எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

லீலா - 13

Shambhavi

Moderator
லீலாவை உள்ளே அழைத்த வந்த சதாசிவத்திற்கு இன்னமும் கோபம் இருக்கத் தான் செய்தது. சுவரை ஒட்டி போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து வேக மூச்சுக்களை எடுத்துவிட ஆரம்பித்தவர் தன்னை ஒரு நிலைக்கு கொண்டுவர எண்ணினார்.

வியர்வை குப்பென்று பூத்திருக்க, மின்விசிறியின் அளவு போதவில்லை போலும். எழுந்து பின்பக்கமாக சென்றார்.

செல்லும் சதாவின் பின்னேயே தண்ணீர் நிறைந்து செம்புடன் லீலாவும் செல்ல, சரியாக அவர்களைப் பார்த்தவாறே வெளியே வந்தான் ரகு.

நடுவில் போடபட்டிருந்த மரக்கிளை தடுப்பில் கைவைத்து நின்றிருந்த சதாசிவம் அவனை கூர்பார்வை பார்த்திருக்க, தயங்கி மெல்ல பேச்சை ஆரம்பித்திருந்தான் அவன்.

"அது.. ஸார்.. அவங்க இப்படி பேசுவாங்கனு நா நினைக்கல.. சிஸ்டர் கிட்ட நா இதுவரை பேசினது கூட இல்ல ஸார். எனக்கும் இப்போ மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு. மறந்தும் நா யாரையும் தப்பான கண்ணோட்டத்தில பார்க்கற டைப் இல்ல.. ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ. ஸாரி சிஸ்டர்" என்றான் சதாசிவத்தை மட்டும் பார்த்தவாறு.

"நீங்க சிஸ்டர்னு கூப்பிட்டதுலையே தெரியுது மிஸ்டர்." அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் திரும்ப உள்ளே சென்றுவிட்டான் சதா.

லீலாவிற்கு தான் இது ஒன்றும் புரியாது நின்றிருக்க, சரியாக அங்கு உச்ச ஸ்துதியில் கேட்டது சகுந்தலாவின் குரல்.

"நீங்க அடிக்கற குத்துக்கு எம் மவனோட பெயர் தான் கெடனுமா? அடங்கி வீட்டோட கிடக்க துப்பில்லாம ஊர் வம்பெல்லாம் வாங்கிட்டு இப்போ என் மவன் தான இங்க தல குனிஞ்சு நிக்கனும்‌… இன்னிக்கு அவேன் வரட்டும் ரெண்டுல ஒன்னு பார்க்காம நா விடுறதா இல்லை" என்றவர் சப்தம் இடியாய் கேட்டது.

"லீலா" என்ற சதாவின் குரல் கலைக்க உள்ளே சென்றுவிட்டார்.

செல்லும் அவரையே இனம்புரியா பார்வையோடு பார்த்து நின்றிருந்தான் ரகு.

"மதுக்கு என்ன இப்படி ஃபீவர் அடிக்குது.. என்ன பார்த்த நீ" என்று லீலாவை கடிந்துக்கொண்டே மகளை அவர் கவனிக்க,

"நா சிரப் கொடுத்துட்டேன் சிவா.. ரச சாதம் கொடுத்து தூங்க வைக்க போனப்பதான் அவங்க வந்தாங்க.. தூங்கீனா சரியாகிடும்.." என்றவர் மகளின் படுக்கையைத் தயார் செய்ய, எங்க மது தூங்கினாள்.

அழுது, உண்ட உணவை வெளியேத்தி இருவரையும் ஒருபாடு படுத்திவிட்டே நித்திரைக்குச் சென்றால் அவள்.

அதற்கே ஒரு போர்கள பூமிப் போல் காட்சி தந்தது அவர்களின் படுக்கையறை.

அக்கடா என்று இருவரும் உட்காரும் போது தான் கோபியின் கோபக் குரலும் ராதிகாவின் கத்தலும் கேட்க, லீலா படக்கென்று எழுந்த ஜன்னலின் புறம் சென்றார்.

"அறிவே இல்லையாடி உனக்கு" என்ற அந்த ஜன்னலை சதாசிவம் அரைத்து சாத்த, அந்த சப்தம் அங்கு சண்டையிட்டுக் கொண்டிருந்த கோபிக்கு மேலும் தூபம் போட, ஆத்திரம் பொங்க விட்டார் ஒரு அறை ராதிகாவிற்கு!

