எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மதியின் வேந்தன் - 5

subasini

Moderator
பகுதி – 5



ரேணுகாவிற்குக் காலை நேரம் அழகாக விடிந்தது... கல்யாணப்பெண்ணாக மிகவும் அழகாக அவளை அலங்கரித்திருந்தாள் மதுமிதா... கதிர்வேந்தனும் தருணும் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர்...



பாலமுருகன் தன் மனதில் மித்ராவின் வாழ்க்கையைக் குறித்து வேதனை இருந்த போதும், தன் வளர்ப்பு மகள் ரேணுகாவின் திருமணத்தில் எந்தக் குறையும் இல்லாமல், ஒரு தாய்மாமனாக இருந்து, அவள் தந்தை ஸ்தானத்தில் தன் கடமையைச் செய்தார்...



முகூர்த்த நேரம் நெருங்க நெருங்க மதுமிதாவிற்குப் பதட்டமானது... இனி வரும் காலம், கணவனை மனதளவில் நினைக்கும் உரிமையையும் இன்று இழக்கப்போகிறாள்..



அவன் மேல் கட்டுக்கடங்காத கோபம் இருந்த போதும், மனதில் ஓரத்தில் சில்லென்றப் பனித்துளியாகக் காதல் அவள் வேதனையைக் குளிரவித்துக்கொண்டிருந்தது.. அதற்கும் முற்றுப்புள்ளியாக இதோ இந்தக் கல்யாணம்...



கதிர்வேந்தனிடம் காதல் வயப்படுவாள் என்று அவள் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை... எல்லாம் தலைகீழ் கோலமாக மாறிவிட்டது...அவன் மேல் உண்டான காதலே அவனிடத்துச் சினம்கொள்ள வைத்தது அவளை..



தன் காதலை உணர்ந்ததும், அதைக் கொண்டாட முடியாமல் சமாதிக் கட்டி விட்டது இந்த விதி ... தோழியின் காதலன் மேல் தனக்கு வந்த இந்தக் காதலையும், தன்னையும் நிந்தித்துக்கொண்டாள் ...



அந்த அளவிற்குத் தரமில்லாதவளாகிவிட்டோமே என்று மனதில் வேதனைப்பட்டவள்.. இந்தக் கல்யாணம் முடிந்ததும், எங்காவது கண்கானத் தூரம் சென்று வாழவேண்டும்.



ரேணுகாவின் வாழ்க்கையில் தன்னால் எந்த இடையூறும் வரக்கூடாது என்று பலவாறு எண்ணவோட்டதில் பயணித்தவளை நிகழ்க்காலத்திற்கு அழைத்து வந்தது மணமகளை அழைக்க வந்த மாப்பிள்ளை வீட்டினரின் குரலில்...



அவர்களோடு இணைந்து ரேணுகாவை மணமேடைக்கு அழைத்து வந்தவள் மாப்பிள்ளையாகக் கதிர்வேலனைக்கண்டு அதிர்ச்சியில் அப்படியே ஒரு நிமிடம் உறைந்து விட்டாள்...

அவள் கால்கள் சில மணித்துளிகளில் தடுமாறியது. தன்னைச் சுதாரித்தவள் மெல்ல நிகழ்வுக்கு வந்தவள், தன்னைச்சுற்றி விழிகளைச் சுழற்றிக் கணவனைத் தேடினாள்.



அங்கே அழுத்தம் மட்டுமே அவன் முகத்தில் இருக்க, மனதின் அழுத்தம் இதழின் புன்னகையைத் திருடிக்கொண்டது... கடுமையான முகப்பாவத்தோடு அவளுக்கு எதிர் புறத்தில் நின்றிருந்தான்.



விழாவில் அமைதியான முகத்துடன் வலம் வருபவனின் மனதில் பல குழப்பங்கள் ... தான் முடிவெடுக்கவேண்டிய கட்டதிலும் ,கட்டாயத்திலும் நிற்பதை நன்றாக உணரமுடிந்தது கதிர்வேந்தனுக்கு...



எல்லாம் நல்லபடியாக நடந்தேறுகிறதா? என்றுக்கண்காணித் கொண்டிருந்தப்போதும் மனைவியையும் தன் விழி வளைவிலேயே வைத்துக்கொண்டிருந்தான்...



திருமணம் முடிந்ததும் சிட்டாகப் பறந்து விடுவாள் என்று, அவன் மனதினோரத்தில் ஒரு சந்தேகம் இருந்து, அவளைக் கண்காணிக்கச் சொல்லியது...



அவன் எண்ணியது சரி என்பது போலத்தான் அவளும் முடிவுச் செய்திருந்தாள்...

மணமகனாகக் கதிர்வேந்தன் என்று தவறாக நினைத்துக்கொண்டு அவனை என்ன எல்லாம் சொல்லிவிட்டாள்.. வார்த்தைகளைக் கட்டுப்பாடில்லாமல் அவன் மேல் வீசிக்குற்றப்படுத்தி இருக்கிறாள்...



அவன் தன்னிடம் ஏன் எதுவும் கூறவில்லை என்று மீண்டும் மனதில் கணவன் மேல் கோபம் வந்து அமர்ந்தது கொண்டது...



அவன் மேல் கோபம் கொள்ளக் காரணங்களைத் தேடுக்கொண்டிருக்கிறது அவள் மனம்... காதல் ஒரு பைத்தியம் தான் என மீண்டும் நிருபித்தாள் மதுமிதா...



கெட்டி மேளம் சத்ததில் தெளிந்தவள், தன் கணவனைத் தேடினாள் சுற்றியும்... அவளுக்குப் பின்னில் தான் நின்றுக்கொண்டிருந்தான்... அவள் சுற்றியும் யாரையோ தேடுவது கண்டு , அருகில் குனிந்து மெல்ல அவள் காதில் “என்னத்தான் தேடுகிறாயா ?” என்றான்...



தன் கணவனின் குரலில் மெல்ல மெய்ச் சிலிர்த்தாலும்.. எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் 'இல்லை' என்று தலையசைத்தவள் மெதுவாகப் பானுமதியின் அருகில் போய் நல்லபிள்ளையாக நின்றுக்கொண்டாள்...



ஆனால் மனதில் தான் நினைத்த எதுவும் நடக்காமல் போனதில், இனி என்ன? என்ற கேள்வி அவளைப் பயமுறித்தியது ...



தனக்கும் வேந்தனுக்குமான உறவில் எதிர்காலம் என்ன என்று எண்ணிப்பார்க்கும் போது , மிகப்பெரிய பிரச்சனையைக்கொண்டு வருமோ என்ற கிலிப் பிடித்தது ...



தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் , இது வரைக்கும் எந்த உண்மையையும் யாரிடமும் சொல்லாமல் இருந்தது, எவ்வளவு பெரிய பிழை என்று இப்போது புரிந்தது மதுமிதாவிற்கு...



அண்ணனின் மனைவியாகத் தன் கடமையைச் செய்தாள் தான்.. மித்ராவிற்குக் கூடவே இருந்து எல்லாம் பார்த்துக்கொண்டாள்... ஆனால் மருமகளாக என்று யோசிக்கும் போது கால்கள் நடுங்கியது...



அவர்கள் வீட்டுப் பிள்ளையிடம் தாலி வாங்கித் தொங்கத் தொங்கக் கட்டிக்கொண்டு வலம் வருகிறேன், இன்னும் யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறேன். இது தவறல்லவா, தன்னைபற்றி என்ன நினைப்பார்கள்...



கதிர்வேந்தன் செய்தது தவறு தான், அதற்கு மன்னிப்பு என்பதில்லை என்றாலும் தான் செய்ததும் பிழையல்லவா... அதைத் திருத்த வேண்டும் , எப்படி என்று தான் தெரியவில்லை...



அவன் தனக்குத் தாலியைக் கட்டிய அன்றே வந்து பானுமதியிடம் சொல்லியிருக்கவேண்டுமோ! எனக் காலம் தாழ்ந்து அவளுக்கு அறிவு வேலைச் செய்தது...



இனி எப்படிச் சொல்ல என்ற பயமும் தயக்கமும் , அவளுக்கு இங்கே இருந்து போவது தான் சிறந்த வழி எனத் தோன்றியது...



திருமணம் முடிந்து ஓய்வாகக் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருந்தனர்...

விழா முடிந்து எல்லாம் அவர்வர் வீட்டிற்குச் விடைப்பெற்றனர்....



அதில் பானுமதியின் தூரத்து உறவினர் வந்து “ அடுத்து, கதிர்வேந்தனுக்குத் தானே கல்யாணம் , சரிதானே பானு” என்றதும் பானுமதியோ சிரித்து மலுப்பினார்...



என்ன சொல்ல இவர்கள் உறவை எப்படிச் சபைக்குக் கொண்டு வர , தன் கணவரை நினைத்தால் வயிற்றில் பயபந்து உருண்டது... இந்த உண்மையை மெதுவாக அவரிடம் தன்மையாகச் சொல்லி முறைப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று மனதில் எண்ணிய எண்ணத்தில் மண் அள்ளிப் போட தீர்மானித்திருந்தான் கதிர்வேந்தன்...



அனைவரும் சென்றதும் வீட்டு உறுப்பினர்கள் மட்டும் இருக்க, கேள்விக் கேட்ட அந்த உறவனர்

“சரி நாங்கள் கிளம்பறோம் பானு” என்று சென்றார்.



அவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டே வந்திருந்தான் கதிர்வேந்தன் ...



