Sowndharyacheliyan
Writer
வான்மழை 05:
“ஏங்க, பொண்ணு வீட்டுக்கு இன்னைக்கு தாக்கல் சொல்லிடலாமா?” ஹாலில் அமர்ந்திருந்த மகாலிங்கத்திடம் கேட்டப்படி அங்கே வந்தார் முத்துப் பேச்சி.
“தாக்கல் சொல்லணும் தான், ஆனா பேச வேண்டிய முகிலன் அமைதியால இருக்கான். அங்க சொல்லிட்டு வந்ததோடு சரி, இங்க வந்து நம்ம கிட்ட என்ன கலந்து பேசுனான்.” என்க,
“அதான்ங்க, எனக்கும் ஒண்ணும் புரியலை, அவன் மனசுல என்ன இருக்குன்னு சொன்னாதானே நம்ம அதுக்கேத்த மாதிரி பேச முடியும்.”
“இது உனக்கும் எனக்கும் புரிஞ்சு என்ன பண்ண பேச்சி? பேச வேண்டியவன் அவன் தானே, பொண்ணு பாத்துட்டு வந்து ஒரு வாரமாகப் போகுது, நம்மளை அவுங்க எதிர்பாத்துட்டு இருப்பாங்களா இல்லையா?”
“சரிங்க, அவன் வர்ற நேரம் தான் இன்னைக்கே என்னன்னு பேசிட்டு அங்க தகவல் சொல்லிடுவோம்” என்றார் பேச்சி.
இவர்களது பேச்சினை சமையலறையிலிருந்துக் கேட்டுக் கொண்டிருந்த சுபாவிற்கு நிலைக் கொள்ள முடியவில்லை. முயன்று அளவு இந்த சம்பந்தத்தினை தட்டி விடவே முயன்றுக் கொண்டிருக்கிறாள்.
முத்துப்பேச்சியை முடிந்த அளவு குழப்பியே விட்டிருக்க, அவரின் மனநிலை என்னவென்று புரிப்படவில்லை.
இதுவரை, தான் நினைத்ததையே வீட்டார்கள் அனைவருக்கும் செய்ய வைத்துப் பழகியவளுக்கு, இன்று வருணாக்ஷின் விஷயத்தில் அது நடக்காதோ என்ற பயம் வந்திருந்தது.
வருணாக்ஷி இவ்வீட்டிற்கு மருமகளாக வந்து விட்டால், சுபாவின் நிலை அங்கே தாழ்ந்து போய்விடும் அல்லவா?
இதுவரை அன்பு, அக்கறை என வீட்டாள்களை கட்டி வைத்து அவள் நினைத்ததை அனைவரையும் ஒத்துக் கொள்ள வைத்து, பிறரியமால் இறுதியில் அவள் எடுக்கும் முடிவுகளே அவ்வீட்டில் செயல்படுத்தப்படும் என்ற தோற்றத்தினை, ஆளுமையினை, அதிகாரத்தினை, வெளியுலகிற்கு காட்டிக் கொண்டிருப்பவளுக்கு,
வருணாக்ஷியிடம் அவளிடம் அதிகாரம் செல்லுப்படியாகாதோ என்றே தோன்றியது!!.
“வா, முகிலா! காபி கொண்டு வரட்டுமா?” என்ற பேச்சியின் குரலில் தன் சிந்தனைகளை கலைந்தாள்,
“ம்ம்ம் அம்மா, முகம் அலும்பிட்டு வரேன்” என்றவன் தனதறைக்கு சென்று ப்ரஷ்ஷாகினான்.
அம்மாவும், அப்பாவும், எதற்காக அமர்ந்திருக்கிறார்கள் என்று அவனிற்கு நன்றாகவே தெரியும். இன்று நிச்சயம் அவனிடம் பேசி முடிவை தெரியாமல் விடப் போவதில்லை என்பதை கணிந்திருந்தான்.
