணபாத்து நான் கேட்குற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்விட்டு போ! " என்க.



"மறுபடியம் முதல்ல இருந்தா?... என்ன ஆச்சு இன்னைக்கு ஒரே கேள்வியா கேக்கிறீங்க?.." என்க.

"


ஒரே ஒரு கேள்வி!. முதல் கேட்ட கேள்வி தான். ஆனால் உன் பதில் தான் புரியவில்லை. அது தான் திரும்ப கேட்கின்றேன்." என்ற.

"


சரி கேளுங்க." என்றவளை,

"


உண்மையை மட்டும் தான் சொல்லணும். உனக்கு என்னை நிஜமாவே பிடிக்கலையா?... என்னை யார் வந்து கேட்டாலும் விட்டு குடுத்துடுவியா?.." என்றவன் எங்கு மறுபடியும் ஆமாம் என்று சொல்லிவிடுவாளோ என கண்களில் ஏக்கத்தோடு மேகலாவை காண.



அவன் கண்களை எதிர்கொண்டவள் அதில் தெரிந்த வலிநிறைந்த பார்யைில் தன்னையே அறியாமல் விழிகளை தாழ்த்திக்கொண்டு. எதுவுமே பேசாமலே அவனை கடந்து வெளியேறினாள்.



தன் கண்களை நேராக பார்த்து. பொய் கூட கூறமுடியாமல் சென்றவள் செயலே அவனுக்கு போதுமாக இருக்க.



போகும் அவளையே சிறு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.



"மனசில் என்ன தோணுதோ அத்தனையையும் பட்டு பட்டுன்னு சொல்லுறா.
ஆனா என் சம்மந்தமா என்ன கேட்டாலும் அப்படியோ முழுங்கி மூடி மறைச்சிர்றாளே!....



ஆனா இந்த ஃபீல் கூட நல்லா இருக்கு.



உடனே சொன்ன என்ன சுவாரஷியம் இருக்க போகுது?. இப்பிடி ஒவ்வொரு நிமிஷமும் அவளை நினைச்சு ஏங்கி தவிச்சிட்டே வாழ்றது கூட சுகமா தான் இருக்கு." என்றவன் தன் வேலையை கவனிக்க சென்று விட்டான்.



சந்தை சென்றளை காணாது புஷ்பாவோ வாசலையே பார்த்தவாறு நிற்க.



"என்ன புஷ்பா வாசல்லயே ரொம்ப நேரமாக நிக்கிற?... நாய்க்கு பதிலாக உன்னை கட்டி விட்டுட்டாங்களா?..." என்ற தன் கணவனை முறைத்தவர்,



"உங்களுக்கு எப்பவும் விளையாட்டு தானா?... ஒரு கவலை என்கிறதே இல்லையா?.." என்க.



"ஏன் என்னாச்சு? எதுக்கு இப்போ கவலை படணும்?. முன்னாடியாவது மூத்தவளை நினைச்சு கவலை பட்டுட்டிருந்தோம். இப்பாே தான் அவ தினமும் உன்கூட பேசுகிறாளே!. அப்புறம் என்ன?" என்க.



"இப்போ அவளை யாரு சொன்னா? உங்க இரண்டாவது சந்தைக்கு போறேன்னு காலையிலயே சொல்லிட்டு போனாளே அவளை இன்னும் காணல்ல." என்க.



"வந்துடுவா பதறாம இரு!..." என கூறிக்கொண்டே இருக்கும் போதே.



வெளிகேட்டினை திறந்து கொண்டு அவள் உள்ளே வருவது தெரிந்து.



புஷ்பாவோ அவளை ஆராச்சியாய் பார்த்தார்.



கையில் கொண்டுபோன பிளாஸ்ரிக் கூடையில் எதுவும் இல்லாது வெறுமையாக இருக்க.



"என்னங்க சந்தைக்கு போய் காய்கறி வாங்கிட்டு வரேன்னு போனா. இப்போ வெறும் கூடையோடு வந்திட்டிருக்கா!..



யாராவது தெரிஞ்சவங்க இவளை பாத்து ஏதாவது சொல்லி மனச வேதனை படுத்தியிருப்பாங்களோ?..." என கணவனை பார்த்து கவலையாக புஷ்பா கேட்க.



"எதுக்கு புஷ்பா தேவையில்லாம யோசிக்கிற?. அவ கொண்டுவர கூடையை பாத்தியே!.. அவள் முகத்தை பாத்தியா? இந்த இரண்டு மாசமா இல்லாத சந்தோஷம் இன்னைக்கு தெரியுது." என்க.



கணவன் சொன்னதும் தான் அவளை உற்று கவனித்தவர் "ஆமாங்க. இவள் இப்படி சந்தோஷமா வர அளவுக்கு என்ன நடந்திருக்கும்? " என கேட்க.



"வரவளையே கேளேன். ஏதோ அவகூட நானும் போனது போல என்னையே கேள்வி கேட்டு குடையிற? என சலித்துக்கொள்ளும் போதே



பானுவும் அவர்கள் அருகில் வந்துவிட.



