Sowndharyacheliyan
Writer
வான்மழை 07
“பழனிமலை முருகனுக்கு!!”
“அரோகராஆஆஆ!!”
“பாலா தண்டாயுதபாணிக்கு!!”
“அரோகராஆஆஆ..!!!”
“வெற்றிவேல் வடிவேலனுக்கு!!”
“அரோகராஆஆஆஆ!!!!”
அவர்களை கடந்து சென்ற கூட்டம் எழும்பிய சத்தத்தில் வருணாவின் ஊன் முதல் உயிர் வரை அனைத்தும் சிலிர்த்தடங்கியது.
அந்த அதிகாலை வேளையில் புற்று ஈசல்களாக மக்கள் கூட்டம் பழனிமலை மீது படையெடுத்துக் கொண்டிருந்தனர்.
அவளின் சிலிர்த்தலை கண்டு கொண்டவன், “அவரை அவ்வளவு பிடிக்குமா என்ன?” என மலை மீதிருப்பவரை கண் காட்டி அவன் கேட்க,
“ம்ம்ம் அவரை மட்டும் தான் பிடிக்கும்! என் வாழ்க்கையில் அவர் இல்லாத ஒரு இடம் இல்லை” என்றவளின் பேச்சில் முருகனின் மீதிருந்த பற்று தெரிந்தது.
அந்த காலை வேளை குளிர்ந்தக் காற்றுக்கு தொண்டையில் இறங்கிய சூடான டீ இதமாக இருந்தது.
விபூதியின் வாசமும், பஞ்சாமிர்தத்தின் வாசமும் மூக்கை துளைக்க, “ம்ஹா!!” மூச்சை உள்ளிழுத்து அந்த நறுமணத்தையும் சேர்த்து உள்வாங்கி கொண்டிருந்தாள் வருணாக்ஷி.
வைல்ட் நிற சுடிதாரில், காலையில் தலைக்கு குளித்திருந்ததில் முடிகள் சிலுப்பிக் கொண்டு நிற்க, அடித்த குளிர்காற்றுக்கு லேசாக உடல் நடுங்க நின்றிருந்தவளை கண்டு முகிலனின் மனம் தடுமாறவே செய்தது.
குடித்து முடித்த டீயிற்கான பணத்தை கொடுத்தவன், அடுத்து என்ன என்பது போல் அவளைப் பார்க்க,
“இந்த டீ காசையும் சேர்த்துக் கொடுத்திடுவேன் கணக்கு வச்சிக்கோங்க”
“ஓஹோ…சரி அப்பறம்”
“அப்பறம் என்ன..” என சில நொடிகள் திணறியவள், “ஹாங்… என் கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவே இல்லையே?”
“எந்தக் கேள்விக்கு?”
“ம்ம்ம் நான் நேர்ல வந்தா சொல்றேன்னு சொன்னீங்கள்ள, அந்தக் கேள்விக்கு”
“ஓஓஓ… அதுவா!” என்றிழுத்தவன்,
“பாட்டி நில்லுங்க!” என அவர்களை கடந்து சென்ற பூ விற்கும் பெண்மணியை நிறுத்தியவன்,
“மல்லிப் பூ கொடுங்க பாட்டி” எனக் கேட்டு வாங்கியவன்,
அவளிடம் நீட்ட, சிறு வெட்கப் புன்னகை பூக்க அவள் அதனை வாங்க, அவள் கையின் மீது பூவினை வைத்து மெல்ல அவன் அழுத்த,
அவன் அழுத்தத்தில் அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க,
சிறு தடுமாற்றமின்றி அவள் கண்களை நேராக பார்த்தவன்,
“இனி, என் வாழ்க்கையில் உன்னை தவிர வேற யாரையும் பிடிக்கும்னு தோணலை” என,
அவன் வாயிலிருந்து அவள் கேட்க நினைத்த வார்த்தைகளை கூறிவிட்டான். அவளை இனியும் தவிக்க விடக் கூடாதேன.
அவன் சொன்ன வார்த்தைகளில் அவள் மனதில் மத்தாப்பு வெடிக்க, அழகிய புன்முறுவலுடன் அவன் கொடுத்தப் பூவை வாங்கியவள், தலையில் வைத்துக் கொண்டாள்.
