Sowndharyacheliyan
Writer
வான்மழை 8:
இன்று மகாலிங்கத்தின் வீடு விழாக்கோலம் போட்டிருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் முகிலனிற்கும் வருணாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது.
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி கரைப்புரண்டோடியது ஒருத்தியை தவிர,
அவள் எவ்வளவு முயற்ச்சித்தும், இச் சம்பந்தத்தினை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லையே! அவளின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த குடும்பத்தை இன்று வருணாவின் விசயத்தில் உடைந்ததை கண் கூடக் காண்கிறாள்.
“சுபா, என்ன கனவுக் கண்டுட்டு நிக்குற? அடுப்பில வச்சிருக்கிறதை கவனிக்காம இருக்க” என்றபடி வந்த பரணி அவள் அடுப்பில் வைத்திருந்ததை கிளறி விட,
“அச்சோ! அடிப் பிடிச்சிடுச்சுடுச்சாங்க ஏதோ ஒரு யோசனை” என்றபடி அவனிடம் இருந்து கரண்டியை வாங்க முயல,
“விடு நான் பாக்குறேன்” என்றபடி மேலும் அதனை கிளறியவனுக்கு சுபாவின் குழப்பமடைந்த முகம் யோசனையை தர,
“என்னாச்சு சுபா? என்ன யோசிச்சுட்டு இருக்க?”
“ஒண்ணுமில்லைங்க சும்மா தான்!”
“சும்மா இருக்குற விசயத்துக்கா, இப்புடி யோசிப்ப நீ? என்னன்னு சொல்லுடா, யாரும் எதுவும் சொல்லிட்டாங்களா” என்றான்.
ஏனெனில் அவன் காதல் திருமணம் என்பதால், உறவினர்களில் ஒரு சிலர் அதனை இன்னமும் பேசி காயப்படுத்தும் வழக்கத்தினை வைத்திருந்தனர். அப்படி எதுவும் யாரும் பேசி விட்டனரோ என கேட்டான் அவன்.
“அய்யோ! அப்புடி எல்லாம் யாரும் பேசலைங்க, எல்லாம் நம்ம முகில் தம்பியை பத்தின யோசனை தான்.நம்ம அவசரப்படுறோமோன்னு தோணுது. அன்னைக்கு சித்தர் சொன்னதை நீங்களும் தானே கேட்டீங்க?”
“நீ இன்னுமா அதை நெனைச்சு பயந்துக்கிட்டு இருக்க?”
“அதை எப்புடிங்க நினைக்காம இருக்க முடியும். கல்யாணம் ஒன்னும் விளையாட்டு இல்லைங்களே?” என்ற மனைவியின் வார்த்தைகளில்,
“அதான் அதுக்கான தீர்வையும் சொல்லித்தானே அனுப்பியிருக்காங்க சுபா, அப்பா அம்மாக்கு தெரியாமலா இந்த நிச்சயத்தை ஏற்பாடு பண்றாங்க. நீ இதை விட்டு வெளிய வா எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
சரி நீ வந்திருக்கிறவங்களை கவனி, நான் நம்ம மண்டபம் வரைக்கும் போயிட்டு வரேன்.” என்றவன் கிளம்பி விட, போகும் அவனை வெறித்த சுபாவினுள் அன்றைய நிகழ்வுகள் வலம் வர ஆரம்பித்தது.
முருகனின் தரிசனம் நல்லபடியாக முடிய, இம்முறை அனைவருமே ரோப்-காரில் கீழங்கி விட்டிருந்தனர்.
விசேச வீட்டுக்காரார்கள் அனைவரும் நேரே மண்டபத்திற்கு கிளம்ப, வந்திருந்த சில உறவினர்களை தவிர்த்து மற்ற அனைவரும் அந்த சித்தரை காணச் சென்றனர். அதில் முகிலன், வருணா மற்றும் கெளரியின் குடும்பமும் அடக்கம்.
சித்தரை காண இவர்களுக்கு முன்பாகவே வரிசை கட்டி மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
முகிலனிற்கு இதில் சுத்தமாக விருப்பம் இல்லை. ஆனால் வீட்டுப் பெரகயவர்களின் விருப்பத்தினை மீற மனமின்றி உடன் வந்திருந்தவனுக்கு, மலை மீதிருக்கும் கடவுளை காண இருக்கும் கூட்டத்தினை விட அதிகமாக இங்கே சித்தரை காண வந்திருந்தவர்களை கண்டு அவன் இதழ்கள் இகழ்ச்சியில் வளைந்தன.
