எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 16

Privi

Moderator

காலங்கள் உருண்டோடி உமையாள் அவள் இருபது வயதை அடைந்தாள். அவள் சொன்னதை போல் அவளின் பள்ளி கடைசி பரீட்சையை நண்பர்களின் உதவியுடன் எழுதினாள். தோல்வி அடையவில்லை, பார்டரில் பாஸ் பண்ணிவிட்டாள்.​

அவளுக்கு இது போதும். ஆனால் நீலனை அவள் அப்படி விடவில்லை. அவனை படிக்க சொல்லி கொண்டே இருப்பாள். இப்படியே அவர்கள் காலம் செல்ல அன்றொரு நாள். மூன்று மாதம் கழித்து தர்மன் வீட்டிற்கு வந்தான். வந்தவன் முழு போதையில் இருந்தான்.​

"அம்மா.. தாயீ.. என்னை பெத்தவளே.. உமையாளு" என கூறிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான். நீலன் முகம் வெறுப்பில் சுருங்கியது.​

"வாங்கப்பா என்ன இந்த பக்கம்? எதாவது வேணுமா? காசை தவிர என்ன வேண்டும் என்றாலும் கேளுங்க" என கூறினாள் உமையாள்.​

"என்னமா அப்படி சொல்லிட்ட? அப்பாக்கு கொஞ்சம் காசுதா மா"​

"முடியாது பா, என்னிடம் பணம் இல்லை"​

என்று இப்படியே அவர்கள் இடையில் வாக்குவாதம் வர ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் பணம் இல்லாத காரணத்தினால் மது அருந்தாமல், போதை இல்லாமல் பைத்தியம் பிடித்ததை போல் ஆனான்.​

பணம் கொடுக்காத மகளின் மேல் ஆத்திரம் வந்தது. அவளை அடிக்க பாய்ந்து கொண்டு வந்தான். நடுவில் புகுந்து அவரை கட்டு படுத்த நீலன் முயற்சித்தான்.​

அவனையும் அடி பிளந்து விட்டார். அதன் விளைவே அவன் முதுகில் தழும்புகளின் அச்சரம். நீலனை அடித்தவுடன் உமையாள் தடுக்க செல்ல அவளின் கையை பிடித்து முறுக்கி இருந்தார். பின்,​

"ச்சை அவளோட இந்த சனியன்களும் போய் தொலைந்திருக்கலாம். அப்பாவுக்கு உதவாத பிள்ளைங்க எதுக்கு? நான் திரும்பவும் வருவேன் எனக்கு பணம் வேணும். இல்லை என்றால் இவனை கொன்று விடுவேன்”​

என கர்ஜித்து சென்று விட்டார்.​

சாந்தி சென்றதிலிருந்து இதே பிரச்சனைதான். மது அருந்த பணம் கேட்பார் கொடுக்கவில்லை என்றால் அடி உதை தான். இவர்களுக்கும் சலித்து விட்டது.​

அழுதழுதே அவள் மடியில் துயில் கொள்ளும் தம்பியை பார்த்தாள். பின் ஒரு முடிவெடுத்தவளாக அவனை கீழே படுக்க வைத்து விட்டு முகத்தை நீரால் அடித்து கழுவி நீலன் பக்கத்தில் தூங்க ஆரம்பித்தாள்.​

மறுநாள் தொழிற்சாலைக்கு சென்றாள். அங்கு ஏற்றுமதி இறக்குமதி பிரிவில் அருண் என்பவன் வேலை செய்துகொண்டிருந்தான்.​

அவனிடம் சென்று "கல்யாணம் கட்டலாமா?” என கேட்டாள்.​

அருண் அழகன் தான், ஆனால் எப்போதுமே அவன் முகம் சிடு சிடு என்றே இருக்கும். அவனிடம் பேச அங்கு இருக்கும். அனைவருக்கும் பயம். ஏனோ அவனுக்கு உமையாள் என்றால் ஒரு பிடித்தம். அது எப்போது காதலாக மாறியது என்று அவனுக்கும் தெரியவில்லை.​