இதற்கு மேலும் தனியாக நிற்பது சரியில்லை என நினைத்தவன்,
“போகலாமா!” என்க,
சரியென்று தலையசைத்தவள் அவனுடன் நடந்தாள்.
மீண்டும் அவன் கடைக்கு வந்தவள், கெளரி கையில் வைத்திருந்ததை வாங்கி கொண்டவள், பூஜை பொருட்களிற்கான சில்லறை பணத்தை அத்தனை நேரம் ஒளித்து வைத்திருந்த பர்சில் இருந்து எடுத்து அவள் நீட்ட,
“ப்ராடு!!” என முணுமுணுத்து அவன் பார்த்த பார்வையில் அவள் இதழ்களை கடித்து வெட்கத்தினை அடக்கியவள்,
கெளரியை இழுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடியிருந்தாள்.
மண்டபத்திற்குள் நுழையும் முன் அவள் திரும்பி அவனைப் பார்க்க, அவளின் பார்வைக்காக காத்திருந்தவன், தலையசைத்து விடை கொடுக்க, அவனிற்கு அழகிய சிரிப்பொன்றினை பதிலுக்கு வழங்கியவள் உள்ளே சென்றிருந்தாள்.
பூரித்த முகத்துடன் உள்ளே வந்த மகளைக் கண்ட மல்லிக்கு காரணம் புரிந்தாலும் அதனைக்கேட்டு அவளை சங்கடப்படுத்த விரும்பாது அவளின் இந்த சந்தோஷம் நிலைக்க அந்த முருகனை மனதார வேண்டிக் கொண்டார்.
விசாரிக்க சென்ற ஆண்மக்கள் வந்து விட, அடுத்தடுத்த வேலைகள் பரபரப்பானது.
காலை உணவு ரெடியாகியிருக்க, அதனை உண்டு விட்டு, மதியத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்து விட்டு, அவர்கள் நேரே மொட்டை போட செல்ல, பகலவன் தன்னை வெளிப்படுத்தியிருந்தான்.
குழந்தைக்கு மொட்டைப் போட்டு காது குத்தி அழுத குழந்தையை சமாதானப்படுத்தி விட்டு அனைவரும் கிரிவலம் முடித்து, எல்லாரும் மலை ஏறுவதற்கு முன்பு, அடிவாரத்தில் இருந்த பிள்ளையாரை தரிசிக்க வர, அங்கே காத்திருந்தனர் முகிலனின் குடும்பத்தினர்.
இன்று, மேகலா மற்றும் வருவதாக தான் இருந்தது. ஆனால் இங்கே மலையடிவாரத்தில் பிரிசித்தப் பெற்ற சித்தர் இருப்பதாகவும், அவரிடம் முகிலன் - வருணாக்ஷி ஜாதகத்தினை காட்டி ஆசி பெற்றிடலாம் என மகாலிங்கம் நேற்றைய இரவு குடும்பத்தினரிடம் கூறியிருக்க, அதன் பொருட்டே இவர்களின் பயணம்.
மகாலிங்கம் நேற்றைய இரவு குருசாமிக்கு அழைத்தப் போது இந்த விஷயத்தினையும் சேர்த்தே கூறியிருக்க, மல்லிகா வருணாக்ஷியின் ஜாதகத்தோட, கிருஷ்ணாவோடதையும், எடுத்துக் கொண்டவர், பார்வதியிடம் கெளிரியின் ஜாதகத்தையும் கொண்டு வருமாறு கூறியிருந்தார்.
“வாங்க, இப்போதான் வந்திங்களா?’ மல்லிகா முத்துப்பேச்சியிடம் கேட்க,
“ஆமாங்க, உங்க விசேஷம் எல்லாம் நல்லப்படியா முடிஞ்சதா?”
“எல்லாம் நல்லபடியாக முடிஞ்சதுங்க, இப்போ சாமி பாக்க போகணும்.”
“அம்மா, ரோப் - காருக்கு கூட்டம் கம்மியா தான் இருக்கு போயிடலாம் இல்லைன்னா கூட்டம் வந்திடும்” எனப் பேசியவாறே வந்த பரணியும், முகிலனும் இவர்களைக் கண்டதும்,
“வாங்க!” என்றழைக்க,
சிறு சிரிப்பை பதிலுக்கு வழங்கினர்.