கணவனைக் கண்டதும் இனி இங்கிருந்தால் சரியாகாது என்ற அவள் உள்ளுணர்வு எடுத்துக்கூற வேகமாகப் பானுமதியிடம் வந்த மதுமிதா “அத்தை நானும் கிளம்பறேன்” என்றாள், ஆனால் எங்கே செல்ல, இப்பொழுது இருக்கும் வீட்டையும் காலிச் செய்து விட்டு வந்திருந்தாள்.



இதே ஊரில் வேலைக் கிடைக்கவும், மித்ராவை வீட்டில் ஒப்படைத்துவிட்டு, தன் வாழ்க்கையைக் கணவனின் நினைவில் கடந்து செல்வது எனத் திட்டமிட்டிருந்தாள்.



அவளின் இந்த முடிவில் அதிர்ச்சியான பானுமதி “என்ன அவசரம் மது, கொஞ்சம் பொறுமையாகப் போகலாம், உன்னிடம் எனக்குக் கொஞ்சம் பேசணும்”...



“ இல்லை அத்தை, நான்” ...என்றவள் கண்கள் கலங்கவதைக் கட்டுப்படுத்தியவாறே செல்ல எத்தனிக்கவும் ...



“எங்கே கிளம்பிட்ட” கடுமையான குரலில் கேட்டான் கதிர்வேந்தன்..



“நான்... போறேன்...”



“எங்கே” ...



“இல்லை... கல்யாணம் முடிஞ்சுருச்சே... அதுதான்" ... என்று இழுத்தவளிடம்...

“ போகணும் என்று முடிவு செய்து விட்டாய் , அப்படித் தானே?”



“ஆமாம்”



“சரி போகறது என்று முடிவு செய்து விட்டாய் அப்படியே, நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கவா , உனக்கு ஓகேவா, எந்த ஆட்சேபனையும் இல்லை என்று, உன்னோட சம்மதத்தையும் சொல்லிட்டுப் போ” என்றான் கதிர் வேந்தன்...



அவனின் இந்த அதிரடியில் எல்லோரும் அதிர்ச்சியாகினர். பானுமதிக்கோ மயக்கம் வரும் போல் இருந்தது. தன் கணவனைத் தான் பார்த்துக்கொண்டிருந்தார், கதிர்வேந்தனின் அதிரடியில் என்ன நடக்கப்போகுதோ என்று பதட்டம் அவரை நிலைக்கலையச்செய்தது.



இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்ப்பார்க்காதவளுக்கு, எல்லா உண்மையும் தெரிந்தால் தங்களப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையே மதுமிதாவிற்கு மயக்கம் வரும் போல் இருந்தது. கால்கள் தடுமாற உடல் நடுங்கியது...



“வேந்தா என்ன பண்ணற, அந்தப் பொண்ணுப் பயபடுகிறாள் பாரு டா ... என்ன விளையாட்டு இததெல்லாம்” தன் குரலை உயர்த்தியவாறு வந்தார் பாலமுருகன்.



தருணுக்கு ‘அவன் கேட்டக் கேள்வியின் அர்த்தம் புரிந்துக்கொள்ளாமல் இந்த மாமா பெர்பாஃமென்ஸ் பண்ணறாரு, இன்றைக்கு ஒரு சம்பவம் இருக்கு’ என்ற மனதில் நினைத்தான் ...



“இப்படிப் பதிலே சொல்லாமல் மௌனமாக இருந்தால் என்ன

அர்த்தம் , எதாவது பதில் சொல்லு மது" என்று அவள் அருகில் வந்தவன் சரசமாக " என்ன கல்யாணம் பண்ணட்டா”... என்று மெல்லக் கேட்டவனின் வார்த்தைகளில், அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவளுக்கு, காதலை விழிகளில் நிரப்பி, அவளுள் ஊடுருவிக்கொண்டிருந்தான் கதிர்வேந்தன்.



காதலின் முன் பலமிழந்து நின்றவளின் கண்களில் நீர்த் தழும்ப, கணவனைப் பார்த்தாள் மதுமிதா...



தன் மகனுக்கு என்ன ஆச்சு வீட்டுற்கு வந்த விருந்தினர் பெண்ணிடம் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான் என்று கோபத்தில் “கதிர் நம்ம வீட்டுக்கு வந்தவங்களிடம், ஏன் இப்படி மரியாதைக்குறைவாக நடந்துக்கொள்கிறாய்? என்ன பழக்கம் இது?” என்று கோபத்தில் அவன் அருகே வந்தவரிடம்,



“வீட்டுக்கு வந்தவங்களிடம் கேட்டக் கூடாது , என் பொண்டாட்டியிடம் கேட்கலாம் தானே” என்று பதில் அவரிடமும் பார்வையை மனைவியிடமும் வைத்திருந்தான்...



“என்ன, சொல்ல வர... உனக்கு” என்று கேட்டவரிடம்



“ஆமாம், கல்யாணம் ஆகிருச்சு, அவள் கழுத்தில் இருக்கும் தாலி நான் கட்டினது தான், அவளிடமே கேளுங்க” என்றான் கதிரவேந்தன்...



