உமா கார்த்திக்
Moderator


அத்துமீறும் இவனைத் தடுத்தால் இவனுக்கு என்னை பிடிக்கமல் போகும். தடுக்கவில்லை என்றால் எனக்கே என்னை பிடிக்காமல் போகும். தர்மசங்கடமான அவன் அருகாமையை ஏற்க்கவும் இயலாமல் விலக்கவும் முடியாமல் நொந்தவளின் நிலையோ!! 'ஐயோ.! ' என்று விதியை வெறுத்து வேதனையில் மூழ்கினால்.
வேறு எதுவும் செய்ய முடியாத சூல்நிலை கைதியாகி நின்றாள் பவித்ரா.
கன்னிகையோ..! ஆளனின் விரலின் வேகங்கள் தேகத்தில் பாய்ந்ததும் வலிய தென்றலிடம் சிக்கிய சந்தன முல்லைகொடி போல.! தளர்ந்து தள்ளாடினாள்.
அவனின் இதழ்களின் இம்சைகளிலும். விரல்களின் வருடலிலும் இடை பற்றிய பிடியில் இதழ் ஒற்றிய தீண்டல்களிலும் நாணலாய் வளைந்தவள், அவனோடு சேர்த்து தோல்வியையும் தழுவி..ஒரு கட்டத்தில் துவண்டு போனால்,
ப்ரீத்.. தன்னவளை உரிமையாய் ஆட்கொள்ள ஆரம்பிக்க, அபலை பெண் விழியில் பெருகி நீர் வார்ப்பெடுத்தது.!! உடல் அவன் செயல்ககளுக்கு இசைந்தாலும் மனமோ..,முல்லாய் குத்தியது.இதெல்லாம் தவறு என்ற மனதின் குரல் வேறு அக்னியாய் உள்ளுக்குள் தன்மானத்தை சுட்டெரித்தது.
அதனால் புண்பட்டு துடித்தவள் கண்ணீரை.. வற்றா ஊற்று நீராய் தொடர்ந்து வடித்தாள்.! மெல்ல முகமெல்லாம் முத்தமிட்டு, இடையை விரலால் வருடியவன் இரு கையையும் மாலையாய் கோர்த்து அவளை இடையோடு சேர்த்து அணைத்திட, இதழால் முத்தமிட்டு நெஞ்சாகூட்டில் முகம் புதைத்தான்.
அவன் வெப்ப இதழ்கள் ஈரமான இதழ் ஒவியங்களை கழுத்து வளைவுகளில் வரையவும் உடல் உதறிட..,சிலிர்த்தது.பெண்ணவள் தன் உடலோடு துள்ளி அவனுள்ளேயே விழுந்து திளைத்தாள்.!! காதல் போதையில் இவருக்கும் திரி தொட்ட தீயாய் காமம் பற்றியது!!
இறுக பற்றியவள் அவன் தந்த அதிர்வுகளை எல்லாம் மொத்தமாய் அவன் பின் தலையில் கடத்தி, மெல்ல விரலால் தலையில் அழுத்தம் கூட்டி தன்மீதே அழுத்தி பதித்துக் கொள்ளவும்,இதுவரை தயக்கத்தில் இருந்தவனோ...,
அவள் ஒத்துழைப்பு நல்கிட அழுத்தமாய் முத்தமிட்டவாறு அடுத்த கட்டத்திற்கு முன்னேறினான்.
காதலியின் கண்ணீர் விரலை நனைக்கவும் " என்ன டி..? " என்றான் அதிர்த்த குரலில், குற்ற உணர்வு மேலோங்க பதறியபடி விலகி மெத்தை விட்டு கீழே இறக்கினான் ப்ரீத்.
கண்களைத் கைகளால் துடைத்து விட்டவள். "ஒன்னும் இல்லை வா .." என்று இரு கைகளையும் நீட்டியாவறு அவனை அருகில் வர அழைக்கவும், அவளுக்கு விருப்பமில்லை என்று விழி நீர் உணர்த்திட, திகைத்து நடுங்கியபடி அவளை விட்டு விலகினான்.