சுருண்டு கீழே அவர் விழ, லேசான அடி அவர் முன் நெற்றியில். அதைப் பெரிது படுத்தாமல்,

"மன்னிச்சிடுங்க.. ஏதோ புத்திக் கெட்டுப் போய் அப்படி எல்லாம் பண்ணிட்டேன்.. மன்னிச்சிடுங்க" என்றவர் கதற, அது கோபியின் காதில் விழவே இல்லை.

"முதல்ல உன் பெட்டி படுக்கைய கட்டி உங்க அம்மா வீட்டுக்கே போ" என்று சகுந்தலாவும் பேச, அங்கேயே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தார் ராதிகா.

நிரஞ்சன், முரளி, பூஜா என்று குழந்தைகளும் 'ஏன்' என்று தெரியாமலேயே தாயைக் கட்டிக்கொண்டு அழ, கோபம் மூண்ட கோபிக்கு அவர்களின் நிலை சற்று அசைத்துத் தான் பார்த்தது.

இருந்தும் அங்கு அவரும் அவரின் தன்மானமும் ஏன் அவரின் பின்பமும் கூட மனைவி உடைத்து எறிந்துவிட்ட கோபம் அந்த கண்ணீரால் கூட அணைக்க முடியவில்லை!

அப்படியே அவர் விட்டு சென்றுவிட, சகுந்தலா தன்னின் வேலையை கையில் எடுத்தார். கோபியை விட பன்மடங்கு அவரின் அத்தனை நாள் ஆத்திரத்தை வார்த்தை கொண்டு அவர் கொட்ட, அது ராதிகாவின் மனநிலையை முற்றிலும் மாற்றி அமைத்தது என்பதே உண்மை.

உண்மை புரிந்தாலும் தான் பண்ணியது தவறு என்று உரைத்தாலும் இந்த மாய மனமானது சட்டென்று ஒற்றுக்கொள்ளுமா?

நேரங்கள் சென்றதுதான் ஆனால் ராதிகாவின் நிலையில் மாற்றம் இல்லை. அழுது அழுது குழந்தைகள் உறங்கியிருக்க, இனி தன்னின் நிலை? என்று கேள்வி கொக்கியிடவே பேச்சியிடம் சொல்ல வேண்டியா கட்டாயமும் அங்கு வந்து நிற்க, முகத்தைத் துடைத்துக்கொண்டு பூஜாவுடன் பேச்சியிடம் பேச சென்றார் ராதிகா.

அந்த சமயங்களில் எல்லோரிடமும் தொலைபேசி இருக்கவில்லை. எங்கேனும் ஒரு இடத்தில் ஒரு ரூபாய் கொண்டு பேசிக்கொள்ளும் வசதியுடனான பி.சி.ஓ பூத்கள் இருக்கும். ராதிகாவும் அங்குதான் வெக்கு வெக்கு என்று நடந்து சென்றார்.

இரவு எட்டை கடந்த நிலையில் பூஜா மெல்லிய சிணுங்களுடன் பசிக்கு அழ தொடங்க, பூத்தும் வந்திருந்தது. அழும் பிள்ளைய பொருட்படுத்தாமல் அன்னைக்கு அழைத்தார் ராதிகா.

விசும்பலுடன் மகளின் குரல் கேட்டவுடனே அங்கு அவருக்கு தவிப்பாய் இருக்க, பூஜாவின் அழுகை பேச்சியை உலுக்கியிருந்தது.

"த்தா.. என்னாச்சு.. என்னாத்துக்கு அழுறவ"

"அம்மா.. அந்த மனுசே என்னைய அடிச்சு வீட்ட விட்ட போக சொல்லிட்டாரு..‌ எங்கூட வாழவே பிடிக்கலையாம் ம்மா‌‌.." என்று அடிவயிற்றில் இருந்து வந்த கேவலுடன் அவர் கூற, அங்கு பேச்சியோ நெஞ்ச பிடித்தபடி, "என்னடி யம்மா சொல்லுத" என்ற அதிர்ச்சி மறையாது அவர் வினவ,

