அதீனா ஜார்ஜ்
Moderator
அத்தியாயம் - 6
தம்பியை அழைத்துக் கொண்டு வீடு வந்த சேர்ந்த நரேன் உடை மாற்றும் போது தான் கவனித்தான் அவனின் அடையாள அட்டை இல்லாததை.
எப்போதும் வீட்டிற்கு வந்ததும் ஐ.டி. கார்டை பேக்கில் போட்டு வைப்பான். இல்லை என்றால், ட்ரெசிங் டேபில் மீது எடுத்து வைப்பான். இன்றும் அப்படி எடுத்து வைக்கத் தான் அதைத் தேட, அதுவோ கையில் சிக்காமல் போனது.
"ஓ மை காட்... எங்க மிஸ் பண்ணேன்னு தெரியலயே" என்று புலம்பியவன் தன் பேகில் தேட, அதிலும் இல்லை.
ஒரு டி- ஷர்ட்டை மட்டும் அணிந்து கொண்டு வெளியே வந்தான். வாசல் வரை சென்றவன் வீட்டில் எங்கும் விழுந்து விட்டதோ என்று வீட்டை அலச, எங்கும் இல்லை.
அவனின் தேடுதலை கண்ட குமுதா "டேய் நரே என்னடா தேடுற?" என்று கேட்க, "அம்மா. என்னோட ஐ.டி கார்டை எங்கேயோ மிஸ் பண்ணிட்டேன் ம்மா" என்றான் சுற்றிலும் தேடிக் கொண்டே.
குமுதாவும் சுற்றி பார்த்துக் கொண்டே "எங்கடா தேடுற. போய் உன் ஆஃபிஸ் பேக்ல பாரு" என்க, "பாத்துட்டேன்மா. காணும். ஆஃபிஸ்ல இருந்து கிளம்பும் போது பேன்ட் பாக்கெட்ல தான் வச்சு இருந்தேன். இப்ப காணோம்" என்க,
நவீனும் உடை மாற்றி வந்தவன் எங்கே எனத் தேடிக் கொண்டே, "எதாவது எடுக்கும் போது கீழ விழுந்திருக்கும் அண்ணா. கிளம்பும் போது பர்ஸ், மொபைல்னு வேற எதுவும் எடுத்தியா?" என்று சரியாய் கேட்க, "கிளம்பும் போதெல்லாம் எதுவும் எடுக்க..." என்றவன் சட்டென்று நியாபகம் வந்தவனாக
"ஐயோ.. ஆமா நவீன். ட்ராஃபிக்ல நிக்கும் போது ஒரு டெலிவரி கால் வந்தது. நம்ம அட்ரஸ் கேட்டு. அப்போ தான் விழுந்து இருக்கணும்" என்றான் ஊகித்தவனாக.
"இனி எப்படி ப்பா அங்க போய் பாக்குறது. இந்நேரம் காரோ லாரியோ ஏறி இருக்கும்" என்று குமுதா கிண்டலாக சொல்ல,
"ம்மா.. ஐ.டி. இல்லைன்னா ஆஃபிஸ் செக்கியூரிட்டி ஸ்கேனிங் மிஷின்ல ஃபிங்கர் பிரிண்ட் கூட அக்சப்ட் பண்ணாது. புதுசு தான் அப்ளை பண்ணனும்!" என்றான் சோஃபாவில் சாய்ந்து கொண்டு.
"சரி விடு. நாளைக்கு போய் புதுசு அப்ளை பண்ணு. ஏன் டென்ஷன் ஆகுற. சும்மாவே இன்னைக்கு உன் முகம் சரி இல்ல. இதுல மதிய சாப்பாடு வேற ஒழுங்கா சாப்பிடாம பாதி சாப்பாட்ட அப்படியே கொண்டு வந்திருக்க. முதல்ல காஃபியை குடி"
அன்னையின் பேச்சில் சட்டென்று சுதாரித்து அமர்ந்தான் நரேந்திரன். யுவந்திகாவின் பேச்சினால் சற்று டிஸ்டர்ப் ஆகி இருந்தவன் மதிய உணவினை சரியாக உண்டு இருக்கவில்லை.
