priya pandees
Moderator
அத்தியாயம் 10
அதிகாலை பொழுது, பறவைகளின் கீச்கீச் குரல் காதில் ஒலிக்க, குளிருக்கு இதமாக கட்டியிருந்தவனை இன்னும் அழுத்தமாக அண்டி அவனுள் சுருண்டு கொள்ள முயன்று கொண்டிருந்தாள் வருணி.
சிறிய அளவிலான கூடார வீடு, அதனுள் காற்றடைத்த மெத்தை, தலையணை, அருகருகே மனதிற்கு விரும்பிய மனங்கள், வெளியே குவிந்து கிடந்த இயற்கை, பிடித்த வேலை என அந்த நிமிடம் மனதிற்கு நிம்மதியான அமைதியான உறக்கம் தான் யாஷ், வருணி இருவருக்கும். கலைந்த ஓவியமாக இருந்தாலும் அழகான ஓவிய நிலையில் இருந்தனர். இங்கு வந்து பதினைந்து நாட்கள் ஓடியிருந்தது.
வெளியே, "டாக்டர் யாஷ்!" என்ற ஒரு மருத்துவ மாணவனின் அழைப்பில், பட்டென்று கண் திறந்தான் யாஷ்.
"டாக்டர்!" மறுபடியும் அவன் அழைக்க,
"எஸ் லூக்கா!" என சத்தம் கொடுத்தவாறு வேகமாக எழுந்தவன், "வருணி கெட்டப்" என அவளையும் லேசாக தட்டி எழுப்பி விட்டு, தன்மேல் அவள் போட்டிருந்த காலையும் கீழே எடுத்துபோட்டுவிட்டு, அருகில் கிடந்த டீசர்டை எடுத்து மாட்டியவன், "வருணி!" என மறுபடியும் அவளை எழுப்பி பார்த்து அவள் எழவில்லை என்கவும், போர்வையை இழுத்து மூடிவிட்டு எழுந்து கூடாரத்தை திறந்து வெளியே வந்தான்.
அங்குள்ள மக்கள் அவரவர் வேலையில் இருக்க, மருத்துவர்கள் காலை நேரத்தை ஆங்காங்கே நின்று செலவழித்து கொண்டிருந்தனர்.
திரும்பி தன்னை அழைத்தவனை தேட, இவனை அழைத்துவிட்டு எங்கோ சென்றிருப்பான் போலும் மறுபடியும் இவனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான்.
"என்ன லூக்கா?" என்றான் யாஷ், அவன் முகத்திலிருந்த பதட்டத்தை ஆராய்ந்து கொண்டு.
"டாக்டர்! மார்னிங் எப்பவும் போல குளிக்க கிளம்பினோம். ஜாகிங் போயிட்டு வரும் போதே வழி மிஸ்ஸாகி மூணு பேர் காணும். எங்க போனாங்கன்னு தெரியல இங்க எல்லா இடமும் போன மன்த் கேம்ப் பண்ண வில்லேஜ் வர தேடிட்டு வந்துட்டோம். எங்கேயும் காணும்" என பயத்தில் குரல் நடுங்க கூறி நிறுத்தினான்.
"யாரெல்லாம் மிஸ்ஸிங்?" என்றவன் க்ளாடியன், ஜனோமி இருவரையும் அங்கிருந்தே சுற்றி தேட, எப்போதும் போல் அவர்களே அவன் பார்வையை உணர்ந்து வந்துவிட்டனர்.
"எட்வர்ட், வில்லியம், ஜோஷ்" என்றான் லூக்காஸ்.
"இங்க வேற யாருக்கும் தெரியாதா?" என்றான், அங்கிருந்த மருத்துவர்கள் எந்தவித பதட்டமும் இன்றி இருந்ததால் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என அவனுக்கே புரிந்தது.
"இல்ல இன்னும் சொல்லல" என்றான் அந்த லூக்காஸ் தயங்கி கொண்டு.
"க்ளாடியன் எங்க ஸ்டூடண்ட்ஸ்ல மூணு பேர் மிஸ்ஸிங். ஆவ்ரேஜா ட்வன்டி ஃபோர், ட்வன்டி ஃபைவ் ஏஜஸ் உள்ள மூணு பேர்"
"எப்படி மிஸ்ஸாக முடியும்? நாங்க இங்க தானே இருந்தோம்? நீங்க பார்டர தாண்டி எங்கேயும் போனீங்களா?" என்றான் ஜனோமி.
