எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 21

Status
Not open for further replies.
♥️♥️ ஏக்ககம் _ 21 ♥️♥️

வாடிய மலர் மேல் விழும் பனி துளியாய்.! அவள் கண்களில் நீர் நில்லாமல் பொழிந்து கொண்டே இருக்க,விழி நீர் வற்றி போகும் வரை அழுதாள் பவித்ரா.
தெய்வம் இல்லாத கோவிலாய் ..இருளில் மூழ்கி சோகம் நிறைந்து தென்பட்டது.அழகிய தாய்மையின் உறைவிடமான சுமதியின் வீடு.இன்று அன்பின் வெற்றிடமாய் கலை இழந்து உயிர்ப்பு இல்லாமல் காணப்பட்டது தாயில்லாத வெற்று வீடு.!

பவித்ரா என நொடிக்கு நொடி.. அதட்டியபடி, தேடிய ஆள் இன்று இல்லை.! குரல் உயர்த்தினால் உடல் நடுங்கி போக வைக்கும்.. சுமதி அம்மாவின் கம்பீரமான ஓங்கி ஒலிக்கும் குரல் இல்லை.! பசி அறியவோ ? வலி உணர்ந்து தலை வருடவோ நீ இல்லை? தாய் இல்லாத தருனம் உலகமே இருண்டு வழி தெரியாது போல் கருமையான மாயை சூழ்ந்து எல்லாவற்றிலும் பிடித்தம் விலகி வெறுத்துப் போன நிலை சுமதியின் மகளுக்கு. இனமறியா பயம், பரிதவிப்பு நடுக்கம்
எதிர்காலத்தை பற்றிய எத்தனையோ .. கேள்வி? யாரும் இல்லை என்ற விரக்தி,இப்படியே இன்றே இறந்துவிடலாம்.என்ற நிலையற்ற சிந்தனை வேறு..அவளை
தூண்டிவிட,தாய் வேண்டுமென சேய் உள்ளம் அடம் கொண்டு நின்றது.!

ஒரு வேதனை மறக்க அதைவிட பெரிய வேதனையை கொடுப்பாராம் கடவுள்.!!

இதோ.! தொடர் வேதனையின் அணிவரிசையாக உலகோடு தன் உயிரையும் உதறி தள்ளிவிட்டு போகும் அபாய நிலையில் பவித்ரா நின்றிட,அவள் வாழ்வதற்கான ஒரே ஒரு பிடிமானமும் தளர்ந்து கீழே விழுந்து கிடந்தது.!! மெல்ல அவள் கைகளை நகர்த்த ஏதோ ஒன்று கையில் தட்டுப்பட்டது உணர்ந்து என்ன? என்று கைகளாலே மட்டும் தடவி பார்த்து .. விழியால் உற்று பார்க்காமல் கையால் வருடியபோது அவளின் தொடு உணர்வால் மூளை தொட்ட பொருளை உணர்த்திட !!அதன் மீது தன் விரல் பட்ட இடங்கள் தீயாய் சுட்டது. அவன் கட்டிய தாலி.!! அறுந்து கிடந்தது.!!கீழே எப்படி? என்று பதறி அடித்துக் கொண்டு பார்த்தாள் பவித்ரா. அதில் மூன்று முடிச்சிட்டதற்கான அறிகுறியோ? அவன் கட்டியதற்கான அடையாளமே இல்லாமல் தண்டாமல் தனியே தன்நிலை மாறாது காட்டாததாய் புதிதாக கிடந்தது.
மஞ்சள் கயிறுடன் இணை கூடிய பொன்தாலி.!!தாலி எப்படி தானாய் கலண்டு விழும்? கட்டி மூன்று முடி போட்ட தாலி ஒரு நாளில் எப்படி விழும்? கட்டினால் விழவே விழாது.கட்டினானா? கட்டவில்லையா? தனக்கு தானே கேள்விகளை அடுக்கி குழம்பினாள் பவித்ரா.நீண்ட நெடிய யோசனைக்கு பின் மனம் உரைத்த பதில்கள், உயிரையே உலுக்கி எடுக்க, ஆற்றாமையின் அழுத்தம் தாங்க முடியாமல் இதயமோ தன் இயக்கத்தை நிறுத்தம் செய்திட,பேரதிர்ச்சியில் மூச்சு அடைத்தது.

