எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மதியின் வேந்தன் - 25

subasini

Moderator
பகுதி - 25



தடுமாறும் மனதில் உண்டாகும் மாற்றங்கள், வாழ்க்கையின் பாதையை மாற்றும்…



மித்ரா அடிபட்டப் கையைப் படுக்கையின் மேல் வைத்து மற்றொரு கையால், தன் நெற்றியின் மேல் கண்களை மறைத்தவாறுப் படுத்திருந்தாள். அவள் தொண்டையோ துக்கத்தில் மேலும் கீழுமாக ஏறி இறங்க, வரும் அழுகையைக் கட்டுப்படுத்தி அழுகாமல் இருக்க... முயற்சிச் செய்தவாறே தன் இதழ்களைக் கடித்தபடிப் படுத்திருந்தாள்.



கையில் காயத்தோடு தன் அறைய விட்டு அழுதபடியே சென்றவளை நினைத்தவனுக்கு மனம் கேட்கவில்லை. அவளைக் காண வந்தான் தருண்.



அங்கே அவன் கண்டதோ துக்கத்தோடு போராடிக் கொண்டிருக்கும் மித்ராவைத் தான். அவள் நிலையைக் கண்டு அவன் காதல் மனம் துடித்தது.



வேகமாக அவள் அருகே வந்தவன் அந்தக் காயத்தில் வழியும் இரத்தத்தைப் பார்த்துத் தன் கையில் இருக்கும் துணியால் மெல்லத் துடித்தான்.



அவன் செயலில் அவளுக்கு வலித்து விடுமோ என்ற பதட்டம் இருந்தது. பல துன்பங்களையும் வேதனைகளையும் கண்டு வந்த மித்ராவிற்கு இந்தக் காயத்தின் வலியெல்லாம் பெரியதாகத் தோன்றவில்லை. மெல்லக் கண் திருந்து, தன் முன் நிற்கும் தருணைப் பார்த்தாள். அவனிடம் என்ன கேட்பது, என்ன பேசுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. மௌனம் மட்டுமே அங்கே நிலைத்திருக்க, மொழிகளும் சத்தங்களும் அங்கு மரணித்திருந்தன.



“மித்ரா வா டாக்டரிடம் போகலாம், காயத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டே இருக்கு” என்றான் தருண்.



“இல்ல நான் வரல.அதுவே சரியாகிவிடும்” என்றாள் மித்ரா.



“நான் சொல்லும் எதையும் கேட்கும் நிலையில் நீ இல்லை... சொல் பேச்சுக் கேட்கவே கூடாது என்று முடிவோடு இருக்கிறாயா…” என்று அதற்கும் கோபப்பட்டான் தருண்.



அவளுக்கோ மனதில் பயமும், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சில விஷயங்களைத் தவிர்ப்பதற்கும், அவனிடம் போராடிக் கொண்டிருப்பவளுக்கு இந்தக் காயமும் வலியும் பெரிய விஷயமாகப் படவில்லை.



முகத்தின் மேல் வைத்திருக்கும் அவள் கையை மெல்ல எடுத்து விட்டவன் அந்தக் கையைப் பிடித்து இழுத்து வா மித்ரா ஆஸ்பத்திரிக்குப் போகலாம் என்று கேட்டான்.

கேட்கும் அவன் குரலில் இயலாமையும் வேதனையும் இருந்தது. அவன் முகமோ துன்பத்தில் இறுகிக் கண்கள் சிவக்க நின்று இருந்ததில்... அவன் காதலும் பாசமும் கண்டு அவளுடைய உள்ளம் தடுமாறிக் கொண்டிருந்தது. அதுவே அவளுள் மிகப்பெரிய பயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது.



தன் மனதில் மீண்டும் ஒரு காதல் உருவாகும் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.



ஒரு குழந்தைக்கும் தாயாகிய பின்னும் மற்றொரு ஆண்மகன் மேல் எப்படி எனக்குக் காதல் வரலாம் என்று கேள்வி, அவளைச் சித்திரவதைச் செய்து கொண்டிருந்தது. நான் என்னவாகிக் கொண்டிருக்கிறேன் என்ற கேள்வியும் அவளை அடித்து விரட்டிக் கொண்டிருந்தது.



"இதற்கு மேல் எனக்குப் பொறுமை இல்லை மித்ரா, தயவு செய்து என்னுடன் வா" என்று அழைத்தான் தருண்



"என்னை இப்படியே விட்டு விடுங்க, எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, அதைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்" என்றாள் மித்ரா.