இவர்கள் முறை வந்ததும் முதலில் முகிலன் மற்றும் வருணாவின் குடும்பம் உள் சென்றது.
“சாமி எங்க பையனுக்கும், இவரோட பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம். ஜாதக அமைப்பு நல்லா இருக்குன்னு சொல்லிருக்காங்க.
இவுங்க கல்யாண வாழ்க்கை நல்லபடியா இருக்குமா? குழந்தை பாக்கியம் எல்லாம் கிடைச்சு வளமான வாழ்க்கை வாழுவாங்களான்னு சொல்லுங்க சாமி” என மகாலிங்கம் சித்தரிடம் கேட்க,
“பையன், பொண்ணா ஜாதகம்” என கேட்டு வாங்கிய சித்தர் அதை முருகனின் பாதத்தில் வைத்து கண்களை மூடி வேண்டி, சோலியை உருட்டி போட்டவரின் முகத்தில் சிந்தனை கோடுகள்.
மீண்டும் அதே போல் மூன்று முறை சோலியை உருட்டியவரின் முகம் சிந்தனையிலிருந்து விடுபடாமல் இருக்க,
“என்னாச்சு சாமி? ஏதும் பிரச்சனைங்களா?” குருசாமி கேட்டிட, வருணாவிற்கு அடிவயிறு பயத்தில் பிசைய ஆரம்பித்தது.
அவளின் விழிகள் ஆறுதல் வேண்டி, முகிலனை காண அவளின் பயம் அறிந்தவன், பயப்பட வேண்டாம் என தலையாட்டி அவளை ஆசுவாசப்படுத்தினான்.
“சாமி!!!!” மகாலிங்கம் அழைக்க,
“ஜாதக கட்டம் எல்லாம் அமைப்பா தான் இருக்கு. ஆனா?” என்ற அவரின் ஆனாவில் அனைவரின் இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
“ஆனா? என்னங்க சாமி?” முனிஸ்வரி கேட்டிட,
“ஆனா, இவுங்க கல்யாணம் சிலபல தடங்கலை தாண்டித் தான் நடக்கும். அந்த தடங்கல்களால இவுங்க பிரியவும் வாய்ப்பு இருக்கு. இந்த கல்யாணம் நடக்காமயும் போகலாம்.”
“என்ன சாமி இப்புடி சொல்றீங்க, ரெண்டு குடும்பத்துக்கும் பிடிச்சுப் போயி தானே கல்யாணம் பேசுனோம்” தாயாய் மல்லிகா மனம் பதறி கேட்டிட,
“நீங்க மனசு வச்சா நடந்திடுமா? அந்த முருகப்பெருமான் மனசு வைக்க வேண்டாமா?”
‘அப்போ இவுங்க கல்யாணம் சரி வராதா சாமி?’ கிடைத்த வாய்ப்பை விடாது சரியாக பயன்படுத்திக் கொண்டாள் சுபா.
“சுபா அண்ணி என்னதிது அபசகுணமா பேசுறீங்க?” மேகலா கடிந்திட,
“இல்லை, சாமி சொல்றதை பாத்தா அப்படித்தானே தோணுதே!”
“இந்த கல்யாணம் சரிவராதுன்னு நான் சொல்லை. சில பல பிரச்சனைகள், தடங்கல்கலை தாண்டித் தான் நடக்கும். அந்த பிரச்சனைகளை இவுங்க சரியா கையாண்ட, இவுங்க திருமண பந்தம் உடையாம இருக்கும்.”
“இதுக்கு ஏதும் பரிகாரம் இல்லீங்களா சாமி!” முத்துபேச்சி கேட்டிட,
“அந்த ஆண்டவன் கொடுக்குற பிரச்சனையில இருந்து தப்பிக்க இது அவ்வளவு சுலபம் இல்லை இதுக்கு தீர்வு இல்லை ஆனா பிரச்சனையோட தாக்கத்தை குறைக்க முடியும்”.