இவளுக்கான துன்பத்தின் அளவுகோலை கடவுள் உடைத்து
எறிந்து விட்டானோ??

ஒருநாளில் எத்தனை இழப்பு.. உயிர் தந்த தாய் மரணம்.! உயிரானவன் உடன் நிகழ்ந்த திருமணம்.! இரண்டுமே கனல் என மறைந்தால் என்ன ஆகும்?இதயமே நொருங்கும். இந்தனை இழப்புகளை ஏற்குமா சிறுமனம். மேலும் மேலும் அதீதமாக கூடும் இந்த தொடர் வலிகள் பொறுக்காமல் துடிப்பை நிறுத்திடுமா இவளின் இதயம்.

அவள் உயிரை நிலைக்க வைக்க இருந்த ஒற்றைக் கயிற்றின் பிடிமானமும் மணல் கயிறானது. இது பொம்மை கல்யாணமா? ஏன்..? ஏன்..? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் மூளையில் ஒரு பிரளயமே வந்து வெடித்தது. மெல்ல அவனிடம் கடைசியாக பேசியதெல்லாம் நினைவுக்கு வரிசை கட்டி வர, மாமனை சீண்ட பிடிக்கவில்லை என்றதும். வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் என்று சொல்லி.. தன் காதலுக்கு தானே கொல்லி வைத்தது புரிய, தான் செய்த தவறையும் அவன் மனநிலையை அனுமானித்து மௌனமானாள் பவித்ரா.

இறுதி வேள்வியில் அத்தையின் ஈமக்கடன்களை முடித்து விட்டு வீட்டின் வாயிலின் வழியே நடந்து வந்தான் பிரீத். அவன் காலடி சத்தத்தை வைத்து அவன் தான் வருகிறான் என்று உணர்ந்தவள் மெல்ல கண்ணீரை துடைத்து விட்டு தரையோடு கிடந்த தாலியை கை கொண்டு மறைத்து, தரையுடன் கையால் தேய்த்தபடி சட்டென இழுத்து பின்னால் ஒளித்து வைத்து விட்டு, கடை விழியில் நீர் தேங்க!அவனை கேள்வியாய் பார்த்தாள்.

அவனோ தன் பாதத்தை பார்த்தபடி இருந்தான். தலையை நிமிர தைரியம் இல்லை. தவறை உணர்ந்தவனுக்கு நீ செய்தது துரோகம் என்று மனம் ஊசியாய் குத்தியது. அவள் கேட்கப்போகும் கேள்விகளும் பேசக்கூடிய வார்த்தைகள் எல்லாம் இதயத்தை ரத்தம் கசிம் அளவு வேதனைப்படுத்தும் என்று தெரிந்தவனோ? பேசட்டும் என்று அமைதி காத்தான்.
கீழே கிடந்த தாலியை இறுக்கி உள்ளங்கையில் அழுத்திப் பிடித்தவளுக்கோ .! கண்கள் குளம் கட்டி கண்ணீர் வழிந்தது. விளக்கம் கேட்கும் மனநிலையில் அவள் இல்லை. அவன் என்ன சொல்லுவான் என தெரிந்ததால் கேள்வி கேட்க்க விருப்பவில்லை.!
பவித்ராவின் குணமும் கோபம் அறிந்த இவனோ.., தவறான புரிதலின் குத்தகைதாரர் போல.! அவனாகவே அவளுக்கு தன் மேல்விருப்பமில்லை, காதல் இல்லை, நடக்காத திருமணத்தைப் பற்றி எந்த வருத்தமும் இல்லை என்று தானாகவே அவள் தரப்பில் வாதாடி விட்டு, தான் செய்தது சரி தான்.. என தீர்ப்பும் எழுதி தப்பு கணக்கு போட்டுக்கொண்டான். நிஜம் அறியாதவனாய்.
அவளே இவனின் காதலின் முகவரி.!அவளின் ஒற்றை பார்வைக்காக உயிரையே பறித்து காலடியில் வைப்பான் ப்ரீத். சாகும் வரையிலும் அவள் மேல் அன்பைப்பொழிந்து காதலை உணர வைப்பான்.ஆனால் அவளை சூழ்நிலை கைதியாக்கி,சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாலி கட்ட விரும்பவில்லை அவன்.!

