Shambhavi
Moderator
"தாத்தா.. தாத்தா.. கதவு சாத்தியிருக்கு தாத்தா.. அப்பத்தா அப்பத்தா கத்துறாங்க தாத்தா.. பயமா இருக்கு தாத்தா.. தாத்தா" என்று அராற்றிக் கொண்டிருந்த பூஜாவின் குரலால் சற்று திடுக்கிட்டு போனார், நாராயணன்.
"அம்மாடி.. இரு இரு.. நானு வாரேன்.. பயப்படாத" என்றவர் மனதில் தோன்றிய பயத்தை குரலில் காட்டாது விரைந்து பக்கத்து வீட்டிற்கு சென்றார்.
அண்டை வீட்டார்கள் முன்புற வாசலில் படுத்திருக்க, வெட்கை தாங்காது பாதி தூக்கத்தில் தான் இருந்தனர்.
நாராயணன், சந்ரு, சக்தி என்று அந்த நேரத்திற்கு கோபியின் வீட்டிற்கு செல்ல, உடன் அவர்களும் என்னவோ ஏதோ என்ற நினைத்துக் கொண்டே அங்கு விரைந்திருந்தனர்.
ஒரு பெரிய இரும்பு கேட். அதை அடுத்து அடர்ந்தியான மரத்தால் செய்திருந்த கதவு! அதனை தாண்டி எப்படி பிள்ளையிடம் செல்ல முடியும் என்று மலைப்பாக இருந்தது நாராயணனுக்கு.
அதற்குள்ளாக சுற்றியிருந்தவர்களுக்கு சந்ரு விசயத்தைக் கூறியிருக்க ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை சொல்லிக் கொண்டு இருந்தனர்.
ஆனால் அந்த வீட்டின் தோட்ட வழி பக்கம் மட்டும் ஒரு ஆள் செல்லவில்லை.
செல்லவும் தைரியமில்லை!
வெளியே இருந்தவாறு பூஜாவிற்குக் குரல் கொடுக்க, அவளும் பயத்துடனே உறக்கக் கத்தினாள். மின்சாரம் இல்லாத காரணம் அவளின் குரல் நன்கு தெளிவாகவேக் கேட்டது வெளியே.
கூடத்தை அடுத்து இருந்தது பூஜாவின் அறை. அதனால் நன்றாக கேட்டது.
"பூஜா.. பூஜா.. என்னாச்சு கதவத் தள்ளி பாரு.." என்ற சந்ருவின் குரலுக்கு, "பயமா இருக்கு சந்ரு ண்ணா.." என்றவளின் கண்ணீர் குரலே பதிலாக வரப்பெற்றது.
'இவளே இப்படி அழுது கொண்டிருக்க, அப்போது பேச்சியின் நிலை?' என்று நினைத்த நொடியில் இன்னும் துரிதமாக செயல்பட்டனர்.
மாடி வழி செல்லலாம் என்றால் அந்த இருட்டு நேரத்தில் செல்லவே அத்தனை அச்சமாக இருந்தது அங்கிருந்தவர்களுக்கு!
பின்பக்கம் வழியாக செல்ல முயலலாம் என்றால் தோட்டத்தின் புறம் கூட யாரும் பார்வையைத் திருப்ப தயாராக இல்லை.
சந்ருவின் யோசனைப்படி அவர்கள் வீட்டு பின்பக்கமாக சென்று பூஜாவின் வீட்டு பின்பக்கக் கதவை உடைக்கலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தனர்.
ரம்யாவின் வீட்டு பின்பக்கம் முழுவதும் 'ட' வடிவ சுற்றுச்சுவர் இருக்கும். ஆனால் கோபின் வீட்டில் சுற்றுச்சுவரே இருக்காது. அதன் பொருட்டு பார்த்தால் ரம்யா வீட்டிலிருந்து ஒரு சிறு சந்து போல் வழியில் சென்றால் கோபியின் வீட்டு பின்பக்க இரும்பு கதவிற்கு வந்துவிடலாம்.
அப்படி வந்து பார்த்த போதுதான் அவர்களுக்கான அதிர்ச்சியே காத்திருந்தது.
நாலைந்து பேர் அந்த சந்தின் வழியே கோபியின் வீட்டிற்கு செல்ல அந்த இரும்புக் கதவானது திறந்து காணப்பட்டது. திக்கென்ற பயம் சூழ நாராயணன் தான் முதலில் விரைந்தார்.
செருப்பு அணியாத அவரின் பாதங்களில் பேச்சியின் ரத்தம் பிசுபிசுக்க, அரண்டு போய் கீழே பார்க்க அந்த இடம் முழுவதிலுமே ரத்தக் காடாய் காட்சியிளித்து.
கையில் வைத்திருந்த டார்ச், எமர்ஜென்சி லைட் உதவியுடன் பார்த்திருந்த மற்றவர்களுக்குமே அதிர்ச்சியுடன் பயமும் சூழ்ந்து கொண்டது.
சரியாய் பூஜா, "சந்ரு’ண்ணா" என்று கத்த, முன்னோக்கி இரண்டு அடி வைத்தவனை தடுத்தார் நாராயணன்.
பேச்சியின் அருகில் கூட யாரையும் அவர் விடவில்லை முன்னோக்கி செல்லவும் விடவில்லை.
