அவன் வீட்டில்தான் சில வீடு புதுப்பிக்கும் டிசைன் வைத்திருப்பான். அதனை எடுக்க வீட்டிற்கு சென்றான். அவன் வீட்டிற்கு வந்தது உணவு உண்ணும் அறையில் இருந்த நீலனுக்கும் பார்வதிக்கும் தெரியாது.
திசைகள் இருந்த கோப்புகளை எடுத்தவன் புறப்படுவதற்கு முன்,
‘ச்சே… முதலில் சரியாக நீலனிடம் உரையாடவில்லை இப்போது அவரிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு செல்வோமே' என எண்ணி உணவு அறைக்கு சென்றான்.
அப்போது அவன் காதில் "எனக்கு ருத்ரனை பிடிக்கும். அன்று உங்களிடம்" என நீலனின் குரல் கேட்டது. 'தான் இல்லாத பொது தன்னை பற்றி என்ன பேசுகிறார்கள்' என்று எண்ணி அவன் அந்த இடத்திலே நின்று விட்டான்.
அதன் பிறகு நீலன் கூறிய அனைத்தையும் கேட்டான். தனக்கு நடந்ததுதான் கொடுமை என்று நினைத்தால் இங்கு அதை விட மோசமாக இருக்கிறதே.
அவர்களிடம் செல்லாமலே அவ்விடத்தை விட்டு அகன்றான். வீட்டில் நீலன் பார்வதியிடம்,
"அக்காவும் நல்ல படியாக வாழ வேண்டும், மகிலுக்கு நல்ல தந்தை கிடைக்க வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு வழி தான் என்ன என்று எனக்கு தெரியவில்லை.
ஏன் என்றால் அக்கா மருமணத்திற்கு கண்டிப்பாகா சம்மதிக்க மாட்டாள்." என கூறினான்.
அவள் பட்ட துன்பத்துக்கு சம்மதம் கூறினாள் தான் ஆச்சர்யம்.
"சரி அதை விடு அது பின்னால் பிரச்சனை, நீ சொல் உனக்கு சம்மதமா?
"ஆண்ட்டி என்னிடம் ருத்ரன் பழகின வரை எனக்கு அவரிடம் குறை கண்டுபிடிக்க ஒன்றும் இல்லை. அதே போல் மகிழை நினைத்து கூட எனக்கு கவலை இல்லை. அவர் பல முறை எனக்கு அழைத்து மகிழை அழைத்து வர கூறி இருக்கிறார். மகிழுக்கும் அவர் என்றால் இஷ்டம் தான். எங்கள் வீட்டில் இரண்டு விக்கெட் காலி மீதம் இருப்பது ஒரு விக்கெட் தான் அதுவும் அது பெரிய விக்கெட் அதை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள்." என கூறினான்.
"அதை பின்னர் பாப்போம் உனக்கு ஓகே என்றால் எனக்கு மகிழ்ச்சி தான்" என கூறியவர்
'இறைவா எங்கள் எண்ணம் நல்ல படியாக ஈடேரவேண்டும்' என மனதில் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.
வீட்டிலிருந்து வந்த ருத்ரனுக்கு சிந்தனை முழுதும் உமையாள் மேல் இருந்தது. ஒரு கட்டத்தில்
‘அட நாம் ஏன் இவளையே நினைத்து கொண்டு இருக்கிறோம்?’ என எண்ணி அவள் நினைப்பை ஒதுக்க முயன்றான். என்ன முயன்றும் அவள் முகமும் அவள் கதையும் அவனுக்குள் சுழன்று கொண்டே இருந்தது,
இந்த நிலையில் கண்டிப்பாக கண்ணனுடன் நடக்க இருக்கும் மீட்டிங்கில் தன்னால் முழு கவனத்துடன் ஈடுபட முடியாது என எண்ணி அவருக்கு தொடர்பு கொண்டு இன்று அவனால் அவர்களை சந்திக்க இயலாது என்பதை தெரிவித்து விட்டான்.
வீட்டிற்கு வந்த நீலன் இதே சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தான். அன்று ஒரு முக்கியமான ஆர்டர் இருந்ததால் கயல் அங்கு தான் இருந்தாள்.
"கயல் நான் இந்த பொருட்களை எல்லாம் டெலிவரி கொடுத்து விட்டு வருகிறேன் நீ கொஞ்ச நேரம் இவளை பார்த்துக்கொள்"என கூறி உமையாள் அங்கிருந்து சென்று விட்டாள்.
