எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

லீலா - 15

Shambhavi

Moderator
உடலின் தள்ளாட்டம் அப்பட்டமாய் தெரியவும் எங்கு மதுவை கீழே போட்டு விடுவாளோ என்றெண்ணியவளாய் சோபாவில் மதுவை இறங்கிய கையோடு தரையில் சரிந்திருந்தாள், லீலா.

உடல் வேதனை ஒருபுறமிருந்தாலும் பிள்ளையை பேச்சி ஏதாவது செய்துவிடுவாளோ என்ற பயம் நெஞ்சேல்லாம் பரவியிருந்தது லீலாவிடம்.

அநாதரவான பெண்ணாய் வேதனையில் சுருண்டிருந்தவள் நினைப்பெல்லாம் அவள் சிவா தான்.

“சிவா’ம்மா” என்று சொல் நோகாது உச்சரித்தவள் கண்ணீர் உதட்டில் பட்டுக் கரித்தது.

பயமில்லை அவளுக்கு. இருந்தும், ஒரு வெறுமை நெஞ்சைக் கவ்வியது.

நேரம் மெல்ல செல்ல, பேச்சியிடம் அசைவில்லை. மது அழுதழுது உறங்கியிருக்க லீலாவின் வயிற்றிலிருந்து வந்த ரத்தம் இவளருகே குளமாக ஆரம்பித்தது.

கோவிலுக்கு சென்றிருந்த கோபியின் குடும்பம் வந்துவிட, ராதிகா, பிள்ளைகளை இறக்கிவிட்டு அவர் சென்றிருந்தார்.

காரின் சப்தத்தில் நினைவு வந்த பேச்சிக்கு நெஞ்சம் வெளிவந்துவிடும் அளவிற்கு பயம் தொற்றியது.

லீலாவின் நிலை அவரை உறைய வைத்திருக்க, அவர் மனதில் ஓடிய காட்சிகள் அனைத்தும் அவருக்கு உவப்பானதாக இல்லை.

போலீஸ், கோர்ட் என்ற வார்த்தைகளின் தாக்கம் மெல்ல அவரை சூழ, லீலாவின் அருகே சென்றார் பேச்சி.

மூச்சு சீராய் வந்தாலும் அவள் ரத்தப் போக்கு நிற்கவிவ்லை.

வெளியே சென்று உதவிக்கு ஆட்களை கூடப்பிடலாம் என்றால், அது மொத்தமும் அவருக்கு எதிராகத் திரும்பும் என்ற நினைப்பில் அவரே அவளைக் காக்க முனைந்து லீலாவை எழுப்ப ஆரம்பித்தார்.

கன்னத்தைத் தட்டினார், தண்ணீரை ஊற்றிப் பார்த்தார், அவள் பெயரைச் சொல்லி அழைத்தார்... ம்ஹும், ஒன்றிற்கும் அசையவில்லை லீலா.

நேரம் செல்லச் செல்ல பயத்தின் உச்சம் பேச்சியை பேயாய் போட்டு ஆட்ட, பெயரன்களின் சப்தம் அவர் காதை நிறைத்தது.

‘அய்யோ.. அய்யோ’ என்று கூவிய மனதை அடக்க முடியாது, நடுங்க ஆரம்பித்தவர் மனதில் மகள் ராதிகாவின் ஞாபகம்.

“உசிர் இருக்கு இவளுக்கு. ஏ தங்கம் எதாவது பண்ணுவா” என்ற நினைத்துக்கொண்டு லீலாவை ராதிகாவிடம் தூக்கி.. ம்ம் இழுத்துச் செல்லும் எண்ணம் பிறந்தது.

ராதிகாவின் வீட்டிற்கு செல்லலாம் என்றால் கோபி, சகுந்தலா இருக்கப்பார்கள் என்ற எண்ணம் வர, ராதிகாவையே இங்கு அழைத்துவரலாம் என்ற யோசனைப் பிறந்தது.

முன்னறையில் இருந்தவளை மெல்ல இழுத்துக்கொண்டு சமயலறைக்கு சென்றார்.

நடுவில் வலியில் ஈனமாய் கத்திய லீலாவின் குரல் அவருக்கு பாவத்தை தராமல் ‘மயங்கல.. உயிர் இருக்கு’ என்ற நினைப்பை தான் விதைத்தது.

அப்போதே ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். காலத்தின் கோலமும் விதியின் கோரமும் விளையாட ஆரம்பித்திருந்த தருணம்.

வீட்டின் பின்பக்க வழியாக ராதிகாவின் வீட்டை நோட்டமிட்டபடி சென்றவர் பிள்ளைகள் மகளைத் தவிர யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் நுழைய, மாலை விளக்கேற்றி சுவாமி படத்திற்கு கற்பூரம் காட்டியபடி நின்றிருந்தார், ராதிகா‌.