“என்ன சாமி செய்யனும்?” என்றவன் யாராக இருக்க முடியும் முகிலனைத் தவிர,
“சரியா ஏழு வாரம் தவறாம உங்க கல்யாணம் எந்த வித தடங்கலும் வராம நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு பிள்ளையாருக்கு தண்ணி ஊத்தி துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் போடுங்க ரெண்டு பேரும். ஆறு வாரம் தனித்தனியா போடுங்க ஆனா கடைசி வாரம் இரண்டு பேரும் சேர்ந்து தான் செய்யனும்.”
“அப்புடி செஞ்சா எல்லாம் பிரச்சனை எல்லாம் முடிஞ்சிடுங்களா?” சுபா தான் கேட்டது.
“பிரச்சனை முழுசா சரியாகுமான்னு அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். கண்டிப்பா பிரச்சனையோட தீவிரம் கொறைச்சி பெருசா பாதிப்பு வராம இருக்கும்.”
“சரிங்க சாமி, நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டு அதுக்கப்பறம் இவுங்களுக்கு உறுதி பண்ணிக்கிறோம்” என குருசாமி கூற,
“கண்டிப்பா நல்லதே நடக்கும்.முருகனை நம்பி ஆரம்பிங்க” என்றவர் விடைக் கொடுக்க அனைவரும் விடைபெற்றனர்.
இப்போது எதுவும் பேச வேண்டாம் என முடிவெடுத்தவர்கள் அவரவர் இருப்பிடத்திற்கு சென்று விட்டனர்.
அடுத்து வந்த இரு வாரமும் சித்தர் சொன்னது போல் இருவரும் தனித்தனியாக விளேக்கேற்றி வந்தனர்.
இந்நிலையில் மகாலிங்கம் இருவருக்குமான நிச்சய தேதியை குறித்து விடலாம் எனக் கூறிய பொழுது,
“அத்தை கொஞ்சம் யோசிச்சு எதுனாலும் செய்யுங்க, இது நம்ம முகிலன் தம்பியோட வாழ்க்கைப் பிரச்சனை. அந்த சித்தர் சொன்னதுல இருந்து மனசே சரியில்லை எனக்கு இந்த இடம் வேணுமான்னு யோசனையா இருக்கு.” என சுபா மெல்ல பேச்சியை மூளைச்சலவை செய்ய,
அவர் அப்படியே அதனை மகாலிங்கத்திடம் ஒலிப்பரப்ப,
“என்ன பேசுற முத்து? இப்போ இந்த இடத்தை விட்டுட்டு வேற இடத்துல பொண்ணு எடுத்தாலும் அதுலையும் பிரச்சனை இல்லாம போகும்னு உன்னால் உறுதிக் கொடுக்க முடியுமா? சும்மா கண்டதையும் நினைச்சு பயந்துக்கிட்டு, நல்ல இடத்தை விட முடியாது. அதான் சித்தர் அதுக்கு பரிகாரம் சொல்லிருக்காருல பண்ணட்டும். அப்பறம் எதுனாலும் பாத்துக்கலாம் நம்ம கூடத் தானே இருக்கப் போறாங்க” என முத்துவின் பேச்சினை டீலில் விட்டவர் அடுத்தடுத்து சுபா விரித்த எந்த வலையிலும் சிக்காது,
இருவருக்குமான நிச்யத் தேதினை குறித்து வந்துவிட்டிருந்தார். அவர்கள் நிச்சயத்திற்காக குறிக்கப்பட்டிருந்த தேதி அவர்கள் இறுதி வேண்டுதல் முடித்து இரண்டு நாட்கள் கழித்து வந்தது.
நிச்சய தேதினை பெண் வீட்டாரிடம் தெரிவிக்க மனமார ஏற்றுக் கொண்டனர்.
இடையில் நாட்கள் மின்னல் வேகத்தில் பறந்திருக்க. இன்று அவர்கள் வேண்டுதலின் இறுதி வாரம். முகிலன் கோவிலிற்கு சென்றிருக்க, இங்கே உறவினர்கள் வர ஆரம்பித்திருந்தனர்.
“ம்மாஆஆஆ” என சாத்விகாவின் அழுகையில் நினைவுகளில் இருந்து விடுபட்டவளுக்கு இனி இத்திருமணத்தை தடுக்க இயலாது என புரிந்து விட பெருமூச்செறிந்தவள் தனது நிலையை நொந்துக் கொண்டு சாத்விகாவை காணச் சென்றாள்.
“வருணா, ராகுகாலம் முடியறதுக்குள்ள விளக்கு போட்டுடணும் சரியா?” என கோவிலிற்கு கிளம்பிக் கொண்டிருந்த வருணாவிடம் மல்லிகா கூற,
கடந்த ஆறு வாரமாக கேட்பது தான், இருந்தும் புதிதாக கேட்பது போல் கவனமாக கேட்டுக் கொண்டாள். பின் இது அவளின் வாழ்வு சம்பந்தப்பட்டதல்லவா?
“வருணா அந்த தம்பி வந்தாருன்னா சேர்ந்து விளக்கேத்திட்டு சட்டுபுட்டுன்னு வர பாக்கணும். இன்னும் இரண்டு நாளுல நிச்சயம் ஞாபகம் இருக்குல்ல,
ஊர் வாய்ல விழுகாம இருக்கணும் புரியுதா?” என்ற தாயிற்கு மண்டைய ஆட்டியவளிற்கு உள்ளுக்குள் முகிலனை காண செல்வதால் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது.
வெளியே ரெடியாக இருந்த கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு கோவிலிற்கு செல்ல அங்கே இவர்களுக்காக காத்திருந்தான் முகிலன்.
“வந்து ரொம்ப நேரம் ஆச்சுங்களா?” கிருஷ்ணா கேள்வி தொடுக்க,
“இல்லை பத்து நிமிசம் தான் ஆகுது” என அவனிற்கு பதிலளித்தவன் வருணாவை காண,
“அங்க பைப் இருக்கு, நான் போய் தண்ணி பிடிச்சிட்டு வரேன்.” என்றுவிட்டு அவள் நகர,
செல்லும் அவளை பார்த்தப்படி இருந்தனர் இருவரும்.
தண்ணீரினை பிடித்து முடித்தவள் குடத்தினை தூக்கி இடுப்பில் வைக்க, சர்ரென்று வழங்கியது குடம். இத்தனை வாரமும் கிருஷ்ணா உடன் வருபவன் அவனே தூக்கி வந்து சாமிக்கு ஊற்றும் போது மட்டும் குடத்தினை அவள் கைகளில் தருவான்.
இன்று முகிலனிடம் அவன் பேசிக் கொண்டிருக்க, தொந்தரவு செய்ய வேண்டாம் என வந்து விட்டவளுக்கு இப்போது குடம் சதி செய்தது.
அங்கிருந்து நான்கடிகள் நடந்திருப்பால் அதற்குள் நானூறு முறை குடம் வழுக்கியிருந்தது. அவள் செய்கையில் முகிலனிற்கு சிரிப்பு வர,
“இருங்க வந்திடுறேன்” என்றுவிட்டு வேகமாக வருணாவின் அருகே சென்றிருந்தவன் இம்முறை அவள் இடுப்பில் இருந்து வழுக்கிய குடத்தை தூக்கிப் பிடித்திருந்தான்.
“ரொம்ப பலசாலி போல?” என்றவள் கிண்டலாக கேட்க அசட்டு சிரிப்பொன்றை அவனிற்கு வழங்கியவள் அவனுடன் சென்றாள்.
நேரே விநாயகரிடம் சென்றவர்கள் அவரை மூன்று சுற்று சுற்றிவிட்டு சேர்ந்து அந்த குடத்தினை தூக்கிப் பிடித்து தண்ணீரை ஊற்றினர்.
பின்னே துர்க்கை அம்மன் சன்னதி சென்றவர்கள், சித்தர் கூறியது போல் ஏழு எலுமிச்சை தீபத்தினை ஏற்றி அவர்களது திருமண தடை நீங்க மனதார வேண்டியவர்கள் கோவிலை சுற்றி வந்தவர்கள் வெளியே வந்து அமர,
கோவிலில் கொடுத்த பிரசாதத்தினை வாங்கி கொண்டு வந்தான் கிருஷ்ணா. நேரே பிரசாத்தினை வருணாவிடம் கொடுத்துவிட்டு அவளருகே அவன் அமர்ந்துக் கொள்ள,
சுடசுட இருந்த சர்க்கரைப் பொங்கலை கண்டதும் முகிலனை மறந்து வேகமாக அவள் அதனை எடுத்தவள் உண்ண செல்ல,
அவளின் முழங்கையில் ஓங்கி ஒரு இடி இடித்தான் கிருஷ்ணா. அதில் வலி வர அவள் திரும்பி அவனை முறைக்க,
“தீனிப்பண்டாரமே அவருக்கு மொத கொடுடி” என பல்லிடுக்கில் அவன் கடிய,
“ஹி ஹி ஹி மறந்துட்டேன்” என்றபடி ஒரு வில்லை எடுத்து முகிலனிடம் கொடுக்க, நமட்டுச் சிரிப்புடன் அதனைப் பெற்றுக் கொண்டான் அவன்.