மீண்டும் பயந்த லூக்கா யாஷை பார்க்க, "என்ன செஞ்சீங்கன்னு கரெக்டா சொல்லு லூக்கா" என அதட்டவும்,
"நாங்க ஆறு பேர் ஏர்லி மார்னிங் ரன்னிங் கிளம்பினோம். க்ளாடியன் சொல்லிருந்த மாதிரி மரத்துல மார்க் போட்டிருந்த ஏரியா குள்ள தான் போயிட்ருந்தோம். கொஞ்ச தூரம் ஓடியிருந்தப்ப மனுஷனும் குரங்கும் கலந்த மாதிரி இருந்த ரெண்டு பேர பார்த்தோம்"
"இங்கேயா?" என அதிர்ந்து கேட்டான் ஜனோமி.
"ம்ம் ஒரு ரெண்டு கிலோமீட்டர் குள்ள தான். ஒரு க்யூரியாசிட்டில அவங்கள ஃபாலோ பண்ணி போனோம். அப்ப ரெண்டு காட்டுவாசி பொண்ணுங்க எதிர்ல திடீர்னு வந்தாங்க, எங்கள யாருன்னு கேட்டாங்கன்னு நினைக்கிறேன், லேங்குவேஜ் புரியல, அதுக்குள்ள அந்த குரங்கு மனுஷங்க போயிட்டாங்கன்னு, நாங்களும் அந்த பொண்ணுங்கள்ட்ட சைகைல சொல்லிட்டு திரும்ப போனோம். அப்பதான் பார்டர தாண்டி வந்தது புரிஞ்சுது. சரி அந்த பொண்ணுங்களும் இங்க வர வந்துருக்காங்க தானே அப்ப மிருகங்கள் அட்டாக் பண்ணாதுன்னு நினைச்சு வேகமா நடந்தோம். அதுல எப்ப எங்க அவங்க மூணு பேர் மிஸ்ஸானாங்கனே தெரியல"
"ம்ச் தெரியாத ஏரியால எதுக்கு இந்த தேவையில்லாத வேலைலாம் பாத்தீங்க?" என முறைத்த யாஷ், "என்ன பண்ணலாம் க்ளாடியன்?" என்றான் அவனிடம்.
"கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டம் டாக்டர். காட்டுவாசி பொண்ணுங்க முதல்ல எங்க எல்லை தாண்டவே மாட்டாங்க. இவங்க அவங்கள அங்க பார்த்ததா சொல்றது காட்டுவாசி பொண்ணுங்களே கிடையாது"
"இல்ல இங்க உள்ள பொண்ணுங்க மாதிரி முகத்துல குச்சிலாம் வச்சு மையெல்லாம் பூசியிருந்தாங்க. டாக்டர் நிஜமா அங்க ரெண்டு பொண்ணுங்க நின்னாங்க" என்றான் லூக்கா உறுதியாக,
"ம்ச் நீங்க குரங்கு மனிதர்களா பார்த்தவங்க தான் அவங்க" என்றான் க்ளாடியன்.
"இல்ல முதல்ல நாங்க பார்த்தவங்க ரெண்டு பேரும் ஜென்ட்ஸ், அடுத்து பார்த்தவங்க ரெண்டு பேரும் லேடீஸ்"
"அவங்க வேற வேற கிடையாது. நீங்க முதல்ல பார்த்த ரெண்டு பேரும் தான் பெண்களா மாறி வந்துருப்பாங்க. அவங்க கை கால் விரல் நிகங்கள் கவனிச்சுருந்தீங்கனா கண்டு பிடிச்சுருப்பீங்க" என்றான் ஜனோமி.
"ஜனோமி ப்ளீஸ் க்ளியரா பேசுங்க. ஒன்னுமே புரியல" என்றான் யாஷ்.