அந்த நேரத்தில் அதுவும் பின்பக்கமாய் தாயை எதிர்பார்க்காத ராதிகா அதிர்ந்துவிட, “என்னம்மா” என்றபடி விரைந்தவர் கையைப் பிடித்துக்கொண்டு லீலாவின் வீட்டு பின்பக்கம் அழைத்து வந்திருந்தார், பேச்சி.

நடந்ததைச் சொல்ல, முகத்தில் ரத்தப்பசையற்று நின்றுவிட்டார் ராதிகா.

கண்முன் அவர் திருமண வாழ்க்கை ஊஞ்சலாடியது என்றால் லீலாவின் நிலை?

பேச்சி சொல்லியதை வைத்து அவர் லீலாவை கொன்றுவிட்டார் என்றே நினைத்து, “நீ பேச்சுக்குத் தான் சொல்லுறேன்னு நெனச்சேன். ஆனா உண்மையா அவள கொன்னுட்டியா ம்மா?” என்று அழுக ஆரம்பித்தார், ராதிகா.

ஐந்து மணிக்கு மது வந்துவிடுவாள் என்றென்ன வந்த ஜானகி இவர்கள் பேச்சைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.

மகளின் அழுகை பேச்சியை உசுப்ப, சுடர்விட்டு எரிந்த கற்பூர தட்டை வாங்கிய கையோடு, “அறிவிருக்க, மொத நீயி உள்ளார வா” என்று ராதிகாவின் கையை பிடித்தவர் இழுக்க, ராதிகா வராது மறுக்க, அந்த தள்ளாட்டத்தில் தட்டு லீலாவின் வீட்டிற்குள் விழுந்த மறு கணத்தில், அம்மா என்ற லீலாவின் வீறிட்ட சப்தத்துடன் வெடித்திருந்தது கேஸ் சிலிண்டர்.

பாத்திரங்களை தள்ளி விடும் போதே கெஸின் நாப் நிறந்து மெல்ல கசிய ஆரம்பித்திருந்த கேஸ், மெல்ல மெல்ல கசிந்து அறையெங்கும் பரவியிருந்தது.

சிலிண்டரில் அடர்த்தியான கேஸ் இல்லையென்றாலும் இருந்த அளவில் நடந்த அசம்பாவிதம் சதாசிவத்தின் வாழ்க்கையை அஸ்தமித்திருந்தது.

“அய்யோ.. அம்மாடி லீலா” என்று ஜானகி நெஞ்சில் அடித்துக்கொண்டு முன்கதவை திறந்து ஓட, ஹாலில் சமயலறை நோக்கி அழுத படி நடந்த மதுவை பார்த்து அதிர்ந்து பிள்ளையைத் தூக்கிக்கொண்டார் அந்த தாய்.

உடலில் நெருப்பு பிடித்து துள்ளியபடி அறையெங்கும் அலைந்த லீலாவைப் பார்த்து ஹாலில் இருந்த ஜானகியும் மதுவும் கத்திக் கதற, முகத்தில் அடித்த அனலில் விழுந்திருந்த மகளை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றார் பேச்சி.

புகை பண்மடங்காக பெறுகி வீட்டின் மேற்புறத்தை அடையும் நேரம் சதாசிவம் வந்துவிட்டார்.

அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஜானகி, மதுவை மீட்டு லீலாவின் மேல் தண்ணீரை ஊற்ற முற்படும் நேரத்தில்,

தன் ஆசை காதலியை,
உயிரான மனைவியின் உயிர் போகும் அலறல் குரலைக் கேட்டு ஓடி வந்தவர் பார்த்து, எரியும் அவள் உடலைத் தான்.

காலையில் ஆசை ஆசையாய் அவள் நிறத்திற்கு தோதான பச்சை வண்ண கல்யாண புடவையைக் கட்டி இருந்தவள் இப்போது கரிக்கட்டை ஆகியிருந்தாள், லீலா சதாசிவம்.

முற்றும் பேதலித்து போயிருந்தார் சதாசிவம்.

ஒன்றும் அவருக்கு தெரியவில்லை. ஏன் என்று புரியவில்லை.

அவர் லீலு, வாய் நிறைய,
மனது பாசத்தில் துள்ள,
கண்கள் காதல் சொல்லி அழைக்கும் பெயருக்கு சொந்தக்காரி அவரை விட்டு துச்ச வஞ்சத்தால் மண்டிருந்தாள்.

