எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நாம் கொண்ட சொந்தம் நெடுங்கால பந்தம்_கதை திரி.

Status
Not open for further replies.

Anitha G

Moderator
நாம் கொண்ட சொந்தம்
நெடுங்கால பந்தம்
அம்மா சுஜாதா கொஞ்சம் சீக்கிரம் வாயேன் என நக்கலாய் அகல்யா கூப்பிட.
இருடி உள்ள எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா.
இன்னைக்கு தான் அம்மா முதல் முதலில் அந்த கம்பெனிக்கு வேலைக்கு போறேன். முதல் நாளே லேட்டா போனா எப்படி. ரெண்டு பஸ் மாறிப் போகணும்மா.
இப்ப போனால்தான் சரியான நேரத்திற்கு போய் சேர முடியாது. முதல் நாளே லேட்டா போனா என்ன பத்தி என்ன நினைப்பாங்க.
சீக்கிரம் மா. டிபன் ரெடி பண்ணிட்டியா.
எனக்கும் எல்லாம் புரியுது அகல்யா நான் என்ன பண்றது. காலையில சமைக்கும்போது சிலிண்டர் தீர்ந்து போச்சு.
அப்புறம் இங்க இருக்கிற எல்லா வீடுகளிலும் கேட்டேன். யார்கிட்டயும் இல்ல.
அதுக்கு அப்புறம் அடுத்த தெருவுல இருக்குற மாமி வீட்டில் தான் சிலிண்டர் இருந்துசு.
அவங்ககிட்ட கேட்டு வாங்கி மறுபடியும் சமைக்கிறதுக்கு லேட்டாயிடுச்சு நான் என்ன பண்ணட்டும். நீயே சொல்லு.
கவலைப்படாதம்மா அடுத்த மாசம் கண்டிப்பாக அடிஸ்னல் சிலிண்டருக்கு அப்ளே பண்ணிடலாம். அதுக்கப்புறம் உனக்கு இந்த பிரச்சனை இருக்காது பாரு.
எங்க பண்ணலாம் என நினைச்சா மாசத்துக்கு ஒரு பிரச்சனை வருது.
இல்லம்மா இங்க எனக்கு பழைய இடத்துக்கு சம்பளத்தை விட நாலாயிரம் ரூபாய் அதிகம். அதனால் நம்ம வீட்டு பிரச்சனைகள் கொஞ்சம் குறையும்.
நம்ம பிரச்சனை என்னைக்கும் குறையாது அகல்யா.
சுஜாதா பேசியபடி டிபன் பாக்சை பேகில் எடுத்து வைத்தாள்.
சரி பார்த்து போயிட்டு வா என்ன. புது இடம் அதனால உன்னோட வாயை கொஞ்சம் கம்மி பண்ணிக்க. எல்லார்கிட்டயும் சண்டை போடாத.
மூக்குக்கு மேல கோபம் வராம பாத்துக்க.
முக்கியமாக யாரை அடிச்சிடாத.
அம்மா எனக்கு மட்டும் சண்டை போடணும்னு ஆசையா என்ன? நம்ம முன்னாடி தப்பு நடந்தா எப்படி பேசாம போகறது.
தப்புன்னா கேட்கணும், நமக்கென்னன்னு நழுவக் கூடாது.
போதும்மா, காலையில உன்கிட்ட பேசி சமாளிக்க முடியாது. நீ கிளம்பு எனக்கு உள்ள நிறைய வேலை இருக்கு.
எனக்கும் டைம் ஆச்சு நானும் கிளம்பறேன் என சொல்லி விட்டு அகல்யா வேகமாக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கு பஸ் வருவதற்கு முன் அகல்யா வைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அகல்யா இருபத்தியாறு வயது பெண். அம்மா சுஜாதா இல்லத்தரசி தந்தை மகாதேவன் ஒரு பிரைவேட் கம்பெனி ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்.
பெரும்பாலும் இரவு நேரம் தான் வேலை. மாதம் ஏழாயிரம் சம்பளம். தம்பி தினேஷ் இன்ஜினியரிங்க் படித்து முடித்துவிட்டு வேலைக்கு எதுவும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி கொண்டிருக்கின்றான்.
