அத்தியாயம் : 01
தூத்துக்குடி இது தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு மாநகரம் ஆகும் அது மட்டுமல்ல துறைமுக நகரமாகும்…இந்த நகருக்கு திருமந்திர நகர், முத்து நகர் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு.
இங்கு பல இன, மொழி மக்கள் வாழ்கின்றனர் இந்த நகரின் பிரதான தொழில் வர்த்தகம்… அதுவும் உப்பளங்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தேங்காய் எண்ணெய் தயாரிப்பு, கடல் சார் உணவு தயாரிப்பு, ஸ்பிக் உரத் தொழிற்சாலை, ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை, அல்காலி இரசாயன நிறுவனம் பிரசித்திபெற்றது.
இங்கு வழிபாட்டுத் தலங்களாக பிரசித்திபெற்ற தலங்கள் சங்கர ராமேஸ்வரர் கோயில், தூய பனிமயமாதா பேராலயம்…அப்படிப்பட்ட நகரில் நடுநிசி வேளையில் தார் சாலையில் கறுப்பு நிற ஜீப் முன்னே இரண்டு பின்னே இரண்டு என நான்கு நடுவில் போர்டோஃபினோ ப்ளூ கலர் ஜாகுவார் வண்டி துறைமுகத்தை நோக்கி பாய்ந்து போனது.
கடல் நடுவே இரவு நேர ராணியாக கம்பீரமான அந்த கடல் அரசனுக்கு ஏற்ற ராணியாக ராட்சத கப்பல் ஒன்று வீற்று இருந்தது…அதன் முகப்பில் ஜகதேவ் குரூப்ஸ் என்று தங்க நிறத்தில் சிவப்பு எழுத்துக்கள் மின்னியது…
துறைமுகத்தில் வண்டிகள் வந்து நின்றது கூடவே நடு கடலுக்கு போவதற்காக மோட்டார் படகு ஒன்று தயாராக நின்று இருந்தது.. ..ஜீப்பில் இருந்து வெள்ளை வேட்டி சட்டையில் ஆளுங்க கிட்ட தட்ட பதினைந்து பேர் இறங்கினார்கள்…அதில் ஜாகுவார் காரின் முன் பக்க கதவை திறந்து வெள்ளை வேட்டி சட்டையில் இருந்த ஒருவன் இறங்கி பின் பக்க கதவை திறந்து விட்டு.
அவன் “ அண்ணே! படகு தயாராக நிற்கிறது நீங்க அனுமதி கொடுத்தால் நம்ம கடலுக்கு போகலாம் “ என்று பவ்யமாக சொன்னான்…அவன் சொன்ன அடுத்த நிமிடம் காரில் இருந்து துள்ளி இறங்கினான் ஒருவன்.
அவன் கறுப்பு நிற வேட்டி சட்டையில் ஆறடி உயரம், மாநிறம் நாள் தோறும் நாங்கள் உடற்பயிற்சி கண்டவர்கள் என கூறும் கட்டுடல்…கடல் காற்று அவன் அலையாக அசைந்த கேசத்தை கொஞ்சி விளையாட வர அவன் அதை அனுமதிக்காமல் சட்டென அதை பின்னால் தள்ளி விட்டு… தன் வலது கையில் போட்டு இருந்த ஒரு கறுப்பு நிற ஹேர் பேண்ட்டை போட்டு கட்டினான்…
பரந்த நெற்றி ,அடர்ந்த புருவம், கூர்மையான விழிகள், கத்தி போல மூக்கு, நாங்கள் புகையை ருசி பார்ப்பவர்கள் என கூறும் சற்று கருத்த தடித்த உதடுகள்…அளவான தாடி, மீசை கழுத்தில், கையில் தங்க ருத்ராட்ச மாலைகள் ,இடது காதில் வைர கடுகண் என மொத்தில் இவன் ராவணா ! ராமனா! என்ற ரீதியில் நின்று இருந்தான்.