அம்மா என்று மார்முட்டும் பிள்ளைக்கு இனி அம்மா இல்லை. ‘புவா தா’ என்று அன்போடு கேட்டு நிற்கும் மகளுக்கு இனி உணவிட அவள் தாய் இல்லை.

‘மதுக்குட்டி’ என்று நெஞ்சோடு அணைத்து உருகும் தாயவள் இனி அவள் மகளை நிழலாய் கூட அணைக்க முடியாது பரிதவிப்பாய் சென்றுவிட்டாள். மொத்தமாய் சென்றேவிட்டாள் இப்பூவுலகத்தை விட்டு.

லீலா என்றொரு அழகிய சகாப்தத்தின் முடிவு அவள் திருமண தினத்தன்று முடிந்திருந்தது.

“சத்த மின்னுக்கதேன் நல்லா இருன்னு சொன்னேனே சாமி” என்று அழுத நாராயணனுக்கு கூட அத்தனை பெருந்துயரம்.

அவள் உடலை விட்டு பார்வையை எடுக்காதவராய் அமர்ந்துவிட்ட சதாசிவத்தின் நிலை, அய்யோ வார்த்தைக்கொண்டு வடித்திட முடியாது.

மகளை மறந்தான், அவனை மறந்தான், சுற்றத்தை மறந்தான், எல்லாம் மறந்தவன் முன்பு அவன் லீலா மட்டும் நிறைந்திருந்தாள்.

போலீஸ் வந்தனர், விசாரித்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வீட்டை பார்வையிட்டு அவர்கள் வேலையை முடித்து கிளம்பியிருந்தனர்.

யார் இருக்கிறார் சதாசிவத்திற்கு.
காதல் மட்டும் போதும் என்று கன்னியாகுமரியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நாதியும் இருக்கவில்லை.

அதை வைத்து தானே இத்தனை ஆட்டமும்.

ஆனால், அவன் நண்பர்கள் வந்தார்கள். அவன் படித்த படிப்பு கொடுத்த நல்மனிதர்கள் அவனை சூழ்ந்தார்கள்.

லீலாவிற்கான கடைசி காரியங்கள் நடந்தேறின. எரிந்துபோன உடலை என்ன செய்?

90% அவள் உடம்பில் தீக்காயங்கள் இருந்தனவாம். கேட்டவுடன் உயிர்போக கதறியிருந்தான், அவள் அன்பு கணவன்.

ஒத்த சொட்டு குற்றவுணர்வில்லாது மகளை அறையில் அமுக்கியிருந்தார், பேச்சி.

இருவரின் முகத்திலும் லேசான காயங்கள். நெருப்பு பிடித்த வேகத்தில் விரைந்து பரவியிருக்க அதன் தாக்கம் இவர்கள் முகத்தில் அடித்திருந்தது.

லீலா இனி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அழுத ராதிகாவைப் பார்க்க பார்க்க பேச்சிக்கு பயமும் கோபமும் போட்டியிட்டது‌.

முதல், இதை அவரே எதிர்பார்த்திருக்கவில்லை.

‘அவளை காயப்படுத்திவிட்டு காப்பற்ற தானே நினைத்தேன்’ என்றொரு பாசாங்கு அவரிடம்.

அப்படியே அவர் அதை மறைத்துவிட, ராதிகாவின் பயமும் அவளை வாய் திறக்க வைக்கவில்லை.

ஆனால், ஜானகி?

அவரை மறந்தார்களே!

சதாவின் நிலையுணர்ந்து மதுவை தானே வளர்ந்தார் ஜானகி.

அவர் உள்ளத்தில் எரிந்த அந்த நெருப்பிற்கு நிச்சயம் ஒருநாள் பேச்சி பதில் சொல்லியே ஆகவேண்டும்.

நாராயணிடம் அவர் பார்த்ததை கேட்டதை பகிர, ரத்தம் கொதித்தது அவருக்கு.

அதைவிட, மெல்ல ஒரு நிலைக்கு ஆலோசனை மூலம் மீண்டு வந்துகெண்டிருந்த சதாவின் கோபத்தை எதிர்கொண்டார் பேச்சி.

நாராயணன் தடுக்க, கோபி நடுவில் வர யாரையும் மதியாது பேச்சியை சவாரி குச்சியால் அடி வெளுத்து விட்டான்.

அதுவும் அவர் லீலா வீட்டிற்கு அருகில் நின்றிருந்தார் என்று ஜானகியின் கடைசி வாக்கியத்தைக் கேட்ட போது.

அரைகுறையாக கேட்டதற்கு இப்படி. லீலாவின் மரணம் பேச்சியால் தான் என்பதை அறியும் போது அவனின் எதிர்வினை எப்படி இருக்கும்?


_வருவாள் 👣
 
Top