எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நாம் கொண்ட சொந்தம் நெடுங்கால பந்தம்- கதைத் திரி

Anitha G

Moderator
இப்பதான்ம்மா என மனசுக்கு உறுத்தலா இருக்கு, உனக்குன்னு நான் எதுவுமே செய்யலையேன்னு.

அப்படியெல்லாம் எதுவும் இல்லப்பா,

இல்லம்மா, என் தப்பு எனக்கு இப்பதான் புரியுது.

அய்யோ அப்பா அப்படியெல்லாம் எதுவும் இல்ல, முதல்ல போய்படுங்க, காலையில எல்லாம் பேசிக்கலாம்.

அம்மா அப்பாகிட்ட சொல்லும்மா.

என்னங்க ரொம்ப நேரம் ஆச்சு படுங்க,

ஒருவழியாக இருவரும் மகாதேவனை தேற்றி உறங்க வைத்தார்கள். அகல்யாவுக்கு உறக்கமே வரவில்லை.

தினேஷ் பேசியது தான் நினைவில் இருந்தது. எப்படி இப்படி மாறிவிட்டான்.

மனதுக்குள் எல்லாம் யோசிக்க யோசிக்க தூக்கம் வராமல் கஷ்டப்பட்டாள். எப்போது தூங்கினால் என அவளுக்கே தெரியவில்லை.

காலை எழுந்த போது மணி ஆறுக்கு மேலாகிருந்தது.

அம்மா என்ன எழுப்பி இருக்கலாமில்ல, ரொம்ப டைம் ஆயிடுச்சி.

கிளம்பினா சரியாதான் இருக்கும்.

அம்மா அப்பா எங்க?

காலையில வேலைக்கு கிளம்பிட்டார்.

அப்பா நல்லா இருக்காரில்ல.

அப்படித்தான் நினைக்கறேன் என சொன்னவள் அகல்யா முகத்தைப் பார்க்காமல் வேலையை செய்து கொண்டிருந்தாள்.

எம்மேல கோபமா அம்மா?

எதுக்கு?

இல்ல நான் தினேஷை அடிச்சேனே அதுக்காக.

இல்ல நீ சரியாதான் நடந்துகிட்ட, நீ அவனை அடிக்கலைன்னா கூட நான் அவனை அடிச்சிருப்பேன்.

அம்மா நீ ஒண்ணும் கவலைப்படாத, அவன் எங்க இருப்பான்னு எனக்கு தெரியும் நான் போய் பேசி கூட்டிட்டு வரேன்.

இல்ல அகல்யா அவங்கிட்ட பேச வேண்டாம், அவன் இங்க வரவும் வேண்டாம்.

ஏம்மா இப்படியெல்லாம் பேசற?

அவன் வந்தா பிரச்சனைதான், ஒரு நாள் கூட நம்மளை நிம்மதியா இருக்க விடமாட்டான்.

அப்பா மனசு உடைஞ்சு போயிட்டார், என்னால அவர் முகத்தைப் பார்க்கவே முடியலை.

அதுக்காக அவனை அப்படியே விட்டுட முடியுமா.

நேத்து நீ சொன்ன மாதிரி, நாலு நாள் வெளிய சுத்திட்டு அவனே வீட்டுக்கு வருவான், வரும் போது பார்த்துக்கலாம்.

நீயா அவனைத் தேடிப் போகாத. வந்தா வரட்டும் இல்ல போகட்டும்.

பேசும் போது அம்மாவின் வழி புரிந்தது. மேற்கொண்டு எதுவும் பேசாமல் அகல்யா குளிக்க சென்று விட்டாள்.

அகல்யா கிளம்பி வர, சுஜாதா அனைத்தையும் தயாராக பேகில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அம்மா சாப்பாடு கொஞ்சமா போடும்மா, நேத்தெல்லாம் என்னால சாப்பிடவே முடியலை.

அப்புறம் திருப்பி எடுத்துட்டு வந்துடுவேன் பாரு,

கொன்னுடுவேன், ஒழுங்கா பொறுமையா உட்காந்து சாப்பிடு.

போம்மா என சொல்லிவிட்டு அகல்யா வீட்டை விட்டு கிளம்பினாள்.

பஸ் ஸ்டாண்ட் வந்தவள் கண்ணில் தினேஷ் தென்பட்டான். பேசலாமா என யோசித்தபடியே அவனைப் பார்க்க.

தினேஷ் வேறு திசையில் பார்த்துக் கொண்டிருந்தான், பக்கத்தில் செல்லலாம் என நினைக்கையில் அவன் கையில் இருந்த சிகரெட்டை அப்போதுதான் கவனித்தாள்.

பார்க்கும் போது அவளுக்கு கோபமாக வந்தது. தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த தினேஷ் திரும்பியவன், அகல்யாவைப் பார்த்தான்.

பார்த்தவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை, யாரையோ பார்ப்பது போல் பார்த்தான்.

மரியாதைக்குக் கூட தன் கையில் இருந்த சிகரெட்டை மறைக்கவோ, கீழே போடவோ இல்லை.

அகல்யாவுக்கு சங்கடமாக இருந்தது. வேண்டுமென்றே அவள் முன்னால் சிகரெட்டை புகைத்தான்.

