எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் மாயாவி கதை திரி

Afsha

Moderator
என் மதிப்பிற்குரிய வாசகர் பெருமக்களே!நான் உங்கள் அன்புக்குரிய அப்(f)ஷா பேசுகிறேன்..😁
போதும் நிறுத்து இப்ப எதுக்கு இவ பாரதிராஜா ஸ்டைல்ல பில்டப் பண்றா அப்டின்னு நீங்க நெனச்சது எனக்கு கேட்டுடுச்சு மக்களே..
ஹிஹிஹி அப்டி எல்லாம் நெனைக்கப்படாது..
நாம எல்லோரும் நம்ம வாழ்க்கையில எதைஎதையோ எதிர்ப்பார்ப்போம்..ஆனால் அதெல்லாம் கிடைக்கிறதில்ல..நெனச்சது கிடைக்காது கிடைச்சது புடிக்காது..இப்டி ஏதேதோ புதிர்களோட தான் நம்ம ஒவ்வொருத்தர் லைப்பும் ஓடிட்டு இருக்கு..அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா நீ நெனச்சது ஒரு நாள் கிடைக்கும் அப்டி நெனைக்காதது கிடைச்சா அத புடிச்சதா மாத்தி கொள்ளு..
இது புடிச்சா கேளு புடிக்கலன்னாலும் பரவால்ல கேளு..😁

ஓக்க்க்கே..... பேப்ஸ்ஸ்..நான் ஒரு அதிரடி முடிவு எடுத்து இருக்கிறேன்..அது என்னன்னா நான் இரண்டாவது கதை எழுத போறேன்..😌
அடியேய்.. நீ ஒன்ட முதலாவது கதையில படுத்துன பாடு போதாதுன்னு இப்ப இரண்டாவது கதையில எங்க உயிர வாங்க வந்துட்டியா..ஒன்ன..
அப்டின்னு பாசமா வாழ்த்திட்டு எதனால சரி அடிக்க என்ன துரத்திட்டு எல்லாம் வராதிங்க பாஸூ...மீ பாவம் ல...🤭
அந்த கதையில மர்மம் மட்டும் தானே இருந்துச்சு ஆனால் இந்த கதை வேற மாறி இருக்க போகுது..என்னா புரியலயா..? தலைய சொரியுறது விளங்குது..
அந்த சோற்றுல உப்பு மட்டும் தான் சேர்த்தேன்...ஆனால் இந்த சோற்றோடு உப்பும் அதோட நெய்,காய்கறி,மிளகாய்தூள்,ஏலம்,கறுவா,கராம்பு,சரக்கு தூள் இப்டி நெறய நெறய நெறய நெறய சேர்மானங்கல சேர்த்து ஒரு ஸ்பெஷலான பிரியாணியா தர போறேன்..
பதறாதீங்க பதறாதீங்க..உங்களுக்கு எல்லாம் எதுவும் ஆகாது.. அதுக்கு நான் கேரண்டி..🙉
முதல் கதையில மிஸ் பண்ண லவ்வ இந்த கதையில எப்டி தெவிட்ட தெவிட்ட தரபோறன்னு பாருங்கலே..
அப்றம் என் ஆசைக்காக மர்மம்,திகில்,இரகசியம்,தேடல் இதல்லாம் கூட கதையில சேர்த்து இருக்குறேன்..
மொத்ததுல ஒரு மசாலாவா இந்த கதை இருக்கும்.. அதுக்கு நானு நானு நானே கேரண்டி..😉

அது சரி கதை கதைன்னு சொல்றியே கதைட பேரு என்னா?யாரு ஹீரோ?யாரு ஹீரோயின்?அவங்க பேரெல்லாம் என்னென்ன?
அட இருப்பா..நானே இனி தான் அதெல்லாம் யோசிக்கனும்..ஒரு ஹீரோவ தேடி புடிக்கனும்..அதுவும் உங்களுக்கெல்லாம் புடிச்ச மாதிரி வேற தேடனும்..நம்ம முதல் கதைட ஹீரோ ராகுல்ல கூப்டுவோம்னு பார்த்தா பாவிப்பய ஆஷாக்கு வளைகாப்பு நடத்தனும் இப்ப பிஸி வரமுடியாதுன்னு சொல்லிட்டான்😖
சரி நமக்குன்னு எவனும் சிக்காமலா போய்டுவான்?தேடுவோம்..
இதோ இதோ வாரானே ஒருத்தன்..இவன புடிப்போம் ஆளு நல்லா வாட்டசாட்டமா தான் இருக்கிறான்..பைக்கு வேற வச்சிட்டு இருக்கிறான்..டேய் தொம்பி..அடச்சீ..தம்பி ...
அட நம்ம அப்(f)ஷா சிஸ்டர்ர்ரு...
எக்கோவ்....எப்டி இருக்குறிங்க..?
தம்பி என்ன தெரியுமா ஒனக்கு..?
ஒங்கல தெரியாமலாக்கா நல்லாவே தெரியும்..
அவ்வளவு பேமஸ் ஆகிட்டோமோ..ஆகியிருப்போம் ஆகியிருப்போம்..
என்னக்கா போன கதையில ஹீரோ ஆக்குறேன்னு சொல்லிட்டு ஏமாத்திபுட்டிங்க😐
டேய்...அவனா நீயியி....
அதான் இந்த கதைக்கு ஹீரோ தேடி வந்து இருக்கிறேன்.. சரி நீயும் இருந்துட்டு போ..
நிஜமாவா அக்கா..
நெசந்தான் டா தம்பி..

சரி இப்ப இந்த கொளுத்துற வெயில்ல எங்கடா போற?
அந்த கொடுமைய ஏன் கேட்குறிங்க? எனக்கு ஒரு ப்ரண்டு இருக்கிறான்..சரியான வில்லங்கம் புடிச்சவன்..மூதேவி வீட்டுல முறுக்கிகிட்டு வந்து என்னோட தான் இருக்கிறான்..அவன் தொல்ல தாங்காம தான் கூல்ரிங்க்ஸ் வாங்க போறேன்..
என்னடா சொல்ற..?
ஆமாக்கா..இவனுங்க வேற நேரம் காலம் தெரியாம கரண்ட கட் பண்ணி தொலைக்குறானுங்க..அடிக்கிற வெயிலுக்கு கூலா எதையும் ப்ரிட்ஜ்லயும் வைக்க முடியல..அந்த தொர எல்லாத்தையும் கூலா தான் குடிப்பாரு.. வாங்கி வர முடியாதுன்னு சொன்னால் அதுக்கப்பறம் அவன் செய்ற குரங்கு சேட்டை எல்லாம் என்னால தாங்கிக்க முடியாது..பேசாம வாங்கி கொடுக்குறது நல்லதுக்கா..அதான் விதியான்னு இந்த வெயில்ல போறேன்..
அவ்வ்வ்...கிடைச்சுட்டான் கிடைச்சுட்டான்..என் கதைக்கு ஹீரோ ஒருத்தன் கிடைச்சுட்டான்🤩
எக்கோவ்.. அது நான் தானே..
டேய் தம்பி நீ இல்லடா..அது உன் ப்ரண்டு..😁
இப்ப தானேக்கா நீதான்னு சொன்னிங்க..
நான் எங்கடா சொன்னேன் நீயும் இருந்துட்டு போன்னு தான் சொன்னேன்😂
டேய் நீ ஹீரோ ப்ரண்டு ரோல் பண்றியா..?
எது அடியாள் கேரக்டரா..?
என்னடா பட்டுன்னு இப்டி சொல்லிட்ட அது அடியாள் இல்ல அடிமையாள்..சரி..உன் ப்ரண்டு பேரு என்னடா? அது சரி ஒன்ட பேரு என்ன? அத கூட கேக்கல பாரே..😤
அதெல்லாம் எதுவும் சொல்ல முடியாது வழிய விடு..
டேய் தம்பி டேய்..அப்டி எல்லாம் சொல்லாதடா..😣நீங்க எங்க தங்கி இருக்குறிங்க உங்க பேரு அட்ரஸ்ஸு போன் நம்பர் எல்லாம் தந்துட்டு போடா தம்பி..
நெவர்.. முடியவே முடியாது..வழிய விடு.. நான் போறேன்.. வேணா நீயே கண்டுப்புடிச்சுக்க..
அடப்பாவி.. நடு ரோட்டுல அம்போன்னு விட்டுட்டு பொய்ட்டியேடா..
இந்த வினையம் புடிச்சவனையும் அந்த வில்லங்கம் புடிச்சவனையும் இனி எங்க போய் தேடுவேன்?🙄
இந்த ஹீரோக்கு ஒரு ஹீரோயின் வேற புடிக்கனும் அந்த மகராசி எங்க இருக்குறாளோ..
அப்றம் அடிவாங்க நாலு ப்ரண்ட்ஸுங்க அடிக்க நாலு அடியாளுங்க அறிவுரை சொல்ல நாலு பெருசுங்க அன்புக்காட்ட ஆளுக்கு ஒரு அம்மா அதட்ட வீட்டுக்கு ஒரு அப்பா இப்டி எல்லாரையும் தேடனுமே..
முக்கியமா வில்லனையோ வில்லியையோ பிக்ஸ் பண்ணனும்..
ஆத்தி எம்புட்டு வேல இருக்குது..
அம்மாடி அப்ப்பபூஷா இனி நீ தீயா வேல செய்யனும்..🥴

சரி நான் வரும் போது இங்க வானத்துல சூரியன்னு ஒருத்தன் இருந்தானே..எங்க அவன இப்ப காணவே இல்ல..ஒரே இருட்டா இருக்குது..
ஏம்மா... இப்டி முன்னுரையையே முப்பத்தேழு மணித்தியாலத்துக்கு சொன்னா அப்டி தான்மா..
அந்த பசங்க முகத்த பாரு..பாவமா இல்லையா.. விட்ரு மா...
அம்புட்டு நேரமாவா பேசிட்டு இருக்கிறேன்..🤭
பின்ன இல்லையா😫
சரி சரி போறேன்..
அந்த வில்லங்கம் புடிச்சவன தேடி புடிச்சு முதல் அத்தியாயத்தோட வந்து மீட் பண்றேன்..
எல்லோரும் ஜோரா ஒரு வாட்டி கைத்தட்டுங்க பார்ப்போம்..
அட தட்ட சொன்னா உடனே தட்டிடுவிங்கலா..
நாங்க என்ன குரங்கு வித்தையா காட்டுறோம்..போங்க பா போங்க.. நானும் போறேன்..
ஆத்தி ஒரே இருட்டால்ல இருக்கு..எந்த பக்கம் போறதுன்னே தெரியலயே.. அதோ ஒரு பைக்கு வருது..டேய் தம்பி கொஞ்சம் லிப்ட் தாடா..உனக்கும் ஒரு கேரெக்டர் தாரேன்..
வந்து தொல..
டேய் இப்ப எல்லாம் பெற்றோலே இல்லையே..
நீ இவ்ளோ ஸ்பீடா போற..
இதப்பாரு பார்க்க பாவமா இருந்த ரோல் வேற தாரன்னு சொன்ன அதான் ஏத்திட்டு போறேன்..வாய மூடிட்டு வரலன்னா பாதியிலேயே இறக்கிவிட்டுடுவேன் பார்த்துக்க..
சரிடா சரிடா தம்பி..
ஒன்னுமே பேசல..
ஏங்க நீங்க கம்மண்ட்ட பண்ணுங்க.. நான் பொய்ட்டு வாரேங்கோ.......
 
Afsha

Moderator
எப்டி இருக்குறிங்க பேப்ஸ்?எப்பாஹ் எல்லாரையும் தேடி vகண்டு புடிக்கிறதுக்குல்ல போதும் போதும்ன்னு ஆகிட்டு😫 பாதி பேர சேர்த்துட்டேன்..ஆன் தி வேய்ல மத்தவங்கல பிக்அப் பண்ணிக்கலாம்😁
இப்ப வாங்க நம்ம போவோம் கதைக்குள்ள..
ஆமா நாம படிக்க போற கதையோட பெயர் என்னன்னு தெரியுமா..?

*மாயாவி* இதான் கதையோட பேர்..
இனி கதைய படிக்கலாம்..

*EPISODE 01*(அறிமுகப் படலம்😁)

டேய்.. சொல்லுங்கடா..அந்த கோயில் நகையெல்லாம் நீங்க தானே எடுத்திங்க..உண்மைய ஒத்துக்கிட்டா தண்டனை குறைவா இருக்கும் இல்லனா ஆறு ஏழு வருஷம்னு களி தான் தின்னனும்..
அய்யோ சார் அது நாங்க இல்ல..நம்புங்க சார்..
நீங்க இப்டி எல்லாம் கேட்டா சொல்ல மாட்டிங்க..இருக்குடா உங்களுக்கு ட்ரீட்மென்ட்டு இருங்க வாரன்..
அய்யோ அம்மா.. வேணா சேர்.. நாங்க இல்ல சேர்..வலிக்குது வேணா சேர்...
என விசாரணைக் கைதிகளில் கதறல்களினால் அந்த காவல் நிலையமே பரப்பரப்பாய் இருக்க அப்பொழுது தான் காற்றென பறந்து வந்து வாசலில் நின்றது அந்த சைரன் பூட்டிய ஜீப்..தீயென உள்ளிருந்து பாய்ந்து இறங்கியவன் தன் அழுத்தமான எட்டுக்களை எடுத்து வைத்து உள்ளே செல்ல அவனை கண்ட அனைத்து கண்களிலும் சட்டென மின்னி மறைந்தது ஒருவித பயம்..
கைகளும் தானாகவே மேலெழ உதடுகளும் குட் மார்னிங் சேர் என கூறிக்கொண்டது..
அனைத்தையும் சிறு தலையசைப்பில் ஏற்றுக்கொண்டவன்"கலையரசன் அந்த மிஸ்ஸிங் கேஸ் பைல்ல எடுத்துட்டு வாங்க" என உறுமிக்கொண்டே தனதறையில் புகுந்து கொண்டான்..
அவசர அவசரமாய் பைலை தேடியவர் அடுத்த ஓர் இரு நிமிடங்களில் அவன் மேசையில் கொண்டு சேர்த்தார்(லேட் ஆகுனால் யாரு அவன்ட வாங்கி கட்டி கொள்றதாம் இவருக்கு இல்லாத அனுபவமா..😖)
பைலை எடுத்து ஆராய தொடங்கும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றார்...

