எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

லீலா - 04

Shambhavi

Moderator
"அய்யோ.. வீரனே என் மனுச மக்கள காப்பாத்தும் ய்யா.. காப்பாத்தும்.." என்று கிட்டத்தட்ட தரையில் விழுந்து அழுதே விட்டிருந்தார் ஜானகி.

அடுத்தடுத்த அதிர்வுகள் ரம்யாவையுமே தாக்கியிருக்க, அதற்குள் சுற்றியிருந்தவர்கள் ஏதேதோ பேச என்று நிலைமை இன்னும் மோசமானது.

இருபத்தி ஓர் வயது வாலிபன் அவனே ஆடிப்போய் நின்றிருக்க, சற்றும் அதிராது பேசிக்கொண்டே சென்றார் நாராயணன்.

"ஏய்த்தா அய்யேன் சொல்லுறேனே தாயீ.. இவங்கள நானு கூட்டி போறேனே." அவர் கூறி முடிக்கவுமே ஒரு மெல்லிய அழு குரல் கேட்க ஆரம்பித்தது.

சற்று பொருத்து அந்த குரல் அந்த வீடு முழுவதிலுமே எதிரொலிக்க வெடவெடத்து போனான் சந்ரு.

பேசக் கூட முடியாமல் ஒரு வித அதிர்ச்சி அவனை ஆட்கொண்டிருக்க, அவனின் ஐயாவையேப் பார்த்திருந்தான் உடல் நடுங்க.

சற்று தைரியம் வரப் பெற்ற சாற்றியிருந்த கதவை ரம்யா தட்டப் போக, "அம்மா.. நோ!" என்று கண்களை கசக்கிக் கொண்டு வந்து நின்றாள் அவளின் பெண், ஸ்பூர்த்தி.

மனது திடுக்கிட்டது. 'என்ன இவ இப்படி சொல்லுறா' என்று நினைத்தாலும் உள்ளே இருப்பதோ அவளின் ஐயாவும் தமயனும் தானே.

உதவப் போய் அவர்கள் இருவருக்கும் ஏதேனும் நடந்துவிட்டால்? என்று நினைத்த நொடி அவள் இதயம் தடதடத்தது.

"சக்தி" என்று பின்னால் திரும்பி கணவனைப் பார்க்க, அங்கு அவன் இருந்தால் தானே. மனதிற்குள் 'அய்யோ' என்றானது அவளுக்கு.

"அம்மா.. எங்க அவரு" என்றவள் கேட்கும் முன்பு,

"தம்பி.. தம்பி அந்த வழியா இந்நேரத்துல போகாதீங்க.. தம்பி.. தம்பி" என்று சுற்றியிருந்தவர்களின் குரல் கேட்க, மனது பதறியது ரம்யாவிற்கு.

சரியாக அவளின் பதட்டத்தை ஏற்றவே கோபியின் வீட்டு தோட்ட வழியாகச் சென்றிருந்தான், சக்தி!

பாவம் அவனுக்கு அங்கு நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் தெரிந்திருக்கவில்லை முழுமையாக.

சில எட்டு எடுத்து வைத்ததுமே அந்த கூடத்து சன்னல் தெரிய, அதன் வழி பார்த்தவனுக்குத் தான் அதிர்ச்சி.

அசைவுகள் அற்று எதிரே நிலைத்த பார்வையுடன் நின்றிருக்கும் சந்ருவை பார்த்தவன், "டேய்.. சந்ரு" என்றான் உரக்க.

அந்த குரல் சந்ருவை அடையவில்லை‌. மாறாக நாராயணனை தான் அடைந்தது. 'இந்த மனுசனோட' என்று நினைத்தவர், "தம்பி முதல்ல இங்கிருந்து போங்க" என்றார் அவர்.

"ஏய்த்தா.. அவர ஏதும் செஞ்சுடாத தாயீ.. நம்ம ரம்யா மாப்புளதேன்" என்றவரின் சொற்கள் தெள்ளத் தெளிவாக கேட்டது சக்திக்கு.

"யாருக்கிட்ட பேசுறாரு இவரு" என்ற சொல்லிக் கொண்டே பக்கவாட்டில் திரும்ப, அங்கு வந்து நின்றிருந்தாள் ரம்யா கையில் திருநீறு, வேப்பிலை சகிதம்.

"என்னடி" என்று கடுப்புடன் அவன் கேட்டிட, "முதல்ல வாங்க நீங்க" என்றால் அவனை இழுத்துக்கொண்டு நடந்தவாறு.

விளக்குகள் எல்லாம் பளீர் என்று எரிந்தாலும் அவன் நின்றிருந்த ஜன்னல் பக்கம் கொய்யா மரம் இருந்ததால் சற்று அங்கு வெளிச்சம் குறைவாகத் தான் இருக்கும்.

இருவரும் நடக்க நடக்க, அவர்களை யாரோ உற்று நோக்குவதைப் போன்ற உள்ளூணர்வு ரம்யாவை தாக்கியது.

மூச்சு வாங்கியது அவளுக்கு. வியர்வையில் நன்றாக அவள் குளித்திருக்க, அந்த இடத்தில் இருந்து அவன் வெளியே வந்த பார்த்த போது அங்கிருந்த அனைவர் முகத்திலும் பேய் அறைந்தால் போலத் தான் அவனைப் பார்த்து நின்றிருந்தனர்.

'என்னடா இது' என்றவன் நினைத்து முடிக்கவும் அந்த மூடியக் கதவு திறக்கவும் சரியாக இருக்க, வீட்டிற்குள் சென்றான் சக்தி‌.

'இவர வெச்சிட்டு' என்று பிணத்தலுடனே அவன் பின்னே சென்றாள் ரம்யா.

சந்ருவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவள் பின்பு அந்த வீட்டிற்குள் செல்ல ஒருவித பயம். வெளியவே நின்று கொண்டாள்.

பூஜாவும் அந்த நிமிடம் முழித்துக் கொள்ள, அவள் அருகே போக யாரும் துணியர்.

சக்தியும் நாராயணனும் பேச்சியைத் தூக்கிக் கொண்டு வர, ஆறாம் வீட்டில் இருந்தவர்கள் அவரை காரில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

அதன் பின்பு தான் ரம்யா, கோபிக்கு அழைத்து தகவல் கொடுத்தது.

சந்துருவும் சரி பூஜாவும் சரி ஒருவித அதிர்ச்சியுடனே வளம் வந்தனர்.

பேச்சியை மருத்துவமனையில் சேர்த்த பின்பு காலை எட்டு மணி போல் தான் அங்கு வந்தனர் கோபியின் குடும்பம்.

அவர்களுக்கு இத்தனை விளக்கங்கள் எல்லாம் சொல்லப் படவில்லை. ஆனால் அவரே ஒரு யூகத்தில் தான் வந்திருந்தார்.

கோபிக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டி இருந்தது, ரம்யாவிற்கு அதை எப்படி அவரிடம் சொல்ல போகிறோம் என்று இருந்தது.

ஆனால் பேச்சியை மருத்துவமனையில் பார்க்க வந்த மற்ற காலனி ஆட்கள் அன்றைய இரவு நடந்த நிகழ்வுகளை காரசாரமாக இன்னும் பூதாகரமாகவே செல்லிவிட்டு சென்றிருந்தனர் கோபியிடம்.

அது இன்னும் அவரை கவலையில் ஆழ்த்தியிருந்தது.
பூஜா ஒருபுறம் பயந்து போய் இருக்க, இந்த நிகழ்விகளினால் எங்கே ரம்யாவின் வீட்டினருக்கும் ஏதாவது நடந்து விடுமோ என்ற மற்றொரு அச்சம் அவரின் மனதில் இப்போது புதியதாக வியாபித்திருந்தது.

அதை அனைத்தையும் அசைப்போட்டவாறே மகன்களின் அருகே அமர்ந்திருந்தவரின் கவனத்தைக் களைத்தது நாராயணனின் குரல்.