ஒருநாள் ஓய்வு வேலையின் போது உமையாளை சென்று சந்தித்தான் அருண்.​

"உமையாள் உன்னிடம் கொஞ்சம் பேசணும்”​

"என்னிடம் பேச என்ன இருக்கிறது?" எனக்கு உங்களிடம் பேச விருப்பம் இல்லை. தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள்" என கூறி சென்று விட்டாள்.​

உமையாளுக்கு அருணுடன் பெரிய பரிச்சியம் இல்லை. அங்கு வேலை செய்பவர்கள் அவனை பற்றி எப்போதுமே தப்பாகவே பேசுவார்கள். அதனாலேயே அவனிடம் பேசமாட்டாள்.​

அவனாவே வந்து பேசியது அவளுக்கு பிடித்தமின்மையையும், பயத்தையும் ஒருங்கே குடுத்தது. அவள் எவ்வளவுதான் அவனை தவிர்த்தாலும் அருண் விடாமல் அவளிடம் பேச முயற்சி செய்துகொண்டே இருந்தான்.​

அங்கு உமையாளுடன் வேலை செய்யும் செல்வியும் இவை அனைத்தையும் கவனித்து கொண்டே இருந்தாள். பின் உமையாளிடம்,​

"இந்த புள்ள உமையாளு என்ன சிடுமூஞ்சு சின்ன ராசா உன்ன சுத்தி சுத்தி வராக, நீ என்னமோ பிடிக்குடுக்காம ஓடிட்டே இருக்கவ. கொஞ்சம் என்னனுதா கேளு. அப்போதானே என்ன விஷயம்னு தெரியும்" என்றாள் செல்வி.​

"செல்வி எனக்கு பயமா இருக்குடி. அவரை பார்த்தாலே பயமா இருக்கு, நான் பேசல அவரிடம்"​

"அடியே! பேசாம ஏன் உன்ன சுத்தி வராகனு உனக்கு எப்படி தெரியும்? சொல்லு"​

"ஹம்ம்ம்ம்ம், சரிடி இன்று பேசுறேன்" என அவனிடம் பேச ஒப்புக்கொண்டவள், அமைதியாய் வேலையை தொடர்ந்து செய்தாள். அன்று வேலை முடிந்தபின் அவளாகவே சென்று அவன் முன் நின்றாள்.​

அவளை பார்த்தவனோ கேள்வியாய் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினான். அவளோ​

"என்னிடம் என்ன பேசணும்?"​

அவனுக்கு இதழில் சிரிப்பு.​

"என்னடா என்னை தேடி எல்லாம் தேவதை வரம் கொடுக்க வந்துள்ளது" என வாய் விட்டே கூறினான்.​

"பேச ஒன்னும் இல்லை என்றால் நான் போறேன்" என்று கூறினாள்.​

உடனே ஓடிவந்து அவள் வழியை மறைத்தான்.​

" ஹே நில்லு எங்க ஓடுற? நான் சொல்றத கேளு" என அவள் முகத்தை பார்த்து பேசினான். ஆனால் அவளோ தரையை பார்த்து கொண்டிருந்தாள்.​

அவனோ "உமையா என்ன பாரு" என்றான்.​

அவள் அவனை பார்க்கவில்லை. பொறுமை இழந்தவன் "உமையா என்ன பாரு" என அழுத்தி கூறினான். அதில் கட்டளையும் இருந்தது.​

அவள் சட்டென்று அவனை ஏறிட்டு பார்த்தாள்.​

அவனோ "என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு" என கூறினான். அவளோ அவனை கண்கள் விரித்து பார்த்தாள்.​

"இதோ இந்த கண்கள்தான் என்னை உன்னிடம் சுண்டி இழுக்குது டி. என்னை வேண்டாம் என்று மட்டும் சொல்லாத"​

"அது.." அவள் தயங்க,​

"வேண்டாம் எதுவும் பேசாத. நீ என்ன சொல்ல போகிறாய் என்று எனக்கு நன்றாக தெரியும். ஒருநாள் உனக்கு என்னை புடிக்கும் அப்போ வந்து சொல்லு" என கூறி ஒற்றை கண் அடித்துவிட்டு அங்கிருந்த்து சென்று விட்டான்.​

அவனின் இந்த பரிமாணம் புதிது. ஏனோ எங்கோ ஓர் இடத்தில் அவனை பிடித்திருக்கிறதோ என அவளுக்கே தோன்ற ஆரம்பித்து விட்டது. அவள் அறியாமலே அவள் இதழில் யாருக்கும் தெரியாத அளவு ஒரு சிறு புன்னகை.​

அன்றிலிருந்து அவனை கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்தது. அவனை யாரும் அறியாமல் பார்ப்பாள். ஆனால் அவனிடம் சென்று பேச முயற்சி செய்ய மாட்டாள்.​

அவனுக்கும் அவள் பார்க்கிறாள் என்று தெரியும். அதே சமயம் அவனும் பேச முயற்சி பண்ண மாட்டான். இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருந்த தருணம் தான் தர்மனின் பிரச்சனையும் வந்தது.​

மறுநாள் வேலைக்கு சென்றவள் நேரே அருணிடம் சென்றாள். அவன் அவளை கேள்வியாய் பார்க்க "கல்யாணம் கட்டலாமா?" என கேட்டாள். அருணுக்கோ இது பேரதிர்ச்சி.​

கண்களால் மட்டுமே பார்த்து கொண்டிருந்தவள் நேரே வந்து இப்படி கேட்கிறாள் என்றால் இதில் என்னவோ இருக்கிறது என்று சரியாக யூகித்தவன், அவளிடம் "வா அப்படி தனியே போய் பேசலாம்" என அவளை ஒதுக்கு புறமாக இருந்த ஒரு இடத்திற்கு அழைத்து சென்றான்.​

சென்றவன் அவளிடம் "ஹ்ம்ம் இப்போ சொல் என்ன பிரச்சனை?” என கேட்டான்.​

அவள் எதோ பிரச்சனையில்தான் இப்படி பேசுகிறாள் என்பதை சரியாக கணித்திருக்கிறான் என்பது அவளுக்கு ஆச்சரியம் தான்.​

அவளும் கொஞ்சமும் தயங்காமல் அவளை பற்றியும் அவளின் பொறுப்பை பற்றியும் அவளின் தந்தையை பற்றியும் கூறலானாள். அவை எல்லாத்தையும் கேட்டவன்​

"சரி தம்பி உன் பொறுப்பு மற்றபடி எந்த ஒரு சிக்கலும் இல்லை. உங்க அப்பனை நான் பார்த்துக்கிறேன். வரும் வெள்ளி கிழமை உனக்கும் எனக்கும் கல்யாணம். தயாரா இரு” என கூறி அவள் கன்னத்தை தட்டி விட்டு சென்றான்.​

அவளுக்கும் இது அதிர்ச்சியே . இப்படியே நான்கு நாட்கள் கழிய வெள்ளிக்கிழமையும் வந்து சேர்ந்தது. பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்த நீலனை உமையாள் தடுத்து,​

" நீலா இன்று ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும். அதனால் பள்ளிக்கு போக வேண்டாம்” என கூறி விட்டாள்.​

காய்ச்சல் என்றால் கூட மருந்து அருந்திவிட்டு பள்ளிக்கு போ என்று சொல்லும் அக்காவுக்கு என்ன ஆனது என்று அவனுக்கும் குழப்பம். பின் அவனும் உமையாளும் கோவிலுக்கு சென்றனர்.​

அங்கு அவர்களுக்காக அருண் காத்திருந்தான். இருவரும் சந்நிதானத்துக்கு சென்று கடவுளை வேண்டிக்கொண்டனர். என்ன நடக்கிறது என்று புரியாமல் நீலனும் கடவுளை கண் மூடி வேண்டிக்கொண்டான்.​

