எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதலுக்கு விதிகள் ஏதம்மா- கதை திரி

Mithila Mahadev

Moderator
அத்தியாயம்-01

ரோம் அல்லது உரோம் என அழைக்கப்படும் இந்த நகரம் இத்தாலியின் தலைநகர் ஆகும் உலகில் அழகு என்ற சொல்லுக்கு இந்த நகரை சொல்லலாம்….ஏன் என்றால் ரோமர்கள் அப்படிப்பட்ட கலை நயத்தோடு இந்த நகரை உருவாக்கி உள்ளனர்..

'எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே இறப்பதற்கு முன் ரோமை பார்க்க வேண்டும்' என்னும் வாக்கியம் இதன் சிறப்புக்கு உதாரணம் ஆகும் .

ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் கலாச்சாரமே வழிகாட்டி ஆகும் இத்தாலியின் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு இங்கு பிரதானமாக பேசபடும் மொழி இத்தாலி மொழி ஆகும்….

அதை விட பிரெஞ்ச், ஜேர்மன் ஆங்கிலம் பிற மொழிகளின் பரீட்சையமும் இங்கு உண்டு… இவர்களின் பிரதான தொழில் கட்டிட வடிவமைப்பு ஆகும் அதோடு ஓவியம், வாணிபம் இதன் சிறப்பு வத்திக்கான் ஆகும்.

அப்படிப்பட்ட இந்த எழில் கொஞ்சம் இந்த நகரில் கடலில் இந்த ராத்திரி வேளையை கேட்கவா வேணும் பால் நிலா பவனி வர,குளிர் காற்று வீச, கடல் நீர் கரு நீல நிறமாக பளபளத்தது… அதை எல்லாம் தோற்கடிக்கும் அழகில் அந்த பிரமாண்டமான மூன்று அடுக்கு கடல்ராணி இன்று இருந்தாள்.

ஆம் மூன்று தளம் கொண்ட அந்த கப்பலின் பெயர் சீ குயின் அந்த கப்பலின் மேலே உள்ள நீச்சல் குளத்தில் நீரின் சல சலப்பு கேட்டது… ஒரு உருவம் நீந்தி கொண்டு இருந்தது கொஞ்ச நேரத்தில் அந்த உருவம் மேலே எழுந்து வந்து….

தன் நீச்சல் உடைக்கு மேலாக கருநீல நிற பாத்ரோப் கட்டி கொண்டு அங்கே இருந்த champagne பாட்டிலை ஓப்பன் பண்ணி ஒரு கிளாஸ்சில் ஊற்றி விட்டு கப்பலின் விளிம்பில் வந்து நின்ற அவன்…

பெண்களை தோற்கடிக்குடுக்கும் அழகில் இருந்தான் ஏன் மன்மதனே அவனை பார்த்து மண்டியிட வேணும் பால் நிறம் கூட இப்படி வெண்மையாக இருக்குமோ தெரியாது… அவன் இருந்தான் அவன் கண்கள் கடல்நீல நிறகண்கள் அதில் விழுந்தவர்கள் எழுந்ததாக சரித்திரம் இல்லை.

கொவ்வை பழத்தை தோற்கடிக்கும் இதழ் சிவப்பு மெல்லிய தாடி அவன் அழகுக்கு அழகு சேர்த்தது… கருமை நிற கேசம், ஆறடி உயரம் மாடல்களை தோற்கடிக்கும் உடல் கட்டு…கூர் மூக்கு அவன் கழுத்தில் போட்டு இருந்த பிளாட்டினம் செயினின் விலைக்கு ஒரு நகரையே வாங்கலாம்…அதில் டைமண்ட் லாக்கெட் இத்தனை அழகுக்கும் சொந்தகாரன் ஆலிவர் ஐடன் ரிச்சர்ட்.

இத்தாலியின் முதன்மை பணக்காரன் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மில்லியனர் அவன் கால் பதிக்காத துறைகளும் நாடுகளும் இல்லை….

