Shambhavi
Moderator
நிரஞ்சனுக்கு பேச்சியின் இரங்கல் செய்தியானது தொலைப்பேசி வழி சொல்லப்பட, அவன் அருகே ஸ்பூர்த்தியை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த சந்ருவிற்கும் நன்கு கேட்டிருந்தது.
அது அவர்கள் ஏரியாவில் இருந்த டீக்கடை. அங்கிருந்த மனிதரும் பேச்சியைப் பற்றி விசாரிக்க, நிரஞ்சன் சொல்லிக் கொண்டே அந்த இரவு நேரத்திற்கு இதமாக அந்த இஞ்சி ஏலம் போட்ட டீயை குடித்துக்கொண்டிருந்தான்.
முரளியின் அழைப்பின் வழி செய்தியை அறிந்துகொண்டவனுக்கு அழுகையே வந்துவிட்டது.
'என்ன கேட்டது செய்திருந்தாலும் அவர் தன்னின் ஆசை பாட்டி தான்' என்ற நினைப்பு அவனுக்கு. அழுகையைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் மருத்துவமனை நோக்கி அவன் நகர, சந்ரு அதிர்ச்சி விலகாமல் ஸ்பூர்த்தியுடன் வீட்டிற்கு வந்திருந்தான்.
அவன் வந்து விவரித்த விதத்தைக் கேட்டே நாராயணனன் கணித்து விட்டார், இது லீலாவின் வேட்டை என்று!
இனி அடுத்து யாராக இருக்கும் என்ற எண்ணம் தோன்றத் தான் செய்தது.
அடுத்து யார்?
அவர் அங்கு நினைத்துக்கொண்டிருக்க, ஜானகி ரம்யாவின் புறம் திரும்பி, "பார்த்தியா அவ வேட்டைய ஆரம்பிச்சுட்டா. இனி அடுத்து யாருனு தெரியாது. இப்போ ஒழுங்க மரியாதையா நீயே சொல்லிடு" என்றார் அவளிடம் விவரத்தை வாங்கும் பொருட்டு.
"அது.. அன்னிக்கு அந்த ரகுவோட கேஸ் விசயமா போலிஸ் வந்துச்சே அன்னிக்கு தான்" என்றாள் ரம்யா ஜானகியைப் பார்த்துக்கொண்டே.
"சரி என்ன எழுதிக்கொடுத்த?" - நாராயணன்.
"அது.." என்றவள் இழுத்து சக்தியைப் பார்க்க, 'என்னத்த பண்ணி வெச்ச' என்ற முறைப்புடன் அவனுமே ரம்யாவைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
"அப்போவா" என்ற ஜானகி சந்தேகத்துடன் கேட்க,
"ஆமா ம்மா.." என்ற தயக்கத்துடன் ரம்யா சொல்லத் தொடங்கினால்.
சரியாக இருபது தினங்களுக்கு முன்பு பேச்சி ரம்யாவின் வீட்டிற்கு வந்திருந்தார்.
காரணம், அப்போதே அவருக்கு ஏதோ வினோதமாக தோன்றியிருந்தது.
யாரோ தன்னை துரத்துவது போலவும், எப்போதும் வீட்டிற்கு பின்புறம் முருங்கை மரத்திற்கு அருகே யாரோ இருப்பது போலவும் இருக்க வழக்கமாக அவர் பார்க்கும் நம்பூதிரியிடம் சென்றிருந்தார்.
அவரோ அவரின் பிரச்சனையை விளக்கி எழுதிக் கொண்டுவர சொல்ல, எழுதப்படிக்கத் தெரியாத அவர் வந்து நின்றது ரம்யாவிடம்.
வீட்டில் யாரிடமும் அந்த செய்தியை பகிர என்ன மூச்சுக் கூட விட முடியாது. காரணம், அவரே!
அவர் எழுத சொன்ன சாராம்சம் என்னவோ, யாரோ ஒரு பெண்ணின் சிரிப்பு சப்தம் வீட்டிற்கு பின் கேட்பதாகவும் நள்ளிரவு நேரத்தில் பக்கத்து வீட்டு சின்டேக்ஸ் (தரையில் இருப்பது) மேல் ஒரு பெண் அமர்ந்து அவரின் வீட்டையே பார்ப்பதாகவும் கூற ரம்யாவை எழுத சொல்ல, அவள் முற்றிலும் ஸ்தம்பித்து விட்டாள்.
அவளுக்கா தெரியாது அந்த பெண் யார் என்று?!