இப்படி நடுகூடத்தில் அவர்களின் திருமணம் பற்றிய செய்தியைப் போட்டு உடைப்பான் என்று மதுமிதா நினைக்கவில்லை ...



வேந்தா!! என்றபடி அவனை அடிக்கக் கை ஓங்கியவரைப் பார்த்துப் பல குரல்கள் ஒலித்தது வீட்டின் அனைத்துப் பக்கம் இருந்து...



இப்பொழுது அனைவருக்கும் புரிந்தது அவன் ஏன் திருமணம் வேண்டாமெனத் தட்டிக்கழித்தான் என்று , ரேணுகாவின் பழியல்ல, அவனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்பது தான் உண்மை . இவ்வளவு நாட்களும் இந்தப் பழியைச் சுமந்துக்கொண்டே இருந்திருக்கிறான்...

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க அவன் தந்தை சினத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தார் ...



“என்ன பேசற நீ, கல்யாணம் ஆகிருச்சா! பெத்தவங்கக் கிட்டச் சொல்லணும் உனக்குத் தோன்றவே இல்லையாடா? கல்யாணம் மட்டும் தானா ? இல்லை குழந்தைக்குட்டி எதாவது” என்று அவர் கேட்கவும்...



“ம்க்கும் , இவளைக் கல்யாணம் பண்ணினா அதற்கெல்லாம் ஆசைப் பட முடியுமா? என்ற அவளுக்கு மட்டும் கேட்குமாறுக் கூறியவனின் வார்த்தைகளில், கண்ணில் நீர் மல்க அவனையே தவிப்போடு பார்த்தாள். கணவனிடம், தான் கூறிச்சென்ற வார்த்தைகளின் ஆழம் மெல்ல அவளை உள்ளிழுத்ததை உணர்ந்தாள்...



“அப்பா, அதெல்லாம் ஒன்னும் இல்லை, உங்க கற்பனையைக் கொஞ்சம் நிறுத்துங்கள்" என்றான் கடுப்பாக..



“பார்த்தாயாடி உன் பிள்ளையின் லட்சனத்தை.. தப்புப் பண்ணிட்டு என்ன திமிராக நிக்கறான் பாரு” என்று கத்தியவர், அப்பொழுது மனைவியின் முகத்தில் இருக்கும் பதட்டத்தைக் கவனித்தார் ...



“என்ன நீ எதுவும் பேசாமல் இருக்க, இதெல்லாம் பார்த்து , நீ தானே சண்டைப் போடணும், இப்படி அமைதியாக இருக்க” என்றார், பாலமுருகன்...



“அவன் கல்யாணம் பண்ணின விஷயம் எனக்கு” என்று வார்த்தைகளை முடிக்கும் முன்னர் மனைவியைத் தன் பலம் கொண்டு அடித்திருந்தார்... அவர் அடித்தில் அவர் மூக்குத்தித் தெரித்துப் போனது... இந்த நிகழ்வை யாரும் எதிர்பார்க்கவில்லை... “என்னடி அம்மாவும் பிள்ளையும் என்ன கோமாளி ஆக்கறீங்களா, வியாபாரம் விஷயத்தில் தான் நான் ஓய்வு எடுத்து இருக்கேன், குடும்பத்தில் இல்லை, நான் இன்னும் சாகவில்லை... உயிரோடத்தான் இருக்கேன்.. என்று கத்தியவர்... என் முகத்திலேயே முழிக்காதே” என்று வேகமாகத் தன் அறைக்குச் சென்று, கதவைப் பலமாக அடித்துச் சாத்தினார். தன் கோபத்தைக் அந்த உயிரற்றப் பொருளிடம் காட்டினார்...





திருமணமான இத்தனை வருடகாலத்தில் முதல்முறையாக அதீதகோபத்தில் தன் மனைவியை அடித்திருந்தார் பாலமுருகன்... அனைவரும் அப்படியே உறைந்துப்போய்விட்டனர்...



பானுமதி, தன் கணவரிடம் இருந்து இப்படி ஒரு செயலைச் சற்றும் எதிர்பாரக்கவில்லை, நிலைதடுமாறி விழப் போகவும் அவரைத் தாங்கிப்பிடித்தான் தருண்..



“அத்தை, பார்த்து” ...

“எனக்கு ஒன்றுமில்லை தரு , விடு” என்றவருக்குப் பிள்ளைகளின் முன் அடிவாங்கியதில் ரொம்ப அவமானமாகக் கருதினார் ...



தன்னால் அடிவாங்கிய தாயைக் கண்டதும், வேதனையைத் தாளாமல் அவர் அருகே வந்து நின்றான் கதிர் வேந்தன். தாயை எப்படிச் சமாதானம் செய்வது என்று தெரியாமல் தினறினான்...