அந்த நேரம் பார்த்து அகல்யாவுக்கு பஸ் வர, அவனைப் பற்றி யோசிக்காமல் பஸ்ஸில் ஏறிக் கொண்டாள்.

ஏனென்றால் அந்த பஸ்ஸில் சென்றால், மீண்டும் பஸ் மாற தேவையில்லை. அரை மணி நேரத்தில் வேலைக்கு சென்று விடலாம்.

பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது, ஒழுங்காக நிற்கக் கூட இடமில்லை.

மனம் முழுக்க தினேஷ்தான் இருந்தான்.

எப்படி இவனை வழிக்குக் கொண்டு வருவது, இப்படியே போனால் அவன் வாழ்க்கை நரகமாகிவிடும். இந்த வாழ்க்கை முறைக்கு அவன் பழகி விட்டால், பிறகு அவனைத் திருத்துவது கஷ்டம் தான்.

என்ன செய்யலாம் கடவுளே என பலமுறை வேண்டிக் கொண்டாள்.

அன்று முன்னதாகவே வேலைக்கு வந்துவிட்டாள். அந்த நட்சத்திர ஹோட்டல் பார்க்க முகவும் அழகாக இருந்தது.

ஏனோ அதை ரசிக்க முடியவில்லை. அந்த பெரிய ஹோட்டலை ஒரு நாள் சுற்றிப் பார்க்க வேண்டும்.

அதிகமாக வெளிநாட்டவர்கள் தான் இருந்தார்கள். எல்லாம் வசதியானவர்கள் வாழும் இடம் என நினைத்துக் கொண்டாள்.

யாரோ ஒருவர் தூரத்தில் கோபமாக பேசிக் கொண்டிருப்பது கேட்டது, இருப்பினும் அதை காதில் வாங்காமல் இடத்தில் அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தாள்.

சத்தம் அதிகமாக கேட்க, திரும்பினால் தெரியவில்லை, தூரத்தில் கருப்பு நிற கோர்ட் தெரிந்தது.

என்ன இது இவ்வளவு பெரிய ஹோட்டலில் இங்கிதம் தெரியாமல் இப்படி கத்திக் கொண்டிருக்கிறான்.

ஒரு வேளை இங்கு வாடிக்கையாக தங்குபவனாக இருக்கலாம், அதனால் தான் யாரும் ஒன்றும் சொல்லவில்லை போலும்.

இடத்திற்கு வந்து அமர்ந்தாள். யாரோ பின்னால் வந்து தோலைத் தொட,

என்னடி இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட என்ற குரல் கேட்டு திரும்ப, அங்கு சுவாதி நின்றிருந்தாள்.

ஓ நீயா?

ஏன் வேற யாரையது எதிர்பார்த்தியா என்ன?

அதெல்லாம் ஒண்ணுமில்ல, ஆமாம் நீ ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட.

எனக்கு சிப்ட் ஒன்பது மணிக்கு தான் அதனாலதான். வாஷ் ரூம் வரும் போது உன்னைப் பார்த்தேன் அதான் பேசிட்டு போலாம் என வந்தேன்.

அப்படியா, சரி ரிசப்சன்ல யாரும் இல்லைன்னா ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா.

சொல்லுவாங்க ஆனா இன்னும் மேனேஜர் வரலையே. அதனால பிரச்சனை இல்லை.

அப்படியா என இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, சுவாதி என பின்னால் சத்தம் கேட்க.

இங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க, அங்க ரிசப்சன்ல ஆள் இல்லை.

மேனேஜர் பின்னால் நிற்க, சுவாதி பயந்தபடி அவரைப் பார்த்தாள்.

சார் அது வாஷ் ரூம் வந்தேன்,

வாஷ் ரூம் அட்மின் ரூமிலா இருக்கு?

அது பிரெண்ட் சார் அதான்?

ஏபி சார் வந்திருக்கார், நீங்க என்னடான்னா அங்க இல்லாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க. அவர் அங்க கண்டபடி திட்டிக்கிட்டு இருக்கார்.

சார் எனக்கு தெரியாது நான் இப்பவே வரேன் என பயந்தபடி ரிசப்சன் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

யார் அந்த ஏபி சார். ஏன் இப்படி பயப்படுகிறாள்.

யார் தான் அவன் என்ற ஆர்வத்தில் சுவாதி பின்னால் நடந்தாள். அலுவலக அறையில் யாருமில்லாததால், பேசிக் கொள்வது தெளிவாகக் கேட்டது.

திரும்பி நின்று கொண்டிருந்தான் அவன், முகம் தெரியவில்லை, எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் முகம் தெரியவில்லை.

ஆனால் அது காலை கத்திக் கொண்டிருந்த அதே கருப்பு நிற கோர்ட் ஆள் தான்.

ஆனால் அவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்டது.

ரிசப்சன்ல இல்லாம எங்க போனிங்க?

இல்ல சார் வாஷ்ரூம் போயிருந்தேன்.

என்ன அரைமணி நேரமாவா?

இல்ல சார் அது என சுவாதி பதில் சொல்லிக் கொண்டிருக்க.

இன்னைக்கு நீங்க மட்டும் தானா.

ஆமா சார், மார்னிங்க் சிப்ட் நான் மட்டும்தான் வந்திருக்கேன்.

இவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு ஒருத்தரை மட்டும் மார்னிங்க் சிப்ல போட்டிருக்கிங்க. மத்தவங்க எல்லாம் எங்க என மேனேஜரைப் பார்த்து கேட்க.

இல்ல சார் இனிதான் எல்லாம் வருவாங்க.

அதான் ஏன்னு கேக்கறேன், மொத்தம் எத்தனை பேர் ரிசப்சனுக்கு?

ஆறு பேர் சார்.

ஆறு பேர் இருக்கும் போது ஏன் இவங்க மட்டும் இருக்காங்க. மத்தவங்க எங்க?

ரெண்டு பேர் இன்னைக்கு வீக் ஆப் சார், மத்தவங்க பத்து மணிக்கு மேல வருவாங்க.

ஆள் இல்லாத போது எதுக்காக ஆஃப் கொடுத்திங்க.

இல்ல சார் எமர்ஜென்சி அதான்.

அது அவங்களுக்கு, நமக்கு வேலை நடக்கணும்ன்னா நீங்க அதெல்லாம் பார்க்கக் கூடாது.

சாரி சார்.

சாரியா ஈசியா சொல்றிங்க, மேனேஜர் நீங்களும் சிப்ட் டைமுக்கு தான் வரணுமா, நீங்களே ஒழுங்கா இல்லாத போது மத்தவங்க எப்படி இருப்பாங்க.

சிட், யாரும் இங்க வேலைக்கு லாயக்கில்லை. இதுதான் கடைசி இன்னொரு முறை இப்படி நடந்தா, அன்னைக்கு தான் உங்களுக்கு அது லாஸ்ட் நாளா இருக்கும்.

இங்க மட்டுமில்ல, அதுக்கப்புறம் நீங்க எங்கையும் வேலை பார்க்க முடியாது.

இல்ல சார் இனி இப்படி நடக்காது நான் பார்த்துக்கறேன் என மேனேஜர் நடுங்கியபடி பதில் சொன்னார்.

முதல் நாள் பார்த்த போது சுவாதி சொன்னது நியாபகத்திற்கு வந்தது. எங்க மேனேஜர் சரியான சிடுமூஞ்சி. கோபம் வந்தா நாங்க எல்லாம் காலி என.

ஆனால் அதைவிட பெரிய கோபக்காரனாக இருப்பான் போல, இவன் இங்கு என்ன வேலை செய்கிறான் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.

பேசியவன் யாரென இன்னும் முகத்தைப் பார்க்கவில்லை.

உங்க பேர் என்ன?

சுவாதி சார்.

இதப்பாருங்க சுவாதி, இதுதான் கடைசி இங்க நீங்க வேலைக்கு வந்திருக்கிங்க, அதை மட்டும் பண்ணினா போதும்.

இப்படி வாஷ்ரூம் போறேன்னு சுத்த இல்லை.

போய் உட்காந்து உங்க வேலையைப் பாருங்க, இன்னொரு முறை இப்படி நடந்தா, இங்க உங்களுக்கு வேலை இல்லை.

சுவாதி, பயந்தபடி அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சுவாதியைப் பார்க்கும் போது பாவமாக இருந்தது. பெண் என்ற கரிசனம் கூட இல்லாமல் இப்படி பேசுகிறானே, என அவன் மேல் கோபம் வந்தது.

வீட்டில் நடந்த பிரச்சனைகள் இப்போது நியாபகத்தில் இல்லை, அந்த கருப்பு கோர்ட் தான் மனதில் இருந்தான்.

கடைசி வரை அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவன் யாரென யாரிடமும் கேட்க முடியவில்லை.

ஸ்வாதிக்கு ஒரு மணிக்கு தான் உணவு இடைவேளை என அவள் சொன்னது நியாபகத்திற்கு வந்தது.

ஒரு மணி ஆகட்டும் என வேலையை முடித்துவிட்டு காத்திருந்தாள்.

மதிய வேளை நெருங்க சுவாதியைக் காண டைனிங்க ரூமுக்கு சென்றாள்.

ஸ்வாதி.

ஏய் என்ன இந்த டைம்ல இங்க வந்திருக்க, உனக்கு லன்ச் டைம் இப்ப இல்லையே.

உன்னப் பார்க்க தான் வந்தேன்.

என்ன விஷயம் என்ன பார்க்க வந்திருக்க.

அது காலையில?

அதுவா? அது நேரம் சரியில்லை அதான் ஏபி சார்கிட்ட மாட்டிக்கிட்டேன்.

ஏபி சார் யாரு?

அடிப்பாவி யாருன்னு கேக்கற?

அதான் யாரு எனக்கு தெரியலை.

நம்ம வேலை செய்யற ஹோட்டல் பேரு என்ன?

அது ஏபி இண்டர்நேஷனல். ஓ ஹோட்டல் ஓனரா.

ஆமா.

வயசு ரொம்ப குறைவா இருந்ததால அவர் இங்க வேலை பார்க்கறாரோன்னு நினைச்சிட்டேன்.

சரியா போச்சு போ. அவரைப் பார்த்தா இங்க வேலை செய்யறவங்க எல்லாம் நடுங்குவாங்க தெரியுமா.

ஏன் அவரைப் பார்த்து நடுங்கணும்.

காலையில நான் பண்ணினது தப்புதானே. அப்புறம் பயப்பட தான செய்யணும்.

சரிதான், ஆனா அந்த ஆளு உங்கிட்ட மட்டுமில்ல, எல்லார்க்கிட்டையும் கத்தறார். பிரஷர் இருக்கும் போல.

எங்கிட்ட சொன்ன மாதிரி வேற யார்க்கிட்டையும் சொல்லிடாதே. அப்புறம் அவ்வளவுதான்.

அவர் சரியான கோபக்காரர். மாட்டினா அவ்வளவுதான். பக்கத்தில் வந்தவள் சுற்றி முற்றி பார்த்து விட்டு சொன்னாள்.

அந்தாளு சரியான ராட்சசன்.

அவ்வளவு கொடூரமானவனா?

பின்ன இல்லையா, நான் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருஷம் ஆச்சு. அதனால அவரைப்பத்தி எனக்கு நல்லா தெரியும்.

நல்லவன் இல்லையா?

அப்படி சொல்ல முடியாது. ஏபி சார் இப்ப ரெண்டு வருஷமாத்தான் ஹோட்டலை பார்த்துக்கறார்.

அதுக்கு முன்னாடி அவங்க அப்பாதான் பார்த்துட்டு இருந்தார். அப்ப எங்க எல்லாருக்கும் சேலரி அதிகம் தெரியுமா.

ரொம்ப ஜாலியா இருப்போம். வேலையும் ரொம்ப அதிகமா இருக்காது.

எப்ப ஏபி சார் வந்தாரோ அப்பவே எங்க எல்லார் நிம்மதியும் போச்சு.

ஏன் ஸ்வாதி அப்படி என்ன பண்ணினார்.

நாங்க யாரும் சரியா வேலை பார்க்கறதில்லைன்னு முதல்ல எங்க எல்லார் சம்பளத்தையும் கம்மி பண்ணினார்.

சொன்னா நம்பமாட்ட, அப்பவே இப்பவிட கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய் அதிகமா வாங்கிட்டு இருந்தேன்.

இவர் வந்து முதல்ல சம்பளத்தை கம்மி பண்ணினார். அதுக்கப்புறம் வருஷா வருஷம் ரெண்டாயிரம் ரூபாய் சேலரி சேர்த்துவார் அவங்க அப்பா.

இவர் வந்து வேலைக்கேத்த சம்பளம் என சொல்லி எல்லாம் போச்சு.

ம். அப்புறம்.

நான் என்ன கதையா டி சொல்றேன்.

இல்ல சொல்லு அப்புறம்?

அப்புறமென்ன, இப்படித்தான் என்னைக்காவது ஒரு நாள் ஹோட்டலுக்கு வருவார், வரும் போது இங்க யாராவது ஒருத்தர் மாட்டுவாங்க.

இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை போல, நான் மாட்டிக்க்கிட்டேன்.

அவருக்கு இது மட்டும்தான் பிசினசா?

நீ வேற, ஏகப்பட்ட பிசினஸ் இருக்கு, ஏபி சார் வந்ததுக்கு அப்புறம் நம்ம ஊர்ல மட்டும் ரெண்டு ஸ்டார் ஹோட்டல் ஓபன் பண்ணியிருக்கார்.

ரெண்டு வருஷதுக்கு முன்னாடி எங்க இருந்தார்.

ஏபி சார் பாரின்ல இருந்தாராம், அவங்க அம்மா ரொம்ப கம்பல் பண்ணி வர சொல்லி இருக்காங்க.

அவருக்கு அவங்க கூட இருக்கவே முதல்ல பிடிக்கலையாம், அதனால தனியா வீட்டில தான் இருக்கார்.

அவர் வந்ததுக்கு அப்புறம் எல்லா பிசினசும் பார்க்க ஆரம்பிச்சிட்டார். அவங்க அப்பா எல்லாத்தையும் இவர் பொறுப்பில் கொடுத்திட்டார். எல்லா தொழிலிலும் நல்ல லாபம். எல்லாம் அவர் ராசி.

அப்புறம்?

நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்.

இல்ல ஸ்வாதி கதையை விட சுவாரசியமா இருக்கு, மேல சொல்லு?

என்னத்த சொல்ல, அவருகிட்ட மாட்டிக்கிட்டு நாங்க எல்லாம் அவஸ்தைபடறோம்.

அவருக்கு எல்லாம் பர்பெக்டா இருக்கணும், கொஞ்சம் மாறினா கூட எல்லாரையும் உண்டு இல்லைன்னு பண்ணிடுவார்.

அவங்க அப்பாவை உனக்கு தெரியுமா?

தெரியுமாவா, அவர் இருந்த போது, அடிக்கடி இங்க வருவார். பிரசாத் சார் மாதிரி ஒரு நல்ல மனுஷனைப் பார்க்கவே முடியாது.

அதான் ஏபி சார் பேரா.

இல்லை டி அது அவங்க அப்பா பேர். அவர் வொய்ப் கூட அடிக்கடி இங்க வருவாங்க.

பார்த்தா வயது ஐம்பதுக்கு மேல இருக்குமுன்னு சொல்லவே முடியாது. பேர்க்கு ஏத்த மாதிரி அவ்வளவு அழகா இருப்பாங்க.

