எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா 18

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!


அத்தியாயம் 18


இடைத்தேர்தல் நெருங்கி விட்டது முழு முயற்சியாக வேட்பாளர்கள் அனைவரும் அவர்களது வாக்குகளை சேகரிக்கும் படலத்தில் இறங்க, இங்கோ ஆளும் கட்சி சார்பாக தேர்தலில் நிறுத்தப்பட்டரின் துரோகத்தை விட சந்தோஷ் ராகவேந்திரா தன் தம்பி மகனை தந்திரமாக வேட்பாளராக்கிவிட்டார் என கட்சி அலுவலகத்தில் புகைய ஆரம்பித்தது.


அன்று கூட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக முனுமுனுக்க முதல்வர் சந்தோஷ் ராகவேந்திரா கடும் கோபத்தில் பேச ஆரம்பித்தார்.


“நான் உங்க விருப்படி நீங்க நிறுத்த சொன்ன ஆள தான வேட்பாளரா அறிவிச்சேன்.. அவர் வாப்பஸ் வாங்க நானா காரணம்? அவன் முதுகுல குத்திட்டு போனது தப்பில்ல கட்சிக்காக யோசிச்சு யோசிச்சு ஒவ்வொன்னையும் பண்ற நான் சுயநலவாதியா?


சரி விடுங்க இப்போ என்ன என் புள்ள நிக்க கூடாதா? வாப்பஸ் வாங்குற நாளும் முடிஞ்சு போச்சு இனி வாப்பஸ் கூட வாங்க முடியாது.


பிரஸ்ஸ கூட்டி எங்க கட்சி சார்பா என் மகன நிற்க வச்சது தப்புதான். அதுனால எங்க கட்சி சார்ப்பா என் மகனுக்கு யாரும் ஓட்டு போட வேண்டாம். இடைத்தேர்தல்ல இருந்து எங்க கட்சி விலகுதுனு சொல்லலாமா?” என காட்டமாக கேட்க,


“தலைவரே என்ன இப்படி சொல்லிட்டிங்க.. நம்ம தம்பி எப்படி கட்சிக்கு உழைக்குது.. நாம முன்னவே தம்பிக்கி சீட் கொடுத்திருக்கனும்.. தம்பி விருப்பம் தெரிவிக்காம இருந்ததால தான் நாம விட்டுட்டோம். இப்போ நல்ல காலமா தம்பிக்கே வாய்ப்பு வந்துருக்கு.. நம்ம தூக்கிவிடாம யாரு தூக்கிவிடுவா நம்ம தம்பிய.. நாங்க இருக்கோம் தலைவரே கட்சிக்காகவும் தம்பிக்காகவும் நாங்க உழைப்போம்” என முத்த தலைவரின் மகனான தற்போதைய இளைஞர் அணி சங்கத்தின் செயலாளரும் விராஜ்ஜின் மீது பாசமுடைய சிவா கூற, மீண்டும் சில சலசலப்பு, விராஜ்க்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும்.


விராஜ் “எனக்கு எலெக்‌ஷன்ல நிற்கனும்னு எந்த விருப்பமும் இல்ல.. இப்போ இடைத்தேர்தல்ல எதிர்கட்சி தன் பலனை காட்டியே தீரனும்னு மும்மரமாக இருக்காங்க.


அவங்க நியாயமா நின்னு போட்டி போட்டா நாமளும் நியாயமா இருக்கலாம் ஆனா அவங்க குறுக்கு வழிய ஊள்ள நுழைய ஆசைப்பட்டதால தான் நாமளும் நம்ம பாதுகாப்புக்கு எதாவது ஒரு பிடி வச்சிருக்கனும்ல.. அதுனால தான் சீக்ரெக்ட்டா நான் மனு தாக்கல் பண்ணி வச்சிருந்தேன்.. நிஜமா இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கோ, பெரியப்பாவுக்குமோ தெரியாது.