ராதிகா, தன் அண்ணியிடம் வந்து , "விடுங்க அண்ணி, அண்ணா ஏதோ கோபத்தில் இப்படி நடந்து கிட்டாரு, நீங்க உக்காருங்க நான் குடிக்கத் தண்ணி எடுத்துட்டு வரேன்” என்று சென்றார்...



வேகமாக அவர் கையைப் பிடித்து "அம்மா" என்ற கதிர்வேந்தனை உதறிதள்ளினார் அவன் தாய்...



"அன்றைக்கே ஒரு வார்த்தை என்னி்டம் சொல்லி இருக்கலாம் தானே, இரண்டு பேரும்" என்ற

பானுமதியிடம் வந்து அமர்ந்தாள் மதுமிதா...



“அத்தை என்னை மன்னிசிருங்க, தப்பு என் மேலைத்தான் , உங்களிடம் வந்து சொல்லியிருக்கணும், ஆனால் பயம் தான் என்னைத் தடுத்தது, அதற்கும் மேலே எனக்கு இதை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை”



“ பயத்தினாலச் சொல்லவில்லை சரி, ஆனால் என் பையன் கையால் தாலியை வாங்கிட்டு , நீ எங்கையோ போய் விட்டாய்... நாங்கள் பெத்தக் கடமையைச் செய்வதற்கு அவனுக்குக் கல்யாணம் பண்ணி இருந்தால் என்ன பண்ணியிருப்ப மது, எப்படிப்பட்ட கலங்கத்தைச் சுமந்துட்டு இருக்கான் தெரியுமா? உங்களோட பொறுப்பில்லாத செயலால் எவ்வளவு பேர்க்குப் பாதிப்பு.



அது சரி தவறு செய்யும் போது வரும் தைரியம், அதைப் பெரியவர்களிடம் சொல்லவோ, அந்தத் தவறை நேரிடவோ வருவதில்லை இந்தக் காலபிள்ளைகளுக்கு அப்படித் தானே ...

” என்று அவளிடம் பானுமதி வருத்தப்பட்டார்...



“ஒரு மருமகளாக, அண்ணியாக உன் கடமையை நல்லவிதமாகப் பண்ணி இருக்க, ஆனால் உங்க வாழ்க்கையைப் பத்தி யோசிக்கவே இல்லை, நீங்க இரண்டு பேரும், என்ன மனதில் நினைச்சுட்டு இருக்கீங்க, பெரியவங்க இருக்கோம் என்ற எண்ணமும் மரியாதையும் இருந்திருத்தால் உங்க இஷ்டத்துக்கு முடிவு எடுத்து இருக்க மாட்டிங்க” என்று தன் கோபத்தைக் கூட மென்மையாகப் பதிவு செய்தார் பானுமதி...



"உனக்கு இப்படிக் கல்யாணம் பற்றி , உன் அப்பா உயிரோடு இருக்கும்போது தெரிந்திருந்தால் .. என்ன ஆகி இருக்கும் ?" மருமகளிடம் கேட்டார்.



மதுமதியை அதற்கு தெரியவில்லை என்று பாவமாகத் தலையை ஆட்டினாள் ...



அதற்குப் பதிலாக “நான் அவரிடம் என் காதலை முதலில் சொன்னேன்” என்றான் கதிர் ...



“அவர் இறப்பதற்கு இரண்டு மாதம் முன்பே அவரிடம் சொல்லிட்டேன். நான் எதிர்பாராதது அவர் இறப்பு... கொஞ்சம் நட்களுக்குப் பின் அவளிடம் சொல்லப்போய்த் தான் இப்படி நடந்து விட்டது, அவளும் வேற ஊருக்குப் போயிட்டாள் , என் ப்ரென்ட் மூலமா அவள் இருக்கும் இடத்தைத் தேடிட்டு இருந்தேன் ... அதற்குள்ளாக இவளே இங்க வந்திட்டாள்” என்றவனை முடியும் வரை முறைத்தார் அவன் அம்மா..

சட்டென்று சூழ்நிலையைத் திசைத்திருப்பும் விதமாக அவள் அலைப்பேசிக்கு அழைப்பு வந்தது ... அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டுருந்தனர்.



என்ன செய்வது என்று தெரியாமல் " கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணறீங்களா, ப்ளீஸ்" தினறியவளைப் பார்த்து, “என்ன மது” எனக் கேட்டான் தருண்...



அந்த ஊருல இருந்து வீட்டைக்காலிச்செய்து விட்டேன். பொருட்களை எல்லாம் லாரியில் வந்து இருக்கு"... என்று தயங்கியனாள் மதுமிதா.



"எங்க இருக்காங்க" என்று கேட்டவன், வேகமாக அவள் அலைபேசியை வாங்கித் தங்கள் வீட்டின் முகவரியைக் கொடுத்தான்.



“ கீழே நீங்க தங்கி இருந்த வீடு காலியாக இருக்கு மது, இந்தப் பொருள்களையெல்லாம் அங்கே வைத்துக் கொள்ளலாம்" என்று மதுமிதாவிடம் கூறினான் தருண்...



மதுமிதாவோ தன் கணவனைப் பார்த்தாள். என்னமோ புருஷன் கிட்ட, கேட்டு எல்லாம் செய்வது போலப் பார்க்கறதைப் பாரேன், இதற்கு மட்டும் ஏன் என்னைப் பார்க்கணும் என்று முகம் திருப்பினான்.



கணவனின் பாராமுகம் வேதனைனயை உண்டாக்கியது. என்ன செய்ய என்று தெரியாமல்தன் மாமியாரைப் பாவமாகப் பார்த்தாள்...



மருமகளின் மனநிலையை உணர்ந்ததும், "தருண் அங்கே எல்லாம் இறக்கிட்டு, அவங்களை வைச்சே எல்லாம் செட் பண்ணிரு, கூடக் கொஞ்சம் பணம் குடுத்துக்கலாம்" என்று சட்டென முடிவுகளை எடுத்தார்.



மாமாயாரின் உரிமையான செயலில் உணர்ச்சி வசப்பட்ட மதுமிதா, அவரை அணைத்துக்கொண்டாள். அதில் எனக்கு யாருமே இல்லை உங்களைத்தவிர என்ற செய்தி இருந்தது.



யாரும் இல்லாமல் தவிக்கும் அவள் வலிகளை ஒரு பெண்ணாகப் புரிந்துக்கொள்ள முடிந்தது பானுமதியால். மருமகளை வாஞ்சையோடு அணைத்தாலும் அவளின் முகத்தில் இருந்த சிந்தனை ரேகையைக் கண்ட மதுமிதா,



"அத்தை, நான் மிகப்பெரிய தவறு செய்திட்டேன், என்னை மன்னிக்க மாட்டிங்களா ? என்று அழவும் அவளின் கண்ணீர், பானுமதியின் மனதைக் கரைத்தது...



' நம் மகனின் மேல் தப்பை வச்சுட்டு, இந்தப் பிள்ளையிடம் கோபத்தைக் காட்டி என்ன ஆகபோகுது' என்று நினைத்தவர் .. அமைதி ஆனார்...





பெற்றவளின் மனதில் பல கனவுகள்இருந்தது.. பிள்ளைகளின் வாழ்க்கையைப் பற்றி அதில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டனர் தன் இரு மக்களும்..



ம்ம் என்ன சொல்லி என்ன, இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் பாசம், நேசம் எல்லாம் காதல் மட்டும் தானே. பெற்றவர்களிடம் தங்கள் மனதின் ஆசைகளைப் பகிர வேண்டும் என்ற எண்ணம் வருவதே இல்லை.



தப்பான முடிவுகளைச் சுலபமாக எடுத்து விட்டுப் பின் பாதிக்கப்பட்டுத் தத்துவம் பேச மட்டுமே தெரியும். இந்த ஆர்வகோலாறுப் பிள்ளைகளுக்கு என்று தன் பிள்ளைகளின் செயலில் மனம் நொந்து போனார் அம்மாவாக.



பெண் ஓடிப்போனாள் என்றால், மகன் திருட்டுத் தனமாகத் தாலிக் கட்டி இருக்கிறான், ஒரு தாயாக... தன் வளர்ப்பு ஏன் இப்படித் தவறிப் போனது என்று மனம் நொந்து போனது...

காதலுக்குத் தான் எதிரி இல்லையே.. பின் ஏன் தன்னிடம் சொல்ல வில்லை என்று மனதிலேயே எல்லாம் வைத்துப் போராடினார், பானுமதி ..



இவ்வளவு துன்பத்தின் இடையில் கணவனின் கோபமும் பாரா முகமும் மிகவும் வேதனைனயத் தந்தது... எப்பொழுதும் இந்தச் சமூகம் பிள்ளைகளின் தவறுகளுக்குப் பெற்றவளைத் தூற்றும், பிள்ளைகளோ பெற்றவளைத்தான் ஏமாற்றும் என்ற உண்மையைக் கசப்பின் ஊடே முழுங்கினார், பானுமதி.



பிள்ளைகளின் வாழ்க்கையைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தன் கணவனின் கோபத்தைக் கிடப்பில் இட்டார். 'ம்ம் இருக்கு அவருக்கு, எல்லம் முடியாட்டும்' என்று மனதில் கணவனை நினைத்தும் பட்டெனக் கண்ணீர் எட்டுப் பார்த்தது பானுமதிக்கு.



இப்படியே கோபமும் வாக்கு வாதமுமாகபோனதில் மாலை நேரம் ஆனது...

தன் கோபத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார் பாலமுருகன்..



'என்ன செய்துவிட்டேன் ச்ச்சே... அவளை எதற்கு அடித்தேன்..வேந்தன் செய்தத் தவறுக்கு ... இப்போ எப்படி அவள் முகத்தைப் பார்ப்பேன்... அவளுக்குத் தெரிந்திருந்தால் கண்டிப்பாக என்னிடம் சொல்லி இருப்பாளே! இது வரை எதையும் என்னிடம் மறைத்ததில்லை'... என்று தனக்குள்ளேயே போராடியவர், கடிக்காரத்தின் நேரத்தைப் பார்க்க அது மாலை நேரத்தைக் காட்டியது... மாலைநேரத் தேனீர்க் குடிக்கக் கீழே போகலாம் என் நினைத்தவர் மெல்ல வெளியே வந்தார்..



வரவேற்பறையில் பானுமதியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கும் மருமகளைப் பார்த்துக்கொண்டே கீழே வந்தார் பால முருகன்... தன் மாமானாரைப் பார்த்ததும் அமைதியானாள் மதுமிதா...



அந்நேரம் அவளின் வீட்டுப்பொருட்களையெல்லாம் கொண்டு வந்திருக்கும் வாகனத்தின் ஓட்டுனர் தருணை அழைக்கவும் சரியாக இருந்தது...



“ம்ம் இதோ வரேன், அதே வீடு தான் , நான் வீட்டின் சாவியை எடுத்துட்டு வரேன்” என்றவன்...

“அத்தை அந்தக் கீழ் வீட்டுச்சாவி எங்கே இருக்கு”... என்றான் தருண்.



ஹேங்கரில் இருந்து சாவியை எடுத்த கதிர்வேந்தன் “ வா டா, தருண் போகலாம் ” என்று தந்தையைக் கடந்து சென்றான், அவரைப் பார்க்காமலேயே.. அவனுக்கு அவரின் மேல் கோபம் இருந்தது.



தன்னுடைய தவறுக்கு, அனைவரின் முன்னே அம்மாவை அடித்தது அவனுக்கு வலித்தது ... அந்த நிகழ்வுக் கண் முன் வரவும் சட்டெனக் கண் கலங்கிப் போனது கதிர்வேந்தனுக்கு. என்ன இருந்தாலும் இப்படிச் செய்து இருக்கக் கூடாது என்று மனதில் புலப்பினான் பானுமதியின் மகன்...



வண்டியில் வந்து இறங்கிய பொருட்கள் அனைத்தையும் இறக்கி, வந்த ஆட்களை வைத்தே வீட்டில் எல்லாம் அடுக்கி வைத்தனர்... இருவரும் மௌனமாகவே வீட்டை ஒழுங்குப் படுத்திக்கொண்டிருந்தனர்...



தருணிடம் பேச, கதிரவேந்தன் எடுத்த முயற்சி எல்லாம் வீணாகிப் போனது. அவனின் இந்தச் செயலில், ஒரு கட்டத்தில் தருணே சிரித்து விட்டான்... அவன் புன்னகையைக் கண்டதும் மனதில் ஒரு நிம்மதிப் பிறந்தது கதிர்வேந்தனுக்கு ...



வேலை எல்லாம் முடிந்ததும் வந்த ஆட்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பி விட்டு, வீட்டிற்குச் செல்லதிரும்பிய தருணிண் கைப்பிடுத்து நிறுத்தினான் கதிர்வேந்தன்...



"டேய் நில்லுடா... நீ ஏன்டா இப்படி முகத்தைத் திருப்பிட்டுச் சுத்தற.. எதுவாக இருந்தாலும் கேளுடா... எனக்கு இருக்கிறது ஒரே ப்ரெண்ட், நீ மட்டும் தான் டா" என்றான் கதிர் வேந்தன்.



அது வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபம் வெளிப்பட்டது தருணுக்கு...



கையில் கிடைத்த பொருளை எடுத்து அவன் மேல் வீசியனான் தருண்.



வீசியப் பொருட்களை எல்லாம் லவகமாகப் பிடித்த கதிர் "டேய்... என்னடா".. என்று தருணிண் அருகில் சென்றான்..



தருண் உன்னிடம் சொல்லக்கூடாது எல்லாம் இல்லை டா .. ஏற்கனவே ரேணுகா மேலே கோபம் உனக்கு, அதில் அவள் ப்ரென்ட் தான், என் வேதனைக்குக் காரணம் என்று தெரிந்தால், இன்றைக்கு அவளுக்கு நீ உதவியிருப்பாயா?" என்ற அவனைப் பார்த்ததும், இல்லை என்ற அவன் பதிலே கதிருக்குப் போதுமானதாக இருந்தது...



"அதுதான் உன்னிடம் சொல்லவில்லை.. என் காதலை இன்னும் அவளிடம் நான் சொல்லவில்லை தருண்... அவளுக்கு என்னைப் பிடிக்குமா? கூடத் தெரியாது டா, நான் மட்டுமே காதலித்துக் கல்யாணம் பண்ணி" என்று சலித்தவனின் குரிலில் அப்படமாக வலித் தெரிந்தது...



தன் நண்பனின் நிலைப் புரிந்ததும் தன் மௌனத்தைக் கைவிட்டவன் “ என்னடா உளறிட்டு இருக்க, அது தான் உன்னைத் தேடி வந்திட்டாள் இல்ல அப்பறம் என்ன , ரொம்ப எல்லாம் யோசிக்காத, எல்லாம் சரி பண்ணிறலாம்” என்றான் தருண்...



“அவள் எங்கே டா வந்தாள் , நம்ம ரேணு வர வைச்சா, இல்லைனா வேற யாரைவது கல்யாணம் பண்ணிட்டு நல்லா வாழ்ந்து இருப்பாள்” என்றான். அன்று தன்னிடம் அவள் கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்தான்...



“சும்மா எதையாவது பேசிட்டு இருக்காதே, அவள் அப்படியெல்லாம் இல்லை வேந்தா, ரொம்ப நல்ல பொண்ணு டா”...



“ம்ம் நல்லபொண்ணு என்பதால் தான் நான் காதலித்தேன்" என்று கண் சிமிட்டினான் குறும்பாக..



“சரி சரி வா நம்ம வந்து ரொம்ப நேரம் ஆச்சி, என்னாச்சுப் போய்ப் பார்க்கலாம்” என்று மேலே சென்றனர்...

தொடரும்…
 

ComCASH24waync

New member
Мы предлагаем конфиденциальный способ обмена биткоинов на фиатные деньги.

Наш сервис гарантирует анонимность, исключая регистрацию.

Вы можете с максимальной скоростью перевести криптовалюту на карту с минимальными потерями.

Мы предлагаем доступность для всех пользователей, чтобы сделать ваш обмен максимально комфортным.

Выберите безопасный способ обмена криптовалюты с нашей платформой и получите максимальную скорость.



<a href="https://comcash.io/ru/exchange/USDTTRC20-CASHRUB/create">usdt trc20 на карту в рублях</a>
<a href="https://comcash.io/ru/exchange/BTC-TCSBRUB/create">вывод биткоинов на карту тинькофф</a>
<a href="https://comcash.io/ru/exchange/BTC-ETH/create">обмен bitcoin на ethereum без верификации</a>
<a href="https://comcash.io/ru">обменник криптовалют</a>
<a href="https://comcash.io/ru/exchange/TONCOIN-CASHRUB/create">ton coin в рубли</a>
<a href="https://comcash.io/ru/exchange/BTC-ETH/create">обмен bitcoin на ethereum без верификации</a>
<a href="https://comcash.io/ru/exchange/BTC-ETH/create">обмен bitcoin на ethereum через биржу</a>
<a href="https://comcash.io/ru/exchange/BTC-TCSBRUB/create">обменник биткоин на тинькофф</a>
<a href="https://comcash.io/ru/exchange/USDTTRC20-SBERRUB/create">обмен usdt на сбер tether trc20 usdt в рублях</a>
<a href="https://comcash.io/ru/exchange/BTC-SBERRUB/create">биткоин на рубли на карту сбербанка</a>
 

ComCASH24waync

New member
Мы предлагаем быстрый способ обмена биткоинов на фиатные деньги.

Наш сервис гарантирует отсутствие скрытых комиссий, исключая регистрацию.

Вы можете без ожидания обменять эфириум на электронный кошелек с лучшими условиями.

Мы предлагаем широкий выбор валют, чтобы сделать ваш обмен безопасным.

Выберите быстрый способ обмена криптовалюты с ComCASH и получите моментальные переводы.



<a href="https://comcash.io/ru/exchange/USDTTRC20-CASHRUB/create">курс usdt trc 20 в рублях</a>
<a href="https://comcash.io/ru">без kyc</a>
<a href="https://comcash.io/ru/exchange/USDTTRC20-CASHRUB/create">1 usdt trc20 сколько рублей</a>
<a href="https://comcash.io/ru/exchange/USDTTRC20-TCSBRUB/create">тинькофф usdt</a>
<a href="https://comcash.io/ru/exchange/BTC-ETH/create">обмен bitcoin на ethereum через p2p</a>
<a href="https://comcash.io/ru/exchange/ETH-TCSBRUB/create">обмен eth на тинькофф</a>
<a href="https://comcash.io/ru/exchange/TONCOIN-SBERRUB/create">вывести ton на карту</a>
<a href="https://comcash.io/ru/exchange/USDTTRC20-CASHRUB/create">usdt trc20 цена в рублях</a>
<a href="https://comcash.io/ru/exchange/BTC-SBERRUB/create">перевести биткоин на тинькофф</a>
<a href="https://comcash.io/ru">обменник криптовалют на рубли</a>
 
Top