எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

லீலா - 08

Shambhavi

Moderator
பதினான்கு வருடங்கள் முன்பு..

பிறந்து இரண்டே மாதமாக இருந்த மதுமிதாவை அழைத்துக்கொண்டு அந்த காலனி வீட்டில் குடியேறி இருந்தனர், சதாசிவமும் லீலாவும்.

கன்னியாகுமரியைப் பூர்வீகமாக கொண்ட இருவருக்குமே காதல் திருமணம் தான்.‌ மருத்துவனான சதாசிவம் தன்னுடன் பயின்ற ஜூனியர் மாணவியான லீலாவை கல்லூரி காலத்திலேயே மணந்து கொண்டார்.

வீட்டில் எதிர்ப்பு, கையில் காசில்லாத காரணம் மூன்றாம் வருடத்துடன் படிப்பிற்கு முழுக்குப் போட்டிருந்தார், லீலா.

இதில் சற்றும் உடன்பாடில்லாத சதாசிவம், படித்து ஒரு மருத்துவமனையில் வேலையில் அமர்ந்த பின்பு அவள் விட்ட படிப்பை திருப்பவும் கற்ற வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தார். ஆனால் அது நடக்கவே இல்லை.

அதற்கு காரணமும் சதாசிவமே!

திருமணம் முடிந்து ஐந்து வருடங்களுக்குப் பின்பு தான் மதுமிதா பிறந்திருந்தாள். அதுவரை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலையில் இருந்தார், லீலா.

சதாசிவத்தின் மேற்படி படிப்பிற்கான தொகை ஒரு டிரஸ்ட் மூலம் வந்துவிட, வீட்டு தேவைக்கு லீலாவின் சம்பளம் என்று சரியாகவே இருந்தது.

ஆசையாக மருத்துவ பட்டம் பெற விரும்பியவரின் கனவு கறைந்து போனது படிப்படியாக.

இதற்கு இடையே தான் சதாசிவத்திற்கு ஈரோட்டில் இருந்த மருத்துவமனையில் தற்காலிக மெடிக்கல் ஆஃபீஸ்ஸர் வேலை கிடைத்திற்க, லீலாவும் விடுப்பில் இருந்து ஈரோட்டு நிறுவனத்திற்கு மாற்றல் வாங்கி வந்திருந்தார்கள் மதுவுடன்.

குமரன் காலனி, சதாவின் மருத்துவமனைக்கு சற்று அருகிலேயே இருக்க அந்த காலனியின் மூன்றாம் எண் வீட்டில் குடி புகுந்திருந்தனர் அத்தம்பதியினர்.

ஆனால் அதன் பின்பு தான் அவர்கள் வாழ்க்கை மோசமானது.

கைக்குழந்தையை வைத்துக் கொண்டு லீலாவிற்கு அனைத்தும் பெரும் சிரமமாகவே இருந்தது. ஆரம்ப மருத்துவம் தெரிந்திருந்ததால் சாதாரணமாக மதுவை லீலாவே கவனித்துவிடுவார். மற்ற நேரம் சதா தான் கையிலேயே வைத்துக் கொண்டு இருப்பது.

அந்த காலனிக்கு வந்த புதிதில் யாருடனும் பேச்சு இருந்ததில்லை லீலாவிற்கு. மெல்ல மெல்ல ஜானகியின் பழக்கம் ஏற்பட்டது ரம்யாவின் காரணமாக.

பதிமூன்று வயது பிள்ளையவள்
தனது ஏழு வயது தம்பியான சந்ருவுடனும் ஆறு வயது நிரஞ்சனுடன் அந்த காலனி பூங்காவில் விளையாடுவதை அவள் வீட்டிலிருந்தே பார்த்து ரசிப்பார் லீலா.

தம்பி, அண்ணனுடன் வளர்ந்த அவருக்கு திருமணத்திற்கு பின்பு அவையெல்லாம் மனதில் நீங்கா வடுவாகிப் போனது அவர்களின் நிராகரிப்பால்.

அவர் பொழுதே மதுவாகி போய்விட, சில நேரங்களில் பிள்ளையின் திடீர் அழுகை, சிணுங்களுக்கு காரணம் தெரியாது முழிக்கும் சமயம் உதவ வந்து பழக்கமாகிப் போனார் ஜானகி.

மதுவை குளிப்பாட்டி, எப்படி சாதம் ஊட்டுவது என்று தொடங்கி அனைத்திலும் ஜானகியே லீலாவிற்கு உதவியாக இருக்க, சதாசிவத்திற்கு அவரின் உதவியை நினைத்து மனது நிறைந்த உணர்வு.

ஆதரவற்று இருந்தவர்களுக்குத் தேடி வந்து உதவி செய்பவர்களிடம் ஏற்படும் ஒரு நன்றி உணர்வே அவருக்கு.

பெரும்பாலும் லீலாவின் நாட்கள் வீட்டிலேயே தான் கழிந்தன. ஜானகியுடன் பேசுவதைத் தவிர்த்து வேறு பொழுபோக்கில்லை அவருக்கு.

அந்த சமயம் தான் ராதிகாவின் தந்தையும் காலமாகியிருக்க, பேச்சி காரைக்குடியிலேயே இருந்துவிட்டார்.

அவருடன் ராதிகாவும் அவரின் மூன்றாவது பிள்ளையின் பேரு காலத்திற்கென்று சென்றவருக்கு அன்னை வீடே கதி என்றானது.

அங்கு பெயரன்களைக் கவனிக்க சகுந்தலா இருந்துவிட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் சென்றது ஒரு வருட காலம்.

மதுவிற்கு ஓராண்டு நிறைவு பெற்றிருந்த சமயம் தான் ஈரோட்டிற்கு வந்தார்கள், பேச்சியும் ராதிகாவும் உடன் பதினோரு மாத குழந்தையான பூஜாவுடன்.

ஜானகி தான் பேச்சிக்கு சற்று ஆறுதல் அங்கு. அதுவும் போக ராதிகாவிற்கு ஜானகியிடம் சற்று ஒற்றுதல் அதிகம். அதற்கு அந்த ஒரு வருட காலம் இடை வேளை விட்டிருக்க, மீண்டும் புதுப்பிக்கும் எண்ணத்துடன் இருந்தனர் இருவரும்.

இதுவெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பக்கத்து வீட்டில் இருந்த லீலாவிடம் தான் இருவருக்கும் கவனம் சென்றது. அதற்கு முக்கிய காரணம் அவரின் அழகு!

சாதாரண அழகு தான். இத்தனைக்கு ஆஹா ஓஹோ என்றால்லாம் இருக்க மாட்டார் லீலா. மீதமான கோதுமை நிறத்தில் முகத்தில் சற்று பருக்கலின் தடத்துடன் வடிவான முகம் அவருக்கு. அதுவே அத்தனை அழகோவியமாக இருக்கும்.

அந்த பருவழகி தான் சதாசிவத்திற்கு உயிரானவள்.

ராதிகா கூட எதார்த்தமாக இருந்தாலும், பேச்சிக்கு அப்படி இருக்கவில்லை காரணம் ஜானகி சதாசர்வ காலமும் மதுவை தூக்கிக்கொண்டு இருப்பதும் லீலாவுடனே பேசுவதும்!

'தனக்கு மட்டும்' என்ற நிலைபாடு குடும்பத்தில் உறவில் மட்டும் அல்ல இதுபோன்ற பொதுவில் கூட நடைபெறும்.

அதாவது, தன்னிடம் மட்டும் தான் ஜானகி பேச வேண்டும். தங்களிடம் தான் அவரின் பாச உறவை மீட்ட வேண்டும். தன்னின் பெயர்த்தியைத் தான் அவர் தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் பேச்சிக்கு.

அது ஜானகிக்குமே புரிந்திருந்தது. ஆனால் சொன்னால் பேச்சி புரிந்து கொள்ளவோ ஒற்றுக்கொள்ளவோ மாட்டார் தானே!

ஒவ்வொரு முறையும் பேச்சியின் வீட்டைத் தாண்டி லீலாவின் வீட்டிற்கு அவர் சொல்லும் போது எல்லாம் தேவையே இல்லாத பேச்சும் அதை அவர் புரிந்து சற்று நிமிடம் பேசிய பின்னர் லீலாவின் வீட்டிற்கு சென்றால் கூட அது குத்தமாகவே பட்டது பேச்சிக்கு.

இதுவே தொடர்கதையாக மாறிவிட, லீலாவிற்கு தன் அண்டை வீட்டினரின் எண்ணம் புரிய பேச்சியுடன் பழக ஆரம்பித்திருந்தாள்.

அவள் செய்த மிகப்பெரும் தவறே அதுதான்.

நாள் போக்கி ராதிகாவும் அவளின் பேச்சிற்கு பழகிவிட, பேச்சிக்கு அது பிடிக்கவில்லை.
கோபியுடன் எதர்த்தமாக 'அண்ணா' என்ற பேச்சைக் கூட பேச்சி ரசிக்கவில்லை.

"ராதிகா.. இந்தாங்க இன்னிக்கு எங்க ஊரு ஸ்பேஷல் முந்திரி கொத்து பண்ணேன்.. போன தடவ பண்ணப்போவ அண்ணா இன்னும் ரெண்டு கேட்டாரா.. அதான் நிறையவே எடுத்துட்டு வந்தேன்" என்று விகல்பம் இல்லாது சொன்னவளின் பேச்சு ராதிகாவை கவர்ந்தாலும் பேச்சிக்கு அசூசையைத் தான் தந்தது.

"உன் புருசனுக்குத் தராம இங்க எடுத்துட்டு வந்துட்ட?" என்றார் வெடுக்கென்று.

"அவர் நிறையா இந்த மாதிரி எண்ணெ பதார்த்தம் சாப்பிட மாட்டார் பேச்சியம்மா.. அவர் வந்ததும் ரெண்டு போட்டு கொடுக்கலாம்னு விட்டுட்டேன்" என்றாள் சிரித்த முகமாக.

இதேபோல் பல. அவரின் வார்த்தை பிரையோகம் முதலில் பிடிபடவில்லை தான். போகப் போக அவரின் பேச்சின் உள்ளர்த்தம் புரிந்ததும், மனதுடன் உடலும் எரிந்துவிட்டது லீலாவிற்கு.

பேச்சையும் போக்கையும் படிப்படியாக குறைக்க ஆரம்பித்திருந்தாள். ஆனால் ஒன்றரை வயது மதுவிற்கு இது எல்லாம் புரியுமா? கால் முளைத்த குட்டியோ ஓடி ஓடி போய் விடும் கோபியின் வீட்டிற்கு.

பூஜாவும் அவளும் செய்யும் அலும்புகளை ரசிக்க நேரம் இருக்காது, ராதிகவிற்கும் கோபிக்கு.

கொஞ்சி தீர்ப்பர் பிள்ளைகளை. அப்படி இருந்த ராதிகாவையே பின்னாளில் மாற்றிய பெரும் பெருமை பேச்சியையே சாரும்.


_வருவாள் 👣
 
Top