இப்போது தாய் அதை கவனித்து சொல்லி விட கவனமாய் நடந்தது எதுவும் அவரிடம் சொல்லாமல் தவிர்த்தவன் "இன்னைக்கு கொஞ்சம் வேலை டென்ஷன் ம்மா. அதான்" என்றவன் "நா நாளைக்கு புது கார்டுக்கு அப்ளை பண்ணிடுறேன்" என்று முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டான்.
பின் அன்று நவீனின் காலேஜில் நடந்த நிகழ்வுகளை அவன் பகிர்ந்து கொள்ள, அந்நேரம் மயில்வாகனமும் இல்லம் வந்து விட பேச்சும் சிரிப்புமாக கழிந்தது அவர்களின் மாலை நேரம்.
"நரே.. இன்னும் நாலு நாள்ல உனக்கு பிறந்தநாள் வரப் போகுது. நாளைக்கு இல்லைன்னா நாளானைக்கு போய் உனக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வந்திடலாம்" என்றார் மயில்வாகனம்.
"வேண்டாமே ப்பா. இந்த முறை ரெண்டு மூணு function -க்கு எடுத்த ட்ரெஸ்ஸையே போடம வச்சு இருக்கேன். அதையே போட்டுக்குறேனே?" என்று நரேந்திரன் மறுக்க,
"அது இருக்கட்டும். இன்னும் ஒன்னு புதுசு கண்டிப்பா எடுக்கணும். நீ நாளைக்கு வேலை முடிச்சிட்டு சொல்லு. நாம போய் எடுத்துட்டு வரலாம்" என்று மயில் வாகனம் விடாது சொல்ல, அவரிடம் மறுப்பு கூறத் தோன்றாமல் "சரிப்பா. போகலாம்" என்றான்.
"ண்ணா.. உனக்கு நம்ம மயில் வண்டி தயவுல புது ட்ரெஸ் கிடைக்க போகுது. அப்படியே எனக்கும் ஒன்னு ரெண்டு எடுத்துத் தந்தா நல்லா தான் இருக்கும். ஏன்னா எனக்கும் இன்னும் ஆறு மாசத்துல பர்த்டே வரப் போகுது" என்று நவீன் புது உடைக்கு அடி போட,
"படவா... ஆறு மாசம் கழிச்சு வரப் போற பிறந்தநாளுக்கு இப்பவே புது ட்ரெஸ் உனக்கு.." என்று குமுதா அவன் காதைப் பிடித்து திருகினாலும், மறு நாள் குடும்பமாக டி- நகர் சென்ற போது அவனுக்கும் உடைகள் எடுக்கத் தவறவில்லை பெற்றவர் இருவரும்.
நரேந்திரனும் தன் பங்கிற்கு இரண்டு டி - ஷர்ட் அண்ட் ஜீன்ஸ் வாங்கிக் கொடுக்க "ண்ணா.. போதும். அதான் ஏற்கனவே அம்மாவும் அப்பாவும் எடுத்துக் கொடுத்துட்டாங்கள்ல" என்று பொறுப்பானவனாய் சொல்ல,
"அப்போ உன்னோட அண்ணன் எடுத்துக் கொடுத்தா வேணாமாக்கும்" என்று இடக்காய் நரேந்திரன் கேட்க, இரு கை எடுத்து கும்பிட்ட நவீன் "தெய்வமே.. தெரியாம சொல்லிட்டேன். நீ உன் இஷ்டம் போல எடுத்துத் தா. ஃப்ரீயா வர்ற ஆஃபரை ஏன் வேண்டாம்னு சொல்லுவானேன்" என்றவன் தன் அண்ணன் மிகுந்த பாசத்தோடு எடுத்துக் கொடுத்த உடையை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டான்.
மயில்வாகனம் குடும்பத்தில் எப்போது யாருக்கு பிறந்தநாள் என்றாலும் குடும்பமாக கோவில் சென்று வருவார்கள்!
நரேனின் பிறந்தநாள் அன்றும் அனைவரும் கோவிலுக்கு சென்றனர்.
காலை எழுந்ததும் குளித்து புத்தாடை உடுத்தி, தாய் தந்தையின் ஆசியையும், தம்பியின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்ட பின்னர் கடவுளின் ஆசியை வாங்க வேண்டி கோவிலுக்கு தன் குடும்பத்துடன் வந்திருந்தான் நரேன்!