"ஏய்யா கோபி.. இப்போ எப்படி இருக்காகளாம்" என்று தோளில் போட்டிருந்த துண்டை உதறியவாறு வந்து நின்றார் நாராயணன்.

அவரின் பக்கத்தில் ஜானகியும் ஸ்பூர்த்தியும் நின்றிருக்க, எழுந்து நின்றுவிட்டார் கோபி.

"இப்போ பரவாயில்லாம இருக்காங்க ஐயா. ஆனா நினைவு தப்பிடுச்சு. எப்போ வரும்னு சொல்ல முடியாதுனு சொல்லிட்டாங்க" என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஸ்பூர்த்தி முரளியிடம் சென்றிருந்தாள்.

நிரஞ்சனைக் கண்டாலே அந்த ஐந்து வயது சிறுமிக்கு அத்தனை பயம். தன் மாமனைக் கூட அடக்கி விடுபவளுக்கு நிரஞ்சன் கொஞ்சம் ஹல்க் மாதிரி இருக்க, இவள் பல்க்காகவே பயப்படுவாள்.

முரளியின் கையைப் பிடித்துக்கொண்டு, "முள்ளி ண்ணா.. நேத்து பூஜூ க்கா அழுத்துட்டே இருந்துச்சு.. நானு போய் கேட்டேனா.. அக்கா ஓன்னுமே சொல்லல" என்றால் கைகளை விரித்துக் கொண்டு பாவனையாக.

அந்த அழகிய மழலை மொழியில் கவரப் பட்டு தானுமே மென்னையாகச் சிரித்து விட்டான் முரளி.

அத்தனை அழகு குழந்தை ஸ்பூர்த்தி. ஆனால் அவளால் தான் அந்த விளையாட்டுக்கு ஒரு விடைக் கிடைக்கப் போகிறது என்று யாருக்குத் தெரியப் போகிறது?

"ஸ்பூர்த்தி கண்ணு நீங்க இங்கன அண்ணங்க கூடயே இருங்க.. ஐயா, மாமா கூட பேசிபோட்டு வாரேன்" என்றவர் ஜானகியைப் பார்க்க அவர் பேச்சியின் அருகே சென்று அமர்ந்திருந்தார்.

"நா சுத்தி வளச்சு பேசல சாமி. நேத்து நடந்தது இன்னேரத்துக்கு உனக்கு தெரிஞ்சிருக்கும். இனி நீங்க தான் என்ன பண்ணனும்னு முடிவ எடுக்கனும். நேத்தே என் மருமவேன் புள்ளைய காப்பாத்த ஆபத்து தெரியாம போயிட்டாரு. நல்லவேள ஏதும் அபசகுணமா ஆகிடல.. இத்தே தொடர்ந்தா நாளபின்ன மொகத்தக் கூட பார்க்க முடியாம போயிடும் சாமி" அழுத்தமாக வார்த்தைகள் வந்து விழுந்தன அவரிடமிருந்து.

கோபம். ஆத்திரம் என்று எல்லாம் அவருக்கு இருந்தாலும் அதை முகத்தில் காட்டாது வார்த்தைகளில் மிகுந்த அழுத்தத்துடனே காட்டியிருந்தார் நாராயணன்.

கோபியிடம் இதை தகவலாகத் தான் சொல்ல வேண்டியிருந்து அவருக்கு. அறிவுரையோ வழிநடப்போ இல்லவே இல்லை. அதிலும் தன் குடும்பத்திற்கு இதற்கு பின் எதுவும் ஆகக் கூடாது என்பதில் அவர் ஸ்தீரமாகவே தான் இருந்தார்.

ஆனால் அவருக்கேத் தெரியாமல் ரம்யா ஒரு காரியத்தைச் செய்திருந்தாள்!

அதன் விளைவாக இனி நடக்கப் போகும் நிகழ்வுகளில் அவளே மாட்டி முழிக்கப் போகும் நாளும் நெடும் தூரத்தில் இல்லை!

_வருவாள் 👣
 
Top