"என்னை எடுத்துக்கோங்க மாமா.. இதெல்லாம் நடந்தாலாவது..., என்ன கல்யாணம் பண்ணிப்பல்ல? " என்று ஆலகாலம் தோய்த்த வார்த்தைகளை விஷமாய் அவன் மேல் வீசினாள். அந்த வார்த்தை பட்டு உயிர் சிதறி
உடைந்தவனோ.. அடக்க முடியாத வலியில் சீற்றம் கொண்ட பேரலையாய் கோபம் ஏறி.. கண்கள் சிவக்க, அவனைப் பற்றிய அவள் கைகளை உதறிவிட்டு வெடிக்க ஆரம்பித்தான்.
" என்னடி நெனச்சிட்டு இருக்க? ஏதோ பொருளை டெமோ கொடுத்து வாங்க வைக்கிற மாதிரி அசிங்கமா பண்ணாத டி .. உன்ன புடிச்சு காதலிச்சவன் டி.. நீ தொட்டதும் எனக்கு உலகமே மறந்துடுச்சு. அதுக்காக இவ்ளோ அசிங்கமா என்ன நினைச்சுட்டியா?
நல்லவேளை ஒன்னும் ஆகல, உன்னை இழந்து அத்தை ஆசைய நிறைவேத்தனுமா..! " என்று குரல்வளைக் கிழியும் அளவு கத்தினான் ஆத்திரம் தாங்காமல் "என்ன விடு டி ..
இப்படி தப்பு பண்ணி என் கூட கல்யாணம் ஆனா உன்னால நிம்மதியா இருக்க முடியுமா?
உறவோட அஸ்திவாரம் கட்டில் கிடையாது பவித்ரா. அத்தை.. தெய்வமா இருக்காங்க டி.. அவங்களுக்கு நீ பண்றது எல்லாம் பிடிக்குமா.." அவள் கரத்தை பிடித்து தரதரவென இழுத்து வந்து அவளது அம்மாவின் புகைப்படம் முன் நிறுத்திட, நடுகத்துடன்
தலை நிமிர தைரியம் இல்லாமல் நின்றாள் பவித்ரா. கண்ணீரை அருவியாக கொட்டியது.
"அத்தை ஆசைய நிறைவேத்துறதுக்காக உன் வாழ்க்கை நான் பலியாக்க மாட்டேன்.உனக்கு புடிச்ச மாப்பிள்ளை நீ கல்யாணம் பண்ணிக்கோ.. " என்று காதலியிடம் கத்தினான் ப்ரீத்.
" உன்ன தான் எனக்கு பிடிக்கும் " உண்மையை குரலை உயர்த்தி சொன்னாள் பவி.
"பொய் பேசாத டி.."என்று சினம் கொண்டு அவளை அடிக்க கை ஓங்கவும் பயந்து இரண்டு அடி பின்னே சென்றால் பவித்ரா.
கையை கீழே போட்டவன் தன் உதட்டை கடித்து சொல்ல வந்த வார்த்தைகளை விழுங்கினான்.
"பொய் சொல்லாத.டி .. எனக்காக வாழ்க்கையை தியாகம் பண்ண வேணாம் பவித்ரா. எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்க விருப்பமும் இல்ல. அதனால தான் நான் அன்னைக்கு உன் கழுத்தில தாலி கட்டல. என் வாழ்க்கையில் இன்னொரு பொண்ணு இருக்கா!! அவள தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். நீ முத்தம் கொடுத்ததும் தடுமாறி உன்கிட்ட சலனபட்டுடேன். சாரி.. நீயும் என்ன காதலிக்கல
வேணாம் னு சொன்னதும், என்னால
அந்த வலியிலிருந்து வெளியே வரவே முடியல. என்ன நானே காயப்படுத்த ஆரம்பிச்சிட்டேன். ஏன் தற்கொலை கூட பண்ணிக்க நினைச்சேன்.அந்த நேரம் பார்த்து எனக்காகவே ஆறுதலா வந்த, ஒரு பொண்ணுக்கு துரோகம் பண்ண கூடாது. என் வலிக்கெல்லாம் மருந்தா இருந்தவ, என்ன உயிரா நெனச்சு, எனக்காக காத்திருக்கா.! நீ சொன்னா? இப்பவே கூட உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்.ஆனா என்னால உன்ன காதலிக்க முடியாது. முடிவு நீ எடு பவித்ரா.எந்த முடிவா இருந்தாலும் நான் ஏத்துக்குறேன்.