அவள் கழுத்தில் தாலி கட்ட சொன்ன நிமிடம் கட்டிவிடு என காதல் உள்ளம் கெஞ்சியது. ஆனால் காலம் முழுக்க நீ வேண்டாம் ..., உன்னை வெறுக்கிறேன். வற்புறுத்தி கட்டி விட்டாய் என்று சொல்லிவிடுவாளோ??என ஆணவன் மனமோ அஞ்சியது.தாலியை காதல் உணர்வற்று கழுத்தில் எப்படி வாங்க முடியும்? பிடிக்காத சுமையாய் பவித்ரா கழுத்தில் தாலியை சுமத்திட விரும்பவில்லை ப்ரீத். சந்தர்பத்தை பயன்படுத்தி திருமண பந்தத்தில் இணையாததன் காரணம் பவித்ரா தான். வேறு மாப்பிள்ளை பார்த்து பிடித்து விட்டது எனக்கு, என் திருமணம் உன் தலைமையில் தான். நான் உன் பவித்ரா இல்லை என்று பவித்ராவே விளையாட்டாய் சொன்ன பொய் விஷமானது இங்கு.!!

இந்த காதல் கொடியது. வலிய வந்து வலிகள் ஏற்க்கும். உண்மையான காதல் தியாகத்தை தத்தெடுக்க வைக்கும். அடித்து அடைத்து வைக்காமல், தன்னை விட்டுப் போனாலும் பரவாயில்லை என்று சிறகை கொடுத்து பறக்க வைக்கும். இதயத்தை உடைத்துக்கொண்டு கூட தன் அன்பானவர்களை சிரிக்க வைக்கும்.!! பெருங்காதல் பேரன்பின் குணம் அதுவே.!!

அவன் இயல்பு இது இல்லை. சினம் சீற்றம் ஆவேசம் ஆத்திரம் அவள் வேண்டும் என்று அடம் கொண்டு நின்றவன் தான். வேலியில்லாமல் நிற்கும் ரோஜா செடியாய் அவள்.!
பலவீனமானவளை பலவந்தமாக உறவில் பிணைத்து கொள்ள விரும்பவில்லை.
அன்பின் தூயவன்.!!


சுமதியின் இறப்பிற்க்கு ஒருவாரம் மௌனத்தில் கழிந்தது. இருவரும் முகத்தைப் பார்த்து பேசிக்கொள்ளவே இல்லை. கடையில் இருந்து உணவு வாங்கி வந்து அவள் அருகில் வைப்பதும், உண்டாளா இல்லையா? என ஒளிந்திருந்து ஆராய்ச்சி செய்வதே.. முழு நேர வேலையாக கொண்டான் ப்ரீத்.
இரவில் அவள் உறங்கிய பிறகு மெல்ல அருகில் வந்து முகத்தை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டபடி.. பார்வையால் வருடுவான். உறங்கும் போதும் சோகம் அப்பிய முகத்தில் எப்போது சந்தோஷம் மிளிரும்? நட்சத்திர ஒளியாய் புன்னகை மலரும் என தினமும் இரவில் நின்றபடி அவள் முகம் பார்த்து உறக்கத்திலாவது சிரிக்க மாட்டாளா என்று தவம் செய்வான் ப்ரீத்.

காதல் ஒருவனை முட்டாளாக்கும் என்று சொல்லும் கூற்று கூட உண்மைதான் போல.! அவள் என்னை காதலிக்கவில்லை என்றவேதனையில் இவன்.!நான் உன்னை காதலிக்கவில்லை என நம்பி விட்டாயே?என துயரத்தில் அவள்.!
மெய்நிலை அறியாது கானல் நீராய் .. கண் துடைப்பிற்காக செய்த கல்யாணத்தை எண்ணி நொந்தவளோ? இயலாமையால் தாயின் ஆசையை நிராசையாக்கி ஏமாற்றியவன் மீது வெறுப்பின் பிடியில் சிக்கித் தவிக்கிறாள். யாருமே தனக்கு இல்லை. என்ற கவலை மனதில் குடிகொள்ள பாறையாய் இறுகிப் போனால் சோக தேவதை.!
அமைதியின் சிகரத்தில் அமர்ந்து தியானம் செய்வது போல் மௌனமே மௌனமாக மாறிப் போனால் பவித்ரா.இவனுக்கு நிசப்தம் நெஞ்சை அடைத்தது.

பவித்ரா தனது அம்மாவின் மறைவுக்கு பிறகு அதீத மன உலைச்சலுக்கு ஆளானாள். தேவையற்ற எதிர்மறை சிந்தனைகள் குப்பைகளாய் எண்ணம் எங்கும் நிரம்பியது. இழந்ததையும் இல்லாததையும் எண்ணி? ஒய்வு இன்றி, புலம்பிதவித்தது பெண் மனம்.
நிராகரிப்பை தனக்கானவனுக்கு
தரும் போது இனித்தது.தனக்கே திருப்பி வரும் போது இப்படி வலிக்கிறது. காதல் தோல்வி எனும் ஆழ்கடலில் மூழ்கிக் வேதனையுருபவள்மனமோ.. மீளாத்துயர் இது.! உயிரை மாய்த்துக்கொள். அதுவே நிம்மதி என கூக்குரல் இட்டது. 'நானா இப்படி எல்லாம் யோசிக்கிறேன்? ' அவளுக்கே அவள் மேல் சந்தேகம் வந்து விட்டது..

காதல் என்னும் நோய் பிடித்தால்.! கண்ணாடி போல மாறிவிடும் இந்த மென்இதயம். பிடித்தவரின் சிறிய நிராகரிப்பு கூட பெரிய வலியாய்.. மனதை சுக்குநூறாக உடைத்து வீசிடும். காதல் தோல்விக்கே இப்படி வலிக்கும் என்றால்?இங்கு கல்யாணமே கண்கட்டி வித்தை போல காட்டி.. தோல்வி அடைந்து தரையில் விழுந்ததே.!! தாலியை கையில் ஏந்திய நிமிடம், உயிரே போகும் வலி.! பசிக்கும் குழந்தை முன்பு சாப்பாட்டை வைத்து பார்வையாளார் ஆக்கி வஞ்சிப்பது எவ்வளவு கொடுமையோ? அன்னை இழந்து தவிப்பவளுக்கு ஆதரவே..., இனி நீ தான் என்று நம்பி தாலியை ஏற்றவளுக்கு,

நாடகத்தில் அணிவது போல? திருமணம் என்ற பொய்யால் கண்ணை கட்டி என் கழுத்தை அறுத்து விட்டான் ப்ரீத். நம்பிய காதலன் புரிதல் இல்லாமல் தந்த ஏமாற்றம் மரணத்தை விட கொடியது. தினம் தினம் அழுது துடித்து துவண்டும் கூட இந்த ரணம் ஆறாமல் புரையோடி உதிரம் கசிகிறதே.!! ஏன் புரியவில்லை உனக்கு? வதைக்காதே காதல..., உன் சித்ரவதைகளை சிறு பெண்ணின் மனம் தாங்காது அழுது கரைகிறது உருகி உடைகிறது. 'உன் அன்பு இல்லாமல் மூச்சு முட்டுது ப்ரீத். ப்ளீஸ் லவ் மீ..' உள்ளத்தின் மெளன குமுறல்கள். வெளியே வெறும் நிசப்தம், மௌனம் மிகவும் ஆபாத்தானது.

தொடர் தோல்லி வரும் நேரம் துணைக்கு யாரும் இல்லத சமயம் பெரிய இழப்புகள நேரிடும் போது.. நிலையில்லா மனநிலையில் அக்கறை அன்பிட ஆள் இல்லாமல் தவிக்கும் போது.. ஏமாற்றம் அடைதல் உள்ளம் உடைதல் அன்பின் பற்றாக்குறை உணர்தல்.. அழுத்தமாகி மனம் கனத்தலின் போது..உற்றாரை பிரிந்து வாடும் போது..உறவுகளின் திடீர் விலகல் கடன் சுமை ஏறி பணம் இல்லாமல் தவித்தல்,ஆறுதல் படுத்த ஆள் இல்லாதல்,உயிரானவரின் இறப்புக்குப் பிறகான மௌனத்தின் கனம் இதுவரை மனிதரால் கணக்கிட முடியாத ஒன்று.!!

