சந்தன நிற பளிங்கு கற்களால் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டு காதலையும் காஃபியையும் இணைத்து பல வகையான காதல் கனவுருவங்களின் காதல் ததும்பும கப்புள்ஸின் அழகான ஒட்டும் காகித வடிவமைப்பு திரும்பும் திசையெல்லாம் நேர்த்தியாக ஒட்டப்பட்டு அழகாக காட்சி தரும் வகையில் இடைவெளியோடு சுவர்களில் பதிக்கப்பட்டிருந்தது. மெல்லிய ஊதா நிற விளக்குகள் மர மேசைகள் மீது பட்டு ஒளி வழியும் எழில் வடிவில் பிரத்தியேகமாக ஒவ்வொரு டேபிள் மீதும் தனி தனி வண்ண விளக்குகள் மேலே பொருத்தி.. இதமான காதல் பேச்சுக்கான சரியான இடமாக காட்சி அளித்தது ஒயிட் மூன் கஃபே.
அழகான சூல்நிலை மனிதனின் மனநிலையை மாற்றாது..ஆம் கோபமாக அவள் சிவந்த அதரங்கள் சினத்தோடு அவன் பெயரை பற்களின் இடுக்கில் அழுத்தி " மேகன் பிக் மை கால்..யூ இடியட் " என்று பத்தாவது முறையாக அவன் எண்ணிற்கு அழைத்த விட்டாள் அனிகா. ஏற்கனவே கோப நிலையில் இருந்தவள் கொதிநிலை கூட்டியது மேகனின் அலட்சியம்.மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும் அதே கதை தான். செல்போனை செவியோடு அழுத்தி.. அவன் மீது எழும்பிய கோபத்தில் அவனை நினைத்து ஆத்திரத்தில் டேபிளில் இடது கையால் ஓங்கி குத்தினாள் அனிகா. அந்த அதிர்வு தாங்காது பீங்கான் கப்பில் நிறைத்து, சாக்லேட் சிரப்பில் காஃபியின் மீது பொறிக்க பட்ட இதய வடிவம் கலைந்து..கவிழ்ந்து அவள் கையை பதம் பார்த்தது " ஸ்..ஆ " என அலறி வேகமாக கையை டேபிளை விட்டு உயர்த்தி.. உடல் உதற பதறி தள்ளி வந்தாள் அனிகா.
" என்ன ஆச்சி மேடம் " என்று பதறிப்போய் அருகில் வந்தாள் அந்த கஃபேயில் உள்ள பெண் ஒருத்தி வேகமாக வந்து அங்கு டேபிளில் வழிந்தோடிய சூடான காஃபியை டிஸ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து, சில நொடியில் பழைய நிலைக்கு மாற்றிவிட்டு " மேடம் வேற காஃபி " என பவ்யமாக கேட்ட பெண்ணை முறைத்து பார்த்து
" நோ நீட், எல்லாம் அவனால தான் ஹே.. யூ.. இவ்ளோ லோ குவாலிட்டி பர்னிச்சர்ஸ் தான் காஃபேல யூஸ் பண்ணுவிங்களா? " கிடைத்த அப்பாவியிடம் கத்த தொடங்கி விட்டாள் அனிகா. அவன் மீதுள்ள கோபம் இந்த பக்கம் பாய, அந்த பெண் தலை கூட நிமிர்த்தவில்லை
" ஸாரி மேடம்." என்று அதே இடத்தில் நிற்பவளை இளக்காரமாக எடை போடும் விழியோடு இமை சுருக்கி, கசங்கிய காட்டன் ஆடையையும் அவள் நிறத்தையும் ஏற இறங்க பார்த்து, ஏளனமாக நகைத்து, முகத்தை சுழித்து தன் ஒற்றை விரல் தள்ளி விரட்டினாள் அனிகா.. அந்தப் பெண்ணை போக சொல்லி, எதிரே எளிமையான தோற்றத்தோடு நிற்பவளை காண பிடிக்கவில்லை அவளுக்கு,தன்னைஅவமதிப்பது புரிந்தும்.. சின்ன புன்னகையோடு தலை அசைத்து பில்லிங் கவுன்டர் அருகில் உள்ள சிஸ்டத்தில் அமர்ந்து உள்ளே கோப்புகளை திருத்த முடியாமல்.. மீண்டும் அனிகாவை பயத்தோடு எட்டி எட்டிப் பார்த்தால் இவள்.உடை நேர்த்தி முக அலங்காரம் நவ நாகரீகமான அழகு பெண் தான் ஆனால் ரசிக்க முடியவில்லை. தன் கைகளின் கார்மேக வண்ணத்தை பார்வை பதித்து முணகினால் அப்பெண் " தோல் மட்டும் வெள்ளையா இருந்து என்ன பண்ண திமிரு.. அதுவே தள்ளிவிட்டுட்டு ஹே.. யூ டேபிள் தரமா இல்லைனு சொல்லுறா பைத்தியம் " என்று எண்ணி 'அவ
லவ்வர் மேல உள்ள கோபத்தை எங்க மேல காட்டுது. டேபிள உடைச்சதுக்கு நான் தான் திட்டனும்,மட்டமா என்ன லுக் அது கருமம்,பேரழகி கிளியோபாட்ரா கூட இவ்ளோ சீன் போட மாட்டாங்க. யப்பா.. இவகிட்ட மாட்டுன அந்த பையன் பாவம்..பா ' என்று அந்த காதலனுக்கான பிரத்தனை செய்தால் மதி.