இப்பவும் உங்க எல்லாருக்கும் விரும்பம்னா மட்டும் தான் பிரச்சாரத்தை ஆரம்பிப்போம் இல்லைனா.. பெரியப்பா சொன்னபடி அறிவிச்சிடலாம்.. இந்த ஒரு சீட் போனா போகுது.. அடுத்து வர எலெக்‌ஷன்ல நம்ம போட்டிபோடலாம்.. இப்போ நீங்க தான் சொல்லனும்”


“அதெப்படி தம்பி இவ்ளோ தூரம் வந்த பிறகு பேக் அடிச்சா நம்ம கட்சிக்கு தான் அசிங்கம்.. எங்க ஆதங்கம் என்னன்னா ஷேஃப்டிக்கு பண்ணிங்க தான் ஆனா அதை மூத்த கட்சிக்காரங்க கிட்டயாவது சொல்லிருக்கலாம்.. அவங்க ஆலோசனையில ஆள எடுத்திருக்கலாம்.. தம்பி இப்போ தான் கட்சிக்குள்ள வருது.. வந்தோடனயே எம்.எல்.ஏ சீட் தூக்கி கொடுத்துட்டீங்களேன்னு தான் ஆதங்கம்.. இங்க வருஷக் கணக்குல கட்சிக்கு உழைக்கிற ஆட்கள் இருக்காங்கல அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்னு தான் பேசினோமே தவிற வேற ஒன்னும் இல்ல.


கட்சி சார்பா தம்பியே நிக்கடும் எல்லாரும் ஒருமனதா பிரச்சாரம் பண்ணலாம்.. என்னப்பா?” என பிரச்சனையை ஆரம்பித்து விட்டவனே கேட்க, அவன் பின் இருந்த அனைவரும் தலையை உருட்டினர்.


“அப்புறம் என்ன நாளையில இருந்து பிரச்சாரம் ஆரம்பிக்கலாம்” என கூறி, கூட்டத்தை கலைத்தார் சந்தோஷ் ராகவேந்திரா.


“பெரியப்பா..” என அவர் பின்னாலே சென்றான் விராஜ்.


“டென்சனா இருக்குடா.. ஒரு டீ சொல்லு” என்றவர் தொடர்ந்து,


“இவனுக்கு எவ்ளோ திமிர் பார்த்தியா.. கூட ஒரு கூட்டத்தை கூட்டிட்டு என்னமா பேசுறான்.. முதல்ல இவன தட்டி உட்கார வைக்கனும் இல்ல கட்சியில குழப்பம் பண்ணிட்டே இருப்பான்”


“சரி தான் பெரியப்பா” என ஒரு மார்கமாக சிரித்தான் விராஜ்.


“டேய் டேய் நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன் ஒன்னும் பண்ணிடாதடா.. இன்னைக்கு அவன் நம்மள பேசினதால நாம தான் பிளான் பண்ணி பண்ணினோம்னு சொல்வான்”


“பெரியப்பா” என சிரித்தான் விராஜ்.


“நிஜமா சொல்றேன் விராஜ் ஒன்னும் பண்ணாத.. எலெக்‌ஷன் நேரம்”


“சரிங்க பெரியப்பா.. ஒன்னும் பண்ண மாட்டேன்” எனக்கூறவும் தான் அமைதியானார். ஆனால் அப்படியே விடுவானா விராஜ்? அவன் பாஷையில் பதில் கொடுக்காவிட்டால் அவன் என்ன நாயகன்? சீக்கிரமே பதிலளித்து விடுவான்.


*******


ஒரு வாரம் கடந்த நிலையில் இன்று தான் இரவு உணவு முடிந்து சாத்விகா மற்றும் பிரணவிகா இருவரும் சேர்ந்து அவர்களது அறைக்கு வந்தனர்.


பிரணவிகா “ஹப்பா இன்னைக்கு தான் இரண்டு பேருக்கும் நைட் டியூட்டி இல்ல.. ஹப்பா இந்த இண்டர்ன் வச்சி செய்யுது.. மனசாட்சி இல்லாம இப்படி படுத்துறானுங்க.. கைனோல 12 ஹவர்ஸ் டியூட்டிக்கே இப்படி நாக்கு தள்ள ஆரம்பிச்சிடுச்சு.. இனி சர்ஜரிய நினைச்சு பாரு.. ஹப்பா இன்னைக்கு காலையில 8மணிக்கு ஆரம்பிச்சா நாளைக்கு மதியம் 2 மணிக்கு தான் முடியும்.. அத நினைச்சாலே எனக்கு கண்ண கட்டுது” என அலுப்பாக சொன்னாள்.


சாத்விகா “கேர்ள் நான் ஒன்னு சொல்லனும்”


“என்னடி சொல்லு”


“இல்ல கேர்ள்.. நான் இண்டர்ன் வேற ஹாஸ்பிடல்ல பண்ண கேட்டுருக்கேன்”


“வாட்? அதெப்படி விடுவாங்க இங்க தான பண்ணனும்?”