நடுத்தர குடும்பம். வாடகை வீடு வீட்டில் குடியிருக்கிறார்கள். அந்த வீட்டில் அதிக சம்பளம் வாங்குவது என்றால் அது அகல்யா நான்.
இதற்கு முன்னால் ஒரு அகல்யா ஒரு கார்மெண்ட்சில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
தற்செயலாக ஒருநாள் அவளது கல்லூரி தோழி சுவாதியை பார்க்க நேர்ந்தது.
சுவாதி ஒரு பெரிய ஹோட்டல் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை செய்கிறாள்.
பார்க்க ஆளே மாறியிருந்தாள். சிறிய அளவு முடி, லிப்ஸ்ட்ரிக், பேண்ட் சர்ட் என பார்க்க அவ்வளவு அழகாக இருந்தாள்.
அவள் சொன்ன விஷயம் தற்போது அவளுக்கு ஞாபகம் வந்தது.
ஸ்வாதி ஆளே மாறிட்டடி.
பின்ன என்னோட வேலை அப்படி?
அப்படி என்ன வேலை பார்லரா?
கொழுப்பா உனக்கு, ஸ்டார் ஹோட்டல்ல ரிசப்சனிஸ்ட். எப்பவும் மேக்கப்போட தான் இருக்கணும்.
ரொம்ப அழகா இருக்க ஸ்வாதி.
நீ இப்ப என்ன பண்ற அகல்யா.
பக்கத்துல கார்மெண்ட்ஸ்ல அட்மின்ல இருக்கேன்.
அப்படியா அங்க வேலை, சம்பளம் எல்லாம் பரவாயில்லையா.
இல்ல ஸ்வாதி பத்தாதுதான். ஆனா என்ன பண்றது. இப்ப வேலை கிடைக்கறதே கஷ்டமாவில்ல இருக்கு.
எங்க ஹோட்டல்ல வேலை ஒண்ணு காலியா இருக்கு, இண்டர்வியூ வரியா.
சம்பளம் என்ன?
பதினாறுக்கு மேல வரும்.
அப்படியா சரி அட்ரஸ் கொடு. ஆமா என்ன வேலை.
இதோ என்ன மாதிரிதான். ரிசப்சனிஸ்ட்.
ஏய் என்ன சொல்ற, பார்க்க நல்லா இருக்கணும், என்னெல்லாம் ஓகே பண்ணுவாங்களா.
உனக்கு என்ன குறைச்சல்.
கலர் இல்லையே.
அதெல்லாம் பிரச்சனையே இல்லை. வா பார்த்துக்கலாம்.
அப்புறம் பேண்ட் சட்டையெல்லாம் போட்டு எனக்கு பழக்கமில்ல ஸ்வாதி.
நான் மட்டுமென்ன, பிறந்ததில் இருந்து போட்டுக்கிட்ட இருக்கேன். வந்தா எல்லாம் பழகிடும்.
ஒரு வழியாக அகல்யாவை சம்மதிக்க வைத்தாள்.
அகல்யா அவள் தூண்டுதலின் பேரிலேயே அங்கு அந்த ஹோட்டலுக்கு இன்டர்வியூ சென்றாள்.
இன்டர்வியூக்கு இன்னொரு காரணம் சம்பளம் மாதம் பதினாறு ஆயிரம். பழைய இடத்தில் பிடித்தம் போக பதின்மூன்று ஆயிரம் தான் கிடைக்கும்.
ஆகவே இங்கு கிட்டத்தட்ட மூணாயிரம் ரூபாய் அதிகமாக உள்ளது என நினைத்துதான் இந்த இன்டர்வியூக்கு என்றாள்.
போன இடத்தில் அகல்யாவின் தோற்றம் இந்த வேலைக்கு ஒத்து வரவில்லை. காரணம் அகல்யா நடுத்தர உயரம் சுருளான நீண்ட முடி மாநிறம் குடும்பப்பாங்கான தோற்றம் கொண்டவள்.
ரிசப்சனிஸ்ட் வேலைக்கு பேண்ட் சட்டை தான் போட வேண்டும். அதுவும் அவளுக்கு பெரிய உறுத்தலாக இருந்தது.