மதி -" அண்ணா அந்த பொண்ணு தானா பணம் தந்தா வாங்குங்க தர முடியாது னு சண்டை போட்டா விட்டுடுக்க, பிரச்சனை பண்ணுற ஆளா தெரியுறாங்க "நடுக்கம் கலந்த பயத்தோடு கூறினால் மதி.
முருகன்_"என்னமா பில் வேணாம் னு சொல்லுற ? முதலாளிக்கு தெரிஞ்சா அம்புட்டு தான் வைவாங்க "
" நான் சொல்லிக்குறேன். பிரச்சனை வேணாம் அண்ணா.. சில நேரம் ஒதுங்கிடனும். காசவிட நிம்மதி முக்கியம் "
முருகன் - " இப்படி தினமும் நாலு பேர் வருவாங்க ஓசியிலே கொடுக்க முடியுமா? உன்ன நம்பி கடைய விட்டவரு வரட்டும் " என்று அவர் பங்கிற்க்கு அவரும் மிரட்டிவிட்டு செல்ல.. உள்ளே
வந்தான் காதலன்.!!
இருவருக்கும் அத்தனை அழகான ஜோடி பொருத்தம்.இள மஞ்சள் சட்டையில் கைகள் மடித்து விட்டு அவளிடம் கர்வம் இல்லாமல் கெஞ்சிடும் ஆணின் அழகை ஒர விழியில் ரசித்தால் மதி. எரிமலையும் பனிமலையும் எதிர் எதிரே நல்ல வேடிக்கை தான் மதிக்கு.
எப்படியோ.. சமாளித்து காதல் வித்தை காட்டி பேய் கோபம் கொண்ட அனிகாவை சமாதானம் செய்து அமர வைத்தான் மேகன்.
தூரமாக மொழியில்லா படம் போல தெரிந்தது இருவரின் சண்டை, எத்தனையோ காதலர்கள் வரும் இடம் இது.யார் காதல் மீதும்.. அவர்கள் கதையின் மீதும் இவளுக்கு ஆர்வம் வந்தது இல்லை. இன்று ஏன்? அடுத்தவர் உலறும் ரகசியம் அறிய ஆர்வம் தாங்காமல், தனக்கு ஒரு கஃபி வேண்டும் என பொய்யாய் கேட்டு வாங்கி கதை கேட்க.. அவர்கள அருகில் உள்ள டேபிளில் சென்று காதை தீட்டினாள் மதி.
" சண்டை வந்தா உடனே வேணா பிடிக்கலை, பிரேக் அப் னு பேசாத டி.. மூணு வருஷ லவ் அனி குப்பை கிடையாது "
" நிஜத்துக்கு ஒத்துவராத உறவ ஒட்ட வச்சு என்ன ஆகப் போகுது"
" லேட்டா வந்ததுக்கு இப்படி பேசுறது ஒவர் டி"
" நானும் அதான சொல்லுறேன் இட்ஸ் ஓவர் என்னை தொந்தரவு பண்ணாத லெட்ஸ் பிரேக் அப்" என்று வெளியே செல்ல எழுந்தவள் கரத்தை பிடித்து நிறுத்தினான் மேகன் "அனி ஒரு குட் நியூஸ் சொல்லனும்.
