எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னடி என்னடி ஓவியமே! - கதை திரி

Status
Not open for further replies.
என்னடி என்னடி ஓவியமே .....!


முன்னுரை :

நறுமுகை தளத்தில் முதன்முதலாக இணைவதில் பெருமகிழ்ச்சியே.
இந்த தொடர்கதை ஒரு சஸ்பென்ஸ் ரொமாண்டிக் திரில்லர்.
படித்துப் பார்த்து கருத்திடுங்கள் நண்பர்களே....
நன்றி வணக்கம்.

அத்தியாயம் (1)

'உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு' - என அவளுக்குப் பிடிக்காத அந்த உடைந்த செல்பேசியில் இப்படி டைப் செய்துவைத்து, அதனை அனுப்பாமல் வைத்திருந்தான் விக்ரம்.
நெடுநேரமாய் அந்த தொடுதிரையைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஆச்சர்யம் ஓவியாவின் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்புச் சத்தம் கேட்டதும்.
"விக்ரம்... மாலை 5 மணிக்கு கஃபே கார்னருக்கு வர முடியுமா...? கொஞ்சம் பேசணும்....!" என்றிருக்க நம்ப முடியாமல் தன்னையே கிள்ளிப் பார்த்தான்.

"டேய் மச்சான்... என்னடா முகம் ரொம்ப பிரைட்டா இருக்கு....? உன் ஆளு எதுனா ஃபோன் பண்ணினாளா...?" கேட்டான் நண்பன் கதிர்.
"ம்ம்...." என அசடு வழிந்தபடி செல்பேசியை அவனிடம் காட்ட,

"சூப்பர் தல .... அப்படீன்னா இன்னிக்கி ட்ரீட்டா ? ....ஊஹ்ஹூ...!" கூவினான் மற்றொருவன் சுந்தர்.
"அடேய் ... இதுக்கெல்லாமாடா ட்ரீட் கேப்ப....?"

"ஆஹாங்.... பின்ன வேற எதுக்கெல்லாம் கேக்கலாமாம்.... நீங்களே சொல்லுங்க சார்....!"கேட்டான் கதிர் .
"ஐயோ சாமி .... விடுங்கடா என்னை... டிரீட் தான... ராத்திரி கண்டிப்பா...!" என்றதும் குதூகலம் கண்களில் மின்னியது.

"மச்சி .... எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு... சாயங்காலம் நீயும் வரியா என் கூட...?" கேட்டான் விக்ரம் கதிரின் கரத்தைப் பற்றியபடி.

"டேய்... இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.... 90's கிட்ஸ் சாபம் உன்னை சும்மா விடாதுடா... நாங்கல்லாம் ஆள் கிடைக்காம தவிச்சிட்டிருக்கோம்... நீ என்னடான்னா இப்படி வெறுப்பேத்துற...!" சுந்தர் கடுப்பானான்.

"உங்களுக்கு ட்ரீட் வேணும்னா வாங்கடா என் கூட..." விக்ரம் முறைக்க,
"மச்சி.... சரியான பாயிண்டப் பிடிச்ச... கூட்டிட்டு போ இந்த சரக்கு ரயில... எனக்கு நிறைய வேலை இருக்கு...!" என்றான் கதிர் சுந்தரை நக்கலடித்தபடி.
"ஆமாம்... இவரு பெரிய ஜில்லா கலெக்டரு... ரொம்ப தான் வேலை இருக்குன்னு பீத்திக்கிறாரு... பார்க்கறது என்னவோ ஆட் கம்பெனில டிசைனர் வேலை தான...?!" கேலித் தூக்கலாய் சிரித்தான் சுந்தர்.

"ஆமாமாம்... இத சொல்ல வந்துட்டாரு பெரிய கவர்னரு..." என வைகைப் புயல் கணக்காய் கலாய்த்தான் கதிர்.
"டேய்... ரெண்டு பேரும் அடிச்சிக்காம எனக்கொரு வழியச் சொல்லுங்கடா..."கேட்டான் விக்ரம் பரிதாபமாக.
"ஓகே... ஓகே...மச்சி... கவலைய விடு...மேற்கொண்டு ஆக வேண்டியத நான் பாத்துக்கறேன்...!" என்றான் சுந்தர் வீண் ஜம்பத்துடன்.