"முற்றிலும் உடைந்து போய் உலகத்தை வெறுத்துப்போன உயிர் ஒன்று தன் வலிகள் மற்றும் உள்ளத்தின் நடுக்கம், பயத்தினை மறைக்க பரிதாபமாய் யாரும் பாவ பார்வை பார்திடாமல் தடுக்க.. தன்மேல் போர்வையென போர்த்திக் கொள்வதே..மௌனம்.! "இத்தகைய மெல்லிய மனச் சிதறல்களை கடினப்பட்டு தான் கடந்தாக வேண்டும்.மௌனமாக இருப்பவர்கள் கூட ஏதேதோ.. தேவை இல்லாததை எல்லாம் யோசித்து கவலையில் பிஸியாகி இருப்பார்கள். ஆனால் கூட இருப்பவர்களின் நிலைமை அதை விட கொடுமை.

ப்ரீத் " என்ன பத்தி தான் யோசிச்சிட்டு இருப்பா? என்னால தான் எல்லா பிரச்சனையும், என்ன வேணாம் னு நெனப்பா? என்ன வெறுத்துருவாளா? கோவத்துல கொலை பண்ணிடுவாளா? என்னதான் யோசிக்கிறா?பொறுமை இழந்தவனோ .. வேக நடை இட்டு பவித்ரா அருகே சென்று "பவித்ரா...,"
என்று அழுத்தமாக கத்தவும் மெல்ல திரும்பி ஒன்றை பார்வை. இல்லை முறைப்பு ம். கு..ம் அது தீ போன்ற பார்வை.!

பார்வையோடு முறைப்பு சேர்த்து
தீயாய் அவனை எரிக்க.. "
வெறுப்புணர்வின்
மொத்த கலவையும் சேர்த்து அவளோ
விழியால் அவனை குற்றம் சாட்டி பார்த்தால். அடுத்து அவன் பேச முடியாமல் ஏதோ ஒன்று அடைந்தது. அவன் செய்த துரோகம் ஏமாற்றம் எல்லாம் வரிசயாய் சரித்து மனதில் விழ..! குற்ற உணர்ச்சி அலகு குத்தும் வேல் போல.! நாக்கில் குத்திட பேச்சே.. தடைபட்டு அறவே வரவேயில்லை நம் நாயகனுக்கு. மைனஸ் டிகிரி உறைநிலையில் உறைந்த மனிதனாய் காட்சி அளித்தான் ப்ரீத்.
" சொல்லு என்ன? " விரக்கியுடன் கேட்டாள் பவித்ரா.
"அ .. அத்தை என்ன பாத்துக்க சொன்னாங்க.. நீ.. நீ.. பேசாம"மேலே பேச வராமல் உருத்தலோடு தலை குனிந்தான் ப்ரீத். " என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட என்னோட மாமாவை பார்த்து சொன்னாங்க? உங்கள பாத்துக்க சொல்லலங்க.!என்கிட்ட வராத அக்கறையா இப்டி பாக்காத ...,
அப்படியே எரிச்சலா இருக்குது.
என்ன தனியா விடு ப்ளீஸ் " போக சொல்லி கெஞ்சும் குரலில் கேட்டாள்.
ப்ரீத்.. பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு "பசிக்குது"என்றதும் அவள் முகத்தில் ஏதேனும் மாற்றம் வருகிறதா? என்று பார்த்தான்.அந்த முகத்தில் கோபத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. பசிக்குது என்றாலே உருகி விடுவாள் என்று நினைத்தவனுக்கோ..ஒரே ஏமாற்றம்.