ஏனோ அவள் மீதான விருப்பத்தினை அவளிடம் கூறும் முன், மற்றவர்களுக்கு அதனை தெரிவிப்பதில் அவனிற்கு இஷ்டமில்லை. அன்று அவளை சீண்டவே, தனது விருப்பத்தினை பெரியவர்களிடம் கூறிக் கொள்வேன். என்று சொல்லியிருந்தான்.
“ம்ம்ம், கீழேப் போன முடிவை வாங்காம விடமாட்டாங்க போலயே? முடிவுத்தானே, அவுங்களையே சொல்ல வச்சிட்டாப் போச்சு!!” என குறுநகை புரிந்தவன் உற்சாகமாகவே கீழிறங்கிச் சென்றான்.
அவன் வந்தமர்ந்ததும், சுபா காபியை கொண்டு வந்து கொடுத்தவள் அங்கேயே நின்றுக் கொள்ள,
“தாங்க்ஸ் அண்ணி” என்றவன் பெற்றுக் கொண்டான்.
அவன் குடிக்கும் வரை பொறுமை காத்தவர்கள்,
“முகிலா, என்னப்பா முடிவுப்பண்ணிருக்க?” மகாலிங்கம் ஆரம்பிக்க,
“எதைப் பத்தி அப்பா?” என்றவனின் கேள்வியில் பெற்றவர்கள் இருவரும் முகம் பார்த்துக் கொண்டனர்.
“என்ன முகிலா? தெரியாதது மாதிரி கேக்குற?” என்றார் பேச்சி,
“அம்மா, தெரியாததுனால தானே கேட்கிறேன். மொட்டையா கேட்டா எனக்கு எப்புடித் தெரியும்?”
“சரிடா, பொண்ணு வீட்டுக்கு தகவல் சொல்லணும். நீ என்ன முடிவுப் பண்ணிருக்க? கலந்துப் பேசிட்டு சொல்றோம்னு சொல்லிட்டு வந்திருக்கோம். உன்னோட முடிவு என்ன? பொண்ணைப் பத்தி?”
“ஓஹோ…அதுவா!!” என சில நொடிகள் யோசிப்பது போல் பாவனை செய்தவன்.
“உங்க ரெண்டு பேரு முடிவு என்னங்கம்மா?” என்றவன் பேச்சினை மெல்ல திசைத் திருப்ப,
“எங்களோட முடிவா?”
“ஆமாம்ப்பா, உங்களுக்கு என்ன தோணுது, பொண்ணு வீட்டைப் பத்தி, உங்க அபிப்ராயம் சொல்லுங்கம்மா” என இருவரையும் பேச்சினுள் கொண்டு வர,
“எனக்கு அந்த இடம் திருப்தியாக தான் இருக்கு முகிலா, குருசாமி நல்ல மனுஷன், அங்கே வியாபாரச் சங்சத் தலைவராக இருக்காரு, அங்கயும் ஆளுங்களை விட்டு விசாரிச்சதுல, நல்ல விதமாத்தான் சொல்றாங்க,
அவுங்க அண்ணனுக்கும் தொழில்ல நல்ல பேரு தான் இருக்கு. பொண்ணோட அம்மா பத்தி சொல்லத் தேவையில்ல டீச்சர் வேற, பிள்ளைங்கள ஒழுக்கமாத்தான் வந்திருக்காங்க,
இந்த இடம் உனக்கு சரியானதுன்னு என் மனசுக்குப்படுது. இனி உன் விருப்பம் தான்” என்க,
அடுத்த பேச்சியை பார்த்தான்,
“ம்மா உங்க எண்ணம் என்னம்மா?”
“எனக்கு உங்கப்பா மாதிரி சொல்லத் தெரியாது முகிலா, வீட்டுப் பொம்மபளையாளுங்களா பாத்தா நல்ல மாதிரி தான் தெரியுது. பொண்ணோட அம்மாவும், அத்தையும் நல்லவிதமாத்தான் பேசுனாங்க, எந்தவித அதிகப்படி அலட்டலும் இல்லை.” என அவர் பேசிக் கொண்டேச் செல்ல,
“அத்தை, இடையில் பேசுறதுக்கு மன்னிச்சுடுங்க” என்றவரே இடைப்புகுந்தாள் சுபா.
