பகுதி - 9
பாலமுருகன் சொன்னவாறே எல்லோரும் பூர்வீக வீட்டிற்கு வந்தனர்,
வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்து வைக்க ஆள் வைத்திருந்தால் வீடு அவர்கள் தங்கவதற்குச் சுலபமாக இருந்தது.
வீடு 45 வருடங்களுக்கு முன்பான ஓட்டு வீடு நிறைய அறைகள் உள்ள அழகிய வீடு, வீட்டைச் சுற்றி மரங்களும் பூக்களின் செடிகளும் நிறைய இருந்தது ஆட்கள் இருந்ததினால் அழகாகப் பராமரிக்கப்பட்டு வந்திருந்ததினால் தோட்டங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கி இருந்தன.
பாலமுருகனின் பூர்வீக வீட்டைக்கண்டதுமே அதன் அழகில் மிகவும் சந்தோஷம் அடைந்தாள் மதுமிதா, தன் தோழி ரேணுகாவுடன் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாள். அவளின் சந்தோஷத்தைப் பதிவு செய்வதற்கு வார்த்தைகள் தான் அங்கே இல்லை அதை ரேணுகாவிடம் பலமுறை கூறவும் செய்தாள்.
வீட்டுக்கு வந்த அனைவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். பின்னர் மதிய உணவிற்கான வேலைகளைத் தொடங்கினர் பெண்கள். எல்லாம் கைகளிலே செய்வதாக இருந்தது அங்கே மிக்ஸியோ, கிரைண்டரோ எதுவும் இல்லை. அவர்கள் அம்மியில் அரைத்துக் குழம்பு வைத்தனர் .
சமைக்கும் பொழுது யார் மனதிலும் எந்தக் குறையும் இல்லாது, மிகவும் சந்தோஷமாகவே அவர்கள் வேலைகளைச் செய்தனர்.
மதிய உணவு நேரம் எப்படிச் சென்றது என்று தெரியவில்லை. மிகவும் பிசியாக இருந்தன.ர் எல்லோரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளைச் செய்தனர். மதியம் உணவு உண்டபின் அமைதியாக அமர்ந்திருந்த நேரம், அவர்களின் ஒன்றுவிட்ட அத்தை வந்தார், இவர்கள் வந்திருக்கின்றனர் என்று செய்தி அறிந்து. அவரை வரவேற்று அமர வைத்து அவருக்குக் குடிப்பதற்கு நீர் எடுக்கச் சமையலறைக்குள்ளே சென்றார், பானுமதி.
அங்கே இருந்த ராதிகாவிடம், யாரு இந்தப் பொண்ணு என்று கேட்டார், அதுவா… என்றவர்… நம் கதிர்வேந்தனின் பொண்டாட்டி,பெயரு மதுமிதா என்றார் ராதிகா.
என்ன கதிர்வேந்தனுக்குக் கல்யாணம் ஆகிருச்சா என்று மனதில் அதிர்ச்சி அடைந்தவரின் முகபாவம் அவரின் எண்ணங்களைப் பிரதிபலித்தது.
அவரின் எண்ணத்தைப் புரிந்துக்கொண்ட ரேணுகாவும் மதுமதியையும் அவரின் அருகே அமர்ந்தனர்…
ரேணுகா, தான் தொடங்கினாள் என்ன சின்னம்மா, இப்படி அதிர்ச்சி ஆகறீங்க, இவங்க நம் கதிர்வேந்தன் மாமாவோட பொண்டாட்டி. இப்பொழுதுப் புரிகிறதா? நான் ஏன் அவரைக்கல்யாணம் பண்ண மாட்டேன் சொன்னேன்" என்று கேட்டாள் ரேணுகா.
அந்த அத்தை, தன் தலையை நாலாப் பக்கமும் ஆட்டி, தான் குழப்பி இருப்பதை உறுதிப் படுத்தினார்…அவரின் இந்தச் செயலில் இருவருக்கும் சிரிப்பு வந்தது.
அதை மறைத்த படியே என்னை மனசுல நினைத்துத்தான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாருச் சின்னம்மா…
அவரின் மிக அருகில் குனிந்த மதுமதி " அவருக்கு எனக்குக் கல்யாணம் ஆகியே வருசம் ஆகுது.. இந்தக் கல்யாணம் எல்லாம் பெரியவங்க ஆசைக்குத் தான்" என்று ரகசியம் பேசினாள்…
அவளுக்குத் தன் கணவனின் மேல் இருக்கும் பழிச் சொல்லை நீக்க வேண்டும்… அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் இருந்தாள் வேந்தனின் மதி.
நடந்தது எல்லாம் புரிந்தது அந்த அத்தைக்கு.
இனி இந்த விசயத்தையும் போய்ச் சொல்லும் போது. மாற்றி மாற்றிப் பேசும் அவர் வார்த்தைகள் எதுவுமே பெரியதாக எடுக்காமல் திட்டுவார்கள் என்று தெளிவாக யோசித்தாள் மதுமிதா.
தன் வாழ்க்கையில் நடந்ததை வெளிபடையாகப் பேசினாள் தைரியமாக.
கணவனின் மேல் இருக்கும் கறையைக் களைய அவள் தயாரானாள்….
ஆம் காதலித்துக் கல்யாணம் செய்வது ஒன்றும் பெரிய குற்றம் அல்லவே… ஆனால் அவன் மேல் இருக்கும் இந்தப் பழிச் சொல்.. வருங்காலத்தில் தன் குடும்பத்துக்கும்,தங்கள் வாழ்க்கைகும் நல்லதல்ல என்பதால் தெளிவாகச் செயல் பட்டாள் மதுமிதா…
கடந்த காலங்களில் கதிர்வேந்தனின் திருமணம் எதனால் நடக்கவில்லை என்று பேசிய புரணிப் பேச்செல்லாம் இப்பொழுது இவர்கள் திருமணம் பற்றிப் பேசும் போது மாறிவிடும் என்று எண்ணினாள்…
நீங்க ரேணுகாவிடம் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டபோது நானும் அவரும் கணவன் மனைவி… அவள் தான் எங்கள் கல்யாணம் நடக்கும் போது கூட இருந்தாள் … எங்கள் கல்யாணம் யாருக்கும் தெரியாமல் நடந்ததது… இவள் தான் அதற்குச் சாட்சி.. அப்பறம் எப்படி அவரோடான திருமணத்திற்குச் சம்மதிப்பாள் … அதனால் தான் அன்றைக்குக் கதிர்வேந்தனால் யாரைக் கல்யாணம் செய்தாலும், சந்தோஷமாக வாழ முடியாது என்று சொன்னாள் ... ஏன்னா... அவர் மனைவி தான் நான் கோவிச்சுட்டுப் போயிருக்கேன் இல்ல" என்றாள் மதுமிதா…
"ஆமா நீ ஏண்டிம்மா, கோவிச்சுட்டுப்போன... அதுதானே இத்தனை குழப்பம்" என்று சரியாக அவளிடம் கேள்விக் கேட்டார் …
"எப்படிச் சொல்ல, புருஷன் பொண்டாட்டி விசயம் இல்லையா?" என்று தப்பித்தாள் மதுமதி.
"தப்பா நினைக்காதே பொண்ணே... புருஷன் பொண்டாட்டி நடுவில் பல கருத்துக்கள் வரலாம்.. இருவருக்கும் பல குறை நிறைகள் இருக்கும். இரண்டையும் சரிசமமாக ஏற்றுக் கொண்டால் குடும்ப வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அழகாக இருக்கும்" என்றார் அத்தை…
பல புரணிப் பேசி நடந்தாலும் அவர் கூறிய இந்த அறிவுரைப் பெண்கள் இருவருக்கும் புரிவதாகவும் பிடித்தும் இருந்தது… அவரையும் அவர்களுக்குப் பிடித்துப் போனது.. அவரிடம் கொஞ்சம் நேரம் பேசியபடி இருந்தனர் தோழிகள் இருவரும்…
அந்த நேரத்தில் அங்கே வந்த கதிர் வேந்தனுக்கு இவர்களைக் கண்டதும் புருவம் சுருங்க முகம் இறுகியது கோபத்தில்… இதைக் கண்டதும் புரிந்துக்கொண்டாள் அவன் மனைவி…
மெல்ல எழுத்தவள்… நான் போய்ச் சாப்படக் கொண்டு வரேன் என்ற மெல்ல உள்ளே சென்றவளின் பின்னே வந்தவன் அவளைப் பிடித்து இழுத்தான் "இப்படி எல்லாம் பேசினா… நடந்தது எல்லாம் இல்லை என்று ஆகிடுமா? எனக்கு உண்டான வலியும் வேதனையும் கம்மி ஆகிருமா? எனக்கு அன்றைக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சரிப்பண்ண முடியுமா? இந்த ஊரிலல் வீடு வீடு போய்ச் சொல்லுவியா? என் புருஷன் நீங்கள் நினைக்கற மாதிரிப் பொட் "... என்று அவன் முடிக்கும் முன்பே அவனை வாயைத் தன் கைகளால் முடியவள்... கண்களில் நீரோடு வேண்டாம் எனத் தலையை ஆட்டித் தடுத்தாள்... சத்தமே இல்லாமல் அவளை வார்த்தைகளால் வதைத்தான் கதிர்வேந்தன்…
