பகுதி- 23
மதுமிதாவிற்குப் பிறந்தநாளின் பரிசை அள்ளிக் கொடுத்தான் அவள் கணவன்.
அவர் இடையே இருந்த ஊடலும் கூடலில் முடிய எல்லாம் இனிதாக மாறியது… இரவும் கடந்து செல்லச் சூரியனும் வந்து அவளை எழுப்பினான்… இதோ விடிந்து விட்டது என்று…
கண் விழித்தவளுக்கு நேற்றி நினைவில் முகம் சிவந்தது…
மெல்ல எழுந்துக் குளித்து வெளியே வந்தவளுக்கு, அங்கே பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல நின்றிருந்தாள் ரேணுகா…
"இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மது" என்றுஅணைத்தாள்…
பானுமதி மற்றும் ராதிகா இருவரும் அவளுக்கு வாழ்த்துக் கூறி.. நேற்றே சொல்லி இருந்தால் உனக்குப் பரிசு வாங்கி இருப்போமே ஏன் சொல்ல வில்லை.. உன் புருஷனாவது எதாவது பரிசுத் தந்தானா இல்லை, உன்னை வருத்த பட வச்சானா என்றுக் கேட்டார்ப் பானுமதி…
"இல்லை அத்தை, அவர் தான் முதல் வாழ்த்துச் சொன்னார்ப் பரிசுகளும் தந்தார்" என்று முகம் சிவந்தவளைக் கண்டதும் புரிந்தது ரேணுகாவிற்கு…
தோழியை ஓரம் கட்டியவள் "என்னடி" என்று அவள் தோளில் இடித்தாள்... "போடி நீ" என்று வேகமாகச் சாமி அறைக்கு வந்தவள் விளக்கேற்றிச் சாமிக் கும்பிட்டாள்.
அன்றைய தினம் எல்லோரும் வீட்டிலேயே விருந்து வைத்துத் தடபுடலாக அவள் பிறந்த நாளை கொண்டாடினர். தாயைப் போல அன்புக் காட்டும் பானுமதி அணைத்துக் கண் கலங்கினாள் மது…
“அத்தை… இப்போ எல்லாம் நான் தனியாக இருக்கேன் என்ற எண்ணமே வருவதில்லை.. என் அம்மா இருந்து இருந்தால் கூட இப்படி என்னைப் பார்த்துக் கொள்ள மாட்டாங்க… நீங்களும் ராதிகாம்மாவும் தான் எனக்கு எல்லாமுமாக இருக்கீங்க” என்று கண் கலங்கனாள்..
“பிறந்த நாள் அதுவுமாகக் கண்ணைக் கசக்கிட்டு.. கண்ணைத் துடை மது" என்று அவளுக்குப் பிடித்த பாயாசம் ஊட்டி விட்டார்ப் பானுமதி…
"அத்தை நான் தான் மாசாமாக இருக்கேன், என்னை யாரும் கவனிக்கறதேயில்லை" என்று புலம்பினயவளின் வாயில் ஒரு ஸ்பூன் பாயசம் ஊட்டினாள் மதுமிதா…
"நீங்கள் இல்லலையென்றால் என்ன? என் உயிர் தோழி இருக்கிறாள்" என்று கூறியவள் "நீ ஊட்டி விடு மது" என்று அவள் அருகில் அமர்ந்தாள்…
மிகவும் அழகாக அந்தத் தருணத்தை ரசித்தனர் அனைவரும்.
குளித்துத் தயாராகி வந்த கதிர் வேந்தன் கண்கள் மதுவைத் தான் தேடியது…
அதைப் பார்த்த ரேணு "என்ன மாமா தேடுதல் பலமாக இருக்கு.. நீங்கள் தேடிவது சமையலறையில் இருக்கு" என்று கேலிச் செய்தாள்.