ஏன் அந்த காலனி மொத்தமுமே தெரியும் அப்படி அந்த வீட்டில் இருப்பது என்ன வென்று.
கைகள் நடுங்க அந்த வெள்ளை பேப்பரில் அவர் கேட்டதை எழுதிக் கொடுத்தவள், சுவாமியின் முன்பு போய் நின்றி விட்டாள்.
சரியாக அது நடந்த இருபதாவது நாள், அதாவது இன்று பேச்சி இறந்தே விட்டார்.
அப்போது எழுதிக்கொடுத்த தன்னின் நிலை?
அவள் சொல்லி முடிக்கவும் ஜானகி விட்டார் ஒரு அறை.
"ம்மா.."
"அந்த பொம்பள என்ன வந்து கேட்டாலும் பண்ணிக் கொடுத்துடுவியா நீ?" ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை அவருக்கு.
கோபம். அப்படி ஒரு கோபம் ஜானகிக்கு.
"இருங்க.. நீங்க என்ன பேசறீங்க. எனக்கு ஒன்னுமே புரியல.. பேய் பிசாசுனு ஏதேதோ சொல்லிட்டு.. இந்த காலத்துல இதுயெல்லாம் யார் நம்புரா? சுத்த பைத்தியக்காரத் தனம்" என்று சக்தி பொறிய,
"யார் தம்பி இல்லேனு சொன்னா? எல்லாம் இருக்கத் தான் செய்யும். சாமினு ஒன்னு ஒருக்கறத நம்பி நானே கையெடுத்துக் கும்படறீங்க. அப்போ அதுக்கு எதிர் வினையாற்ற ஒரு சக்தி இருக்குமே. அந்த மாதிரி தான் இதுவும்.
அந்த அம்மா எப்பவோ செத்திருக்க வேண்டியது.. இத்தன நாள் அந்த பிள்ள அவங்கள விட்டு வெச்சதே பெரிசு, சிவாயநம" என்று நாராயணன் சொல்லிக் கொண்டிருக்க, அங்கு வந்திருந்தான் முரளி.
முகத்தில் கீரலும் உடை கசங்கி மூச்சு வாங்க வந்து நின்றவனை பார்த்த அனைவருக்கும் ஏதும் புரியவில்லை.
"காலேல எதுக்கு பாட்டியோட ஆக்சிஜன் மாஸ்க்க எடுத்துவிட்டீங்க" என்றவனின் கேள்வியால் அதிர்ந்து விட்டார் ஜானகி.
"என்ன.. என்ன உளறுர" என்றார் உடனே.
ஆனால் அவன் பொதுவில் கேட்ட கேள்விக்கு அவரின் முந்திக்கொண்டு வந்த பதிலால் சக்தியின் புருவங்கள் உயர, நாராயணன் அதிர, சந்துருவிற்கும் ரம்யாவிற்கும் தலை சுற்றியது.
"என்ன பண்ணிணே ஜானகி" என்று கிட்டத்தட்ட உறுமினார் நாராயணன்.
'ஒரு உயிரை வாங்கும் அளவிற்கு தன் மனைவி அந்த அளவிற்கா இறங்கிவிட்டாள்' என்ற நினைப்பு அவரை கோபப்படுத்தி இருந்தது.
"நா ஒன்னும் உளறுல ஆன்ட்டி.. நீங்க தான் மாஸ்க் எடுத்துவிட்டுட்டு அப்படியே போய்ட்டிங்க. எங்க பாட்டிய எனக்கு பிடிக்காது தான் ஆனா கண்ணு முன்ன அவங்களுக்கு நீங்க செஞ்சத கேட்காம எப்படி என்னால இருக்க முடியும்? காலேல படாத பாடு பட்டு அவங்களுக்கு திரும்ப ப்ரீதிங் சரி பண்ணா, இப்போ அவங்க இல்லாமையே போய்டாங்க. அதுக்கு நீங்க தான காரணம். போலீஸ்ல சொன்ன உங்களத் தான் உள்ள வைப்பாங்க"
"தம்பி பார்த்து பேசனும். நீ பார்த்தியா இல்லை என்னாவது இட்டுக் கட்டு பேசுறீயா? யாருக்கு தெரியும்." என்ற சக்தியை திரும்பிப் பார்த்தவன்,
"என்ன நீங்க நம்ப வேண்டாம். உங்க பொண்ணும் தான் கூட இருந்தா! அவளையே கேளுங்க" என்றான் ஸ்பூர்த்தியை கை காட்டியபடி.
"என்ன சின்ன குழந்தைக்கு சொல்லிக் கொடுத்து சொல்ல வைக்கறியா?" என்று அதற்கும் அவன் எகிறினான்.
"உங்க பொண்ணு.. நீங்களே கேளுங்க"
"என்ன முரளி?" - ரம்யா
"அக்கா.. ஆன்ட்டி பண்ணது தப்பு க்கா.. ஏன் அப்படி பண்ணாங்கனு தானே கேட்கறேன். ஒரு வேள அப்போவே பாட்டி இறந்திருந்தா?"
"இந்த உலகத்துலையே சந்தோசப் படுற முதல் ஆளு நான் தான்!" என்று வந்து நின்றவரைப் பார்த்து அதிர்ந்தார் நாராயணன்.
"சதாசிவம்" என்றார் தன்னை மறந்து.
"தம்பி.." என்று அவரிடம் சென்ற ஜானகி,
"எனக்கு வேற வழி தெரியலப் அப்பு. இதேன் கடைசி வாய்ப்பு மாதிரியே தோனவும் அப்படி பண்ணிட்டேன் ய்யா" என்றார் கணவனிடம் சொல்வதற்கு பதிலாக சதாசிவத்திடம்.
"என்ன தான் நடக்குது இங்க?" - சக்தி
"நியாயமான ஒரு தண்டனை!" என்றார் சதாசிவம் சக்தியிடம்.
"எது.. எங்க பாட்டிய சாகடிக்கறது தான் நியாயமான தண்டனையா?"
"உங்க பாட்டி மட்டுமில்ல இன்னும் தண்டனை வாங்க வேண்டியவங்க இருங்காங்க தம்பி" என்றார் சர்வசாதாரணமாக.
"பைத்தியமா சார் நீங்க? இவங்க பண்ணதே ஆபென்ஸ். இப்போ நீங்க என்னனென்மோ சொல்லிட்டு இருக்கீங்க? முதல்ல வெளிய போங்க" என்று சக்தி கத்த,
"இருங்க.. எதுக்காக இது எல்லாத்தையும் பண்ணுறீங்கனு சொல்லிட்டு போங்க" என்றான் சந்ரு இப்போது சரியாக.
ரம்யா அவரையே பார்த்திருக்க,
"என்ன ரம்யா உனக்குத் தெரியாததா?" என்றார் அவளைப் பார்த்து.
அவள் மீண்டும் சக்தியிடம் ஒன்ற, சக்தி டேபிள் மீது வைத்திருந்த பேப்பரை (ஸ்பூர்த்தி கொடுத்த பேப்பர்) எடுத்தவர், "உனக்குத் தெரிஞ்சே இப்படி பண்ணலாமா நீ? உங்க அக்கா சங்கடபட மாட்டாளா?" என்றார் வருத்தம் போல்.
அவர் பேசப் பேச இவள் சக்தியின் கைகளை இறுக்கிக்கொண்டே செல்ல, அவனுக்கு என்னவோ போல் ஆனாது.
"நீங்க இங்க என்ன பண்ணுறீங்க? ஜானகிய வெச்சு ஏதுவும் பண்ணக் கூடாதுனு உங்க கிட்ட நா ஏற்கனவே சொல்லியிருந்தேனே? இப்போ திரும்ப வந்து என்ன இது எல்லாம்?" என்றார் நாராயணன்.
யாருக்கும் எதுவும் புரியவில்லை அந்த மூவரை தவிர்ந்து.
தெரியாமல் எதுவும் சொல்ல முடியாது தவித்துக் கொண்டிருந்தான் சக்தி உடன் முரளியும் சந்ருவும்.
"இப்போ என்ன தான் இங்க நடக்குதுனு சொல்லப் போறீங்களா இல்ல நானே போலீஸ்'க்கு போகவா" என்ற கத்திய முரளியைப் பார்த்த சதாசிவம்,
"நியாயமா உங்க பாட்டியும் அம்மாவும் பண்ண செயல்காக நா தான் தம்பி போலீஸ்க்கு போகனும். ஆனா போனாலும் என் வாழ்க்கையோ இல்ல என் மனைவியோ திரும்ப வரப்போறதில்லையே!''
புருவத்தைச் சுருக்கியவாறே, "என்ன சொல்லுறீங்க" என்ற சக்திக்கு பதிலாகக் கிடைத்தது சதாசிவம் உச்சரித்த பெயர்,
"லீலா!"
_வருவாள்