அவன் பெயர் வாழ்வில் போர்களில் தோல்வியை தழுவாத, அதை விட பிரம்மச்சாரிய விரதம் மேற்கொண்ட மாவீரனின் பெயர்…தேவவிரதன் மகாபாரத பிதாமகன் பீஷ்மரின் இன்னொரு பெயர் அவர் பல போர் களம் கண்டு வெற்றி கொண்டவர்…தோல்வி என்பது அவர் அகராதியில் இல்லை இவனும் கிட்ட தட்ட அவர் போல தான்.
அவன் நேராக கடல் அன்னையை ரசித்தவன் அவள் வீசிய தாலாட்டு காற்றை ஒரு தடவை உள்ளே இழுத்தவன்…தன் வலது கையை தன் அருகே இருந்தவனை நோக்கி நீட்டினான்…அவன் அதை புரிந்து கொண்டவன் ஒரு சிகரெட் ,லைட்டரை அவன் நீட்டிய கையில் வைத்தான்…
தேவவிரதன் சிகரெட்டை வாயில் வைத்து அதை பத்த வைத்தவன் தன் இடது காலால் ஏத்தி வேட்டியை எடுத்தவன்…இடது கையில் அதை பிடித்து கொண்டு வாயில் உள்ள சிகரெட்டை மூன்று இழுப்பு இழுத்து புகையை வெளியே விட்டவன்…அதை கீழே போட்டு காலால் நசுக்கி விட்டு கரையில் அவனுக்காக காத்து இருந்த படகில் ஏறினான்…
கூடவே அவன் இடது கையான மாரி அல்லகைகள் ஆறு பேர்கள் ஏறினார்கள்….மற்ற அனைவருமே கரையில் நின்றனர் படகு கப்பலை நோக்கி போனது அதன் அருகே படகு நின்றதும்… மாரி தன் கூட வந்த ஒருவனை பார்க்க அவன் விசிலடிக்க நூல் ஏணி போடபட்டது…
அதை பற்றி கொண்டு அனாயாசமாக தேவவிரதன் ஏறி கப்பலில் உள்ளே கால் வைத்தான்…அது போல அவனை தொடர்ந்து மற்றவர்களும் கப்பல் உள்ளே இறங்கினார்கள். அந்த கப்பலின் பிரமாண்டம் அதன் உரிமையாளர் கோடீஸ்வரன் என சொன்னது..
அது சாதாரண மீன் பிடி படகு, கப்பல் அல்ல பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றலா போகும் பயணிகள் கப்பல்…இன்று காலை தான் தன் சுற்றலா பயணத்தை முடித்து வந்தது அதற்கு வழமையாக பராமரிப்பு பணிகளுக்காக இங்கே நங்கூரம் போட்டு நின்றது…
தேவவிரதன் “ ஏலே! மாரி எங்கே டா? அவன்” என கேட்டான்.
மாரி “ கீழே வைத்து இருக்கிறோம் அண்ணே! கூடவே நம்ம ரங்கா நிற்கிறான்” என்றான் .ரங்கா தேவவிரதனின் வலது கை அவர்கள் படி வழியாக கப்பலின் அடி பாகத்திற்க்கு போனார்கள்…அது எந்திரங்கள் இருக்கும் இடம் பாராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தது தேவவிரதனை கண்டதும்… வணக்கம் போட்டனர் அவன் சின்ன தலை அசைவை கொடுத்தவன் அங்கே இருந்த ஒரு அறை கதவை திறந்து உள்ளே போனான்.
அங்கே இரண்டு கைகள் ஒன்றாக சேர்த்து சங்கிலியால் கட்டி தொங்க விட்டு ஒருவனை தேவவிரதன் ஆளுங்க பதம் பார்த்து இருந்தனர்…தலை தொங்கி மயக்கத்தில் இருந்தான் அவன் ரங்கா கூடவே நான்கு ஐந்து பேர் அவன் காவலுக்கு நின்றனர்…தேவவிரதனை கண்டதும் .
