எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 10

வான்மழை 10

“ஷப்பா! எவ்வளவு கிஃப்ட்ஸூ, ஒரு ஒருத்தன் பேக்ல இருந்தும், வண்டி வண்டியால கிடைக்குது” என்றவாறு மாணவ மாணவியரின் பையினுள் இருந்து எடுத்த பொருட்களையும், முகிலனின் மேஜை மீது கொட்டினர் வாசு.
முகிலனுடன் வேலை புரியும் சக பணியாளர்.

தன் முன் கிடந்த அத்தனை பொருட்களையும் பார்த்த முகிலனுக்கு அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.

இன்று பிப்ரவரி 14 காதலர்கள் தினம். இன்றைய ஆண்டு வார நாட்களில், காதலர் தினம் வந்து விட்டிருக்க, மாணவர்களின் பையினை சோதனை இட்டதில், விதவிதமான காதல் பரிசைகளை கைப்பற்றியிருந்தனர்.

இப்படி, சோதனை செய்வதில் முகிலனுக்கு சுத்தமாக உடன்பாடில்லை தான். இருந்தும் கண்முன் இருந்த பொருட்களை கண்டும் அவர்களை‌ சோதனை செய்யாமல் இருந்தால், அவர்கள் வாழ்வு கேள்விக்குறி ஆவதில் அவனிற்கும் பங்கு இருக்குமே!

எங்கிருந்து தான் இத்தனை‌ பணத்தினை எடுக்கின்றனரே‌ தெரியவில்லை! ‘படிப்பறிவி இல்லாத பெற்றோரை இந்த பிள்ளைகள் எப்படி எல்லாம் ஏமாற்றி பணம் பறிக்கின்றனர்’ என்பதை நினைத்து மனம் ஆறவில்லை முகிலனிற்கு.

“சார்!” வாசலில் கேட்ட சத்தத்தில் திரும்பி பார்க்க,

பிடிப்பட்ட மாணவர்களின் ஒருவன் நெற்றியில் பட்டையுடன் நின்றிருந்தான்.

“உள்ள‌ வா, என்ன?” முகிலன் கேட்க,

“சார்! சார்! அந்த காசு எல்லாம் முருகனுக்கு சேர்த்து வச்சிருந்தக் காசு சார்.” என்க,

“ஏண்டா! சாமி பேரை சொன்ன விட்டுடுவேன்னு நெனைப்பா உனக்கு? முருகனுக்கு சேர்த்து வைக்கிறவன், உண்டியல்ல சேர்க்காமா? ஏன்டா பேன்ட் பாக்கெட்ல சேர்த்துட்டு இருக்க நீ?” வாசு கேட்க,

“உண்டியல்ல தான் சார் சேர்த்து வச்சேன். உண்டியல் இன்னைக்கு உடைச்சிடுச்சுடுச்சு சார், அதான் கொண்டு வந்தேன்”

“ஓஹோ! அப்போ சரி எவ்வளவு சேர்த்தே வச்சிருக்க? கரெக்ட்டா சொல்லு பாக்கலாம்?”

“சாமிக்கு சேர்த்து வைக்கிற காசு சார்! அப்புடி எண்ணி எல்லாம் பாக்க கூடாது? சாமி குத்தம் ஆகிடும்” என அவன் வாயில் போட்டுக் கொள்ள,
சத்தமாக சிரித்து விட்டான் முகிலன்.

“அடிங்க! உன் ப்ராடுதனத்துக்கு முருகனை கூட்டுச் சேக்குறியோ! போடா மொதல்ல க்ளாசுக்கு, சாமிக் குத்தம் ஆனாலும் பரவாயில்லை! உங்க அப்பாவுக்கு போனைப் போட்டுச் சொல்லுறேன்,அவரு ரெண்டு குத்து குத்துவாரு வாங்கிக்க” என்றிட, அந்த மாணவன் கெஞ்சியும் பயனில்லாமல் போயிற்று.

கைப்பற்றிய பொருட்கள் இருந்த மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு அழைத்து, விவரத்தை கூறியே அன்றைய நாள் கடந்து விட்டது.

மாலை கல்லூரி முடிந்து கிளம்ப தயரானவனின் மொபைல் ஒலிக்க, எடுத்துப் பார்த்தவனின் இதழ்கள் தாராளமாய் புன்னகைத்தன.

“ஹலோ!”

“காலேஜ் வெளிய கார்ல வெயிட் பண்றேன், வாங்க!” என்ற வருணாக்ஷி அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் கட் செய்து விட,

சொல்லாமல் வந்து நிற்பவளை நினைத்துப் பல்லைக் கடிக்கத்தான் முடிந்தது அவனால்.