நிமிர்ந்து தனது தாயின் படத்தையே வெறித்துப் பார்த்தவள். ஒரு முடிவு எடுத்தவளாய் "எனக்கு யார் வாழ்க்கையும் கெடுக்க விருப்பம் இல்லை. கல்யாணம் பண்ணா கூட உன் காதல் எனக்கு கிடைக்காதுன்னு சொல்லிட்ட? என்ன மட்டும் தான் நீ காதலிக்கிறேனு நம்பி தான் " என்று தயங்கியவள். 'நானுமே உன்னை காதலிக்கிறேன் டா ' என்று மனதிற்குள் கதறினாள் நிஜத்திலோ " அம்மாவோட ஆசை அது நிறைவேத்த இப்படி பண்ணிட்டேன். உன் மேல ஆசைப்பட்டு இல்லை. நான் உன்னை காதலிக்கவே இல்லை." 'நானுமே அவன காதலிக்கிறேன் னு தெரிஞ்சா அவன் வாழ்க்கை நிம்மதி இல்லாம போயிடும். அந்த பொண்ணு கூட சேர்ந்து சந்தோஷமா வாழ மாட்டான்.' என்று மெய்யறியாமல் எண்ணியவளுக்கு நெஞ்சம் அடைத்தது. மெல்ல மூச்சை இழுத்து விட்டவள்.
" அவங்களயே கல்யாணம் பண்ணிக்கோ " என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்ததும் வாய் விட்டு கத்தி அழுதாள். வாழ்க்கையே இழந்து விட்டோமே என்று கதறினாள். விரக்தி புன்னகையோடு "நீ கேட்டப்ப நான் வேணாம் னு சொன்னேன். நான் கேட்கிறப்ப நீ வேணான்னு சொல்ற? இதுதான் விதியா? கடவுளுக்கு ஏன் நம்ம காதல சேர்த்து வைக்க பிடிக்கல? இந்த காதல் ரொம்பவே வலிக்குது தெரியுமா ப்ரீத்..
இதே வலிய நான் உனக்கு கொடுத்ததுக்கு வாழ்க்கை முழுக்க நொந்து அழுது சாவுனு விதி சொல்லுதோ!! உன் உண்மையான காதல எப்பவுமே நான் உதாசீனப்படுத்தி ஒதுக்குனதுனால, உன் காதலே என்னை பழி வாங்குதா டா? உன் கூட எப்படியெல்லாம் வாழனும் னு கனவோட இருந்தேன்டா? எல்லாமே கனவா கலைஞ்சு போச்சு ' என்று இழந்ததை எண்ணி துடித்தாள்.
ப்ரீத்.. கதவு தட்டும் ஓசை கேட்க நொந்தவளோ
" நிம்மதியா அழ கூட விடமாட்டான் " கண்களை துடைத்துக் கொண்டு
விரக்தியில் கதவை திறக்க.! அவனோ
கதவை திறந்து அடுத்த நொடியே.., அவளை பின்னோடு தள்ளி மெத்தையில் அமர வைத்து மடியில் சாய்ந்து கண்ணீர் விடத் தொடங்கினான். அவள் விழிகளும் கண்ணீரை பகிர்ந்து கொண்டது.
எதற்காக அழுகிறோம் என்று இருவருக்கும் தெரியாமல் கண்ணீர் விட்டு காதல் தோல்வியின் வலியில் இருந்து தங்களை தேற்ற முயல, மெல்ல அவன் சிகை வருடியவள்" எனக்கு காதல்.. கல்யாணம் எதுவுமே வேணா.. நீ என்ன வெறுத்துத டா..ப்ரீத்...,என்னால அதை "
அதற்குமேல் பேச்சு வராமல், விம்மி அழுபவளை நிமிர்ந்து பார்த்தவன். மீண்டும் மடி சாய்ந்து அழுகையை தொடர்தான்.