மகனின் முகத்தில் தெரியும் நிறைவும் மருமகள் முகத்தில் இருக்கும் பிரகாசமும் அவர்களுக்கு இடையே எல்லாம் சரியாகிப் போனதை வலியுறுத்தியது…
மருமகளும் மகனும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்றும்… மருமகள் கையால் பொங்கல் வைப்பதாகத் தங்கள் குலதெய்வம் கோயில் வேண்டுதல் வைத்திருந்தாள் பானுமதி…
சந்தோஷமாக இந்தத் தருணத்தில் அதைக் கூறினார் மகன் மற்றும் மருமகளிடம்…
"வேந்தா… நம்மோட குலதெய்வம் கோயில் போய், மதுவோட கையால் பொங்கல் வைப்பதாக வேண்டியிருக்கேன் டா, நாளைக்கே போகலாம்” என்றாள் அவன் தாய்…
"தீடிரென என்ன வேண்டுதல்" என்று கேட்டான் கதிர் வேந்தன்…
"அதெல்லாம் நான் உங்க கல்யாணம் தினத்தில் வைத்த வேண்டுதல்... சும்மா எதிர்த்துப் பேசாமல் கிளம்பற வழியைப் பாரு டா" என்றார்ப் பானுமதி…
"சரிம்மா.. எதுக்கு வேண்டுதல் என்றாவது சொல்லலாம் தானே" என்றுதும்.. "கண்டிப்பாகத் தெரிந்தே ஆகவேண்டுமா" என்றுகேட்டார்…
"ஆமாம் அத்தைச் சொல்லுங்க" என்று அங்கே வந்தான் தருண்…
ம்ம்..என்று இழுக்கவும்…
"இவங்க இரண்டு பேரும் சந்தோஷமாக, எல்லாம் மனக்கசப்புகள் மறந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.. எப்பொழுதும் சந்தோஷமாக மனமொத்தத் தம்பதியராக வாழ வேண்டும் என்று தான் வேண்டி இருந்தேன்" என்றார்…
அவரின் பதிலில் கதிர் வேந்தன் மற்றும் மதுமிதா ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாகப் பார்த்து 'நீ சொன்னாயா' என்ற கேள்வி இருவர் முகத்திலும் தோன்றியது…
அவர்கள் முகபாவம் கண்டு…
"நீங்கள் சொல்ல வில்லை, என்றாலும் எங்களுக்குத் தெரியுமடா" என்றார்ப் பானுமதி…
வெட்கத்தில் முகம் சிவந்தது கதிர் வேந்தனுக்கு… இதெல்லாம் பார்த்தவாறே இருந்த தருண்.. "அடேய் மச்சான் இதெப்போடா? என்னிடம் சொல்லவே இல்லை நீ" என்றானேபார்க்கலாம்…
"அடேய்"... என்றக் கதிர் வேந்தன் கத்த… வெட்கத்தில் முகம் சிவக்க, அங்கிருந்துச் சமையலறைக்கு வேகமாகச் சென்றாள் மது.
"அவரோட பொண்டாட்டிப் பிறந்தநாள் இன்று, அதையாவது சொன்னாரா உங்களோட மச்சான்" என்று எடுத்துக் கொடுத்தாள் ரேணுகா…
இல்லை என்று தலையை ஆட்டியவன் "அப்படியா" என்று கதிர் வேந்தனைப் பார்த்து முறைத்தான்…
ஆமாம் என்றவனிடம்…"ஏன் டா எங்களிடம் சொல்லவில்லை" என்ற கேள்விக்கு…
"சொன்னால் எல்லாம் ஆள் ஆளுக்கு அவளுக்குப் பரிசுக் கொடுத்துச் சர்ப்ரைஸ் பண்ணினால், என்னோட சர்ப்ரைஸ் பத்தோடு பதினொன்று ஆகிரும்.. அதனால் என் பரிசு மட்டுமே அவளுக்கு இந்த வருடம் நினைவில் இருக்க வேண்டும் என்று தான் யாரிடம் சொல்ல வில்லை" என்றான் கதிர் வேந்தன்.
"நல்லா வருவடா" என்றவன் நேராக மதுமிதாவிடம் சென்றவன் "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி" என்று தன் கையில் இருக்கும் பரிசினைக் கொடுத்தான்…
அதைப் பார்த்த வேந்தன் எப்படிடா என்று கேட்கவும்..
"உன் கூடவே இருக்கேன் மச்சான் நான்… ஒவ்வொரு வருடமும் இன்றைய தினம், நீ பரிசு வாங்கப் போகும் போது கூட இருந்து இருக்கேன்… அது மது என்று தான் எனக்குத் தெரியாது… ஆனால் இப்போ அது மதுமிதாவின் பிறந்தநாள் என்று கண்டு பிடிப்பது பெரிய விஷயமாக எனக்கு இல்லை… எப்படியும் நீ மறந்து இருப்பாய், நான் பரிசுக் கொடுத்து, உன் கல்யாணம் வாழ்க்கையின் திசையை மாற்றலாம் நினைத்தேன்” என்று வில்லன் சிரிப்புச் சிரித்தான் தருண்.
