Shambhavi
Moderator
போட்டது போட்டபடி காரைக்குடியில் இருந்து கிளம்பியிருந்தார், பேச்சியம்மா.
ஆத்திரம் மூர்க்கத்தனமாய் உருமாறியிருந்தது அவர் பயணப்பட்ட நேரத்தில். அதற்கு தோதாக, காலை எட்டு மணிக்கு ஈரோடு வரவேண்டிய பஸ் நடுவழியில் பழுதேர்ப்பட்டு மதியம் மூன்று மணியளவில் தான் ஈரோட்டை அடைந்திருந்தது.
கோபியின் குடும்பம் நடந்த ரணகளத்தில் கலங்கியிருக்க, மனது சற்று இளகவே குடும்பத்துடன் கோவிலுக்கு செல்ல எண்ணி புறப்பட்டிருந்தனர்.
ராதிகாவிற்கு விருப்பம் இல்லையென்றாலும் கிளம்பியிருந்தார்.
நிறைந்த மனத்துடன் முகமெல்லாம் சாந்தம் சிந்த பட்டுப்புடவையில் தட்டு நிறைய ரவா லட்டை ஏந்தி வந்திருந்த லீலாவை பார்த்து ஜானக்கு ஒரே ஆச்சர்யம்.
“நா கூப்டாலும் ஏ வீட்டுக்கு வரலையினு சொல்லுறவ நீயாவே வந்திருக்க, என்னடியம்மா அதிசயம்” என்றபடி அவளை வரவேற்றார் ஜானகி.
“ஐயா இல்லையா ஜானகி’ம்மா?” என்க,
“ஓ அய்யேன் ஏதோ கோவில் விசயமா போயிருக்காரு. புள்ளங்க வார நேரோம் தான், நீ உட்காரு லீலா” என்றவர்,
“மது எங்க?” என்றார் கேள்வியாய்.
காரணம், யாரை நம்பியும் பிள்ளையை விடமாட்டாள் லீலா. ஒன்று அவளே தூக்கி சுமப்பாள் அல்ல சதாவை உடனிருந்து பார்த்துக்கொள்ள சொல்லுவாள்.
இன்று மதிய நேரத்தில் அவள் மட்டும் தனித்து வந்திருந்தால் அவர் அப்படி கேட்க, “அவர் ஹாஸ்பிடல்’ல ஒரு சின்ன பங்ஷன். அதான் பாப்புவையும் கூட்டிட்டு போயிட்டார். ஐஞ்சு மணிக்கெல்லாம் வந்துருவாங்க ஜானகிம்மா” என்றவள் சிரிப்புடன் தட்டை நீட்டினாள்.
“என்ன விஷேசம்? இனிப்பெல்லாம் வருது”
சன்னமாய் சிரித்தவள், “எங்களுக்கு இன்னிக்கு கல்யாண நாள்” என்றவள் முகம் தான் அத்தனை ப்ரகாஷித்து ஒளிர்ந்தது.
“அடடேய், ஜானகி போய் மொத புள்ளைக்கி கொடுக்க எடுத்துட்டு வா” என்றபடி வந்தார், நாராயணன்.
“ஐயா” என்று எழுந்தவள், அவரிடம் ஆசிவாங்கிக்கொள்ள,
“சிரிச்ச மொகமா எப்பவும் சௌபாக்கியவதியா இரு சாமி” என்றிருந்தார்.
“காலேலையே வரலாம்னு இருந்தேன். கோவில் போயிட்டு வர லேட் ஆகிடுச்சு ஐயா. சந்ருவுக்கு ரவா லட்டு பிடிக்குமேன்னு அத செஞ்சு எடுத்துட்டு வந்தேன்” என்றவள் சற்று தயங்கி,
“நாங்க வேற எடம் மாறலாம்னு இருக்கோம்” என்றாள் பொதுவாய்.
“அதுவும் சரிதேன். நானே சொல்லலாமுட்டு இருந்தேன். நேத்து தம்பி பேசுனது பத்தி பத்மா சொன்னா, அவங்களுக்கு தேவைத் தான்” என்ற ஜானகியை சற்று சங்கடமாகப் பார்த்தாள் லீலா.
“நீ வெசனப்படாத சாமி. ஐயா உன்னிய ஒன்னும் நெனக்கல.” என்க, ஒரு ஆசுவாசம் நிறைந்து கண்கள் பனித்துவிட்டது லீலாவிற்கு.
அவள் கேட்ட பேச்சுக்களின் விளைவாக அவள் உள்மனதில் அப்பியிருந்த தேவையற்ற பல கேள்விகளுக்கான பதிலை சொல்லியிருந்தார், நாராயணன்
“சந்தோஷம் ஐயா” என்றவள் சிறிது நேரம் இருந்து பின் வீட்டிற்கு புறப்பட்டாள் நிறைவான முகத்துடன்.