அவள் சென்றதை உறுதி செய்து கொண்டு மகிழும் காயலிடம் வந்து "அத்தை பார்க் போகலாமா? அழைத்து சொல்லுங்க அத்தை. அம்மாவிடம் கேட்டால் இப்போ போகலாம் அப்பறம் போகலாம் என்றே கூறுகிறார்கள்.
ப்ளீஸ்... ப்ளீஸ்... அத்தை" என கெஞ்சி கொண்டிருந்தாள்.
"மகிமா அம்மாவுக்கு தெரிஞ்ச நம்மள திட்டுவாங்களே... மாமாவும் இல்லை என அவள் கூறவும் "மாமா அவருடைய அறையில் தான் இருக்கிறார் அத்தை"என்று கூறினாள்.
“அப்படியா சரி இரு அத்தை சென்று மாமாவிடம் கேட்கிறேன்.” என கூறி அவனின் அறையை நோக்கி நடந்தாள். அவனின் அறையில் அவன் பார்வை எங்கோ வெறித்து கொண்டு இருக்க அவன் நினைவுகள் இங்கு இல்லாமல் வேறு எங்கோ இருப்பது கயலுக்கு அப்பட்டமாக தெரிந்தது.
இரண்டு முறை அழைத்து பலனின்றி போகவே அவன் தோள்களை பிடித்து உலுக்கினாள், அதில் சுயம் பெற்றவன் "கயல் என்ன ஆனது என திடுக்கிட்டு கேட்டான்.
அவளோ சிரித்து கொண்டே "நான் கேட்க வேண்டிய கேள்வி இது. உங்களுக்கு என்ன ஆனது" எதை இப்படி யோசித்து கொண்டு இருக்கிறீர்கள்?" என கேட்டாள். "ஹம்ம்ம்ம்ம்".... அது ஒன்றும் இல்லை.”.. "எதற்கு என்னை இப்போது உலுக்கினாய்?" என கேட்டான்.
மகிழ் தன்னிடம் பார்க் செல்ல வேண்டும் என கேட்டதை கூறினாள். அவனும் புலனாம் மூலம் அவன் அக்காவிற்கு அவனும் கயலும் மகிழை பார்க்கு அழைத்து செல்வதாக தகவல் அனுப்பிவிட்டு, மகிழையும் கயலையும் பார்க்கு அழைத்து சென்றான்.
மகிழை விளையாட விட்டு விட்டு இருவரும் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள். கயல் அவன் கண்களை பார்த்து
"இப்போ சொல்லுங்க அப்படி என்ன யோசனை” என வினவினாள்.
அதற்கு மேல் அவனாலும் அவளிடம் கூறாமல் இருக்க முடியவில்லை. பார்வதி அம்மா கூறிய அனைத்தையும் ஒப்பித்து விட்டான். அவளின் கருத்தையும் கேட்டான்.
"ருத்ரனை முதலில் பார்த்த போது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை அனால் அவரின் கடந்த காலம் என்னை பாதித்தது என்னமோ உண்மைதான். அதுவும் அவர் மகிழிடம் பழகும் விதம் அவரின் உண்மையான குணத்தை எடுத்துரைக்கிறது.
இப்போது அவரின் மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பார்வதி அம்மாவை பற்றி கேட்கவே வேண்டாம். கண்டிப்பாக அக்காவை நல்லபடியாக பார்த்து கொள்வார்கள்.
முதலில் இருவருக்கும் மனா கசப்புகள் ஏற்பட்டாலும், இல்லை... இல்லை... கண்டிப்பாக ஏற்படும் ஆனால் போக போக கண்டிப்பாக இருவருக்குள்ளும் ஒரு நல்ல புரிந்துணர்வு வரும். முக்கியமாக மகிழுக்கு ஒரு நல்ல தகப்பன் கிடைப்பார்." என முடித்தாள். அப்போது அவர்களின் உரையாடலின் நாயகனே அங்கு வந்து சேர்ந்தான்.
கண்ணனிடம் பேசிவிட்டு வைத்தவனின் மனம் ஏனோ அமைதி இன்றி இருந்தது. பார்க்கு செல்லலாம் என தோன்றிய கணத்தில் பார்க்கை நோக்கி வண்டியை செலுத்தினான்.