தனது வண்டியினை அங்கேயே விட்டுவிட்டு, செக்யூரிட்டியிடம் தகவல் சொல்லி விட்டு இவன் வெளியே வர, அவனின் முன் காருடன் வந்து நின்றாள் வருணாக்ஷி.

“ஏறுங்க?” என்றவளை அவன் முறைக்க,

பதிலுக்கு தானும் முறைத்தவள்,
“இதெல்லாம் நீங்க பண்ண வேண்டியது, ஆனா நான் பண்றேன்ல அதனால நீங்க முறைக்கத்தான் செய்வீங்க” என்றவள் கடுகடுக்க,

அவளிடம் வார்த்தையாடாமல் ஏறிக் கொண்டான் முகிலன்.

“என்ன பழக்கம் இது வருணாக்ஷி? என்கிட்ட கேட்காம நீயா முடிவெடுத்து வந்து நிக்குற? நான் இன்னைக்கு வேற ப்ளான்ல இருந்திருந்தா என்ன பண்ணிறுப்ப?”

“அப்புடி நான் பண்ண எத்தனை போனை நீங்க அட்டென் பண்ணீங்க?” இவள் கோபமாய் கேட்க,
பதிலில்லை அவனிடம்.

அவனது அமைதியில் இவளுக்கு இன்னும் கோபம் வர,
“ஏன் அமைதியாகிட்டீங்க? பதில் இல்லைத் தானே உங்ககிட்ட, போன் பண்ணாலே எடுக்க மாட்டீங்களாம். இதுல நான் எங்கிருந்து உங்களுக்கு தகவல் சொல்லுறது?”

“ப்ச் வருணாக்ஷி, வேலை நேரத்துல கூப்பிட்டா நான் எப்புடி அட்டென் பண்றது?”

“வேண்டாம், என் கோபத்தை கிளப்பாதீங்க, எங்கேஜ்மென்ட் முடிச்சு கிட்டதட்ட ஒரு மாசம் ஆகப் போகுது, இதுவரைக்கும் ஒரு தடவையாவது என்கிட்ட போன்ல பேசியிருப்பீங்களா நீங்க? நான் பண்ணாலும் எடுக்க மாட்டீங்க? சரி ஈவ்னிங் வந்தப்பறம் கூப்பிட்டா, அப்பவும் என்கூட பேச உங்களுக்கு நேரம் இல்லை.

கடைக்கு போகணும், எக்ஸாம் பேப்பர்ஸ் கரெக்ட் பண்ணனும், லெசன் ப்ரீபேர் பண்ணனும்னு அத்தனை காரணம் சொல்லீறீங்க, சரின்னு மெசேஜ் போட்டா அதை பாத்துட்டுக் கூட ரிப்ளை இல்லை, ஏன் கேட்டு திரும்ப மெசேஜ் போட்டா, நைட் டைம் ஆகிடுச்சு, போய் தூங்குன்னு சொல்லிடுறீங்க?

இதுல நான் எங்கே? எப்புடி பேசுறது உங்கக்கிட்ட, இந்த டைம் நம்ம என்ஜாய் பண்ண வேண்டிய ப்ரீயட், ஆனா நீங்க…!” என்றவள் அதற்கு மேல் பேச முடியாது காரை நிப்பாட்டி விட,

அவள் சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை எனும் பட்சத்தில், அவனால் என்ன பேசிவிட முடியும்?

அவளிடம் இன்னும் காரணங்கள் இருந்தன போல,
“சரி உங்களை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு, நானும் அமைதியா தானே‌ இருந்தேன். இன்னைக்கு வேலஃடைன்ஸ் டே! உங்க கூட இருக்க ஆசைப்பட்டு, சர்ப்ரைஸ் பண்ண ஆசையா வந்தா, ஏன் வந்தேன்னு கேக்கேறீங்க?, அப்போ எனக்குன்னு இருக்க சின்ன சின்ன ஆசை எல்லாம், நான் யாருக்கிட்ட நிறைவேத்திக்கிறது”.

“ஹேய்! நான் எங்கே அப்புடி சொன்னேன். ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாமேன்னு தான் சொன்னேன்.”

“ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்! அவ்ளோ கஷ்டப்பட்டு ஒண்ணும் நீங்க வர வேண்டாம். உங்களை பாக்க வர்றதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு வீட்டுல பர்மிஷன் வாங்குனேன்‌ தெரியுமா? அது எல்லாம் எங்க உங்களுக்கு தெரியப் போகுது? நீங்க ஒண்ணும் வர வேண்டாம்” என்றவளின் குரல் லேசாக கரகரக்க,

தன் தவறு புரிந்தவன், காரை விட்டு கீழிறங்கி, அவள் புறம் வந்தவன்,

“தள்ளிப் போ நான் கார் எடுக்கிறேன்!”

“ஒண்ணும் வேண்டாம்! நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க, எனக்காக எல்லாம் உங்க வேலையை தள்ளிப் போட வேண்டாம்” என்றவள் நகர மறுக்க,

“ப்ச் போடி! ரொம்பத்தான்” என்றவன் அவளிடம் சீட் பெல்டை ரிமூவ் செய்து, தோள்களில் இடித்து நகர வைக்க,

அவனை முறைத்துப் பார்த்தவள் நகர்த்திருந்தாள்.

அவன் கார் எடுக்க, அருகே அமர்ந்திருந்தவள் அவனிற்கு முகம் காட்டாது, திரும்பிக் கொண்டாள்.

அவளது கோபமுகம் உணர்ந்தவன்,
அவளது கைகளை இறுகப் பற்றி தன் மடிக்கு இடம் மாற்றியவன்,
“சாரி வருணாக்ஷி!” என்றிட,

அவளிடம் பதிலில்லை!

“தப்பு தான்! உன்னைப் பத்தி நான் யோசிக்காம இருந்தது. இனி இப்புடி நடக்காம இருக்க டிரைப் பண்றேன்.‌சோ ப்ளீஸ் என்னோட சாரிய அக்சப்ட் பண்ணிக்கோயேன்” என்க,

அப்போதும் திரும்பாது அவள் அமர்ந்திருக்க,

“என் சாரியை நீ அக்செப்ட் பண்ற வரை காரை நான் எடுக்க மாட்டேன்” என்றவன் பிடிவாதம் செய்ய, அலட்டிக் கொள்ளவில்லை அவள்.

மேலும் பதினைந்து நிமிடங்கள் கழிந்திட, அவள் தான் இறங்கி வந்தாள்.

“காரை எடுங்க, இப்பவும் நீங்க நினைக்கிறதை தானே செய்ய வைக்கிறீங்க” என்றிட, அவன் முகம் சுருங்கி விட்டது.

பெருமூச்செறிந்தவன்,
“அப்புடி உனக்கு விருப்பமில்லாததை செய்யணும்னு கட்டாயம் இல்லை வருணா! நான் காலேஜ்ல இறங்கிக்கிறேன். நீ பாத்து வீட்டுக்குப் போ” என்றவன் காரை ரிவர்ஸ் எடுக்க,

அவனின் சுருங்கிய முகம் தாங்காது,
“என்ன, இப்போ? நான் கோபத்துல ஒரு வார்த்தை சொன்னா, கேட்டுக்க மாட்டீங்களா நீங்க? நீங்க என்னை பேசுனப்போ எல்லாம் நான் கேட்டுக்கிட்டேன் தானே?”

“என்னடி இப்போ? அதான் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சு, சாரி கேட்டேன்ல?”

“நீங்க சாரி கேட்டதும் நான் உடனே அதை ஏத்துக்கனுமா?”

“ஏத்துக்காத? அதான் உனக்கு என்கூட வர இஷ்டமில்லை தானே, ஏதோ உன் மேல என்னோட விருப்பத்தை திணிக்கிற மாதிரி பேசுற, உன்னோட விருப்பம் இல்லாம, நீ வர வேண்டாம். உனக்கு இஷ்டமில்லாததை செய்ய‌ நான் வற்புறுத்த மாட்டேன்”

“ரொம்ப பண்றீங்க நீங்க, நான் தான் கோபமா இருக்கணும் இப்போ! நீங்க இல்லை, சிடுசிடு வாத்தி”

“ஆமா நான் சிடுமூஞ்சி தான், அதுக்கு என்ன இப்போ, என் சிடுமூஞ்சில மயங்கி தான, நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட” என்றவன் வாயடிக்க,

“ஆமாமா! இவரு‌ சிடுமூஞ்சில மயங்கித் தான் போனாங்க, நெனைப்புத்தான்!” என்றவள் இதழ் சுழிக்க,

“அப்போ நீ என்கிட்ட மயங்கலையா?” என்றவன் அவள்‌ கண்களைப் பார்த்து ஹஸ்கி வாய்சில் கேட்க,
இவளிற்கு கன்னங்கள் சூடேறின.

“காரை எடுங்க, இப்பவே லேட் ஆகிடுச்சு சீக்கிரம் நான் வீட்டுக்கு வர்றனும்னு சொல்லித்தான் அனுப்பியிருக்காங்க” என்றவள் சிவந்த முகத்தை அவனிற்கு காட்டாது பேச,

அதில் உல்லாசமாக சிரித்தான் காரை எடுத்தான்.

“எங்க போலாம்?” அவன் கேட்டிட,

“குதிரையாறு அருவி!” என்றிட காரை எடுத்தான் அவன்.

பழனியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் அமைந்துள்ளது இந்த அருவி. முன்பக்க அணையும் பின்பக்க அருவியுமாக அமைந்திருந்தது.

காரின் வேகத்தில் ஒரு மணி நேரத்திற்கு முன்பே, அணையை அடைந்திருந்தனர்.

காரில் இருந்து இறங்கியவர்கள் நேராக அருவிக்கரை நோக்கி சென்றனர். இன்று வார நாட்களாததால் கூட்டம் இன்றி இருந்தது அருவிக்கரை.

அருவிக்கு முன் இருந்த தடுப்பு கம்பிக்கு இந்த பக்கம் நின்றிருந்தனர் இருவரும்.

அருவி நீர் மழைச்சாரலாய் அவர்கள் மீது பட்டுத் தெறிக்க, சில நிமிடங்கள் தன்னுள் அதனை உள்வாங்கிய முகிலன்,

“அங்க கீழே தண்ணி இருக்கிற இடத்துக்குப் போகலாம்” என்றவாறு நகர,

“இருங்க வாத்தி!” என்றவாறு அவனது கைகளைப் பிடித்தவள்,

அவனிற்காக அவள் வாங்கி வந்திருந்த ப்ரெஸ்லெட்டை எடுத்து,

அவனிற்கு அணிவித்து,
“ஹேப்பி வேலடைன்ஸ் டே வாத்தி!” என சிறு சிரிப்புடன் அவள் கூற,

அவன் பெயர் பொறித்த ப்ரேஸ்லெட்டை, தடவிப் பார்த்தவனிற்கு அவளிற்காக அவன் எதுவுமே வாங்காது நினைவு வர குற்றவுணர்வாகி போனது.

“ரொம்ப அழகா இருக்கு, தாங்க்ஸ் வருணா, அண்ட் சாரி நான் எதுவுமே வாங்காததுக்கு” என உண்மையை கூறியவன்,

“ரொம்பவே சொதப்புறேன்னு தெரியுது! பட் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோ.‌ என்னை இனி மாத்திக்கிறேன்.”

“ம்ஹீம்! இந்த வாத்திய சிடுமூஞ்சியத்தான் எனக்கு பிடிச்சது. சொல்லப்போன மயங்கி தான் போனேன்” என அவள் சிரிக்க,

“உண்மையை சொல்லணும்னா, பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்குற இடத்துல இருந்துக்கிட்டு, இந்த மாதிரி காதலர் தினத்தை கொண்டாடுறதைப் பாக்கும் போது கோபம் தான் வந்திச்சு. படிக்கிற வயசுல பசங்க மனசை இப்புடிக் கெடுக்குறாங்களேன்னு!

ஆனா, பசங்களை, நான் இருக்குற குரு ஸ்தானத்தை யோசிச்சவன், நிஜமா உன்னை யோசிக்காம போயிட்டேன். உனக்குன்னு சில ஆசைகள் இருக்கும்ன்றதையும் நான் யோசிக்காம போயிட்டேன். ஆனா எனக்கு இப்போ ரொம்ப கில்ட்டியா இருக்கு, உன்னோட இந்த காதலுக்கு பரிசா நான் எதுவுமே கொடுக்கலையேன்னு” என அவன் வருந்திட,

“எல்லாருக்கும் ஒரே எண்ணங்கள் இருக்கனும்னே அவசியமே இல்லையேங்க, என்னோட கேரக்டர் இது தான், சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் ரசிச்சு வாழுறது, அதே எண்ணம் உங்களுக்கும் இருக்கனும்னு நான் எதிர்பார்த்த அது முட்டாள்தனம்.

உங்க கேரக்டர் தெரிஞ்சு தான், உங்களை எனக்கு பிடிச்சது! அது எப்பவும் மாறாது, எனக்காக நீங்க மாறுனாலும், உங்களுக்காக நான் மாறுனாலும் அது காலத்துக்கும் நீடிக்காது!

நம்ம ரெண்டு பேரும் நம்மளோட இயல்புலயே இருப்போம். யாரும் யாருக்காகவும் மாற‌‌ வேண்டாம். அதே சமயம், நம்ம ஒருத்தர்க்கொருத்தர் உணர்வுகளை மதிச்சாப் போதும்” என்றிட,

விளையாட்டுப் பிள்ளை‌, சிறுப்பிள்ளை என அவளை பற்றி நினைத்திருந்தவளின் பிம்பம் லேசாக உடைந்தது அவனிடத்தில்.

அவளின் முதிர்ச்சியடைந்த பேச்சில் அவளை‌ இன்னும் இன்னும் அதிகமாக அவனிற்கு பிடிக்க,

அருகில் நின்றிருந்தவளின் தோள் பற்றி தன்னருகே இழுத்தவன்,
அவளது இடப்பக்க நெத்தியில் அழுத்தமாக அவனது இதழ்களை பதித்தவன்,

திகைத்திருந்த அவளது விழிகளை கண்டவாறே,
“ஹேப்பி வேலன்டைன்ஸ் டே மிஸஸ்.வருணாக்ஷி கார்முகிலன்” என்றிட,

சில நொடிகள் திகைத்த இருந்தவள் பின் தெளிந்து,
“உங்களோட அன்பை இதை விட, வேற‌ எந்த பொருளும் எனக்கு காட்டிடாது” என்றவாறு, அவனது தோளில் தலைசாய்த்துக் கொண்டவளின் விழிகள் மகிழ்ச்சியில் கலங்கி இருக்க,

அவளது தலையில், அழுந்த முகம் புதைந்து நின்றிருந்தனின் அகம் முழுவதும் அவள் வசமே.

அதன் பிறகு இருவரும் சிறிது நேரம்‌ அருவிக்கரையில் அமர்ந்திருக்க, இருவருமே சற்று உணர்ச்சிவசப் பட்டிருந்தனர். லேசாக இருட்டி கொண்டு வர, இதற்கு மேல் இங்கிருந்தால் நல்லதல்ல‌ என நினைத்த முகிலன், அவளை‌ கிளப்பிக்‌ கொண்டு காருக்கு வந்திருந்தான்.

அவனது முத்தத்தில் இருந்து அவள் வெளிவராமல் இருக்க, அவளது நிலையை‌ உணர்ந்தவனிற்கு இந்த தருணத்தை சேமிக்க மனம் கட்டளையிட,

“வரு! ஒரு‌ செஃல்பி” என்றவாறு அவளை‌ தனக்கருகே இழுத்து, அந்த தருணத்தை அழகாக புகைப்படமாக்கியிருந்தான்.

அதன் பின் அவனை‌ கல்லூரியில் விட்டு அவள் கிளம்பியிருந்தாள். வீட்டிற்கு கொண்டு விடுகிறேன் என ரகளைச் செய்தவளை‌ கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி என‌ மல்லுக்கட்டி அனுப்பியிருந்தான்.

அவளை அனுப்பும்‌ முன் அவன் விரும்பும் மல்லிப் பூ அவளது கூந்தலில் இடம்பெற்றிருந்தது.

ஏனோ, பதிலுக்கு கடமையாய் ஒரு பரிசுப் பொருளை வாங்கி தருவதற்கு அவனிற்கு மனமில்லை.‌ எனவே அவனது ப்ரேத்யோக பரிசான மல்லிப் பூவினை அவளிற்கு பரிசளத்திருந்தான்.

ஏற்கனவே வீட்டினருக்கு தாமதமாகும் என தகவல் கொடுத்திருந்ததினால்‌, கல்லூரி வந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பயிருந்தான்.

அவன் வீடு சென்ற பின், அவள்‌ வீடு சென்றடையும் நேரத்தை கணக்கிட்டு அவளிற்கு மெசேஜ் போட,

அதில் மகிழ்ந்தவள் “ரீச்சீடு ஹோம்” என பதில் அளித்திருக்க, அதனை கண்டவன் அடுத்து எதுவும் பேசாது விட்டிருந்தான்.

இரவு உணவின் போது முத்துப்பேச்சி அவன்‌‌ ப்ரேஸ்லெட்டை கவனித்துக் கேட்க,

“உங்க மருமக கொடுத்தது ம்மா” என
அவள் வந்ததைக் கூற,

அந்த ப்ரேஸ்லெட்டினை பார்த்த சுபாவிற்கு, காலையில் கணவன் காதலர் தினத்திற்கு பரிசளித்த புடவையும் மூக்குத்தியும் நினைவில் வர,

தானாக அவளது மனம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தது.








 

Mathykarthy

Well-known member
Lovely 💞🤗
ஆரம்பத்துல சொதப்புனாலும் காதலா ஒரு முத்தம் மல்லிப் பூ ன்னு அசத்திட்டான் வாத்தி 😍😍😍
 
Top