எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 22

Privi

Moderator

நாட்கள் மின்னல் வேகமென ஓடிக்கொண்டு இருந்தது. உமையாள் குடும்பம் பார்வதி வீட்டிற்கு வந்து சென்று மூன்று வாரங்கள் கடந்திருந்தது. பார்வதிக்கு அவர் எண்ணத்தை எப்படியாவது அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என தோன்றியது.​

அதை அவரால் தனியாக செய்ய இயலாது அதனால் துணைக்கு நீலனின் உதவியை நாடினார். திறன் பேசி மூலம் அவனுக்கு அழைத்தார்​

"ஹலோ நீலன்... "​

"சொல்லுங்க டார்லிங் என்ன விஷயம் என்ன தேடிக்கொண்டு இருக்கீங்க."​

"உன்னை பாக்கணுமே பா.. உன்னுடன் கொஞ்சம் பேசணும்"​

"ஹ்ம்ம் சரி இந்த வார கடைசியில் வீட்டிற்கு வருவேன் அப்போது வந்து உங்களை சந்திக்கிறேன்." என கூறினான் நீலன்.​

அதற்கு பார்வதியும் “சரிப்பா” என்றார்.​

நீலனோ "எனக்கு அன்று செய்த பாயசம் வேண்டுமே செய்து வைப்பீர்களா?" என கேட்டான்.​

“அதற்கு என்ன செய்து தந்தால் போச்சு” என்று பார்வதியும் பதிலளித்து இருந்தார்.​

அத்துடன் அவர்களது உரையாடல் முடிவடைந்தது.​

********************************************************************************​

கண்ணனின் வீடு காட்டும் வேலை முடிந்து விட்டது. நாளை அவரிடம் அவரின் வீட்டை ஒப்படைக்க வேண்டும். வேலைகள் எல்லாம் முடிந்து. மறுநாள் விடிய காத்திருந்தான் ருத்ரன்.​

மறுநாளும் விடிந்தது. கண்ணன் வீட்டிற்கு சென்றான் ருத்ரன், அதே நேரம் கண்ணனும் அங்கு வந்தார்.​

" வணக்கம் ருத்ரன்"​

"வணக்கம் சார்! வாங்க சார் வீட்டை ஒப்படைப்பதற்கு முன் ஒரு முறை பார்த்து விடலாம்." என கூறினான்.​

கண்ணனும் ஆமோதிப்பதாக சம்மதித்தி வீட்டை பார்வையிட சென்றார். வீட்டை முழுதாக சுற்றி பார்த்தவர்​

"ருத்ரன் உங்க வேலை ரொம்ப சுத்தமா, நீட் ஆஹ் இருக்கிறது. வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் வேலை மிகவும் பிடித்திருக்கிறது." என மனா நிறைவுடன் பாராட்டினார்.​

ருந்திரனும் மகிழ்ச்சியுடன் அவருடை வீட்டின் சாவியை ஒப்படைத்தான். அவனிடம் விடை பெற்று திரும்பியவர், அவர் வாகனம் இருக்கும் இடத்திற்கு அருகில் சென்று மறுபடியும் இவனிடம் வந்தார்.​

வந்தவரை பார்த்த ருத்ரன் கேள்வியாய் நோக்கினான்.​

"ருத்ரன் சொல்ல மறந்துட்டேன் நீங்க தேர்வு செய்த ஹாண்ட் கிராப்ட் டிசைன் அருமையாக உள்ளது." என கூறினார்.​

உடனே ருத்ரனின் மனக்கண்ணில் உமையாள் மின்னி மறைந்தாள்.​

"நல்ல கைதேர்ந்தவரிடம்தான் நீங்கள் இந்த பொருட்களை வாங்கி உளீர்கள் இந்த கைவினை பொருட்களுக்கும் சேர்த்து உங்களுக்கு பாராட்டுக்கள்.” என கூறி விட்டு சென்றார்.​

ருத்ரன் அவருக்கு புன்னைகையுடன் நன்றி தெரிவித்து விடைகொடுத்தான். உமையாள் நினைவுகளுடன் அவனின் கார் இருக்கும் இடத்திற்கு வந்தான்.​

'உமையாள் திருமணமானவளா? அதுவும் ஒரு குழந்தைக்கு அம்மா. ஆனால் நான் பார்த்த வரையில் திருமணமான எந்த அறிகுறியும் அவளிடம் இல்லையே. அது சரி நமக்கு என்ன இப்போது அவளுக்கு கல்யாணமானால் என்ன ஆகவில்லை என்றால் என்ன.​

திமிர்பிடித்தவள், நல்ல வேலை மகிழ் அப்படி இல்லை.' என நினைத்தவன் மகிழ் எனவும் அவன் இதழ்கள் தாமாக விரிந்து கொண்டன. அவளை சந்திக்க வேண்டும் என எழுந்த ஆவலை சிரம பட்டு அடக்கினான். அதற்கு ஒரே காரணம் உமையாள் தான்.​

உமையாள் என்றாலே அவனுக்குள் எதோ ஒரு மாற்றம். அந்த மாற்றம் அவனுக்கு பிடிக்க வில்லை. அதனாலேயே அவள் நினைவுகளை தவிர்த்தான். நாட்கள் இப்படியே நகரத்து வர இறுதியையும் அடைந்திருந்தது.​

ஞாயிறு காலை பார்வதி நீலனுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை சமைத்து கொண்டு இருந்தார். காலை உடற்பயிற்சி முடிந்து வந்த ருத்ரன் ' என்னடா இது! இன்று சமையல் வேகமாக நடக்கிறதே' என எண்ணியவன் சமையல் அறைக்கு சென்றான்.​

"என்ன இன்று சமையல் வேகமாக நடக்கிறது, யாரும் வீட்டிற்கு வருகிறார்களா?" என கேட்டான்.​

"ஆமாம்! நீலன் வருகிறான், என்னிடம் பாயசம் வேண்டும் என கேட்டிருந்தான், அதான் சரி அப்படியே அவனுக்கு பிடித்த உணவுகளையும் சமைத்து தரலாமே என்று செய்து கொண்டிருக்கிறேன்." என கூறினார் பார்வதி.​

"ஓஹ் சரி நான் என் வேலைக்கு செல்கிறேன்" என கூறியவன் ஒரு கணம் நின்று “நீலன் மட்டும் தான் வருகிறாரா?” என வினவினான்.​

அதற்கு பார்வதியோ "ஆமாம் ஐயா நீலன் மட்டும் தான்" என கூறி "ஏன் நீ வேறு யாரையும் எதிர்பார்கிறாயா?" என கேட்டார்.​

அவன் கேட்டதற்கு காரணம் மகிழ் தான் இருப்பினும் பார்வதி அப்படி கேட்டவுடனே அவனுக்கு ஏனோ உமையாளின் முகம் கண் முன்னே வந்தது.​

சட்டென தன்னை மீட்டெடுத்து "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, அன்று குடும்பத்துடன் வந்தார்கள் தானே அதுதான் கேட்டேன்" என கூறி சமாளித்து அங்கிருந்து சென்றான்.​

அவனிடம் அக்கேள்வியை கேட்டவர், அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அவன் முகத்தில் தோன்றிய மாறுதல்கள் அவருக்கு திருப்தியாக இருந்தது.​

'கண்டிப்பாக நீலனிடம் தன் விருப்பத்தை சொல்ல வேண்டும்' என மனதில் உறுதி எடுத்து கொண்டார். பார்வதி நீலனுக்காக காத்திருக்க நீலன் அவர்கள் இல்லத்திற்கு வந்து சேர்த்தான்.​

"ஹலோ டார்லிங்"​

"வா பா.. உள்ளே வா" என பார்வதி அவனை வீட்டிற்குள் அழைத்திருந்தார்.​

வீட்டிற்குள் வந்தவன் "என்ன விஷயம் டார்லிங் என்னை பார்க்கணும் என கூறினீர்கள்?" என அவன் பார்வதியிடம் கேட்க, அப்போது அங்கு ருத்ரன் வந்தான்.​

"வாங்க நீலன்" என வரவேற்றவன் தனக்கு ஒரு முக்கிய வேலை இருப்பதாக கூறி அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.​

அவனுக்குள் மகிழை பற்றி விசாரிக்க எழுந்த ஆர்வத்தை கடினப்பட்டு கட்டுப்படுத்தினான். அவன் சென்றவுடன், பார்வதி​

"ம்.. சரி வா சரியாக உணவு நேரத்திற்கு வந்துள்ளாய். உணவு உண்டு விட்டு அதன் பின் நம் கதையை பேசுவோம்." என கூறி அவனை உணவருந்த அழைத்து சென்றார்.​

அவனுக்கு பிடித்த உணவுகள். நன்றாக உண்டான், பின் கடைசியில் பாயசத்தை ஊற்றி ஊற்றி குடித்தான். அவன் சாப்பிடுவதை ஆசையாக பார்த்திருந்தார் பார்வதி.​

ருத்ரனும் இது போல் சாப்பிட வேண்டும் என ஆசை படுகிறார், ஆனால் என்ன செய்வது அது முடியாமல் போகிறதே. எதையோ யோசித்து ஒரு பெருமூச்சு விட்டவர் மீண்டும் நீலனுக்கு உபசாரம் செய்ய தொடங்கி விட்டார்.​

**************************************************************************​

ஞாயிறு என்பதால் குதிரை சவாரி பார்க்க சென்றான் ருத்ரன். நீலனிடம் வேலை இருப்பதாக கூறியது பொய் தான். அப்போது அவனுக்கு மிஸ்டர் கண்ணன் அழைத்திருந்தார்.​

"வணக்கம் ருத்ரன் இன்று மாலை ஐந்து மணியளவில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா?" என கேட்டார்.​

அதற்கு ருத்ரன் " மாலை ஐந்து மணிக்கு நான் ப்ரீ தான் தாராளமாக சந்திக்கலாம், ஆனால் என்ன விஷயமாக சந்திக்க வேண்டும்? வீடு ஏதேனும் பிரச்சனையா?" என கேட்டான்.​

அதற்கு கண்ணன் "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ருத்ரன் என் தம்பிக்கும் வீடு புதுப்பித்து கொடுக்க வேண்டுமாம் அதான் உங்களை பார்த்து பேசலாம் என்று நினைத்தோம்." என்றார்.​

"கண்டிப்பா சந்திக்கலாம் நான் மாலை ஐந்துக்கு வந்து விடுகிறேன். எங்கு வரவேண்டும் என்பதை மட்டும் புலனாம் மூலம் எனக்கு தெரிவித்து விடுங்கள்." என கூறி அவர்களின் உரையாடலை முடித்தான்.​

அடுத்த வேலையின் ஆர்வம் அவனை தொற்றி கொண்டது. நாம் ஒரு வேளையை எவ்வளவு ஈடுபாடாக செய்கிறோமோ அந்த வேலை அந்த அளவு நமக்கு நல்ல விதமாய் முடியும் என்பது ருத்ரனின் நம்பிக்கை அதனால் எப்போதுமே எந்த ஒரு வேலையையும் ஆர்வமாக செய்வான்.​

*****************************************************************************​

இங்கோ நீலன் உணவருந்தி விட்டு பார்வதியின் சமையல் திறமையை புகழ்ந்து கொண்டிருந்தான். பின் அவனே தொடர்த்து​

"இன்னொன்று சொல்கிறேன் டார்லிங் சின்ன வயதில் அம்மா கையில் சாப்பிட்ட ஞாபகம், அந்த நினைவுகள் மறுபடியும் உங்கள் கையில் சாப்பிடும் போது வருகிறது." என கண்கலங்கி கூறினான்.​

பார்வதிக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. பின் அவரே​

"உனக்கு எப்போ வேண்டும் என்றாலும் சொல் உனக்கு சமைத்து கொடுக்க நான் இருக்கிறேன்.” என கூறினார்.​

அதற்கு அவனோ "அது சரி" என நம்பிக்கை இன்றி சிரித்து கொண்டிருந்தான்.​

"ஏன் இப்படி சிரிக்கிறாய் பேசாமல் நான் ஒரு யோசனை தரவா? நீ, உமையா, மகிழ் மூவரும் இங்கு என்னுடனே இருந்து விடுங்கள்." என கூறினார்.​

அதற்கு இப்போது இதழ் பிரித்து சிரித்த நீலனோ "காமெடி செய்யாதீர்கள் டார்லிங்" என்றான்.​

பார்வதி உடனே அவர் மனதில் உள்ளதை நீலனிடம் கூறிவிட்டார்​

"நான் காமெடிக்கு கூறவில்லை நீலன். எனக்கு உமையாளை ரொம்ப பிடித்திருக்கிறது, ருத்ரனுக்கு உமையாளை கேட்கலாம் என்று என் மனதில் ஒரு எண்ணம்” என அவர் கூறியவுடன் நீலனின் கண்கள் விரிந்து கொண்டது.​

"எனக்கு புரிகிறது மகிழை பார்க்கும் போது அவள் திருமணம் ஆனவள் என்று தெரிகிறது ஆனால் அவளிடம் திருமணம் நடந்ததற்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை. அதனால்தான் இதனை பற்றி உன்னிடம் பேசலாம் என்று இன்று இங்கு அழைத்தேன்.” என்றார்.​

நீலன் ஒரு நிமிடம் மௌனித்தான் பின் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு​

“ஆண்ட்டி இது சரி வருமா என்று என்னிடம் கேட்டல் எனக்கு பதில் இல்லை. எனக்கு ருத்ரனை பிடிக்கும். அன்று உங்களிடம் அவர் அப்படி நடந்து கொண்டது முரணாக இருந்தாலும் ஏனோ அவரின் கதையை கேட்ட பிறகு ஒரு ஆண்மகனாக என்னால் அவரை புரிந்து கொள்ள முடிகிறது.​

நீங்கள் கேட்டது போல் நடந்தால் எனக்கும் மகிழ்ச்சி தான், ஆனால் நடக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. அக்காவின் வாழ்க்கை மகிழை மட்டுமே மைய்யப்படுத்தி இருக்கிறது.​

இன்னொரு திருமண வாழ்வை அவள் ஏற்றுக்கொள்வாளா? என்று கேட்டால் எனக்கு தெரியாது." என்றான்.​

"அப்படி என்ன ஆனது அவள் வாழ்வில்?" என கேட்டார் பார்வதி.​

அதற்கு நீலன் "எங்கள் வாழ்வில் என்ன நடந்தது என உங்களுக்கு சொன்னால்தான் புரியும்." என கூறி அவன் கதையை ஆரம்பித்தான்.​

"அம்மா அப்பாவிற்கு நாங்கள் இரு குழந்தைகள்" என ஆரம்பித்தவன் கடைசில் அவர்கள் இந்த இடத்திற்கு தஞ்சம் வந்தது வரை எல்லாவற்றையும் கூறி முடித்தான்.​

கேட்டுக்கொண்டிருந்த பார்வதியின் கண்களில் அவரை அறியாமலே கண்ணீர் சுரந்தது.​

'ஒரு பெண்ணின் கண் முன்னே கணவனை கொல்வது என்பது எத்தனை கொடுமையான செயல். தன் கணவன் இறந்ததை கேட்டதற்கே சில காலம் பித்து பிடித்தது போல் இருந்தேனே.​

இவள் கண் முன்னே கணவனை பறி கொடுத்திருக்கிறாள் அதுவும் பல சூடுகள் வாங்கி கணவன் உயிர் துறந்திருக்கின்றான், அதனை கடந்து வந்தாள் என்றால், இவள் எத்தனை இரும்பு மனம்கொண்ட பெண்' என்று பார்வதியால் நினைக்காமல் இருக்கமுடியவில்லை.​

இதனை எல்லாம் கேட்டது பார்வதி மட்டும் அல்ல வீட்டு டிசைன் கோப்புகளை எடுக்க வந்த ருத்ரனும் தான்.​

அவனும் அவர்களின் வாழ்க்கை கதையை கேட்டு ஸ்தம்பித்து நின்றுருந்தான்.​

இனி உமையாளிடம் அவனது அணுகுமுறை எப்படி இருக்கும்? பொருத்துத்தான் பார்ப்போமே.​

 
Top