பின் அருண் தாலி பொருந்திய மஞ்சள் சரடை எடுத்து முருகனை கையேந்தி மனமார வணங்கி உமையாள் கழுத்தில் கட்டினான். அர்ச்சனை மூலம் இவர்களின் திருமணம் முடிந்தது.​

நீலனுக்கு இவை அதிர்ச்சியாக இருந்தாலும் அக்கா எப்போதும் சரியான முடிவைத்தான் எடுப்பாள் என்ற நம்பிக்கையில் அமைதியாக இருந்தான்.​

கல்யாணம் முடிந்தவுடன் நேரே உமையாள் வீட்டிற்கு சென்று உமையாள் மற்றும் நீலனின் மிக மிக முக்கியமான அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு பக்கத்து வீட்டு பாக்யா விடமும் சொல்லி கொண்டு, அங்கிருந்து அருண் வீட்டிற்கு சென்றனர்.​

அருண் வீட்டிலோ அவனுக்கு ஒரு தங்கை மட்டும் தான் இருந்தாள். அவளும் தான்தோன்றி தனமாக இருந்தாள். அருணின் இந்த திடீர் திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.​

கடந்திருந்தது, அருண் உமையாள் திருமணம் முடிந்து ஆறு மாதம் கடந்திருந்தது. தாமரை இல்லை மேல் தண்ணீர் போல் தான் உமையாள் மற்றும் அருணின் வாழ்க்கை சென்றது.​

அவள் வீட்டில் எப்படி இருப்பாளோ அப்படியேதான் இங்கும் இருக்கிறாள். அருணோ அவளிடம் தேவையை தாண்டி பேசியதில்லை. அதற்கான காரணம் உமையாளுக்குமே தெரியவில்லை. பல சமயங்களில் அவன் எதோ சொல்ல வருவது போல் இருக்கும் ஆனால் கூற மாட்டாளன் .​

அவளும் எதுவாயினும் அவனாக சொல்லட்டும் என விட்டு விட்டாள். வேலை செய்யும் இடத்திலும் இவர்கள் திருமண கதை பரவ சிலர் அவளை கண்டு பொறாமையும் சிலர் அவளை கண்டு பாவமும் பார்த்தார்கள். எது எப்படியோ அருணின் விழிகள் எப்போதுமே அவளை ரசித்துக்கொண்டே இருக்கிறது.​

அவன் தங்கையோ அவள் இஷ்டத்துக்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். நீலன்! படிப்பு மட்டும் தான் அவனின் ஒரே குறிக்கோள் என்று வாழ்பவன். அவன் அருணிடமும் அளவாக தான் பேசுவான்.​

இப்படி அவர்கள் வாழ்க்கை செல்ல, ஒருநாள் மது போதையில் வீட்டிற்கு வந்தான் அருண்.வந்தவன் நேரே அவன் அறைக்குத்தான் சென்றான். அங்கு கட்டிலில் உமையாள் துயில் கொண்டு இருந்தாள்.​

அறைக்கு சென்றவன் அவளை பார்த்தான். அவன் அழகு அவனை சுண்டி இழுத்தது. அவனுக்குள் இருக்கும் போதையும் அவனுக்கு தூபம் போட, அவளின் சம்மதம் இன்றியே அவளை அவனுக்குள் எடுத்துக்கொண்டான். கூடலின் முடிவில் அருண் அசந்து தூங்கிவிட்டான். தூக்கமின்றி தவித்தது உமையாள் தான்.​

அவளுக்கு என்ன நடந்தது என்று அவளால் கிரகிக்க முடியவில்லை. அவன் நிதானத்தில் இல்லை என்பது அவளுக்கு நன்றாக தெரிந்தது. கண்களின் ஓரம் கண்ணீர் கசிவு. பல மணி நேர மன போராட்டத்தின் பின் அவளாகவே அவளுக்குள் எடுத்த முடிவுகள்​