கடவுளை தரிசிக்க வந்தவனின் கண்கள் அங்கே எதிர் பாராத விதமாக ராதவைக் கண்டு விட, கோவிலில் அவள் இருந்த தோற்றத்தை கண்டவனின் எண்ணங்கள் அவன் வசம் இருக்கவில்லை!
அவன் எண்ணம் போன போக்கு அவனுக்குள் பெரும் புயலை உருவாக்கி இருந்தது!
எண்ணங்களுக்கு கடிவாளம் இட முடியும் தான்! ஆனால், இயற்கையாக நம்முள் எழும் சில எண்ணங்களுக்கு என்றும் தடை விதிக்க முடியாது நம்மாள்!
அப்படித் தான் நரேந்திரனிற்கும் ராதாவைக் கண்ட போது இயற்கையாய் முகிழ்த்தது அவ்வெண்ணம்!
அன்று லதாவின் குழந்தைக்கு மொட்டை போட வேண்டி குடும்பத்துடன் கோயிலில் வருகை தந்திருந்தனர் ராதாவின் குடும்பத்தினர். ராதாவும் அன்று கோவிலுக்கு வந்திருந்தாள்.
அதுவும் முதல் முறையாக மெல்லிய ஜரிகை வைத்த இளம் பச்சை நிறத்தில் நெய்யப்பட்ட சாஃப்ட் சில்க் சேரி அணிந்து இருந்தாள்.
மிகவும் அழகாக இருந்தாளா... இல்லை மிக மிக அழகாக இருந்தாளா.. என்பது பார்ப்பவரின் ரசனையை பொறுத்து தான் சொல்ல முடியும். அந்த அளவிற்கு நேர்த்தியாய் புடவை கட்டி அதற்கு ஏற்ப சிறு சிறு கவரிங் அணிகலன்கள் அணிந்து இருந்தாள்.
தன் அக்கா மகளிற்கு மொட்டை போட்டு முடித்து சிறிது நேரத்தில் குழந்தையை தன் கையில் வாங்கிக் கொண்டவள் "அம்மா.. நான் பாப்பாக்கு வேடிக்கை காமிச்சிட்டு வரேன். இன்னும் அழுதுட்டே இருக்கா பாருங்க" என்றவள் தன் அக்காவிடமும் கூறிக் கொண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு சன்னிதானம் அருகே வந்தாள்.
செல்லும் அவளையே பார்த்திருந்த தெய்வானைக்கு ஒரே நாளில் தன் பெண் மிகவும் அழகாக மாறிவிட்டாள் என்று தோன்றியது.
அதுவும் சாதாரண கவரிங் நகைகளுக்கே இப்படி அழகாய் தெரிகிறாள் என்றாள், அவளைப் போலவே ஒளி வீசும் தங்க நகைகள் அணிந்தாள் என்றால் கொள்ளை அழகாய் இருப்பாள் என்றும் தோன்றியது!
ஆனாலும், அவளுக்கென்று இப்போது வரை வெறும் இருபது பவுன் நகை தான் சேர்த்து இருக்கிறார்கள் தெய்வானையும் கண்ணபிரானும். இன்னும் ஒரு பத்து பவுனேனும் செய்ய வேண்டும்! செய்தால் தான் நல்ல வரன் கிடைக்கும் என்று பெரு மூச்சு விட்டுக் கொண்டவர், அந்த வடபழனி முருகனிடம் மனமுருகி வேண்டிக் கொண்டார்.
நரேனின் குடும்பம் மொத்தமும் தெய்வ வழிபாடு செய்து, அர்ச்சனையை முடித்த பின்னர் பிரகாரத்தில் சிறிது நேரம் அனைவரும் அமர, நரேந்திரன் குமுதாவிடம், "அம்மா... நா கோவில் சுத்தி வரேன்! வேண்டி இருந்தேன்" என்க,
"என்ன அண்ணா வேண்டி இருந்த?" என்று நவீன் ஆர்வமாய் கேட்கவும், "வேண்டுதலை வெளிய சொன்னா பழிக்காதுடா நவீன்" என்றவன் "நா போய் சுத்திட்டு வரேன் மா. நீங்க இங்கேயே இருங்க" என்றான்.