வந்த நேரம் அவளைத் தேடி வந்திருந்தான் ஒரு குட்டி பையன்.
“ஆன்ட்டி, பொட்டிக்கட அண்ணே உங்களுக்கு போன் வந்துருக்குனு சொன்னாங்க” என்றபடி அவன் ஓடிவிட, வீட்டை பூட்டிக்கொண்டு முன் ரோட்டிற்கு நடந்தாள்.
சதாசிவம் தான் அழைத்திருந்தார். அதை கடைக்காரர் சொல்லி அவளை காத்திருக்க சொல்ல, மீண்டும் தொலைபேசி அடித்தது.
“சிவா?”
“ம்ம், லீலா இங்க ஒரு எமர்ஜென்சி கேஸ். பாப்புவ பிரபா தூக்கிட்டு வருவான். பார்த்துக்கோ, நா வர நைட் ஆகலாம்” என்க,
“சரிங்க. வந்தோன கால் பண்ணி சொல்லவா?”
“இல்ல, அவனே இங்க தான் வருவான். நீ பார்த்துக்கோ” என்றவர் என்ன நினைத்தாரோ,
“கவனமா இரு லீலு. நைட் நா வரலேனா ரம்யா வீட்டுக்கு போ, தனியா இருக்காதம்மா” என்க, லேசாய் சிரித்துவிட்டார் லீலா.
“ஒரு பயமும் இல்ல. நான் இருந்துப்பேன். நீங்க பார்த்து வாங்க” அவள் வைத்துவிட, ஒரு பெருமூச்சு சதாசிவத்திடம்.
அவர் சில மாதங்களுக்கு முன்னர் தான் அவரின் மேற்படிப்பை (நெப்ராலஜி) முடித்து, ப்ராக்டிஸ் நெப்ராலஜிஸ்டாக பணியில் இருக்க, அவ்வப்போது இம்மாதிரியான அவசர கேஸ்கள் வந்தவண்ணம் இருந்தன.
அதையெல்லாம் தேர்ந்து கையாண்டால் தானே அவர் ஒரு சிறந்த மருத்துவர்?
சற்றைக்கெல்லாம் மதுவும் வர, பிள்ளையோடு அவளின் நேரம் சென்றது.
ஆங்கார ரூபிணியாய் ஈரோடு வந்திருந்தார், பேச்சி.
உக்கிரம் அவரை உருத்தெரியாத சிந்தனையாளராய் மாற்றியிருக்க, ஆட்டோவைப் பிடித்து குமரன் காலனி வந்து சேர்ந்திருந்தார்.
மதிய நேரம் காலனியே அமைதியில் ஆழ்ந்திருக்க, லீலா வீட்டுக் கதவு அதிர்ந்தது.
மது அப்போதான் முன்னறையில் உறங்கியிருக்க, எங்கு மகள் விழித்துவிடுவாளோ என்ற பதைப்புடன் விரைந்து கதவைத் திறந்தார், லீலா.
முடியெல்லாம் கலைந்துபோய் ஆத்திரம் முகத்தில் தெறித்தபடி நின்றிருந்த பேச்சி லீலாவின் மேல் தோளை தொட்டுத் தள்ள, தள்ளாடி உள்ளே விழுந்தாள் லீலா.
ஒரு நிமிடம் ஒன்றும் புரியாது அதிர்ந்த லீலா, “பேச்சியம்மா, என்ன ப்ணணுறீங்க?” என்றபடி எழ, லீலாவின் மூடியைப் பிடித்து அரைந்திருந்தார் பேச்சி.
அவர் ஒரு நிலையில் இல்லை. அவர் ஆசை மகளின் வாழ்க்கையை சிதைக்க வந்த சாத்தானாய் லீலாவை அவர் நினைத்திருக்க, அந்த நினைப்பின் அழுத்தமும் அவரின் கீழான எண்ணத்தின் மூல வேரும் அவரை மிருகமாக்கியிருந்தது அக்கணத்தில்.
இடுப்பில் சொருகி வைத்திருந்த மடக்கு கத்தியால் லீலாவின் மேற்புற கை, தோள், வயிற்றுப் பகுதி என்று சரமாரியாக அவர் தாக்க, நிலைக் குலைந்து விழுந்தாள் லீலா.
நொடி நேர தாக்குதல். அறுபதைக் கடந்த பெண்மணியிடம் இருந்த திடக்காத்திரமும் வலுவும் அவளிடம் இல்லை.
அவள் படும் அவஸ்தையை பார்த்தவரின் குரோதக் கண்களில் இன்னுமின்னும் லீலாவை வதைக்கும் ஆத்திரம்.
எங்கு சப்தம் கேட்குமோ என்றெண்ணி லீலாவின் முடியைப் பிடித்து தரதரத்து உள்ளறைக்கு இழுத்து சென்றார் பேச்சி.