இந்த பார்க்கத்தான் தொலைய இருந்த அவன் வாழ்க்கையை மீட்டெடுத்தது. அதிலிருந்து ஏதும் அவனுக்கு மனக்குழப்பங்கள் வந்தாலோ இல்லை, மனம் பாரமாக இருந்தாலோ இங்கு வந்து கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு செல்வன்.
இங்கு விளையாடும் குழந்தைகளை பார்த்தல், அவனுக்கு இதமாக இருக்கும். அவனின் மனம் சற்று தெளிவடைவது போல் இருக்கும். அதே நோக்கத்துடன் இன்றும் அந்த பார்க்குக்கு சென்றான்.
முதலில் மகிழ்ந்தாலும் பின் 'எதை நினைத்து ஓட முயல்கிறேனோ அங்கேயே விதி கொண்டு நிறுத்துகிறதே' என்று விதியை நொந்து கொண்டான்.
விளையாட்டில் ஆர்வமாக இருந்த மகிழும் தற்செயலாக ருத்ரனின் புறம் திரும்பி அவனை பார்த்து விட்டாள். "ருத்து" என கூச்சலிட்டவாறே அவனிடம் ஓடினாள் குழந்தை.
அவனும் குழந்தையின் குரல் கேட்டு மற்ற யாவையும் மறந்து அவளை அள்ளி தூக்கிககொண்டான். குழந்தை யாருடன் வந்தாள் என்று அறிந்துகொண்டு அவர்களை பார்த்தும் தலையசைத்தான்.
பின் கேட்கவும் வேண்டுமா குழந்தையொடு குழந்தையாக மாறி அவளுடன் விளையாடி கொண்டிருந்தான். அனைத்தையும் இவை அனைத்தையும் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
பின் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமாக சிரித்து கொண்டனர். மாலை பொழுது தாண்டி விட்டது. நீலன் ருத்ரனிடம் விடை பெற்று வீட்டிற்கு புறப்பட்டான். ருத்ரனும் மகிழுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு அவளிடம் இருந்து விடை பெற்றான்.
இப்படியே ஒரு வாரம் கடந்த நிலையில், ருத்ரன் கண்ணனையும் அவர் தம்பியையும் சந்திக்க சென்றான்.
கண்ணன் தம்பி ராமனுக்கு கண்ணனின் வீட்டு டிசைனும் முக்கியமாக அவர்கள் செய்து கொடுத்த ஹண்ட்கிராப்ட்டும் மிகவும் பிடித்திருந்தது. அருமையாக இருந்ததாக பாராட்டினார்.
பின் அவரது வீட்டை புதுபித்து தருமாறும், அவருக்கும் இதே போல் அருமையான ஹண்ட் கிராப்ட்டும் வேண்டும் என கேட்டார்.
முதலில் அவனிடம் இருந்த வீடு புதுப்பிக்கும் டிசைன்கலை காண்பித்து அதில் எந்த டிசைன் அவருக்கு பிடித்திருக்கிறது என்றும் அவர் என்ன ஐடியா வைத்துள்ளார் என்றும் வினவினார்கள் பின் இருவரும் கலந்து பேசி ஒரு டிசைனை ருத்ரன் ஸ்கெட்ச் செய்தான்.
அவன் ஸ்கெட்ச் செய்த டிசைனே மிஸ்டர் ராமனுக்கு பிடித்து விட அதையே செய்ய சொல்லி கூறினார். கைகளை குலுக்கி விடைபெற்று உமையாள் வீட்டை நோக்கி சென்றான் ருத்ரன்.
அவர்கள் வீடு பெல்லை அழுத்தியவன் கதவு திறக்க காத்திருந்தான். கதவு திறந்தது என்னவோ உமையாள் தான். அவனை கண்டவுடன் என்ன எனும் கேள்வியாக புருவத்தை ஏற்றி இறக்கினாள்.
உன்னிடம் கொஞ்சம் தொழில் முறையில் பேச வேண்டும் என கூறினான். எப்போதும் எகிறிக்கொண்டு வருபவன் இன்று அமைதியாக பேசுவதை புருவம் சுருக்கி யோசித்தவள், அப்போதுதான் அவனை வாசலில் நிற்க வைத்த்திருப்பது உரைத்தது.
"உள்ளே வாங்க" என வரவேற்றவள்,
அவனை அவர்களின் அலுவல் அறைக்கு அழைத்து சென்றாள்.
அலுவல் அறையில் அமர்த்த இருவரும் தொழிலை பற்றி பேச தொடங்கினார்கள்.