“நீங்க சாமி பாக்க போகணும்னு சொன்னீங்களே, மலை ஏறுப் போறீங்களா?” பேச்சி கேட்க,
“இல்லைங்க அத்தைனால ஏற முடியாது, குழந்தையும் மொட்டை போட்டதுல அழுதுட்டே இருக்கு, நாங்களும் ரோப்-கார்ல தான் போகணும். பசங்க மலை ஏற ஆசைப்படுறனால அவுங்க மட்டும் வரலை” என மல்லிகா கூற,
“ஓ..சரிங்க வாங்க சோர்ந்தே போவோம். இல்லைன்னா கூட்டம் வந்திடும்” என்ற முத்துப்பேச்சியின் பின் மேகலாவும் நகர,
“அக்கா, நீ எங்கப் போறா?” என மேகலாவின் கையைப் பிடித்திருந்தான் முகிலன்.
“ரோப்-காருக்குடா தம்பி!”
“எக்கா, அம்மாக்கு தான் மலை ஏற முடியாது, உனக்கு என்ன? சாமியை பாக்க வந்துட்டு மலை ஏறாம போனா எப்புடி, வா நம்ம ரெண்டு பேரும் மலை ஏறுவோம்” என்றவனின் விழிகள் வருணாக்ஷியின் மீதே நிலைத்திருக்க,
அவன் பார்வையை கண்டுக் கொண்ட மேகலா, “இல்லைடா தம்பி நைட்டு எல்லாம் ஒரே மூட்டுவலி, என்னால மலை எல்லாம் ஏறமுடியாது, நான் வரலை” என அவனை சீண்ட,
“ப்ச் நீ என்ன கிழவி மாதிரி பேசிக்கிட்டு இருக்க? இப்பவே என்ன உனக்கு மூட்டுவலி, இதுக்கு தான் உடம்பை ஆரோக்கியமா வச்சிருக்கனும்னு சொல்றது, நீ வர்ற நாம ரெண்டு பேரும் மலை ஏறி தான் போக போறோம்” என அவளின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொள்ள,
“அப்போ நானும் வரேன், அம்மாவையும் சுபாவையும், கொண்டு போயி அங்க விட்டுட்டு வரேன்” என பரணிக் கூற,
முகிலனின் பேச்சை அதிர்வுடன் உள்வாங்கி கொண்டிருந்த சுபாவிற்கு, இருவரையும் தனியாக விடுவதில் மனமற்று,
“நானும் உங்க கூடவே வர்றேன்ங்க, அத்தையும் பாப்பாவும் போகட்டும்” என்றிட,
சரி என தலையைசைத்த பரணி அனைவரையும் அழைத்துச் சென்று ரோப்-கார் இருக்கும் இடத்திற்கு செல்ல,
இங்கே, கிருஷ்ணா, கெளரி, வருணா, மேகலா, முகிலன் மற்றும் சுபா அனைவரும் மலை ஏறத் தொடங்கினர்.
அவர்கள் ஏறத் தொடங்கிய சில நிமிடங்களில் பரணியும் வந்தவன்,
“கிருஷ்ணா வாங்க” என கிருஷ்ணாவை தன்னுடன் அழைத்துக் கொள்ள,
பெண்கள் அனைவரும் ஒன்றுச் சேர்த்துக் கொண்டனர்.
முதலில் யார் பேசுவது என தயங்கியவாறே மேலேறிக் கொண்டிருந்தவர்களில், கெளரி முதலாக வாய் திறந்தாள்.
“உங்க பொண்ணு வரலைங்களா?” என மேகலாவை கேட்க,
“என் பொண்ணை எல்லாம் தெரியுமா?”
