எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கவிதைப் பெட்டகம் 4

Fa.Shafana

Moderator
தொடர்பற்றுப்
போனது
நீயே
நினைவுகள்
இன்னும்
என்னுள்..
 

Fa.Shafana

Moderator
பயணிகள்
முடிந்த
பின்பும்
வழித்தடங்கள்
மாறாது..
நீ
பிரிந்து
சென்ற பின்பும்
நினைவுகள்
நெஞ்சமெல்லாம்
மாறாமலே..
 

Fa.Shafana

Moderator
உன்னைக்
கட்டியணைத்து
என்
மொத்தக் காதலையும்
உன்னிடம்
இடம் மாற்றினேன்
அன்று..
உன் நினைவுகளை
இறுக அணைத்து
என்
மொத்த வாழ்வையும்
கட‌ந்து
கொண்டிருக்கிறேன்
இன்று..
 

Fa.Shafana

Moderator
அவன்
இன்மை
உணராமலிருக்க
ஏதேதோ
நான் செய்ய
அவையனைத்தும்
மொத்தமாக
அவனையே
ஞாபகப்படுத்திச்
சென்றது தான்
காதலின் உச்சம்..
 
நினைவுகளில் வாழும்
நிழல் பெண்ணே
நிஜத்தில் வாடி _எதுவும்
நினையாமல் வாடி
நனைவோம்
நினைவு மழையில்......
 

Fa.Shafana

Moderator
நினைவுகளில் வாழும்
நிழல் பெண்ணே
நிஜத்தில் வாடி _எதுவும்
நினையாமல் வாடி
நனைவோம்
நினைவு மழையில்......
Hey.. Super super .. Thank you dear
 
Top