"டாக்டர் யாஷ்! அவங்க மாய மனிதர்கள். இதே காட்டுல மிருகங்களோட மிருகங்களா வாழ்றவங்க"
"அப்படினா?" என யாஷ் கேட்கையில்,
"என்ன டிஸ்கஷன் யாஷ்?" என வந்துவிட்டார் பிஸ்மத்,
"மூணு ஸ்டுடண்ட்ஸ் மிஸ்ஸிங் டாக்டர். அதான் என்ன பண்ணலாம்னு இவங்கள்ட்ட கேட்டுட்ருக்கேன்"
"எப்படி? ஏன் எங்க போனீங்க? அவங்க ரெண்டு பேரும் அத தான் அங்க எல்லார்ட்டையும் பேசிட்ருக்காங்களா?" என்றார் பிஸ்மத், தூரத்தில் மாணவர்கள் மட்டும் கூடி நிற்பதை காண்பித்து.
"யாரோ ரெண்டு பேர பார்த்தோம் ஆனா திரும்பி வந்துட்டோம் அவங்க தான் எப்டி மிஸ் ஆனாங்கன்னு தெரியலன்னு லூக்கா சொல்றான், க்ளாடியன் அவங்க ஏதோ இல்யூஷன் பீப்பிள்னு சொல்றாரு" என யாஷ் சொல்ல,
"அப்டிலாம் இருக்காங்களா என்ன?" என்றார் பிஸ்மத்தும் புரியாமல்,
"இவங்க அப்படிதான். என்ன உருவம் வேணா எடுத்துப்பாங்க. மறைஞ்சும் போயிடுவாங்க. அதுக்கான மாய வித்தைகள் கத்து வச்சுருக்காங்க. கண்டுபிடிக்குறது ரொம்ப கஷ்டம். குரங்கு மனிதனா மாறின பரிணாம வளர்ச்சில மாறாம இன்னும் மிச்சமிருக்கறவங்க இவங்க மட்டுந்தான்னு எங்க தலைவர் சொல்லி கேட்ருக்கோம். அவங்களோட வாழ்நாள் இருநூற்றி ஐம்பது ஆண்டுகள், பழமையானவங்க, ரொம்ப ரொம்ப ஆபத்தானவங்க. இவங்க அவங்கள தாக்க வந்துருக்குறதா நினைச்சு தான் கடத்திட்டு போயிருப்பாங்க. அவங்க மனிதனோட புத்தி கூர்மையும், மிருகங்களோட அரக்க குணமும் கலந்தவங்க. மிருகங்கள் எப்படி ஒருத்தரால ஆபத்தில்லன்னு தெரிஞ்சா ஒதுங்கி போயிடுமோ, அதேமாதிரி அவங்களும் ஒதுங்கி போயிடுவாங்க, ஆனா ஒருத்தரால ஆபத்துன்னு தெரிஞ்சா எப்படி யோசிக்காம பாஞ்சிடுமோ அதேமாதிரி பாய கூடியவங்க"
"காட். இப்ப நம்ம பசங்கள எப்படி காப்பாத்துறது?" என்றான் யாஷ்.
"வாய்ப்பே இல்ல டாக்டர். அதுக்கு தான் இவ்வளவு எக்ஸ்ப்ளைன் பண்ணிட்ருக்கேன்" என க்ளாடியன் சொல்ல,
"நா அப்படி விட முடியாது க்ளாடியன். நா எனக்காக கூட்டிட்டு வந்த பசங்க. என்னோட ரெஸ்பான்ஸிபிலிட்டில வந்தவங்கள எப்படி விட முடியும்? நா தேடி போறேன். எனக்கு கைட்டா எதாவது ஃபாரெஸ்ட் மேப் மட்டும் குடுங்க. எனக்கு போன மாதிரி திரும்ப வர தெரியணுமே?" என கேட்டான்.