" இப்படி எல்லாம் நீ பேசினா தவிச்சு துடிச்சு.. அக்கறையில அப்படியே
மாமா னு உன்கிட்ட வந்துருவேன் னு நினைச்சேன்னா.., நீ நெனச்சிட்டே இருக்க வேண்டியது தான். " கோபம் பொதிந்து வந்தது அவள் வார்த்தைகள்.
" தனியா இருக்க தானே.. இந்த முடிவு எடுத்த, என்ன விட்டு தள்ளி இருந்துக்கோ.. அதான் உனக்கும் நல்லது எனக்குமே நல்லது.‌
இதெல்லாம் தாங்கிக்க பழகிகறேன். ஏமாற்றம் துரோகம் இதெல்லாம்
நீ தரும் போது "ஆ.!" என கத்தியவளின் வலிகள் கண்ணீராக உடைப்பெடுத்தது " இதை விட என்ன கொன்னு இருக்கலாம் ப்ரீத்." கதறி அழுதாள் பவித்தா.
"பவி மா.. இப்படி பேசாத டி அழாத டி ப்ளிஸ் " " ப்ச்.. நடிக்காதடா? "என்று சலித்தவளோ‌ அவன் அக்கறையான வார்த்தைகள் எல்லாம் அலட்சிய பார்வையால் ஒதுக்கி தள்ளிவிட்டு உள்ளே சென்றாள்.
" முணுக்கென்று கோபம் வந்து மூக்கு விடைத்தது அவனுக்கு பழைய ப்ரீத்.. எட்டிப் பார்த்தான். அவளுக்கு கேட்கும் படி கத்த ஆரம்பித்தான்.
"எனக்கு யாருமே தேவை இல்லை.யாரையும் நம்பி.., நம்பி.., நான் இல்லை. புரியுதா டி.. அத்த இருக்கும் போதே நீ வெறுப்ப மட்டும் தான் காட்டுவ அவங்களே இல்லை. எனக்கு னு இங்க யாருமே இல்ல? உன் கூட இருக்கணும் னு ஒரு மாசமா வேலைக்கு போகாம வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கேன் பாத்தியா?என் புத்திய செருப்பால அடிச்சுக்கனும் " அவள் கேட்கும்படி கத்தி சொன்னான்.
"உங்கள யாரும் இங்கயே.. இருங்க னு அழைக்கலை. விருப்பம் இல்லாதவன் கிளம்பி உன்னோட ஆருயிர் நண்பன் கிட்ட போக வேண்டியது தானே.!"
" பேசுவடி பேசுவ,என்ன வீட்ட விட்டு போக சொல்லுற? "அறையில் இருந்து அவளின் குரல் மட்டும் சத்தமாக வந்தது .
"போக விருப்பம் இருக்கவங்கள யாரும் இங்க பிடிச்சு வைக்கல, என்னால போகாம வீட்டுக்குள்ள அடைஞ்சு யாரும் இருக்க வேணாம். தனியா எனக்கு வாழ தெரியும் "

" இவகிட்ட போய் கேட்டேன் பாரு? ஒரு தோசை ஊத்த உனக்கு தெரியாதா டா? ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காம வாந்தி எடுத்தா னு மாவெல்லாம் வாங்கிட்டு வந்தேன்ல.. எதுக்கு வீட்ட விட்டு போறதுக்கா? என் மேல பாசமே இல்லாதவளுக்கு தாலி கட்டி.!நல்லவேளை நான் அதை கட்டல, கட்டி இருந்தா மோசம் போய் இருந்திருப்பேன். ம்.. " என்று பெருமூச்சி விட்டு பிடிக்காமல் அழுத்தபடியே மாவு பாக்கெட்டை தலை கீழாக தூக்க.. பாதி மாவு தரையில் சிந்தி .. மீதி எப்படியோ சமாளித்து பிதுக்கி குண்டானுக்குள் நிரப்பியவன். அவளை நினைத்துக்கொண்டு கரண்டியால் கலக்கிட, மிச்சமாக இருந்த சொச்ச மாவும்... சுவரெல்லாம் பட்டு தெரித்தது. கேஸ் பத்த வைக்காமலே தோசை வார்த்திட, ம்ஹூம்.. சுத்தம் தோசையே.. தோசையே.. ஏன் வேகலை? என்று நினைத்தவனுக்கு அடுப்பு பத்தவைடா வெண்ண.! என்று மனமோ அசிங்கமாய் திட்டல் போட்டது.! பின் அடுப்பை பற்ற வைத்தான்.
" ஒரு தோசை கூட உனக்கு கொடுக்க மாட்டேன். எல்லாத்தையும் நானே திம்பேன் டி..! " நீண்ட புலம்பலோடு இவன் சூலூரைக்கவும் தோசை அடிப்பிடித்து கருகவும் சரியாக இருக்க, பதட்டத்தில் தோசை கல்லை கையாலே ப்ரீத தூக்க..! கையிலே தீ மிதித்த உணர்வு அவனுக்கு "ஆ..! என்று அலறியபடி கல்லை கீழே போட்டு உடைக்க.. டைல்ஸில் பட்டு தோசைக்கல் எம்பி குதித்து தெறித்து விழவும்..தோசை கல் விழுந்து தெறிக்கும் சத்தம் பவித்ரா செவியில் டம்.. டமால்.. என கேட்டதும் பதறியபடி கிச்சனை நோக்கி விரைந்தாள்.. வந்தவளோ