“ம்ம்ம் தெரியும், அன்னைக்கு பொண்ணு பாக்க வந்தப்போ, உங்க பொண்ணும் இதோ அவுங்க பொண்ணும் இருந்தாங்களே, நான் பாத்தேன்” என சுபாவையும் அவள் கை நீட்டிக் கூற,
“என் பொண்ணு பாரதி, அவுங்க தாத்தா பாட்டி கூட ஊருக்கு போயிருக்கா, என்னாச்சு, வருணா ரொம்ப அமைதியோ! சத்தமே இல்லை” என மேகலா கேட்க,
“அமைதியா! அது எல்லாம் பேச வேண்டிய ஆளுக்கிட்ட எல்லாம் பட்டாசா தான் வெடிக்கிறா” என கெளரி மெல்ல முணுமுணுக்க,
அவளை முறைத்துப் பார்த்தவள்,
“அப்புடி எல்லாம் இல்லைங்க, கெளரி பேசுவதால இடையில வரல” என வருணா கூற, அடுத்து மேகலா ஏதோ கேட்க இவள் பதில் கூற என நிமிடங்கள் நகர்ந்திட,
அங்கே கிருஷ்ணாவிடம் தொழில் விஷயமாக பேச ஆரம்பித்து அடுத்தடுத்து பேச்சிற்கு ஆண்கள் தாவியிருக்க, மூவரிடையே ஒரு நல்ல உறவு ஏற்பட்டிருந்தது.
இடை இடையே ஆங்காங்கே அமர்ந்து அமர்ந்து மலை ஏறிக் கொண்டிருந்தனர்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே சிறு போட்டி ஒன்றினை வைத்து ஏறிக் கொண்டிருந்தனர்.
ஒரு இடத்தில் பெண்கள் அனைவரும் பாத்ரூம் சென்றிருக்க, ஆண்கள் அவர்களுக்காக காத்திருந்தனர்.
அப்போது பரணியின் மொபைலும், கிருஷ்ணாவின் மொபைலும் ஒரு நேரத்தில் அடிக்க எடுத்துப் பேசினர்.
“இதோப்பா கிட்ட வந்திட்டோம்” என இருவரும் பதில் பேசியதில் இருந்து இருவரது தந்தைகள் அழைத்திருந்ததை ஊகிக்க முடிந்தது.
“என்னவாம் பரணி?” முகிலன் கேள்வி எழுப்ப,
“அவுங்க எல்லாம் மேல வந்திட்டாங்களாம். சாமி பாக்க வரிசையில் நிக்கிறாங்களாம்.சீக்கிரம் வரச் சொல்லுறாங்க” என்றிட,
“எனக்கும் அதே தான் சொன்னாங்க” என கிருஷ்ணாவும் கூறினான்.
இங்கே பெண்களில் வருணா உள் சென்றிருக்க மற்றவர்கள் அனைவரும் வெளியே காத்திருந்தவர்கள் ஆண்களின் பேச்சைக் கேட்டதும்,
“பரணி நம்ம போகலாம்,மேலே போய் கூட பாத்ரூம் யூஸ் பண்ணிக்கிறோம். இங்க நிக்க, நிக்க இன்னும் லேட் ஆகிட்டே இருக்கும்” என மேகலா கூற,
“ம்ம்ம் அதுவும் சரி தான் நம்ம முன்ன போனா கொஞ்சம் நல்லா இருக்கும்” என பரணியும் கூற,
“சரி, நீங்க முன்ன போங்க நான் வருணாவை கூட்டிட்டு வரேன். கெளரி நீ இவுங்க கூடப் போ” என கிருஷ்ணா கூற,
“இல்லை, நான் இருக்கேன் வருவை விட்டுட்டு எப்புடிப் போறது, நம்ம மூணுப் பேரும் சேர்ந்தேப் போவோம்” என கெளரி கூறிய அடுத்த நொடி,
“அப்போ நானும் இருக்கேன்” என மேகலா கூற, இப்போது முகிலனின் போன் அடித்தது மகாலிங்கம் தான் அழைத்திருந்தார்.
“ஹாலோ?”