*ஆண்களுக்கே அழகான ஆறடி உயரம்..கட்டுக்கட்டாய் கட்டுக்கோப்பாய் கட்டி வைத்திருந்த அவன் வன்னுடல்..அருகம்புல்லை அடுக்கி கட்டிய கரிய தாடி..வீரத்துடன் முறுக்கேறிய மீசை..நெற்றியில் பூத்திருக்கும் வியர்வை துளிகளை தொட்டு விளையாடும் வைக்கோல் கற்றையாய் அவன் அடர்த்தியான கேசம்,எதிரிலிருப்போரை நொடியில் அளந்து விடும் கூரிய பார்வை,அப்பப்போ குறும்புகளும் வந்து குடியேறும் அவன் விழிகள்,தேகத்தோடு ஒட்டியபடி அவன் நெஞ்சு சட்டையில் மூன்று நட்சத்திரங்களுக்கு நடுவில் கம்பீரமாய் வீற்றிருந்தது அவன் நாமம்*
*இள இரத்தம் ஓடும் அவனில் பயம் என்ற வார்த்தைக்கே இடமில்லை போலும்..ஆண்மையின் அத்துனையும் அடங்கலாக அவதாரம் எடுத்து நின்றான் அவன்*

அவனையே ஆராய்ந்து கொண்டிருந்த அந்த ஐம்பது வயதையும் தாண்டிய கலையரசனின் இதழ்கள் மெலிதாய் உச்சரித்துப் பார்த்தது அவன் பெயரை *மித்ர தேவன்*....

என்ன கலையரசன் சைட் அடிக்கிறிங்கலா என்றான் பட்டென..
அய்யோ சார்.. அது..நான்.. இவரு பைல்ல தானே படிச்சுட்டு இருந்தாரு..நாம பார்த்தது இவருக்கு எப்டி தெரிஞ்சிது..ஆத்தி இந்த ஆளுக்கு எல்லா பக்கமும் கண்ணு போலயே...🥴 என மனதில் நினைத்தாலும் வெளியில் சொல்லும் அளவுக்கு தைரியம் இல்லையே..அவன் முன் பேந்த பேந்த முளித்து வைத்தார்..
கலையரசன் எனக்கு ரெண்டு கண்ணு தான் இருக்கு என்ற அவன் மறு பதிலைக்கேட்டு ஹாங்ங் என்ற பாவத்துடன் முழிக்க ஹாஹாஹாஹாஹா என தன் வெண்ணிற முத்துப் பல் தெரிய அழகாய் சிரித்தவன் வாங்க வந்து வண்டிய எடுங்க மலர்வெய்ன்ஸ் லேடிஸ் ஹாஸ்டலுக்கு போகனும் என முன்னே சென்றான்..

(இவன கொஞ்சம் ஓவரா தான் வர்ணிச்சிட்டோமோ..🥴என்ன தான் பண்ண இப்டி எல்லாம் இன்ட்ரோ லென்ந்தா கொடுக்கலன்னா பாதியிலேயே பேக்அப் பண்ணிடுவேன்னு பாவிப்பய மிரட்டினான்..😫அதான் வேற வழியில்லாம இதெல்லாம் சொன்னேன்😌
ரீடர்ஸ் இதல்லாம் அவன்ட போட்டு கொடுத்துடாதிங்க பா அப்றம் என்ன ஒரு வழி பண்ணிடுவான்..ஆனால் பொய் சொல்ல கூடாது ஆளு சும்மா தேன்ல ஊற வச்ச குலாப் ஜாமுன் மாதிரி ஜம்முன்னு தான் இருக்கான்😋)

....🎶அட ஊதுங்கடா சங்கு...🎶நான் தண்டச்சோறு கிங்...🎶தமிழ் இஸ் மை மதர் டங்கு...🎶அயம் சிங்குல் அன்ட் அயம் யங்கு...🎶
ஊது சங்கு....🎶 அயம் கிங்கு...🎶

எங்கடி ஊ புள்ள? வச்சி இருக்குற ரிங்டோன்ன பாரு..அவனுக்கு ஏத்த மாதிரியே வச்சி இருக்கிறான் தறுதல தறுதல😤😤
இன்னும் தூங்குறாரோ சீமை தொர..உருப்படியா ஒரு வேலைக்கு போக துப்பில்ல ஒன்னுக்கும் உதவாத வெட்டி பசங்கலோட சேர்ந்து ஊர சுத்தி இல்லாத பொல்லாத வம்பெல்லாம் விலைக்கு வாங்கிட்டு வர வேண்டியது..இன்னைக்கு இருக்கு..எழும்பட்டும் அந்த மூதேவி..ஒன்னு அவன் இந்த வீட்டுல இருக்கனும் இல்லனா நான் இருக்கனும்..
ஒரு முடிவு கட்டுறேன்😠

வெளியில் தன் பெயருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருப்பது தெரியாமல் இங்கு கட்டிலில்..🎶வசந்த தேனா..வசந்த தேனா...வசியம் செய்யவே பிறந்தவன் நானா..🎶என கனவில் டூயட் பாடிக்கொண்டிருந்தான் அவன் *கண்ணன்* .
டேய்.. கண்ணா... எந்திரிடா..எங்க போய் யார் கூடடா வம்பிழுத்துட்டு வந்த..?
ஒங்க அப்பா செம்ம கேவத்துல இருக்காரு..😐
எழும்பி குளிச்சுட்டு வா அம்மா சூடா நெய் போட்டு தோசை ஊத்தி தாரேன்..சாப்டுட்டு அப்பாக்கு தெரியாம பின்வாசல் போய்டு கண்ணா..நைட்டு அப்பா தூங்குன அப்றம் உனக்கு கோல் பண்றேன் அப்போ நீ வீட்டுக்கு வா..

எம்மா..தாய் குலமே...உன்ன மாதிரி தாய் இருக்குற வரைக்கும் என்ன மாதிரி புள்ள எல்லாம் எப்டி திருந்துவானுங்க..?
லவ் யூ சோ மச் மாதாஜி..😘 என ஒரு பறக்கும் முத்தமொன்றை கொடுத்தவன் குளித்து ரெடியாகி நெய் தோசையையும் ஒரு வெட்டு வெட்டி விட்டு அப்பாவிற்கு தெரியாமல் மெதுவாய் நழுவி இருந்தான்..

இந்த கண்ணன பத்தி சொல்ல ஒன்னு ரெண்டு இல்லைங்கோ.. அப்டியே பக்கம் பக்கமா சொல்லலாம்.. போக போக நீங்களே அவன பத்தி புரிஞ்சி தெரிஞ்சிப்பிங்க..
ஒத்த வார்த்தையில சொல்லலும்னா சரியான வாலுத்தனம் புடிச்சவன்..எதுக்குமே உதவாத வெட்டி பய...ஆனால் நம்ம கதையில முக்கியமான ஒரு கேரெக்டர்(டேய் கண்ணா..உன்ன பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்ல சொன்னியே நல்லா சொல்லிடோம்ல..😎)

டேய் தடிமாட்டு பயலுகளா...ஒரு ஒத்த பொம்பளைய ஒழுங்கா பார்த்துக்க தெரியாதாடா ஒங்களுக்கு எல்லாம்..?
இப்ப பாஸ் கேட்டால் என்னத்த டா சொல்றது?
எப்டி டா அவ தப்பிச்சா? கை கால கட்டி தானே வைச்சு இருந்திங்க..
ஆமாண்ணே..ஆனால் அவ எப்டி தபபிச்சான்னு தான் புரியல..அங்க இருந்த அந்த செல்போனையும் எடுத்துட்டு தான்ணே போய் இருக்கா..
டேய்..எனக்கு வர்ற கோவத்துக்கு...அதுல இருக்குற விஷயம் வெளியில வந்துச்சுன்னு வச்சிக்க காலம் பூரா கம்பிக்குள்ள தான் இருக்கனும்..அது மட்டுமில்லாம இது பாஸுக்கு தெரிஞ்சிது மவனே ஊஊஊ சங்கு தான்..
போங்கடா போங்க..அவ இந்த காட்ட தாண்டி போயிருக்க வாய்பில்ல..போய் அவள தேடி புடிச்சு இழுத்துட்டு வாங்கடா..🤬

தந்தையிடமிருந்து தப்பியவன் தன் எப்இஸெட் பைக்கில் பறந்து கொண்டிருக்க திடீரென அவன் வண்டியின் முன் வந்து விழுந்தாள் அவள்..சட்டென ப்ரேக் போட்டு தன்னை சமநிலைப்படுத்தியவன் அம்மாடியோவ்...யாருடா இவ..எங்கிருந்து வந்தா..என்ன இன்னுமே எந்திரிக்கல்ல ஒரு வேள செத்துட்டாளோ..
டேய் கண்ணா என்ன கஷ்டகாலம் டா இது என புலம்பியவன் பைக்கில் இருந்து இறங்கி அவளை நேராக்க முயன்ற போது அவன் அருகில் வந்து நின்றது அந்த போலீஸ் ஜீப்..

கதவை திறந்து கொண்டு இறங்கியவனை பார்த்த கண்ணணின் கண்களுக்குள் ஏதோ ஓர் வலி..ஒவ்வொரு எட்டையும் கண்ணனை நோக்கி கம்பீரமாய் எடுத்து வைத்து நெருங்கினான் அவன்..
அவன் முகம் பார்த்த கண்ணனோ.......

அங்க என்ன நடக்குதுன்னு அடுத்த எபில சொல்றேங்கோ.....😁
நான் ஆரம்பத்துல சொன்ன மாதிரியே இந்த கதை வித்தியாசமா இன்ட்ரஸ்ட் ஆஹ் இருக்கும் பொறுமையா ரீட் பண்ணுங்க..கொஞ்சம் சஸ்பன்ஸ் கூடுதலா தான் இருக்கும்...
உங்களுக்கு புடிச்ச மாதி எழுத ட்ரை பண்றேன்.. உங்க கருத்துக்கல கம்மண்ட் ஆஹ் சொல்லிடுங்கோ மக்கள்ஸ்...
நான் போய்ட்டு வாரேங்கோ.....

*மாயாவியை மர்மங்களுடன் சொல்லும் இவள் Afsha Rumaiz*
 
Afsha Rumaiz

Moderator
*மாயாவி*

*EPISODE:02*

எல்லாரும் யாரு ஹீரோன்னு புல்லா குழம்பி போய் இருக்குறிங்க போல..🤭
வில்லங்கம் புடிச்சவன் தான் மித்ரன்😤வினையம் புடிச்சவன் தான் அந்த கண்ணன்😣
இப்ப க்ளியரா...
ஆஹா.. இப்பவே கண்ணனுக்கும் மித்ரனுக்கும் ஒரு பேன் பேஜ் ஸ்டார்ட் ஆகிட்டு..😂😂சரி வாங்க போவோம் ஸ்டோரிக்குள்ள..

ஒவ்வொரு எட்டையும் கண்ணனை நோக்கி கம்பீரமாய் எடுத்து வைத்தான் அவன்..அவன் முகம் பார்த்த கண்ணனோ அது நான் எதுவும் பண்ணல என்று விட்டு விட்டு சொன்னான்..எதிரிலிருப்பவனோ பதில் ஏதும் பேசாமல் ஒற்றை புருவத்தை உயர்த்தி தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருந்தான்..கலையரசன் அந்த பொண்ண ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு என்ன ஏதுன்னு விசாரிங்க என்க அவரும் அவளை தூக்கி வண்டியில் கிடத்தி அவ்விடம் விட்டு சென்றார்..
இந்த பக்கம் எவ்வித சலனமும் இன்றி கூலாக நின்றிருந்த கண்ணனிடம் வந்து பைக்க எடு என்க கண்ணன் அமைதியாகவே நின்றான்..
உன்ன தான் சொல்றேன் வண்டிய எடு என மீண்டும் சொல்ல..
யாரு நீங்க.. நீங்க சொன்னா நான் செய்யனுமா..🧐
சரி ஓகே..சரண்டர்..என தன் இரு கைகளையும் குறுக்காக கட்டி குனிந்து நின்றான் அந்த ஆறடி ஆண்மகன்..
என் பேரு மித்ர தேவன்..இப்ப இங்க தான் போலிஸ் வேல கிடைச்சி இருக்குது..அப்றம் நான் யாருமே இல்லாத..ஏதோ சொல்ல வந்தவனை இடையில் நிறுத்திய கண்ணன் போதும் போதும் உன் அறிமுகம் அதெல்லாம் ரைட்டர் போன எபிலயே விளக்கமா சொல்லிடாங்க..
அப்டி தானேக்கா

Me:ஆமாண்டா..இவன் முதல்ல இருந்து சொல்றான் டா..😐😐

கண்ணன்:இவ்ளோ நாளும் எங்க டா இருந்த?ஒரு கோல் மெஸேஜ் இல்ல..நாங்க பண்ணாலும் எந்த ரெஸ்போன்ஸும் இல்ல..😬 இப்ப திடீர்ன்னு வந்து நிக்கிற..

மித்ரன்:நான் என்ன உன்ன மாதிரி வெட்டி பயலா..🤨 எனக்கு ஆயிரத்து ஒன்பது வேல இருக்கும் அதெல்லாம் உன் கிட்ட செல்லிட்டு இருக்க முடியுமா..😏

கண்ணன்:யாருடா வெட்டி பய யாரு நானா வெட்டி நானா..? நான்......

Me:டேய் டேய் டேய் கண்ணா..மறந்துட்டியா அன்னைக்கு என்ன சொன்னேன்... அப்டியே மேல பாரு..

கண்ணன்:ஆத்தி அத மறந்துட்டேனே..நல்ல வேல ஒலரி வைக்க இல்ல..இனி உஷாரா இருக்கிறேன்..😝

மித்ரன்:என்ன ப்லாஷ்பேக்கா..?🥴

கண்ணன்:ஹிஹிஹி😁

மித்ரன்:தூ... வா வந்து வண்டிய எடு..🤦🏻‍♂️

கண்ணன்:தேவா..ஆளே மாறிட்ட டா மச்சான்..நல்லா இருக்கியாடா..?

ஏனோ தேவா என்ற அழைப்பு மித்ரனை சில காலத்திற்கு முன்னால் கூட்டிச்சென்றது..ஆனால் அந்த நினைவுகளை நினைக்க விரும்பாதவன் கண்களை மூடி தன்னை சமப்படுத்திக் கொண்டு எனக்கு என்ன மச்சான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரி சூப்பரா இருக்கேன்😁

கண்ணன்:ஹ்ம்.. பார்க்குறேனே..

மித்ரன்:சரி நீ என்னத்தடா பண்ணி தொலைஞ்ச?அப்பா எனக்கு கோல் பண்றாரு..🤥

கண்ணன்:அதுவா..அத ஏன்டா கேட்குறா..? வா போற வழியில சொல்றேன்..😖😖
என இருவரும் புறப்பட்டனர்..

மயங்கி விழுந்த அவளை இருவருமே காணாதது அதிஷ்டமா துரதிஷ்டமா..?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இவங்க இந்த பக்கம் போகட்டும் வாங்க நாங்க போய் அந்த மகராசி ஹீரோயின் யாரு என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு வருவோம்..

~கொடியவனின் கதைய முடிக்க கொரவலைய தேடி கடிக்க நாரு நாரா ஒடம்ப கிழிக்க நடுத்தெருவுல சிதற அடிக்க புழுவப்போல நசுக்கி எரிய புளிச்ச இரத்தம் தெளிச்சு நடக்க துண்டு துண்டா நறுக்கி எடுக்க சந்ததிக்கே அதிர்ச்சி கொடுக்கவே....~
(Me:எப்பா என்னா லிரிக்ஸ் டா இது..😧)
என ஒலித்து ஓய்ந்தது அவளின் அலைப்பேசி..
எந்த சலனமும் இல்லாமல் சாந்தமாய் படுத்திருந்தாள் அவள்.
அருகில் படுத்திந்தவளின் நிலைமை தான் பாவம் கவலைக்கிடமாக இருந்தது.. போன் சத்ததில்
பதறியடித்து எழும்பி போர்த்தியிருந்த போர்வையை இழுத்து சுருட்டி கொண்டு சுவற்றில் ஒட்டிய பல்லி போல ஓரமாய் ஒட்டிக்கொண்டு பேன் காற்றில் தலைமுடி அங்கும் இங்கும்அசைந்தாட (Me:Ange current cut panne Illayo...😂)
அருகினில் படுத்திருந்த தோழியை முறைத்து கொண்டிருந்தாள்..😠

பாதகி.. வயசு பொண்ணுங்க லவ் சாங்கு இல்லனா ரொமேன்டிக் சாங்க ரிங்டோன்னா வச்சி இருப்பாங்க..இந்த மூதேவி வச்சியிருக்குற பாட்ட பாரு..😖
கடவுளே..இவளோட கடத்துற ஒவ்வொரு நாளும் எமகண்டத்த தாண்டுற மாதிரியே இருக்கு😫😫 என தோழியையும் கடவுளையும் வறுத்து எடுத்துக்கொண்டிந்தாள் அவள் *மகா*.
மீண்டும் கொடியவனின் கதைய முடிக்க....என போன் அலற ஹேய்.. ஜானகி..எந்திரிடி.. அந்த போன எடுத்து பேசித்தொல..இன்னைக்கும் வழக்கம் போல என் தூக்கத்துக்கு ஊதிட்டா சங்க...😑
எந்திரி டி..அடியேய் என் உயிர் பறிக்கவே ஜனனித்தாயாடி ஜானகி 🤨
எழும்பியவளோ மகாவை பார்த்து ஈஈஈஈ குட் மோர்னிங் செல்லக்குட்டி என்றாள் நம் கதையின் நாயகி அவள் *ஜானகி*.

அந்த நேரம் வெண்ணிலவில்லை என்ற குறையே இருக்கவில்லை..பூலோக வெண்ணிலவாய் ஜொலித்தது அவள் வதனம்..
*சுட்டும் விழிச்சுடர் தான் சூரிய சந்திரரோ..வட்டக்கரிய விழி வானக் கருமை கொல்லோ..சோலை மலரொளியோ நின் சுந்தர புன்னகை..நீலக் கடலலையோ உனது நெஞ்சிலலைகளடி..கோலக்குயெலோசை உனது குரலினிமையடி*
ஒரு வேளை அந்த பாரதி இவளோட சாயல தான் கவியாக வடித்திருப்பானோ..
வட்ட வட்டமா ரெண்டு முட்ட கண்ணு,உதட்டினில் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த புன்னகை,சிரிக்கும் போது குழி விழும் கன்னம்,வாயினாலேயே வம்பை விலைக்கு வாங்கும் துடுக்கு பேச்சு மொத்தத்தில் அவளும் பேரழகு தான்..
இவள் மாசற்ற அழகில் ஓர் நொடி மகா சொக்கி தான் போனாள்..
சரி..எழும்பி போய் ப்ரஷ் ஆகி ரெடியாகு..இப்ப கிளம்புனா தான் பஸ்ஸ புடிக்கலாம் இல்லனா மிஸ் ஆகிடும் என கூறி குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் மகா என்கிற மகாலட்சுமி..

தன் போனை எடுத்து ஆன் செய்து அதில் முறைத்து கொண்டிருந்தவனை பார்த்து *இன்றாவது என் விழிகளுக்கு தரிசனம் கொடுப்பாயா..?ஏனடா கண்ணாமுச்சு ஆடுகிறாய்?காக்க வைத்தது போதும் கைப்பிடிக்க வந்து விடடா ராஜகுமாரா..*
என மனதிற்குள் கூறியவள் மற்றொரு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்..

கண்ணன்:தேவா நீ எங்க மச்சான் தங்கியிருக்க..?

மித்ரன்:அதே பாம்ஹவுஸ்ல தான்டா..நீ என்ன அங்க ட்ராப் பண்ணிட்டு போ..மோர்னிங் மீட் பண்ணலாம்..

கண்ணன்:சரி டா.. இதோ வீடு வந்துடுச்சு நீ போ.. நான் காலையில வாரேன்.. குட் நைட் மச்சான்..

மித்ரன்:குட் நைட் டா என
உள்ளே வந்தவன் குளித்து பார்மல் உடைக்கு மாறியிருந்தான்.. பீரோவை திறந்து அதில் இருந்த டயரிக்குள் பத்திரமாய் வைத்திருந்த போட்டை எடுத்தவன் கட்டிலில் சரிந்தான்..
அந்த புகைப்படத்தில் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அவனை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தவளிடம் *மோனித்திருக்குதடி இவ்வையம்* *மூழ்கித்துயிலினிலே!நானொருவன் மட்டும் பிரிவெனும் நரகத் துழலுவதோ..!என்ன நினைவு வச்சிருக்கியாடி கண்ணம்மா..இப்ப எங்க எப்டி இருக்க?உன்ன எனக்கு புடிக்கவே இல்ல.. உன்ன பார்க்கவே கூடாது..* *எப்பவும் என் முன்னோடி மட்டும் வந்துடாதே டி*
இவ்வாறு இவன் இங்கே புலம்ப..

அங்கே அந்த பட்டை மரத்தடியில் கண்மூடி இருந்த சித்தரின் கண்கள் சட்டென திறந்து கொண்டது..சேர துடிப்பது பெண்மனம் மாறத்துடிப்பது ஆண்மனம்..ஹாஹாஹா..நடந்தது அவ்வளவு இலகுவான ஒன்றா..எல்லாமே விதியின் விளையாட்டு..
கண்ணாடி நொறுங்கினால் விம்பமும் தானே நொறுங்கும்..

என்ன எல்லாரும் இப்டி பார்க்குறிங்க..? அதான் சொன்னோன் தானே இது வித்தியாசமா இருக்கும்ன்னு.. இது வெறும் கற்பனை இல்ல..நான் பார்த்த எனக்கு நடந்த சில உண்மையான விஷயங்களயும் கற்பனை கலந்து எழுத போறேன்..
குழம்பிக்காம ரீட் பண்ணுங்க.. டவுட் இருந்தால் கேளுங்க..
இன்ட்ரெஸ்டா இருக்கா இல்லையா..?
எதிர்மறையான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்...😁
கம்மண்ட்ஸ்ல சொல்லிடுங்கோ..

*இவள் Afsha Rumaiz*
 
*EPISODE:03*

ஹல்லோ ரீடர்ஸ்..😁
இந்த கதையில நிறைய பேர் இருக்காங்க..அவங்க பேர் எல்லாம் இப்ப சொன்னா நீங்க எல்லாரும் குழம்பிடுவிங்க சோ அவங்க எல்லாம் வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவாங்க..🤭
இப்போ வாங்க நாங்க கதைக்குள்ள போவோம்..

சுமார் 20 பேர் கொண்ட அந்த கூட்டத்தில் இருந்த அத்தனை பேர் முகத்திலும் ஏதோ பதற்றம்..நீள் வட்டமான மேசை ஒன்றில் ஒருவரை ஒருவர் நோக்கும் விதமாய் போடப்பட்ட ஆசனங்களில் அந்த பத்து பேரும் அமர்ந்திருந்தனர் அனைவரும்..
அங்கே நிலவிய சலசலப்பு கொஞ்சமாய் குறைந்தது..காரணம் அப்பொழுது தான் உள்ளே வந்தார் கமிஷ்னர் *ராஜ்மோகன்*
அனைவரும் ஒன்றாய் எழுந்து ஒருங்காய் சலீயுட் வைக்க ஏற்றுக்கொண்டவர் அமருமாரு சொல்ல அமர்ந்து கொண்டனர் அந்த காவல் புலிகள்..

அதன்பின் நிலவிய அமைதியை அவரே கலைத்து..
இப்ப எதுக்கு இந்த அவசர மீட்டிங்ன்னு உங்களுக்கே தெரிஞ்சு இருக்கும்..
நீங்க தான் இப்ப முடிவு சொல்லனும்..
அதில் இருந்த ஒரு போலிஸ் அதிகாரி
சேர்..இந்த கேஸ்ஸ மிஸ்டர் மித்ர தேவன் தான் இப்ப ஹன்டில் பண்றாரு..ஏதாவது நியு அப்டேட் இருக்கான்னு அவர்கிட்டயே கேட்கலாம்..
சொல்லுங்க மித்ரன்..
எந்த அளவு இந்த கேஸ்ஸ முடிச்சு இருக்குறிங்க..?
ஒட்டு மொத்த கவனமும் அவன் ஒருத்தன் மேல் திரும்ப அதற்கெல்லாம் பயப்படுவான் நம்ம மித்ரன்..அதுவரை சாய்ந்திருந்து நடுவிரலால் புருவத்தை நீவிவிட்டப்படி இருந்தவன் சற்று நேராய் அமர்ந்து நேர்க்கொண்ட பார்வையுடன் பேச ஆரம்பித்தான்..

சேர்.. என்கிட்ட இந்த கேஸ்ஸ நேத்து தான் தந்து சொன்னாங்க நீங்க நான் இன்சார்ஜ்ன்னு..
எனக்கு அந்த கேஸ்ஸ புல்லா படிக்கவே நேத்தைய நாள் புல்லா போதுமா இருந்துச்சு..
அதுலயும் முதல் கட்ட விசாரணையா அந்த ஹாஸ்டல் போய் சம் எவிடன்ஸ்ஸ கலெக்ட் பண்ணி இருக்கிறேன்..
சேர் மெய்பி இன்னும் வன் மன்த்ல இந்த கேஸ்ஸ நான் முடிச்சிடுவேன்..என்ட் எனக்கு கொஞ்சம் போர்ஸ் தேவைப்படுது..
நம்ம டிபார்ட்மென்ல இருந்து அது வேணா..நான் அத வெளியால அரேன்ஜ் பண்ணி கொள்றேன்.. நீங்க பர்மிஷன் கொடுத்தா போதும்..என தீர்க்கமாக பேசி முடித்தான்..

மித்ரனை ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு "எஸ் மிஸ்டர் மித்ர தேவன் உங்களுக்கான புல் சப்போர்ட்டும் டிபார்ட்மென்ல கிடைக்கும் என்ட் நீங்க இதுக்கு முன்னாடி... அப்டி என்ன்வோ சொல்ல வந்தவர் மேற்கொண்டு எதுவும் கூறாமல் அத்தோடு நிறுத்தி கொண்டார்.

மித்ரனும் ஏதும் பேசாமல் அவரையே பார்த்து கொண்டிருந்தான்..
இவர்கள் இருவரையும் சில விழிகள் குழப்பத்துடனும் மித்ரனை மட்டும் அந்த இரு விழிகள் வன்மத்துடனும் பார்த்து கொண்டிருந்தது..

இதென்னா கேஸா இருக்கும்?
எனக்கும் தெரியல நம்ம மித்ரன் கொஞ்சம் அந்த பக்கம் வரட்டும் புடிச்சு விசாரிச்சிரலாம்..😁
ஆஹா.. நம்மாலு என்னமா விறைப்பா பேசுறான்..
என்னமோ பெரிய விஷயம் தான் போலயே..
பார்ப்போம்..
இவன் மீட்டிங் முடிஞ்சு வர வரைக்கும் வாங்கலே நாங்க அந்த வாலுப்பய கண்ணன ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுவோம்..
கம் போலோ மீ..
எங்க இவன காணவே இல்ல..
ஆஹ் இதோ இதோ போறான்..
பாரு மின்னல் மாதிரி பைக்ல பறக்குறான்..
மக்களே ஆளுக்கு ஒரு வண்டில லிப்டு கேட்டு வந்து சேருங்க நான் முன்னாடி போறேன்..😁

காற்றில் பறந்த கண்ணனின் வண்டியோ போய் நின்றது ஓர் ரெஸ்ட்டோரன்ட் முன்னால்..
(அடப்பாவி இங்கயாடா இவ்ளோ அவசரமா ஓடி வந்த..நானும் என்னமோ ஏதோன்னு நினைச்சன்..🥴)

அதோ போறான் கொட்டிக்க.. வாங்க நாங்களும் போவோம் பின்னாடியே.. சண்ட போட்டுக்காம ஆளுக்கு ஒரு டேபல்ல உட்கார்ந்து கொள்ளுங்க பா..
நல்ல வேள எனக்கு பேனுக்கு கீழ இடம் கிடச்சுட்டு..😁

அவசர அவரமாய் புயல் வேகத்தில் வந்த கண்ணனின் கண்களில் ஏதோ ஒரு கலக்கம்..
யாரையோ எதிர்பார்த்து காத்திருக்கும் தோரணம்..

அவன் போன் அலற அந்த சத்தத்திற்கு அவனும் அலறி ப்பூப்புபூபூபூ...
ஆண்டவா எல்லாமே சதி பண்ணுதே.. என வாய்விட்டே புலம்பியவன் போனை எடுத்து பேச ஆரம்பித்தான்.
எதிர்முனையில் என்ன சொல்லப்பட்டதோ தெரியவில்லை..
இவனின் முகத்தில் யோசனை ரேகைகள் பரவ ஆரம்பித்தன..
கொஞ்ச நேரம் ம்ம் ம்ம் ம்ம் என தலையை ஆட்டியவன் திடீரென டேய் பரதேசி பயலே..
நீ இனி ஒரு மண்ணும் செய்ய தேவை இல்லை..நான் சொன்ன மாதிரி செய்..
நீயா ஏதாவது லூசுத்தனமா செஞ்சி என்னயும் வம்புல கோத்து விட்றாத..
நான் சொன்னத மட்டும் பண்ணு.. நான் மோர்னிங் வந்துருவேன் என யாரயோ பாசமாய் வாழ்த்தி விட்டு போனை கட் பண்ணி நிமிர்ந்து பார்க்க அங்கே அவனையே ஆராய்ந்தப்படி பவுஸாக கூலிங் கிளாஸை இரண்டு விரல்களில் சுழற்றிய படியே அமர்ந்திருந்தான் மித்ரதேவன்.

ஆத்தாடி..இவன் எப்போ வந்தான்.. ஒருவேள நாம பேசினத கேட்டு இருப்பானோ.. டேய் கண்ணா சமாளி சமாளி என மனதிற்குள் நினைத்தவன் வெளியே மித்ரனை பார்த்து ஹிஹிஹிஹி என இளித்து வைத்தான்..கூடவே டேய் மச்சி நீ எப்படா வந்த சொல்லி இருந்தா நானே வந்து இருப்பேன்ல..
என அசடு வழிந்தவனை பார்த்து இப்போ எதுக்கு நீ இவ்ளோ கேவலமா பர்போமன்ஸ் பண்ற மொதல்ல சிரிக்கிறத நிப்பாட்டு பார்க்க முடியல..
ஈஈஈஈஈஈஈ என அதற்கும் வெக்கமே இல்லாம இளித்து வைத்தான் அவன் களவாடிய கள்வன் கண்ணன்..

என்னத்த களவாடினான்னு கேட்க கூடாது.. கேட்டா பதிலும் வராது.. அதெல்லாம் இரகசியம்.. அவனா சொன்னா தான் நமக்கும் தெரியும்..

டேய் கண்ணா..நான் ஒரு கேஸ் விஷயமா ஒரு இடத்துக்கு போகனும் நீயும் கூட வரியா பெய்த்து வந்துடலாம்..
என்னா கேஸ்டா? எந்த இடம்?
எப்போடா போகனும்..?
நாளைக்கு கிளம்பலாம் மச்சான்..
அய்ய்யயயயய்யய்யோயோயோயோ
நாளைக்கா...
நீ ஏ இப்ப இப்டி இழுக்குற நாளைக்கு தான்..ஏ உனக்கு ஏதாவது வேல இருக்கா..
வேல வேல வேல என அவசரத்துக்கு வந்து அகப்படாத பொய்யை யோசித்தபடியே திரு திரு என முழித்தான்..

என்னடா இப்டி பேந்த பேந்த முழிக்கிற.. ஓ முழியே சரி இல்லையே..என்னடா பண்ற நீயி..
என தாடியை நீவியபடியே அவன் ஒரு மார்கக்மாய் கேட்க

பாவம் கண்ணா தான் பதில் கூற முடியாமல் தடுமாறுகிறான்..
ஆனாலும் இவன மிஞ்சுன நடிகனா..
ஆமா பண்றாங்க.. பொட்ட காட்டுல பொதிக மரத்த வெட்டி லாரி லாரியா ஊருக்குள்ள கொண்டாந்து அத கவர்மண்டுக்கு தெரியாம எக்ஸ்போர் பண்றேன்.. போடாங்...கொய்யாக்கா..
நானே செய்ய வேல இல்லாம அந்த இறப்பர் மூக்கன் கிட்ட தெனமும் திட்டு வாங்கிட்டு இருக்கிறோமேன்னு கடுப்புல இருக்கிறேன் இவன் வேற...
என ஏதோ ஏதோ எதையதையோ சொல்லி சமாளித்தான்..

ஏதோ படுவது போல இருந்தாலும் விட்டு புடிக்கலாம் என சரி மச்சான் நாளைக்கு ரெடியாகி இரு..நானே வந்து பிக்கப் பண்ணி கொள்கிறேன் என்றான் மித்ரன்..

கோயில் மாடு மாதிரி தலையை ஆட்டி விட்டு நீ எதையாவது ஆர்டர் பண்ணி வையி.. நான் வோஷ் ரும் பொய்ட்டு வந்துடுறேன் என எழும்பி கண்ணன் ஒரு ஓரமாய் நின்று செல்லில் சில எண்களை அழுத்தி "டேய்.. அவன் மீட்டிங்கல இருக்கிறான்னு நீ தானேடா சொன்ன..இப்ப கண்ணு முன்னாடி வந்து உட்கார்ந்து இருக்கிறான்..அவன்ட எதை எதையே சொல்லி சமாளிக்கிறதுல்ல என் பாடும் முடிஞ்சிட்டு.. முளை கெட்ட முதேவியே இருடா மவனே ஒன்ன வந்து வச்சி கொள்றேன்...ஒரு வேலய ஒழுங்கா பண்றியா தடி மாடு.. நம்ம மீடிங்க கேன்சல் பண்ணு.. இவன இங்கிருந்து அனுப்புறது கஷ்டம்.. நான் சொல்ற வரைக்கும் இனி எதுவும் பண்ணாதிங்க.. இருடி.. உனக்கு இருக்கு கச்சேரி.."என யாரையோ தாளித்து விட்டு நல்ல பிள்ளையாக வந்து அமர்ந்தான் மித்ரனின் முன்...

மச்சான் அதென்னாடா கேஸ்ஸுன்னு சொன்னா..
அத கொஞ்சம் சொல்லுடா கேப்போம்..

ஆமாடா.. சொல்லு.. நாங்களும் ஒன்னுமே புரியாம விழிபிதுங்கி தான் இருக்கிறோம்..

அவன் என்ன சொல்றான்னு அடுத்த எபில சொல்றேன்..

இந்த கண்ணன் சாதாரணமானவனா தெரியல பக்கி என்னமோ கோல்மால் பண்றான் போல.. சும்மா கெஸ் பண்ணுங்கலே என்னவா இருக்கும்ன்னு..கம்மண்ட்டு பண்ணிடுங்க பா...
 
Afsha Rumaiz

Moderator
*🌚(காதல்)மாயாவி🌚*

*EPISODE:04*

*°~AFSHA RUMAIZ~°*

மாயாவிய படிச்சு மயக்கத்துல இருக்குற அல்லாருக்கும் வணக்கமுங்க..😁
வெறித்தனமா இருக்குறிங்க போலயே.. கம்மண்ட்ஸ்ல எல்லாம் பயர் பறக்குது.. போனு ஹீட் ஆகி வெடிக்காம இருந்துச்சே..
இதே மாதிரி சப்போர்ட் பண்ணிடுங்க மக்களே..
நீங்களின்றி நானில்லை..😘

அது சரி.. அந்த அப்பாவி கண்ணன என்னமோ பாதாள கொள்ள கூட்ட தலைவன் ரேஞ்சுக்கு எல்லாரும் இமேஜின் பண்ணி இருக்குறிங்க போல🤣 தமாசு தமாசு..
கொஞ்சம் காத தாங்கலே ஒரு முக்கியமான இரகசியம் சொல்றேன்..
அத தாங்க மா.. அந்த ஜிமிக்கிய எல்லாம் களவாடிர மாட்டேன் நானு..
அந்த வாலு கண்ணன் இருக்கிறான் தானே கண்ணன்..அவன் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த்து கிடையாது...
ஆனாலும் பயபுள்ள என்னமோ தில்லு முல்லு பண்றான் தான்யா...பார்க்கலாம் பார்க்கலாம்.. மாட்டாமலா பொய்ருவான்..
பாதி பேரு கடுப்பாவிட்டிங்க போல..
ஈஈஈஈஈஈ.. வாங்க கூட்டி போறன் ஸ்டோரிக்குள்ள...

அதில்ல பாஸு.. அவள எப்டி சரி நான் கண்டுபுடிச்சிடுவேன்.. நம்ம பயலுக நல்லா தான் பாத்துட்டு இருந்து இருக்கானுக..அவ தான் கொஞ்சம் அசந்த ஒடனே கண்ணுல மண்ண தூவிட்டு ஓடிட்டாள்...ஊரு முழுக்க தேடிட்டு தான் இருக்கிறோம் பாஸூ..எப்டியாவது எங்க கிட்ட சிக்கிடுவா..
பயத்தில் பதறி கதறி இவன் பிதற்றி கொண்டிருக்க எதிரிலிருந்தவனோ ஷட்டப்.. ப்லடி**** இந்த சின்ன வேலய கூட ஒழுங்கா பண்ண தெரியாத உன்கிட்ட போய் இந்த வேலய ஒப்படைச்சேன் பாரு என்ன சொல்லனும்..என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது அவ உயிரோட எனக்கு கிடைக்கனும்..அதுக்கான வேலய பாரு..அவ மட்டும் கிடைக்க இல்லனா நீ எமலோகம் போக ரெடியா இரு..என் கண்ணு முன்னாடி நிக்காதே.. தென் ஜஸ்ட் கெட் லொஸ்ட் என கோபத்தில் கத்தியவனை கண்டு நடுங்கி தான் போனான்அந்த ஏரியா ரௌடி பவாணி..தலையை தொங்க போட்டுக்கொண்டே வெளியில் வந்தவன் உள்ளமோ புகைந்து கொண்டிருந்தது..
அதுதான் மூக்காலயும் காதாலயும் புகை புகையா போவுதோ..

எப்பா ரொம்ப சூடாதான் பா இருக்கிறான்..
ஏனுங்க ரீடர்ஸ் பெருமக்களா..மீதி கதைய படிச்சு முடிக்கும் வரை யாரு யாருக்கு காபி டீ பூஸ்ட்டு வேணுமோ இதோ இங்க ஆறடில ஒரு அடுப்பு இருக்கு தண்ணிய சூடு பண்ணி ஊத்தி எடுத்துகோங்க பா..
அதோ அந்த ஆளு வண்டில ஏற போறான்..டக்குனு போங்கயா..
பார்த்து அவன் ஒங்க இடுப்ப ஒடச்சு துடுப்பு புடிச்சு நடுக்குற மாதிரி தடுப்பு திரையுள்ள பெட்டுல படுக்க வச்சுட போறான்..ஏன்னா அவன் ஒரு மாதிரி எடுப்பு புடிச்ச ஆளாக்கும்...

அவ தப்பிச்சு 24 மணித்தியாலம் முடிஞ்சு போச்சு..ஆனா எந்த நியுஸும் இதுவரை எந்த மீடியாலயுமே வர இல்ல..அப்டின்னா அவ அந்த விஷயத்த போலிஸுக்கோ மீடியாக்கோ கொண்டு போக இல்ல...ஏன்..
அவ இந்நேரத்துக்கு இந்த மேட்டர வெளிய சொல்லி இருக்கனுமே..
ஒன்னு அவ மனசுல வேற ப்லேன் ஏதாவது இருக்கனும் இல்லனா சொல்ல கூடிய நிலமையில அவ இல்ல..
என்னவா இருக்கும்..
என்ன ஆனாலும் பரவாயில்ல..
நான் நெனச்சது எனக்கு கிடைக்கனும்..
இந்த *யாத்ரன்* யாருன்னு உனக்கு காட்டுறேன் டி..
என அடக்கப்பட்ட கோபத்துடன் வலது கையில் ஒட்டி கொண்டிருந்த அந்த வாட்ச்சை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தான்..இல்ல இல்ல கத்தி கொண்டிருந்தான் அவன் *யாத்ர தேவன்*

நிமிர்ந்து நின்றால் எதிரில் நிற்பர் நிலைகுலைந்து தான் போவர்..
ஆறடியிலும் சற்று கூடுதலான உயரம் தான் போலும்..
சிரிப்பை சிறிதும் பார்த்திடாத வரண்ட உதடுகள்..
அந்த வாள்விழியில் எப்போதும் ஏதோ ஓர் அதிகார தோரணை..
கடுமையாய் கட்டிய உடல்..
கொஞ்சம் சோளக விதைய போட்டா பொரிந்திடும் போல அப்டியே கொதிச்சுட்டு இருக்குற முகம்..
நினைத்ததை நொடியில் நாடாத்திடும் அவன் சாமர்த்தியம்..
எப்பொழுதும் விறைப்பாய் இருக்கும் அவன் நெஞ்சுக்குள்
ஏதோ ரணங்களால் குத்தி கிழிக்கப்பட்டு உதிரம் சொட்டு சொட்டாய் கொட்டி கொண்டிருக்கும் அந்த மனசு....
இத்தனையும் அடங்கலாக நின்றான் அவன்.

ஏம்பா.. அந்த வாட்சுக்குள்ள அப்டி என்ன தான் இருந்துச்சு..யாராச்சும் உத்து பாத்திங்கலா..?
அய்யோ இல்லயா..
இவன பார்த்தாலே எனக்கு கை கால் எல்லாம் நடுங்குது..
இவன்ட போயி கேட்கவும் முடியாதே..
சரி அவனா சொல்ற வரைக்கும் டிங்கு டிங்குன்னு வெய்டிங்கு பண்ணுவோம்..

ஏ போட்டி டூ ( A42) போலிஸ் ஸ்டேஷன்_

கலையரசன் நாளைக்கு மோர்னிங் நான் கேஸ் விஷயமா ஒரு இடத்துக்கு போறேன்..
அது வரை எஸ்ஐ ஜெகதீஷ் தான் இன்சார்ஜ் அவரு ஸ்டேஷன பார்த்துப்பாரு..நான் எல்லாமே சொல்லிடேன்..ஏதாவதுன்னா எனக்கு கோல் பண்ணுங்க..

ஓக்கே சார்..

அந்த ரோட்ல அடிபட்டு விழுந்த பொண்ண ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனிங்கலே..
என்னாச்சு யாரு அந்த பொண்ணு..?

சேர்.. அவங்க யாருன்னு தெரியல.. நான் ஹாஸ்பிடல் கொண்டு போற வழிலயே கண் முழிச்சிட்டா.. என்ன ஏதுன்னு கேட்டப்போ எதுவுமே சொல்லாம என் செல்போன வாங்கி யாருக்கோ கோல் பண்ணி பேசினா..
அப்றம் எனக்கு எதுவும் இல்ல என்ன பஸ் ஸடான்டல இறக்கி விடுங்கன்னு சொன்னா..
அவ சொல்றதுல பொய் இருந்த மாதிரி தெரியல சார்..நானும் அவ சொன்ன இடத்துல இறக்கி விட்டுட்டு வந்துட்டேன்...அவ பேரு கூட கேட்கல சார்..

ஓஹ்.. ஓக்கே. ஜாக்கிரதையாக இருங்க ..
நான் வண்டிய எடுத்துட்டு போறேன்.. மோர்னிங் நீங்க வந்து எடுத்து கொள்ளுங்க என்றவன் வண்டியை எடுத்து கிளம்பி விட்டான். ..

#என்னடா ஹீரோயின காணவே இல்லன்னு தேடுறிங்கலா.. வாங்க அங்க தான் போ போறோம் இப்ப...கம் போலோ மீமீமீமீமீ....

அடியேய் ஜம்பு மூக்கி ஜானகி கதவ தொறயேன்டி..
எவ்ளோ நேரந்தான்டி நானும் வெய்ட் பண்ணுவேன்..
இப்ப வெளில வர போறியா இல்லையா..
ஒரு சேலய எடுத்து இப்டி ஒரு சுத்து அப்டி ஒரு சுத்து மேல ஒரு குத்து சைட்டுல ஒரு குத்து இப்டி சுத்திட்டு குத்திட்டு வாரதுக்கு ஒனக்கு இவ்ளோ நேரமாடி..
என்ன தான் உள்ள செய்றியோ ஜானக்க்க்கிகிகீகீகீகீ

ஏய் மலகொரங்கே ஏண்டி இந்த கத்து கத்துறே..
காது ங்கொய்ங் ங்கொய்ங்குது...
வெளியில வந்தேன் மவளே வாயிலயே மிதிச்சுடுவேன்..
கொஞ்சம் நேரம் வாய மூடிட்டு இருடி..
இப்ப தான் லைன்ஸ்ஸே வைக்கிறேன்.. உள்ள வந்து ஜஸ்ட் டூ ஹவர் தானே ஆகுது...இதுக்கே இப்டி துடிக்கிற...

என்னாது ஜஸ்ட்டு டூ ஹவர்ஸ்ஸா...
ஏண்டி ஒனக்கெல்லாம் மனசாட்சி மனசாட்சின்னு ஒன்னு இருக்கா..
என் பாவம் ஒன்ன சும்மாவே விடாது டி..
இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப...இதே மாதிரி புலம்பி திரியுற மாதிரி என்னய மாதிரி நான் ஒன்ன ஆக்கல....

நீ ஆக்குறது அவிக்கிறது எல்லாம் பங்ஷனுக்கு போய் வந்து பார்த்துக்கோ..
இப்போ வா போலாம்..டைம் ஆயிடுச்சு..

ஏண்டி என்னமோ நான் லேட் பண்ற மாதிரியே பேசுற..
இந்த ஒரு புடைவைய சுத்த தான் ஒனக்கு இம்பூபூபூட்டு நேரமா...
அது சரி எதுக்கு இப்ப என்னமோ ஒனக்கு கல்யாணம் மாதிரி இவ்ளோ அலங்காரம் பண்ணிட்டு வந்து இருக்க..?

ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ வா போலாம் என மகாவை இழுத்து கொண்டு போனாள்..

ஆமா இதுங்க ரெண்டும் எங்க இப்டி மினுக்கிகிட்டு ஜிங்கு ஜிங்கு ன்னு போகுதுங்கோ...
ஓக்கோ... நான் இவங்கல போலோ பண்றன் நீங்க எல்லாம் வழக்கம் போல என்னய போலோ பண்ணுங்க..
ஆகட்டும்
கட்டும்
டும்

அட.. நம்ம கண்ணன்...
இவன் எதுக்கு டைடானிக்ட தம்பி கப்பல் டொய்டானிக் கடல்ல கவிழ்ந்த மாதிரி இம்பூபூபூட்டு சோகத்துல இருக்கிறான்..
சரி இல்லயே...

ஏனுங்க மக்கா...
அவங்க ரெண்டு பேரயும் அப்றமா போய் பார்க்கலாம்.. வாங்க நம்ம கள்ள கண்ணன ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுவோம்..

ஏம்பா கண்ணா...

எக்கா...

ஏண்டா ராசா கண்ணெல்லாம் கலங்கி இருக்கு.. ஓ மொகமே சரியில்லயே..
என்னடா ராசா ஆச்சு...😟

அடச்சீ நிறுத்து... என்ன ஒப்பாரி வைக்காத கொறயா பொழம்புற..
யாரு நா சோகமா உக்காந்து இருக்கேனா...மொதல்ல போயி நல்லா கண்ண செக் பண்ணி கண்ணாடி வாங்கி போடு..

எதே.. கண்ணாடி யா..
டேய் அப்போ நீ அழ இல்லயா...கண்ணெல்லாம் செவந்து தண்ணியா இருந்துச்சே டா..

அட அறிவு கெட்ட எக்கோவ்வ்.... அதோ பாரு அதோ அதோ அதோ அதோதோதோதோ அங்க ஒரு பஜ்ஜி கட தெரியுதா ஒனக்கு..

ஆமா ஆமா மா மாமாமாம தெரியுது..
கட்டையா குட்டி யானை மாதிரி ஒருத்தன்
நிக்கிறானே அந்த கட தானே...

அவன் கட்டையா இருக்கிறானா..
எங்க உயரமா இருக்குற ஒங்க முகத்த கொஞ்சம் காட்டுங்க மெடம்

😁😁😁😁😁
சரி சரி சரிரிரி
மேல சொல்லு..

அந்த கட பக்கமா வந்தேனா..
அந்த பஜ்ஜி என்னய பார்த்து
🎶🎶 கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேனே..
மாவுல குளித்து எண்ணெய்யில் பொரிந்து நான் பூத்திருந்தேன..
கொஞ்சம் விலை தாதாதான்...
வாங்கிகிட்டு போ....🎶🎶

அப்டின்னு பாட்டு பாடுன மாதியே இருந்துச்சா...
சரின்னு ஒரு ப்லேட்டு வாங்கினேன்..
ஆசை ஆசையா வாயிலயும் வச்சேன்..அந்த
கிரகம் புடிச்சவன் கையில கைவிலங்கு மாட்ட..காரத்த கண்ணு மண்ணு தெரியாம கண்டபடி தட்டி இருக்குறான்க்கா...
அதான் கண்ணெல்லாம் செவந்து கண்ணீர் வருது...

ஹூஹூம்... அதானே பார்த்தேன்.. நீயாவது அழுது வடியுறதாவது..
நீயல்லாம் வேற மாறி டா.. வேற மாறி..🥴
சரி.. ஒன்ட தான் ஒன்னு கேக்கனும்..

என்னக்கா

அந்த மித்ரன் உன்கிட்ட அந்த கேஸ பத்தி சொன்னான் தானே.. அது என்ன மேட்டருன்னு
கொஞ்சம் எங்கிட்டயும் சொல்லுடா...
நான் மட்டும் இல்ல ரீடர்ஸும் குழம்பி போய் இருக்கோம்டா...

ஏனுங்க.. என்னத்த அப்டியே பாத்துட்டு நிக்கிறிங்க...
போங்க போயி போப்கோர்னு கோக்கு கடிக்க ஸ்நேக்கு எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து வட்டமா உக்காருங்க..
கதைய கேப்போம்..

ஆத்தி இவன் யா இப்புடி மொறைக்கிறான்...
ஏம்மா..அந்த மஞ்சள் கலர் சுடிதார் நம்ம கண்ணா மவராசாக்கு ஸ்பெஷலா 2பஜ்ஜி ப்லேட்டு சீச்சீசீ அது வாணாம்ல.. நல்லதா பார்த்து வாங்கிட்டு வந்துடு..😁கண்ணனும் என்னமோ பெரிய தேர்தல் பிரச்சாரம் பண்ண போற மாதிரி தொண்டையையும் செருமி கொண்டு அதாவது மித்ரன் என்ன சொன்னான்னா.....
அத நாளைக்கு பார்ப்போம்😁
டிங்கு வெய்டிங்கு பண்ணுங்கோ மக்களே..
அழகா வரிகள்ல உங்க கருத்த சொல்லிடுங்கோ..

நான் பொய்ட்டு வந்துடுறேன்.....
 
Afsha Rumaiz

Moderator
*🌚(காதல்)மாயாவி🌚*

*EPISODE 5*

*°~AFSHA RUMAIZ~°*

எப்டி இருக்குறிங்க மக்களே...!!
சௌக்கியமா...
கண்ணன் சொல்ல போற கதைய கேட்க ஆவலா இருக்குறிங்க போல..
நானும் தான்..வாங்க போய் கேப்போம் அப்டி என்ன ராஜ இரகசியம்னு...

அதாகப்பட்டது என்னன்னா மக்களே..!! நம்ம சிறீலங்காக்குன்னு பெரிய வரலாறே இருக்கு..
அதாவது ஆரம்பத்துல நம்ம நாட்ட தமிழ் மன்னர்கள் தான் ஆட்சி செஞ்சுட்டு இருந்தாங்களாம்..
அப்றம் இந்தியால இருந்து வந்த தேரர்களால பௌதம் நம்ம நாட்டுல பரவியதாவும் சொல்றாங்க..அதுக்கு அப்றமா தான் வெள்ளகாரனுங்க நம்ம நாட்ட புடிச்சு அவங்க கிட்ட இருந்து நாட்ட காப்பாத்த பல பேரு போராடி சுதந்திரத்த வாங்கி தந்தாங்கன்னு நான் இல்லப்பா வரலாறு சொல்லுது...

நான் இப்ப சொல்றத நல்ல கவனமா கேளுங்க..
நம்ம நாட்ட ஒரு சிறந்த தலைவன் ஆட்சி செய்ததாகவும் அவன் பெரிய வீரனுன்னும் அவன் பேரு இராவணன்னும் அவன் ஒரு தீவிர சிவபக்தன்னும் அவனுக்கு பத்து தல இருந்ததுன்னும் வரலாறு சொல்லுது..

இந்த இராவணன் இருக்கான்ல இராவணன் சீதைங்குற ஒரு பெண் மீது காதலுற்று அவள கவர்ந்து வந்து நம்ம நுவரெலியால இருக்குற சீதாஎலியங்குற இடத்துல வச்சி இருந்தானாம்..அந்த இடத்த சீதாதலாவன்னும் சொல்லுவாங்கபா..
அப்றம் அந்த பொண்ணோட கணவர் வந்து டிஷ்யூம் டிஷ்யூம் எல்லாம் பண்ணி அவள கூட்டி போனானாம்.. அந்த கதை நமக்கு தேவ இல்ல...

ஹக்கல எனும் இடத்துல இருந்து ஹப்புதளைங்குற இடம் வரைக்கும் ஒரு பெரிய மலை தொடர் போகுதாம் அது மூனு மலையாம்..
அத *திரிகூட பர்வதம்* ன்னு சொல்லுவாங்க..
அந்த மலையில தான் நம்ம இராவணன்ட தலைநகரமாகிய இலங்கா புரி இருந்துச்சு.. அந்த மலைக்கு பின்னால ஒரு பெரிய காடும் இருக்காம்..
தென் கிலியரா....???

அப்பறம் மாத்தளைல இருக்கிற சீகிரியா எல்லாருக்கும் தெரியும் தானே.. அது காசியப்பன் மன்னனால அவன்ட பாதுகாப்புக்கு அரணாக அமைக்கப்ட்ட மலை..இதுக்கு மேல ஒரு கோட்டைய அமைச்சு அதுல தான் காசியப்பன் வாழ்ந்தான்னு வரலாலாலாறு சொல்லுதுங்கோ...
பாக்க சும்மா சூப்பரா இருக்கும்.. உள்ள அழ அழகான ஓவியங்கள் எல்லாம் இருக்கு..
இப்ப ரீசென்டா உலக அதிசயத்துல எட்டாவதா அத சேத்து இருக்காங்க..இந்த மலைக்கு பின்னாடியும் ஒரு பெரிய காடு இருக்கு..

இது நான் தந்த இன்பர்மேஷன்.. இது க்ளியரா புரிஞ்சா தான் கண்ணன் சொல்ல போறது விளங்கும்.. நான் சொன்னது புரியலன்னா மேல போய் படிச்சுட்டு வாங்க..

டேய் கண்ணா...
சொல்லுடா அது என்னா கேஸ்..?

எக்கோவ்.....
சிகிரியா மலைக்கு பின்னாடி இருக்குற காடு அப்டியே தொடர்ந்து திரிகூடபர்வத மலைக்கு பின்னாடி இருக்குற காடோட இணையுது..
இது ஒரு பெரிய இணைப்பு தான்..
மக்கள் பெருசா அந்த காட்டுக்குள்ள எல்லாம் போறதே இல்ல..
இந்த காட்டுப்பகுதிய *வேந்திர வனம்* ன்னு சொல்லுறது..
வேந்திரம்ன்னு சொன்னா பகை வன்மம் அப்டின்னு பொருள்படும்..

என்னடா நீ என்ன என்னமோ சொல்ற...🙄🙄

இரு புல்லா சொல்றேன் கேளு..
சுமார் நாலரை வருஷத்துக்கு முன்னாடி பார்ஜிட்டர்ங்குற வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் ஒர்த்தர் சீகிரியா மலைய பார்க்க அது மேல ஏறியிருக்காரு..
அப்போ அவரு அந்த மலை உச்சியில நின்னு பார்க்கும் போது அந்த காட்டுக்குள்ள ஒரு பெரிய அரண்மனை மாதிரி எதையோ பார்த்து இருக்காரு..
அந்த பக்கம் போக கூடாதுங்குற தடையையும் மீறி அத ஆராய்ச்சி பண்ண அவரு அந்த கோட்டை இரகசியங்கல தேடி அந்த காட்டுக்குள்ள போய் இருக்காரு..
போன மனுஷன் இன்னும் திரும்பி வரவே இல்ல..
அவர கண்டுபுடிக்கறது தான் இந்த கேஸ்..

யாருமே போகாத அந்த காட்டுக்குள்ள எப்டிடா கோட்டை அரண்மனை எல்லாம் இருக்கும்..அவர
இவ்ளோ நாள் தேட இல்லையாடா..?

இது டிபார்ட்மெண்டுக்கே தெரியலயாம்..
இப்ப அவர காணயில்லன்னு அந்த நாட்டு கவர்மென்டே கம்ளைன் பண்ணி இருக்குறதால தான் இவங்க தேட போறாங்க..

ஓஹ்ஹோஹோ..
இதானா மேட்டரு...
இந்த மித்ரன் இத கண்டுபுடிப்பானா..?

அவனே கொழம்பி போய் இருக்கான்..
அந்தாளோட ப்ரென்டுட பொண்ணு கூட தான் அவரு சீகிரியா மலைல ஏறினதா தெரிஞ்சு அந்த பொண்ண புடிச்சு விசாரிக்கலாம்னு பார்த்தா அந்த பொண்ணயும் அந்த நாள்ல இருந்து காணவே இல்லையாம்...

ஆஹான்..
இடியப்ப சிக்கல் தான் போல...
சரி இது விஷயமா நீங்க எங்கடா போறிங்க..

அந்த காட்டோட ஒரு ஊரு இருக்குதாமே..
அங்க தான் போல.. எங்கடா போறோம்னு கேட்டாலும் மகாராசா சொல்லிடுவாரு..
அவன்ட கேட்குறதெல்லாம் சுத்த வேஸ்ட்டு...

அதுவும் சரிதான்டா...
சரியான அழுத்தம் புடிச்சவன் டா அவன்..

🎶🎶அட ஊதுங்கடா சங்கு..🎶நான் தண்ட சோறு கிங்கு...🎶🎶

வேற ஒன்னும் இல்லங்க மக்களே நம்ம கண்ணனுக்கு தான் கோல் வருது..
அது அவரு ரிங்குடோன்னு..
என்னா டோன்னு...
ரிங்கு ரிங்கு டோன்னு..😁

டேய் வெட்டி பயலே..
ஒனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்புன்னு ஒன்னு இருக்காடா..
எப்போ வீட்டுக்கு வர சொன்னோன் நானு..
இன்னும் வராம என்னத்தடா வெட்டி முறிச்சுட்டு இருக்க தண்டசோறு.. அவன் அப்பா பாசத்தில் பொங்கோ பொங்கோன்னு பொங்கல் பானை மாதிரி பொங்கி கொண்டிருக்க

நம்ம கண்ணனோ போனை காதிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு கூலாக விசில் அடித்து கொண்டிருக்கிறான்..

ஏலே..இங்க பாருல.. கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத கதாயில்ல இருக்குக்குக்கு.....
எவ்ளோ திட்டு வாங்கினாலும் சிரிச்ச முகமாவே இருக்கிறான்..

டேய்..டேய்.. இருக்கியாடா கண்ணா..

சொல்லு இருக்கிறேன்..
இப்போ என்ன..

இப்போ என்னவா..
பங்ஷெனுக்கு டைம் ஆச்சுடா.. நாங்க மட்டும் தனியா போனா எங்க உங்க புள்ள எங்க உங்க புள்ளன்னு கேட்டு கேட்டே சாவடிச்சிடுவானுங்க எல்லாரும்.. வீட்டுக்கு வந்து தொல டா..

சும்மா ப்ரஷர் கூக்கர் மாதிரி கொதிக்காதே.. வாரன் வையி போன...

இவன் கட் பண்ணியவுடன் அடியேய் கலைவாணி எங்கடி அந்த பீபி மாத்திரை....

அதோ உங்களுக்கு முன்னாடி இருக்குற டேபல் மேல தான் இருக்கு..நீங்க அவனோட போச ஆரம்பிக்கும் போதே கொண்டாந்து வச்சிட்டேன்..

புள்ளயாடி அவன்.. உயிர வாங்குறான்..இவனோட மல்லுக்கு நிக்க முடியல என்னால என சலித்துக்கொண்டே கதிரையில் சாய்ந்தார்..

பாவம் மனுஷன்..என்னா பாடு படுத்துறான் பக்கிபய..

சரி அவன் என்னமோ பங்ஷெனுக்கு போறேன்னு சொல்றானே.. நாமலும் போவோமா...

கம்மம்ம் லெட்ஸ் கோ...இன்னைக்கு எபில வேற யாரோட சீன்னும்
வர இல்ல..
அதெல்லாம் நாளைக்கு கவர் பண்ணிடுறேன்..

*மேல சொன்ன வரலாறு எல்லாம் உண்மையானது.. பிறகு சொன்ன வேந்திர வனம் கோட்டை அதெல்லாம் உண்மை இல்ல..அதெல்லாமே என்னோட கற்பனை..யாரும் கூகுல்ல எல்லாம் தேடிடாதிங்க..*
காதல் இன்னும் கதையில வர இல்லன்னு யோசிப்பிங்க..
இனி தான் அதெல்லாம் வரும்...சலிச்சுக்காம பொறுமையா ரீட் பண்ணுங்க..
மேல சொன்னதுல டவுட் ஏதும் இருந்தால் கேளுங்க..
மறக்காம உங்க கருத்த சொல்லிட்டு போங்க..

டாட்டா மக்களே...😁
 
Afsha Rumaiz

Moderator
*🌚(காதல்)மாயாவி🌚*

*EPISODE 6*

*°~AFSHA RUMAIZ~°*

என்ன எல்லாரும் கல்லெறிந்த குட்டை போல குழம்பி போய் இருக்குறிங்களா..🤭
டேக் இட் ஈஸி பா..
போக போக எல்லாமே புரியும்.. இன்ட்ரெஸ்ட் ஆஹ் இருக்கும்..
நிஜத்துல நடக்காத பல விஷயங்கல கற்பனை மூலமா நடத்தி காட்டலாம்..
நாங்களும் நடத்திடுவோம்..
சரி வாங்க போவோம் ஸ்டோரிக்குள்ள...அது ஒரு பிரம்மாண்டமான வீடு..
வீட்டின் முன் ஹோலே காஞ்சனா படத்துல வர்ற அந்த க்ரவுண்டு மாதி இம்பூபூபூட்டு பெருசா இருக்கே.. டோட்டல் வீடும் எவ்ளோ பெருசா இருக்கும் 🙄 சுத்தி பார்க்கவே சுமார் மூணு நாலு வாரம் புடிக்கும் போலயே..🥴
ஏனுங்க.. யாரும் எங்குட்டும் தனிய போய்டாதிங்க.. இந்த வீட்டுக்குள்ள தொலைஞ்சா கூட தேடி புடிக்கவே முடியாது..
பாவம் காட்டுக்குள்ள தொலைஞ்சவரயே தேட முடியாம மித்ரன் திண்டாடுறான்.. இதுல நாமலும் தொலஞ்சா...🤥
இதோ இப்டி ஓரமா நின்னு சீன்ன பாத்துட்டு போயிருவோம்..
ஓக்கே..
ரைட்டு..

அந்த ஹாலில் இருந்த ஒற்றை சோபாவில் அலைந்து ஓய்ந்த கொடியாய் வஞ்சியவள் வாட்டமாய் வாடிக் கிடந்தாள்..

மெலிதான தோற்றம்..
அழுது அழுதே வீங்கியிருந்த கன்னம்..
கண்ணீரே வற்றி வரண்டு போன அவளின் கண்கள்.. அதையும் சுற்றி கருப்பு நிற வானவில்லாய் கருவளையம்..
கை கால்களில் இரத்த கசிவுகளுடன் சிராய்வுகள்..
கிளிப்புக்குள் அடங்கமாட்டேன் என வீம்பாய் காது மடல்களில் சில முடிக்கற்றைகள்..
நெஞ்சுக்குள் அடங்கமாட்டேன் என அவள் முகத்தில் யோசனையாய் சில எண்ணகோலங்கள்..

மொத்தமாய் கலைக்கப்பட்ட ஓர் வண்ண ஓவியமாய் துவண்டு கிடந்தாள் அவள் *நந்தினிகா*

அவளின் முன்னே அவளையே கூர்ந்து பார்த்தப்படி உட்கார்ந்திருந்தார் வக்கீல் *ஈஸ்வரன்*.

ஏம்மா நந்தினி என்னமா ஆச்சு ஒனக்கு.. உடம்பெல்லாம் இவ்ளோ காயம்.. வந்ததுல இருந்து கேட்டுட்டு இருக்கிறேன்..எதுவுமே சொல்லாம இப்டி அமைதியா இருந்தா என்னமா அர்த்தம்..
என்ன நடந்துச்சு நந்தினி..
இவ்ளோ நாளும் எங்க இருந்த? என்ன ஆச்சு?

முகத்தை கை கொண்டு அழுந்த துடைத்தவள்..
ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவள்..
மாமா.. இப்ப எதுவும் கேக்காதிங்க..நான் என்னைக்கும் தப்பு பண்ண மாட்டேன் மாமா.. நான் உங்க பொண்ணு மாமா..
என்ன நம்புங்க..

என்னமா நீ இப்டி சொல்ற..
உன்ன நம்பாம இருப்பேனா..உன்ன வளர்த்தவன் நான் மா..
என் வளர்ப்பு தப்பாகாது..
ஆனால் ஒனக்கு என்ன ஆச்சுன்னு தெரியனுமே மா..

மாமா.. சில விஷயங்கல நானே தான் பேஸ் பண்ணனும்.. நீங்க தானே மாமா சொல்லி இருக்குறிங்க..எங்க வாழ்க்கையில எப்பவுமே யாரையும் நம்பி எதிர்ப்பார்த்து நிற்க கூடாதுன்னு..அதனால
நான் தனியவே இத முடிக்கிறேன் மாமா..

நந்தினி.. எனக்கு தெரியும் நீ தைரியமானவ.. ஒனக்கு எதுவும் சொல்ல தேவயில்ல.. எதுக்கும் ஜாக்கிரதையா இரு.. எது வேணும்னாலும் என்கிட்ட சொல்லுமா..

மாமா.. நான் கொஞ்ச நாளுக்கு ஹோஸ்டல்ல தங்கிக்காம உங்க வீட்டுல தங்கிக்கவா..

என்னடாமா..இப்டி கேட்குற..இது உன் வீடு மா.. எப்டி பர்மிஷன் எல்லாம் கேட்டு எங்கல சங்கடபடுத்தாதே நந்தினி என அங்கே வந்தாள் ஈஸ்வரனின் மனைவி கலைவாணி...

லேசாய் புன்னகைத்தவள் அத்தையை அணைத்தவள் கன்னத்தில் ஓர் முத்தத்தை வைத்துவிட்டு ஓர் அறைக்குள் சென்று விட்டாள்..

ஈஸ்வரனின் முகத்தை ஏக்கமாக பார்த்தாள் கலைவாணி..
மனைவியின் அர்த்தம் புரிந்தவரோ விடு வாணி.. அவ எப்பவும் அப்டி தானே.. பாவம் ஏதோ அவ மனச உறுத்திட்டே இருக்கு.. ஆனால் அத வெளியசொல்ல தான் மாட்றா.. பார்க்கலாம்..
நீ போய் ரெடியாகிட்டு அவகிட்டயும் சொல்லிட்டு வந்திடு..
டைம் ஆச்சு கிளம்பலாம் என கூறி முடித்தார்..

எல்லாரும் நினைக்கிறது சரிதாங்க..
கண்ணனின் அப்பா தான் ஈஸ்வரன் அவரு வக்கீல்.. அவன்ட அம்மா கலைவாணி..
ஈஸ்வரன்ட தங்கை மகள் தான் நந்தினிகா..
நம்ம கண்ணனுக்கு அத்த பொண்ணு..
அவளோட அம்மா அப்பா எல்லாம் இறந்துட்டாங்க..
அந்த கத இப்ப நமக்கு வேணா..
ரௌடிங்க துரத்திட்டு வந்தது..
யாத்ர தேவன் தேடினது..
நம்ம மித்ரன் கூட ஹோஸ்டல் போயி ஒரு பொண்ண தேடுனானே அதான் பா அந்த ரிஸேச்சர் கூட மலையேறின பொண்ணு அதுவும் நம்ம நந்தினாகா தான்...
எதுக்கு இவள எல்லாரும் இப்டி தேடிட்டு இருக்காங்க..
போக போக பார்க்கலாம்..

இப்ப வாங்க எல்லாரும் ஏதோ பங்ஷெனுக்கு போறாங்கல்ல..நாங்களும் போவோம்..
எல்லாரும் கரெக்டா இருக்கிறோம் தானே.. யாரும் மிஸ் ஆகிட இல்லையே..
கிளம்பலாம்..
ரைட்டு..