“சொல்லு சுபா?” என்க,
“இல்லைத்தை, நீங்க பேசிட்டு இருந்த விஷயத்தைப் பத்தி என் மனசுல ஒண்ணு ஓடுது. அதை சொல்லலாமாத்தை?” என பவ்யமாக அவள் கேட்க,
“அண்ணி, அம்மா பேசுன அப்பறம் உங்ககிட்ட தான் கேட்டுருப்பேன்.தயங்காமா உங்க கருத்தை சொல்லுங்க அண்ணி” முகிலன் கூற,
“சொல்லும்மா” என மகாலிங்கமும் ஊக்க,
“இல்லை மாமா நீங்க சொல்றது, அத்தை சொல்றது எல்லாம் சரிதான். அவுங்க வீட்டாளுக்களைப் பத்தி எந்த கொறையும் இல்லை” என பேசிச் சென்றவளை இடைநிறுத்தியது மேகலாவின் குரல்.
“யாருக்கிட்ட கொறை இருக்குன்னு சொல்றீங்களா அண்ணி?” என்றவாறு மேகலா வீட்டினுள் வந்துக் கொண்டிருந்தாள் உடன் கணவனுடன்.
“அடடே, வாங்க மாப்பிள்ளை! வா மேகலா” என பெற்றவர்கள் இருவரும் வரவேற்க,
“வாங்க அத்தான், வா அக்கா, எங்க பாரதியக் காணோம்?”
“அவ, அவளோட அத்தை வீட்டுக்குப் போயிருக்காடா, நாளைக்கு அங்க இருந்துட்டு தான் வருவா.”
“ஓஹோ சரிக்கா!”
“என்ன சுபா, முன்னயே வரேன்னு ஒருவார்த்தை சொல்லியிருந்தா ராத்திரிக்கு விருந்து சமைச்சிருப்பேன்ல”
“இங்க வர்றது திடீர்னு தான்ம்மா முடிவாச்சு, அத்தை, மாமா, பாரதி வீட்டுல இல்லை, இவருக்கும் நாளைக்கு பழனியில் தான் டியூட்டி போட்டு இருக்காங்க, அதான் நான் மட்டும் ஒத்தையில அங்க கிடக்கணும்னு கிளம்பி வந்துட்டோம்” எனும் பொழுதே,
சுபா இவர்களுக்கான காபியுடன் வந்து விட எடுத்துக் கொண்டனர்.
“என்னம்மா, நாங்க வரும்போது என்னவோ பேச்சு ஓடிட்டு இருந்துச்சே!”
“வேற, ஒண்ணுமில்ல டி சுபா, எல்லாம் அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்களப் பத்தி தான்.”
“ஏனுங்க மாமா, இன்னமும் பேசி முடிவெடுக்காமா இருக்கீங்க, இவ்வளவு நாளு அவுங்களை காக்க வைக்கிறது சரியில்ல அத்தை” என அசோக் சற்றே கண்டிப்புடன் கூறிவிட்டிருந்தான்.
“அதான் மாப்பிள்ளை, இன்னைக்கு தம்பிக்கிட்ட பேசிட்டு அவுங்களுக்கு ஒரு முடிவை சொல்லிடலாம்னு இருக்கோம்” என்றார் மகாலிங்கம்.
“என்னடா தம்பி உனக்கும் பிரச்சனை, அந்த பொண்ணு பிடிக்குது? பிடிக்கலையின்னு! சொல்லுறதுல என்னப் பிரச்சனை உனக்கு?” மேகலா அவனிடம் நேரடியாக கேட்டிடா,
“இதையே தான்டி நாங்களும் கேட்டோம். அதுக்கு உன் தம்பி எங்க அபிப்ராயத்தை கேட்டான் சொல்லிட்டு இருந்தோம்”
“ஓஹோ அதுக்கு தான் சுபா அண்ணி கொறை இருக்குன்னு சொன்னாங்களா?”
“அய்யோ, மேகலா நான் அப்புடி சொல்ல வரல” சுபா வேகமாக கூறிட,
“வேற எப்புடி அண்ணி? நான் வரும்போது கொறைன்னு தான பேசிட்டு இருந்தீங்க?”
“அது பொண்ணு வீட்டாளுங்ககிட்ட எந்த கொறையும் இல்லை, ஆனா பொண்ணு தான் கொஞ்சம் செல்லமா வளர்ந்துட்ட மாதிரி இருக்கு, நம்ம உறவு மொறைங்க கிட்ட ஒட்டுதலா இருக்குமா? வேலை எல்லாம் மொகம் சொணங்காமா செய்யுமா? அந்த பிள்ளைய பாத்த அவ்வளவு வேலை செஞ்ச மாதிரி தெரியலை, அதை தான் சொல்ல வந்தேன்” என தனது கருத்தினை அங்கே தெரிவிப்பது போல் வருணாக்ஷியின் மீதான குறைகளை முத்துப்பேச்சிக்கு புரியும் வண்ணம் அழுத்தமாக அவள் உரைத்திட,
பேச்சியின் முகம் யோசனையானது!
“இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா அண்ணி? நீங்க கூட தான் எங்க ஆளுங்க இல்லை, ஆனா கல்யாணம் பண்ணி வந்ததும் உறவு மொறைக் கூட நீங்க நல்ல விதமாக பழகலையா? இல்லை வேலை எல்லாம் எடுத்துக் கட்டி செய்யாம இருக்கீங்களா? எல்லாம் அம்மா சொல்லி கொடுத்து பழகிட்டீங்க தானே” என அவள் பட்டென்று கூறிவிட,
அவளது மறைமுக குத்தலில் சுபாவின் முகம் கோபத்தை பூச முயல, முயன்று சாதாரணமாக நின்றிருந்தாள்.
“மேகலா என்ன பேசுற?” பேச்சி அவளை அதட்ட,
“நான் ஒண்ணும் தப்பா சொல்லலையேம்மா, வெளியில இருந்து வந்த அண்ணியே நம்ம குடும்ப பழக்க வழக்கங்களை பழகிட்டு செய்யும் போது, அந்தப் பிள்ளை செய்யாதா என்ன? இத்தனைக்கும் நம்ம ஆளுங்க, பொண்ணோட அம்மா அந்தப் பிள்ளைக்கு எதுவும் சொல்லி கொடுக்காமையா இருந்திருப்பாங்க?”
என்றதும் பேச்சிற்கு அவளது பேச்சி சரி என்றேப் பட்டது.
“இப்புடி உப்பு பெறாத காரணத்துக்காக எல்லாம் அந்தப் பிள்ளைய வேணாம்னு சொல்லுவீங்களா? வேற என்ன கொறை இருக்கு, அந்தப் பிள்ளையை வேண்டாம்னு சொல்லுறீங்க?”
“ஏய், சுபா நான் எங்கடி வேண்டாம்னு சொன்னேன்”.
“வேணும்னும்னு சொல்லலையேம்மா? அப்போ என்ன அர்த்தம்? அந்தப் பிள்ளைய பிடிக்கலை தானே”
“நீ ஒருத்திப் போதும் டி, நல்லா சிண்டு முடியிற! எனக்கு அந்த பிள்ளைய வேண்டாம்னு சொல்ல எந்த காரணமும் இல்லை,” என்றிட,
“அப்பா நீங்க?” எனமேகலா அவரிடம் திரும்ப,
“எனக்கும் திருப்தி தான்ம்மா, இந்த இடம் ஒத்து வந்தா நல்லது தான்” என்றிட,
“அப்பறம் என்ன? வீட்டுல எல்லாருக்கும் ஓகே தான், முகிலா இப்போ உன் முடிவை சொல்லு?”
