எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கவிதைப் பெட்டகம் 2

Fa.Shafana

Moderator
நான்
நடக்கும் வழியில்
மலரும்
மழையும்
அப்பிடியே இருக்க
நான்
நனையாமல்
குடை பிடித்த
நீ மட்டும்..
கண்ணீர் மழையில்
என்னை
மூழ்கடித்துச்
சென்றாய்..
 

Fa.Shafana

Moderator
மழையாக
நீ
நிலமாக
நான்
என்னில் விழுந்துவிடு..
உன்
காதல் கொண்டு
நான்
துளிர்த்துக் கொள்கிறேன்..
 

Balatharsha

Moderator
குடை பிடித்தும்
நனைத்து விடும்
சாரலாக..
உன்னைப் பிரிந்தும்
என் காதல்..
Ohhh இது அதுல்ல. மழை நின்ற பின்னும் தூறல் பாேல உனை மறந்த பின்னும் காதல்.
 

Balatharsha

Moderator
நான்
நடக்கும் வழியில்
மலரும்
மழையும்
அப்பிடியே இருக்க
நான்
நனையாமல்
குடை பிடித்த
நீ மட்டும்..
கண்ணீர் மழையில்
என்னை
மூழ்கடித்துச்
சென்றாய்..
வைச்சானா ஆப்பு......
இதுக்கு தான் முன்னாடியே நனைய பழகிக்கணும். இல்லன்னா பீவர் வந்திடும்
 

Balatharsha

Moderator
மழையாக
நீ
நிலமாக
நான்
என்னில் விழுந்துவிடு..
உன்
காதல் கொண்டு
நான்
துளிர்த்துக் கொள்கிறேன்..
அரலிச்செடியா தானே!
 

Balatharsha

Moderator
கோடைமழை
வாசம்
உணர்கிறேன்..
தனிமைப் பொழுதுகளில்
உன் நினைவுகள்
துணை வரும்போது..
பாத்து உன் ஆத்துக்கு தெரிஞ்சிட பாேகுது ??
 

Balatharsha

Moderator
மழைக்காதலி
நான்..
மழை வெள்ளமாக
காதல் நெய்கிறேன்
நீ தந்த
நினைவுவெனும்
திரி வைத்து..
ஓ..... அதில ட்ரஸ் தைச்சுோடலாமா?
 
Top