அவனின் ஐடன் குரூப்ஸ் அவனோட சொந்த உழைப்பில் முயற்சியில் உருவானது அது தான் உலகெங்கும் பரந்து விரிந்து உள்ளது… அள்ள அள்ள குறையாத பணம், அழகு, இளமை நிறைந்த முப்பத்திரண்டு வயது ஆணழகன்.

அவனுக்கு உலகில் பிடித்தது எது என்று கேட்டால் சட்டென சொல்வான் இந்த கடல் என்று அதற்காக காரணம்… அதை அடங்கவும் முடியாது ஆளவும் முடியாது முடிவு இல்லாதது இந்த ஆலிவர் போல என்பான்…

அது தான் உண்மை அவனை அடக்கி ஆள நினைப்பதும் கடலை ஒரு தம்ளரில் அடக்க நினைப்பதும் ஒன்று தான்… அவன் நண்பனுக்கு நண்பன் எதிரிக்கு மோசமான எதிரி அவனுக்கு பிடிக்காத ஒரு விஷயம் நம்பிக்கை துரோகம்.

அதை அவன் வாழ்நாளில் யாருக்குமே செய்ததும் கிடையாது அதை அவனுக்கு செய்ய துணிந்தவர்களுக்கு அவன் அளிக்கு பரிசு மரணம்… ஆலிவர் கடலை ரசித்து கொண்டு இருக்க அவனை பின்னால் இருந்து ஒரு வெண்ணிற கை அணைத்தது….

ஆலிவர் அந்த கையை பற்றி தன் முன்னால் இழுத்து அவளை சிறை வைத்தவனை.. அவளை தன் மயக்கும் விழிகளால் பார்க்க எப்பவும் போல இப்பவும் மயங்கி நின்றாள்.

இத்தாலியின் அழகி பட்டத்தை வென்ற லிமா அவள் அழக்கு முன்னால் யாராலும் நிற்க முடியாது அவள் அழகின் மேலே அவளுக்கு அவ்வளவு கர்வம்… அந்த அழகை வைத்து தான் அவள் சம்பாதிப்பது மாடல் அதை விட படங்கள் என்று ….

இப்படி பணக்கார பசங்களை தன் வலையில் வீழ்த்தி பணம் ,சொத்து, பங்களா என வாங்கி கொள்வாள்… அவள் வலையில் விழுந்த பலர் இன்று தங்கள் பிசினஸ் தொடக்கம் எல்லாம் இழந்தவர்களும் உண்டு.

அதை வெளியே தெரியாமல் செய்வது தான் அவள் ஸ்பெஷாலிட்டி இது பாரினில் சகஜம் என்பதால் யாருமே பெரிதாக நினைப்பது இல்லை… இன்று கல்யாணம் நாளை விவகாரத்து என வாழ்பவர்கள் அங்கே ஒரு கல்யாணம், குடும்பம் குழந்தைகள் என்று வாழ்பவர்கள் அரிது.

லிமாவுக்கே மயக்கம் கொடுக்க கூடியவன் என்றால் ஆலிவர் தான் அவன், அழகு, பணம், படிப்பு, அந்தஸ்து எல்லாம் அவள் தனக்கே வேணும் என நினைத்தாள்… ஆனால் அவனுக்கு மேரீஸ் என்றால் ஏதோ ஒரு கேம் என நினைக்கும் அளவுக்கு இருப்பவன் தங்கள் லஸ்ட்டை தீர்த்து கொள்ள இது ஒரு கண்துடைப்பு என்பான்.

அதற்கு எதற்கு மேரீஸ் ஒரு பெண்ணோடு வாழ்வது ரொம்ப போர் அதை விட நமக்கு பிடித்த பெண்கள் கூட கொஞ்ச நாள் வாழ்ந்து விட்டு அவர்கள் கேட்பதை அள்ளி கொடுத்து அவர்களை விலக்கி விடலாம்..ஐ ஹேட் மேரீஸ் என சொல்வான் அதுவும் அவன் செலக்ட் பண்ணும் பெண்ணுங்க எல்லாமே ஹை கிளாஸ் பெண்ணுங்க…

அவங்களை பொருத்த வரைக்கும் ஆலிபர் கூட ஒரு நாள் என்றாலும் கூட லிவிங் டுகெதரில் வாழ வேணும்… அவன் கேர்ள் ப்ரண்ட் என்ற பெருமையே போதும் அதை விட அவன் தரும் பணம், சொத்து அவர்களின் வாழ்நாள் பூராகவும் போதும் என்பது அவர்களின் கருத்து.