ஏற்று இறக்கமாக புருவம் வளைத்து" என்ன குட் நீயூஸ் மேகன் மேனேஜர் ஆ.. ப்ரமோட் ஆகிட்டியோ? சிக்ஸ் டிஜிட் ல சம்பளம் வரப்போகுதா? "நக்கலாக அவனை பார்வை பார்க்க
" என்ன தான் டி உன் பிரச்சனை ?"தலையில் விரலால் நீவியபடி கேட்டான்.
" விடாம பிடிச்சு வைச்சுக்குற மேகன். விட சொன்னா எமோஷனல் டிராமா பண்ணுவ, காதலுக்கு தகுதியோ பணமோ தேவையில்லை, பட் ரியாலிட்டி அது இல்லை மேகன். நான் காதலிக்கும் போது நீ வளரவே மாட்ட னு எனக்கு தெரியாது உன்ன பிடிச்சது காதலிச்சேன் ஆனா மூணு வருஷத்துல எதுவும் மாறல மேகன். பத்தாம எண்ணி செலவு பண்ணுகிட்டு, இல்லைனு புலம்பி சண்டை போடுற வாழ்க்கை எனக்கு தேவையில்லை "அலட்சிய பார்வை பார்க்க..
வெறுப்பாக பார்த்தாள் " அட்வைய்ஸ் எல்லாம் ப்ளீஸ் வேணாம். இப்படி பேசி பேசி தான் மயக்கி மூணு வருஷமா உன்கிட்ட நான் ஏமாத்துட்டேன். எனக்கு என்ன வேணும் எதுல சந்தோஷம் னு எனக்கு தெரியும். காதல பாசம் பைசா லாபம் இல்லாத விஷயத்தை வைச்சு பிடிக்காம அழுத்துற புழுக்கத்தோட அட்ஜெஸ்ட் பண்ணி என்னால வாழ முடியலை போதும் இதோட முடிச்சுக்கலாம்"
கிண்டலாக சிரித்தபடியே " என்ன தவிர யாரால உன்ன சகிச்சிக்க முடியும் அனி " அவளின் வலக்கரத்தை அழுத்தமாக பிடிக்க உதறியவள்"என்ன சகிச்சுக்க யாரால முடியும் ? ம்..ம்.. எத்தனை பிரபோசல் எனக்கு வருது தெரியுமா? முடிக்காம ஆரம்பிக் கூடாது னு நெனைச்சேன் பாரு..ஏன் பிடிக்காம கஷ்டப்பட்டு சகிச்சு வாழனும் சொல்லு,
எல்லாமே மாறிடும் அப்படிங்கற வெறும் மோட்டிவேஷன் வார்த்தையால ஒண்ணுமே நடக்காது. இந்த மூணு வருஷத்துல மாறாததா, இனிமே மாறப்போகுது.
வெறும் கற்பனை கயிறு பிடிச்சு கிட்டு என்னால ஒரு வாழ்க்கை நடத்த முடியாது.பணம் முக்கியமில்லை, அன்பு.. பாசம் காதல்.. உறவு அப்படிங்கிற வெட்டிப்பேச்சு கேட்க எனக்கு நேரம் கிடையாது.
என் பிரெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப சக்ஸஸ்புல்லான பார்ட்னர் ஓட நிம்மதியா இருக்காங்க, ஐ எம் ஸ்டக் வித் யூ.. இட்ஸ் இன்ஃப் மேகன். எண்டு திஸ் இன்கம்பாட்டிபில் ரிலேஷன்ஷிப்.
"எத்தனை தடவை சொல்றது அனி நம்மளோட சந்தோஷம் நம்ம கிட்ட தான் இருக்கு. மத்தவங்க கிட்ட கிடையாது.தேவை இல்லாம வார்த்தை விடாதே, நான் ஒன்னும் ஃபெயிலியர் கிடையாது. விரும்பி தான் லவ் பண்ணோம் உன்னை காதலிக்க சொல்லி நான் கட்டாயப்படுத்தல, நீ ரொம்ப மாறிட்ட அனி.. நமக்காக யோசிக்காம மத்தவங்களுக்கு நம்மள ரிச்..ஆ காட்டிக்கணும் னு யோசிக்க ஆரம்பிச்சுட்ட, அந்த மாதிரி போலி ஆடம்பரத்தை என்னால ஆஃப்பெர்ட் பண்ண முடியாது "
" எனக்கு புடிச்ச வாழ்க்கை எனக்காக காத்திருக்கு வழி விடு மேகன் "
" அப்ப என்ன ப்ரேக் அப் பண்ணிட்டு க்யூல நிக்கிறவங்கள அக்சப்ட் பண்ண போற "என்று சிரிப்பவன் கண்டு எரிச்சல் கொண்டு கத்தினால் அனிகா."ப்ரோபோசல் அக்செப்ட் பண்ணதால தான் உன்னை பிரேக்கப் பண்றேன் மேகன் "
என்றதும் துளி மாறாத புன்னகையோடு காதலன் நம்பிக்கையோடு அவளை பார்க்க " விளையாட்டுக்கு சொல்லலை மேகன் " தனது மொபைல் எடுத்து நெருக்கமாக ஒரு ஆணுடன் இருக்கும் புகைபடத்தை காட்டினாள் அனிகா. அதுவரை அவள் கையை உரிமையாக பற்றி இருந்தவன் சட்டென எழுந்து அவள் முகம் பார்க்காது திரும்பி விலகி நின்றான்.