அப்படி என்ன் பேர்?

அழகு மீனாள்.

அகல்யா சிரிக்க.

ஏண்டி சிரிக்கற, முகம் மாதிரியே குணம் நிறைய பேருக்கு அழகா இருக்காது தெரியுமா. ஆனால் அவங்க அப்படியில்ல.

அடிக்கடி வருவாங்க, ஏதாவது தேவையின்னா நமக்கு பண்ணி கொடுப்பாங்க.

ஏன்னா அவங்க முதமுதல்ல ஆரம்பிச்ச பிசினஸ் இதுதானாம்.

அதனால் எல்லார்த்துக்கும் முதல்ல, இங்க தான் வருவாங்க.

எல்லா பங்கஷனுக்கு எங்களை நல்லா கவனிப்பார். கோல்டு காயின் கூட தந்திருக்கார் தெரியுமா.

ஆனால் இவர் வந்ததுக்கு அப்புறம் எங்களுக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் கூட தருவதில்லை.

ஆமா இவ்வளவு விஷயம் தெரிஞ்சுவச்சிருக்க எப்படி?

இதுக்கு பிரசாத் சாருக்கு பிஏவா இருந்த பொண்ண இங்க மாத்தினாங்க, அவளும் நானும் ரொம்ப க்ளோஸ், அப்படிதான் எனக்கு எல்லா விஷயமும் தெரியும்.

இனி எப்ப வருவார் இங்க?

ஏன் கேட்குற?

இல்ல, நீ சொல்லும் போது ஏனோ அவனைப் பார்க்கணும் போல இருக்கு அதான்.

அது எப்பன்னு அவருக்கு தான் தெரியும். நாம யாரும் எதிர்பார்க்காத நேரத்துல வருவார்.

அந்தாளு போட்டோ இருக்கா உங்கிட்ட?

ஏன் பார்க்க ஆசையா இருக்கா உனக்கு, பார்க்க என்னவோ சூப்பராத்தான் இருப்பாரு. ஆனா பேசினாதான் கேக்க முடியாது.

இரு, எங்கிட்ட இருக்கான்னு தேடிப் பார்க்கிறேன் என போனில் தேடினாள்.

அய்யோ, இல்லை அகல்யா. ஆனா இங்க யார்க்கிட்டையாவது இருந்தா காட்டறேன்.

சரி நான் கிளம்பறேன், ரூம் செக்கிங்க் போறேன்னு சொல்லிட்டு வந்தேன் என அகல்யா கிளம்பினாள்.

இரண்டு அடி நடந்தவள் திரும்பி ஸ்வாதி அவன் பேர் என்ன?

அருண் பிரசாத். அதான் ஏபி சார். வேற யார்க்கிட்டையும் அவரைப்பத்தி கேட்டுடாதே. மனுஷன் எமகாதகன் விஷயம் அவர் காதுக்கு போனா, நம்ம வேலை அவ்வளவுதான்.

என்ன நான் சொன்னது புரியுதா என ஸ்வாதி சொல்ல,

சரி என சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அடுத்தடுத்த நாட்கள் வேலை அதிகமாக இருக்க, மற்ற எந்த விஷயத்தைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை.

தினேஷ் வீட்டுக்கு வரவில்லை. சுஜாதாவுக்கு மனதில் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் சுஜாதாவைப் பற்றி அகல்யாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அப்பா தீர்க்கமாக சொல்லி விட்டார், அவன் இனி வீட்டுக்கு வரக்கூடாதென.

மறுபடியும் தினேஷ் அங்கு நிற்பானா என பல முறை, அகல்யா தேடிப் பார்த்தால் அவன் கிடைக்கவில்லை.

அவனுக்கு போன் செய்தால் ஸ்விட்ச் ஆப் என வந்தது. அவனுடன் சுற்றும் சிலரிடம் கேட்க, அவர்களும் அவனைப் பற்றி தெரியாதென கையை விரித்து விட்டார்கள்.

நாட்கள் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் தினேஷ் பற்றிய எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

தினமும் அவன் வருவான் என சுஜாதா எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹோட்டலில் பங்ஷன் என்பதால், அதில் கலந்து கொள்ளாமல் அகல்யா அன்று ஒரு மணி நேரம் முன்னதாகவே வீட்டுக்கு வந்தாள்.

என்னடி இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட,

இன்னைக்கு அங்க ஏதோ பார்ட்டிம்மா. எல்லாரும் இருக்காங்க. எனக்கு அங்க இருக்க பிடிக்கலை. அதான் கிளம்பி வந்துட்டேன்.

ஓ, அப்படியா.

அம்மா காபி போட்டுக் குடும்மா.

போய் துணி மாத்திட்டு வா, போட்டு தரேன்.

சரிம்மா.

அகல்யா துணி மாற்றிக் கொண்டு வர, சுஜாதா காபியோடு நின்றிருந்தாள்.

அகல்யா காபி குடிக்க ஆரம்பிக்க, தினேஷ் பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சதா.

இல்லம்மா, அவன் பிரெண்ட்ஸ் எல்லார்க்கிட்டையும் விசாரிச்சிட்டேன். யாருக்கும் அவனைப் பத்தி ஒண்ணுமே தெரியலை.