மேலும் "என் மேல ஏன் உங்களுக்கு இவ்வளவு அக்கறையும் பாசமும்... இந்தப்பாசம் என்னை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று உங்களுக்குப் புரியுதா, இது தான் எனக்கு ரொம்பப் பயமா இருக்கு"... என்றாள் மித்ரா.



"உங்களுடைய இந்தப் பாசமும் அக்கறையும் எனக்கு வேண்டாம் சொன்னால் புருஞ்சுக்கோங்க... மனதில் உண்டாகும் தடுமாற்றத்தால் எங்கே உங்களை நான் காதலித்து விடுவேனோ என்ற பயம் என்னைப் போட்டுச் சித்திரவதைச் செய்வதைப் புரிந்துக் கொள்ளவே மாட்டீங்களா, தாயாகிய பின்னும் வேறுறொரு ஆண்மகன் மேல் வரும் காதலை, எப்படி நான் எடுத்துக் கொள்வது... கணவன் இருந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் இன்னொருவர் மேல் எப்படி எனக்குக் காதல் வரலாம்... அப்போ நான் எந்த மாதிரியான பெண் ... இவ்வளவு மோசமான பெண்ணு உங்க வாழ்க்கையில வேண்டாம் என்று நான் நினைக்கிறது தப்பா, புருஞ்சுக்கவே மாட்டீங்களா" என்று அழுதாள் மித்ரா.

அவன் கூட வாழ்க்கை வாழ்ந்து ஒரு குழந்தைக்குத் தாயாக இருக்கேன். இப்போவும் உங்க பாசத்திலே என் மனசுத் தடுமாறுது... அன்னைக்கு அவன் காதலில் தடுமாறிச்சு. அப்போ நான் எந்த மாதிரியான பெண்ணுங்கறக் கேள்விக்குப் பதில் உங்ககிட்ட இருக்கா... கண்ணாடியைப் பார்க்கும் பொழுது என் முகத்தைப் பார்க்க எனக்கே பிடிக்கவில்லை என்ற நிலைக்கு நான் வந்து விட்டேன்... உங்களுக்குப் புரிய மாட்டேங்குது" என்று தன் மனதில் இருக்கும் எண்ணங்களை அவனிடம் கொட்டிக் கொண்டிருந்தாள் மித்ரா.



அவளின் நிலை அவனுக்கு நன்றாகப் புரிந்தது. காதல் என்பதற்கும் வயது கோளாறினால் உண்டாகும் ஈர்ப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறி இருக்கிறாள் வாழ்க்கையில் என்பதைப் புரிந்து கொண்டான் தருண்.



ஆனால் அதை அவளுக்கு எடுத்து சொன்னால் புரியுமா? என்பதுதான் இங்கே கேள்விக்குறி இதற்கு என்னதான் செய்வது என்று தெரியவில்லை. மெல்ல அவள் அருகில் அமைதியாக அமர்ந்தான் அவள் மனதில் இருக்கும் எல்லாம் அவள் கொட்டட்டும் என்று காத்திருந்தான் தருண்.



"சின்ன வயதில் தாயாகும் பெண்ணைப் பிரசவ நேரத்தின் போது அங்கே இருக்கும் டாக்டரும் நர்சும் பேசிக்கொள்வதை நான் கேட்டேன். இந்தச் சின்ன வயசுல இந்தப் பொண்ணுக்கு இது தேவையா? பெரியவங்கப் பேச்சைக் கேட்காமல் ஓடி வந்ததால் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று அவர்கள் எள்ளி நகையாடியதை ,என் காதுகளில் கேட்டேன். வலியில் நான் துடிக்கும் பொழுது இந்த வயதில் மற்ற விஷயங்களுக்கு எல்லாம் தெரிஞ்சுக்கணும் ஆசைப்பட்ட போதுமா? இந்த வலியையும் அனுபவிக்கனுங்குற அறிவு இருந்திருக்கணும் என்று திட்டிய நர்சின் ஞாபகம் கூர்ந்துக் கூறி அழுதாள் மித்ரா.



பின் அங்கே வந்த டாக்டர் எனக்குக் கூறிய அறிவுரை என்ன தெரியுமா...

இந்தக் காலகட்டத்தில் என்னைப் போல் நிறையப் பெண்கள், இந்தச் சிறு வயதில் தாயாகி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்... பிரசவத்தில் நிறையப் பெண்கள் உயிரை இழக்கவும் நேரிட்டிருக்கிறது என்று விழிப்புணர்வு அறிவுரையை எனக்குக் கூறினார்.