" எமோஷனல் டிராமா வேணாம்.. நீ சொல்லுற எந்த வார்த்தையும் என் முடிவ மாத்தாது. ஐயம் எங்கேஜ்ட் வித் ஹிம் மேகன். நான் ஆசைபடுற வாழ்க்கை அவனால தர முடியும். துரோகம் பண்ணிட்டேன் அனி னு புலம்பி சண்டை போடாம, பிரச்சனை இல்லாம முடிச்சுகலாம். லெட்ஸ் பிரேக் அப் " என ஏதேதோ அவள் சொல்வது இவன் காதில் விழவே இல்லை. உடைந்து போய் பக்கத்து டேபிளில் இருக்கும் மதிமுகம் பார்த்தவாறு நின்றான் மேகன்.
அவன் வேதனை தாங்கிய முகம் சம்மந்தமே இல்லாது வேடிக்கை பார்க்க வந்து அருகில் அமர்ந்தவளை ஏதோ செய்தது.
கனத்த கார்மேகம் மழை பெய்ய போகும் தருணம் காற்று வந்து கலைப்பது போல.! அவன் விழிகள் வலிகளை மழையாக பொழியும் முன், இமைகளை அடித்து.. அடித்து.. நிரம்பிய கண்ணீரை உள்இழுத்து,
காதலிக்கு தெரியாமல் மறைத்தது மேகனின் விழிகள். எத்தனையோ முறை நீ வேண்டாம் என்று அனிகா சண்டையிட்டு இருக்கிறாள் எப்படியோ பேசி சரிகட்டி விடுவான் மேகன். ஆனால் இன்று வார்த்தைகள் வராமல் நெஞ்சை அடைத்தது. பூமியின் மொத்த எடை வந்து நெஞ்சில் மோதுவது போல, தாங்க முடியாத பாரம் உணர்ந்தான் மனதில். இதுவரை உண்மையாக நேசித்தவன் காதலை உடைத்துப் போட்டுவிட்டாள் அனிகா. வேறு ஒருவனை பிடித்ததால் நீ வேண்டாம் என்ற சொல்லில், அந்த புதியவனின் வசதியான வாழ்வு.. பண செழிப்பும் தன் அன்பை காதலை காதலிக்கு மறக்க வைத்து விட்டது என்ற உண்மை வலித்தது. மறு வாய்ப்பு கேட்க சொல்லி கெஞ்சிட சொன்னது காதல் கொண்டவன் மனம். ஆனாலும் திரும்பாமல் அப்படியே ஆணி அடித்தார் போல நின்றான்.
பொறுமையை இழந்த அனிகா கத்தினால்" மேகன் பதில் சொல்லு எனக்கு, என்னால உனக்கு எந்த தொந்தரவும் வராது. உன்னாலயும் எனக்கு வரக்கூடாது. ஆபிஸ் முன்னாடி நிக்குறது, தினமும் கால் பண்ணி டார்ச்சர் பண்ணுறது எல்லாம் வேணாம் மேகன். " என்று திரும்பி நின்றவன் சட்டையில் எப்போதும் போல கை வைக்க, உடனே உடலை உதறி விலகி.. எதிரே மதி அமர்ந்த டேபிளில் போய் அமர்ந்தான் மேகன்.
அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் அவனையே பார்த்தால் கனிகா.
மேகன் மேசையின் மீது வைக்கப்பட்ட டிஸ்யூ பேப்பரை எடுத்து அவனது நம்பரை எழுதி அவள்(மதி) முன் வைத்துவிட்டு " நீங்க யாரையாவது லவ் பண்ணுறீங்களா?" குடித்த காஃபி புரை ஏற.. அவசரமாக இல்லை என்று தலை அசைத்தாள் மதி.
" ஐ லவ் யூ.. இதுதான் என் நம்பர் " என்று அனிகா இருக்கும திசையில் திரும்பாது எழுந்து வெளியே சென்று விட்டான் மேகன்.
காஃபி கப் அந்தரத்தில் இருக்க அதிர்ச்சியில் மதியின் விழி அகல விரிந்தது. அனிகாவின் முகமும் மனமும் செத்துப் போனது மேகன் இப்படி ஒரு பதிலடி கொடுப்பான் என்று எதிர்பார்க்க வில்லை அவள்.
நெருப்பை அள்ளி கொட்டும் விழியால் எரித்தால் அனிகா. காஃபி கப் பிடித்தவாறு உறைந்து இருக்கும் காதலனின் திடீர் காதலியை, மேகன் தனக்கு இல்லை என்பது ஏற்க முடியவில்லை. இதயம் அழுத்தி வலித்தது. நீ எனக்கு வேண்டாம் என்று புது காதலியை அறிமுகப்படுத்தி வலிக்க உணர்த்தியவன் மீதும் கோபம் தீயாய் மூண்டது. துளி கூட வருத்தமில்லாமல் தன் முன்னே புது காதல் காட்சியை காட்டி சென்றது பெருத்த ஏமாற்றத்தை தந்தது.வெளியே தனக்காக காத்திருந்த சொகுசு காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் அனிகா. அவளை அருகில் இருந்தவனது இரும்பாக இறுகிய முகமே வரவேற்றது, பயணம் முழுவதும் மௌனமே.. ' அவ்வளவுதான் என் மேல இருக்கு காதலா மேகன். எத்தனையோ முறை வேணாம்னு நான் சொல்லி இருக்கேன். ஆனா நீ சொல்லாம சொல்லும் போது வலிக்குது டா.. என்ன மிஸ் பண்றது உனக்கு வருத்தம் இல்லையா? என் முன்னாடியே அவள ப்ரொபோஸ் பண்ற.. வெட்டி விட்டு விலக தான் வந்தேன். என்ன விட்டு போக தான் சொன்னேன். போக மாட்டேன்னு நெனச்சேன்.நீ போன உடனே பரமா அழுத்துது இங்க' இதயத்தில் கை வைத்தால் 'இப்ப நீதான் வேணும்னு மனசு சொல்லுது தப்பு பண்ணிட்டேனா மேகன்.' என்ற சிந்தனை அலைகள் ஓயாமல் அடித்தது.
அரவிந்த்"எவ்வளவு நேரம் நிஹா உனக்காக வெயிட் பண்றது" குறைபடும் தொனியில் சிகரெட் ஐ பற்ற வைத்து புகையை உள்ளிழுத்து புது காதலன் வெளியிட, சுற்றிலும் கண்ணாடி அடைப்பட்டு இருக்கும் காரில் மொத்தமாக புகைப்படர்ந்து கழுத்தை நெரிக்கும் உணர்வு கனிகாவிற்க்கு "லொக் லொக்" என்று இருமல் எடுக்க கண் கலங்கியது.
"ஸ்டாப் ஸ்மோக்கிங் இம்மீடியட்லி அரவிந்த் ."
அதிகாரமான பார்வையோடு அழுத்தமாக சொன்னான்"ஐ வொண்ட் ஸ்டாப் ஸ்மோக்கிங். பெட்டர் யூ ஓபன் தி கார் விண்டோ நிஹா " உனக்காக என்னை மாற்றிக் கொள்ள முடியாது என்ற பிடிவாதம் செருக்கும் அந்த ஆண் குரலில் திமிர் தெறிக்க இருந்தது.
அனிகா வேகவேகமாக காரின் விண்டோவை திறந்து வெளிக்காற்றை சுவாசித்த பின்பு தான் உயிர் வந்தது."உனக்கு பிடிக்காது தெரியும். நான் சிகரெட் தொடவே மாட்டேன் அனிமா " என்று பேசிய நேசம் கொண்டு நெஞ்சில் தாங்கியவன் சிரித்த முகம் கண் முன்னால் வர, வான் மேகத்தை அனார்ந்து பார்த்தவளுக்கு கண்ணீர் வந்தது.