“ஆமா தான் இங்க தான் பண்ணனும் ஆனா நான் விஹான் அத்தான் கிட்ட ரொம்ப கஷ்டப்பட்டு கேட்டுருக்கேன்”


“எதுக்கு? ஏன்? நம்ம காலேஜ்.. நம்ம ஹாஸ்பிடல்.. நம்ம ஊர்.. நம்ம வீட்டுல இருந்து ஜாலியா போட்டு வரலாம்.. உனக்கு இதுல என்ன ப்ராப்ளம்?”


“நீ சொன்ன எல்லாம் தான் ப்ராப்ளம். எனக்கு இந்த நம்ம.. நம்ம.. நம்மள இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கனும்னு தோனுது.. அதான் விஹான் அத்தான் கிட்ட ஹெல்ப் கேட்டேன்”


“லூசா நீ இங்கனா நமக்கு எவ்ளோ ஷேஃப்டி.. இத விட்டுட்டு தெரியாத இடத்துக்கு போறேனு சொல்ற? நியூஸ்ல எவ்ளோ வருது ரீசண்ட்டா கூட கொல்கத்தா இஸ்ஸூ பார்த்தில.. அப்பறமும் எப்படி நீ இப்படி யோசிக்கலாம்?”


“ஏன்னா எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுது. மனசு நிலையில்லாம இருக்கு எனக்கு என் வாழ்க்கையில என்ன முடிவு எடுக்கனும்னு தெரியாத குழப்பத்துல இருக்கேன்.. அதுக்கு எனக்கு தெளிவு வேணும்னா எனக்கு இந்த தனிமை தேவை”


“என்னடி சொல்ற எனக்கு ஒன்னுமே புரியல.. புரியுற மாதிரியே நீ பேச மாட்டியா?” எனக்கேட்க கண்களை இறுக மூடித் திறந்தவள் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு,


“எனக்கு விராஜ் அரசியல்ல இருக்குறதுல விருப்பம் இல்ல. இது தான் எங்களுக்குள்ள இருக்குற பிரச்சனை. எனக்கு அவன் விஹான் அத்தான் மாதிரி இருக்கனும்”


“அதுக்கு நீ உன் விஹான் பொத்தானைத் தான் விரும்பியிருக்கனும்” என கோபமாக சொன்னவள் தொடர்ந்து


“அவன பத்தி தெரிஞ்சு தான லவ் பண்ணின? அவன் கேரக்டர் ஜோவியலா ஜாலியான பெர்ஷன்னு தெரிஞ்சு தான லவ் பண்ணின? அவனுக்கு பிஸ்னஸ் இண்டர்ஸ்ட் இல்ல எனக்கு பிடிச்ச கேரியரை தான் சூஸ் பண்ணுவேனு எப்போதுல இருந்தோ சொல்றான் தான? இப்போ அவனுக்காக கேரியரை சூஸ் பண்ணிட்டான்.. இதுல அவன் மேல என்ன தப்ப நீ கண்டுட்ட?”


“எனக்கு அவன் சூஸ் பண்ணின கேரியர் பிடிக்கல.. ஒரு டிகிரிய கூட ஒழுங்கா முடிக்காம இப்படி அரசியலுக்குள்ள போறது பிடிக்கல.. அரசியல், கட்ட பஞ்சாயத்து, எலெக்‌ஷன், பிரச்சாரம்னு நேரம் காலம் இல்லாம சுத்துற வேலை எனக்கு பிடிக்கல..


என் புருஷன் ஒரு அரசியல்வாதினு சொல்ல பிடிக்கல.. ஒவ்வொரு ஐஞ்சு வருஷத்து ஒருக்கா அவன் ஜெயிப்பானா? தோப்பானானு? பயந்துட்டே இருக்க பிடிக்கல.. ஓட்டுக்காக ஒவ்வொருத்தர் கிட்டயும் பிச்சை கேட்க்குற மாதிரி தெரு தெருவா அழையுறது பிடிக்கல..


நாழு பேர் நாழு விதமா பேசுறது பிடிக்கல.. அவன் கிட்ட இல்லாத தொழிலா அதுல எதையாவது ஒன்னை எடுத்து நடத்தலாமே அவன்.. ஏன் அப்படி பண்ண மாட்றான்?” என அழுதாள்.