ஆனால் நேர்முகத் தேர்வு செய்தவருக்கு அகல்யாவின் ஆளுமை பிடித்துப் போகவே, அட்மின் துறையில் ஒரு பணி காலியிடம் இருப்பதாகவும் அதில் சேர்ந்து கொள்ளலாமா என கேட்டார்கள்.
தற்போது தனக்கு வேலை முக்கியம், அதுவும் அதிக சம்பளத்தில் என நினைத்தவள் சரி என தலை அசைத்தாள்.
ஆனால் அதற்குப் பின்தான் தெரிந்தது. இன்ப அதிர்ச்சியாக இருந்தது காரணம் அட்மின் வேலைக்கு பதினெட்டாயிரம் ரூபாய் சம்பளம்.
இந்த பதினெட்டு ஆயிரம் ரூபாய் சம்பளம் வீட்டில் பல பிரச்சினையை சமாளிக்கும். இனி மாதம் தோறும் கணக்கு பார்க்காமல் மளிகை சாமான்கள் வாங்கலாம்.
அம்மாவிற்கு விடாமல் மருந்துகளும் வாங்கலாம். நிறைய ஆடைகள் பழசாகிவிட்டது. அதையும் வாங்கிக்கொள்ளலாம் என யோசித்தவள் உடனே சரி என தலையசைத்தாள்.
சுவாதிக்கு விஷயத்தை சொல்ல அவளுக்கு கொள்ளை சந்தோஷம். தனது கல்லூரி தோழி தன்னுடன் இல்லா விட்டாலும்,
ஒரே ஹோட்டலில் தானே பணி செய்யப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க ஆரம்பித்தாள்.
ஆனால் அகல்யாவிற்கு சந்தோஷம் சம்பளம் அதிகமாக வந்தது தான். ஏனென்றால் குடும்ப பாரமும் அவள் மேல் தான் இருந்தது.
தினேஷ் படிப்பை முடித்து வேலைக்குச் செல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான்.
படிக்கும்போதே சில கெட்ட பழக்கவழக்கங்கள் வர ஆரம்பித்தது.
அடிக்கடி சிகரெட் பிடிப்பதை அகல்யாவே பார்த்திருக்கிறாள். சிகரெட் மட்டுமல்ல தண்ணி ஏன் கஞ்சா அடிப்பதாகவும் சிலர் கூறியிருக்கிறார்கள்.
எத்தனையோ முறை அவனிடம் சொல்லியும் திட்டியும் அடித்தும் பார்த்து விட்டார்கள் ஆனால் எதையும் கேட்கவில்லை. திருந்திய பாடில்லை.
இதற்கும் அகல்யா விட இரண்டு வயது தான் சிறியவன். அவள் குடும்ப சுமை எதுவும் தெரியாமல் ஒரு ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
அம்மா இதய அடைப்பு நோயாளி. மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் மருந்து வாங்க வேண்டும்.
இல்லாவிட்டால் நெஞ்சு வலிக்க ஆரம்பித்துவிடும். அப்படி வலி வந்தாலும் யாரிடமும் சொல்ல மாட்டாள்.
அதனால் அகல்யா தான் செக்கப் கூட்டி செல்வது, மருந்து வாங்கிக் கொடுப்பது என அனைத்தையும் கவனித்துக் கொண்டாள்.
வீட்டு வாடகை ஆறாயிரம் ரூபாய்.
வீட்டு செலவு என அனைத்தும் அகல்யா மேல்தான்.
அப்பாவின் சம்பளம் வீட்டு வாடகைக்கும் கரண்ட் பில் கட்டவும் தான் சரியாக இருக்கும்.
மற்ற செலவுகள் அனைத்தும் அகல்யாவின் சம்பளத்தில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் சுஜாதா மிகவும் கெட்டிக்காரி.
அகல்யா கொடுக்கும் சம்பளத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி அவளுக்காக ஒரு சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து அதில் அவளுக்கு தெரியாமல் பணம் போட்டுக் கொண்டு வந்தாள்.
இரண்டு பஸ் மாறி ஹோட்டலை அடைந்த போது மணி 9.30 ஆகி இருந்தது.
நல்ல வேளை முதல் நாள் தாமதமாக வரவில்லை.
அந்த பெரிய ஹோட்டலில் தான் எங்கு செல்ல வேண்டுமென அகல்யாவிற்கு தெரியவில்லை. சுவாதியை கேட்டு விடலாம் என ரிஷப்சன் சென்றாள்.