"லீலா.. லீலா வீட்டுக்காரே என்னை ரொம்ப பேசிட்டான். நா என்ன ஏதுனு கேட்க போக, அந்த ஆளு என்னைய பேசினது மட்டுமில்லாம ஓ மருமவனையும் பேசிட்டான். அது என் மாமியாரும் இருக்கபோய் ஒன்னுக் ரெண்டா அவர் கிட்ட சொல்ல.. அவரு என்னைய நம்ம வீட்டுக்கே போவ சொல்லிட்டாரு ம்மா.." என்று தோம்பிய மகளை நினைக்காது, லீலாவின் மீது கடுங்கோபம் வந்தது பேச்சிக்கு.

"ஓஓ‌‌.. அந்தளவுக்கு வந்துட்டாகளோ! என் மகளை மருமவனையும் பேசுததுக்கு அவ ஆருடீ.. சிறுக்கி நா வந்தததேன் ஆகும்.. ஏத்தா கண்ண துடச்சிட்டு வூட்டுக்கு போ… காலேல நா வந்து அவ சங்க அறுக்கறேன்.." என்று ஆத்திரம் பொங்க பேசிய பேச்சியின்‌ பேச்சு உண்மையானது தான் பரிதாபம்!

இங்கு மது நல்ல உறக்கத்தில் இருக்க, அவள் விடும் மூச்சின் ஊடே 'கர்ர்' என்ற சப்தமும் வந்து அவள் நெஞ்சு சளியின் அளவை சொல்ல, மெல்ல திரும்பி லீலாவை முறைத்தார் சதாசிவம்.

"சளி நல்ல கட்டியிருக்கும் போல.. முதல்லையே சொல்ல தான் என்னவாம் உனக்கு" என்று மகளின் தலையை வருடியபடி அவர் லீலாவை கேட்க,

"முதல்லையே சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்களாம்? லீவ் போட்டு வந்திருப்பீங்களா? இல்ல மாத்திரைய கொடுத்துட்டு திரும்ப டியூட்டிக்கி போய் இருப்பீங்களா? வீட்டோட நீங்க இருந்து எத்தன நாள் ஆகுது தெரியுமா? இதுல வந்து ஒன்னு ஒன்னத்துக்கு நா நிக்கனும்னு நீங்க எதிர்ப்பார்க்கறீங்க"

"ம்ப்ச்.. மதுவோட ஃபீவர் சொல்லுறதுக்கு கூட நா லீவ்ல இருக்கனுமா"

"எதுக்கு.. நீங்க லீவ் போட்டு ஒரு நாள் முழுக்க பாப்புவோட இருந்து அடுத்த நாள் அவ அழுது இப்படி இழுத்துச் செச்சுக்கவா.. ஒருநாள் பட்டதுக்கே அத்தன கஷ்டப்படுறா.. நீங்க அவளுக்காக அப்போ அப்போ லீவ் போட்டு வந்த காச்சல போக விடாம பண்ணிடாதீங்க" என்று சற்று சப்தமாகவே கத்திவிட்டு சென்றார் லீலா.

விசயம் புரிந்தது சதாசிவத்திற்கு. தன் செயலை நினைத்து லேசாக தலையில் தட்டியபடி அடுப்படியை நோக்கிச் சென்றார்.

"லீலு" என்று மெல்லமாக அழைத்தவாறு அவர் செல்ல,

"ஒன்னும் தேவ இல்லை.. லீலு.. கூலுனு சொல்லிட்டு" என்று பட்டென்று டம்ளரை வைக்க,

"அடியேய் மது எழும்பப் போறா" என்று வேகமாக அதனை சதா எடுக்க,

"இதா.. எப்பப்பார் பொண்ணக் கட்டிக்கிட்டே அழுங்க.. என்னைய எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாது தானே"

"இப்போ எதுக்கு இந்த ஊடல்?"

"ஊடலாம்.. ஊடல்.. எனக்கு இந்த ஊரே பிடிக்க சிவா.. எப்படி எல்லாம் பேசுறாங்க.. வேற எங்காச்சு கூட்டிட்டு போங்களேன்" என்று இறைஞ்சுதலாய் லீலா கேட்க,
கோபம் வந்தாலும் சற்று பொறுமையாகவே கையாண்டார் சதா.