"எத்தனை சுத்து நரே?" என்று மயில்வாகனம் கேட்க,
"நூத்தி எட்டு ப்பா" என்றான் சிரிப்புடன்!
"ண்ணா... அநியாயம் ண்ணா இது! நூத்தி எட்டா?????? தலை சுத்திடாது?"
"டேய்... அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நிறுத்தி நிதானமா நடந்துட்டே சுத்தினா ஒன்னும் தெரியாது"
"நீ நிறுத்தி... நிதானிச்சு... சுத்தி.... சுத்தி.... சுத்தி... கிழிஞ்சிடும் கிருஷ்ணகிரி!!!!" என்றான் சலிப்பாக!
சின்ன மகனின் தலையில் செல்லமாய் கொட்டிய குமுதா, "டேய்... சாமி விஷயத்துல என்ன கிண்டல்? அமைதியா இரு" என்று அவனை ஒரு அதட்டல் போட்டவர்,
"நீ போய்ட்டு வா நரேன். இன்னைக்கு உனக்கு லீவ் தான. ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் சாம்பார் சட்னி எல்லாம் பண்ணி வச்சிட்டு தான் வந்தேன். போய் கேசரி செஞ்சு, இட்லி ஊத்திக்களாம்" என்றார்.
"சரிம்மா..." என்றவன் நவீனிடம் "ஓய்... நீயும் வரியா..?" என்று கேலியாக கேட்க, "ஹ்ம்ம்.... யப்பா சாமி.. நா வரல ப்பா... எனக்கு நூத்தி எட்டு சுத்துன்னு கேட்டதுக்கே தலை சுத்துது. இதுல உண்மையா சுத்துனேன்... தல சுத்தி கீழ விழுந்திடுவேன்" என்று மயக்கம் வருவது போல் பாவனை செய்த சின்னவன்,
"சோ, யூ எஞ்சாய் ண்ணா! நா குமுதா மம்மிக்கும், மயில் வண்டிக்கும் கம்பனி கொடுத்துட்டு இருக்கேன்" என்று விட்டு தாயிடம் இரண்டு செல்ல அடிகளையும், மயில்வாகனத்திடமும் முறைப்பையும் பரிசாய் பெற்றுக் கொண்டான்.
ஏனோ மயில் வாகனத்தை மயில் வண்டி என்று அழைப்பதில் அத்தனை இன்பம் நவீனுக்கு!
தம்பியின் தலையில் செல்லமாய் ஒரு குட்டினை வைத்தவன் தன் வேண்டுதலை ஆரம்பித்தான். முதல் முப்பது சுற்றுக்கள் வேக வேகமாக சுற்றியவன் அதன் பின்னர் சற்று நிதானமாக சுற்ற ஆரம்பிக்க, அப்போது தான் கண்டான் ராதாவை!
கையில் ஒரு குழந்தையுடன் சன்னதியில் நின்று இருந்தவளை கண்டவன் ஒரு நிமிடம் அவளின் அழகில் அசந்து நின்று விட்டான்.
கூடவே, "இது நம்ம ட்ராஃபிக்ல பாத்த அந்த கவுண்டிங் பொண்ணு தானே??" என்று எண்ணியவன் ஒரு மிதமான புன்னகையை தவள விட்டு தனது சுற்றுதலை தொடர, தன்னை ஒருவன் இப்படி விடாது ரசிக்கிறான், தன்னையே நினைக்கிறான், தொடர்ந்து பார்க்கிறான் என்று எந்த வித அறிதலும் இன்றி, தன் அக்கா மகளை சமாதானப் படுத்திக் கொண்டு நின்று இருந்தாள் ராதா.
ஒவ்வொரு சுற்றும் முடியும் போது, அவளை கண்டவனின் இதயம் அவனையும் அறியாமல் அவளை வெகுவாய் ரசிக்க, அதை தடுக்கக் கூட வழி அறியாமல் சுற்றிக் கொண்டே இருந்தான்.