“நான் என்னக்கா சொல்ல? உங்க எல்லாருக்கும் சம்மதம்னா எனக்கும் சம்மதம் தான், அம்மாவும், அப்பாவும் எனக்கு கெட்டதா நினைப்பாங்க? அவுங்களுக்கு பிடிச்சிருக்குன்னா, எனக்கும் பிடிச்சிருக்கு!” என அவன் முடிவை கேட்க காத்திருந்தவர்களை குழப்பி விட்டு அவர்கள் வாயாலயே வருணாக்ஷியை பிடித்திருக்கிறது என கூறி திருமணத்தை உறுதி செய்து விட்டிருந்தான்.
“ஏன் சுபா உனக்கு இதுல சம்மதம் தானோ?” பேச்சி கேட்க,
“அவுங்களுக்கு எப்புடிம்மா சம்மதம் இல்லாம்ம போகும், நீயும் அப்பாவும் முடிவெடுத்தப் பின்னாடி அதை வேண்டாம்ன்னு சொல்லுவாங்களா என்ன? நீங்க சரியாத்தான் சொல்லுவீங்கன்னு அண்ணிக்கு நல்லாத் தெரியுமே! சரித்தானா அண்ணி” என தாயிடம் தொடங்கி சுபாவிடம் அவள் முடிக்க,
“ஆமா அத்தை, மேகலா சொல்றது சரிதானா? நீங்களும் மாமாவும் ஒரு விஷயத்தை சொல்றீங்கன்னா, அதை விசாரிக்காமயா சொல்வீங்க?” என்று சமாளித்து விட்டாள்.
“ஏங்க, அப்போ பொண்ணு வீட்டுக்கு தகவல் சொல்லிடலாமா?” பேச்சி கேட்டிட,
சரி என்றிருந்தார் மகாலிங்கம்.
மேகலா வந்த செய்தி அறிந்து பரணியும் சிறிது நேரத்தில் வந்து விட,
அவனிடமும் விஷயம் தெரிவிக்கப்பட அவனிற்கும் சம்மதமே.
**************
“எய்யா, குரு இன்னும் மாப்பிள்ளை வீட்டுல இருந்து தகவல் வரலையா?” என கேட்டவருக்கு,
“இல்லைம்மா, நானும் அதைத்தான் எதிர்பார்த்துட்டு இருக்கேன்.”
“சட்டுன்னு ஏதாச்சும் ஒரு முடிவு சொன்னாதானாப்பா நம்மளும் அடுத்து என்னன்னு யோசிக்க முடியும்? அந்த புரோக்கருக்கு போனைப் போடுப்பா, மாப்பிள்ளை வீட்டுல நம்ம சொல்லுவோம்னு எதுவும் எதிர்பார்த்துட்டு இருப்பாங்களோ?”
“எனக்கு ஒரு யோசனையும் தோணலைங்கம்மா! அவுங்க என்ன எதிர்பாக்குங்குறாங்கன்னும் புரியலை” என்க,
அப்போது அங்கு வந்த வருணாக்ஷியை ஓரக்கண்ணால் கண்ட முனிஸ்வரி,
“எய்யா, எதுக்கும் உம் மகளை நல்லா விசாரி, இந்த கழுதை எதையாவது மறைக்கப் போறா, ஏன் சொல்றேன்னா அன்னைக்கு அந்த தம்பி தெளிவா சொல்லிட்டுப் போச்சே, பொண்ணுக்கிட்ட எல்லா விஷயமும் பேசிட்டேன்னு,
ஆனா இவளைக் கேட்ட, அப்புடி எதுவுமே அவரு பேசலைன்னு சொல்லுறா, இதுல எதை நம்புறது? எனக்கு என்னமோ உன் மக மேல தான் சந்தேகமா இருக்கு” என்க,
அவரின் பேச்சில் எரிச்சலுற்றவள்,
“அப்பத்தாஆஆஆ” எனப் பல்லைக் கடித்தவள்,
“எத்தனை தடவை அப்பத்தா சொல்றது, அன்னைக்கு அவரு என்கிட்ட எதுவுமே பேசலை, சும்மா நம்ம குடும்பத்தை பத்தி கேட்டாரு, சொன்னேன். பிடிச்சிருக்கா கேட்டாரு பதில் சொன்னேன். சரின்னு மண்டையை கட்டிட்டு கீழே இறங்கி வந்துட்டாரு,
நான் கேட்டதுக்கு கூட எதும் பதில் சொல்லலை அவரு, வீட்டுப் பெரியவங்க கிட்ட சொல்லிக்கிறேன்னு போய்ட்டாரு!!!! அவ்வளவு தான்!!!! அவ்வளவோ தான்!! நடந்தது போதுமா!