சுஜாதா வாடிவிட்டது.

அம்மா ஒண்ணும் கவலைப்படாத, அவன் கண்டிப்பா திரும்பி வந்திடுவான்.

அவன் வீட்டை விட்டு போய் பதினைந்து நாள் ஆச்சு, இனியா அவன் திரும்பி வரப் போறான்.

ஏம்மா இப்படியெல்லாம் பேசற. அவனால நாம இல்லாம இருக்க முடியாதும்மா. கண்டிப்பா தேடி வருவான் பாரு.

எனக்கு அந்த நம்பிக்கையே இல்ல அகல்யா. அவனுக்கு பிடிவாதம் ரொம்ப அதிகம். வரமாட்டான்.

அம்மா வேணும்னா போலிஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணலாமா.

வேணாம் அகல்யா, அப்பாவுக்கு தெரிஞ்சிடும், அதுவும் இல்லாம அவன் சட்டத்துக்கு புரம்பான வேலைகள் பண்ணியிருக்கான்.

நாமளா போய் அவனை மாட்டிவிட்டது மாதிரி ஆயிடும்.

அதுவும் சரிதான்ம்மா, ஆனா ஒரு தடவை போலிஸ்ல மாட்டினா தான் அவனும் இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ண மாட்டான்.

என்னடி நீ அவன் அக்கா, யாரோ மாதிரி பேசற.

வேற எப்படிம்மா பேசறது. அவன் திருந்தர மாதிரி இல்ல. இப்படி ஏதாவது நடந்தாதான் அவனுக்கும் புத்தி வரும்.

இல்ல அகல்யா அதெல்லாம் வேண்டாம்.

வேற எப்படிதான் அவனை கண்டிபிடிக்கறது.

எனக்கும் தெரியலை, ஆனால் அவன் இல்லாமல் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

எனக்கும் தான்ம்மா, ஆனால் யார்கிட்ட போய் அவனைப் பத்தி கேக்கறது.

ஏன் அகல்யா, ஒண்ணு செய்யலாமா?

என்னம்மா?

நம்ம தினேஷ் கூட இருப்பானே, அவன் பேர் என்னமோ மாரின்னு நினைக்கறேன், அவங்கிட்ட கேட்டா எல்லா விவரமும் தெரியும்.

அம்மா அவன் சரியான பொறுக்கி, அவங்கிட்ட போய் கேக்க சொல்ற,

அவங்கிட்ட கேட்டா, கண்டிப்பா அவனுக்கு தினேஷ் பத்தி ஏதாவது தெரிஞ்சிருக்கும். கேட்டுப் பார்க்கலாமே அகல்யா.

அம்மா அவன் ரெண்டு மூணு தடவை ஜெயிலுக்குப் போயிட்டு வந்திருக்கான். எப்பவும் போதையில தான் இருப்பான். அவங்கிட்ட போய் பேச சொல்ற.

நீ போக வேண்டாம், நான் போய் கேக்கறேன்.

அய்யோ அம்மா வேண்டாம்மா. அவங்கிட்ட பொய் நீயா வேண்டாம். நானே பேசிப் பார்க்கறேன்.

ஆனால் அப்பா அகல்யா?

அப்பாவுக்கு தெரியாது போதுமா. நான் சொல்ல மாட்டேன். அவன் கிடைச்சா நானே அவங்கிட்ட பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்.

அகல்யா எனக்கு இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு.

அம்மா அந்த மாரி எங்க இருப்பான்னு தெரியலை. தினேஷ் பிரெண்ட்ஸ்கிட்ட கேட்டு போய் பார்க்கறேன். ஆனால் உடனே என்னால போக முடியாது.

ரெண்டு நாள் கழிச்சுதான் எனக்கு வீக் ஆஃப் வருது, அன்னைக்கு போய் பார்க்கறேன்.

நீ அவனைப் போய் பார்க்கறேன் என சொன்னதே எனக்கு நிம்மதியா இருக்கு, உனக்கு எப்ப வசதியோ அப்ப போய் பாரு.

சரிம்மா, அப்பா இன்னைக்கு நைட் வருவாரா.

இல்லடி, எனக்கு தெரியலை இன்னும் அப்பா எனக்கு கால் பண்ணி சொல்லலை.

விடும்மா, நானே கால் பண்ணி கேட்டுக்கறேன்.

ஸ்வாதியிடம் இருந்து கால் வந்தது.

எங்க இருக்க அகல்யா.

வீட்டுக்கு வந்துட்டேன் ஸ்வாதி.

லூசா நீ இன்னைக்கு எவ்வளவு பெரிய பார்ட்டி நடக்குது தெரியுமா. இங்க இல்லாம வீட்டுக்கு போயிட்ட.

அங்க இருந்து நான் என்ன பண்ணப் போறேன்.

ஏபி சாரை பார்க்கணும்னு சொன்னல்ல.

அவன் அங்க இருக்கானா.

பின்ன அவர்தான எல்லாருக்கும் பார்ட்டி தராரு. இப்பதான் ஸ்டாப் எல்லார்க்கிட்டையும் வந்து பேசிட்டு போனாரு.