"என்ன ஆனது? எப்படியும் அவர்தானே உன் கணவர், எப்படியும் ஒருநாள் நடக்க வேண்டிய ஒன்றுதான் இப்பொழுது நடந்துள்ளது. இது ஒரு புதிய ஆரம்பமாக எடுத்து கொண்டு வாழ்க்கையை இனி அவருடன் பற்றுதலோடு வாழ்வோம்" என முடிவு எடுத்தபின் தான் அவளுக்கு தூக்கமே வந்தது.​

காலையில் துயில் களைந்து தலையை பிடித்துக்கொண்டே எழுந்து அமர்ந்தான் அருண்.​

"ச்சே இனி அவங்களுடன் மது குடிக்க செல்ல கூடாது" என யோசித்துக்கொண்டே மின்னல் வெட்டியது போல் அவன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது. ஆம் இரவு நடந்தது இப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வருகிறது.​

"ஐயோ என்ன காரியம் செய்து விட்டோம்? கண்டிப்பாக என்னை கேவலமாக நினைத்திருப்பாள்" என வெட்கி புலம்பி கொண்டிருந்தான்.​

பக்கத்தில் பார்த்தான் இடம் காலியாக இருந்தது, "விட்டுட்டு போய்ட்டாளோ?" என்று வேகமாக எழுந்து அவள் உடைகளை ஆராய்ந்தான். எல்லாம் அங்கு தான் இருந்தது.​

"அப்படிலாம் விட்டுட்டு போகமாட்டேன்" என ஒரு குரல் திரும்பி பார்த்தான் அவள்தான்.​

அவளை பார்த்தவுடன் அவனுக்கு குற்ற உணர்வாகி விட்டது .​

"ஐ அம் ரியலி சொரி. நான் பண்ணது தப்புதான்” என வருந்தி மன்னிப்பு கேட்டான்.​

அவன் உண்மையாகவே வருத்தப்படுகிறான் என அவன் முகமே கூறியது. ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு​

"அது ஒன்றும் தப்பில்லையே. கணவன் மனைவியாய் வாழ தொடங்கிருக்கோம் அவ்வளவு தானே. அதில் மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை"​

அவனுக்கோ அவள் கூறியது ஆச்சரியமாக இருந்தது அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.​

"இல்லை உனக்கு பிடிக்காது, நீ கோபப்படுவ என்று நினைத்தேன். நேற்று நான் சுய நினைவில் இல்லை அதனால்தான் உன் அனுமதி இல்லாமல் உன்னை.." என்று இழுத்தான்.​

அதற்கு அவளோ "சுய நினைவில் இல்லை. அந்த கூற்று மட்டும் தான் எனக்கு வருத்தம். இனிமேல் இவ்வளவு மது குடிக்காதீங்க” என்று கேட்டுக்கொண்டாள்.​

"சரி குளித்துவிட்டு வாங்க சாப்பிடலாம் என்று சொன்னாள்" காலை கடன்களை முடித்தவன் நேரே சென்றது என்னவோ சாமியறைக்குத்தான்.​

"முருகா! அவளை எனக்கு பிடித்திருக்கு, அதிகமாக காதலிக்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலை சரி இல்லை. இந்த தொழிற்சாலை வேலை வெறும் கண் துடைப்பு என்று எனக்கு மட்டும் தான் தெரியும். என் வாழ்க்கை நிரந்தரம் இல்லாத வாழ்க்கை, இப்போது அவளையும் இதற்குள் இழுத்து விட்டேன். என்னை இதிலிருந்து எப்படியாவது வெளியே கொண்டு வா. எனக்கு அவளுடன் ஒரு நீண்ட வாழ்க்கை வாழ ஆசையாக உள்ளது” என கடவுளிடம் மன்றாடி வேண்டிக்கொண்டான்.​

ஆனால் முருகனோ அவனை பாவமாக பார்த்தார். விதித்தது தான் நடக்கும்.​

 
Top