“இத நீ அவன் கிட்ட சொன்னியா?”


“சொல்லாம இருப்பேனா? படிச்சு படிச்சு சொன்னேனே.. அவன் விட்ட படிப்ப முடிக்கிறதுக்து எக்ஜாம் எழுத நானே ஃபீஸ் கட்டி ஹால் டிக்கெட் கூட வாங்கி கொடுத்தேனே.. சரி சரின்னு மண்டைய ஆட்டினானே.. ஆனா இப்போ எக்ஜாம் எழுதாம எலெக்‌ஷன் பிரச்சாரம்னு சுத்திட்டு இருக்கான். இதுக்கு மேலயும் அவன் மாறுவானு எனக்கு நம்பிக்கையே இல்ல”


“ஏய் இங்க பாருடி.. விராஜ் நல்லவன்.. அவன மாதிரி ஒரு பாட்னர் அமையவே அமையாது. அவன் லவ் தூக்கி எறிஞ்சுடாத”


“அத நீ சொல்லாத”


“ஏன் ஏன் நான் சொல்ல கூடாது? என் பாட்னர் நல்லவன். அவனுக்காக நான் பேசுவேன்”


“விஹான் அத்தான் கூட தான் நல்லவர்.. உன் பாட்னர் கூட இன்னும் செட்டில் ஆகல கேரியர்ல.. ஆனா விஹான் அத்தான் எல்லாத்துலயும் பெர்ஃபெக்ட் ஆனா நீ அவர தூக்கி எறியல?”


“அத பத்தி பேசாத”


“உண்மைய சொல்லு அவர் உன்னை லவ் பண்றாரு உனக்கு தெரியும் தான?”


“விடுன்னு சொல்றேன்ல”


“என்ன விடு.. இல்ல என்ன விடுங்றேன்.. அவர் போல ஃபெர்பெக்ட் ப்பேர் உனக்கு கிடைச்சா நீ தான் லக்கி கேர்ள்”


“நான் அன்லக்கியாவே இருந்துக்கிறேன்”


“இவ்ளோ தூரம் அவர அவாய்ட் பண்ண என்ன காரணம்?”


“விடு சாத்வி”


“எனக்கு தெரிஞ்சாகனும் சொல்லு?” எனக்கேட்க அமைதியாக இருந்தாளே தவிற பதில் வரவில்லை.


“அந்த சூர்யான்ஷ்ஷ லவ் பண்ற அது தான காரணம்?” என சாத்விகா கேட்க அதிர்ந்து திரும்பினாள்.


“உனக்கு எப்படி தெரியும்?”


“அப்போ இன்னும் மறைச்சு வச்சி இரகசியமா காதல் பண்ணலாம்னு எண்ணம் அப்படி தான?”


“ஏய் அப்படி இல்லடி.. அத உன்கிட்ட ஷேர் பண்ண தான் நினைச்சேன் ஆனா சந்தர்பம் அமையல..”


“அறிவு இருக்கா கேர்ள் உனக்கு? அவன் நம்ம வீட்டுக்கு ஆட்களுக்கும், தொழிலுக்கும் எவ்ளோ கெடுதல் பண்ணிருக்கான் அவன போய்.. ச்சை”


“அது தொழில்.. அது வேற இது வேற.. இவரும் ரொம்ப நல்ல டைப்”


“எப்படி மால்ல ஆயிரம் பலூனும், ஆட்டமும் பாட்டமும் போட்டு பொக்கே குடுத்தா நல்லவன் இல்ல.. உனக்காக பார்த்து பார்த்து செய்ற விஹான் அத்தான் கெட்டவர்?”


“நீ உன் அத்தான பத்தி என்கிட்ட பேசாத.. சூர்யான்ஷ்ஷூம் நல்லவர் தான். நீ பேசி பாரு உனக்கும் தெரியும்”


“அம்மா தாயே நீயே பேசு.. எனக்கு பேசனும்னு எந்த அவசியமும் இல்ல.. ஒருத்தர் மனச சுக்கு நூறா உடைச்சு போட்டில நிம்மதியா இரு.. அவர் என்கேடு கெட்டு போன உனக்கு என்ன? உனக்கும் உன் பாட்னருக்கும் உங்க சுயநலம் மட்டும் தான முக்கியம் அடுத்தவங்க எப்படி போன உங்களுக்கு என்ன? அவங்க மனசு உடைஞ்சா என்னா? நொறுங்கினாத்தான் என்ன? நீங்க உங்களுக்கு பிடிச்சதை மட்டும் செய்ங்க”


“ரொம்ப பேசாத”


“ஏன் சுடுதோ? பண்ணத சொன்னதும் குத்துதோ?”