ரங்கா “ வணக்கம் அண்ணே! நீங்க சொன்னது போல இவனை நல்லா கவனித்து விட்டோம்…ஆனால் பயபுள்ள வாயை திறக்க மாட்டேன் என்று இருக்கிறான் “ என்றான்.
தேவவிரதன் “ வாய் திறக்காதவன் நமக்கு எதற்க்கு டா? கடலில் கட்டி தூக்கி வீசி விடுங்க நம்ம புள்ளைங்க பசிக்கு தோதாதக இருக்கும் “ என்றான்.
ரங்கா “ அண்ணே! எதற்க்கு கடைசி தடவையாக ஒரு முயற்ச்சி பண்ணலாம் அண்ணே! நீங்க வந்து இருப்பதை பார்த்தால் உண்மையை சொல்லுவான் “ என்றான்.
தேவவிரதன் “ சரி உன் ஆசையை எதற்க்கு கெடுப்பானே! முதலில் அவனுக்கு தண்ணீரை அடித்து எழுப்பி விடு” என்றான். ரங்கா அங்கே இருந்த ஒருவனிடம் கட்டி தொங்க விட்டவனை எழுப்ப சொன்னான்…அவன் போய் ஐஸ்கட்டி போட்ட பாக்கெட் தண்ணீரை எடுத்து வந்து அவன் தலையில் ஊற்றினான்.
தலையில் ஐஸ் தண்ணீர் பட்டதும் மயக்கத்தில் இருந்தவன் கண்களை கஷ்டபட்டு திறந்தான்…அவன் அரை கண்ணாக திறந்ததும் கண்டது வாயில் சிகரெட்டை வைத்து புகையை ஆழ்ந்து உள்ளே இழுத்து கொண்டு இருக்கும் தேவவிரதனை தான்…அவன் முகம் சட்டென பயத்தால் மாறியது அதை கண்ட.
மாரி “ ஏலே! சுப்பு அண்ணை கண்டதும் அந்த பயம் இருக்கு இல்ல…பிறகு உண்மையை சொல்லி உன் உயிரை காப்பாற்ற வேண்டியது தானே டா! வீணாக அண்ணை இங்கே வரவழைத்து கோபத்தை ஏற்றி கொண்டு இருக்க சொல்லு உன்னை இதை செய்ய சொன்னது யாரு? ஏலே! என கேட்டான்.
அப்பவும் அவன் தேவவிரதன் பய பார்வை பார்த்தானே தவிர வாய் திறக்கவில்லை சட்டென எழுந்த தேவவிரதன்… அவன் அருகில் ஒரு நொடியில் போனவன் ..தன் முதுக்கு பின்னால் வைத்து இருந்த கத்தியை எடுத்தவன்… அவன் பின் தலையை பற்றி தன் முகத்துக்கு நேராக கொண்டு வந்தவன்..
தேவவிரதன் “ என்னை எதிர்ப்பவர்கள் கூட நான் ஒரளவுக்கு மன்னிப்பு வழங்குவேன் ஆனால் அவங்க நிழல் தொட நினைத்தால்…அவ்வளவு தான் அடுத்த நொடி அவங்களை மரணம் தேடி வந்து விடும் நான் மரணத்தின் காவலன் இனி நீ ஏதும் சொல்ல தேவையில்லை…உன் மரணத்தை பார்த்து இனி ஒருவன் அவங்கள் எதிர்க்க தயங்க வேணும்…
இந்த தேவவிரதனை தாண்டி தான் அவங்களை தொட வேணும் அது இந்த ஜென்மத்தில் முடியாத காரியம்… உன்னை அனுப்பியவன் ஒரு முட்டாள் என்றால் அவன் பேச்சை கேட்டு வந்த நீ அதை விட முட்டாள் … உன்னை அனுப்பியவனை எனக்கு யாரென தெரியாது என்றா நினைக்கிற இந்த தேவவிரதன் அறியாமல் காற்று கூட வீச முடியாது டா! இருந்தும் சாவை தைரியமாக சந்திக்க நீ வந்தால் உனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன் சொல்லு உன்னை இதை செய்ய சொன்னது யாரு? என கேட்டான்.
