பகுதி - 11
கையில் இருந்த பாலைப் பருகியவாறே கணவனையும் பருகினாள் பாவையவள்,
சட்டையின் கைகள் மடித்து விட்டு, காற்றில் அவன் கேசங்கள் அசைய, அழகாகப் பட்டு வேட்டியில், ஆணுக்கு உரிய மிடுக்கோடு, தன் முன்னே அமர்ந்து இருக்கும் கதிர் வேந்தனின் அழகில் மயங்கினாள் அவன் அழகி.
தன் முன் சிவந்த முகத்தை மறைக்கக் குடித்த பால் டம்ளரைக் கீழே வைக்காமல் பாசாங்குச் செய்யும் மனைவியின் செயலில் மயங்க வேண்டியவனோ, மெல்ல எதிரே இருக்கும் மெத்தையில் அவளை அமரச் சொன்னவன், ஒரு முறை அவள் முகத்தையே ஆழ்ந்துப் பார்த்தான்.
அதில் இருந்த அவள் காதல் ஆசை வெட்கம் எல்லாம் உணர்ந்தும், மெல்லக் குரலைச் சரி செய்தவன்," நீ இங்கே படுத்துக்கோ, நான் வெளியே போறேன்" என்றான்.
மனதில் எந்த விகல்பமும் இல்லாமல், " பரவாயில்லை நீங்க இங்கே படுங்க, இதில் என்ன இருக்கிறது" என்றாள் அவன் மனைவி.
" இல்ல வேண்டாம், ஒரு பொம்பளப் பொறுக்கிக் கூட எல்லாம் நீ படுக்க வேண்டாம் "என்றான்.
"என்ன பேசறீங்க"… என்றவளுக்கு அப்போது தான் புரிந்தது… அவன் எதனால் அப்படிக் கூறினான் என்று, அவனை ஏறிட்டுப் பார்த்தவளின் விழிகள் துயரத்தில் நிறைந்தது.
“நீ தான் என்னை ஒரு பொம்பளப் பொறுக்கிச் சொன்னியே, என்னை எல்லாம் நம்பி வீட்டில் விட முடியாது, ம்ம் வேற என்ன சொன்ன, ஆஹான் பெண்களிடம் காதல் என்று பழகிக் கர்ப்பமாக்கி ஏமாற்றுபவன், அப்பறம் தூணுக்குச் சேலை உடுத்தி இருந்தாலும் உரசிப் பார்ப்பவன், அப்படித் தானே, இதெல்லாம் உன் அகராதியில் கதிர் வேந்தன், அப்படித் தானே" என்று அவள் விழிகளைப் பார்த்துக் கேட்டான்.
"நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என்னால மறக்கவே முடியாது, நீ ஏன் அப்படிச் சொன்ன?… நான் பல பெண்களோடு சுற்றுவதை நீ பார்த்தாயா?… இல்லை நான் ஏமாற்றிவிட்டேன் என்று எந்தப் பெண்ணாவது உன்னிடம் வந்து சொல்லி அழுதாளா?…
உன்னால் எனக்குக் காதல் உணர்வுகள் எல்லாம் செத்தேவிட்டது, என்னால ஒரு பெண்ணைச் சாதரணமாகக் கூடப் பார்க்க முடியல, 'ஒரு வேளை நாம் தப்பான ஆளோ' என்ற எண்ணம் வர அளவுக்கு உன்னோட வார்த்தைகள் என்னைச் சிதைத்து விட்டது, கல்யாணம் பண்ணறது ஒரு பொண்ணை, காதல் வலையில் பல பெண்கள், அதில் நான் எத்தனாவது பெண் என்று கேட்டவள் தானே, சொல்லு நீ எனக்கு எத்தனையாவது மனைவி, சொல்லுடி" என்று அடிக்குரலில் கத்தினான்.
"நீ பேசிய பேச்சுக்களின் சுமையைத் தாங்க முடியாமல் தான் உன் கழுத்தில் தாலிக் கட்டினேன், நீ என்ன சொன்ன, 'இந்தத் தாலியைக் கட்டி விட்டால் உன்னையே நினைச்சுட்டு வாழ்வேன் என்றா, இல்லை உன்னிடம் வாழ்க்கைப்பிச்சைக் கேட்பேன் என்று நினைக்காதே' என்று போனவள் தானே, அப்பறம் எதுக்கு இதைக் கழட்டி வீசாமல் இருந்தே, அது தான் உன்னை இங்கே பிடித்த நிறுத்தி வச்சுருக்கு என்றான் கதிர்வேந்தன.
அது மட்டும் இல்லை, உனக்குத் தாலிக் கட்டுவதற்குக் காரணம் உன்னைத் தவிர வேற எந்தப் பெண்ணையும் நினைச்சுப் பார்க்க, ம்ஹூம் அப்படி ஒர் எண்ணம் எனக்கு இருந்ததே இல்லை, இப்போ இல்லை, பல வருடங்களாக மனதின் காதல் , உனக்கெல்லாம் அது புரியாத.
தாலிக் கட்டினது தப்புத் தான், அதை என் முகத்தில் கழட்டி வீசி விட்டுப் போயிருக்கணும், அது விட்டு எங்கே இருக்க, என்ன பண்ணற, எதுவுமே தெரியாமல் நான் எங்கே எல்லாம் தேடி அலைந்து திரிந்தேன் என்று தெரியுமா?… அப்படி என்ன கோபம் உனக்கு என் மேல்?… நான் பண்ணினத் தவறென்ன?… உன்னைக் காதலிச்சதா?… ஆனால் அந்தக் காதல் ஒன்னும் இல்லாமல் சின்னாப் பின்னமாகிச் சிதைந்து விட்டது, உன்னிடம் கூடக் காதலோடு என்னால் உறவாட முடியாது, அந்த அளவிற்கு உன்னோட வார்த்தைகள் என்னைப் பலவீனப்படுத்தி இருக்கு" என்று தன் மனதில் இருந்த எல்லாம் கொட்டி வீழ்த்தினான் அவள் முன்னே.
என்ன பதில் சொல்வது?…அவள் சாட்டிய குற்றங்கள் எல்லாம், அந்த நேரத்தில் இருந்த அவளின் குழப்பமான மனநிலையில் என்று, எப்படி விளக்கம் தருவது... தான் கூறும் விளக்கம் எல்லாம் அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா ?... சாதாரணமான வார்த்தைகளா அவைகள், அவர் மனநிலை எந்த அளவுக்குப் பாதித்து இருக்கும். இப்படி எல்லாம் மனதில் வேதனைப் பட்டவள், மெல்ல அவன் அருகில் வந்து அவன் கைகளைப் பிடித்தாள்.
அங்கே மௌனம் மட்டுமே இருந்தது.
சிறிது நேரம் அப்படியே இருந்தவள் மெல்ல அழுதபடியே, " ரொம்பப் பெரிய தப்புச் செய்துவிட்டேன், எனக்கு மன்னிப்பு என்பதே இல்லை என்று புரியுது, என்ன தண்டனைக் குடுத்தாலும் நான் ஏத்துக்கத் தயார் தான், நீங்கள் வேற ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாலும் தடுக்க மாட்டேன். இந்தத் தண்டனை நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன்" என்ற தன் மனைவியை ஏளனமாகப் பார்த்தான்.
"உனக்கு நான் சொன்னது புரியவில்லை போல, தெளிவாகக் கேட்டுக்கோ, வேறு பெண் என்றில்லை. உன்னிடமே எனக்கு உணர்வுகள் வருமா? தெரியவில்லை. எங்க அத்தைச் சொன்னது போலத் தான், திருமண வாழ்க்கையில் எந்தப் பெண்ணையும் சந்தோஷமாக வைக்கும் தகுதி எனக்கு இல்லை" என்ற கணவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அமிலம் காய்ச்சி ஊற்றியது போல் உணர்ந்தாள்.
"ஏங்க இப்படி எல்லாம் பேசறீங்க?… என்னைக் காயப்படுத்த உங்களை நீங்களே ஏன் இழிவாகப் பேசறீங்க" என்று முகத்தை மூடி ஆழுதவளிடம்.
"உன்னிடம் சொல்வதற்கு என்ன… முதலில் நீ சொல்லிச் சென்ற வார்த்தைகள் எல்லாம் கோபத்தை உருவாக்கியது, அதனால் ஆமாம் அப்படித்தான் என்று வேறு பெண்களைச் சும்மா கூட என்னால் பார்க்க முடியவில்லை, அழகான பெண்ணொருத்திக் கடந்து சென்றால், என்னை மீறிப் பார்த்தாலும்,' உள்ளத்தில் நாம் பொம்பளப் பொறுக்கியோ என்று கேள்வி வந்து என்னை முடக்கிப் போட்டு விட்டது. ஆனால் ஒன்று உன் வார்த்தைகள் எல்லாம் பொய்த்துப் போய் விட்டது. என்னால் சொந்தப் பொண்டாட்டியிடம் கூட நெருங்க முடியல இதில் நான் 'பெண் பீடன்' என்று சத்தமாகச் சிரித்தான்.
கதிர் வேந்தனின் கோபத்தை எப்படிக் கையாள என்று தெரியவில்லை மதுமிதாவிற்கு.
முதல் இரவில் காதலோடு போராட வேண்டியவள், கணவனின் குற்றச்சாட்டையெல்லாம் கேட்டு மனதில் வேதனையைத் தாங்க முடியாமல் போராடினாள்.
சொல்லிய வார்த்தைகள் எல்லாம் எப்படி அவள் வாழ்க்கையில் விளையாடிச் சென்றிருக்கிறது என்று உணர்ந்தாள்.
கணவனின் மேல் காதல் மட்டுமே கரையைக் கடக்கும் நிலையில், அதைச் சொன்னால் புரியுமா! அவருக்கு…இல்லை என் வார்த்தைகளை நம்பத்தான் செய்வாரா… எப்படி இந்த வாழ்க்கையைச் சரி செய்வது, எதுவுமே புரியாமல் தவித்தாள் மதுமிதா.
அவளின் தவிப்புப் புரியவும் மெல்ல எழுந்தவன் "நீ படு, இனி பேசி எதுவும் ஆகப் போறதில்லை, நான் போய்த் தூங்கறேன் என்றவன் படுக்கை அறையில் இருந்து வெளியே செல்ல எத்தனிக்க, வேகமாக அவன் கையைப் பிடித்து நிறுத்தியவள், மெல்ல அவன் அருகே வந்தாள்.
கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள், அவன் கண்களில் தேடினாள், அவளுக்கான கோபம், கோபத்தின் இயலாமை, இயலாமையினால் எட்டிப் பார்க்கும் காதல்.
ம்ஹூம், வறண்டப் போன ஒரு பார்வை, அதில் எந்த உணர்வும் இல்லாமல் மூன்றாம் மனிதனைப் பார்க்கும் பார்வை.
அவன் மனநிலைக்கு உடனே காதல் அதில் இருக்கும் ஊடல் , இப்படி அவள் எதையுமே எதிர்பார்க்கவில்லை, அவனுக்கான உணர்வுகள் அதில் கோபமே ஆகட்டுமே, அது எனக்கான என் கணவன், என் மேல் காட்டும் கோபம், அதை நான் காதலோடு எதிர்க்கொள்வேன். ஆனால் இந்த அந்நியத்தன்மை, ஒரு மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையே, இவ்வளவு நாட்கள் இல்லாத உரிமை இப்போது எப்படி என்று கேலிச் செய்த மனசாட்சியைத் தள்ளி வைத்தாள் ... தவறிழைத்து விட்டேன்… ஆம், அதைச் சரி செய்ய வேண்டியதும், என் கடமை அல்லவா, இன்றிருந்தே ஆரம்பிக்கிறேன் என்று முடிவு எடுத்தாள்.
மனதில் எல்லாம் அலசியபடி நின்றிருந்தவள் பிடித்த கையை ஆட்டி, அவளை நிகழ்வுக்குக் கொண்டு வந்தான். என்ன என்று அவன் கையைப் பிடித்து இருக்கும் அவள் மென் கரங்களைக் கண்டு கேட்டான். ஒன்றும் இல்லை என்று தலையை அசைத்தவள்,
அவன் கண்களைப் பார்த்து," நான் தான் தவறிழைத்து விட்டேன் அதற்கு எனக்கு மன்னிப்பு வேண்டும், நீங்கள் எப்போது மன்னிக்கணும் நினைக்கறீங்களோ, அப்போ மன்னிச்சுக்கோங்க, ஆனால் நான் தினமும் கேட்பேன், எனக்குத் தெரிந்த வழியில் நான் மன்னிப்புக் கேட்பேன் என்றவள், மெல்லக் கால்களை எக்கி நின்று அவன் இதழ்களில் தன் மெல்லிய இதழ்களை ஒற்றி எடுத்தாள், அங்கே எதுவுமே நடக்காதது போன்ற அவன் எதிர் வினையைக் கண்டு மனதளவில் துவண்டாள்.
ஆனால் அவன் காதல் இந்த மன்னிப்பை ஏற்கும் என்று நம்பினாள். மெல்ல அவன் இடது மார்பில் மீண்டும் தன் இதழ்களைப் பதித்தவள். " உங்களுக்கு எங்கே விருப்பமோ அங்கே படுத்துக் கொள்ளுங்கள், உங்க உணர்வுகளை நான் மதிக்கிறேன்" என்று பேசாமல் வந்து படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
உணர்வுகளே வராது என்றவன் மனதில் மின்னல் வெட்டியது, 'என்ன இவள் கேடி வேலைப் பார்க்கிறாள்' என்றவனுக்கு, அவள் இதழின் தீண்டல் இத்தனை நாட்களும் மனதில் உண்டான காயத்திற்கு மருந்தாகியது என்னமோ உண்மைதான்.
முழுவதும் தன் மனைவியாக நிற்கிறாள் என்பது புரியத் தான் செய்கிறது. ஆனால் காதல் கொண்ட மனதிற்கு இதெல்லாம் போதவில்லை. இன்னும் எதுவோ அவளிடம் எதிர் பார்த்துக் காத்திருக்கிறது. என்ன என்று தான் அவனுக்குப் புரியவில்லை.
நிராகரிக்கப்படுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல தான் ஆனால், அதற்கு அவள் கூறிய வார்த்தைகள், அவனால் ஏற்றுக்கொள்வதை விடக் காதலித்த பெண் தன்னைப் பற்றி இவ்வளவு கேவலமாக மனதில் நினைத்து இருக்கிறாள் என்பது தான் உயிர் போகும் வலியைத் தந்தது…தவறுக்குத் தண்டனைச் சரிதான்… ஆனால் எந்தத் தவறும் செய்யாமல் குற்றச்சாட்டப்படுவது கொடுமை. அதைத் தான் அனுபவித்தான்.
அப்பொழுது வெளியே போய்ப் படுத்து, அவளை வேதனைப் படுத்த அவனால் முடியவில்லை.
அவன் காதல் அதற்கு அனுமதிக்க வில்லை என்பது தான் உண்மை.அவளருகே ஒரமாக ஒதுங்கிப் படுத்தான்.
மனதில் எப்படித் தன்னை முத்தமிடத் தோன்றியது, காதல் தான் காரணம் என்றால், இவ்வளவு காலமும் அந்தக் காதல் என்னை ஏன் தேடி வர வைக்க வில்லை, என் கண் முன்னே இருந்து ஏன் ஒழிந்து கொண்டது என்ற கேள்வி மனதில் தோன்றியது.
அதற்கான காரணத்தைத் தெரிந்துக்கொண்டால், அவனின் எதிர் வினையை எப்படிச் சமாளிப்பாள் என்பது கடவுளின் கையில் தான் என்பதைக் காலம் சொல்லும்.
தன் அருகே படுத்த கணவனின் செயலில் மனதில் ஆனந்த அலை அடித்தது மதுமிதாவிற்கு.
பின்னே இருக்காதா, அவளுக்கு மனதில் எப்படித் தைரியமாக அவரை முத்தமிட்டோம் என்ற தயக்கம் இருக்க, அவன் வெளியே போயிருந்தாள், அவ்வளவு தான் அவளின் நிலை.
இவ்வளவு காலமும் இருந்த வேதனை எல்லாம் அவளிடம் வார்த்தைகளாகக் கொட்டியதால் மனது லேசானதில் படுத்ததும் கண்ணயர்ந்தான் வேந்தன்.
கணவன் நன்றாக உறங்கி விட்டான் என்று உணர்ந்ததும் அவன் பக்கம் மெல்லத் திரும்பிப் படுத்தவள், அந்த இரவில் மெல்லிய வெளிச்சத்தில் அவன் முகத்தினைப்பார்த்தாள்.
கம்பீரமான ஆண், எந்தப் பெண்ணுக்கும் அவனைக்கண்டதும் பிடிக்கும் நல்ல உயரம், இரு நிறம் , தாயின் பாசத்திற்கு அடங்கி, தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் போதும், காதலுக்காக எதிர்த்து நின்றதும், தங்கைக்காக வருந்தியப் போதும் அவள் மேல் இருக்கும் அந்தக் கோபம், இதோ இந்த மூக்கின் மேல் நர்த்தனம் ஆடுது' என்று அவன் மூக்கை உரசும் ஆவலில் அருகே சென்றவள், சட்டென்று அவன் அசைந்ததில் வேகமாக விழிமுடினாள். தன் பைத்தியக்காரத்தனத்தை நினைத்துச் சிரித்தவள், அப்படியே உறங்கியும் போனாள்.
இருளாகிப் போன வானில் சூரியன் தன் தடத்தைப் பதித்து, வானில் வண்ண ஜாலத்தைத் தொடங்கினான்.
அழகிய காலையின் புத்துணர்வோடு கண் விழித்தாள் மதுமிதா.
அருகில் திரும்பிக் கணவனைப் பார்த்தாள், அமைதியாகத் தூங்கிக்கொண்டு இருந்தான்.
சத்தமில்லாமல் எழுந்து வந்தவள் குளித்ததும் சாமி முன் விளக்கேற்றிச் சாமிக் கும்பிட்டவள் மெதுவாக நடந்து வெளியே வந்தவள், பானுமதியைக் காண மாமியார் வீட்டிற்குச் சென்றாள்.
திருமணத்திற்குப் பின் ஆன முதல் நாள் இன்று அனைவருக்கும் தன் கையால் சமைத்துக் கொடுப்பது தன் கடமை அல்லவா.
மெல்ல வீட்டிற்கு வந்து கதவில் கை வைக்கும் போது, தானாகவே திறந்தது, 'யாரு' என்று நோக்கியவளுக்கு ,அங்கே தன்னை எழுப்பி விட வரும் தோழியைத் தான் கண்டாள்.
"உன்னை எழுப்புவதற்கு வந்தேன் மது, நீயே வந்துவிட்டாய்" என்று உள்ளே அழைத்த ரேணுகாவைப் பார்த்துச் சிரித்த மதுமிதா,"ரொம்ப நன்றி டி, எப்பவுமே என்னைப் பத்தி யோசிக்கும் உன் பாசத்திற்கு, நான் ரொம்பக் குடுத்து வச்சு இருக்கணும்" என்றாள் உணர்ச்சி வசப்பட்டவளாக.
"நீ மெதுவாகக் குடுத்து வச்சுக்கோ ... இப்போ போய்ச் சாமி ரூமில் விளக்கேற்றி, எனக்கு நல்ல புத்தியைக் குடு ஆண்டவா என நல்லா வேண்டிக்கோ … அப்பறம் போய் நல்ல காஃபியைப் போட்டுக் கொண்டு வா , இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் காபிக்காக எல்லோரும் வந்துருவாங்க" என்றாள் ரேணுகா.
ரொம்பத்தான்டி என்றவள்.. அவள் சொன்னப்படி விளக்கேற்றியவள். ரேணுகாவோடு சமையலறைக்குச் சென்றாள் அனைவருக்கும் காஃபி வைக்க.
இருவரும் சிரித்த தங்களைத் தானே கிண்டல் செய்தப்படி அனைவருக்கும் காஃபிக் கலந்த எடுத்து வரும் போது பானுமதி அங்கே வந்தார்.
அவருக்கு முதல் காஃபியைக் கொடுத்த மதுமிதா , “மாமா காலையில் காஃபிக் குடிப்பாரா அத்தை” என்று கேட்டாள் மதுமிதா.
“குடிப்பார் அவருக்குச் சர்க்கரை இல்லாமல் தான் குடுங்கணும் மது, அவர் கேட்பாருச் சர்க்கரை ரொம்பக் கம்மியா இருக்கு என்று ஆனால் குடுக்காதே சரியா” என்றார் அவள் மாமியார்.
சரிங்க அத்தை என்றவள் தன் மாமனாருக்குக் காஃபி எடுத்து வரவும் அங்கே அனைவரும் கூடி இருந்தனர்.
அனைவரும் காஃபிக் குடித்ததும் , காலை உணவிற்கான தயாரெடுப்பில் இருந்த நேரத்தில் அங்கே வந்த மதுமிதா மெல்ல, பானுமதி நோக்கி," அத்தை, கொஞ்சம் ஹாலுக்கு வாங்களேன், எல்லோருடனும் எனக்குக் கொஞ்சம் பேசணும்" என்றாள்.
