எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா - 20

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!


அத்தியாயம் 20


அன்று காலையிலேயே பிரச்சாரத்தை ஆரம்பித்து இருந்தான் விராஜ். இந்த ஒரு வாரமாகவே தீவிர பிரச்சாரத்தில் தான் இருந்தான் விராஜ், சந்தோஷ் ராகவேந்திராவும் அவர் பங்குக்கு அவ்வப்போது கூட்டங்களில் பங்கெடுத்து வாக்கு சேகரித்தார். விராஜ் அப்பகுதி முழுக்க இண்டு இடுக்கு விடாமல் எல்லா இடமும் சென்று, அவர்களின் தேவைகளைக் கவனித்து, சில பல வாக்குறுதிகளையும் அளித்தான்.


உடனடியாகச் சரி செய்யக்கூடியதை அப்பொழுதே செய்தான். மக்கள் கணிப்பின் படி அவனுக்குத் தான் வெற்றிக்கனி மிக மிக அருகில் இருந்தது. அதையறிந்த மற்ற கட்சியினர் வாக்காளர்களிக்கு தங்களுக்கு வாக்களிப்பதற்காகப் பணத்தையும் கமுக்கமாகப் பட்டுவாடா செய்தது.


இதையறிந்த ஆளும் கட்சியினர் நாமளும் பணம் கொடுத்தால் தான் வெற்றி பெற முடியுமெனத் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க,


“நாம இதுக்கு முன்னாடியும் வோட்டுக்கு பணம் கொடுக்கல.. வேட்பாளருக்குத் தேர்தல் செலவுக்காக மட்டும் தான் கொடுத்திருக்கோம். இப்போ வோட்டுக்கு பணம் கொடுத்தா பின்னாடி எல்லா எலெக்‌ஷனுக்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.


வோட்டுக்கு காசு கொடுத்தா அதுமூலம் நாம காசு பார்க்குறோம்னு தான் மக்கள் நினைப்பாங்க.. இது தேவையில்லாத தலைவலிய தான் கொடுக்கும்.. எலெக்‌ஷன் டைம்ல அளவுக்கு அதிகமா பணம் வச்சிருந்தா அவங்கள போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுவாங்க..


என்ன தான் ஆளும் கட்சியா இருந்தாலும் நம்மளும் ரூல்ஸ் ஃபாலோ பண்றது நல்லது தான. எப்பவும் போல நம்ம பிரச்சாரம் பண்ணுவோம்.. மத்தபடி எல்லாம் கடவுள் கையில” எனத் திட்டவட்டமாக மறுத்துக்கூறினான் விராஜ். அவனைப் பெருமையாகப் பார்த்தார் சந்தோஷ்.


கூட்டம் கலைந்து அனைவரும் சென்றபிறகு “பரவாயில்லையே விராஜ்.. மத்த மெம்பர்ஸ்ஸே வோட்டுக்கு பணம் கொடுங்கனு சொல்லியும் நேர்மையா ஜெயிக்கனும் நினைச்சியே சூப்பர் டா”


“பெரியப்பா நம்மாட்களை பத்தி இன்னும் நீங்க சரியா புரிஞ்சுக்கல.. இன்னைக்கு எனக்கு பணம் கொடுக்கச் சொன்னது எனக்காக இல்ல.. அவங்க ஆதாயத்துக்காக..


இப்போ நீங்க எனக்காக எக்ஸ்ட்ராவா வோட்டுக்கு காசுனு கட்சில இருந்து எடுத்துக் கொடுத்தா அதையே சாக்கா வச்சு நாளைபின்ன சட்டமன்ற தேர்தல்ல அத்தனை பேரும் வோட்டுக்கு பணம் கொடுக்கனும் அதனால ஃபண்ட் அதிகமா வேணும்னு டிமான்ட் பண்ணுவாங்க..