தலையும் சுற்றுவது போல் இருந்தது. மனதும் அவளை சுற்றுவது போலவே இருந்தது. என்ன என்று சொல்லத் தெரியவில்லை! ஏனோ அவளைக் காணக் காண மனதிலும் உடலிலும் ஒரு வித இதம் பரவுவதை அவனால் தடுக்க இயலவில்லை.
தடுக்கவும் விருப்பமில்லை!
அவள் கையில் பாந்தமாய் தோள் வளைவில் தலை தாழ்த்தி வீற்றிருக்கும் அழகான குழந்தையை கண்டவன் "என் ஜாடையில் ஒரு அழகான குழந்தை இவள் கையில் தவழ்ந்தால்............." என்று நினைத்த நேரத்தில் மின்சாரம் தன் மீது பாய்ந்தவன் போல் அப்படியே நின்று விட்டான்!
உடல் மொத்தமும் அலையடித்தது போன்ற மாயம்!
என்ன நினைத்தேன் நான்?
என்ன மாதிரியான சிந்தனை இது?
எந்த வகையில் இந்த எண்ணத்தை சேர்ப்பது?
அவனின் இதயத்தில் முரசு கொட்ட வைத்தது அவனின் எண்ணம் கொடுத்த கற்பனை காட்சி! என்னவென்று சொல்வது இதைப் பற்றி?
எப்படி இது போன்றதொரு சிந்தனை உதித்தது மனதில்??
"ஐயோ... என்ன நரே... இப்படி.... ஓஹ் காட்... You are getting insane man!" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் சற்று தடுமாறி தான் போனான்!
அதற்கு மேல் சுற்ற முடியவில்லை. அதிர்ந்து நின்றவன் கோவிலின் மணி ஒலி விடாது கேட்டதில் தான் தன்னிலை அடைந்தான். நிமிர்ந்து ராதா நின்று கொண்டிருந்த இடத்தை பார்க்க, அவள் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்வது தெரிந்தது.
"இந்தப் பெண் எப்படி தன் மனதில் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாள்? அதுவும்... அதுவும்.... என் குழந்தை... அவள்... கையில் என்று எண்ணும் அளவிற்கு!"
ஹப்பா.. நினைக்க நினைக்க நரேனுக்கு உடல் சிலிர்த்து அதிர்ந்தது. இதற்கு மேல் வேண்டுதலை முழுவதுமாய் முடிக்க முடியாது என்று வந்து விட்டான்.
கோவிலில் இருந்து கிளம்பிய பின்னரும் சரி, வீடு வந்த பின்னரும் சரி தனக்கு தோன்றிய எண்ணமும், அந்த எண்ணத்திற்கு வண்ணம் கொடுத்த அப்பெண்ணும் தான் நினைவில் நின்று நாட்டியமாடிக் கொண்டிருந்தனர்.
"நரே.... டேய்... நரே....." என்று தாய் தன்னை உலுக்கியதில் "ஹான்... அம்மா..." என்று சுயம் பெற்றான்.
"என்னடா... அவ்ளோ தீவிர சிந்தனை? கோவில்ல இருந்து வந்ததுல இருந்து உன் முகமே சரி இல்ல" என்று சரியாய் கேட்க, "ஊஃப்ப்" என்று மூச்சு விட்டுக் கொண்டவன் "அதெல்லாம் ஒன்னும் இல்ல அம்மா" என்றான் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு!
"இவன் நூத்தி எட்டு சுத்துன்னு சொன்ன போதே நீங்க கவனிச்சு இருக்க வேண்டாமா ம்மா. சுத்தி.. சுத்தி....இப்ப தலை சுத்தி போய் உக்காந்து இருப்பான்" என்று அண்ணனை கிண்டல் செய்த படி தாய் செய்திருந்த கேசரியை ரசித்து விழுங்கிக் கொண்டிருந்தான் நவீன்.
"சும்மா இருடா அவனை வம்புக்கு இழுத்துட்டு" என்று சின்னவனை அடக்கியவர் நரேந்திரனிடம் கேசரி கின்னத்தை நீட்டினார்!
தாய் கையில் வைத்திருந்த கேசரி கின்னத்தை பார்த்து, "வாவ் கேசரி..." என்று அதை வாங்கிக் கொண்டவனிடம் "சாப்பிட்டே வா. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றார் குமுதா.
"என்ன விஷயம் ம்மா?"
கேள்வியாய் தன்னை ஏறிட்ட மகனின் முகத்தை பார்த்து சிரித்தவர் "எல்லாம் நல்ல விஷயம் தான். வா சாப்பிட்டு பேசலாம்" என்று அறையை விட்டு வெளியே சென்று விட்டார்.
என்ன விஷயம்? என்று தெரியாத போதிலும் எதோ ஒரு முக்கியமான விஷயம் என்று மட்டும் புரிந்தது. இல்லை என்றால் தாய் தன்னிடம் பேச வேண்டும் என்றெல்லாம் தகவல் சொல்லுபவர் அல்ல. எதாகினும் சொல்லி விடுவார் என்று நன்கு தெரியும் நரேனுக்கு!
என்னவாக இருக்கும்? என்று சிந்தனை அவனை யோசிக்க வைத்தாலும், மூளையின் ஓர் ஓரத்தில் அப்பெண்ணைப் பற்றிய சிந்தனையும், தன்னுடைய எண்ணப் போக்கும், தனக்குள் நிகழும் மாற்றங்களும் நரேனை வெகுவாக குடைந்து கொண்டிருந்தது.
***************
கோவிலில் அனைத்து பூஜை வேலைகளும் முடிந்து லதாவின் குடும்பத்தினர் கிளம்பும் சமையம் லதாவின் மாமியார் தெய்வானையிடம், "உங்க சின்ன பொண்ணுக்கு எப்ப கல்யாணம் பண்றீங்க?" என்று கேட்க, அவர் கேட்ட விதமும், முகத்தில் சிறிதளவு தெரிந்த இளக்காரமும் சொல்லாமல் சொல்லியது அவர் கேள்வியின் நோக்கத்தை!
இருந்தாலும் அவரிடம் முகம் திருப்பியோ, சுருக்கென்றோ பதில் சொல்லி விட முடியாதே!!!!
தனது மகளின் மாமியார் வேறு! சற்று கறார் பிடித்த ஆள் தான். தான் எதாவது சிறு முக மாறுதலுடன் பதில் சொல்லி விட்டால் அதன் விளைவு இரண்டாம் மகளிடம் தான் போய் சேரும் என்று முடிவு செய்த தெய்வானை, அவரிடம் புன்னகை பூசிய முகம் மாறாமல்,
"ராதா இப்ப தான் செக்கண்ட் யியர் படிச்சிட்டு இருக்கா சம்மந்தி அம்மா. இன்னும் படிப்பு முடிய ஒன்னே முக்கால் வருஷம் இருக்கு. இப்ப அவளுக்கு எதுவும் வரன் பாக்குற மாதிரி யோசனை எங்களுக்கு இல்ல. அவளுக்கு வரன் பார்க்கும் போது கண்டிப்பா சொல்றேன். உங்க கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்ல போறோம்? உங்களுக்கு எதாவது நல்ல வரன் எங்க வசதிக்கு ஏத்த மாதிரி இருந்தா சொல்லுங்க" என்று தெளிவாக உரசல் வர விளைவிக்காத வார்த்தைகளை போட்டு பேசி முடித்தார் தெய்வானை.
அதுவும் அவரை ஒரு முக்கியமான ஆளாய் கருதி அவரை வைத்தே மையமாக பேச, லதாவின் மாமியாருக்கு முகமெல்லாம் பல் தான் தெய்வானையின் பேச்சை கேட்டு விட்டு.
"ஓ.. அதுக்கென்ன? நல்ல இடமா வந்தா கண்டிப்பா சொல்றேன்" என்றவர் தன் வீட்டு மக்களிடம் "பாத்தீங்களா.. என்னைய தான் மாப்பிள்ளையே பாக்க சொல்லி இருக்காங்க நம்ம லதா அம்மா!" என்று பெருமை அடித்துக் கொண்டார்!
அதில் அவருக்கு ஒரு அல்ப திருப்தி! இதை எல்லாம் தெய்வானையும், கண்ணபிரானும் ஒரு பெரு மூச்சுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர் என்றால், ராதா எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவரிடம் இப்படிக் கூறிய அன்னையை கண்களாலேயே குற்றம் சாட்ட, அவரோ ' நானும் தான் என்ன செய்ய முடியும்?' என்பது போல் ஒரு இயலாமை பார்வை பார்த்தார் மகளை!
அதில் ராதாவிற்கு இன்னும் கடுப்பு கிளம்பியது. இருப்பினும் தன் பெரியப்பா பெரியம்மாவிடம் பேசுவது போல் லதாவின் மாமியாரிடம் பேச விட முடியாது என்று எண்ணிக் கொண்டவள் தன் பொறுமையாய் இழுத்துப் பிடித்து கொண்டிருந்தாள்.
அந்தப் பொறுமையும் வீட்டிற்கு வந்த பிறகு பறந்து விட்டிருந்தது.
"ம்மா... யாரைக் கேட்டு ம்மா லதா மாமியார் கிட்ட அப்படி சொன்னீங்க? தேவையா நமக்கு? பாத்தீங்கள்ல அவுங்க பேசுனதை! எதோ அவுங்க சொல்லி தான் நமக்கு மாப்பிள்ளையே கிடைக்க போற மாதிரி பேசுறாங்க" என்று தாம்தூமென குதிக்க,
"ஷ்.... இப்ப ஏன்டி இந்தக் கத்து கத்துற? இப்ப என்ன ஆகிப் போச்சு? முதல்ல பொறுமையா இருக்க கத்துக்க ராதா. அந்த அம்மா கேக்கும் போது வேற என்ன சொல்ல முடியும்? நான் இப்படி சொல்லி இருந்ததால பெருமையா பேசிட்டு விட்டுட்டாங்க. இல்லைன்னா வேற எதாவது இளக்காரமா பேசி இருப்பாங்க!" என்று தன் சின்ன மகளுக்கு புரிய வைக்க முயன்றார் தெய்வானை.
"அந்த அம்மா எப்ப தான் இளக்காரமா பேசாம இருந்திருக்காங்க? ஏன்.. உங்க கிட்ட பேச்ச ஆரம்பிக்கும் போதே அப்படித் தான பேசினாங்க! சும்மா என் வாயை அடைக்க சப்ப கட்டு கட்டாதம்மா. லதா மாமியாரா இருந்ததால எதுவும் பேசாம வந்தேன். இல்லைன்னா......" என்று ராதா பல்லைக் கடித்துக்கொண்டு நிற்கும் போதே ஆட்டோக்காரருக்கு பணத்தை கொடுத்து செட்டில் செய்து விட்டு வீட்டிற்குள் வந்தார் கண்ணபிரான்.
அவர் வந்ததும் தாய் மகள் பேச்சு தடை பட்டுப் போயிருந்தது. ஆனால், ராதா கத்திய கத்தல் வீட்டு வாசலைத் தாண்டி வீதியில் கேட்டமையால் வரும் போதே மகளை முறைத்துக் கொண்டே தான் வந்தார் கண்ணபிரான்.
"ஏன் கொஞ்சமா கத்துற? இன்னும் நல்லா தொண்ட கிழியிற அளவுக்கு கத்த வேண்டியது தான!..." என்று மகளை கடிந்தவர் கூடத்தில் இருக்கும் சேரில் அமர்ந்தார்.
தந்தையின் குரலில் தென்பட்ட மித மிஞ்சிய கோவம் ராதாவை அடுத்து பேச விடவில்லை. எப்போதும் தந்தைக்கும் அவளுக்கும் இடையே தர்க்கம் வந்தால் ராதா ஒரு சில நிமிடங்களில் அமைதியாகி அறைக்குள் சென்று விடுவாள்!
தர்க்கம் தொடர்ந்தால், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் இரையத் துவங்குவாள். சண்டை பெரிதாக வெடித்தால், கண்ணபிரானும் வெடித்து விடுவார். பின்பு அவர் பேசுவதற்கு பதிலாக அவரின் கையோ, பிரம்பு அடிகளோ தான் பேசும்.
எனவே, ராதா அமைதியாக இருந்தாள்!