நானும் பிரசவத்தில் மிகவும் கஷ்டப்பட்டுத் தான் குழந்தையைப் பெற்றெடுத்தேன். அந்த நேரத்தில் தான் அவர் எனக்குக் கூறிய அறிவுரைகள் தான் இதெல்லாம். இந்த மாதிரி நிறைய ஸ்கூல் பிள்ளைகள் தான் கல்யாணம் பண்ணி ஓடிப்போய்ச் சிறு வயதிலேயே தாயாகின்றனர் என்றார். குழந்தைத் திருமணத்தை ஒழித்து நம் சமூகத்தில் மீண்டும் காதல் என்ற பெயரில் பல குழந்தைத் திருமணங்கள் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று அவர் என்னிடம் சுட்டிக்காட்டினார்.



இதெல்லாம் கேட்கும் பொழுது நான் செய்தச்செயல் என்னைக் கொன்று கொண்டிருக்கிறது. நான் ஏன் இப்படிச் செய்தேன் என்ற கேள்விக்குப் பதிலே இல்லை. நான் உண்மையாக அவனைக் காதலித்தேனா? என்ன செய்தேன் என்ற கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. அந்த நிலையில் தான் உங்களுடைய இந்த அன்பும் பாசமும் அக்கறையும் என்னை வேதனைக்கு உள்ளாக்குகிறது. என்னை மாதிரியான ஒரு பெண் உங்களுக்கு வேண்டாம் என்றுதான் கூறுகிறேன். உங்களுடைய நல்ல மனசுக்கு நல்ல பெண் கண்டிப்பாகக் கிடைப்பாள் மாமா, மனதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்" என்று அவன் கைகளைப் பிடித்து அழுதாள்.



அவன் கைகளைப் பிடித்து அழுதுக் கொண்டிருப்பவளுடைய கைகளில் இருக்கும் குருதி அவன் கைகளில் பட்டு அவன் கைகள் முழுவதும் சிவப்பாய்க் கொண்டிருந்தது.



"நீ சொல்வதெல்லாம் நான் கேட்கிறேன். முதலில் டாக்டரிடம் வா இல்லையென்றால் நான் செய்யும் முதலுதவி ஏற்றுக்கொள்" என்று அவளிடம் பணிவாகக் கெஞ்சிக் கொண்டிருந்தான் தருண்.

எதுவும் கூறாமல் மௌனமாக அவன் முன் தன் கைகளை நீட்டினாள். அங்கே இருக்கும் மருந்துப் பெட்டியை எடுத்துத் தனக்கு, அவன் செய்த முதலுதவிகள் எல்லாம் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.



எதுவுமே பேசவில்லை தருண். தன்னுடைய காதல் எவ்வளவு சிக்கலில் மாட்டிக் கொண்ட தவித்துக் கொண்டிருக்கிறது என்பது அவன் கண்முன்னே தெரிந்தது. இப்பொழுது அவளிடம் பேசிப் புரிய வைக்கவும் முடியாது... அவள் மனசை மாற்றவும் அவனுக்கு விருப்பமில்லை. எல்லாம் இயல்பாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். அவளே ஒப்புக்கொண்டாள் அவன்மேல் நேசம் வந்துவிடுமோ... காதல் வந்துவிடுமோ என்ற... இந்தப் பயம் தான் அவளைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

அவன் மேல் காதல் வரும் என்ற பயம்... காதல் வந்துவிட்டது என்ற நிலைக்கு மாறும் என்று நம்பிக்கை அவனுக்குத் தைரியத்தைத் தந்தது. அதனால் எதுவும் சொல்லாமல் அவள் கைக் காயத்திற்கு மருந்து விட்டவன் அவள் முகத்தைப் பார்த்தான்.



காதல் முதல் தடவை வரணும் இரண்டாவது தடவை வரக்கூடாது... ஒருத்தரிடம் தான் வரணும் இந்த மாதிரியான விஷயங்களைப் பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது... எனக்கு உன்னைப் பிடித்திருந்தது... நான் உன்னைக் காதலிச்சேன்... அது மறுக்க முடியாத உண்மை... அதை நான் ஒத்துக்குறேன். இல்லன்னு நான் சொல்லவே மாட்டேன். ஆனால் உன்னுடைய இந்தச் சூழ்நிலையை நான் புருஞ்சுக்கிறேன். அதுக்கு நான் மரியாதையும் தரேன், உன்னை நான் இனி தொந்தரவு செய்ய மாட்டேன். எதுவுமே பண்ண மாட்டேன். உன்னை இந்தத் துன்பத்தை உனக்குக் கொடுத்ததுக்கு என்ன மன்னித்துவிடு" என்று அவள் முகம் பார்த்துக் கூறினான். தன்னிடம் மன்னிப்புக் கேட்கும் தருணையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.