சுவாதி யாருடனோ பேசிக் கொண்டிருக்க வேறு வழியில்லாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.
வழி தெரியாமல் சில நிமிடங்கள் சுற்றிக் கொண்டிருந்தாள். ஹோட்டல் மிகவும் பெரியது.
தனது அறை எங்கே எனக் கண்டுபிடித்து உட்கார்ந்தாள். என்னென்ன வேலைகள் அனைத்தையும் கேட்டு எழுத ஆரம்பித்தாள்.
கார்மென்ட்சில் ஹெச்ஆர் பிரிவில் வேலை செய்ததால் இந்த‌ வேலை‌சுலபமாகத் தான் இருந்தது.
அங்கு செய்த வேலைதான் ஆனால் அதை அட்மின் துறையில் வேலை செய்கிறாள் அவ்வளவுதான். வித்தியாசம் ஒன்றும்‌‌ இல்லை முறைகள் அனைத்தும் ஒன்றாகத்தான் இருந்தது.
தனது வேலைகள் என்னென்ன என கேட்டு அறிந்து கொள்ளவே அன்றைய நாள் போதுமானதாக இருந்தது. அடுத்த வேலையை ஆரம்பிக்க முடியவில்லை.
எனினும் உணவு இடை வேளையில் சாப்பாட்டு வேளையில் சுவாதியை கண்டு பேசி வந்தாள். அதிக நேரம் பேச முடியவில்லை.
மறுபடியும் வந்து இடத்தில் உட்கார்ந்து அவள் வேலையை தொடர ஆரம்பித்தாள்.
அங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்குமான ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் தேவையான பிற பொருட்கள் வாங்கிக் கொடுப்பது,
உடைகள் சம்பந்தமான பிரச்சனைகள் சம்பளம் சம்பந்தமான பிரச்சனைகள் என அனைத்தும் இவள் கீழ்தான் வந்தது.
முதல் நாள் என்பதால் சரியாக ஆறு மணிக்கு கிளம்ப‌ முடியவில்லை. ஏழே மணி வரை வேலை செய்து விட்டு கிளம்பினாள்.
அங்கு யாரும் யாரையும் கேள்வி கேட்கவில்லை.
அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏழு மணிக்கு கிளம்பியவள் இரண்டு பஸ்கள் மாறி வீட்டை அடைந்தபோது மணி எட்டுக்கு மேல் ஆகியிருந்தது.
சுஜாதா வீட்டுக்கு வெளியே நின்று அவளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
மணி என்ன ஆகுது தெரியுமா ஏன் இவ்வளவு லேட்?
இல்லம்மா முதல் நாள் எப்படி கரெக்டா டைமுக்கு கிளம்ப முடியும். அதான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தேன்.
ஒரு நாள் வேலை செஞ்சா அப்ப எல்லா நாளும் உன்னை செய்ய சொல்லுவாங்க. நேரம் பாத்தியா இப்பவே எட்டுக்கு மேல ஆக போகுது.
இல்லம்மா அங்க யாரும் அப்படி இல்லம்மா. அவங்கவங்க அவங்க வேலையை மட்டும் தான் பார்க்கிறாங்க.
டெய்லி இந்த நேரத்துக்கு வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தா உன் உடம்பு என்னத்துக்கு ஆகுறது
அப்படி எல்லாம் எதுவும் இல்லம்மா. அந்த வேலை ரொம்ப சாதாரணம் தான் பழைய இடத்தில பார்த்தா அதே வேலை தான்.
வேலை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.
அதற்கு இவ்வளவு நேரமா?
இல்லம்மா நான் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். பஸ் கிடைக்கல ரொம்ப நேரம் பஸ் ஸ்டாண்டில் தான் நின்னுட்டு இருந்தேன்.
அப்புறம் மறுபடியும் காந்திபுரம் வந்து பஸ் கிடைக்காம ரொம்ப நேரம் உக்காந்து இருந்தேன். பஸ்சுக்காக வெயிட் பண்ணேன் அதான் இவ்வளவு நேரம்.
வண்டில போனா அரை மணி நேரம்தான் என சொல்லியபடியே உள்ளே வர
சுஜாதாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
ஏன் அகல்யா அடுத்த மாசம் வேணா லோனுக்கு ஒரு ஸ்கூட்டி எடுத்துக்கோ.