"பெரியவங்க பேச்சுல நீ ஏன் தலையிடுற? உங்க அம்மா, லதா மாமியார் கிட்ட என்ன பேசுனா உனக்கு என்ன? எல்லாம் உன் நல்லதுக்காகவும், நம்ம குடும்ப நிம்மதிக்காகவும் தான்! அதுவும் இன்னைக்கு கோவில்ல எந்த மன சங்கடமும் வேணாம்னு தான் உங்க அம்மா சிரிச்ச முகம் மாறாம பேசினா. இதுக்கு எல்லாம் நீ பதில் பேச்சு பேசுவியா?" என்று மகளை அதட்ட, ராதா தலை குனிந்த நிலையில் இருந்து மாறாமல் அப்படியே நின்று இருந்தாள்.
"ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ. வாழ்க்கைல சகிப்புத் தன்மையும் பொறுமையும் ரொம்ப முக்கியம். அது இல்லன்னா எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், அவனால நிலையா நீடிச்சு நிதானமா வாழ முடியாது! முதல்ல சகிப்புத் தன்மைய வளத்துக்கோ!" என்று அழுத்தமாக மகளை பார்த்து கூறியவர்,
மனைவியிடம் திரும்பி "அவ இப்படி தல வெடிச்சு பேசிறப்ப எல்லாம் அவ வாய பாக்காம, அவ கூட சரிக்கு சரி வாய் பேச்சு பேசாம நாலு அரை விடு! அப்ப தான் ஒழுங்கா அடக்க ஒடுக்கமா இருப்பா!" என்றவர் கடைக்கு கிளம்பி விட கோப மூச்சுக்களை விட்டுக் கொண்டு இறுகிப் போய் நின்றிருக்கும் மகளை சமாதானம் சொல்லி சரி செய்யும் பொருட்டு அவளை நெருங்கினார் தெய்வானை.
"ப்ச்... விடும்மா..இப்ப தான் உன் புருஷன் நல்லா திட்டிட்டு போறாரு. அவரு பேச்சுக்கு நீ ஒன்னும் மருந்து போடவேண்டாம்" என்று கோபமும் இயலாமையும் கலந்த குரலில் கூறியவள், மீண்டும் இரண்டு மடங்கு கோபத்துடன்,
"என்னமோ வாழ்க்கைல சகிப்புத் தன்மையும் பொறுமையும் தான் எல்லாமேன்னு சொல்லிட்டு போறாரு? எப்படி சகிப்புத் தன்மையோட இருக்கச் சொல்றாரு???? ஹான்.....??? இவரு ரொம்ம்ம்ம்ப பொறுமையா இருந்து தாத்தா பாட்டி சொத்தை எல்லாம் இவரு அண்ணனுக்கும், அவரு பொண்ணுங்களுக்கும் தாரை வார்த்து கொடுத்த மாதிரியா???" என்று கோபம் பொங்க கூறியவள்,
"எல்லாம் தெரிஞ்சும் அவரு ஆஸ்தான அண்ணனை எதுவும் செய்யாம.. இதோ இப்படி தாராளமான சகிப்புத் தன்மையோட இருக்காறே... அப்படியா???? இப்படி இருந்தா மனுஷங்க நம்மளை ஏறி மிதுச்சிட்டு போய்டுவாங்க ம்மா! எல்லாரும் நம்மளை இப்ப ஏறி மிதிச்சுட்டு போற மாதிரி!" என்று கோபத்தில் தொடங்கி ஆற்றாமையில் முடித்தவள் வேகமாக அறைக்குள் புகுந்து கொண்டாள்!
தெய்வானைக்கு தான் மிகவும் கவலையாகப் போயிற்று! கணவரின் கூற்றும் சரி தான்! மகளின் கூற்றும் சரி தான்!
ஆனால், யாருக்கு தான் பேச?????? கோவிலுக்கு போய் வந்த பின்னர் நிம்மதி கிட்டும், மன அமைதி கிட்டும் என்று சொல்லுவார்கள்! ஆனால்,
இங்கே.....????
பெரு மூச்சுடன் தையல் இயந்திரத்தில் தைக்க அமர்ந்து விட்டார் தெய்வானை! அந்த இயந்திரத்தின் சத்தத்தோடு அவரின் மனக்கிடங்குகளின் சத்தமும் கேட்ட வண்ணமே இருந்தன!