"என்னடி?.. எப்படி போனியோ அப்படியே வந்திருக்க?...." என்றவரிடம்,



"அப்போ எப்பிடி வர சொல்லுறீங்க?.. பேய் மதிரி தலையை விரிச்சு போட்டுட்டு வரவா?" என்ற அவளது பழைய துடுக்கான பேச்சை கேட்டு தந்தையும் அவளையே பாத்திருக்க.



"அடியே!.... நான் உன் சுய உருவத்தை கேட்கல. மேக்கப்போடாயே இரு அப்போ தான் எனக்கும் பயமில்லாமல் இருக்கும். நான் கேட்டது.



சந்தைக்கு பேறேன்னு கூடையை தூக்கிட்டு போனியே போனது போலவே வெறும் கூடையோட வந்திருக்கிறதை கேட்கிறேன்." என்க.



" ஓ... அத கேட்கிறீங்களா?... இன்னைக்கு தான்ம்மா எனக்கு நிம்மதியா இருக்கு." என்றவள்.தொடர்ந்து,



"அக்கா கூட பேசினேன்ம்மா..." என்க.



"நீ பேசினியா?... எப்போ? எங்கே? நல்லா இருக்காளா?..... இங்க இருந்தது போல இருக்காளா?... இல்லை..." என்று தொடர் கேள்வி கேட்க.



"ஆமாம்மா!.. அவ இங்க இருந்ததை விட நல்லாத்தான் இருக்கா!." என்றவள் நடந்த விடையங்களை சொல்லவும்.



"ஏதோ அக்காளும் தங்காளும் சேர்ந்தது சந்தோஷமா தான் இருக்கு.



அதெல்லாம் விடு சந்தைக்கு காய்கறி வாங்க போனியே எங்க அதெல்லாம்?.." என்க.



"நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் உனக்கு இப்போ காய்கறிதான் முக்கியமா?.." என கேட்டவளிடம்.



"அடியே..! நீ சந்தோஷமா இருந்தா சாப்பிடாமலா இருக்க முடியும்?" என கோபமாக புஷ்பா கேட்டதும்.



"எனக்கு இருக்கிற சந்தோஷத்தில சாப்பாடே வேணாம்னு தோணுதம்மா." என்றவாறு அவள் கொண்டுவந்த கூடையை தாயின் கையில் திணித்து விட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.



"என்னங்க இவ லூசுமாதிரி பேசிட்டு போறா. அவ சாப்பிடா என்ன? சாப்பிடலனா என்ன?.. எங்களுக்கு வயிராெண்டு இருக்குல்ல. நாங்க எதையுங்க சாப்பிடுறது?.." என கணவனிடம் நீதி கேட்டவர்



"இந்த விசரியை நம்பி நானும் கடைக்கு போகல. இப்போ ஊரு கடைக்கு போன காய்கறி இருக்காதேங்க. வெள்ளி கிழமை வேற. இவளை என்ன பண்றது?." என்க.



"விடு புஸ்பா!... அவ இருந்த சந்தோஷத்தில மறந்திருப்பா போல. வேற ஏதாவது ஏற்பாடு பண்ணும்மா." என்கவும்.



"பசிக்குதுன்னு மதியத்துக்கு சாப்பாடுக்கு வரட்டும் அப்புறம் வைச்சுக்கிறேன்." என்றவர் அந்த பேச்சை விட்டு விட்டு சமையலுக்கு ஏற்பாடு செய்ய உள்ளே சென்றார்.



மேகலா சொன்னதன் பிறகு அன்று இரவே மயூரனை அழைத்தவன், மற்றையவர்களையும் அழைக்க. எல்லோர் முகமும் கேள்விக்குறி ஆனது.



அவர்கள் என்ன? ஏது? என்று கேட்பதற்கு முன்னரே. "மயூ...! நாளையில் இருந்து என்கூட என் ஆபீஸ்கு வர. இனி உனக்கு அங்க தான் வேலை." என்றவன்.



மற்றவர்களை ஒரு முறை பார்த்து விட்டு.

"அம்மா இங்க எனக்கு என்ன மரியாதை கிடைக்குதோ? அதே போல மயூரனையும் எல்லாருமே மதிக்கணும்.



அவனுக்கும் இந்த குடும்பத்தில் சம உரிமை உண்டு என்கிறதையும் மறந்திட வேணாம்.



அவன் செய்த தவறுக்கு இதுவரை அனுபவித்த தண்டனை போதும். இப்போது யோசித்து பார்த்தா அவனை விட நான் தான் பெரிய தப்பு செய்திட்டனோனு தோணுது.



அவன் தன் தவறை உணர்ந்த அடுந்த நொடியே அவனை மன்னிச்சிருக்கணும்.