“************”
“இதோ கிட்ட வந்துட்டோம்ப்பா, வீட்டுப் பொண்ணுங்களை கூட்டிட்டு வரோம். அவுங்களுக்கு தேவையானதை பாத்து தானே வரணும்” என்ற இவன் பதிலுக்கு, அவர் மறுபுறம் ஏதோ கூறுவது தெரிய,
“சரி வைங்க, வரோம்” என போனை கட் செய்தவன்,
“நீங்க எல்லாரும் முன்ன நடங்க, அவ வரட்டும் நான் கூப்பிட்டு வரேன்” என்றவனை அனைவரும் திகைத்துப் பார்க்க,
“என்ன? எதுக்கு இப்போ என் மூஞ்சிய வேடிக்கை பாக்குறீங்க எல்லாம். அங்கே எல்லாரும் லேட்டாச்சுனு கத்திட்டு இருக்காங்களாம். போங்க நீங்க எல்லாரும்.” என்றவன் கூறிய போதும் அனைவரும் தயங்கி நிற்க,
அதில் கோபமுற்றவன்,
“இப்புடி நீங்க தயங்குற அளவுக்கு தான் என் மேல் நம்பிக்கை வச்சிருக்கீங்கன்னு புரிஞ்சுடுச்சு, யாரோ எப்புடியோ வாங்க, நான் போறேன்” என்றவன் கத்தி விட்டு விறுவிறுவென முன்னே நடக்க,
பதறி விட்டனர் அனைவரும்.
“முகிலா நில்லுடா, டேய்” என மேகலா அவனை பின் தொடர,
அதற்குள் பரணி சென்று அவனை பிடித்து நிறுத்தியிருந்தான்.
“அப்புடி என்னடா கோவம் உனக்கு?” மேகலா அவனை அதட்டிட,
“பின்னே நீங்க செஞ்சதுக்கு கோபப்படாம என்ன செய்ய? என்னமோ நான் அவளை கடிச்சு திங்கப் போற மாதரி ரியாக்ஷன் கொடுக்குறீங்க”பதிலுக்கு இவன் பேச,
“இப்போ நாங்க என்ன சொல்லிட்டோம்னு, இப்புடி பேசுற நீ” பரணி கேட்க,
“நீங்க எதுவும் பேச வேண்டாம். நான் போறேன் ஆளை விடுங்க” என அவன் பரணியின் கையை விலக்க,
“முகிலா போதும், நாங்க உன்னை எதுவும் பேசல, தயங்கி நிற்கலை, நாங்க முன்ன போறோம். நீ வருணாவை கூட்டிட்டு வா” என்று விட்டு மேகலா அனைவரையும் இழுத்துக் கொண்டு மேலேறிட,
“ரொம்பத்தான்!!” என்றவாறு கடுகடுவென நின்றிருந்தான் வாத்தி.
வெளியே வந்த வருணா யாரையும் காணது, முகிலன் மட்டும் நிற்பதை கண்டு திகைத்தவள்,
“எங்கங்க யாரையும் காணோம்?” எனக் கேட்க,
“ஏன், நான் நிக்குது தெரியலையா? எல்லாரும் முன்னே போயிட்டாங்க, உனக்காக தான் நான் காத்திருந்தேன். வா போகலாம்” என்க,
“என்னது? உங்க கூட என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்களா??” என்க
அதுவரை கடுகடுவென இருந்தவன் இவளின் கேள்வியில் அடுத்த நொடி இவள் மீது பாய்ந்திருந்தான்.
“என்ன? என்ன தனியா விட்டுட்டு போயிட்டாங்க? இத்தனை பேரு போறது உன் கண்ணுக்கு தெரியலையா? என்னமோ அத்துவான காட்டுக்குள்ள விட்டுட்டு போன மாதிரி பேசுற,
என் கூட வர இஷ்டமில்லைன்னா சொல்லிடு, உங்க அண்ணனுக்கு போனைப் போட்டு வரச் சொல்றேன்” என அவளிடம் ஒருபாடு கத்தி விட்டு போனை எடுத்தவன், என்ன நினைத்தானோ?
“உனக்கு தேவையின்னா, நீயே உங்கண்ணனுக்கு போனைப் போடு, நான் போட மாட்டேன்” என முகத்தை கோபத்தில் திருப்பிட,
“நான் எப்போ உங்க கூட வர்ற இஷ்டமில்லைன்னு சொன்னேன்” என்றவள் குழம்பிய முகத்துடன் கேட்ட கேள்வியில் இவனின் பீபி தான் ஏறியது.