அப்படியா எனக்கு தெரியாது ஸ்வாதி, ஏதோ பிசினஸ் பார்ட்டின்னு சொன்னாங்க அதனால தான் நான் வந்துட்டேன்.

பிசினஸ் பார்ட்டி தான் ஆனா ஏற்பாடி ஏபி சாரோடது.

ஓ சரி விடு அவனை நான் இன்னொரு நாள் பார்த்துக்கறேன்.

நீ நினைச்சா இன்னைக்கே பார்க்கலாம்.

எப்படி டி?

உடனே கிளம்பி வா, இன்னும் ஒரு மணி நேரம் பார்ட்டி நடக்கும், வந்தா பார்க்கலாம்.

ஆனால் ஸ்வாதி நான் பஸ் பிடிச்சி வருவதற்குள் அங்க எல்லாம் முடிஞ்சு போயிடும். என்னால வரமுடியாது. அதெல்லாம் இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.

போடி, இங்க எல்லாம் எவ்வளவு ஜாலியா இருக்காங்க தெரியுமா, உனக்கு தான் அனுபவிக்க தெரியலை வை போனை என கோபமாக போனை வைத்து விட்டாள்.

அகல்யாவுக்கு அங்கு போகணும் போல இருந்தது.

பர்சில் பணம் நூறு ரூபாய் தான் இருந்தது.

அம்மா உங்கிட்ட பணம் ஏதாவது இருக்கா?

எதுக்கு?

அது ஸ்வாதி கால் பண்ணினா, பார்ட்டிக்கு வர முடியுமான்னு கேட்டா,

போயிட்டு வா.

இல்லம்மா பஸ் பிடிச்சி போறதுக்குள்ள் எல்லாம் முடிஞ்சு போயிடும்.

உள்ளே சென்ற சுஜாதா, ஐநூறு நோட்டைக் கொண்டு வந்து கையில் கொடுத்தாள்.

அம்மா தேங்க்ஸ் மா.

போடி நன்றியெல்லாம் சொல்லிக்கிட்டு. எல்லாம் உன்னோட காசுதான். கார் பிடிச்சி போயிட்டு வா. சந்தோஷமா இரு என சொல்ல.

அம்மா நீ இப்படி சொல்லுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை தெரியுமா. வேண்டாமுன்னு சொல்லுவன்னு தான் எதிர்பார்த்தேன்.

ஆனால் நீ ரொம்ப ஸ்வீட்மா.

மத்த பொண்ணுங்க மாதிரி என் பொண்ணு இல்ல, அதனால நானும் மத்த அம்மாங்க மாதிரி இல்ல, போயிட்டு சீக்கிரமா வா. அப்புறம் நல்ல துணியா போட்டுட்டு போ.

சரிம்மா என வேகமாக கிளம்ப ஆரம்பித்தாள்.

ஏன் அவனைக் காண தனக்கு இப்படியொரு ஆர்வம் என அவளுக்கே தெரியவில்லை.

போனில் ஓலா புக் செய்து கிளம்பினாள். சரியாக அரை மணி நேரத்தில் அங்கு போய் சேர்ந்தாள்.

ஸ்வாதி ஒரு வழியாக அந்த ஊட்டத்தில் தேடிக் கண்டிபிடித்தாள்.

ஏய் ஸ்வாதி.

என்னடி வரமாட்டேன்னு சொன்ன, அரை மணி நேரத்துல வந்து நிக்கற.

டாக்சியில வந்தேன்.

பாருடா, காசு செலவாகும் என்று நார்மல் பஸ்ல போறவ, இன்னைக்கு டாக்சியில வந்திருக்க, அதிசயமா இருக்கு.

அதெல்லாம் விடு, எங்க அவன்?

யாரு

அதான் உங்க சார்.

யாரு ஏபி சாரா?

ஆமா,

அடிப்பாவி அப்ப பார்ட்டிக்கு வரலையா, அவரைப் பார்க்கதான் வந்தியா. நான் கூட எங்கூட இருக்கத்தான் வந்திருக்கேன்னு சந்தோஷப்பட்டேன்.

அதுவும் ஒரு காரணம். அப்புறம் நீ கால் பண்ணுனியேன்னு வந்தேன்.

நம்பிட்டேன்.

என்ன ஸ்வாதி?

ஆமாண்டி இங்க இத்தனை பேர் இருக்காங்க வந்தவுடனே சாரைக் கேக்குற.

அவன் எங்க அதை மட்டும் சொல்லு? இல்ல நான் இப்பவே கிளம்பிடுவேன்.

இருடி கோவப்படாதே, இவ்வலவு நேரம் இங்கதான் இருந்தாரு, காட்டறேன்

ஏய் கிறிஸ்டி ஏபி சார் எங்க? என தெரிந்த பெண்ணிடம் கேட்க

ஸ்வாதி அவர் இப்பதான் கிளம்பினாரு.

பார்க்கிங்ல பார்த்தேன், இப்ப அநேகமா போயிருக்கலாம்.

ஓகே தேங்க்ஸ்.

வா எங்கூட என கீழே அண்டர் கிரவுண்ட்க்கு அழைத்துப் போனாள்.

ஏய் அங்கப்பாரு அதுதான் ஏபி சார் என காட்ட, அவன் காரில் உள்ளே முன் சீட்டைக் காட்ட.