தன் அவமானத்தை எல்லாம் சொற்களாக வீசியவன், அவளின் கண்ணீரைக் கண்டதும் அங்கிருந்துச் சென்றான்…
விழியில் நீரோடு சமையலறை வந்தவளைக் கண்ட ராதிகா... "ஏன் மதி முகம் ஒரு மாதிரி இருக்கு அழுதாயா? உன் புருஷன் எதாவது சொல்லிட்டானா? ... இரு வரேன்...வேந்தா" என்று அவனைச் சத்தமாக அழைத்தார் அவன் அத்தை…
ராதிகாவின் இந்தச் செயலில் பதறிய மதுமிதா "அம்மா... இப்ப எதுக்கு அவரைக் கூப்படறீங்க… அவர் என்னை எதுவும் சொல்லவில்லை… அந்த அத்தையம்மா, பேசினது ரேணுகா என்னிடம் சொன்னாள்.. அதைக் கேட்டு எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது… அதுதான் கண்ணெல்லாம் கலங்கிருச்சு" என்று சொல்லி முடிக்கவும்… அங்கே கதிர் வேந்தன் வரவும் சரியாக இருந்தது…
" என்ன அத்தை? கூப்டீங்களா"
ராதிகா மதுமிதாவின் முகத்தைப் பார்த்தவாறே "ஆமா வேந்தா… ஆனால் மறந்துட்டேன்" என்றவர் "குடிக்க என்ன வேணும்" என்று பேச்சை மாற்றினார்…
அவரின் செயலில் இருந்த வித்தியாசம் உணர்ந்தவன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான்…அவள் கலங்கிய விழிகள் நடந்த கதையை உணர்த்தியது.
"எனக்கு எதுவும் வேண்டாம் அத்தை… இப்பொழுதுத் தானே சாப்பிட்டேன், உங்களுக்கு எதாவது உதவி வேணுமா?" என்று கேட்டான்.
"எனக்கு ஒன்னும் வேண்டாம் வேந்தா. ஆமாம் அம்மா எங்கே?" என்று கேட்டார்.
"அவங்க அப்பாவிடம் பேசிட்டு இருந்தாங்க அத்தை"
"சரி நான் போய் எப்போ கிளம்பலாம் அண்ணாவிடம் கேட்கிறேன் நேரம் ஆகிட்டே இருக்கு, அப்பறம் நாம வீடு போய்ச் சேருவதற்கு நடு ராத்திரி ஆகிரும்" என்றவர் வேகமாக அண்ணனைத் தேடிச்சென்றார், தம்பதியருக்குத் தனிமையைக் கொடுத்த ராதிகா.
அங்கே மௌனம் மட்டுமே இருக்க... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே நின்றனர்.
கணவனின் வலியை எப்படிச் சரி செய்வது என்று தெரியவில்லை மதுமிதாவிற்கு.
மனைவியின் அழுத விழியைக் கண்டதும் மனமோ அவளைச் சமாதானம் செய்யச் சொல்லி அறிவுறுத்தியது, இன்னொரு மனமோ தன்னை அவள் எட்டி நிறுத்தி வைக்கும் செயலில் முறுக்கிக் கொண்டு நின்றது.
அவர்கள் எவ்வளவு நேரம் இப்படியே நின்ற இருப்பார்களோ, அதைக் கலைக்க வென்று வந்தாள் ரேணுகா.
மதி என்று அழைத்தவாறே வந்தவள் இருவரின் நிலையைக் கண்டு மெல்லக் குரலைச் செருமினாள்.
ரேணுகாவின் செயலில் இருவரும் சுயம் பெற்றார்கள்.
கதிர்வேந்தனோ வேகமாகச் சமையலறையில் இருந்து வெளியே வந்தான்.
"என்ன மதி மாமாவிடம் எதாவது பேசினீயா? அவர் உன்னைப் புரிச்சுக்கிட்டாரா?" என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டாள்.
"ஆனாலும் இவ்வளவு ஆசை உனக்கு இருக்கக் கூடாது ரேணு, அவர் என்னை விட்டால் பார்வையாலேயே எரித்துவிடும் கோபத்தில் இருக்காரு, இதில் நான் அவரிடம் பேசிப்புரியவைத்து, அப்பறம் என்னை மன்னித்து, அதெல்லாம் ஒரே தனிமையில் நடக்கணும் உன்னோட எதிர்பார்ப்பு இருக்கே,ஆஹா ஒன்னும் சொல்லிக்கிறதுக்கில்ல” என்றாள் சலித்தப்படி.
"புரியுது மதி, என்ன தான் கோபம் இருந்தாலும், மனதில் இருக்கும் காதல் அந்தக் கோபத்தீயை அணைத்திடும், காதலோட பவர் தெரியலைடி உனக்கு" என்று கேலிச் செய்து அவள் மனநிலையை மாற்றினாள்.
அப்பொழுது அழுகும் குழந்தையை எடுத்துக் கொண்டு அங்கே வந்தாள் மித்ரா.
"மித்ரா, பையன் ஏன் அழறான்?" என்று கேட்டவாறே அவனைக் கையில் வாங்கிய ரேணுகா அவனைச் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினாள்.
"பசிக்கு அழறான் நினைக்கிறேன் மித்ரா, போய் அவன் பால் புட்டியை எடுத்துக் கொண்டு வா , நான் அதற்குள் அவனுக்குப் பால் காய்ச்சி ஆற வைக்கிறேன்" என்று தன் வேலையைத் தொடங்கினாள் மதுமிதா.
பால் புட்டியோடு வந்தவளிடம் இருந்து வாங்கி, அதை நன்றாகச் சுடுதண்ணீரில் கழுவிக் காய்ச்சி ஆற வைத்த பாலை நிரப்பித் தந்தாள்.
மகனை ரேணுகாவிடம் இருந்து வாங்கிய மித்ரா அவனுக்குப் பாலைப் புகட்டிய போது அவன் குடிக்காமல் வீறிட்டு அழுதான்.
அழும் குழந்தையின் சத்தத்தைக் கேட்டுப் பதறியடித்து வந்தான் தருண்.
அவன் பின்னால் கதிர் வேந்தன் மற்றும் ரேணுகாவின் கணவன் கதிரிவேலனும் வந்து சேர்ந்தனர்.
குழந்தையின் அழுகையோ ஆறுதல் படுத்தும் அவன் அம்மாவின் வார்த்தைகள், கொஞ்சல் மொழி, எதற்கும் மட்டுப்படவே இல்லை.
பசிக்கு அழறான் என்று நினைத்தவளுக்கு இப்போது பயம் வந்தது. அழாதே தங்கம்..என் செல்லத்துக்கு என்ன வேணும்.. இந்த இதைக் குடி" என்று வாயில் பால் புட்டியை வைத்தாள் அதைத்தட்டி விட்டப்படி அழுதான் வேதாந்த்.
அவனின் அழுகையைப் பொறுக்க முடியாமல் மித்ராவிடம் இருந்து வேதாந்த் வாங்கியவன்," என்ன ஆச்சு, தங்கச்சி?" என்று கேள்வி மதுமிதாவிடமும், பார்வை மித்ராவிடம் இருந்தது.
தன் அண்ணனின் அதிரடியில் அதிர்ச்சியான ரேணுகா, சிலையென நின்று நடப்பதை வேடிக்கைப் பார்த்தாள்.
தருணின் கேள்விக்கு என்ன பதில் தருவதெனத் தெரியாமல், மௌனப்பூட்டினால் இதழின் மூடியபடி, வாய்த் திறக்காமல் பயந்து நடுங்கினாள் மித்ரா.
தருணின் கேள்விக்கு " ஏன் தெரியல அண்ணா அழுதுட்டே இருக்கான், பசி என்று நினைத்துப் பால் குடுத்தால் குடிக்கவே மாட்டேங்கிறான்" என்று பதிலளித்தாள் மதுமதி.
அங்கே அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் குழந்தையை மெல்ல மடியில் படுக்க வைத்து அவன் ஆடைகளைக் களைந்துப் பார்த்தான்.
குழந்தைக்குப் போட்டு விட்ட,டயபர் நனைந்து அவன் உடலில் தொற்று ஏற்படுத்தி இருக்கிறது.. அதனால் உண்டான உபாதையால் அழுகிறான் என்று புரிந்தது.
குழந்தை அழுதால்.. பசிக்குத் தான் அழும், உங்களுக்கு யார் சொன்னது, இதைக் கூடக் கவனிக்காமல், அப்படியென்ன வேலை உங்களுக்கு" என்றவனின் கடுமையான வார்த்தைகளில் மிரண்டு போனாள் மித்ரா.
அவனின் இந்தச் செயலில் ' இதென்ன புதுவிதமான அப்ரோசாக இருக்கே ' என்று நடப்பதைச் சிலைப் போல நின்றுப் பார்த்தாள் ரேணுகா.
ஆடையைக் கழட்டியதும் அழுவதை நிறுத்திய வேதாந்த, பால் குடிக்க ஆரம்பித்தான். அவன் பால் குடிக்கும் வரை காத்திருந்த தருண், அவன் வயிறு நிறைந்ததும் தருணைப் பார்த்து அழகாகச் சிரித்தான்.
குழந்தையின் சிரிப்பில் மயங்கிய தருண்.. "கொஞ்சம் நேரத்தில் பயப்படுத்தீட்டியே கண்ணா" என்று உச்சி முகர்ந்தவன், குழந்தையோடு வெளியே வந்தான். நல்ல காற்றோட்டம் நிறைந்த இடத்தில் இருந்தால் குழந்தைக்கும் நன்றாக இருக்கும் என எண்ணினான்.
தருணின் இந்த உரிமையானச் செயலில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள் மித்ரா. அவள் மகனும் தருணிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான். அது நன்றாக உணர முடிந்தது அவளால்.
மெல்ல மதுமிதாவை இயலாமையோடு பார்த்தாள். விடுபார்த்துக்கொள்ளலாம் என்ற தலையசைத்து அவளை ஆறுதல் படுத்துவதைக் கதிர் வேந்தன் பார்த்து விட்டான்.
'ம்ம் இவளிடம் எல்லாம் நல்லா வொர்க் அவுட் ஆகுது. கெமிஸ்ட்ரி, பிஸிக் எல்லாம்…நம்மிடம் எப்பவுமே அவுட் ஆஃப் ஷிலபஸ் தான்' என்று ஒரு பெருமூச்சு விட்டவன் அமைதியாகப் போய் அமர்ந்தான்.
சிறிது நேரத்திற்குப் பின்னார், பெரியவர்கள் வந்தனர்…
"ம்ம் கிளம்பலாமா? .. இன்னும் நேரம் கடத்தினாள் வீட்டிற்குப் போய்ச் சேர்வதற்கு நடு இரவாகி விடும்" என்றவர் எல்லோரும் தயாராகச் சொன்னார்.
ரேணுகாவின் கணவன் கதிர் வேலனிடம் வந்த வேந்தன் " வேலா எனக்குத் தலை வலிக்குது, நீ இப்போ வண்டி ஓட்டுவாயா?" என்று கேட்டான்.
"இதில் என்ன இருக்கிறது, ஒட்டுச் சொன்னா ஒட்டப்போறேன், இதில் என்னடா இப்படிக் கேட்கிறாய்" என்றவன் "சரி சீக்கிரம் கிளம்பலாம் சித்தப்பா" என்றான் பாலமுருகனைப் பார்த்து.
கதிர் வேலன் கார் ஓட்டுவதால் முன்னிருக்கையில் ரேணுகாவும் பின்னிருக்கையில் கதிர் வேந்தன் மற்றும் மதுமதி அமர்ந்தனர்.
மற்றொரு காரில் தருண் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்ததும் அவன் மாமாவிடம்" மாமா. குட்டி இப்போ தான் அழறது நிறுத்தி இருக்கான்,அவனை முன்னாடியே உட்காரவையுங்கள் பின்னாடி வேண்டாம்" என்றான்.
அவனுக்குக் கொஞ்சம் காற்றோட்டமாக வரட்டும் என்றான்.மருமகனின் வார்த்தைகளில் இருந்த அக்கறையில் பூரித்த பாலமுருகன் "மித்ரா நீ குட்டியோட முன்னாடி உக்காந்துக்க, நாங்கள் பின்னாடி வரோம்" என்று பின்னிருக்கையில் போய் அமர்ந்தார்.
இரண்டு காரும் புறப்பட்டது.
இந்தப் பயணம் காதல் பயணமாக மாற்றியமைக்குமா இந்த ஜோடிக்களுக்கு. வரும் காலங்களில் எல்லாம் புரியும்.
காதலைக் கற்றுக் கொள்ள
பொறுமை வேண்டும்…
காதலை உணர மனதில்
அன்பு வேண்டும்…
காதலில் கடைப்பிடிக்க
துணை வேண்டும்
அந்தத் துணையின் மேல் எல்லை இல்லாத நம்பிக்கை வேண்டும்
அப்பொழுதுக் காதல் நம்மைக் கொண்டாடும்…
தொடரும் ...