Shambhavi
Moderator
வரிசையாய் யார் மேல் எல்லாம் தவறு, யாரெல்லாம் பாவம் என்று விரல் சுட்டி நாம் சொல்லிவிட முனைந்தாலும் இதில் எதுவுமே தெரியாது பாதிக்கப்பட்ட நபர் என்றால் அது, கோபிநாத் தான்.
‘கரிசனையாய் லீலாவிடம் பேசிய பாவத்திற்கு மாமியாரும் மனைவியும் அந்த பெண்ணை என்ன செய்திருக்கின்றனர்’ என்ற எண்ணமே அவரை உள்ளுக்குள் வெம்ப வைத்தது.
ஆண்மகன் வாழ்வில் இதுவெல்லாம் சகஜம் என்று பெண்களிடம் பேசும்/ பழகும் நபர்கள் சர்வ சாதாரணமாக சொன்னாலும், ஒரு தூய ஆத்மா சக மனிதியாய், பெண்ணாய் அவளை நடத்திய போதும் அவருக்கு ஏற்பட்ட உளைச்சல் பசுரணமாய் பதிந்திருக்கும்.
இங்கு, உளைச்சலைத் தாண்டி வேதனையில் வெந்தார் கோபி.
இதை கடந்து போக முடியவில்லை அவராய்.
நேற்றிரவு மகளுக்கு ஒன்றென்றதும் பதறி ஓடிவந்தாருக்கு சதாசிவத்தின் நிலை புரிந்தது.
பேச்சியின் கடைசி பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வந்தவரின் காதில் சதாவின் பேச்சு விழ, எதிர்வினையாற்ற மறந்தவராய் சமைந்திருந்தார் மனிதர்.
அதே நேரம் அவருக்கு நிரஞ்சன் அழைக்க, “அப்பா, அம்மா பாட்டியோட பாடிய (Body) பார்த்து மயங்கிட்டாங்க ப்பா. இன்னும் கான்சியஸ் வரல” மகன் பதற,
கோபி, “வரும். வராம போகாது” என்றவர் பெருமூச்செடுத்து,
“இனி இந்த மாதிரி உங்க அம்மாவுக்கு நடக்கும். பழகிக்கோ நிரஞ்சா” என்றவர் தளர்ந்துபோய் வீட்டு சிட்-அவுட்டில் அமர்ந்துவிட்டார்.
லேசாய் நெஞ்சடைத்த உணர்வு. ராதிகாவின் சுபாம் அவர் அறிந்ததே. ஆனால் அது இத்தனை அடர்த்தியாக போகும் என்பது அவர் அறியாதது.
அவரும் பயந்தார் தான். லீலாவின் மறைவுக்கு பின்னர் அவர்கள் அனுபவித்த வேதனையை அவர் ஏற்றார். இருந்தும் அவளின் இறப்பிற்கு காரணமே மனைவியும் மாமியாரும் என்று வருகையில், மௌனியாக அமர்ந்துவிட்டார்.
“கடவுளே” என்றபடி வானத்தைப் பார்க்க, கழுகிடம் சிக்கி உயிர்விட்ட கிளியொன்று அவர் கையில் விழுந்தது.
“ச்சீ” என்றபடி அவர் எழுந்துக்கொள்ள, பேச்சியின் உடலை சுமர்ந்துக்கொண்டு ஆம்புலன்ஸ் குமரன் காலனியை அடைந்தது.
கூட்டம் கூடியாது. நாராயணன் வீட்டு சார்பில் யாரும் அங்கு செல்லவில்லை.
பேச்சியின் உடல் என்ன முயன்றும் அவர் மகளின் வீட்டிற்குள் செல்ல முடியாது பல தடைகள் வர, வாய்க்கு வாய் பேச்சானது.
முரளி தள்ளியே நின்றிருந்தான் எதிலும் கலக்காது.
“நா கெளம்பறேன் அக்கா. மது தேடுவா. பாத்துக்கோங்க” என்றபடி சதா விடைபெற, அவர் கண் நிறைத்தது மூன்றாம் எண் வீடு!
அங்கிருந்த அவரின் இரண்டு வருடம் வாழ்க்கைக் கண்முன் விரிய, கருகிய கட்டையாய் அவர் லீலா வந்து நின்றாள்!