ஆலிவர் ஒன்றும் சாதாரண குடும்பது பையன் இல்ல அவன் பிறப்பிலே கோடீஸ்வர வீட்டு பையன் ஒற்றை வாரிசு…. அவன் தந்தை ரிச்சர்ட் தாய் ஏஞ்சலினா இருவருமே பணக்கார வீட்டு வாரிசுகள் அவர்களுக்கு பெற்றோர் திருமணம் பேசி…. அவர்களுக்கும் பிடித்து போய் திருமணம் செய்து கொண்டனர்.

அவன் தாய் ஏஞ்சலினா பணக்கார வீட்டு பெண் என்ற துளி கூட கர்வம் இல்லை அவன் தந்தை அவன் தாயை தவிர பிற பெண்களின் மேலே நாட்டம் இல்லாதவர்… அவர் நாட்டம் எல்லாம் பிசினஸ் தான் இவர்களுக்கு கல்யாணம் முடிந்து பத்து வருடங்களுக்கு பிறகு பிறந்தவன் தான் ஆலிவர்…

அதோடு இனி அவரால் தாய் ஆக முடியாது என்று அவர் கர்ப்பப்பையை எடுத்து விட்டனர்... சரி நமக்கு தான் ஒரு குழந்தையாவது இருக்கே என அந்த தம்பதிகள் சந்தோஷபட்டு கொண்டனர்… ஆலிவருக்கு சிறு வயது முதலே கேட்டது எல்லாம் அடுத்த நொடியே கிடைத்தது…

ஏஞ்சலினா கொஞ்சம் கண்டித்தால் ரிச்சர்ட் என் ஒற்றை வாரிசு என அவனை தலைக்கு மேலே வைத்து தூக்கி வைத்து அவனை பாதி கெடுத்தார்…. கூடவே மீதியை இரு வழி தாத்தா, பாட்டிகள் கெடுத்தனர் அவன் பிறந்தவுடனே தங்கள் சொத்துக்களை எல்லாம் அவன் பெயரில் எழுதி விட்டனர்.

அவன் நினைத்தை அடைய வேணும் என்ற பிடிவாதம் வளர வளர அவன் கூடவே வளர்ந்தது…. அதை ஏஞ்சலினா தன் அன்பால் மாற்ற முயன்றாலும் இல்ல கண்டித்தாலும் அதை தடுக்க நிறைய பேர் இருந்தார்கள்... இப்படி இருக்கும் போது தான் அவனின் ஆறுவயதில் மஞ்சள் காமாலை நோய் தாக்கி அவன் தாய் ஏஞ்சலினா இறந்து போனார்.

இத்தாலியின் சிறந்த வைத்திய குழு மட்டுமல்ல மற்ற நாடுகளில் இருந்து வரவழைத்த வைத்திய குழுவாலும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது….

ரிச்சர்ட் பாதி உடைந்து போனார் அவர் சிறந்த கணவர் மட்டுமல்ல நல்ல காதலனும் கூட.. அதற்கு பிறகு மகன் மேலே அந்த பாசத்தை திருப்பி அவன் கேட்டது கேட்காதது எல்லாம் கொடுக்க… கண்டிக்க சொல்லி திருத்த ஆள் இல்லாதால் ஆலிவர் முரட்டு குழந்தையாக வளர்ந்தான்.