நம்ம தரலனா உங்க தம்பி மகனுக்கு மட்டும் அன்னைக்கு தந்தீங்க இப்போ எனக்கும் தாங்கனு கேட்பாங்க. இன்னைக்கு ஒரு நாழு அஞ்சு தொகுதி தான் அதனால பணம் கொடுக்கலாம்னே வச்சிக்கோங்க.. ஆனா சட்டமன்ற எலெக்‌ஷன்ல நம்மளால கொடுக்க முடியுமா? யோசிச்சு பாருங்க? அத நினைச்சு தான் இந்த பேச்ச இப்போ தட்டிவிட்டேன்”


“பரவாயில்லையேடா இத்தனை வருஷம் அரசியல்ல இருக்க என்னைவிட உன்னோட தாட் யோசிக்க வைக்கிற மாதிரி இருக்கு. புத்திசாலித்தனமா யோசிக்கிற.. சீக்கிரம் உனக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கு”


“எதிர்காலம் அதுவா வராது பெரியப்பா நம்ம தான் கொண்டு வரணும் நம்ம கிட்ட.. அதுக்கு இந்த எலைக்‌ஷன்ல நான் ஜெயிக்கனும்.. அதுக்கு முழுசா இல்லாட்டியும் கொஞ்ச வோட்டுக்கு காசு குடுத்து தான் ஆகனும்.. அதுக்கு ஃபண்ட் நீங்க தான் ஏற்பாடு பண்ணனும்” எனச் சிரித்துக் கொண்டே பெரிய குண்டைப் போட்டான் விராஜ். அதிர்ந்த சந்தோஷ்,


“டேய் அங்க நல்லவனாட்டம் வசனம் எல்லாம் பேசின.. இப்போ தனியா வந்து வேற மாதிரி பேசுறயேடா.. இப்போ கட்சில இருந்து ஃபண்ட் எடுத்தா கணக்குல இடிக்குமே..”


“பெரியப்பா உங்களுக்குத் தெரியாததா? இந்த நேக்கு போக்கு தெரியாமலா நீங்க சி.எம் ஆகியிருக்கீங்க.. சும்மா என்கிட்டயே நடிக்காதீங்க” எனக் கிண்டலாகக் கூற, அவனின் தோளில் அடித்தவர்,


“படவா நீ பொழச்சிப்படா.. நாளைக்கு வேலு கொடுப்பான்.. பத்திரமா ஹேண்டில் பண்ணு.. டிஸ்டிபியூட்க்கு கட்சிக் காரங்கள எடுக்க முடியாது.. அதனால நமக்கு நம்பிக்கையான ஆட்கள செலக்ட் பண்ணி பணத்தை கொடு”


“அதெல்லாம் என் பிரண்ட்ஸ் பார்த்துப்பாங்க பெரியப்பா.. ஃபண்ட் மட்டும் இருந்தா போதும்”


“நாளைக்கு வாங்கிக்கோ.. அப்புறம் இன்னைக்கு எப்போ பிரச்சாரத்துக்குக் கிளம்புற?”


“லஞ்ச் டைம் ஆச்சு பெரியப்பா.. இனி சாயந்தரம் தான் போகனும்”


“சரி.. பார்த்துப் போய்ட்டு வா.. எதுக்கும் அந்த எதிர்கட்சி காரனுங்க கிட்ட பிரச்சனை வச்சிக்காத.. சும்மாவே வெறியில இருப்பானுங்க.. நாமளா போய் மாட்டிக்கிட வேணாம்”


“சரிங்க பெரியப்பா.. இனி உங்களுக்கும் வேலை இல்லல இங்க.. வீட்டுக்குக் கிளம்பலாமா?” எனக்கேட்க, அவரும் யோசித்துவிட்டு “சரி வா.. கிளம்பலாம்” எனப் பெரியப்பனும் மகனும் திட்டம் தீட்டிவிட்டு மதிய உணவுக்கு வீட்டுக்குக் கிளம்பிவிட்டனர்.


அதே சமயம் இங்குக் கல்லூரியில் அன்று வகுப்புகள் முடிய, சாத்விகா பிரணவிகா இருவருக்கும் மருத்துவமனையில் வேலை இருந்தது.


பிரணவிகா “சாத்வி நான் கிளம்புறேன். நீ டியூட்டி முடிய வீட்டுக்கு போயிடு”


சாத்விகா “உனக்கும் தான இன்னைக்கு டியூட்டி.. எங்க கிளம்புற?”


