எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 19

Status
Not open for further replies.
❤️❤️ ஏக்கம்_19❤️❤️

வேகமாக நடையிட்டு, கையில் அவன் தந்த கவரை இறுக தன்னோடு அணைத்தபடி புன்னகை முகமாய் பவித்ரா வீட்டினுள் வரவும், பெண்கள் காலனிகள் வாசலில் வரிசை கட்டி அணிவகுத்து இருக்க ஏன்? என்று புரியாமல் தயங்கியபடி உள்ளே வந்தாள்.


சோபாவில் அமர்ந்து இருந்த ஐந்து நடுத்தர வயதுடைய( பெண்கள்) உறவினர்களை ஒப்புக்கு வாங்க என்று தலை அசைத்துவிட்டு போலியாக இதழ் விரித்து எல்லார் புறமும் சிரிப்புடன் "நல்லா இருக்கீங்களா? " என கேட்கவும் சபையோர் ஆம் என்று தலை அசைக்க , அதில் பெண்களில் ஒருவர் பவித்ராவை பார்த்தபடி சுமதியிடம் பேசினார்.

" இதுதான். உன் மவளா? ம்..கும்.. " என ஏக்க பெருமூச்சு விட்டார் "நான் என்னமோ சின்ன பொண்ணா இருப்பா னு நெனைச்சேன். இந்த பொண்ணயே மறுமகனுக்கு கட்டுனா என்ன?" என்றவர் குரலோ ஓங்கி ஒலித்தது.


" இல்லைக்கா.! கூடவே வளர்ந்ததால உடன் பிறப்பு மாதிரி தான் என் பொண்ண தம்பி நினைக்கும். அதான் நம்ம ஊருல எதாவது நல்ல பொண்ணா! நல்ல சமைச்சு போட்டு குடும்பத்தை பார்த்து கிட்டா போதும். டெல்லியில தனியா கஷ்டப்படுறான் பாவம்.

பவித்ரா மனதில் 'என் கதைக்கு வில்லன் வேற எங்கேயும் இல்ல. என் வீட்ல என் பக்கத்துல உக்காந்திருக்கு. இப்ப அவன் மேல காதல் னு சொன்னா செறுப்பால அடிக்குமே!

சுமதி -"பவித்ரா.. போய் டீ எடுத்துட்டு வா மா.." என்றதும் பவ்யமாக அனைவருக்கும் டீ தந்துவிட்டு அறையில் நுழைந்து கதவை ஒருக்களித்து வைத்துவிட்டு அவசர அவசரமாக ஒரு நபரின் எண்ணை அழைக்க,"சொல்லுடி.. "சிறிது நேர மௌனத்திற்கு பிறகு நடந்ததை கூறிட," நீ..யே... அம்மா கிட்ட சொல்லிடு " பதட்டமாக பவித்ரா சொல்லவும்." ம்.. சொல்லிடுறேன் சம்மதம் தானே! பொண்ணு போட்டோ இருக்கா?" அடிக்குரலில் தாபத்தோடு கேட்கவும் வெடித்தது கோபம் அவளுக்கு 'டேய் உன்னை என்ன சொல்ல சொன்னா? நீ என்ன சொல்றேன்கிற?பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான டா பக்கம் பக்கமா பேசின, உன்னால தான் என் பகல் விடியது இரவு முடியுது னு ரைமிங் டைமிங் ஆ.. எல்லாம் பேசினியே டா. புது டிரஸ் போட்டு வீடியோ கால் வாடி எல்லாம் சொன்ன!' மனதிலே புலம்பி கொண்டு
" பேச்சுவார்த்தை தான் நடக்குது அதுக்குள்ள போட்டோ கேக்குற? இங்க பாருடா என்னை தவிர நீ யாரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது."

"அப்ப நீ என்ன கல்யாணம் பண்ணிக்கோ "
"நானும் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. நீ யாரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது. " "ஓ.. பவித்ராவை மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதம். வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நான் சொல்லணும்."
"கிட்டத்தட்ட அப்படித்தான். "
"ஒரு நியாயம் வேணாம் டி, தானும் தரமாட்டேன். தரவங்களையும் விட மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம். எனக்கும் கல்யாண வயசு ஆயிடுச்சு சொல்ல கொஞ்சம் வெட்கமா தான் இருக்கு. இருந்தாலும் சொல்றேன்.நான் காலையில ஜாக்கிங் போக ஒரு பார்க்குக்கு போவேன்.எல்லா பக்கமும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து லவ் பண்ணிக்கிட்டுகொஞ்சிக்கிட்டு இருப்பாங்க. ஸ்கூல் பையன் மாதிரி இருக்கவன் எல்லாம்.. முதல் நாள் ஒரு பொண்ணு கூட அடுத்த நாள் ஒரு பொண்ணு கூட குதூகலமா இருக்கும்போது
உன்ன காதலிச்சதுக்காக ஏன் நான் என் வாழ்க்கையை கெடுக்கணும். என் ஒரு தலை காதல் தோத்துருச்சு பவித்ரா. உன்ன நான் ஆபிஸ்யலா பிரேக் அப் பண்ணிட்டேன். கண்ணியமான காதலனா காத்திருந்ததுக்கு காதல் தோல்வி தான் எனக்கு பரிசா கிடைச்சுச்சு. அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். கண்ணுல படுற எல்லா பொண்ணையும் ப்ரொபோஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனக்குன்னு எதுவும் கிடைக்காமலா போகும்.. ட்ரு லவ்ருக்கு தான் பொண்ணே கிடைக்காது. பேக் லவ்ருக்கு ஈஸியா மாட்டிடும்.. பொய் தான் பொண்ணுங்களுக்கே பிடிக்கும். "
"என்ன டா வலை போட்டு மீன் பிடிக்கிற மாதிரி சொல்ற? மனசு என்பது ஒருத்தருக்காக கட்டுப்படுற கோயில் மாதிரி, அதுல நீ நின்னா தாண்டி எனக்கு நிம்மதி னு சொல்லுவ, அந்த நல்லவன் எங்கடா? "
" சொன்னவன் தான். நல்லவன் தான். என் மனசு புரிஞ்சுக்காத, என் காதலை ஏற்றுக்காத ஒருத்தவங்களுக்காக ஏன் நான் காத்திருக்கணும்? எனக்காக ஒருத்தி பிறந்து இருப்பா! என் காதல் கிடைக்கணும் னு ஏங்கிட்டு இருப்பா! மதியாதார் மணவாசல் மிதியாதே..என்று சூளுரைத்தவன்.
என் கோபத்துக்காகவுக்கும், குணத்துக்காகவும் என்ன வெறுக்கிற நீ.. இந்த குறைகளோடு என்ன ஏன் ஏத்துக்க மாட்டேங்கிற? எல்லாரும் எப்படி பர்பெக்டா இருக்க முடியும்."

" அதே தான் நானும் சொல்றேன். நீ கொஞ்சம் மாற கூடாதா?சின்ன சின்ன பிரச்சனை வரும் போது நான் தடுக்ககுறேன். இல்லலைனா என்னைக்காவது ஒரு நாள், நீ உன் வாழ்க்கையை உடைச்சிட்டு இருப்ப, அதை திரும்பி சேர்க்க முடியாத அளவு மோசமா. உன் வார்த்தைகளால உன் வாழ்க்கையே ஒன்னும் இல்லாம
ஒரு நாள் ஆகும். கோவத்துல சொல்ற வார்த்தைல நிதானம் இல்லாம விஷத்தை வீசிற ப்ரீத். மத்தவங்க செய்ற தப்புக்கு உனக்கு பிடிச்சவங்களுக்கும் சேர்த்தே நீ தண்டனை கொடுப்ப அந்த குணத்தை தானே புடிக்கலைன்னு சொல்றேனே தவிர , உன்ன பிடிக்கல வெறுக்குறேன் னு நான் சொன்னதே இல்லை."

"அத்தை கிட்ட என்னால முடியாதுன்னு சொல்ல முடியாது.அதனால நீயே போய் மாமாவ நானே கல்யாணம் பண்ணிக்கிறேன். வெளியில பொண்ணு பார்க்காதீங்க னு சொல்லிடு "

"வாய்ப்பே இல்லை " இறுமாப்புடன் சொன்னாள் பவி.
"அப்ப தள்ளு டி எனக்கென பிறந்தவ என்கிட்ட வரட்டும்." என்று அழைப்பை துண்டிக்கவும்.

எரிமலையில் இருந்து சிதறும் லாவா போல கோபம் பரவி முகம் சிவந்தது. சொல்லத் தெரியாத புதுவித பயம் அவள் மனது முழுதும் வியாபித்து இருந்தது. ப்ரீத் தன்னை விடவே மாட்டான் என்று முழுமையாக நம்பியவள்.எத்தனையோ முறை பிடிக்கவில்லை பிரிந்து போ.. வேறு ஒரு ஆணை திருமணம் செய்வேன் என்று வார்த்தைகளை விட பயந்தது இல்லை. தெரியுமே உயிரையே விட்டாலும் இவளை விட மாட்டான் மாமன்! அலட்சியத்தால் பிரிவு வந்து விடுமோ என்ற நடுக்கம் எழ.. இப்போது இவளின் உள்ளத்திலும் காதல் சுடர் விட தொடங்கியதால், கலக்கம் அடைந்தாள் பவித்ரா. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தாயிடம் பேச சென்றாள்.
"அம்மா.. ஏன் மாமாவுக்கு இப்பவே கல்யாணம் பண்ணனும் னு நினைக்கிற? அவருக்கு சீக்கிரமாக கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்காது."