முகிலனிற்காவது கொஞ்சமாக கொடுத்தவள், கிருஷ்ணாவின் புறம் பார்வையை கூட திருப்பவில்லை.
“நங்” என்ற அவளது தலையில் ஒரு கொட்டினை இட்ட கிருஷ்ணா,
“நான் ஒண்ணும் புடுங்கிட மாட்டேன்.மெதுவா சாப்பிடு கொரங்கே” என்றவனிற்கு அவளின் சிறுபிள்ளை செயலில் சிரிப்பு வரப் பார்த்தது.
அடுத்த என்ன என அவர்கள் யோசிக்கும் முன்பே மல்லிகாவிடம் இருந்து போன் வந்து விட,
“நான் வண்டியை எடுத்துட்டு வெளியே வெயிட் பண்றேன் வந்திடு” என்றுவிட்டு கிருஷ்ணா அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டுச் செல்ல,
இருவரும் மெதுவாக எழுந்து வெளியே வந்தனர். மெதுவாக தயக்கமின்றி அவளது விரல்களை முகிலன் பற்றிக் கொள்ள அவனது இழுப்பிற்கு தனது கைகளை விட்டு விட்டாள் வருணா.
“இப்போ பயம் போயிடுச்சா?” அவன் கேட்க,
“நம்ம கல்யாணம் முடிஞ்சு நான் உங்கிட்ட வர்ற வரை இந்த
பயம் கொறையாது” என மனதில் நினைத்தை பட்டென அவள் கூறிட இவனிற்கு சிறு வெட்கம் வந்தது.
“சேட்டைக்காரி, யோசிக்கிறது எல்லாம் பட்டுபட்டுன்னு பேசிடுறது” என அவள் பின்னந்தலையில் அவன் லேசாக அடிக்க,
“யோசிச்சுப் பேச, நீங்க என்ன வெளி ஆளா?” என அவள் புருவம் உயர்த்த,
“ஓஹோ இல்லையா அப்போ நான் யாரு?”
“ம்ம்ம் என் ஆளு!!” என அவள் கண்ணடித்துக் கூற அவளின் பேச்சில் இவன் முகம் சிவந்து விட்டது.
அடுத்த அவளிடம் வாய் கொடுக்காது,
“சரி சரி நேரம் ஆகிடுச்சு கிளம்பலாம்” என்றுவிட்டு இருவரும் வெளியே வர,
பூக்கடையினை பார்த்ததும் முகிலனின் கால்கள் தானாக அவ்விடம் சென்றது.
அவளிற்கு பிடித்த மல்லிப் பூவினை வாங்கியவன் அவளிடம் கொடுக்க,
வாங்கியவள்,
“ம்ஹீம் நான் உங்க ஆளில்லையா?” என்க,
“ம்ம்ம் இப்போதைக்கு இல்லை, கல்யாணம் முடிஞ்ச அப்பறம் தான் நீ முழுசா என் ஆளு”
“ஹலோ? இரண்டு நாள்ல நம்ம நிச்சயம், நிச்சயம் முடிஞ்சா பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி”
“ஓஹோ அப்போ சரி இப்போ பாதி ஆளு, அப்றம் முழு ஆளு”
“அதெப்புடி…” என்றவளை இடைமறித்தவன்,
“போதும் வருணாக்ஷி நேரமாகிடுச்சு கிளம்பு, உங்க அண்ணன் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணு
வாங்க, வாய் வலிக்கவே வலிக்காது போல கிளம்பு” என அத்தனை நேரம் இதமாக இருந்தவன் சடன் வாத்தி மூடுக்கு மாறியிருக்க,
“ம்ஹீம் வாத்தி மூடு ஆன்( on)" என முணுமுணுத்தவள் அவனிடம் விடைபெற்றிருந்தாள்.