“அது.. அது.. சூர்யான்ஷ் இந்த வாரம் முழுக்க மீட் பண்ண கேட்டுட்டே இருந்தார்.. அதான் அவர்கிட்ட பேசி அவர அப்பாக்கிட்ட அழைச்சிட்டு போகப் போறேன். அப்பா கிட்ட பேசிட்டா எனக்கு உறுத்தல் இல்லாம இருக்கும்”


“அப்போ உறுத்தல் இருக்குனு நீயே ஒத்துக்குற.. அப்போ நீ தப்பு பண்றனு உன் மனசுக்கு கூடத் தெரியுது?”


“ஆமா அப்பாக்கிட்டயும், வீட்டுக்கும் தெரியாம ஒரு கமிட்மெண்ட்க்குள்ள இருக்க உறுத்தலா இருக்கு. என்னால சூர்யான்ஷ் கூடச் சகஜமா பேச கூட முடியல.. அவர் லவ்.. மேரேஜ்னு நிறைய பேசுறார்.. ஆனா என்னால அவர் கூட ஒண்ட கூட முடியல.. அவர் கூட மூவ் பண்ண முடியல.. என்னமோ ஒட்டாத தன்மையா இருக்கு.. அப்பா கிட்ட பேசிட்டா அந்த உறுத்தல் மாறிடும்னு தான் நினைக்குறேன்”


“அப்போ விஹான் அத்தான பத்தி உனக்கு உறுத்தவே இல்ல? என்ன?”


“எனக்கு எதுக்கு உறுத்தனும்? நான் என்ன அவரோட லவ்வ அக்செப்ட் பண்ணேனா? லவ் பண்ணேனா? அவர் கூட ஊர் சுத்துனேனா? கல்யாணம் பண்ணிக்கிறேனு வாக்கு கொடுத்தேனா? எல்லாம் பண்ணினவங்களே எதுவுமே பண்ணாத மாதிரி வேற ஊருக்கு ஓடி ஒழிய போறாங்க..


நான் தான் எதுவுமே பண்ணலயே! யாருக்கும் கமிட்மெண்ட் கொடுக்கலயே! அப்புறம் நான் எதுக்கு யாரை பத்தியும் யோசிக்கனும்? எனக்கு எதுக்கு உறுத்தனும்?


அத விடு.. நீ விராஜ் மேல இருக்க கோபத்துல என்னை விட்டுட்டு போகுற பத்தி கூட யோசிக்காம எங்கயோ போக பிளான் பண்ணிட்ட என்ன.. ஆனா நான் சூர்யான்ஷ் கிட்ட பேசும்போது கூட என்னால சாத்விய பார்க்காம இருக்க முடியாது தினமும் எனக்கு சாத்விய பார்க்கனும்னு சொல்லி வச்சிருக்கேன்..


ஏண்டி நீ யாரை பத்தியும் யோசிக்காம உன்னைப் பத்தி மட்டும் யோசிக்கிற? நீ சொல்ற போல நான் சூர்யான்ஷ்ஷை காதலிச்சா விஹான் அத்தானுக்கு மட்டும் தான் பிரச்சனை அதுவும் அவரா ஏற்படுத்திக்கிட்டது தான்.. ஆனா நீ இப்போ எங்கயோ போறேன்னு சொல்றீயே அது எல்லாரையும் பாதிக்கும்னு உனக்குப் புரியலயா?


இத பத்தி பேசினா வீணா நமக்குள்ள தான் பிரச்சனை வருது சாத்வி. உன் முடிவுல நான் குறுக்க வரலல.. அதே போல என் முடிவுலயும் நீ குறுக்க வராத.. நாம எப்பவும் போல இருக்கலாம்.. மத்தவங்களால நமக்குள்ள பிரச்சனை வரத நான் விரும்பல..” என்றவள் சாத்விகாவை இறுக அணைத்து அவளிடமிருந்து விடைபெற இருவரின் கண்களிலும் கண்ணீர்.