“இப்போ தானே கேட்ட? யாரையும் காணோம்னு”
“ஆமா, கேட்டேன் கூட வந்தவங்களை காணோமேன்னு கேட்டேன்”
“அப்றம், தனியா விட்டுட்டு போயிட்டாங்காளான்னு கேட்ட”
“ஆமா, அது உண்மைதானே உங்க கூட விட்டுட்டு முன்னாடி போயிட்டாங்கதானே அதை தானே கேட்டேன்.இதுல என்ன தப்பிருக்கு?”
அவள் பேச்சில் மண்டை காய்ந்தவன்,
“ரெண்டு பேமிலியும் அங்கே சாமி பாக்க நிக்குறாங்களாம். போன் மேல போன் போட்டாங்க, அதான் லேட்டாக்கா வேண்டாம்னு அவுங்களை முன்ன போக சொன்னேன் போதுமா!” என்க,
“ஓஹோ…அப்போ சரி வாங்க போகலாம்” என்றவள் நடக்க,
“இவ தெளிவா பேசுறால? இல்லை இவ பேசுறது எனக்கு புரியலையா?” என குழம்பியவன் அவளுடன் நடக்க,
‘ஆத்தி! விட்டிருந்தா கொஞ்ச நேரத்துல வாத்தி சங்கை கடிச்சிருப்பாரு! எப்புடியோ மண்டைய கொழப்பி விட்டுடேன்’ என்றவள் மனதினுள் புலம்பியபடி நடந்தாள்.
இரண்டு திருப்பத்தினை ஏறி இருப்பார்கள், பரணியிடம் இருந்து போன் வர, எடுத்தவன்,
“வந்துட்டு இருக்கோம் டா, போனைப் போட்டு சீக்கிரம் வான்னா, அனுமாரு மாதிரி இவளை தூக்கிட்டு பறந்தா வர முடியும். போனை வையி வர்றோம்” என இருந்த குழப்பத்தில் பரணியை ஒரு கடி கடித்தவன்,
“சீக்கிரம் வா!” என்றபடி அவன் விரைய,
அவன் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியவளுக்கு, மூஞ்சிரைக்க அதற்கு மேல் முடியாமல் நின்று விட்டாள்.
அவளை காணது திரும்பியவனுக்கு, மூஞ்சிரைக்க நின்றவளை கண்டு பாவமாகி விட,
“என் விரலை பிடிச்சுக்கோ, சீக்கிரம் ஏறிடலாம்” என்றவன் தனது சுட்டு விரலை அவள் புறம் நீட்ட,
தயக்கமிருந்தாலும் மெல்ல அவனது சுட்டு விரலை தனது சுட்டு விரலால் அவள் பிடிக்க,
இதழ் பிரித்து அழகிய சிரிப்பொன்றினை அவளிற்கு பரிசளித்தவன்,
“போகலாமா?” என கேட்க,
அவனின் சிரிப்பில் சிறு வெட்கம் கொண்டவள் தலையசைக்க, உற்சாகத்துடன் இருவரும் மலை ஏறினர்.
அரைமணி நேரத்தில் மேலே கோவிலுக்கு வந்துவிட்டிருந்தனர்.அங்கே இவர்களுக்காக பரணி, மேகலா, என அனைவரும் நிற்பதைக் கண்டு,
அவன் விரல்களில் இருந்து தனது விரலை உருவிக் கொண்டவள், வேக நடையிட்டு கெளரியின் அருகே செல்ல,
“மெல்லப் போடி!” என என சிறிதாக கத்தியவன் பரணியிடம் செல்ல, அனைவரும் அவர்கள் குடும்பத்தினரிடம் சென்றனர்.
ஏற்கனவே சாமியை பார்க்க ஸ்பெசல் தரிசனம் டிக்கெட் எடுத்து வைத்திருந்ததால் சீக்கரமே சாமி அருகே சென்று விட்டிருந்தனர்.
இரு
குடும்பங்களும் நேரேதிரே நின்று முருகனை தரிசிக்க, முகிலன் மற்றும் வருணாவின் வேண்டுதல் எல்லாம், தங்களது திருமணம் எந்த வித தடங்களும் இல்லாமல் நடக்க வேண்டும் என்றே இருக்க, அவர்கள் குடும்பத்தினருக்கும் அதே எண்ணம் தான் சுபலட்சுமியை தவிர்த்து.