"எது... நீ பாத்துக்கறியா...? கிழிச்ச... வழில எவனாவது கட்டிங்க காட்டினா பின்னாடியே ஓடிப் போயிடுவ... இந்த லட்சணத்துல வெட்டி பந்தா விடுற...ஹாஹ்ஹா... " கதிர் சிரிக்க,

"யப்பா சாமிங்களா ....ரெண்டு பேரும் கொஞ்சம் உங்க திருவாய மூடிக்கிட்டு இருங்கடா... என் பிரச்சினைய நானே பாத்துக்கறேன்... உங்களெல்லாம் நண்பர்கள்னு மதிச்சி என் கூடவே தங்க வச்சி பாத்துக்கறேன்ல அதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...!" எனத் தலையில் அடித்துக் கொண்டு வெளியேறினான் தன் பைக் சாவியை எடுத்த படி.

"ம்ம்... அப்படி புரிஞ்சிகிட்டு வாழப் பழகிக்கோ மச்சான்... ஹாஹ்ஹா...." என்றனர் இருவரும் கோரஸாய்.
"இருங்கடா... வந்து உங்கள வச்சிக்கறேன்..." விக்ரம் அங்கிருந்து கத்திட,

" இப்ப என்ன நடந்து போச்சுன்னு இவன் இப்படி கத்துறான்...!?" கதிர் கலாய்க்க சுந்தர் சிரித்தான்.
"சரி... சரி... இப்ப இவன் எங்க போறான் பைக்க எடுத்துகிட்டு...?"
"அது ஒண்ணுமில்ல கதிரு ... எதுனா பொக்கே வாங்க போயிருப்பான் ... ரொம்ப வருசமா முயற்சி பண்ணி இப்ப தான செட்டாயிருக்கு...!"

"ஓகே சுந்தர்... இப்ப நாம அவனுக்காக எதுனா பண்ணனும்....என்ன பண்ணலாம்....?"
சிறிது நேர யோசனைக்குப் பின்"ம்ம்... பேசாம நாமளே அந்த பொண்ணுகிட்ட போயி நம்ம விக்ரம் ரொம்ப நல்லவன்.... டீ கூட குடிக்காத டீட்டோட்டலர்ன்னு சொல்லிட்டு, இவன விட வேற நல்லவன் உனக்கு இந்த ஜென்மத்துல கிடைக்க மாட்டான்னு சொல்லிட்டு வந்திடுவோமா...?!" சுந்தர் சீரியஸாய்க் கேட்க,

"செருப்பு பிஞ்சுடும்... வாய வச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களாடா....எனக்கு வேட்டு வக்கிறதுக்குன்னே ரெண்டு பேரும் கூட இருக்கீங்களாடா..?" என்றபடி உள்ளே நுழைந்தான் விக்ரம்.

"என்ன தல... அதுக்குள்ள வந்துட்ட...?"
"ஏன்டா... நான் வர லேட்டாகும்ன்னு எதுனா ப்ளான் போட்டுட்டிருந்தீங்களா...?"

"ஆமாம்... அப்படியே ப்ளான் போட்டுட்டாலும்... ம்க்கும்..."கதிர் முனகிட,
"மச்சி கதிரு... மைண்ட் வாய்ஸ்ன்னு நீ பாட்டுக்கும் சத்தமா பேசிட்டியேடா..." சுந்தர் சிரிக்க உண்மையில் விக்ரம் கொதிகலனாய் மாறித் துரத்தத் தொடங்கினான்.

இப்படி கலாய்த்து எந்தக் கவலையும் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு இன்னும் சற்று நேரத்தில் மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்துக் கொண்டிருக்கின்றது உறுமீனை நாடும் கொக்காய்.


(தொடரும்)
 
Last edited:
Status
Not open for further replies.
Top