சுப்பு பலவீனமான குரலில் “ நீ எப்படி கேட்டாலும் என் பதில் ஒன்று தான் தேவா அவங்க உயிரோடு இருக்க கூடாது..இருந்தால் என் அண்ணன் ஜெயிக்க முடியாது உனக்கு எப்படி அவங்க முக்கியமோ! அது போல எனக்கு என் அண்ணன் முக்கியம் அவங்க அப்படி ஒன்று நல்லவங்க இல்லை தானே! அது தான் மரணத்தை நான் அவங்களுக்கு பரி.. என சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் மூச்சை தேவவிரதன் நிறுத்தி இருந்தான்.
அவன் வயிற்றில் கத்தியை இறங்கி இருந்தவன்.. முகத்தில் இரத்த துளிகள் தெறித்து இருந்தது…அவன் கை முழுவதுமாக இரத்தம் .
தேவவிரதன் “ எனக்கு என்ன என்றால் கூட நான் மன்னிப்பு வழங்குவேன் ஆனால் அவங்க நிழலை கூட..தொட நினைப்பவங்களை நான் உயிரோடு விட மாட்டேன் ஏலே! மாரி இவன் உடலை அவனுக்கு பார்ச்சல் பண்ணி விடுங்க இவன் சாவை பார்த்து இனி ஒருவன் அவங்களை எதிர்க்க பயப்பட வேணும்.
கமிஷனருக்கு வழமையானதை அனுப்பி விடு என சொன்னவன்.. கத்தியை தன் முதுகுக்கு பின்னால் வைத்தான் பிறகு அவன் நேராக சென்ற இடம் கப்பலின் மேற்புறம் அங்கே நின்றவன். தன் வேட்டி, சட்டையை களைந்தவன் உள்ளே போட்டு இருந்த ஷார்ட்ஸ் வெற்றி மேனியோடு கடலில் குதித்தான்.
கிட்ட தட்ட அரை மணிநேரம் உள் நீச்சல் அடித்தவன் மேலே வரும் போது சூரிய தன் கரங்களால் பூமியை தழுவ ஆரம்பித்து இருந்தான்…மேலே வந்தவன் சூரியன் உதமாகும் திசையில் ஒற்றை காலில் நின்றவன்.. கரங்களை மேலே உயர்த்தி கண்களை மூடியவாறே சூரிய நமஸ்காரம் செய்தான்.. அவன் உடலில் சூரிய கதிர்கள் தழுவியது அவன் உடல் சூரிய வெளிச்சத்தில் வைரமாக ஜொலித்து இவனை நெருங்குவது ஆபத்து என காட்டியது.
அப்போது மாரி வந்தவன் அவன் சூரிய நமஸ்காரம் செய்யும் போது தொந்தரவு செய்தால்..அதன் விளைவு பயங்கரமாக இருக்கும் என தெரியும் அதனால் தயங்கி நின்றான்..தேவவிரதன் கண்களை திறக்காது.
தேவவிரதன் “ மாரி வந்த விஷயத்தை சொல்லு” என்றான்.
மாரி “;அண்ணே! வீட்டில் இருந்து அழைப்பு வந்து இருக்கு உங்களை உடனடியாக வர சொல்லி “என்றான்..தேவவிரதன் கண்கள் திறந்தவன் சட்டென தன் சூரிய நமஸ்காரம் கை விட்டவன்.
தேவவிரதன் “ நீ போய் வண்டியை தயார் செய் கிளம்ப” என சொல்லி விட்டு தன் வேட்டி சட்டையை போட்டவன் கிளம்பினான்..
தஞ்சம் கொள்ள வருவான்..