பயங்கர சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது அந்த மூன்று மாடி மண்டபம்..
ஸ்டேஜ் எல்லாம் சும்மா சூப்பர் டூப்பரா அர்ரேன்ஜ் பண்ணி இருக்காங்க..
கீழ மேலன்னு கதிரை எல்லாம் வரிசை வரிசையா போட்டு கல கட்டுது..
ஆமா இது என்னா பங்ஷஜன்னு....
இரிங்க பா யாராவது ஒருத்தர புடிச்சு கேட்போம்..
அட நம்ம மித்ரன் வாரான் அங்க பாருங்க..

அட அட அட
என்னா நடை
என்னா உடை
என்னா மாஸ்ஸு
என்னா மவுஸு
என்னா கலரு
என்னா பவரு
அப்பப்ப்பா...
சும்மா சலிச்சு எடுத்த மைதா மாவுல செஞ்ச ரசகுல்லா மாதிரி கும்முன்னு இருக்கானே..

ரசகுல்லா மைதா மாவுலயா பண்றதுன்னு யாராவது போர்க்கொடிய தூக்கிட்டு வந்தா பதில் எல்லாம் கிடைக்காது..ஏன்னா ரைட்டர் ஜீ க்கு தெரியாது மக்களே..😁

ஏம்பா.. கொஞ்சம் மெதுவா பாருங்க பா..
அப்டியே அவன முழுங்க போற மாதியே பார்க்குறிங்க..🧐
மப்டி இருக்கிறான் போல உடம்போடு ஒட்டிய டீஷர்ட்டு அவன் கட்டழகை கண்ணுக்கு அழகாய் காட்டுகிறது..
காக்கி பேண்ட்டு
காக்கி ஷு
கண்ணுல கருப்பு க்ளாஸு
தலை முடியோ அடிக்கிற காத்துக்கு போட்டு தாக்கு போட்டு தாக்குன்னு ஒரு ஆட்டத்த போட்டு தாக்குது..

அட..போதும் இவனயே சைட்டு அடிச்சுட்டு நின்னது..
கேப்போம்..
ஹேய்.. மித்ரன்..😁

எக்கோவ் நீங்க எங்க இங்க..

என்னடா பண்ண..
ஒங்க எல்லார் பின்னாடியும் ஓடி ஓடியே வாழ்க்க ஓடுது..
சரி அத விடு..
இங்க என்ன பங்ஷென் டா தம்பி...

இது இசை விருது விழா..
இப்ப கொஞ்ச நாள் முன்னாடி *களவானிகள்* அப்டிங்குற குரூப் பசங்க ஒரு பாட்ட ரிலீஸ் பண்ணி இருந்தாங்க..
அந்த பாட்டு வேர்ல்டு வைட் பேமஸ்..
அதுக்கு தான் அவார்டு பங்ஷன்..
இதுக்கு நிறைய வீஜபிஸ் பெரிய பெரிய பிஸ்னஸ் மேன்ஸ் பேமஸ் அர்வர்கேட்ஸ் எல்லாம் வர்றாங்க..
அதுக்கு தான் எங்கல பாதுகாப்புக்கு போட்டு இருக்காங்க..

ஓஹ்ஹோஹோ...
ஓக்கோ ஓக்கோ...

நீ போ பா..
போயி உன் வேலய பாரு..சரிரிரி..ஏன் இப்புட்டு டிப் டாப்ப டிரஸ் பண்ணிட்டு வந்து இருக்க நீயி...🤨 எனக்கு தெரியாம ஏதும் லவ்வு கிவ்வுன்னு கம்மிட் ஆகி அவள பார்க்க தான் இப்டி வந்து இருக்கியோ..

அட அர லூஸு ரைட்டரே..
நீயே ஆள் செட் பண்ணி தந்தாலும் எனக்கு வானா...நான் கட்ட பிரம்மச்சாரி..
போ..போயி ஒரு சேர்ல உக்காரு.. நான் போறேன்..

எதே... கட்ட பிரம்மசாரி ஆஹ்..😨 இருடி மவனே.. உன்ன எப்டி ஜெமினி கணேஷன்னா மாத்துறேன்னு மட்டும் பாரு..
ஒன்ன ஒருத்தி பின்னாடி கட்டவிழ்ந்த காளையா காலை மாலை தெரியாம அலைய விடுறேன் டி..
இருடா மவனே இருக்கு உனக்கு...😁

தள்ளி வந்த மித்ரனின் மனமோ *கண்ணம்மா எனக்கு நீ வேணா.. நான் ஒன்ன நினைக்கவே மாட்டேன் டி.. உன்ன எனக்கு புடிக்கவே இல்லடி.. ஒன்ன நினைச்சாலே மனசுக்குள்ள எரியுது டி.. தயவு செஞ்சு என் முன்னாடி வந்துடாத டி கண்ணம்மா* என சொல்லிக்கொண்டது..

வாங்க போயி உக்காருவோம்..

அட நம்ம ஜானகி மகா கூட இங்க தான் வந்து இருக்காங்க போல..
அதோ அதோ அங்க ஸ்டேஜ் பக்கத்துல என்னமோ பிஸியா வேல செஞ்சிட்டு இருக்காங்க..

ஆஹா... இவனும் இங்க தானா இருக்கான்.. ஏனுங்க டக்குனு திரும்பி பார்த்துடாதிங்க பா..
அதோ அங்க முதலாவது லைன்ல பன்னிரென்டாவதா கால் மேல கால போட்டு கையில போன்ன நோண்டிட்டு பவுஸா உக்காந்து இருக்காரே அவரு யாருன்னு தெரியுதா மக்கா..
நல்லா பாருங்க..
அதே அதே அதே
நம்ம யாத்ர தேவன் தான்பா..
இவன் எதுக்கு இங்க வந்து இருக்கான்..
பாரு ஆளு பார்க்க அப்டியே படையப்பா பட ரஜினி ஸ்டைல்ல தான் இருக்கான்.. என்னா சிரிக்க தான் மாட்டிகிறான்..
ஆனா பார்க்க பள பளன்னு பால்கோவா மாதியே இருக்கிறான்..
ப்லக் என்ட் ப்லக் ல ப்ரைட்டா வேற லெவல்லா வந்து இருக்கிறான் பா நம்ம யாத்ர தேவன்...இங்க பாருங்க மக்கா..அட இந்த பக்கம்..
இந்த கள்வனும் இங்க தான் வரான்..
அதான்பா நம்ம கண்ணன்..😜
(கண்ணனோட பேன்ஸ் எல்லாம் சண்டைக்கு வந்துராதிங்க பா.. மீ பாவம் ல😌)

டார்க் க்ரேய் கலர்ல ஷேர்ட்டு போட்டு..
அதுக்கு மெட்சாவே பேன்ட்டு..
கையயும் பாதிக்கு மடிச்சு ..
நெஞ்சு பட்டன் ரெண்டையும் கழற்றி விட்டு..
ஷேவ் செய்யாத தாடி மீசையோட..
யாரோடவோ போன் பேசிட்டே வார்றான்..
அவனும் நேரா வர
நம்ம ஜானகி என்னத்தையோ கை புல்லா எடுத்துட்டு போறாளே என்னாது..
அட பூவிதழ்களா...

கண்ணனும் பேசி பேசி வர
ஜானகியும் கைய வீசி வீசி போக

அவன் வர
இவள் போக

இவள் போக
அவன் வர

அவன் ..அடச்சீ...
வந்து தொலயேன்டா..
ஏய் ஜானகி நீ போய் தொலயேன்டி..🤦‍♀️

அவனும் வந்து
இவளும் போக

அந்த கள்வனோ கண்ணு மண்ணு தெரியாம கன்னியின் மீது மோத அவள் கையில் இருந்த பூவிதழ்களோ கண்ட மேனிக்கு பறக்க விழ போனவளை நொடியில் வளைத்து பிடித்தான் இடையில் கைக்கொண்டு...
அங்க அவ பார்வ இவன் மேல பட
இவன் பார்வ அவ மேல பட

திரும்ப இவன் பார்வ அவ மேல பட
அவ பார்வ இவன் மேல பட..

அடிங்ங்ங்..ங்கொய்யால..
இதுங்க ரெண்டும் இப்டியே மாத்தி மாத்தி
ஆஹ் மாத்தி மாத்தி பாத்துட்டே நிக்கட்டும் நாங்க பொய்ட்டு நாளுக்கு வருவோமா மக்களே....😁😁

என்னடா இந்த ரைட்டர் ஜீ...
நல்ல சீன்ல முட்டு கட்டய போடுதுன்னு நினைக்கிறிங்கலா தங்கம்ஸ்...
கரண்டும் இல்லபா.. சார்ஜும் இல்ல.. ஸோ இதுங்க ரெண்டு பேர்டயும் ரொமேன்ஸ்ஸ டுமோரோ கன்டினிவ் பண்ணுவோம்..

இது காதல்ல முடியுமா
இல்ல மோதல்ல முடியுமான்னு தெரியலயே...

இப்போ ஜானகி என்ன ஆட்டம் போட போறாளோ தெரியாது...

என்னா செய்வோம் மக்களே..
சேர்த்து வைப்போமா
இல்ல பிரிச்சு நம்ம வில்லத்தனத்த காட்டுவோமா...

சொல்லிட்டு போங்க
 
*🌚(காதல்) மாயாவி🌚*

*EPISODE 7*

*AFSHA RUMAIZ*வெறித்தனமா வெயிட் பண்றிங்க போலயே..
நல்ல சீன்ல எல்லார்ட கண்ணயும் மூடி விட்டனோ...😜
சரி சரி காண்டாவாதிங்க மக்களே..
இன்னைக்கு கன்டினீனீனீயுவ்வ்வூ பண்ணிடலாம்😁

ஜானகி கையில கொண்டு வந்த பூவிதழ்கள் ஏர்ல பறந்து திரிந்து கீழ வாரதுக்குள்ள காளையவன் அவளை வளைத்து பிடித்திருந்தான்..
அவளோட அந்த முட்டக்கண்ணுல என்ன தான் தெரிஞ்சிதோ தெரியல இந்த கள்வனின் கண்கள் அதையே மேய்ந்து கொண்டிருந்தது..
இவளும் அவனை பார்க்க
அவனும் இவளை பார்க்க
திரும்ப இவ அவன பார்க்க
பதிலுக்கு அவனும் இவள பார்க்க..

சப்பாஹ்..இது முடியாது போல இருக்கே.. எனக்கு இப்பவே கண்ண கட்டுது...

இப்ப பேக் ரவுண்டு சாங்கு போடலன்னா நல்லா இருக்காதே..
போட்ருவோம்..😁

பெண்ணவள் பந்தாய் ஆணவனின் கைகளில் பயந்து பாந்தமாய் அவன் சட்டை காலரை பற்றி இருக்க அவனோ அவளை கீழே விழாது பிடித்திருக்க

🎶🎶உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லயே...🎶🎶
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே..🎶🎶

என எங்கோ யாரோ ஒருவருடைய போன் சத்தம் போட

🎶🎶எவளோ எவளோ என்று நெடு நாள் இருந்தேன்..🎶
இரவும் பகலும் சிந்தித்தேன்🎶🎶

என இப்ப அந்த போன் இல்லைங்க நம்ம கண்ணன் தான் பாடுறான்.. அட மனசுக்குள்ள எல்லாம் இல்லப்பா நல்லா சத்தமா வெளியில அதுவும் ஜானகிக்கு கேட்குற மாதிரி தான் பா...

என்ன நடந்துச்சோ தெரியலயே..
கண்ணன் கன்னத்துல கைய வச்சிட்டு நிக்கிறான்..
அடடா.. ஜானகி நம்ம கண்ணன அடிச்சுட்டாள்..
இப்ப என்ன நடக்கும்னு நோக்கு தெரியுமோனோ..
நேக்கும் தெரியாது..
வாங்கோ பார்க்கலாம்..

ஹேய்.. பொறுக்கி ராஸ்கல்.. எவளோடயே கடல போட்டுட்டு ஈஈஈன்னு பல்ல இளிச்சிட்டு வந்து மேல இடிக்கிற..
அறிவு இருக்காடா உனக்கு மலை மாடு..
இடிச்சது மட்டுமில்லாம
எவளோ எவளோ நெடு நாள் சிந்தித்தேன்னு பாட்டு வேற படிக்கிறியா..
ஒன்ன என மீண்டும் கையை நீட்டி அடிக்க போனவளின் கையை தன் ஒற்றை கரம் கொண்டு தடுத்து தன் மற்றைய கரத்தை அவள் கன்னத்தில் பதித்திருந்தான்..
அதான் பா.. திருப்பி அடிச்சுட்டான்..

இப்ப கன்னத்துல கைய வச்சிட்டு நிற்கிறது நம்ம ஜானகி..

சும்மாவே கொதிச்சுட்டு இருந்தாள் அவள்.. இவன் அதுல எண்ணெய வேற ஊத்தி இருக்கிறான் அவளோ ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு சத்ததோட யூயூ என பேச ஆரம்பிக்க...

அடச்சீ.. நிறுத்து..
ஏதாவது பேசுன மறுகன்னத்துலயும் ஒன்னு வச்சிடுவேன்..

எப்டி எப்டி நான் எவளோடயோ கடல போட்டுட்டு வந்தேனா..
எரும மாடு மாதிரி வளர்ந்து இருக்கியே அறிவு வளர இல்லையாடி ஒனக்கு..
பப்பரபே ன்னு கைய வீசி கைய வீசி பராக்கு பார்த்துட்டு வந்து என் மேல மோதுனது நீயி..

ஏதோ பொண்ணா போச்சே பாவம்னு கீழ விழாம புடிச்சேன்..
அப்பவும் என்ன முழுங்குற மாதி பார்த்தது நீயி...

( அப்போ நீ பாக்கலயா ராசா.. ஏனுங்க இவன் அவள பார்க்கவே இல்லையாம்..)