கண்ணை அடைத்தது கண்ணீர். “லீலு” என்றார் மென்மையாய்.
‘அவள் சொல்லிய போதே வீட்டை மாற்றி சென்றிருக்கலாமோ’ என்று லீலாவின் மறைவிற்கு பின் எத்தனையோ எண்ணற்ற முறை நினைத்திருக்கிறார்.
மற்றவரின் பேச்சு அப்படி என்ன செய்துவிடும் என்ற அசட்டைத் தனம், விஷயம் தெரிந்த பின்னாவது மனைவியின் பேச்சைக் கேட்டிருக்கலாமோ என்ற காலம் சென்ற ஞானோதயம்.
என்ன முன்னறிவு இருந்தாலும் எதுவும் இப்போது அவர் லீலாவை திரும்ப தரப்போவதில்லை.
அறிவு, முற்போக்கு சிந்தனை என்பதையெல்லாம் தாண்டிய சூழலுக்குத் தக்க சிந்திப்பு எப்போதும் அவசியம்.
அதை உணர்ந்தவராய் இனி இங்கு வரக்கூடாது என்ற முடிவுடன் அவர் வெளியேற, தன்னிலை மறந்தவராய் சதாவின் முன்வந்து நின்றார், ராதிகா.
வெறித்தக் கண்களால் சதாவையும் அந்த வீட்டையும் மாறி மாறிப் பார்த்தவர், “எம் புள்ள வாழ்க்கை” என்றபடி நெஞ்சில் அடிக்க, அதிர்ந்தன சதாவின் கண்கள்.
“நோ, லீலா” என்றவர் பேச்சில் சப்தம் வரவில்லை.
“வேண்டாம்டா லீலு, பூஜா இருக்கா” என்றவர் அல்லாட்டம் எல்லாம் காற்றோடு கலந்தது.
ராதிகா எந்த இடத்தில் நின்று லீலாவை ரகுவோடு சேர்த்து வைத்து பேசினாரோ அந்த இடத்தில் நின்றுக்கொண்டு பேதலித்தவளாய் நெஞ்சில் அரைந்துக் கொண்டிருந்தாள் ராதிகா.
நிரஞ்சன் தாயிடம் விரைய, அவனை விட விரைவாய் ஒரு காகம் வந்து அவள் நடுமண்டையில் கொத்தியது!
விடாது அதன் கொத்தலில் ரத்தம் பீறிட, காகத்தைத் துறந்த முனைந்தவர்களால் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஒருகட்டத்தில், “லீலா” என்றபடி சரிந்த ராதிகாவின் நிலைக்குற்றிய பார்வை, அவர் உயிர் பிரிந்ததை உணர்த்தியது சதாவிற்கு.
மனிதர் சமைந்துவிட்டார்.
ஒருகாலத்தில் அவருக்கும் குருதி வேட்டை இருந்தது தான். ஆனால் மகளைத் தனியாய் வளர்ந்தவராய் தாயில்லாத நிலை எத்தனை கொடியது என்பதை உணர்ந்த நொடி, அவர் மனதில் ராதிகாவின் மேலிருந்த கோபம் சில அளவீடு குறைந்தது.
பேச்சியிடம் இருந்த பகைமை ராதிகாவிடம் சற்று குறைந்தது. ஆனால் அவரைப் போலவே அவர் லீலுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை தானே!
இத்தனை வருடம் அந்த ஆத்மாவின் நிராசை அலைவுகள் எல்லாம் ஒட்டுமொத்த கூட்டாக இறங்கி அடித்திருந்து.
அப்பாவியாய் போன தன் உயிருக்கான கூலியை, தன்னை சார்ந்தோர் அனுபவித்த வலியின் பொருளை சம்ஹாரம் செய்து அடைந்திருந்தது, லீலாவின் ஆத்மா.
வேட்டை ஆடிய தாய் ஆத்மா சாந்தம் கொண்டதா என்றால்? நிச்சயம் இல்லை.
இனியும் தொடரும், லீலாவின் மகளுக்காக அவள் உயிர் கணவனுக்காக.
மீண்டும் வருவாள்…
முற்றும்!
ப்ரியங்களுடன்,
சாம்பவி திருநீலகண்டன்.

Last edited: