எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மின்னலே என் வானம் உன்னை தேடுதே! கதை திரி

Status
Not open for further replies.

Balatharsha

Moderator
மேகமானது நீராக கரைந்து பூமியினையும் தன் அடர் துளிகளினால் குளிரூட்டி ஓய்ந்திருந்தது.

மரக்கிளைகளில் ஒட்டியிருந்த நீரினில் சிட்டுக் குருவிகளோ தம் இறகினை விரித்து நீராடி உடல் சிலுத்து அந்த ஆனந்தத்தில் தாமே மெட்டெடுத்து பாடல் இசைக்க,
தரையினில் தேங்கி நின்ற மழை நீரினில் தாம் நீராடி போக எஞ்சியிருந்த மழை துளிகளால் கிளைகளை அசைத்து குளுப்..... குளூப்!... என தாம் பாடும் பாடலுக்கு சந்தம் மாறாது தாளம் எழுப்பியவண்ணம் இருந்த அத்தனை இயற்கையின் சங்கமம் நிறைந்த ரம்மியமான மாலை பொழுதது.

கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருந்த மாளிகையோ ஒரே அலங்காரமும், ஆரவாரமும் குழந்தைகளில் கூக் குரலுக்கும் சிறிதும் பஞ்சம் என்பது இல்லாது மாளிகையே கலைகட்டியிருந்தது.
"அண்ணா என்னண்ணா?.. இன்னும் உன் குட்டி இளவரசி வெளிக்கிடலையோ!.. (தயாராகலையோ) ஊர் சனம் எல்லாமே வந்திட்டினம் அண்ணா.
இப்ப மாரி காலம் வேற. இருட்டின வானம் இன்னும் தெளியாம மப்பாவே (மேகமூட்டம்) இருக்கு.
வேளைக்கு அலுவல முடிச்சா அடுத்த மழை வாரத்துக்குள்ள ஆருமே நனையாமல் வீட்டுக்கு போயிடுவினம் எல்லேண்ணா.
அண்ணிய வேளைக்கு அழுதா குட்டிய கூட்டிட்டு வர சொல்லுங்கோண்ணா!. உங்களுக்கே தெரியும் தானே நானும் வேளைக்கு வெளிக்கிடோணும் எண்டு. " என தமயனை ரஞ்சனி அவசர படுத்த.

"என்ன ரஞ்சி இப்ப என்ன அவசரம் வந்தது எண்டு படபடக்குற?.. இரவு எட்டுக்குத்தானே ரயில். நாளைக்குத்தான் உன்ர மச்சான்(கொழுந்தனார்) மகளுக்கு துடக்கு கழிக்கிறது. அதனால இப்பவே வெளிக்கிடணும் எண்டு அவசரம் ஒண்டும் இல்ல. உன்ர அவசரத்துக்கு ரயில எடுக்க மாட்டினம். கொஞ்சம் பொறுமையா இருந்து போகலாம்." என கூற,
"போங்கோண்ணா!.. உங்களுக்கு எப்பவும் என்னோட தனகுறது தான் வேலை.
எனக்கு ஒண்டும் அவசரம் இல்ல.
மழை வாரத்துக்கு முன்னம் டேஷன் போனா அவதிப்டத்தேவையில்லை எண்டு நினைச்சு தான் சொன்னன்.
மற்றம் படி நீங்கள் சொல்லுறாப்போல ஒண்டுமில்லை." என தமையன் தன்னை சீண்டுவது தெரிந்து வெக்கத்தில் சிணுங்கும் தங்கையை கண்டு புன்னகைத்தார் ரமேஷ்.

"சரி சரி கனக்க(ரொம்ப) வெக்க படாத. நான் சும்மா விளையாட்டுக்கு உன்னோட தனகினன்.
இரு இப்பயே உன்ர அண்ணிய கூட்டியாரன்." என்றவன் தனது மனைவியை தேடிச்சென்றார்.
ஆம்!.. ரமேஷின் கூடிப்பிறந்த தங்கை தான் ரஞ்சனி. இருவரும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள்.
இருவரது பெற்றோர் அந்த கிராமத்தின் செல்வந்த குடும்பம் என்பதால் பெற்றோரை இழந்தாலும் அவர்கள் இல்லையே என்ற கவலையினை தவிர வேறு எந்த குறையும் இல்லாது தாய் மாமனது வளர்ப்பில் நல்லபடியாகவே வளர்ந்தார்கள்.
இவர்கள் இருவரையும் நல்ல முறையில் வளர்த்து எடுப்பதற்காகவே அவரது வாழ்வில் திருமணம் என்ற ஒன்றை ஒதுக்கி இருவருக்குமாக வாழ்ந்த தாய் மாமனும் ரமேஷின் இருபத்தி மூன்றாவது வயதில் காசநோயின் தாக்கத்தில் வைத்திய சாலையிலேயே உயிர் துறந்தார்.
தமக்கென்று ஒரே ஒரு சொந்தமாக இருந்த மாமனை இழந்து புதிதில் என்ன செய்வதென தெரியாது திணறிய ரமேஷ். பின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தேற்றிக்கொண்டவன் தங்கையை பாதுகாக்கும் பொறுப்பு தன்னிடம் வந்ததை உணர்ந்து ஒவ்வொன்றையும் தங்கையின் நலன் கருதி பார்த்து பார்த்து செய்ய தொடங்கியவனான்.
இருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தனர்.
ஊரின் பெரிய குடும்பம் என்பதால்
சின்ன வயதிலேயே அவன் ஊரிற்கு செய்யும் தொண்டிலும் அவனது நல் குணத்தானையும் கண்டு ஊர் மக்களே அவனை நாடி வந்து அந்த ஊரின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியதன் பெயரில் அதனை ஏற்றுக்காெண்டவன்,
அதன் பின் தன் பொறுப்பு மாறாது ஊரிற்கு செய்த நல்ல பல காரியங்களை விளைவாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊரினரே அவனை நிற்க கூறி வற்புறுத்த,
அதையும் அவர்களுக்காக ஒப்புக்கொண்டு நின்றதன் விளைவாக கிடைத்த வாக்குகளின் அடைப்படையில் முதலிடம் வந்தவன்,
தன்மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைமும், அன்பினையும் தவறான முறையில் பயன்படுத்தாமல் முடிந்தவரை மக்களுக்காக உழைக்கத்தொடங்கினான்.

இதுவரை தங்கையை ரமேஷ் பிரிந்திருந்ததே கிடையாது. தங்கை கல்லூரி படிக்கும் போது ஒருவனை விரும்புகிறேன். என கூறிய போது அதை ஒப்புக்கொண்டு திருமணம் நடத்தி வைத்த ரமேஷ், அவளுக்கென பெயரளவில் ஒரு பெரிய அளவில் வீடு அமைத்துக்கொடுத்தவன், தன்னுடன் தான் தங்க வேண்டும் என அடம்பிடிக்க.
பிறந்ததில் இருந்து தமையனை பிரிந்தறியாத ரஞ்சனியும் தன் காதல் கணவனிடம் அதை கூறியதும்.
மனைவியின் ஆசைக்கு தடைபோடாது ஒப்புக்கொண்டான் சூரியபிரகாஷ்.

தங்கைக்கு திருமணமாகி ஆதித்தியன் பிறந்து இரண்டு வருடங்களின் பின்னர்தான் ரமேஷ் திருமணம் செய்து கொண்டான்.
அவன் மனைவி கவிதா.
மகள் அமுதநிலா. வீட்டின் குட்டி இளவரசியும் அவள் தான். அதுவும் அத்தை ரஞ்சனிக்கு அமுதா என்ற பெயரை கேட்டாளே போதும். ஆதித்தியனை விட அவள் மேல் தான் உருகுவாள்.
அதே போல் கவிதாவிற்கு மகளை விட ஆதித்தியன் மேல் தான் அன்பு.

இன்று குட்டி இளவரசியினுடைய எட்டாவது பிறந்த நாள் நிகழ்விற்காகத்தான் தான் இத்தனை ஆரவாரம்.
தன் மனைவியை நாடி சென்ற ரமேஷ். அவள் மகளுடன் மல்லுக்கட்டி நிற்பதைக்கண்டு,
"கவிதா ஏன் அமுதாவை இன்னும் வெளிக்கிடுத்தேல?. எல்லாரும் அமுதாக்காக காத்துக்கொண்டிருக்கினம்." என கூற..
"நானா மாட்டன் எண்டுறன்?.
இவள் தான் நேரம் காலம் தெரியால் அடம் புடிச்சுக்கொண்டிருக்கிறாள். எனக்கு வார கோபத்துக்கு பிறந்தநாள் எண்டு கூட பாக்காமல் அடிச்சு போடுவன்." என மகள் மேல் இருந்த கோபத்தை கணவனிடம் காட்ட.

"ஏன் என்ன நடந்தது?. எதுக்கு இப்ப அவளிட்ட கோப படுற?.." என கேட்க.
எதுக்கோ?... ஆளாளுக்கு மாறிமாறி சொல்லம் குடுத்ததே பழுதாக்கி வைச்சிருக்கிறீங்கள் இவளை. புது உடுப்பை போடு எண்டா மாட்டாளாம். அத்தை எடுத்து குடுத்த உடுப்பு தான் போடுவாளாம். நான் எவ்வளவு ஆசையா இந்த உடுப்பை பத்து பதினைஞ்சு கடை ஏறி இறங்கி இவளுக்கு வடிவா(அழகு) இருக்கும் எண்டு வாங்கினன் தெரியுமா?.." என கணவனிடம் கோபமாக கேட்டவள் முகத்தில் ஏமாற்றத்தடன் கூடிய வருத்தம் தெரிய.
"இரு நான் அவளுக்கு சொல்லுறன்." என்றவர்.
"அமுதா செல்லம் இங்க வாங்கோ!.." என அவளை தன் கைகளுக்கு அழைத்தவர்,
"அப்பா என்ன சொன்னாலும் கேப்பீங்கள் தானே?.." என குரலில் மென்மையை கொண்டுவந்து அன்பாக கேட்க.
"ஓம்" என்பதாக தலையசைத்தவள் செயலில் ஒரு வித பிடிவாதத்தினை கண்டவன்.

"என்ர அமுதா குட்டி நல்ல பிள்ளையாம்!. அப்பாண்ர செல்லம் எண்டா அப்பா சொல்லுறத கேக்குமாம்.. சரியோ!..." என்றவர்.
"அம்மா எடுத்து தந்த உடுப்பை போட்டுட்டு வந்து கேக்க வெட்டுடா குட்டி!..
அத்தைக்கு நேரமாகுதாம். அவங்களும் ஊருக்கு போகோணும் எல்லேம்மா!.." என கூற.
"அத்தையும் பாவமெல்லோப்பா!.. அத்தை இத எனக்கு நிறைய ஆசையோட எடுத்து தந்தவா, அதை போடாட்டி அவாக்கு வருத்தமா இருக்கும்ப்பா!.". என மகள் எங்கு தாய் எடுத்து வந்த உடையினை போடுமாறு தந்தை கட்டாயப் படுத்தப்போகுறாரோ என நினைத்து உதட்டை நீட்டி அழுபவள் போல் கூற,

"அமுதா செல்லம்!.. நீ அத்தை எடுத்து தந்தரையும் போடும்மா!.. ஆனா அம்மா எடுத்த தந்ததை முதல்ல போட்டு கேக்க வெட்டினாப்புறகு
அத்தை எடுத்து தந்ததை போடுவம்.
அம்மாவும் அமுதாகுட்டிக்கு ஆசையா தானே எடுத்து தந்தவா!." என கேட்க. தந்தையின் பேச்சில்
தாயின் முகத்தினை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள் என்ன நினைத்தாளோ,

"சரியப்பா!.. இத முதல்ல போடுறன். பேந்து(பிறகு) அத்தை எடுத்து தந்தது போடுறன்." என்க.
"சரிம்மா!.. என் செல்ல அமுதா எப்பவும் நல்ல பிள்ளை தான்!.." என்றவர்.
மனைவியிடம் "கவிதா வேளைக்கு அவளை வெளிக்கிடுத்து கூட்டுக்கொண்டு வா!.. ஊர் சனம் பூரவும் காத்துக்கொண்டிருக்கு." என்றவாறு வெளியேற,
"சரியான ராங்கிடி உனக்கு." என்றவாறு தன் தேர்வான வெள்ளையோடு பிங்க் கலந்த பார்டிபுறோக்கினை அணிவித்தவள், தலையினை உடைக்கேற்றது போல் வாரி கலர் ரப்பர் பேன்ட் அணிந்து, அதற்கேற்ப அலங்காரம் செய்து குட்டு ஏஞ்சல் போல் இருந்தவளை வெளியே அழைத்து சென்னாள்.

அவளை வெளியில் கண்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரிக்க,
அந்த கரவோஷத்தின் ஓசையில் திரும்பி பார்த்த ஆதித்தியன்,
சின்னவளை கண்டு விட்டு,
"அமுதாக்குட்டி!..." என்றவாறு அவளை நோக்கி ஓடியவனை கண்ட ரஞ்சினி தன் கணவன் சூரியபிரகாஷிடம்.
"இஞ்சேப்பா!..." என கனவனை சுறண்டியவள் "உங்கட மகன பாருங்கோவன்,
இப்பவே பொண்டாட்டிய கண்டுட்டு என்ன ஓட்டம் ஓடுறான் எண்டு.
இவனோட எதிர்காலம் உங்களை விட ரொம்ப பிரகாசமாத்தான் இருக்கும் போலயே!." என்க.

"ரஞ்சினி நீ என்ன கதை கதைக்கிற?. அதுங்க விளையாட்டு பிள்ளைகள். உன்ன போல அதுங்களுக்கு விபரம் காணாது. சும்மா இப்பிடியே கதைச்சு அதுங்களோட மனசில இப்பிடியான தேவையில்லாத எண்ணத்தை விதைக்காத. வளந்ததும் அதுங்களோட மனசில என்ன என்ன நினைக்கிதுகளோ யாருக்கு தெரியும்!..
சும்மா நீ கண்டதையும் கற்பனை பண்ணிக்கொண்டு அதுங்களையும் கெடுக்காத. என்ன நடக்கோணும் எண்டிருக்கோ அது நடக்கும்." என மனைவியை கண்டித்தவரிடம்.
"நீங்கள் பேசாம இருங்கோ!.. என் புள்ளைய அமுதாவுக்கு தான் கட்டி குடுப்பன்.
என்ர அண்ணாவோட குடும்பத்தோட காலத்துக்கும் நாங்கள் எல்லாரும் சேர்ந்தே இருக்கோணும்.
புதுசா குடும்பத்துக்கு ஒருத்தி வந்து எங்கட அன்ப விளங்கிகொள்ளாமல் பிரிச்சிட்டாள் எண்டா?....
நீங்கள் வேணுமெண்டா இருந்து பாருங்கோவன், என்ர புள்ளையும் அமுதாவை தான் கட்டுவன் எண்டு சொல்லுவான்." என உறுதியாக கூறிய மனைவியின் பேச்சை கேட்ட பிரகாஷ்.
" ரஞ்சி!.. நீ பயப்பிடுறது சரிதான். ஆனா நான் என்ன சொல்லுறன் எண்டா,
குழந்தைகளின்ர மனசில ஏன் இப்பயே இந்த மாதிரியான எண்ணத்தை எதுக்கு திணிக்கோணும் எண்டு தான்ம்மா கேக்கிறன்!. விளங்கிக்கொள்!..
இப்ப புள்ளை என்ன படிக்கோணும் எண்டத மட்டும் தான் மனசில பதிக்கோணும். இது எல்லாம் தேவையில்லாத கதை.
என்ன நடக்கோணும் எண்டு காலம் சொல்லட்டும்.
நாங்களா எங்கட மனசில ஆசைய வளக்க வேண்டாம்.
நாளைக்கு நாங்கள் ஆசை படுறது நடக்கேல எண்டா மனம் உடைஞ்சு போகபோறது நாங்கள் தான்.
நான் என்னத்துக்கு சொல்லுறன் எண்டு விளங்கிக்கிக்கொள்!" என்க.
அவன் சொல்வதும் சரிதானே!. நாளை வேறு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது அவளை தான் திருமணம் செய்து தா!.. என மகன் நின்றால் அவர்களால் என்ன செய்ய முடியும்?..
கணவன் சொல்வதும் ஒரு விதத்தில் சரியென பட.
"நீங்கள் சொல்லுறதும் சரி தானங்கோ. ஆனா அண்ணாவும் நானும் முதல்லயே கதைச்சு வைச்சிட்டம்.
நாங்கள் ரண்டு பேரும் தான் சம்மந்திமார் எண்டு. அதில எந்த மாற்றமும் இல்லை." என்க.
தான் சொல்வது புரிந்தும் பரியாமலும் பேசும் மனைவியை என்ன சொல்வதென்றிருந்தது பிரகாஷிற்கு இருந்தும்,
" திரும்ப திரும்ப ஒண்டையே சொல்லாத ரஞ்சி.
நடக்கிறத பேந்து பாப்பாம்.
இப்ப வா உன்ர அண்ணா நீ இல்லாமல் மருமகளை கேக்கு வெட்ட விடமாட்டார்.
கேக்க வெட்டினால் தான் நாங்களும் போகலாம்." என கூற.
"உங்களுக்கு எங்கட பாசத்த பாத்து பொறாமையங்காே.
அது தான் இப்பிடி கதைக்கிறீங்கள்." என்றவாறு கணவனுடன் சேர்ந்து அந்த ஹாலின் மையப்பகுதியில் சிறுவர்களது கார்டூனான டோரா வடிவில் அமைக்கப்பட்டிருந்த கேக்கின் அருகில் வந்த ரஞ்சனி தம்பதியினர்.

அங்கு ஆதித்தியனும், அமுதாவும் கேக்கினை காட்டியே தமக்குள் சுவாராசியமாக பேசியவாறு இருக்க "அமுதா செல்லம் கேக் வெட்டுவோமா?.." என அவள் அத்தை கேட்க.
"ஓ... வெட்டிடலாமேத்தை!.." என குதூகலத்துடன் பெரிதாக கூறிய அமுதாவின் கன்னத்தில் முத்தம் வைத்த ரஞ்சனி.
"அண்ணி நீங்கள் ரெடி எண்டாக் கேக்க வெட்டுவம்." என கூற.
"வெட்டுவம் ரஞ்சி." என்ற கவிதா,
"அம்மு..... ரெடியாடா!" என்க.
"ஓ....." என குஷியாகவே தலையசைத்தவள்.
"ஆதி நீயும் என்னோட சேந்து கேக்கு வெட்டிறியா?.." என தலையசைத்தவாறு அதித்தியனிடம் கேட்க.
அவனாே "அம்மு இண்டைக்கு உன்ர பர்த்டே தானே நீயே வெட்டு.
நான் பக்கத்திலயே நிக்கிறன் சரியா?.." பெரிய மனுஷன் தோரனையில் எடுத்து சொன்னவனை ரஞ்சியும், கவிதாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்து தமக்குள் புன்னகைத்தவர்கள்.

"அம்மு மெழுகுதிரியை ஊதி நூத்து(அனைத்த) கேக்க வெட்டு" என கவிதா சொல்ல.
அவளும் அதே போல் செய்ய கரவோஷமும் , கோல்ட்டன் சவர், பர்த்டே சாங்க் என்று என்று அந்த இடமே ஆர்பரித்திருந்தது..
கேக்கை வெட்டிய அமுதா காவிதாவின் வாயருகில் கேக்கினை கொண்டுசென்றவள்,
அவள் அதை வாங்கிக்கொள்ள வாய் திறக்கும் சமயம் என்ன நினைத்தாளே சட்டென அதை இழுத்தவள்,
ஆதிக்கு ஊட்டிவிட ஏமாற்றமாக உணர்ந்தாள் கவிதா,
"என் குடும்பத்தையே நல்லா வசியம் பண்ணி வச்சிருக்கிறீங்கள் அம்மாவும், புள்ளையும்.
இவரு ரஞ்சி, ரஞ்சி எண்டு அம்மாண்ட புராணம் படுரார்.
இவ ஆதி ஆதி எண்டு புள்ள புராணம் பாடுறாள்.
என்னை கவணிக்கத்தான் இங்க ஆருமில்ல." என பொய்யாக கோபம் கொண்டவளை கண்டு பெருமையாக புன்னகைத்த ரஞ்சனி.
"அண்ணி உங்களுக்கு சரியான அவங்கள்ள பாசம் காட்ட தெரியேல.
அதால தான் எங்களிட்ட அண்ணாவும், பொண்ணும் தேடி வாராங்கள்." என்றவளை.
"அது பாசமில்ல ரஞ்சி. உன்ர குடும்பமே என்ர குடும்பத்துக்கு ஸ்பெஷல ஏதோ வசியம் மை வைச்சிருக்கிறீங்கள் போல." என கூற
அங்கு வந்தவர்களோ இவர்களது பாசத்தினையும், கேலி பேச்சினையும் கண்டு மெச்சுதலாக புன்னகைத்து நின்றது.

இதே அன்பு கடசிவரை தொடருமா?..

தொடரும்.......
 
Status
Not open for further replies.
Top