"டாக்டர் யாஷ். நீங்க இப்படி போய் அப்படி கூட்டிட்டு வர்ற மாதிரி ஈசியான விஷயம்னா நானே அத பண்ண மாட்டேனா? இது இம்பாஸிபில். ஆக்சுவலி இவ்வளவு நேரம் கூட கடத்தப்பட்ட பசங்க உயிரோட இருக்க மாட்டாங்க. மனித மாமிசம் சாப்பிட கூடியவங்க அந்த மாய மனிதர்கள்"
"நோ நோ நோ! அப்ப லேட் பண்ண வேணாம். நா கிளம்புறேன். ப்ளீஸ் எனக்கு மேப் மட்டும் உங்கட்ட இருக்குறத குடுங்க. ஐ கேன் மேனேஜ். ட்ரையே பண்ணாம அவங்கள போட்டும்னு என்னால விட முடியாது. அவங்களுக்கு நாந்தான் ரெஸ்பான்ஸிபில். டாக்டர் பிஸ்மத் நீங்க இங்க மத்த எல்லாரையும் கோர்டினேட் பண்ணிக்கோங்க"
"டாக்டர் யாஷ்!" என நிறுத்தினார் பிஸ்மத், "கவர்ன்மென்ட்ட ரிப்போர்ட் பண்ணிடலாம். அவங்க தேடட்டும்"
"அது ரொம்ப பெரிய ப்ராசஸ் இல்லையா பிஸ்மத்?" என இவன் கேட்கவும் அவர் விழித்தார். அவருக்கும் தெரியுமே, ஆனாலும் காணாமல் போனவர்களுக்காக கண் முன் இருப்பவனை எப்படி அனுப்ப முடியும் அவரால்.
"அவங்க எங்கன்னு தெரியல, இங்கேயே இருக்கவங்களே இவ்வளவு சொல்லுறாங்க அப்றமு எப்படி உங்கள தெரிஞ்சே நா தொலைக்க முடியும்?"
"நா முடிஞ்சளவுக்கு, அட்லீஸ்ட் லூக்கா சொன்ன ரெண்டு கிலோமீட்டர் தூரத்திலயாவது தேடி பார்த்துட்டு வரேன். உண்மையிலேயே வழி தவறி இருந்தா? எங்கையாவது காப்பாத்த முடியுற சூழ்நிலைல அவங்க இருந்தா?"
"உங்க கூட யாரையாவது ஹெல்ப்புக்கு கூட்டிட்டு போங்க. அந்த மூணு பேரையும் கூட" என்றதும் திரும்பி பார்த்தான் யாஷ், மிரண்டு நின்றான் லூக்காஸ்.
"இவங்களும் தொலைஞ்சுட்டா ரொம்ப கஷ்டமாகிடும். நா மட்டும் போய் பாத்துட்டு வரேன்" என்றவன் அப்போது தான் வருணி ஞாபகம் வந்தவனாக கூடாரத்தை திரும்பி பார்த்தான், அதன் வெளியே ஏற்கனவே அவனை தான் முறைத்து கொண்டு நின்றாள் அவள்.
"அப்படியே போயிருவியோன்னு நினைச்சேன் நல்லவேளை திரும்பி பார்த்து தப்பிச்சுட்ட!" என இன்னும் முறைத்தவளை, சின்ன சிரிப்புடன் வந்து கட்டிக்கொண்டான்.
"போடா! போடா! தள்ளி போ!" என அவனை உதறி தள்ள, இறுக்கி கட்டி கொண்டவன், "ப்ளீஸ்டி உன் ப்ரண்ட்ஸ் தானே அவங்க? நீ ஒருத்தி எங்கூட வரணும்னு அவங்க எல்லாரையும் சேர்த்து இழுத்துட்டு வந்தவன்டி நானு! அவங்கள எப்டி போட்டும் விடமுடியும்? போனப்றம் எனக்கும் சேஃப்டி இல்லன்னு தெரிஞ்ச செகெண்ட் திரும்பி உங்கிட்ட ஓடி வந்துடுவேன். ஆனா ஒன்ஸ் போய் பாத்துட்டு வந்துடுறேன்டி ப்ளீஸ்" என அவள் காதில் அவ்வளவு பொறுமையாக எடுத்து கூறினான்.
"சரி நானும் வரேன்" மிக எளிதாக பதில் கூறினாள் அவள்.
"வாட்!" என தள்ளி நின்று அவள் முகம் பார்த்து அதிர்ந்து, "ட்ரீட்மெண்ட்ட கரெக்டா எடு, அந்த பிள்ளைங்களுக்கு படிப்பு சொல்லி குடுத்துட்ருந்தியே போய் அதை பாரு. நா மேக்ஸிமம் டூ அவர்ஸ்ல திரும்பி வந்திடுவேன்" என்றவன் கூடாரத்திற்குள் சென்று தேவையானவற்றை மட்டும் ஒரு சிறிய பையில் எடுத்து வைத்து தோளில் மாட்டிக்கொண்டு வெளியே வந்தான்.