"லீலா.. யாருக்கோ பயந்து அவங்க பேசுறாங்களேனு நினைச்சிட்டு இருந்தா நம்ம மைண்ட் தான் பாதிக்கும். இங்க இருக்கறதில்ல என்ன பிரச்சனை சொல்லு.. பேசுறாவங்க பேசிட்டு தான் இருப்பாங்க. உன் மேலையோ இல்ல நம்ம மேலையோ ஒரு தப்பும் இல்லாத பட்சத்தில் நாம ஏன் இங்கிருந்து போகனுப் சொல்லு? தப்பே பண்ணாம தப்பு செஞ்சதா நாம காட்டனுமா?"

"அதுக்கில்லை.. இவங்க பேச்சு நடவடிக்கை எதுவும் எனக்குச் சரியாவே படல.. நாள பின்ன மதுவ என்னாவது.."

"அந்த அளவுக்கு போக மாட்டாங்க.. இன்னிக்கு நா கொடுத்த கொடுப்பு போதும் அவங்க எதுவும் செய்யாம இருக்க. அவங்க பண்ண தப்ப சொல்லிக்காட்டியாச்சு. இதுக்கு மேல பேசினா பார்த்துக்கலாம். விடு"

அந்த 'விடு' அவர் உயிரையே விட காரணமாகிப் போகும் என்று தெரியாமல் சொல்லிவிட்டார்.

மென்மையாய் மனைவியை அணைத்துக்கொண்டு லீலாவை இயல்பாக முற்பட, மது எழுந்துகொண்டாள்.

பின் அவர்களின் பொழுது மதுவால் பின்னப்பட்டது!

இன்று இரவிற்கு மேல் தான் நாராயணனின் குடும்பம் ஈரோடு வந்து சேர்ந்தது. ஜானகி, ரம்யா, சந்ரு மூவரும் மதுவைப் பார்க்கும் ஆர்வத்தில் வீட்டிற்கு வந்ததும் லீலாவின் வீட்டிற்கு செல்ல, சரியாக ராதிகாவின் பார்வையில் அது பட்டது.

போலீஸ், கேஸ் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் பேச்சியிடம் கொட்டிவிட்டு வந்தவருக்கு அக்காட்சி எரிச்சலை மூட்ட, முகத்தைத் திருப்பிக்கொண்டு வீட்டிற்குள் சென்றார்.

கதவைத் தட்டியவுடன் மலர்ந்த முகத்துடன், "வாங்க ஜானகியம்மா" என்று அழைத்த அந்த லீலாவின் முகம் அவர் மனதில் அப்படியே பதிந்து போனது.

சதாசிவத்தின் முகத்திலும் ஒருவித மென்மையும் நிறைவையும் பார்த்தவர் அவர்களின் நலனை விசாரித்துவிட்டு பிள்ளைகளுடன் விரைவில் சென்றுவிட்டார்.

"என்ன போன வேகத்துல திரும்பிட்ட" என்ற நாராயணனுக்கு, ஒரு விரிந்த சிரிப்பைத் தந்தவர்,

"பிள்ளைங்க மொகோம் சந்தோஷமா இருந்துச்சு.. அதான் சுருக்கா வந்துட்டேன்" என்றவர் உள்ளே சென்றுவிட,
நாராயணனின் முகத்திலும் புன்னகை மலர்ந்திருந்தது.

அங்கு, லீலாவின் ஜிமிக்கியில் இருந்த முத்துக்கள் மிகத்‌ தீவிரமாக எண்ணிக்கொண்டிருந்த சதாசிவம், "ஏன் லீலு.. நீ இந்த குட்டி கம்மல் எல்லாம் போடலாமே" என்க, "என் புருஷர்ர்ர் வாங்கித் தரததானே போட முடியும்" என்று நொடிக்க,

"வாங்கிட்டா போச்சு" என்ற உல்லாமசாக சொன்னவரின் முகத்தில் அத்தனை சிரிப்பு.

அவரின் முகத்தையே பார்த்திருந்த லீலாவின் மனதோ அதை அப்படியே படம்பிடித்துக்கொள்ள, ஆசையாய் ஆழ்ந்து சதாவின் முன்நெற்றியில் ஒரு மென் முத்தம் வைத்தார் லீலா!




_வருவாள் 👣
 
Top