"உமையாள் நீ செய்து கொடுத்த கைவினை பொருட்கள் என் க்ளையண்ட்டுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெகுவாக பாராட்டினார். அதே போல் அடுத்த க்ளைண்டும் இதே மாதிரியான கைவினை பொருட்கள் வேண்டும் என்றே கேட்கிறார்கள்.
நாம் ஏன் தொழில் முறையில் ஒரு டீல் வைத்துக்கொள்ள கூடாது? எனக்கும் என் க்ளையண்ட்டை திருப்தி படுத்தினது போல் இருக்கும். உனக்கும் புதிய ஆர்டர்ஸ் கிடைக்கும்.” என அவன் தொழில் ஒப்பந்தம் போடா முயன்றான்.
அவனின் இந்த திமிரில்லா தீர்க்கமான பேச்சு உமையவளுக்கு புதியது. அவளும் பல முறை யோசித்து இந்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தாள்.
"சரி.." அக்ரீமெண்ட் தயார் பண்ண சொல்றேன், படித்து பார்த்து கையெழுத்து போட்டு குடு." என இத்துடன் உரையாடல் முடிந்தது என்று நாற்காலியில் இருந்து எழுந்தான்.
அவளும் எழுந்து அவனை வழி அனுப்ப சென்றாள். அப்போது அங்கு மகிழ் கண்ணில் கண்ணீரோடு உமையாளை தேடி வந்தவள், ருத்ரனை கண்டு அவனை கட்டி பிடித்து அழலானாள்.
அழுந்த குழந்தையை தூக்கி வைத்து கொண்டான் ருத்ரன் அவள் கையில் ரத்தம் வலிந்து கொண்டு இருந்தது அதை கண்டா ருத்ரன் துடித்து போனான்..
“ஹே! ஹனி பீ…. என்ன ரத்தம் வருது...? எப்படி கண்ணா...? என கேட்டுக்கொண்டே அவளது கைகளை தண்ணீரில் கழுவினான்.
அவளும் அழுது கொண்டே "ருத்து அங்க சின்ன கத்தி இருந்ததா அது என் கையை கிழித்து விட்டது.” என கூறினாள்.
அவன் தூக்கி வைத்து கொண்டு இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பினும் மகளின் கையில் வழியும் ரத்தத்தை பார்த்து பதறி அவர்கள் பின்னாலே திரிந்து கொண்டு இருந்த உமையாள்.
அவளை திரும்பி பார்த்து முறைதான் ருத்ரன். “இப்படித்தான் குழந்தை இருக்கும் வீட்ல கத்தியை எல்லாம் கீழேயே வைத்து விடுவாயா. அறிவில்லை” என அவளை திட்டு கொண்டு இருந்தான்.
வேறு ஒரு சந்தர்ப்பம் என்றால் உமையாள் பதிலுக்கு மல்லு கட்டி சண்டைக்கு சென்றிருப்பாள், ஆனால் அவள் மகிழ் அங்கு வலியில் அழுவதை கண்டு பதறி போயிருந்தாள்.
அதனால் ருத்ரன் பேசுவதெல்லாம் அவள் சிந்தைக்கு எட்ட வில்லை. ஒருவாறு கையில் வழியும் ரத்தம் நின்று விட, ருத்ரன் அவள் சிரிக்கும் வரை அவளுக்கு விளையாட்டு காட்டினான்.
அவள் சிரித்து விளையாட ஆரம்பித்தவுடன் ருத்ரன் அவளிடம் விடை பெற்று சென்றான். செல்லும் முன் உமையாள் அழுத்தமாக பார்த்து "மகிழ் பத்திரம்" என கூறிவிட்டு சென்றான்.
ருத்ரனின் மனமோ 'அக்குழந்தையுடன் இவ்வளவு ஒன்றி விட்டோமா.. அவளுக்கு ஒன்று என்றதும் ஏன் என் மனம் இப்படி துடிக்கிறது' என குழம்பி போனது.
உமையாளோ தன் மகள் மூன்றாவது நபரிடம் அதுவும் ஆண் மகனிடம் இவ்வளவு ஒன்றி போவாள் என்று எதிர்பார்க்கவில்லை. 'தன்னியிடம் வந்தவள் அவரை பார்த்ததும் என்னை மறந்து விட்டாளே' என எண்ணி கலங்க தொடங்கினாள்.
இருதுருவங்கள் மகிழ் என்னும் அடிக்கோலினால் இணையுமா?