நாட்கள் செல்ல அவன் தாத்தா பாட்டியும் இறக்க அவனை முழுதாக ஆயாவின் பராமரிப்பில் விட்டு விட்டு… ரிச்சர்ட் மகனுக்கு இருக்கும் சொத்து போதாது என்று… பிசினஸ்சில் இன்னும் சம்பாதிக்க ஊர் ஊராக சுற்றி கொண்டு இருந்தவர் மகனின் மனதை பார்க்க மறந்து விட்டார்.

அன்பாக சொல்லி திருத்த தாயும் இல்லை தட்டி கேட்க தந்தையும் இல்லை வேலைகார்கள் முதலாளி என்ற அளவில் நிற்க தன் இஷ்டத்திற்கு வளர்ந்தான்….

ஆனால் ஒன்று அவனை படிப்பில் அடித்து கொள்ள முடியாது இங்கே படிக்க முடியாது என லண்டனில் உள்ள காலேஜ்லில் படிக்க போனான் அங்கே பணக்கார வீட்டு பசங்க சேர்க்கை… தண்ணி ,பெண்ணுங்க என அறிமுகப்படுத்த அதீத சுதந்திரம் அவன் வயது அதை எல்லாம் ருசி பார்க்க சொன்னது .

மேலை நாடு வேற இதை எல்லாம் பெரிதாக நினைக்காது அப்போ கேட்கவா வேணும் ரிச்சர்ட் மகனை திரும்பி பார்க்கும் போது அவன் பாதை தவறி விட்டது புரிந்தது…வெள்ளைக்காரனாக இருந்தாலும் அவர் ஒரு மனைவி குடும்பம் என வாழ்ந்தவர் இதை தாங்க முடியாமல் மகனை கண்டிக்க வீட்டை விட்டு தனியாக ரோமுக்கு வந்தான் .

ரிச்சர்ட் தன் மகனை சுற்றும் பெண்களிடம் இருந்து தன் சொத்துக்களை காக்க அவனுக்கு திருமணம் முடித்து… குழந்தை பிறந்தால் அதுவும் அந்த குழந்தையின் ஐந்தாவது பிறந்தாளின் போது தான் சொத்து கைக்கு வரும் என உயில் எழுதி விட்டார்…

அவருக்கு மகனை குடும்பம், குட்டி என பார்க்கும் ஆசையில் ஆனால் அவன் ஒரு படி மேலே போய்… உங்க சொத்து எதுவுமே எனக்கு தேவையில்ல உங்களை விட நான் தனியாக உயர்கிறேன் பாருங்க என்று… தன் தாத்தா, பாட்டி சொத்துகளை மூலதனமாக கொண்டு கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்தான்.

ரிச்சர்ட்க்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் கூட அவன் இப்படி கல்யாணம் பண்ணாமல் தினம் ஒரு பெண்ணு ,குடி என வாழ்வது வருத்தை தர… அவர் தன் காதல் மனைவியோட இனிமையாக வாழ்ந்த லண்டன் பங்களாவில் செட்டில் ஆகிவிட்டார் இங்கே இவன் ரோம்மில் இருத்தாலும் கூட அவனுக்கு தன்னை அடக்கி கொள்ள தெரியும்…

பெண்கள் பழக்கம் உண்டு தான் ஆனா பெண்களிடம் மொத்தமாக மதி மயங்கி கிடக்கும் ஆள் அவன் இல்லை… அதனால் தான் அவனை வளைக்க முடியாமல் பலர் தோல்வியை தழுவி விட்டனர்.

லிமா அவன் நெஞ்சில் தன் கையை வைத்து தடவி கொண்டு இத்தாலிய மொழியில் பேச தொடங்கினாள் .

லிமா “ என்ன டியர் என்னை அங்கே தனியாக விட்டு விட்டு இங்கே எதை வந்து ரசித்து பார்க்கிறீங்க… இந்த இயற்கை என்னை விட எந்த விதத்தில் அழகு”... என்று தன் மயக்கும் விழிகளால் அவனை பார்த்து கேட்டாள்.

ஆலிவர் தன் கிளாஸ்சில் உள்ள மீதி மதுவை குடித்து விட்டு அந்த கிளாசை அப்படியே கடலில் தூக்கி எறிந்து விட்டு.. லிமாவின் சின்ன இடையை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டு அவள் கழுத்தில் முத்தமிட்டு விட்டு.

ஆலிவர் “அழகா எது இந்த அழகு இது செய்கையால் மெருகூட்டிய அழகு பட் நான் ரசிப்பது, ஆளநினைப்பது இயற்கை அழகை பேபி… அது உன் போல உள்ள பெண்ணுங்களுக்கு புரியாது என்பதை விட தெரியாது”... என்றான்.

லிமா எதை வேணும் என்றாலும் பொருத்து கொள்வார் அவள் அழகை குறை சொன்னால் பொறுத்து கொள்ள மாட்டாள்….இருந்தாலும் கூட அவனை கோப படுத்தினால் தனக்கு தான் நஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் என்பதால்… அவன் இதழ்களில் மெதுவாக தன் இதழ்களை இணைக்க ஆலிபரும் அவளை தூக்கி அந்த முத்தத்தை தனதாக்கி கொண்டான்.

அவளை மெதுவாக தூக்கி கொண்டு அந்த கப்பலில் இருந்த தன் பிரமாண்டமான அறைக்கு அவளை தூக்கி கொண்டு போய்… தன் படுக்கையில் படுக்க வைத்து அவள் மேலே சரிய லிமா அவனின் அந்த நேர மயக்கத்தை பயன்படுத்த நினைத்தவள் .

லிமா “டியர் நம்ம எப்போ மேரீஸ் பண்ணி கொள்ளலாம்”... என கேட்டாள். ஆலிபர் சட்டென அவளை விட்டு எழுந்து அமர்ந்து தன் வசீகர சிரிப்பால் அவளை பார்த்து சிரித்து விட்டு.

ஆலிபர் “வாட் யு மீன் மேரீஸ் கமான் பேபி உனக்கு தெரிந்த பதிலை எத்தனை தான் கேட்ப….உன்னை மேரீஸ் பண்ணி கொள்கிறேன் என கூறி உன்னை நான் தொடவில்லை நீ மட்டுமல்ல எந்த பெண்ணுக்கும் நான் அந்த வாக்குறுதியை கொடுக்கவில்லை..

அண்ட் நான் உனக்கு பர்ஸ்ட் இல்லை அது போல தான் நானும் தான் உன் பெர்ஷனலில் நான் தலையிட மாட்டேன் அது தப்பும் கூட… பட் என் பெர்ஷனலில் நீ தலையிட்ட நீ இந்த இத்தாலியில் இருக்க முடியாது தெரியும் தானே”... என சொன்னான்.

அவன் சத்தம் போடாமல் சிரித்து கொண்டு சொல்லும் வார்த்தைக்கு பவர் அதிகம்… இதை இத்தாலியே அறியும் என்பதால் லிமா எழுந்து அவன் வெற்று முதுகில் இதழ் பதிக்க ஆலிபர் சட்டென திரும்பியவன்.

ஆலிபர் “ இது தான் நீ லிமா இதை தவிர நமக்குள்ளே ஏதுவுமே வர கூடாது என் வாழ்க்கையில் தான் பெண்ணுங்களுக்கு பின்னாடி அலைய மாட்டேன்... அது போல மேரீஸ் என்ற ஒன்று என் லைவ்வில் இல்லை”... என சொல்லி கொண்டே அவளை அணைத்து கொண்டு அவளோடி கூட ஆரம்பித்தான்.

எப்பவுமே போல அவன் வேகம் அவனை சிறந்த காதலன் என காட்டியது… ஆலிவருக்காக அந்த கப்பல் அந்த இடத்திலே நங்கூரம் இட்டு மூன்று நாள் இருந்தது.. அவன் கரைக்கு வந்து தன் பங்களாவிற்குள்ளே போக அங்கே அவனின் தந்தையின் பி.ஏ அவசர செய்தியோடு வந்து இருந்தார்.


விதிகள் தொடரும்...💘
 
Top