அப்றம் என்ன சொன்ன நீயி..
ஒன்ன பார்த்து பாட்டு படிச்சேனா..
ஏய் குள்ள கத்தரிக்கா..
ஒன்ன பார்த்து ஆசையில எல்லாம் பாட இல்லடி..
எவளையாவது நல்லா காது ஜவ்வு கிழியுற மாதி அறையனும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன்...
இன்னைக்கு நீயா வந்து மாட்டின அதான் அத பாட்டா பாடினேன்...

என மலையாள பட மம்மூட்டி மாதிரி டயலோக் பேசி முடிச்சான் கண்ணன்...

ஜானகிக்கோ கோபம் ஏகத்தும் எகிறியது..

யாருடா குள்ள கத்தரிக்கா..
கண்ணாடா தெரியாது ஒனக்கு..🤬

சீசீச்சீ..பே..
ஆளும் அளவும்..
நல்லா பால்புட்டில பால் குடிக்கிற சைஸ் ல இருந்துட்டு சண்டைக்கு வார...
போடி..

என எறிந்து எறிந்து விழுந்து விட்டு அவன் சென்று விட்டான்..

ஜானகியோ அவளை நன்றாக சட்டியில் போட்டு கரண்டியால் கிண்டி கிளறி வறுத்து கறுத்து எடுத்துக்கொண்டிருந்தாள்..

டேய் கண்ணா..
ஏன்டா அவள ஒனக்கு புடிக்க இல்லயா..
ஒனக்கு ஒரு ஜோடிய சேர்ப்போம்னு நெனச்சேன்..

அடிங்ஙக..என்னாது..
எடு அந்த விளக்குமாற..
ஏய்..இதெல்லாம் ஓ வேல தானா..
அந்த அர லூச எந்தலையில கட்ட பாக்குறியா நீயி..

இல்லடா..அவ..

எக்கோவ்...இந்த கண்ணனுக்கான ராதைய நானே தேடிக்கிறேன்..
நீ ஓ வேலய பாரு..

அப்போ..ஜானகி கண்ணனோட ஆள் இல்லையோ...🤭
சரி பார்ப்போமே..என்னதான் நடக்குதுன்னு..

கண்ணனிடம் சண்டை போட்டு விட்டு வந்த ஜானகிக்கோ கோபம் கிலோ கணக்கில் நிமிடத்திற்கு நிமிடம் கூடி கொண்டே போனது..
யாரிடம் காட்டுவது என தெரியாமல் மகாவிடமே கொட்டி கொண்டிருந்தாள்..

என்னடி நீயி..
சும்மா சும்மா கத்துற

வாய கிளறாதே சொல்லிடேன்..
மகா எனக்கு இனி இங்க இருக்க முடியாது..
மைண்டு அப்சட் ஆஹ் இருக்கு..
நான் அந்த கெஸ்ட் ஏரியால இருக்கேன் டி...என கூறி எரிச்சலுடன் போய் விட்டாள்.. போயே விட்டாள்..

பாவம் தானே ஜானகி..
பக்கி பய நல்லா அடிச்சுட்டான்..
இவ மட்டும் சும்மாவா..
இவளும் தானே அடிச்சாள்..
அடிக்கு அடி சரியா போச்சு பா..😌

அங்கே நிகழ்வு அமர்களமாய் ஆரம்பமானது..
முதல் வரிசையிலேயே நாட்டில் தலைசிறந்த பிஸ்னஸ் மேன்கள்
அர்வகேட்ஸ் எல்லாரும் வரிசையாக உட்கார்ந்து இருந்தனர்..

அதில் தான் இலங்கையிலேயே நம்பர் வன் டிட்டெக்டிவ் ஆபிஸர் நம்ம யாத்ர தேவனும் இருந்தான்...

அவனுக்கு பக்கத்தில் தி வன் ஒப் பெஸ்ட் ஹோனஸ்ட் அட்வர்கேட் ஈஸ்வரன் அமர்ந்திருந்தார்..

ஏதேர்ச்சையாக அருகில் திரும்பிய அவர் கண்கள் யாத்ரனை கண்டதும் ஓர் நொடி கலங்கி தெளிந்தது..

அவரை பார்த்த அவனின் கண்களிலோ எந்த வித உணர்வுமே இல்லை..
வெறுமையாய் இருந்தது..

அப்படி..நினைப்பதை வெளியில் காட்டி விட்டால் அவன் *யாத்ர தேவன்* இல்லையே..

நிகழ்வும் ஆரம்பமானது..

களவாணிகள் க்ரூப் பசங்க அனைவரும் சேர்ந்து உருவாக்கிய பாடல் அந்த மண்டபத்தில் நாலா புறங்களிலும் பட்டு தெறித்து எதிரொலித்தது..

அவர்களுக்கு அவார்டும் கொடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது..

நிகழ்வு முடிந்து எல்லோரும் வெளியேறும் நேரம் யாத்ரா என்ற குரல் கேட்டு நின்றவன் திரும்பினான்..

அங்கே ஈஸ்வரன் தான் நின்று கொண்டிருந்தான்..

யாத்ரா..நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுடா..நீ.....

இனியும் எதுவும் நான் கேக்க தேவயில்ல...
இதுவரைக்கும் தெரிஞ்சதே போதும்...

யாத்ரா.. நந்தினிகாவ பத்தி எனக்கு நல்லாவே தெரியும்..அவ என் பொண்ணு டா..
அவ தப்பு பண்ணவே மாட்டா...அவள வளர்த்து நான்...என் வளர்ப்பு என்னைக்கும் தப்பாகாது..

அவ பண்ணது அவ்ளோ சின்ன விஷயம் இல்ல..
அதுக்கான பலன் அவளுக்கு கண்டிப்பா கிடைச்சே தீரும் என இரட்டை அர்த்தத்தில் அழுத்தமாய் கூறியவன் தொடர்ந்து
அவ இப்ப உங்க கூட தான் இருக்கிறான்னு எனக்கு நல்லாவே தெரியும்..
ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சு கொள்ளுங்க..இந்த யாத்ரன் செய்ய நினைக்கிறத யாரு நினைச்சாலும் தடுக்க முடியாது..
அவ ஒங்களுக்கு பொண்ணுன்னா எனக்கு ... இழுத்து நிறுத்தியவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இரண்டு எட்டு எடுத்து வைத்து விட்டு பின் திரும்பி என் வளர்ப்பு தப்பா இருக்காது அவள வளர்த்தது நான்னு நெஞ்ச நிமிர்த்தி சொல்றிங்கலே..
அப்போ என்ன வளர்த்தது யாரு மிஸ்டர் ஈஸ்வரன் என கேட்டு கூடவே ஓர் அடிப்பட்ட பார்வையையும் அவர் கண்களில் பதித்து சென்றவனின் முதுகையே வெறித்து பார்த்து கொண்டிருந்தார் ஈஸ்வரன்..

அப்பா.. எவ்ளோ நேரம் நான் உங்கல கூப்டுட்டு இருக்கிறேன்.. என்ன நின்னுட்டே கனவு காண்றிங்களா என தோள் தொட்ட கண்ணனின் சத்ததில் நிலைக்கு திரும்பி தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டார்..

அம்மா.. நீங்க போங்க.. நான் என் ப்ரன்ட்ஸ்ஸ மீட் பண்ணிட்டு வந்துடுறேன்..

ஆமா.. எல்லாரும் ஜில்லா கலெக்டருங்க..
ஒன்னு கூடி நாட்ட திருத்த போறாங்க..
பூரா ஒன்னுக்கும் உதவாத வெட்டி பயலுக..

என வாழ்த்திய அப்பாவை பார்த்து
இத பாரு.. சும்மா சும்மா வெட்டி பயன்னு சொல்லாத.. வெட்டியா சுத்துறதே ஒரு வேல தான்.. ஒனக்கெல்லாம் அது விளங்காது..

ஏய்ய்.. மேய்க்கிறது எரும இதுல ஒனக்கு பெரும வேறயோ... வெக்கமா இல்லயாடா...

வெக்கம் எல்லாம் பட்டா வாழ முடியுமா என்ன..

உன்ன..என ஏதோ சொல்ல போனவரை தடுத்து நிறுத்திய கலைவாணி என்னங்க நான் பீபி மாத்திர எல்லாம் கொண்டு வரலங்க..பேசாம வந்து வண்டியில ஏறுங்க..ரோட்டுல நின்னு மல்லுக்கட்டாம என
அவரை அழைத்து சென்றார்..

தூரத்தில் நின்று இவர்களை அந்த இரு விழிகள் ஏக்கமாய் பார்த்து கொண்டிருந்தது..
கிடைத்திருக்க வேண்டிய அனைத்தும் உடைந்தது ஏனோ..
உடைந்தது மட்டுமில்லாமல் அந்த துகள்கள் குத்தி கிழிக்கிறதே இருதயத்தை என மௌனமாய் கூறி கொண்டது..

ஹாஹாஹாஹஹா...
எல்லாமே விதி தானே..
விரும்பி ஏற்றது தானே..
தேவனே நாடகம் அரங்கேற்றி தேவனே நடிக்கிறானே..
யாவுமே வினா..
காரிருள் கனா..
ஹாஹாஹாஹாஹா...
என லிங்கத்தின் முன் அமர்ந்திருந்த சித்தரின் உதடுகள் கூறிவிட்டு மூடிக்கொண்டது..

டேய்.. மச்சான்..
எங்கடா இருக்க..?

நீ எங்கடா இருக்க என கண்ணன் கேட்க..

நம்ம பாலாஜி வீட்டு பழைய சுவருக்கிட்ட தாண்டா

ஆஹ்..வையி.. இதோ வாரன்.. என அந்த ஜில்லா கலெக்டருங்கல பார்க்க போறான்..

இவன் அங்க போய் சேர்ரதுக்குல்ல வாங்க நாங்க போய் ஜானகிய பார்த்துட்டு வந்துடலாம்..

கோபத்துடன் கெஸ்ட் ஏரியாவுக்குள் வந்தவளோ இரு கைகளிலும் தலையை தாங்கிக்கொண்டு அங்கிருந்த சோபாவிலேயே அமர்ந்து விட்டாள்..
அவள் மனமோ எரிந்து கொண்டிருந்தது..

அதான்பா.. நம்ம நாட்டுல எம்பி வீடெல்லாம் பத்திட்டு எரிஞ்சுதே அதே அதே மாதிரி தான்..

ஆத்தி.. நம்ம கதைக்குள்ள அரசியல இழுக்குறேனோ..
இல்ல இல்ல ரீடர்ஸ்..நா சொன்னத மறந்துடுங்க பா...

அப்பொழுது தான் அவள் கண்கள் வெளியில் போன் பேசிக் கொண்டிருந்தவனின் மேல் படர்ந்தது..

ஓர் நிமிடம்..
காலிலிருந்து பூமி நழுவியதாய் உணர்ந்தவள் தன்னை சுதாகரித்து கொண்டாள்..
கண்களில் வழிந்த அந்த கண்ணீர் ஆனந்த கண்ணீரா ஆத்திர கண்ணீரா என்பதை அவள் மட்டுமே அறிவாள்..

நடந்தவை அத்துனையும் கண் முன் நிழலாட தேவா என ஓடிச்சென்று அவனை கட்டிக்கொண்டாள்....

ஒரு நிமிடம் திகைத்தவன் பின் அவளை தன்னிடமிருந்து விலக்கினான்.. திடீரென வந்து தன்னை கட்டிக்கொண்டு அழும் பெண் யாரென அறிந்த மறு நொடி தன் அடியை அவள் கன்னத்தில் இடியாய் இறக்கி இருந்தான்..

நீ.. நீ இன்னுமா திருந்த இல்ல.. சீ.. நீயெல்லாம்...

தேவா.. நான் உன்ன நேசிக்கிறேன்.. நீ என்ன புரிஞ்சிக்கவே மாட்டியா...

இத பாரு.. இதான் உனக்கு கடைசி வார்னிங்.. இதுக்கு மேல நீ இப்டி சொல்லிட்டு என்கிட்ட நெருங்குனேன்னு வச்சிக்க ஒன்ன கொல்ல கூட தயங்க மாட்டேன்..

கொல்லுடா.. கொல்லு.. இந்த 7 வருஷமும்
உன்னயே நினைச்சு அணு அணு வா சாகுற என்ன ஒரேடியா கொன்னுடு தேவா....

ஏய்ய்.. நீ நெனக்கிற ஆள் நான் இல்ல.. டோன்ட் க்ரொஸ் மை ரூட் என விரல் நீட்டி எச்சரித்தவன் காரில் ஏறி காற்றாய் கலைந்திந்தான் அவன் யாத்ர தேவன்...

ஏன் தேவா.. எங்கிட்ட நீ நடிக்கிற.. எனக்கு தெரியும் நீ என்ன காதலிச்ச..ஆனா ஏ இப்டி அத மறைச்சி நாடகம் ஆடுற...

என அழுது வடிந்து கரைந்து கொண்டிருந்தாள் ஜானகி...

அட என்னடா நடக்குது இங்க
அப்டின்னு பார்க்குறிங்கலா...
அட என்ன எல்லாரும் என்னய சந்தேகமாவே பார்க்குறிங்க..
எனக்கு எதுவும் தெரியாது பா...
நம்புங்க😁
நடக்குறத டிங்கு வெய்டிங்கு பண்ணி தான் பார்க்கனும்...

இங்கு கண்ணனோ அவன் நட்பு வட்டாரங்களுடன் ஐக்கியமாகி இருந்தான்..
என்னங்கடா இது.. ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டிஸைன்ல இருக்கானுங்க..
இவனுங்க மொகரகட்டையெல்லாம் பாத்தாக்க அவ்வளவு நல்லவனுங்க மாதி தெரியலயே.....

அவங்கல பத்தின அறிமுகத்த அடுத்த எபில பார்ப்போம்..
ஜானகி விஷயத்துல எல்லாரும் குழம்பி போய் இருப்பிங்க.. அது போக போக க்ளியர் ஆகும்..
கதையில நெறய ட்விஸ்டு இருக்கு மக்களே.. பொறுமையா ரீட் பண்ணுங்க..
அப்போ நான் பொயிட்டு வரேங்கோ..
மறக்காம கம்மண்ட்ஸ்ஸ பண்ணிடுங்க தங்கம்ஸ்....
 
Top