“உனக்கு யார் இதெல்லாம் சொன்னது?”


“யாரு சொன்னா உனக்கென்ன?”


“சொல்லுடி”


“விஹான் அத்தான்” என்றதும் அதீத அதிர்ச்சி.. அப்படி அசையாமல் நின்றுவிட்டாள் பிரணவிகா.


“பாவம் கேர்ள் அவர்.. உனக்காக எவ்ளோ பண்ணார்? இந்த காலேஜ் கூட உனக்காக தான் கேர்ள் அவர் வாங்கினார்.. காலேஜ்ல நம்ம இரண்டு பேரையும் கண்டுக்காத மாதிரி இருந்தாலும் நம்மள எப்பவும் அவர் கண்காணிப்புலயே தான் கேர்ள் வச்சிருந்தார்.


நீ எவ்ளோ தப்பு பண்ணினாலும் திட்டுவாரே தவிற என்னைக்காவது உன் மேல ஆக்‌ஷன் எடுத்தாரா? நீ பண்ணினத அங்க வேறு யாரும் பண்ணிருந்தா அவர் சும்மா இருப்பாரா?


உன்னை முழுசா புரிஞ்சு வச்சிருக்கார் கேர்ள். அன்னைக்கு உனக்கு பிடிச்ச காலிஃபிளவர்.. சப்பாத்தியோட பன்னீர் கோஃப்தா.. உனக்கு பிடிச்ச பட்டர்ஸ்காச்னு எல்லாத்தையையும் தெரிஞ்சு வச்சி பங்ஷன்ல பார்த்து பார்த்து கவனிச்சாரே..


உனக்கு டியூட்டிக்கு போறப்பவும், முடிஞ்சு வீட்டுக்கு திரும்புறப்பவும் அவர் கார் உன்னை பாஃலோ பண்றது உனக்கு தெரியாது? அன்னைக்கு உன் பிறந்த நாள் அன்னைக்கு அவர் உன்னை கல்யாணம் பண்ணி வைக்க வீட்டுல எல்லாம் பேசிட்டார்..


மாமா வீட்டுல அத்தைய தவிற எல்லாருக்கும் சம்மதம்.. அப்பா கூட அத்தைக்கு சம்மதம்ன்னா எனக்கும் சம்மதம்னு சொல்லிட்டு வந்தாராம்.. அன்னைக்கு எப்படியாவது உன்கிட்ட அவர் லவ்வ வெளிப்படையா சொல்ல வந்தார் ஆனா ஆனா நீ அந்த கேப்ல.. போ கேர்ள்..


இப்போ அந்த மனுஷனும் நானும் ஒரே நிலைமையில நிக்கிறோம். மனசுக்கு பிடிச்சவங்க துரோகத்தால அவர் நாட்டை விட்டே ஓடி ஒளிஞ்சுட்டு இருக்கார்.. நான் ஊரை விட்டே ஓடலாம்னு இருக்கேன்.. எப்படி இருந்த மனுஷர் உடைஞ்சு போய் நிக்கிறார்.


என்கிட்ட கேட்டார் கேர்ள் நீ கூடவே இருந்துமா அவள இப்படி விட்டுட்டனு.. எனக்கு மனசே ஆறல.. நீ எனக்கே தெரியாம தான இந்த இழவு காதல பண்ணிட்டு இருக்க.. பேசாத கேர்ள் இனிமே என்கிட்ட” என விரக்தியாக பேசிவிட்டு படுத்துவிட்டாள்.


சூர்யான்ஷ்ஷின் காதலை ஏற்றுக்கொண்டதிலிருந்து ஏதோ ஒரு குற்ற உணர்விலிருந்தவளுக்கு இன்று சாத்விகாவின் கோபமும், அவர் பேச்சும் சேர்ந்து அவள் நிலைமையை இன்னும் மோசமாக மாற்றிவிட்டது.


இனியாவது மடத்தனத்தை விட்டு விட்டு நிஜத்தை கண் திறந்து பார்ப்பாளா? இல்லை தான் பிடித்த முயலுக்கு மூணு காலுனு நிப்பாளா? பொறுத்திருந்து பார்ப்போம்..
 
Top