இதையே ஒருவாரமா மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்கேன் காதுல வாங்க மாட்டுறீங்க, இனி யாராச்சும் இதைப் பத்தி பேசுனீங்க, கடிச்சு வச்சிடுவேன்” என கத்தியவள், கோபமாக தந்தையின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.
“ரிலாக்ஸ்டா குட்டி!” குருசாமி மகளின் தலையை தடவ, அவரது தோள்களில் சாய்ந்துக் கொண்டாள்.
“ம்ஹீம் ரொம்பத்தான்!” என நொடித்த முனிஸ்வரி,
“அந்தப் பிள்ளை, எப்புடி மரியாதையா பெரியவங்க கிட்ட சொல்லிக்கிறேன்னு பேசியிருக்கு, ஆனா உன் மக மட்டும் அடங்காம அந்தப் பையன் கிட்ட பேசியிருக்கா?” என்க,
“அப்பா உங்க அம்மாவ அமைதியா இருக்க சொல்லுங்க, இல்லை அவ்வளவுதான்!” என அவள் எகிற,
“ம்மா விடுங்கம்மா, எப்ப பாரு சின்னப்புள்ளைய வம்பிழுத்துக்கிட்டு” என்றவர் பேசும் பொழுதே அங்கே வந்த
மல்லிகா,
“இங்கப் பாரு வருணா, கடைசியா கேட்கிறேன், நாளைக்கு வர்றியா இல்லையா?”
“எம்மா, போம்மா எத்தனை தடவைம்மா சொல்லுறது. என்னால் எல்லாம் அந்த நேரத்துக்கு எழுந்திருக்க முடியாது?”
“நாளைக்கு ஞாயித்துக்கிழமை தானாடி, கோவிலுக்கு வர்ற என்ன உனக்கு?”
“எம்மா, நாளைக்கு ஒரு நாள் தான் எனக்கு லீவு. நான் நல்லா தூங்கனும், நீங்க காலையில 3 மணிக்கு கிளம்பனும்னு சொல்லுறீங்க என்னால எல்லாம் வர முடியாது”
“ஏன்டி, நாளைக்கு உங்க பெரிய அத்தையோட மருமகளோட, அண்ணன் பையனுக்கு அங்க பழனியில் மொட்டை போடுறாங்க, அப்போ விடியக்காலை தானே கிளப்புவாங்க, இத்தனைக்கும் வேன்ல தானே போறோம் வர்றதுக்கு என்ன?”
“நீ எத்தனை தடவை கேட்டாலும், நான் வரமாட்டேன் வரமாட்டேன் வரமாட்டேன்!”
“அப்போ போ, ஒத்தையில கிட, மாவு இருக்கு, என்னத்தையாவது செஞ்சு சாப்பிடு” என்க,
குருசாமியின் போன் அலற எடுத்துப் பார்க்க புதிய எண், யோசனையாக எடுத்தார்.
“ஹாலே!!”
“************”
“அடடே!! சொல்லுங்க மகாலிங்கம், வீட்டுல எல்லாரும் சொளக்கியங்களா?”
“ **************”
“இங்க எல்லாரும் நல்லாருக்கோம்”
“ *************”
“அட விடுங்கங்க, கல்யாணம் விஷயம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு எடுக்க கூடாதில்லையா?”