இவ்வளவு காலம் என் வேலையினால அவனை பத்தி யோசிக்கல்ல.
"



என்றவன் தான் கூறவந்ததை கூறிவிட்டு எழுந்தவன் மயூரனிடம்,
"உன் கூட பேசணும் வா!.." என்றுவிட்ட வேகமாக தன் அறைக்கு சென்றுவிட.



அன்நேரம் மயூரனுக்கு தொலைபேசியில் அழைப்பு வர அதை எடுத்து பேசிவிட்டு தமையனிடம் செல்லலாம் என்று நினைத்தவன் அழைப்பை ஏற்று பேசிக்கொண்டிருக்கவும்.



மற்றவர்கள் நடப்பது எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். மேகலாவும் முகிலன் பின்னால் சென்றாள்.



அவள் உள்ளே வந்ததும். "போதுமா கலை?... இப்போ உனக்கு சந்தோஷமா?..." என்க.



"இது நல்ல கதையாக இருக்கே!.... அது என்ன எனக்கு சந்தோஷமானு கேள்வி?.. மயூ ஒன்னும் என் தம்பி கிடையாது, அவர் உங்க தம்பி. பாக்க போனா இதை முதலே நீங்கள் செய்திருக்கணும். இதுவே ரொம்ப தாமதம்.



சரி தாமதமானா என்ன?... செய்யிறதை சரியாக செய்தா சரி!.." என்றவள் ஏதோ கூற வாய் திறக்க



"உள்ள வரலாமா?.." என்ற குரலில் அது மயூரன் தான் என்பதை உணர்ந்தவர்கள்.



"வாடா!.." என்றவன். அவன் உள்ளே வந்ததும். "சூடா ஏதாவது இரண்டு பேருக்கும் எடுத்து வாரியா கலை?.." என்றான்



"சரிங்க" என இருவருக்கும் தனிமை தந்து வெளியேறினாள் மேகலா.



அவள் போனதும். "சாரி மயூ......" என்று மனப்பூர்வமாக அவனிடம் மன்னிப்பு வேண்ட.



"அண்ணா!... நீங்க எதுக்குண்ணா எங்கிட்ட மன்னிப்பெல்லாம்?.... நான் தானே தப்பு பண்னேன்." என்கவும்.



"நீ ஒரு தடவை தான் மயூ தப்பு பண்ண!... ஆனா இங்க இருக்கிறவங்க உன் விஷயத்தில ஒவ்வொரு நாளும் தப்பு பண்ணிட்டு இருந்திருகோம். இந்த ஐந்து வருஷம் எப்படில்லாம் நீ வேதனை பட்டிருப்ப?... ஒரு நிமிஷம் கூட உன்னை பத்தி யோசிக்கலயே.



இப்ப கூட கலை மட்டும் எனக்கு புரிய வைக்கலன்னா இன்னும் அதையே தான் செய்துட்டு இருந்திருப்பேன்." என்றான்.



அவனுக்கும் அதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் வந்த ஐந்தாம் நாளே தன்னை பற்றி தாயிடம் விசாரித்தவள். அவரிடமே தனக்காக வாதாடி அவர்கள் குறைகளையும் சுட்டிக்காட்டியதை நேரே பார்த்தவனாயிற்றே. சற்று முன்னர் கூட கனவனுடனே அவனுக்காக வாதாடுவதை வெளியே நின்று பார்த்துவிட்டு தானே வந்தான்..!...



"சாரிடா..! உன்னை புரிஞ்சுக்காம இத்தனை வருஷம் கஷ்டபடுத்திட்டேன்." என்க.



"அதெல்லாம் வேண்டாம்ண்ணா... எனக்கு என் பழைய அண்ணா திரும்ப கிடைச்சதே போதும். நீங்க மட்டுமே போதும்ண்ணா." என்றவனை "ஆரத்தழுவியவன். சாரிடா!.. வெரி சாரி..." என மன்னிப்பு வேண்டினான். மயூரனுக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது. அவர்கள் இருவரும் தழுவியவாறு நிற்கும் பாேதே கையில் காஃபியுடன் வந்தவள்,



"என்ன ரொம்ப அழுகாட்சி போகுது போல." என்றதுமே விலகினார்கள்.



அவர்கள் முன் தட்டை நீட்ட காஃபியை எடுத்தவர்கள். "தாங்க்ஸ் அண்ணி...! என்க.



"என்ன கொழுந்தனாரே உங்க வீட்டு பொருள்ல போட்ட காஃபிக்கா தாங்க்ஸ்?..." என கேலிசெய்ய.



"ஆமால்ல.. அப்பிடின்னா இன்னொரு தாங்க்ஸ்" என்றவன் "இது எனக்காக அண்ணா கூட பேசினத்துக்கு." என்றவும்.



"கொழுந்து அவ்வளவு தானா?... நான் பெரிய பார்ட்டியே வைப்பிங்கனு எதிர்பார்த்தேன்." என்கவும்.