தருணின் குறும்பில் வீடே சிரித்தது…
“நல்ல எண்ணம் டா உனக்கு” என்றான் கதிர் வேந்தன்…
மித்ராவும் தன் அண்ணிக்குப் பரிசுக் கொடுத்து வாழ்த்தினாள்… அன்றை தினம் அழகாகச் சென்றது…
பாலமுருகனிடம் "நாளை கோயிலுக்குப் போக வேண்டும், அதனால் ஊருக்கு அழைத்து வீட்டைச் சுத்தம் பண்ணச் சொல்லுங்க... கோயிலில் நம் பூசாரியிடம் சொல்லிருங்க... காலையில் நேரமாகப் போக வேண்டும்" என்றார்ப் பானுமதி…
சரியென்றவர் மதுமிதாவிற்கு அழகான சின்னக் கண்ணன் சிலையைப் பரிசளித்தார்…
அவள் பிறந்தநாள் உங்களுக்கு எப்படித் தெரியும் என்றக் கேள்விக்கு அவள் லைசென்ஸ் எடுக்கும் போது பிறந்தநாள் தேதிப் பார்த்தேன்… என்றார்
எல்லோருடைய அன்பும் மதுமிதாவிற்கு மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியது…
கதிரின் காதல் தான் தனக்கு இப்படி அழகான குடும்பம் கிடைக்கக் காரணமாக இருந்தது என்று தன் கணவனின் காதலில் மேலும் மேலும் உருகினாள் வேந்தனின் மதி. அனைவருக்கும் அன்றைய தினம் மகிழ்ச்சியோடு கழிந்தது… இரவு உணவினை முடித்துத் தன் அறைக்கு வந்தாள் மதுமிதா…
அங்கே தன் மடிக்கணினியில் பணிச் செய்து கொண்டு இருந்த கணவனிடம் வந்தவள்... தன் முன் நிற்கும் மனைவியைப் பார்த்தவனின் பார்வையில் ஏற்பட்ட மாற்றங்கள் கண்டு நாணத்தால் முகம் திருப்பிப் படுக்கையில் வந்து அமர்ந்தாள் மது…
"என்னடி ஏதோ பேச வந்தது போல் தெரியுது.. ஆனால் பேசாமல் போயிட்ட" என்று கேட்டான் கதிர் வேந்தன்.
"பேசணும் தான் ஆனால்"… என்றவள் முகம் மேலும் சிவந்தது…
மடிக்கணினிக் கீழே வைத்தவன் அவள் அருகில் நெருங்கி வந்து அமர்ந்து "ம்ம் சொல்லு மது" என்றான்…
"என் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோஷமாக நான் என் பிறந்தநாள் கொண்டாடியதே இல்லைங்க… உங்களோட காதல் எனக்க எவ்வளவு அன்பான குடும்பத்தைத் தந்து இருக்குத் தெரியுமா… நான் ரொம்பக் குடுத்து வைத்தவள்… உங்கள் காதல் தான் காரணம்" என்று அவனை அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் அவன் மதி…
"என்னடி… நீ பண்ணறது எனக்கு வெக்கம் வருது"… என்றவன் அவளை அணைத்தான்…
இரவின் கருமையைச் செதுக்கிச் செதுக்கிப் தன் கதிர்களால் வெளிச்சமாக்கினான் சூரியன்.