அமைதியாக அங்கிருந்துச் சென்று விட்டான் தருண். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தனக்கு மட்டும் ஏன் காதல் ராசியே இல்லாமல் போய்விட்டது என்ற துன்பமும் அவனை வாட்டியது... தான் காதலித்துத் தவறா? தான் காதலிக்கும் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்ததும் தவறா? அடுத்தவன் மனைவி அல்லவே அவள் என் மாமன் பெண்ணாகத் தானே வந்தாள். அவளுக்கு வாழ்க்கைக் கொடுப்பவன் என்றா நினைத்தேன்... எனக்கான வாழ்க்கையைத் தானே அவளிடம் யாசித்தேன், அவளுக்குப் புரியவே இல்லை என்ற வேதனை அவனைக் கொன்றது.



அவளுக்குத் தன் மேல் நேசமும் காதலும் பாசம் எதுவுமே வந்தாலும் அதை அவள் தடுத்து நிறுத்திக் கொள்கிறாள் என்ற எண்ணமே அவனை வருத்தியது தனக்காக யோசிக்க மாட்டாள் என்று புரிந்தது. காதல் என்பது உணர வேண்டும் என்பது ஆழமாக நம்பினான் தருண்.



அதனால் அமைதியாக வந்து தன் படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை எடுத்தவன், நேராக வந்து அவளிடம் கொடுத்தான். எதுவுமே பேசவில்லை மௌனம் மட்டுமே அவனிடமிருந்து.



அவனுடைய இந்த மௌனம் என்னும் பூட்டை உடைக்கும் நாள் வருமா? என்பது தான் தெரியவில்லை. அதன் பின் அவன் தருணை அவள் பார்க்கவே இல்லை. அவன் அவள் கண் முன்னே அவன் தோன்றுவதையே நிறுத்திக் கொண்டான். எல்லாமே மாறியிருக்க அமைதியான நிலைக்குச் சென்று விட்டான்.



தருண் வீட்டில் இருப்பவர் யாருக்கும் இது தெரியவில்லை அனைவரும் ஊருக்குப் போய்த் திரும்பி வந்தவுடன் அவரது வேலையில் பிஸியாக இருந்தனர் அதனால் இவர்களுக்குள்ளே நடந்த எந்த ஒரு விஷயமும் யாரும் அறிந்திருக்கவில்லை.



கதிர்வேந்தன் மட்டும் தருணை அப்பப்போ பார்த்துக் கொண்டே இருந்தான். ஏதோ நடந்திருக்கிறது என்பது அவன் ஆழ்மனம் சொல்லியது. ஆனால் தருணாகப் பேசாமல் தான் போய்க் கேட்க வேண்டாம் என்று நினைத்தான். அதனால் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டான்.



தருணுக்குச் சொல்லில் அடங்காத துயரம் மனதில் இருந்தது. அதை எதையும் மனதில் வெளியில் காட்டிக் கொள்ளாமல் வேலையில் பிஸியாக இருந்தான். தொழில் ரீதியாக வெளியூர்ச் செல்லும் எல்லா ப்ராஜெக்டுகளுக்கும் நானே செல்கிறேன் என்று வலுக்கட்டாயமாகக் கேட்டு வாங்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தான்.



காலில் சக்கரம் கட்டிப் பறப்பது என்று சொல்லுக்கு நிகராக அவன் சுற்றிக் கொண்டு இருந்தான் வெளியூர்களுக்கு, வீட்டில் தங்குவதைத் தவிர்க்கத் தொடங்கி விட்டான்



ஊமையாக அழும் அவன் மன வலிக்கு மருந்தாக 24 மணி நேரமும் தன்னை வேலையில் ஆழ்த்திக் கொண்டான்.



தருணை வீட்டில் பார்ப்பது அரிதாகிப் போனது அந்த நிலையில் தான் மித்ராவின் மகன் தருணைக் கேட்கத் தொடங்கினான். தந்தையின் முகம் காணாமல் பிறந்தவனுக்கு தந்தையாக மாறியவனின் பாசம் கிடைக்குமா? என்பது இனிவரும் காலம் தான் பதில் சொல்லும். குழந்தையின் ஏக்கத்திற்கும் அவனுக்குத் தந்தையின் பாசம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பயணிப்பாளா மித்ரா.

தொடரும்...
 
Top