"அவனுக்கா விருப்பம் இருக்காது?" ஏளனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு "பொண்ணு போட்டோ எப்ப அனுப்புவிங்க னு கேட்டுக்கிட்டே இருக்கான். உன் போனுக்கு அனுப்பி இருக்கேன் பாரு! பாத்துட்டு நீயே அவனுக்கு அனுப்பி விடு, என்ன பதில் சொல்றான் னு கேட்டு சொல்லு அடுத்த மாசமே கல்யாணத்தை முடிச்சுடனும். நல்ல சாப்பாடு இல்லாம துரும்பா இளைச்சிட்டான்."

" நான் லீவுல தானம்மா இருக்கேன் நான் வேணும்னா போய் சமைச்சு கொடுக்கிறேன். அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும்? " அதி புத்திசாலியாக கேட்டு வைத்தாள்.

தலையில் அடித்தபடியே."நடக்கிற கதை பேசுடி எத்தனை நாளைக்கு உன்னால சமைச்சு கொடுக்க முடியும்? நீ உன் புருஷன் வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் அவனுக்கு கல்யாண வயசு போயிடும் "

"நான் இருக்கும் போது எப்படி நீ அவனுக்கு கல்யாணம் பண்ண
முடியும்." திட்டவட்டமாக கேட்டாள்.

" இதை யோசிக்கவே இல்லயே பவி. நீ சொல்றதும் சரி தான்.எப்படி நான் ப்ரீத்க்கு இன்னொரு பொண்ணு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்.முதல்ல உன் ஜாதகத்தை கொடுத்து மாப்பிள்ளை பார்க்க சொல்லுவோம். நீ இருக்கும் போது இன்னொரு பொண்ணு இங்க வந்து வாழ்ந்தா அவளுக்கும் கஷ்டம் உனக்கும் கஷ்டம்." என்று வெடிகுண்டை வீச..
கெட்டது கதை என நினைத்தவளுக்கு, ஒரு நொடியில் தலை சுற்றி மயக்கம் வந்து விட்டது பவித்ராவிற்க்கு. "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?" வாய் விட்டே சொல்லி விட,
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் மகளைப் பார்த்து ஆனந்தமாய் இதழ் விரிந்து சிரித்திடவும்.

"மாமியார் கொடுமை எல்லாம் பண்ணுவாங்கம்மா, எனக்கு கல்யாணம் வேணாம் மா.. உன் கூடவே கடைசி வரை இங்கேயே இருந்துடுறன். ப்ளீஸ்.. " கெஞ்சும் குரலில் கேட்டதும்.
மறைமுகமாய் அவள் சொல்வது உணர்ந்து மனதில் நிம்மதி நிறைய,
"ம்.. கும். " செறுமலோடு சும்மா சொன்னேன் டி .. அவன் கிட்ட போன் பண்ணி கேட்டேன். இப்ப இதல்லாம வேணாம்னு சொல்லிட்டான்."

"என்ன வெறுப்பேத்த டிராமா பண்ற இல்ல போ..மா! " என்று உதட்டைப் பிதுக்கி அழுவதைப்போல நொடித்து விட்டு வெளியே சென்றாள் பவித்ரா.

மாமனிடம் இருந்து அழைப்பு வந்ததும் அழைப்பு ஏற்காமல் துண்டித்து விட்டுக் கொண்டே இருந்தாள். அடுத்த தாக்குதலாக வீடியோ கால்! திட்டி தீர்ப்பதற்காகவே அட்டென்ட் செய்தாள்.

அவனோ .. வார்த்தைகளை கவசமாக பயன்படுத்தி விட்டான்..

ஐ லவ் யூ பவித்ரா ப்ரீத் குமார். உன் காதலும் நான் தான். கணவனும் நான் தான். இதை நீ நினைச்சா கூட மாத்த முடியாது. அதிரடி தாக்குதலாக தொடர் முத்தமிடவும்,
பேச்சே மறந்து போனது எங்கே திட்டுவது? முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு" என்கிட்ட பொண்ணு ஃபோட்டோ கேட்ட அனுப்பவா?"அவளை கைகாட்டி "எனக்கு இந்த பொண்ணு தான் வேணும்." என்று அவனோ குழந்தை போல கைகளை உதறி அடம் பிடிக்க.

மழையின் சாரலில் நனைந்தது போல சிலிர்ப்பு.. உடல் எங்கும் " அச்சச்சோ குழந்தை! பவித்ராவை கொடுத்து சமாதானபடுத்திடலாமா?"

" பவித்ராவுக்கு குழந்தை கொடுத்து சமாதானப்படுத்திடலாம்" என்றபடி இரு புருவத்தையும் கேள்வியாய் உயர்த்தி கண்ணடிக்கவும் அதிர்ச்சியில் விரியும் அவளின் விழிகளை பார்த்து புன்னகைத்தவன்.

"ஹான்.."என்று அவள் வாய் அடைத்து போக!! சீராக வெட்கத்தால் சிவந்து, மெல்ல நாணம் பழகியது அவள் முகம்!
அதற்கு மேல் இருவரும் பேசவில்லை. மெளன பார்வைகள் காதல் பேரலைகளாய் இருவர் மீது மோதவும். உலகம் மறந்து இருவரும் மூழ்கி போயினர் காதல் கடலில் !

பல மாதங்கள் இப்படியே கழிந்தன.பவித்ராவும் எல்லா தேர்வுகளும் எழுதி எம்.பி.ஏ. நிறைவு செய்யவும்.சுமதி பேச வேண்டும் என்று கூற, தயங்கிய படி வந்து தாயின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

" பவித்ரா.. சில முக்கியமான விஷயத்தை பத்தி சொல்லணும். அம்மா உடம்பு சரியில்ல டா வயசுக்கு மீறின உழைப்பு. வயசு ஏற.. ஏற அவஸ்தையும் கூடுது, எனக்கு பிறகு உனக்கும் அவனுக்கும் யாருமே இல்ல! உனக்கு அவன கட்டிக்க விருப்பம் இல்லை, நா.. வேற ஏதாவது மாப்பிள்ளை சீக்கிரம் பாக்கணும்.முடிவு சொல்லு நல்லா படிக்க வச்சிட்டேன். ப்ரீத் அ கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி இருந்தா, ரொம்ப நிம்மதியா இருந்திருக்கும். உன்னை நிறைய பேர் பொண்ணு கேக்குறாங்க மா.. உனக்கு விருப்பம் இருந்தா வேற மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி குடுக்க சொல்லி அவனும் சொல்லிட்டான்..

நெஜமா என்ன வேற பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி மாமா சொன்னுச்சா.! இப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சாருக்கு விருப்பம் இல்லையோ?" எரிச்சல் பரவி இருந்தது வார்த்தையில் .
" குதர்க்கமா பேசணும் னு பேசாத பவி. அவனோட விருப்பம் என்னன்னு உனக்கு தெரியும்.கட்டாயப்படுத்த வேண்டாம் னு சொல்லிட்டான். இல்லன்னா ரெண்டு போட்டு அவனுக்கு தான் கட்டி வைப்பேன். "

" அடிக்கலாம் வேணா அவனே கட்டிக்கிறேன். "
சுமதி ஆச்சரியம் பொங்கும் குரலில் " எனக்காக தியாகம் பண்ற மாதிரி எல்லாம் சொல்லாதே"

" பிடிச்சிருக்கு னு பிடிக்காம நான் சொல்ல மாட்டேன் னு உனக்கு நல்லா தெரியும். ஷாக் அ குறைச்சுட்டு
சந்தோஷமா இரு மா! உன் மக உன்கூடவே இருப்பேன். உன் மருமகன பாசமா பார்த்துப்பேன். பேச்சுக்கு சொல்வேனே தவிர எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும் மா "முகம் மலர்ந்தவள் கூறவும் அகம் மலர்ந்து நிம்மதி நிறைந்தது தாய் மனதில்,அறைக்குள் வந்து கதவை அடைத்தவள். வேற மாப்பிள்ளை பார்க்க சொன்ன அந்த தியாகிய கொஞ்சம் வெறுப்பேற்றி பார்க்க மனம் துடிக்க உடனே அழைத்தாள்.
" போன் எடுக்க இவ்வளவு நேரமா மாமா..,கல்யாணம் பண்ணிக்க சொல்லி அம்மா பேசினாங்க,மாப்ள நீ கிடையாதுன்னு சொன்னதும் தான் நிம்மதியா இருந்துச்சு, மாப்ள போட்டோ பார்த்தேன். செம அழகு தெரியுமா.! சரின்னு சொல்லிட்டேன் மாமா " வாயை மூடிக்கொண்டு சிரித்தாள் பவித்ரா.

மனதில் மறித்துப் போய் விட்டான் ப்ரீத். மலை உயரத்தில் இருந்து கீழே விழுபவன் பற்றி இருக்கும் ஒற்றை பிடிமானம் நழுவிய உணர்வு, மெல்ல மரணிக்கிறான் அவள் வார்த்தைகளால், உன்னை பிடிக்காது என்பதை தாங்கிய நெஞ்சம். இன்று இன்னொருவரை பிடிக்குது என்பது ஏற்க்க முடியாமல் துடித்தான். இதயத்தை யாரோ சுத்தியலால் உடைத்து எறியவது போல வலிக்கவும்! பேசாது ஊமையாகினான் பேரன்பு காதலன்.

"அம்மா காலைல உன்கிட்ட சொல்லுவாங்க, உடனே உன்கிட்ட சொல்ல தான் போன் பண்ணினேன். அடுத்த மாசமே கல்யாணம் னு அம்மா சொன்னாங்க. பொண்ணு வீட்டுக்காரனா..., நீங்க இல்லன்னா எப்படி? நல்லா இருக்காது மாமா. இப்பவே லீவு சொல்லி வச்சிட்டு டா.. இனிமே நான் உன்னோட பவித்ரா கிடையாது. பழக்க தோஷத்துல மாப்பிள்ளை முன்னாடி என் பவித்ரா னு சொல்லிட போற! அவனது சிறிய இதயத்துக்குள் கணக்கற்ற கூரிய கத்திகளால் இடைவெளி இல்லாமல் குத்துகிறாள் பவி இறக்கமற்வளாய்.

குரலே வராமல் அடைத்தது "யார் முன்னாலயும் என் பவித்ரா னு சொல்ல மாட்டேன். தூக்கம் வருது வைச்சுடுறேன் " குரலில் விரக்தி வழிந்து ஓடியது.

அவனது சோகமான குரல் இவள் மனதை பிசைந்தது இருந்தும் 'அம்மா சொன்னதும் சர்ப்ரைஸ் ஆ.! தெரியட்டும்' என்று பவி ப்ரீத்தை
செல்லமாக சீண்டுவதாக நினைத்து கொண்டு, காதல் கொண்டவனை துடிக்க துடிக்க உயிர் வதை செய்கிறாள். அவளின் இந்த பொய்யால் விதி துடிக்கத் துடிக்க எதிர்பாராத பல இழப்புகளை சர்ப்ரைஸாக தர போவது தெரியாமல்.!!

இங்கே ப்ரீத் மெத்தையில் அப்படியே சரிந்து விழுந்தான். கண்கள் குளமாகி இமை சுவர்களை கடந்தது துளிகளாய்! கண்களை துடைத்தபடி
இருவரும் சேர்ந்து நின்ற புகைபடங்களை வெறித்து பார்த்து கொண்டே இருந்தான். கண்ணீருடன் உயிரும் உருகி வழிந்தது. ஒவ்வொரு துளிகளாக விழி வழியே வலிகள் !!
*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,*,

துன்பத்தை மட்டுமே தாங்கியபடி இருந்த சுமதிக்கோ.., தன் மறுமகனுடன் மகள் திருமணம் என்னும் ஆசை நிறைவேறிய இன்பத்தின் சுமையை ஈடு கொடுக்க முடியாமல் இதயம் திணறியது. மெல்ல இடப்புறம் வலி அதிகமாக எடுக்க,நள்ளிரவு என்பதால் ஆண் துணை இல்லாமல் வயதுக்கு வந்த பெண்ணை இரவு ஒரு மணிக்கு ரோட்டிற்கும் மருத்துவமனைக்கும் சுற்றி திரிய விட விரும்பாமல் வலியை பொறுத்துக் கொண்டு நிமிடங்களை கழித்தார்.தேள் கடித்தது போல உணர்வின்றி கைகள் எல்லாம் நெறி கட்டிக்கொண்டு கடுகடுக்க ஏதோ நிகழப்போகிறது என்பதை
உணர்ந்தாலும், அழைக்க நா எழவில்லை. கண்களில் இருள் சுழற்றிக் கொண்டு வர..அப்படியே கீழே சரிந்து விழுந்தார் சுமதி.

பெண்கள் மட்டுமே இருக்கும் வீட்டில் என்றாவது இது போல இக்கட்டான சூழ்நிலையை அதன் ஆழமான வேதனையும் கடந்து தான் வந்திருப்பார்கள். கையறு நிலையில்
செய்வதறியாது .. இரவில் அவசர உதவி கிடைக்காது பதறி தவிர்த்து இருப்பார்கள்.

உணர்வில்லாமல் தாய் சரிந்து கிடப்பதை பார்த்ததும்.. கால்களை கூட நகர்த்த முடியாமல் கற்சிலை போல் ஸ்தம்பித்து நின்றாள் பவித்ரா. உலகமே இருண்டு போனது போல் ஆகிட, பதறி ஓடி அன்னையும் எழுப்பினாள். தாயோ...,எழவே இல்லை.


எந்த உணர்வும் இல்லாமல் எதிர்வினை ஆற்றாமல், விழிகள் கூட திறவாமல் இமை மூடி கிடக்கும் தாயை பார்த்து உயிர் பதறியது மகளுக்கு, "அம்மா.. அம்மா " என்று அவள் உயிர் உருகி கதறுவதும் கேட்காது பதில் தராத நிலையில் அமதி இருக்கவும், கண்ணீர் உடைப்பெடுத்தது.
தண்ணீரை முகத்தில் அடித்து எழுப்பியும் எந்த பலனும் இல்லை. உயிர்க்கரைய "அம்மா.!" என்ற அவள் அலறல் சத்தம் வீடு முழுவதும் எதிரொளித்தது. கைகள் நடுங்க ப்ரீத்திற்க்கு அழைப்பு விடுத்தாள். அபலைப் பெண்.

" என்ன..மா.. இந்த நேரத்துல" சோர்வாக கேட்க அவள் விம்மியது காதில் விழுந்தது " என்ன ஆச்சி டி ?" பதறினான் ப்ரீத்.

வார்த்தை வராமல் அடைத்தது." "அம்..மா அம்மா..ம்.. மா.. " என்று கதறி அழவும்.

" அத்தைக்கு என்ன? என்னனு சொல்லு டி.." பயந்து பதறி கத்தினான் ப்ரீத்.

" அ..ம்மா மயக்கம் ..., " அழுகையில் வார்த்தை துண்டு துண்டாகி கரைந்து வர,சுதாரித்தான் அவளை அமைதியாக்கும் நோக்கில் " ஒன்னும் இல்ல, நான் வந்துருவேன் பயப்படாதே..! ஆம்புலன்ஸ் போன் பண்ணி வர சொல்றேன். த..த.. தண்ணி " கண்கள் கலங்க குரல் நடுங்கியது அவனுக்கு.

" தெளிச்ச்சி.. எழுப்பினேன் அம்மா எந்திரிக்கல டா..பயமா இருக்கு. ப்ரீத் சீக்கிரம் வா.. அம்மா.."விசும்பியபடியே அவள் "அம்மா..! " என்று கத்தி அழுது விட,

அவள் கண்ணீர் விடுவது காதில் விழ, குற்ற உணர்வில் இவன் கண்கள் கலங்கியது. இருவரையும் தனியே தவிக்க விட்டு நிற்க்கும் தன் நிலையை வெறுத்து சுவற்றில் வேகமாக கையை மடக்கி குத்தினான்.

" நான் கிளம்பிட்டேன், காலையில வந்துடுவேன். தைரியமா இரு பவி. " என்றபடி அழைப்பை துண்டித்து, ஆன்லைன் மூலம் ஃப்ளைய்ட் டிக்கெட்,போட்டபடி.. வேலை காரணமாய் வெளியூரில் உள்ள சந்தீப்பிடம் செல்வதாக தகவல் மட்டும் அனுப்பிவிட்டு

ஆம்புலன்ஸ் வரவழைத்து, அட்மிஷன் போட்டதும் தொடர்ந்து போன் செய்து நிலவரத்தை அறிந்து கொண்டு இருந்தான் ப்ரீத். ஆறுதல் சொல்ல கூட முடியாமல், அழவும் முடியாமல் கண்ணீரை துடைத்து கொண்டு, தைரியப்படுத்த அவளிடம் பேசியபடியே இருந்தான். அவளோ அழுது துடித்தாள்.


இருவருமே ! அனாதையாக இரு வேறு இடங்களில் கண்ணீர் மட்டும் வடிக்கின்றனர். அமைதி படுத்த ஆறுதல் படுத்த கூட ஆள் இல்லாமல், என் பவி நிற்கிறாளே.., என சசிக்க முடியாமல் துன்பத்தில் துடித்தான் ப்ரீத்.