"வைக்கலாம் அண்ணி...! என் ஸ்பெஷல் அண்ணிக்கு என் சொந்த காசிலையே பார்ட்டி வைக்கணும். அதனால வேலைக்கு போயி முதல் மாச சம்பளம் வரட்டும் அப்போ வைச்சிடலாம்." என்க.



"அப்போ வாழ்கையில் எனக்கு பார்ட்டி இல்லை." என அவள் கூற.



மயூரனோ ஏன் என்பதாய் அண்ணியாரை பார்த்தான்.



"உங்க அண்ணன் கஞ்சன் மயூ..... சம்பளமே தரமாட்டாராம். அதுவும் நீங்கள் தம்பி வேற. அதையே காரணம் காட்டி ஒரே குடும்பத்துக்குள் எதற்கு சம்பளம்ன்னு நினைச்சு தராமல் ஏமாத்திடுவாரு." என்க.



அவள் பேச்சில் சகோதரர்கள் இருவரும் சிரிக்க. மேகலாவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.



சிறிது நேரம் பேசிவிட்டு மயூரன் சென்றுவிட.



முகிலனோ தம்பியுடன் மனம் விட்டு பேசியதில் மனம் தெளிவுற. சந்தோஷமாகவே தூங்க சென்றான்.







சங்கமிப்பாள்.......
 

Balatharsha

Moderator
பாகம்.... 30.


சகோதரர்கள் ஒற்றுமையின் பின் எந்தவித குழறுபடியும் இல்லாமல் தான் மேகலாவின் நாட்கள் நகரத்தொடங்கியது.

மயூரனும் தமையன் தனக்களித்த வேலைகளை சரிவர செய்துகொண்டுதான் இருந்தான்.

இடையிடை யாரும் அறியாதவாறு மேகலாவும் தன் குடும்பத்துடன் மாமியாரின் ஒத்துழைப்புடன் போனில் பேசியவாறு இருந்தாள்.

என்ன காரணமோ தெரியவில்லை, மதியும் தன் தடாலடி வேலைகளுக்கு ஓய்வு கொடுத்து எப்போதும் போனும், கல்லூரியும் என பிஸியாக இருந்தாள்.
இருந்தாலும் அவளை மேகலா கண்காணிக்க தவறவில்லை.
எதுவும் அறியாதவள் போல் இருந்துவிட்டு, பெரிய வில்லங்கத்தை இழுத்து வைத்துவிடுவாளோ!. என்று பயம் தான்.

அன்று முகிலனுக்கு வெளியூரில் அவசர வேலை வர, மயூரனை இங்குள்ள வேலைகளை பார்த்துக்கொள்ள சொல்லி சென்று விட்டான்.

மதிய உணவிற்கு பின்னர் டீவி பார்க்கலாம் என்று டீவியின் முன் அமர்ந்து டீவியில் மூழ்கிவிட்டனர். சுந்தரியும், அவர் மருமகளும்.

"அட...! தயங்காமல உள்ள வாங்க....!." என்று வெளியே கேட்ட மதியின் குரலில், இவ யாரை இப்படி உரிமையா அழைச்சிட்டு வரா? என இருவரும் வாசலை பார்க.
முகிலன் வயதையொத்த ஒரு இளைஞனை உள்ளே அழைத்து வந்தவள்.

"அம்மா இவர் என் ஃபிரெண்டோட அண்ணா. வரப்போ வழியில் தான் இவரை பாத்தேன். பக்கத்தில தான் வீடிருக்குன்னு அழைச்சிட்டு வந்தேன்." என அவனை அறிமுகப்படுத்தியவள்.
அவனிடமும்
"இது என்னோட அம்மா சுந்தரி!" என்று அவனுக்கும் அறிமுகம் செய்தாள்.

அவனும் மரியாதையாக அவர் காலை தொட்டு "ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா..!" என்க., அவனது பணிவில் மகிழ்ந்த சுந்தரி,

"நல்லா இருப்பா!." என்று ஆசி வழங்கி எழுப்பியவர்,

" வந்து இருங்க தம்பி!" என விலகி வழிவிட்டார்.
அவனும் சந்தோஷமாக ஷோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.

இங்கு நடப்பவற்றையும், புதிதாக வந்து உள்ளாசமாக நடுகூடத்தில அமர்ந்திருப்பவனையும் நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மேகலா.

வந்தவன் வேறு யாருமில்லை. அவள் கனவில் வந்த அதே கடத்தல் காரனான தீபனே தான்.
கனவில் வந்தவனை எங்கோ பார்த்தது போல் இருந்ததன் காரணம் கண்முன் நின்றவனை கண்டு நினைவு வர,
இருவர் நாடகத்தையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனும் அதே நேரம் இவளைத்தான் பார்த்தான்.
தீபனின் பார்வை போன திசையை பார்த சுந்தரி,

"இவ என் மருமக. மதியோட அண்ணன் மனைவி." என்று அறிமுகப்படுத்தி வைக்க,
அவனும் அவளை அறியாதவன் போல "வணக்கம்." என்றான்.