மருந்துக்கு கூட அவன் பக்கம் பார்க்காமல் பிடி துணியால் தோசை கல்லை எடுத்து சிங்கிள் போட்டு விட்டு நீரை திறந்து விட, ஸ்...ஸ்...ஸ்.. என்ற சத்தமிட்டு நீர்க்குமிழிகள் பொரிந்து அடங்கியது. டைல்ஸ் எங்கயாவது டேமேஜ் ஆகி இருக்கிறதா? என்று ஒருமுறை உற்று பார்த்து பவித்ரா விட்டு நகர்ந்து செல்ல முற்பட,

கோபமாக அவளின் துப்பட்டாவை அழுத்தம் கொண்டு பிடித்தான் ப்ரீத்.
அவன் செய்கை பிடிக்காமல் உஷ்ணம் தலைக்கு ஏறிட வேகமாக துப்பட்டாவை உருவினாள், துப்பட்டாவின் முனையில் இருந்த சறுக்கைகள் எல்லாம் வெந்த புண்ணில் பட்டு கீறி.. எரிச்சலை உண்டு பண்ண ஆ..! என கத்தியவன் கண்கள் கலங்கியது. கையை உதறியவனை பார்த்து துடித்தவளின் கரங்களோ..., காயத்துக்கு மருந்திட பரபரக்க,
நொடியில் துளிர்த்த நேசத்தை கோபத்தில் மறைத்தவள் அவனை முறைத்தபடி அலட்சியமாக ஒரு கோப பார்வையோடு அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள் பவித்ரா.

முகம் பார்க்காமல் அவள் செய்யும் ஒதுக்கம்!! ஆயிரம் மடங்கு வலி தந்து கூரிய ஊசியாக மனதை தைத்தது.!! அவன் அனுமதி இன்றி கண்கள் தானாக நீரை சொறிந்தது, அவளுக்காகவே வாழ்ந்தவன் இங்கு அவளால் அழுகிறான்.ராட்சசி ஏன் அழ வைக்கிறாள்? அதற்குப் பிறகு இருவருக்கும் உணவு இறங்கவில்லை.
அவள் இதழ் மட்டும் தான் வெறுப்பை கக்குகிறது.மன மோ அவனின் சிறிய காயத்திற்கே மருகி..அழுது துடிக்கிறது.!!

' பசியில் உறக்கம் வராமல் புரண்டு உருண்டு தலையணையை வயிற்றில் அழுத்திப் பிடித்து பசியை சமன் செய்தபடி உறங்கினான் ப்ரீத்.
மெல்ல அவன் அருகில் வந்த தேவதையோ..., அவன் காயத்திற்கு மருந்து இட்டு கண நேரத்தில் மறைந்தாள்.!! உயிரையே வெறுத்தாலும் உன்னை வெறுக்கவே மாட்டேன் )என்று உணர்த்தி விட்டு சென்றால் பவித்ரா.

♥️ ஏக்கம் தொடரும்♥️
 
Status
Not open for further replies.
Top