இரண்டு பேரின் நிலமையுமே மோசம் தான். அலட்சியத்தில் நாம் சொல்லும் சின்ன பொய் ஒரு உறவயே மொத்தமாக அழித்துவிடும் வளிமை கொண்டது. எத்தனையோ தடவை கெஞ்சி இருக்கிறான். 'நீ என்னை காதலிக்கிற பவித்ரா.. ஏன் ஒத்துக்க மாட்டிங்குற?' எனக்கு உன் காதல் வேணும் னு எத்தனை தடவை வாய்விட்டு கேட்டு இருக்கிறான். அப்ப எல்லாம் சீண்டி பார்க்க உன்மேல காதல் இல்லனு பொய் சொல்லி வெறுப்பேற்றிய பவித்ரா.
அவள் செஞ்சததுலேயே பெரிய தவறு வேறொரு பையனை பிடித்திருக்கிறது என இவனிடமே சொல்லி .. கல்யாணம் பண்ணி வைங்க மாமா என்று கேட்டது தான். ப்ரீத்த தான் கல்யாணம் பண்ணிக்கிறேன் னு சம்மதம் சொன்னத நிரூபிக்கிறதுக்கு அவளோட அம்மா உயிரோட இல்லை. அவங்க இறந்ததுக்கு பிறகு, என்ன கல்யாணம் பண்ணிக்கோ என்று இவளே கேட்டாலும் இவனால நம்ப முடியல.!!இப்போதைக்கு ரெண்டு பேருமே
ஒரு பொய்ய உண்மை என்று நம்பிகிட்டு இருக்காங்க.
ப்ரீத் பவித்ராவுக்கு இன்னொரு பையன புடிச்சிருக்கு. விருப்பமே இல்லாம அம்மாவோட கடைசி ஆசைக்காக என்னை ஏத்துக்க நினைக்கிறா .. அப்படின் னு இவன் ஒரு பொய்ய நம்புறான்.
அவ்ளோ..நாம வேணாம் னு விலகின நேரம் யாரோ ஒரு பொண்ணு அவன் வாழ்க்கையில வந்து இருக்கா.. நிறைய அன்பு தந்து இருக்கா.. என்ன கல்யாணம் பண்ணிக்கணும் னு பைத்தியம் மாதிரி திரிஞ்ச ஒருத்தன் என்னை வேணான் னு சொல்றான்னா? அதுல உண்மை இல்லாம இருக்காது.
நான் தான் அவனை அடிக்கடி சீண்டி பாக்க பொய் சொல்வேனே தவிர, ப்ரீத்..பொய் சொல்ல மாட்டான். அவளால இதை நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல, அவன் உன் கூட இருந்தா நீ கண்டுபிடிச்சிருப்பகொஞ்சநாள் கூட இல்லை. டெல்லியில இருந்தான் இப்ப இடையில நாம பேசவே இல்ல. அப்பதான் அந்த பொண்ண பார்த்திருப்பானோ? அவன் சொன்ன பொய்யை நம்பி விட்டாள். இது இவள் மனநிலை.
மெல்ல அவள் கரங்களைப் பிடித்தவன் பேச ஆரம்பித்தான் " என்கிட்ட பேசாம இருக்காத டி..என்னால நீ விலகி போறத ஏத்துக்க முடியலை "என்று கெஞ்சினான் பேசச் சொல்லி அவளிடம்.
பூமிக்கடியில் புதையுண்ட வைரம் போல தான் சொல்லாத காதல்..!! அவனை ஆறுதல் படுத்த தலை வருடும் போது தான் அவள் உணர்ந்தால்.!!அவள் விரலில் மோதிரம் இருப்பதை அதைப் பார்த்ததுமே அவனிடம் கேட்க வாய் துடித்தது.
'இத நீ வாங்கி கொடுத்தா? நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கறே னு நான் சொன்ன ரிங் இது. இப்போ என் கையில போட்டு இருக்கான்னா என்ன அர்த்தம்? ' தலை வெடிப்பது போல இருந்தது அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'யாரோ ஒரு காதலி இருந்தா.. என் கையில் ஏன்? இதை போடணும் அதுவும் இப்போ .. அவள் செய்த காரியத்தால் அவன் முகத்தை பார்க்க கூட அவளுக்கு துணிவில்லை. உரிமையாய் அவனிடம் கேட்க முடியாமல் தவித்தாள் பவித்ரா.
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் நெருங்கினால் அது தவறாக சித்தரிக்கப்படாது. இதுவே ஒரு பெண் கொஞ்சம் நெருங்கி போனால் அவ்வளவு தான்!! எல்லாரும் தப்பா சொல்லுவாங்க. செய்த செயலை நினைத்து அவமானமாக உணர்ந்தாள் பவித்ரா."இப்ப நான் என்ன சொல்ல முடியும். இன்னொரு பொண்ணு இருக்கான் னு சொன்னதுக்கு அப்புறம் என்னத்த கேட்க முடியும், செடி மாதிரி காதலி முளச்சிட முடியாது. பொய்யா இருந்தா தானாவே கண்டிப்பா தெரிஞ்சிடும். நம்ம காதலை இப்போதைக்கு சொல்ல வேணாம். நானுமே அவனை காதலிச்சது தெரிஞ்சா.., அந்த பொண்ணு கூட வாழ்க்கை முழுக்க ப்ரீத்தால நிம்மதியா வாழ முடியாது. 'என்று வரபோகும் புதியவளின் வாழ்க்கையை காக்க நினைத்தால்.
"பவித்ரா இனிமே புடவை கட்டாத டி.."
ஏன் என்று புரியாமல் விழி சுருக்கினால் பவித்ரா."கண்ட்ரோல் ல இருக்க மாட்டேன் " ரோபோ போல சொல்ல,
"இன்னொரு பொண்ண காதலிக்கிறேன் சொன்ன ? "ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேட்டாள்.
"இந்த பொண்ணும் என் காதலி தான்!!
தலையில் பொய்யாக தட்டி
"கேடி..ரெண்டு பொண்டாட்டி கதை ஆக்கிடுவ போல!! இனிமே தினமும் புடவை தான் கட்டுவேன் "பதில் ஏதும் சொல்லாமல்
தாய் மடியில் அணைந்து கொள்ளும் பூனைக்குட்டியாய் அவள் மடியின் கத கதப்பில் அணைந்து கொண்டு கண் மூடினான் ப்ரீத்.
நிலவை விளங்கும் கிரகண பாம்பாய் ..., தன்னை ஆட்கொள்ள தாபத்தில் அடங்காது தகித்தவனா?என் ஒற்றை கண்ணீர் துளியில் அவன் உணர்சிகள் அத்தனையும் வடிகட்டி.. இப்படி மடி தவழும் குழந்தையாய் மாறி போகிறான்.!! மனநிம்மதி வேண்டி மடியில் அணைகிறான் மழலையென, காதல் இல்லாமல் இதற்க்கு பெயர் என்ன? இச்சை மட்டும் என்றால் தீர்ந்தால் தான் அடங்கும். தீராத காதல் மட்டும் தான் ஐம்புலனையும் அடிக்கி அன்பால் அரவணைக்கும்.
அவன் தலை வருடியவள் கையில் திருமண மோதிரம் !! இதை என் விரலில் நீ போட்டால் திருமணம் செய்யலாம் என்று அவனிடம் சொன்ன உரிமை மோதிரம். அதை பார்த்ததும் தான் உயிரே வந்தது அவளுக்கு, கண்கள் நிரம்பிட அவன் கண்ணத்தில் எக்கி முத்தமிட்டாள். வெட்கம் மிளிர புன்னகைத்தவள் கள்வன் தலைமீது தலை சாய்ந்து விழிமூடினாள். கர்வம் வந்தது காதலிக்கு காதலன் மேல் காமம் கடந்த காதலிப்பதால்.


Last edited: