எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 14

Status
Not open for further replies.
♥️♥️♥️ஏக்கம்_14 ♥️♥️♥️

திரையரங்கம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது பெரிய ,பெரிய கட்டவுட், பேனர்ஸ் ரசிகர்களின் கூச்சல் ஆரவாரம் அதனால் வர்ஷாவையும் சந்திப்பையும் சந்திக்க முடியவில்லை. போன் செய்து தனித்தனியாகவே சினிமா பார்க்கலாம் என்று கூட்டம் மிகுதியால் சினிமா முடிந்ததும் சேர்ந்து வீட்டுக்கு செல்லலாம் என முடிவானது.

பவித்ராவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று கடைசியாக அமர வைத்து ப்ரீத் அருகில் உட்கார்ந்து கொள்ள.

" பவித்ரா உன் ஷாலை கொஞ்சம் தா."

"அதெல்லாம் தர முடியாது போடா."

"பச்..கொடுடி" என்று தோள் மீது தாவணியை உறுவியவன் வேகமாக கண்களைக் கட்டிக் கொண்டான்.

பவி ப்ரீத் ஏன் இப்படி பண்ணுறான்? என்று புரியாமல் அவனைப் கேள்வியாக பார்க்க.. அவனோ சீட்டில் சாய்வாக அமர்ந்தான்.

"ஏன் மாமா கண்ண கண்டிக்குற.? "

" ஸ்கிரீன்ல மட்டுமா படம் ஓடும். லைவ்ல நிறைய படம் ஓடும்,
காதல் தோல்வி அடைஞ்சதுக்கப்புறம் காதலை சினிமால பாத்தாலும் புடிக்க மாட்டேங்குது. அப்படியே எரியுது மொழியும் புரியாது ஸ்கிரீன் ரொம்ப வெளிச்சமா இருக்கும்.
தலைவலி வரும் அதனால கண்ண கட்டிட்டு தூங்க போறேன் போதுமா "

"தூங்க போறியா" என்று அதிர்ச்சியானவள்.. "அதுக்கு எதுக்குடா சினிமாக்கு வரணும் வீட்ல படுத்து தூங்க வேண்டியது தானே."

"நீ தியேட்டர்ல தூங்கி இருக்கியா? அது ஒரு சுகம் அனுபவிச்சா தான் புரியும். "

"என்ன அனுபவமோ " அலுத்து கொண்டாள் பவித்ரா.
"நீ ரொம்ப வினோதமான விலங்கு டா " என மாமன்
தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

சிடுசிடுப்பாக "தூங்கும் போது தொடாத தூக்கம் வராது.. டி "

" ஓவரா பண்ணுற டா மாமா..இவன " என்று அடிக்க கை ஓங்கி அடிக்க முடியாமல் நொந்தவள். சுற்றிலும் ஒட்டுண்ணி போல ஒட்டிக் கிடக்கும் காதலர்களை கண்டதும் வயிற்றில் பொறாமை எனும் அமில திரவம் சுரந்தது தியேட்டர் அப்படியே இடிஞ்சு விழுட்டும் என்று சபித்தவள் பின் தான் உணர்ந்தாள் ஐயோ..நானும் அது உள்ள தான இருக்கேன். ஸ்கிரீனை விட சுத்தி தான் அதிகமா படம் ஓடுது ம்..ம்
எது எதுக்கு ஏங்க வேண்டியதா இருக்கு இவனால மாமனை நினைத்து
மானசீக புலம்பல்ஸ்.

" மாமா.. கண்கட்ட அவுரு.. டா ."
" படத்தை பாரு டி‌‌ ஐட்டம் சாங் வந்தா மறக்காம எழுப்பு "

"மாட்டேன்" என்றாள் மனம் கொள்ளாமையுடன்.
'என்ன பாக்க மாட்டானாம் இவளுக ஆடுறத பார்ப்பானா? ' என்று வஞ்சினம் கொண்டு வெடித்தாள்.

" ஏன் அவ ஆடுறத பாக்குறப்ப வெளிச்சம் இருக்காதா? தலைவலி வராதா?" என்று பவித்ரா படபடக்க பதில் பேசாமல் தூங்குவது, ஆகச் சிறந்தது என ஐ ஸட்டரை சார்த்திவிட்டு சாய்ந்து விட்டான் ப்ரீத்.

இவளோ கோவ சிவப்பேறி
காதில் புகை வர நின்றாள்.
கண் கட்டி இருப்பதால் நல்லவேளை அவன் கண்ணுக்கு இவை யாவும் தரிசனமாகவில்லை.!

என்னா ஆ.. கோவம். இல்லை
இல்லை தீராத ஏக்கம் அவன் காதல் வேண்டி.!

திரையில் வரும் நடிகைகள் யாரரையும் ப்ரீத் பார்பது அவள் பிரச்சனை இல்லை. என்னையும் பாரேன் டா.. என்பதை தான் சொல்ல முடியாமல் ஜிலேபியாக சுற்றுகிறாள்.. மக்கு மாமனுக்கு புரிய வைக்க முடியாமல் அயர்ந்தே போனால் பவி.

சிறிது நேரத்தில் கண் கட்டை அவிழ்த்து அவள் மேல் தூக்கி எறிந்தான் மாம்ஸ். மேலே விழுந்த அந்த ஷாலை மாலை போல கழுத்தில் போட்டுக் கொண்டு என்ன என்பதை போல் பவி பார்க்க ?

"ஏய் அராத்தி.. ஆட தெரியுமா டி ?" என்றதும் பவித்ரா
யாரைப் பார்த்து என்ன கேள்வி டா என்பதை போல் இவள் லுக் விட

" ஸ்டெப் மிஸ் பண்ணாம, அதுல வர மாதிரியே ஆடணும்.அதே மாதிரி ஆடி ஜெயிச்சிட்டனா என்ன கிஃப்ட் கேட்டாலும் வாங்கி தருவேன். "

"நிஜமா வாங்கி தருவியா? நான் ஆடனும்னா நீயும் கூட ஆடணும் " என்று உற்சாகமாய் எழுந்தவள், திரையை உறுத்தாக நோக்கி.. நடனத்தையும் அதன் அசைவுகளையும் உள்வாங்கி, இருவரும் ஆட ஆரம்பிக்க, குதூகலம் பொங்கிட பட்டாசை ஆடினால் பவித்ரா. அதை ரசித்து கொண்டு பாதி பாடல் வரை சரியாக ஆடிய நாயகன் அப்படியே நின்று விட்டான். ஆட்டத்திற்குள் ஆட்டமாய், ஜோடியாய் இருவரும் சிறுவயதில் ஆடிய திருவிழா மேடைகள் நினைவுக்கு வர, புதிதாக அவிழ்ந்த முல்லை போல புன்னகைத்தவன். அவள் அசைவுகளை கண்டு மலைந்து நின்றான்.!

அவளையே பார்த்துக் கொண்டு நிற்பவனை கையைப் பிடித்து இழுத்து ஆடு டா என்றதும் அவனும் ஆட , வேர்வை முகமெங்கும் பூக்க அவளோ சுற்றி சுழன்று அபிநயம் பிடித்து திரை பார்த்து அதே போல ஆடினாள். திரையில் ஆடும் நாயகி சுழன்று வில்லன் மேல் விழுவது போல காட்சி, இங்கு சுழன்று ஹீரோ மேல் விழுந்தால் ப்ரீத்தின் நாயகி. ! தாங்கிப் பிடித்து அவளை அமர வைத்தவன், சட்டை பையில் இருந்த பேப்பரை எடுத்து சுக்கு நூறாக கிழித்து அவள் தலையில் மலர் போல தூவினான். பவித்ராவோ வியர்த்து பெருமூச்சி வாங்கினாள். அவள் அருகிலே அமர்ந்.தான் பிரீத்.

உற்சாகமான குரலில் " செம.. செம டி.. நான் ஸ்கிரீனையே பாக்கல தெரியுமா "என்று மாமன் சொல்லவும் கூச்சமாக இருந்தது பவித்ராவுக்கு அவன் முன் ஆடியாதால், பாவை நெற்கதிர் போல் நாணி கோணிட " என்ன டி? " என்றான் ப்ரீத்.