அம்மா என்னம்மா சொல்ற. அதுக்கு முன் பணமே இருபது இல்ல முப்பதாயிரம் ஆகும். அதுக்கப்புறம் தான் லோன் தருவாங்க. நீ என்னமோ ஈசியா சொல்ற.
அவ்வலவு பணத்துக்கு எங்க போறது.
அதான் என்கிட்ட இருக்கில்ல அதை தரேன்.
உங்கிட்ட பணம் இருக்க ஏதும்மா?
அது நீ வீட்டு செலவுக்கு கொடுக்கற காசை போஸ்ட் ஆபிசில் அக்கௌண்ட் ஆரம்பிச்சி போட்டு வச்சிருக்கேன். அதை எடுத்துக் கொள்ளலாம்.
பெரிய ஆள் தான் நீ.
ஆனால், இல்லமா அதெல்லாம் இப்ப எடுக்க வேண்டாம். ஹாஸ்பிடல் எமர்ஜன்ஸி ஏதாவது வந்தால் இருக்கட்டும் யாருக்கும் தெரிய வேண்டாம்.
என்ன ஹாஸ்பிடல் எமர்ஜென்சி வரப்போகுது.
புரியாம பேசாதம்மா உனக்கு வேற இதய அடைப்பு இருக்கு. என்னைக்காவது நெஞ்சு ரொம்ப வலிக்குதுன்னா காசுக்கு எங்க போறது. அந்த நிலைமையில யார்கிட்ட போய் காசு கேட்டு நிக்கறது.
கேட்டாலும் யார் தருவாங்க. யார் இருக்கா நமக்கு. நம்மகிட்ட சொந்தமாக ஏதாவது இருக்கா. நகை வீடு இப்படி எதுவுமே இல்லை
அடகுவைக்க நம்மகிட்ட எதுவுமே கிடையாது. அதனால அது மட்டுமாவது இருக்கட்டும். என்னைக்காவது உதவும்.
எனக்காக அதை வச்சிட்டு என்ன பண்ண, தினமும் போயிட்டு வர வேண்டாமா. இவ்வளவு நேரமா வந்தா என்ன ஆகறது.
இல்லம்மா இந்த மாசத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காசை எடுத்து வைக்கிறேன்.
ஒரு ஆறு மாசம் சேத்து வச்சா வண்டிக்கு எடுத்து விடலாம். அதுக்கப்புறம் பார்க்கலாம் அது வரைக்கும் பஸ்ல போறேன்.
அகல்யாவைப் பார்க்க சுஜாதாவுக்கு பாவமாக இருந்தது. இவள் வயது பெண்கள்‌ எல்லாம் தனது குழந்தை கணவன் என் சந்தோஷமாக இருப்பார்கள்.
ஆனால் என் மகள் நிலைமை மட்டும் இப்படி உள்ளதே. வீட்டு செலவுக்காக அனைத்தையும் கொடுத்து விடுகிறாள்.
தனக்காக எதையும் வைத்துக் கொள்வதில்லை. தனக்காக வாங்கிக் கொள்ளாமல் வீட்டைச் பற்றி தான் யோசிக்கிறாள்.
காபி போட்டுக் குடும்மா.
மணி இப்பவே 8.30 ஆச்சு. இப்ப காபி குடிச்சா சாப்பாடு சாப்பிட மாட்ட. அதனால் போட்டுத் தரமாட்டேன்.
அம்மா ப்ளீஸ்.
முடியாது சாப்பாடு ரெடியா இருக்கு வந்து சாப்பிடு.
சுஜாதா இதெல்லாம் நியாயமா.
போடி.
சாப்பிடும் போது தான் அகல்யா சுற்றி முற்றி பார்த்து விட்டு கேட்டாள்.
அம்மா தினேஷ் எங்க காணோம். வெளிய எங்கயாவது போயிருக்கானா.
அவன் இன்னும் வீட்டுக்கே வரலை. காலையில உனக்கு முன்னாடி போனவன் இன்னும் வரலை.
என்னம்மா சொல்ற. மணி ஒன்பதாகப் போகுது. இன்னுமா வரலை
 
Status
Not open for further replies.
Top