"பாத்திங்களா!.. இவங்களை நான் மறந்தே போனேன்.. இவங்க எனக்கு பிடிச்ச, இந்த குடும்பத்துக்கு ரொம்ப முக்கியமானவங்க. " என அவளையே பார்த்து வஞ்சக சிரிப்பு ஒன்றை சிந்தியவாறு கூறியவள்.

"இவங்க ரொம்ப சூப்பரா சமைப்பாங்க தீபன்.. எங்க அண்ணா கூட இவங்களுக்கு அடிமைன்னா பாத்துக்காேங்களேன்!... " என்றவள்,
"அதாவது இவங்க செய்யிற சாப்பாட்டுக்கு.". என்று அந்த சாப்பாட்டில் அழுத்தம் கொடுத்து கூறியவள்,

"அண்ணி ஃபிளீஸ்..!. இவருக்கும் உங்க கை பக்குவத்தில் ஒரு காஃபி போட்டு வரீங்களா?" என்று கெஞ்சுவதை போல் இமைகள் சுருங்க கேட்க,

அங்கு பார்வையாளராக நின்று அவர்கள் நாடகத்தை பார்க்க பிடிக்காதவளாக மதியினது வேண்டுகோளுக்கு இணங்கி கிச்சனுக்குள் சென்றவள்.
சிறிது தாமதத்தின் பின்னர் வெளியே காஃபியுடன் வந்தவள்.

தட்டுடன் மதியிடம் கொடுக்க.
"என்னண்ணி!. நீங்களே அவருக்கும் குடுங்க." என வார்த்தைக்கு வார்த்தை என்றுமில்லாமல் அண்ணி என்று அழைப்பது மேகலாவிற்கு வித்தியாசமாகவே தோன்றியது.

அதை உறுதி செய்வதை போல மதியும் தீபனுடன் பேசினாலும், மேகலாவை கேலி செய்வதும், ஆராய்வதுமாக இருந்தாள்.

மேகலா கையில் இருந்த காஃபியை இருவருக்கும் கொடுத்து விட்டு ஓரமாக ஒதுங்கி நின்று கொள்ள.
"ஏன் அண்ணி!. இப்படி வந்து இருக்கலாமே!" என உரிமையாக தன் பக்க இருக்கையை காட்ட.

அத்தையின் முன்னால் எதுவும் பேச முடியாதவள் அவள் காட்டிய இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

சுந்தரிக்கோ ஏக போக மகிழ்ச்சி!
இதுவரை மேகலாவை ஏதோ ஒரு வகையில் தீண்ட தகாதவளாக பார்த்த மகள் அவளை புரிந்து கொண்டு, அவளை அண்ணியாக ஏற்றுக்கொண்டாள் என்று.

பாவம் அவர்களுக்குள் நடக்கும் வஞ்சப்டலம் அவருக்குத்தெரிய வாய்பில்லையே!.

இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவள்,
இவங்க பேசிக்கிறத பாத்தா தோழிங்க நட்பால வந்த பழக்கம் போலவா இருக்கு?
ஆமால்ல...! இவனுக்குத்தான் கூட பிறந்தவர்களே இல்லையே!. எங்கிருந்து புதுசா வந்தா தங்கை?.

ஒரு வேளை இவகிட்டையும் யாரையாவது தங்கைன்னு காட்டி நாடகமாடுகிறானோ?.. என்று தோன்றிய அடுத்த நொடியே,

இல்லை....! இவன் மட்டும் நாடகமாடுறது போல தெரியல்ல. பேசிட்டே என் முகத்த ஆராயித பார்த்தா, கூட்டுச்சேர்ந்து நாடகமாடுறத போல தான் தெரியுது.

வர வழியில கண்டு இவனைல்லாம் அழைத்து வரல்ல. திட்டமிட்டே கூட்டிவந்திட்டு வழியில கண்டதா பொய் வேற, என சரியாக கணித்தவள்,

இவனால புதுசா என்ன பிரச்சினை முளைக்கப்போகுதோ!... எதுக்காக இந்த வீட்டையே சுத்திச்சுத்தி வரான்?..

பானு கல்யாணத்தை குழப்பினான். இப்போ மதிகூட ஒட்டிப்பழகுறத பார்த்தா நிச்சயமா இந்த வீட்டிற்கும் இவனுக்கும் தான் ஏதோ பிரச்சினை இருக்கணும்.
தன்னோட காதலை பானு ஏத்துக்காததனால தான் அவளை பழிவாங்க அப்படி செய்திருக்கிறான்னு நினைச்சேன்.
ஆனா இவன் திட்டமே வேறயாே!..

அத்தைக்கு இவனை தெரியல்லையே!.. அப்பாே எப்படி இந்த குடும்பத்தோட பகை இருக்க முடியும்?....
இது பெரும் குழப்பமாக இருக்கும் போலயே!...