காலை நேரம் மிகவும் பரபரப்பாக இருந்ததது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு…
தருண் மற்றும் மித்ரா.. அவள் மகனைத் தவிர அனைவரும் சென்றனர்…
மித்ராவிற்குக் காலேஜ் வேலைகள் இருப்பதால் வரவில்லை என்றாள்... தருணுக்கோ... முடிக்க வேண்டிய நிலுவையில் இருக்கும் பணியின் காரணமாக வரவில்லை என்றுக் கூறிவிட்டான்…
தருண் செல்ல வில்லை என்பது மித்ராவிற்குத் தெரியாது, அதே போல் அவள் செல்லவில்லை என்பதும் தருணுக்கு யாரும் சொல்லவில்லை…
அனைவரும் சென்றதும்.. தன் அறையில் இருந்து பணிசெய்து கொண்டு இருந்தான் தருண்…
கீழே தன் மகனோடு அமர்ந்துத் தனக்கான வேலைகளைச் செய்தவள் எல்லாம் எடுத்து அடுக்கித் தன் அறைக்கு எடுத்து வந்தாள்… அவள் பின்னோடு தத்தித் தத்தி நடந்து வந்த வேதாந்த்… தருணின் அறையின் முன் நின்றான்.. அறையைத் திறந்து இருக்க, அங்கே கணினியில் பணிச் செய்யும் தருணைக் கண்டதும் "அப்பா" என்று அழைத்தான் வேதாந்த்…
அதில் தருண் நிமிர்ந்துப் பார்க்கவும்.. பிள்ளையை மித்ரா இனி இப்படி அழைப்பாயா…என்று அடித்தாள். அவனை எடுக்குக் கொண்டு தன் அறைக்குச் செல்லும் அவளைப் பார்க்கவும் சரியாக இருந்தது…
அதில் மனதளவில் வேதனை அடைந்த தருணுக்குக் கோபம் வெட்டிக் கொண்டு வரும் மின்னலென அவளைக் கண்டு வந்தது… வேகமாக அவள் அறைக்கு வந்தான்… மகனைப் படுக்கையில் படுக்க வைத்துக் கொண்டிருந்தவள் அறைக்கதவின் தாழ்பாள் இட மறந்தாள்…
தன் அறையில்… வெறும் உடம்போடு சினத்தால் முகம் சிவந்த படி நிற்கும் அருணின் தோற்றத்தில் மனதில் பயம் உண்டானது மித்ராவிற்கு…
"எதுக்குடி என் பையனை அடித்தாய்" என்றான் எடுத்த எடுப்பிலேயே…
அவன் வார்த்தைகளின் தாக்கம் சிறிது நேரமே அவளை நிறுத்தி வைத்து, பின் தன் நிலைக்கு வந்தவள் மெதுவாக
"உங்கள் மகனா... யாரது ? என் பிள்ளை அவன், அவனை அடிப்பேன் கண்டிப்பேன், அதைக் கேட்க நீங்கள் யாரு" என்றாள் நிதானமாக…
"என் மகன் உனக்குப் பிள்ளைதானே.. அப்பறம் எதுக்கு அவனை அடித்தாய்" என்றதும்…
"என்ன மாமா… பெரிய தியாகி நினைப்பா உங்களுக்கு… எனக்கு வாழ்க்கைத் தரேன் நினைச்சுட்டு இருக்கீங்களோ".. என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் மித்ரா .
அவள் பேச்சிலும் அதில் இருந்த எள்ளலும் அவனை மேலும் சீண்டியது… அவளை நோக்கி முன்னே வந்தவனின்ச் செயலில், பெண்ணவள் பின்னோக்கிச் சென்றாள்…
"தியாகி…ம்ம்… யாருடித் தியாகி.. என்ன பார்த்தால் அப்படித் தெரியுதா? உனக்கு என்ன தெரியும் என்ன பத்தி … வந்துட்டாள் தியாகி யோகிச் சொல்லிட்டு" என்றான் தருண்.
"உங்களைப் பத்தி எல்லாம் எனக்குத் தெரியும், உங்கள் மீராவிற்காகக் காத்திருங்க, இல்லைன்னா மீராவைப் போலயே உங்களுக்கு ஒரு பொண்ணைப் பார்த்து நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்றாள் பெரிய மனிதன் தோரணியில்…
"உனக்கு என்ன பத்தி எல்லாம் தெரியுமா? … மீராவா யாரு மீரா" என்றான் தருண்…
"அதுதான் உங்க டைரியில் கவிதையாய் எழுதி வச்சிருக்கீங்களே மீரா என்ற பெயரில், அதுதான் சொன்னேன்... அதெல்லாம் நான் எப்போவோ பாத்துட்டேன்... இங்க இருந்து போறதுக்கு முன்னாடியே... எனக்குத் தெரியும் உங்களுக்கு மீரா என்கிற பொண்ணு மேல் காதல் இருக்குன்னு... அப்புறம் என்ன புதுசா" என்றாள் மித்ரா.
ஓ என்றவன் "இப்போ என்ன வேணும் உனக்கு" என்று தன் குரலை மாற்றினான் தருண்.
"நீங்க தேவையில்லாமல் என் பையனிடம் நெருங்காதீர்கள், உங்களுக்கு மீரா இல்லைனா, அவளை விடவே நல்ல பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க, சும்மா என்னுடைய பையன் வாழ்க்கையில் நீங்கள் வராதீங்கத் தேவையில்லாமல், தியாகியாகணும்னு நினைக்காதீங்க" என்றாள்.
"எல்லை மீறிப் பேசுற மித்ரா" என்றான் தருண்.
"நீங்க எல்லை மீறியதனால் தான், பேச வேண்டியது தான் போச்சு" என்றாள் மித்ரா
"எல்லை மீறி என்ன செய்தேன் என்று கூறுகிறாய்" என்று அவள் அருகே வந்தான் தருண்.
"இதைத்தான் சொல்கிறேன்" என்று சுட்டிக் காட்டி… இரண்டடிப் பின்னே சென்றாள் …அவளின் இந்தச் செயலில் அவனுக்கு மேலும் மேலும் கோபம் வந்தது. தன்னைக் கேவலப்படுத்துவதாக நினைத்தான் தருண்.
தான் காதலிக்கும் பெண் தன்னைத் தவறாகப் புரிந்துப் கொண்டிருக்கிறாள் என்பதே அவனுக்கு மனதில் சுமையை ஏற்றி வைத்தது போல் அழுத்தியது. அந்த அழுத்தம் அவன் ஆழ்மனதில் இருக்கும் கோபத்தை வெளியே கொண்டு வந்தது.
"என்னடி, சும்மா என் கோபத்தைச் சீண்டிக்கொண்டே இருக்கிறாய்" என்று மேலும் அவள் அருகில் வந்தவனிடம்…
"முன்னே ஏதோ ஒரு பெண்ணைக் காதலித்து, எப்படி என்கிட்ட இப்படி உரிமையைப் பழக முடியுது உங்களாலே" என்று கேட்டாள் …
"கையில் பிள்ளையோடு வந்திருக்கும் பெண் தானே என்று நினைத்து விட்டீர்களா" என்று அவள் வார்த்தையில் சின்னாபின்னமாகச் சிதறிக் கொண்டிருந்தான் தருண்.
"என் மேல் ரொம்ப நல்லெண்ணம் தான் உனக்கு" என்றவன் சிறிது நேரம் மௌனத்திற்குப் பின் "உனக்கு என்ன தெரியும், என்ன பத்தி" என்று மீண்டும் கேட்டவன்... பின் மெல்ல
"என் காதலை உணரவும்... புரிந்துக் கொள்ளவும் அறிவு வேணும்... அது தான் எப்பவுமே காலியாக வைத்துச் சுத்தறகிறவள் ஆச்சே நீ... " என்றவன் அவள் அருகே வந்தவன்...
"தேவை இல்லாமல் எனக்கும் என் பையனுக்கு நடுவில் நீ வந்தால், சேதாரம் உனக்குத் தான் சொல்லிட்டேன்"… என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டினான்… பின்
"எவ்வளவு தைரியம் உனக்கு அவனை அடிக்கக் கை ஒங்குவ"... என்றான் கண் சிவக்க... அவன் கோபத்தில் அவள் தண்டுவடம் சிலிர்த்தது பயத்தால்.. இப்படி ஒரு முகத்தை இது வரை பார்த்ததில்லை அவள் ... இருந்த போதும் இப்படியே இதை வளர விடக் கூடாது என்ற எண்ணம் அவள் வாய்த் திறக்க வைத்தது..
"என் பையன் அவன்… அதைக் கேட்க" என்று அடுத்த என்ன வார்த்தை உதிர்திருப்பாளோ, அதெல்லாம் அவன் இதழடியில் சென்று சரணடைந்தது...
அவளுக்கே உணர நொடிக்களுக்கு மேல் நேரம் எடுத்தது.. அவள் இதழைத் தன் இதழுக்குள் சிறையெடுத்து இருந்தான் தருண்...
அவளை முத்தாதால் சில்லிடவைத்தவன் மெல்ல மனமே இல்லாமல் அவளை விடுவித்தான்.. இதை எதிர்பார்க்கவில்லை மித்ரா... அவன் வெற்று உடம்பில் அடித்தவள் முதல் முறையாக…
"ஏன் இப்படிப் பண்ணறீங்க மாமா" என்று அழுதாள் பெண்ணவள் ...
அவளின் மாமா என்ற அழைப்பில் தன்னைத் தொலைக்க முயன்றவன் அவள் அடுத்த வார்த்தைகள் சுயம் பெற்றான்...