எங்கடி அந்தாளு ரொம்ப சுமாரா இருக்கான், நீ என்னமோ ஆகா ஓகோன்னு சொன்ன.

அது ட்ரைவர், பின்னாடி இருக்கறதுதான் ஏபி சார்.

முகமே சரியா தெரியலை ஸ்வாதி.

எப்படி தெரியும். அவர்தான் உள்ள இருக்கார் இல்ல.

ஒரு நிமிடம் அவன் வெளியே வர, ஆர்வமாக அகல்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அவன் திரும்பாமல் உள்ளே போய் விட்டான். அதே கருப்பு வண்ண கோர்ட் சூட்.

என்ன ஸ்வாதி இன்னைக்கும் அவன் முகத்தைப் பார்க்க முடியலை.

பார்த்துதான் என்ன பண்ணப் போற. பார்க்காத வரைக்கும் சந்தோஷம் என நினைச்சிக்கோ.

போடி. ஆமா உங்க ஏபி சார்கிட்ட ஒரு கோர்ட் தான் இருக்கா.

ஏன் அப்படி கேக்குற.

பின்ன அன்னைக்கும் கருப்புதான். இன்னைக்கும் அதே கருப்பு கலர் கோர்ட் தான். அதான் கேட்டேன்.

அவருக்கு ப்ளாக் ரொம்ப பிடிக்குமாம், எல்லாரும் சொல்லுவாங்க. ஆமா எதுக்கு அவரைப் பார்க்க உனக்கு இவ்வளவு ஆர்வம்.

தெரியலை, அந்தாளுக்கு ரொம்ப கோபம் வருமுன்னு சொன்னல்ல, அதான் அந்த கோபக்காரன் முகத்தைப் பார்க்க ஒரு ஆவல்.

நல்ல ஆவல் போ, அவன் சரியான அரக்கன். மத்தவங்களை புரிஞ்சிக்க தெரியாதவன். பார்க்காத வரைக்கும் நல்லதுன்னு நினைச்சிக்கோ.

சரி வா எனக்கு ரொம்ப பசிக்குது, போய் சாப்பிடலாம் வா. டாக்சி பிடிச்சு வந்ததுக்கு சாப்பிட்டு விட்டாவது போ, வீட்டில சாப்பாடாவது மிச்சம் ஆகும் என வம்பாக அவளை அழைத்துப் போனாள்.

சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் ஏறினாள். இவ்வளவு தூரம் வந்தும் அவனைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே.

அவன் ஒரு அரக்கன் என ஸ்வாதி சொன்னது நியாபகத்துக்கு வந்தது.

அவனைப் பற்றி அங்கு இருப்பவர்கள் யாரும்ம் நல்லபடியாக இரு வார்த்தை கூட சொல்லவில்லை.

அவனைத் திட்டாத ஆளே இல்லை. இருந்தும் அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தனக்கு ஏன் வந்தது. தன்னையே கேட்டுக் கொண்டாள்.

பதில் தான் கிடைக்கவில்லை.

வீட்டுக்கு போனபோது மணி ஒன்பதாகிவிட்டது.

என்ன அகல்யா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட,

அம்மா மணி ஒன்பது ஆச்சு.

பார்ட்டின்னு சொன்னியே அதான் லேட்டாதான் வருவன்னு நினைச்சேன்.

என்னம்மா இதுக்கே நீ திட்டுவன்னு எதிர்பார்த்தேன், நீ என்னடான்னா இப்படி சொல்ற. இப்படி சொல்லுவன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் லேட்டாவே வந்திருப்பேன்.

ஆனாலும் வரவர நீ ரொம்ப டெவலப் ஆயிட்டம்மா.

சரி சாப்பிட்டியா, இல்ல?

சாப்பிட்டேன்மா.

அம்மா இந்தா என பணத்தை நீட்ட, அதில் முண்ணூறு ரூபாய் இருந்தது.

எதுக்கு?

என்னம்மா பணம் கொடுத்தல்ல, வரும் போது பஸ்ல் வந்துட்டேன். அதனால டாக்ஸிக்கு போகும் போது இருநூறு ரூபாய் தான் ஆச்சு.

அதான் மிச்ச பணம்.

பரவாயில்லை நீயே வச்சிக்க.

இல்லம்மா எனக்கு வேண்டாம், எங்கிட்ட பஸ்க்கு நூறு ரூபாய் வச்சிருக்கேன்.

இல்ல வெளிய போற, பணம் அதிகமா கையில இருக்கறதுல தப்பில்ல. இருக்கட்டும் வை.

தேங்க்ஸ் மா, எனக்கு டயர்டா நான் போய் தூங்கவா.

சரி போ, என சொல்லிவிட்டு சுஜாதா கிச்சனுக்கு சென்றாள்.

அன்றைய இரவு முழுக்க அவன் நினைவுதான் இருந்தது. இவ்வளவு தூரம் கஷடப்பட்டு போயும் அவனைக் காண முடியவில்லையே.

கண்டிப்பாக ஒரு நாள் அவனை நான் பார்ப்பேன். ஆனால் என்றைக்குதான் என்று தெரியவில்லை. அவன் நினைவோடு தூங்கிப் போனாள்.
 
Top