என்ன மது என்றவரிடம் வாங்க அத்தை என்றவள் ரேணுவிடம் கண் சைகைக் காட்டியவள் ராதிகாவையும் அழைத்து வந்தனர்.
அப்போது வேதாந்த எடுத்துக் கொண்டு வந்தாள் மித்ரா இரவில் சரியாக உறங்காததை, அவளின் கண்கள் காட்டிக் கொடுத்தது.
வேதாந்தை வாங்கிய ராதிகா அவனுக்கு ஆற வைத்த பாலைப் புகட்ட ஆரம்பித்தார்.
எல்லோரும் இருப்பதைப் பார்த்துக் கொஞ்சம் தயங்கினாலும், தன் கடமையைச் செய்வதில் பின் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் மதுமிதா.
“என்ன பேசுணும் மது, சொல்லு” என்று கேட்டார் பானுமதி.
அப்போது ரேணுகாவைப் பார்த்த மதுமிதா “போய் எடுத்துட்டு வா டி” என்றாள்…
என்ன என்று எல்லோரும் பார்த்துக் கொண்டே இருக்கும் போது மித்ரா, பாதியில் விட்டப்படிப்பைத் தொடர்வதற்கான படிவம், அதை மேசையில் வைத்தவள் தன் மாமனாரைப் பார்த்து " மாமா,என்னை மன்னிச்சுருங்க உங்க அனுமதி இல்லாமல் நான் ஒரு விஷயம் பண்ணிட்டேன், மித்ராவைக் காலேஜ் சேர்த்திட்டேன், நானும் ரேணுவும் படித்த காலேஜில் தான் அவளைச் சேர்த்தி இருக்கேன் மாமா, நான் இங்கே வர இதுவும் ஒரு காரணம், இங்கே வந்தால் எப்படியும் உங்களுக்குத் தெரியாமல் இருக்காது, மித்ரா எவ்வளவு நாட்கள் தான் தனியாகக் குடும்பத்ததைப் பிரிஞ்சு இருக்க வேண்டாம் இந்தக் குட்டித் தங்கத்தை வச்சுட்டு... அவனுக்கு உங்கள் அன்புக் கிடைக்கணும் இல்லையா, அது தான் நான் இங்கே எங்கள் காலேஜில் அவளுக்கு அட்மிஷன் போட்டேன்” என்று நீளமாகப் பேசி முடித்தாள்.
அவள் ஏன் இங்கே வந்தேன் என்று சொல்லும் போது சரியாக அவள் கணவனும்,தருணும் வந்தனர்.
ஒ இதற்குத் தான் இங்கே வந்தாளா என்ற கேள்வி இரண்டு பேருக்கும் மனதில் தோன்றியது.
வேந்தனோ மனதில் 'தன் மனைவியின் வரவிற்குக் காரணம், காதலும் எதுவுமே இல்லை, மித்ராவை அவள் குடும்பத்தில் சேர்த்தி வைக்க மட்டுமே' என்று நினைத்தான்.
தருணோ இவள் வீட்டிற்கு வருவதற்கு எண்ணமே இல்லை மது, தான் இவளை வற்புறுத்தி அழைத்து வந்து இருக்கிறாள், இவளுக்கு எப்பொழுதும் மனதில் யார் மேலேயும் பாசம் இருந்ததே இல்லை போல என்று சினம் கொண்டான் மித்ராவின் மேல்.
அப்பொழுது " அண்ணி, நான் தான் உங்களிடம் தெளிவாகச் சொல்லிட்டேன், நான் எங்கேயும் போக விரும்பவில்லை, என்னை இப்படியே விட்டுருங்க” என்றவள் தன் அறைக்குச் செல்லத் திரும்பிய போது அங்கே எரிமலைக் குழம்பு போல முகம் சிவக்க நிற்கும் தருணைக் கண்டதும் அப்படியே நின்றாள்.
கண்கள் விரிய அவளைச் சினத்தோடு பார்த்தவன் பார்வையில் இருந்த மிரட்டலில் அப்படியே நின்றாள், கால்கள் நடுங்க.
அப்பொழுது " இது தான் மாமா இவள் சொல்லிட்டு இருக்கா, என்னால் அவளிடம் பேச முடியவில்லை, அவளை இப்படியே விட முடியுமா? என்றாள்.