"உங்க அன்பு... இந்த இரக்கம்... எதுவும் எனக்கு வேண்டாம்... இனி ஒரு தடவை இப்படி நடந்து கொண்டால்... நான் பொல்லாதவள் ஆகிடுவேன்" என்று அவனை மிரட்ட முயன்றுத் தோற்றுப் போனாள்.
"என்னடி இரக்கம் தியாகம் என்றுச் சப்பைக்கட்டுக் கட்டிட்டு இருக்க... நான் ஓபன் மைண்ட் உள்ளவன்... உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என் காதல்.. எனக்கான தேவைக்கு நீ எவ்வளவு வேண்டும் எல்லாம் சொல்லவா என்றவன் அவள் காதுக்குக் கீழே கழுத்தில் மெல்ல இதழ்ப் பதித்து, அவள் செவிகளில் தன் காதல் வென்மையைத் தனிக்க ... அவள் மட்டுமே எவ்வளவு தேவை என்று அவள் முகம் சிவக்கச் சிவகக் வார்த்தைகளால் அவளிடம் கூறியவன்..
"இதெல்லாம் குறைவுத் தான்... என் பையனுக்கு என்னை நீ அப்பா வரவிடு அப்பறம் உனக்குச் செயலில் உணர்த்துகிறேன்...
"அதைவிட்டு எதாவது கிறுக்குத் தனம் பண்ணினாய் என்றால், என் பையனுக்குத் தங்கச்சி ரெடிப் பண்ண வேண்டி வரும்" என்றவனின் வார்த்தைகள் எல்லாம் கேட்டு என்ன இவருக்கு.. ஏன் இப்படி.. எப்படி இந்தக் காதல் என்றுக் குழப்பம் தான் மிஞ்சியது...
"இவ்வளவு வருடம் நான் காத்திருந்தேன், இனி இல்லை.. என்னோட காதலுக்கு ஆனா இரண்டாவது வாய்ப்பு.. என் பிள்ளையை என்னிடம் இருந்து பிரிக்கணும் நினைச்ச.. ம்ம் நினைக்க மாட்ட” என்று தன் அறைக்கு வேதாந்தை வாரி அணைத்துபடியே வெளியேறினான்...
"என்ன செல்லம் அப்பாவ இரண்டு நாட்கள் பார்க்காமல் அழுதீங்களா... விடு நம்ம அம்மா தானே.. வேற வழித் தெரியலைத் தங்கம், அவளுக்கு எல்லாம் மென்மையாகச் சொன்னால் நம்மளை ஏமாற்றிவிடுவாள்.. இவளுக்கெல்லாம் சாக் டீரிட்மெண்ட் சரி" என்று மகனுக்கு முத்தம் வைத்தவாறு சென்றான்...
இதெல்லாம் சிலையென நின்றுப் பார்த்தாள் மித்ரா…
'அப்போது அவருடைய மீரா யாரு.. அவருக்குக் காதல் தோல்வியா' என்று நினைத்தவள்…மனம் கேட்கவில்லை அவனின் காதலைத் தெரிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசியம் புரிந்தது…மீண்டும்அவனைத் தேடிச் சென்றாள் அவனுடைய அறைக்கு…
தோளில் கிடந்த மகனைப் படுக்கையில் படுக்க வைத்தவனுக்குத் தன் பின்னால் நிற்கும் மித்ராவைப் பார்த்ததும்.. சலிப்பு உண்டானது... இவளுக்கு என்னதான் வேண்டும் என்ற நிலைக்கு வந்திருந்தான்…
திரும்பி அவளை நேருக்கு நேர் நின்றுக் கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்தான்.. என்ன வேண்டும் உனக்கு என்று…
தன் மனதில் இருப்பதை அவனிடம் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவளுக்குத் தன் முன் நிற்கும் அவனின் செயலில் வெட்கத்தில் முகம் சிவந்தது…
“என்ன வேணும் என்று கேட்டேன்” என்றான் தருண்…
"நான் வேண்டும் என்றால் வீட்டில் பேசட்டா…உங்கள் காதல் நிறைவேற" என்றாள்…
அவளின் வார்த்தைகள் எல்லாம் கேட்டு ஒரு முடிவுக்கு வந்தவனுக்கு இனி இவளை விட்டால் சரியாகாது.. எல்லாம் சொதப்பித் தன்னை மீண்டும் பெரிய அளவில் வேதனைத் தந்திடுவாள் என்று உணர்ந்தான்…
திடமான மனதோடு உறுதியான நடையிட்டு அவள் அருகில் வந்தான்…
தொடரும்…