அவருக்கு இப்போது 'உள்ளிருந்து கத்துவது பூஜாவா?' என்ற சந்தேகம் வந்துவிட்டது.
ரத்த வாடை தூக்க 'இவர் இப்போது கீழே விழுந்திருக்க மாட்டார். நேரம் சென்றிருக்கும்' என்ற எண்ணமும் தோன்றியது அவருக்கு.
ஆனால் அவரின் அடங்கலில் அடங்காது முன்னோக்கி சென்றிருந்தான் அவரின் மாப்பிள்ளை சக்தி.
'இந்த பிள்ளைக்குக் கூறே இல்ல' என்று மனதில் நினைத்துக் கொண்டே மகனைத் திரும்பி முறைக்கலானார்.
சரியாக அந்த நேரம் மின்சாரமும் வந்துவிட, மனதில் ஒரு உறுதியோட சந்ருவுமே சக்தியைப் பின்தொடந்தான்.
"பூஜா" என்று சக்தி குரல் கொடுக்க,
"மாமா.. மாமா" என்று இரண்டு முறை கூறியவள் உள்ளிருந்து அறைக் கதவைத் தட்டலானாள்.
விரைந்து கதவை திறந்துவிட, அவனின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட்டாள் அந்த சிறும் பெண்.
முகம் முழுவதும் வியர்த்திருக்க, தலை, உடை எல்லாம் கலைந்து கண்கள் சிவப்பேறி பயந்து நடுங்கிக் கொண்டிருந்த பூஜாவின் கண்கள் சென்று நின்றது பேச்சியின் அருகே.
"அய்யோ அப்பத்தா" என்ற கூவலுடன் சக்தியைப் பிடித்தவாறே மயங்கியிருந்தாள் அவள்.
குழல் விளக்கின் ஒளியில் பார்க்கும் போதுதான் தெரிந்தது ரத்தம் அவர்கள் நினைத்ததைவிட சற்று அதிகமாகவே வெளியாகியிருக்க, சந்ரு முன்பக்கக் கதவைத் திறந்திருந்தான்.
அங்கு கொடியில் இருந்த ஒரு துணியைக் கொண்டு அவரின் இடுப்பிழும் தலையிலும் கட்டிவிட்டனர் நாராயணனும் மற்றொரு வீட்டுக்காரரும்.
பேச்சியைப் பிடித்துத் தூக்க முயலும் போது ஒரு அடி அவரை அசைக்க முடியவில்லை அந்த ஆண்களுக்கு.
அதிலேயே பாதி பேர் பயந்திருக்க, நாராயணன், "ஆத்தா ரம்யா.. திண்ணூறு கொண்டா" என்றவர் வாய் முடும் முன்பாகவே விளக்குகள் விட்டு விட்டு எரிய ஆரம்பித்திருக்க, எங்கோ மரக்கிளை முறியும் சப்தம் வேறு கேட்டது.
சற்று பொருத்து ஏதோ கருகும் நெடி வர, அவ்வளவு தான் அத்தனை பேரும் அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.
அந்த நிகழ்வுகள் இங்கு நடந்துகொண்டிருக்க, சக்தி ரம்யா, ஜானகியின் உதவியால் பூஜாவை வெளி திண்ணையில் படுக்க வைத்திருந்தான்.
சந்ருவும் நாராயணனுமே உள்ளே பேச்சியுடன் நின்றிருக்க, முன்பக்க மரக்கதவு அடித்து சாற்றியது.
"அடி ஆத்தே" என்ற ஜானகி நெஞ்சில் கைவைத்து நின்றுவிட்டார்.
உள்ளே நடுகூடத்தில் சந்ரு நின்றிருக்க, அவனுக்கு நேர் எதிரே நாராயணனும் அவருக்கு கீழே ரத்தம் சொட்ட பேச்சியும் கிடந்தார்.
"ராசா.. என்ன ஆனாலும் இடத்தவிட்டு நவுராத" என்ற நாராயணனின் பக்கமிருந்த குளியல் அறை பட்டென்று அடித்து சாற்றியது.
"ஐயா"
"ம்ம்.. அங்கனையே நில்லு"
"ஏய்த்தா லீலா! அய்யேன் சொல்லுதத கேளாத்தா.. உசிர எடுத்துத்தான் உன் கோபோம் தீரனும்னு இல்லாத்தா.. இவுக அத்தவிட இன்னுமே வாழ்ந்து படட்டும்னு. விட்டுடுடா சாமி.. அய்யேன் சொன்னா கேளாத்தா.." என்றவர் சுவதினமாக யாரோ எதிரே இருப்பது போல் பேசிக் கொண்டிருக்க, சந்ருவிற்கு மூச்சே நின்றிருந்தது.
ஓர் அளவிற்கு அங்கு நடக்கும் விசயங்கள் அவனுக்குத் தெரிந்திருந்தாலும் தந்தையானவரின் பேச்சு அவனை கதிகலங்க வைத்திருந்தது என்பதே உண்மை.
அதிலும் அவரின் 'லீலா' என்ற சொல்லிற்கு இங்கே இவனுக்குத் தான் மின்சாரம் பாய்ந்ததைப் போன்றதொரு தோற்ற மயக்கம்.
_வருவாள்