பிரணவிகாவும் அவளது பேராசிரியரிடம் அனுமதி வாங்கி சூர்யான்ஷ்ஷை சந்திக்க கிளம்பிவிட்டாள். சாத்விகாவுக்கோ பிரணவிகா பேசிதன் தாக்கம் குறையவே இல்லை.


‘நிஜமா நான் தான் செல்ஃபிஷ்ஷா யோசிக்கிறேனா? வீட்டுல யார பத்தியும் யோசிக்காம என் நிம்மதி மட்டும் தான் முக்கியம்னு எங்கயோ போக முடிவு பண்ணிட்டேனே! இது தப்பா? என்னால இங்க இருக்க முடியாம தான் வெளிய கொஞ்ச நாளுக்கு இருக்க நினைச்சேன். ஆனா வீட்டாளுங்களை யோசிக்க மறந்துட்டேனே!’ என யோசித்தவளுக்கு தலை வின்வின்னெனத் தெரித்தது.


விராஜ் ஒன்றும் அவள் காதலிக்கும் போதிலிருந்து மிஸ்டர் பெர்ஃபெக்ட் இல்லையே! அப்பொழுதும் இப்படித்தானே வெட்டியாய் சுற்றிக் கொண்டிருந்தான். இப்போது அவனுக்குப் பிடித்தமானதை தேர்தெடுத்து அதில் முன்னேற நினைக்கும்போது, அவனைத் தனக்கு பிடித்த போல மாற்ற முயற்சிப்பது தவறோ என முதன் முதலாய் அவளுக்குத் தோன்றியது.


அவள் தனக்கு தற்பொழுது என்ன தேவையென முடிவெடுத்து, விஹானிடம் பேசி, கவினிடம் பேசி, அனைவரும் ஒத்துக்கொண்டு இரண்டு நாட்களில் பெங்களூர் செல்லத் திட்டமிட்டிருந்தாள் ஆனால் இன்று தெளிவாக இருந்த மனதில் கல்லை விட்டு எறிந்து குழப்பி விட்டாள் பிரணவிகா. அதன் விளைவால் தலைவலியால் அவதிப்பட்ட சாத்விகாவும் பேராசிரியரிடம் அனுமதி பெற்று வீட்டுக்குக் கிளம்ப கல்லூரி அருகிலிருந்த பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்போது அவ்விடத்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தான் விராஜ்.


ஃபோர்ஸ் அர்பேனியா வேனில் மேல் கதவைத் திறந்து அதன் வழியாக மக்களிடம் பேசிக்கொண்டு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தான். வேனில் இருந்தவன் மக்களோடு மக்களாக நின்ற இவளைக் கவனிக்கவில்ல.. ஆனால் அவள் பார்வை அவனை விட்டு இம்மியும் நகரவில்லை.


அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போலத் தினமும் இரவில் அவளிடம் பேச எண்ணற்ற அழைப்புகள் கொடுப்பான் விராஜ். ஆனால் அவளோ அவன் மீதிருக்கும் கோபத்தில் அவளை கடைசியாக பிளாக் செய்துவிட, அவனிடமிருந்து இரு நாட்களாக அழைப்பும் இல்லை. இன்று பிரணவிகா வேறு அவளைக் குழப்பி விட, காதலனை நேரில் கண்டவளுக்கு அவனைப் பிரியும் இமாலய முடிவு ஆட்டம் கண்டுவிட்டது.


கண்களில் கண்ணீர் பொங்க அவனையே பார்க்க, ஒரு கட்டத்தில் அவனும் அவளைப் பார்த்துவிட்டான். ஒரு நிமிட தடுமாற்றம் அவன் பேச்சில் ஏற்பட்ட போதும், முயன்று மனதை திசைதிருப்பிப் பேச ஆரம்பித்தான் ஆனால் பார்வை மட்டும் அவளிடம் தான். தன் மனதில் உள்ள காதலை கண்கள் மூலமாகக் கடத்த நினைத்தானோ என்னவோ! வாய் மட்டும் தான் அரசியல் பேசியது அவன் கண்கள் பேசிய பாஷை அந்தக் கூட்டத்தில் அவள் ஒருத்திக்கு மட்டுமே புரிந்தது.


ஒரு கட்டத்தில் அவன் பார்வையை தாங்க முடியாமல் தலைகவிழ, அவள் செல்ல வேண்டிய பேருந்து கூட வந்துவிட்டது. ஆனால் அவள் தான் அதில் ஏறவில்லை அதுவும் அவன் கண்களுக்குத் தப்பவில்லை. அவசர அவசரமாகப் பேசிவிட்டு அவ்விடத்திலிருந்து அவன் வாகனம் நகர்ந்தது.


செல்லும் அவன் வாகனத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் சாத்விகா. நடுரோட்டில் தனியாக எதற்காக நிற்கிறாள்? யாருக்காக நிற்கிறாளென அவளுக்கே விளங்கவில்லை. அவனை விலகிவிடும் முடிவில் தான் காலை வரையிலும் இருந்தாள். ஆனால் இப்போது மீண்டும் முடிவெடுக்க முடியாத குழப்பம். காதலுக்கும், தன் பிடிவாதத்திற்கும் இடையில் மாட்டிக் கொண்டு பித்து பிடித்த நிலையில் தான் நின்றாள். அவளைக் கடந்து பல பேருந்து சென்று விட்டது அவள் ஏற வேண்டிய பேருந்து கூட இரண்டு முறை வந்தது. அவள் கவனம் எதிலுமில்லை.


அப்போது தான் அவள் அருகில் அதிவேகமாக வந்த வெள்ளை நிற லேண்ட் ரோவர் வாகனம் சடன் பிரேக் அடித்து நின்று அவள் கவனத்தை ஈர்த்தது. அந்த வாகனத்தைக் கண்டதும் உள்ளே இருப்பது யாரெனத் தெரிந்துவிட்டது. அவளுக்கா தெரியாது அதில் எத்தனை முறை பயனித்திருப்பாள்.. எத்தனை இனிமையான தருணம் அந்த வாகனத்தில் அவளுக்கு இருக்கு.. ஏன் அவளின் முதல் முத்தம் கூட அந்த வாகனத்தில் தான் நிகழ்ந்தது.


காரின் உள்ளிருந்தவாரே கதவைத் திறந்தவன் அவளை ஏறச்சொல்ல, பிடிவாதமாக அங்கேயே நின்றாள். காரிலிருந்த முககவசத்தை எடுத்து அணிந்து கொண்டு வண்டியிலிருந்து இறங்கியவன் அவள் கைகளைப் பிடித்து இழுத்து வம்படியாக வண்டியில் அமர வைத்தவன் தானும் ஏறி வண்டியைக் கிளப்பினான்.


“சாத்வி!” எனத் தடுமாற்றமாக அழைத்தான்.


“எதுக்கு இப்போ என்னை இழுத்துட்டு வர? நான் தான் நமக்கு இடையில ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டேனே!” இதையே முன்பு அவள் கூறியது கோபமாக, தீர்க்கமாக, பிடிவாதமாகக் கூறினாள். ஆனால் இன்றோ அதே வார்த்தை தான் ஆனால் அதில் அழுத்தம் இல்லை, தீர்க்கம் இல்லை, பிடிவாதம் இல்லை முழுக்க முழுக்க இயலாமை மட்டுமே இருந்தது.


“அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன்.. உனக்கு புருஷன்னா அது நான் மட்டும் தான்.. இதுல நீ என்ன குட்டிக்கரணம் அடிச்சாலும்.. என்கிட்ட இருந்து ஓடி ஒழிஞ்சாலும்.. வீடு புகுந்து தூக்கிட்டு வந்து தாலி கட்டுவேன்.. என்னால எல்லாம் எங்கிருந்தாலும் வாழ்கனு பாட்டு எல்லாம் பாட முடியாது..


இப்போ நான் உன்கிட்ட கேட்க்குறது கொஞ்சம்.. கொஞ்சமே கொஞ்சம் டைம் மட்டும் தான். எலெக்‌ஷன் முடியட்டும் எல்லா பிரச்சனையையும் சால்வ் பண்ணிடலாம். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு.. அது மட்டும் தான்.


பெங்களூர் போறனு கேள்வி பட்டேன்.. சந்தோஷமா போய்ட்டு வா.. உனக்கும் கொஞ்சம் சேஞ்ச் கிடைக்கும்.. நல்லா யோசி.. நீ சொன்ன எல்லாத்தையும் நானும் பண்றேன்.. எனக்குப் பிடிச்சதோட சேர்த்து பண்றேன்.. போதுமா.. நீ திரும்ப வரும்போது எல்லாம் நல்லா மாறி இருக்கும்.


இன்னைக்கு உன்னைப் பார்க்க வீட்டுக்கு வரலாம்னு தான் நினைச்சேன் ஆனா அதுக்கு முன்னாடி இப்பவே பார்த்துட்டேன். எத பத்தியும் நினைக்காத.. உனக்கான டைம் எடுத்துக்கோ அதுக்குள்ள நானும் என்னை நீ கேட்ட மாதிரி மாத்திக்க முயற்சி பண்றேன்..” என்றவன் அவளை இழுத்து அவள் கண்ணத்தில் முத்தம் வைக்க, அவளுக்கோ மூச்சடைத்து விட்டது. அப்போது தான் சந்தோஷிடமிருந்து அழைப்பு வந்தது விராஜ்ஜிக்கு. அதை எடுத்துப் பேசியவனுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி. கவினின் வீட்டுக்குச் செல்லும் வழியில் சென்றவன் வழியை மாற்றித் தன் வீட்டுக்குச் செல்ல,


“எனக்கு வீட்டுக்குப் போகனும்” எனத் தயக்கமாகக் கூறினாள்.


“போகலாம்..” என்றவன் தன் வீட்டுக்குத் தான் சென்றான்.


*******


மாலை போல சந்தோஷ் ராகவேந்திராவுக்கு அழைத்தான் விஹான்.


“பெரியப்பா ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் எங்க இருக்கீங்க?”


“வீட்டுல தான் விஹான்”


“அப்போ சரி.. எங்கயும் போக வேண்டாம் வீட்டுலயே இருங்க.. நான் வீட்டுக்கு வரேன்” எனக்கூறி வைத்துவிட்டான். அதனால் மாலை இருந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வீட்டில் தான் காத்திருந்தார் சந்தோஷ்.


சற்று நேரத்திற்கு எல்லாம் விமலேஷ் வந்துவிட்டார். அவர் வந்த சற்று நேரத்தில் கவிதாவும் வீட்டுக்கு வந்துவிட்டார். அதையெல்லாம் பெரிதாக நினைக்கவில்லை அவர். வேலை முடிந்து வீடு வந்துவிட்டனர் என்றே நினைத்தார் சந்தோஷ்.


அப்போது தான் கவினும், கார்த்திகாவும் வீட்டுக்கு வர, அப்போது தான் சந்தோஷூக்கு ஏதோ தோன்றியது.


“வா.. வா கவின். உட்காரு.. வாம்மா” எனக் கவினையும், கார்த்திகாவையும் வரவேற்று அமர வைத்தார்.


“என்னங்க அத்தான் வீட்டுக்கு வர சொன்னீங்களாம்ல.. எதோ பேசனும்னு.. விஹான் மாப்பிள்ளை போன் பண்ணி சொன்னார்” என கவின் கூற, சந்தோஷ் முதலில் புரியாமல் தடுமாறியவர், பின் விஹான் தான் வரவழைத்திருக்கிறானெனப் புரிந்து கொண்டார்.


‘அன்னைக்கே அவன் பேசினான்.. நாம தான் எலெக்‌ஷன் பிஸில மறந்துட்டோம். அதான் இன்னைக்கு அதைப் பத்தி பேச எல்லாத்தையும் வர வச்சிக்கான் போல’ என நினைத்தவர்,


“ஆமா கவின். அன்னைக்கு பேசினோமே அந்த விஷயம் தான். பிரணிய விஹானுக்கு கேட்க தான் கூப்பிட்டேன்” எனக்கூற, அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த கவிதா காதில் அது நாராசமாகக் கேட்டது.


“என்னது என் புள்ளைக்கு அவளா? என்ன மாமா உங்களுக்கு எதாவது புத்தி மங்கி போச்சா? நீங்களா முடிவெடுத்து கல்யாணம் பண்ண இது ஷிம்ரித் கல்யாணம் இல்ல இது விஹான் கல்யாணம். அதுல முழுக்க முழுக்க எங்க சம்மதம் வேணும்” எனப் பேச, சந்தோஷூக்கு மட்டுமல்ல கவின், கார்த்திகா, கல்பனா ஏன் விமலேஷ்க்கு கூட முகம் சுண்டிவிட்டது.


விமலேஷ் “பல்ல பேத்துருவேன்.. யார பார்த்து வார்த்தை விடுற? என் அண்ணன் என்ன சொல்றாரோ அது தான் இங்கு நடக்கும்”


“அவன் என் புள்ள”


“இவ பெரிய குந்திதேவி நான் இல்லாம வந்துட்டான் இவளுக்கு புள்ள.. அவன் எனக்கும் புள்ள தான். அவன் விஷயத்தை முடிவெடுக்க எனக்கும் அதிகாரம் இருக்கு.. என் அண்ணன் முடிவு தான் என் முடிவு.. எங்கண்ணனோட முடிவு தான் என் மகனோட ஆசை. அவன் ஆசைக்குக் குறுக்க யார் வந்தாலும் நடக்குறதே வேற. இனி ஒரு வார்த்தை அண்ணனைப் பார்த்துப் பேசின..” எனக் கடுமையாக முறைக்க, அவளோ தன் எதிரில் நின்ற கார்த்திகாவை தீயாய் முறைத்தாள். என்னைக்கும் தன்னை ஒரு வார்த்தை பேசாதவர் தனக்கு அடங்கி இருப்பவர் இன்று இப்படி பேசவும் கவிதாவுக்குமே அதிர்ச்சி தான்.


கார்த்திகா “அண்ணே! அவர் இருக்கும்போது நான் பேசுறேனு தப்பா நினைக்காதீங்க.. இது வேணாம்ண்ணே! சம்பந்தம் பண்ணினா தான் நாம உறவா? அப்படி பார்த்தா நம்ம ஏற்கனவே சம்பந்தம் பண்ணியிருக்கோமே அதுவே போதும்ண்ணே! நம்ம இப்படியே இருந்துக்கலாம்.. இந்த பேச்சை இப்படியே விட்டுருங்கண்ணே.. அது தான் நம்ம குடும்ப நிம்மதிக்கு நல்லது” என கவிதாவை மனதில் வைத்துப் பேசினார் கார்த்திகா.


அனைவருக்கும் தர்ம சங்கடம். கல்பனாவுக்கு தன் அண்ணன் மகளை அதுவும் தனக்கு மிகப்பிடித்த மருமகளை இந்த வீட்டிற்கே மருமகளாக அழைத்துவர மனது முழுக்க அவ்வளவு ஆசை ஆனால் தங்கையின் குணம் அறிந்து அவரும் அமைதியாக நிற்க, அனைவருக்குமே அந்த நிமிடம் சங்கடமாக இருந்தது.


கவின் “அப்புறம் பேசலாம் அத்தான். நாங்க இப்போ கிளம்புறோம்” எனக்கூற,


கல்பனா “அண்ணே ஒரு காபி கூடக் குடிக்காம கிளம்புற. உட்காருண்ணே” எனக் கண்ணீர் வடிய குரல் தழுதழுக்க கூறினார்.


“இருக்கட்டும் டா.. நீ அப்புறம் வீட்டுக்கு வா” எனக்கூறி விட்டு, வீட்டுக்குக் கிளம்ப வாசலுக்கு வர, வாசலில் வந்து நின்றது கருப்பு நிற பென்ஸ் கார். அதிலிருந்து இறங்கினர் விஹானும், பிரணவிகாவும் கழுத்தில் மாலையுடன் தம்பதிகளாக.


மதியம் சூர்யான்ஷ்ஷை காண கிளம்பியவள் எப்படி விஹானை திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கிறாள்? இவர்களின் திருமணத்தால் வீட்டில் நடக்க போகும் குழப்பம் என்ன? பொறுத்திருந்து பார்க்கலாம்.
 
Top