விமானத்தில் அமர்ந்தது முதல், நரக குழியில் வைத்தது போல பிரம்மை ! செல்போன் பயன்படுத்த முடியாமல், தகவல் தெரியாமல் பித்து பிடித்தவனாய் ஆனான். பயத்தில் கண்ணீர் தவிர எதுவும் துணையாக இல்லை. சுற்றிலும் உயர் தட்டு மனிதர்கள் இளக்கார பார்வை பார்ப்பது தெரிந்தாலும்,அடக்க முடியவில்லை.

தாய் அன்பு தந்த தெய்வம் இன்று நிலை குழைந்து கிடக்க..சுடுமணலில் விழுந்த புழுவாய் தனியாக அவள் துடிப்பதை எண்ணி எண்ணி நொந்தான். கடவுள் மேல் கோபம் வந்தது.
தன் அத்தையோ .! எந்த விரதத்தையும் விட்டது இல்லையே? 'ஏன் உடம்ப கஷ்டப்படுத்தி இந்த விரதம் எல்லாம்
தேவையா?'என்ற கேள்விக்கு
'நீங்க ரெண்டு பேரும் பூரண சந்தோஷத்தோடு நல்லா இருக்கனும்.' என்ற ஒரு வார்த்தை மட்டுமே பதிலாக வரும் அவரிடம் இருந்து 'உங்களுக்காக ஏன் நீங்க வேண்டிக்கல அத்தை.
ஆதரவில்லாத என்னை உங்க குடும்பமா பார்த்து வளர்த்த நீங்க.
இப்ப மறுபடியும் நாங்க அனாதையா நிக்கனுமா?அத்தை‌‌.எந்த பாவமும் செய்யாதவங்க அவங்க ,நல்ல படியா சரியாகனும்' மனதிலே தெய்வத்திடம் அவர் சுகமாகி வர மன்றாடினான்.

இங்கே இவள் நிலை இழி நிலை.!
கையில் இருந்த இருபதாயிரம் வரை அட்மிஷன் ஃபீஸ் ஆக.. கட்டிய பிறகு டெஸ்ட்க்கே கை இருப்பு காலியானது.மருத்துவமனையில் இரண்டு மூன்று பேர் துணைக்கு இருந்தாலும் போதாது. ஒரே ஒருத்தி.!ஒவ்வொரு டெஸ்ட்ம் ஒவ்வொரு இடத்தில், அங்குலம் அங்குலமாக அந்த மருத்துவமனையைவெற்று காலில் அலைத்தபடியே அளத்தாள் பவித்ரா. பாதம் நோவுற்று கால் கடுக்க ஒற்றை கால் ஊன்றி சுவற்றில் சாய்ந்தாள். கண்ணீர் முட்டி நின்றது விழியில், கண்ணீர் உருண்டு வரும் போது அழைப்பு..பவித்ரா ஃபார்மசி கவுண்டர்கு உடனே வரவும். என்னவோ ஏதோ என நிலை கொள்ளாமல் ஓடினாள்.

" இந்த மருந்து உபகரணங்களுக்கு பணம் கட்டுங்க " எனவுமே எச்சில் கூட்டி விழுங்கி "மேடம்..இப்ப தான் கட்டினேன்." என்று பாவமாய் கேட்க ?

அப்பெண் -" அது வேற இது வேற, வரிசையில் நிறைய பேர் நிக்கறாங்க. பணத்தை கட்டுங்க இல்லை தள்ளி போங்க "என்று சிடுசிடுக்கவும்

அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போய்விட்டாள் பவித்ரா. கையில் கொண்டு வந்த இருபதாயிரம் எங்கே போனது என்று தெரியவில்லை?
குளத்தில் எறிந்த கைப்பிடி உப்பாக கரைந்து மாயமாகி விட்டது. இந்த நேரம் உடன் இல்லாத ப்ரீத்தின் மேல் அத்தனை ஆத்திரம் வந்தது. "நீ ஏன் டா இங்க இல்ல,என்னால முடியல டா.." வாய் விட்டே கதறினாள்.

"மேடம் ஒன்னு பணம் கட்டுங்க, இல்ல மத்தவங்களுக்கு வழி விடுங்க" மூஞ்சில் அடிப்பது போல் சொல் விழுந்தது.
கண்களை துடைத்துவிட்டு "கார்ட்,ஜிபே , அக்ஸப்ட் பண்ணிப்பீங்களா ப்ளீஸ் "கெஞ்சினாள் பவித்ரா.

இரக்கம் விற்றுப் போய்விட்டது என்று போர்டு எழுதி மாட்டியது போல் அந்த பெண்ணோ..! கோபமாக "படிச்சவங்க தானே நீங்க அங்க பாருங்க.. எழுதி போட்டு இருக்கே கேஸ் ஒன்லி னு " என்று அங்கே இருக்கும் போர்டை காமிக்க.

ஒரு நொடி அதிர்ந்து பின் தானாகவே
அந்தப்பெண் பார்த்த பார்வையில், கால்கள் தனிச்சையாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. கண்ணை துடைத்தபடி வேகமாக வாசலுக்கு ஓடி வந்தவள் அங்கே சேரில் உட்கார்ந்து இருந்த வாட்ச்மேனிடம் "பக்கத்தில் ஏதாவது ஏடிஎம் இருக்கிறதா " என்று இதயம் படபடக்க கேட்க ?

நீ எப்படி மா .. இந்த நேரம் போய் எடுத்துட்டு வர முடியும். கூட துணைக்கு யாரும் இல்லையா?"இல்லை என தலை அசைக்கவும் பரிதாபமாக பார்த்தார். இப்டியே நேரா போனா ஒரு ஏடிஎம் வரும் என சொல்லி தன் இடத்தில் அமர்ந்து விட,

போனை எடுத்து மணியை பார்த்தால் ரெண்டு நாற்பத்தி ஐந்து என்று காட்டவும், சந்தீப் அண்ணாவுக்கு கால் செய்து பணம் அனுப்ப சொன்னாள் பவித்ரா. அனுப்பியதாக குறுஞ்செய்தி வரவும் அந்த வாட்ச்மேன் சொன்ன திசையில் நடந்தாள்.


பார்த்தாலே அஞ்சி நடுங்க வைக்கும் பயங்கர கனவு போல இருந்தது
அந்த இருண்ட சாலை.! ஆள் அரவம் இல்லா சாலையில், திக்கு தெரியாதவள் போல் பார்வையை சுழற்றின்படி நடந்தாள் பவித்ரா.
மூடிய கடைகள் அணிவகுத்து நிற்க. பொட்டு வெளிச்சம் இல்லை. அவசரத்தில் செறுப்பு கூட அணியாமல் வந்ததால் சீரமைக்காத சாலையில் உள்ள கூரான ஊசி ஜல்லி கற்கள் அவள் பாதத்தை பதம்‌ பார்த்தன.! அதன் இலவச இணைப்பு கீழ் பாதம் வழியே இழையோடும் ரத்தம் திவளைகள் ரோடெங்கும் துளி துளியாய் சொட்டியது. பெரிய துன்ப கடலில் மூழ்கியவளுக்கு சிறு வலியை கருத்தூன்றி அறிய, தன் சுயத்திலே இல்லை அவள். காயை காப்பாற்ற வேண்டும்.

கண்களில் ஏ டி எம் என்ற பலகை படவே ஓடி சென்றவள், மொத்த பணத்தையும் வழித்து எடுத்தாள். பணம் பத்தாமல் போய் விட்டால் திரும்பவும் தனியாக இங்கு வரவேண்டும் என்ற அச்சத்தினால் பணத்தை மொத்தமும் எடுத்து பர்சில் திணித்து விட்டு, உயிரை கையில் பிடித்தபடியே ஹாஸ்பிடல் நோக்கி.. ஒடினாள். பணத்தை கட்டிவிட்டு நிம்மதி பெருமூச்சு விட கூட முடியவில்லை. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வட்ட வடிவ கண்ணாடி முன்பு அம்மாவை எட்டி பார்த்தபடி அழுதாள். தாயுடன் வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் கண்முன்னே திரையிடப்பட, அம்மாவுக்காக இதுவரை எதுவுமே செய்ததில்லையே என தலையில் அடித்துக் கொண்டு குற்ற உணர்ச்சியில் குறுகி நின்றாள்.

கண் விளிம்புகளில் கண்ணீர் உடைப்பெடுத்து வழிந்துபடியே .. நின்று முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிவிக்கப்பட்டு உணர்வற்ற உடலாய் கிடக்கும் அம்மாவை வெறித்து பார்த்துக் கொண்டே நின்றாள். தாயைப் பிரிந்து விடுவோமோ என்ற இனம் புரியாத பயம்.! இதயத்தை பாறையாக அழுத்தியது. ஈரப்பசை இல்லாம நான் வறண்டு போனது, கேட்பார் என்று யாருமில்ல அனாதையாக தவித்து நின்றாள் பவித்ரா.

♥️♥️ ஏக்கம் தொடரும்♥️♥️
 
Status
Not open for further replies.
Top