“*************”
“அப்டிங்களா! ரொம்ப சந்தோஷம்ங்க, எங்களுக்கும் இந்த வரன்ல பரிபூரண சம்மதம் தான்ங்க”
“*************”
“ஓஹோ, கண்டிப்பா அப்படியே செஞ்சிடலாம்ங்க, நாங்களும் பாக்குறோம். சரிங்க வச்சிடுறேன்” என்றவர் பேசி விட்டு நிமிர,
மொத்த பெண்களின் பார்வையும் அவர் மீது தான்!
வருணாக்ஷி அசால்ட்டாக இருப்பது போல் அமர்ந்திருந்தவளின் காதுகள் மட்டும் கூர்மையாயிருந்தது.
“யாருங்க, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களா? மல்லிகா எதிர்பார்ப்புடன் கேட்க,
“ஆமா மல்லி அவுங்களே தான், அவுங்க குடும்பத்துக்கு நம்ம பொண்ணை எடுக்குறதுல முழுச் சம்மதமாம்! அடுத்து ஆக வேண்டிய காரியத்தை பாக்கலாம்னு சொல்றாங்க”
“ஹப்பா!!! நான் வேண்டுன தெய்வம் கைவிடலைங்க, இந்த வரனே முடிஞ்சிடனும்னு வேண்டுனேன் நடந்திடுச்சு” என்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்து நழுவி தனதறைக்கு சென்று விட்டாள் வருணா.
“சரியான முசுடு வாத்தி, சொன்ன மாதிரியே, என்கிட்ட சொல்லாமா வீட்டுப் பெரியவங்க கிட்ட சொல்லியிருக்கிறதப் பாரு” என அவனை திட்டியவள்,
“அதெப்படி, நான் அவருக்கிட்ட நேரடியாத்தானோ சொன்னேன். அவரும் என்கிட்ட நேரடியா தான் சொல்லனும்” என வீம்பு பேசியவள்,
கெளரியின் நண்பி ஒருத்தியின் தங்கை,பழனியில் முகிலன் வேலை செய்யும் கல்லூரியில் வேலை செய்ய, எப்படியோ தில்லு முல்லு செய்து கார்முகிலனின் போன் நம்பரை முன்னரே பெற்றிருந்தனர் கெளரியும் வருணாவும்.
அவனின் நம்பரை எடுத்தவள் நேரத்தை பார்க்க ஒன்பது. இன்னும் தூங்கியிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் ஒரு குருட்டு தைரியத்தில் அவனிற்கு அழைத்து விட்டாள்.
அப்போது தான் இரவு உணவை முடித்து விட்டு அறைக்குள் வந்திருந்த முகிலன்,
புதிய எண்ணில் இருந்து அழைப்பு வரவும் எடுத்தான்.
“ஹலோ!!!”
ஏதோ ஒரு தைரியத்தில் அழைத்து விட்டவளிற்கு அவனின் குரலை கேட்டதும் அதுவரை இருந்த தைரியம் விடைப் பெற்று ஓடிவிட, தொண்டை இறுகிப் பிடிக்க வார்த்தைகள் சண்டித்தனம் செய்தன.
மறுமுனையில் பதிலின்றி போகவும், முகிலன் போனை எடுத்துப் பார்க்க லைனில் இருப்பது தெரிய, மீண்டும்,
“ஹலோ!!” என்றான்.
மீண்டும் அமைதியே பதிலாக கிடைக்க எரிச்சுலுற்றவன்,
“யாருங்க லைன்ல, போன் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க” என்றவனிற்கு மீண்டும் மெளனமே பதிலாக கடுப்பில் கட் செய்திருந்தான்.
சிறிது நேரத்தில் மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வர,
“எந்த வீணாப்போனவன் வெளையாடுறான்னு தெரியலை, இன்னைக்கு இருக்கு” என பல்லை கடித்தவன், அழைப்பை ஏற்று கோபமாக கத்த முயல,
“ஹலோ…. நான் தாங்க….வரு…வருணா.க்ஷி பேசுறேன்” என எங்கே மீண்டும் அழைப்பை துண்டித்து விடுவானோ என எண்ணி படபடவென கொட்டித் தீர்க்க,
அவள் குரலில் ஒரு நொடி திகைப்புற்றவன், மீண்டும் அவள் தானா என உறுதிச் செய்ய,
“ஹலோ!” என்க,
“ஹலோ, நான் பேசுறது கேட்குதாங்க, ஹலோ!!!” என விடாமல் அவள் பேச, பேச, இன்பமாக அதிர்ந்தான் கார்முகிலன்.
“சேட்டைக்காரி ஏதோ ப்ராஃடு வேலை பண்ணி நம்பரை வாங்கியிருக்கா” என மெல்ல முணுமணுத்தவன், அவள் இன்னமும் அந்த பக்கம் கத்தி கொண்டிருப்பதை நிறுத்தும் பொருட்டு
“வருணாக்ஷி!!!!!” என அழுத்தமாக அழைக்க, பட்டென அவளது பேச்சு நின்று விட்டது.
“நல்லா கேட்குது வருணாக்ஷி, சொல்லு என்ன விஷயம்”
அவளுக்கு மீண்டும் தொண்டை அடைத்துக் கொண்டது.
அவளின் பதட்டத்தை உணர்ந்தவன்,
“வருணாக்ஷி!!!” என மயிலிறகாய் வருட,
“ம்ம்ம்ம்”
“என்னாச்சு, இந்த நேரத்துல போன்? ஏதும் முக்கியமான விஷயமா?” என மென்மைக்கு அவன் தாவியிருக்க, அந்த குரலுக்கு கட்டுப்பட்டு பேசலானாள்.
“ம்ம்ம், அது இப்போதான் உங்க வீட்டுல இருந்து தகவல் வந்தது!!”
“ஓ…ஓ என்னன்னு வந்தது?” தெரிந்துக் கொண்டே அவன் கேட்க,
“அது, இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதா, உங்க வீட்டுல எல்லாருக்கும் விருப்பம்னு சொன்னாங்க,”
“ஓஹோ! உண்மையை தானே சொல்லியிருக்காங்க!”
“ஆனா, ஆனா, நீங்க இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே?”
“அதான், சொன்னேனே வீட்டுப் பெரியவங்க கிட்ட சொல்லிக்கிறன்னு”
“அதெப்படி, நான் நேரடியா உங்ககிட்ட தானே சொன்னேன். அப்போ நீங்களும் என்கிட்ட தானே சொல்லணும். அது தானே முறை!” என அவள் படபடப்பு நீங்கி வாய் துடுக்காய் பேச,
“ஓஹோ, அப்புடி வர்றீங்களோ?? சரி நீ என்கிட்ட நேர்ல பார்த்து தானே சொன்ன? அப்போ நீ என்ன நேர்ல வந்துப் பாரு, அதுக்கான பதிலை சொல்றேன்.” என அவன் சிரிப்புடன் கூற,
“எப்படி உங்களை நான் நேர்ல பாக்க முடியும்? நடக்குற கதையா இது?”
“அது உன்பாடு என்னை நேர்ல வந்துப் பாரு உனக்கான பதிலைச் சொல்றேன். உன்னைப் பார்த்து! உன் கண்ணைப் பார்த்து! இப்போ போனை வை” என அவளிற்கு உத்தரவிட்டவன் போனை கட் செய்திருக்க,
இங்கே, வருணா தலை
யில் கைவைத்து அமர்ந்திருந்தாள்.
‘எப்புடி இந்த வாத்திய பாக்குறது?’ என யோசித்தவளிற்கு வெளியே குருசாமி பேசுவது கேட்க,
நொடியில் முகம் மலர்ந்தவள்,
“ஆஹா, வாத்தி மாட்டுனீங்க, கெத்து காட்டுறீங்களோ!! கொத்தா நாளைக்கு பிடிக்கிறேன் உங்களை!” என்றவள், அவனை பார்க்க போகும் உற்சாகத்தில் படுக்கையில் விழுந்தாள்.