சமயலறைக்கும் படுக்கையறைக்கும் இடையில் இருந்த டேபிளை பிடித்த லீலா தன்னை நிலை நிறுத்த போராட, லீலாவின் கையில் விழுந்தது ஒரு வெட்டு.
சமயலறைக்குள் சென்றவர்களின் சப்தம் சற்று அடங்கிய உடன்,
“செத்துத் தொல நாயே.. எம் மவளோட வாழ்க்கைய கெடுக்க வந்த கேடுகெட்ட நாயி நீயி.. என்னோட இருக்கறவுங்க அத்தன பேரையும் பிரிக்க வந்த ****. நல்லா இருப்பியாடி நீயி, நா** போவ.
ஏ மருமவேன் என் தங்கத்த அடிச்சு தள்ளியிருக்கானா அதுக்கு நீயி தானடி காரணோம், *** சிறுக்கி” என்றவர் வார்த்தையின் வரம்பு அதீதமாய் மீற ஆரம்பித்திருந்தது.
அடுக்கி வைத்திருந்த பாத்திரங்களை லீலாவின் மீது விட்டெறிந்தார், பேச்சி.
பாத்திரங்கள் விழும் சப்தத்தில் விழித்த மது அலற ஆரம்பிக்க, “இந்த சனியன் ஏ மவ வூட்டுக்கு வரப் போயிதான எல்லாம்” என்றபடி கையில் இருந்த கத்தியோடு மதுவை நோக்க செல்ல, பேச்சியின் காலைப் பிடித்திருந்தாள் லீலா.
அடிவயிற்றில் பலமான அடி. மாதாந்திர சூழ்ச்சி வந்திருக்க, உதிரத்தோடு பேச்சி தள்ளிவிட்டதில் ஏற்பட்ட காயத்திலும் உதிரம் உதிர்ந்தது.
வலி உயிர் போனாலும் அவர் பெற்ற பிள்ளையை காத்தாகவேண்டிய அவசியத்தில் அவர் காலை பிடித்துக்கொண்டார் லீலா.
“வேண்டாம் பேசியம்மா.. நாங்க இங்கிருந்து போகத் தான் போறோம். பாப்புவ விடுங்க” என்றவள் சிரமத்துடன் கெஞ்ச, ஒரு எத்து விட்டார் லீலாவின் முகத்தில்.
மனிதம் செத்திருந்தது அவரிடம்.
சமையல் அறையில் இருந்து முன்னறை வரை பேச்சியின் காலை விடாத லீலாவை தரதரத்தபடி நடந்து வந்தார்.
கதவு நிலைகள் லீலாவின் வயிற்றில் பட்டு அழுத்தி உயிர் வேதனையில் தவித்தவர் உடம்பில் சத்தே இல்லாத நிலை.
மகளின் அருகே வந்துவிட்ட பேச்சியைத் தடுக்க முடியாதவராய் அதுவரை போராடிய உடம்பில் குஞ்சைக் காக்க வேண்டி வழுபெற, முயன்று தள்ளாடி எழுந்தவள் பேச்சியை ஒரே தள்ளாக தள்ளியிருந்தாள்.
“அவ்வளவுதான் உனக்கு மரியாதை. அசந்த நேரமா என்ன கொல பண்ண வந்துட்ட, ம்ம்? சாதாரண உன்னோட தனிம தான் இப்படி எல்லாம் நீ பேசக் காரணம்னு நெனச்சா, நீ ஒரு மனநோயாளி. உன்னோட வீட்டு பிரச்சனைக்கு என்னைய இழுப்பியா? உன் மருமகன கேட்க துப்பில்லாம என்ன வதைக்க வந்திருக்க, பொம்பளையா நீ எல்லாம், ச்சீ” என்று கத்திய லீலாவின் அடிவயிற்றில் கத்தி நல்ல ஆழமாக இருங்கியிருக்க வேண்டும்.
மகளை கையில் தூக்கியவளாய், “என் சிவா வரட்டும். மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினா தெரியும்” என்றவள் நிற்க முடியாது லேசாய் தள்ளாடினாள்.
கட்டியிருந்த பட்டு சேலைக்கு மேல் அவர் ரத்தம் கசிய நின்றிருக்க, பேச்சிக்கு அதைப் பார்த்து லீலாவின் பேச்சைக் கேட்டு சுயம் ஓரளவிற்கு திரும்பியிருந்தது.
மெல்ல மகள் நேற்று சொன்ன கோர்ட், கேஸ் என்பன அவர் நினைவிற்கு வர, மேலும் தான் சூழலை சிக்கலாக்கிக்கொண்டது போல் தோன்றியது.
லேசாய் அவர் சாத்தான் புகுந்த மனம் தெளிய ஆரம்பித்திருக்க, லீலாவின் நிலை மோசமாக ஆரம்பித்திருந்தது.
_வருவாள்