அவளின் வாதம் சரியானதாக இருந்ததால் அனைவரும் அதைச் சரி என்று கூறினர்.
அப்போது பாலமுருகன் தன் மகளைப் பார்த்து " மித்தும்மா, அண்ணி அவ்வளவு சொல்லுற, உனது நல்லதுக்குத் தானே கேளுமா, அப்பாவிற்காக" என்று அவர் குரல் மெதுவாக வர, அப்போதும் அவள் தருணைத் தான் பார்த்தாள்.
தருண் முகம் சட்டென்று தன் பாவத்தை மாற்றி ' சொன்னால் கேட்க மாட்டியா? என்று பார்வையில் அவளைத் துளைத்துப் பார்த்தான்.
வார்த்தைகள் எதுவுமே இல்லாமல் அவர்களுக்கிடையே உரையாடல் நடந்தேறியது.
அவளுக்கோ இந்தச் சமூகத்தில் எப்படி மீண்டும் பயணிக்க என்ற பயம், அதைக் கண்ணீரோடு அவனைப் பார்த்தபடியே," ஏற்கனவே நான் பண்ணிய தவறை எப்படிச் சரி செய்வது எனப் புரியவில்லை, என்னால் பழைய வலிகளை மறக்கக் கொஞ்சம் காலம் தேவை. ப்ளீஸ், என்னைப் புரிந்து கொள்ளுங்கள் அப்பா” என்றாள்.
தன் முன் நிற்கும் அவளின் இந்த வார்த்தைகள் எல்லாம் செவிசாய்த்தத் தருண் வேந்தனைப் பார்த்தான்.
தன் நண்பனின் பார்வையில் இருந்த அர்த்தத்தைப் படித்தவன்," அம்மா, வலியை மறக்க எவ்வளவு காலம் வேணாலும் எடுக்கட்டும், அந்த வலியினால் உண்டான காயத்திற்கு ஆன மருந்து இந்தப் படிப்பு இருக்கட்டுமே, அப்பறம் இப்படி வாழ்க்கையில் ஒடி ஒழிந்து கொண்டால் எதுவுமே மாறாது, வாழ்க்கை மாறணும் என்றால் முதலில் நாம் மாற வேண்டும்” என்றான் உறுதியாக.
அண்ணனின் வார்த்தைகள் எல்லாம் வாங்கியவளுக்குத் தைரியம் வந்த போதும் அவனை அவமானப் படுத்திய நிகழ்வு நினைவில் வர விழிகள் நிறுத்தாமல் அழுகையைத் தத்தெடுத்தது.
தன் முன் கண்ணீரோடு நிற்கும் மித்ராவை எந்த ஆறுதல் வார்த்தைகள் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் தருண்.
அவன் முன் நிற்க முடியாமல் போக எத்தனித்த அவளைப் போக விடாமல்
'நீ பதில் சொல்லியே ஆகணும்' என்று வழி மறித்து நின்றான் யாரும் அறியாதவாறு…
ப்ளீஸ் என்ற அவள் கெஞ்சல் பார்வை நிராகரித்தவன், மறுப்பு மட்டுமே அவன் பார்வையில், அதை உணர்ந்தவள் தந்தையிடம் வந்தவள், "நான் படிக்கிறேன்ப்பா, ஆனால் எனக்குப் பயமாக இருக்கு இந்தச் சமூகத்தை நினைத்து" என்று வெளிபடையாகச் சொன்னாள்.
அவளின் பயத்தை உணர்ந்தவன், "மாமா … நான் வேணுமானால் கொஞ்சம் நாட்கள், காலேஜ் கொண்டு போய் விட்டுக் கூட்டி வரேன், அந்தச் சூழல் பழகும் வரைக்கும்" என்றான்.
இதுவும் சரி தான் என்று தோன்றியது பால முருகனுக்கு, " அதுதான் தருண் கூட வரேன் சொல்லறான் பாரு மித்தும்மா நீ, தைரியமாகப் போ, எல்லாம் நல்லாத்தாக மாறும்" என்றார்.
சரி என்று தலையை ஆட்டினாள் மித்ரா.
மித்ராவின் வாழ்க்கையில் திருப்பத்தை உண்டாக்கிய மதுமிதா, தன் வாழ்க்கையில் நடக்கப் போவதை அறியாமல் சந்தோஷமாகக் கணவனின் முகம் பார்த்தாள்.
தொடரும்…