இவன் தான் அண்ணன் கல்யாணத்த நிறுத்த சதி பண்ணான் என்றாவது இவளுக்கு ரெியுமா? இல்லையா?... என பலகேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொண்டாள்.

சிந்தனை வயப்பட்டவள் புருவங்களும் அதற்கேற்றால் போல் அசைவை வெளிப்படுத்த,
அதை கண்டு மர்மபுன்னகை சிந்தியவாறு தம் பேச்சை தொடர்ந்தவர்கள்.

சில நிமிடங்களில் "ஓகே மதி நான் வரேன்." என கூறியவன். சுந்தரியிடமும் நான் வரேன் அர்ன்டி!" என்றவாறு.
மேகலாவிடம் திரும்பி "உங்க காஃபி சூப்பரா இருந்திச்சு. " என்று விடைபெற்றான்.

"ம்மா....! நான் வாசல் வரை அனுப்பட்டு வரேன்." என்று அவனை பின் தொடர்ந்தாள் மதி.

சென்றவனையே பார்த்திருந்தவர்,
"பாக்க பெரிய இடத்து பையன் போல இருக்கான். ஆனா கொஞ்சம் கூட பெருமையில்ல.
அவன் பேச்சில பணிவும், மரியாதையும் எப்பிடி கலந்திருக்கு பார்த்தியா?." என அவன் சுயரூபம் ரெியாமல் அவனை புகழ்ந்தவர்.

"சரிம்மா நீ டீவிய பாரு!.. எனக்கு சாப்பிட்டதும் குட்டியா ஒரு தூக்கம் போட்டா தான் சாப்பாடே ஜீரணமாகும்." என்றவர் படுக்க சென்றுவிட.

தீபனை அனுப்பிவிட்டு வந்தவள்.
"என்ன அண்ணி ஷாக் ஆகிட்டிங்க போல?. என்க.

"என்ன உலறுற மதி?... நடக்கிற எதுவும் நல்லதா படல்ல. உன் நன்மைக்கு தான்சொல்லுறேன். என்னை பழி வாங்குறதா நினைச்சு உன் எதிர்காலத்தை அழிச்சிடாத!...
அவன் நல்லவன் இல்லை." என்க.

"ஓ...... அவனை பத்தி உங்களுக்கு தெரியுமா?.... அப்படின்னா உங்களுக்கும் அவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்திருக்கு. அப்படி தானே.!" என்றவும்.

"இது வீண் பழி?... எனக்கு அவனை தெரியும் தான்.
ஒரு முதலாளி, தொழிலாளி என்கிற முறையில மட்டும்.
ஆனா நீ கேக்கிற அளவுக்கு பழக்கமில்லை.
சொல்லப்போனா இவனை நான் அதிகமா பாத்ததே இல்ல.
இதை தவிர என்ன உறவென்று நீ சொல்ல வர?" என கோபமாக கேட்க.

"எதற்கு இப்போ இந்த டென்ஷன்? நான் தப்பா எதுவும் கேக்கல்லையே!... நீ சொல்லுறதும் ஒருவகையில் சரி தான். இவனை உங்களுக்கு அவ்வளவா தெரியாது. ஏத்துக்கிறேன்.
ஆனால் உன் ஓடுகாலி தங்கைக்கு?.." என இழக்காரமாக கேட்க.

"மதி நடந்தது புரியாமல் பேசாத!... எல்லாம் இவனால வந்த வினை! இவன் நாடகத்தால தான் அவள் அப்படியே செஞ்சா." என அவள் தங்கையை பற்றி பேசியதும் கோபம் கொண்டு கத்த..

"எதுக்கு இப்பா சத்தம் போடுற?... கத்தினா மட்டும் நீங்க செய்தது சரின்னு ஆகிடுமா?...
எனக்கும் உண்மை எதுன்னு நல்லாவே தெரியும்.
எப்படித் தெரியும்ன்னு அடுத்த கேள்வி கேட்பீர்களே?.. அந்த சிரமமே உங்களுக்கு வேண்டாம்.
நானே சொல்லிடுறேன்." என்றவள்,

"ஒருத்தனை காதலிச்சிட்டு, அவனை விட பணக்கார மாப்பிள்ளையை கண்டதும், அவனை கழட்டி விட்டுட்டு, என் அண்ணனுக்கு கழுத்தை நீட்ட வந்தவ தானே உன் தங்கை.

அங்க என்னடான்னா உண்மையா காதலிச்சவன் மருந்தை குடிச்சிட்டு சாக கிடக்கிறான், உன் பாசமலரோ என் அண்ணன் கையால தாலி வாங்க மண்டபம் வரைக்கும் வந்திட்டா." என்றவள் கதை புதிதாக இருக்க,
அவள் கதையை கவனமாக கேட்கவளிடம்,

"என்ன அப்பிடி தெரியாதவ மாதிரியே பாக்குற?.... உனக்கும் இது தெரியுமாமே!." என்க. இவளது புதுக்கதையை கேட்டதும் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் விழிவிரித்து பார்த்தவளை,

"எங்க தான் இந்த ஒன்னுமே தெரியாத முகத்தை வாங்கினியோ?" என்றவள்.
"எனக்கு எல்லாம் தெரியும்.
உன் தங்கை தீபனோட அண்ணனை காதலிச்சு, பணத்துக்காக அவனை கழட்டி விட்டுட்டா!, அதை தாங்காம மருந்து குடிச்சு அவரு சாககிடந்திருக்காரு.
அதை தீபன் வந்து உன்கிட்ட சொல்ல. அவரு காதல அலட்சியபடுத்துறது போல, உன் காதலை வைச்சு என்ன செய்ய முடியும்?..
எப்பவும் போல பிச்சைகாரங்க மாதிரி வாடகை குடிசை வீட்டிலே வாழ எங்களுக்கு இஷ்டமில்ல. . தேடி வந்த செல்வத்தை காதல் எண்ட பேரில இழக்க விரும்பல்ல. எனக்கு பணம் தான் வேணும்னு. உன்னோட அண்ணன் பணக்காரன் எண்ட காரணத்தால தான் காதலிச்சேன்.

இப்போ அவனை விட பல மடங்கு வசதியான இடம் கிடைக்கிறப்போ, ஐஞ்சு பைசா பிரியோசனம் இல்லாத காதலை காரணம் காட்டி நல்ல வாய்ப்பை விட சொல்லுறியானு உயிருக்கு போராடிட்டு இருக்கிற அண்ணனுக்காக நீதி கேட்க வந்தவரை அசிங்கபடுத்தி அனுப்பினீர்களே! அதுவும் தெரியும்.

அதை எல்லாம் மறந்துட்டு பத்திரிக்கை வைச்சிட்டிங்களேன்னு கல்யாணத்துக்கு தீபன் வந்தா,
எங்க தன்னை பத்திய உண்மையை எல்லோரு முன்னாடியும் சொல்லி கல்யாணத்தை நிறுத்தத்தான் வந்தானோன்னு பயந்து மண்டபத்தை விட்டு உன் தங்கை ஓடியதும் தெரியும்."
என அவள் புதுக்கதை சொல்லவும்.
எல்லாவற்றையும் மனதை ஒருநிலை படுத்தி கேட்டுக்கொண்டிருந்தவள்.

"இத உனக்கு யாரு சொன்னது?" என மேகலா சாதாரணமாகவே கேட்க.

"ஏன் உண்மை தெரிஞ்சிடிச்சுனு பயமாக இருக்குதோ?.." என்றவிடம்,

"எது உண்மை மதி?... நீ சொன்னதில ஒரு வார்த்தை கூட உண்மையில்லாதப்பாே நான் எதுக்கு பயப்படணும்?.
இப்பாே இங்க வந்தானே! அவன் தான் நல்லா கதை எழுதுவான்.
அவன் திறமைக்கு இதையெல்லாம் நாவலா எழுதினாலே பெரிய பெரிய விருதெல்லாம் கிடைச்சிருக்கும்.
பாவம் திறமையை சரியா பயண்படுத்த தெரியாதவன்." என்றவள்.

"அவன் சொன்னானே அண்ணன் அவனை நீ பார்திருக்கியா?.." என்க.

"பாக்காம பேசுற அளவுக்கு நான் ஒன்னும் லூசில்ல!... எல்லாமே தீரவிசாரிச்சதும் இல்லாம, நேர போய் அவன் அண்ணனையும் பாத்து விசாரிச்சேன்." என்க.

"ஓ...." என்றவள். "அப்படின்னா கதையோட சேர்ந்து நாடகமும் அரங்கேறியிருக்கு என்கிற!" என்றவள்.

"இவ்வளவு ஆராஞ்சவ அவன் கூட பிறந்தவர்கள் பத்தி விசாரிச்சியா?.." என்க.

"அங்க சுத்தி இங்க சுத்தி என்னையும் முட்டாளாக்க நினைக்கிறியா?.. நான் ஒன்னும் தீபன போலவோ, இல்லை அவன் அண்ணன் போலவோ முட்டாள் கிடையாது.
கதையை திருப்பி விடுற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்." என அவள் எங்கு தன்னையே ஏமாற்ற பார்கிறாள் என்று நினைத்து கத்த.

"எதுக்கு இப்போ கத்துற மதி?. உன்னோட கத்தலினால தூங்கப்போனவங்க வந்திடம் போறாங்க." என்க.

"வரட்டுமே!... வந்தாத்தான் உன் வண்டவாளம் அவர்களுக்கும் தெரியும்." என்றவளிடம்,

"படிசவ ஏமாறமாட்டான்னு நினைச்சேன்.. உன் பிடிவாத குணத்தினால என்னை பழிவாங்குவதாக நினைத்து கண்டவன் சொல்லை கேட்டு ஏதேதோ பேசுற!..
விதி யாரை விட்டது?..... ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ.
அவன் வீட்டுக்கு ஒரே பையன். அவனுக்கு அண்ணனோ, கூடி பிறந்தவங்களோ கிடையாது.
நீ இப்போது அளந்தாயே கதை, அதையே தான் பானுகிட்டையும் அளந்திருக்கிறான். என்ன கொஞ்சம் வித்தியாசமா. அதுவும் உன் அண்ணனுக்கு எதிராக.
நானும் இதுவரை இவன் பானு தனக்கு கிடைக்கல்லன்னு தான் இப்படி செய்தான்னு நினைச்சேன்.
ஆனா அவன் நடந்துக்கிறத பாத்தா எங்களை ஒரு அம்பு போல பாவிக்கிறானோனே தோணிச்சு.
ஆனா இப்போத தெளிவாக தெரியுது. அவனுக்கு இந்த குடும்பத்தில இருந்து எதுவோ தேவைப்படுது.
அதுக்காக தான் திரும்ப என்னையும், உன்னையும் அதுக்கு பயன்படுத்த பாக்கிறான்.

அவனை பார்த்தாலே தெளிவாக தெரியுதே!
இந்த உலகத்திலே கெட்டவன் யாருன்னு தரவரிசை படுத்தினா எப்படியும் பத்துக்குள் வருவான்னு.

கண் கெடுறத்துக்கு முன்னாடிய அதை பாதுகாத்துக்கோ மதி. திரும்பவும் சொல்லுறேன். உன் வலையிலயோ, இல்லை அந்த தீபன் வலையிலயோ நான் சிக்க மாட்டேன். இந்த குடும்பத்தில இருக்குற மத்தவங்களையும் சிக்க விடமாட்டேன்." என்க.

"எல்லாத்தையும் நீங்க செய்திட்டு, முழுபூசணிக்காயை சோத்தில மறைக்க பாக்கிறீர்களா?.....
ஆமா!.. நீ சொல்லுறத போல இந்த வீட்டில அவனுக்கு ஒன்னு தேவைதான்.
அது நான் தான்!.
அவனை தான் நான் கட்டிக்க பாேறேன்.
இனி அவனை மரியாதை இல்லாமல் கண்டவன், கெட்டவன்னு சொல்லுறத நிறுத்தினா உனக்கு நல்லது.
நீயெல்லாம் அவன் காலை கழுவி அதை குடிச்சாலும் அவன் கிட்டவும் நெருங்க முடியாது." என்க.

அவள் பேச்சில் எதையோ நினைத்து சிரித்தவள்.
ஒரு கதை கேள்வி பட்டிருக்கிறாயா மதி?.

"காட்டு முயல் இருக்கு தெரியுமா?.... அதுவும் உன்னைப்போல் தான்.
எதாவது விலங்கு தன்னை பிடிக்க வந்தா வேகமாக ஓடிவந்து தன் தலையை மாத்திரம் பனை ஓலைக்குள்ள மறைச்சு வைச்சிட்டு தான் முழுமையா பாதுகாப்பான இடத்தில தான் இருக்கேன்னு. நினைச்சுக்குமாம்.
பாவம் அதற்கு தெரிய வாய்பில்லை தன் பின் பகுதி ஓலைக்குள்ள மறையலன்னு.

கொஞ்ச நேரத்துக்கப்புறம் துரத்திய விலங்கிட்ட பிடிபட்டதும் தான் தெரியுமாம் தான் பாதுகாப்பாகிட்டேன்னு நினைச்சது தப்புன்னு. முழுமையா அந்த ஓலைக்குள்ள புகுந்திருந்தா தப்பிச்சிருப்பேன்னு அப்போ தான் அறிவே வந்திச்சாம்" என முயலின் கதையை கூறியவள்.

நீயும் அந்த முயலோட இடத்தில தான் இப்போ இருக்க.
உனக்கும் இன்னும் நேரம் இருக்கு மதி.

என்கிட்டருந்து உன் அண்ணனை பிரிக்கிறதா நினைத்து நீயா போய் மாட்டிக்காத!
தீபனை பத்தி அரைகுறையா தெரிஞ்சுக்காம, நான் சொன்னத காதில வாங்கி அவனை பத்தி முழுசா தெரிஞ்சுக்கோ!.

அவ்வளவுதான் என்னால சொல்லமுடியும்.
இனி நீயாவது உன் வாழ்கையாவது." என்றவள் சென்றுவிட்டாள்.

மதியோ அவள் கூறிய எந்த விடையத்தையும் காதில் வாங்காது. எங்கு தன் உண்மை வெளி வந்துவிடுமோ என்ற பயத்தில் தான் மேகலா இப்படி கூறுகிறாள். என்று நினைத்தவள் தனக்கு தீபனால் வர இருக்கும் ஆபத்து புரியாமல் மேகலாவை தவறாகவே நினைத்துக்கொண்டாள்.

சங்கமிப்பாள்..........
 
Status
Not open for further replies.
Top