"ஒன்னுமில்ல மாமா "

" நீ ஏதோ மாதிரி நடந்துக்குற? " என்றதும் எழுந்து நின்றவள். மேல் வரும் நாணம் மறைக்க தன் தாவணியில் அவன் காதல் விழிகளை கட்டி முடி போட, மந்தகாச புன்னகையை உதட்டில் நிறுத்தி " ஓ..வெட்கமா.. டி !" என்ற கேள்விக்கு பதில் வராமல் தடை பட, அவளால் அவன் பார்ப்பதை தாங்க முடியவில்லை. வீசும் வாளாக வெட்டி வீசுகிறது மாயவனின் கூர் பார்வை வீச்சின் தாக்கம் தாளாததின் விளைவு.. கண்களுக்கு காதல் கட்டு போட்டுவிட்டாள்.

பவித்ரா பாதி படம் பார்த்ததோடு சரி, மீதி படம் முடியும் வரை இவன் முகம் மட்டும் தான்.
சாவகாசமாக அமர்ந்து சைட் அடித்து கொண்டு இருந்தாள் அவள் மாமனை 'இவன் சரியான தத்தி தானா புரிஞ்சுக்க மாட்டான். அதனால' தீர்க்கமான முடிவுகளை எடுத்து வேகமாக மூச்சை இழுத்து விட்டு.. மெல்ல அவன் இதழ் நோக்கி முத்தமிட குனிந்தால் காதலை வாய் மொழியில் உணர்த்த முடியாதவள். கைகள் பிசைந்து ஆயிரம் தயக்கம் தடை எனும் சுவர்களைக் கடந்து,அவன் இரும்பு இதழ்களில் காரிகையின் மென் இதழ்கள் பொருத்த முயல.. டொய்..ங்..ங் என்று உட்கார்ந்த இடத்திலேயே தூங்கி விழும் சிறு பிள்ளையாய்.. தூக்கத்தினால் தானாய் தலை கவிழ்ந்தான் ப்ரீத்.

வாய்விட்டே சிரித்து விட்டால் பவித்ரா இவன் கூட ரொமான்ஸ் ஐயோ..ஐயோ. தலையிலே அடித்து விட்டு.. தள்ளி அமர்ந்து கொண்டாள்." பேபி.. பாய்.. லவ் யூ " தூக்கம் கலைக்காது அவளது பச்சை மண்ணின் (ப்ரீத்) அழகை, காற்றில் கைகளால் அள்ளி முத்தமிட்டாள்.

தலைவனும் என்ன தான் செய்வான் பாவம் புரியாத மொழி தாலாட்டு போலவே இருக்க.. கண்களை வேறு அவள் கட்டியதால் உறக்கம் வந்து விட ம்ஹூம்.. இப்படி எல்லாம் பவி மாறுவாள் என்று அவன் கனவா கண்டான்.

மெல்ல மன்னவன் துயில் கலைந்தது. வெளியே வர்ஷா,சந்தீப் நின்ற திசை புறம் சென்றார்கள்.

" ஏய்.. ஷோனா. என்ன இப்டி ஆடுற பாலிவுட் டான்ஸ் .. செமயா ஆடுற.!" கைகளால் நெட்டி முறிதாள் வர்ஷா .

பவி-" தேங் யூ வர்ஷா டார்லிங். "

"பைத்தியம் இப்படி ஆடுறியே யாராவது வீடியோ எடுத்து வைரல் பண்ணா என்ன பண்ணுவ " சந்தீப்பக்கு அண்ணனாய் கோபம் வந்தது.

"என் மாமா கூட தானே இருக்கேன். வீடியோ வைரல் ஆச்சுன்னா.. கப்பில்ஸ் ஆ.. ஒரு யூ ட்யூப் சேனல் ஆரம்பிச்சிருவேன். ம்க்கும்."என்று சுழித்து அசட்டையாக முகம் சுருங்கினாள் பவித்ரா. "ரொம்ப நெரிசலா தெரியுது ரோட்ட அடைச்சுட்டு நிக்காம போறவங்களுக்கு வழி விடுங்க என்றாள் படு நக்கலாக "வா மாமா போவோம் " என்று ப்ரீத்தை கை கோர்த்து இழுத்துக் கொண்டு தனியாக ஜோடியாய் நடந்து போனாள்.

" இருக்க யூ ட்யூப் சேனல் கப்பில்ஸ் பண்ற டார்ச்சர் பத்தாதுன்னு ,இவ வேற ஆரம்பிக்க போறாளா? பாரு வர்சு .
நீயும் நானும் நிக்கிறதே இவங்களுக்கு நெரிசலா தெரியுதாம் " விடு சந்தீப் உன் தங்கச்சி தான..நீ ஏன் திட்டுற போகலாம்" என்று இருவரும் வீட்டை நோக்கி புறப்பட.

இங்கு பரிசு வாங்க நகைக் கடைக்குள் அவனை இழுத்துச் சென்றாள் பவி.

" இங்கெல்லாம் என்னால கிப்ட் வாங்கி தர முடியாது காசு இல்லடி "பயத்தில் வேர்த்தே விட்டது. அவள் நிற்பதோ வைர நகைகளுக்கான பிரிவு விலையும் விண்ணை முட்டும் அளவு இருந்தது. 'கிப்ட் தருவேன் னு வாக்கு கொடுப்ப ' என்று தன்னை தானே நொந்து கொண்டான் ப்ரீத்.

" ப்ரீத்.. இங்க வா " என்று ஒரு மோதிரத்தை தன் கையில் அணிவித்தவாறு அழைக்கவும். அருகே வந்து முதலில் தூக்கில் தொங்குவது போல் நூலில் தொங்கிடும் டேக் அட்டையில் விலையை பார்த்தான். மறு நொடி தலை சுற்றி கிறுகிறுத்து நின்றான். " ஒரு லட்சம் ஆ..!" ஒரு நொடி இதயம் நின்று மூச்சு பேச்சு வரமாட்டேன் என போராட்டம் பண்ணியது.

"இங்க பாரு கோல்டன் ஹார்ட் ல டைமண்ட் ல (P)பி இன்சீயல் போட்டு இருக்கு.! வாங்கி தா டா "கெஞ்சும் தொனியில் கேட்டாள்.

"பவி.. வாங்கி தரேன். கல்யாணம் பண்ணிக்கிறியா.? முடியாது என்று தான் சொல்வாள் என்ற அசட்டு தைரியத்தில் கேட்டு வைக்க.

மென்னகையோடு "ம்.. " என்று மோதிரத்தோடு கைகளை புகைப்படம் எடுத்தவள். இந்த டிசைன் பார்த்து வச்சுக்கோ எப்ப நீ இதே மாதிரி ஒரு மோதிரத்த என்னோட கையில கொண்டு வந்து போடுறியோ.! அடுத்த நிமிஷம் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்." தலை சரிந்து தரை நோக்க,

"ம்.."கொட்டி சிரித்தவன். "மீட்டர் வட்டிக்காவது வாங்கிகையில போட்டுருவேன்
பாத்துக்கோ "

" ஹான்.. முதல்ல வாங்கு
அப்புறம் பார்க்கலாம் ரிங் ஐ விரல்விட்டு கலட்டி டிரேயில்
வைத்து விட்டு வெளியே வந்தாள் பவித்திரா.என்னவோ போல் ஆனது மாமனுக்கு அவள் ஆசையாக கேட்டு வாங்கிதர
முடியாதது முகம் வாடி போக தலைக் கவிழ்ந்து எதுவும் பேசாமல் அருகில் நடந்து வந்தான்.

பணம் எனும் பொல்லா காகிதத்தின் மீது வெறுப்பும் மூண்டது. ஆசையில் அளவானவள் வேண்டுமென்று கேட்கவே தயங்குவாள். வாயால் கேட்டுமே வாங்கி கொடுக்க முடியாத தன் மேல் கோபம் வந்தது
"ஸாரி பவி" என்றான் ஆற்றாமை ஆறாய் வழியும் குரலில்.

"இந்த ஸாரி சொல்லி ஏமாத்த முடியாது "அவனால்
வாங்க முடியாது எனத் தெரியும். இப்படி கேட்டால் கல்யாணம் செய்து கொள்ள கேட்பான் சம்மதம் என்று குறிப்பால் உணர்த்தி விட்டாள் புரிந்து கொள்ளும் மன நிலையில் நாயகன் இல்லை.
ஆசையாக அவள் விரலில் போட்டு பார்த்து கண்ணில் சந்தோஷம் மிளிர, தாமரையாய் முகம் மலர்ந்ததும், இவன் பணம் இல்லை என்றதும், இதழ் பிதுக்கி மனதில்லாமல் மோதிரத்தை அவன் தங்க பதுமை கலட்டி வைத்ததே மாறி மாறி நினைவில் வந்து குற்ற உணர்வு கொடுக்க வேதனையில் உழன்றான்.

இவன் தேவதை பெண்ணோ.. மாமன் முகம் செத்து விழுவதை தாங்காது"பசிக்குது டா " என்றவள் அருகில் உள்ள பானி பூரி கடையை காட்ட வேகமாக அழைத்து சென்றான்.

" பானி பூரி சேலஞ்ச் வர்றீங்களா மாமா.? "குரலில் சோகம் பரவி வழிய "வேண்டாம்" என்றான் அடுத்து அவள் ஏதாவது கேட்டு தர முடியாது
என ஏமாற்ற விரும்பாமல்.

அவன் வாய் அருகே பானி பூரியை ஊட்டுவது போல் காட்டி ஏமாற்றி, இவள் வாயில் போட்டுக் கொள்ள..கோபமாய் அவள் கை பற்றி ப்ளேட்டில் இருந்த எல்லா பானி பூரியையும் அவள் கையாலே தனக்கு ஊட்ட வைத்தவன். இடை இடையே அவளுக்கும் ஊட்டி விட்டான். அவள் கை விரல் இவன் இதழ்களை வருடவும் சோகம் மறந்து சொர்க்கம் ஆனது அந்த நொடி.! எல்லாம் மறந்து புன்னகை தாங்கி விரிந்தது அவன் இதழ்கள்.

"இணையின் இதயம் அறிந்த
துணை ஒரு வரமே "
பவித்ரா வரம் போன்றவள் தவப் பயனாய் கிடைப்பாளா ? தலைவனுக்கு?
வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக கிச்சனில் இருக்கும் வர்ஷாவோடு சேர்ந்து சப்பாத்தி மாவுடன் நடந்த நிகழ்வு அத்தனையும் பிசைந்து கூறிக் கொண்டிருந்தாள் பவித்ரா.

" என்ன தான்..மா உன் பிரச்சனை "என்று சலித்து கேட்டாள் வர்ஷா
"நேரடியாக சொல்லிட்டேன் அக்கா ஒரு மோதிரத்தை வாங்கி போட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க
டா னு அதுவே அந்த பைத்தியத்துக்கு புரியல " சப்பாத்தி மாவில் அவனை நினைத்து இரண்டு குத்து விட"அவ்வளவு தத்தியா ப்ரீத்..?"

"ஒரு நிமிஷம் இருங்க அவன் எவ்வளவு பச்சை மண்ணா இருக்கான்னு டெமோ காட்டுறேன் "

" ப்ரீத் என்று குரல் கொடுக்கவும் "என்னடி " என்று கேட்டவனிடம் "ஐ லவ் யூ " என்று சொன்ன நிமிடமே "வெட்டி பேச்சு பேசாம சப்பாத்தி சீக்கிரம் போடு பசிக்குது " என்று கோபமாய் போய்விட"இப்ப புரியுதா அக்கா என் பிரச்சனை என்னன்னு நான் தொட்டு பேசினாலும் அது புதுசா தெரியல ஐ லவ் யூ
சொன்னாலும் தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போறான்.
எப்படி தான் புரிய வைக்கிறது
அந்த பச்சை பானைக்கு கடவுளே.! "

"ஷோனா பேசாம கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துடு.." என்றாள் ஒற்றை கண்ணை சிமிட்டி.

" அதுவும் இன்னைக்கு ட்ரை பண்ணிட்டேன். கண்ண கட்டிட்டு தூங்குறான் பக்கி, கிட்ட நெருங்கி போன உடனே .. சின்ன புள்ளைங்க தூக்கம் சொக்கி விழும் பாருங்க, அந்த மாதிரி விழுந்து வாரி தூங்குறான்."

" ஜென் நிலைல இருக்கான் போல.? இல்ல நீ அந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கனும். அவன் ஆழ் மனசுல கூட நீ அவனை வெறுக்கிற னு ரொம்ப ஸ்ட்ராங்கா பதிந்திருக்கும் மென்று நினைக்கிறேன் ஷோனா.
"அதுவும் வாஸ்தவம் தான் அக்கா. அப்படித்தான் நிறைய தடவை பேசி இருக்கேன். பிடிக்கல வேண்டாம் னு சொல்லி இருக்கேன்."

"நாம சொல்லும் வார்த்தை புரிஞ்சுக்காம, கஷ்டப்படுத்தினால் ரொம்ப வலிக்குது இதே தான் அவன் காதல்புரிஞ்சுக்காம
நீயும் பண்ணின ஷோனா."

"எல்லாத்துக்கும் எங்க அம்மா தான் காரணம். ஒரே வீட்ல இருந்தாலும் தனித்தனியா தீவுல இருக்குற மாதிரி தான் நாங்க இருக்கோம். ரெண்டு பேரும் ஃப்ரீயா பேசிக்கவே முடியாது. பேசலாம் அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க தான் ஆனா ப்ரீத் வந்து.. அம்மா மேல இருக்கிற ஒவர் மரியாதையால ரொம்ப தள்ளி தள்ளி பொய்ட்டான் இங்க டெல்லி வந்த அப்றம் தான் பேசுறது சிரிக்கிறது அன்ப வெளிப்படுத்துறது ஆளே மாறிட்டான். வர வர புதுசா தெரியுறான். ரொம்ப பாசமா வல்வோட புருஷன் பொண்டாட்டி ஆன ஃபீல்..கா செமயா இருக்கு இங்க" இதயத்தில் கை வைத்து சுட்டி காட்டினாள். " இங்க இருந்தா அப்படி பார்த்துகறான் கல்யாணம் பன்னதும் டெல்லிக்கு தனி குடித்தனம் வந்துடனும். சுமதி தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் பொறுப்பு பருப்பு னு என் லவ்வர் பாய் அ டெரரா மாத்திடுச்சு. ஸ்கூல் வரை சரியா தான் இருந்தான்.காலேஜ் வந்ததும் இரும்ப முழுங்குன எறுமை மாதிரி ஆகிட்டான். சும்மா இல்லாம என் அம்மா பக்கத்து வீட்டு பொண்ணு ஓடிட்டா ஏதிர்த்த வீட்டு பொண்ணு ஓடிடுவா.. நம்ம வீட்ல இருக்க து.? ம்ஹூம்.. அப்படினு ஒரு இழுவைய போட்டு மூளை சலவைய பண்ணிடுச்சு. இப்படி ஏதாவது சொல்லி இன்செக்யூர் ஃபீலிங்க கிரியேட் பண்ணி விட்டு ரொம்ப பொசஷிவ் ஆ.. மாத்தி விட்டுருச்சு, எங்க கல்யாணததுக்கு அப்பறம் தனியாக கிடக்கட்டும் அதான் என் மம்மிக்கு நான் தர்ற பனிஷ்மெண்ட் "

அவங்க இடத்துல அவங்க சரி தான்.
பவி. அவங்க இவ்ளோ கண்டிப்பா இல்லனா நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு சரியா வளர்ந்திருப்பீங்களா.? கொஞ்சம் தனிமை கிடைச்சாலுமே இளமை வேகத்தில் தப்பு பண்றவங்க அதிகம். ஒரே வீட்ல இருந்துமே இவ்வளவு கண்ணியமா வளர்த்திருக்காங்க, அது எவ்வளவு பெரிய விஷயம் "

"அது உண்மை தான் அவன அவனா அம்மா இருக்க விடலை, என்ன விட அஞ்சு வயசு தான் பெரியவன். ப்ரீத் எதுக்குமே ஆசையே பட மாட்டான் பொறுப்பானவன். அப்படியே முத்திரை குத்திட்டாங்க எதையும் வெளிபடுத்துனா சின்ன புள்ளை தனமா பேசுற னு நெனைபாங்கனு பயத்துல எதையுமே வெளிகாட்டாம இறுகி பொய்ட்டான். என்ன தவிர யாருக்கும் அவன் ஃபீலிங்ஸ் புரியாது "

"பொறுப்பு தட்டுகழிச்சுட்டு உங்க அப்பா விட்டுட்டு போயிட்டாரு தான? அப்போ ஒரு ஆம்பள பொறுப்பா இருக்கணும்னு ப்ரீத்த அவங்க அப்படி ஆக்கிருக்கலாம். இதுக்கு பேரு தியாகம் ஷோனா.. பிடிச்சு தான் அவனுமே மாறி இருக்கான். இப்போ ஒன்னும்
கெட்டுப்போகல, அவன் எதை இழந்தான் னு நினைக்கிறாயோ.. அத்தனையும் நீ கொடுத்து சந்தோஷமா பாத்துக்கோ அவ்வளவு தான்.

"உனக்கு அறிவு அதிகம்..கா
சரிய கூட, நான் தப்பா புரிஞ்சுக்கிறேன். தப்ப கூட நீ சரியா புரிஞ்சுக்குற, எல்லாரோட சூல்நிலையும் உணர்ந்து அதுக்கு ஏத்த நீ மாதிரி யோசிக்கிற செம டார்லிங் நீங்க "

"அப்டியா..நீயும் அப்படித்தான் யோசிக்கணும். உன் இடத்தில் இருந்து மட்டும் இல்லாம, எல்லார் இடத்துலயும் ஒரு நிமிஷம் நின்னு யோசிக்கணும்"
என்று இப்படியே பேசி பேசியே.. லேட்டாகவே சப்பாத்தி சுட்டு, தக்காளி தொக்கு வைத்து நால்வரும் சாப்பிட்டு அறையில் உறங்க செல்ல, வர்ஷா பவி பெண்களுக்கு ஒரு அறை அடுத்த அறையில் ஆண்கள் இருவரும் உறங்க சென்றிட,

" அறையில் கண்ணாடி முன் நின்ற பவித்ரா. மிரரை காதலனாய் பாவித்து ப்ரப்போஸ் செய்து பழகிட தமிழில் தான் பேசி.. பேசி.. பார்க்கிறாள் என்றாலும் அந்த முக பாவம் வெட்கம் லவ் யூ எனும் வார்த்தை வைத்து யூகித்தவள் அவள் செய்வதை வீடியோவாக பதிவு எடுத்தாள் வர்ஷா.

" அம்மாவுக்காக இல்ல உனக்காகவே ஐ லவ் யூ.. சீ இப்டியா சொல்றது" தலையில் தட்டி விட்டு"ம்.."யோசித்தவள் "நீ வெறும் காதல் மட்டும் கிடையாது. பவித்ராவோட சரிபாதி நீ தான். நீ இல்லாத என் வாழ்கை காதல் முழுமை அடையாது உன் கூட வாழ ஆசையா இருக்குடா.
இப்பவே தாலி கட்டிடுறியா ப்ளீஸ்."
என்று திரும்ப வர்ஷா வீடியோ எடுப்பதை உணர்ந்து. " அக்கா நானே லூசு மாதிரி உலறிகிட்டு இருக்கேன் கட் பண்ணுங்க." ஏன் பயமா.? ஷோனா."

"பச்.. எனக்கு என்ன பயம் சரியா எடுங்க" என்று கேமரா முன் நின்றவள்.

" ப்ரீத் ஐ லவ் யூ
ஐ லவ் யூ சோ மச்,
ப்ளீஸ் லவ் மீ டா..
கல்யாணம் பண்ணிக்குறியா டா.. ஆ.! என்று கத்தி இதய வடிவில் கை காட்டி கண்ணடிக்க அந்த வீடியோ நிறைவடையும்.

இந்த வீடியோவை வர்ஷா மூலம் பார்க்கும் போது நம் நாயகன் கண்களில் காதல்
பொங்குமா அல்லது கண்ணீரா?

♥️♥️ஏக்கம் தொடரும்♥️♥️

உமா கார்த்திக்


 
தீராதடி நான் கொண்ட ஏக்கம் (கருத்து திரி) மேலான கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்🙏கோடி ♥️
 
Status
Not open for further replies.
Top